ஊர்ப்புதினம்

யாழ் மதுபான சாலைக்குள் நடந்த சம்பவம்; அச்சத்தில் கடையை பூட்டிவைத்துள்ள முதலாளி!

3 months 2 weeks ago

யாழ்.மாநகரில் உள்ள மதுபானசாலை ஒன்றுக்குள் முகத்தை மூடிய நிலையில் கறுப்பு ஆடை அணிந்த ஒரு குழுவினர் பலவந்தமாக நுழைந்து அங்கிருந்த பலரை தாக்கி இருவரை வாளால் வெட்டி காயப்படுத்தியுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று முந்தினம் (04) இடம்பெற்ற நிலையில், வாள்வெட்டு மற்றும் தாக்குதல் சம்பவங்களில் காயமடைந்த மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் மதுபான சாலைக்குள் நடந்த சம்பவம்; அச்சத்தில் கடையை பூட்டிவைத்துள்ள முதலாளி! | Incident Inside Jaffna Liquor Store

மூவர் வைத்தியசாலையில் அனுமதி

 

 இலங்கை பதில் பொலிஸ் மா அதிபர் யாழ்ப்பாணம் வந்து குற்றவாளிகள் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர்களை மிக விரைவில் கைது செய்வோம் என உறுதியளித்த பத்து மணித்தியாலங்களுக்குள் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதேவேளை , தனது மதுபானக் கடைக்குள் அத்துமீறி நுழைந்த சிலரின் நடத்தையால் அச்சமடைந்த மதுபானக் கடையின் உரிமையாளர், சம்பவத்தின் பின்னர் தனது கடையை இதுவரை திறக்கவில்லை.

குற்றச்செயல்கள் அதிகரிப்பால் மக்கள் அச்சம்

 

இதேவேளை, சில தினங்களுக்கு முன்னர்  யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் குழுவொன்று நகரின் நடுவில் விருந்து வைத்து, பொறுமையின்றி வீதியில் பயணித்தவர்களைத் தாக்கிய சம்பவங்கள் பதிவாகியிருந்தன .

இது தொடர்பாக, மாகாணத்தில் இதுவரை 6 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் தற்போது குற்றச் செயல்கள் நடந்துவருவதுடன், குடிபோதையில் பஸ் சாரதிகளைத் தாக்குவது, ஹோட்டல் உரிமையாளர்களிடம் பலவந்தமாக உணவு வழங்கக் கோருவது, ஹோட்டல்களை அடித்து நொறுக்குவது, வீதியில் செல்லும் மக்களை தடியடி நடத்தி பணத்தை கொள்ளையடிப்பது போன்ற குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பெருமளவிலான பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் இருக்கும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

https://jvpnews.com/article/incident-inside-jaffna-liquor-store-1736146810

கிளிநொச்சியில் விபச்சாரவிடுதி சுற்றிவளைப்பு; சிறுமி உட்பட இரு பெண்கள் கைது !

3 months 2 weeks ago

  கிளிநொச்சி பரந்தனில் , விபச்சார விடுதி ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்து கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதன்போது விடுதியில் இருந்த இரு சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவத்தில் 15 வயதான சிறுமி உட்பட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் விபச்சாரவிடுதி சுற்றிவளைப்பு; சிறுமி உட்பட இரு பெண்கள் கைது ! | A Brothel In Kilinochchi Was Raided

 

அதேவேளை யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட தமிழர் பகுதிகளின் கலாச்சார சீர்கேடுகளும் , குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.    

https://jvpnews.com/article/a-brothel-in-kilinochchi-was-raided-1736141662

வனப்பகுதிக்கு விடுமுறையை கழிக்கச் சென்றவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அதிகாரிகள்!

3 months 2 weeks ago

வனப்பகுதிக்கு விடுமுறையை கழிக்கச் சென்ற எட்டு பேரை நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.

வனப்பகுதியில் சிலர் விடுமுறைக்குச் சென்றிருப்பதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நல்லதண்ணி வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர் சந்தேகத்தின் பேரில் குறித்த பகுதியில் இருந்த எட்டு பேரை கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணை

மஸ்கெலியா காட்மோர் பகுதியில் உள்ள வனப் பகுதியில் இருந்து கவரவில பகுதிக்கு செல்லும் சமவெளி வன பகுதியில் வைத்து இவர்கள் நேற்று(05) கைது செய்யப்பட்டுள்ளனர்.

வனப்பகுதிக்கு விடுமுறையை கழிக்கச் சென்றவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அதிகாரிகள்! | Arrested Who Went To Spend Vacation In The Forest

 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் ஆறு ஆண்களும் அடங்குவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளை நல்லத்தண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.      

https://tamilwin.com/article/arrested-who-went-to-spend-vacation-in-the-forest-1736132429

அர்ஜுன் அலோசியஸ் நிறுவனத்திற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு

3 months 2 weeks ago

பிரபல வர்த்தகர் அர்ஜுன் அலோசியஸுக்கு(Arjun Aloysius) சொந்தமான பெர்பச்சுவல் ட்ரசரீஸ்(Perpetual Treasuries) நிறுவனத்திற்கு எதிரான தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

 இலங்கை மத்திய வங்கியின் வங்கியல்லாத நிதி நிறுவன கண்காணிப்பு திணைக்களம் நேற்று(05.01.2024) பிற்பகல் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கான தீர்மானம், 2025 ஜனவரி 05ஆம் திகதி பிற்பகல் 4.30 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன் அலோசியஸ் நிறுவனத்திற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு | Extension Of The Ban On Arjun Aloysius Company

 

தடை நீடிப்பு

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பவம் தொடர்பில் பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் நிறைவடையாத நிலையில், அதற்கான கால அவகாசம் பெறும் பொருட்டு இந்தத் தடை நீடிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://tamilwin.com/article/extension-of-the-ban-on-arjun-aloysius-company-1736150963

 

பேராதனை பல்கலைக்கழக சொற்பொழிவு இரத்து: தலையீட்டை மறுக்கும் பிரதமர்

3 months 2 weeks ago

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்த சொற்பொழிவு இரத்து செய்யப்பட்டதில் பிரதமருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரியவின்(Harini Amarasuriya) அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், கல்வி நிறுவனங்களில் விமர்சன ரீதியான சொற்பொழிவை வளர்ப்பதற்கு அடிப்படைகளான கல்வி, சுதந்திரம் மற்றும் ஜனநாயக ஈடுபாட்டை ஹரிணி அமரசூரிய தொடர்ந்தும் ஆதரித்து வருவதாக பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கக் கொள்கைகள் 

 

அத்துடன், இந்த நிகழ்வு தொடர்பாக பிரதமர் அலுவலகத்திலிருந்து எந்த உத்தரவும் அல்லது அறிவுறுத்தலும் வெளியிடப்படவில்லை என்றும், கல்வி நிறுவனங்களின் சுயாட்சி என்பது அரசாங்கம் கடைப்பிடிக்க உறுதிபூண்டுள்ள ஒரு கொள்கை என்றும் பிரதமர் அலுவலகம் உறுதியளித்துள்ளது.

பேராதனை பல்கலைக்கழக சொற்பொழிவு இரத்து: தலையீட்டை மறுக்கும் பிரதமர் | Pm Harini Denies Involvement In Cancelling Lecture

 

அரசாங்கக் கொள்கைகள் மீதான விமர்சனங்கள் உட்பட பல்வேறு கருத்துக்களை அடக்குமுறைக்கு அஞ்சாமல் சுதந்திரமாக வெளிப்படுத்தவும் விவாதிக்கவும் கூடிய இடங்களாக பல்கலைக்கழகங்கள் இருக்க வேண்டும்.

ஆயினும்கூட, கல்வி வெளிகளுக்குள் ஜனநாயக வெளிப்பாடு மற்றும் திறந்த உரையாடலைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் தாம் ஆதரிக்கவில்லை என்று பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.  

https://tamilwin.com/article/pm-harini-denies-involvement-in-cancelling-lecture-1736126412#google_vignette

ரோஹிங்கியாக்களை மியன்மாருக்கு திருப்பி அனுப்பினால், அது நாட்டின் நற்பெயருக்கு ‘களங்கம்’

3 months 2 weeks ago

ரோஹிங்கியாக்களை மியன்மாருக்கு திருப்பி அனுப்பினால், அது நாட்டின் நற்பெயருக்கு ‘களங்கம்’
ரோஹிங்கியாக்களை மியன்மாருக்கு திருப்பி அனுப்பினால், அது நாட்டின் நற்பெயருக்கு ‘களங்கம்’

முல்லைத்தீவு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, போரினால் பாதிக்கப்பட்ட மீனவர்களால் மீட்கப்பட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தற்போது முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகள் குழுவை மீண்டும் மியன்மாருக்கு நாடு கடத்த வேண்டாம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் மியன்மாருக்கு நாடு கடத்த அரசாங்கம் எடுத்த தீர்மானம் தமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

போர் அச்சத்தால் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிக்கொண்டிருக்கும் இந்த 103 ஆதரவற்ற மக்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளும் காணப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பாதுகாப்பான நாட்டில் அரசியல் தஞ்சம் பெறுவதே அவர்களின் நம்பிக்கையாகும்.

அவர்களை மியன்மாருக்கே திருப்பி அனுப்புவதே அரசின் திட்டம் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ரோஹிங்கியாக்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் அந்நாட்டு அரசாங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது மியன்மாரில் வசிக்கும் அவர்களது உறவினர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விடயமாகுமென நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

“இது இந்த மக்களின் உயிருக்கு மாத்திரமல்ல, மியன்மாரில் வாழும் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்பது எங்கள் உறுதியான நம்பிக்கை.”

மேலும், அவர்களை மியன்மாருக்கு அனுப்புவது, குறிப்பிட்ட நாட்டில் ஆபத்தில் இருக்கும் மக்களை விருப்பமின்றி திருப்பி அனுப்புவதைத் தடுக்கும் (Non-Refoulement) சர்வதேச சட்டக் கோட்பாட்டை மீறும் செயலாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் நாட்டிற்குள் பிரவேசித்த முதலாவது அகதிகள் குழுவை வலிந்து வெளியேற்றுவது ‘யமனின் வாய்க்கு’ அனுப்புவது போன்றது என சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர், உலக நாடுகளுக்கு முன்பாக நாட்டின் நற்பெயருக்கு ஏற்படக்கூடிய கதி குறித்தும் எச்சரித்துள்ளார்.

“உங்கள் ஆட்சியின் போது, நாட்டிற்குள் நுழைந்த முதல் அகதிகள் குழுவை, அவர்கள் வந்த நாட்டின் யமனின் வாய்க்கு அனுப்புவது உலக நாடுகளுக்கு முன் நாட்டிற்கு ஒரு கறையாக மாறும்.”

இனக்கலவரங்களால் பாய்ந்த இரத்தத்தில் நனைந்த மண்ணின் மக்கள் அந்த விதியிலிருந்து மீட்கப்படவில்லை என்பது தெரிந்தே, இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட இந்த மண்ணைக் குணப்படுத்துவேன் என தனது கன்னி உரையில் உறுதியளித்து, அரச அடக்குமுறையின் கசப்பான அனுபவங்களைக்க கொண்ட அரச தலைவரான ஜனாதிபதிக்கு இது பொருத்தமான நடவடிக்கையல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

“பல தசாப்தங்களாக பாதாள அரசியலில் ஒளிந்து கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு கட்சியின் தலைவரான நீங்கள், அரச அடக்குமுறையின் அளவை கசப்பான அனுபவத்திலிருந்து அறிவீர்கள். ”

எனவே, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியாக்களை பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய வேறு நாட்டிற்கு அனுப்பப்படும் வரையில் அவர்களை மியன்மாருக்கு அனுப்பாமல், அவர்களின் நலனையும், மனித உரிமைகளையும் பாதுகாத்து ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் வழங்கும் இலங்கையின் விருந்தோம்பலின் அதிசயத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்கான வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

அந்த நல்ல செயலுக்கு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அமைப்புக்கள் மாத்திரமன்றி எதிர்க்கட்சிகளின் ஆதரவும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கு கிடைக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனது கடிதத்தில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

 

https://oruvan.com/sending-rohingyas-back-to-myanmar-would-be-a-smear-on-the-countrys-reputationty/

 

பல உயர்மட்ட வழக்கு விசாரணைகளில் தாமதம், சட்டமா அதிபர் ஜனாதிபதி சந்திப்பு

3 months 2 weeks ago

பல உயர்மட்ட வழக்கு விசாரணைகளில் தாமதம், சட்டமா அதிபர் ஜனாதிபதி சந்திப்பு
பல உயர்மட்ட வழக்கு விசாரணைகளில் தாமதம், சட்டமா அதிபர் ஜனாதிபதி சந்திப்பு

இலங்கையின் ஜனாதிபதியாக அனுர குமார திஸநாயக்க தெரிவாகி 100 நாட்களுக்கு மேலாகும் நிலையில் பல முக்கியமான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டிய கட்டாயம் இலங்கை அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் ஏற்பட்டுள்ளது.

’கொள்ளையர்களை விரைவாக பிடிக்க வேண்டும்’ என்ற அழுத்தம் ஜனாதிபதியின் மீது அதிகரித்து வருவதாகவும், தாமதங்களுக்கு அதிகாரிகளை குறை கூறும் போக்கை காணக்கூடியதாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் குற்றவியல் வழக்குகளில் முழுமையாக விசாரணைகளை நிறைவு செய்யாமல், பொலிசாரால் விசாரணையில் சில பகுதிகளின் அறிக்கைகளை மாத்திரம் அனுப்பப்படும் போது, அப்படியான வழக்குகள் அல்லது குற்றச்சாட்டுக்களை மீண்டும் விசாரிக்கப்போவதில்லை என சட்ட மா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

உயர்மட்டத்தில் எழும் குற்றசாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளின் போது, போதிய அரச சட்டத்தரணிகள் இல்லாத காரணத்தால் தாங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை அடுத்து, சட்ட மா அதிபர் திணைக்களம் அப்படியான வழக்குகளின் விசாரணையை முன்னெடுப்பதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளது. அதிலும் முக்கியமாக தீவிரமான பல வழக்குகளில் பொலிஸ் விசாரணைகள் முழுமையாக நிறைவடையாத காரணங்களினால், தம்மால் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் வழக்குகளை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை என அந்த திணைக்களம் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக நாட்டின் சட்ட மா அதிபர் பரிந்த ரணசிங்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஊழலுக்கு எதிரான சர்வதேச தினத்தையொட்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, நீதிமன்றங்களில் வழக்குகளை பதிவு செய்வதில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் தாமதங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

“ஆவணக் கோப்புக்களை சட்ட மா அதிபர் திணைக்களம் ஏழு ஆண்டுகள் வரையில் பூட்டி வைத்திருக்கும் சாத்தியங்கள் காணப்படுகின்றன. சில வழக்குகளில் அவை பதிவு செய்யப்பட்ட நாளுக்கு பின்னர் ‘தூசு தட்டாமல்’ அப்படியே வைத்திருந்து காலம்கடந்து நீர்த்துப்போகச் செய்யப்படுகின்றன”, என ஜனாதிபதி அப்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

 

https://oruvan.com/பல-உயர்மட்ட-வழக்கு-விசார/

நுண்நிதிக் கடன் வலையில் சிக்கி 200 பெண்கள் மரணம்!

3 months 2 weeks ago

நுண்நிதிக் கடன் வலையில் சிக்கி 200 பெண்கள் மரணம்!
adminJanuary 6, 2025
Microfinance-Loan.jpg

இலங்கையில் கடந்த சில வருடங்களில் நுண்நிதிக் கடன் வலையில் சிக்கிய சுமார் 200 பெண்கள் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தேசிய மகளிர் ஒன்றியத்தின் தலைவி ஹாஷினி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில் 28 இலட்சம் பேர் நுண்நிதிக் கடன் பெறுகின்றனர், அதில் 24 இலட்சம் பேர் பெண்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையிலுள்ள நுண் நிதி நிறுவனங்கள் 38 தொடக்கம் 40 சதவீதம் வரை அதிக வட்டிக்கு கடன் வசதிகளை வழங்குவதாகவும், கடனை செலுத்த முடியாத சில பெண்களும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சில பிரதிநிதிகளினால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதாகவும் ஹாஷினி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலைமையினால் குடும்பங்களுக்கிடையில் முரண்பாடுகள் வளர்ந்து பிள்ளைகள் ஆதரவற்றவர்களாக மாறியுள்ளதாகவும், சில பெண்கள் வேலை செய்ய வீட்டையும் நாட்டையும் விட்டு வெளியேறத் தூண்டப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சிறு நிதி கடன் பிரச்சினையால் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் கடுமையான பொருளாதார அழுத்தத்தில் உள்ளனர். அவர்களில் பலர் வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் இல்லாமல், பதிவு செய்யப்பட்ட வங்கிகளில் கடன் பெற முடியாமல் நுண்கடன் நிறுவனங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிறுவனங்கள் வாரத்திற்கு 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிக வட்டி வீதங்களுடன் வசூலிக்கின்றன, இதனால் பெண்கள் கடனில் தள்ளப்படுகிறார்கள்.

நுண்கடன் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டு வந்துள்ள போதிலும், அது இன்னும் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்

https://globaltamilnews.net/2025/209977/

 

 

பெட்ரோல் நிரப்பு நிலையத்தில் நடந்த விபரீதம்.. CCTV காட்சி!

3 months 2 weeks ago

கம்பளை – குருந்துவத்தை நகரில் உள்ள பெட்ரோல் நிரப்பு நிலையத்தில் ஒரு வேனொன்று பிரேக் இல்லாமல் அங்கு இருந்த ஊழியரை மோதிய சம்பவம் CCTV கமெராவில் பதிவாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த ஊழியர் கம்பளை ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குருந்துவத்தை பொலிஸார் கூறினர்.

https://jettamil.com/the-tragedy-at-the-petrol-filling-station-cctv-footage

2015 முதல் வழங்கப்பட்ட காணிகள் தொடர்பில் விசாரணை

3 months 2 weeks ago

2015 முதல் வழங்கப்பட்ட காணிகள் தொடர்பில் விசாரணை

January 6, 2025  09:49 am

2015 முதல் வழங்கப்பட்ட காணிகள் தொடர்பில் விசாரணை

2015ஆம் ஆண்டு முதல் பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்பட்ட காணி தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

விசாரணையின் பின்னர் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“எல்ஆர்சி மூலம் தொழிற்சாலைகள் மற்றும் விவசாயத்திற்காக நிலங்கள் விடுவிக்கப்படுகின்றன.

ஆனால் சமீப காலமாக பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகள் மற்றும் ஒதுக்கப்பட்ட காணிகள் தொடர்பில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் காணி சீர்திருத்த ஆணைக்குழுவால் யாருக்கு காணி வழங்கப்பட்டுள்ளது? என்ன திட்டங்களுக்கு? எந்த அடிப்படையில்? என்பது தொடர்பில் விசாரணை முடியும் வரை LRC மூலம் காணி வழங்கப்படுவது நிறுத்தப்படும்.

கூடிய விரைவில் இந்த விசாரணையை நடத்தி இந்த காணிகள் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது, இதில் ஊழல் நடந்துள்ளதா? என்பதைக் கண்டுபிடிப்போம் என்று நம்புகிறோம்" என்றார்.
 

 

https://tamil.adaderana.lk/news.php?nid=198340

தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்! - பிறேமச்சந்திரன்

3 months 2 weeks ago

தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்!

January 5, 2025  10:19 pm

தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்!

வடக்கு - கிழக்கு இணைந்த ஒரு மாநிலமாக தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை புதிய அரசாங்கம் உருவாக்க வேண்டும். அத்துடன் மகாணசபை தேர்தலை விரைவாக நடத்தி அதற்கான அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டும் எனவும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, கோவில்குளம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இன்று காலை முதல் மாலை வரை இடம்பெற்றது. 

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

நடந்து  முடிந்த தேர்தல் தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் இரண்டு தடவை இணைய வழி ஊடாக பேசியுள்ளோம். 

இன்றைய கூட்டத்தில் வரவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் பேசினோம். அத்துடன் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியை கிராம மட்டங்களில் பலப்படுத்தல் தொடர்பாகவும் பல்வேறுபட்ட ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

முக்கியமாக எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியாக தற்போது அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் போட்டியிடும். அத்துடன் எம்முடன் இணைந்து பயணிக்கக் கூடிய ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளுடனும் பேசி அவர்களும் இணங்கும் பட்சத்தில் இணைந்து போட்டியிடவுள்ளோம்.

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியப் பரப்பில் அங்கம் வகிக்கின்ற தமிழ்  கட்சிகளுடன் இது தொடர்பில் பேசுவதாகவும் தீர்மானங்களை எடுத்துள்ளோம். 

அத்துடன் எதிர்வரும் பெப்ரவரி முதலாவது வாரத்தில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் மாநாட்டை வவுனியாவில் நடத்த தீர்மானித்துள்ளோம். 

அதற்கு முன்னதாக மாவட்ட  நிறைவேற்றுக் குழுக்கள் கூடி என்ன விடயங்கள் பேசப்பட வேண்டும் எனவும் தீர்மானிப்பார்கள். அதற்கான நடவடிக்கைகள் உடனடியாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புதிய ஒரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டி தேவையும் பொறுப்பும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு இருக்கிறது. 

தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் என்பது சரியான  முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும என்பதில் நாம் ஆணித்தரமான கருத்துக்களை கொண்டிருக்கின்றோம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருக்கக் கூடிய புதிய அரசாங்கம் வந்திருக்கிறது.

புதிய அரசாங்கம் ஒரு மாற்றத்தை உருவாக்கப் போவதாக சொல்லியிருக்கிறார்கள். நிர்வாகத்தில் மாற்றம். அரசியலில் மாற்றம். ஊழல் இல்லாத நிர்வாகத்தை ஏற்படுத்துவது. என பல விடயங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் தமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சனையை தீர்க்கக் கூடிய மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பது எம் மக்களது கருத்தாக இருக்கிறது. 

அந்த அடிப்படையில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தொவு செய்யப்பட்டிருந்தாலும் கூட ஒரு மாற்றம் ஏற்படும் என்பதற்காக தான் அந்த வாக்குகளும் அளிக்கப்பட்டதாக நாங்கள் கருதுகிறோம்.

ஆகவே, தமிழ் மக்கள் மத்தியில் 75 வருடமாக தேசிய இனப்பிரச்சனை புரையோடிப் போயுள்ள பிரச்சனையாக இருக்கிறது. அது தீர்க்கப்பட வேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு புதிய அரசாங்கத்திடம் இருக்கிறதா என்ற கேள்வியும் எம்மிடம் இருக்கிறது. 

கடந்த 7 வருடங்களாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவில்லை. மாகாணசபை தேர்தல் என்பது இந்த வருட இறுதியில் நடத்தப்படும் என கூறுகிறார்கள். தாமதமாக நடநத்த வேண்டும் என்ற தேவை இருக்கா. அல்லது அதற்கு முன்பு நடத்தலாமா  போன்ற கருத்துக்கள் எம் மத்தியில் பேசப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தல் நடந்து முடிந்து ஓரிரு மாதங்களில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என நாம் நம்புகின்றோம் மாகாணசபைக்கு உரித்தான 1988 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியல் சாசனத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைதது அதிகாரங்களும் மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டும. 

இந்த அரசாங்கம் மிக விரைவாக அந்த நடவடிக்கைகளை எடுத்தால் மாத்திரம் தான் தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்கக் கூடிய ஒரு சூழல் ஏற்படும் எனவும் நாம் கருதுகின்றோம்.

ஆகவே, அரசாங்கம் வெறுமனே பேச்சில் மாத்திம் இருக்காமல் தமிழ் மக்களது அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கு ஒரு  புதிய அரசியல் சாசனம் கொண்டு வரப்பட வேண்டும். அது வெறுமனே சிங்கள மக்களது பிரச்சனையை தீர்ப்பதாக இல்லாது புரையோடிப் போயுள்ள தமிழ் மக்களது தேசிய இனப் பிரச்சனையை தீர்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவது தொடர்பாக அரசாங்கம் சரியான அறவிப்புக்களை வெளியிடுமாக இருந்தால் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியானது அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளுடன் இணைந்து தமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வாக வடக்கு - கிழக்கு இணைந்த ஒரு தமிழ் மாநிலத்தை உருவாக்கி முழுமையான சுயாட்சியை உருவாக்குவதற்கான கருத்துக்கள அல்லது அறிக்கைகளை எல்லோருடனும் இணைநது புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் குழுவிடம் கொடுப்போம். 

முதலாவது இந்த அரசாங்கம் குழுவை நியமிக்க வேண்டும். அதனை இரண்டு வருடத்திலா அல்லது மூன்று வருடத்திலா அல்லது உடனடியாக நியமிப்பார்களா என்பது எங்களுக்கு தெரியாது.

புதிய அரசியல் சாசனம் உருவாக்கும் பட்சத்தில் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. அத்துடன் மக்கள் மத்தியில் வாக்கெடுப்புக்கும் விடப்பட வேண்டும். 

அவ்வாறு விடப்பட்டால் தான் அது நிறைவு பெறும். மக்கள் மத்தியில் சென்று அதற்கான ஆதரவை திரட்ட வேண்டுமாக இருந்தால் இந்த அரசங்கம் விரைவாக புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். 

அப்போது தான் சாத்தியமாகலாம். காலம் செல்ல ஆட்சியின் மீதும், ஆட்சி அதிகாரம் மீதும் பல்வேறு குறைபாடுகள் வரும். அதற்கு முன்பாக அரசியல் சாசனம் வர வேண்டும் என விருப்புகின்றோம்.

அதில் முக்கியமாக தமிழ் மக்களது தேசிய இனப் பிரச்சனைக்கு பாதிக்கப்பட்ட அந்த மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக தமிழ் மக்கள் இந்த மண்ணில் முழுமையான சுயாட்சியோடு வாழ்வதற்கு தேவையான விடயங்களை உள்ளடக்கிய ஒரு அரசியல் சாசனமாக இருக்க வேண்டும் என நாம் பேசியுள்ளோம். இது தொடர்பில் ஏனைய தமிழ் தேசிய கட்சிகளுடன் பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், கோ.கருணாகரம், எம்.கே.சிவாஜிலிங்கம், ந.சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் ப.வேந்தன், பவான் உட்பட முக்கிஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.  
 

 

https://tamil.adaderana.lk/news.php?nid=198332

உலக வங்கியின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட கல்வி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் பிரதமர் கவனம்

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 2   05 JAN, 2025 | 05:44 PM

image
 

(நமது நிருபர்)

நாட்டின் பாடசாலை கல்வியை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் உலக வங்கியின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று பிரதமர்  ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் கல்வி அமைச்சில் இடம்பெற்றது.

கடந்த பல வருடங்களாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலைகளை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் விசேடமாக பாடசாலை மாணவர்களின் சுகாதாரத்தை கட்டியெழுப்புதல் தொடர்பில் பிரதமர் இதன்போது தனது விசேட அவதானத்தை செலுத்தினார்.

அத்துடன் நாட்டின் இரண்டாம் நிலைக் கல்வியை முன்னிட்டு தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 

கல்வி உயர் கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

 

FB_IMG_1736071418693.jpg

https://www.virakesari.lk/article/203039

யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை!

3 months 2 weeks ago

யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை!

யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை!

யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை, பொதுமக்கள் அச்சமின்றி செயல்படவும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றவும் பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் என யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்தார்.

யாழ். நகரில் புத்தாண்டிக்கு முன்னிரவு இளைஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் தொடர்பாக  கேள்வியெழுப்பிய போது மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வாரத்தில் யாழ். நகரில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் நான்கு குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தி இருக்கின்றோம். இரண்டு சம்பவங்களையும் குறித்து புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

மேலதிக சாட்சிகளை எடுத்து மிகுதியான சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுள்ளோம். இதற்குரிய ஆலோசனைகள் என்னால் உயர் அதிகாரிகளுக்கும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் பொறுப்பதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைப் பிடித்து குற்றவியல் சட்டக்கோவையின் கீழ் 81 ஆவது பிரிவின் கீழ் வழக்குத் தாக்கல் செய்து வருகின்றோம்.

இனிவரும் காலங்களில் குறித்த நபர்கள் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக கட்டுக்கோப்பான சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆணையை பெற்று வருகின்றோம். 

குறித்த நபர்கள் எதிர்வரும் காலங்களில் தொடர்ந்து குறித்த குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அதிக தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற ஆணையில் குற்றவியல் சட்டக்கோவையின் 81 ஆவது பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்து வருகின்றோம் என தெரிவித்தார்.

https://tamil.adaderana.lk/news.php?nid=198321

வெளிநாடு செல்வதற்காக போதை பொருள் விற்ற பட்டதாரி பெண் கைது !

3 months 2 weeks ago
மட்டுவில் 8 பேர் கைது வெளிநாடு செல்வதற்காக போதை பொருள் விற்ற பட்டதாரி பெண் கைது !

போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட ஒரு 20 வயதுடைய பட்டதாரி யுவதியை ஹன்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். யுவதி, துபாயில் தலைமறைவாகிய கடத்தல்காரருடன் தொடர்புடையவராகும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பொலிஸாரின் விசாரணைகளில், இந்த யுவதி இரண்டு தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றதாகவும், வெளிநாடு செல்ல தேவையான பணத்தை சம்பாதிக்க போதைப்பொருள் விற்பனைக்கு ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்தது.

இந் நிலையில் அவரது சந்தேகத்தை உறுதி செய்த பிறகு, ஹன்வெல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் அவரை கைது செய்தனர். மேலும், துபாயிலிருந்து இந்த யுவதியின் உறவினரின் மூலம் போதைப்பொருள் விநியோகமாகி இருக்குமெனவும் விசாரணைகள் தெரிவிக்கின்றன.

ஹன்வெல்ல பகுதியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பான குற்றவாளிகளின் வலையமைப்புக்கு இணையான ஒரு பகுதியில் இந்த யுவதி ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1415270

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குகையில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் மனுஷ நாணயக்காரவிடம் வாக்குமூலம்!

3 months 2 weeks ago

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குகையில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் மனுஷ நாணயக்காரவிடம் வாக்குமூலம்!
922954132.jpeg

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குகையில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் மனுஷ நாணயக்காரவிடம் வாக்குமூலம்! 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கும் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளதாக விசாரணைக் குழுக்கள் தெரிவிக்கின்றன. 

எதிர்கால விசாரணைகளில் வெளிவரும் தகவல்களின் அடிப்படையில் இது தொடர்பான வாக்குமூலம் பெறப்படும் என விசாரணைகளை முன்னெடுத்து வரும் காவல்துறையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

நிதி மோசடி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர நாணயக்கார நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

பின்லாந்தில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி 30 இலட்சம் ரூபாவினை பெற்று மோசடி செய்தமை தொடர்பில் கம்பஹா பகுதியைச் சேர்ந்த ஒருவர் திசர நாணயக்காரவுக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார். 

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் திகதி பிபிலை பகுதியில் வைத்துக் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். 

நிதி மோசடி தொடர்பான முறைப்பாடுகள், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்குத் தொடர்ந்தும் கிடைக்கப்பெறுவதுடன் அது தொடர்பான சாட்சியங்களும் பெறப்பட்டு வருகின்றன. 

அதனூடாக கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என விசாரணைக் குழுக்கள் குறிப்பிட்டுள்ளன.

https://newuthayan.com/article/வெளிநாட்டு_வேலைவாய்ப்பு_வழங்குகையில்_இடம்பெற்ற_நிதி_மோசடி_தொடர்பில்_மனுஷ_நாணயக்காரவிடம்_வாக்குமூலம்!

அதானியின் எரிசக்தி திட்டம் அமைச்சரவைக்கு செல்கிறது!

3 months 2 weeks ago

அதானியின் எரிசக்தி திட்டம் அமைச்சரவைக்கு செல்கிறது!
adminJanuary 5, 2025
Adani-1170x658.jpg

இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்களை பரிசீலிக்க குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

நாளை (6.01.24) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படும் என எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பிலேயே இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின் அலகு ஒன்றுக்கு 8.26 சதம் டொலர் வீதம் செலுத்துவதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை இணக்கம் தெரிவித்திருந்தது.

குறித்த உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்வதற்காக இந்த குழு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

https://globaltamilnews.net/2025/209952/

சிறுபான்மை இனமா, சகோதர இனமா? - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் விளக்கம் கோரிய சர்வமத அமைப்பு

3 months 2 weeks ago

சிறுபான்மை இனமா, சகோதர இனமா? - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் விளக்கம் கோரிய சர்வமத அமைப்பு 05 Jan, 2025 | 02:48 PM
image

'சிறுபான்மை இனம்' என்ற சொல்லுக்குப் பதிலாக “சகோதர இனம்” அல்லது வேறு ஏதும் ஒரு பொருத்தமான சொல்லைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டி மாவட்ட சர்வமத அமைப்பு மனித உரிமைகள் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவாவிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) வேண்டுகோள் விடுத்துள்ளது. 

கண்டி மாவட்ட சர்வமத அமைப்பின் செயலாளர் காமினி ஜயவீர எழுத்து மூலம் விடுத்துள்ள நீண்ட வேண்டுகோளில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

தமது அமைப்பு நீண்டகாலமாக இனங்களுக்கிடையே சகோதரத்துவம் மற்றும் சகவாழ்வு என்பவற்றை ஏற்படுத்துவது தொடர்பாக இயங்கி வருவதாகவும் அதன் அடிப்படையிலே இதனை வேண்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறுபான்மை எனும்போது இயல்பாகவே தாம் சிறியவர்களாக தாழ்த்தப்படும் மனோ நிலை ஏற்படுவதாகவும் அதேநேரம் பெரும்பான்மை எனும்போது அது குறிப்பிட்ட ஒரு சாராரை உயர்த்தி மதிப்பிடும் ஒரு மனோபாவத்தையும் ஏற்படுத்துவதாகும். 

எனவே, சிறுபான்மை என்ற பதம் பொதுவான இடங்களில் பயன்படுத்தப்படுவதற்குப் பதில் மாற்றீடான ஒரு சொல் பயன் படுத்தப்படுவது இன ஒற்றுமைக்கு நல்லது எனவும் தெரிவித்துள்ளது. 

அந்த வகையில் சகோதர இனம் என்ற சொல்லையே தமது அமைப்பு பயன் படுத்துவதாகவும் இதனை பரவலாக்குவது நல்லதென தமது அமைப்பு கருதுவதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் இலங்கையில் தமிழ், முஸ்லிம் இனங்களை 'சிறுபான்மை' என்ற சொல் கொண்டு அழைப்பதால் அவர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக கணிக்கப்படுவதாகவும் ஆனால் அவர்களும் சம  உரிமையுடன் வாழ்வதற்கு உரித்துடையவர்கள் என்பதால் அதற்குப் பொருத்தமான ஒரு பதத்தை அறிமுகம் செய்யும்படியும் சகோதர இனம் என்பது பொருத்தம் போலிருப்பின், அது தொடர்பாக சமூகத்தில் ஒரு கருத்துப் பறிமாற்றத்தை ஏற்படுத்தும் படியும் அவர் கேட்டுள்ளார். இது தெடர்பக மனித உரிமைகள் ஆணைக்குழுவுன் கவணத்தை ஈர்க்க விரும்புவதாகவும்  தெரிவித்துள்ளார். 

 

https://www.virakesari.lk/article/203000

 

ஜெனிவா பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க விசேட இராஜதந்திர குழுவை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை

3 months 2 weeks ago

ஜெனிவா பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க விசேட இராஜதந்திர குழுவை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை
05 Jan, 2025 | 12:32 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில், விசேட இராஜதந்திர குழு ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், 58ஆவது அமர்வுக்கு முன்னர் சிறப்பறிக்கையை வெளியிடவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் எந்த தீர்மானத்தின் 51/1 நகல்வடிவையும் இலங்கை தொடர்ந்து எதிர்க்கும்.

இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற  பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் எந்த தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இறுதி அமர்வில்  சமர்ப்பிக்கப்பட்ட  தீர்மானத்தின் நகல்வடிவை நிராகரிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

எனினும் உள்நாட்டு பொறிமுறை மூலம் நல்லிணக்கம்  மற்றும் மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வினை காண்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.

ஆனால் ஜெனிவா தீர்மானத்தில் உள்ள பல விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

எவ்வாறாயினும் பொறுப்புக்கூறும் விடயத்தை பிரதிபலிக்கக்கூடிய நேர்மையான அறிக்கையை கூடிய விரைவில் அரசாங்கம் முன்வைக்க உள்ளது. இந்த அறிக்கையானது ஜெனிவாவுக்கு பதிலளிப்பதாக அல்லாது எமது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்துவதாகவே இருக்கும்.

குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையை பிரதிபலிக்கும் வகையிலேயே எமது சிறப்பறிக்கை அமையும். இதற்காக இலங்கையின் விசேட இராஜதந்திர குழு செயற்படுவதாகவும் குறிப்பிட்டது.  

 

https://www.virakesari.lk/article/203002

 

குமார் பொன்னம்பலத்தின் 25 ஆவது நினைவு தினம்

3 months 2 weeks ago

குமார் பொன்னம்பலத்தின் 25 ஆவது நினைவு தினம்

January 5, 2025  02:53 pm

குமார் பொன்னம்பலத்தின் 25 ஆவது நினைவு தினம்

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை வழங்குவதற்கு இந்தியா துணைநிற்குமானால் வடகிழக்கு தமிழர்கள் இந்தியாவுக்கான ஆதரவினை நூறு வீதம் வழங்குவார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

மக்கள் மிகத் தெளிவாக நிற்க வேண்டும். தமிழ் தேசியம் தோற்குமாக இருந்தால் இந்த இலங்கை தீவில் தமிழர்கள் அடிமைகள் அல்லது தமிழர்கள் துடைத்து எறியப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25 ஆவது நினைவு தினம் இன்று (05) அனுஸ்டிக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு,பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதியில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

ஓய்வு நிலை அதிபர் சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் குககுமார் உட்பட கட்சி ஆதரவாளர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நினைவுச்சுடர் தேசிய அமைப்பாளரால் ஏற்றப்பட்டதுடன் கட்சி உறுப்பினர்களினாலும் பொதுமக்களினாலும் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் ஆத்மசாந்திக்காக ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவுகள் என்னும் தலைப்பிலும் சமகால அரசியல் நிலைமைகளும் தமிழ் தேசிய அரசியலும் என்னும் தலைப்பில் தேசிய அமைப்பாளராலும் சிறப்புரைகள் நிகழ்த்தப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் சட்டத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவர் இலங்கையை பொறுத்த அளவில் இலங்கை தீவை மையப்படுத்தி ஒரு பூகோள அரசியல் ஆதிக்க போட்டி நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றது. அந்த பூகோள அரசியல் போட்டியில் எங்களுடைய தமிழ் மக்கள் சிக்குண்டு இந்த சிங்கள தேசத்தினால் இன அழிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்த காலகட்டத்தில் எமது மக்களுக்காக இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடிக் கொண்டிருந்த வேளையில் எங்களுடைய அந்த போராட்டம் என்பது ஒரு பயங்கரவாத போராட்டம் என உலகத்திற்கு இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் அந்த ஆட்சியாளர்களும் ஒரு பிழையான பிம்பத்தை இந்த சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக் கூறி வந்திருந்தனர்.

அந்த நிலையில் எங்களுடைய மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் இலங்கையினுடைய தலைநகர் கொழும்பில் இருந்து கொண்டு தமிழ் மக்களது விடுதலைப் போராட்டம் என்பது ஒரு நியாயமான ஒரு போராட்டம் எங்களுடைய தமிழ் மக்களை பாதுகாப்பாதற்காகத்தான் இந்த இளைஞர்கள் அனைவரும் ஆயுதம் ஏந்தி இருக்கின்றார்கள் என்கின்ற நியாயப்பாட்டை உலகத்திற்கு எடுத்துக் கூறினார்.

அந்தக் காலப்பகுதியில் 2000 ஆம் ஆண்டு சந்திரிகா அம்மையாரின் காலம் அவருடன் தான் இவர் படித்தார் அவ்வாறு படித்த ஒரு பெரிய மாமனிதர். மிகவும் தமிழ் மக்களுக்காகவோ அல்லது வேறு தரப்புக்காக இல்லாது நீதிக்காக குரல் கொடுக்கின்ற ஒருவர். 

அந்த அடிப்படையில் தான் அவர்கள் எங்களுடைய விடுதலைப் போராட்டம் என்பது ஒரு நியாயமான போராட்டம் என்பதனை சர்வதேசத்திற்கு சொல்லிக் கொண்டிருக்கின்ற காலகட்டத்திலேயே அந்த சந்திரிக்காவின் ஆட்சி காலத்தில் சந்திரிகாவினால் கொழும்பு வெள்ளவத்தை ராமகிருஷ்ண மிஷனுக்கு முன்னால் வைத்து அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தமையினால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார.; இது உலகத்தில் இருக்கின்ற அனைத்து விதமான மனித நேய அமைப்புகளுக்கும் மிக முக்கியமான நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் தூதுவர்களுக்கும் நாட்டினுடைய மிக முக்கியமான தலைவர்களுக்கும் தெரியும்.

இன்று இந்த நாட்டை மையப்படுத்தி இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களது விடுதலைப் போராட்டம் என்பது தணியவில்லை. ஆயுதப் போராட்டம் 2009 ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்டாலும் எங்களுக்கான இனத்துக்கான விடுதலை போராட்டம் இன்னமும் மௌனிக்கவில்லை. இதனை எமது மக்கள் அனைவரும் நன்கு அறிய வேண்டும்.

புலம்பெயர்ந்த மக்கள் எமது மக்களின் விடுதலைக்காக மிக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். சிங்கள தேசம் ஒரு கனவு கண்டிருக்கின்றது 2009 உடன் எல்லாம் முடிந்து விட்டது என்று. ஆனால் அவ்வாறு இல்லை எங்களுடைய போராட்டம் எழுச்சி பெற்று இருக்கின்றது. புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற இளையவர்கள் இன்றும் எமது விடுதலைக்காக தாயகத்தில் இருக்கின்ற எமது தமிழ் மக்களது விடுதலைக்காக அவர்கள் எங்கெல்லாம் செல்ல முடியுமோ அங்கு சென்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எமது மக்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். இன்று இந்த நாட்டில் ஒரு பாரிய ஆட்சி மாற்றம் வந்திருக்கின்றது. இந்த ஆட்சி மாற்றம் என்பது அவர்கள் ஊழல் ஒழிப்போம் என்பதன் அடிப்படையில் அவர்கள் வந்திருக்கின்றார்கள் இவர்கள் ஏற்கனவே தமிழ் மக்கள் மீது மிக மோசமாக தமிழ் மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக செயற்பட்டவர்கள். இங்கு வந்திருக்கின்ற அநுர அரசு என்பது அவர்கள் ஜே.வி.பியின் முகம். 

இவர்கள் அரசியல் ரீதியாக வந்து ஜே.வி.பி ஆனால் நடைமுறையில் என்.பி.பி யாக இருக்கின்றார்கள்.

ஆகவே அரசியல் ரீதியான ஆதிக்கம் தான் இங்கு அதிகமாக காணப்படுகின்றது. அவர்களது அரசியல் என்பது ஒட்டுமொத்த நாடும் ஒரு சிங்கள தேச நாடு பௌத்த நாடு இதனை நாங்கள் கட்டாயம் சிங்கள மக்களுக்காக தொடர்ந்து போராடுவோம். தொடர்ந்தும் குரல் கொடுப்போம் என்பதன் அடிப்படையில் தான் அவர்கள் தென்பகுதியில் வேலை செய்திருக்கின்றார்கள்.இவர்கள் இன்றும் தென்பகுதி மக்களுடன் கதைக்கும் போது தாங்கள் சொல்வதை தமிழ் மக்கள் கேட்காவிட்டால் ஆயுத ரீதியாக ஆயுதம் தூக்கி அவர்களை அடக்குவோம் என்று பல கூட்டங்களில் தென்பகுதியில் கூறியிருக்கின்றார்கள்.

இன்று தலைவராக இருக்கின்ற அனுமார திசாநாயக்க அவர்தான் முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக சர்வதேச சமூகங்கள் முன்வந்த நிலையில் இலங்கையில் இருந்த இந்த இராணுவத்தினர் எமது விடுதலை இயக்கத்தினால் அடி வாங்கி தளர்வு நிலையில் இருந்த போது தென்பகுதியில் இளைஞர்களை சேர்த்து 50,000 இராணுவ வீரர்களை கொடுத்து மக்களை இனப்படுகொலை செய்ததில் மிக முக்கியமான நபர் இவர்.

நாங்கள் மறுபடியும் கூறுகின்றோம் எங்களுடைய மாமனிதர்கள் செய்த தியாகங்கள் நீங்கள் சாதாரணமாக யோசித்து விடக்கூடாது. இந்த இனம் வாழுவதற்காக எத்தனையோ மகான்களை நாங்கள் கொடுத்திருக்கின்றோம்.

எங்களைப் பொறுத்தளவில் மக்கள் இந்த அரசியல் நிலைப்பாட்டில் மிகவும் தெளிவடைய வேண்டும.; எங்களுடைய மக்கள் தமிழ் தேசியத்திலிருந்து ஒரு நாளும் விடுபடவில்லை. யாழ்ப்பாணத்தில் மூன்று ஆசனங்கள் என்.பி.பி க்கு கிடைக்கப்பெற்று இருக்கிறது என்றால் அது ஏற்கனவே டக்லஸ் தேவானந்தா மற்றும் அங்கஜனுக்கும் அரசாங்கத்துடன் இருந்தவர்கள். அந்த வாக்குகள் ஒரு கட்சிக்கு சென்றதனால் தான் மூன்று ஆசனங்கள் அங்கு கிடைக்கப்பெற்று இருக்கிறது.

ஆகவே தமிழ் தேசியத்துடன் தான் யாழ்ப்பாண மாவட்ட மக்கள் இருக்கின்றார்கள். அதில் எந்த தயக்கமும் கிடையாது. அதே போன்று மட்டக்களப்பிலும் தமிழ் தேசியத்திற்கு அதாவது சைக்கிளுக்கும் அல்லது வீட்டிற்கும் வாக்களிக்கும் நிலைப்பாட்டில் தான் மக்கள் இருந்தார்கள். வாக்குகள் பிரிந்திடும் என்கின்ற அடிப்படையில் சிலர் குழப்பினாலும் இன்று தமிழ் தேசியம் வென்று இருக்கின்றது.

ஆனால் இந்த இடத்தில் மக்கள் மிக நிதானமாக இருக்க வேண்டும். நாங்கள் ஆசாபாசங்களுக்கு முகம் கொடுக்கக் கூடாது. நாங்கள் அந்த சலுகைகள் மாட்டி விடக்கூடாது. இந்த மண்ணில் அனேக படுகொலைகள் இடம்பெற்று இருக்கின்றது. எமது முதலாவது மாமனிதர் குமார் பொன்னம்பலம் ஐயா. அதனைத் தொடர்ந்து விடுதலைப் போராட்டத்தின் மீதும் மக்கள் மீதும் நமது மண்ணின் மீதும் தமிழ் மக்கள் மீதும் அக்கறை கொண்ட எத்தனையோ எழுத்தாளர்கள் இங்கு படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். கடத்தப்பட்டிருக்கின்றார்கள், காணாமல் செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

அண்மையில் கூட எக்னெலியகொட எனப்படுகின்ற தென்பகுதி ஊடகவியலாளர் ஒருவரை கடத்திக்கொண்டு மட்டக்களப்பில் வைத்து அவரை படுகொலை செய்து பெரிய களம் எனப்படுகின்ற எருமை தீவு பகுதியில் உள்ள ஒரு மரத்தின் கீழ் புதைத்து வைத்திருப்பதாக வெளிநாட்டில் இருக்கின்ற ஒரு முன்னாள் கடற்படை பிரதானி கூறி இருக்கின்றார்.

இவ்வாறு பல படுகொலைகள் இடம்பெற்று இருக்கின்றது. இந்த மாவட்டத்தில் முன்னர் பிரதி அமைச்சர்களாக இருந்தவர்கள் எமது மக்களை கடத்திக் கொண்றிருக்கின்றார்கள். இந்த உண்மைகள் கட்டாயமாக வெளியே வரும்.

நேற்றைய முன்தினம் முன்னாள் ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சாரதியாக இருந்தவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். ஏன் கைது செய்யப்பட்டிருக்கின்றார் அவரின் வீட்டின் முன்னால் ஒரு சூட்டு சம்பவம் இடம்பெற்றது.

உண்மைகள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும் ஊழல்கள் ஒழிக்கப்பட வேண்டும் அதில் மாற்று கருத்து கிடையாது. அதற்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்போம். ஆனால் தமிழ் மக்களின் மீது ஏறிக்கொண்டு தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளை நசுக்கிக் கொண்டு முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி எந்த விதத்திலும் அனுமதிக்காது. எங்கிருந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆகுவோம்.

எமது மக்கள் எங்களை தோற்கடித்தாலும் இன்று வீதியில் இருந்து போராடுகின்றோம் என்றால் எங்களுக்கு பதவிகள் அதில் இருக்கின்ற சலுகைகள் முக்கியமில்லை. இந்த மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு இருக்கின்றது. அந்த அரசியல் நிலைப்பாடு எங்களுக்கு இருக்கின்றது.

நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஊடகங்களில் எமது தலைவர் அழைப்பு விடுத்திருக்கின்றார். நாங்கள் தமிழ் தேசியத்துடன் நிற்கின்ற கட்சிகளை அழைத்து இருக்கின்றோம். நாங்கள் எமது மக்களுக்கு ஒரு ஆபத்து நிகழப் போகின்றது. வரலாற்றிலே தமிழர்கள் நிராகரிக்கப்பட்டு வந்த ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பு அதனை நிறைவேற்றுவதற்கான சதிகள் இடம்பெறுகின்றது. 

அந்த சதி திட்டத்தை முறியடிப்பதற்காக குறைந்தபட்சம் நீங்கள் அத்தனை கட்சிகளும் அது வீட்டு கட்சியாக இருக்கலாம், செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்களாய் இருக்கலாம் யாராக இருந்தாலும் அனைவரும் ஒன்றாக வந்து அதனை முறியடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கின்றோம்.

இந்த அழைப்பினை நாங்கள் விட்டிருக்கின்றோம். அத்தோடு பல தலைவர்களை எமது தலைவர் சந்தித்திருக்கின்றார். நேற்றைக்கு முன் தினம் கூட இந்த விடயங்களை கூறி இருக்கின்றோம் வாருங்கள் ஒன்றாக கூடி எமது மக்களின் நலன்களுக்காக தயவுசெய்து ஒன்றாகக்கூடி நாங்கள் முறியடிப்போம் என்று.

இந்தியா உட்பட ஒவ்வொரு நாட்டிற்கும் வெளியுறவு கொள்கைகள் இருக்கின்றது. அந்த வெளியுறவு கொள்கையில் இந்தியாவுக்கு இலங்கையினை தன்னுடைய கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக பல ஒப்பந்தங்களை செய்வதற்கு எத்தனை இருக்கின்றது. இருந்த போதிலும் இந்த நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் இந்தியா சில முன்மொழிவுகளை வைத்திருக்கின்றது.

இந்த இரு நாட்டிற்கு இடையில் ஒரு பாலம் போட வேண்டும் மின்சார இணைப்புகளை செய்ய வேண்டும் அதேபோன்று எரிபொருளினை குழாய் ரீதியாக இணைத்து அவற்றை செய்ய வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்தங்கள் செய்யப்படவில்லை என்றால் இலங்கையை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு. இவற்றைப் பொறுத்தளவில் தமிழர்களுக்கு எது வித தயக்கமும் இல்லை இலங்கை இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதற்கு எந்த பிரச்சனையும் இல்லை. 

ஆனால் தமிழ் மக்களது இன பிரச்சினைக்கான தீர்வினை இந்தியா செய்யுமாக இருந்தால் 100வீதம் நாங்கள் இந்தியாவுடன் இணைந்து கொள்வோம்.

இந்தியாவை விட்டு வேறு ஒரு இடத்திற்கும் நாங்கள் செல்ல மாட்டோம். வடகிழக்கில் சீனா உட்பட எந்த நாட்டிற்கும் இடமில்லை. இந்தியாவுக்கு மாத்திரம்தான் தமிழர்கள் அனுமதிப்பார்கள். ஏனென்றால் அவர்கள் தான் இந்த நாட்டை பாதுகாக்க கூடிய அத்தனை வல்லமையும் கொண்டிருக்கக் கூடிய ஒரு சக்தி. அவர்கள் எமது தொப்புள் கொடி உறவுகள்.

ஆகவே இந்தியா இந்த விடயங்களை கவனமாக கையாண்டு எமது மக்களின் நீண்ட கால பிரச்சனைக்கான தீர்வை காண வேண்டும். ஒரு நீண்ட காலம் புரையோடிப் போய் இருக்கின்ற பிரச்சினை இந்தியாவின் கையில் இந்த நாடு சிக்கி 4.5 மில்லியன் அமெரிக்க  டொலர் கடன் பெற்று இருக்கின்றது. இந்த நாடு இந்தியாவிற்கு கடமைப்பட்டிருக்கின்றது.

ஆகவே இந்தியாவின் கைக்குள் தான் இலங்கை இருக்கின்றது இந்தியா மிக இலகுவாக இந்த நாட்டை இந்த நாட்டினுடைய தலைவரை இலகுவாக கொண்டு வரலாம் இலகுவாக வெளியில் தூக்கி மறியலாம். அந்த அடிப்படையில் தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்தியா முன் நின்று செயல்பட வேண்டும். அதற்காக இங்கு இருக்கின்ற அனைத்து தமிழ் தலைவர்களும் இந்த விடயத்தை ஆணித்தரமாக வலியுறுத்த வேண்டும் என்பதனை நான் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன் என தெரிவித்தார்.

 

-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-

 

 

https://tamil.adaderana.lk/news.php?nid=198317

புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு போக்குவரத்து திட்டங்கள்

3 months 2 weeks ago
புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு போக்குவரத்து திட்டங்கள் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு போக்குவரத்து திட்டங்கள்.

Clean Sri Lanka திட்டத்துக்கு நிகராக, வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இரண்டு போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதில் முதலாவது நடவடிக்கையாக, பல்வேறு விதமான வாகன ஒலிகள், அதக சத்தத்தில் ஒலி எழுப்புதல், ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பொருத்துதல், விபத்துக்கள் மற்றும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வண்ணங்கள் கொணட விளக்குகளை பொருத்துதல், சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட வாகனங்கள் என்பன தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளது.

இதன் இரண்டாவது நடவடிக்கையாக, பொதுப் போக்குவரத்து பஸ் சாரதிகள் செய்யும் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிந்து, அந்த குற்றங்களுக்கான சட்டத்தை அமுல்படுத்துவதாகும்.

சாரதிகள் மற்றும் பொதுமக்களை அறிவுறுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் நேற்று (04) முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை இரண்டு வாரங்களுக்கு முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

இதன்போது வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரி பாகங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் அகற்றுமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்படும் என பொலிஸார் தமது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்படி, குற்றங்கள் தொடர்பிலான தகவல்களை பெற்று சட்டத்தை நடைமுறைப்படுத்த பொது போக்குவரத்து பஸ்களில் சிவில் உடை அணிந்த பொலிஸார் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

https://athavannews.com/2025/1415241

Checked
Fri, 04/25/2025 - 18:23
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr