புதிய பதிவுகள்2

ஒழுக்கம் மற்றும் மனிதாபிமான வாழ்வியலுக்கு உயிரூட்டுவதன் மூலம் ஆன்மீக வளர்ச்சியுடன் கூடிய ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் - ஜனாதிபதி

2 months 3 weeks ago
துட்ட‍‍ஹெமுனு காலத்திலிருந்து இனவாதம் பேசும் மக்கள் கூட்டம் இருக்கும் வரை நீங்கள் மாற முடியாது

செம்மணி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் விளையாடும் பொம்மை மீட்பு

2 months 3 weeks ago
இது சிங்கள இராணுவ, பொலிஸாருடைய உடல்கள் என அடம்பிடிக்கும் அரசியல்வாதிகள் பிக்குகளின் வாயை அடைக்க வெளிப்பட்டிருக்கிறது. நன்றாக அவர்களைபேசுங்கள், நீங்களாகவே உங்களையுமறியாமல் உண்மைகளை வெளிக்கொண்டு வாருங்கள். இறைவா! ஒரு பாவமுமறியாத எங்கள் குழந்தைகளுக்கு இந்த நிலையா? ஒருவரை ஒருவர் பாதுகாக்க, காப்பாற்ற இறந்தவர்கள் அணைத்திருந்திருப்பார்களோ? அன்றி புதைகுழியில் ஒன்றோடு ஒன்றை பிணைத்து போட்டிருப்பார்களோ? எப்படியெல்லாம் கதறியிருப்பார்கள், கெஞ்சியிருப்பார்கள்? அந்த நிமிடத்தை, இதை செய்தவர்கள் நினைத்திருந்தால்; இந்த நிலை தொடர்ந்திருக்காது. இன்றுவரை இந்த புதைகுழி மௌனமாய் இருந்திருக்காது. புதைகுழி திறந்ததுபோல் கொடியவர்கள் மனதும் திறந்து உண்மையை கொண்டுவரவேண்டும். ஒரு சிங்கள இராணுவம் உண்மையை சொல்லியும் ஏற்காமல் விதண்டாவாதம் பண்ணும் ஒவ்வொருவரும் இதனோடு சம்பந்தப்பட்டவர்களே! இதன் பின்னும் நம்மவர் சிங்களத்துக்கு வெள்ளையடிப்பார்களா? ஆம்! அருண் சிர்த்தாத் வெளிக்கிட்டிருக்கிறார்.

வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்

2 months 3 weeks ago
அப்போது உண்மையான ஏகாதிபத்திய சுரண்டல் கொள்ளையர்களை காணலாம். இந்த சர்வாதிக நாடுகள் - மேற்குலகநாடுகள் வேறுபாட்டை நன்கு தெரிந்து கொண்டவர்கள் ஈழதமிழர்கள். அதனால் தங்களது தனிபட்ட வாழ்க்கையை மேற்குலகநாடுகளில் அமைத்து கொண்டனர்

வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்

2 months 3 weeks ago
கிரேக்க அறிஞ்சர் பிளேட்டோ போலி கவிஞ்சர்களை நாடுகடத்த வேண்டும் என கூறினார், அதற்கு அவர் கூறிய காரணம் மக்களை தவறாக நடத்த முயற்சிப்பதே என கூறுகிறார். Perception என்பது ஒரு வர்ண கண்ணாடி போன்றது அவரவர் புரிதலி விடயங்கள் ஒன்று போல தோன்றும், மிக குறைவான தரவுகளுடன் விடய்ங்களை சுயவிருப்பின் அடிப்படையில் அணுகும் போது இவ்வாறான தவறான முடிவுகளுக்கு வரவேண்டிய நிலை உள்ளது, சமூகத்தில் மதிக்கப்படும் உயர்நிலையில் உள்ள ஒரு கல்வி சமூகத்திற்கு அதிக அக்கறையும் பொறுப்புணர்வும் இருக்கவேண்டும். கண்ணுக்கு புலப்படாத போரினை ஒரு மதிப்பாய்வு செய்தவரின் கருத்டினுடாக அதில் கூறப்பட்ட விடயத்தினை சுருக்கமாக..... ஒரு கொடுமையினை சட்டமாக்குவதற்கு ஐநா எவ்வாறு உடந்தையாக இருந்தது? அதுவும் ஐ நா பாதுகாப்பு சபையினூடாக ஒரு பாரபட்சமான பொருளாதார தடை ஈராக்கிற்கெதிராக நிறைவேற்றப்பட்டது? ஐ நாவால் அமைக்கப்பட்ட பிரத்தியேக கண்காணிப்புக்குழு ஈராக்கின் இரக்குமதியினை கண்காணித்தது, அவை மனிதாபிமான உணவு மருந்து உள்ளடங்கலாக. இந்த பிரத்தியேக கண்காணிப்புக்குழுவிற்குள் ஊடுருவிய அமெரிக்க அதிகார மையம் 1.மனிதாபிமான உதவிகளை கட்டுப்படுத்தியது. 2.அதிக பட்ச பொருளாதார அழுத்ததினை பிரயோகித்தது 3.இவை அனைத்தும் மக்களுக்கெதிரானது எனும் புரிதலுடனேயே அதனை நிகத்தியிருந்தது. அமெரிக்கா ஐநாவின் 661 பொருளாதார தடை குழுவில் தந்து அதிகாரத்தின் மூலம் குளிர்சாதனம், சுத்தமான நீர், சவர்க்காரம், கோழி முட்டை (உயிரியல் ஆயுதம் செய்துவிடுவார்களாம், இந்த தடைகள் அத்துடன் இதற்கு மேலான பொருள்தடைகள் எமது பிராந்தியத்தில் முன்னர் நிகழ்த்தப்பட்டிருந்த்து) போன்ற பொருள்கள் தடை செய்தது. இந்த பொருளாதார தடை ஈராக்கின் பொருளாதாரத்தினை முற்றாக அழித்தது மட்டுமன்றி ஒரு நாட்டின் இறையாண்மையினையே மீறியது. இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பது போல சுத்தமான நீரை வழங்குவதற்கான கருவிகளை திருத்துவத்ற்கான உதிரிப்பாகங்களுக்கான தடை முலம் 5 இலட்சம் குழந்தைகள் இறப்பிற்கு அமெரிக்கா வெளியுறவுத்துறையின் பரவல் தடுப்பு பணியகம் ஈரான் ஆக்கிரப்பு போரிற்கு முன்னரே காரணமாக இருந்தது. இவை அனைத்தும் சதாமினை ஆட்சியில் இருந்து நீக்குவதற்கான முயற்சியாக இருந்த போதும் அதன் மூலம் சதாமினை இந்த பொருளாதார தடையின் மூலம் எதுவும் செய்யவில்லை. அவ்வாறிருக்கையில் எதற்காக பொருளாதார தடை? என தொடருகிறார்.

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

2 months 3 weeks ago
■★◆●உடலில் அணிய வேண்டிய 10 பவுன் நகையை காரின் பின் சீட்டில் கழட்டி வைத்தது ஏன்..? ■★◆● அம்மா / மகள் இருவரில் அது யாருடைய நகை..? என்ன நகை அது..? ■★◆●மதுரையில் இருந்து 25கிமீ மடப்புரம் கோயிலுக்கு காரை ஓட்டிக்கொண்டு வந்த மகள் நிகிதா... பின் சீட்டில் நகை வைக்கப்பட்ட அந்த காரின் சாவியை... முன் பின் பழக்கம் இல்லாத(?) 3ஆம் நபர் ஒருவரிடம் கொடுத்து பார்க்கிங் செய்யச் சொல்லிவிட்டு கோயிலுக்குள் போனது ஏன்..? ■★◆●தனக்கு கார் ஓட்டவே தெரியாத அஜித்குமார், காரை பார்க் செய்ய ஒப்புக்கொண்டு கார் சாவியை ஏன் பெற்றுக்கொண்டார்..? ■★◆●காரில் நகை இருந்தால் அதை எடுத்துக்கொள்ள வேண்டும், அல்லது அணிந்து கொள்ள வேண்டும் என்கிற பாதுகாப்புணர்வு ஏன் அம்மா மகள் இருவருக்கும் அப்போது ஏற்படவே இல்லை..? மற்ற பொருட்கள் எனில் பெண்கள் மறப்பார்கள். கவனமின்மை சாத்தியம். ஆனால், நகையை எப்படி பெண்கள் மறந்தனர்..? அம்மா சிவகாமி கூட ஞாபகப்படுத்தவில்லையா..? ■★◆●அஜித்திடம் சாவியை பெற்று காரை எடுத்து ஓட்டி பார்க் செய்த அந்த 4வது நபர் யார்..? ■★◆●நகை காணவில்லை என்றதும், நகைக்கு சொந்தக்காரர்கள், 7கிமீ அருகேயுள்ள திருப்புவனம் காவல் நிலையத்தில் உள்ளூர் போலீசிடம் புகார் அளித்தார்களா..? ■★◆●30கிமீ தூரமுள்ள மானாமதுரையில் இருந்து யூனிஃபார்ம் அணியாமல் (லுங்கி, கோடு போட்ட பேண்ட், டி ஷர்ட், சாதா சட்டை எல்லாம் அணிந்தபடி வந்ததாக ஊர் மக்கள் கூறுகிறார்கள்) போலீஸ் தனிப்படை ஒன்று மடப்புரம் கோயிலுக்கு விசாரணைக்கு ஓடி வந்தது ஏன்..? ■★◆●பக்கத்தில் உள்ள திருப்புவனம் காவல் நிலையத்திற்கு கூட்டிப்போய் விசாரணை செய்யாமல் தனிப்பட்ட இடத்தில் விசாரணை நடந்தது ஏன்..? ■★◆●"தப்பி ஓடும்போது தடுக்கி விழுந்து காக்கா வலிப்பு ஏற்பட்டு மரணம்" என்கிற பொய் FIR போட்டது ஏன்..? போட ஒப்புக்கொண்டது ஏன்..? (யூனிஃபார்ம் போடாத டி ஷர்ட் அணிந்த ஒருவரின் பிரம்படி வீடியோ வெளியாகி காக்கா வலிப்பு கதை எல்லாம் பொய் என்றாகிவிட்டது). ■★◆●உயர் அதிகாரிகளின் உத்தரவின் படிதான் தங்கள் வீட்டுக் காவலர்கள் இதைப்போன்று மனிதமற்று சட்ட விரோதமான கொடூரத்தில் ஈடுபட்டதாக தர்ணா போராட்டம் செய்கிற கைதான காவலர் குடும்பத்தினர் கூறியுள்ளனர் எனில்... கீழ்நிலை காவலர்களுக்கு சட்ட விரோதக் கட்டளை இட்ட குற்றத்திற்காக கைதாகி சிறை செல்ல வேண்டிய அந்த உயர் அதிகாரிகள் யார்..? ■★◆●இதைவிட அதிகளவில்... 100 பவுன் 200 பவுன்... என்று நகைகள் திருடு போன வழக்கில் எல்லாம் மெத்தனம் காட்டும் போலீஸ்...இவர்களின் 10 பவுன் நகைக்காக போலீஸ் இத்தனை தீவிரமாக உடனடி நடவடிக்கையில் இறங்கியது ஏன்..? ■★◆●இந்த நிகிதா... சிவகாமி இருவரும் யார்..? இவர்களின் பின்னணி என்ன..?! மேற்கண்டவை போன்ற பல கேள்விகள் தெளிவான பதிலற்று உள்ளன. வழக்கில் பல மர்மங்கள் விலக வேண்டியுள்ளது. குகன் அருமைநாட்டார்

பேடோங்டார்ன் ஷினாவத்ரா தாய்லாந்து பிரதமராக பதவி வகிப்பதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை

2 months 3 weeks ago
01 JUL, 2025 | 12:34 PM தாய்லாந்தின் பிரதமராக பேடோங்டார்ன் ஷினாவத்ரா பதவி வகிப்பதற்கு அந்த நாட்டின் அரசமைப்பு நீதிமன்றம் இடைக்காலதடைவிதித்துள்ளது. கம்போடியாவின் முன்னாள் தலைவருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் குறித்த விடயங்கள் அம்பலமாகியதை தொடர்ந்தே நீதிமன்றம் இந்த தடையை விதித்துள்ளது. பிரதமர் நெறிமுறையை மீறினார் என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் அவரை பதவியிலிருந்து இடைநீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். https://www.virakesari.lk/article/218921

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு

2 months 3 weeks ago
மேற்கு காசாவின் பிரபலமான சிற்றூண்டிச்சாலை மீது இஸ்ரேல் தாக்குதல் - 30க்கும் அதிகமானவர்கள் பலி 01 JUL, 2025 | 11:51 AM மேற்குகாசாவில் செயற்பாட்டாளர்கள் பத்திரிகையாளர்கள் உள்ளுர் மக்கள் அடிக்கடி செல்லும் பிரபல கடற்கரை சிற்றூண்டிச்சாலை மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதலில் 30க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடற்கரையோரத்தில் கூடாரங்களை கொண்ட அல்பக்சா சிற்றூண்டிச்சாலையில் இருந்து மீட்புக்குழுவினர் 20க்கும் அதிகமான உடல்களை மீட்டுள்ளதுடன் காயமடைந்த பலரை மருத்துவமனைகளிற்கு கொண்டு சென்றுள்ளனர் என ஹமாசின் சிவில் பாதுகாப்பு பிரிவின் அதிகாரியொருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். குண்டுதாக்குதல் காரணமாக ஏற்பட்ட பாரிய குழிக்குள் மீட்பு குழுவினர் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனஅவர் தெரிவித்துள்ளார். நான் இணையத்தை பயன்படுத்துவதற்காக அங்கு சென்றுகொண்டிருந்தேன் நான் சில மீற்றர் தொலைவில் இருந்தவேளை பாரிய சத்தம் கேட்டது என உள்ளுர் ஊடகநிறுவனத்தின் கமரா பணியாளர் தெரிவித்துள்ளார். நான் உடனடியாக அங்கு ஓடினேன் எனது சகாக்களும் அங்கு இருந்தனர்- நான் நாளாந்தம் சந்திப்பவர்கள் - அங்கு நான் கண்ட காட்சிகள் மிகவும் பயங்கரமானவையாக காணப்பட்டன- எங்கும் உடல்கள்இ குருதி . அலறல்கள் என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் போர்விமானத்திலிருந்து ஏவுகணை ஏவப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/218910

முகமது நபியை சித்தரிக்கும் கருத்தோவியத்திற்கு துருக்கியில் கடும் எதிர்ப்பு - நான்கு கருத்தோவியர்கள் கைது

2 months 3 weeks ago
01 JUL, 2025 | 12:53 PM முகமது நபியையும் மோயீசனையும் சித்தரிக்கும் கருத்தோவியங்களை வரைந்த நான்கு கருத்தோவியக் கலைஞர்களை துருக்கி பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கருத்தோவியங்களிற்கு எதிராக கடும் ஆர்ப்பாட்டங்கள் மூண்டதையடுத்தே துருக்கி பொலிஸார் கருத்தோவிய கலைஞர்களை கைதுசெய்துள்ளனர். அரசியல் சஞ்சிகையொன்றில் வெளியான இந்த கருத்தோவியத்தில் குண்டுகள் விழும்போது, இறக்கைகள் மற்றும் ஒளிவட்டங்களுடன் காணப்படும் இஸ்லாமியர் ஒருவரும் யூதரும் கைகுலுக்கிக்கொள்வதை காணமுடிகின்றது. வெளியாகி நான்கு நாட்களின் பின்னர் இந்த கருத்தோவியம் சமூக ஊடகங்களில் பரவலானது.இதனை தொடர்ந்து இஸ்தான்புலில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என கோஷமெழுப்பினர். இதனை தொடர்ந்து குறிப்பிட்ட அரசியல் சஞ்சிகையின் நடவடிக்கை குறித்து துருக்கி அதிகாரிகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். இந்த கருத்தோவியம் ஒரு தூண்டும் நடவடிக்கை என தெரிவித்துள்ள துருக்கியின் உள்நாட்டு விவகாரங்களிற்கான அமைச்சர் அலி யெர்லிகயா இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன்னால் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். கேலிச்சித்திரம் கருத்து சுதந்திரத்தினால் அல்லது பேச்சு சுதந்திரத்தினால் பாதுகாக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/218918

இன, மத, மொழித் தேசியவாதங்களால் பிளவுபட்டுக்கொண்டிருக்கும் உலகை சூழற் தேசியத்தாலேயே ஒருங்கிணைக்க இயலும் - ஐங்கரநேசன்

2 months 3 weeks ago
Published By: VISHNU 01 JUL, 2025 | 08:08 PM பாரம்பரிய வாழ்விடத்தையும் தனித்துவமான, மொழியையும் பண்பாட்டையும் கொண்டுள்ள மக்கள் கூட்டத்தைத் தேசிய இனங்கள் என்று அரசியல் அறிஞர்கள் வரையறை செய்துள்ளார்கள். இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் எதுவுமில்லை. ஆனால், எண்ணிக்கையில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் தேசிய இனங்கள் தங்களை உயர்வாகக் கருதிச் சிறுபான்மைத் தேசிய இனங்களை அடக்கியொடுக்கி வருகின்றன. இவ்வொடுக்குமுறைக்கு எதிராகச் சிறுபான்மைத் தேசிய இனங்கள் கிளர்ந்தெழுகின்றன. இன, மத, மொழித் தேசியவாதங்களால் பிளவுபட்டுக்கொண்டிருக்கும் உலகை சூழற்தேசியத்தாலேயே ஒருங்கிணைக்க இயலும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை (29) நடைபெற்ற பசுமை அமைதி விருதுகள் விழாவுக்குத் தலைமை உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், காலத்துக்குக்காலம் மானுடத்தை வழிநடத்துவதற்கென்று சிந்தனையாளர்களால் கோட்பாடுகள் முன்மொழியப்பட்டு வந்துள்ளன. சோசலிசக் கோட்பாடு பல தேசிய இனங்களைக் கொண்ட நாடுகளில் இனங்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்காக உருவானது. ஆனால், சோசலிச நாடுகள் பிற்காலத்தில் முதலாளித்துவப் பொருளாதாரத்துக்கு முகங்கொடுக்க முடியாமல் அடிபணிந்தபோது அங்கு இனங்களுக்கிடையில் மோதல்கள் தலை தூக்கியது. சோவியத் யூனியன் சிதறுண்டதும் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்த உக்ரைன் மீது சோவியத் ரஸ்யா இப்போது படையெடுப்பதும் சோசலிசச் சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தியதிலிருந்த குறைபாடுகளால் ஏற்பட்ட விளைவுகள்தான். போர்களில் ஏற்படும் உயிரிழப்புகளைவிட சுற்றுச்சூழல் சீர்குலைவினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. வளங்களின் அளவுக்கு மிஞ்சிய நுகர்வால் வளப்பற்றாக்குறைவு ஏற்பட்டு, எஞ்சியுள்ள வளங்களைப் பங்கிடுவதில் முரண்பாடுகளும் மோதல்களும் வெடித்துள்ளன. பூமியின் வெப்ப உயர்வு காரணமாகக் கடல் மட்டம் உயர்ந்து தீவு நாடுகளில் கரையோரப்பகுதிகளை மெல்ல மெல்லக் காவுகொண்டு வருகிறது. காலநிலை மாற்றத்தின் விளைவுகளாகத் காலந்தப்பிய அடை மழை, கடும் வரட்சி, காட்டுத் தீ, உயிரினங்களின் அழிவு, இதுவரை காணாத புதுப்புது நோய்கள் என்று பல்வேறு சூழற் பிரச்சினைகள் தினந்தினம் உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றன. தற்போதுள்ள அரசியற் கொள்கைகள், கோட்பாடுகளினால் சூழற் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க இயலாததாலேயே சூழலியம் என்ற புதிய கோட்பாடு முகிழ்த்து வருகிறது. ஒவ்வொரு தேசிய இனமும் தன்னை முதன்மைப்படுத்தும் மனிதமையச் சிந்தனையைத் தவிர்த்து சூழல்நேயச் சிந்தனைக்கு முதலிடம் கொடுத்தால் மட்டுமே அது வாழுகின்ற சூழலைப் பாதுகாக்க முடியும். இதன் மூலமே ஒட்டுமொத்தப் பூமியும் பாதுகாக்கப்படும். ஆபத்தின் விழிம்பில் நிற்கும் உலகை காப்பாற்றுவதற்குச் சூழலியற்தேசியம் என்ற கோட்பாட்டை உலகை வழிநடத்துகின்ற கோட்பாடாக நாம் ஏற்றுக்கொண்டால் மாத்திரமே எம்மையும் ஏனைய உயிரினங்களையும் பேரழிவுகளிலிருந்து காப்பாற்ற இயலும் என்றார். https://www.virakesari.lk/article/218970

செம்மணி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் விளையாடும் பொம்மை மீட்பு

2 months 3 weeks ago
கண்விழித்தபடியே காத்திருந்த இந்த பொம்மைக்கு தெரியும் அங்கு நடந்த அத்தனையும். நீல நிற புத்தகப்பை, கண்ணாடி வளையல், காலணி, குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகளோடு ஒரு மழலையவள் செம்மணி மண்ணுக்குள் புதைக்கப்பட்டுள்ளாள். காலக்கண்ணாடியாக மாறப்போகும் பொம்மை இது. இதே தோற்றமுடைய பொம்மை என்னிடமும் இருந்தது. நல்ல தடிப்பான ரப்பரால் செய்யப்பட்ட பொம்மை, அதிலிருக்கும் நிறங்கள் மேற்பூச்சாக பூசப்பட்டிருக்காது. நன்றாக ஊற வைத்து எடுக்கப்பட்டு ஒரே அச்சில் வார்க்கப்பட்ட பொம்மையாக இருக்கும். அன்றைய நாட்களில் தரமான பொம்மைகளில் ஒன்று. அது எனது அக்கா தன் மழலைக்காலத்தில் பாவித்து பின் நான் பாவித்த பொம்மையாகும். அக்காவின் இரண்டாவது பிறந்தநாள் (1985) நிகழ்வில் அப்பொம்மை இருக்கிறது. 80 களின் நடுப்பகுதியில் வெளியான தமிழ் சினிமாக்களில்கூட இப்படியான பொம்மைகளை காணமுடியும். இந்த பொம்மையும் இடப்பெயர்வுக்கு முன்பாக கோவில் திருவிழா கடைகளிலோ, பொம்மை கடைகளிலோ வாங்கப்பட்டிருக்க வேண்டும். இந்த பொம்மையை இந்த மழலையின் சகோதர/ சகோதரி பாவித்து தன் தங்கைக்காக வைத்திருந்ததாகவே இருக்க முடியும். இடப்பெயர்வு காலத்தில் என்னைப்போல இந்த குழந்தையும் இந்த பொம்மையையும் கையோடு கொண்டுசென்றிருக்கும் என்பதை என்னால் நம்பமுடிகிறது. அச்சகோதர இரத்தம் உயிரோடு இருந்தால் இந்த குழந்தை இனங்காணப்படும். அதன்வழி இப்புதைகுழியின் காலம் வெளிப்படும். நன்றாக வாழ்ந்த ஒரு குடும்பம் மண்ணோடு மண்ணாக்கப்பட்டுள்ளதாக என் உள்மனது சொல்கிறது. இயற்கை தன் கணக்கை தீர்க்கும் கணத்துக்காக இவற்றையெல்லாம் தன்னோடு வைத்துக்கொண்டது போலும். Janakan Sivagnanam

சிரந்தி ராஜபக்சவின் சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்க கைது !

2 months 3 weeks ago
மஹிந்த ராஜபக்‌ஷவின் மச்சானும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்கவின் விளக்கமறியல் ஜூலை 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இவர் ஶ்ரீலங்கா எயார்லைன்ஸில் நடைப்பெற்ற ஊழல் மற்றும் நிதி மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Vaanam.lk

சிரந்தி ராஜபக்சவின் சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்க கைது !

2 months 3 weeks ago
கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு! இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை ஜூலை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க தலைமை நீதிபதி தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, இன்று (01) சிறை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையிலேயே குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1437761

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

2 months 3 weeks ago
பொலிஸார் தாக்கியதில் உயிரிழந்த இளைஞர்! வெளியான வீடியோவால் பரபரப்பு. சிவகங்கை அருகே, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற 28 வயதான காவலாளி, பொலிஸாரினால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில், பத்ரகாளி அம்மன் கோயிலில் அஜித்குமார் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா மற்றும் அவரது தாயார் அந்த கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களது காரை வாகன தரிப்பிடத்தில் விடுமாறு கூறி,காவலாளி அஜித்குமாரிடம் சாவியை கொடுத்ததாகவும், திரும்பி வந்து பார்த்தபோது, காரின் பின் இருக்கைக்கு அடியில் வைத்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் நிகிதா முறைப்பாடு அளித்துள்ளார். அது மட்டுமல்லாமல், நிகிதா மற்றும் கோயில் ஊழியர்களே அஜித்குமாரை திருப்புவனம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அஜித் குமார் கடுமையாக லத்தியால் தாக்கி விசாரிக்கப்பட்டுள்ளார். அப்போது வலி தாங்க முடியாமல் அஜித்குமார் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதைத்தொடர்ந்து அஜித்குமாரை தாக்கி கொலை செய்த பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி அஜித்குமார் உறவினர்கள் மடப்புரத்தில் ஜூன் 28-ம் திகதி போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து மதுரை அரச மருத்துவமனையில் அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அன்று இரவு உடல் தகனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து திருப்புவனம் காவல்துறையினர் டீNளுளு 190 (2) (ஏ) பிரிவின் கீழ் வழக்கு பதிந்து நீதித்துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டது. மேலும் அந்த வழக்கு பதிவில் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, கீழே விழுந்து அடிபட்டதில் உயிரிழந்ததாக கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் இது தொடர்பில் விசாரணைகள் தீவிரமாக்கப்பட்டு வந்த நிலையில்,தலை முதல் கை, முதுகு, கால்கள் என அனைத்திலும் காயங்கள் இருந்தன. மேலும், 18 இடங்களில் காயங்கள் இருப்பதும், பல இடங்களில் ரத்தக் கசிவு இருந்ததும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் அஜித்குமாரை தனிப்படை காவல்துறையினர் கோயில் பின்புறம் மாட்டு தொழுவத்தில் வைத்து கம்பால் தாக்கிய காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437720

பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவது கட்டாயம் – அமைச்சர் பிமல்!

2 months 3 weeks ago
விபத்துக்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்புக்களை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் - பிமல் ரத்நாயக்க 01 JUL, 2025 | 04:25 PM (எம்.மனோசித்ரா) வாகன சாரதிகள் ஆசனப்பட்டிகளை அணிவதை கட்டாயமாக்குவதன் மூலம் அவர்களுக்கு தண்டனை வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமல்ல. விபத்துக்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்புக்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்கு வேண்டும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (1) கொழும்பிலுள்ள இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து தரிப்பிடங்களுக்குச் சென்று பேருந்து சாரதிகள் ஆசனப்பட்டியை அணிந்திருக்கின்றனரா என்று அமைச்சர் கண்காணிப்பில் ஈடுபட்டார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், 2011ஆம் ஆண்டு இலகு மற்றும் கனரக வாகனங்களில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் பேருந்து மற்றும் லொறி சாரதிகளுக்கு இது கட்டாயப்படுத்தப்பட்டிருக்கவில்லை. எனவே, கடந்த 3 மாதங்களாக இது தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு, இந்த நடவடிக்கை தற்போது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் சாரதிகள் மாத்திரமின்றி, பின் இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்களும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்படவுள்ளது. வீதி விபத்துக்களின்போது அதிக மரணங்கள் பதிவாகுவதற்கும் இது ஒரு பிரதான காரணியாக உள்ளது. ஆசனப்பட்டிகளை அணிவதால் பெருமளவான விபத்துக்களைக் குறைத்துக்கொள்ள முடியும். இலகுரக வாகனங்களிலும் பின் இருக்கைகளில் பயணிப்பவர்கள் ஆசனப்பட்டிகளை அணிந்தால் விபத்துக்கள் இடம்பெற்றாலும் உயிரிழப்புக்கள் ஏற்படுவதைக் கட்டுப்படுத்த முடியும். ஆசனப்பட்டி அணியாதவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. அவதானத்துடன் பயணித்து, விபத்துக்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்புக்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். எனவே, ஆசனப்பட்டி அணிதல் தொடர்பில் இனி தீவிர கண்காணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. சில இடங்களில் ஆசனப்பட்டிகள் மறைக்கப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வாறானவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/218941

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

2 months 3 weeks ago
தலைமன்னார் கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் விளக்கமறியல் 01 JUL, 2025 | 05:51 PM இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து படகு ஒன்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்ட 7 ராமேஸ்வரம் மீனவர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை (1) மாலை உத்தரவிட்டார். ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை (30) மீன்பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்கள் நேற்றிரவு எல்லை தாண்டி மீன்பிடித்தபோது இலங்கை கடல் பகுதியில் வைத்து கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர். தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை இன்று (1) பகல் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் இன்று மாலை குறித்த மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஏழு மீனவர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். https://www.virakesari.lk/article/218967
Checked
Fri, 09/26/2025 - 12:14
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed