புதிய பதிவுகள்2

எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்

2 months 4 weeks ago
ஆமா.... உங்களுக்கு மட்டுந்தான் கௌரவம் உண்டு, மற்றவர்களுக்கு மரியாதை அதெல்லாம் இல்லையென்று நினைத்தா நீங்கள் மற்றவர்களை விமர்ச்சிக்கிறீர்கள். தனக்குத்தனக்கென்றால் சுளகு படக்கு படக்கென்று அடிக்குது. அங்கு வந்த எல்லா அரசியல்வாதிகளையுமே அவர்கள் வெளியேற்றினார்கள், அவரவர் தமக்கு என்று எடுத்து கருத்து வெளியிடுவதைப்பார்த்தால் இவர்களது உள்நோக்கம் புரியும். மக்களின் எல்லாப்பிரச்னைகளிலும் நீங்கள் அவர்களுடன் கூட இருந்திருந்தால், இப்படியான அசௌகரியங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லையே. பாவம் இவர், வெளிவந்த காணொளிகளை பார்க்கவில்லைபோலும். சுமந்திரன் பாணியில் செய்தியாளரை சாடுகிறார். சரி, அப்படியொன்றுமே நடக்கவில்லையென்றால் ஏன் அதே பத்திரிகையாளரை கூட்டி புலம்புகிறார்? அதுதான், மக்களின் போராட்டத்தை தங்களின் போராட்டம் போல் தம்பட்டம் அடிப்பது மட்டுந்தான் கட்சியின் பொறுப்பு. முதலில் கட்சிக்குள் இருக்கும் புடுங்குப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வாருங்கள். பொத்துவில் தொடங்கி பொலிகண்டிவரை பேரணியை பொது அமைப்புகள் ஏற்பாடு செய்ய, இடையில் புகுந்து தங்களது ஏற்பாடுபோல் முதலாளித்தனம் காட்டிய நீங்கள், எதையும் செய்ய மாட்டீர்கள் யாரவது முயற்சியில் இடையில் புகுந்து பெயரெடுக்க வேண்டும். மக்கள் அழிக்கப்படும்போது உங்கள் பொறுப்பு எங்கே போனது? அப்போ எங்கே போயிருந்தீர்கள்?

உறுப்பினரிடையே ஒருமித்த கருத்தின்மை – யாழ் மாநகர சபையின் விசேட அமர்வில் குழப்பம்!

2 months 4 weeks ago
உறுப்பினரிடையே ஒருமித்த கருத்தின்மை – யாழ் மாநகர சபையின் விசேட அமர்வில் குழப்பம்! யாழ்.மாநகரின் நியதிக் குழுக்களை நியமிப்பதில் உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தின்மையால் யாழ் மாநகர சபையின் விசேட அமர்வின் போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது அமர்வின் தொடர்ச்சியாக, விசேட அமர்வுக்காக இன்றையதினம் (27) திகதியிடப்பட்டிருந்தது. இதனடிடையில் இன்று காலை(27) முதல்வர் மதிவதனி தலைமையில் சபையின் விசேட அமர்வு ஆரம்பமானது. கூட்டம் ஆரம்பமான நிலையில் கடந்த வாரம் ஏற்பட குழப்பத்தால் ஒத்திவைக்கபட்ட சுகாதாரக் குழுவுக்கான உறுபினர்கள் தெரிவு இன்று நடைபெற்றது. அதன் பின்னர் மேலும் சில குழுக்களுக்கான உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். குழுக்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு முடிவடைந்த பின் கூட்டத்தை முடித்துக்கொள்வதாக முதல்வர் அறிவித்து சபையிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் முன்னதாக சபையின் உறுப்பினர் தர்சானந்த், கடந்த 23 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் சுகாதார குழுவில் உள்வாங்கப்பட உறுப்பினர்கள் குறித்து ஏற்பட்ட இணக்கமின்மையால் கூட்டம் நிறுத்தப்பட்டு இன்று(27) அதன் தொடர்ச்சி நடைபெற்றது. ஆனால் அன்று குழப்பத்தை ஏற்படுத்திய அதே தெரிவுகள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது எவ்விதத்தில் நியாயமானது. தமக்கு தமது கருத்துக்களை கூற சபையில் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். கூட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டாம் என சபையின் உறுப்பினர் தர்சானந்த் கோரிக்கை விடுத்து சபையின் குறுக்கே சென்று முதல்வர் வெளியேறுவதை தடுத்ததால் அங்கு குழப்பம் ஏற்பட்டது. ஆனாலும் முதல்வர் வெளியேறியதால் தமக்கு தமது எதிர்ப்பை காண்பிக்க நியாயம் கிடைக்கவில்லை என கூறியதுடன் சபையில் வெளி நபரது ஆதிக்கம் வலுவாக இருப்பதாகவும் இது சபையின் நன்மைக்கு ஏற்றதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437366

காணி சுவீகரிப்பு வர்த்தமானி குறித்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவு!

2 months 4 weeks ago
காணி சுவீகரிப்பு வர்த்தமானி குறித்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவு! காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதியிடப்பட்ட 2430/25 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தாக்கல் செய்த மனு இன்று (27) விசாரணைக்கு எடுக்கப்பட்ட பின்னர் குறித்த வர்த்தகமானியை தற்காலிகமாக பலமற்றதாக்கும் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 02 ஆம் திகதி இடம்பெறவுள்ளநிலையில், குறித்த வர்த்தமானியை மீள கைவாங்குவதற்கான வர்த்தமானியை அரசாங்கம் வெளியிட்டால் அதனை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டுள்ளது. இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு இல. SC/FR/112/25 இல் மனுதாரர் எம்.ஏ. சுமந்திரன் சார்பில் சட்டத்தரணி மோகன் பாலேந்திராவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் க. கனக-ஈஸ்வரன், விரான் கொறேயா மற்றும் சட்டத்தரணிகள் பவானி பொண்சேகா, லக்ஷ்மணன் ஜெயக்குமார், நிலோஷன் ரவீந்திரன், பெனிஸ்லஸ் துஷான் ஆகியோர் ஆஜராகினர். Athavan Newsகாணி சுவீகரிப்பு வர்த்தமானி குறித்து உயர் நீதிமன்றத்தின்...காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதியிடப்பட்ட 2430/25 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவ...

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 4 weeks ago
வேறை எவருக்கோ சொன்னது விளங்காட்டி ஒதுங்கி நிண்டு வேடிக்கை பார்க்கோணும். சும்மா அலம்பாமல். மேற்கில் மட்டும் அல்ல மனிதன் என்ற விலங்கின் அடிப்படை இயல்புகளில் ஒன்று சுரண்டல். மேற்கில் மட்டும் அல்ல சீனாவிலும், ரஸ்யாவிலும், சுரண்டலை ஒழிப்பதாக ஆரம்பித்த சோவியத்திலும், கியூபாவிலும் சுரண்டலே வென்றது. தமிழர் உட்பட்ட கனேடிய ஆண்கள் கம்யூனிஸ்ட் கியூபாவுக்கு பாலியல் சுரண்டலுக்கு போவது நாம் அறிந்ததே. ஆகவே சுரண்டல் தூணிலும் இருக்கும், துரும்பிலும் இருக்கும். நான் மேலே சொன்னது அதை அல்ல. மேற்கில் இருக்கும் வளங்களை சுரண்டி கொழுக்கும் PLCகளில் பங்குகள் வாங்கி, பணம் பார்க்கும், அல்லது இந்த சுரண்டல் நிறுவனங்களில் நவீன கங்காணிகளாக வேலை செய்யும் அதே ஆட்கள், ஐயோ மேற்கு உலகை சுரண்டுகிறது என virtue signaling செய்து தம்மை பெரும் நியாயவான்களாக காட்டுவது வெறும் நாடகம். சொந்த வாழ்வில் தாமே மேற்கின் சுரண்டலில் பங்குதாரராக இருக்கும் இவர்களுக்கு, பொதுவெளியில் அந்த சுரண்டலை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை.

ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டொலர் சேதம்!

2 months 4 weeks ago
ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டொலர் சேதம்! ஈரானுடன் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் கடும் சேதமடைந்ததுடன் குறிப்பாக இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வரித்துறை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாடு தற்போது மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. இஸ்ரேலின் வரலாற்றில் இதுபோன்ற சேதத்தை நாடு இதுவரை சந்தித்ததில்லை. ஈரான் தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் 12 பில்லியன் டொலர் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். எனினும் சேதமடைந்த இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் ஆயுதங்களை கணக்கெடு சேத மதிப்பு கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. https://athavannews.com/2025/1437375

எதிராக செயற்பட்ட ஒருவரையும் விட்டு வைக்க மாட்டேன்! செம்மணியில் சுற்றிவளைக்கப்பட்ட இளங்குமரன் எம்.பி பகிரங்க எச்சரிக்கை

2 months 4 weeks ago
இவர் மறைமுகமாக ஸ்ரீதரனை சாடியுள்ளார். குழப்பம் விளைவித்தவர்கள் கள்ளக்காணி பிடித்தவர்கள், வட்டிக்கு கொடுப்பவர்கள் என்று பல குற்றச்சாட்டுக்களை அடுக்கி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்றுள்ளார். இவரை மக்களின் போராட்டத்துக்குள் புகுந்து தன்னை பிரபல்யப் படுத்த விட்டிருந்தால் இது ஒன்றும் அவருக்கு தெரிய வந்திருக்காது. இவ்வளவு குற்றமுள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் ஏன் காலத்தை கடத்தினார்? நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்தவர்கள், கொலை கொள்ளை செய்த பிரபலங்களுக்கு எதிராக முதலில் நடவடிக்கை எடுங்கள், பிறகு உங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டுங்கள். மக்கள் எத்தனை ஆண்டுகளாக போராடிக்கொண்டிருக்கிறார்கள், அப்போவெல்லாம் எங்கே போயிருந்தீர்கள் அவர்களுடன் சமூகமளிக்காமல்? தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை பழிவாங்கப்போறாராம். அடுத்த தேர்தலில் இவர் தொடர்ந்து இருப்பாரா என்பதே இவரறியா கேள்வி, பதவி வந்தவுடன் பதவிக்கு மீறிய அதிகாரம் வந்துவிடும்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 4 weeks ago
இங்கே சிலருக்கு உள்ளதை உள்ளபடி சொன்னால் எரிகிறது. மேற்கின் பொருளாதாரமே முதலாளித்துவ அடிப்படை என்பதன் பின் சுரண்டலை பற்றி ஏன் கவலைப்படுவான், அது ஒரு பகுதி தானே எந்த மட்டத்திலும். மேற்கின் இப்போதைய பொருளாதாரம் rentier capitalism சாய்வானது. அது மேலும் சுரண்டல் தன்மை கொண்டது எல்லா மட்டத்திலும். முதல் வைத்து இருப்பவர்கள் (இது எப்போதுமே ஒப்பீடட்டளவு தான்), அப்படி இல்லாதவர்களை மறைமுகவேனும் சுரண்டுவார்கள், இது தான் உண்மை. இல்லை ஒரு உதாரணம் மட்டும்.

மேற்கிந்தியத் தீவுகள் அவுஸ்திரேலியா கிரிக்கெட் தொடர்

2 months 4 weeks ago
உந்த‌ மைதான‌த்தில் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் பெரிய‌ இஸ்கோர் அடித்து இருக்கின‌ம் , இந்த‌ டெஸ்ட் மைச்சில் வீர‌ர்க‌ள் அவுட் ஆகி வெளிய‌ போவ‌துமாய் இருக்கு................பிச்சில் மாற்ற‌ம் செய்து விட்டின‌மோ தெரியாது.....................

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

2 months 4 weeks ago
சாய் சுதர்சன் இங்லாந் உள்ளூர் கில‌ப்புக்கு போன‌ வ‌ருட‌ம் விளையாடின‌வ‌ர் , இங்லாந் மைதான‌ங்க‌ளில் ஏற்க‌ன‌வே விளையாடின‌ அனுப‌வ‌ம் இருக்கு...................அடுத்த‌ விளையாட்டில் ந‌ல்லா விளையாடுவார் என‌ ந‌ம்புகிறேன்....................................

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

2 months 4 weeks ago
அவ‌ரின் ம‌க‌ளை கில் தான் திரும‌ண‌ம் செய்ய‌ போகிறார்....................இர‌ண்டு பேரும் ஒன்னாக‌ தான் இப்போது எல்லா இட‌ங்க‌ளும் போய் வ‌ருகின‌ம் , இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் திரும‌ண‌ம் செய்வின‌ம் என‌ நான் ந‌ம்புகிறேன்......................இந்த‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌ தொட‌ரில் அவ‌ர்க‌ள் இருவ‌ரின் ப‌ட‌த்தை இணைத்து இருந்தேன்............................... அவ‌ரின் ம‌க‌ளை கில் தான் திரும‌ண‌ம் செய்ய‌ போகிறார்....................இர‌ண்டு பேரும் ஒன்னாக‌ தான் இப்போது எல்லா இட‌ங்க‌ளும் போய் வ‌ருகின‌ம் , இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் திரும‌ண‌ம் செய்வின‌ம் என‌ நான் ந‌ம்புகிறேன்......................இந்த‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌ தொட‌ரில் அவ‌ர்க‌ள் இருவ‌ரின் ப‌ட‌த்தை இணைத்து இருந்தேன்....................................

உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு இலங்கையில் உரிய மருத்துவகிசிச்சைகள் இல்லை - புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்ந்தும் பிரிட்டனில் தங்கியிருக்க அனுமதி

2 months 4 weeks ago
27 JUN, 2025 | 11:26 AM உயர்இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களிற்கு இலங்கையில் உரியதரமான மருத்துவசிகிச்சைகள் இல்லை என்பதால் புகலிடக்கோரிக்கையாளர்கள் இருவருக்கு பிரிட்டனில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கு அந்த நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக டெலிகிராவ் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் டெலிகிராவ் மேலும் தெரிவித்துள்ளதாவது, உயர் இரத்த அழுத்தத்திற்கான சிகிச்சை தங்கள் சொந்த நாட்டில் "போதுமானதாக இல்லை" என்று கூறி ஒரு வயதான இலங்கை தம்பதியினர் இங்கிலாந்தில் தங்குவதற்கான உரிமையை பெற்றுள்ளனர். 60 களின் பிற்பகுதியில் இருக்கும் பெயர் குறிப்பிடப்படாத கணவன் மற்றும் மனைவி 2022 இல் தங்கள் மகள் மற்றும் மருமகனைப் பார்க்க பிரிட்டனுக்கு வந்தனர் ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் புகலிடம் கோரினர் இது உள்துறை அலுவலகத்தால் மறுக்கப்பட்டபோது அவர்கள் வெற்றிகரமாக மேல்முறையீடு செய்தனர். கணவர் ஒரு குடியேற்ற தீர்ப்பாயத்தில் தான் மனச்சோர்வு கடுமையான பதட்டம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெற்காசிய நாட்டில் சிகிச்சை பெற "விருப்பமில்லை" என்றும் கூறினார். அவர்களைத் திருப்பி அனுப்புவது அவர்களின் மனித உரிமைகளை மீறும் என்று ஒரு புகலிட நீதிபதி ஒப்புக்கொண்டார். இலங்கையில் தரமற்ற மருத்துவ சிகிச்சை காரணமாக அவர்கள் தங்கலாம் என்ற தீர்ப்பை உள்துறை அலுவலகம்சவாலிற்கு உட்படுத்தியது. முதல் நீதிபதி கணவர் "தீவிரமாக நோய்வாய்ப்பட்டுள்ளார்" என்பதற்கான வலுவான ஆதாரங்களை முன்வைக்கவில்லை னஎன்று வாதிட்டது. ஆனால் குடிவரவு மற்றும் புகலிடக் குழுவின் உயர் தீர்ப்பாயம் இதை ஏற்கவில்லை இலங்கையை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்களின் கூற்றை ஆதரித்து தீர்ப்பளித்தது. நீதிமன்றத்தால் பெயர் குறிப்பிட அனுமதி வழங்கப்பட்ட தம்பதியினர் மே 2022 இல் இங்கிலாந்துக்குள் நுழைந்ததாக விசாரணையில் கூறப்பட்டது. அந்த ஆண்டு ஜூலை மாதம் கணவர் மற்றொரு மருமகனின் குடும்பத்தினரால் செய்யப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக துன்புறுத்தப்படுவார்கள் என்ற அச்சம் இருப்பதாக தெரிவித்து தனது மனைவியுடன் இணைந்து புகலிடக்கோரிக்கையை முன்வைத்தார். பின்னர் அவர்கள் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் அடிப்படையில் மேலும் கோரிக்கைகளை முன்வைத்தனர் அவை கடந்த ஆண்டு பிப்ரவரியில் உள்துறை அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டன. கணவர் முதல்-நிலை தீர்ப்பாயத்தில் இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் அங்கு அவர்கள் பாதுகாப்பு அல்லது புகலிடம் முடிவுகளை சவால் செய்யவில்லை மனித உரிமைகள் கோரிக்கையை மட்டுமே சவால் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதஉரிமை சாசன பிரிவுகள் 3 மற்றும் 8 இன் கீழ் தனது வாதத்தை முன்வைத்தார். இது முறையே மனிதாபிமானமற்ற அல்லது இழிவான சிகிச்சை மற்றும் குடும்ப வாழ்க்கைக்கான உரிமையை உள்ளடக்கியது. கணவர் தனது மன அழுத்தம் கடுமையான பதட்டம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கு இலங்கையில் போதுமான சிகிச்சை பெற முடியாது என்று மனு தாக்கல் செய்தார். தம்பதியினர் தங்கள் மனநிலை மற்றும் "அகநிலை பயம்" ஆகியவற்றின் அடிப்படையில் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பும்படி கட்டாயப்படுத்தப்பட்டால் அவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய "உண்மையான ஆபத்து" இருப்பதாகவும் கூறினர். புகலிட தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து உள்துறை அலுவலகம் மேல்முறையீடு செய்யத் தீர்மானித்தது சிகிச்சையின் "போதாமை" என்பது சிகிச்சை பெறமுடியாது என்ற அர்த்தமல்ல என வாதிட்டது என்று வாதிட்டது. துணை உயர் தீர்ப்பாய நீதிபதி ஸ்டூவர்ட் நீல்சன் முதல்-நிலை தீர்ப்பாயத்தால் எந்த சட்டப் பிழையும் இல்லை என்று கண்டறிந்தார். நீதிபதி உள்துறை அலுவலகத்தின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தார் அதாவது முதல்-நிலை தீர்ப்பாயத்தின் முடிவு செல்லுபடியாகும் மேலும் தம்பதியினர் இங்கிலாந்தில் தங்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்களின் மேல்முறையீட்டை முதல்-நிலை தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டது. https://www.virakesari.lk/article/218604

பள்ளி மாணவிகளை சிக்கவைத்த வெப் கேம் தொழிலின் இருண்ட மறுபக்கம்

2 months 4 weeks ago
பட மூலாதாரம்,JORGE CALLE / BBC படக்குறிப்பு, தற்போது 20 வயதாகும் கெய்னி, தனது 17 வயதில் வெப்கேம் மாடலாக வேலை செய்யத் தொடங்கினார் கட்டுரை தகவல் எழுதியவர், சோபியா பெட்டிசா பதவி, பிபிசி 27 ஜூன் 2025, 04:23 GMT புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு நாள் இசபெல்லா பள்ளி முடிந்து வீட்டிற்குக் சென்றுக் கொண்டிருந்தபோது, யாரோ ஒருவர் அவர் கையில் ஒரு துண்டுப்பிரசுரத்தை திணித்தார். "உன் அழகைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க விரும்புகிறாயா?" என்று அந்த துண்டுப் பிரசுரத்தில் கேட்கப்பட்டிருந்தது. கொலம்பியாவின் தலைநகரான பொகோட்டாவில் தனது பகுதியில் உள்ள டீனேஜ் மாணவிகளை குறிவைத்து ஒரு ஸ்டுடியோ செயல்படுவதாக இசபெல்லா கூறுகிறார். இந்த ஸ்டுடியோ, மாடல்களாக செயல்பட மாணவிகளை ஊக்குவிக்கிறது. இசபெல்லாவுக்கு அப்போது 17 வயதுதான். ஆனால், இரண்டு வயது மகனின் தாய். தனது குழந்தையை பராமரிக்க அவருக்கு பணம் தேவைப்பட்டதால், விசயத்தைத் தெரிந்துக் கொள்ள அவர் சென்றிருக்கிறார். அவர் சென்றடைந்த இடம், ஒரு பாழடைந்த பகுதியில் உள்ள வீடு. அந்த வீட்டில் இருந்த எட்டு அறைகளும், படுக்கையறைகள் போல அலங்கரிக்கப்பட்டிருந்தன, ஒரு தம்பதியினர் நடத்திவந்த செக்ஸ் கேம் ஸ்டுடியோ அது. சிறிய, குறைந்த பட்ஜெட்டில் செயல்படும் ஸ்டுடியோக்கள் முதல் பெரிய அளவிலான ஸ்டுடியோக்கள் என பல வகை உள்ளன. அவற்றில், விளக்குகள், கணினிகள், வெப்கேம்கள் மற்றும் இணைய இணைப்புடன் கூடிய தனி அறைகள் இருக்கும். பாலியல் செயல்களை மாடல்கள் செய்வது ஸ்ட்ரீம் செய்யப்படும். பார்வையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றாற்போல, ஸ்டுடியோக்களில் இருந்து ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றன. ஸ்டுடியோ நடத்துபவர்கள் அல்லது இடைத்தரகர்கள்/ கண்காணிப்பாளர்கள் மூலம் பார்வையாளர்கள் கோரிக்கைகளை வைக்கிறார்கள். கொலம்பியாவில் 18 வயதுக்குட்பட்ட வெப்கேம் மாடல்களை ஸ்டுடியோக்கள் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த நாள், இசபெல்லா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது வேலையைத் தொடங்கிவிட்டார். தனது சம்பளம் என்ன, உரிமைகள் என்ன என்பதை விவரிக்கும் எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் எதுவும் போடப்படவில்லை என்று அவர் பிபிசி உலக சேவையிடம் கூறினார். "எனக்கு அவர்கள் எதையும் சொல்லிக் கொடுக்கவில்லை, அவர்கள் நேரடியாக என்னை ஸ்ட்ரீமிங் செய்ய வைத்தனர். 'இதோ கேமரா இருக்கிறது, லைவுக்கு போகலாம்' என்றார்கள்." இந்த வேலையில் சேர்ந்த சில நாட்களிலேயே, பள்ளியிலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று இசபெல்லாவிடம் ஸ்டுடியோ கேட்டுக் கொண்டது. வகுப்பறையில் தன்னைச் சுற்றியிருந்த சக மாணவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொண்டிருந்த நிலையில், இசபெல்லா தொலைபேசியை தனது மேசையில் வைத்து, தன்னை காட்டத் தொடங்கினார். தன்னிடம் குறிப்பிட்ட பாலியல் செயல்களைச் செய்யச் சொல்லி பார்வையாளர்கள் கோரிக்கைகள் விடுத்ததைப் பற்றி இசபெல்லா விவரிக்கிறார். கழிப்பறைக்குச் செல்வதாக சொல்லி, ஆசிரியரிடம் அனுமதி கேட்டுவிட்டு வகுப்பறையில் இருந்து வெளியேறிய இசபெல்லா, ஒரு அறைக்குச் சென்று, வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றினார். ஆசிரியருக்கு என்ன நடக்கிறது என்று எதுவும் தெரியவில்லை. "அதனால் நான் அதை மற்ற வகுப்புகளிலும் செய்ய ஆரம்பித்தேன்" என்று இசபெல்லா கூறுகிறார். "நான், 'இதை என் குழந்தைக்காக செய்கிறேன், அவனுக்காகச் செய்கிறேன்' என்று நினைத்துக்கொள்வேன். அது எனக்கு பலத்தைத் தந்தது." பட மூலாதாரம்,JORGE CALLE / BBC படக்குறிப்பு,சில ஸ்டுடியோக்கள் 18 வயதுக்கும் குறைவானவர்களை ஸ்ட்ரீமிங் செய்ய போலி ஐடிகளைப் பயன்படுத்துவதாக மாடல்கள் பிபிசியிடம் தெரிவித்தனர் மீள்சுழற்சி செய்யப்படும் பழைய கணக்குகள் மற்றும் போலி ஐடிகள் சர்வதேச அளவில் செக்ஸ்கேம் தொழில் செழித்து வருகிறது. உலகளவில் வெப்கேம் தளங்களின் மாதாந்திர பார்வைகளின் எண்ணிக்கை 2017 முதல் மும்மடங்கிற்கும் மேலாக அதிகரித்து, ஏப்ரல் 2025 இல் கிட்டத்தட்ட 1.3 பில்லியனை எட்டியுள்ளது, என பகுப்பாய்வு நிறுவனமான செம்ரஷ் கூறுகிறது. இப்போது, உலகின் வேறு எந்தவொரு நாட்டையும் விட கொலம்பியாவில் தான் அதிகமான மாடல்கள் (400,000) மற்றும் 12,000 செக்ஸ் கேம் ஸ்டுடியோக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை, நாட்டின் 'வயது வந்தோர் வெப்கேம் துறை'யை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான ஃபெனல்வெப் தெரிவித்துள்ளது. இந்த ஸ்டுடியோக்கள், கலைஞர்களைப் படம் பிடித்து, உலகளாவிய வெப்கேம் தளங்களுக்கு உள்ளடக்கத்தை வழங்குகின்றன, அவை உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான பார்வையாளர்களுக்கு ஒளிபரப்புவதன் மூலம் பணம் சம்பாதிக்கின்றன. மாடல்களிடம் கோரிக்கைகளை முன்வைக்கும் பார்வையாளர்கள், டிப்ஸ் மற்றும் பரிசுகளை கொடுக்கின்றனர். வீட்டில் தனிமை கிடைக்காதது, உபகரணங்கள் அல்லது நிலையான இணைய இணைப்பு இல்லாதது உட்பட பல காரணங்களால் மாடல்கள் ஸ்டுடியோக்களில் பணிபுரிகின்றனர். அதற்குக் காரணம், அவர்கள் ஏழைகளாகவோ அல்லது சிறார்களாகவோ இருப்பதும் பெற்றோருடன் இருப்பதாலும் என்று தெரிகிறது. மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வறுமையில் வாடும் ஒரு நாட்டில், பணம் சம்பாதிக்க சுலப வழி இது என்று ஸ்டுடியோக்கள் ஆசை காட்டியே மக்களை கவர முயற்சிப்பதாக பிபிசியிடம் பெண்கள் தெரிவித்தனர். சில ஸ்டுடியோக்கள் சிறப்பாக நடத்தப்படுவதாகவும், கலைஞர்களுக்கு தொழில்நுட்ப மற்றும் பிற ஆதரவை வழங்குவதாகவும் கூறும் மாடல்கள், நேர்மையற்றவர்கள் அதிகமாக துஷ்பிரயோகம் செய்வதாக கூறுகின்றனர். ஸ்டுடியோ உரிமையாளர்களை "அடிமைகளின் எஜமானர்கள்" என்று வர்ணிக்கும் கொலம்பியாஅதிபர் குஸ்டாவோ பெட்ரோ, அவர்கள் இசபெல்லாவைப் போல பெண்களையும் சிறுமிகளையும் ஏமாற்றி அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தைகளைக் கூறி நம்ப வைப்பதாக கூறுகிறார். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸ்டுடியோக்களில் இருந்து உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்யும் நான்கு பெரிய வெப்கேம் தளங்களான போங்காகேம்ஸ், சாட்டர்பேட், லைவ்ஜாஸ்மின், ஸ்ட்ரிப்சாட் ஆகியவை, 18 அல்லது அதைவிட அதிக வயதானவர்கள் தான் மாடல்களாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதுடன், அதனை உறுதிப்படுத்தும் சோதனைகளையும் மேற்கொள்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் சட்டங்கள், 18 வயதுக்கு குறைவானவர்கள் பங்களிக்கும் பாலியல் உள்ளடக்கங்களை விநியோகிப்பதைத் தடைசெய்கின்றன. ஆனால், 18 வயதுக்குட்பட்ட பெண்களைப் பணியமர்த்த ஒரு ஸ்டுடியோ விரும்பினால், இந்தச் சோதனைகளை சுலபமாக தவிர்த்துவிட முடியும் என்று மாடல்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். தற்போது நிகழ்ச்சிகள் நடத்தாத ஆனால், சட்டப்பூர்வ வயதுடைய மாடல்களின் பழைய கணக்குகளை சட்டத்துக்குப் புறம்பாக, "மீள்சுழற்சி" செய்து, அவற்றை 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்குக் கொடுப்பது சுலபமான வழி என்று அவர்கள் கூறுகிறார்கள். 17 வயதாக இருந்தபோது Chaturbate மற்றும் StripChat இரண்டிலும் மீள்சுழற்சி செய்த கணக்கை வைத்து வேலை செய்ததாக இசபெல்லா கூறுகிறார். "நான் 18 வயது ஆகாதவள் என்பதால் எந்த பிரச்னையும் இல்லை என்று ஸ்டுடியோ உரிமையாளர் கூறினார்," என்று சொல்லும் இசபெல்லாவுக்கு தற்போது 18 வயதாகிவிட்டது. "வேறொரு பெண்ணின் கணக்கைப் பயன்படுத்தி, அந்த அடையாளத்தின் கீழ் வேலை செய்யத் தொடங்கினேன்" என்று அவர் சொல்கிறார். பிபிசியிடம் பேசிய மற்ற மாடல்கள், தங்களுக்கு ஸ்டுடியோக்கள் போலி ஐடிகள் வழங்கியதாகக் கூறினார்கள். போலி ஐடியை பயன்படுத்தி 17 வயதிலேயே, தான் போங்கா கேம்ஸ் தளத்தில் தோன்றத் தொடங்கியதாக கெய்னி என்ற இளம்பெண் கூறுகிறார். படக்குறிப்பு,கொலம்பியாவில் உள்ள போங்கா கேம்ஸ் பிரதிநிதியான மில்லி அச்சின்டே, பணி நிலைமைகளை சரிபார்க்க ஸ்டுடியோக்களுக்குச் செல்வதாகக் கூறுகிறார் பிபிசியிடம் பேசிய கொலம்பியாவில் உள்ள போங்கா கேம்ஸ் பிரதிநிதியான மில்லி அச்சின்டே, 18 வயதுக்குட்பட்டவர்களை நிகழ்ச்சி நடத்த தாங்கள் அனுமதிப்பதில்லை என்றும், இதுபோன்ற விதிமுறைகளை மீறும் கணக்குகளை மூடுவதாகவும் கூறினார். இந்தத் தளம், ஐடிகளை சரிபார்க்கிறது என்று கூறுகிறார். மேலும், "ஒரு மாடல் எங்களைத் தொடர்பு கொண்டு, குறிப்பிட்ட ஸ்டுடியோவை விட்டு வெளியேறியதைத் தெரிவித்தால், அவர்களின் கணக்கை மூடுவதற்கான கடவுச்சொல்லை நாங்கள் அவர்களுக்கு வழங்குகிறோம்" என்றும் அவர் கூறினார். ஒரு அறிக்கையில், போலி ஐடிகளைப் பயன்படுத்துவதை "முற்றிலும்" நிறுத்தியுள்ளதாக தெரிவித்த Chaturbate, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புகைப்பட ஐடிகளுக்கு அருகில் மாடல்கள் நின்று புகைப்படங்களை அவ்வப்போது எடுத்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவை டிஜிட்டல் முறையிலும், வழக்கமான முறையிலும் சரிபார்க்கப்படும் என தெரிவித்துள்ளது. "அதிகபட்சம் பத்துக்கும் குறைவான ஒளிபரப்பாளர்களுக்கு ஒரு மதிப்பாய்வாளர்" என்ற அளவில் இருப்பதாகவும், கணக்குகளை மீள்சுழற்சி செய்யும் எந்தவொரு முயற்சியும் "தோல்வியடையும்" என்றும், "ஒவ்வொரு ஒளிபரப்பும் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்பட்டு சரிபார்க்கப்படுவதால்" வயது சரிபார்ப்பு செயல்முறை தொடர்கிறது என்றும் அது கூறியது. ஸ்ட்ரிப்சாட் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் "18 வயதுக்கும் குறைவான மாடல்கள் தொடர்பான விவகாரத்தில் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை" கொண்டிருப்பதாகவும், கலைஞர்கள் "முழுமையான வயது சரிபார்ப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும்" என்றும் கூறியுள்ளது. மேலும் "மாடல்களின் அடையாளங்களைச் சரிபார்க்க" அதன் உள்ளக மதிப்பீட்டுக் குழு, மூன்றாம் தரப்பு சரிபார்ப்பு சேவைகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் ஸ்ட்ரிப்சாட் கூறியது. மீள்சுழற்சி செய்யப்பட்ட கணக்குகளை அதன் தளத்தில் பயன்படுத்த முடியாது என்றும், அதன் விதிகளில் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் அனைத்தும், கணக்கு வைத்திருப்பவரின் ஒவ்வொரு ஸ்ட்ரீமிலும் இருக்க வேண்டும் என்றும் அது கூறியது. "எனவே, ஒரு மாடல், சுயாதீனமாக வேலை செய்வதற்காக புதிய கணக்கிற்கு மாறினால், அவர்களுடன் இணைக்கப்பட்ட அசல் கணக்கு செயலற்றதாகவும், ஸ்டுடியோவால் பயன்படுத்த முடியாததாகவும் மாறும்" என்று ஸ்ட்ரிப்சாட் கூறுகிறது. இந்த விவகாரத்தில் லைவ்ஜாஸ்மின் தளத்தின் கருத்தை கேட்டறிய விரும்பிய பிபிசியின் கோரிக்கைகளுக்கு பதிலேதும் கிடைக்கவில்லை. படக்குறிப்பு,கொலம்பிய வெப்கேம் மாடல், கெய்னி ஸ்ட்ரீமிங்கைத் தொடங்கத் தயாராகிறார் இளமையாக தோன்றுபவர்களையே பார்வையாளர்களுக்குப் பிடிக்கும் 20 வயதாகும் கெய்னி, மெடலினில் உள்ள தனது வீட்டின் படுக்கையறையில் இருந்து வேலை செய்கிறார். இவர், பெரிய சர்வதேச தளங்களுக்குச் செல்லும் பாதையை வழங்கும் மற்றொரு ஸ்டுடியோ வழியாக ஸ்ட்ரீமிங் செய்கிறார். ரிங் லைட்டுகள், ஒரு கேமரா, ஒரு பெரிய திரை என உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் இல்லையென்றால், கெய்னியின் அறை, ஒரு குழந்தையின் அறையாகவே தோன்றக்கூடும். சுமார் ஒரு டஜன் ஸ்டஃப்டு விலங்குகள், இளஞ்சிவப்பு யூனிகார்ன்கள் மற்றும் டெடி பியர்ஸ் அவரது படுக்கையறையில் நிறைந்துள்ளன. "மாடல், மிகவும் இளமையாகத் தெரிந்தால் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடிக்கும்" என்று அவர் கூறுகிறார். "சில நேரங்களில் அதுவே பிரச்னையாகவும் மாறிவிடுகிறது என்று நினைக்கிறேன். சில வாடிக்கையாளர்கள் குழந்தையைப் போல நடிக்கச் சொல்கிறார்கள், ஆனால் அது சரியல்ல" என்கிறார் அவர். தனது பெற்றோர் விவாகரத்து செய்ய முடிவு செய்த பிறகு, குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உதவுவதற்காகவே இந்தத் தொழிலில் தான் இறங்கியதாக அவர் கூறுகிறார். அவள் என்ன தொழில் செய்கிறார் என்பது தன்னுடைய தந்தைக்குத் தெரியும் என்று கூறும் கெய்னி, அவர் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறுகிறார். இந்தத் தொழிலில் மிகவும் இளம் வயதிலேயே (17 வயதில்) தான் ஈடுபடுத்தப்பட்டதாக கெய்னி கருதினாலும், அவர் தனது முன்னாள் முதலாளிகளை விமர்சிக்கவில்லை. தற்போது மாதத்திற்கு சுமார் $2,000 (£1,500) சம்பாதிக்கும் கெய்னி, தனது முன்னாள் முதலாளி, வேலையில் சேர தனக்கு உதவியதாகவே நினைக்கிறார். கொலம்பியாவில் குறைந்தபட்ச மாதாந்திர சம்பளம் சுமார் $300 (£225) என்ற நிலையில், இந்தத் தொகை மிக அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. "இந்த வேலையின் மூலம், என்னுடைய அம்மா, அப்பா, சகோதரி என குடும்பம் முழுவதற்கும் உதவுகிறேன்," என்று அவர் கூறுகிறார். இதேக் கண்ணோட்டத்தையே ஸ்டுடியோக்களும் எதிரொலிக்கின்றன. அவற்றில் சில, தங்கள் கலைஞர்களை நன்றாக கவனித்துக்கொள்வதை நிரூபிக்க ஆர்வத்துடன் செயல்படுகின்றன. மிகப்பெரிய ஸ்டுடியோக்களில் ஒன்றான ஏ.ஜே. ஸ்டுடியோஸை நாங்கள் பார்வையிட்டோம், அங்கு மாடல்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக உளவியலாளர் ஒருவர் பணியமர்த்தப்பட்டிருந்தார். அங்கு ஒரு ஸ்பாவும் இருந்தது. அதில், பெடிக்யூர், மசாஜ், போடாக்ஸ் மற்றும் லிப் ஃபில்லர்கள் "தள்ளுபடி" விலையில் கொடுக்கப்பட்டன. அத்துடன் அதிக வருமான ஈட்டும் அல்லது சக மாடல்களை ஆதரிக்கும் பணியாளர்கள் மற்றும் நன்றாக ஒத்துழைப்பவர்களுக்கு "மாதத்தின் சிறந்த ஊழியர்கள்" என்ற பாராட்டு பெற்றவர்களுக்கும் இந்த ஸ்பாவில் உள்ள பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. கழிப்பறைக்கு சென்றால் அபராதம் ஆனால் நாட்டின் அதிபர் சுட்டிக்காட்டியுள்ளபடி, மாடல்கள் அனைவரும் சரியாக நடத்தப்படுவதில்லை அல்லது நல்ல வருமானம் ஈட்டுவதில்லை. மேலும், அவர் அறிமுகப்படுத்தும் புதிய தொழிலாளர் சட்டம் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்துமா என்பதைப் பார்க்க தொழில்துறை காத்திருக்கிறது. ஸ்ட்ரீமிங் தளங்கள் பொதுவாக பார்வையாளர்கள் செலுத்தும் கட்டணத்தில் 50% எடுத்துக்கொள்கின்றன என்றும், ஸ்டுடியோக்கள் 20-30% எடுத்துக்கொள்கின்றன என்றும், எஞ்சியத் தொகையே மாடல்களுக்கு கிடைப்பதாக மாடல்களும் ஸ்டுடியோக்களும் பிபிசியிடம் தெரிவித்தனர். அதாவது ஒரு நிகழ்ச்சியில் 100 டாலர்கள் கிடைத்தால் மாடலுக்கு பொதுவாக 20 முதல் 30 டாலர் வரை கிடைக்கும். நேர்மையற்ற ஸ்டுடியோக்கள் பெரும்பாலும் அதிகமாக வருமானத்தை எடுத்துக்கொள்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர். எட்டு மணிநேரம் வரையிலான அமர்வுகளில் பணியாற்றி, வெறும் 5 டாலர் வரை மட்டுமே சம்பாதித்த அனுபவங்களும் இருப்பதாக சில மாடல்கள் கூறுகிறார்கள், ஒரு நிகழ்ச்சிக்கு அதிக பார்வையாளர்கள் இல்லையென்றால் இதுபோல் நிகழலாம். இடைவேளை இல்லாமல் 18 மணி நேரம் வரை ஸ்ட்ரீமிங் செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டதாக சொல்லும் சில மாடல்கள், சாப்பிடவோ அல்லது கழிப்பறைக்குச் செல்வதற்காக ஸ்ட்ரீமிங் செய்வதை இடைநிறுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள். இந்தக் கூற்றுகளை, 2024 டிசம்பரில் வெளியிடப்பட்ட மனித உரிமைகள் கண்காணிப்பக பிரசாரக் குழுவின் அறிக்கை ஆமோதிக்கிறது. மூட்டைப் பூச்சிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் நிறைந்த, மிகவும் சிறிய மற்றும் அழுக்கான அறைகளில் ஸ்ட்ரீமிங் செய்யவும், பாலியல் செயல்களைச் செய்ய கட்டாயப்படுத்தப்படும் வேதனையான மற்றும் இழிவான நிலை இருப்பதைக் கண்டறிந்ததாக, பிபிசிக்காக இந்தக் கதை குறித்து கூடுதல் ஆராய்ச்சி செய்த எழுத்தாளர் எரின் கில்பிரைட் கூறுகிறார். பட மூலாதாரம்,JORGE CALLE / BBC படக்குறிப்பு,தான் வேலை செய்த ஒரு ஸ்டுடியோ, தான் விரும்பாத பாலியல் செயல்களைச் செய்ய அழுத்தம் கொடுத்ததாக சோஃபி கூறுகிறார் மெடலினைச் சேர்ந்த சோஃபி, இரண்டு குழந்தைகளுக்குத் தாய். 26 வயதான அவர், இரவு விடுதி ஒன்றில் பணியாற்றி வந்தார், ஆனால் வாடிக்கையாளர்களின் தொடர் அவமதிப்புகளால் சலித்துபோய், வெப்கேம் மாடலிங் துறையில் அவர் இறங்கிவிட்டார். தான் பணிபுரிந்த ஒரு ஸ்டுடியோ, வலிமிகுந்த மற்றும் இழிவான பாலியல் செயல்களைச் செய்யவும், அங்கு பணிபுரிந்த மூன்று பெண்களுடன் சேர்ந்து நடிக்கவும் அழுத்தம் கொடுத்தது என்று சொல்கிறார். வாடிக்கையாளர்களின் விருப்பக் கோரிக்கைகளை, மாடல்களிடம் கொண்டு செல்லும் இடைத்தரகர்களாகச் செயல்பட பணியமர்த்தப்பட்ட ஸ்டுடியோ கண்காணிப்பாளர்கள், தவறான கோரிக்கைகளுக்கும் ஒப்புக் கொண்டதாகவும் அவர் சொல்கிறார். தன்னால் அப்படி செய்யமுடியாது என்று ஸ்டுடியோவிடம் சொன்னாலும், "உனக்கு வேறு வழியில்லை என்று அவர்கள் சொன்னார்கள்" என சோஃபி கூறுகிறார். "இறுதியில், நான் அவர்கள் சொன்னதை செய்ய வேண்டியிருந்தது, இல்லையெனில் அவர்கள் என் கணக்கை முடக்கிவிடுவார்கள்," என்று சோஃபி சொல்கிறார். விருப்பம் இல்லாவிட்டாலும் வெப்கேம் ஸ்டுடியோக்களில் தொடர்ந்து வேலை செய்யும் சோஃபி, கொலம்பியாவில் கிடைக்கும் சாதாரண சம்பளம் தனக்கும் தனது இரண்டு குழந்தைக்கும் போதுமானதாக இருக்காது என்று கூறுகிறார். சட்டக் கல்வி பயில்வதற்காக சோஃபி பணத்தை சேமித்து வருகிறார். படக்குறிப்பு,செக்ஸ்கேம் துறையில் வேலை செய்து குழந்தைகளை வளர்ப்பதாகவும், படிப்புக்காக சேமிப்பதாகவும் சோஃபி கூறுகிறார் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்வது கொலம்பியா மட்டுமல்ல என்கிறார் எரின் கில்பிரைட். பல்கேரியா, கனடா, செக் குடியரசு, ஹங்கேரி, இந்தியா, ருமேனியா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, உக்ரைன், அமெரிக்கா ஆகிய 10 நாடுகளில் இருக்கும் ஸ்டுடியோக்களிலிருந்து பெரிய நான்கு ஸ்ட்ரீமிங் தளங்கள் உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதை அவர் கண்டறிந்தார். மேலும், ஸ்ட்ரீமிங் தளங்களில் "மனித உரிமை துஷ்பிரயோகங்களை எளிதாக்கும் அல்லது அதிகப்படுத்தும் கொள்கைகள் மற்றும் நெறிமுறைகளில் உள்ள இடைவெளிகளை" அடையாளம் கண்டதாகவும் அவர் கூறுகிறார். ஸ்ட்ரீம் செய்யப்படும் ஸ்டுடியோக்களின் நிலைமைகள் குறித்து நாங்கள் ஸ்ட்ரீமிங் தளங்களிடம் கேட்டோம். போங்கா கேம்ஸைச் சேர்ந்த மில்லி அச்சின்டே, "மாடல்களுக்கு பணம் வழங்கப்படுவதையும், அறைகள் சுத்தமாக இருப்பதையும், அத்துமீறப்படாமல் இருப்பதையும் உறுதி செய்யும்" எட்டு பெண்கள் குழுவில் தானும் இருப்பதாகக் கூறினார். இந்தக் குழு, கொலம்பியாவில் உள்ள சில ஸ்டுடியோக்களுக்குச் சென்று அங்கிருக்கும் நிலைமைகளை மதிப்பிடும். StripChat மற்றும் Chaturbate நிறுவனங்கள், அவர்கள் கலைஞர்களின் நேரடி முதலாளிகள் அல்ல என்பதால், ஸ்டுடியோக்களுக்கும் மாடல்களுக்கும் இடையிலான விதிமுறைகளில் தாங்கள் தலையிடுவதில்லை என்றும் கூறின. ஆனால் பாதுகாப்பான பணிச்சூழலுக்கு உறுதிபூண்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் பிபிசியிடம் கூறின. ஸ்டுடியோக்கள் "மரியாதைக்குரிய மற்றும் வசதியான பணி நிலைமைகளை" உறுதி செய்யும் என்று எதிர்பார்ப்பதாகவும் StripChat தெரிவித்துள்ளது. ஒரு செயலைச் செய்ய மாடல் கட்டாயப்படுத்தப்படுவதாகவோ அல்லது அச்சுறுத்தப்படுவதாகவோ நம்பினால், அதில் தலையிட குழுக்கள் இருப்பதாக போங்கா கேம்ஸ், StripChat மற்றும் Chaturbate ஆகிய நிறுவனங்கள் தெரிவித்தன. 'அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்' வெம்கேமிங், படிப்பு, குழந்தை பராமரிப்பு என அனைத்து வேலைகளுக்கும் ஈடுகொடுக்க, அதிகாலை 05:00 மணிக்கே கண் விழிக்க வேண்டியிருந்தது. இந்த வேலைக்கு வந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு முதல் சம்பளத்தைப் பெற இசபெல்லா ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கிடைத்தத் தொகையில் ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் ஸ்டுடியோ தங்கள் பங்கைக் கழித்துக் கொண்ட பிறகு, இசபெல்லாவுக்கு வெறும் 174,000 கொலம்பிய பெசோக்கள் (42 டாலர்கள்) மட்டுமே கொடுக்கப்பட்டதாக கூறுகிறார். இது தான் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவானது என்று சொல்லும் இசபெல்லா, ஒப்புக்கொண்டதை விட ஸ்டுடியோ தனக்கு மிகக் குறைந்த சதவீதத்தையே கொடுத்ததாகவும், தனது வருவாயில் பெரும்பகுதியை ஸ்டுடியோ திருடிவிட்டதாகவும் அவர் நம்புகிறார். அந்தப் பணம் மிகக் குறைவு என்று கூறும் அவர், கிடைத்த அந்தப் பணத்தில் பால் மற்றும் டயப்பர்கள் வாங்கியதாக சொல்கிறார். "அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்" என்று கூறுகிறார். தற்போதும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் இசபெல்லா, வெப்கேம் மாடலாக சில மாதங்கள் மட்டுமே பணியாற்றிய பிறகு, அதிலிருந்து விலகிவிட்டார். இளம் வயதில் தன்னை இப்படி நடத்தியதால் மன உளைச்சலுக்கு உள்ளான இசபெல்லா, அதிர்ந்துவிட்டார். தொடர்ந்து அழுது கொண்டே இருந்த மகளின் மனநிலையை சரிபடுத்த, அவருடைய அம்மா, ஒரு உளவியலாளரிடம் அழைத்துச் சென்றார். இசபெல்லாவும், அவர் பணியாற்றிய ஸ்டுடியோவின் வேறு ஆறு முன்னாள் ஊழியர்களும் சேர்ந்து அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். சிறார்களைச் சுரண்டுதல், தொழிலாளர் சுரண்டல் மற்றும் பொருளாதார துஷ்பிரயோகம் செய்ததாக ஸ்டுடியோ மீது அனைவரும் கூட்டாக குற்றம் சாட்டியுள்ளனர். "18க்கும் குறைவான வயதில் நான் இருந்தபோது எடுக்கப்பட்ட எனது வீடியோக்கள் தற்போதும் இணையத்தில் உள்ளன," என்று அவர் கூறுகிறார், அவற்றை அகற்ற மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியடையும்போது மிகவும் சக்தியற்றவளாக உணர்வதாக அவர் கூறுகிறார். "இது என்னை மிகவும் பாதித்துள்ளது, இனி அதைப் பற்றி நினைக்கவே எனக்கு விருப்பமில்லை" என்று இசபெல்லா கூறுகிறார். வூடி மோரிஸின் கூடுதல் செய்தியுடன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr79288vlz1o

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் - அரசாங்கம் அனுமதி

2 months 4 weeks ago
பெருந்தோட்ட தொழிலாளர்களின் காணி, வீட்டுரிமையை உறுதிப்படுத்துங்கள் : முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் அவசியம் - ஐ.நா. உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு 27 JUN, 2025 | 10:36 AM (நா.தனுஜா) செம்மணியானது கடந்தகால காயங்கள் மக்கள் மத்தியில் இன்னமும் ஆறாமல் இருக்கிறது என்பதை உணர்த்தியதாகவும் கடந்தகால பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவது அரசுக்கு சவாலான விடயமாக அமையும் எனவும் தனது விஜயத்தின் நிறைவு நாளில் சுட்டிக்காட்டிய ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், பாதிப்பு இடம்பெற்றுள்ளது என்பதை ஏற்பதும், உண்மைகளை வெளிப்படுத்துவதுமே காயங்களை ஆற்றுவதற்கும், நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்குமான ஒரே வழி என தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தை உடன் நீக்குங்கள் எனவும் உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் விசாரணைகளில் முன்னேற்றம் தேவை எனவும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் காணி, வீட்டுரிமையை உறுதிப்படுத்துங்கள் எனவும் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் அவசியம் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், வலியுறுத்தியுள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை (24) நாட்டுக்கு வருகைதந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், விஜயத்தின் நிறைவு நாளான நேற்று வியாழக்கிழமை (26) மாலை ஐந்தரை மணியளவில் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தனது சந்திப்புகள், ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் வலியுறுத்தல்கள் என்பன தொடர்பில் தெளிவுப்படுத்தினார். அதன்படி இலங்கை விஜயத்துக்கும், சகல தரப்புகளுடான சந்திப்புக்களுக்கும் அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த உயர்ஸ்தானிகர், தனது இவ்விஜயம் இலங்கையின் சமகால மனித உரிமைகள் நிலைவரத்தையும், கையாள்வதற்கு கடினமான பிரச்சினைகளையும் புரிந்துக்கொள்வதற்கு உதவியதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக மிகமோசமான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவற்றில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களின் கதைகள் தனக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்ட அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி மனிதப்புதைகுழியானது கடந்தகாலக் காயங்கள் இன்னமும் பலர் மத்தியில் ஆறாமல் இருப்பதை உணர்த்தியது என்றார். 'வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் உண்மையைக் கோருகின்றனர். உதாரணமாக 1989 ஆம் ஆண்டு காணாமல்போன தனது கணவனைத்தேடி இன்றளவிலும் நகரத்துக்குச் சென்றுவரும் ஒரு பெண்ணின் கதையை குறிப்பிட முடியும். இவ்விடயத்தில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகத்தினரின் கண்ணீர் ஒன்றுதான்' எனவும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார். அதேவேளை தனது யாழ் விஜயத்தின்போது நினைவுக்கூரலுக்கான இடமளிக்கப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிந்ததுடன், அது வரவேற்கத்தக்க விடயமாகும் எனக் கூறிய உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், இருப்பினும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான கண்காணிப்புகள் தொடர்வதாகவும் சமூகத்தின் முக்கிய பங்காளியான சிவில் செயற்பாட்;டாளர்கள் மீதான கண்காணிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தினார். அதேபோன்று நாட்டின் சகல மக்களுக்கும் சம அங்கீகாரமளிப்போம் என்ற ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது எனினும் கடந்தகால பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவது என்பது அரசுக்கு சவாலானதொரு விடயமாகவே இருக்கும் எனவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார். 'பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களை ஆற்றுவதற்கும், அவர்களை அதிலிருந்து மீட்பதற்கும் அவர்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள் என்பதை ஏற்றுக்கொள்வதும் உண்மைகளை வெளிப்படுத்துவதும் இன்றியமையாததாகும். அதனை முன்னிறுத்திய நடவடிக்கைகள் சர்வதேச ஆதரவுடனான உள்ளகப்பொறிமுறை ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும். 'உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் அடையப்பட வேண்டும்.அத்தகைய முன்னேற்றத்தின் ஊடாகவே பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும்' எனவும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் சுட்டிக்காட்டினார். அடுத்ததாக இலங்கையில் சித்திரவதைகளுக்கு உட்படுத்தல் சட்டவிரோதமானதே என்ற போதிலும் சித்திரவதைகள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ந்து பதிவாகி வருவதாக விசனத்தை வெளிப்படுத்திய அவர், இதுகுறித்து பொலிஸார் கவனம் செலுத்த வேண்டும் என்றார். அத்தோடு பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புக்களை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னேற்றகரமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது எனவும் உயர்ஸ்தானிகர் பாராட்டுத்தெரிவித்தார். மேலும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், அச்சட்டம் நீக்கப்படும் வரை அதன் பிரயோகம் இடைநிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்திய உயர்ஸ்தானிகர், பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். 'கடந்த பொதுத்தேர்தலில் 22 பெண் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.இது கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றகரமானதும், வரவேற்கத்தக்கதுமான விடயமாகும்.இருப்பினும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும்.அதேபோன்று தொழில் வாய்ப்புகளில் பாலின சமத்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்' என்று வலியுறுத்திய வோல்கர் டேர்க், முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு அதனை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என்றார். 'பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி,வீடு, மற்றும் சம்பளம் உள்ளிட்ட உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார். 'மனித உரிமைகளை மேம்படுத்துவதில் சர்வமத தலைவர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.அதன்படி மதத்தலைவர்களுடனான சந்திப்பின் போது இவ்விடயத்தில் அவர்கள் தமது ஆற்றலை பயன்படுத்த வேண்டும் எனவும் அது நம்பிக்கையையும், நல்லிணக்கத்தையும் கட்டியழுப்புவதற்கு அவசியமென எடுத்துரைத்தேன். உலகளாவிய ரீதியில் மனித உரிமை மீறல்கள் சகஜமாகிவரும் தற்போதைய சூழ்நிலையில் நம்பிக்கையை மிளிரச்செய்வதற்கான முன்னுதாரணமாக திகழக்கூடிய வாய்ப்பு இலங்கைக்கு உண்டு' எனவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/218575

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால் ட்ரம்பின் பெயர் பரிந்துரை!

2 months 4 weeks ago
கூட்டில‌ போய் Pic upload எழுதுங்கோ இந்த‌ இணைய‌ம் வ‌ரும் , உங்க‌ட‌ கைபேடியில் இருக்கும் ப‌ட‌மோ அல்ல‌து கொம்பியூட்ட‌ரில் இருக்கும் ப‌ட‌த்தை தெரிவு செய்துவிட்டு Direct link கொப்பி ப‌ண்ணி யாழில் இணைத்தால் ப‌ட‌ம் தெரியும் புல‌வ‌ர் அண்ணா , முய‌ற்ச்சி செய்து பாருங்கோ ச‌ரி வ‌ரும்👍...................

இலங்கையில் காணாமல்போனவர்களிற்கான நீதிக்கு சர்வதேச சுயாதீன விசாரணை அவசியம் - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்

2 months 4 weeks ago
27 JUN, 2025 | 10:28 AM இலங்கையில் காணாமல்போனவர்களிற்கான நீதி ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையையும் பொறுப்புக்கூறலையும் கோருகின்றது என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அட்டூழியங்களை செம்மணியில் உள்ள புதைகுழிகள் வேதனையுடன் நினைவூட்டுகின்றன. நாம் உண்மையிலிருந்து விலகிச் செல்ல முடியாது. காணாமல் போனவர்களுக்கான நீதி ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணையையும் பொறுப்புக்கூறலையும் கோருகிறது. https://www.virakesari.lk/article/218596

பல்லாண்டு பல்லாண்டு - சுப.சோமசுந்தரம்

2 months 4 weeks ago
சிறந்த முன்னுதாரணமான செயல் ஐயா. எனக்குள்ளும் இந்த ஆசை இருக்கிறது, இறந்தபின் எனது உடல் கற்றலுக்கு பயன்படுமா என மருத்துவர்களிடம் அறிந்தபின் உயிலை எழுதுவம்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 4 weeks ago
இஸ்ரேலின் சட்டவிரோத நிறுவனங்களை அமைப்பதற்கு இலங்கை அனுமதிக்கக் கூடாது - உதுமாலெப்பை Mp இலங்கையில் சுற்றுலாத்துறை பிரதேசங்களில் இஸ்ரேலின் சட்டவிரோத நிறுவனங்களை அமைப்பதற்கு சுற்றுலாத்துறை அமைச்சு அனுமதி வழங்கக் கூடாது - சுற்றுலாத்துறை அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை லங்கையில் சுற்றுலாத்துறை பிரதேசங்களில் இஸ்ரேலின் சட்டவிரோத நிறுவனங்கள் அமைக்கப்படுவதால் சுற்றுலாத்துறை வருமானங்களில் வீழ்ச்சி ஏற்படுவதுடன் அமைதியான சுற்றுலாத்துறை பிரதேசங்களில் பொதுமக்கள் அச்சம் அடையும் நிலைமையும் ஏற்பட்டு வருகின்றன. எனவே இவ்வாறான செயற்பாடுகளுக்கு இனிமேல் சுற்றுலாத்துறை அமைச்சு அனுமதி வழங்கக் கூடாது. அம்பாறை மாவட்டத்தில் அருகம்பே பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் சட்டவிரோத நிறுவனத்தை அகற்றி சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யக்கூடிய நடவடிக்கைகளில் சுற்றுலாத்துறை அமைச்சு ஈடுபட வேண்டும் எனவும் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் தான் ஆட்சேபனை தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் பாராளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார். Jaffna Muslimஇஸ்ரேலின் சட்டவிரோத நிறுவனங்களை அமைப்பதற்கு இலங்கை அனுமதி...
Checked
Fri, 09/26/2025 - 03:12
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed