புதிய பதிவுகள்2

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

2 months 4 weeks ago
செம்மணி மனித புதைக்குழி விவகாரம் – மேலும் இரண்டு மனித சிதிலங்கள் கண்டுபிடிப்பு! செம்மணி மனித புதைக்குழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கபட்டிருந்த நிலையில் இன்று(27) இரண்டாவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது இரண்டு மனித சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுகளுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவாதத்திற்கு அமைய நேற்று இரண்டாம் கட்ட அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது. நிலையில் குழந்தையின் மண்டையோட்டுத் தொகுதி உட்பட மூன்று மனித சிதிலங்கள் நேற்றைய தினம் மீட்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் இரண்டாவது நாளாகவும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் மேலும் இரண்டு மனித சிதிலங்களும், ஏனைய சிறு சிறு மனித எச்சங்களும் மீட்கப்பட்டிருந்தன. செம்மணி, சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் கடந்த பெப்ரவரி மாதம் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகுழியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகழ்வுகள் இடம் பெற்றன. மூன்று குழந்தைகளின் மனிதச் சிதிலங்கள் உட்பட 19 மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் புதை குழி மனிதப் புதைகுழியாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. அத்துடன் 45 நாட்களுக்கு இரண்டாம் கட்ட அகழ்வுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. இதன்படி அகழ்வுகளுக்கான செலவீன பாதீடு சமர்ப்பிக்கப் பட்ட நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்ற உத்தரவிற்கு அமைய வியாழக்கிழமை இரண்டாம் கட்ட அகழ்வுகளை முன்னெடுக்கப்பட்டது. இன்றைய தினத்துடன் இதுவரை 24 மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 45 நாட்களுக்கு பாதீட்டு அளவு உள்ளதால் முதல் 15 நாட்களுக்கு அகழ்வு பணிகள் சிறிய இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்து நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437390

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 மாணவர்கள் உயிரிழப்பு!

2 months 4 weeks ago
மத்திய ஆப்பிரிக்க குடியரசில் பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 மாணவர்கள் உயிரிழப்பு! மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரில் பாங்குயில் பாடசாலைக் கட்டிடமொன்று தீப்பிடித்து எரிந்ததில் 29 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 280 பேர் காயம் அடைந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரில் பாங்குயில் உயர்நிலைப் பாடசாலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்தப் பாடசாலையில் இந்த ஆண்டுக்கான இறுதித் பரீட்சைகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று மாணவர்கள் பாடசாலையில் அமர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு குண்டு வெடிப்பது போல பயங்கர சத்தம் கேட்டதனால் பீதியடைந்த மாணவர்கள் அங்கும் இங்குமாக ஓடினர். இதனை தொடர்ந்து பாடசாலை கட்டிடம் தீப்பிடித்து எரிந்ததுள்ளது. இதற்கிடையே தீ விபத்து குறித்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கோர சம்பவத்தில் 29 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 280 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது. https://athavannews.com/2025/1437379

போர்க்குற்றங்கள் தொடர்புடைய பொறுப்புக்கூறல்களுக்கு வழங்கும் நிதியை நிறுத்த அமெரிக்கா முடிவு!

2 months 4 weeks ago
போர்க்குற்றங்கள் தொடர்புடைய பொறுப்புக்கூறல்களுக்கு வழங்கும் நிதியை நிறுத்த அமெரிக்கா முடிவு! adminJune 28, 2025 பல்வேறு நாடுகளில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் தொடர்புடைய பொறுப்புக்கூறல் தொடர்பில் செயற்படுத்தப்பட்டு வந்த சுமார் 24 திட்டங்களுக்காக அமெரிக்க நிதி வழங்கல் நடவடிக்கையை நிறுத்துவதற்கு வெள்ளை மாளிகை பரிந்துரைத்துள்ளது. நிதியுதவியை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ள திட்டங்களில் ஈடுபட்டுள்ள நாடுகளில் இலங்கை, ஈராக், சிரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் அடங்குவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. https://globaltamilnews.net/2025/217444/

எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்

2 months 4 weeks ago
இருக்கட்டும் அவர்கள் அரசியல்வாதிகள் வேண்டாம் அரசியல் வேண்டாம் என்று சொல்லியே அவர்களை வெளியேறுமாறு கோரினர். அர்ச்சுனாவின் தந்தையும் காணாமலாக்கப்பட்டவர. வாழ வேண்டிய குருத்துக்களை, இராணுவத்தோடு சேர்ந்து கலைத்து கலைத்து சுட்டுக்கொன்றவன் டக்கிளஸ். என்னை சுடாதீர்கள், ஒருவேளை நீங்கள் தேடும் ஆள் நானில்லாமல் இருக்கலாம், முதலில் ஒருதடவை என்னை விசாரியுங்கள் என்று தம் உயிரை காக்க கதறியும் பலனில்லாமல் குருவிகளை சுடுவதுபோல் நடுரோட்டில் சுட்டுப்போட்டவன், இராணுவத்தின் பங்கருக்குள் நா...போல பதுங்கியிருந்து செய்த கொலைகள் ஏராளம். அந்த ஜென்மத்தோடு பதவிக்காக பேரம் பேசபோனவர் சிவஞானம். இவர் பெரிய மனிதனா? வயதில் மூத்தவராக இருக்கலாம் ஆனால் பகுத்தறிவு அற்றவர். எங்களுக்கு பதவி வேண்டும் இல்லையென்றால் அங்கை என்ன வாய்ப்பாக்கவோ என்று கேள்வி எழுப்பினாரே அதிலிருந்தே இவரின் அனுபவ முதிர்ச்சி தெரிகிறது? அப்படியானால் தலைமைப்பதவி இல்லாதவர்கள் வாய் பார்க்கிறார்கள் என்று சொல்லி மற்றவர்களை அவமானப்படுத்துகிறாரா இவர்? பதவிக்காக கட்சியில் இருக்கிறார்கள் இல்லையென்றவுடன் கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள் என்று ஏன் மற்றவர்களை ஏளனம் செய்கிறார்கள்? சம்பவத்துக்குப்பின் இவர் நேர்காணலில் கூறியதை கேளுங்கள் மிகுதி விளங்கும். மூப்பும் வயதும் மட்டும் மரியாதைக்குரியவையல்ல. அனுபவம், பொறுப்பு மிக அவசியம் மரியாதையை பெறுவதற்கு.

ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு

2 months 4 weeks ago
நிழற்படங்கள் சிறிலங்கா படைத்துறையில் உறுப்பினராகயிருந்த முஸ்லிம்களின் படிமங்கள் இதில் உள்ளவர்கள் தரைப்படை, காவல்துறை, ஊர்காவல்படை என்று பற்பல படைத்துறைக் கிளைகளில் பணியாற்றி புலிகளுடனான பல்வேறு காலகட்ட மோதல்களில் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் திருமலை மூதூரைச் சேர்ந்தோராவர். இவற்றின் படிமப்புரவு மூதூரைச் சேர்ந்த திரு. இஹ்ஷான் ஜே.எம்.ஐ முகமது என்பவருக்கே சொந்தமானதாகும்.

ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு

2 months 4 weeks ago
நிழற்படங்கள் சிறிலங்கா படைத்துறையில் உறுப்பினராகயிருந்த முஸ்லிம்களின் படிமங்கள் (2023 செப்டெம்பரில் முதற்பக்கத்தில் பதிந்திருந்ததை இங்கு மாற்றுகிறேன்) இதற்குள் ஊர்காவல் படையிலும் சிறப்பு பணிக்கடப் படை (Special Task Force) என்ற சிறப்பு அதிரடிப்படையிலும் உறுப்பினர்களாக இருந்த முஸ்லிம்களில் எனக்குக் கிடைத்த சிலரினது படிமங்களைப் பதிவேற்றியுள்ளேன். சிறப்பு பணிக்கடப் படை என்ற சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த நவாஸ். இவன் புலிகளுடனான சமர் ஒன்றில் கொல்லப்பட்டான். 'இவனது பெயர் றசாக் என்பதாகும். போர்க்காலத்தில் இவன் ஒரு ஊர்காவல்படையினன் ஆவான்.'

ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு

2 months 4 weeks ago
நிழற்படங்கள் சிறிலங்கா படைத்துறையில் உறுப்பினராகயிருந்த முஸ்லிம்களின் படிமங்கள் (2023 செப்டெம்பரில் முதற்பக்கத்தில் பதிந்திருந்ததை இங்கு மாற்றுகிறேன்) தமிழ்நெற்றில் சூலை 5, 2009 அன்று "Eastern armed Muslim groups surrender weapons" என்ற தலைப்பில் வெளியான செய்தியிலிருந்து: 2009 ஜூலை 4 பிற்பகல் 3:00 மணியுடன் முடிவடைந்த சிறிலங்காக் காவல்துறையினரால் விடுக்கப்பட்ட பொது மன்னிப்பின் வழிவகையில் காத்தான்குடி ஜும்மா மீரா மசூதியில் அன்றைய நாள் பிற்பகலில் சில முஸ்லிம் ஆயுததாரிகளால் (ஜிகாதிகள் மற்றும் ஊர்காவல் படையினர்) தம்மிடம் உள்ள சில ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன. அவற்றின் காட்சிகள் சிலவற்றை கீழே இணைத்துள்ளேன். இந்நிகழ்வானது கிழக்கு துணைக் காவல்துறை மா அதிபர் எடிசன் குணதிலக மற்றும் மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. அன்றைய நாள் 16 வகை- 56 தாக்குதல் துமுக்கிகள், ஒரு வக்- 81 துணை இயந்திரச் சுடுகலன், நான்கு .303 துமுக்கிகள், இரண்டு துணை இயந்திரச் சுடுகலன்கள், ஒரு வேட்டைச்சுடுகலன், ஒரு 9 மிமீ கரச்சுடுகலன், 16 கைக்குண்டுகள் மற்றும் பெருமளவு கணைகள் என்பன ஒப்படைக்கப்பட்டன. முஸ்லிம் ஜிஹாதிகள் சுமார் 250 வகை- 56 தாக்குதல் துமுக்கிகளை வைத்திருப்பதாக புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன, அவற்றுள் ஒரு பகுதியே காலக்கெடு முடிவடைந்த நிலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குணதிலக கூறினார். படிமப்புரவு: தமிழ்நெற், சூலை 5, 2009 படிமப்புரவு: army.lk, சூலை 5, 2009 | இவ்வலைத்தளத்திலிருந்து கிடைத்த படிமங்களை "படிம ஆதாரம்" என்ற வகையின் அடிப்படையில் சேர்த்திருக்கிறேனே ஒழிய பரப்புரைக்காகப் பாவிக்கப்படும் சிங்களத் தரைப்படையின் அலுவலசார் வலைத்தளத்தை எவ்வகையிலும் ஒழுங்குமுறையானது என்றெண்ணி அல்ல. முஸ்லிம் ஆயுததாரி ஒருவன் தனது துமுக்கியை ஒப்படைக்கிறான். படிமப்புரவு: சண்டே ரைம்ஸ், சூலை 5, 2009

வான்புலிகளின் வானூர்திகள் | ஆவணம்

2 months 4 weeks ago
வான்புலிகளின் செஸ்னா ஸ்கைமாஸ்ரர் வகை வானூர்தி பற்றிய தகவலை பதிவேற்றியுள்ளேன். மேலும் வான்புலிகளின் வால்கனெர் பி68.ஆர் அல்லது பி.68சியின் படிமங்களையும் பதிவேற்றியுள்ளேன், "வான்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sky Tigers Images" க்குள்.

உள்நாட்டு கண்ணிவெடிகள்

2 months 4 weeks ago
இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையால் உள்நாட்டில் விளைவிக்கப்பட்ட பல்வேறு விதமான கண்ணிவெடிகளின் தகவல் உள்ளது. இந்த திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவகங்கள் | Monuments and Memorials

2 months 4 weeks ago
மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு அவர்களின் கல்லறை 08/02/2005 கருணாவின் தேசவஞ்சக குழுவால் லெப். கேணல் கௌசல்யன் உள்ளிட்ட போராளிகளும் இவருடன் அற்றை நாளில் சுட்டுக்கொல்லப்பட்டு வீரச்சாவடைந்தனர். படிமப்புரவு: Battinews.com

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவகங்கள் | Monuments and Memorials

2 months 4 weeks ago
மட்டு. புதுக்குடியிருப்பு படுகொலை நினைவகம் 1990/09/21 இப்படுகொலையில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் ஈடுபட்டனர். படிமப்புரவு: maddunews மேலுள்ள படிமத்தின் வலது கைப் பக்கத்திலுள்ளது போன்றே இடது கைப் பக்கத்திலும் ஒரு சிட்டியின் படிமம் இருந்தது. | படிமப்புரவு: வேசுபுக்கு . .

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவகங்கள் | Monuments and Memorials

2 months 4 weeks ago
சத்துருக்கொண்டான் படுகொலை நினைவகம் 1990-9-9 அன்று சிங்களப் படைவெறியர்களாலும் முஸ்லீம் ஊர்காவல் படையினராலும் சத்துருக்கொண்டானில் மேற்கொள்ளப்பட்ட கொடூரத் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட 184 தமிழர்களின் நினைவாக மட்டக்களப்பில் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம் படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I படிமப்புரவு: BBC தமிழ்

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவகங்கள் | Monuments and Memorials

2 months 4 weeks ago
கொக்கட்டிச்சோலை இறால் பண்ணை படுகொலை நினைவகம் 1987 அன்று 86 தமிழர்கள் சிங்கள படைவெறியர்களால் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர்,

மருத்துவப் புலிகள் இன் படிமங்கள் | Medical Tigers' Images

2 months 4 weeks ago
ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையில் ஆனையிறவு சமர்க்களத்தில் காயமடைந்த போராளிக்கு முதலுதவி பண்டுவமளிக்கும் மருத்துவப்புலியொருவர் 2000

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவகங்கள் | Monuments and Memorials

2 months 4 weeks ago
திருக்கோவில் காஞ்சூரன்குடா படுகொலை நினைவகம் 2002/10/09 அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கோட்டத்திலுள்ள காஞ்சூரன்குடா பகுதியில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது அதிரடிப்படையினரால் 7 பாடசாலை இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவ்வேழு இளைஞர்களினதும் சடலங்கள் இவ்விடத்தில் புதைக்கப்பட்டுள்ளன.
Checked
Fri, 09/26/2025 - 06:12
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed