2 months 3 weeks ago
28 JUN, 2025 | 06:19 PM (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) மன்னார் உயிலங்குளத்தில் இயங்கும் உயர் தொழில்நுட்பவியல் நிறுவனம் (ATI) மாணவர்களின் ஏற்பாட்டில், “வீதி விபத்துக்களை தவிர்ப்போம்” எனும் தலைப்பில் ஒரு விழிப்புணர்வு நாடகம் இன்று சனிக்கிழமை (28) காலை மணிக்கு மன்னார் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது வீதி விபத்துக்களுக்கான முக்கியமான காரணங்கள், அதன் தீவிர விளைவுகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த நாடகம், பாடல்களை மாணவர்கள் நிகழ்த்தினார்கள். மேலும், வாகன ஓட்டுநர்கள் பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தும் முக்கியத்துவம், போக்குவரத்து விதி முறைகளை கடைப்பிடிக்கும் அவசியம் மற்றும் அவற்றை மீறுவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களிடையே பொறுப்பான போக்குவரத்து பழக்கங்களை வளர்க்கும் நோக்கில் ஒரு முக்கியமான முயற்சியாக அமைந்தது. மேலும் உயர் தொழில்நுட்பவியல் நிறுவன மாணவர்களினால் மன்னார் பஜார் பகுதியில் சிரமதான பணியும் முன் னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218722
2 months 3 weeks ago
ஜூலை 1 ஆம் திகதி முதல் பேருந்து சாரதிகளின் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயமாக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சீட் பெல்ட்களை அணியாத சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் பி.ஏ.சந்திரபால தெரிவித்தார். மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளின்படி, வாகன சாரதிகள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற சட்டம் 2011 ஒக்டோபர் 1 முதல் அமுலில் உள்ளது. இந்தச் சட்டம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டிருந்தாலும், பல சாரதிகள் சீட் பெல்ட் அணியாததால் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த விடயத்தினை கருத்திற்கொண்டு, ஜூலை முதலாம் திகதி முதல் இந்தச் சட்டத்தை கட்டாயமாக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmcfywyos00huqp4kvb8hv3bo சீற்பெல்ற் பயணிகளுக்கும் அணிய ஏற்பாடு செய்தால் அவர்களின் பாதுகாப்பிற்கு நல்லது.
2 months 3 weeks ago
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் 'clean srilanka' திட்டம் ஆகியவை இணைந்து தனியார் துறையின் ஆதரவுடன் 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் ‘Dream Destination’ திட்டத்தின் தொடக்க விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (27) கலந்துகொண்டார். தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் சீர்திருத்தங்களை மேற்கொள்வதை விட, நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது தெரிவித்தார். மேலும், தற்போதைய அரசியல் கலாசாரத்தை மாற்றம் செய்து தற்போதைய அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் என்றவகையில் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அது நிலையானதாக முன்னேற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். வீதி விபத்து, வாகன இறக்குமதிக்காக செலவிடும் பாரிய செலவு போன்ற பாதகமான நிலைமைகளைச் சமாளிக்க நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை ஒரு புதிய நிலைக்கு உயர்த்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விசேட தேவைகள் உள்ள சமூகம் உட்பட அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்யும் சுத்தமான, அழகான ரயில் நிலைய கட்டமைப்பை நாட்டில் உருவாக்குவதே ‘Dream Destination’ திட்டத்தின் நோக்கம் எனவும் தெரிவித்தார். இதன்போது, வீதிப் பாதுகாப்பு செயல் திட்டத்தை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளித்தார். ரயில் நிலையங்களை நவீனமயமாக்குவதற்கான திட்டத்தை எம்.ஐ.சி.டி. அசோசியேட்ஸ் நிறுவனத்தின் இணை ஸ்தாபகர் மற்றும் முக்கிய கட்டிடக் கலைஞர் முரால் இஸ்மாயில் வழங்கினார். மருதானை, இக்ரிகம மற்றும் மொரட்டுவ ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்பட்ட முன்னோடித் திட்டங்களின் அனுபவங்களை, தேசிய புலமைச் சொத்துரிமை அமைப்பின் (NIO) சார்பாக பட்டய பொறியாளர் எம்.எம்.எஸ். மோரேமடா, விளக்கினார்.மேலும் அவரது அமைப்பு தேவையான இடங்களில் தொழில்நுட்ப வழிகாட்டுதலை தொண்டரடிப்படையில் முன்வந்து வழங்கும் என்று கூறினார். ‘Dream Destination’ திட்டம் குறித்தும் கலந்து கொண்டோரின் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. https://adaderanatamil.lk/news/cmcfw1soo00hqqp4kmp1pxvs0
2 months 3 weeks ago
25 JUN, 2025 | 09:14 AM இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் அண்மைய ஒரு தீர்ப்பில் சுயாதீனமான அரச நிறுவனங்கள் வகிக்க வேண்டிய பாத்திரத்தை எடுத்துக் கூறியிருக்கிறது. இஸ்ரேல், பாலஸ்தீனம் பற்றிய தனது கருத்துக்களை சுவரொட்டி மூலம் வெளிப்படுத்தியமைக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்ட முஹம்மட் லியாவுதீன் முஹம்மட் ருஸ்டியின் வழக்கில் கோட்பாட்டு அடிப்படையிலான தலையீட்டைச் செய்தமைக்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை தேசிய சமாதான பேரவை வெகுவாக மெச்சுகிறது. பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருப்பதனாலும் துஷ்பிரயோகம் செய்யப்படுவதனாலும் தோன்றுகின்ற ஆபத்துக்களை இந்த வழக்கு தெளிவாக வெளிக்காட்டுகிறது. ருஸ்டியின் கைது இன, மத அடிப்படையிலேயே இடம்பெற்றிருக்கிறது போன்று தோன்றுகிறது. எந்தவிதமான சான்றும் இல்லாமலேயே ருஸ்டி பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறார். அவரின் சுவரொட்டியில் காணப்பட்ட சுலோகம் ஒரு குற்றச்செயலாக அமையவில்லை என்பதை பொலிசார் ஏற்றுக்கொண்டிருக்கின்ற போதிலும், அவர் கைதுசெய்யப்பட்டு, ஒரு மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படாமல் தடுத்துவைக்கப்பட்டார். பொலிசாரின் உத்தியோகபூர்வ தகவல்களில் அவர் மனநிலை குழம்பியவர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார். அவர் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அவரது சுதந்திரத்தை தடுக்கின்றன. குறிப்பாக, இன, மத அடிப்படையிலேயே ருஸ்டியின் கைது இடம்பெற்றிருக்கிறது போன்று தோன்றுவது கவலையைத் தருகிறது. ருஸ்டி " தீவிரவாதமயப் போக்கை " கொண்டிருப்பதாக பொதுப்படையான, பாரபட்சமான கற்பிதத்தின் அடிப்படையிலேயே பொலிசார் தீர்மானித்திருப்பதை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டறிந்திருக்கிறது. அவர் ஒரு முஸ்லிமாக இல்லாமல் இருந்திருந்தால், அவ்வாறு அவருக்கு நடந்திருக்காது என்றும் ஆணைக்குழு கூறியிருக்கிறது. சட்டத்தின் முன் சகலரும் சமம் என்ற ஜனநாயகக் கோட்பாட்டையும் இனம் அல்லது மதத்துக்கு அப்பால் சகல குடிமக்களும் சமத்துவமான பாதுகாப்பை பெறுவதற்கான அரசியலமைப்பு உத்தரவாதத்தையும் பாரதூரமாக மீறுவதாக இந்தச் அமைந்திருக்கிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தை அவசரமாக இரத்துச் செய்ய வேண்டிய தேவையை இந்த வழக்கு மீண்டும் ஒரு தடவை வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறது. பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு அவசியமான ஒரு கருவியாக பயங்கரவாத தடைச்சட்டம் பல தசாப்தங்களாக நியாயப்படுத்தப்படடு வந்திருக்கிறது. ஆனால், உண்மையில் எதிர்ப்பை ஒடுக்குவதற்கும் சிறுபான்மைச் சமூகங்களை அச்சுறுத்துவதற்கும் எதேச்சையான தடுப்புக் காவல்களை நியாயப்படுத்துவதற்குமான ஒரு பொறிமுறையாகவே அந்த சட்டம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் நம்பகத் தன்மையான சான்றுகள் இல்லாமல் ஆட்களை தடுத்துவைப்பதற்கு அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், நீதிமன்ற விசாரணைகளின் போது குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாமல் இறுதியில் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிக்கப்ட வேண்டும் என்பதுடன் அதன் ஒடுக்குமுறை அம்சங்களை வேறுபட்ட பெயர்களில் மீண்டும் அறிமுகப்படுத்தக்கூடிய ஒரு சட்டத்தினால் பயங்கரவாத தடைச்சட்டம் பதிலீடு செய்யப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டை தேசிய சமாதான பேரவை மீணடும் வலியுறுத்துகிறது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிபாரிசுகளை ஆதரிக்கும் நாம் அவற்றை தாமதமின்றி நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக, ருஸ்டியின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருப்பதற்காகவும் அவரது நற்பெயருக்கும் வாழ்வாதாரத்துக்கும ஏற்பட்ட பங்கத்துகாகவும் ஆணைக்குழு கேட்டிருப்பதை போன்று அவருக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று நாம் கோருகிறோம். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரச அமைப்புக்களினால் ஆட்கள் இன,மத அடிப்படையில் சோதனை செய்யப்படுவதை தடுக்கக்கூடிய தெளிவான உத்தரவாத ஏற்பாடுகள் நிறுவப்பட வேண்டும் என்றும் நாம் கோருகிறோம். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மிகுந்த உன்னிப்பான விசாரணையும் சட்ட நியாயப்பாடும் நிறுவன நேர்மைக்கு ஒரு வகைமாதிரியானதாக விளங்குகின்றன. கடந்த காலத்தில் அரச பொறுப்புக்கூறல் மீதான மக்களின் நம்பிக்கை மிகவும தாழ்ந்த நிலையிலேயே இருந்தது. தற்போது நிலைவரம் நன்மைக்கு மாறிவருகின்றது. சுயாதீனமான பொது நிறுவனங்கள் துணிச்சலுடனும் தெளிவுடனும் செயற்படும்போது பயனுறுதியுடைய மேற்பார்வையும் நீதியும் உண்மையில் சாத்தியம் என்பதை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் நிரூபிக்கிறது. ருஸ்டியின் விவகாரம் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படாத அதிகாரத்தினாலும் தப்பபிப்பிராயத்தினாலும் ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் சகல குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் அரச நிறுவனங்கள் வகிக்கக்கூடிய முக்கியமான பாத்திரத்தையும் உணர்த்தி நிற்கிறது. https://www.virakesari.lk/article/218382
2 months 3 weeks ago
சிலதுகளுக்கு சிங்களத்திற்கு இடைஞ்சல் என்று வந்தால் யாராவது எதையாவது கிளறினால் இங்கேயும் கிளறணும் என்கிற பதட்ட நோய். இப்ப அது தாயகத்திலும். ஆனால் தமிழர்கள் போராட தொடங்காத காலத்திலேயே சிங்கள பகுதிகளில் உட்பட காணாமல் போன புதைக்கப்பட்ட எரிக்கப்பட்ட தமிழர்கள் ஆயிரம் ஆயிரம் என்பது தெரியாமலா அல்லது விசுவாசம் எல்லாவற்றையும் மறைக்கிறதா? மழுங்கடிக்கிறதா???
2 months 3 weeks ago
பட மூலாதாரம்,INSTAGRAM/REUTERS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் லாரென் சான்செஷின் ஆடம்பரத் திருமணம் வெள்ளிக்கிழமையன்று வெனிஸில் நடந்தது. இந்த திருமணத்தில் கலந்துக்கொள்ள திரைப் பிரபலங்கள், நடிகர்கள், அரசு விருந்துனர்கள் உள்ளிட்ட விருந்தினர்கள் வெனிஸிற்குப் பயணப்பட்டுள்ளனர். ஓப்ரா வின்ஃப்ரே, ஒர்லாண்டோ ப்ளூம், கைலி ஜென்னர் மற்றும் இவான்கோ டிரம்ப் ஆகியோர் வியாழன் மற்றும் வெள்ளியன்று வெனிஸின் தெருக்களிலும் படகுகளிலும் காணப்பட்ட பிரபலங்களில் ஒரு சிலர் ஆவர். இந்த நிகழ்வுக்கு எதிராக சுற்றுலாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உள்ளூர் மக்கள் தொடங்கி காலநிலை மாற்ற செயற்பாட்டாளர்கள் வரை பல தரப்பிலும் போராட்டங்கள் வெடித்துள்ளது. திருமணத்திற்கு பிறகு, 55 வயதான் சான்செஷ் ஆடம்பரமான நகைகள் மற்றும் ஆடைகளை அணிந்து 61 வயதான பெசோஸுக்கு அருகில் இருக்கும் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. சான் கியோர்கியா என்கிற சிறு தீவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு 200 விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அங்கு இத்தாலிய பாடகர் ஆண்டியா போசெலியின் மகன் மேட்டியோ போசெலி நிகழ்ச்சி நடத்தினார். இந்த திருமணத்தின் துல்லியமான செலவு எவ்வளவு எனத் தெரியவில்லை என்றாலும் சில மதிப்பீடுகள் 20 மில்லியன் டாலரிலிருந்து 50 மில்லியன் டாலர் வரை இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஓப்ரா வின்ஃப்ரே பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கிம் கர்தேஷியன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கேண்டால் ஜென்னர், கைலி ஜென்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறிய மோட்டார் படகில் கையசைக்கும் ஜெஃப் பெசோஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நடிகர் ஓர்லாண்டோ ப்ளூம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜெஃப் பெசோஸ் வருவதைக் கண்டு ஆர்ப்பரித்த சுற்றுலாப் பயணிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவான்கா டிரம்ப் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வெனிஸில் நடைபெற்ற போராட்டம் https://www.bbc.com/tamil/articles/cwyr6y7626ko
2 months 3 weeks ago
சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறும், நீதியான விசாரணைகளை நடத்துமாறும் கோரி கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை 28 JUN, 2025 | 05:16 PM வாழைச்சேனை முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறும் நீதியான விசாரணைகளை நடத்துமாறும் கோரி அரசினை வலியுறுத்தி சனிக்கிழமை (28) பேத்தாழை வாழைச்சேனையில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வாழைச்சேனை பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஜனாதிபதியின் கவனத்திற்கு தெரிவிக்கும் வகையில் இதனை ஏற்பாடு செய்திருந்தனர். இன்றைய நிகழ்வில் முன்னாள் அமைச்சருக்கு விடுதலை வேண்டி பேத்தாழை மாவடி மாரியம்மன் ஆலயத்தில் விசேட பூசைகள் நடைபெற்று கையெழுத்து வேட்டை இடம்பெற்றது. இதன்போது பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் இதில் ஈடுபட்டிருந்தனர். இவ் நடவடிக்கையானது மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இடம் பெறவுள்ளதாக கட்சியின் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ந.நிமல்ராஜ் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் கொழும்பு குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினரால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எமது தாய் நாட்டின் இறைமையும் தேசிய ஒருமைப்பாடும் ஆபத்துக்குள்ளாகி இருந்த வேளையில் அவற்றை மீட்டெடுக்க அவர் போன்றவர்கள் ஆற்றிய சேவைகள் இன்று மறக்கப்பட்டால் எதிர் காலத்தில் சிறுபான்மை இனங்களில் இருந்து இவ்வாறான தேச பக்தர்கள் எவ்வாறு தோன்ற முடியும் என்பது தேசத்தின் ஒருமைப்பாட்டை நேசிக்கும் சகலரும் சிந்திக்க வேண்டிய தருணம் இதுவாகும். ஆகவே சந்திரகாந்தன் மீதான விசாரணைகள் அனைத்தும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிடியில் இருந்து நீக்கப்பட்டு சாதாரண சட்ட நடைமுறைகளுக்கு அமைய நடத்தப்படுவதற்கு ஆவண செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்ளுகின்றோம் என ஜனாதிபதியின் கவனத்திற்கு அனுப்பும் மகஜரில் மேற்படி விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/218711
2 months 3 weeks ago
யாழ். செம்மணியில் மேலும் 3 மனித எலும்புக் கூட்டுத் தொகுதி அடையாளம் காணப்பட்டது! 28 JUN, 2025 | 06:43 PM யாழ். செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட, மூன்றாவது நாள் அகழ்வாய்வு பணியின் போது மேலும் மூன்று மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நேற்றுவரை 24 மனித எலும்புக்கூட்டுத்தொகுதி அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்றையதினம் மேலும் 3 மனித மனித எலும்புக்கூட்டுத் தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனிதஎலும்புக் கூட்டுத்தொகுதிகளின் எண்ணிக்கை 27ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த நாட்களில் அடையாளம் காணப்பட்ட மனிதஎலும்புக் கூட்டு தொகுதியில், தாயொருவர் குழந்தையை அணைத்த வண்ணம் காணப்பட்ட மனித ஓட்டுத்தொகுதியானது பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த புதைகுழியை அகழ்வதற்கு 45 நாட்கள் நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் 15 நாட்கள் தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகளை முன்னெடுத்து, பின்னர் சிறுகால இடைவெளியின் பின்னர் மீண்டும் அகழாய்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/218723
2 months 3 weeks ago
இந்த நிகழ்வில் இப்படியான ஒரு நிகழ்வு நடந்திருக்கக் கூடாது. ஆனால் சிவஞானம் தன்னை நியாயவாதியாக காட்டிக் கொள்கிறார். தமிழரசுக்கட்சியின் தலைவர்களாக மக்களாலும் கட்சி அங்கத்தவர்களாலும் நிராகரிக்கப்பட்டவர்களே இன்று தமிழரசுக்கட்சியின் தலைமையை அடாத்தாக கைப்பற்றியிருக்கிறார்கள். ஒரு பழம்பெரும்கட்சி தலைவர் பொதுச்செயலாளர் இல்லாமல் பதில்தலைவர் பதில் செலாளரை வைத்துக்கொண்டு நீண்டகாலமாக இருப்பது. நகைப்புக்குரியது. தற்காலிக ஏற்பாடாக யாப்பில் இருக்பகும் விடயத்தை நிரந்தர ஏற்பாடாக மாற்றி தங்களுக்குப் பிடிக்காதவர்களை கட்சியிலிருந்து வெளியேஷற்றி இருக்கிறார்கள். தான் செய்த செயலுக்கு பொது வெளியில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் என்று தெரிந்து கொண்டு அவர் அதைத்தவிர்த்திருக்க வேண்டும்.அங்கே போய் தனக்கு வெள்ளையடிக்க வெளிக்கிட்டு அசிங்கப்பட்டுப் போயிருக்கிறார்.
2 months 3 weeks ago
இங்லாந்தில் எப்பவும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் மகளிர் உள்ளூர் கிலப் போட்டிகள் அதிகம் நடத்தப் படுது ஆண்களுக்கு இருக்கும் முன்னனி கிலப்பை போல மகளிருக்கும் 18கிலப்பை உருவாக்க போகினம் , இப்ப 8 கிலப்பை சரி செய்து விட்டினம் , மீதம் 10 கிலப்பை அடுத்த வருடம் சரி செய்து விடுவினம் சொந்த நாட்டில் நடப்பதால் இங்லாந் மகளிர் கோப்பை வெல்லக் கூடும்...................................................................
2 months 3 weeks ago
நிலாவெளி வீரவணக்க நினைவாலயம் கோபாலபுரம் சந்திப்பு, நிலாவெளி, கிண்ணியா, தலைநகர் ஜமாலியாவிலிருந்த தேச வஞ்சகர்களான ENDLFஇன் முகாமை அழித்துவிட்டு திரும்பிய போது திருமலைக் கடலில் ஏற்பட்ட படகு நேர்ச்சியில் 22 போராளிகள் நீரில் மூழ்கி வீரச்சாவடைந்தனர். அவர்களின் நினைவாய் எழுப்பப்பட்ட நினைவுத்தூண் இதுவாகும். 1990இல் சிறிலங்கா படையினரால் அழிக்கப்பட்ட இது 2003இல் மீளவும் திறக்கப்பட்டது. எனினும் இதன் முழுப் படம் (நினைவாலயத்துடனான) எனக்கு கிடைக்கப்பெறவில்லை. வெறும் தூணின் படமே கிடைத்துள்ளது.
2 months 3 weeks ago
லெப். செல்லக்கிளி எ சந்திரன் எ அம்மானின் வீரவணக்க நினைவாலயம் அஞ்சல் நிலையச் சந்தி, திருநெல்வேலி, யாழ் 23 சூலை 2004 அன்று திறந்துவைக்கப்பட்டது.
2 months 3 weeks ago
மாவீரர்களுக்கான பொது வீரவணக்க நினைவாலயம் யாழ் பல்கலைக்கழகம் புலிகளின் காலத்திலேயே இது கட்டப்பட்டுவிட்டது.
2 months 3 weeks ago
முள்ளிக்குளம் வீரவணக்க நினைவாலயம் முள்ளிக்குளத்தில் இருந்த தேசவஞ்சக கும்பலான புளட்டின் முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்த போராளிகளில் நினைவாலயம்
2 months 3 weeks ago
தலைநகரின் சம்பூர் பரப்பில் தவிபுவினரால் அமைக்கப்பட்டிருந்த ஒரு வீரவணக்க நினைவாலயம் (இதன் பெயர் அறிந்தவர்கள் ஆவணப்படுத்த தெரியப்படுத்துங்கள்)
2 months 3 weeks ago
வீரவணக்க நினைவாலயம் சத்தியநாதன் சிலையடி, கம்பர்மலை, வல்வெட்டித்துறை (இதனது நல்ல நிலையிலுள்ள படிமம் ஒன்றை ஆவணப்படுத்த தந்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்) இது லெப். சங்கர் அவர்களின் வீட்டிலிருந்து சில மீட்டர்கள் தொலைவில் 1980களின் பிற்பகுதியில் கட்டப்பட்டது ஆகும். இச்சிலையில் பெயரால் அப்பகுதி "சத்தியநாதன் சிலையடி" என்றே வழங்கப்பட்டு வந்தது. சிதிலமடைந்த நிலையிலுள்ள மூல நினைவாலயம் 2017ம் ஆண்டு இதனது மூல நினைவாலயத்தின் எஞ்சியுள்ள பகுதிகளில் சுடரேற்றப்பட்டுள்ளதைக் காண்க. அந்த பெட்டிகளுக்குள் முந்தைய காலத்தில் திருவுருவப்படங்கள் (லெப். சங்கர், கப்டன் பண்டிதர் மற்றும் வேறுசிலர்) வைக்கப்பட்டிருந்தனவாம். 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உள்ளூர் இளைஞர்களால் பழைய வடிவத்திலேயே சிதிலமடைந்த பகுதிகள் சரிசெய்யப்பட்ட பின்னர்: "மாவீரர்களின் நினைவாலயம்" என்ற சொற்றொடர் பழையதிலையும் எழுதப்பட்டிருந்தது.
2 months 3 weeks ago
கரும்புலிகளுக்கான வீரவணக்க நினைவாலயம் சம்பூர், திருகோணமலை திரும்லை மாவட்ட கரும்புலிகளுக்கான வீரவணக்க நினைவாலயம் தலைநகர் திருகோணமலையின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு எழிலன் அவர்களால் திறந்து வைக்கப்படுகிறது (5-6-2006). ..
2 months 3 weeks ago
ஏதோ டக்லஸ் மட்டும் தான் படு கொலைகளை புரிந்தது போலவும் மற்றைய இயக்கங்கள் புனிதர்கள் போலவும் கூறப்படுகிறது. இலங்கையில் போரடிய அனைத்து இயக்கங்களும் பல ஆயிரம் படுகொலைகளை நிகழ்ததியவர்கள் தான். இதில் யாரும் சுத்தமானவர்கள் கிடையாது. ஶ்ரீலங்கா இராணுவம் தமிழ் மக்களை படுகொலை செய்ய சூழ்நிலையை அமைத்து கொடுத்ததில் தமிழ் க்கங்களுக்கு பங்கு உள்ளது.
2 months 3 weeks ago
மாவீரர் மற்றும் கொல்லப்பட்ட பொதுமக்கள் நினைவாக எழுப்பப்பட்ட வீரவணக்க நினைவாலயம் நாவாந்துறை: புலிகள் யாழில் இருந்த போது இது கட்டப்பட்டது.
2 months 3 weeks ago
லெப் சீலன், வீரவேங்கை ஆனந் ஆகியோருக்கான வீரவணக்க நினைவாலயம் மீசாலை, அல்லாரை இந்நினைவுச் சின்னமானது அன்னவர்கள் வீரச்சாவடைந்த அதே வெட்டையில்தான் அமைக்கப்பட்டது. இவ்வெட்டையானது பின்னாளில் தோப்பாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
Checked
Fri, 09/26/2025 - 06:12
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed