2 months 3 weeks ago
01 JUL, 2025 | 01:03 PM ( அபிலாஷனி லெட்சுமன் ) கடந்த காலங்களில் மொழியினால் மிக மோசமான நிலை எமது நாட்டில் ஏற்பட்டது. அத்தகைய சூழ்நிலைகள் இனிவரும் காலங்களில் ஏற்படாதிருக்க அனைவரும் அரச கருமமொழிகள் கொள்கைகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும். தேசிய ரீதியான மொழி உரிமையினை பாதுகாக்க மொழி தொடர்பான முறைப்பாடுகளை எமக்கு அறியதரலாம். அவ்வாறான முறைப்பாடுகளை எழுத்து மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகைதந்து சமர்பிக்கலாம். துரிதமாக அரச மொழி கொள்கையினை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஆர். ரணவக்க தெரிவித்தார். அரச கரும மொழிகள் தினம் மற்றும் அரச கரும மொழிகள் வாரத்தை நடைமுறைபடுத்துவது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு திங்கட்கிழமை (30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்த அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஆர். ரணவக்க மேலும் தெரிவிக்கையில், மொழி உரிமை தொடர்பிலான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளகூடிய அதிகாரத்தை அரச ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக எமது ஆணைக்குழு நான்கு முறைகளில் செயற்பட்டுவருகின்றது. அரச கருமமொழிகள் கொள்கைகளை நடைமுறைபடுத்துவற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். தேசிய ரீதியான மொழி உரிமையினை பாதுகாக்க மொழி தொடர்பான முறைப்பாடுகளை எமக்கு அறியதரலாம். மொழி தொடர்பான முறைப்பாடுகளை எழுத்து மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகைதந்து சமர்பிக்கலாம்.துரிதமாக அரச மொழி கொள்கையினை மேம்படுத்த பல்வேறான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம். குறிப்பாக கடந்த காலங்களில் மொழியினால் எத்தகைய மோசமான நிலை எமது நாட்டில் ஏற்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலைகள் இனிவரும் காலங்களில் ஏற்படாதிருக்க அனைவரும் அரச கருமமொழிகள் கொள்கைகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும். இலங்கையை போன்ற பல்லின , பல்மத மற்றும் பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட அழகிய தேசம் வேறு எங்கும் கிடையாது. நாம் தமிழர், சிங்களவர் , இஸ்லாமியர் என்ற கொள்கையினை விடுத்து “நாம் இலங்கையர்” என்ற என்ற ஒருமைப்பாட்டுக் கொள்கையை ஏற்க வேண்டிய கட்டாயம் இன்றைய சமூகத்திற்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஒருமைப்பாட்டு நோக்கமே எங்களது வலிமையான குறிக்கோளாகும். பாடசாலைகள் மட்டுமின்றி, சமுக வளர்ச்சிக்கான அடிப்படையாக மும்மொழித் தேர்ச்சி கட்டாயமாகக் கொண்டுவரப்பட வேண்டும். ஒரு குழந்தையை சமூகமயமாக்கும் கட்டத்தில், அதற்குத் தேவையான மொழித் திறன்களை தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்றையும் ஆரம்பத்திலேயே வழங்க வேண்டும். மாற்றம் ஆரம்ப நிலையிலிருந்தே நடைமுறைக்கு வந்தால், அரச கரும மொழி கொள்கையின் ஊடாக நல்லிணக்கம் உள்ள நாடாக காணப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே.பண்டார , அரச மொழிகள் ஆணையாளர் நாயகம் திலக் நந்தன ஹெட்டியாராச்சி ,அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஆர். ரணவக்க , அரசகரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் சமிந்த மஹலேகம் , தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் மகேசன் மற்றும் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே.பண்டார ஆகியோர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218924
2 months 3 weeks ago
01 JUL, 2025 | 03:05 PM 2025 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 70 சதவீத மின்சார உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. சுமார் 35 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகூடிய அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ஏனைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் அதிகளவில் மின்சார பயன்பாடு அதிகமாக காணப்பட்டுள்ளது. இந்த மின்சார உற்பத்தி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து பெறப்பட்டுள்ளது. இலங்கையில் 100 சதவீதம் நீர்மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு எரிசக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்து அதிகளவான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டமை இலங்கை மின்சார சபையின் முயற்சிகளை பிரதிபலிக்கிறது. https://www.virakesari.lk/article/218931
2 months 3 weeks ago
அஜித்குமார் காவலர்களால் தாக்கப்பட்ட வீடியோ வைரல்! 01 JUL, 2025 | 02:37 PM தமிழ்நாட்டில்போலீஸ் விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவலர்களால் தாக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். ஜூன் 27-ம் தேதி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரது காரில் 10 பவுன் நகை திருடுபோனது குறித்து அஜித்குமாரை அழைத்துச் சென்று மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது அஜித்குமார் உயிரிழந்தார். அஜித்குமாரை போலீஸார் கடுமையாக தாக்கி கொலை செய்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் உடலை வாங்க மறுத்த அவர்களிடம் போலீஸார் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர். பின்னர் அஜித்குமார் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அஜித்குமார் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீஸ் விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் தாக்கப்பட்ட வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/218933
2 months 3 weeks ago
01 JUL, 2025 | 12:56 PM யு.எஸ்.எயிட். நிறுவனம் நேற்றுடன் தனது நீண்டவரலாற்றை முடித்துக்கொண்டுள்ள அதேவேளை அந்த நிறுவனத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மூடியதை முன்னாள் ஜனாதிபதிகள் பராக் ஒபாமா ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆறு தசாப்த காலமாக மனிதாபிமான அபிவிருத்தி அமைப்பாக செயற்பட்ட யுஎஸ்எயிட்டின் இறுதி நாள் நேற்றாகும். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன்கென்னடி வெளிநாடுகளில் செழிப்பையும் நல்லெண்ணத்தையும் அதிகரிப்பதன் மூலம் அமெரிக்க தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அமைதியான வழிமுறையாக இந்த அமைப்பை உருவாக்கியிருந்தார். யுஎஸ்எயிட்டினை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்குள் உள்வாங்கியுள்ளதாக இராஜாங்க செயலாளர் மார்க்ரூபியோ தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அந்த அமைப்பின் இறுதிநாளான நேற்று அதன் பணியாளர்கள் உணர்ச்சிகரமான பிரியாவிடை வீடியோவொன்றை வெளியிட்டனர். அதன் பின்னர் வீடியோ கொன்பரன்ஸ் முறை மூலம் இரு முன்னாள் ஜனாதிபதிகளும் யுஎஸ்எயிட் சமூகத்தினருடன் உரையாடினர். உங்கள் பணி மிகவும் முக்கியமானது எதிர்கால தலைமுறைக்கும் அது மிகவும் முக்கியமானதாக விளங்கும் என பராக் ஒபாமா யுஎஸ்எயிட் பணியாளர்களிற்கு தெரிவித்தார். யுஎஸ்எயிட்டினை செயல் இழக்கச்செய்வது ஒரு கேலிக்கூத்து அது ஒரு சோகம் ஏனென்றால் இது உலகில் இடம்பெறும் மிகவும் முக்கியமான பணிகளில் ஒன்றாகும் என பராக் ஒபாமா தெரிவித்தார். யுஎஸ்எயிட் உயிர்களை பாதுகாப்பதுடன் மாத்திரமல்லாமல் உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு முக்கிய காரணியாக உள்ளது என அவர் தெரிவித்தார். யுஎஸ்எயிட்டின் திட்டங்கள் உதவி பெறும் நாடுகள் சிலவற்றை அமெரிக்காவின் பங்காளிகளாக சந்தையாக மாற்றியுள்ளது என பராக் ஒபாமா தெரிவித்தார். உங்களின் தேவையை விரைவில் இரு தரப்பும் உணரும் என யுஎஸ்எயிட் பணியாளர்களிற்கு ஒபாமா தெரிவித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜோர்ஜ் டபில்யூ புஷ் யுஎஸ்எயிட் மூலம் தனது நிர்வாகம் முன்னெடுத்த எயிட்ஸிற்கு எதிரான திட்டங்களை நினைவுபடுத்தியதுடன் 25 மில்லியன் பேர் சர்வதேச அளவில் காப்பாற்றப்பட்டனர் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/218908
2 months 3 weeks ago
சாத்தான்குளம் மரணத்தில் நீதி கிடைத்துவிட்டதா? - திருப்புவனத்தில் மீண்டும் ஒரு லாக் அப் மரணம் நிகழ்ந்தது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெயராஜ் - பென்னிக்ஸ் கட்டுரை தகவல் நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் "ஐந்து ஆண்டுகளாகியும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை, எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் நாங்கள் உயிருடன் இருக்கும் வரை வேதனையைத் தரும்." இவை பென்னிக்ஸின் சகோதரி பெர்சிஸின் வார்த்தைகள். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீஸ் காவலில் தந்தை - மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் இருவரும் தாக்கப்பட்டு உயிரிழந்து ஐந்தாண்டுகளாகி விட்டன. ஆனாலும், ஒட்டுமொத்த இந்தியாவையே அதிரவைத்த இந்த வழக்கின் விசாரணை இன்னும் முடிவடையவில்லை, அவர்களது குடும்பத்தினர் நீதிக்காக காத்துக் கிடக்கின்றனர். இதனிடையே தான், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்படை போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "காவல்நிலைய மரணங்களில் விரைந்து நீதி கிடைத்தால் தானே, இனி இப்படி செய்யக் கூடாது என்ற பயம் காவல் துறையினருக்கு இருக்கும்." என்கிறார் பெர்சிஸ். ஜெயராஜ் - பென்னிக்ஸுக்கு என்ன நடந்தது? சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் (58) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர், சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை அருகே ஒரு செல்போன் கடையை நடத்திவந்தனர். 2020ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று சமயத்தில் பொதுமுடக்கம் அமலில் இருந்தபோது, ஜூன் 19 அன்று இரவில் கடையை அடைப்பது தொடர்பாக காவல்துறையினருக்கும் பென்னிக்ஸுக்கும் இடையே சிறு வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, முதலில் ஜெயராஜை காவல்துறையினர் வாகனத்தில் அழைத்துச் சென்ற நிலையில், பின்னாலேயே பென்னிக்ஸ் இருசக்கர வாகனத்தில் சென்றது அங்கிருந்த சிசிடிவியில் பதிவான வீடியோ பின்னர் வெளியானது. இதையடுத்து, அன்றைய தினம் பென்னிக்ஸ் மீதும் அவரது தந்தை ஜெயராஜ் மீதும் சாத்தான்குளம் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். பின்னர், காவல்நிலையத்தில் வைத்து ஜெயராஜ் -பென்னிக்ஸை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஜூன் 20 அன்று சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் வெண்ணிலா, இருவரின் உடல்நிலையும் நன்றாக இருப்பதாக சான்று அளித்ததைத் தொடர்ந்து, இருவரையும் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் அனுமதி அளித்தார். இதையடுத்து, இருவரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். இதன்பின், அடுத்தடுத்து உடல்நலக் குறைவால் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். அங்கு, ஜூன் 22 அன்று பென்னிக்ஸும் 23ம் தேதி ஜெயராஜும் உயிரிழந்தனர். பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு, அப்போதைய அதிமுக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. பட மூலாதாரம்,TNPOLICE படக்குறிப்பு,இடமிருந்து வலமாக ஸ்ரீதர், பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் "அப்பா (ஜெயராஜ்) மீதும், பென்னிக்ஸ் மீதும் எந்த குற்ற வழக்கும் இதற்கு முன்பு இருந்ததில்லை. கடைக்கு வந்து அப்பாவை ஏன் காவல்துறை அழைத்துச் சென்றனர் என்பது தெரியவில்லை, அப்பாவை அடித்துக் கீழே தள்ளியுள்ளனர். இதை பென்னிக்ஸ் கேள்வி கேட்டதற்கு, "போலீஸையே எதிர்த்துப் பேசுகிறாயா?" என கேட்டுதான் போலீஸார் தாக்கியுள்ளனர். இது முழுக்க முழுக்க போலீஸின் 'ஈகோ'வால் நிகழ்ந்தது" என்கிறார், பென்னிக்ஸின் சகோதரி பெர்சிஸ். ஜெயராஜ் - பென்னிக்ஸ் மீது காவல்துறை பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையில், காவல் துறையினரை திட்டிவிட்டு அவர்களே "தரையில் புரண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக் காயம் ஏற்பட்டது," எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், பின்னர் தவறாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரியவந்தது. பட மூலாதாரம்,TN POLICE படக்குறிப்பு, காவலர் தாமஸ் பிரான்சிஸ் ஆரம்பத்தில் சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்த நிலையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் மீதும் தவறான வழக்குப்பதிவு செய்ததாக, உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் மற்றும் தந்தை-மகனை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன், முத்துராஜ், மகாராஜா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணையை நடத்தியது. இதனிடையே, சம்பவம் நடந்து சில தினங்களிலேயே இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. மூன்று மாதங்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ, 105 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியது. காவலர் ரேவதியின் சாட்சியம் இந்த வழக்கில் பெண் காவலர் ரேவதி அளித்த சாட்சியம் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையின்படி, "காவலர் முத்துராஜா, என் அப்பாவின் தொடை மீது ஏறி நின்றுள்ளார்." என குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறுகிறார் பெர்சிஸ். மதுரையில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இதில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் உள்ளார். இவர் தவிர, உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து, பால்துரை ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், பால்துரை 2020, ஆகஸ்ட் மாதமே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். பட மூலாதாரம்,TN POLICE படக்குறிப்பு, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த பால்துரை தாமதம் ஏன்? "பொதுமக்கள், இயக்கங்கள் என பலதரப்பினரும் இதற்கு எதிராக போராடியும் இன்னும் வழக்கில் விசாரணையே நிறைவு பெறவில்லை. இத்தனை ஆண்டுகளாகும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக இந்த வழக்குக்கு நீதிபதியே இல்லாமல் இருந்தது, கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் நீதிபதி முத்துக்குமரன் நியமிக்கப்பட்டார். பொறுப்பு நீதிபதி இருக்கும்போது வாரத்தில் ஒருமுறைதான் வழக்கை விசாரிக்க முடியும்." என்கிறார் பெர்சிஸ். சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி மாற்றப்பட்டது குறித்த சர்ச்சைகள் முன்பு எழுந்துள்ளன. இந்த வழக்கை விசாரித்து வந்த மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் திருநெல்வேலி மாவட்டத்துக்கு 2022, ஏப்ரல் மாதம் மாற்றப்பட்டது சர்ச்சையானது. அந்த சமயத்தில் பிபிசி தமிழிடம் பேசிய உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன், "மாவட்ட நீதிபதிகளை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்வது வழக்கமான நடைமுறை." என தெரிவித்திருந்தார். ஆனாலும், இதுபோன்ற முக்கிய வழக்குகளில் விசாரணை முடிவடையும் வரை நீதிபதிகளை மாற்றாமல் இருக்க வேண்டிய தேவை உள்ளது குறித்தும் அவ்வப்போது கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த வழக்கு தாமதமானதற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. "குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரும் தனித்தனி வழக்கறிஞர்களை வைத்துள்ளனர். ஒவ்வொரு வழக்கறிஞரும் சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்கின்றனர், அதனாலும் மிகுந்த காலதாமதம் ஆகிறது." என கூறுகிறார் பெர்சிஸ். மீளா துயரத்தில் குடும்பத்தினர் நேரடி சாட்சியங்கள், காவல் நிலையத்துக்கு வெளியே இருந்தவர்களின் சாட்சியங்கள், மருத்துவமனை காணொளிகள், ஆடைகளில் ரத்தக் கறை உள்ளிட்ட ஆதாரங்கள் தெளிவாக உள்ளதாக குறிப்பிடுகிறார் பெர்சிஸ் . "மருத்துவமனை வாயிலில் இருவருடைய உடைகளிலும் ரத்தம் கசிந்திருந்ததை சிசிடிவி வீடியோ ஆதாரங்கள் காட்டுகின்றன." "இருவருடைய மரணத்துக்குப் பிறகு வாழ்க்கையில் எந்த நல்ல காரியங்களுக்கும் மகிழ்ச்சியாக செல்ல முடியவில்லை, எங்கள் குடும்பத்தினர் அழாமல் உறங்கிய நாட்களே இல்லை. அவ்வளவு மன அழுத்தத்தில் இருக்கிறோம். நீதி வேண்டி ஐந்தாண்டு கால அலைச்சலும் இதனுடன் சேர்ந்திருக்கிறது." என வேதனைப்படுகிறார் பெர்சிஸ். பென்னிக்ஸுக்கு இரண்டு மூத்த சகோதரிகளும் ஒரு இளைய சகோதரியும் உள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES பென்னிக்ஸின் நண்பரும் வழக்கறிஞருமான ராஜாராம், ஜெயராஜ்-பென்னிக்ஸ் காவல்நிலையத்தில் இரவில் இருந்தபோது வெளியே தான் இருந்துள்ளார். இருவருடைய அலறல் சத்தமும் தனக்கு கேட்டதாக நினைவுகூர்கிறார் ராஜாராம். "அப்பாவை (ஜெயராஜ்) காவல்துறையினர் அழைத்துச் சென்றதால் தான் பென்னிக்ஸ் காவல் நிலையம் சென்றார். இருவருடைய அலறல் சத்தமும் கேட்டது. என் சாட்சியத்தை நீதிமன்றத்திலும் தெரிவித்திருக்கிறேன். மருத்துவமனை வாயிலில் பென்னிக்ஸை சந்தித்தபோது, 'என்னை விரைவில் வெளியே எடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள்' என தெரிவித்தார்" என கூறுகிறார் ராஜாராம். ஜாமீன் கேட்டு இழுத்தடிப்பு ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தினர் சார்பாக இந்த வழக்கில் வாதாடிவரும் வழக்கறிஞர் ராஜீவ் ரூஃபஸிடம் பேசினோம். "இந்த வழக்கில் இதுவரை ஐந்து நீதிபதிகள் மாறியுள்ளனர், இது எதேச்சையாக நடக்கிறதா, அரசியல் அழுத்தமா என்பது தெரியவில்லை. வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்றே குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பு நினைக்கிறது. குறிப்பாக, ஏ1 ஸ்ரீதர் ஆரம்பத்தில் நானே எனக்காக வாதாடுகிறேன் என்றார். பின்னர், சட்ட உதவி மையத்திலிருந்து அவருக்கு வழக்கறிஞரை அமர்த்தினர். ஆனால், மீண்டும் எனக்கு நானே தான் வாதாடுவேன் என கூறினார் ஸ்ரீதர். அதன்பின், இன்னொரு வழக்கறிஞரை வைத்து நடத்த அனுமதியுங்கள் என மனு போட்டார், திரும்பவும் நானே வாதாடுகிறேன் என கூறுகிறார். வேண்டுமென்றே கேட்ட கேள்விகளையே மீண்டும் கேட்டு விசாரணையை இழுத்தடிக்கிறார்." என காலதாமதத்துக்கான காரணத்தை விளக்கினார் அவர். குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஒருவர் பின் ஒருவராக ஜாமீன் கேட்டு மனு போடுவதன் மூலமும் வழக்கை இழுத்தடிப்பதாகக் கூறுகிறார் அவர். தமிழ்நாடு அரசின் சார்பில் இந்த வழக்குக்கு என ஒரு சிறப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்தி, தினமும் விசாரித்திருந்தால் வழக்கு முடிவுக்கு வந்திருக்கும் என்கிறார் அவர். "ஆனால், சிபிஐ நடத்தும் வழக்கில் மாநில அரசு தலையிட முடியாது, விரைந்து வழக்கை முடிக்க வேண்டும் என, அரசு அறிக்கை வேண்டுமானால் வெளியிடலாம். அரசு இதில் தலையிடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என கூறுகிறார் திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன். படக்குறிப்பு, ஜெயராஜின் மனைவி செல்வராணி இன்னும் அந்த கொடூர சம்பவத்திலிருந்து மீள முடியவில்லை சிபிஐ தங்களால் முடிந்தளவுக்கு சாட்சிகளை விசாரித்திருக்கிறது எனக்கூறிய வழக்கறிஞர் ராஜீவ், மருத்துவமனைக்கு அவர்கள் இருவரையும் ரத்தம் சொட்ட அழைத்துச் சென்ற காட்சிகள், அவர்கள் அமரவைக்கப்பட்ட இருக்கைகள் பறிமுதல் செய்யப்பட்டு சோதனை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். "காவல்நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள் அவர்களுடையதுதான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது." என அவர் தெரிவித்தார். இந்த வழக்கை தொடர்ந்து கண்காணித்து வரும் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஆசீர்வாதம், "விரைவான விசாரணை நடந்தால்தான் நீதி கிடைக்கும். மாஜிஸ்திரேட் பாரதிதாசன் 50 முறைக்கு மேல் வாக்குமூலத்தைப் பதிவு செய்திருக்கிறார். இத்தனை பேரின் கடும் உழைப்புக்கு மத்தியிலும் இவ்வழக்கில் இன்னும் நீதி கிடைக்காதது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பெரியளவில் மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முக்கிய சாட்சியான ரேவதி மன அழுத்தத்தில் உள்ளார், அவரால் இன்னும் சுதந்திரமாக வெளியே செல்லக்கூட முடியவில்லை." என்றார். இந்த வழக்கை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என மதுரை நீதிமன்றத்துக்கு 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும் வழக்கு விசாரணை முடிவடையவில்லை. "உயர் நீதிமன்றம் தலையீடு செய்யும் வழக்கிலேயே இந்த நிலை என்றால், மற்ற வழக்குகளின் நிலை என்ன" என கேள்வி எழுப்புகிறார் ஆசீர்வாதம். "மாநில அரசின் வழக்கறிஞர் விரைவான நீதி வேண்டி தலையீடு செய்யலாம். தங்கள் அரசுக்கு அழுத்தம் இருக்கிறது என்றவுடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் விரைந்து தீர்ப்பு வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்தது. காவல்துறை தவறு செய்தால் அதை மறைக்க வேண்டும் என்பதே எந்த அரசாக இருந்தாலும் நினைக்கின்றன." என்றார். போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம் 'வாட்ஸ்அப் மூலம் போதைப் பொருள் விற்பனை' - குற்றச்சாட்டு நிரூபணமானால் என்ன தண்டனை? சென்னை: சாவின் விளிம்பில் இருந்த பெண்ணை சாதுர்யமான பேச்சால் காப்பாற்றிய பெண் எஸ்.ஐ. கொல்கத்தா சட்டக் கல்லூரியில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 பேர் கைது - என்ன நடந்தது? தேசிய மனித உரிமை ஆணையம் அளிக்கும் புள்ளிவிவரங்களின்படி, 2018-19ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 11 காவல் மரணங்களும் 89 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன. இந்திய அளவில் 137 காவல் மரணங்களும் 1797 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன. 2019 - 20ல் தமிழ்நாட்டில் 12 காவல் நிலைய மரணங்களும் 57 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஏப்ரல் 5 முதல் 16ஆம் தேதிக்குள் 4 காவல் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. சமீபத்திய உதாரணமாக, காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் உள்ளது. "காவல் நிலைய மரணங்களை இந்த அரசு மூடி மறைக்கவில்லை. அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு நடவடிக்கை எடுக்கிறது. அதைத் தடுக்க வேண்டும் என உறுதியுடன் இருக்கிறது. எல்லா சம்பவங்களிலும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றார், திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன். இவை அனைத்துக்கும் மத்தியில், விரைந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgjgg670jv0o
2 months 3 weeks ago
Published By: VISHNU 01 JUL, 2025 | 08:18 PM செம்மணி மனித புதைகுழி ஒன்றினுள் இருந்து சிறுவர்கள் விளையாடும் சிறு பொம்மை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஆறாம் நாள் பணிகள் செவ்வாய்க்கிழமை (1) முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை புத்தக பையை ஒத்த நீல நிற பையுடன் காணப்பட்ட சிறு பிள்ளையின் எலும்புக்கூட்டு தொகுதி என நம்பப்படும் எலும்பு கூட்டு தொகுதி முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதனுள் காணப்பட்ட நீல நிற பையையும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. பை மீட்கப்பட்ட புதைகுழியில் இருந்து சிறு பிள்ளைகள் விளையாடும் பொம்மை ஒன்றும் சிறு பிள்ளையின் காலணி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அதேவேளை செவ்வாய்க்கிழமை (1) முன்னெடுக்கப்பட்ட மேலதிக பணிகளின் போது மேலும் மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து காணப்படுவதால், அவை எத்தனை என சரியான எண்ணிக்கை கூற முடியாது என தெரிவிக்கப்பட்டது. அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையில் 33 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினமும் மேலும் சில எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/218971
2 months 3 weeks ago
இதேதான் நமக்கும்...பழையவான் ..பட்டியைக் கேட்டபோது..அது தேவையில்லை...ஆனால் ஒரு கண்டிசன் ..முருகண்டியிலை கச்சான் வாங்கி உள்ளுக்கு சாப்பிடமுடியாது ...எப்படி
2 months 3 weeks ago
இந்த தடவை யாழிலிருந்து விமானநிலையம் போகும்போது நாங்கள் வந்த வான் பழைய இலக்கத்தகடு என்றபடியால் அதற்கு இருக்கைப் பட்டிகள் அணியத் தேவையில்லை என்று சாரதி சொன்னார். இருந்தாலும் பழக்க தோசத்தில் அணிந்திருந்தேன். இடையிடை அது தானாகவே கழன்று கொண்டிருந்தது. தேடித்தேடி மீண்டும் மீண்டும் அணிந்தேன். பயணிகள் எல்லோரும் கட்டாயம் இருக்கைப் பட்டிகள் அணிய வேண்டுமென்றால் இலங்கையில் அநேகமான வாகனங்கள் ஓடவே முடியாது.
2 months 3 weeks ago
பிஜிஎம் இல்லை, ஆனால் தமிழ் பாடல்களை ராஜேஷ் வைத்யா அற்புதமாக வீணையில் வாசிப்பார். கேட்டுப்பாருங்கள்.
2 months 3 weeks ago
இது நம்ம அண்ணன் அடிக்கடி சொல்லும் தெலுங்கு வந்தேறி எல்லொ😂.. பிகு தன்வினை தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டை கொழுத்தும் 🤣
2 months 3 weeks ago
புஞ்சி அம்மே புருசர்கள் எல்லாம் ஒழுக்கம் பற்றி அட்வைஸ் 🤣
2 months 3 weeks ago
2 months 3 weeks ago
தம்பியருக்கு ஆகலும் குசும்பு கூடிப்போச்சுது 🤭
2 months 3 weeks ago
எதற்கான நினைவுச்சின்னம் என்று தெரியவில்லை யாழ்ப்பாணத்தில் 1990களின் தொடக்கத்தில்
2 months 3 weeks ago
2 months 3 weeks ago
செம்மணியில் எடுக்கப்படும் மனித எச்சங்களை AI இல் மாற்றி அமைப்பதனை தவிருங்கள். எது உண்மை என்று கண்டு பிடிக்கமுடியாமல் இருக்கிறது. வேணுமென்றால் உங்கட படங்களை செய்து பாருங்கள். Suren Karththikesu இதை வைத்தே அனைத்தையும் பொய்யாக்க போகிறார்கள். Baheerathan Kanagaratnam
2 months 3 weeks ago
மேற்குலகினை எதிர்க்கிறோம் என்ற நினைத்துக் கொண்டு அவற்றிற்கு எதிரான நாடுகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் இரண்டு பக்கமும் சிந்திக்க வேண்டும். வடகொரியா ஈரான் போன்ற சர்வாதிக நாடுகள் தமது சொந்த மக்களையே அடக்குமுறைக்குள் வைத்துக் கொடுமைப் படுத்துபவை. நாளை இவற்றிற்கு மேற்குலகிற்கு நிகரான சக்தி கிடைக்குமாக இருந்தால் இவை தனது எதிரி நாடுகளை நட்புடன் கையாளும் என்ற எந்த உத்தரவாதமும் கிடையாது ? இதற்கு தனியே மேற்குலகு பக்கம் நின்று சிந்திக்க வேண்டியதில்லை. அணுவாயுதம் கிடைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற ஈரானின் கொள்கை தவறானது. மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யாமல் அறிவியலில் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி அடைய முடிந்தால் ஈரானின் எதிர்காலத்துக்கு நல்லது. இன்று தனது சொந்த வான்பரப்புப் பாதுகாப்பையே முற்றாக இழந்து நிற்கும் நிலை எதிர்காலத்தில் ஏற்படாது..
2 months 3 weeks ago
வல்வெட்டித்துறையின் வரலாறு: வீரர் குடியேறிய நாடு 50 களில் எழுதப்பட்ட வல்வெட்டித்துறையின் வரலாற்றுக் குறிப்புகள் என்ற கட்டுரை பல தகவல்களைக் கொண்டுள்ளன. அவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளன: • அமைவிடம் மற்றும் பொதுத் தகவல்கள் ◦ வல்வெட்டித்துறை ஒரு துறைமுகப் பட்டினம். ◦ இது யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே 16 மைல் தூரத்திலும், காங்கேசந்துறையிலிருந்து கிழக்கே 9 மைல் தூரத்திலும், பருத்தித்துறையிலிருந்து மேற்கே 5 மைல் தூரத்திலும், தென்னிந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாகத் தெற்கே 30 மைல் தூரத்திலும் அமைந்துள்ளது. ◦ இதன் பரப்பு 1 சதுரமைல். ◦ 1952 ஆம் ஆண்டு குடிசனமதிப்பின்படி, இங்கு 5,162 இந்து சமயத்தவர்களும் 122 கிறிஸ்தவ சமயத்தவர்களும் வாழ்கின்றனர். ◦ 1947 ஆம் ஆண்டு முதல் பட்டின சபையாலும், அதற்கு முன் சுகாதார சபையாலும் பரிபாலிக்கப்பட்டு வருகின்றது. • பெயர் வந்த காரணம் ◦ 'வல்லி' என்னும் கால்நடை வியாபாரி பட்டி வைத்திருந்த இடமாதலால் 'வல்லிபட்டி' என அழைக்கப்பட்டு, துறைமுகம் ஏற்பட்ட பின் 'வல்லிபட்டித்துறை' என வழங்கி, பின்னர் 'வல்லிவெட்டித்துறை' எனத் திரிந்து, தற்காலம் 'வல்லுவெட்டித்துறை' என்றும் 'வல்வெட்டித்துறை' என்றும் வழங்கிவருகின்றது. ◦ இது சென்னபட்டினம் சென்னையெனச் சுருக்கி அழைக்கப்படுவது போல "வல்வை" என்றும் "வல்வை நகர்" என்றும் அழைக்கப்படுவதுமுண்டு. • ஆரம்பகால குடியேற்றம் - யுத்த வீரர்கள் ◦ ஆதியில் இவ்வூரில் குடியேறியவர்கள் இந்தியாவிலிருந்து ஊர்க்காவலுக்காக வரவழைக்கப்பட்ட போர் வீரர்களே. ◦ இவ்வீரர்கள் கடற்படை, தரைப்படை இரண்டிலும் சேர்ந்திருந்தவர்கள். ◦ உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் பாடிய "வல்வைக் கலித்துறை" எனும் செய்யுளில் இவ்வூரவர்கள் "ஊர்க்காவலர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். ◦ தஞ்சாவூர் நாய்க்கன் படைகளுடன் வல்வெட்டித்துறைக் கரையில் இறங்கியதாகவும், பறங்கியர் தலைவன் தெமோற்றோ திடீரென்று தாக்கி தமிழரை வெருட்டியடித்த செய்தி "யாழ்ப்பாணவைபவ கௌமுதி"யில் காணப்படுகிறது. ◦ இவ்வூருக்குப் பக்கத்திலுள்ள சமரபாகுதேவன் குறிச்சி, வென்றிபாகுதேவன் குறிச்சி, கல்லிடைத் தேவன் குறிச்சி போன்ற பெயர்களும் அப்பகுதிகளில் யுத்த வீரர்கள் இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்பதை வலியுறுத்துகின்றன. • தொழில்களில் மாற்றம் ◦ நாட்டில் அமைதி நிலவியபின், யுத்த வீரர்களின் சேவை வேண்டப்படாமல் போனதால், அவர்கள் வெவ்வேறு தொழில்களில் ஈடுபடலாயினர். ◦ கப்பல் கட்டுதல் மற்றும் கப்பலோட்டும் தொழில்: ▪ பணக்காரராயிருந்தவர்கள் "திரைகடலோடியுந் திரவியம் தேடு" என்னும் ஔவையார் வாக்கின்படி கப்பல்கள் கட்டுவித்து வியாபாரம் செய்து பொருள் ஈட்டத் தொடங்கினர். ▪ கடற்படையிலிருந்தவர்கள் கப்பலோட்டும் தொழிலிலும் கப்பல்கட்டும் தொழிலிலும் ஈடுபட்டனர். ▪ "நாவாய் சாத்திரம்" என்னும் கப்பல் கட்டும் சாத்திரத்தைக் கற்ற மேத்திரிமார் பலர் வல்வெட்டித்துறையிலே இருந்தனர். ▪ பெரிய பாய்க்கப்பல்களைக் கட்டுவதில் வல்ல மேத்திரிமார் இலங்கையில் இவ்வூரிலன்றி வேறெங்கும் காண்பது அரிது. ▪ திசைகாட்டும் கருவி, மணிகாட்டும் கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பே விண்மீன்களின் உதவியால் திசையையும் நேரத்தையும் அறிந்து கப்பல்களைப் பல தூர தேசங்கட்குமோட்டிப் பெயர்பெற்ற மாலுமிகள் பலர் இங்கு இருந்தனர். ▪ இந்தியாவிலுள்ள கப்பல் வர்த்தகர்கள் இவ்வூரிலுள்ள மேத்திரிமாரை அழைத்துக் கப்பல்கள் கட்டுவித்து பெரும் சீர்வரிசைகள் வழங்கியுள்ளனர். ▪ கீரிமலையில் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலும் மடாலயமும் கட்டுவித்த வடிவேலு மேத்திரியார் மற்றும் எல்லாக் கிரகங்களினதும் கதிவக்கிரம் முதலியவற்றைக் காட்டவல்ல அதி நூதனக் கடிகாரத்தைச் செய்தவரும், தோட்டங்களுக்கு யந்திரம் மூலம் நீர் பாய்ச்சுவதற்குரிய யந்திரத்தை முதல் முதல் கண்டுபிடித்துச் செய்துதவியவருமாகிய வா. ஆறுமுகம் (பொன்னுச்சாமி மேத்திரியார்) ஆகியோர் இத்தகைய கௌரவம் பெற்றவர்களில் சிலர். வா. ஆறுமுகம் 1930 இல் காலமானார். ▪ நீண்ட காலமாக இவ்வூரவர்கட்கு நாட்டுக்கோட்டைத் தனவணிகர்கள் கப்பல் கட்டுவதற்குப் பணம் கடன் கொடுத்துதவி வந்திருக்கின்றனர். ◦ வேளாண்மை மற்றும் வியாபாரம்: தரைப்படையிலிருந்தோர் வேளாண்மை, வியாபாரம் முதலிய தொழில்களை மேற்கொண்டனர். • ஆலயங்கள் ◦ "கோயிலில்லா ஊரிற் குடியிருக்க வேண்டாம்" என்ற முதுமொழிக்கேற்ப இங்கு கோவில்களுக்குக் குறைவில்லை. ◦ முக்கியமான பெரிய ஆலயங்கள்: ▪ கிழக்குப் பகுதியில் நெடியகாட்டுத் திருச்சிற்றம்பலம் பிள்ளையார் கோவில். ▪ மேற்குப் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில். ▪ முத்துமாரியம்மன் கோயிலுக்குப் பக்கத்தில் வாலாம்பிகாசமேத வைத்தீசுவரன் கோவில். ▪ இம்மூன்று ஆலயங்களிலும் ஆண்டுதோறும் உற்சவங்கள் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. ▪ இலங்கையில் கோபுரம் கட்டப்பட்ட முதற் கோயில் இம்முத்துமாரியம்மன் கோயிலே. ▪ வாலாம்பிகாசமேத வைத்தீசுவரன் கோவிலில் நடைபெறும் ஆறுகாலப் பூசைக் கிரமங்களும், ஆகமசாத்திரங்களிற் கூறப்பட்டபடி அமைந்திருக்கும் ஆலய அழகும் பெரிதும் போற்றற்குரியன. ◦ சிறு ஆலயங்கள்: தில்லையன் மடத்து வயிரவர் கோவில், உலகுடைய பிள்ளையார் கோவில், சடையாண்டி வயிரவர் கோவில், வைகுந்தப் பிள்ளையார் கோவில், நறுவிலடிப் பிள்ளையார் கோவில், மீனாட்சியம்மன் கோவில், கப்பலுடைய பிள்ளையார் கோவில், புட்டணியுப் பிள்ளையார் கோவில் என வழங்கும் 8 சிறு ஆலயங்களும், ஓர் கத்தோலிக்க மதத்தினர்க்குரிய ஆலயமும் உள. ◦ திருமேனியார் வேங்கடாசலம் பிள்ளையின் பங்களிப்பு: ▪ மேலே குறிப்பிட்ட சிவாலயம் திருமேனியார் வேங்கடாசலம் பிள்ளையால் 1867 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1883 ஆம் ஆண்டு வைகாசியில் பிரதிட்டாபிடேகஞ் செய்விக்கப்பட்டது. ▪ இவ்வாலயத்து லிங்கம் "பாணலிங்கம்". காசிக்குச் சென்று கங்கையாற்றிலிருந்து இவ்லிங்கத்தைக் கொண்டு வந்து கொடுத்துதவியவர் விசுவநாதர். ▪ ஆலயத் தூபித் தங்கக் கலசம், நடராஜர் முதலியவற்றை வார்ப்பித்துக் கொடுத்தவர் விசுவநாதரின் குமாரர் சரவணமுத்து. ▪ திருமேனியார் வேங்கடாசலம் பிள்ளையை யாவரும் "பெரியவர்" என்றே அழைப்பது வழக்கம். இவரைப் பற்றிச் சிவசம்புப் புலவரவர்களால் பாடப்பெற்ற "வல்வைக் கலித்துறை"ப் பாடல்கள் உள்ளன. ▪ வைகாசி மாதத்தில் நிகழும் வற்றாப் பழைப் பொங்கலுக்காக கடல் மார்க்கமாகச் செல்பவர்கள் தங்கி இளைப்பாறுவதற்காக முல்லைத்தீவுக் கடற்கரையோரத்தில் கட்டப்பட்டிருக்கும் மடாலயமும், ஒவ்வொருவரினதும் வருணாச்சிரமங்களுக்கேற்ப அமைக்கப்பட்டிருக்கும் வீடுகள் கூடங்களும் இவரால் அமைக்கப்பட்டனவே. இவர் 1892 ஆம் ஆண்டு சிவபதமடைந்தார். ▪ இவரது தம்பியார் திரு. குழந்தைவேல் பிள்ளைதான் கொழும்பு செக்கடித் தெருவில் யாழ்ப்பாணித்தார் கோவில் என வழங்கும் சுப்பிரமணியர் ஆலயத்தைத் தாபித்தவர். இவர் அக்காலத்து இந்துஸ்தான் வங்கியில் சிறாப்பராகவும் பிரபலமான வியாபாரியாகவும் இருந்து கொழும்பிலுள்ள தமிழ் மக்களுக்கு உறுதுணையாக இருந்தவர். இவர் 1905 ஆம் ஆண்டு சிவபதமடைந்தார். • புலவர்களும் அட்டாவதானியும் ◦ ஆதியில் வட மராட்சிப் பகுதி மணியகாரராயிருந்து கடமை பார்த்த புண்ணிய மூர்த்தி மணியகாரனின் மகளை மணந்தவர் ஏகாம்பரப் புலவர். (இப்புண்ணிய மூர்த்தியார் வேங்கடாசலம் பிள்ளை, குழந்தைவேல்பிள்ளை ஆகியவர்களின் தந்தையாகிய திருமேனியாரின் மூத்த சகோதரர்). ◦ ஏகாம்பரப் புலவரின் சகோதரியுடைய மகன் ஏகாம்பரம் என்பவர்தான் இலங்கையில் முதல் முதல் "அட்டாவதானஞ்" செய்து காட்டி அரும்பெரும் புகழ் பெற்றவர். இவர் "அட்டாவதானியார்" என்றே அழைக்கப்பட்டு வந்தவர். ◦ இவர்களுக்குப்பின் ச. வைத்தியலிங்கம் பிள்ளை, த. அருணாசலம்பிள்ளை, கதிரவேற்பிள்ளை, பொன்னையாபிள்ளை, சுப்பிரமணிய பிள்ளை ஆகிய புலவர்கள் இருந்திருக்கின்றனர். ◦ இவர்களுள் ச. வைத்தியலிங்கப் புலவர் குறிப்பிடத்தக்கவர். இவர் நாற்பொருட் கவிராச நம்பியகப் பொருள், வள்ளியம்மை தெய்வயானையம்மை திருமணப் படலம், கந்தரலங்காரம், மறைசையந்தாதி, கல்வளையந்தாதி முதலிய நூல்கட்கு உரை எழுதி அச்சிட்டு வெளியிட்டதுமன்றி, "சிந்தாமணி நிகண்டு" என்னும் நிகண்டு ஒன்றும் யாத்து வெளியிட்டுள்ளார். ஈழ நாட்டில் நிகண்டு நூல் செய்த புலவர் இவரன்றி வேறு யாரும் இலர். ◦ இவர் தர்க்கத்தில் தமக்கு ஒப்பாரும் மிக்காருமின்றி விளங்கியவர். ◦ இவர் காலத்து நிகழ்ந்த பல சண்டைகள் தொடர்பான கண்டனங்களையும் துண்டுப்பிரசுரமாக வெளியிட்டுள்ளார். ◦ "சைவாபிமானி" என்னும் பத்திரிகையொன்றைச் சொந்த அச்சியந்திர சாலை நிறுவி அச்சிட்டுப் பத்து ஆண்டுகள் வெளியிட்ட பின்னர் 1901 ஆம் ஆண்டு காலமானார். ◦ ஏனைய புலவர்கள் இயற்றியவை அச்சுவாகனம் ஏறாததால் ஒன்றும் தெரியவரவில்லை. • கவிக்குக் கனசுந்தருதல் (கவிஞர்களுக்கு சன்மானம்) ◦ வல்வெட்டித்துறை கோ. கந்தசாமி என்பவர் மட்டக்களப்பில் பிரபல மர வியாபாரியாக விளங்கியவர். ◦ உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரவர்கள் இவர் மீது "பிரபாவப் பாமாலை" ஒன்றை பாடிச் சென்றபோது, கந்தசாமிப்பிள்ளை புலவரை மட்டக்களப்புக்கு வந்தால் ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறி சிறு பொருளுதவி செய்தார். ◦ புலவர் சில மாதங்கள் கழித்து மட்டக்களப்புக்குச் சென்றபோது, கந்தசாமிப்பிள்ளை இல்லாத நிலையிலும், அவரது மனைவி சொன்ன சொற்படி ஆயிரம் ரூபாயை வழங்கினார். • கல்விச்சாலைகள் ◦ "சிதம்பர வித்தியாலயம்" என வழங்கும் ஓர் ஆங்கிலக் கல்லூரியும். இது 1896 இல் திரு. கு. சிதம்பரப்பிள்ளையவர்களால் நிறுவப் பெற்றது. பின்னர் அவரது மைத்துனர் திரு. ஞா. தையல்பாகர் அவர்களின் பரிபாலனத்தின் கீழ் வளர்ந்து வருகின்றது. ◦ "சிவகுரு வித்தியாசாலை" என வழங்கும் ஓர் தமிழ்ப் பாடசாலையும். இத்தையல்பாகர்தான் சிவகுரு வித்தியாசாலையைத் தாபித்தவர். ◦ அமெரிக்கன் மிஷனரிமாரால் நடத்தப்படும் ஓர் தமிழ்ப் பாடசாலையும். ◦ கத்தோலிக்க மதத்தினரால் தாபிக்கப்பட்ட ஓர் தமிழ்ப் பாடசாலையும் உள. ◦ திரு. ஞா. தையல்பாகர் தனது உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தையும் வித்தியாசாலைகளின் அபிவிருத்திக்காக அர்ப்பணம் செய்து அரும் பாடுபட்டு வருகின்றார். • முக்கியமான சமூக மற்றும் பொருளாதார அம்சங்கள் ◦ இவ்வூரில் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் கலப்பு மணம் செய்துகொள்ளும் வழக்கம் இல்லை. ◦ உள்ளூரவர்களே எல்லாவிதமான வியாபாரங்களையும் ஏற்று நடத்தி வருகின்றனர். ◦ அரசாங்க சேவையில் ஈடுபாடு: ▪ பண்டைக் காலம் தொடங்கி இவ்வூரவர்கள் அரசாங்க சேவையில் ஈடுபட்டுள்ளனர். ▪ திருமேனியாரின் தாயாருடன் கூடிப் பிறந்த பொன்னம்பலம் என்பவர் இந்தியாவிலும் இலங்கையிலும் பிரபல வியாபாரியாக விளங்கியதுடன், ஒல்லாந்த அரசாங்கத்தாரால் "முதலியார்" பட்டம் வழங்கப்பெற்றார். ▪ இவருக்குப்பின் வேலுப்பிள்ளை என்பவரும் அவருக்குப் பின் புண்ணியமூர்த்தி என்பவரும் மணியகாரராயிருந்தவர்கள். ▪ இன்னும் இவ் வல்வெட்டித்துறை வாசிகள் பலர் இலங்கை அரசாங்க சேவையில் எல்லாத் துறைகளிலும் அமர்ந்து சேவை செய்து வருகின்றனர். ▪ மலாயா, பர்மா முதலிய இடங்களிலும் பலர் இருக்கின்றனர். ▪ இந்தியாவுக்கும் இவ்வூரவர்கட்குமுள்ள தொடர்பு இன்றும் இருந்து வருகின்றது. ◦ சமூக பங்களிப்புகள்: ▪ இவ்வூரவரொருவர் (முகாந்திரம் அப்புக்குட்டியாபிள்ளை) ஒரு லட்சம் ரூபாய் செலவில் **"இந்திராணி வைத்தியசாலை"**யைக் கட்டி அரசினரிடம் ஒப்புவித்துள்ளார். ▪ "ஜனசமூக நிலையம்" (Community Centre) ஒன்று ஊரவர்களால் ரூ. 13,500 செலவில் கட்டிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண புலனாய்வு ·
2 months 3 weeks ago
தலைமன்னார் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 7 பேர் கைது 01 JUL, 2025 | 03:57 PM எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடித்த குற்றத்துக்காக இந்திய மீனவர்கள் 7 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். நேற்று (30) இரவு 11 மணியளவில் கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் ஏழு பேரும் இந்தியாவின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவரகள் என தெரிவிக்கப்படுகிறது. மீனவர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் அவர்களின் படகொன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. https://www.virakesari.lk/article/218938
2 months 3 weeks ago
இலங்கையில் கனடாவின் இருப்பு எமது நீடித்த மற்றும் உறுதியான வெளிநாட்டு கொள்கையின் அடித்தளமாக காணப்படுகின்றது : கனடா தின வாழ்த்துச் செய்தியில் உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் 01 JUL, 2025 | 10:45 AM இலங்கையில் கனடாவின் இருப்பு, எங்களது நீடித்த மற்றும் உறுதியான வெளிநாட்டு கொள்கையின் ஒரு அடித்தளமாகவே உள்ளது. நாங்கள் அரசாங்கத்துடன் மட்டுமல்லாது, தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்கள் மூலம் கட்டியெழுப்பும் நட்புறவுகளிலும் செயல்படுகிறோம் என இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ், கனடா தினத்தை முன்னிட்டு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் உலகம் முழுவதும் உள்ள கனேடியர்கள் ஒருமித்தாகக் கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான நாளில், இலங்கை மற்றும் மாலைத்தீவுகளில் வாழும் அனைத்து கனேடிய பிரஜைகள் மற்றும் இந்த தினத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் கனடா தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் மேலும் குறிப்பிட்டுள்ளார். கனடா தினத்தை முன்னிட்டு இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் வெளியிட்டுள்ள வாழ்த்துக் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கனடா தினம் என்பது நமது தேசிய அடையாளத்தை வடிவமைக்கும் முக்கியமான மதிப்புகளை பன்முகத்தன்மை, அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை, மனித உரிமைகளுக்கான மரியாதை, அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான நம்முடைய நீடித்த அர்ப்பணிப்பு பிரதிபலிக்கக் கூடிய சிறப்பான ஒரு வாய்ப்பாகும். இந்த தினம், நமது நாடு இன்று இருக்கும் நிலையில் அடித்தளமிட்டு, அதன் வளர்ச்சிப் பாதையை உருவாக்கிய முன்னோடி தலைமுறைகளின் பங்களிப்புகளுக்கு அஞ்சலி செலுத்தும் தருணமாகவும், கூட்டமைப்பிற்கு முந்தையதும் பிந்தையதுமான வரலாற்றிலிருந்து நாம் பெற்றுக்கொள்வதற்கான வலிமையையும், ஞாபகப் பாக்கியத்தையும் கௌரவிக்கும் ஒரு சிறப்புநாளாகவும் அமைகிறது. கனடாவின் துடிப்பான உருவாக்கத்தை நாம் கொண்டாடும் இவ்வேளையில், மக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். கல்விக் கூட்டாண்மைகள், அபிவிருத்தி ஒத்துழைப்புகள், பாலியல் சமத்துவம் மற்றும் சமநிலை மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த உலகத்தை நோக்கிய பகிரப்பட்ட பார்வை ஆகியவற்றின் ஊடாக, கனடாவும் இலங்கையும், மாலைத்தீவுகளும் வலுவான உறவுகளால் இணைக்கப்பட்டுள்ளன. பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதிலிருந்து காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றங்களை கொண்டுவருவதும், அதே சமயம் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதை தொடர்ந்து செழித்து வளரும் எங்கள் கூட்டுறவுகள் குறித்து நான் பெருமை அடைகிறேன். இலங்கையில் கனடாவின் இருப்பு, எங்களது நீடித்த மற்றும் உறுதியான வெளிநாட்டு கொள்கையின் ஒரு அடித்தளமாகவே உள்ளது. நாங்கள் அரசாங்கத்துடன் மட்டுமல்லாது, தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்கள் மூலம் கட்டியெழுப்பும் நட்புறவுகளிலும் செயல்படுகிறோம். இந்த ஆண்டின் தொடக்கத்தில், கனடாவின் இந்தோ - பசிபிக் வர்த்தக பிரதிநிதி இலங்கைக்கும் மாலைத்தீவுக்கும் விஜயம் செய்தமையில் பெரு மகிழ்ச்சி அடைந்தேன். இந்த விஜயம், கனடாவைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் அதிலும் குறிப்பாக இலங்கையில் வேரூன்றியவர்களின் இந்த நாட்டில் முதலீடு செய்யவும், ஏற்றுமதிகளை அதிகரிக்கவும் காணப்படும் ஆழமான ஆர்வத்தை வெளிப்படுத்தியது. 2022 ஆம் ஆண்டில் கனடாவின் இந்தோ - பசிபிக் மூலோபாயம் (Indo-Pacific Strategy) ஆரம்பிக்கப்பட்டதன் மூலம், இந்த பிராந்தியத்தின் மக்களுடனான எங்களது உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சி மற்றும் பிராந்திய பாதுகாப்பை ஆதரிப்பதில் எங்கள் பங்களிப்பை ஆழப்படுத்தவும், கனடா ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கனடா தினத்தைக் கொண்டாடும் அனைவரும் நீங்கள் எங்கு இருந்தாலும் இது, நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து எட்டிய சாதனைகள் குறித்து சிந்திக்கவும், எதிர்காலத்தில் எதைச் சாதிக்க வேண்டும் என்பதை நினைவு கூரவும் உதவும் ஒரு அரிய தருணமாக அமைய வேண்டும் என கனேடிய உயர் ஸ்தானிகர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/218900
Checked
Fri, 09/26/2025 - 12:14
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed