ஊர்ப்புதினம்

ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்

3 months 3 weeks ago
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல் ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்.

ஜப்பானிய வாகனங்களின் விலை அதிகரிப்பிற்கான பிரதான காரணம், அந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டிலிருந்து 5 அல்லது 7 ஆண்டுகள் பழமையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக 2 ஆண்டுகள் பழமையான வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்ததே என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.

இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி, இன்று (1) முதல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே மெரென்சிகே இந்தக் கருத்தை வௌியிட்டார்.

அரசாங்கத்தின் இந்த முடிவால், இந்த நாட்டின் ஒரு சாதாரண குடிமகனால் ஒரு கோடி ரூபாய்க்குக் குறைவாக வாகனத்தை கொள்வனவு முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இறுதியில் என்ன நடக்கும் என்றால், நாட்டின் சாதாரண குடிமகனால் வாகனத்தை வாங்க முடியாத நிலை ஏற்படும்.

“இது சுமார் 5 ஆண்டுகளுக்கு செய்யப்பட்டிருந்தால் சுமார் 6 மில்லியன் முதல் 6.5 மில்லியன் ரூபாய்க்கு வாகனத்தை வாங்கியிருக்கலாம். ஆனால் அது இன்று இல்லாமல் போயுள்ளது” என்றார்.

உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டிலிருந்து 2 ஆண்டுகளில் ஜப்பானிய வாகனங்களின் தற்போதைய ஏல விலை மற்றும் அது இந்நாட்டின் வரிகளுடன் சேர்க்கும் போது வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும் விதம் பற்றி மெரென்சிகே விளக்கினார்.

அதன்படி, Toyota Raize 1200cc காரின் விலை சுமார் ஒரு கோடியோ 60 லட்சம் ரூபாயாக அதிகரிக்கக்கூடும்.

அத்துடன் Toyota Yaris வாகனத்தின் விலை ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்கக்கூடும்.

இதற்கிடையில், சுமார் ஒரு கோடியோ 95 லட்சம் பெறுமதியான Honda Vezel 1500cc ஹைப்ரிட் கார் சுமார் 2 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் பலரால் விரும்பப்படும் காரான Wagon R காரின் விலை ஒரு கோடி ரூபாயை விட அதிகரிக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2025/1419267

மாவையின் மரண சடங்கில் கலந்து கொள்வதற்காக பயணித்த... முன்னாள் எம்.பி யின் வாகனம் விபத்தில் சிக்கியது.

3 months 3 weeks ago
விபத்தில் சிக்கிய முன்னாள் எம்.பி பயணித்த வாகனம் விபத்தில் சிக்கிய முன்னாள் எம்.பி பயணித்த வாகனம்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் பயணித்த வாகனம் திருகோணமலை, உப்புவெளி பிரதேசத்தில் இன்று (1) விபத்திற்குள்ளானது.

மட்டக்களப்பிலிருந்து தமிழரசு கட்சியின் மறைந்த தலைவர் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வேனின் பின்னால் பயணித்த மோட்டார் சைக்கிள் அதன் மீது மோதி இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் காயம் அடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை உப்புவெளி வீதியில் சர்வோதயத்துக்கு முன்னால் உள்ள பாதசாரி கடவையில் பொதுமக்கள் கடக்கின்ற போது வேனை நிறுத்திய வேளை, பின்னால் அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுபாட்டை இழந்து வேனின் மீது மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://athavannews.com/2025/1419264

யாழ். மாவட்டத்தின் சுற்றுலா வழிகாட்டி நூல் ஜனாதிபதியால் வெளியீடு

3 months 3 weeks ago
01 FEB, 2025 | 02:40 PM
image
 

யாழ்ப்பாண மாவட்டத்தின்  கலாசார ரீதியான சுற்றுலாவை மேன்மைப்படுத்தும் வகையில், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சுற்றுலா மையங்கள்  தொடர்பில்  டிஜிற்றல் அடிப்படையிலான  சுற்றுலா வழிகாட்டி நூலானது நேற்று வெள்ளிக்கிழமை (31)  ஜனாதிபதியால்  வெளியிடப்பட்டது. 

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் வைத்து, யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான  இராமலிங்கம் சந்திரசேகர் முன்னிலையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க  யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க  அதிபர்  மருதலிங்கம் பிரதீபனிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. 

யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்துப் பிரதேச செயலகங்க பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் நூற்றுக்கு மேற்பட்ட கலாசார ரீதியான சுற்றுலா மையங்களை  உள்ளடக்கிய வகையில்  விஞ்ஞான ரீதியான ஆய்வினூடாகவும், களத்தரிசிப்பினூடாகவும்   யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தினால் தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

நீண்ட நாட்களாக யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலா மையங்களையும் சுற்றுலாப் பயனிகளையும் இணைப்பதற்கான பிரதான  சரியான  பெறுமதிப்படுத்தப்பட்ட தகவல் நூல் இன்மையினால் சுற்றுலா அபிவிருத்தியில் அவை எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதனை உணர்ந்து, இவ் பிரதான இடை வெளியை நிவர்த்தி செய்யும் நோக்கில் மாவட்டச் செயலகத்தால்  பல்வேறு நூல்கள் மற்றும் கையேடுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில்  ஒரு அங்கமாக மேற்படி நூல் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

FB_IMG_1738395299992__1_.jpg

FB_IMG_1738395297196__1_.jpg

https://www.virakesari.lk/article/205503

நாட்டில் அதிகரித்துள்ள தொற்று நோய்கள், தொற்றா நோய்கள் சுகாதார கட்டமைப்பின் மீது பெரும் சுமையாக மாறியுள்ளன ; நளிந்த ஜயதிஸ்ஸ

3 months 3 weeks ago
01 FEB, 2025 | 01:17 PM
image

(செ.சுபதர்ஷனி)

இந்நாட்டில் அதிகரித்துள்ள தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் சுகாதார கட்டமைப்பின் மீது பெரும் சுமையாக மாறியுள்ளன.

ஆகையால் நோய்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதுடன் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுபாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கை போஷாக்கு சங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆய்வறிக்கை வெயிட்டு அமர்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில்,

நாட்டின் போசாக்கு நிலையை உயர்த்துவதன் மூலம் சுகாதாரத்தை பாதுகாப்பதுடன், உடலியல் செயற்பாடுகளுக்கு வாய்பளிப்பதன் மூலம் தொற்றா நோய்களில் இருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பாக பொதுமக்களை தெளிவுபடுத்துவதும், நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படுவது அவசியம். 

இது தனிநபர் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், நாட்டின் சுகாதார கட்டமைப்பு மீதான தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும் உதவும்.

இந்த இலக்கை அடைய, மருத்துவ வல்லுநர்கள், போசாக்கு நிபுணர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய சமூகம் சார்ந்த பல பங்குதாரர்களின் பங்களிப்புடன் நோய் தடுப்புக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். 

மேற்படி விடயத்தில் இலங்கை ஊட்டச்சத்து சங்கம் தனது முதன்மையான பங்களிப்பை வழங்கி வருவதும் பாராட்டத்தக்க விடயமாகும். 

இது ஊட்டச்சத்து நிபுணர்கள், வைத்தியர்கள், மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் பரந்த அமைப்பாக உள்ளது.

ஆகையால் இந்நாட்டில் அதிகரித்துள்ள தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் சுகாதார கட்டமைப்பின் மீது பெரும் சுமையாக மாறியுள்ளன. 

ஆகையால் நோய்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதுடன் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுபாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றார். 

WhatsApp_Image_2025-01-30_at_4.46.34_PM_

WhatsApp_Image_2025-01-30_at_4.46.34_PM.

https://www.virakesari.lk/article/205493

நாட்டை பழைய பாதையில் அழைத்துச்செல்ல முடியாது; இராமலிங்கம் சந்திரசேகர்

3 months 3 weeks ago
01 FEB, 2025 | 11:38 AM
image

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டில் உள்ள அனைத்து மக்களும் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தி கொடுப்பதே எமது இலக்காகும். அந்த இலக்கை நோக்கியே நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். 

மீண்டும் இந்த நாட்டை தோல்வி அடைந்த பழைய பாதையில் அழைத்துச் செல்ல முடியாது என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்ற யாழ். வல்வெட்டித்துறை கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் மேலும்தெரிவிக்கையில்,   

யுத்தம் நிறைவடைந்து 16 வருடங்கள் கடந்துள்ளன, எனினும் எமது மக்களின் பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை. இந்த மக்கள் பெரும் துன்பத்திற்கு மத்தியில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். 

இந்நாட்டில் வறுமைக் கோட்டில் வாழும் மக்களை கொண்ட மாகாணமாக வட மாகாணம் உள்ளது. குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர்.

அன்று எமது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இந்த மக்களை மீட்டெடுப்பதே தனது நோக்கம் எனக் குறிப்பிட்டிருந்தார். 

இந்த மக்களுக்கு வளமான வாழ்க்கையை உருவாக்கிக் கொடுப்பதே தனக்கும் மக்களுக்கும் இடையே உள்ள பிணைப்பு எனக் கூறியிருந்தார்.

வட பகுதியில் தற்போது போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. வாள்வெட்டு சம்பவங்களும் அதிகரித்துள்ளன. 

சுதந்திரமாக வாழமுடியாத சூழ்நிலை உள்ளதாக தேர்தலுக்கு முன்னதாக என்னை சந்தித்த மக்கள் கூறினார். இதற்கு நிரந்தர தீர்வை பெற்றுத் தருமாறு கோரினார்கள். 

நாட்டில் உள்ள அனைத்து மக்களும் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தி கொடுப்பதே எமது இலக்காகும். அதுவே எமது கனவாகும். அந்த இலக்கை நோக்கியே நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். 

இரண்டு பிரதான தேர்தல்களிலும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். 

எமக்கு வாக்களிக்காத மக்களையும் இதில் இணைத்துக் கொண்டு ஒன்றாக பயணிக்க நாம் தயாராகவே உள்ளோம். மீண்டும் இந்த நாட்டை தோல்வி அடைந்த பழைய பாதையில் அழைத்துச் செல்ல முடியாது என்றார். 

https://www.virakesari.lk/article/205489

சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடிகளைப் பறக்கவிடுமாறு நா.க. தமிழீழ அரசாங்கம் அறைகூவல்

3 months 3 weeks ago

சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடிகளைப் பறக்கவிடுமாறு நா.க. தமிழீழ அரசாங்கம் அறைகூவல் %E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%

சிங்கள தேசத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தேசம் விடுதலை அடையும் நாளே தமிழர்களின், தமிழர் தேசத்தின் சுதந்திர நாள். தமிழீழம் என்ற இலக்கை அடையும்வரை தொடர்ந்து போராடுவோம் எனவும் இனப்படுகொலைக்கு முழுமையாக ஒத்துழைத்து தமிழர்களை, தமிழர் தேசத்தை அழித்து ஆக்கிரமித்தவர்களிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

1948, பெப்ரவரி 4 இல் இருந்து சிறிலங்கா தனது சுதந்திர நாளாகக் கொண்டாடிவருகின்றது ஆனால் அன்றைய நாள் ஆங்கிலேயரால் பறிக்கப்பட்ட தமிழர்களின் இறையாண்மை சிங்கள இனவாதப் பூதத்திற்கு தரைவார்க்கப்பட்ட நாளாகும்.

சிங்கள தேசத்தில் ஆட்சி மாறினாலும் பேரினவாத மூலோபாயத்தில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. மாறாக சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்படவோ, நிறுத்தப்படவோ அல்லது பெளத்த மயமாக்கல் அகற்றப்படப் போவதில்லை,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகட்கு நீதிவழங்கவோ, போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவோ எந்தவாய்ப்பும் இல்லை.

இனப்படுகொலைக்கு முழுமையாக ஒத்துழைத்து தமிழர்களை, தமிழர் தேசத்தை அழித்து ஆக்கிரமித்தவர்களிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது.

காலங்காலமாக தமிழர்தேசம் இந்நாளை கரிநாளாக பிரகடணப்படுத்தி சிங்கள தேசத்திற்கெதிராகப் போராடிவருவது போல் இம்முறையும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வடகிழக்கில் போராட்டங்களுக்கான அறைகூவலை விடுத்துள்ளனர்.

தமிழர் தாயகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி, பாடசாலை மாணவர்கள், சிவில் சமூகத்தினர், தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிநிகள், வர்த்தக சங்கத்தினர் மற்றும் அனைவரும் கறுப்புப் பட்டிகள் அணிந்தும், கறுப்புக் கொடிகளை ஏந்தியும், வர்த்தக நிலையங்கள், பொது இடங்கள், பல்கலைக்கழகம், கல்லூரி, பாடசாலைகள் அனைத்திலும் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டும் தமது எதிப்பைத் தெரிவுப்பதுடன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின், தாய்மாரின் எதிர்ப்புப் போராட்டத்தில் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உரிமையுடன் அழைப்பு விடுக்கின்றது.

மேலும் புலம்பெயர் தேசங்களில் சிறிலங்கா சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டத்திற்கு பல்வேறுபட்ட அமைப்புக்கள் விடுத்த அழைப்பிற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமையைத் தெரிவித்துக் கொள்வதுடன்,

புலம் பெயர் தமிழர்கள் கறுப்புப்பட்டி அணிந்தும், தமிழர் வணிக நிலையங்களில் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டு எமது எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.

அத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இளையோரின் இணையவழி கண்டன எதிப்பு கருத்தாடல் நிகழ்வு பெப்ரவரி 4 இல் ஏற்பாடு செய்துள்ளது. இதில் ஐரோப்பிய, கனேடிய இளையோர் பங்கு பற்றுவது குறிப்பிடத்தக்கது.

சிங்கள தேசத்தால் ஆக்கிமிக்கப்பட்ட தமிழர் தேசம் விடுதலை அடையும் நாளே தமிழர்களின், தமிழர் தேசத்தின் சுதந்திர நாள். தமிழீழம் என்ற இலக்கை அடையும்வரை தொடர்ந்து போராடுவோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://akkinikkunchu.com/?p=310366

மாவையின் மரணவீட்டுக்கு வரமாட்டேன்! - சாணக்கியன்

3 months 3 weeks ago

மாவையின் மரணவீட்டுக்கு வரமாட்டேன்! - சாணக்கியன்
Vhg ஜனவரி 31, 2025
1000433669.jpg
 
மாவையின் மரணவீட்டுக்கு நான் வரமாட்டேன் என்றும், மட்டக்களப்பில் இருந்து யாராவது செல்லவிரும்பினால் அற்கான ஏற்பாடுகளை தான் செய்து தருவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தமிழரசுக்கட்சி மாவட்ட கிளையினருக்கு அறிவித்துள்ளார்.

சாணக்கியன் நேபாளத்தில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டிருப்பதாகவும், அதனாலேயே அவரால் மாவையின் மரணவீட்டில் கலந்துகொள்ளமுடியாமல் இருப்பதாகக் கூறப்பட்டுவருகின்றது.

இருந்தபோதிலும், மாவையின் இறுதி வணக்க நிகழ்வு நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே அந்தக் கருத்தரங்கு நிறைவுபெற்றுவிட்டதாகவும், சாணக்கியன் நினைத்திருந்தால் உடனடியாகவே இலங்கைக்குத் திரும்பிவதிருக்கமுடிந்திருக்கும் என்றும் கூறுகின்றார் தமிழரசுக் கட்சியின் ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.

மாவையின் மரணவீட்டுக்கு மாவையுடன் முன்னர் முரன்டுபட்ட சில முன்நாள் நாடாளுன்ற உறுப்பினர்கள் செல்லமுடியாத நிலை அங்கு காணப்படுகின்றது.

மாவையை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி அவரை மரணம் நோக்கி கொண்டுசென்றதான குற்றச்சாட்டுகள், பல தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்கள் மீது சமூகவைத்தளங்களில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

மாவையின் மரணத்திற்குக் காரணமானவர்கள் அவரது மரணவீட்டுக்குவந்து அரசியல் செய்தால் அவர்கள் மீது தமது கோபத்தை வெளிக்காண்பிப்போம் என்று மாவையின் உறவினர்களும், ஆதரவாளர்களும் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

மாவையை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியவர்கள் வரிசையில் சாணக்கியனை நோக்கியும் குற்றச்சாட்டுக்கள் சில தமிழரசுக் கட்சி உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டுவருகின்றது.

இந்த நிலையில் சாணக்கியன் மாவையின் மரணவீட்டுக்குச் சென்றால் அங்கு வைத்து மவையின் ஆதரவாளர்கள் மற்றும் குடும்பத்தினர் சாணக்கியனை நோக்கி கேள்விக்கணைகளைத் தொடுப்பார்கள் என்ற அச்சம் காரணமாகவே மாவையின் மரணவீட்டை சாணக்கியன் தவிர்ப்பதாகக் கூறுகின்றார்கள் சில மட்டக்களப்பு தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்.

சேச்..சே.. அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பே இல்லை என்றுதான் நாங்களும் நம்புகின்றோம்.

 

https://www.battinatham.com/2025/01/blog-post_178.html

நாட்டில் இருக்கும் ஜனாதிபதி மாளிகைகளை கமலஹாசனின் தசாவதாரம் திரைப்படத்துக்கு ஒப்பாக்கிய ஜனாதிபதி

3 months 3 weeks ago

நாட்டில் இருக்கும் ஜனாதிபதி மாளிகைகளை கமலஹாசனின் தசாவதாரம் திரைப்படத்துக்கு ஒப்பாக்கிய ஜனாதிபதி 01 Feb, 2025 | 01:15 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

நடிகர் கமலஹாசனின் தசாவதாரம் படத்தில் போன்று எமது நாட்டு ஜனாதிபதிகள் ஒவ்வொரு உருவத்தில் இருப்பதற்கு தேவையான முறையில் ஜனாதிபதி மாளிகைகள் இருக்கின்றன. அதனை நாங்கள் மாற்றியமைப்போம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

யாழ்.வல்வெட்டித்துறையில் நேற்று வெள்ளிக்கிழமை (31) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,  

நடிகர் கமலஹாசனின் தசாவதாரம் படத்தில் போன்று எமது நாட்டு ஜனாதிபதிகள் ஒவ்வொரு உருவத்தில் இருப்பதற்கு தேவையான முறையில் ஜனாதிபதி மாளிகைகள் இருக்கின்றன. அதனை நாங்கள் மாற்றியமைப்போம்.

அதனால் காங்கேசன்துறையின் மயிலிட்டி துறையில் இருக்கும் ஜனாதிபதி மாளிகை எனக்கு தேவையில்லை. அதனை பயன்படுத்த பொருத்தமான ஒரு வேலைத்திட்டத்தை தெரிவிக்குமறு ஆளுநர் மற்றும் மாவட்ட செயலாளருக்கு தெரிவித்திருக்கிறேன். 

அந்த ஜனாதிபதி மாளிகையை பல்கலைக்கழகம், கலாசார நிலையம் அமைப்பதற்கு பொருத்தம் என்றால் அதற்கு அதனை பயன்படுத்த வங்குவதற்கு நான் தயார்.

அதேபோன்று நுவரெலியா, அனுராதபுரம், கதிர்காமம் மஹியங்கனை ஆகிய இடங்களில் இருக்கும் ஜனாதிபதி மாளிகைகளையும் வழங்க தயாராக இருக்கிறேன்.

ஏனெனில் நாங்கள் வறுமையான நாட்டில் இருக்கிறோம். மக்களும் வறுமையில் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் நாட்டின் தலைவர் தசாவதாரமாக செயற்படுகிறார்.

 அவ்வாறு இருக்க முடியாது. அந்த அரசியல் மாறவேண்டும். அந்ந அரசியலை நாங்கள் மாற்றி இருக்கிறாேம் என்றார்.
 

https://www.virakesari.lk/article/205492

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படும் நீர் துண்டிப்பால் பொது மக்கள் பாதிப்பு

3 months 3 weeks ago

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படும் நீர் துண்டிப்பால் பொது மக்கள் பாதிப்பு 01 Feb, 2025 | 01:15 PM
image

கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் விநியோகிக்கப்பட்ட குடிநீர் விநியோகமானது திடீரென முன்னறிவித்தல் இன்றி சில நாட்களாக துண்டிக்கப்பட்டமையால் தாம் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர் என  பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மேலும் தெரிவிக்கையில், 

கிளிநொச்சியில் பல பகுதிகளுக்கு குழாய் வழி குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

பூநகரி போன்ற கடும் நீர் நெருக்கடியுள்ள பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் முற்றுமுழுதாக குழாய் வழி  நீரையே அனைத்து தேவைகளுக்கும் நம்பியிருந்த நிலையில்  சில நாட்களாக நீர் விநியோகம் மேற்கொள்ப்படவில்லை.  

இதனால் தாம் கடும் நெருக்கடியை சந்தித்தாகவும், பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் உத்தியோகத்தர்கள் பலரும்  நீர் இன்மையால் மிக மோசமாக பாதிப்புக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது. 

அதற்கான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றனர். 

இது தொடர்பில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையுடன் தொடர்பு கொண்டு வினவிய போது, 

கிளிநொச்சியில் அமைந்துள்ள தங்களது நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் உற்பத்தி திறனை விட மக்களின் நீர் பாவனை அதிகமாக காணப்படுவதனால் சம நேரத்தில் எல்லா பிரதேசங்களுக்கும் நீரை வழங்க முடியாதுள்ளது. 

இதன் காரணமாக  மட்டுப்படுத்த அளவில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது என்றார். 
 

https://www.virakesari.lk/article/205491

முன்னாள் எம்.பி. கருணாகரம் பயணித்த வேன் விபத்து

3 months 3 weeks ago

முன்னாள் எம்.பி. கருணாகரம் பயணித்த வேன் விபத்து

February 1, 2025  01:35 pm

முன்னாள் எம்.பி. கருணாகரம் பயணித்த வேன் விபத்து

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் பயணித்த வாகனம் திருகோணமலை, உப்புவெளி பிரதேசத்தில் இன்று (1) விபத்திற்குள்ளானது.

மட்டக்களப்பிலிருந்து தமிழரசு கட்சியின் மறைந்த தலைவர்  மாவை சேனாதிராஜாவின் மரண சடங்கில் கலந்து கொள்வதற்காக பயணித்த போதே   இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வேனின் பின்னால் பயணித்த மோட்டார் சைக்கிள் அதன் மீது மோதி இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் காயம் அடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை உப்புவெளி  வீதியில் சர்வோதயத்துக்கு முன்னால் உள்ள பாதசாரி கடவையில் பொதுமக்கள் கடக்கின்ற போது வேனை நிறுத்திய வேளை, பின்னால் அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுபாட்டை இழந்து வேனின் மீது மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

சம்பவம் தொடர்பில்  உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



https://tamil.adaderana.lk/news.php?nid=199610

 

வாகன இறக்குமதி தடையை நீக்கி வர்த்தமானி வெளியீடு!

3 months 3 weeks ago
வாகன இறக்குமதி தடையை நீக்கி வர்த்தமானி வெளியீடு! வாகன இறக்குமதி தடையை நீக்கி வர்த்தமானி வெளியீடு!

இலங்கைக்கான வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக இடைநிறுத்தத்தை உத்தியோகபூர்வமாக நீக்கி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நிதியமைச்சர் என்ற வகையில் இன்று (31) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, “இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) விதிமுறைகள் 2025 இன் 02” என்ற தலைப்பிலான அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி பொது பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சிறப்பு நோக்க வாகனங்கள், வணிக அல்லது சரக்கு போக்குவரத்து வாகனங்கள், தனிப்பட்ட பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் பிற மோட்டார் அல்லாத பொருட்களின் இறக்குமதி மீதான தற்காலிக இடைநிறுத்தத்தை நீக்குகிறது.

மோட்டார் கார்கள் உள்ளிட்ட வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் விதிமுறைகளுடன் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில், உப பிரிவு 4(1) மற்றும் பிரிவு 14 ஆகியவற்றுடன் சேர்த்து வாசிக்கப்பட்ட பிரிவு 20 இன் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1419219

இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் அதிகரிப்பு.

3 months 3 weeks ago
இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் அதிகரிப்பு இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் அதிகரிப்பு.

இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வடைந்துள்ளதுடன், வருடாந்தம் பிறந்து ஒரு வயதை அடைவதற்கு முன்னரே சுமார் 2,500 குழந்தைகள் உயிரிழப்பதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் கபில ஜயரத்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை மருத்துவ சங்கத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இவ்விடயம் தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும் வருடாந்தம் 3 இலட்சத்து 13 ஆயிரம் தாய்மார்கள் கர்ப்பம் தரிப்பதுடன், 2 இலட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன. எனினும் அவ்வாறு பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் நல்ல தேகாரோக்கியத்துடன் பிறப்பது இல்லை.

ஆண்டு தோரும் 5 வயதுக்கும் குறைந்த 3,300 குழந்தைகள் உயிரிழக்கின்றனர். கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது பிறப்பு வீதம் குறைவடைந்து செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

நாட்டில் கர்ப்பம் தரிக்கும் தாய்மார்களில் சுமார் 26 ஆயிரம் பேருக்கு கர்ப்ப காலத்தின் ஆரம்ப பகுதியில் கரு கலைவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. பொருளாதார சுமை, கருத்தரித்தல் தொடர்பில் போதியளவான தெளிவின்மை, வாழ்க்கை சூழல் போன்றன இதற்கு காரணமாக உள்ளன. மேலும் இந்நாட்டின் சுகாதார சேவையின் தரம் வீழ்ச்சி கண்டிருப்பதும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளது.

இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. அதாவது ஆண்களின் வயதெல்லை 73 ஆகவும் பெண்களின் வயதெல்லை 80 ஆகவும் உயர்வடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1419227

வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழப்பு.

3 months 3 weeks ago
வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழப்பு வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழப்பு.

நாடளாவிய ரீதியாக கடந்த 5 வருடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இவ்வாறான வீதி விபத்துக்களில் 5 தொடக்கம் 29 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களே அதிகளவில் பாதிக்கப்படுவதாகக் குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்த இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் சுரந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட மரணங்களில் 19 வயதுக்குட்பட்ட 2,000 மரணங்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீதி விபத்துக்களைக் குறைக்கும் வகையில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட வேண்டுமெனவும் இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கான விசேட ஆணைக்குழுவொன்றும் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் சுரந்த பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

https://athavannews.com/2025/1419234

வடமராட்சியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்!

3 months 3 weeks ago

 

வடமராட்சியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்!
2052282254.png

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.

இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் (31) இன்று காலை மூன்று ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து கரையொதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆமைகளை பிடிப்பதும், இறைச்சிக்காக பயன்படுத்துவதும் சட்டவிரோதம் என்பதால் கரையொதுங்கிய ஆமைகள் இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் துர்நாற்றம் வீசக்கூடிய நிலையிலும் உருக்குலைந்து காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.   (ப)

 

https://newuthayan.com/article/வடமராட்சியில்_இறந்த_நிலையில்_கரையொதுங்கும்_ஆமைகள்!
 

 

யாழ். போதனா மருத்துவமனையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட மருத்துவ நிபுணர் மீள் அழைக்கப்பட வேண்டும். - சிறீதரன் எம்.பி!

3 months 3 weeks ago

யாழ். போதனா மருத்துவமனையிலிருந்து  இடமாற்றம் செய்யப்பட்ட மருத்துவ நிபுணர் மீள் அழைக்கப்பட வேண்டும். - சிறீதரன் எம்.பி!
5200316.jpg

சிறப்பு மருத்துவ நிபுணர் ஒருவர் மாற்றீடு ஆளணி எதுவும் இன்றி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்  இருந்து விடுவிக்கப்பட்டமையால் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்களின் நிலை பெரும் கவலைக்குரியதாகவும் சவாலாகவும் மாறியுள்ளது.

இவர்களுக்கான  சிகிச்சைகளில் ஏற்படும் காலதாமதம் அச் சிகிச்சைகளின் பலனை கேள்விக்குறியாக்கும்  என யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று (31) நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்  தெரிவித்துள்ளார். 

 "பல் முக சீராக்கல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஒருவரே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்". 

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேலும் அங்கு தெரிவிக்கையில்,

யாழ் போதனா மருத்துவமனையில் பல் முக சீராக்கல் பிரிவின் சிறப்பு மருத்துவ நிபுணர் ஒருவரே உள்ளார், அவருடை சிறந்த சேவையினூடாக இதுவரை காலமும் காணப்பட்ட நீண்ட கால காத்திருப்போர் நோயாளர் பட்டியல் அவரது சேவைக் காலத்தில் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

நோயாளர்களின் நன்மை கருதி கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள நோயாளர்களை பார்வையிட்டு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.  

இதில் பெரும்பான்மையாக அவரது சேவையினை பெறுபவர்களாக பாடசாலை மாணவர்கள் கணப்படுகின்றனர்.

எந்தவொரு தனியார் மருத்துவமனைகளிலும் சேவையாற்றுவதில்லை என்பதனையும் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், 

இவருடைய திடீர் இடமாற்றத்தினால் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்களின் நிலை பெரும் கவலைக்குரியதாகவும் சவாலாகவும் மாறியுள்ளது.

இவர்களுக்கான  சிகிச்சைகளில் ஏற்படும் காலதாமதம் அச்சிகிச்சைகளில் பலனை கேள்விக்குறியாக்கும் எனவும் எனவே உடனடியாக அவரை போதனா மருத்துவமனைக்கு விடுவித்து உதவ வேண்டும் அல்லது மாற்று ஆளணியினை நியமிக்க வேண்டு்ம் என வலியுறுத்தினார் .

அத்துடன் கடும் நெருக்கடிகளையும் சவால்களையும் சந்தித்து வரும் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் உள்ள மருத்துவ அதிகாரி ஒருவரும் மாற்றீடு ஆளணியின்றி இவ்வாறே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சாதகமான பதிலை வழங்கியுள்ளார்.  (
 

https://newuthayan.com/article/யாழ்._போதனா_மருத்துவமனையிலிருந்து _இடமாற்றம்_செய்யப்பட்ட மருத்துவ_நிபுணர்_மீள்_அழைக்கப்பட_வேண்டும்._-_சிறீதரன்_எம்.பி!

 

கரன்னாகொடவின் மனுவை விசாரிக்க புதிய நீதியரசர்கள் குழாம்

3 months 3 weeks ago

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொடவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரிப்பதற்காக புதிய ஐவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிரதிவாதியாக பெயரிடுமாறு கோரி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐவரடங்கிய குழுவின் உறுப்பினர் அமல் ரணராஜா நேற்று விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

இதன்படி, புதிய பெஞ்ச் ஒன்றை பெயரிடுவதற்கான உரிய மனு இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்படி, குறித்த மனுவை விசாரிப்பதற்காக யாதுன்னே கோரயா, பி குமரன் ரட்ணம், சஷி மகேந்திரன், தமித் தோட்டவத்த மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு நியமிக்கப்பட்டது.

இது தொடர்பான மனு பெப்ரவரி 7ஆம் திகதி புதிய நீதியரசர்கள் முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

11 இளைஞர்கள் காணாமல் போனமை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தம்மை பிரதிவாதியாக பெயரிட சட்டமா அதிபர் எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என முன்னாள் கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

எனவே, சட்டமா அதிபரின் தீர்மானத்தை செல்லுபடியாகாத ஆணை பிறப்பிக்குமாறு அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

https://thinakkural.lk/article/315092

தையிட்டி விகாரையை அகற்ற திட்டம்!

3 months 3 weeks ago

 

1882224770.jpeg

 

யாழ்.மாவட்ட மற்றும் தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களின் தீர்மானங்களை புறம்தள்ளி தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்ட விகாரை அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். 

அதன் போது , தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் உள்ள தனியாருக்கு , அருகில் உள்ள விகாரை காணிகளை வழங்குவதற்கு , அல்லது அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என வடமாகாண ஆளுநர் தெரிவித்தார். 

ஜனாதிபதியும் அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். அதனை நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனும் ஏற்றுக்கொண்டார். 

இருந்த போதிலும் , நாடளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சட்டவிரோதமான முறையில் மதில் கட்டினாலே அகற்ற சட்டம் இருக்கையில் சட்டவிரோதமான முறையில் , ஒருங்கிணைப்பு குழு தீர்மானங்களையும் மீறி அடாத்தாக கட்டப்பட்ட விகாரை அகற்றப்பட வேண்டும். அது எந்த விதத்திலும் இந் நல்லிணக்கத்திற்கோ , மாற்றத்திற்கோ ஏற்றதல்ல என தெரிவித்தார்.  (ப)

 

தையிட்டி விகாரையை அகற்ற திட்டம்!

பெரும்பான்மையை விஞ்சும் முஸ்லிம்களின் சனத்தொகை என்பது விஞ்ஞான பூர்வமானதல்ல - நூல்வெளியீட்டு விழாவில் ஹக்கீம் தெரிவிப்பு

3 months 3 weeks ago
31 Jan, 2025 | 09:20 AM
image
 

(ஆர்.ராம்)

நாட்டின் பெரும்பான்மை மக்களின் தொகையை முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரம் விஞ்சிப்போய்விடும் என்பது விஞ்ஞான பூர்வமாக உறுதியான விடயமல்ல என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் ரஞ்சன் கூல் எழுதிய  'உயிர்த்த ஞாயிறு அனர்த்தம் - மறைகரம் வெளிப்பட்டபோது' மற்றும் ரவூப் ஹக்கீம் எழுதிய 'நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள்-முஸ்லிம்கள் மீது கட்டமைக்கப்பட்ட சந்தேகங்களை களைதல்' ஆகிய இரு மொழிபெயர்ப்பு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு நேற்று முன்தினம் இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. இதன்போது ஏற்புரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பேர்ட்ரம் ரசல் எனும் தத்துவாசிரியர் 'இந்த உலகம் தீவிரவாதிகளாலும், முட்டாள்களாலும் நிறைந்ததாக இருந்தாலும் அவர்கள் எல்லோரும் தம்மைப் பற்றி மிகத்திடகாத்திரமான உணர்வுடன் இருக்கின்றார்கள். ஆனால் அறிவுள்ளவர்கள் எப்போதும் சந்தேகத்துடன் வாழ்கின்றார்கள்' என்று கூறுகின்றார். முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இந்த வார்த்தைகள் மிகவும் பொருத்தமானவையாக இருக்கின்றன.

சமூகத்தில் தீவிரவாத சிந்தனைகளுடன், முட்டாள்தனமான சிந்தனையுடன் இருப்பவர்கள் உள்ளார்கள். அவர்கள் தங்களுடைய விடயத்தில் உறுதியாக இருக்கையில் நாங்கள் தான் ஒவ்வொரு விடயத்தினையும் அச்சத்துடன், பீதியுடனும் பார்கின்றோம்.

இந்த மனோநிலையில் இருந்து நாங்கள் மாறவில்லை என்றால் எமது அடுத்தசந்ததியினருக்கான சமூகக் கட்டமைப்பினை அமைப்பதில் நாங்கள் தவறிப்போவோம்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் நடைபெற்ற உலக ஊழல் தினத்தில் ஆற்றிய உரையின்போது, மிகக் காரசாரமாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் அணுகுமுறையை கேள்விக்கு உட்படுத்தியிருந்தார். சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்படுகின்ற குற்றப்பத்திரிகைகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. அதுபற்றிய உரையாடல் நெடியது.

எவ்வாறாயினும் சட்டத்தின் ஆட்சி சம்பந்தமான விடயத்தில் இழைக்கப்பட்டுள்ள தவறுகள் திருத்தப்படுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும். முஸ்லிம்களாக நாம் தற்பாதுகாப்பு நிலைப்பாட்டை எடுக்கும் காரணத்தினால் பல்வேறு சந்தேகங்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பதில் தவறியிருக்கின்றோம்.

முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரம் இந்த நாட்டின் பெரும்பான்மையை விஞ்சிப்போய்விடும் என்றொரு அச்சம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுசம்பந்தமாக விஞ்ஞான பூர்வமாக உறுதி செய்வதற்காக சனத்தொகைவளர்ச்சி விஞ்ஞானம் சம்பந்தமான பேராசிரியர் திசாநாயக்கவுடன் நீண்ட கலந்துரையாடல்களைச் செய்து அதன்மூலமாகப் பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் விடயங்களை முன்வைத்துள்ளேன். இந்த விடயங்கள் சமூக மயப்படுத்தப்பட வேண்டும் என்பதோடு பெரும்பான்மை மக்களுக்கும் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றார்.

பெரும்பான்மையை விஞ்சும் முஸ்லிம்களின் சனத்தொகை என்பது விஞ்ஞான பூர்வமானதல்ல - நூல்வெளியீட்டு விழாவில் ஹக்கீம் தெரிவிப்பு | Virakesari.lk

சிறுவர் உயிர்மாய்ப்புகள் அதிகரிப்பு ; சமூக ஊடகங்கள் பாவனையே காரணம் - இலங்கை சமூக வைத்தியர்கள் கல்லூரி

3 months 3 weeks ago
31 Jan, 2025 | 09:59 AM
image
 

சமூக ஊடகங்கள் பாவனை சிறுவர் உயிர்மாய்ப்புகள் அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளதாக இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி (CCPSL) தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டில் 200க்கும் மேற்பட்ட சிறுவர் உயிர்மாய்ப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரியின் வைத்திய கலாநிதி கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில்  18 வயதுக்குட்பட்ட 133 சிறுவர்கள் உயிர்மாய்ப்பு செய்துகொண்டுள்ளனர். அதிகாரப்பூர்வமற்ற தரவுகளின்படி கடந்த ஆண்டில் 270 உயிர்மாய்ப்பு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவங்களுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. 

உயிர்மாய்ப்புக்களை தடுக்க எடுக்க வேண்டிய முதலாவது நடவடிக்கை சமூக ஊடகங்களை ஏதேனும் ஒரு வழியில் தடை செய்வதாகும். ஒரு நாடாக என்ன செய்ய முடியும் என்பது பற்றிய தகவல்களை நாங்கள் சேகரித்துள்ளோம், மேலும் ஓரிரு வாரங்களில் மேலதிக விவரங்களை வெளியிடுவோம் என்று நம்புகிறோம்.

சமூக ஊடகங்கள் சிறுவர்களுக்கு சாதகமாக மற்றும் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும் அதே வேளையில், அதன் பயன்பாட்டை சிறப்பாக ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர் உயிர்மாய்ப்புகள் அதிகரிப்பு ; சமூக ஊடகங்கள் பாவனையே காரணம் - இலங்கை சமூக வைத்தியர்கள் கல்லூரி | Virakesari.lk

யாழில் 33 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள்! - ஜனாதிபதியிடம் யாழ். மாவட்ட பதில் அரச அதிபர் சுட்டிக்காட்டு

3 months 3 weeks ago
31 Jan, 2025 | 02:05 PM
image
 

யாழ்ப்பாணத்தில் 33 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் காணப்படுவதாக யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்று வருகிறது. 

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அரசாங்க அதிபர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார். 

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

பிரதேச செயலக பிரிவுவாரியாக சாவகச்சேரியில் 14, நல்லூரில் 07, தெல்லிப்பழையில் 06, யாழ்ப்பாணத்தில் 03, உடுவிலில் 03 என 33 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் காணப்படுகின்றன. 

எனவே, இந்த ரயில் கடவைகளை பாதுகாப்பானதாக அமைக்க வேண்டும்.

download__4_.jpg

யாழில் நேர அட்டவணைக்கேற்ப, 38 புதிய பஸ்கள் தேவைப்படுகின்றன. அந்த வகையில் யாழ்ப்பாணம் வீதிக்கு 23 பேருந்துகளும் பருத்தித்துறை வீதிக்கு 10 பேருந்துகளும் காரைநகர் வீதிக்கு 5 பேருந்துகளும் தேவையாக உள்ளன.

யாழ்ப்பாணத்தில் தற்போது வீதி விபத்துகள் அதிகரித்து காணப்படுகின்றன. 

யாழில் 6 வீதி சமிக்ஞை விளக்குகளே காணப்படுகின்றன. எனவே, வீதி விபத்துக்களை குறைக்க வீதி சமிக்ஞை விளக்குகளை அமைக்க வேண்டும் என்றார்.

யாழில் 33 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள்! - ஜனாதிபதியிடம் யாழ். மாவட்ட பதில் அரச அதிபர் சுட்டிக்காட்டு | Virakesari.lk

Checked
Thu, 05/22/2025 - 22:54
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr