2 months 2 weeks ago
வரலாற்றில் மிகப் பெரிய பீபா உலகக் கிண்ணத்துக்கான அணிகளுக்குரிய பகிரங்க குலுக்கல் இன்று 05 Dec, 2025 | 08:17 PM (நெவில் அன்தனி) கால்பந்தாட்ட வரலாற்றில் முதல் தடவையாக 48 நாடுகள் பங்குபற்றும் மிகப் பெரிய FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி அமெரிக்க கண்டத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது. உலகக் கிண்ணப் போட்டிக்கான அணிகளைக் குழுநிலைப் படுத்தும் பகிரங்க குலுக்கல் வொஷிங்டன் டிசியில் அமைந்துள்ள கென்னடி நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (05) இரவு நடைபெறவுள்ளது. ஐக்கிய அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் கூட்டாக உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியை நடத்தவுள்ளன. உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் மூன்று நாடுகள் கூட்டு சேர்ந்து நடத்துவது இதுவே முதல் தடவையாகும். 2002 உலகக் கிண்ணப் போட்டியை ஜப்பான், தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகள் கூட்டாக நடத்தியிருந்தன. அதுவே கூட்டாக நடத்தப்பட்ட முதலாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியாகும். நான்கு ஜாடிகளில் தலா 12 நாடுகள் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட இதுவரை 42 நாடுகள் தகுதிபெற்றுள்ளதுடன் இன்னும் 6 நாடுகள் தகுதிபெறவுள்ளன. இந்த 48 நாடுகளும் நான்கு ஜாடிகளில் நிரல்படுத்தல் பிரகாரம் இடம்பெறுகின்றன. ஜாடி 1: கனடா, மெக்சிகோ, ஐக்கிய அமெரிக்கா (இந்த மூன்றும் கூட்டு வரவேற்பு நாடுகள்), ஸ்பெய்ன், நடப்பு உலக சம்பியன் ஆர்ஜன்டீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, பிறேஸில், போர்த்துக்கல், நெதர்லாந்து, பெல்ஜியம், ஜேர்மனி. ஜாடி 2: குரோஷியா, மொரோக்கோ, கொலம்பியா, உருகுவே, சுவிட்சர்லாந்து, ஜப்பான், செனகல், ஈரான், தென் கொரியா, ஈக்வடோர், ஆஸ்திரியா, அவுஸ்திரேலியா. ஜாடி 3: நோர்வே, பனாமா, எகிப்து, அல்ஜீரியா, ஸ்கொட்லாந்து, பரகுவே, டியூனிசியா, கோட் டி'ஐவொயர் (ஐவரி கோஸ்ட்), உஸ்பெகிஸ்தான், கத்தார், சவூதி அரேபியா, தென் ஆபிரிக்கா. ஜாடி 4: ஜோர்தான், கபோ வேர்டே, கானா, கியூராகாவோ, ஹெய்ட்டி, நியூஸிலாந்து, ஐரோப்பிய ப்ளே ஓவ் ஏ, பி, சி, டி, FIFA ப்ளே ஓவ் சுற்றுப் போட்டி 1, 2. ஜாடி 1இல் இடம்பெறும் 12 அணிகளும் A இலிருந்து L வரை 12 குழுக்களில் முதல் அணிகளாக குலுக்கல் மூலம் நிரல்படுத்தப்படும். 2026 உலகக் கிண்ணப் போட்டிகளை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடுகள் என்ற வகையில் ஜாடி 1இல் (Pot 1) இடம்பெறும் மெக்சிகோ, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகியன வெவ்வேறு நிறங்களிலான பந்துகளைக் கொண்டு முதல் அணிகளாக நிரல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று அணிகளும் ஏ 1 - மெக்சிகோ (பச்சை பந்து), பி 1 - கனடா (சிவப்பு பந்து), டி 1 - ஐக்கிய அமெரிக்கா (நீல பந்து) என நிரல்படுத்தப்படும். ஜாடி 2இல் இடம்பெறும் அணிகள் 12 குழுக்களில் 2ஆவது அணிகளாகவும் ஜாடி 3இல் இடம்பெறும் அணிகள் 3ஆவது அணிகளாகவும் ஜாடி 4இல் இடம்பெறும் அணிகள் 4ஆவது அணிகளாகவும் குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்படும். சம அளவிலான போட்டித் தன்மை சம அளவிலான போட்டித் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அரை இறுதிகளுக்கு நான்கு வெவ்வேறு குழுக்களிலிருந்து அணிகள் தெரிவாகும். அதாவது பீபா தரவரசையில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் ஸ்பெய்ன், ஆர்ஜன்டீனா ஆகியன ஒரு பகுதியில் மேல் பாதி மற்றும் கீழ் பாதியாக (Top half and Bottom half) விளையாடும். அதேபோன்று தரவரிசையில் 3ஆம், 4ஆம் இடங்களில் உள்ள பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியன மற்றொரு பகுதியில் மேல் பாதி மற்றும் கீழ் பாதியாக விளையாடும். இந்த அணிகள் தத்தம் குழுக்களில் முதலிடத்தைப் பெற்றால் அரை இறதிவரை ஒன்றை ஒன்று எதிர்கொள்ள மாட்டாது. 12 குழுக்களில் நடத்தப்படும் உலகக் கிண்ணப் போட்டியில் ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்தைத் தவிர்ந்த ஏனைய கூட்டு சம்மேளனங்களை சேர்ந்த இரண்டு அணிகள் ஒரு குழுவில் இடம்பெறாது என கொள்கை அளவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு இது பொருந்தாது. ஏனெனில் ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்தைப் பிரதிநிதித்தவப்படுத்தும் 16 அணிகள் உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ளன. அதேவேளை, ஒரே குழுவில் இரண்டு ஐரோப்பிய அணிகளுக்கு மேல் இடம்பெறாது. பீபா உலகக் கிண்ண குலுக்கலில் பங்குபற்றும் உலகத் தலைவர்கள் வொஷிங்டன் டி சி கென்னடி நிலையத்தில் இலங்கை நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 42 அணிகளுக்கான பகிரங்க குலுக்கலின் போது வரவேற்பு நாடுகளின் தலைவர்கள் உட்பட இன்னும் பல நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கனடா பிரதமர் மார்க் கார்னி, மெக்சிகோ ஜனாதிபதி குளோடியா ஷெய்ன்போம், அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் ஆகிய மூவரும் இறுதி குலுக்கலின்போது அரங்கில் பிரசன்னமாகி இருப்பர். உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ள 16 நகரங்களில் உள்ள இலட்சக்கணக்கான இரசிகர்களிடம் போட்டிகளைக் கண்டு களிக்க வருகை தருமாறு மூன்று தலைவர்களும் அழைப்பு விடுக்கவுள்ளனர். அத்துடன் கால்பந்தாட்ட கூட்டு சம்மேளனங்களின் தலைவர்கள் உட்பட பிரதிநிதிகளும் கலந்து இன்றைய வைபவத்தில் பங்குபற்றவுள்ளனர். ஈரான் கால்பந்தாட்ட சங்கத் தலைவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த சங்கத்தைச் சேர்ந்த நான்கு பிரதிநிதிகள் ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ளதாக அறியக்கிடைக்கிறது. பீபா உலகக் கிண்ணம் 2026 பீகா உலகக் கிண்ணப் போட்டிகள் 2026 ஜூன் 11ஆம் திகதி முதல் ஜூலை 19ஆம் திகதிவரை நடைபெறும். 72 குழுநிலைப் போட்டிகள், இறுதிப் போட்டி மற்றும் 3ஆம் இடத்துக்கான போட்டிகள் உட்பட 32 நொக் அவுட் போட்டிகளுளுடன் மொத்தம் 104 போட்டிகள் நடைபெறும். உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தை மூன்றாவது தடவையாக அரங்கேற்றவுள்ள மெக்சிக்கோ முதலாவது போட்டியை ஜூன் 11ஆம் திகதி தனது அணியின் பங்கேற்புடன் மெக்சிகோ சிட்டி விளையாட்டரங்கில் அரங்கேற்றும். மெக்சிகோவில் மொத்தம் 13 போட்டிகள் நடத்தப்படும். கனடா முதல் தடவையாக உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்துகின்றது. அந்த நாட்டிலும் 13 போட்டிகள் நடத்தப்படும். கனடா தனது ஆரம்பப் போட்டியை டொரொன்டோ விளையாட்டரங்கில் ஜூன் 12ஆம் திகதி நடத்தும். ஐக்கிய அமெரிக்காவில் மொத்தம் 78 போட்டிகள் நடைபெறும். ஐக்கிய அமெரிக்காவின் ஆரம்பப் போட்டி லொஸ் ஏஞ்சலிஸில் ஜூன் 12ஆம் திகதி நடைபெறும். உலக சம்பியனைத் தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப் போட்டி நியூ யோர்க் நியூ ஜேர்சி விளையாட்டரங்கில் ஜூலை 19ஆம் திகதி அரங்கேற்றப்படும். இப் போட்டிகளை முன்னிட்டு 60 இலட்சம் டிக்கெட்கள் விற்பனை செய்யப்படவுள்ளதுடன் அவற்றில் 2 இலட்சம் டிக்கெட்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. https://www.virakesari.lk/article/232570
2 months 2 weeks ago
இந்த தொடரில் எனது அபிமான வீரர்களான டி காக் மற்றும் யெஸ்வால் சதம் அடித்தது கண்னுக்கு குளிர்சியாக இருந்தது.பவுமா இரன்டு இனிங்சிசும் முறையே 4-2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அரைச் சதத்தை தவற விட்டது அதிர்ஸ்ட்டம் இன்மை.
2 months 2 weeks ago
“சாகர் பந்து” நடவடிக்கையின் கீழ் இலங்கைக்கு உதவி : 9வது இந்திய நிவாரண விமானம் கட்டுநாயக்கவை வந்தடைந்தது! Published By: Digital Desk 1 07 Dec, 2025 | 12:10 PM இந்தியாவால் பெயரிடப்பட்ட "சாகர் பந்து" நடவடிக்கையின் கீழ் இலங்கைக்கு அனர்த்த நிவாரண உதவிகளை ஏற்றிச் செல்லும் 9வது இந்திய விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானத்தில் 110 அடி நீளம், 65 மெட்ரிக் தொன் எடையும் கொண்ட பெய்லி பாலம், ஒரு ஜேசிபி பேக்ஹோ வாகனத்துடன் இந்திய இராணுவ பொறியியலாளர் படையின் 13 பொறியாளர்கள் நாட்டை வந்தடைந்தனர். இந்திய விமானப்படையின் மிகப்பெரிய சரக்கு விமானமான சி-17, நேற்று (6) பிற்பகல் 3.15 மணிக்கு இந்தியாவின் ஆக்ராவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. இலங்கை இராணுவ பொறியியலாளர் படையின் அதிகாரிகள் குழுவும், இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் குழுவும் இதனை வரவேற்றனர். https://www.virakesari.lk/article/232659
2 months 2 weeks ago
இந்தோனேசியாவில் வெள்ளப் பேரழிவு: பலியானோரின் எண்ணிக்கை 900ஐ கடந்தது ; நூற்றுக்கணக்கானோர் மாயம்! Published By: Digital Desk 1 07 Dec, 2025 | 12:02 PM இந்தோனேசியாவில் வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900ஐ கடந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானவர்களை காணவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரம் மலாக்கா ஜலசந்தியில் உருவான சூறாவளியால் 100,000க்கும் மேற்பட்ட வீடுகள் அழிவடைந்துள்ளன. இது தென்கிழக்காசிய நாட்டின் சில பகுதிகளில் மழை மற்றும் மண்சரிவுகளை ஏற்படுத்தியது. இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் அண்மைய வாரங்களில் ஆசியாவைத் தாக்கிய பல தீவிர வானிலை நிகழ்வுகளில் ஒன்றாகும். மேலும், இலங்கை, தாய்லாந்து, மலேசியா மற்றும் வியட்நாமில் ஒட்டுமொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை எட்டியுள்ளது. இந்தோனேசியாவின் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஆச்சே தமியாங்கில், வெள்ளத்தால் பல கிராமங்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி, வாழ்விடங்கள் அடித்துச் செல்லப்பட்டதாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர். லிண்டாங் பவா கிராமத்தில் உயிர் பிழைத்த ஒருவர் மக்கள் தங்கள் வீடுகளின் கூரைகளின் மீது அமர்ந்து தங்களது உயிரை காப்பாற்றிக்கொண்டதாக சர்வதேச ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார். "மூன்று நாட்கள் சாப்பிடாமலும் குடிக்காமலும் தங்கள் நான்கு வயது குழந்தைகளுடன் தங்கள் வீடுகளின் கூரைகளின் மீது அமர்ந்து உயிரை காப்பாற்றிக்கொண்டவர்களும் இருந்தனர்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது கிராமத்தில் சுமார் 90 சதவீத வீடுகள் அழிக்கப்பட்டதாகவும், 300 குடும்பங்கள் செல்ல இடமில்லாமல் போனதாகவும் அவர் கூறியுள்ளார். அங்கு ஏற்பட்ட வெள்ளம் ஒரு சிறைச்சாலையையே மூழ்கடிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியபோது, கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும், அவர்களை அனுப்புவதற்கு வேறிடம் இல்லை என்றும் அதிகாரிகள் கூறியதாகவும் இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிபோல்கா நகரம் மற்றும் மத்திய தபனுலி ஆகிய இரண்டு பகுதிகளுக்கான நில அணுகல் ஞாயிற்றுக்கிழமை வரை துண்டிக்கப்பட்டிருந்தது. உதவிகள் விமானம் மற்றும் கடல் வழியாக மட்டுமே அவர்களை அடைய முடிந்தது. சில பகுதிகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் கொள்ளை நடந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/232654
2 months 2 weeks ago
பாகிஸ்தானின் முப்படைகளின் பிரதானியாக அசிம் முனீர் நியமனம் 06 Dec, 2025 | 11:20 AM பாகிஸ்தானில் இதுவரை இல்லாத புதிய உயர்பதவியாக “ முப்படைகளின் பிரதானி” (Chief of Defence Forces – CDF) உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவியை உருவாக்க, பாகிஸ்தான் அரசியலமைப்பின் 243 ஆவது பிரிவில் 27வது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் “ஆபரேசன் சிந்தூர்” நடவடிக்கையில் பாகிஸ்தான் எதிர்கொண்ட கடும் பின்னடைவை அடுத்து, பாதுகாப்பு அமைப்பை மறுசீரமைக்கும் நோக்கில் பாகிஸ்தான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தற்போதைய இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் அசிம் முனீருக்கு பதவி நீட்டிப்பு வழங்கும் வகையிலும் இந்த புதிய பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் முதல் முப்படைகளின் பிரதானியாக அசிம் முனீரை நியமிக்கும் பிரதமரின் பரிந்துரையை அந்நாட்டு ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி அங்கீகரித்து உள்ளார். இந்த நியமனம் 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் என்று ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய பதவியை ஏற்றுக்கொள்ளும் அசிம் முனீர், இதுவரை வகித்து வந்த இராணுவத் தளபதி (Army Chief) பொறுப்பையும் தொடர்வார். முப்படைகளின் பிரதானி பதவிக்கு உட்பட்ட அதிகாரம், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை என மூன்று முப்படைகளையும் ஒரே கட்டமைப்பின் கீழ் ஒருங்கிணைக்க வழிவகுக்கும். இதுவரை முப்படைகளின் அதிகாரமும் கட்டுப்பாடும் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையின் கீழ் இருந்தது. இனி அந்த அதிகாரம் ஒரே உயரதிகாரியிடம் ஒருங்கிணைக்கப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பு அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த புதிய பதவி, பாகிஸ்தானின் பாதுகாப்பு கொள்கையில் முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/232591
2 months 2 weeks ago
எந்ந நோயால் பாதிக்கப்பட்டவனுக்கும் தெரியும் தனக்கு நோய் உள்ளது என்று.ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டவனுக்கு மட்டும் அது தெரியாது.இது ஒரு பெரிய கொடுமை.
2 months 2 weeks ago
'டாடா காப்பாத்துங்க' : மண் சரிவால் சேறும் சகதியும் புகுந்த வீட்டிற்குள் கேட்ட குழந்தையின் குரல் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 7 டிசம்பர் 2025, 06:41 GMT புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் நிலச்சரிவுகளால் பலர் உயிரிழந்திருக்கும் நிலையில், பதுளை மாவட்டத்தில் மார்பளவு மண்ணில் புதைந்த பலர் துணிச்சலான சிலரது முயற்சியால் உயிரோடு மீட்கப்பட்டிருக்கிறார்கள். என்ன நடந்தது? இலங்கையின் உவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் பண்டாரவிளை நகரிலிருந்து சற்றுத் தொலைவில் அமைந்திருக்கிறது கவரக்கெல பகுதி. தேயிலைத் தோட்டங்கள் சூழ அமைந்திருக்கும் இந்த மலைப் பிரதேசத்தில்தான் நிலச்சரிவில் சிக்கிய பலர் உயிரோடு மீட்கப்பட்டார்கள். கவரக்கெலவில் வசிப்பவர்கள் பெரும்பாலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள். தித்வா புயலின் தாக்கம் இலங்கையை நெருங்கியதும் இங்கும் தொடர்ச்சியாக மழை பெய்ய ஆரம்பித்தது. நவம்பர் 27ஆம் தேதிவரை எல்லாம் வழக்கம் போலவே இருந்தது. நவம்பர் 27ஆம் தேதியன்றும் காலையிலிருந்து வழக்கமான மழைதான் பெய்துகொண்டிருந்தது. பிற்பகலுக்கு மேல் மழையின் தீவிரம் அதிகமானது. இந்த நிலையில், கவரக்கெலயின் பிரதான பாதையை ஓட்டியுள்ள மலைப் பகுதிகள் சிறிய அளவில் சரிய ஆரம்பித்தன. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அங்கிருந்த ஆட்களை ஒரு வாகனத்தை வைத்து வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல முயன்றார்கள். ஆனால், வாகனத்தில் ஆட்கள் ஏறி, வாகனம் நகர்வதற்குள் மழை நீர் அதிகரிக்கவே அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. "அந்த நேரத்தில் இரு பக்கங்களில் இருந்தும் மண் சரிந்து, தண்ணீரோடு கலந்து வர ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்த கோவிலில் புதுப்பிக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்ததால் அங்கிருந்த பலகைகளையும் கயிறையும் வைத்து ஆட்களை மீட்டு, மற்றொரு பக்கம் அனுப்பிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில்தான் மலைப் பகுதியிலிருந்து பெரிய அளவில் மண் சரிய ஆரம்பித்தது" என்றார் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்களில் ஒருவரான ஆர். கஜேந்திரன். கவரக்கெலயின் பிரதான பாதையை ஓட்டி, கீழே இருந்த பகுதியில் சில வீடுகள் அடுத்தடுத்து அமைந்திருந்தன. மழை பெய்துகொண்டிருந்த அந்த நேரத்தில் பல வீடுகளில் இருந்த ஆட்கள் வெளியேறிவிட, மூன்று வீடுகளில் வசித்தவர்கள் உள்ளேயே இருந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளும் இருந்தன. அதில் ஒரு வீட்டில்தான் செல்வராஜ் - ரேணுகா தேவி தம்பதி வசித்துவந்தனர். அந்த மழை நாளில், அவர்களது வீட்டில் மூன்று பேரக் குழந்தைகளும் வந்திருந்தார்கள். இவர்களை சாப்பிட வைத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு, வீட்டிற்குள் சகதியும் தண்ணீரும் புகுந்ததாக செல்வராஜ் கூறினார். "எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஐயோ, நாம் போனாலும் பரவாயில்லை, நம் பேரப் பிள்ளைகளும் இதில் சிக்கிக் கொண்டுவிட்டார்களே என்று இருந்தது. குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு தப்பிக்க முயன்றேன். வெளியில் வரும்போது என் மனைவியின் சேலை எதிலோ சிக்கிக்கொண்டுவிட்டது. நானும் சகதியில் சிக்கினேன்" என்கிறார் செல்வராஜ். அந்த நேரத்தில் பக்கத்து வீட்டு இளைஞர் ஒருவரும் வேறு சிலருமாகச் சேர்ந்து குழந்தைகளையும் செல்வராஜ் தம்பதியையும் மீட்டுள்ளனர். தற்போது கவரக்கெலையில் ஒரு முகாமில் தங்கியிருக்கிறார்கள் செல்வராஜ் குடும்பத்தினர். "அந்தத் தருணத்தை இப்போது நினைத்தாலும் புத்தி ஏதோ ஆகிவிடுகிறது" என்று சொல்லும்போதே அவரது கைகள் நடுங்குகின்றன. செல்வராஜின் வீட்டிலிருந்த பேரக் குழந்தைகளில் அவருடைய மகள் தங்கேஸ்வரியின் குழந்தையும் ஒன்று. மழையும் வெள்ளமும் வரவும் தந்தையின் வீட்டை நோக்கி ஓடிவந்தார் தங்கேஸ்வரி. ஆனால், தந்தையின் வீடு நிலச்சரிவில் சிக்கியிருந்ததைப் பார்த்த அவர், அதில் சிக்கி தன் குழந்தையும் போய்விட்டது என்றுதான் முதலில் நினைத்துள்ளார். "நான் பாதி வழி வரும்போதே என் அப்பாவின் வீட்டில் மண் சரிந்துவிட்டதைப் பார்த்தேன். அவ்வளவுதான், என் குழந்தையை மீட்க முடியாது என நினைத்தேன். 'அப்பா வீட்டிற்கு குழந்தை அனுப்பினேன். அவர்கள் மண்ணுக்குள் போய்விட்டார்கள்' என கத்தினேன். சிறிது நேரத்திலேயே அப்பாவின் பக்கத்து வீட்டில் இருந்த பையன், பாப்பாவை மண்ணில் இருந்து எடுத்திருக்கிறார்கள் என்று சொன்னான்" என்கிறார் தங்கேஸ்வரி. குழந்தை மீட்கப்பட்டுவிட்டாலும், இந்த நிகழ்வை இப்போது விவரிக்கும்போதும் அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. படக்குறிப்பு,மண் சரிவில் சிக்கியவர்களை மீட்ட இளைஞர்கள் செல்வராஜ் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் இருந்த யோகத்தின் வீட்டில் அவரும் அவருடைய இரு குழந்தைகளும் மாமியாரும் இருந்தனர். கணவர், மழை நீரைத் திருப்பிவிடுவதாகச் சொல்லி வெளியில் போயிருந்தார். அந்த நேரத்தில் நிலச்சரிவு வந்துவிட, தன் குழந்தைகளை அருகில் இருந்த பாதை மீது தூக்கிப்போட்டுவிட்டு, அவரும் வெளியேறினார். ஆனால், மாமியார் உள்ளேயே சிக்கிக்கொண்டார். "என்ன செய்றதுன்னே எனக்குத் தெரியவில்லை. கத்திக்கொண்டே ஓடினேன். அப்போது மேலே இருந்து சில இளைஞர்கள் ஓடி வந்தார்கள். என் மாமியாரை யாராலும் காப்பாற்ற முடியாது என்றுதான் நினைத்தேன். ஆனால், எல்லோரும் சேர்ந்து அவரைக் காப்பாற்றிவிட்டார்கள்" என்கிறார் அவர். இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் கமல்ராஜ். இவர் வீட்டிற்குள்ளும் நிலச்சரிவால் சேறும் சகதியும் புகுந்தபோது வீட்டிற்குள் குழந்தை இருந்தது. அவர் தனது வீட்டிலிருப்பவர்களைக் காப்பாற்ற வந்தபோது மார்பளவுக்கு சேறும் சகதியும் நிறைந்திருந்தது. "சகதியால் சூழப்பட்டிருந்த வீட்டிற்குள் செல்லும்போது 'டாடா காப்பாத்துங்கன்னு' குழந்தையின் சத்தம் கேட்டது. பதற்றத்துடன் வீட்டிற்குள் சென்று பார்த்தால், யாரும் இருக்கும் இடமே தெரியவில்லை. குழந்தை எங்கே இருக்கிறாள் என்றே தெரியவில்லை. நான் தடவித் தடவி உள்ளே சென்றபோது 'டாடா வந்துட்டீங்களா' என்று குழந்தையின் குரல் கேட்டது. அவ்வளவுதான். வீட்டிற்குள்ளிருந்த ஒவ்வொருவரையும் பிடித்து இழுத்து வெளியில் வந்து சேர்த்தேன்" என்கிறார் கமல்ராஜ். "ஆனால், வீட்டை நெருங்கும்போது 'டாடா, என்னை எப்படியாவது காப்பாத்திடுங்க டாடா' என்ற குழந்தையின் குரல்தான் எனக்குத் தெம்பைக் கொடுத்தது. இல்லாவிட்டால் இது நடந்திருக்காது" என்கிறார் கமல்ராஜ். இங்கிருந்தவர்களின் துணிச்சலான முயற்சிகளால், இந்த நிலச்சரிவில் கவரக்கெலயில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட அனைவரும் இப்போது பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். வீட்டையும் பொருட்களையும் இழந்தவர்களுக்கு அரசு நிவாரண உதவிகளை அறிவித்திருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czj0mejxkk9o
2 months 2 weeks ago
நன்றி.
2 months 2 weeks ago
போற போக்கைப் பார்த்தால் நாட்டை முழுமையாக கட்டி எழுப்புவது மட்டும்மல்லாமல் அபிவிருத்தியும் செய்யலாம் போல.இந்த விடையத்தில் நம்பிக்கை உள்ளது.
2 months 2 weeks ago
950 மெட்ரிக் தொன் அவசர உதவி பொருட்களுடன் இன்று இலங்கை வரும் தமிழக நிவாரணக் கப்பல் Published By: Digital Desk 1 07 Dec, 2025 | 08:31 AM (லியோ நிரோஷ தர்ஷன்) 'டித்வா' புயல் மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளது. சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த மனிதாபிமான உதவிப் பொருட்கள் ஏற்றிய கப்பலை கொடியசைத்து அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வில் தமிழகத்திற்கான இலங்கை துணைத் தூதுவர் வைத்தியர். கணேசநாதன் கேதீஸ்வரன் உட்பட தமிழக அரசின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இது குறித்து தமிழகத்திற்கான இலங்கை துணைத் தூதுவர் வைத்தியர். கணேசநாதன் கேதீஸ்வரன் வீரகேசரிக்கு கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக, உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய மொத்தமாக 950 மெட்ரிக் தொன் பொருட்கள் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து கப்பல்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த 950 மெட்ரிக் டொன் நிவாரணப் பொதிகளில் பருப்பு, சீனி மற்றும் பால் மா போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பெருமளவில் உள்ளடங்குகின்றன. அத்துடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், 10,000 துவாய்கள் (TOWELS) 5,000 சேலைகள், 5,000 வேட்டிகள், 10,000 படுக்கை விரிப்புகள் மற்றும் 1,000 தற்காலிக கூடாரங்கள் அமைக்கும் பொருட்கள் (TARPAULIN) போன்ற அத்தியாவசியப் பொருட்களும் கப்பலில் ஏற்றப்பட்டுள்ளன. 'இந்த நெருக்கடியான நேரத்தில் இலங்கைக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் ஆலோசனைகளின் பிரகாரம், பேரிடர் இடம்பெற்ற மறுநாளே தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக அரசின் அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடியதுடன், அந்தப் பேச்சுவார்த்தைகள் ஊடாகவே மிக விரைவில் நிவாரணப் பொருட்களை அனுப்ப முடிந்தது. விரைவில் மேலும் சில நிவாரணப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை அனுப்புவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சமீபத்தில் 'தித்வா' புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையில் பெரும் உயிரிழப்புகளும், உடைமைகள் சேதங்களும் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துணையாக நிற்பதில் தமிழ்நாடு அரசு உறுதியுடன் உள்ளது என முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னதாக அறிவித்திருந்தார். இதேவேளை, மத்திய அரசின் 'சாகர் பந்து நடவடிக்கை' மூலம் இந்தியா ஏற்கனவே கடற்படை கப்பல்கள் மற்றும் விமானப் படைகள் வழியாக தேசிய பேரிடர் மீட்புப் படையினரை அனுப்பி, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதுடன், பல டொன் நிவாரணப் பொருட்களையும் வழங்கி வருகிறது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில், அவுஸ்திரேலியா, ஜப்பான், பாகிஸ்தான், சீனா, மாலைதீவுகள், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி இலங்கையின் மீட்சிக்குத் தோள் கொடுக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். https://www.virakesari.lk/article/232641
2 months 2 weeks ago
தொடரை வென்ற இந்தியா - குல்தீப், ஜெய்ஸ்வால் ஆட்டத்தின் போக்கை மாற்றியது எப்படி? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் எடுத்திருந்தார். இது அவரது முதல் ஒருநாள் சதமாகும். 6 டிசம்பர் 2025 இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை வென்றது. முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்கள் எடுத்தது. 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 39.5 ஓவர்களில், ஒரு விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. குறிப்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் எடுத்திருந்தார். இது அவரது முதல் ஒருநாள் சதமாகும். இதன் மூலம், மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சதம் அடித்த ஆறாவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 75 ரன்களும், விராட் கோலி ஆட்டமிழக்காமல் 65 ரன்களும் எடுத்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார். விராட் கோலி தொடரின் நாயகன் விருதை வென்றார். மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்ததால், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தொடரை வென்றுள்ளது இந்திய அணி. ராய்ப்பூரில் நடந்த இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, அதே நேரத்தில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,டி காக் 106 ரன்கள் எடுத்திருந்தபோது பிரசித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்து வீச முடிவு செய்தது. தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக ரயன் ரிக்கில்டன் மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர். ஆனால், தென் ஆப்பிரிக்காவிற்கு ஆரம்பத்திலே அதிர்ச்சி காத்திருந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில், ராகுலிடம் கேட்ச் கொடுத்து, ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் ரிக்கில்டன். அடுத்ததாக கேப்டன் டெம்பா பவுமா களமிறங்கினார். இந்த ஜோடி பத்து ஓவர்கள் வரை பொறுமையாகவே ஆடி வந்தது. அப்போது தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்திருந்தது. டி காக் 21 ரன்களும், டெம்பா பவுமா 19 ரன்களும் எடுத்திருந்தனர். அதன் பிறகு, டி காக் அதிரடியாக ஆடத் தொடங்கினார். மறுபுறம் பொறுமையாக ஆடிக்கொண்டிருந்த டெம்பா பவுமா 48 ரன்களில், ஜடேஜா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இதற்கு முந்தைய ஒருநாள் போட்டியில் பவுமா 46 ரன்கள் எடுத்திருந்தார். அதேபோல, இந்தத் தொடரில் ஜடேஜா வீழ்த்திய முதல் விக்கெட்டும் இதுதான். இரண்டாவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்த டி காக்- டெம்பா பவுமா பார்ட்னர்ஷிப் உடைந்தது இந்தியாவுக்கு உற்சாகத்தை அளித்தது. அதன் பின்னர் மேத்யூ ப்ரீட்ஸ்கே களமிறங்கினார். டி காக் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது (93 ரன்கள்), 28வது ஓவரில் பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார் மேத்யூ ப்ரீட்ஸ்கே. அவர் 24 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து களமிறங்கிய எய்டன் மார்க்கரமும் அதே ஓவரில், கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். டி காக் சதம் ஹர்ஷித் ராணா வீசிய 29வது ஓவரில், ஒரு சிக்ஸர் மூலமாக சதத்தை எட்டினார் டி காக். பின்னர் அவர் 32வது ஓவரில் பிரசித் பந்தில் ஆட்டமிழந்தார். 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன், 89 பந்துகளில் 106 ரன்களை எடுத்திருந்தார் டி காக். அப்போது தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை எடுத்திருந்தது. அதன்பிறகு, டெவால்ட் பிரெவிஸ் மற்றும் மார்கோ ஜான்சன் சிறப்பாக விளையாடி தென்னாப்பிரிக்க அணியின் ரன்களை உயர்த்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் 38வது ஓவரில், குல்தீப் இருவரையும் ஒரே ஓவரில் அவுட்டாக்கி, ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். 234/5 என்ற நிலையில் இருந்த தென்னாப்பிரிக்கா, 270 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குல்தீப் 10 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்து, 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். பிரசித் கிருஷ்ணாவும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அர்ஷ்தீப் சிங் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இந்தியா வெற்றிபெறுவதற்கு 271 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோஹித் சர்மா கூட்டணியின் அதிரடி பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,ரோஹித் சர்மா 54 பந்துகளில் 50 ரன்களை எட்டினார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி இந்திய அணிக்கு ஒரு உறுதியான தொடக்கத்தை அளித்தது. இருவரும் இணைந்து 155 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து 271 ரன்கள் என்ற இலக்கை எளிதான ஒன்றாக மாற்றினர். ரோஹித் சர்மா 54 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் அரை சதமடித்தார். இருப்பினும், 26வது ஓவரின் கடைசி பந்தில், 75 ரன்கள் எடுத்திருந்தபோது, கேசவ் மகாராஜ் பந்தில் ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. அவர் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன், 73 பந்துகளில் 75 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பிறகு, ஜெய்ஸ்வாலுடன் இணைந்த விராட் கோலி, அதிரடியாக அணியின் ரன்களை உயர்த்தினார். ஜெய்ஸ்வால் 111 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 100 ரன்களை எட்டினார். மறுமுனையில், கோலியும் அரை சதத்தைக் கடந்தார். இறுதியில், 39.5 ஓவர்களில் 271 ரன்களை எடுத்த இந்திய அணி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தத் தொடரில், இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இரண்டாவது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதேசமயம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், தென்னாப்பிரிக்கா இந்தியாவை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தது. அடுத்ததாக, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கும். முதல் போட்டி கட்டாக்கில் நடைபெறும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cre3vd3pyzdo
2 months 2 weeks ago
முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை காலமானார் 07 Dec, 2025 | 12:07 PM இலங்கையின் தலைசிறந்த பேச்சாளரான முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை தனது 98ஆவது வயதில் சென்னையில் காலமானார். அவர் 1956ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையும் அவருக்குச் சேரும். மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை முடித்த அவர், பின்னர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மேல் நிலைக் கல்வியை நிறைவு செய்தார். ஊடகவியலாளராகவும் செயல்பட்ட இராஜதுரை, ‘சுதந்திரன்’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றியுள்ளார். 1956ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் மட்டக்களப்பு தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக பாராளுமன்றம் சென்றார். தொடர்ந்து 1960 மார்ச், 1960 ஜூலை, 1965 மற்றும் 1970 ஆகிய தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். இலங்கை தமிழ் அரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்ததைத் தொடர்ந்து, 1977ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். 1979 பெப்ரவரி 10ஆம் திகதி, அவர் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், அவரை ஆளும் கட்சியில் இணைப்பதற்காக 1979 பெப்ரவரி 22ஆம் திகதி அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 1979 மார்ச் 7ஆம் திகதி, ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் அவர் இணைந்தார். இதனையடுத்து, அவருக்கு இந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார். அரசுப் பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர், சென்னையில் புலம்பெயர் வாழ்வை மேற்கொண்டு வந்த நிலையிலேயே அவர் காலமானார். அவரது மறைவுக்கு கொழும்பு சாயி மத்திய நிலையம் உள்ளிட்ட பல அமைப்புகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளன. அவரது இறுதிக்கிரியைகள் சென்னையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/232661
2 months 2 weeks ago
எங்கடை மக்களின் பிரதிநிதிகளுக்கு தெரியாத மனிதாபிமானத்தை, வெளிநாட்டுக்காரர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இனி அரசாங்கத்தின் மேல் விமர்சனம் குறைந்து, மறைந்து, நாங்களும் வாறோம் என்று கைகோர்க்க முண்டியடிப்பினம். சஜித்தின் கட்சியில் இருந்து ஒருவர் விலகிவிட்டார், அவர் அனுராவோடு சேர வாய்ப்புள்ளது. அனுரா அமைதியாக இருந்து செயலற்ற விமர்சனங்களுக்கு காது கொடுத்து நேரத்தை செலவழிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன செய்யவேண்டுமோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். மக்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள், அரசியல்வாதிகளின் பொறுப்பான செயலை. அனர்த்தநிவாரணங்களை கொள்ளையடித்தவர்களுக்கு இப்போ வாயூறும். அனர்த்த, அழிவு காலங்களில் மக்களோடு வாழ்ந்து இழப்புகளை அனுபவித்தவர்களுக்கு தெரியும் அந்த நேரத்தில் எது முக்கியமென்பது. அழிவுகளின் பின் பதவிகளுக்கு வந்து அனுபவிப்பவர்கள் விமர்சனம் செய்யத்தான் முடியும். அந்த மக்களின் வலியோ, தேவையோ புரியாது அவர்களுக்கு. அனர்த்தத்தில் பதவி தேடும், அரசியல் செய்யும் வியாதிகள். சரி, அரசு முக்கிய கவனம் செலுத்தவில்லை, இவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? அதன் தீவிரம் இவர்களுக்கு தெரிந்திருந்தால் இவர்கள் அரசுக்கு நினைவூட்டி எச்சரிக்கை செய்திருக்கலாமே. ஏன் செய்யவில்லை? இவர்களுக்கு பொறுப்பில்லையா? அல்லது இவர்களும் இப்படியான வரலாறு காணாத இயற்கையின் சீற்றத்தை அறிந்திருக்கவில்லையா? இவர்களுக்கும் பதில் சொல்லவேண்டிய பொறுப்பிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய நேரத்தில், பொறுப்பற்ற விமர்சனம் செய்து அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் இவர்களும் தண்டிக்கப்படவேண்டியவர்களே! அனர்த்தம் வருமுன் செய்யவேண்டியதை வந்தபின் செய்து, அரசியல் செய்யும் முட்டாள்கள்! இவர்கள் கையில் அரசு இருந்திருந்தால்; இவர்களும் இதைத்தான் அல்லது இதைவிட மோசமாக நடந்து கொண்டிருப்பார்கள் என்பதற்கு இவர்களது பொருத்தமற்ற விமர்சனம் சாட்சி.
2 months 2 weeks ago
இதை கவிதைக் களத்தில் இணைக்க மறந்து வீட்டீர்களா கோபி..?
2 months 2 weeks ago
மிக்க நன்றி அல்வாயன்...................👍. இந்தக் காலத்தில் மேடை நாடகங்களை ஒரு 25 அல்லது 30 நிமிடங்களுக்கு மேல் இழுத்தால் சனம் எழும்பிப் போக ஆரம்பித்து விடும் அல்லது கொட்டாவி விடுவார்கள்.............. ஐந்து அல்லது ஆறு காட்சிகளில் முடிக்க வேண்டியிருக்கின்றது. தொலைக்காட்சிகளில் என்றால் மெகா சீரியல் என்று இழு இழுவென்று இழுத்து வருசக்கணக்காக போடலாம்..............
2 months 2 weeks ago
நல்லாத்தான் போயிட்டிருக்கு...தட்சணாமூர்த்தியை கண்டதும் ..பாரதம் ....பூவுலகிலேயே..தங்கிவிட யோசித்திட்டாவோ.......இல்லாத பிரசரை அமிர்தத்துக்கு குடுத்து...தன்னுடைய கணவனிடம் அனுப்பி அவரை பழிவாங்க நினைக்கிறாவோ...நல்ல சுவராசியமாக போகுது ..கொண்டுபோங்கோ தொடர்ந்து..
2 months 2 weeks ago
"மூன்று கவிதைகள் / 13" 'பஞ்சணை வேண்டுமா நெஞ்சணைப் போதுமே' பஞ்சணை வேண்டுமா நெஞ்சணைப் போதுமே வஞ்சனை இல்லா கம்பீர நாயகனே! கொஞ்சும் மொழியாலே உன்னைத் தாலாட்டவா தஞ்சம் தேடி என்னிடம் வந்தவனே மிஞ்சும் அழகு மகிழ்ச்சி தருகுதே! துள்ளும் ஆசை இதயத்தில் எழ சொல்லும் வார்த்தைகள் தேனாய் இனிக்க கள்ளும் தராத மயக்கம் வர உள்ளும் புறமும் நீயே தோன்ற அள்ளும் ஆசை அலையாய் பாயுதே? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ----------------------------- ''புகைப்படக் கவிதை'' "பெண்ணில் பிறந்தவன் அவளையே நாடுகிறான் மண்ணில் தவழ்ந்தவன் அதுவே ஆகிறான்! வண்ண விளக்கில் அணிச்சலை வெட்டுகிறான் வண்ணாத்திப் பூச்சியாய் மகிழ்ச்சியில் பறக்கிறான்!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ----------------------------- மின்னலாய் ஒரு பின்னல் [ஆரம்பம் - முடிவு - தொடக்கம் - கடைசி] ஆரம்பம் சரியாக அமைந்தால் நண்பா முடிவு மகிழ்வாக மலருமே! தொடக்கம் கோணலாக மாறினால் கடைசிப் பலன் என்றும் பூச்சியமே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 1930 ["மூன்று கவிதைகள் / 13"] https://www.facebook.com/groups/978753388866632/posts/32706564062325485/?
2 months 2 weeks ago
அய்யா மன்னிச்சுக்கோங்க....கிழுக்கட்டை ...இல்லை கொழுக்கட்டைதான் ...உந்த இந்திய கிரிக்கட்டை விடியப்பறம் மூன்று மணிக்கு பார்க்கும்போது எழுதினது...அதுதான் கொழுக்கட்டை ...கிழுக்கட்டையாகி விட்டது ...சாரி சார்
2 months 2 weeks ago
பொருளாதாரத்துக்கு சனத்தொகை வேண்டும். பொதுவாக எல்லா மேற்கு நாடுகளும், குடிவராவால் (இளம்)சனத்தொகையை தக்க வைப்பதை மூலோபாயமாக கொன்டுள்ளன. அனால், அது உள்ளுக்குள் ஏற்றப்படுத்தும் பொருளாதார, அரசியல் தாக்கங்களை புறந்தள்ள முடியாத நிலையில் மேற்கு நாடுகள். இப்பொது கூட, நிகர குடியேற்றம் குறைந்தது வெளியேற்றத்தால் அல்ல, குறைந்ததின் காரணம் உள் வரும் எண்ணிக்கை குறைந்தது. மறுவாளமாக, வெளியேறுவது இப்பொது முன்பு இல்லாத அளவு கூடி இருக்கிறது, அனால் அது நிகர குடியேற்றத்தை குறைக்கும் அளவுக்கு இல்லை.
2 months 2 weeks ago
ஐரோப்பா தலைமையிலான நேட்டோ பாதுகாப்புக்கு அமெரிக்கா 2027 காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது: அதிகாரிகள் ராய்ட்டர்ஸ், வாஷிங்டன் வெளியிடப்பட்டது: 06 டிசம்பர் 2025, 12:00 AM அஅ 2027 ஆம் ஆண்டுக்குள், உளவுத்துறை முதல் ஏவுகணைகள் வரை, நேட்டோவின் வழக்கமான பாதுகாப்புத் திறன்களில் பெரும்பகுதியை ஐரோப்பா கைப்பற்ற வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது என்று பென்டகன் அதிகாரிகள் இந்த வாரம் வாஷிங்டனில் உள்ள தூதர்களிடம் தெரிவித்தனர் - சில ஐரோப்பிய அதிகாரிகளை நம்பத்தகாததாகக் கருதும் ஒரு இறுக்கமான காலக்கெடு. இந்த விவாதத்தில் நன்கு அறிந்த ஐந்து ஆதாரங்களால், ஒரு அமெரிக்க அதிகாரி உட்பட, விவரிக்கப்பட்ட செய்தி, வாஷிங்டனில் நேட்டோ கொள்கையை மேற்பார்வையிடும் பென்டகன் ஊழியர்கள் மற்றும் பல ஐரோப்பிய பிரதிநிதிகளின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சுமையை அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய நேட்டோ உறுப்பினர்களுக்கு மாற்றுவது, போருக்குப் பிந்தைய கூட்டணியின் ஸ்தாபக உறுப்பினரான அமெரிக்கா, அதன் மிக முக்கியமான இராணுவ பங்காளிகளுடன் எவ்வாறு செயல்படுகிறது என்பதை வியத்தகு முறையில் மாற்றும். 2022 ஆம் ஆண்டில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு விரிவாக்கப்பட்டதிலிருந்து ஐரோப்பா தனது பாதுகாப்புத் திறன்களை அதிகரிப்பதில் அடைந்துள்ள முன்னேற்றத்தில் வாஷிங்டன் இன்னும் திருப்தி அடையவில்லை என்று பென்டகன் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். ஐரோப்பா 2027 காலக்கெடுவை பூர்த்தி செய்யாவிட்டால், சில நேட்டோ பாதுகாப்பு ஒருங்கிணைப்பு வழிமுறைகளில் பங்கேற்பதை அமெரிக்கா நிறுத்தக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் தங்கள் ஐரோப்பிய சகாக்களிடம் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு பென்டகனின் செய்தியை கேபிடல் ஹில்லில் உள்ள சில அதிகாரிகள் அறிந்திருக்கிறார்கள், அதைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என்று ஒரு அமெரிக்க அதிகாரி மேலும் கூறினார். அமெரிக்கா முன்னேற்றத்தை எவ்வாறு அளவிடும் என்பது குறித்து தெளிவு இல்லை. வழக்கமான பாதுகாப்புத் திறன்களில் துருப்புக்கள் முதல் ஆயுதங்கள் வரை அணுசக்தி அல்லாத சொத்துக்கள் அடங்கும், ஆனால் பெரும்பாலான சுமையை ஏற்றுக்கொள்வதில் ஐரோப்பாவின் முன்னேற்றத்தை அமெரிக்கா எவ்வாறு அளவிடும் என்பதை அதிகாரிகள் விளக்கவில்லை. 2027 காலக்கெடு டிரம்ப் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைக் குறிக்கிறதா அல்லது சில பென்டகன் அதிகாரிகளின் கருத்துக்களை மட்டும் பிரதிபலிக்கிறதா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. ஐரோப்பாவில் அமெரிக்கா வகிக்க வேண்டிய இராணுவப் பங்கு குறித்து வாஷிங்டனில் குறிப்பிடத்தக்க கருத்து வேறுபாடுகள் உள்ளன. வாஷிங்டன் முன்னேற்றத்தை எவ்வாறு அளந்தாலும், 2027 காலக்கெடு நடைமுறைக்கு மாறானது என்று பல ஐரோப்பிய அதிகாரிகள் கூறினர், ஏனெனில் குறுகிய காலத்தில் சில அமெரிக்க திறன்களை மாற்றுவதற்கு ஐரோப்பாவிற்கு பணம் மற்றும் அரசியல் விருப்பத்தை விட அதிகமாக தேவைப்படுகிறது. நேட்டோ நட்பு நாடுகளும் தாங்கள் வாங்க முயற்சிக்கும் இராணுவ உபகரணங்களுக்கான உற்பத்தி நிலுவைகளை எதிர்கொள்கின்றன. அமெரிக்க அதிகாரிகள் ஐரோப்பாவை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை அதிகமாக வாங்க ஊக்குவித்தாலும், இன்று ஆர்டர் செய்தால் மிகவும் மேம்பட்ட அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் சிலவற்றை வழங்க பல ஆண்டுகள் ஆகும். உக்ரேனிய போர் முயற்சிக்கு முக்கியமானதாக நிரூபிக்கப்பட்ட தனித்துவமான உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் உளவு பார்த்தல் போன்ற வெறுமனே வாங்க முடியாத திறன்களையும் அமெரிக்கா வழங்குகிறது. கருத்து கேட்டதற்கு, ஐரோப்பிய நட்பு நாடுகள் கண்டத்தின் பாதுகாப்பிற்கு அதிக பொறுப்பை ஏற்கத் தொடங்கியுள்ளன என்று நேட்டோ அதிகாரி ஒருவர் கூறினார், ஆனால் 2027 காலக்கெடு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. "பாதுகாப்பில் அதிக முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை நேச நாடுகள் அங்கீகரித்துள்ளன, மேலும் வழக்கமான பாதுகாப்பின் மீதான சுமையை அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு மாற்றியுள்ளன" என்று அந்த அதிகாரி கூறினார். கருத்துக்கான கோரிக்கைகளுக்கு பென்டகனும் வெள்ளை மாளிகையும் உடனடியாக பதிலளிக்கவில்லை. ஐரோப்பா அதிக பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது ஐரோப்பிய நாடுகள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்கு அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கோரிக்கையை பரவலாக ஏற்றுக்கொண்டு, பாதுகாப்பு செலவினங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு உறுதியளித்துள்ளன. 2030 ஆம் ஆண்டுக்குள் கண்டம் தன்னைத்தானே தற்காத்துக் கொள்ளும் திறன் கொண்டதாக மாற்றுவதை ஐரோப்பிய ஒன்றியம் இலக்காகக் கொண்டுள்ளது, வான் பாதுகாப்பு, ட்ரோன்கள், சைபர் போர், வெடிமருந்துகள் மற்றும் பிற பகுதிகளில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த காலக்கெடு கூட மிகவும் லட்சியமானது என்று அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். வாஷிங்டன்-நேட்டோ உறவு சூடாகவும் குளிராகவும் செல்கிறது ஐரோப்பிய நட்பு நாடுகள் நேட்டோவிற்கு அதிக பங்களிப்பை வழங்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து வாதிட்டு வருகிறது, ஆனால் கூட்டணியில் ஜனாதிபதியின் நிலைப்பாடு எப்போதும் தெளிவாகத் தெரியவில்லை. 2024 பிரச்சாரப் பாதையில், டிரம்ப் ஐரோப்பிய நட்பு நாடுகளை அடிக்கடி விமர்சித்தார், மேலும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை பாதுகாப்புக்காக தங்கள் நியாயமான பங்கைச் செலவிடாத நேட்டோ நாடுகளை ஆக்கிரமிக்க ஊக்குவிப்பதாகக் கூறினார். இருப்பினும், ஜூன் மாதம் நடந்த வருடாந்திர நேட்டோ தலைவர்கள் உச்சி மாநாட்டில், உறுப்பு நாடுகளின் வருடாந்திர பாதுகாப்பு செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% ஆக உயர்த்துவதற்கான அமெரிக்க திட்டத்திற்கு ஒப்புக்கொண்டதற்காக ஐரோப்பிய தலைவர்களைப் பாராட்டினார். அதன் பின்னர் வந்த மாதங்களில், நேட்டோவின் முக்கிய எதிரியான ரஷ்யா மீதான கடுமையான கோட்டிற்கும், உக்ரைன் மோதல் தொடர்பாக மாஸ்கோவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் விருப்பத்திற்கும் இடையில் டிரம்ப் ஊசலாடி வருகிறார். ஐரோப்பிய அதிகாரிகள் அந்தப் பேச்சுவார்த்தைகளில் இருந்து பெரும்பாலும் விலக்கப்பட்டதாக புகார் கூறியுள்ளனர். இந்த வாரம் நடந்த நேட்டோ வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், அமெரிக்க துணை வெளியுறவு செயலாளர் கிறிஸ்டோபர் லாண்டவு, ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கு நேட்டோ நட்பு நாடுகள் பொறுப்பேற்க வேண்டும் என்பது "வெளிப்படையானது" என்று கூறினார். "தொடர்ச்சியான அமெரிக்க நிர்வாகங்கள் என் வாழ்நாள் முழுவதும் ஏதோ ஒரு வடிவத்தில் இதைச் சொல்லி வருகின்றன... ஆனால் எங்கள் நிர்வாகம் அது சொல்வதை அர்த்தப்படுத்துகிறது," என்று லாண்டவு X இல் எழுதினார்.
Checked
Sun, 02/22/2026 - 07:21
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed