ஊர்ப்புதினம்

ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறை!

3 months 2 weeks ago
ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறை! ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறை!

இஸ்லாம் மததத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ், பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக அவருக்கு 1500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

2016 ஜூலை 16 அன்று, கிருலப்பனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், “இஸ்லாம் ஒரு புற்றுநோய்… அதை ஒழிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

இது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான நடவடிக்கை என்ற குற்றச்சாட்டின் கீழ் பொலிஸார் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.

https://athavannews.com/2025/1415834

வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு!

3 months 2 weeks ago
வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு! வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு!

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு செய்யப்பட உள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் சம்பளத்தை அதிகரிப்பதில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1415833

சட்டவிரோத மீன்பிடி: 10 இந்திய மீனவர்கள் கைது!

3 months 2 weeks ago
சட்டவிரோத மீன்பிடி: 10 இந்திய மீனவர்கள் கைது! சட்டவிரோத மீன்பிடி: 10 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக மீன்பிடி படகுடன் 10 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம், கோவிலான் கலங்கரை விளக்கத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் நேற்றிரவு (08) மேற்கொண்ட ரோந்து பணிகளின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுடன் இந்திய மீனவர்களை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லவும், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கவும் இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்திருந்தது.

6.jpg?ssl=1

3.jpg?ssl=1

https://athavannews.com/2025/1415842

உச்சம் தொட்டது பச்சை மிளகாயின் விலை!

3 months 2 weeks ago

நாடளாவிய பொருளாதார மையங்களில், பச்சை மிளகாயின் விலை ஒரு கிலோக்கு 750 ரூபாய் முதல் 850 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இந்த நிலையில், நாரஹேன்பிட்டி சிறப்பு பொருளாதார நிலையத்தில் நேற்று, ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை 1000 ரூபாயாக பதிவாகியுள்ளது.

மேலும், நாடு முழுவதும் பல சில்லறை விற்பனைக் கடைகளில், 100 கிராம் பச்சை மிளகாயின் விலை 120 ரூபாயிலிருந்து 150 ரூபாயினால் விற்கப்படுகிறது.

https://jettamil.com/the-price-of-green-chilies-has-reached-its-peak

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தின் அவல நிலை... சுகாதார வைத்திய அதிகாரி அதிரடி!

3 months 2 weeks ago

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் மலக்கழிவை 24 மணித்தியாலத்திற்கு அகற்றி சுகாதாரத்தை பேண தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தின் அவல நிலை... சுகாதார வைத்திய அதிகாரி அதிரடி! | Kilinochchi Central Bus Stand Health Officer Alert

 

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மலக்கழிவு வெளியேறுகின்ற நிலையில் உரிய அதிகாரிகளுக்கு சுகாதார துறையினர் சுகாதாரத்தை பேணுமாறு தெரிவித்தனர்.

 

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தின் அவல நிலை... சுகாதார வைத்திய அதிகாரி அதிரடி! | Kilinochchi Central Bus Stand Health Officer Alert

 

இருப்பினும், இதுவரையில் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்றையதினம் (08-01-2025) கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் இங்கு சென்ற நிலையிலே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தின் அவல நிலை... சுகாதார வைத்திய அதிகாரி அதிரடி! | Kilinochchi Central Bus Stand Health Officer Alert

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தின் அவல நிலை... சுகாதார வைத்திய அதிகாரி அதிரடி! | Kilinochchi Central Bus Stand Health Officer Alert

கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தின் அவல நிலை... சுகாதார வைத்திய அதிகாரி அதிரடி! | Kilinochchi Central Bus Stand Health Officer Alerthttps://jvpnews.com/article/kilinochchi-central-bus-stand-health-officer-alert-1736352464

யாழ் உட்பட 3 விமான நிலையத்திற்கு வரிச்சலுகை நீடிப்பு!

3 months 2 weeks ago

 யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், கொழும்பு சர்வதேச விமான நிலையம் (இரத்மலான) மற்றும் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையங்களுக்கான புறப்படுதல் வரிச் சலுகைகளை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனை

 

அதன்படி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு திட்டமிடப்பட்டுள்ள விமானப் பயண நேர அட்டவணைக்கமைவான விமான சேவைகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள புறப்படுதல் வரியில் 50% வீதக் கட்டணத்தை கையுதிர்க்கும் சலுகையை 2026.01.30 வரை நீடித்தல்.

யாழ் உட்பட 3 விமான நிலையத்திற்கு வரிச்சலுகை நீடிப்பு! | Tax Extended For 3 Airports Including Jaffna

 

கொழும்பு சர்வதேச விமான நிலையத்திற்கு (இரத்மலான) திட்டமிடப்பட்டுள்ள விமானப் பயண நேர அட்டவணைக்கமைவான விமான சேவைகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள புறப்படுதல் வரியில் 50% வீதக் கட்டணத்தை கையுதிர்க்கும் சலுகையை 2025.03.27 தொடக்கம் ஒருவருட காலத்திற்கு நீடித்தல்.

 

மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திட்டமிடப்பட்டுள்ள விமானப் பயண நேர அட்டவணைக்கமைவான விமான சேவைகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள புறப்படுதல் வரிக்குரிய சலுகையை முழுமையாக வழங்குவதை 2024.12.29 தொடக்கம் மேலும் ஒருவருட காலத்திற்கு நீடித்தல்.

யாழ் உட்பட 3 விமான நிலையத்திற்கு வரிச்சலுகை நீடிப்பு! | Tax Extended For 3 Airports Including Jaffna

 

நேற்று முன் தினம் (6) நடைபெற்ற அமைச்சரவையில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், கொழும்பு சர்வதேச விமான நிலையம் (இரத்மலான) மற்றும் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையங்களுக்கான சர்வதேச விமான சேவைகளை கவர்ந்திழுக்கும் நோக்கில் வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் ( இலங்கை) (தனியார்) கம்பனியால் சர்வதேச விமான நிலைய சேவைகளுக்கான ஊக்குவிப்புச் சலுகைத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 

குறித்த விமான நிலையங்களுக்கு புறப்படுதல் வரிச் சலுகைகளை கீழ்வருமாறு நீடிப்பதற்கு போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்   சமர்ப்பித்த யோசனைக்கே இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://jvpnews.com/article/tax-extended-for-3-airports-including-jaffna-1736327039

வடக்கில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள்!

3 months 2 weeks ago

வெளிநாட்டு வாழ் தமிழர்கள் வட மாகாணத்தில் முதலீடு செய்வது தொடர்பாக தமது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி மற்றும் வைத்தியர் பவானந்தராஜா வெளிநாட்டு விவகார அமைச்சர் கௌரவ விஜித ஹேரத்துடன் கலந்துரையாடல் ஒன்றை இன்று (08-01-2025) நாடாளுமன்ற அலுவலகத்தில் நடத்தினர்.

 

 

வடக்கில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள்! | Foreign Tamils Interested Investing In The North

இதன்போது வடக்கு மாகாணத்தில் 5 தொழிற்பேட்டை நிலையங்களை அமைப்பதற்காக காணிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் விரைவில் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

மேலும் ஆர்வமுள்ளவர்கள்  இலங்கைமுதலீட்டு சபையின் ஊடாக தங்கள் செயற்திட்டங்களை முன்வைக்க முடியும் எனவும் பதிலளித்தார். 

அதேபோன்று நீண்ட காலமாக புலம்பெயர்ந்து நாட்டுக்கு வர முடியாது இருக்கும் தமிழர்கள் தாங்கள் நாட்டுக்கு வர விரும்புவது தொடர்பாகவும் எம்.பி றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அமைச்சருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

https://jvpnews.com/article/foreign-tamils-interested-investing-in-the-north-1736356551#google_vignette

கழிவுகள் நிறைந்த வவுனியா குளத்தில் கழுவி விற்பனை செய்யப்படும் மரக்கறிகள்!

3 months 2 weeks ago

வவுனியாவில் உள்ள இலுப்பையடி பகுதியில் மொத்த மரக்கறி விற்பனை நிலையங்களுக்கு வரும் சில மரக்கறிகள் கழிவுகள் நிறைந்த வவுனியா குளத்தில் கழுவிய பின் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 

குறிப்பாக கரட் போன்ற மரக்கறிகளை கொள்வனவு செய்யும் மொத்த வியாபாரிகள் அதனை தமது கடைகளின் பின் இருக்கும் கழிவுகள் வீசப்படும் வவுனியா குளத்தில் கழுவிய பின் அதனை விற்பனை செய்து வருகின்றனர்.

கழிவுகள் நிறைந்த வவுனியா குளத்தில் கழுவி விற்பனை செய்யப்படும் மரக்கறிகள்! | Vegetables Washed And Sold At Vavuniya Pond

 

இது குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன் சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்பட்ட போது, அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து வர்த்தகர் ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த போதும், தற்போதும் சில வியாபாரிகள் வவுனியா குளத்தில் கழுவிய பின் விற்பனை செய்து வருகின்றனர்.

 

வவுனியா குளமானது நகரில் அமைந்துள்ளதால் பல வர்த்தக நிலையங்களின் கழிவுகள் மற்றும் குப்பை கூலங்கள் என்பன அதில் வீசப்பட்டு வருகின்றது.

கழிவுகள் நிறைந்த வவுனியா குளத்தில் கழுவி விற்பனை செய்யப்படும் மரக்கறிகள்! | Vegetables Washed And Sold At Vavuniya Pond

 

இந்த நிலையில் குறித்த நீரில் மரக்கறிகளை கழுவி விற்பனை செய்வது தொடர்பில் நகரசபை கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் அவர்களது வர்த்தக உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் மரக்கறி கொள்வனவு செய்யும் நுகர்வோர் கோரியுள்ளனர்.

https://jvpnews.com/article/vegetables-washed-and-sold-at-vavuniya-pond-1736357979

வடக்கில் உள்ள ஆலயங்கள் தொடர்பில் ஆளுநர் நா.வேதநாயகன் வேதனை!

3 months 2 weeks ago

 

வடக்கில் உள்ள ஆலயங்கள் இப்போது சமூகசேவைக்கு செலவு செய்வதிலும் பார்க்க வழக்குகளுக்கே அதிகளவு பணத்தைச் செலவு செய்வதாக வடக்கு மாகாண வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் வேதனை வெளியிட்டார். 

அன்னை சிவத்தமிழ் செல்வி பண்டிதை கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் நூற்றாண்டு விழா நேற்று (07) இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் உள்ள ஆலயங்கள் தொடர்பில் ஆளுநர் நா.வேதநாயகன் வேதனை! | Governor Vedhanayagan About The Temples North

 

1993ஆம் ஆண்டு காலப் பகுதியில் தெல்லிப்பழை பிரதேச செயலக உதவி அரசாங்க அதிபராக இருந்தமையை நினைவுகூர்ந்து அன்றைய நாட்களில் அம்மையாருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்புக் கிடைத்தது.

சமூகப் பணிகள் எமது மக்களுக்கு மிக அவசியமானவை

 

 

போர் மற்றும் இடப்பெயர்வுகளின் போதும் அம்மையார் சமூகப் பணிகளை திறம்பட முன்னெடுத்தமையைச் நேரில் கண்டேன். அன்றைய காலத்தில் ஆலயங்கள் சமூகப் பணிகளை முன்னெடுக்காதிருந்த சூழலில், அம்மையார் அவர்களே அதனைத் தொடக்கி அதன் முன்னோடியாக இருந்ததார்.

 

ஆனால் இன்று ஆலயங்களில் உண்மையான கடவுள் பக்தி இல்லை இதனால் பல ஆலயங்கள் நீதிமன்றப்படியேறியுள்ளன. புலம்பெயர் தேசங்களிலிருந்து ஆலயங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டாலும் ஆலய நிர்வாகங்கள் ஒழுங்காக கணக்கறிக்கைகள் முன்வைப்பதில்லை இது பிரச்சினைகளுக்கு அடிநாதமாக இருக்கின்றது.

வடக்கில் உள்ள ஆலயங்கள் தொடர்பில் ஆளுநர் நா.வேதநாயகன் வேதனை! | Governor Vedhanayagan About The Temples North

 

தனது காலத்தின் பின்னரும் இந்த அறப்பணிகள் தொடர்ந்தும் தடையுறாது முன்னெடுத்துச் செல்வதற்கு பொருத்தமான ஒருவரான கலாநிதி ஆறுதிருமுருகனை அம்மையார் வளர்த்து அடையாளம் காட்டியுள்ளார்.

 
புலம்பெயர்  மக்களின் பங்களிப்பு

அவரின் சேவைகளைப் தொடரவேண்டும் காய்க்கின்ற மரம் கல்லெறி படுவதைப்போல அவர் மீதும் பலர் விமர்சனங்களையும் குறைகளையும் முன்வைக்கின்றனரே தவிர அவர் செய்யும் சேவைகளைப் பாராட்ட முன்வருவதில்லை. 

எமது சமூகத்தில் இந்த விடயம் இப்போது ஆழமாக வேரூன்றி விட்டது ஆறுதிருமுருகன் மீதான நம்பிக்கையிலேயே புலம்பெயர் தேசத்திலிருப்பவர்களும் இங்கிருப்பவர்களும் அவர் ஊடாக உதவிகளைச் செய்ய முன்வருகின்றனர்.

வடக்கில் உள்ள ஆலயங்கள் தொடர்பில் ஆளுநர் நா.வேதநாயகன் வேதனை! | Governor Vedhanayagan About The Temples North

இந்தச் சமூகப் பணிகள் எமது மக்களுக்கு மிக அவசியமானவை இதைத் விடாது தொடரவேண்டும் என்றும் வடக்கு மாகாண வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் இதன்போது கூறினார்.

https://jvpnews.com/article/governor-vedhanayagan-about-the-temples-north-1736338738

தைப்பொங்கலை முன்னிட்டு தேங்காய், பச்சை அரிசியின் விலையை குறையுங்கள் - இராதாகிருஸ்ணன் அரசாங்கத்திடம் வலியுறுத்தல்

3 months 2 weeks ago

 

தைப்பொங்கலை முன்னிட்டு தேங்காய், பச்சை அரிசியின் விலையை குறையுங்கள் - இராதாகிருஸ்ணன் அரசாங்கத்திடம் வலியுறுத்தல்

Published By: Digital Desk 7

08 Jan, 2025 | 07:31 PM
image

( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 13 ஆம் திகதி சீனாவுக்கு சென்று அங்கு பொங்கல் பண்டிகை  கொண்டாடவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.  தைப்பொங்கல் தமிழர்களுக்கு முக்கியமானதாகும். ஆகவே பச்சையரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றை குறைந்த விலைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சந்திரசேகர் அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன்  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை  (08) நடைபெற்ற  இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்கு விதி மீதான விவாதத்தில் உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டில் சமாதானம் மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் தைரியமாக முதலீடு செய்வார்கள்.

துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தற்போது தீவிரமடைந்துள்ளது. ஆகவே  சமூக விரோத செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டு வந்து மக்களின்  பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம்.

அரிசி, தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின்  விலையேற்றத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எதிர்வரும் வாரம் பொங்கல் பண்டிகையை கொண்டாடவுள்ளோம். ஆனால் பச்சையரிசி மற்றும் தேங்காய்க்கான தட்டுப்பாடு காணப்படுகிறது. ஒருகிலோகிராம்  பச்சையரிசியை  280 அல்லது 290 ரூபா என்ற  அடிப்படையில் வாங்க வேண்டியுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 13 ஆம் திகதி சீனாவுக்கு சென்று அங்கு பொங்கல் பண்டிகை  கொண்டாடவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. 

தைப்பொங்கல் தமிழர்களுக்கு முக்கியமானதாகும். ஆகவே பச்சையரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றை குறைந்த விலைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சந்திரசேகர் அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும்.

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாலம் அமைக்கப்பட வேண்டும் என்பதனை பாரதியாரே பாடல் ஒன்றின் மூலம்  வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு பாலம் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடும். இலங்கை - இந்தியாவிடையில் 18 கிலோமீற்றர்தான் இடைவெளி. இதில் பாலம் அமைத்தால் நாம் காரிலேயே இந்தியாவுக்கு போய் வரலாம்.  அதேபோன்று அங்குள்ளவர்களும் இங்கு வந்து போவார்கள்.

இந்திய சுற்றுலாப்  பயணிகளே   அதிகளவில்  இலங்கை வருகின்றனர் . இவ்வாறான நிலையில் பாலம்  இரு நாடுகளுக்கும் இடையில்  பாலம்  அமைத்தால்  சுற்றுலாத்துறையை   அபிவிருத்தி செய்யலாம். எனவே இலங்கை இந்தியாவுக்கிடையில் பாலம்  அமைப்பது  தொடர்பில் இந்த அரசாங்கம்  உரிய  நடவடிக்கைகளை  முன்னெடுத்து முன்னுதாரணமாக செயற்பட வேண்டும்.

அதேவேளை கிளங்கன் வைத்தியசாலையை அரசாங்கம் அபிவிருத்தி செய்ய வேண்டும். ஏற்கனவே இந்தியா  இந்த வைத்தியசாலைக்கு உதவியுள்ளது. அரசாங்கத்தினால்  இயலாவிட்டால் இந்தியாவிடம் உதவி கோரினால் அவர்கள் தாராளமாக அபிவிருத்தி செய்து  தருவார்கள். ஏனெனில் இந்த வைத்தியசாலையை நம்பியே பல்லாயிரக்கணக்கான மக்கள் உள்ளனர்.

அத்துடன் அரசு தற்போது கிளீன் ஸ்ரீலங்கா என்ற பெயரில் சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதன்மூலம் நடைபாதை வியாபாரிகள் ,பஸ் ,ஆட்டோக்காரர்கள்,இவர்களை நம்பியுள்ள  வர்த்தகர்கள் பாதிக்கப்படுகினறனர் . எனவே இது தொடர்பில் அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.

  •  

 

 

https://www.virakesari.lk/article/203335

வவுனியாவில் கிராம சேவகர் ஒருவர் பதவியில் இருந்து இடைநிறுத்தம்

3 months 2 weeks ago

Published By: VISHNU   08 JAN, 2025 | 09:23 PM

image

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றிய கிராம சேவகர் ஒருவர் தனது கல்விச் சான்றிதழை உறுதிப்படுத்த தவறியமையால் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு கிராம சேவகராக நியமனம் பெற்ற ஒருவர் தனது மூன்று வருட நிறைவில் பதவியினை உறுதிப்படுத்த வேண்டும்.  குறித்த பதவியினை மூன்று வருடம் கடந்தும் தாமதாக கடந்த வருடமே குறித்த கிராம அலுவலர் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்போது குறித்த கிராம அலுவலர் நியமனத்திற்காக சமர்ப்பித்த க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றை பரீட்சை திணைக்களத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை.

இதனையடுத்து குறித்த கிராம அலுவலர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். 

https://www.virakesari.lk/article/203354

தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!

3 months 2 weeks ago

Published By: VISHNU   08 JAN, 2025 | 09:12 PM

image
 

08ஆம் திகதி புதன்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர் யூலி சங் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் பொருளாதார சவால்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட அமெரிக்காவின் தொடர்சியான பங்களிப்பின் முக்கியத்துவம் தேவையென எடுத்துரைக்கப்பட்டது. அதனுடன் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. 

https://www.virakesari.lk/article/203353

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை விடுவிக்குமாறு கோரி கையெழுத்து போராட்டம்

3 months 2 weeks ago

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை இராணுவத்தினரிடமிருந்து விடுவித்து மாவீரர் தினத்தில் தமது பிள்ளைகளுக்கான நினைவேந்தலை சுதந்திரமாக அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கையெழுத்து போராட்டம் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

தேராவில் மாவீரர் துயிலுமில்ல பணிக் குழு உறுப்பினர்கள், மாவீரர்கள், பெற்றோர்கள், உரித்துடையவர்கள் இணைந்து குறித்த கையெழுத்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தின் காணியின் பெரும்பகுதி இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டிருக்கின்ற நிலைமையில்,குறித்த துயிலுமில்ல காணிக்கு முன்பாக கையெழுத்து போராட்டம் நடைபெற்றது.

https://thinakkural.lk/article/314489

16ஆம் ஆண்டு நினைவு நாளில் லசந்த விக்ரமதுங்கவிற்கு கல்லறையில் அஞ்சலி

3 months 2 weeks ago
16ஆம் ஆண்டு நினைவு நாளில் லசந்த விக்ரமதுங்கவின் கல்லறைக்கு அஞ்சலி

Published By: VISHNU   08 JAN, 2025 | 08:30 PM

image
 

சிரேஷ்ட ஊடகவியலாளரும், 'சன்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியருமான லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், புதன்கிழமை (8) பொரளை பொதுமயானத்திலுள்ள அவரது கல்லறைக்கு முன்பாக அவரின் குடும்பத்தார், நண்பர்கள், அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியபோது....

JWE_0117.jpg

JWE_0114.jpg

JWE_0109.jpg

JWE_0105.jpg

JWE_0097.jpg

JWE_0095.jpg

JWE_0093.jpg

JWE_0044.jpg

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)

https://www.virakesari.lk/article/203350

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நீதி நிலைநாட்டப்படும் என நம்புகின்றோம் - லசந்த விக்கிரமதுங்க குடும்பத்தினர்

Published By: RAJEEBAN   08 JAN, 2025 | 08:33 PM

image
 

தேசிய மக்கள்சக்தி அரசாங்கத்தின் கீழ் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் என அவரது குடும்பத்தினர் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.

லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பிலான உண்மையை  ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க அரசாங்கம் கண்டறிந்து நீதியை நிலைநாட்டும் என அவரது குடும்பத்தினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையின் பின்னர் நான்கு அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்துள்ளன எனினும் எந்த அரசாங்கத்திற்கு இந்த கொலைகள் குறித்து விசாரணை செய்வதற்கான அரசியல் உறுதிப்பாடு இல்லை என லசந்த விக்கிரமதுங்கவின் சகோதரர் லால் விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை குறித்து விசாரணை செய்வதாக உறுதியளிக்கவில்லை வேறு பல முக்கியமான சம்பவங்கள்  குறித்தும் விசாரணை செய்வதாக உறுதியளித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் இந்த சம்பவம் குறித்து பயங்கரவாத  விசாரணை பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர், விடுதலைப்புலிகளே இதனை செய்தனர் என்ற ஊகத்தின் அடிப்படையில் இந்த விசாரணைகளை அவர்கள் முன்னெடுத்தனர், எனினும் 2015 இல் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் எங்கள் சட்டத்தரணி சிஐடிக்கு இந்த விசாரணையை மாற்றுமாறு கோரினார், அதனை தொடர்ந்து அதனை சிஐடிக்கு மாற்றினார்கள் அவ்வேளை ஷானி அபயசேகரவும் இந்த விசாரணைகளின் ஒரு பகுதியாக காணப்பட்டார் என  லசந்தவின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

சிஐடியினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது லசந்தவின் மரணம் குறித்து பல தகவல்கள் வெளிவந்தன, இந்த கொலைகளில் ஈடுபட்டவர்களின் பெயர் முகவரிகள் கூட தெரியவந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தின் கீழ் ஷானி அபயசேகர மீண்டும் விசாரணைகளிற்கு திரும்பியுள்ள நிலையில் புதிய விசாரணைகள் அவசியமில்லை, விசாரணைகளை பூர்த்தி செய்தாலே போதும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/203351

வில்பத்து தேசிய பூங்கா பகுதியில் உயிரிழந்த நிலையில் 11 டொல்பின்கள் மீட்பு

3 months 2 weeks ago

Published By: VISHNU   08 JAN, 2025 | 08:45 PM

image
 

வில்பத்து தேசிய பூங்கா கடல் எல்லைக்குட்பட்ட கொல்லன் கனத்த பகுதியில் 11 சாதாரண குப்பி டால்பின்கள் உயிரிழந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (7) மீட்கப்பட்டுள்ளது.

WhatsApp_Image_2025-01-08_at_3.31.18_PM.

முள்ளிக்குளம்  தள பாதுகாப்பு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய அப்பகுதிக்குச் சென்ற வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று சோதனை செய்தனர்.

WhatsApp_Image_2025-01-08_at_3.31.18_PM_

இதன் போது டால் பின்கள் குழு ஒன்று இறந்து கிடந்ததை அவதானித்துள்ளனர்.

பின்னர் இறந்த டால்பின்களை மீட்டு பரிசோதித்ததன் பின்னர் இது தொடர்பான தகவல்கள் புத்தளம் நீதிவான் நீதிமன்றில்  செவ்வாய்க்கிழமை (7) சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்படி அனுராதபுரம் வனவிலங்கு கால்நடை வைத்திய அலுவலக அதிகாரிகள்  உயிரிழந்த டால்பின்களின் மரணம் தொடர்பான  பிரேத பரிசோதனை யை மேற்கொண்டனர்.

இதன் போது வலையில் சிக்கியதால் அவை இறந்ததாக மருத்துவர்கள் ஊகிக்கின்றனர்.

மேலும் அவற்றின் மரணத்தை உறுதிப்படுத்துவதற்காக விலங்குகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பேராதனை கால்நடை மருத்துவ பீடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிய வருகிறது.

https://www.virakesari.lk/article/203352

இலங்கையில், இஸ்ரேலிய மத ஸ்தலங்கள் நிர்மாணம் தொடர்பான அரசாங்கத்தின் பதில்!

3 months 2 weeks ago
இலங்கையில் இஸ்ரேலிய மத ஸ்தலங்கள் நிர்மாணம் தொடர்பான அரசாங்கத்தின் பதில்! இலங்கையில், இஸ்ரேலிய மத ஸ்தலங்கள் நிர்மாணம் தொடர்பான அரசாங்கத்தின் பதில்!

இஸ்ரேலிய மத ஸ்தலங்களையோ அல்லது அதுபோன்ற இடங்களையோ நிர்மாணிப்பதற்கு எந்தவொரு அரசாங்க நிறுவனமும் இதுவரை அனுமதி வழங்கவில்லை என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (08) நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இதுவரை, புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு அல்லது அதன் எந்தவொரு திணைக்களமும் இஸ்ரேலிய பிரஜைகளால் மத ஸ்தலங்களையோ அல்லது அதுபோன்ற இடங்களையோ நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை.

எனினும், இவ்வாறான நிலையங்கள் பராமரிக்கப்படுவதை நாம் அறிவோம். அவர்கள் பற்றிய தகவல்களைப் பெற்று நிலைமையை அவதானித்துள்ளோம். அத்தகைய அனுமதி இதுவரை வழங்கப்படாததால், இந்த நடவடிக்கைகள் அனுமதியின்றி நடைபெறுகின்றன என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

அதேநேரம், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

எவ்வாறெனினும், பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேலியர்களுக்கான மத மற்றும் கலாச்சார மையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தினார்.

இதுபோன்ற இடங்களில் பாதுகாப்புக்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

https://athavannews.com/2025/1415709

77 ஆவது சுதந்திர தின விழாவில் பாரம்பரியமாக வழங்கப்படும் செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு!

3 months 2 weeks ago
77 ஆவது சுதந்திர தின விழாவில் பாரம்பரியமாக வழங்கப்படும் செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு! 77 ஆவது சுதந்திர தின விழாவில் பாரம்பரியமாக வழங்கப்படும் செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு!

77 ஆவது சுதந்திர தின விழாக்கள் குறைக்கப்பட்ட செலவுகள், குறைவான விருந்தினர்கள் மற்றும் செயற்பாடுகளுடன் நடத்தப்படும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்களின் எண்ணிக்கை 3,000 இலிருந்து 1,600 ஆக குறைக்கப்படும் என அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

அத்துடன் ஜனாதிபதியினால் பாரம்பரியமாக வழங்கப்படும் 21 பீரங்கி வேட்டுகள் இந்த ஆண்டு இடம்பெறாது எனவும் முப்படைகள் மற்றும் பொலிஸ் அணிவகுப்புகளில் இராணுவம் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இராணுவ அணிவகுப்பின் போது ஆயுதம் ஏந்திய வாகனங்கள் காட்சிப்படுத்தும் நிகழ்ச்சி இந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்படாது.

இதேவேளை இந்த ஆண்டு நிகழ்வில் விமான காட்சிகள் மட்டுப்படுத்தப்படும் என்றும் இவ்வருட சுதந்திர தின நிகழ்வுகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளதாக அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1415734

தமிழ்த் தேசிய கட்சிகளுக்கிடையே சந்திப்பொன்றை நடத்துவது தொடர்பில் அவதானம்!

3 months 2 weeks ago

தமிழ்த் தேசிய கட்சிகளுக்கிடையே சந்திப்பொன்றை நடத்துவது தொடர்பில் அவதானம்!
%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%21+

புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் முக்கிய கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பொன்றை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்த சந்திப்புக்கான ஏற்பாடு தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். 

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். 

எவ்வாறாயினும், இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியக் குழுவின் அனுமதியின் பின்னரே குறித்த சந்திப்புக்கான நிலைப்பாடு எட்டப்படும் என தாம் இதன்போது குறிப்பிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். 

அதேநேரம், இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெறுவது பொருத்தமாக அமையும் என தாம் யோசனை முன்வைத்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் குறிப்பிட்டார்.
 

https://www.hirunews.lk/tamil/392991/தமிழ்த்-தேசிய-கட்சிகளுக்கிடையே-சந்திப்பொன்றை-நடத்துவது-தொடர்பில்-அவதானம்

யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு தை 25 ஆரம்பம்!

3 months 2 weeks ago

யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு தை 25 ஆரம்பம்!
190830894.jpg

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறையானது இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்துடன் இணைந்து இரண்டாவது தடவையாகவும் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாட்டை தை மாதம் 25ம், 26ம் திகதிகளில் நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.

யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடானது மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் காலை 9 மணி முதல் மாலை வரை இடம்பெறவுள்ளது.

செயற்படல், நிலைமாற்றம் , நிலைத்திருப்பு என்னும் தொனிப்பொருளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இவ்வருட மாநாட்டில் இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கலாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் பலர் கலந்து கொண்டு மாநாட்டின் தொனிப்பொருளை சார்ந்ததான பல்வேறு விடயப்பரப்புக்கள் பற்றி உரையாடவுள்ளனர்.

மேலும் மாநாட்டின் ஓரங்கமாக மாற்றுப் பிணக்குத் தீர்வு முறைகள் பற்றிய குறிப்பாக மத்தியஸ்தம் தொடர்பான சிறப்பு அமர்வு ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது தை மாதம் 24ம் திகதி பிற்பகல் 4.30 மணி முதல் 6.30 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளடன் 

இந்நிகழ்வில் இந்தியாவினைச் சேரந்த நிபுணர்கள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

ஆர்வமுள்ளவர்கள் பங்குபற்றி பயன் பெற்றுக்கொள்ளுமாறும்  மாநாட்டு ஒழுங்கமைப்புக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.[ஒ]
 

https://newuthayan.com/article/யாழ்ப்பாண_சர்வதேச_சட்ட_மாநாடு_தை_25_ஆரம்பம்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் மோடி!

3 months 2 weeks ago
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் மோடி! இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் மோடி!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்வார் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

எவ்வாறெனினும், இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால், வருகைக்கான குறிப்பிட்ட திகதிகள் தீர்மானிக்கப்படவில்லை.

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த டிசம்பரில் புதுடெல்லிக்கு விஜயம் செய்திருந்த போது விடுத்த அழைப்பின் பிரகாரம் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.

அநுரகுமாரவின் இந்தியப் பயணம், பதவியேற்ற பின்னர் அவரது முதல் சர்வதேச விஜயமாக அமைந்தது.

அநுரகுமாவரின் தெரிவைத் தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் செய்த முதலாவது உயர்மட்ட வெளிநாட்டு அதிகாரி இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்சங்கர் ஆவார்.

இதற்கு முன்பு பிரதம் மோடி 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1415617

Checked
Fri, 04/25/2025 - 18:23
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr