புதிய பதிவுகள்2

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை

2 months 2 weeks ago
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க HUTCH நிறுவனம் 600 இலட்சம் ரூபா நிதி நன்கொடை 04 Dec, 2025 | 03:54 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு அன்றாடம் நன்கொடைகள் கிடைத்துக்கொண்டிருப்பதுடன், அதன்படி, இன்று (04) HUTCH நிறுவனம் 600 இலட்சம் ரூபா நிதி நன்கொடையை வழங்கியது. ஹச்ஸன் ஆசியா டெலிகொம் ஹொங்கொங் நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் மற்றும் ஹட்ச் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏன் சென் மற்றும் ஹட்ச் நிறுவனத்தின் இலங்கைப் பிரதான நிறைவேற்று அதிகாரி சௌமித்ர குப்தா ஆகியோர் இதற்கான காசோலையை இன்று வியாழக்கிழமை (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் வழங்கி வைத்தனர். பின்னர், ஹட்ச் நிறுவன அதிகாரிகளுடன் உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதியின் செயலாளர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்தார். மேலும், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச அழைப்புகள், டேட்டா மற்றும் குறுஞ்செய்தி வழங்குதல், நடமாடும் சார்ஜிங் நிலையங்களை நிறுவவும், தகவல் தொடர்பு கோபுரங்களை அவசரமாக சீர்செய்யவும் விமானப் பொறியியலாளர்களை பணியமர்த்தியவும் HUTCH நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRCSL) தலைவர் வருண ஸ்ரீ தனபால, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) பந்துல ஹேரத், ஹட்ச் (பதில் பிரதான நிதி அதிகாரி) ஷகில விஜேசிங்க, ஹட்ச் சந்தைப்படுத்தல் தொடர்பு முகாமையாளர் திலானி பொன்சேகா, ஹட்ச் இன் சிரேஷ்ட சந்தைப்படுத்தல் அதிகாரி திசர நிபுன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/232445

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை

2 months 2 weeks ago
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 100 இலட்சம் ரூபா நிதி நன்கொடை. Published By: Vishnu 04 Dec, 2025 | 07:10 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு அன்றாடம் நன்கொடைகள் கிடைத்துக்கொண்டிருப்பதுடன், அதன்படி, வியாழக்கிழமை (04) Royal Electronics மற்றும் SITREK SECURITY SOLUTIONS நிதி நன்கொடைகளை வழங்கின. அதன்படி, Royal Electronics நிறுவனத்தின் தலைவர் பெட்ரிக் பெர்னாண்டோ, 50 இலட்சம் ரூபாவுக்கான காசோலை மற்றும் SITREK SECURITY SOLUTIONS நிறுவனத்தின் இணைத் தலைவர் ஜீவக விஜேசிங்க, பிரதான நிறைவேற்று அதிகாரி மேஜர் (ஓய்வு) ஆனந்த ரொட்ரிகோ ஆகியோர் 50 இலட்சம் ரூபாவுக்கான காசோலையையும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் கையளித்தனர். https://www.virakesari.lk/article/232463

புதின் வருகை: இந்தியா, ரஷ்யாவின் நல்லுறவில் குறுக்கிடப் போகும் சிக்கல்கள் என்ன?

2 months 2 weeks ago
புதின் வருகை: இந்தியா, ரஷ்யாவின் நல்லுறவில் குறுக்கிடப் போகும் சிக்கல்கள் என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பல சிரமங்களுக்கு மத்தியிலும் இந்தியாவும் ரஷ்யாவும் உறவில் இணக்கத்தைப் பேணி வருகின்றன. கட்டுரை தகவல் ஜுகல் புரோஹித் பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் "ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் இந்தப் பயணத்தில் இருந்து இந்தியா அதிகம் எதிர்பார்ப்பது என்ன?" - இந்தக் கேள்வியை நான் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஒரு மூத்த அதிகாரியிடம் கேட்டேன். "நாங்கள் ரஷ்யாவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறோம். தற்போது நாங்கள் ரஷ்யாவிடம் அதிகமாக வாங்குகிறோம், ஆனால் மிகக் குறைவாகவே விற்கிறோம். இது ஒரு சமநிலையற்ற தன்மையை உருவாக்குகிறது. அதைச் சரிசெய்ய விரும்புகிறோம்," என்று அவர் கூறினார். சற்று நேரத்திற்குப் பிறகு, செய்தியாளர்களுடனான வேறொரு உரையாடலில், ரஷ்யாவும் இதை ஒப்புக்கொண்டது. கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், "எங்கள் இந்திய நண்பர்கள் கவலைப்படுவது எங்களுக்குத் தெரியும். நாங்கள் இந்தியாவில் இருந்து அதிக பொருட்களை வாங்க விரும்புகிறோம்," என்றார். இதுவொரு தற்செயல் நிகழ்வா அல்லது இந்தியாவும் ரஷ்யாவும் முற்றிலும் ஒரே கருத்தைக் கொண்டிருக்கிறார்களா? அல்லது உலகுக்கு எதைக் காட்ட வேண்டும் என்பதில் இரு நாடுகளின் சிந்தனையிலும் வேறுபாடு உள்ளதா? பேச்சுவார்த்தைகளில் பாதுகாப்பு உறவுகளின் முக்கியத்துவம் பற்றி இந்திய அதிகாரிகள் அதிகம் பேசாவிட்டாலும், பெஸ்கோவ் அது குறித்து வெளிப்படையாகப் பேசினார். எஸ்யு-57 போர் விமானம் பற்றிய விவகாரம் இந்தப் பயணத்தின் நிகழ்ச்சி நிரலில் இருக்கும் என்று அவர் கூறினார். எஸ்-400 விமானத் தடுப்பு அமைப்புகள் குறித்து இரு நாடுகளின் 'உயர்மட்ட தலைவர்கள்' இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். எனவே, புதினின் இந்தப் பயணம் மூலம் இந்தியா இழப்பதும் பெறுவதும் என்ன? ரஷ்யா எதை அடைய விரும்புகிறது? அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுடன் இரு நாடுகளும் தங்கள் உறவுகளை எவ்வாறு சமநிலைப்படுத்தும்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மூலோபாய உறவுகளில் இருந்து தொடக்கம் இரு நாடுகளும் தங்கள் உறவுக்கு 'சிறப்பு மூலோபாய கூட்டாண்மை' என்ற அந்தஸ்தை கொடுத்துள்ளன. இதன் கீழ், இந்தியா மற்றும் ரஷ்யா இடையே 'வருடாந்திர உச்சி மாநாடு' நடத்துவதற்கான ஏற்பாடு உள்ளது. இதில், இரு நாடுகளின் உயர்மட்டத் தலைவர்கள் சுழற்சி முறையில் ஒருவர் மற்றொருவர் நாட்டில் சந்தித்து வருகின்றனர். இந்திய அரசின் கூற்றுப்படி, இதுவரை 22 உச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இந்தியாவும் ரஷ்யாவும், ஜி20, பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO), ஐக்கிய நாடுகள் சபை போன்ற பலதரப்பு அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்புகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதாக இந்தியா கூறுகிறது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடத்தைப் பெறுவதற்கான இந்தியாவின் முயற்சிக்கு ஆதரவளிக்கும் நாடுகளில் ரஷ்யாவும் இருப்பதாக இந்தியா கூறுகிறது. இருப்பினும், 2022இல் யுக்ரேன் மீதான தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருவது இதுவே முதல் முறை. 2023இல் இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டிலும் அவர் பங்கேற்கவில்லை. இதற்கிடையில், இரு நாடுகளின் தலைவர்களும் 2022இல் ஐந்து முறையும், 2023இல் இரண்டு முறையும் தொலைபேசியில் பேசினர். ஜூலை 2024இல் பிரதமர் நரேந்திர மோதியும் மாஸ்கோவுக்கு சென்றிருந்தார். முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலாளர் சஷாங்க் கூற்றுப்படி, இரு நாடுகளின் மீதும் அழுத்தம் இருப்பதால் தற்போது இந்தியாவும் ரஷ்யாவும் ஒருவரையொருவர் சார்ந்திருக்க வேண்டிய நிலையில் உள்ளன. பிபிசி ஹிந்திக்கு அளித்த பேட்டியில், சஷாங்க், "யுக்ரேன் பிரச்னையில் தீர்வு காணப்படாததால் ரஷ்யா மேற்கு நாடுகளின் அழுத்தத்தில் உள்ளது. அமெரிக்கா விதித்துள்ள வரிகள் காரணமாக இந்தியாவும் அழுத்தத்தில் உள்ளது. இந்தியாவும் ரஷ்யாவும் அதிக நம்பிக்கையுடன் பணியாற்ற விரும்புகிறார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் அமெரிக்காவை கோபப்படுத்தாமல் இருக்க, அதை ஒரு பெரிய விஷயமாக மாற்ற விரும்பவில்லை. எனவே, பல புதிய அறிவிப்புகளை வெளியிடாமல், பழைய ஒப்பந்தங்களில் மாற்றங்கள் செய்யப்படுவதைப் போல விஷயங்கள் காட்டப்படலாம்," என்று கூறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,புதினின் இந்திய பயணத்திற்கு முன்னதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ரஷ்யா சென்றிருந்தார். பாதுகாப்பு ஒப்பந்தங்கள் பாதுகாப்பு ஒப்பந்தம் அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்பு குறைவு என்று இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு அதிகாரி, "தலைவர்கள் எதைப் பற்றி விவாதிப்பார்கள் என்று நாங்கள் சொல்ல விரும்பவில்லை. ஆனால் வழக்கப்படி, உச்சி மாநாட்டில் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் அறிவிக்கப்படுவதில்லை. பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, அதற்கு நேரம் ஆகலாம்," என்று கூறினார். ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தானுடனான மோதலுக்குப் பிறகு நடக்கும் முதல் உச்சி மாநாடு இது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த மோதலின்போது, இந்திய விமானப் படை ரஷ்யாவின் எஸ்-400 விமானத் தடுப்பு அமைப்பின் செயல்பாட்டை வெளிப்படையாகப் பாராட்டியது. இந்தியா-ரஷ்யாவின் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையான பிரம்மோஸின் துல்லியமான செயல்பாட்டையும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார். இன்றும் ரஷ்ய வடிவமைப்பில் உருவான சுகோய்-30 எம்.கே.ஐ. விமானம்தான் இந்திய விமானப் படையின் முக்கிய போர் விமானமாக உள்ளது. ஆனால், அந்த மோதலுக்குப் பிறகு, சீனா 40 ஐந்தாம் தலைமுறை ஜே-35 ஸ்டெல்த் போர் விமானங்களைத் தருவதாக உறுதியளித்து இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது. இந்தத் தொழில்நுட்பம் கொண்ட விமானங்கள் இந்தியாவிடம் இல்லை. இது தவிர, இந்திய விமானப் படை தனது '42 ஸ்க்வாட்ரன்' பலத்தை முழுமையாகப் பெற உடனடியாக அதிக போர் விமானங்கள் தேவை. இந்திய விமானப் படையில் தற்போது 30 ஸ்க்வாட்ரன்கள் உள்ளன. பொதுவாக, ஒரு ஸ்க்வாட்ரனில் 18 போர் விமானங்கள் இருக்கும். இந்தக் காரணங்களால் மேம்பட்ட ரஷ்யாவின் எஸ்யு-57 ஜெட் பற்றிய விவாதங்களின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரஷ்யாவில் இருந்து பெறப்பட்ட எஸ்-400 பாதுகாப்பு அமைப்பை இந்திய விமானப் படை பாராட்டியுள்ளது (கோப்புப் படம்) பாதுகாப்புக் கூட்டணியில் நிலவும் சிக்கல்கள் ஆனால், இந்தியா, ரஷ்யாவின் பாதுகாப்புக் கூட்டணியில் சில குறைபாடுகளும் வெளிப்பட்டுள்ளன. "எஞ்சியுள்ள எஸ்-400 விநியோகங்களை விரைவுபடுத்துமாறு இந்தியா ரஷ்யாவை வலியுறுத்தும்," என்று முன்னாள் வெளியுறவுச் செயலாளர் சஷாங்க் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளின் கூற்றுப்படி, அணுசக்தி மூலம் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலை வழங்குவது குறித்து ரஷ்யாவிடம் உறுதியான வாக்குறுதியை இந்தியா எதிர்பார்க்கிறது. "இது இந்த ஆண்டு வர வேண்டியிருந்தது, ஆனால் நீர்மூழ்கிக் கப்பலின் பணிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன," என்று ஒரு அதிகாரி தெரிவித்தார். ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) தரவுகள்படி, இந்தியாவின் ஆயுதங்களுக்கான மிகப்பெரிய ஆதாரமாக இன்னமும் ரஷ்யாதான் உள்ளது. 2020 முதல் 2024 வரை இந்தியாவின் மொத்த ஆயுத இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 36% ஆக இருந்தது. இருப்பினும், இது 2010-2014 உடன் ஒப்பிடும்போது கணிசமாகக் குறைவு. அப்போது அதன் பங்கு 72% ஆக இருந்தது. "இந்தியா இப்போது ஆயுத விநியோகத்திற்காக மேற்கு நாடுகளை, குறிப்பாக பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை நோக்கி நகர்ந்து வருகிறது," என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது. இவை அனைத்துக்கும் மத்தியில் மற்றொரு மாற்றம் நடந்து வருகிறது. முன்னர் வாங்குபவர் மற்றும் விற்பவர் என்ற அளவில் உறவு இருந்தது. ஆனால் கடந்த ஆண்டின் கூட்டறிக்கைப்படி, இப்போது இந்தக் கூட்டாண்மை கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை நோக்கி நகர்கிறது. இந்தியாவில் உதிரி பாகங்களின் கூட்டு உற்பத்திக்கு ஊக்கமளிப்பதற்கும், பின்னர் அவற்றை நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் இந்தியாவும் ரஷ்யாவும் ஒப்புக்கொண்டுள்ளன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தகம் ஒருதலைபட்சமானது. ஏனெனில் இந்தியா மிகக் குறைவாகவே விற்கிறது, ஆனால் அதிகமாக வாங்குகிறது. வர்த்தக உறவுகள் அரசு புள்ளிவிவரங்களின்படி, 2024-25ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 68.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற சாதனை அளவை எட்டியது. இதில் ரஷ்யாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி வெறும் 4.9 பில்லியன் டாலர்கள் மட்டுமே. இதில் மருந்துகள், இரும்பு, எஃகு ஆகியவை அடங்கும். மீதமுள்ளவை அனைத்தும் எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள், உரங்கள் போன்றவை அடங்கிய இறக்குமதிகள். "இந்திய பொருட்களின் இறக்குமதியைப் பொருத்தவரை, வரிகள் போன்ற தடைகள் இருப்பதால், தற்போது எங்களால் அதிக பொருட்களை ரஷ்யாவுக்கு அனுப்ப முடியவில்லை. நாங்கள் ரஷ்யா உள்பட யூரேசிய பொருளாதார ஒன்றியத்துடன் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளோம். இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு இந்தச் சிக்கல்கள் குறையும்," என ஒரு இந்திய அதிகாரி தெரிவித்தார். "இந்தியாவின் மருந்துகள், விவசாயப் பொருட்கள், அன்றாடப் பொருட்கள், கடல் உணவுகள், உருளைக் கிழங்கு, மாதுளை ஆகியவை ரஷ்யாவை அடைய வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். இது தவிர, இந்திய தொழிலாளர்கள் அங்கு செல்வது குறித்து ரஷ்யாவுடன் ஓர் ஒப்பந்தம் ஏற்படவும் வாய்ப்புள்ளது," என்று கூறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் குறைபாடுகளைத் தடுப்பதற்கான வழிகளைக் கண்டறியவுள்ளதாக ரஷ்யா கூறுகிறது அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனில் பணிபுரியும் ராஜோலி சித்தார்த்த ஜெயபிரகாஷ், ரஷ்யாவின் வெளியுறவு மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை ஆய்வு செய்து வருகிறார். அவர் பிபிசி ஹிந்திக்கு அளித்த பேட்டியில், ஒப்பந்தங்கள் தவிர, "ரஷ்யாவில் தனக்கான சந்தையைக் கண்டறிய இந்தியா கடினமாக உழைக்க வேண்டும். ரஷ்யாவுக்கு நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தேவைப்படுகின்றன. மேற்குலகத் தடைகள் காரணமாக அவை எளிதில் கிடைப்பதில்லை. ஆனால் சீனா ஏற்கெனவே அங்கு உள்ளது மற்றும் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் என்பதால், அதன் நிலைமை வலுவாக உள்ளது," என்று கூறினார். எண்ணெய் கொள்முதல் மற்றும் இந்தியா மீதான அழுத்தம் யுக்ரேன் மீதான தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெயை கொள்முதல் செய்தது ஒரு பெரிய மாற்றம் மற்றும் புவிசார் அரசியல் மோதலின் கதை. குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேடிவ் அமைப்பின்படி (GTRI), 2021 வரை ரஷ்யாவில் இருந்து எண்ணெய் கொள்முதல் மிகவும் குறைவாக இருந்தது. ஆண்டு இறக்குமதி சுமார் இரண்டு முதல் மூன்று பில்லியன் டாலர்கள் என்றும் இந்தியாவின் எண்ணெய் தேவைகளில் ஒன்று அல்லது இரண்டு சதவிகிதம் என்ற அளவிலும் மட்டுமே இருந்தது. இது 2024ஆம் ஆண்டில் 52.7 பில்லியன் டாலர்களாக அதிகரித்தது. மேலும் ரஷ்யாவின் பங்கு மொத்த இறக்குமதியில் 37.3%ஐ எட்டியது. யுக்ரேன் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யாவின் எண்ணெய் வருமானத்தைக் குறிவைத்தார். இதனால் அமெரிக்கா, இந்தியா மீது கூடுதலாக 25% வரி விதித்தது. அதன் பிறகு மொத்த வரி 50 சதவிகிதம் ஆனது. இது இந்திய ஏற்றுமதியாளர்களின் போட்டித் திறனைப் பாதித்தது. இந்த நடவடிக்கை நியாயமற்றது என்று இந்தியா கூறியது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரஷ்யா உரங்களை 'நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து விநியோகிக்க வேண்டும்' என்று இந்தியா விரும்புகிறது. (கோப்புப் படம்) ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்காது என்று பிரதமர் மோதி தனக்கு உறுதி அளித்ததாக சமீபத்திய மாதங்களில் டிரம்ப் கூறியுள்ளார். மறுபுறம், இந்த முடிவு வணிகரீதியான ஒன்றாக இருக்கும் என்று இந்தியா கூறியது. குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேடிவ் தரவுகளின்படி, தற்போது இந்தியாவில் ரஷ்ய எண்ணெயின் பங்கு 31.8% ஆகக் குறைந்துள்ளது. பெஸ்கோவ் இந்தியாவின் பெயரைக் குறிப்பிடாமல், ரஷ்யா 'எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் குறைபாடுகளைத் தடுப்பதற்கான வழிகளைக் கண்டறியும்' என்று மாஸ்கோவில் பேசியபோது கூறினார். உரங்களுக்கு ரஷ்யாவை சார்ந்திருக்கும் நிலை இந்தியா உரம் வாங்குவதற்கான ஒரு பெரிய ஆதாரமாக ரஷ்யா விளங்குகிறது. ரஷ்யாவின் அரசு வங்கியான ஸ்பெர்பேங்க் வங்கியின் தரவுகள்படி, 2024ஆம் ஆண்டில் இந்தியா ரஷ்யாவில் இருந்து 4.7 மில்லியன் டன் உரத்தை வாங்கியது. இது 2021ஆம் ஆண்டைவிட 4.3 மடங்கு அதிகம். இந்தச் சார்புநிலை விரைவில் முடிவுக்கு வரப் போவதில்லை. கடந்த உச்சி மாநாட்டின் கூட்டறிக்கைப்படி, ரஷ்யாவில் இருந்து உரங்களை "நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து விநியோகிக்க வேண்டும்' என்று இந்தியா விரும்புகிறது மற்றும் இதற்காக 'நிறுவனங்களுக்கு இடையிலான நீண்ட கால ஒப்பந்தங்கள்" திட்டமிடப்பட்டுள்ளன. இவைபோக, நிபுணர்கள் கவனிக்கும் முக்கியமான பிரச்னைகள் என்ன? இந்தக் கேள்விக்குப் பதிலளித்த முன்னாள் வெளியுறவுச் செயலாளர் சஷாங்க், "பயணிகள் அல்லது ராணுவ விமானங்களை இணைந்து தயாரிப்பது போன்ற துறைகளில் ரஷ்யா இந்தியாவுக்கு தொழில்நுட்பம் வழங்கத் தயாராக இருந்தால், அது ஒரு வழியாக இருக்கலாம். இத்தகைய திட்டங்கள் இந்தியாவின் சுயச்சார்பு இலக்கிற்கு உதவும் மற்றும் ரஷ்யாவுக்கு ஒரு பெரிய சந்தையை வழங்கும். தொழில்நுட்பங்கள் அடிப்படையில் பார்த்தால், ரஷ்யா இந்தியாவுக்கு கொடுக்கக் கூடியதை மிகக் குறைவான நாடுகளால் மட்டுமே கொடுக்க முடியும்," என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cyvgm0p54e2o

நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

2 months 2 weeks ago
பேரிடரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 481 ஆக அதிகரிப்பு Dec 4, 2025 - 06:23 PM நாடளாவிய ரீதியில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 481 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (04) பி.ப. 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, 345 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளனர். https://adaderanatamil.lk/news/cmirfskkp02e0o29n9y4jozt4

கோலன் மலைப்பகுதி ஆக்கிரமிப்பு: இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

2 months 2 weeks ago
கோலன் மலைப்பகுதி ஆக்கிரமிப்பு: இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு Published By: Vishnu 03 Dec, 2025 | 05:51 PM சிரியாவின் கோலன் மலைப்பகுதி மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பை சட்டவிரோதமானது எனக் கூறி, அந்தப் பகுதியை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. எகிப்து முன்வைத்த இந்த தீர்மானத்துக்கு இந்தியா உட்பட 123 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இதற்கெதிராக 7 நாடுகள் மட்டுமே வாக்குகளை பதிவு செய்துள்ளன. மேலும் 43 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகி புறக்கணித்தன. கோலன் பிராந்தியத்தின் சட்ட அந்தஸ்து மற்றும் நிலைமை குறித்து சர்வதேச மட்டத்தில் மீண்டும் கவனம் திரும்பிய நிலையில், இந்த தீர்மானம் குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது. https://www.virakesari.lk/article/232362

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

2 months 2 weeks ago
புதிதாக ஏதும் சொல்வீர்கள் என்று பார்த்தால் அதே பழைய கதை தான்: "இன்ரர்னெற்றில் இருந்து அமெரிக்கர்கள் அகற்றி விட்டார்கள் ( ரஷ்யாவிற்கு இன்ரர்னெற்றைத் தொடவே வசதியில்லை, இன்னும் ரின் பால் பேணியில் நூல் கட்டிய போன் தான்! எனவே ரஷ்யாவால் மீள ஏற்ற முடியாது ஆவணங்களை😂!) "இந்தி தெரியாது போடா!" என்பவனுக்கு உண்மையிலேயே இந்தி தெரியாமலும் இருக்கலாம்!

வரைபடங்களும் மனிதர்களும் ! உக்ரைன்-ரசிய சமாதான ஒப்பந்த முயற்சி குறித்த அலசல்

2 months 2 weeks ago
அவருடைய தரப்பை மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கின்றார் ரவீந்திரன்................ ஒரு வக்கீல் போல ஒரு தரப்பிற்காக வாதாடியிருக்கின்றார். சில சொற்களைத் தவிர்த்திருக்கலாம். அந்தச் சொற்கள் இந்தக் கட்டுரையை ஒரு 'சமூக ஊடக அலட்டல்' என்ற அளவிற்கு தரமிறக்கி விடக்கூடும். குறிப்பிடப்பட்டிருக்கும் சில வருடங்களும் தப்பானவை என்றே தெரிகின்றது, உதாரணம்: அமெரிக்க உளவுத்துறையினால் அமெரிக்க - சீன யுத்தம் தொடங்கும் வருடம் என குறிப்பிடப்பட்டிருக்கும் ஆண்டு.............................

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை

2 months 2 weeks ago
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை Dec 4, 2025 - 06:15 PM ‘டித்வா’ (Ditwa) புயலினால் ஏற்பட்ட பாரிய சேதத்தைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 300 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் செயற்குழுவின் வழிகாட்டலின் கீழ் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட், இந்தத் தீர்மானத்தின் ஊடாக மில்லியன் கணக்கான இலங்கையர்கள் நேசிக்கும் ஒரு விளையாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனமாக இலங்கை கிரிக்கெட் தனது பொறுப்பை பிரதிபலிக்கிறது எனத் தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நாட்டிற்காக தொடர்ச்சியாக முன்னிற்பதாகவும், தேவையான அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmirfi8vo02dzo29n31trnb01

இலங்கை: மண்சரிவில் புதைந்த சடலங்களை உறவினர்களே தேடி எடுக்கும் அவலம் - பிபிசி தமிழ் நேரில் கண்டவை

2 months 2 weeks ago
படக்குறிப்பு,தமக்கு இதுவரை அரசாங்கத்திடம் இருந்து எந்தவித உதவிகளும் கிடைக்கவில்லை என சாந்தகுமார் கூறுகிறார் கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் (எச்சரிக்கை: இந்த கட்டுரையில் உள்ள செய்திகள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்) இலங்கையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக காணாமல் போன பலரது சடலங்கள் இன்றும் மண்ணுக்குள் புதையுண்டு இருக்கும் நிலையில், அவற்றை மீட்க முடியாத சூழலை உறவினர்கள் எதிர்கொண்டுள்ளனர். அப்படி மண்சரிவு ஏற்பட்ட பதுளை பகுதியில் என்ன நிலவரம் என்பதை அறிய பிபிசி தமிழ் களத்திற்கு டிசம்பர் 3ஆம் தேதி சென்றது. அங்கு பிபிசி நேரில் கண்டவை இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. பதுளை பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு பதிவான பகுதிகளுக்கு பிபிசி தமிழ் குழு சென்ற தினம் வரை மீட்புக் குழுவினர் செல்லவில்லை என்பதை அறிந்தோம். குறைந்தபட்சம் மண் அகழும் இயந்திரங்கள்கூட அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மக்கள் முன்வைத்திருந்தனர். மண்சரிவு ஏற்பட்டு மண்ணில் பலர் புதைந்த பல இடங்களில், தமது உறவினர்களின் சடலங்களை உறவினர்கள், நண்பர்கள், பொது மக்களே தோண்டி எடுத்தனர். இது தவிர்த்து, மண்ணில் புதையுண்ட மக்களின் சடலங்களைத் தோண்டி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முப்படைகளின் உதவியோ, மீட்புக் குழுக்களின் உதவியோ அல்லது அரசாங்கத்தின் வேறு உதவிகளோ கிடைக்கவில்லை என்று பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர். உறவினர்களை தோண்டி எடுக்கும் பரகல்ல மக்கள் நாவலபிட்டி நகரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மலை கிராமமே பரகல்ல. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது பஷ்தூன் மக்கள் இந்தியாவை விடுத்து பாகிஸ்தானுடன் சேர முடிவு செய்தபோது நடந்தது என்ன? திருப்பரங்குன்றம்: 'மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்' - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு 'பேருந்துக்குள் 2 நாட்கள்' - இலங்கை சுற்றுலா சென்று சிக்கிய 29 பேர் சென்னை திரும்பியது எப்படி? யானைப் படையை ஒட்டகங்கள் மூலம் தந்திரமாக சிதறடித்து டெல்லியை வென்ற 'தைமூர்' End of அதிகம் படிக்கப்பட்டது பரகல்ல பகுதியில் பெரும்பாலும் தேயிலை தொழிலைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்களே வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு வாழ்ந்தவர்களில் பரகல்ல மேற்பிரிவில் சுமார் 10க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் லயின் அறை தொகுதி ஒன்றில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் வாழ்ந்த அந்த லயின் அறைகள் மீது கடந்த நவம்பர் 27ஆம் தேதி இரவு 7 மணிக்கு பாரிய கற்களுடன் கூடிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் மொத்தமாக 14 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் இன்றும் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். பரகல்ல பகுதியில் மண்ணுக்குள் புதையுண்ட மக்களை மீட்பதற்கு தங்களுக்கு உதவி கிடைக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், கடும் மழையையும் பொருட்படுத்தாத, அதே பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் தமது சொந்தங்களைத் தாங்களே தோண்டியெடுக்கும் முடிவை எடுத்துள்ளனர். பிரதேச இளைஞர்கள் உள்ளிட்ட பலர் ஒன்று சேர்ந்து தமது உறவுகளைத் தேட ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு தேடிய தருணத்தில் பலரது சடலங்களை அவர்களால் மீட்டெடுக்க முடிந்தது. பின்னர், மீட்கப்பட்ட சடலங்கள் அந்தப் பிரதேசத்திலேயே மீண்டும் புதைக்கப்பட்டுள்ளது. அரசுக்கு கோரிக்கை பரகல்ல பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு பிபிசி குழு டிசம்பர் 3ஆம் தேதி சென்றிருந்தது. லயின் அறைகள் மீது பாரிய கற்கள் வீழ்ந்த காட்சிகளை நாங்கள் பதிவு செய்தபோது, அங்கிருந்த கற்களுக்குள் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. பாரிய கற்கள் காணப்படுகின்றமையினால், கற்களைத் தம்மால் உடைக்க முடியாதுள்ளது என்று மீட்புப் பணிகளை மேற்கொண்ட பிரதேச மக்கள் குறிப்பிட்டனர். இந்தக் கற்களை அப்புறப்படுத்துவதற்கு அரசாங்கத்தால் மண் அகழும் இயந்திரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறிய பிரதேச மக்கள், "மண் அகழும் இயந்திரங்கள் கிடைக்குமாக இருந்தால் கற்களுக்குக் கீழுள்ள சடலங்களைத் தோண்டி எடுத்து, முறைப்படி அடக்கம் செய்ய முடியும்" என்று குறிப்பிடுகின்றனர் பிபிசி குழு அடையாளம் கண்ட சடலங்கள் பரகல்ல பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தருணத்தில், பிபிசி தமிழ் செய்தியாளர்களின் கால்களுக்குக் கீழே ரத்தம் கசிந்திருப்பதை அவதானித்திருந்தனர். அந்த இடத்தில் சற்று மண்ணை அப்புறப்படுத்திய தருணத்தில், அந்த இடத்தில் 25 வயது மதிக்கத்தக்க யுவதி ஒருவரின் சடலமொன்று மண்ணுக்குள் புதையுண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. அதையடுத்து, பிரதேச மக்களுக்கும், போலீசாருக்கும் பிபிசி செய்தியாளர்கள் தகவல் தெரிவித்தனர். பிரதேச மக்கள் அந்த இடத்தைத் தோண்டிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், யுவதியின் கால்களுக்கு அருகில் குழந்தையொன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, குழந்தையின் சடலத்தைத் தோண்டி எடுக்க முயன்ற தருணத்தில், மற்றுமொரு பெண்ணின் சடலமும் அந்த இடத்தில் மண்ணுக்குள் புதையுண்டிருந்தது. இவ்வாறு குறித்த இடத்திலிருந்து மூன்று சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு, கிறிஸ்தவ தேவாலயமொன்றில் வைக்கப்பட்டன. பின்னர் அரச அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய பிரதேசத்தில் குழியொன்று தோண்டப்பட்டு, முறைப்படி அடக்கம் செய்ய பிரதேச மக்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர். மக்கள் கூறுவது என்ன? தமக்கு இதுவரை அரசாங்கத்திடம் இருந்து எந்தவித உதவிகளும் கிடைக்கவில்லை என அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த சாந்தகுமார், பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார். ''அரசாங்கத்தில் சடலங்களை எடுக்க யாரும் இன்றும் எந்த உதவிகளையும் செய்யவில்லை. மேலே சாலை இருக்கின்றது. எங்களுக்கு இப்போது பெக்கோ (மண் அகழும் இயந்திரம்) ஒன்று தேவைப்படுகின்றது. பெக்கோ ஒன்று கொடுத்தார்கள் என்றால், மண்ணுக்கு அடியிலுள்ள ஆட்களை மீட்டெடுக்கலாம். நிதி, சாப்பாடு கிடைக்கின்றது. ஆனால், இதற்கு அரசாங்கம் சார்பில் பொறுப்பானவர்கள் யாரும் வரவில்லை. நாங்கள் முக்கியமாக கேட்பது பெக்கோ இயந்திரம் ஒன்று மாத்திரமே...'' என சாந்தகுமார் தெரிவித்தார். அயல் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களும் பரகல்ல பகுதி மக்களுடன் இணைந்து சடலங்களைத் தேடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். படக்குறிப்பு,மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் சுதா அவ்வாறு மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் அயல் பிரதேச இளைஞரான சுதாவும், பிபிசி தமிழிடம் பெக்கோ உதவியோ அல்லது வேறு எந்தவொரு உதவியோ அரசிடம் இருந்து கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''நாங்கள் பக்கத்து ஊரு. எங்களுடைய ஊரில் ஒரு பிரிவுதான் இது. இது நடந்து 7 நாட்கள் இருக்கும். அரசாங்கத்தால் ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை" என்று கூறினார். மேலும், "முதல் நாளே எங்களுக்குச் சொல்லியிருந்தால், எங்களுடைய பசங்களை (இளைஞர்கள்) வைத்து நாங்களே தோண்டி எடுத்திருப்போம். மூன்று நாட்கள் கழித்துதான் எங்களுக்குச் சொன்னார்கள். எங்களுடைய பசங்கள் வந்துதான் ஐந்து சடலங்கள் போலத் தோண்டி எடுத்தோம்" என்றார். பெக்கோ இயந்திரமோ அல்லது வேறு எந்தவொரு உதவியோ அரசிடம் இருந்து கிடைக்கவில்லை எனக் கூறிய சுதா, "அரசாங்கம் முடிவு ஒன்றை எடுத்து, இந்த இடத்தைச் சுத்திகரித்து தந்தால், நல்லதொரு உதவியாக இருக்கும். சடலங்களை நாங்களே தோண்டி எடுக்கின்றோம். போலீசாரிடமிருந்து எந்த உதவியும் இல்லை. நாங்களே குழியை வெட்டிப் புதைக்கின்ற நிலைமைதான் வந்திருக்கின்றது. இந்த மாதிரியான நிலைமை யாருக்கும் வரக்கூடாது'' எனத் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq5q49pw0jzo

அம்மனும் அமிர்தமும் (நாடகம்)

2 months 2 weeks ago
காட்சி 2 (அமிர்தம் அம்மன் கோயிலில் கும்பிட்டுக்கொண்டிருக்கிறார்.) அமிர்தம்: அம்மாளாச்சி, நான் சின்னனாக இருந்தபோது சின்னப்பிள்ளைகளை ஒருவரும் மதிக்கவில்லை. எனக்கு வயசானப் பிறகு வயசு போனவர்களை ஒருவரும் மதிக்கினம் இல்ல. பூமி சுத்துது, நான் மட்டும் ஆணி அடிச்சு வைச்ச மாதிரி அப்பிடியே நிற்கிறன். ஆயிரம் கண்ணில ஒரு கண்ணை திறந்து என்னைப் பார் தாயே.................... (அமிர்தம் கண்ணை மூடி, முணுமுணுத்து கும்பிடுகிறார். கண்ணைத் திறந்து பார்க்கும்போது அவரின் பக்கத்தில் ஒருவர் நிற்கிறார்.) அமிர்தம்: (ஆச்சரியமாக) ம்ம்ம்….திடீரென்று வந்து பக்கத்தில நிற்கிறீங்கள், புதுசா வேற இருக்கிறீங்கள், ஆனா பழகின மாதிரியும் இருக்குது….......... எங்கயிருந்து வாறீங்கள்? பாரதம்: (கோயில் உள்ளே கையை காட்டி) அங்கேயிருந்து தான் நான் வருகிறேன். அமிர்தம்: யார் நீங்கள் ஐயரோட வீட்டுக்காரியே.............. ஐயரின் ஒரு ஆளை எனக்கு தெரியும்.......... ஐயருக்கு இன்னுமொரு வீடு இருக்கிற சங்கதி எனக்கு தெரியாது............ அதுவும் சரிதான், இதெல்லாம் என்ன சொல்லிச் செய்யிற விசயமே..................... (பாரதம் சிரிக்கிறார்). பாரதம்: நான் ஐயரோட வீட்டுக்காரியில்ல........... ஐயனோட வீட்டுக்காரி. (அமிர்தம் எதுவும் புரியாமல் முழிக்கிறார்). அமிர்தம்: எந்த ஐயன்…. பாரதம்: அண்டசராசரத்தையும் படைத்து, படைத்ததெல்லாவற்றையும் அழித்து, அழித்ததை எரித்து, எரித்ததை உடம்பெல்லாம் பூசிக்கொண்டு திரியும் அந்த ஐயனோட வீட்டுக்காரி நான். அமிர்தம்: இது என்ன கூத்து தாயே, நேரிலயே வந்துவிட்டீர்கள். பக்தையே உன் பக்தியில் நாம் மனமுருகிவிட்டோம், உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டு, கையில ஒரு வரத்தை கொடுத்துவிடாதே அம்மா................ பாரதம்: எல்லா மானிடருமே முதலில் எங்களிடம் கேட்பது வரம்தான்........... உனக்கு ஏன் வேண்டாம் என்கிறாய், அமிர்தம்? அமிர்தம்: கடவுளிடம் வரம் வாங்கி, இதுவரை இந்த பூமியில நல்லா வாழ்ந்த ஒரு மனிதனும் கிடையாது. கொடுக்கிற மாதிரி கொடுத்துவிட்டு, எல்லாவற்றையும் பின்னால் பிடுங்கி விடுவீர்கள். இருந்தததையும் இழந்து, ஓடி ஒழிந்து, அழிந்தவர்தான் எல்லோரும். பாரதம்: நன்றாகவே பேசுகிறாய் அமிர்தம். ஆனால் நான் இப்போது வரம் கொடுப்பதற்காக இங்கு வரவில்லை. பூலோகத்தில் சில நாட்கள் உன்னோடு தங்கியிருக்க வந்துள்ளேன். அங்கு எனக்கு நிம்மதியே இல்லை. அமிர்தம்: அது எப்படியம்மா முடியும்? கடவுள் என்று தெரிந்தாலே உன்னை நிம்மதியாகவே இருக்கவிடமாட்டார்களே. கடவுளின் அவதாரம் என்று சொன்னவர்களையே அறைக்குள் வைத்து படம் எடுத்து, அல்லோலகல்லோலம் செய்தார்கள். முதலில், நீங்கள் யாருடைய கடவுள் என்கிற பிரச்சனையிலயே உலகம் அழிந்துவிடும்................. பாரதம்: நீ நான் கடவுள் என்று எவரிடமும் சொல்லாதே. நான் சாதாரண மானிடர் போல இருந்துவிட்டு போகிறேன். அமிர்தம்: அது சரி தாயே............. நீங்கள் இங்கு வரவேண்டிய அளவிற்கு அங்கு என்ன பிரச்சனை? பாரதம்: ஒன்றா, இரண்டா சொல்லுவதற்கு........... சின்னவனுக்கும் பெரியவனுக்கும் சண்டை................ ஒரு மாம்பழத்திற்காக கோவணத்தோட ஓடித் திரிகிறான் சின்னவன். இவர் என்னவென்றால், தலையில் கூட ஒருத்தியை வைத்திருக்கிறார். நீங்கள் தான் ஒருவனுக்கு ஒருத்தி என்றும், மிக ஒற்றுமையாகவும், நாங்கள் படைத்த எல்லா உயிர்களிலும் மிகச்சிறப்பாக வாழ்கிறீர்கள். அதுவும் தான் எப்படியென்று பார்த்து விட்டு போகலாம் என்று வந்துள்ளேன். (இருவரும் நடக்கிறார்கள்) அமிர்தம்: மனிதர்களை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை போல தெரிகிறது......... சரிதான், இருநதுதான் சில நாட்கள் பார்த்து விட்டு போங்கள். அதுசரி உங்களை யாரென்று நான் மற்றவர்களிடம் சொல்லுவது? பாரதம்: உன் பெரியம்மாவின் மகள் என்று சொல்லு. பெயர் கூட பாரதம் என்று சொல்லிவிடு. அமிர்தம்: ம்ம்ம்… துருவித் துருவி கேட்பார்கள், நான் பார்த்துக்கொள்கிறேன். ஆனால் ஒன்று எக்காரணத்தைகொண்டும், எந்த சந்தர்ப்பத்திலும் உங்களின் சித்துவிளையாட்டுக்கள் எதுவும் இங்கு காட்டக்கூடாது. பாரதம்: நானே சித்துவேலைகளினால் மனம் நொந்துபோய் இங்கு வந்துள்ளேன். எதுவுமே நடக்காது, நீ பயப்படத் தேவையில்லை. அமிர்தம்: என்னுடைய குடும்பத்தைப் பற்றீத் சொல்லத் தேவையில்லைம், எல்லாமே உங்களுக்குத் தெரிந்திருக்கும். பாரதம்: சில விசயங்கள் எனக்கு புரியவில்லை. உனக்கு நல்ல பெயர் அமிர்தவல்லி, உன்னுடைய மகளுக்கும் பார்வதி என்றுஎன்னுடைய பெயர்தான், உன் மகளின் மகளுக்கு மட்டும் லக்க்ஷனா என்று…. அமிர்தம்: இதுதான் மனிதனின் சின்ன சின்ன சித்துவேலைகள். என் மருமகனுக்கு நடிகை சுலக்க்ஷனாவை நல்லா பிடிக்கும், ஆனால் அப்படியே வைக்கமுடியாது, பார்வதி கொப்பரத்தில ஏறி, கொடி பிடித்துவிடுவாள். அதுதான் இப்படி ஒரு சின்ன மாற்றம். எல்லா இடமும் ஒரே கதைதான், அங்கே தலையில வைத்திருந்தால் இங்கே தலைக்குள்ள வைத்திருப்பார்கள். உரிக்க உரிக்க தோல் கழட்டும் வெங்காயம் போன்றவர்கள் மனிதர்கள்.......... கண்ணில கண்ணீர் மட்டும் தான் மிஞ்சும்............... (தொடரும்........................)

ஜமைக்காவை தாக்கிய பின்னர் கியூபாவை நோக்கி நகரும் சூறாவளி "மெலிசா"!

2 months 2 weeks ago
ஜமெய்கா மெலிசா புயல்; சர்வதேச நிறுவனங்களிடமிருந்து 6.7 பில்லியன் டொலர் நிதியுதவி 02 Dec, 2025 | 02:11 PM ஜமெய்காவில் தாக்கிய மெலிசா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவுகளில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளுக்காக சர்வதேச நிறுவனங்களிடமிருந்து அதிகபட்சம் 6.7 பில்லியன் டொலர் நிதியுதவி கிடைக்கப்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. CAF-லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி, கரீபியன் அபிவிருத்தி வங்கி மற்றும் இடையாசிரியன் அபிவிருத்தி வங்கி ஆகியன இந்த நிதியுதவியில் பங்குபெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. புதிய நிதியுதவியில் அதிகபட்சம் 3.6 பில்லியன் டொலர் அரசு நிதியுதவியும் CAF, அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி ஒவ்வொன்றும் 1 பில்லியன் டொலர் அளவில் பங்களித்துள்ளனர். ஜமெய்காவில் கடந்த 170 ஆண்டுகளில் பின்னர் தாக்கிய புயலில் சுமார் 50 இலட்சத்திற்கும் மேல் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தாமதமடைந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஜமெய்காவின் எதிர்கால அனர்த்தங்களுக்கு எதிரான சக்தியை வலுப்படுத்தும் வகையில் இந்த நிதிவுதவிகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/232233

அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கியது ஜப்பான்

2 months 2 weeks ago
Published By: Digital Desk 3 04 Dec, 2025 | 04:46 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையில், ஜப்பான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட அவசர நிவாரணப் பொருட்களை, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மூலம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு (DMC) உத்தியோகபூர்வமாக ஒப்படைத்துள்ளது. நேற்று (03) நாட்டிற்கு வந்தடைந்த இந்த நிவாரண உதவி, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் Akio ISOMATA மற்றும் JICA இலங்கை தலைமை பிரதிநிதி Kenji KURONUMA ஆகியோரால் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட (ஓய்வு) ஆகியோரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. அனர்த்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கவும் அவர்களின் அடிப்படை வாழ்க்கை நிலைமைகளை மீட்டெடுப்பதற்கும் தேவையான பல்வேறு அத்தியாவசிய மனிதாபிமான பொருட்கள் இதில் அடங்குவதோடு, 200 கூடாரங்கள், 1,200 போர்வைகள், 1,200 மெத்தைகள், 20 Plastic Sheets (Tarpaulin), 200 சிறிய நீர் கொள்கலன்கள் (ஜெரி கேன்கள்) மற்றும் 10 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இதில் அடங்குகின்றன. இந்தப் பொருட்கள் பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளன. https://www.virakesari.lk/article/232455

கோப்பாய் – நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை குறித்து தரப்பினர் விளக்கம்!

2 months 2 weeks ago
கோப்பாய் – நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை குறித்து தரப்பினர் விளக்கம்! நல்லூர் பிரதேச சபை – கோப்பாய் பிரதேச சபை எல்லையில் வெள்ள வாய்க்காலுக்குள் மண் அணை போடப்பட்டது தொடர்பிலோ , மதகுக்குள் வெள்ள நீரை விட , தற்காலிக வாய்க்கால் வெட்டப்பட்டமை தொடர்பில்லோ கோப்பாய் பிரதேச சபைக்கு எந்த தகவலும் தெரியாது என கோப்பாய் பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ் தெரிவித்துள்ளார். நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்குள் உள்ள வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட வெள்ளநீர் வாய்க்காலை மண் அணை போட்டு தடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் , ஆராய்வதற்கு சம்பவ இடத்திற்கு இன்றைய தினம் கோப்பாய் தவிசாளர் சென்றிருந்த போது , வெள்ளம் வடிய வாய்க்கால் அமைத்த தரப்பினரும் , அதனை தடுத்த தரப்பினரும் அங்கு கூடியிருந்தனர். வாய்க்கால் தொடர்பில் பிரதேச சபைக்கு தெரியாது. அதன் போது முதலில் இந்த வாய்க்கால் தொடர்பில் கோப்பாய் பிரதேச சபைக்கு எதுவும் தெரியாது. அதாவது வெட்டினதும் தெரியாது , மூடினதும் தெரியாது. இது பிரதேச சபைகளுக்கு இடையிலான மோதல் இல்லை என்பதனை தெளிவு படுத்துவதாக தெரிவித்தார். வாய்க்காலை மூடிய தரப்பு அதன் பின்னர் வாய்க்காலை தாம் தான் மூடியதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் தெரிவித்தனர். தமது பகுதிக்குள் 4 அடிக்கு மேல் வெள்ளநீர் நிற்கிற நிலையில், புதிதாக ஒரு பகுதி வெள்ள நீரை மேலும் எமது பகுதிக்கு அனுப்புவதனை ஏற்க முடியாது. அதனாலயே மூடினோம். எந்த வெள்ளநீர் எமது பிரதேசத்தால் செல்வதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் செம்மணி நீரேந்து பிரதேசம் வரையில் ஒழுங்கான வடிகால் அமைப்பை செய்து. அதனூடாக வெள்ள நீரை வெளியேற்ற வேண்டும். அதனை விடுத்து தாழ் நிலங்களில் வசிக்கும் எமது காணிகளுக்குள் வெள்ளநீரை மடைமாற்றி விட கூடாது என தெரிவித்தனர். மூன்று வருடங்களாக தான் வெள்ளம் அதேநேரம் , வெள்ள வாய்க்கால் அமைக்கப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கும் போது , கடந்த மூன்று வருடங்களாக தான் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறோம். யாழ்ப்பாணத்தையே உலுக்கிய நிஷா புயலின் போது கூட எங்கள் வளவுக்குள் வெள்ளம் நிற்கவில்லை. தற்போது வெள்ளம் நிற்க காரணம் பருத்தித்துறை வீதி புனரமைப்பின் போது இந்த பிரதேசத்தில் இருந்த நான்கு மதகுகள் முற்றாக மூடி விட்டார்கள். தற்போது தற்காலிக வாய்க்கால் வெட்டிய இடத்தில் கூட வடிகால் வாய்க்கால் இருந்தது. வீதி அகலிக்கும் போது , மூடி விட்டார்கள். அதுமட்டும் இன்றி , தற்காலிக வாய்க்காலை அமைத்து வெள்ளநீரை விட்ட மதகு புனரமைப்பின் போது மதகுக்கு அருகால் , மண் போட பட்டு தற்காலிக வீதியை அமைத்திருந்தனர். மதகு கட்டி முடிக்கப்பட்டதன் பின்னர் , அந்த மண் பாதையை அகற்றாமல் சென்று இருந்தனர். அதனை அடுத்து அதற்கு அருகில் உள்ள தனியார் , அப்பகுதியை சுவீகரித்து மதிலையும் கட்டி விட்டார். அதனால் வீதியால் வழிந்தோடி வந்த நீர் தனியாரின் மதிலினாலும் , மதகு கட்டுவதற்காக போடப்பட்ட மண் மேட்டினாலும் நீர் ஓடாது எமது பகுதியில் தேங்கி நிற்கிறது. அதனாலயே இம்முறை மதகு வரையில் சுமார் 30 மீட்டர் தூரம் வாய்க்கால் போன்று , மண்ணை வெட்டி விட்டோம். என தெரிவித்தனர். வீதி புனரமைப்பின் போது மதகுகள் பாலங்களை மூடி விட்டார்கள் அதனை தொடர்ந்து தவிசாளர் தெரிவிக்கையில் , குறித்த வீதியில் காணப்பட்ட மதகுகள் மூடப்பட்டுள்ளன. அது தொடர்ப்பில் நாம் RDA யிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் தமக்கு வீதிக்கு மாத்திரமே நிதி கிடைப்பதாகவும் , மதகுகள் பாலத்திற்கு வேறாக ஒதுக்கப்படும். இந்த இடத்தில் ஒரு மதகுக்கு மாத்திரமே நிதி ஒதுக்கப்பட்டது என தெரிவிக்கின்றனர். எமது பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் தான் அதிக நீரேந்து பிரதேசங்கள் காணப்படுகின்றன. அவற்றில் இந்த பகுதியில் இருந்து வெளியேறும் நீர் , செம்மணி பகுதியில் உள்ள நீரேந்து பிரதேசங்களில் தேங்கும். தற்போது அப்பகுதி மத்திய அரசின் அனுமதிகளுடன் மண் போட்டு நிரப்பபட்டு வருகிறது. மத்திய அரசு காலம் காலமாக அபிவிருத்தி எனும் பெயரில் நீரேந்து பிரதேசங்களையே நிரவி கட்டடங்களை கட்டி வருகிறது. அவற்றினை மக்கள் பிரதிநிதிகள் எதிர்ப்பார்கள் என்பதால் தான் , மாகாண சபை , உள்ளூராட்சி தேர்தலைகளை தாமதப்படுத்தி வருகின்றனர். தற்போது கூட இந்த வெள்ள நீர் எமது பகுதியால் வெளியேறுவதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் செம்மணி பகுதியில் இருந்து வடிகால் அமைப்பினை செய்து உரிய முறையில் வெளியேற்ற வேண்டும். ஒரு பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என உடனடியாக எடுக்கப்படும் நடவடிக்கையால் இன்னொரு தரப்பு மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ள கூடாது. அந்தவகையில் நேற்றைய தினம் இந்த இடத்திற்கு கடற்தொழில் அமைச்சர் வருகை தந்து , பார்த்துள்ளார். அவர் கூறிய சில கருத்துக்கள் தவறாக இருந்தாலும் , அவர் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி உள்ளதால் , உடனடியாக மத்திய அரசிடம் இருந்து நிதியினை பெற்று இப்பகுதியில் எந்த தரப்பு மக்களும் பாதிக்கப்படாமல் இருக்க உரிய வடிகால் அமைப்புக்களை மேற்கொண்டு உரிய முறையில் வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். https://athavannews.com/2025/1455174

இலங்கைக்கு உதவத் தயார்.. இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு

2 months 2 weeks ago
மோடி சார்.... விகாரை கட்டுவதற்கு, ஒரு கப்பல் செங்கலும் தந்து உதவும் படி வேண்டுகின்றோம். இப்படிக்கு, ஆமத்துறு. 😂

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

2 months 2 weeks ago
ஒரு நீண்ட அலசல் பா.ரவீந்திரனால் எழுதப்பட்டுள்ளது. (என்னைப் போன்ற) லிபரல் எலீற்ஸுக்கு ஏற்றுக்கொள்ள கடினமான ஒன்று!

மாவிலாறு அணைக்கட்டை முழுமையாக புனரமைக்க வடகீழ் பருவமழை முடியும் வரை காத்திருக்க வேண்டும் – நீர்ப்பாசனப் பணிப்பாளர்

2 months 2 weeks ago
Published By: Digital Desk 1 04 Dec, 2025 | 02:47 PM சேதமடைந்துள்ள மாவிலாறு அணைக்கட்டை முழுமையாக புனரமைக்க, வடகீழ் பருவ பெயர்ச்சி மழை முடியும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்று திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், மகாவலி கங்கை மூலம் வந்து சேர்ந்த வெள்ள நீர் ஏற்படுத்திய தாக்கத்தினால், மாவிலாறு அணைக்கட்டு கடந்த 30ஆம் திகதி உடைப்பெடுத்தது மாவிலாறு அணைக்கட்டுப் பகுதிக்கு செல்லும் வீதி இப்போதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வெள்ளம் வடிந்த பின்பே சேதமடைந்த அணைக்கட்டு பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்ய முடியும். அதன் பின்னரே முழுமையான சேதத்தை மதிப்பிடப்பட முடியும். அதேநேரம், சேருநுவர வெள்ளப் பாதுகாப்பு அணையின் நீலபொல மற்றும் தெஹிவத்த பகுதிகளில் ஏற்பட்ட சேதம், கந்தளாய் சூரியபுர வெள்ளப் பாதுகாப்பு அணை உடைந்ததால் ஏற்பட்ட சேதம் ஆகியவையும் மதிப்பீடு செய்யப்படும் என்றும் திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/232424

வெள்ள வாய்க்காலுக்குள் போடப்பட்ட மண் அணையை அகற்ற பணிப்பு

2 months 2 weeks ago
வெள்ளம் வரும் போதெல்லாம் அனுமதி பெறாத அனைத்தும் இடிக்கப்படும் என்பது வழமையாகிவிட்டது. கோத்தாவின் காலத்தில் கோப்பாய் பிரதேசசபை பணத்துக்காகவே வேலை செய்துள்ளனர்.

இலங்கைக்கு உதவத் தயார்.. இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு

2 months 2 weeks ago
இந்திய அனர்த்த நிவாரணங்களை ஏற்றிய 8வது விமானமும் நாட்டுக்கு Dec 4, 2025 - 04:38 PM இந்திய அனர்த்த நிவாரண உதவிகளைத் தாங்கிய 8வது விமானமும் இன்று (04) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. அவ்விமானத்தில் 53 மெட்ரிக் தொன் எடையுள்ள, 110 அடி நீளமான, இரண்டு வழித்தடங்களைக் கொண்ட இரும்பு பெய்லி பாலம் (Bailey bridge) ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளதுடன், இது இந்திய அரசினால் நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள 10 பாலங்களில் 2வது பாலமாகும். இப்பாலம் உட்பட இந்திய விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட பொருட்கள் தொகையை இலங்கை இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவு அதிகாரிகளிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இப்பாலம் இந்திய இராணுவ பொறியியலாளர்கள் மற்றும் இலங்கை இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவு அதிகாரிகளால் இணைந்து நுவரெலியா பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கு மேலதிகமாக படகுகள், சீனி மற்றும் மின்பிறப்பாக்கிகள் தொகையொன்றும் இந்திய உதவிகளில் அடங்குகின்றன. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலாய அதிகாரிகள் குழுவொன்று மற்றும் இலங்கை இராணுவ பொறியியல் படைப்பிரிவு மற்றும் இலங்கை விமானப்படை அதிகாரிகள் குழுவொன்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சமூகமளித்திருந்தனர். https://adaderanatamil.lk/news/cmirc18lw02dso29nrp1xqzoa

சூப்பர் மூன் என்றால் என்ன? அதை எப்போது, எங்கே காணலாம்?

2 months 2 weeks ago
பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி ஸ்பெயினில் படம் பிடிக்கப்பட்ட சூப்பர் மூன் கட்டுரை தகவல் த.வி. வெங்கடேஸ்வரன் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் டிசம்பர் 4, 2025 சூப்பர் முழு நிலா "சூப்பர் மூன்" என்பது ஒரு மெய்யான வானியல் நிகழ்வு அல்ல. நிலவு பூமிக்கு அருகில் இருக்கும்போது ஏற்படும் முழு நிலாவை குறிக்க பொதுவெளியில் பயன்படுத்தப்படும் கருத்து மட்டுமே. ஆண்டின் கடைசி முழு நிலா, டிசம்பர் 4, 2025 அன்று, ஒரு 'சூப்பர் முழு நிலா'வாக (Supermoon) நிகழும். டிசம்பர் 5ஆம் தேதி காலை 04:45 மணிக்கு சூரியன், பூமி, நிலா ஆகிய மூன்றும் ஒரே கோட்டில் வரிசையாக வரும்போது, நிலவு பூமியிலிருந்து வெறும் 3,57,219 கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே இருக்கும். அந்த நேரத்தில், முழு நிலவின் விட்டம் சராசரி முழு நிலாவைவிட கிட்டத்தட்ட 7 சதவிகிதம் பெரிதாகவும், பிரகாசம் 16 சதவிகிதம் கூடுதலாகவும் இருக்கும். இதுவே "சூப்பர் முழு நிலா". எங்கே, எப்போது காணலாம்? டிசம்பர் 4ஆம் தேதி மாலை நிலவு உதயமாகும் நேரத்தில், கிழக்கு நோக்கி மறைப்பு ஏதுமில்லாத இடமாகத் தேர்வு செய்து, கிழக்கு முகமாகப் பார்த்தல் சூப்பர் மூன் தென்படும். 'உண்மையான' முழு நிலா நிலை, அதாவது 'வானவியல் பார்வையில் முழு நிலா நிலை' (astronomical full Moon) டிசம்பர் 5ஆம் தேதி காலை 04:45 மணிக்கு (இந்திய நேரம்) நிகழும். ஆனால் நிலா உதயத்திற்குப் பிறகு கிழக்கு அடிவானத்தில் தாழ்வாக இருக்கும்போது பார்ப்பதே, சூப்பர் முழு நிலாவைக் காணச் சிறந்த நேரம். அடிவானில் முழு நிலா பெரிதாகக் காட்சி தரும்; இதை "நிலா மாயை" (moon illusion) என்பார்கள். ஏன் இப்படியான பார்வைத் தோற்றம் நிகழ்கிறது என்பது இன்னமும் புதிராகத்தான் உள்ளது. சூப்பர் மூன் என்றால் என்ன? "சூப்பர் மூன்" என்பது நிலவு பூமிக்கு மிக அருகில் இருக்கும் 'அண்மை நிலை'யில் (Perigee) ஏற்படும் ஒரு முழு நிலாவாகும். நிலவு பூமியைச் சுற்றி வரும் பாதை சரிவட்டமானது அல்ல, அதுவொரு நீள்வட்டப் பாதை. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது பஷ்தூன் மக்கள் இந்தியாவை விடுத்து பாகிஸ்தானுடன் சேர முடிவு செய்தபோது நடந்தது என்ன? 'பேருந்துக்குள் 2 நாட்கள்' - இலங்கை சுற்றுலா சென்று சிக்கிய 29 பேர் சென்னை திரும்பியது எப்படி? யானைப் படையை ஒட்டகங்கள் மூலம் தந்திரமாக சிதறடித்து டெல்லியை வென்ற 'தைமூர்' திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் எழுந்த சர்ச்சை - தற்போதைய நிலவரம் என்ன? End of அதிகம் படிக்கப்பட்டது இதன் விளைவாக, நிலவுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் மாறுபடுகிறது. பூமியின் மையத்தில் இருந்து நிலாவின் மையம் வரையிலான தூரம், அண்மை நிலையில் (Perigee) 3,63,396 கிலோமீட்டர் முதல் தொலைவு நிலையில் (apogee) 4,05,504 கிலோமீட்டர் வரை அலைவுறும். இந்திய வானியலில், நிலாவின் சுற்றுப்பாதையில் அதன் மிக அருகிலுள்ள புள்ளியான 'அண்மை நிலை' (perigee) 'சீக்கிரோச்சம்' என்றும், மிகத் தொலைவிலுள்ள புள்ளியான 'தொலைவு நிலை' (apogee) 'மந்தோச்சம்' என்றும் அழைக்கப்படுகிறது. முழு நிலா கட்டத்தில், நிலவு பூமிக்கு மிக அருகிலுள்ள புள்ளியான அண்மை நிலையில் (சீக்கிரோச்சம்) இருக்கும்போது "சூப்பர் மூன்" ஏற்படுகிறது. இதேபோல, அமாவாசை நிலவு ஏற்படும்போது நிலவு அண்மை நிலையில் இருந்தாலும், அதுவும் 'சூப்பர் மூன்'தான். ஆனால் அப்போது நிலாவின் வட்டுத் தோற்றம் காணப்படாது. எனவே, அது பற்றி இங்கு விவாதிக்கப் போவதில்லை. சுருக்கமாக, அதன் அண்மை நிலைக்கு அருகில் ஏற்படும் முழு நிலாவையே 'சூப்பர் மூன்' என்று குறிப்பிடுகிறோம். அது ஏன் 'சூப்பர்' மூன்? நமக்கு அருகிலுள்ள பொருள்கள், தொலைவில் உள்ளவற்றைவிட இயற்கையாகவே பெரிதாகத் தோன்றுகின்றன. இதன் விளைவாக, நிலவு அதன் நீள்வட்ட சுற்றுப்பாதையில் சுற்றி வரும்போது அதன் தோற்ற அளவு மாறுபடுகிறது. அது மிக அருகிலுள்ள புள்ளியான அண்மை நிலையில் (perigee) பெரிதாகவும், தொலைவு நிலையில் (apogee) சிறிதாகவும் இருக்கும். இதேபோல், ஒளிரும் ஒரு பொருள் அருகில் இருக்கும்போது பிரகாசமாகத் தோன்றி, அதுவே தொலைவாகச் செல்லும்போது மங்குகிறது. இதன் விளைவாக, பூமிக்கு மிக அருகே அண்மை நிலையில் இருக்கும் ஒரு சூப்பர் மூன், தொலைவு நிலையில் இருக்கும் முழு நிலாவைவிட விட்டத்தில் 14 சதவிகிதம் வரை பெரிதாகவும், 30 சதவிகிதம் வரை பிரகாசமாகவும் இருக்கும். முழு நிலா என்றால் என்ன? முழு நிலா என்பது நிலவு பூமியில் இருந்து காணும்போது நிலாவின் வட்டம் முழுமையாக ஒளிர்வதாகத் தோன்றும் பிறைக்கட்டமாகும். இது பூமி, சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் வரும்போது ஏற்படுகிறது. இந்த வரிசையமைப்பின் காரணமாக, சூரிய ஒளி நிலவுடைய முகத்தின் மீது முழுமையாகப் படர்ந்து முழு முகத்தையும் ஒளிர வைக்கிறது, அதை வானில் ஒரு பிரகாசமான, வட்ட வட்டு போல தோன்றச் செய்கிறது. பொதுவாக, முழு நிலா சூரிய அஸ்தமனத்தில் உதயமாகி, அடுத்த சூரிய உதயத்தின்போது மறைகிறது. நாம் இந்த இரவு முழுவதையும் 'முழு நிலா' என்றே சொல்கிறோம். இருப்பினும், வானியலாளர்கள் நிலவு சூரியனுக்கு சரியாக 180 டிகிரி எதிர்த் திசையில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட கணத்தையே 'வானவியல் பார்வையில் முழு நிலா' என்று கருதுகிறார்கள். நிலவும் பூமியும் அவற்றின் சுற்றுப்பாதைகளில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதால், சூரியன், பூமி, நிலா ஆகிய மூன்றும் ஒரு கோட்டில் வரிசையாக ஒரு கணம் மட்டுமே நிலை கொள்ளும்; பின்னர் அவை நகர்ந்து விடும். எனவே, மெய்யான 'முழு நிலா' நிகழ்வு ஒரு கணமே நீடிக்கும். எடுத்துக்காட்டாக, டிசம்பர் 4 அன்று 23:15 UTC (டிசம்பர் 5, 2025, காலை 04:45 இந்திய நேரம்), இந்த மூன்று வான்பொருட்களும் வரிசையாக அமைந்து 'வானவியல் முழுநிலா நிலை' (astronomical full Moon) ஏற்படும். பட மூலாதாரம்,Getty Images சூப்பர் மூன் எப்போது நிகழ்கிறது? வானவியல் முழு நிலாவை போலவே, நிலாவும் அதன் அண்மை நிலையில் (perigee) ஒரு கணமே இருக்கும். எனவே, முழு நிலா, அண்மை நிலை (perigee) ஆகிய இரு நிகழ்வுகளும் ஒருபோதும் சரியாக ஒரே நேரத்தில் நடக்காது. 21ஆம் நூற்றாண்டில், ஒரு முழு நிலா ஒருபோதும் சரியாக அண்மை நிலையுடன் (perigee) ஒத்துப்போவதில்லை. முழு நிலாவும் அண்மை நிலையும் (perigee) 21ஆம் நூற்றாண்டில் நவம்பர் 26, 2034 அன்று காலை 04:02 மணிக்கு (இந்திய நேரம்) மிக நெருக்கமாக நிகழ்கிறது. அப்போது நிலவு வெறும் 356,448 கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே இருக்கும். நவம்பர் 26 அன்று காலை 03:36 மணிக்கு முழு நிலா நிகழ்ந்த சுமார் 26 நிமிடங்களுக்குப் பிறகே அண்மை நிலை நிகழும். இதேபோல, முழு நிலாவும் அண்மை நிலையும் (perigee) மிக நெருக்கமாக நிகழ்ந்ததற்கு ஓர் எடுத்துக்காட்டு நவம்பர் 14, 2016. அப்போது இரு நிகழ்வுகளுக்கும் இடையிலான நேர இடைவெளி 2 மணிநேரம் 29 நிமிடங்களுக்கும் குறைவாக இருந்தது. கிட்டத்தட்ட வானவியல் முழுநிலா நிலையும், நிலவு அண்மை நிலையை அடைவதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்ததாகக் கூறலாம். இருப்பினும், நடைமுறையில், "90 சதவிகித விதி" பயன்படுத்தப்படுகிறது. அதாவது, முழு நிலா கட்டம், நிலவு ஒரு குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகிலுள்ள அண்மையில் (perigee) 90%-க்குள் இருக்கும்போது நிகழுமானால், பூமியில் இருந்து பார்க்கும்போது முழு நிலவின் அளவு (பார்வைக்கோணம்) கணிசமாகக் கூடும். இதைத்தான் சூப்பர் மூன் என்கிறார்கள். மேலும் இந்தக் கட்டத்தில் பூமியின் மையத்தில் இருந்து நிலாவின் மையம் 3,67,607 கிலோமீட்டருக்கு குறைவாக இருக்கும். பட மூலாதாரம்,Costfoto/NurPhoto via Getty Images வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வானவியல் முழு நிலா நிகழ்வுக்கு முன்னும் பின்னும் 24 மணிநேரத்திற்குள் நிலவு அண்மை நிலைப் புள்ளியைக் (perigee) கடந்தால், அது 'சூப்பர் மூன்' என்று வகைப்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஆண்டின் முதல் வானவியல் முழு நிலா, ஜனவரி 14 அன்று காலை 03:58 மணிக்கு நிகழ்ந்தது. அப்போது நிலவு 3,78,038 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. நிலவு அதன் அண்மை நிலைப் புள்ளியை (perigee) ஜனவரி 8 அன்று காலை 05:06 மணிக்கு அடைந்தது, இது முழு நிலாவுக்கு சுமார் 142 மணிநேரம் 52 நிமிடங்களுக்கு முன்னதாகும். எனவே, அது ஒரு சூப்பர் மூன் அல்ல. இதற்கு மாறாக, நவம்பர் 5 அன்று மாலையில், 18:50 மணிக்கு முழு நிலா நிகழ்ந்தது. அப்போது நிலவு 3,56,852 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது மற்றும் நவம்பர் 6 அன்று காலை 04:00 மணிக்கு அண்மை நிலைப் புள்ளியைக் (perigee) கடந்தது. இது முழு நிலா நிகழ்வுக்கு சுமார் 9 மணிநேரம் 10 நிமிடங்களுக்குப் பிறகு நிகழ்ந்தது. எனவே, இதுவே ஒரு சூப்பர் மூன். சூப்பர் மூன்கள் தொடர்ச்சியாகவே வரும் ஒவ்வோர் ஆண்டும், மூன்று அல்லது நான்கு சூப்பர் மூன்கள் அடுத்தடுத்து நிகழும். நிலவின் இரண்டு இயக்கங்கள் சூப்பர் மூனின் கால அலவைத் தீர்மானிக்கின்றன. ஒரு முழு நிலவு நிலையில் இருந்து மறுபடியும் முழுநிலவு நிலையை அடைய சுமார் 29.5306 நாட்கள் ஆகும். இருப்பினும், பூமியைச் சுற்றி அண்மை நிலையில் இருந்து மறுபடி அதே அண்மை நிலைக்கு (perigee to perigee) வந்து சேர சுமார் 27.5545 நாட்கள் ஆகும். இந்த இரண்டு சுற்றுகளும் ஒத்துப்போகும்போது சூப்பர் மூன் ஏற்படுகிறது. இந்த இரண்டு காலங்களுக்கு இடையிலான சிறிய வித்தியாசம் காரணமாகத்தான் ஆண்டுதோறும் வெவ்வேறு மாதங்களில் சூப்பர் மூன்கள் உருவாகின்றன. இந்த ஆண்டில் (2025) அக்டோபர் 7, நவம்பர் 5, டிசம்பர் 4 ஆகிய அடுத்தடுத்த முழுநிலவுகள் சூப்பர் மூன்கள். இதைத் தொடர்ந்து வரும் ஜனவரி 3, 2026 முழுநிலவும் சூப்பர் மூன் தான். அடுத்த ஆண்டில்(2026), நவம்பர் 24, டிசம்பர் 24 ஆகிய இரண்டும் சூப்பர் மூன். 2027ஆம் ஆண்டில், சூப்பர் மூன் ஜனவரி 22, பிப்ரவரி 20 ஆகிய தேதிகளில் நிகழும். பட மூலாதாரம்,Getty Images வானியல் கருத்தல்ல "சூப்பர் மூன்" என்ற கருத்து கிரகணம் போன்ற மெய்யான வானியல் நிகழ்வல்ல. எனினும் கடந்த சில ஆண்டுகளில் பொது மக்களிடையே கணிசமான உற்சாகத்தையும் ஊடக கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த 1979ஆம் ஆண்டு டெல் ஹோரோஸ்கோப் (Dell Horoscope) இதழில் அமெரிக்க ஜோதிடர் ரிச்சர்ட் நோலே (Richard Nolle) எழுதிய கட்டுரையைத் தொடர்ந்தே சூப்பர் மூன் என்ற கருத்து பிரபலமானது. அதில், "புது நிலா அல்லது முழு நிலா, நிலவு ஒரு குறிப்பிட்ட சுற்றுப் பாதையில் பூமிக்கு மிக அருகிலுள்ள அண்மையில் (90 சதவிகிதத்திற்குள்) இருக்கும்போது நிகழ்வது சூப்பர் மூன்" என்று நோலே வரையறை செய்தார். ஏன் இந்த அளவுகோல் என்பதற்கு எந்தவித விளக்கத்தையும் அவர் தரவில்லை. எனவே இது வெறும் கருத்து மட்டுமே. சூப்பர் மூனின் இயக்க முறைக்குப் பின்னாலுள்ள நிலவின் இயக்கம் குறித்துப் பண்டைய காலம் தொட்டே அறிந்திருந்தனர். 29.5 நாட்களுக்குப் பிறகு முழு நிலா மறுபடி மறுபடி வரும் சுழற்சியை எளிதாக அறிந்த பண்டைய மக்கள் மேலும் கூர்ந்து நிலவின் இயக்கத்தைக் கவனித்தபோது வேறொரு விசித்திரமான இயக்கத்தையும் கண்டார்கள். அதாவது, விண்மீன்களின் பின்னணியில் நிலவின் தினசரி இயக்கம் சீராக அமையவில்லை. சில நேரங்களில் வேகமாகவும் சில நேரங்களில் மெதுவாகவும் இயங்கியது. இன்று நிலவின் இந்த விசித்திர இயக்கத்திற்குப் பின்னாலுள்ள விதியை நாம் அறிவோம். கெப்லர் மூன்றாவது விதியின்படி நீள்வட்டப் பாதையில் செல்லும்போது நிலவு போன்ற வான்பொருள் அண்மைப் புள்ளிக்கு அருகே வேகமாகச் செல்லும்; தொலைவுப் புள்ளிக்கு அருகே மெதுவாகச் சுற்றும். அதாவது அது பூமிக்கு மிக அருகிலுள்ள அண்மை நிலையில் (perigee) இருக்கும்போது சராசரியைவிட வேகமாகவும், பூமியில் இருந்து மிகத் தொலைவிலுள்ள தொலைவு நிலையில் (apogee) இருக்கும்போது வழக்கத்தைவிட மெதுவாகவும் நகரும். வானியலாளர்கள் வேகத்தில் உள்ள இந்த வித்தியாசத்தை 'பிறழ்வு' (anomaly) என்று குறிப்பிடுகிறார்கள். நிலவு அண்மை நிலையில் இருந்து தொடங்கி மீண்டும் அண்மை நிலையை அடைந்து ஒரு சுழற்சியை முடிப்பதற்கு எடுக்கும் காலத்தை 'நிலவின் பிறழ் மாதம்' (anomalistic month) என்பார்கள். பண்டைய பாபிலோனிய வானியலாளர்கள் முதல் இந்திய வானியலாளர்கள் வரை பலரும் நிலவின் வேகத்திலுள்ள இந்த மாறுபாட்டை (பிறழ்வை, anomaly) அறிந்திருந்தனர். இந்திய சித்தாந்த வானியலில், நிலவின் மெதுவான இயக்கம் 'மந்தம்' என்றும், வேகமான இயக்கம் 'சீக்கிரம்' என்றும் அழைக்கப்பட்டது. வாஸிஷ்ட சித்தாந்தம் பிறழ் மாதத்திற்கு (anomalistic month) இரண்டு வெவ்வேறு கால அளவுகளைப் பதிவு செய்கிறது. முதலாவது சற்று எளிமையானது: 248/9 நாட்கள், அல்லது சுமார் 27.5556 நாட்கள். இதை மெய் அளவோடு ஒப்பிட்டால் வெறும் சுமார் 0.00104 நாட்கள் மட்டுமே வேறுபடுகிறது. மற்றொரு பகுதியில், பிறழ் மாத காலம் 3031/110 நாட்கள் என்ற மிகத் துல்லியமான மதிப்பீட்டைத் தருகிறது. இது சுமார் 27.5545 நாட்களுக்குச் சமம். அதாவது மெய் அளவிலிருந்து வெறும் 0.00000579 நாட்கள் மட்டுமே வேறுபடுகிறது. அவ்வளவு துல்லியமாக உற்றுநோக்கி நிலவின் இயக்கத்தைப் பண்டைய வானவியல் அறிஞர்கள் கணித்துள்ளனர். (கட்டுரையாளர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clydzv34p70o

மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த உலங்கு வானூர்தி விபத்து

2 months 2 weeks ago
குரூப் கேப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி Published By: Digital Desk 3 04 Dec, 2025 | 01:57 PM அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிக் கொண்டிருந்தபோது வென்னப்புவ, லுனுவில பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி குரூப் கேப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ள ரத்மலானை, இல்லத்திற்கு இன்று (04) முற்பகல் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், அவரது மனைவி, பெற்றோர், சகோதர சகோதரிகள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/232425
Checked
Sat, 02/21/2026 - 19:17
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed