2 months 3 weeks ago
ஆகாய கடல் வெளி நடவடிக்கை வீரவணக்க நினைவாலயம் கண்டி வீதி, கொடிகாமம் "எதையும் தாங்கிடும் இதயம் உடையவர் - தமிழர் அதை மறவோம்" - தருமம் ஒருநாள் ஆ.கா.வெ. சமர் புலிகளின் வரலாற்றிலேயே ஒரு கண்திறப்புச் சமராகியது. அன்றைய பின்னடைவின் பாடங்களே பின்னாளைய பல வெற்றிகளுக்கு காரணமாகியது. இந்தச் சமரில் உப்புக்காற்றின் அடிமை விலங்குடைக்க உயிரீந்த 602 தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு யாழில் ஒரு நினைவு மண்டபம் விடுதலைப் புலிகளால் கட்டப்பட்டது. இந்த நினைவு மண்டபத்தின் சுவர்களில்(உள் & வெளி) ஆ.கா.வெ. நடவடிக்கை மாவீரர்களின் திருவுருவப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன, தொகுதிகளாக. இந்நினைவு மண்டபமானது 1993/07/31 அன்று தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் (மாவீரர்) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. கீழ்க்காணும் படிமங்கள் யாவும் அற்றைநாளில் எடுக்கப்பட்டவையாகும். 'தவிபு இன் அப்போதைய படைத்துறை துணைக் கட்டளையாளர் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் கொடியேற்றி வைக்கிறார்' அம்மான் 'பிரிகேடியர் சொர்ணம் அவர்கள் மாவீரர் நினைவுக்கல்வெட்டை திரை நீக்குகிறார்.' 'படிமத்தில் அந்த சுவரில் உள்ள மாவீரர் திருவுருவப்படங்களை கவனிக்குக. இது போன்று துமுக்கிகளை ஏந்திக்கொண்டிருப்பது அந்தக்காலத்து வேங்கைகளின் பாணியாகும்.'
2 months 3 weeks ago
எச்சில் பந்தில் படுவதை அன்மையில் கூட பார்த்தேன் , அப்ப நடுவர்கள் கவனிக்க வில்லையா , இலங்கை வீரர் லசித் மலிங்கா பந்து போடுவதுக்கு முதல் பந்துக்கு முத்தம் கொடுப்பார் , எத்தனை வீரர்களின் எச்சில் அவரின் சொன்டில் பட்டு இருக்கும்.😁..................... டெஸ்ட் விளையாட்டை குறைத்து , இன்னும் கூடுதல் 20ஓவர் போட்டி வைத்தால் கிரிக்கேட் இன்னும் வேகமாக வளரும்👍................ பிரேசில் நாட்டு மகளிர் கூட நல்லா கிரிக்கேட் விளையாடுகினம் , கால்பந்துக்கு பெயர் போன நாட்டில் , கிரிக்கேட் மெது மெதுவாய் வளர்வது வரவேற்க்க தக்கது பெரியப்பு👍................... டெஸ்ட் விளையாட்டு என்றால் ஜரோப்பிரகள் விரும்ப மாட்டினம் , இங்லாந் நாட்டை தவிர , ஜரோப்பாவில் கிட்ட தட்ட எல்லா நாடுகளும் 20 ஓவர் கிரிக்கேட் விளையாட தொடங்கி விட்டினம்................... ஜரோப்பா கப் போட்டி வைத்தால் இங்லாந் மற்ற நாடுகளை வென்று கோப்பைய தூக்கும் , கிரிக்கேட் ஜரோப்பாவில் வளரனும் என்றால் ஜரோப்பா கப் போட்டி 4வருடத்துக்கு ஒருக்கா நடத்தினால் நல்லா இருக்கும்.................... கென்னியா அணிய முந்தி உகன்டா நாடு கிரிக்கேட்டில் வளந்து வரும் என நினைத்து இருப்போமா😮😁💪........................ டெஸ்ட் போட்டிக்கு வெஸ்சின்டீசில் வரவேற்ப்பு சுத்தமாய் இல்லை , அங்கு 20ஓவர் விளையாட்டுக்கு தான் நல்ல வரவேற்ப்பு.😁👍............................
2 months 3 weeks ago
தமிழக பள்ளிகளில் 'வாட்டர்பெல் திட்டம்' எவ்வாறு அமலாகும்? மாணவர்கள் தண்ணீர் குடிப்பது ஏன் அவசியம்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி செய்தியாளர் 28 ஜூன் 2025, 10:35 GMT புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர் கோவையிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் அவர். கடந்த மாதத்தில் விடுமுறை நாளாக இருந்த சனிக்கிழமையன்று காலை 6 மணியளவில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்றார். காலையிலிருந்து மாலை வரை தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்தார். மிகவும் சோர்வாக இருந்த அந்த மாணவன், மறுநாள் காலையில் எழவேயில்லை. மயக்கமாக இருந்த அவனை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவன் கோமா நிலைக்குச் சென்று விட்டதாகக் கூறிய மருத்துவர்கள், சிறுவனின் உடலில் நீர்ச்சத்து மிகவும் குறைந்திருந்ததே இதற்குக் காரணமென்று கூறி சிகிச்சை மேற்கொண்டனர். இரு வார சிகிச்சைக்குப் பின், மாணவன் நலம் பெற்று வீடு திரும்பினார். மாணவனின் பெற்றோரிடம் பிபிசி தமிழ் பேசிய போது, காலையிலிருந்து மாலை வரை தண்ணீரே குடிக்காமல் விளையாடியதே இதற்குக் காரணமென்று மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்தனர். பொதுவாகவே அந்த மாணவன் மிகவும் குறைவாகவே தண்ணீர் குடித்து வந்ததாக மாணவனின் பெற்றோர் கூறினர். இந்த நிகழ்வு, பள்ளி மாணவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிப்பதன் அவசியத்தை உணர்த்துகிறது. இதற்காகவே, வெளிநாடுகள் பலவற்றிலும் உள்ள 'வாட்டர் பெல்' திட்டத்தை இந்தியாவில் பல மாநிலங்கள் செயல்படுத்தத் தொடங்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் வாட்டர் பெல் திட்டத்தை அமல்படுத்துவதற்காக பள்ளி கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. 'வாட்டர் பெல்' தமிழ்நாட்டில் எவ்வாறு செயல்படுத்தப்படும்? பட மூலாதாரம்,GETTY IMAGES வாட்டர் பெல் திட்டம் பற்றி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதன்படி, அனைத்து மாணவர்களும் தண்ணீருடனோ அல்லது தண்ணீர் இல்லாமலோ பாட்டிலை வீட்டிலிருந்து கொண்டு வர அறிவுறுத்தப்பட வேண்டும். காலைநேர கூட்டத்தின் போது தண்ணீர் குடிப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதற்காக அடிக்கப்படும் பெல்லானது, வழக்கத்தை விட வித்தியாசமானதாக மாணவர்களுக்கு தண்ணீர் குடிப்பதை அறிவுறுத்தும் வகையில் இருக்க வேண்டும். இந்த பெல் சத்தம் கேட்டதும் மாணவர்கள் அவர்களின் தேவைக்கேற்ப தண்ணீர் குடிக்க வேண்டும். வாட்டர் பெல்லுக்கான நேரமானது காலை 11 மணி , பகல் 1 மணி, பிற்பகல் 3 மணி என பள்ளிகளின் வசதிக்கேற்ப இருக்கலாம். இந்த நேரத்தில் மாணவர்கள் வகுப்பை விட்டு வெளியேற அனுமதிக்காமல், வகுப்புச் சூழல் பாதிக்காமலும் 2 முதல் 3 நிமிடங்கள் தண்ணீர் குடிக்க ஆசிரியர்கள் அனுமதிக்க வேண்டும் தண்ணீர் குடிக்க அனுமதிப்பதும் தனிமனித உரிமையும்! பட மூலாதாரம்,DR.SRINIVASAN படக்குறிப்பு,மருத்துவர் சீனிவாசன், குழந்தைகள் சிகிச்சை நிபுணர் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தேவையான அளவுக்கு தண்ணீர் குடிப்பது அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்காற்றுகிறது என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் சீனிவாசன். ''பள்ளிக் குழந்தைகள் நிறைய விளையாடுவதால் வியர்வை அதிகமாக வெளியேறும். அதனால் மற்றவர்களை விட அவர்கள்தான் அதிகளவில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையான அளவுக்கு தண்ணீர் குடிக்காத பட்சத்தில் நீர்ச்சத்து இழப்புடன் உடல் சோர்வு, மனச்சோர்வு ஏற்படும். கவனமின்மை அதிகரிக்கும். அடிக்கடி நீர்ச்சத்து குறையும் போது, சிறுநீர் தொற்று வரும். பதின்பருவத்தினருக்கு முகப்பருக்கள் தோன்றும்.'' என்கிறார் மருத்துவர் சீனிவாசன். இன்றைய காலகட்டத்தில், துரித உணவு முறைகளாலும், தண்ணீர் தேவையான அளவுக்குக் குடிக்காத காரணத்தாலும் ஏராளமான குழந்தைகள், மலச்சிக்கலை சந்திப்பதாக கூறும் மருத்துவர் சீனிவாசன், நமது உடலில் ஏற்கெனவே உள்ள நீர்ச்சத்தைப் பராமரிக்கவும், உடல் செயல்பாட்டுக்கேற்பவும் அனைவரும் குறிப்பாக குழந்தைகள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டுமென்கிறார். பட மூலாதாரம்,DR.DURAIKANNAN படக்குறிப்பு,மருத்துவர் துரைக்கண்ணன், ஊட்டச்சத்து நிபுணர் பொதுவாக நீரிழப்பு (Dehydration) அதிக வியர்வை, விளையாட்டு போன்ற அதிகமான உடல் செயல்பாடு (Activities), அதிக வெப்பம் ஆகியவற்றால் ஏற்படும் என்று விளக்கும் குழந்தைகள் நலம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் துரைக்கண்ணன், நீரிழப்பால் உடலின் சமநிலை பாதிக்கும் (electrolyte imbalance) என்கிறார். உடலில் நீர்ச்சத்து சரியாக இருந்தால்தான் எல்லா வயதினருக்குமே மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் சரியாக இருக்கும். ''குழந்தைகளுக்கு முக்கியமாக பதின் பருவத்தினருக்கு உயரம், எடை இரண்டுமே வேகமாக அதிகரிக்கும் என்பதால் உடலுக்கு நிறைய ஆற்றல் தேவைப்படும். அதற்கு நீர்ச்சத்து மிக முக்கியம். குழந்தையின் உடல் மற்றும் வளர்ச்சிக்கேற்ப தாகம் ஏற்படும். அதற்குரிய அளவில் கட்டாயம் தண்ணீர் குடிக்க வேண்டும். சமவெளிகளில் ஒவ்வொரு மாணவனும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திலிருந்து அதிகபட்சமாக 3 மணி நேரத்துக்கு ஒரு முறையாவது தண்ணீர் குடிக்க வேண்டும்.'' என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் துரைக்கண்ணன். நீர்ச்சத்து குறைவதால் வரும் பாதிப்புகள் பட மூலாதாரம்,GETTY IMAGES உடலில் நீர்ச்சத்து குறையும் போது, நமது உடலின் இயக்கத்தில் முக்கியப் பங்காற்றும் எலக்ட்ரோலைட் (Electrolytes) சமநிலை இல்லாமல் போக வாய்ப்புள்ளது என்று கூறும் மருத்துவர் சீனிவாசன், அதனால் உடலில் ரத்த ஓட்டம் குறையவும். சில நேரங்களில் ரத்தப்போக்கு (Bleeding) ஏற்படவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கிறார். உடலுக்குத் தேவையான பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்களும் குறையுமென்றும் அவர் எச்சரிக்கிறார். ''ஒருவருக்கு நீர்ச்சத்து முற்றிலும் குறையும் பட்சத்தில் சிறுநீரகம் செயல்பாட்டை நிறுத்திவிடும். தண்ணீர் குடிக்காமலே வெகுநேரம் விளையாடும் போது தசைப்பிடிப்பு (cramps) ஏற்படும். தொடர்ச்சியாக இந்த பாதிப்பு ஏற்படும்போது, மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் பள்ளிகளில் 'வாட்டர் பெல்' வைப்பது மிகவும் நல்ல திட்டம் என்பதோடு மிகவும் அவசியமானதும் கூட.'' என்கிறார் மருத்துவர் சீனிவாசன். ஒரே வயதுடைய மாணவர்களிடையே உயரம், எடை போன்றவற்றில் நிறைய மாறுபாடு இருக்கும் நிலையில், 'எல்லோரும் சராசரியாக இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்' என்ற கருத்து சரியானதுதானா என்ற கேள்வியும் பலரிடமும் எழுப்பப்படுகிறது. இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய ஊட்டச்சத்து நிபுணர் துரைக்கண்ணன், சராசரியாக ஒவ்வொருவரும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டுமென்றால், மாணவர்களின் செயல்பாட்டுக்கேற்ப இந்த அளவு மாறுபடும் என்றார். உயரம், எடையை விட பாடம் படிப்பது, பாட்டுப்பாடுவது, விளையாடுவது என அந்தந்த நேரத்தின் செயல்பாட்டின் அளவைக் கணக்கில் கொண்டே தண்ணீர் குடிக்க வேண்டுமென்பது அவரின் கருத்து. இந்த அளவு குறையும்போது, அவர்களால் பாடங்களைச் சரியாகக் கவனிக்க முடியாது; செயல்பாடுகளிலும் சுணக்கம் ஏற்படும் என்கிறார் அவர். கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப்பகுதிகளிலும், ஒரு நாளுக்கு இதே அளவு தண்ணீர் குடிக்க வேண்டுமா என்ற சந்தேகமும் பலருக்கு எழுகிறது. இதைப் பற்றி விளக்கும் மருத்துவர் சீனிவாசன், மலைப்பகுதியில் வியர்வை வராது என்பதால் அங்கே தண்ணீரின் தேவை குறைவாக இருக்கும் என்கிறார். அதேநேரத்தில் அங்கேயும் உடல் உழைப்பு இருப்பவர்கள் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்துகிறார். ஆனால் மலைப்பகுதிகளில் 'வாட்டர் பெல்' வைத்து, தண்ணீர் குடிக்க நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் துரைக்கண்ணன். ''எங்கெங்கே காற்றுப்போக்கு குறைவாயிருக்கிறதோ, வெப்பம் அதிகமாகியிருக்கிறதோ அங்கெல்லாம் தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும். தமிழகத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு தளத்திலும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வைக்கப்படுகிறது. ஆனால் அரசுப் பள்ளிகளில் இந்த வசதியை இன்னும் மேம்படுத்த வேண்டியுள்ளது.'' என்கிறார் அவர். ''சிறுநீர் கழிக்கவும் அனுமதி அளிப்பது அவசியம்'' பட மூலாதாரம்,GETTY IMAGES அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 'வாட்டர் பெல்' வைப்பது நல்ல திட்டம் என்றாலும், தண்ணீர் குடிக்க அனுமதிக்கும் அதே நேரத்தில் சிறுநீர் கழிக்கவும் போதிய கால இடைவெளியில் அவகாசம் வழங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறார் குழந்தைகள் நல மருத்துவர் சீனிவாசன். அதற்கேற்ப கழிப்பறை வசதியையும், சுகாதாரத்தையும் பள்ளி நிர்வாகங்கள் பேணவேண்டியது அவசியம் என்கிறார் அவர். இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய மருத்துவர் சீனிவாசன், ''பள்ளிக்குழந்தைகளை தண்ணீர் குடிக்க அனுமதித்தால் மட்டும் போதாது. சிறுநீர் கழிக்க அனுமதி கேட்டால் ஆசிரியர்கள் திட்டுவார்கள் என்றே பல குழந்தைகள் தண்ணீர் குடிப்பதில்லை. இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண் குழந்தைகள். பெரும்பாலான மாணவிகள், பள்ளிகளில் சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்கும் பொருட்டே தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கின்றனர். இதனால் அதிகளவில் சிறுநீர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஒவ்வொரு குழந்தையும் ஒரு நாளுக்கு 5 அல்லது 6 முறை சிறுநீர் கழிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.'' என்கிறார். "குளிர் பானங்கள் தண்ணீருக்கு மாற்று அல்ல" பட மூலாதாரம்,GETTY IMAGES தண்ணீருக்குப் பதிலாக குளிர்பானங்கள் (aerated drinks), உற்சாக பானங்கள் குடிப்பது கூடுதல் ஆபத்துகளை விளைவிக்கும் என்கிறார். ''மாணவர்கள் இதுபோன்ற பானங்களை தொடர்ந்து குடிக்கும்போது, முதலில் உடல் பருமன் (obesity) ஏற்படும். அதன் தொடர்ச்சியாக சிறுவயதிலேயே நீரிழிவு பாதிப்பும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதனால் தாகத்துக்கு எதையாவது குடிக்க வேண்டுமென்று இத்தகைய பானங்களைக் குடிக்காமல் பாதுகாப்பான, சுத்தமான குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும். இந்த விஷயத்தில் பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் என 3 தரப்பினருக்கும் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்,'' என்கிறார் மருத்துவர் துரைக்கண்ணன். தமிழகத்திலுள்ள 55 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 63 லட்சம் மாணவர்களும், 14 ஆயிரம் தனியார் பள்ளிகளில் 68 லட்சம் மாணவர்களும் என மொத்தம் ஒரு கோடியே 30 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிப்பதாகத் தகவல் தெரிவிக்கிறார் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார். ''தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகள் அனைத்திலும் குழந்தைகளின் பாதுகாப்பு, ஆரோக்கியம் சார்ந்து பலவிதமான அறிவுறுத்தல்களை சங்கம் வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாதுகாக்கப்பட்ட குடிநீர், தேவையான அளவு கழிப்பிடம் போன்றவை இருப்பதை உறுதி செய்ய வலியுறுத்தி வருகிறோம்.'' என்று நந்த குமார் கூறினார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9w184w2vg2o
2 months 3 weeks ago
செம்மணி தமிழர் புதைகுழிகள் மனிதப்பேரவலத்தின் உச்சம்: சீமான்! 28 JUN, 2025 | 12:12 PM செம்மணி தமிழர் புதைகுழிகள் மனிதப்பேரவலத்தின் உச்சம்; சிங்கள இனவெறியர்களின் தமிழின அழிப்புக்கான மற்றுமொரு வரலாற்றுச் சான்று! உலக நாடுகள் இப்போதாவது மௌனம் கலைக்குமா? உரிய நீதியைப் பெற்றுத் தருமா? என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:- ஈழத்தாயகத்தின் வடக்குப் பகுதியில் யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துபாத்தி இடுகாடு அருகே அண்மையில் குழந்தை உட்பட 5 தமிழர்களின் எலும்புக் குவியல்கள் கண்டறியப்பட்ட மனித புதைகுழி பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவலியையும் தருகிறது. 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 அன்று சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிரிஷாந்தி தேர்வெழுதிவிட்டு வீடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் காவலரணில் இருந்த 11 சிங்கள இனவெறி ராணுவத்தினரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். அவரைத் தேடிச்சென்ற தாய் ராசம்மா, தம்பி பிரணவன், குடும்ப நண்பர் சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோரும் கொல்லப்பட்டு நால்வரின் உடலும் அடுத்தநாள் வயல்வெளியில் புதையுண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஈழத்தமிழ் மக்களின் இதயத்தை நொறுக்கிய இக்கொடூர நிகழ்வால், பெரும் மனக்கொந்தளிப்புடன் வீதிகளில் இறங்கி தமிழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பன்னாட்டு அமைப்புகளும், மகளிர் அமைப்புகளும் இலங்கை இனவெறி அரசுக்குக் கொடுத்த அழுத்தம் காரணமாக 7 இராணுவ வீரர்களும், 2 காவலர்களும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர். கிருஷாந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனையை எதிர்கொண்ட இராணுவ வீரர்களில் ஒருவரான சோமரத்ன ராஜபக்சே இலங்கை நீதிமன்றத்தில் துணிச்சலுடன் அளித்த வாக்குமூலத்தின் மூலமாகவே முதன் முதலாக செம்மணி மனித புதைகுழிகள் வெளிச்சத்திற்கு வந்தன. அவரது வாக்குமூலத்தின் படி 1995-96 ஆம் ஆண்டுகளில் இலங்கை ராணுவத்தினரால் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் தம்முடைய உயர் அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாகவும், பத்திற்கும் மேற்பட்ட புதைகுழிகளைத் தம்மால் அடையாளம் காட்ட முடியும் என்றும் தெரிவித்திருந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடு காரணமாக அவர் அடையாளம் காட்டிய இடங்கள் சிலவற்றில் கொல்லப்பட்ட தமிழர்களின் எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன. ஆனால், வழக்கம்போல இலங்கை இனவெறி அரசு புதைகுழிகள் அனைத்தையும் முழுமையாகத் தோண்டி விசாரணை நடத்தாமல் கிடப்பில் போட்டது. செம்மணி மனித புதைகுழிகளில் ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் நிலையில் ஒரு சிலரின் உடல்களே தோண்டி எடுக்கப்பட்டன. அவற்றில் சில உடல்கள் அடையாளம் காணப்பட்டன. ஆனால், அதற்கான விசாரணையும்கூட முழுமையாக நிறைவடையவில்லை. குற்றஞ்சாட்டப்பட்ட சிங்கள இனவெறி ராணுவ அதிகாரிகளுக்கும் எந்தத் தண்டனையும் வழங்கப்படவுமில்லை. அவ்வப்போது புதைகுழிகள் தோண்டப்படுவதும், விசாரணை நடைபெறுவதும், சில நாட்கள் ஊடகங்கள் அவை குறித்து பரபரப்பாகப் பேசப்பட்ட பிறகு அவ்வழக்குகளும், விசாரணைகளும் நீர்த்துப்போவதும் வழக்கமான ஒன்றாகிப்போனதுதான் தமிழினத்திற்கு நேர்ந்த பேரவலம். கொல்லப்பட்டவர்கள் யார், யார்? ஏன் கொல்லப்பட்டார்கள்? எப்போது கொல்லப்பட்டார்கள்? எப்படிக் கொல்லப்பட்டார்கள்? யாரால் கொல்லப்பட்டார்கள்? என்று எந்த விசாரணையும் இல்லாமல், எந்த நீதியும் கிடைக்காமல் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் இனத்தில் பிறந்த ஒற்றைக்காரணத்திற்காகக் கொல்லப்பட்ட பல நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்களின் உடல்கள், செம்மணி புதைகுழிகளில் இன்றளவும் புதைந்து கிடக்கின்றன. மரிக்கும் முன் எழுப்பிய தங்களது இறுதி மரண ஓலங்களுக்கான நீதியானது, தமிழனாய் மரணித்த தங்களின் இறுதி பார்வைக்கான நியாயமானது, புதைக்கப்பட்ட தங்கள் எலும்புகள் முழுவதுமாய் அரிக்கும் முன்பாவது கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்துடன் மண்ணுக்கடியில், ஈழத்தாய்மடியில் அவ்வுடல்கள் காத்து கிடக்கின்றன. செம்மணி மட்டுமல்ல ஈழத்தாயகம் முழுவதுமே சிங்கள இனவெறி ராணுவத்தாலும், இனவாத இலங்கை அரசின் பயங்கரவாதத்தாலும் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் புதைகுழிகள் நிரம்பியுள்ளன. இன்றைக்கும் ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் தேடி அலைகின்ற காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவினர்களான, பல்லாயிரம் தமிழர்களில் பெரும்பான்மையோர் இப்படி சிங்கள இனவெறி ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்கள்தான் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத துயரம் தோய்ந்த உண்மையாகும். 2009 ஆம் ஆண்டு உலக நாடுகளின் கண் முன்னே 2 இலட்சம் தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான முறையான விசாரணையையோ, உரிய நீதியையோ பெற முடியாமல், பன்னாட்டு அவைகளில் முட்டி மோதி முற்றாகச் சோர்ந்து போயுள்ளது தமிழினம். ஈழத்தாயக விடுதலைத்தான் பெறமுடியவில்லை குறைந்தபட்சம் இனப்படுகொலை செய்யப்பட்ட நீதியைக்கூடத் தமிழினத்தால் பெறமுடியவில்லை என்பதுதான் வரலாற்றுப்பெருந்துயரம். 2 இலட்சம் தமிழர்களின் இனப்படுகொலைக்கான நீதி விசாரணையையே பெற முடியாமல், அரசியல் அதிகாரம் ஏதுமற்றுத் தவித்துப்போயுள்ள தமிழினம், யாருக்கும் தெரியாமல் கொன்று புதைக்கப்பட்ட பல்லாயிரம் தமிழ் மக்களுக்கான நீதியை எப்படிப் பெறப்போகிறோம்? என்று தெரியாமல் கையறு நிலையில் தவித்து நிற்கும் நிலைதான் மற்றுமொரு பெருங்கொடுமையாகும். இந்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக யாழ்ப்பாணம் அருகே அரியாலை – சிந்துப்பாத்தி பகுதியிலிருந்த புதைகுழியிலிருந்து சிறு குழந்தை உட்படக் கொல்லப்பட்ட 5 தமிழர் உடல்களின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டது உலகத் தமிழர்களிடம் மிகப்பெரும் அதிர்வினை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ஈழத்தாயக மக்கள் முன்னெடுத்த ‘அணையா தீபம்’ தொடர்ப்போராட்டத்தின் விளைவாக, யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் அவர்கள், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழிகளை நேரில் கண்டு விசாரணை மேற்கொண்டது தமிழ் மக்களிடையே புதிய நம்பிக்கையைத் துளிர்விடச் செய்கிறது. செம்மணி மனித புதைகுழிகள் என்பது இனவெறி இலங்கை அரசு மேற்கொண்ட கடலளவு தமிழ் இனப்படுகொலைகளில் ஒரு சிறு துளி மட்டுமே; செம்மணி போன்ற ஏராளமான மனித புதைகுழிகள் ஈழத்தாயகம் முழுவதும் விரவிக்கிடக்கின்றன. அவற்றையெல்லாம் தோண்டி எடுத்து முழுமையாக விசாரித்தால் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் எத்தனை பெரிய இனப்படுகொலையை தமிழர்கள் மீது இனவெறி இலங்கை அரசு நிகழ்த்தி வந்திருக்கிறது என்பதை உலக மானுட சமூகம் அறிய முடியும். தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் போட்டு 2009 இல் 2 இலட்சம் தமிழ் மக்களைத் தம்மால் நேரடியாக இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான சுதந்திரமான நீதி விசாரணையையே நடைபெறவிடாமல் முற்று முழுதாக முடக்கியுள்ள இனவெறி இலங்கை அரசு, எவ்வித குற்றச்சாட்டும் இன்றி, எவ்வித விசாரணையும் இன்றி, எவ்வித காரணங்களும் இன்றி, எவ்வித ஆதாரங்களும் இன்றி, பல்வேறு காலகட்டங்களில், மறைமுகமாகக் கொன்று புதைக்கப்பட்ட பல்லாயிரம் தமிழர்கள் குறித்தும், அப்படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் குறித்தும் முறையான நீதி விசாரணைக்கு ஒருபோதும் அனுமதியோ, ஒத்துழைப்போ வழங்கப்போவதில்லை. ஆகவே, செம்மணி உட்பட ஈழத்தாயகத்தில் மறைக்கப்பட்டுள்ள அனைத்து மனிதப்புதைகுழிகள் குறித்து பன்னாட்டு சுதந்திர விசாரணை நடத்தத் தேவையான பொறிமுறையை உருவாக்கி, புதைகுழிகளை அகழாய்வு செய்து, இனப்படுகொலை குறித்த விசாரணையை அறிவியல் பூர்வமாக மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டுமென்று ஐ.நா.அவையின் மனித உரிமை ஆணையத்தை வலியுறுத்துகிறேன். அதன் மூலம் மட்டுமே இலங்கை அரசின் சிங்கள இனவெறி எந்த அளவிற்கு உச்சத்தில் இருந்துள்ளது என்பதையும், 2009 ஆம் ஆண்டிற்கு முன்பே தொடர்ச்சியாக, மிகக்கொடூரமாக ஈவு இரக்கமின்றி தமிழர்கள் இலங்கை ஆட்சியாளர்களால் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் உலக நாடுகள் அறிந்துகொள்வதற்கான மறுக்க முடியாத வரலாற்றுச் சான்றாக அவை அமையும். தமிழர்களுக்கான தனித்த இறையாண்மை கொண்ட தமிழீழத் தாயகம் அமைவது ஒன்றே நிலைத்த, சரியான தீர்வாக இருக்க முடியும் என்பதை உலகம் உணர்ந்து கொள்ளவும், ஆதரவளிக்கவும் செம்மணி புதைகுழிகள் குறித்த விசாரணை மிக முக்கிய தொடக்கப் புள்ளியாக அமையும் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறேன். மனித புதைகுழிகள் குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தக்கோரி ஈழத்தமிழ்ச்சொந்தங்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டம் வெல்லட்டும்! ஈழத்தாயகத்தில் நடைபெறும் நீதிக்கான தொடர் போராட்டங்களுக்கு ஆதரவாக உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் உணர்வுப்பூர்வமாக இணைந்து நிற்கின்றோம்! எங்களைக் கொன்று மண்ணில் புதைத்தாய்! – எங்கள் மண்ணைக் கொண்டுபோய் எங்கே புதைப்பாய்? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/218686
2 months 3 weeks ago
இலங்கை பெரிய வெற்றி........................
2 months 3 weeks ago
இல்லை. பதவிமோகத்தில் எதுவும் புரியவில்லை. அன்று முன்னாள் பிரித்தானியப்பிரதமர் பல தடைகளை தாண்டி தமிழ் மக்களின் துயரங்களை கேட்க சொந்த நிலம் இருந்தும் அகதிகளாக வெள்ளத்திலும் ஒழுகும் குடிலிலும் இருந்த மக்களை சந்திக்க வந்தார். அப்பொழுது அந்த மக்களின் பிரதிநிதிகளாக நின்று பேச வேண்டியவர்கள் அங்கு வரவில்லையே, எங்கே ஓடி மறைந்தார்கள்? ஏன்? அப்போது இவர்களின் பொறுப்பு எங்கே போனது? கட்சி எங்கே போனது? இத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டார்களே, அப்போது அந்த மக்களோடு இவர்கள் இல்லாமல் எங்கே போய் ஒளிந்தார்கள்? அப்போ இவர்களுக்கு பொறுப்பு இருக்கவில்லையா அந்த மக்கள் மட்டில்? இந்தபுதைகுழியில் கொலைகாரன் டக்கிளஸால் கொல்லப்பட்டவர்களின் உடல்களும் இருக்க வாய்ப்புண்டு. மக்களை கொன்ற கொலைகாரர்களோடு பதவிக்காக சமரசம், மக்களோடு பொறுப்பு தெரிவிக்கப்போனாராம். பதவிக்காக எந்தப்பேயோடும் கூட்டுசேர்வார்கள். இவர்களாலேயே மக்களுக்கு இந்த நிற்கதி. நாமே தமிழரின் ஏகோபித்த கட்சி, ஆதிக்கட்சி என்று சொன்னவர்கள், இன்று பதவிக்காக கொலைகாரரிடம் இறங்கிபோகிறார்கள். யாருக்காக? தங்களை அழித்தவர்கள் தங்களுக்கு வேண்டாம் என ஒதுக்கும் போது, இவர்களுக்கு என்ன தேவையிருக்கிறது அவர்களுடன் கூட்டுச்சேர? இப்போ வீட்டில் குடியிருப்பது கொலை கொள்ளை செய்பவர்களும், மக்களை வஞ்சிப்பவர்களுமே. அடுத்த தேர்தலில் தமிழரசுக்கட்சி என்று சொல்லிக்கொள்ள சந்தர்ப்பமே இருக்காது, எல்லோரையும் வெளியேற்றிவிடுவார்கள்.
2 months 3 weeks ago
படுகொலை
2 months 3 weeks ago
'வறுமையில் பிறந்த உணவு': அமெரிக்காவில் 'உணவுக்கான ஆஸ்கர்' வென்ற மதுரை தமிழர். நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் பருவங்களுக்கு ஏற்ற வகையில் மாறி வரும் உணவின் சுவைக்கு நடுவே, சமையல் கலைஞர் விஜய் குமார் அமைதியாக ஒரு புரட்சியையே ஏற்படுத்தியிருக்கிறார். நியூயார்க் மாகாணத்தின் சிறந்த சமையல் கலைஞருக்கான ஜேம்ஸ் பியர்ட் விருதைப் பெற்று அசத்தியுள்ளார் விஜய் குமார். தனிநபருக்கான அங்கீகாரம் மட்டுமின்றி கலாசார மாற்றத்தின் புள்ளியாக இந்த விருது கருதப்படுகிறது. உணவுகளின் வரலாறு குறித்து ஆய்வு செய்யும் சென்னையைச் சேர்ந்த ராகேஷ் ரகுநந்தன் இது குறித்து பேசும் போது, "இந்த விருதுகளை ஏற்கனவே வென்ற தமிழ் வம்சாவளியினரான ராகவன் ஐயர் மற்றும் பத்ம லட்சுமியின் வழியே, விஜய் குமாருக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம், உலக சமையல் அரங்கில் வளர்ந்து வரும் தென்னிந்தியர்களின் குரல்களை பிரதிபலிக்கிறது," என்று கூறினார். "இலங்கை தமிழ் மற்றும் இதர தென்னிந்திய உணவு முறைகளுடன், தமிழ் உணவுகள் உலக அரங்கில் உள்ள உணவகங்களில், மேம்படுத்தப்பட்ட, உயர்ந்த மற்றும் கலாசாரத்தில் வேரூன்றிய உணவு வகைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது," என்றும் அவர் கூறினார். தென் தமிழகத்தின் மதுரை மாவட்டம் அரசம்பட்டி என்ற சிறிய விவசாய கிராமத்தில் பிறந்தவர் விஜய் குமார். 44 வயதான அவர் எப்போதும் தன்னுடைய நினைவுகளில் இருந்து உணவை தேர்வு செய்கிறார். காடுகளும், உணவு தேடல்களும், விறகு அடுப்பும், வீட்டிற்கு தேவையான உணவை சமைக்கும் அம்மாவும் பாட்டியுமாக அந்த நினைவு நிரம்பியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cyvjq05drr1o?fbclid=IwY2xjawLMryRleHRuA2FlbQIxMABicmlkETBlSUNTVG96M2YzazZWcXQyAR4nhltk2eBLL5RAfc_kyVpkYhxppK2pVcmfr_54kUfwQK086Kvx2LDCHXGMKw_aem_BmJ_GOXwGjt2Iq6B8kFT2g
2 months 3 weeks ago
'வாட்ஸ்அப் மூலம் போதைப் பொருள் விற்பனை' - குற்றச்சாட்டு நிரூபணமானால் என்ன தண்டனை? பட மூலாதாரம்,KRISHNAKULASEKARAN/INSTAGRAM & ACTORSRIKANTH/INSTAGRAM படக்குறிப்பு, ஸ்ரீகிருஷ்ணா மற்றும் ஸ்ரீகாந்த் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 28 ஜூன் 2025, 05:16 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் போதைப் பொருட்களை நண்பர்களுக்கு அளித்ததாக நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவையும் அதனை விற்பனை செய்த கெவின் என்பவரையும் உரிய ஆதாரங்களுடன் கைது செய்துள்ளதாக, ஜூன் 26 அன்று சென்னை மாநகர காவல்துறை கூறியுள்ளது. வாட்ஸ்ஆப் குழுக்களை உருவாக்கி அதன்மூலம் நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் போதைப் பொருள்களைப் பெற்று வந்ததாகக் காவல்துறை கூறுகிறது. இதனை கிருஷ்ணாவின் வழக்கறிஞர் முற்றிலுமாக மறுத்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் எதிர்க்கட்சியின் தொழில்நுட்பப் பிரிவில் நிர்வாகியாக இருந்ததால் அரசியல் ரீதியான பழிவாங்கலில் கிருஷ்ணா சிக்கியிருப்பதாகவும் கிருஷ்ணாவின் வழக்கறிஞர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். இந்த வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அதிகபட்சம் என்ன தண்டனை கிடைக்கலாம்? வழக்கின் அடுத்தக் கட்டம் என்ன? சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வந்த தனியார் விடுதியில், கடந்த மே 22 ஆம் தேதி இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை விசாரிப்பதற்காக போலீஸார் சென்றபோது, அங்கிருந்தவர்கள் போதைப் பொருளைப் பயன்படுத்தியிருந்ததாக தெரியவந்தது. இந்த வழக்கில் அ.தி.மு.க தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாக இருந்த பிரசாத், நாகேந்திர சேதுபதி, அஜய் வாண்டையார், தனசேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்திற்கு பின்னர் பிரசாத் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கைதானவர்களில் ஒருவரான அ.தி.மு.க பிரமுகர் பிரசாத்துடன் நடிகர் ஸ்ரீகாந்துக்கு தொடர்பு இருப்பதை காவல்துறையினர் அறிந்தனர். இதையடுத்து, ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்பட்டது. ஸ்ரீகாந்திடம் இருந்து போதைப் பொருள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. அதேநேரம், அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, கொகைன் பயன்படுத்தியது தெரியவந்தாக காவல்துறை தெரிவித்தது. ஸ்ரீகாந்துக்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்து, அவருடைய பணப் பரிவர்த்தனை, அவருடைய வீடு முழுமையாக சோதனை செய்யப்பட்டு உரிய ஆதாரங்களுடன் அவரை கைது செய்துள்ளதாக, ஜூன் 24 அன்று காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆப்பிரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஜான், சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப் குமார் ஆகியோர் மூலமாக போதைப் பொருள் விற்பனை நடைபெற்றதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களையும் காவல்துறை கைது செய்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொகைன் வைத்திருந்தது நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. ஸ்ரீகாந்தை தொடர்ந்து ஸ்ரீகிருஷ்ணா கைது விசாரணையின் தொடர்ச்சியாக, 'கழுகு' உள்பட பல்வேறு படங்களில் கதாநாயனாக நடித்த ஸ்ரீகிருஷ்ணா மற்றும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கெவின் ஆகியோரை போலீஸ் கைது செய்துள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் வைத்து நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவிடம் சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமார் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது தனக்கு இதயநோய் உள்ளதாகவும் அதற்கு மருந்து உட்கொள்வதால் கொகைன் எடுத்துக் கொள்ளவே முடியாது எனவும் கிருஷ்ணா கூறியதாக தகவல் வெளியானது. படக்குறிப்பு, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட கெவின் 'வாட்ஸ்ஆப் குழு மூலம் கொகைன் விற்பனை' வாட்ஸ்ஆப் குழு மூலம் நடிகர்கள் ஸ்ரீகிருஷ்ணா, ஸ்ரீகாந்த், போதைப் பொருள் விற்பனையாளர் கெவின் உள்ளிட்டோர் அடங்கிய நெட்வொர்க் இயங்கி வந்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது. "கெவினிடம் இருந்து போதைப் பொருளை வாங்கி கிருஷ்ணா பயன்படுத்தி வந்துள்ளார். அதை நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார்" என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. வாட்ஸ்ஆப் குழுக்களில் இணைந்து போதைப்பொருள் தொடர்பான தகவல் பரிமாற்றம் மற்றும் போதைப்பொருள் உட்கொள்ளும் இடம், நேரம் ஆகியவற்றையும் ஸ்ரீகிருஷ்ணா பகிர்ந்துள்ளதாக காவல்துறை கூறுகிறது. இந்த வழக்கில் ஜெஸ்வர் என்ற கெவினை, வியாழக்கிழமை போலீஸ் கைது செய்தது. அவரிடம் இருந்து அரை கிராம் கொகைன், 10.30 கிராம் மெத்தம்பெட்டமைன், எம்டிஎம்ஏ (MDMA) 2.75 கிராம், ஓஜி கஞ்சா 2.40 கிராம், கஞ்சா 30 கிராம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. சிறிய அளவிலான எடை போடும் இயந்திரம், செல்போன், லேப்டாப் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறை கூறியுள்ளது. இவர்களின் வங்கிப் பணப்பரிவர்த்தனை மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள், விசாரணை சாட்சியங்கள், தொழில்நுட்ப ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கெவின் மற்றும் ஸ்ரீகிருஷ்ணாவை கைது நடவடிக்கைக்கு உட்படுத்தியதாகவும் காவல்துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "எந்த தொடர்பும் இல்லை" - ஸ்ரீகிருஷ்ணா வழக்கறிஞர் ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை ஸ்ரீகிருஷ்ணாவின் வழக்கறிஞர் இன்ஃபேன்ட் தினேஷ் மறுத்துள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், " போதைப் பொருள் வழக்கிற்கும் கிருஷ்ணாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை" என்றார். வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலம் போதைப் பொருள் விற்பனை நடைபெற்றதாக காவல்துறை குறிப்பிடுவது குறித்துக் கேட்டபோது, "கெவின் என்பவருடன் பல ஆண்டுகளுக்கு முன்பு பேசியதை வைத்து போலீஸ் இவ்வாறு கூறுகிறது. அதற்கும் ஜூனில் நடந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை," என்றார். "ஸ்ரீகிருஷ்ணாவிடம் இருந்து எந்தவொரு போதைப்பொருளும் கைப்பற்றப்படவில்லை. ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என வந்துள்ளது" எனவும் இன்ஃபேன்ட் தினேஷ் குறிப்பிட்டார். நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவின் ஜாமீன் மனு திங்கள்கிழமையன்று விசாரணைக்கு வரவுள்ளது. போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பது திரையுலக வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. படக்குறிப்பு, வழக்குக்கும் கிருஷ்ணாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனக் கூறுகிறார் ஶ்ரீ கிருஷ்ணாவின் வழக்கறிஞர் இன்ஃபேன்ட் தினேஷ் "10 ஆண்டு சிறைத் தண்டனை" - வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் "கொகைன் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்ன தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது?" என போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் ஆஜராகும், பா.ஜ.க-வை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜிடம் பிபிசி தமிழ் பேசியது. "கொகைன் வைத்திருந்தது நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. மெத்தம்பெட்டமைன் 50 கிராமுக்கு மேல் இருந்தால் 20 வருட தண்டனை கிடைக்கும்" எனக் கூறுகிறார். என்டிபிஎஸ் (Narcotic Drugs And Psychotropic Substances Act, 1985) சட்டப்பிரிவு 22(a), 22(b), 22(c) என போதைப்பொருளின் தன்மைக்கேற்ப வழக்குப் பதிவு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீகாந்துக்கு தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதா? ஸ்ரீகாந்த் மீதான வழக்கு குறித்து விவரித்த பால்கனகராஜ், "அவர் கையில் கொகைன் வைத்திருந்ததாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படவில்லை. என்டிபிஎஸ் சட்டப் பிரிவு 27 என்பது போதைப் பொருளுக்கு அடிமையானவர்களைப் பற்றிக் கூறுகிறது. அவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது" என்கிறார். "இதன்படி போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை காவல்துறை கைது செய்யக் கூடாது. அவர்களை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். அப்படி அழைத்துச் செல்லப்படுபவர்கள் பத்திரமாக கவனித்துக் கொள்ளப்படுவார்கள் என்று காவல்துறையினர் அவர்களின் பெற்றோர்களுக்கு கடிதம் வழங்கும் நடவடிக்கையும் உள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார். "ஸ்ரீகாந்த் வாங்கிப் பயன்படுத்தியதாக கூறப்பட்டாலும், அவர் வாங்கி யாருக்கும் விற்றதாக தகவல் இல்லை." என்கிறார், பால்கனகராஜ். பிரிவு 64 ஏ என்ன சொல்கிறது? போதைப்பொருள் தடுப்பு (NDBS) சட்டப்பிரிவு 27ன்படி போதைப்பொருள் பயன்படுத்துவது குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். இருப்பினும், போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு பிரிவு 64ஏ படி சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசால் பராமரிக்கப்படும் அல்லது போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற முன் வந்தால் அவர் மீது எந்தப் பிரிவின் கீழும் வழக்குத் தொடரக் கூடாது என சட்டம் கூறுகிறது. அவ்வாறு சிகிச்சை எடுப்பதற்கு முன்வராவிட்டால் அவருக்கு எந்தவித சலுகையும் வழங்கப்பட வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம், கொண்டாட்டங்களுக்கு (Party) அதிகளவில் போதைப் பொருள்களை எடுத்துச் சென்றதாக கண்டறியப்பட்டால் அவருக்கு விலக்கு அளிப்பதற்கு 64 ஏ பிரிவின்படி வாய்ப்புகள் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crl0dpk7j54o
2 months 3 weeks ago
2 months 3 weeks ago
ஈரான் கத்தாரில் அமெரிக்காவின் அல் உதெய்த் விமானத்தளத்தை இலக்குவைத்தது - அந்த தளம் ஏன் முக்கியமானது - மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தளங்கள் வேறு எந்த நாடுகளில் உள்ளன? Published By: RAJEEBAN 24 JUN, 2025 | 12:12 PM cbs news அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் திங்களன்று நடவடிக்கை எடுத்தது. கத்தாரில் உள்ள அமெரிக்க அல் உதெய்த் விமானத் தளத்தை குறிவைத்து குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை ஏவியது. ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகவும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் கத்தார் அரசாங்கம் கூறியதாக அமெரிக்கா மற்றும் கத்தார் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலை "மிகவும் பலவீனமான பதில்" என்று ஜனாதிபதி டிரம்ப் வர்ணித்தார். அதை அமெரிக்கா எதிர்பார்த்தது மற்றும் "மிகவும் திறம்பட எதிர்கொண்டது" என்று அவர் ஒரு சமூக ஊடக இடுகைகளில் கூறினார். மேலும் "எங்களுக்கு முன்கூட்டியே அறிவித்ததற்காகவும், இதனால் யாரும் கொல்லப்படாமலும் யாரும் காயமடையாமலும் இருந்ததற்காக" ஈரானுக்கு நன்றி தெரிவித்தார். வார இறுதியில் மூன்று ஈரானிய அணுசக்தி தளங்களை குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் தனது ஏவுகணைகளை ஏவியது. அல் உதெய்த் தளம் மற்றும் பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கு அது வகிக்கும் பங்கு பற்றி இங்கே மேலும் ஆராயலாம். மத்திய கிழக்கில் மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளம் அல் உதெய்த் விமானத் தளம் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் சமீபத்திய தளமாகும். இது தோஹாவின் தென்மேற்கே பாலைவனத்தில் அமைந்துள்ளது. இது 1996 இல் நிறுவப்பட்டது மற்றும் CENTCOM என்றும் அழைக்கப்படும் அமெரிக்க மத்திய கட்டளையின் முன்னோக்கி தலைமையகமாக செயல்படுகிறது. இது மேற்கில் எகிப்திலிருந்து கிழக்கில் கஜகஸ்தான் வரை நீண்டுள்ள ஒரு பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை வழிநடத்துகிறது. மத்திய கிழக்கில் அமெரிக்கா சுமார் 40000 இராணுவ வீரர்களைக் கொண்டுள்ளது. கத்தாரில் உள்ள இந்த தளத்தில் தற்போது ஆயிரக்கணக்கான அமெரிக்க துருப்புக்கள் உள்ளனர். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்கள் உச்சத்தில் இருந்தபோது அங்கு சுமார் 10000 பேர் இருந்தனர். மே மாதம் ஜனாதிபதி டிரம்ப் அல் உதெய்திற்கு விஜயம் செய்தார். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களின் போது அமெரிக்க இராணுவ சொத்துக்களுக்கு அல் உதெய்த் ஒரு முக்கிய தளமாக இருந்தது. மே மாதத்தில் திரு. டிரம்பின் வருகையை அது வரவேற்றது. அவர் துருப்புக்களிடம் "மோதல்களைத் தொடங்குவது அல்ல அவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதே எனது முன்னுரிமை" என்று கூறினார். "ஆனால் அமெரிக்காவையோ அல்லது எங்கள் கூட்டாளிகளையோ பாதுகாக்க தேவைப்பட்டால் அமெரிக்க சக்தியைப் பயன்படுத்த நான் ஒருபோதும் தயங்க மாட்டேன்". . "நாங்கள் அச்சுறுத்தப்படும்போது அமெரிக்காவின் இராணுவம் அதைப் பற்றி யோசிக்காமலேயே நமது எதிரிகளுக்கு பதிலளிக்கும். எங்களிடம் அபரிமிதமான பலமும் பேரழிவு தரும் சக்தியும் உள்ளது." மத்திய கிழக்கில் உள்ள பிற அமெரிக்க இராணுவ தளங்கள் கத்தாரைத் தவிர அமெரிக்க இராணுவம் பிராந்தியத்தில் உள்ள ஏழு நாடுகளில் தளங்கள் மற்றும் பிற நிறுவல்களைக் கொண்டுள்ளது பஹ்ரைன் பாரசீக வளைகுடா செங்கடல் அரேபிய கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகளை உள்ளடக்கிய அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கடற்படையின் தலைமையகம் பஹ்ரைனில் உள்ளது. 1948 ஆம் ஆண்டு முதல் இந்த தளத்தை அமெரிக்க கடற்படை பயன்படுத்தி வருகிறது. அப்போது இந்த தளம்பிரிட்டனின் கடற்படையால் இயக்கப்பட்டது. பஹ்ரைனில் சுமார் 9000 அமெரிக்க இராணுவ வீரர்கள் உள்ளனர். குவைத் குவைத்தில் பல அமெரிக்க இராணுவ நிறுவல்கள் உள்ளன: காம்ப் அரிஃப்ஜன் தளம் அலி அல் சேலம் விமான தளம் மற்றும் காம்ப் புஹ்ரிங். காம்ப் அரிஃப்ஜன் என்பது அமெரிக்க இராணுவ மையத்தின் முன்னோக்கிய தலைமையகம் ஆகும். தனிமைப்படுத்தப்பட்ட கரடுமுரடான சூழலுக்காக "தி ராக்" என்று அழைக்கப்படும் அலி அல் சேலம் ஈராக் எல்லையிலிருந்து சுமார் 25 மைல் (40 கிலோமீட்டர்) தொலைவில் உள்ளது. ஈராக் போருக்கு முன்னதாக 2002 ஆம் ஆண்டு புஹ்ரிங் நிறுவப்பட்டது மேலும் அமெரிக்க இராணுவ வலைத்தளத்தின்படி ஈராக் மற்றும் சிரியாவில் நிலைநிறுத்தப்படும் அமெரிக்க இராணுவப் பிரிவுகளின் ஒரு நிலைப் புள்ளியாகும். குவைத்தில் சுமார் 13000 அமெரிக்க துருப்புக்கள் உள்ளன அபுதாபி ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகர் அபுதாபியின் தெற்கே அமைந்துள்ள அல் தஃப்ரா விமானத் தளத்தைக் கொண்டுள்ளது. இது பிராந்தியத்தில் முக்கிய முக்கிய நடவடிக்கைகளிற்கு ஆதரவை ஆதரித்து வரும் ஒரு முக்கியமான அமெரிக்க விமானப்படை மையமாகும். இது ஐக்கிய அரபு இராச்சிய விமானப்படையுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. ஐக்கிய அரபு இராச்சியத்தில்சுமார் 3000 அமெரிக்க படையினர் உள்ளனர். ஈராக் ஈராக்கில் உள்ள ஐன் அல் அசாத் விமானப்படை தளத்தில் அமெரிக்கப் படைகள் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஈராக்கிய இராணுவத்தினருக்கும் நேட்டாவின் நடவடிக்கைக்கும் இவர்கள் தங்கள் ஆதரவை வழங்குகின்றனர்.வடக்கு ஈராக்கின் அரை தன்னாட்சி குர்திஸ்தான் பிராந்தியத்தில் அமைந்துள்ள எர்பில் விமானப்படைத் தளம் பயிற்சிப் பயிற்சிகள் மற்றும் போர் பயிற்சிகளை நடத்தும் அமெரிக்க மற்றும் கூட்டணிப் படைகளுக்கான மையமாக செயல்படுகிறது. ஈராக்கில் சுமார் 2500 அமெரிக்க துருப்புக்கள் .உள்ளனர். சவூதி அரேபியாவில் சுமார் 2700 அமெரிக்க துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ள னர்.அவர்களில் பெரும்பாலோர் ரியாத்தின் தெற்கே அமைந்துள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளத்தில் உள்ளனர். ஜோர்தான் ஜோர்தானின் முவாஃபாக் அல் சால்டி விமானப்படைத் தளத்தில் அமெரிக்க விமானப்படை மையத்தின் 323வது விமானப் பயணப் பிரிவை நிலைகொண்டுள்ளது.அம்மானுக்கு வடகிழக்கே சுமார் 60 மைல் (100 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள அஸ்ராக்கில் அமைந்துள்ள இந்த தளத்தில் சுமார் 3800 துருப்புக்கள் உள்ளன. சிரிய எல்லைக்கு அருகிலுள்ள டவர் 22 தளம் உட்பட பல சிறிய அமெரிக்க தளங்களும்இங்கு உள்ளன அங்கு கடந்த ஆண்டு ட்ரோன் தாக்குதலில் மூன்று படையினர் கொல்லப்பட்டனர் இதற்கு ஈரான் ஆதரவு குழுக்களே காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டியது. இஸ்லாமிய அரசு குழுவிற்கு எதிரான சர்வதேச முயற்சிகளின் ஒரு பகுதியாக சிரியாவும் அமெரிக்க துருப்புக்களைக் கொண்டுள்ளது. சிரியாவில் சுமார் இ000 அமெரிக்க துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. வேறு எந்த தளங்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும் தங்களுக்குத் தெரியாது என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் திங்களன்று சிபிஎஸ் செய்திக்குத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/218304
2 months 3 weeks ago
2 months 3 weeks ago
விளையாட்டு மூன்று நாளுடன் முடிவடைந்து விட்டது வெஸ்சின்டீஸ் தேர்வுக்குவுக்கு செவிட்டை பொத்தி போடனும் , டெஸ்ட் விளையாட்டில் நிலைத்து நின்று விளையாடக் கூடிய வீரர்களை தெரிவு செய்யமா , பல புது முக வீரர்களை தெரிவு செய்து படு தோல்வி அடைஞ்சது தான் மிச்சம் வூட் என்ர ஜமேக்கா நாட்டை சேர்ந்த வீரர் டெஸ்ட் விளையாட்டுக்கு தகுதியான வீரர் , அவரை தேர்வுக்குழு ஓரம் கட்டி விட்டது......................
2 months 3 weeks ago
ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டொலர் நட்டமாம். இஸ்ரேல் ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டு... ஈரானிடம் செமத்தியாய் வாங்கிக் கட்டியிருக்கு. நீண்ட வருடங்களின் பின், இந்தப் போரில் தான்... இஸ்ரேல் மக்கள் அகதியாக கூடாரத்தில் வசித்த காட்சியையும் உலகம் பார்த்தது. யாழ். களத்தில் ஒருவர், ஈரானுக்கு... இஸ்ரேலிடம்தான் மருந்து இருக்கு என்று பெரிய அரசியல் அறிவாளி மாதிரி வருசக்கணக்கில் சொல்லிக் கொண்டு திரிந்தார். அதுக்கும்... ஆமாம் போட்டுக் கொண்டு, சிலர் பின்னால் திரிந்தது எல்லாம் உங்களுக்கு நினைவிற்கு வருகின்றதா. 😂
2 months 3 weeks ago
2 months 3 weeks ago
நல்ல விடயம். அப்பாவி மக்கள் நிம்மதி பெருமூச்சு விடட்டும். இஸ்ரேலுக்கு ஈரான் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தின் எதிரொலிதான் இது.
2 months 3 weeks ago
2 months 3 weeks ago
காசாவில் அடுத்த வாரத்திற்குள் போர்நிறுத்தம் எட்டப்படும்! இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், காசாவில் அடுத்த வாரத்திற்குள் போர்நிறுத்தம் எட்டப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இதேவேளை, நேற்றைய தாக்குதலில் 60 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், உதவிப் பொருட்களைத் தேடி பட்டினியால் வாடும் பாலஸ்தீனியர்களை “வேண்டுமென்றே சுட” படையினருக்கு உத்தரவிடப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்களில் வெளியான தகவல்கள், காசாவில் “போர்க்குற்றங்களுக்கு” மேலும் சான்றாகும் என காசாவின் அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. காசா மீதான இஸ்ரேலின் போரில் இதுவரை குறைந்தது 56,331 பேர் கொல்லப்பட்டதுடன் 132,632 பேர் காயமடைந்துள்ளனர் என காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1437424
2 months 3 weeks ago
வாரிசு அரசியலால் வதைபடும் தலைவர்கள்! -சாவித்திரி கண்ணன் குடும்ப வாரிசு அரசியல் வெளிப்பார்வைக்கு வெற்றிகரமாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் புழுத்து நாறி அழுகி, வெளித் தோற்றத்தில் அழகாகத் தோன்றும் பழம் போன்றதே என்பதற்கு தற்போதைய வரலாறே சாட்சியாகும். ஸ்டாலின் – உதயநிதி, ராமதாஸ் – அன்புமணி, வைகோ –துரை வைகோ போன்ற வாரிசு அரசியலின் போதாமைகளும், பரிதாபங்களும் ஒரு அலசல்; கொள்கை, லட்சியம் சார்ந்து அரசியல் வாழ்க்கைக்கு சுயம்புவாக வந்து சாதித்த தலைவர்கள் தங்கள் வாரிசுகளை அரசியலுக்கு தயார்படுத்துவதில்லை. அதை கொள்கை, லட்சியம் கொண்ட அடுத்த தலைமுறைக்கு தானாகவே கையளித்து சென்றுவிடுவார்கள் காந்தி, காமராஜ், மொரர்ஜி தேசாய், அண்ணா, ஜீவா போன்ற தலைவர்கள் தங்கள் வாரிசுகளை தலைவராக்க எண்ணியதில்லை. அப்படி எண்ணாததாலேயே இன்று நாமெல்லாம் அவர்களை இன்று நம் முன்னோடிகளாக எண்ணிப் பெருமிதம் கொள்கிறோம். ஆனால், அரசியலில் வாரிசை அதிகாரப்படுத்த நினைத்தவர்கள் பெரும்பாலும் அவஸ்தைப்படாமல், அவமானம் கொள்ளாமல் இருந்ததில்லை. இந்திராகாந்தி; சஞ்சய்காந்தியை தன் வாரிசாக கொண்டு வந்தார். காங்கிரசின் கொள்கை, கோட்பாடு, லட்சியங்கள் பற்றி ஏதும் அறியாத சஞ்சய்காந்தி காங்கிரசின் மூத்த தலைவர்களை அவமானப்படுத்தினார். அரசாங்க அதிகாரிகளை இஷ்டம் போல ஆட்டுவித்தார். குடும்ப கட்டுப்பாட்டை தீவிரமாக அமல்படுத்தக் கூறி நிர்பந்தித்ததில் கல்யாணம் ஆகாத இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் ஆபரேஷன்கள் செய்யப்பட்டு நாடு அல்லோகலப்பட்டது. இந்திராகாந்தி தன் மகனி கட்டுபடுத்த முடியாமல் திணறினார். இறுதியில் விமான சாகஸத்தில் சஞ்சய்காந்தி மர்ம மரணம் அடைந்தார். கருணாநிதி; தமிழ்நாட்டில் கருணாநிதி முதன்முதலாக தன் மகன் மு.க முத்துவை அரசியல் வாரிசாக்க நினைத்து முதலில் மக்கள் செல்வாக்கை பெற அவரை எம்.ஜி.ஆருக்கு போட்டியாக சினிமாவில் நடிக்க வைத்தார். மு.க.முத்து அரசியல் மேடைகளில் பிரச்சார பாடகராக வளம் வந்தார். ஆயினும் அவரால் அரசியலை உள்வாங்க முடியவில்லை. ஆனால், குடிப்பழக்கம் அவரை உள்வாங்கி வீணாகிப் போனார். அடுத்ததாக மு.க.ஸ்டாலினை வாரிசாக்க படிபடியாய் தயாராக்கினார். எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் ,அமைச்சர், துணை முதல்வர் என தொடர்ந்து வாய்ப்புகள் தந்தார். ஆனபோதிலும், பொது நலன் சார்ந்த நாட்டம், தீமையை எதிர்க்கும் போர்குணம் ஏதுமற்றவராகவே ஸ்டாலின் உருவானார். மகனுக்கு போட்டியாக இருப்பவர்களாகக் கருதியவர்களை கட்சியில் இருந்து வெளியேற்றினார். ஆனால், தான் உயிரோடு இருக்கும் வரையிலும் தன் மகனிடம் பொறுப்பை நம்பி ஒப்படைக்க முடியாதவராகவே கருணாநிதி இருந்தார். இதனால் அப்பாவிற்கும் – பிள்ளைக்கும் பல உள் மோதல்கள் நடந்தன. எனினும், அதிகாரத்தை கடைசி வரை தன்னிடமே வைத்திருந்ததால் மற்றவர்கள் அனுதாபப்படக் கூடிய நிலைமை உருவாகாமல் தப்பித்துக் கொண்டார். மு.க.ஸ்டாலின்; வாரிசு அரசியலால் அதிகாரத்திற்கு வந்த ஸ்டாலின் சுயசிந்தனையோ, ஆளுமைப் பண்போ இல்லாத ஒரு பொம்மை முதலமைச்சர் என்று பெயர் எடுத்துள்ளார். அதிகாரிகளின் விருப்பப்படி ஆட்சி நிர்வாகம் கொண்டு செலுத்தப்படுகிறது. அரசியலில் தலைமைப் பண்பு இல்லாத காரணத்தால் மத்திய பாஜகவிடம் மறைமுகமாக மண்டியிட்டு அவர்களின் மக்கள் விரோத கல்வி கொள்கை, தொழிலாளர் கொள்கை, சுற்றுச் சூழல் கொள்கை, விவசாயக் கொள்கை ஆகியவற்றை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி வருகிறார். இவர் காலத்தில் தான் பாஜக என்ற இந்துத்துவ மதவெறிக் கட்சி தமிழகத்தில் காலூன்றும் வலிமை பெற்றது. சினிமா நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்த தன் மகன் உதயநிதியை இளைஞர் அணித் தலைவராக்கினார். எம்.எல்.ஏ ஆக்கினார்.பிறகு அமைச்சர் ஆக்கிய ஸ்டாலின். அவசரகதியில் துணை முதல்வராகவும் ஆக்கிவிட்டார். நிர்வாகத்தின் அரிச்சுவடி கூட அறிய முடியாதவாராகவே இன்று வரை அதிகாரத்தில் வளைய வருகிறார் உதயநிதி. உதயநிதிக்கு நெருக்கமானவர் என்பதற்காக கல்வித் துறை அமைச்சராக்கப்பட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழியால் கல்வித் துறை சீரழிந்து கொண்டுள்ளது. இவர்களின் நண்பர் வகையறாக்களான சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன், ரித்தீஸ் ஆகியோர் பெரும் கோடீஸ்வரர்களாகி அமலாக்கத் துறையால் தேடப்பட்டனர். பெரியார், அண்ணா, ,திராவிடக இயக்கத்தின் பகுத்தறிவு, சுய மரியாதை, சமூக நீதிக் கோட்பாடு ஆகியவைக் குறித்த அடிப்படை புரிதல்களின்றி தீடீரென்று உச்சத்திற்கு உயர்த்தப்பட்ட உதயநிதி, கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைமை தாங்கும் ஆற்றல் அறவே இல்லாதவராக உள்ளார். இது வரையிலான தமிழக ஆட்சிகளிலேயே மிக மோசமான நிர்வாகத்தை கொண்ட நிர்வாகமாக ஸ்டாலின் – உதயநிதி நிர்வாகம் உள்ளது. டாக்டர் ராமதாஸ்; மிக முற்போக்கானவராகவும், நேர்மையானவராகவும் தோற்றம் காட்டியவர் ராமதாஸ். வன்னிய குல அரசியல் தலைவர்களும், முக்கியஸ்தர்களும் சேர்ந்து இவரை முன்னிறுத்தி தலைவராக்கினார்கள். முதலில், ’தேர்தல் பாதை, திருடர் பாதை’என்றெல்லாம் வசனம் பேசிவிட்டு, பாட்டாளி மக்கள் கட்சியை உருவாக்கி, ’’நானும், என் குடும்பமும் அரசியலில் ஒரு போதும் அதிகார பதவிக்கு வரமாட்டோம்’’ என்றார். பிறகு, தான் இது போலக் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் மீறி தன் மகன் அன்புமணியை மத்திய அமைச்சராக்கினார். மகன் ஊழல் முறைகேடுகளில் திளைத்து கோடிக்கோடியாய் பொதுப் பணத்தை சுருட்டியதை பார்த்து புளகாங்கிதம் அடைந்து கட்சியின் தலைவர் பொறுப்பையும் தாரை வார்த்தார். கட்சித் தலைமை பொறுப்பை தந்தவுடன் மகன் அன்புமணி, தந்தையை ’சற்று ஒதுங்கி நில்லுங்கள்’ என கட்டளை இட்டார். மகனுக்கு நிர்வாகம் போதாது. உழைக்கும் பண்பும் இல்லை. கட்சியினரை அரவணைத்து செல்லும் பக்குவமும் இல்லை என்ற யதார்த்தங்களை அறிந்தும், மிகப் பெரிய பொறுப்பை தந்தார். இது கட்சியை குடும்ப சொத்தாக கருதியதால் ஏற்பட்ட மனநிலையாகும். இப்படி சில வருடங்கள் கடந்த நிலையில் மகன் அப்பனிடமே தன் தில்லாலங்கடி வேலைகளை செய்து திடுக்கிடச் செய்தார். குடும்பத்தில் உள்ளவர்களைக் கூட அனுசரித்து அரவணைத்து போக முடியாத அளவுக்கு மூர்க்கமான மகனால், தானே பாதிக்கப்பட்டார் ராமதாஸ். நிறுவனரான அப்பாவிற்கு கட்சியில் எந்த அதிகாரமும் இல்லை. நிர்வாகிகளை நியமிக்கவோ, நீக்கவோ ராமதாஸுக்கு அதிகாரமில்லை என தனி ராஜ்ஜியம் நடத்துகிறார், அன்புமணி. தந்தை ராமதாஸுக்கு வயதானதால், எப்படியும் மகனிடம் மட்டுமே அதிகரத்தை தந்துவிட்டுச் செல்பவராகவும் இருப்பதால், தங்களின் எதிர்காலம் கருதி கட்சி நிர்வாகிகளில் 80 சதவிகிதமனோர் மகன் அன்புமணி பக்கம் சென்றுவிட்டனர். மருமகள் பிடியில் மகன் சென்றுவிட்ட நிலையில், தனி பெரும் தலைவராக வலம் வந்த ராமதாஸ், தற்போது கையறு நிலையில் மனதளவில் மிகவும் சோர்வடைந்துவிட்டார். பாவம், இன்னும் என்னென்ன அவமானங்களை மகனிடம் பெற உள்ளாரோ..? இதனால், இந்தக் கட்சியும் மக்களிடம் மிகவும் செல்வாக்கு இழந்துவிட்டது. வைகோ; வாரிசு அரசியலுக்கு சவால் விட்டதால் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவரான வைகோ, பெரும் தொண்டர்கள் பலத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பிரச்சினைகளுக்கு சிறப்பாக குரல் கொடுத்தார். அறிவும், ஆற்றலும், சலிக்காத உழைப்பும், போராட்ட குணமும் நிறைந்தவரான வைகோ, காலப் போக்கில் கட்சிக்குள் அடுத்த தலைமுறையை உருவாக்காமல் தளபதிகள் பலரை பறிகொடுத்தார். தனது வயது மூப்பு மற்றும் உடல் சோர்வு காரணமாக தளர்வுற்ற வைகோ, கட்சியில் யாரும் எதிர்பாராதவிதமாக தன் மகனை உயர் பொறுப்புக்கு கொண்டு வந்தார். ஆரம்பம் தொடங்கி கொள்கை பற்றுள்ளவராக மகனை கட்சிக்குள் கொண்டு வந்து பயிற்சி தந்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், அவரை பெரிய வியாபாரியாக்கி தான் அழகு பார்த்திருந்தார். அதனால் வைகோ மகனை கட்சிக்குள் கொண்டு வந்ததை எதிர்த்து பல கொள்கைப் பற்றாளர்கள் கட்சியை விட்டு வெளியேறினர். மகன் துரை வைகோவோ, கட்சி பொறுப்புக்கு வந்த பிறகு அப்பாவை கலந்து ஆலோசித்து செயல்படுவதில்லை. கம்பெனி உரிமையாளராக ஊழியர்களை வேலை வாங்கி பழக்கப்பட்ட மகன் துரை வையாபுரி கட்சிக்குள்ளும் மூத்த நிர்வாகிகளை அவ்விதமே நடத்த தலைபட்டு பிரச்சினைகள் வெடித்தன. தற்போது இருக்கும் திமுக கூட்டணிக்குள் கசப்புணர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார் துரைவைகோ. அப்பாவின் கட்டளையை மீறி,சமீபத்திய பொதுக் குழுவில் திமுகவிற்கு எதிராக முன்னணி நிர்வாகிகளை காரசாரமாக பேசவைத்துவிட்டார் துரைவைகோ. இதனால் மிகவும் அதிருப்தியுற்ற ஸ்டாலின், இது நாள் வரை மதிமுகவில் இருந்து திமுகவிற்கு வருபவர்களை ஊக்கப்படுத்தி கட்சியில் இணைக்காமல் தவிர்த்து வந்த நிலையை மாற்றி, மதிமுக அதிருப்தியாளர்களை அள்ளி கட்சிக்குள் இணைக்க மும்முரமாக செயல்பட கட்சியினருக்கு கட்டளை இட்டுள்ளார். இதனால் ஏற்கனவே மிக பலவீனமாக இருக்கும் மதிமுக இன்னும் பலவீனப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும், துரைவைகோ பாஜக தரப்பில் கூட்டணி காண பேச்சுவார்த்தையை மறைமுகமாக செய்து வருவதை எண்ணி அதிர்ச்சி அடைந்தாலும் ஏதும், செய்ய இயலாதவராக கையறு நிலையில் உள்ளார், அப்பா வைகோ. கடைசி காலத்தில் தன் மகனின் கட்சியை கரைத்து பாஜகவில் ஐக்கியமாக்கிவிடுவார்களே அந்தப் பாவிகள்… என மனம் பதறினாலும் அவரால் என்ன செய்ய இயலும்? மேற்படி மூன்று கட்சிகளும் குடும்ப அரசியலால் பலம் இழந்துள்ளதும், தேக்க நிலையில் திணறுவதும், எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற நிலையில் உழல்வதும் தெளிவு. கொள்கை வழிப் பயணிப்போர், குடும்ப வாரிசு அரசியல் எனும் படுபாதாள சகதிக்குள் சிக்குவதில்லை. சாவித்திரி கண்ணன் https://aramonline.in/21988/failure-of-succession-politics/
2 months 3 weeks ago
சர்வதேச கிரிக்கெட்டில் ட்விஸ்ட்… ஐசிசி புதிய விதிமுறைகள் வெளியானது – முழு விபரம்! 27 Jun 2025, 5:02 PM சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகளை ஐசிசி இன்று (ஜூன் 27) அறிவித்துள்ளது. சௌரவ் கங்குலி தலைமையிலான ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கவுன்சில் இந்த புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் நடப்பு (2025-27) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சியின் தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. ஏற்கெனவே இலங்கை-வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் போட்டிகளில் புதிய விதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒருநாள் தொடருக்கான ஐசிசி விதிகள் வரும் ஜூலை 2 முதல் அமலுக்கு வருகின்றன. புதிய நிபந்தனைகள் விவரம்! ஓவர் பிரேக் 60 வினாடிகள்! ஒருநாள், டி20 போட்டியைத் தொடர்ந்து தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பந்துவீச்சு அணி ஒரு ஓவர் நிறைவடைந்த 60 நொடிகளுக்குள் அடுத்த ஓவரை தொடங்க வேண்டும். ஒரு இன்னிங்ஸில் மூன்றாவது முறையாக (இரண்டு எச்சரிக்கைகளுக்குப் பிறகு) அவ்வாறு செய்யத் தவறினால், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பேட்டிங் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். இது ஒவ்வொரு 80 ஓவர்கள் கடந்த பிறகு, ஒரு புதிய பந்து கிடைக்கும்போது அமலாகும். எச்சில் தடவினாலும்… பந்தின் மீது எச்சில் தடவுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், எச்சில் தடவியது கண்டறியப்பட்டால் நடுவர்கள் பந்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. பந்தை மாற்றுவற்காக இந்த தந்திரம் கடைபிடிக்கப்படலாம் என்பதால் இந்த விதி கொண்டு வரப்பட்டுள்ளது. கிரீஸை தொடாமல் ரன் ஓடினால்… வேண்டுமென்றே ஓடி ரன் எடுக்கும்போது, பேட்ஸ்மேன் கிரீஸை தொடாமல் சென்றுவிட்டால், அந்த ரன் வழங்கப்படாது. பேட்டர்கள் இருந்த இடத்துக்கே செல்ல வேண்டும். பவுலிங் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். மேலும், இருவரில் அடுத்த பந்தை எந்த பேட்டர் எதிர்கொள்ள வேண்டும் என்பதை பவுலிங் அணி கேப்டன் தேர்வு செய்ய முடியும். DRS முறையீடு! Wide, Out உள்ளிட்டவைகளுக்கு ஒரே நேரத்தில் பேட்டர் அல்லது பவுலிங் கேப்டன் DRS கோரினால் யார் முதலில் கேட்டார்களோ அவரின் முறையீடே முதலில் ஏற்றுக்கொள்ளப்படும். No Ball கேட்ச்! No Ball பந்தை பேட்டர் அடித்து அது கேட்ச் பிடிக்கப்பட்டால், அது முறையான கேட்ச் எனும்பட்சத்தில் ஒரு ரன் வழங்கப்படும். முறையாக பிடிக்கப்படவில்லை எனில், பேட்டர்கள் ஓடி எடுத்த ரன்கள் வழங்கப்படும். ஒரு ODI இன்னிங்ஸில் புதிய பந்துகள்… ஒரு ODI இன்னிங்ஸின் முதல் 34 ஓவர்களுக்கு இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படும், அதன் பிறகு ஃபீல்டிங் அணி மீதமுள்ள ஓவர்களுக்கு பந்துகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும். பவுண்டரி கேட்சுகள் பவுண்டரி எல்லையில் பறந்து சென்று கேட்ச் செய்யும்போது, மீண்டும் ஒருமுறை மட்டுமே களத்திற்குள் வந்து கேட்ச் செய்ய முடியும். பந்தை பிடித்த பிறகு மீண்டும் பவுண்டரி லைனுக்கு வெளியே சென்றால் அது கேட்சாக கருதப்படாது. டி20 பவர்பிளே மாற்றம்! பிரத்யேகமாக டி20 ஆட்டத்தில் ஆட்டம் மழையால் பாதிக்கப்படும்போது, 5 ஓவரில் இருந்து 19 ஓவர்கள் வரை ஆட்டம் குறைக்கப்பட்டால், எத்தனை ஓவர்கள் பவர் பிளே இருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே விக்கெட் கேட்டால்… சில நேரங்களில் பீல்டர்கள் தெளிவான கேட்ச் பிடிக்காமல் வேண்டுமென்றே விக்கெட்டை கேட்பார்கள். அது போன்ற சூழ்நிலையில் கேட்ச் தெளிவாக இல்லையென்று கண்டறிந்தால் நடுவர் அதை நோ-பால் என்று அறிவிப்பார். எல்பிடபிள்யூ ஆ? அல்லது ரன் அவுட் ஆ? ஒரு பந்தில் ஒரு பேட்ஸ்மேன் எல்பிடபிள்யூ மற்றும் ரன் அவுட்டாகிறார் என்றால் அந்த இரண்டையும் தனியாக ரிவ்யூ எடுக்கலாம். ஆனால் முதலில் எல்பிடபிள்யூ என்று தெரிய வந்தால் அது டெட் பால் என்று முடிவெடுக்கப்பட்டு விக்கெட் வழங்கப்படும். ரன் அவுட் சோதிக்கப்பட மாட்டாது. மாற்று வீரருக்கு பேட்டிங், பவுலிங் செய்யலாம்! அதுபோக உள்ளூர் போட்டிகளில் ஒரு வீரர் முழுமையாக காயத்தை சந்திக்கும்போது புதிதாக வரும் மாற்று வீரர் பேட்டிங், பவுலிங் உள்ளிட்ட அனைத்தையும் செய்யலாம். அதை நடுவர் சோதித்து முடிவெடுப்பார். https://minnambalam.com/icc-set-new-rules-in-cricket/#google_vignette
Checked
Fri, 09/26/2025 - 06:12
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed