புதிய பதிவுகள்2

முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்

2 months 2 weeks ago
இரண்டு வரியிலேயே முடித்திருக்க வேண்டிய கறுத்தது வீணாக இரண்டு பந்திகள் உதவி செய்ய போனவன் பொருட்களுடன் போகிறான் படம் பிடிக்க போனவன் காமெராவுடன் போகிறான்

முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்

2 months 2 weeks ago
அது சரி, அது என்ன பெட்டிக்கடை சமாச்சாரம்? எதற்கெடுத்தாலும் பெட்டிக்கடையை மறக்க முடியாமலுள்ளது உங்களுக்கு. என்னை நோக்கி வரும் கேள்விகளுக்கு நான் பதிலளித்துக்கொண்டுதான் இருக்கிறேன், ஒருவேளை நீங்கள் கடந்து சென்றீர்களோ தெரியவில்லை. நிதானமாக மீண்டும் சென்று பாருங்கள். ஒரு தலைப்பில் கேள்வி கேட்பீர்கள், பின்னர் வேறு தலைப்புகளுக்கு மாறி குடைவீர்கள், அதற்காக நான் ஒன்றும் செய்ய முடியாது. என்னுடைய பதிவுகள் எப்படியானவை என்பது வாசகர்களுக்குத்தெரியும், நீங்கள் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. சாணக்கியன் சிங்களகட்சியில் இருக்கும்போதுதான் தமிழ் மக்கள் வகைதொகையின்றி கொல்லப்பட்டார்கள், சுமந்திரன் தமிழ் மக்களின் பிரதிநிதியென்று பாராளுமன்றத்தில் இருக்கும்போதுதான் தாங்கள் கொன்றுகுவித்த மக்களின் தொகையை குறைத்து மஹிந்த அரசு கூறியது, அப்போ இந்த சுமந்திரனும் சாணக்கியனும் கேள்வி கேட்டார்களா? விமர்ச்சித்தார்களா? இயற்கையழிவு, யாரும் வெளியே வரமுடியாதநிலை, அழிவு ஒரு மாகாணத்தில் மட்டுமா நடந்தது? ஆளணி பத்தாது எல்லாவறையும் உடனடியாக கணக்கிடுவதற்கு, தமக்கு கிடைக்கும் தகவல்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள், உதவி வேண்டி கோரிக்கை வைக்கப்படுகிறது, மீட்ப்புப்பணி தங்களிடமுள்ள வளங்களை வைத்து தொடர்கிறது, விமர்ச்சிக்கும் நேரமா இது? ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதி விமர்ச்சித்துக்கொண்டிருப்பாரா? அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு கொடுப்பாரா? அவர் தமிழ் மக்களுக்கு நன்மை செய்திருந்தால் ஏன் மக்கள் அவரை நிராகரித்தனர்? கௌரவமாக வெளியேறாமல் ஏன் குறுக்கு வழி தேடுகிறார்? இவர் என்னதான் விமர்ச்சித்தாலும் இவரை யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை, இவர் ஒரு வாய்ச்சவடால். அப்படியேதுமிருந்திருந்தால் என்னை வம்புக்கிழுக்குமுன் அந்த பட்டியலை இணைத்திருப்பார். பாவம் அவர், சுமந்திரனின் மேலுள்ள அனுதாபம் அப்படி அழுக்காறை கொட்டித்தீர்க்கிறார், அவரது குறைகளை சுட்டிக்காடுபவர் மேல்.

மாவளி கண் பார்

2 months 2 weeks ago
புலவரே, நான் தமிழர் இல்லாவிட்டால் வேற என்னவாம்.....................🤣. இதை நான் தான் எழுதினேன்.............. கொழுக்கட்டைகளை அருகில் வைத்துக் கொண்டு ஒரே மூச்சில் எழுதியது இது................. பச்சை தமிழன் ஆக்கும்................🤣.

மாவளி கண் பார்

2 months 2 weeks ago
இதை எழுதியவர் தமிழ்நன்றாகத்த தெரிந்த தமிழரல்லாதவர் போல் தெரிகிறது.(கருணாநிதியைப்போல)அவருக்கு ஆரியம் திலாவிடம்தான் எழுத தோன்றுகிறது. தமிழர் பண்பாடு என்று எழுத ஏதோ தடுக்கிறது. https://youtu.be/CWOiUezgJZg?si=jdywKujCFFGDyAsx

இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவித்த தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள்!

2 months 2 weeks ago
இந்தியாவின்அடிவருடிகளில் அடைக்கலநாதன் மிஸ்ஸிங்.ஆழிப்பேரலை அழிவின்போது தமிழர்பகுதிகள்தான் பெரிதாகப்பாதிக்கப்பட்டது. தமிழர்களைத்தவிர யாரும்உதவவில்லை.2009 இறதியுத்தத்தில் தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசு குண்டு மழை பொழிந்த போது எந்த நாடும் தமிழ்களுக்காக ஒரு அனுதாபக்குரல்கூடக் கொடுக்கவில்லை. இந்தியா இந்த இனப்படுகொலைக்கு முழு அளவில் பின்னணியில் இருந்தது.நேரடியாகவும் பங்கு கொண்டது. இப்போது மட்டும் என்ன அக்கறை?அதுவும் இந்தியாவை எப்போதுமே எதிர்த்த ஜேவிபியின் ஆட்சியில் இவ்வளவு கரிசனை? இந்தியா எவ்வளவுக்கு இறங்கிப் போனாலும் சிறிலங்கா சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் வைத்திருக்கும் நட்பை ஒரு போதும் முறிக்காது.

மாவளி கண் பார்

2 months 2 weeks ago
நான் மட்டும் குழம்பவில்லை, ஊர் உலகத்தில் என்னைப் போலவே அண்ணன்மார்களும் இருக்கின்றார்கள் என்று சந்தோசமாக இருக்கின்றது...................😜. சொக்கப்பனை = சொக்கனின் பனை என்கின்றார்கள்............. கொழுக்கட்டை கிடைக்கும் என்றால், பனை பானை சொக்கன் சொர்க்கம் எப்படிச் சொல்லச் சொல்லுகின்றார்களோ அப்படியே சொல்லிவிடுவம்.....................🤣.

மாவளி கண் பார்

2 months 2 weeks ago
எங்கள் ஊரில் பனை ஓலை மற்றும் மட்டைகள் கொண்டு உயரமாக ஒரு மேடை போல அமைத்து அதற்குள் உணவுப்பண்டங்களை வாழை இலையில் சுற்றி ( பொங்கல் , மோதகம் , கொழுக்கட்டை போன்றவையே ) வைத்துப் பின்னர் எரிய விடுவார்கள் - எரிந்து முடிந்ததும் நாங்கள் முண்டியடித்து அந்த வெக்கைக்குள்ளும் உள்ளே இருக்கும் உணவுப்பண்டங்களை எடுத்துக் கொள்வோம் 😂 இந்த மாவளி பற்றி அறிந்திருக்கவில்லை

லண்டனில் கத்திக் குத்துத் தாக்குதல்: கரவெட்டி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

2 months 2 weeks ago
சாடிக்கான் லண்டன் மேஜரான பின் லண்டனில் வன்முறை களவு சமூக விரோத சட்டவிரோதச் செயல்கள் எல்லாமே அதிகரித்துவிட்டன.

முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்

2 months 2 weeks ago
ஒரு சிலர் பதில் சொல்லாமல் கேள்வி கேட்பதிலேயே குறியாக இருப்பார்கள் . சுமந்திரன் அவர்கள் ஆடிய ஆட்டத்தினால் தான் கடந்த தேர்தலில் மக்களால் தமிழர்களின் அரசியல் மேடையில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர். இப்படி நடக்கும் வாய்ப்பு இருக்கும் என்று ஏற்கனவே அவதானமாக இருந்த சுமந்திரன் தமிழரசு கட்சியை தன வசப்படுத்தி இப்போதும் பின் கதவால் நுழைய நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றார் எத்தனை தரம் தேர்தலில் போட்டியிட்டாலும் சுமந்திரனுக்கு இனிமேல் தேசியப்பட்டியலைத் தவிர வேறு வழியில்லை அதனால் தான் இப்போது கிழக்கில் சாணுக்கு முழம் போடுகின்றார் சரி அய்யா ஜஸ்டின் அவர்களே சுமந்திரனால் தமிழர்களுக்கு நிகழ்ந்த அதிசயங்களை நீங்களே ஒரு பட்டியலில் தாருங்களேன்

யாழ் களமூடாக அறிமுகமான வில்லுப்பாட்டு இராஜன் காலமானார்.

2 months 2 weeks ago
காலஞ்சென்ற யாழ் கள உறுப்பினர் சோழியான் அண்ணா ஊடாக அறிமுகமானவர் இராஜன் அண்ணா. அப்போதைய புலம்பெயர் காலக்கட்டத்தை மையமாக வைத்து வில்லிசிசைப் பாடல்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர். அப்போது இளைய பராயத்தினரின் கருத்துக்களையும் நடைமுறைகளையும் உள்வாங்க அன்றைய காலத்தில் பல்கலையில் கல்வி பயின்று கொண்டிருந்த எங்களையும் அணுகி வில்லிசைக்கு கதை எழுதித்தரச் சொல்ல.. எழுதிக் கொடுக்க அதையும் வில்லிசையாக்கி சமூகப் படைப்பாக்கி மகிழ்ந்தவர்கள் மகிழ்வித்தவர்கள் சோழியான் அண்ணாவும் இராஜன் அண்ணாவும். யாழ் களத்தில் மட்டுறுத்தினராகவும் இருந்தவர். மிகவும் பண்பான மனிதர். எம் எஸ் என் காலத்தில் தினமும் பல விதமான விடயங்களை உரையாட வருவார். சோழியான் அண்ணாவின் நெருங்கிய நண்பரும் கூட. இப்போ இருவரும் எம்மிடையே இல்லை என்பது மிகவும் கவலைக்குரிய மன வேதனை அளிக்கும் விடயம். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் உறவினர் நண்பர்களோடு எமது இரங்கலையும் பகிர்ந்து கொள்கிறோம். கண்ணீஈரஞ்சலியும்.

மாவளி கண் பார்

2 months 2 weeks ago
மாவளி கண் பார் -------------------------- சொக்கப்பானை தான் அதன் பெயர் என்று நினைத்திருந்தேன். ஐம்பது வயதில் கூட அப்படித்தான் நினைத்திருந்தேன். முன்னர் இறைவனுக்கும், மனிதர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்த காலம் ஒன்றில் இப்படியான ஒரு நெருப்புக்குள் புகுந்து சொர்க்கத்திற்கு போகும் ஒரு வழி இருந்திருக்கின்றது போல என்று ஒரு கதையை எனக்கு நானே சொல்லியும் இருக்கின்றேன். அந்தக் காலங்களில் கடவுள் அடிக்கடி தோன்றி மனிதர்களை காப்பாற்றிய கதைகள் ஏராளம் உண்டு தானே. சொக்கப்பானையின் நெருப்புக்குள் புகும் மனிதர்களையும் கடவுள் காப்பாற்றினார் ஆக்கும் என்று நான் நினைத்ததில் பெரிய பிழை என்று எதுவும் இல்லை. நடுவில் பச்சை தென்னை மரம் ஒன்றையே வைத்திருந்தார்கள் என்று நினைக்கின்றேன். நீண்ட காலமாக இந்த நிகழ்வை நேரடியாக பார்க்கும் சந்தர்ப்பங்கள் எனக்கு அமையவில்லை. 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. நட்ட தென்னை மரத்தைச் சுற்றி கூம்பு வடிவில் பச்சை தென்னை ஓலைகளை கட்டியிருந்தார்கள். பின்னர் சடங்கு மற்றும் பூசைகளின் பின் அதை எரித்தார்கள். பச்சை ஓலைகள் வெடித்து வெடித்து எரிந்ததும், எரி துகள்கள் மின்னி மின்னிப் பறந்ததும், ஒரு சிறுவன் காற்சட்டையுடன் சற்றுத் தள்ளி நின்று ஆவென்று பார்த்ததும், சுற்றியுள்ள இடங்கள் இருட்டாக இருந்ததும், கார்த்திகை மாத ஈரமும் நேற்று நடந்தவை போல நினைவில் இருக்கின்றது. எரிந்தது தென்னை மரம் என்றபடியால் பனை பற்றிய யோசனையே என்றும் மனதில் எழவில்லை. சொக்கப்பனை என்ற சொல்லை முதலில் கண்ட போது அது எழுத்துப்பிழை என்றே நினைத்தேன். மக்கள் என்பதைக் கூட மாக்கள் என்று எழுதினாலும், அது மக்களே என்று அனுசரித்து வாசித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு நாங்கள் வந்துவிட்டோம். எழுத்துப்பிழைகள் ஒரு குற்றமே கிடையாது, 'விசயம் விளங்குது தானே.....................' என்று எழுத்துப்பிழைகளை ஏற்றுக் கொள்வதும், அமெரிக்க ஆங்கிலத்தை ஆங்கிலம் என்று ஏற்றுக் கொள்வதும் ஒன்றே. விசயம் விளங்குது தானே. நேற்றிரவு கூட பாடசாலையில் தமிழ் படிப்பித்த ஆசிரியர் பற்றி நினைக்க வேண்டியதாக இருந்தது. ஆறாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை அவரே தமிழும், சமயமும் படிப்பித்தார். அவர் எதுவுமே படிப்பிக்கவில்லை என்று தான் நேற்றிரவும் நான் முடிவெடுத்து இருந்தேன். பின்னர் அப்படியே நித்திரை ஆகிவிட்டேன். சொக்கப்பனை பற்றி அவர் வகுப்பில் ஒரு மூச்சுக் கூட விட்டதில்லை. ஆனால் மாக்கள் என்ற சொல்லை அவர் வகுப்பில் சில தடவைகள் சொல்லியிருந்தது இப்போது ஞாபகத்தில் வருகின்றது. அவருக்கு தமிழ் தெரிந்திருக்கின்றது, ஆனால் வகுப்பில் படிப்பிக்க வேண்டும் என்ற விசயம் விளங்கயிருக்கவில்லை போல. பனை தமிழர்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்த ஒன்று என்கின்றார்கள். பனை ஒன்றை நடுவில் வைத்து, பனை ஓலைகளால் கூம்பாக மூடி எரிப்பதே சொக்கப்பனை என்ற விளக்கத்தை இணையங்களில் பார்த்தேன். சொக்கனின் பனை சொக்கப்பனை. அந்தக் காலத்தில் விவேகானந்தா சபையினரால் நடத்தப்படும் சமயப் பரீட்சைகளில் இப்படி ஒரு கேள்வியையும் கேட்டிருக்கலாம். நான் ஐம்பது வயதுகள் வரும் வரையும் இப்படி விசயம் விளங்காமல் இருந்திருக்க வேண்டியதில்லை. ஆரியர் திராவிடச் சொத்துகளை எரித்து அழிப்பதற்கு இதை ஒரு வழியாகப் பயன்படுத்தினார்கள் என்கின்றார்கள். சமஸ்கிருத ஆதரவாளர்கள் தமிழை நெருப்பில் தள்ளி விட சொக்கப்பனையை உபயோகித்தார்கள் என்கின்றார்கள். ஆரியம் - திராவிடம் - தேசியம் அந்த நாட்களில் ஆஸ்பத்திரிகளில் கொடுத்த திரிபோசா மா போன்ற ஒன்று. அந்த மா இலவசமாகக் கிடைத்தது, ஆனால் மனிதர்களை உசாராக வைத்திருக்க உதவியது. ஆனால் நான் சொல்ல வந்த விசயம் அதுவல்ல. சொக்கப்பனையை பிடித்த உடன், மாவளி என்றால் என்ன என்பதே அடுத்த கேள்வியாக எழுந்தது. அடுத்த 50 வருடங்கள் காத்திருக்க முடியாது என்பதால் மாவளியைத் தேடினேன். வீட்டுக்கு முன்னால் நாலு திசைகளிலும் நாலு தீபச் சுட்டிகளை வைத்து விட்டு, அதை மூன்று தடவைகள் கைகளைத் தட்டிக் கொண்டு சுற்றவேண்டும். அப்படிச் சுற்றும் போது, 'மாவளி கண் பார். எங்களை கண் பார். எல்லோரையும் கண் பார்..................' என்று பாட வேண்டும். சங்கீத சாரீரம் இல்லாதவர்கள் வசனமாகக் கூட சொல்லிக் கொள்ளலாம். இது எந்த ஊர் வழக்கம் என்று கேட்காதீர்கள். இது எனக்கு தெரிய வரும்போது நான் குடும்பஸ்தனாகி இருந்தேன். அதுவரை காலமும் இப்படி ஒரு பாடல் இருக்கின்றது என்பதே தெரியாமல் இருந்ததற்கு ஆசிரியரை குறை சொல்வதா, பிறந்த வீட்டைக் குறை சொல்வதா, உற்றார் உறவுகள் நட்புகளை குறை சொல்வதா என்று ஒரே குழப்பமாக இருக்கின்றது. உங்கள் வீட்டில் இன்று என்ன செய்வீர்கள் என்று கேட்டிருக்கின்றார்கள். கொழுக்கட்டை என்ற சொல்லை விட மோதகம் என்னும் சொல் நல்ல ஒரு ஓசையுடன் வருவதால் மோதகம் என்று சொல்லியிருக்கின்றேன். மோதகமா........... அப்படி என்றால் என்ன என்று சிலர் திருப்பிக் கேட்டிருக்கின்றார்கள். கேட்டது தமிழ்நாட்டு நண்பர்கள் தான். அதற்குப் பிறகு வேறு வழியில்லாமல் வல்லின கொழுக்கட்டை என்ற சொல்லே கைகொடுத்தது. அவர்களில் ஒருவர் தனியே என்னைக் கூட்டிப் போய், 'அது மோதகம் இல்லை சார்....................... மோதஹம்................' என்று மோதகத்தின் ஓசையை ஒரு மந்திரம் போல ஆக்கினார். திராவிடருக்கு கொழுக்கட்டை, ஆரியருக்கு மோதஹம் என்று நான் நினைவில் வைத்துக்கொண்டேன். மோதகமா, மோதஹமா அல்லது கொழுக்கட்டையா என்னும் பெயர் பெரிய பிரச்சனையே அல்ல. மாவளி பாடி முடிந்து ஒரு ஐந்து நிமிடங்களின் பின் தான் அந்த வஸ்துவை சாப்பிட முடியும் என்பது தான் நடைமுறை. அதனாலேயே வாழ்வில் மாவளி முக்கிய ஒன்றாகிவிட்டது. கொழுக்கட்டையை காக்க வைக்கும் இந்த மாவளி என்ன சாமியாக இருக்கும் என்று தான் முதல் சந்தேகம் வந்தது. பின்னர் தான் இதுவும் பனையின் பொருட்களில் இருந்து செய்யப்படும் ஒன்று என்று தெரிந்தது. மேலே படத்தில் இருப்பது. பனையின் பூக்களை பதமாக எரித்து விறகாக்கி, பச்சை பனை மட்டையை இடையில் மூன்றாகப் பிளந்து, அதற்குள் பூ விறகை வைத்துக் கட்டி, எரித்து, தலைக்கு மேல் வேகமாகச் சுற்றும் ஒரு தமிழர் பாரம்பரியமே விளக்கீடு அன்று மாவளி செய்து சுற்றுதல் என்று தகவல்கள் சொல்கின்றன. தமிழர் சமூகங்களில் மிகப் பழைய காலத்தில் திருமணம் நடக்க வேண்டும் என்றால், முழுக் கல்லை தூக்கு, அரைவட்டக் கல்லை தூக்கு, குஸ்தி போடு என்று எல்லாம் சொல்வார்களாம். இந்த விடயத்துக்காக ஆரியர்கள் வில்லையே வளைத்து இருக்கின்றார்கள். அந்த நாட்களில் எங்கள் முன்னோர்கள் விளக்கீடு அன்று கொழுக்கட்டை வேண்டும் என்றால் மாவளி செய்து, கொழுத்தி, தலைக்கு மேல சுற்று என்றும் சொல்லியிருப்பார்கள் போல. வீரப் பரம்பரை தான், சந்தேகமே இல்லை, ஆனால் மாவளியையே சுற்றிக் கொண்டிருந்திருக்காமால், வெடிமருந்தையும் கண்டு பிடித்திருக்கலாம்.

இலங்கை: '2026 ஜனவரி வரை நிச்சயமற்ற சூழல் தொடரும்' – எச்சரிக்கும் புவியியல் நிபுணர்

2 months 2 weeks ago
05 Dec, 2025 | 05:37 PM யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மேலதிக 2 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதம் நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் (5) வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அந்த வகையில் இலங்கை தமிழ் அரசு கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த 23 உறுப்பினர்கள் வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளை சேர்ந்த 21 உறுப்பினர்கள் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் இன்றைய சபை கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், வாக்கெடுப்பினைத் தொடர்ந்து, மேலதிக இரண்டு வாக்குகளால் வரவு - செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. https://www.virakesari.lk/article/232546

டிசம்பர் 9 முதல் 11 வரை மழை அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்

2 months 2 weeks ago
டிசம்பர் 9 முதல் 11 வரை மழை அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம் Dec 5, 2025 - 03:49 PM நாட்டில் நிலவும் வடகீழக்கு பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக டிசம்பர் மாதம் 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் காற்றின் வேகமும் அதிகரிக்கும் என அதன் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார். எனினும், இடைப் பருவப்பெயர்ச்சி வானிலையுடன் ஒப்பிடுகையில் வடகீழக்கு பருவப்பெயர்ச்சியின் போது இடியுடன் கூடிய மழை குறைவானதாகவே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இந்த வடகீழக்கு பருவப்பெயர்ச்சி தீவிரமடைவதன் காரணமாக டிசம்பர் 9ஆம் திகதிக்குப் பின்னர் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என்பதோடு, எந்நேரத்திலும் இப்பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனவும் அதுல கருணாநாயக்க தெரிவித்தார். அத்துடன், இப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், 75 மி.மீ. அல்லது 100 மி.மீ. அளவிலான மழை பெய்யக்கூடும் எனவும் அவர் கூறினார். நாட்டின் ஏனைய மாகாணங்களில், குறிப்பாகத் தென்மேற்குப் பகுதியில் இக்காலப்பகுதியில் இடியுடன் கூடிய மழை இல்லாவிட்டாலும் மழை பெய்யக்கூடும் எனவும் அதுல கருணாநாயக்க குறிப்பிட்டார். இதனிடையே, இலங்கைக்குத் தென்கிழக்குத் திசையில் வளிமண்டலத் தளம்பல் நிலை காணப்படுவதாகவும், ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை இந்நிலை நீடிக்கக்கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். நாட்டைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை உருவானமை வடகீழக்கு பருவப்பெயர்ச்சி தீவிரமடைவதற்குக் காரணமாக அமைந்துள்ளதெனக் குறிப்பிட்ட அதுல கருணாநாயக்க, வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள இந்தத் தளம்பல் நிலை இலங்கைக்குத் தொலைவில் தென்கிழக்குத் திசையில் அந்தமான் தீவுகளுக்கு அருகில் காணப்படுவதாகக் குறிப்பிட்டார். இதன் காரணமாக டிசம்பர் 9ஆம் திகதிக்குப் பின்னர் கடல் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என்பதால், மீனவர்களும் கடற்பயணிகளும் எதிர்கால அறிவித்தல்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmispqmzc02f1o29nffix7kpm
Checked
Sun, 02/22/2026 - 07:21
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed