புதிய பதிவுகள்2

சிரந்தி ராஜபக்சவின் சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்க கைது !

2 months 4 weeks ago
27 Jun, 2025 | 02:51 PM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிரந்தி ராஜபக்ஷவின் மனைவியின் சகோதரரும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். சிரந்தி ராஜபக்சவின் சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்க கைது ! | Virakesari.lk

பலாலி சந்தையை விடுவிக்க வேண்டும் ; வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

2 months 4 weeks ago
27 Jun, 2025 | 04:10 PM யாழ். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் கன்னி அமர்வு ஞாயிற்றுக்கிழமை (27) பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தவிசாளர் தனது தலைமை உரையில் தெரிவித்ததாவது, எங்களுடைய மக்கள் இன்னும் 2400 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் மீள் குடியேற்றப்படாமல் இருக்கின்றார்கள், அவர்களை மீள்குடியேற்றுவதற்காக எங்களுடைய சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதற்காக அனைவருடைய ஒத்துழைப்பும் தேவையாக இருக்கின்றது. எங்களுடைய பல உறுப்பினர்கள் கூட தமது சொந்த நிலங்களுக்கு திரும்பாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் தமது சொந்த நிலங்களுக்கு சென்று இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கு நாங்கள் அவர்களுக்கான நிலங்களை பெற்றுக் கொடுப்பதோடு, அந்தப் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்தை தொடர்ந்து நடைபெறுகின்ற அபிவிருத்தி திட்டங்களையும் நாங்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. கடந்த ஏப்ரல் மாதம் மீள்குடியேற்ற அமைச்சினால் 182 மில்லியனுக்கும் மேற்பட்ட ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருந்த போதும் அதற்கான வேலை திட்டங்கள் இன்னும் ஆரம்பிக்கப்படாமல் இருக்கின்றது. எங்களுடைய சபையின் பக்கமும் ஒரு சில தவறுகள் இருக்கின்றன, அதற்கான மதிப்பீடுகள் சமர்ப்பிக்கப்படாத நிலையில் இருக்கின்றது. நாங்கள் சபையை பொறுப்பெடுத்த பின்னர் அதனை விரைவு படுத்த வேண்டிய தேவைப்பாடு இருக்கிறது. தொடர்ந்து சபைக்கான நிலையியற் குழுக்கள் அமைக்கப்பட்டதோடு , தீர்மானங்களும் எடுக்கப்பட்டது. இதன்போது பிரதேச சபைக்கு சொந்தமான பலாலி சந்தையை விடுவித்து தருமாறு கோரி சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறித்த தீர்மானம் மாவட்ட இராணுவ தளபதிக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் எழுத்து மூலம் அனுப்பப்படும். அத்தோடு கடந்த 2023 ஆம் ஆண்டு விடிவிக்கப்பட்டுள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தை மீள அமைப்பதற்கு விரைவில் அதற்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும் என்றார். பலாலி சந்தையை விடுவிக்க வேண்டும் ; வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம் | Virakesari.lk

ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான வழக்கினை மீண்டும் தாக்கல் செய்யவுள்ளதாக இரா.சாணக்கியன் தெரிவிப்பு

2 months 4 weeks ago
27 Jun, 2025 | 05:04 PM படுகொலைசெய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் படுகொலை தொடர்பான வழக்கினை மீண்டும் தாக்கல்செய்யவுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். படுகொலைசெய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் புதல்வர் ஜோசப்பரராஜசிங்கம் டேவிட் 20வருடங்களுக்கு பின்னர் வெள்ளிக்கிழமை (27) மட்டக்களப்புக்கு வருகைதந்த நிலையில் படுகொலைசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராசிங்கத்தின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இதன்போது தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன்,பிரதி முதல்வர் டினேஸ் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் இதன்போது கலந்துகொண்டனர். புதூர் பகுதியில் உள்ள மயானத்தில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் நினைவுத்தூபியில் அவரின் மகன் மற்றும் பாராளுமுன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர்,பிரதி முதல்வர் சுடர் ஏற்றி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் படுகொலைக்கு நீதிகோரி ஒவ்வொரு வருடமும் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபமுன்னணி போராட்டத்தினை நடாத்திவருகின்றது. ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் கொலையில் முக்கிய சந்தேகநபராக பிள்ளையான் அவர்கள் நல்லாட்சிக்காலத்திலே கைதுசெய்யப்பட்டிருந்தார். அதனை தொடர்ந்து அவர் விடுதலைசெய்யப்பட்டார். அந்த விடுதலை பல சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது. தென்னிலங்கையில் கூட நீதித்துறையில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பும் வகையில் அசாத் மௌலானாவின் வாக்குமூலம் இருந்தது. ஆனால் சட்டமா அதிபர் திணைக்களம் அந்த வழக்கினை தள்ளுபடிசெய்து குற்றவாளி கூண்டிலிருந்து பிள்ளையானை நீக்கியிருந்தார்கள். ஆனால் காலம்மாறியிருக்கின்றது.அந்த படுகொலையினை செய்ததாக சந்தேகிக்கப்படும் ராஜபக்ஸ ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் தற்போது ஆட்சியில் இல்லை. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மீண்டும் பிள்ளையான் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார். பிள்ளையான் கைதானது ஈஸ்டர் குண்டுத்தாக்குதலா அல்லது திரிபொலியுடன் இணைந்து மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் உட்பட ஏனைய கொலைகளைப்பற்றியா என்பது நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆனாலும் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் சார்பில் அவரின் படுகொலை வழக்கினை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருக்கின்றோம். இது தொடர்பான விடயங்கள் சில மாதங்களுக்கு முன்னர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் குடும்பத்தினரின் இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கவேண்டும். என்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றார். இங்கு மூடிமறைக்கப்பட்ட,நீதி மறுக்கப்பட்ட பல படுகொலைகளை விசாரணைசெய்யப்படவேண்டும். இரு தினங்களுக்கு முன்னர் ஐநா மனித உரிமை ஆணையாளர் வந்தபோது அவர் எங்களிடம் சில விடயங்களை தெரிவித்திருந்தார் அதாவது காணாமல்ஆக்கப்பட்டவர்கள்,படுகொலைசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கை தமிழரசுக்கட்சி பத்து விடயங்களை முன்வைக்குமாறு கூறியிருந்தார். இதன்போது நாங்கள் முதலாவதாக ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் விசாரணையை மீளஆரம்பிக்கவேண்டும்,ரவிராஜ் படுகொலை,திருகோணமலை மாணவர்களின் படுகொலைகள்டு, மாணர்கள் கடத்தப்பட்டமை, இறுதி யுத்த காலப்பகுதியில் நேரடியாக கையளிக்கப்பட்டு காணாமல்போனவர்கள், கொல்லப்பட்டவர்கள் தொடர்பான விபரங்கள் தொடர்பில் தெரிவித்திருந்தேன். இதேபோன்று அனந்தி சசிதரனின் கணவரின் வழக்கு போன்ற பல்வேறுவிடயங்களை தெரிவித்திருந்தேன். நாங்கள் நீதிக்கான போராட்டத்தினை கைவிடமாட்டோம். ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரையில் நீதிகோரிய போராட்டத்தினை இலங்கை தமிழரசுக்கட்சி முன்னெடுக்கும் என்பதை அவரின் மகனுக்கு நாங்கள் உத்தரவாதமளிக்கின்றோம் என்றார். படுகொலை தொடர்பான வழக்கினை மீண்டும் தாக்கல் செய்யவுள்ளதாக இரா.சாணக்கியன் தெரிவிப்பு | Virakesari.lk

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 4 weeks ago
எங்கள் மென்ரல் டிசைனை சரியாகக் சொல்லியிருக்கிறீர்கள். மேற்கு நாடுகளில் வசித்து வேலை செய்கிற நாம் எல்லோருமே மேற்கின் பெருவணிக, முதலாளித்துவ சிஸ்ரத்தில் இருந்து உறிஞ்சி தங்கள் உடலையும் குடும்பத்தையும் வளர்ப்போர் தான் (cogs in the wheel/machine). ஆனால், சிலர் மட்டும் நீங்கள் சுட்டியிருப்பது போல, "சுரண்டுறான், பிறாண்டுறான்" என்று சொல்லிக் கொண்டு தாங்கள் கூட்டுப் பண்ணை வாழ்வில் இயற்கையோடு ஒன்றிப் பகிர்ந்து வாழ்வதாக ஒரு தோற்றம் காட்டுவர். எல்லாம் ஒரு "வில்டப்" தான்😎!

இந்திராகாந்தி பிறப்பித்த அவசரகால நிலையின் போது செய்யப்பட்ட உடன்படிக்கையே இன்று இந்திய மீனவர்கள் இலங்கையில் கைதுசெய்யப்படுவதற்கு காரணம் - ஜெய்சங்கர்

2 months 4 weeks ago
இந்தியாவில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஆட்சியின் போது பிறப்பிக்கப்பட்ட அவசரநிலையின்போது கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையே இன்று இந்திய மீனவர்களை இலங்கைகைதுசெய்வதற்கு காரணம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்த உடன்படிக்கை காரணமாக இந்திய மீனவர்களிற்கு சில இடங்களில் மீன்பிடிப்பதற்கு இருந்த உரிமை தாரைவார்க்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் எமது மீனவர்கள் கைதுசெய்யப்படுவது குறித்து நாங்கள் கேள்விப்படுகின்றோம்,அவசரகாலநிலையின் போது கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையே இதற்கு காரணம் இந்த உடன்படிக்கை காரணமாக இலங்கை கடற்பரப்பின் சில பகுதிகளில் எங்கள் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான உரிமை கைவிடப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். அக்காலப்பகுதியில் உண்மையான நாடாளுமன்றம் செயற்பட்டிருந்தால் நாடாளுமன்ற விவாதங்கள் இடம்பெற்றிருக்கும் இந்த முடிவு நிராகரிக்கப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ள அவர் அந்த உடன்படிக்கையின் விளைவுகளை இன்றும் தமிழ்நாட்டில் காணமுடிகின்றது என தெரிவித்துள்ளார். இந்திராகாந்தி பிறப்பித்த அவசரகால நிலையின் போது செய்யப்பட்ட உடன்படிக்கையே இன்று இந்திய மீனவர்கள் இலங்கையில் கைதுசெய்யப்படுவதற்கு காரணம் - ஜெய்சங்கர் | Virakesari.lk

அரச வைத்தியசாலைகளில் பல கருவிகள், உபகரணங்களுக்கு தட்டுப்பாடு : தனியாரிடம் வாங்கி வருமாறு நோயாளர்களுக்கு அறிவுறுத்தல் : வைத்தியர் சமல் சஞ்சீவ

2 months 4 weeks ago
Published By: Digital Desk 3 27 Jun, 2025 | 05:18 PM செயற்கை முழங்கால் மாற்று உபகரணங்கள் மற்றும் பிற அறுவை சிகிச்சை கருவிகள் போன்ற முக்கியமான மருத்துவப் பொருட்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கி வருமாறு சொல்வது, தற்போது பல அரச வைத்தியசாலைகளில் வழக்கமான விடயமொன்றாக மாறிவிட்டது. ஏனெனில் அவைகள் அதிகளவில் கையிருப்பில் இல்லை என சுகாதார தொழில் வல்லுநர்களின் தேசிய அமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இந்தப் பொருட்கள் பின்னர் அறுவை சிகிச்சைக்காக நேரடியாக அறுவை சிகிச்சை அறைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் உபகரணங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட விசேட வைத்திய நிபுணர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருப்பது ஆச்சரியமான விடயம் ஒன்று இல்லை என அவர் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சுகாதார அமைப்பில் உள்ள பாரிய சிக்கலை எடுத்துக்காட்டுகிறது எனவும், வைத்தியசாலைகளால் வழங்கப்பட வேண்டிய மருத்துவ உபகரணங்களுக்கு நோயாளிகள் அதிக அளவு பணம் செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் எனவும் குறிப்பிட்டார். தனியார் மருத்துவ நிறுவனங்களிடமிருந்து செயற்கை முழங்கால் கருவிகளை வாங்க நோயாளிகள் ரூபாய் 350,000 க்கும் அதிகமாக செலுத்த வேண்டியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பணம் செலுத்திய பின்னர் நிறுவன ஊழியர்கள் அறுவை சிகிச்சைக்காக உபகரணங்களை அறுவை சிகிச்சை தனியார் மருந்து நிறுவனங்களிடமிருந்து செயற்கை முழங்கால் கருவிகளை வாங்க நோயாளிகள் ரூ.350,000 க்கும் அதிகமாக செலுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பணம் செலுத்திய பிறகு, நிறுவன ஊழியர்கள் அறுவை சிகிச்சைக்காக உபகரணங்களை அறுவை சிகிச்சை அறைக்கு கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், அண்மையில் அதே வைத்தியசாலையில் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்ட நரம்பியல் அறுவை சிகிச்சை உபகரணங்களின் சட்டவிரோத விற்பனை தொடர்பான சம்பவத்துடன் வேறுபட்டதல்ல என வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார். "ஏழை நோயாளிகளால் அறுவை சிகிச்சைகளுக்கு இவ்வளவு அதிகமான செலவுகளை தாங்கிக் கொள்ளமுடியாது". பல மாதங்களாக போதுமான அறுவை சிகிச்சை உபகரணங்களை வழங்காததற்கு மருத்துவ வழங்கல் பிரிவை அவர் குற்றம் சாட்டினார். இது இந்த சட்டவிரோத மோசடிகள் தொடர அனுமதித்ததாக அவர் கூறினார். நாட்டின் இலவச சுகாதார முறையை மருந்து நிறுவனங்கள் இதுபோன்று தவறாகப் பயன்படுத்துவதை அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது. சுகாதார அமைச்சு தனது பட்ஜெட்டை நிர்வகிக்கவும் அத்தியாவசிய மருத்துவ சேவைகளை முறையாக வழங்கவும் ஏன் தவறிவிட்டது என்பது குறித்து முழுமையான விசாரணையை தொடங்குமாறு அவர் ஜனாதிபதியை வலியுறுத்தினார். நாட்டின் பொருளாதார நிலைமை ஓரளவு முன்னேற்றம் கண்டிருந்தாலும், சுகாதார அதிகாரிகளின் சீரற்ற முகாமைத்துவம் காரணமாக சுகாதார அமைப்பில் உள்ள சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதையும் அவர் எடுத்துரைத்தார். இறுதியாக, தனிப்பட்ட இலாபத்திற்காக மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறையை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக உடனடியாக முறையான விசாரணையை ஆரம்பிக்குமாறு வைத்தியர் சஞ்சீவ ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அரச வைத்தியசாலைகளில் பல கருவிகள், உபகரணங்களுக்கு தட்டுப்பாடு : தனியாரிடம் வாங்கி வருமாறு நோயாளர்களுக்கு அறிவுறுத்தல் : வைத்தியர் சமல் சஞ்சீவ | Virakesari.lk

எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்

2 months 4 weeks ago
சாத்தான், உங்களுக்கு இதை "வெளக்கி"😎 ஒன்றும் ஆகப் போவதில்லை என்று தெரியும். ஆனாலும் ஏனைய வாசகர்களுக்காக உங்கள் புலம்பலை ஒட்டி இந்தப் பதில். எல்லா அரசியல் வாதிகளையும் வெளியேற்றினார்களா? அர்ச்சுனா இராமநாதன் இப்ப அரசியல்வாதி இல்லையா? அவர் படத்தில் நிற்கிறாரே? இது தமிழரசுக் கட்சியின் உள் சண்டை (சிறிதரன் சுமந்திரன் அணி மோதல்) வெளியே வந்திருக்கிறது. அணையா விளக்கு இருந்த இடத்தில் நடந்த கூட்டத்தில் எல்லோரும் இருந்திருக்கிறார்கள் இவர்கள் பங்கு பற்றிய போது எதிர்ப்பு எழுந்ததாக ஏதும் வீடியோ பார்த்தீர்களா? அப்படி எதுவும் நிகழவில்லை. வாகனம் நோக்கி நடக்கும் போது மட்டும் தான் ஒருவர் பின்னால் திட்டிய படி வருகிறார். அதை வீடியோ எடுத்து "துரத்தினார்கள், விரட்டினார்கள், செருப்பைக் கைப்பற்றினார்கள்" 😂என்று எழுதுகிறார்கள். சிவஞானம் - அவரது அரசியலில் எனக்கு உடன்பாடில்லா விட்டாலும்- ஒரு வயசாளியாக மதிக்கப் பட வேண்டியவர். அவரைப் பின் தொடர்ந்து மரியாதையில்லாமல் திட்டி வரும் இளையவரின் வயது, சிவஞானம் தமிழர்களுக்கான அரசியலில் இருக்கும் வருடங்களை விடக் குறைவாகத் தான் இருக்கும். இப்படி, தமிழ் தேசிய வரலாற்றை முக நூலிலும், இன்ஸ்ராவிலும் பார்த்து வளர்ந்த இளையோரை, கொம்பி சீவி விடும் அரிய சேவையை புலத் தமிழரும், உள்ளூரில் சிலரும் செய்கிறார்கள். நீங்களும் ஒரு கொம்பு சீவி தான்!

எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்

2 months 4 weeks ago
லூசு கூட்டங்கள் இப்படி எப்போதும் காடைத்தனங்கள் செய்வது இயல்பானது தானே. தமிழரிடையே அரசியல் கட்சிகள் இல்லை. வெறும் வன்முறை காடைக்குழுக்கள் மட்டுமே உள்ளன. அந்த காடைக்குழுக்களுக்குள் இப்படியான வன்முறை அடிபாடுகள் நடப்பது வழமை. முன்பு கையில் ஆயுதங்கள் இருந்ததால் ஆளையாள் சுட்டு கொலை செய்தன. இப்போது அவர்களின் வால்கள் இப்படி காடைத்தனம் புரிகின்றன. இதை தமிழ் ஊடகங்கள் ஊதி பெருப்பித்து காடையர்கள் செயலுக்கு மக்கள் மீது பழி போடுகின்றன.

மேற்கிந்தியத் தீவுகள் அவுஸ்திரேலியா கிரிக்கெட் தொடர்

2 months 4 weeks ago
Barbados தீவில் ந‌ட‌க்கும் விளையாட்டு , மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌ல் இந்த‌ மைதான‌த்தில் ம‌ழை வ‌ராம‌ கூட‌ , இங்லாந் கூட‌ விளையாடி , விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிந்த‌து.................இப்ப‌ ந‌ட‌க்கும் விளையாட்டை பார்க்க‌ குழ‌ப்ப‌மாக‌ இருக்கு................விளையாட்டு சில‌து இன்றுட‌ன் முடிய‌க் கூடும்...................இப்ப‌ எல்லாம் ஜ‌ந்து நாள் நிலைத்து நின்று இப்ப‌த்த‌ வீர‌ர்க‌ளால் விளையாட‌ முடியாது😁...................ப‌ழைய‌ வீர‌ர்க‌ள் அவ‌ர்க‌ள் அனுப‌வ‌ம் மிக்க‌ வீர‌ர்க‌ள் நிலைத்து நின்று விளையாடுவின‌ம்💪..........................

சமூக ஊடகங்களில் பரவும் போலி விளம்பரங்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

2 months 4 weeks ago
27 JUN, 2025 | 02:04 PM சமூக ஊடகங்களில் பரவும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர். வீட்டிலிருந்து சம்பாதிக்க முடியும் என கூறி Face book, Whatsapp, Telegram, Skype, We Chat போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக பகிரப்படும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலாம் முறைப்படி; விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்குகளில் சிறிய பணத்தொகையை முதலீடு செய்தால் அதன் ஊடாக இலாபம் பெறலாம் என சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தி, சிறிய பணத்தொகையை முதலீடு செய்த நபர்களுக்கு பெருமளவிலான பணத்தை வழங்கி அதிகளவிலான இலாபத்தை பெற்றுக்கொடுத்து அவர்களின் நம்பிக்கையை வென்ற பின்னர் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்குகளில் பெரியளவிலான பணத்தொகையை முதலீடு செய்யுமாறு கூறி மோசடியில் ஈடுபடுகின்றனர். இதனை அறியாத மக்கள் சிறிய பணத்தொகையை முதலீடு செய்ததால் கிடைத்த அதிகளவிலான இலாபத்தை நம்பி பெரியளவிலான பணத்தொகையை முதலீடு செய்து ஏமாறுகின்றனர். இரண்டாம் முறைப்படி; வீட்டிலிருந்து சம்பாதிக்க முடியும் என கூறி விளம்பரங்களை பதிவிட்டு, அதன் ஊடாக அறிமுகமான நபர்களின் வங்கி கணக்குகளை பெற்றுக்கொண்டு அதில் பணத்தை வைப்புச் செய்து அந்த பணத்தை விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்தால் பெரியளவிலான பணத்தொகை இலாபமாக கிடைக்கும் என கூறி மோசடியில் ஈடுபடுகின்றனர். இதனால் முதலாம் முறையில் குறிப்பிடப்பட்டுள்ள விளம்பரத்தின் அடிப்படையில் வங்கி கணக்குகளில் பணத்தொகையை முதலீடு செய்த நபர்களின் பணத்தை வேறு வங்கி கணக்குகளுக்கு இலகுவாக பணப்பரிமாற்றம் செய்வதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன் ஊடாக கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றம் நிதி மோசடிகள் இடம்பெறுகின்றன என பொலிஸார் தெரிவித்தனர். எனவே, சமூக ஊடகங்களில் பரவும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/218623

பஸ்ஸில் பெண்ணின் கால்களை காணொளி எடுத்த இளைஞனுக்கு சிறை தண்டனை

2 months 4 weeks ago
Published By: DIGITAL DESK 3 27 JUN, 2025 | 02:18 PM பொரளை பகுதியில் தனியார் பஸ்ஸில் பயணித்த இளம் பெண் ஒருவரின் கால்களை கையடக்கத் தொலைபேசி மூலம் காணொளி எடுத்தமை தொடர்பான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞனுக்கு 20 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு, கோட்டை நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை ( 27) தீர்ப்பளித்தது. இதேவேளை, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 1,500 ரூபாய் தண்டப்பணமும், பாதிக்கப்பட்டவருக்கு 50,000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல உத்தரவிட்டார். பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கப்படாவிட்டால், குற்றம் சாட்டப்பட்ட தெமட்டகொடையைச் சேர்ந்தவருக்கு மேலதிமாக ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு இடம்பெற்றுள்ளது. இதேபோன்ற தண்டனை தொந்தரவு செய்யும் ஏனையவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என பொலிஸார் நீதிமன்றத்தைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/218620

பிரித்தானிய போர் விமானம் கேரளாவில் அவசரமாக தரையிறக்கம்

2 months 4 weeks ago
திருவனந்தபுரத்தில் பழுதாகி நிற்கும் பிரிட்டன் போர் விமானம் - இதுவரை கிடைத்த முக்கிய தகவல்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, F-35B போர் விமானத்தைப் பழுது பார்க்க பிரிட்டனில் இருந்து பொறியாளர்கள் குழு வரவுள்ளது. (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் இம்ரான் குரேஷி பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தின் தார் சாலையில் நின்றுபோயிருக்கும் F-35B போர் விமானத்தைப் பழுதுபார்ப்பதற்காக ஹேங்கருக்கு மாற்றப்படும் என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டன் பொறியாளர்கள் குழு திருவனந்தபுரம் வந்து சேர்ந்த பிறகு விமானத்தின் பழுது நீக்கும் பணிகள் தொடங்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜூன் 14ஆம் தேதி HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸின் போர் விமானம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியது. மோசமான வானிலை காரணமாக, ராயல் கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பலுக்கு இந்தப் போர் விமானம் திரும்ப முடியவில்லை. பிபிசி ஹிந்தியின் கேள்விக்குப் பதிலளித்த பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர், "தரையில் இருக்கும் விமானத்தில் தொழில்நுட்ப சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. அதனால்தான், விமானம் கப்பலுக்கு திரும்பவில்லை" என்று தெரிவித்தார். "HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸின் பொறியாளர்கள் விமானத்தை மதிப்பீடு செய்தனர். அதன் பிறகு, பிரிட்டனை தளமாகக் கொண்ட பொறியியல் குழுவின் உதவி தேவைப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. விமானத்தை சரிசெய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்பதைத் தற்போது எங்களால் கூற முடியாது." மேலும், "சிறப்பு உபகரணங்கள் மற்றும் பிரிட்டனை சேர்ந்த பொறியியல் குழு வந்த பிறகு, விமான நிலைய நடவடிக்கைகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாதவாறு, பழுது பார்ப்பதற்காக விமானம் ஹேங்கருக்கு கொண்டு செல்லப்படும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு, விதிகளின்படி F-35B போர் விமானங்கள் பார்க்கிங் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் பிரிட்டனை சேர்ந்த பொறியியல் குழு, போர் விமானத்தைப் பழுது பார்ப்பதற்காக ஹேங்கருக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்தால், விமான நிலையத்தில் அமைந்துள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஹேங்கருக்கு போர் விமானம் கொண்டு செல்லப்படும். "பழுது பார்ப்பு பணிகளுக்கான இடம் தேடப்பட்டு வருகிறது. பிரிட்டனில் இருந்து வருகை தரும் பொறியியல் குழுவிற்கு விமான நிலையத்திலேயே தங்க வசதி செய்து தரப்படும்" என்று விமான நிலைய அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர், அவர்கள் தங்கள் பெயரை வெளியிட விரும்பவில்லை. "இந்தப் போர் விமானம் தொடர்பாக இந்திய விமானப் படை, இந்திய கடற்படை மற்றும் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் என அனைத்து அமைப்புகளின் இந்திய அதிகாரிகளுடனும் நாங்கள் தொடர்ச்சியாகத் தொடர்பு கொண்டு வருகிறோம். அவர்கள் கொடுத்த, ஒத்துழைப்புக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது. "இந்தச் சூழ்நிலையைச் சமாளிப்பதில் இந்தியா வழங்கிய ஒத்துழைப்பு, போர் விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்க உதவியது, தொடர்ச்சியான பாதுகாப்பு மற்றும் ஆதரவு ஆகியவை பிரிட்டன் மற்றும் இந்திய ஆயுதப் படைகளுக்கு இடையிலான ஆழமான உறவை நிரூபிக்கின்றன" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் போர் விமானங்களை நிறுத்துவதற்கு பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போதைய விதிகளின்படி, விமான நிலையத்தில் ஒரு விமானம் நிறுத்தப்பட்டாலோ அல்லது பழுது பார்ப்பதற்காக ஹேங்கருக்கு கொண்டு வரப்பட்டாலோ, அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். விமானத்தின் அளவு மற்றும் விமான நிலையத்தின் இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டே விமானத்திற்கான பார்க்கிங் மற்றும் ஹேங்கர் பயன்பாட்டு கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவது வழக்கம். உதாரணமாக, மும்பை அல்லது பெங்களூருவில் உள்ள ஒரு ஹேங்கரில் ஒரு விமானம் நிறுத்தப்பட்டாலோ அல்லது பழுது பார்க்கப்பட்டாலோ நிர்ணயிக்கப்படும் கட்டணம், திருவனந்தபுரம் போன்ற விமான நிலையத்தைவிட அதிகமாக இருக்கும். தரையிறக்கம் மற்றும் நிறுத்தும் இடத்திற்கான விதிகள் இந்திய அரசால் தீர்மானிக்கப்படுகின்றன. மூன்று பில்லியன் யூரோ மதிப்புள்ள ராயல் கடற்படையின் முதன்மைக் கப்பலான HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ், தனது நீண்ட நேர பயணங்களில் ஒன்றுக்காக ஏப்ரல் மாத இறுதியில் புறப்பட்டது. கடலில் இருந்து ஜெட் விமானங்களைத் துரிதமாக இயக்கவும், உலகின் மறுபக்கத்தில் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பிரிட்டனின் திறனை நிரூபிக்கும் பயிற்சிகளில் பங்கேற்கவும் விமானம் தாங்கி கப்பல் போர்ட்ஸ்மாவுத்தில் இருந்து புறப்பட்டது. மத்திய தரைக்கடல், மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள 40 நாடுகளுக்கு போர்க்கப்பல்களை வழிநடத்தும் இந்த விமானம் தாங்கிக் கப்பலில், 24 நவீன F-35B ஸ்டெல்த் ஜெட் விமானங்கள் உள்ளன. சுமார் 65 ஆயிரம் டன் எடையுள்ள இந்தப் போர்க் கப்பலில் 1,600 ராணுவ வீரர்கள் தங்க முடியும். F-35B விமானம் என்றால் என்ன? ராயல் விமானப்படை வலைதளத்தின்படி, F-35B என்பது பல பணிகளைச் செய்யும் திறன் கொண்ட விமானம். இது வான், தரை மற்றும் மின்னணு போரிலும் ஈடுபடும் திறன் கொண்டது. இந்த விமானம் மின்னணு போர், உளவுத் தகவல்களைச் சேகரிப்பது, வானில் இருந்து தரை மற்றும் வான் முதல் வான் வழிப் பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் திறன் கொண்டது. மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் செயல்படக்கூடிய மேம்பட்ட சென்சார்கள் F-35Bஇல் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த சென்சார்களை பயன்படுத்தி, சேகரிக்கப்பட்ட தகவல்களை பைலட் ஒரு பாதுகாப்பான தரவு இணைப்பு வழியாகப் பிற தளங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c98w55g3n39o

இரான் மீது அமெரிக்கா தாக்குதல்

2 months 4 weeks ago
ஈரான் அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது - கமேனி 26 JUN, 2025 | 04:09 PM ஈரான் அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது என ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்தொல்லா கமேனி தெரிவித்துள்ளார் சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் அமெரிக்கா தான் நேரடிப்போரில் இறங்காவிட்டால் சியோனிச ஆட்சி முழுமையாக அழிக்கப்பட்டுவிடும் என கருதியது அதன் காரணமாகவே அது நேரடி போரில் நுழைந்தது என அவர் தெரிவித்துள்ளார். இந்த யுத்தத்தின் மூலம் அமெரிக்கா எதனையும் சாதிக்கவில்லை, ஈரான் வெற்றிபெற்றது அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/218536

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 4 weeks ago
இஸ்ரேலிற்கு எதிரான போரில் வெற்றி - ஈரானின் ஆன்மீக தலைவர் 26 JUN, 2025 | 03:53 PM இஸ்ரேலிற்கு எதிரான போரில் ஈரான் வெற்றிபெற்றதாக தெரிவித்துள்ள அந்த நாட்டின் ஆன்மீகதலைவர் ஆயத்தொல்லா கமேனி அந்த வெற்றிக்காக ஈரான் மக்களிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த அளவுக்கு சத்தம் எழுப்பப்பட்ட போதிலும் அந்த கூற்றுக்கள் அனைத்திற்கும் மத்தியிலும் சியோனிச ஆட்சி கிட்டத்தட்ட சரிந்து "இஸ்லாமிய குடியரசின் தாக்குதல்களால் நசுக்கப்பட்டது" என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/218531

நாடு அனுரவோடு... வீடு வீணையோடு’

2 months 4 weeks ago
ம்.... மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற கட்சி என்கிற பிதற்றல் மறைந்து இப்போ, உள்ளூராட்சி தேர்தலில் தலை நிமிர்ந்து நிக்கிற கட்சி என்று பாடுகிறார் சிவஞானம். எங்கிருந்த கட்சியை எங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறோம் என்று இன்னும் அவர்களுக்கு புரியவில்லை. போயும் போயும் டக்கிலஸுடன் கைகோர்த்த இவர்கள் டக்கிலஸை விட உயர்ந்தவர்கள் இல்லை. தங்கள் பெலயீனத்தை மறைக்க, கட்சிக்கெதிராக செயற்பட்டால் சட்டம் பாயும் என்று மிரட்டுகிறார். யாருக்கு நட்டம்? எல்லோரையும் விரட்டிவிட்டு தலையாட்டியும் சட்டாம்பியும் மட்டும் கட்சியை நடத்துவார்கள். பேச்சாளர் பதவியை அடாவடியாக பிடித்து வைத்துக்கொண்டு விக்கினேஸ்வரன் பதவி விலகவேண்டுமென்று கூப்பாடு போட்ட கோமாளி, முடிந்தால் தமிழரசுக்கட்சியை விட்டு வெளியேறி வேறொரு கட்சியில் நின்று வென்று காட்டட்டும் என்று சவால் விட்டவர், தமிழரசுக்கட்சியாலும் மக்களாலும் நிராகரிக்கப்பட்டார். அடுத்தமுறை கட்சி இருக்கும், இவர்கள் இருவரும் வீட்டுக்குள் பதுங்கி இருப்பர். தானே உறுப்பினர்களுக்கு குடைச்சல் கொடுத்து வெளியேற்றிவிட்டு பதவி இல்லாததால் வெளியேறினர் என்று கதை விடுவது இவருக்கு இன்று நன்றாக பொருந்தியிருக்கிறது. அவர்களாவது மரியாதையாக விலகினார்கள், இவரோ அடுத்தவரின் பதவியை தந்திரமாக பறித்து வைத்துக்கொண்டு சன்னதம் ஆடுகிறார். ஆமா கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசியாமல், அவர்களுக்கு தெரியாமல் டக்கிளசோடு பேச்சுவார்த்தை நடத்தியவர்களை யார் தண்டிப்பது? தங்களுக்கென்றால் வக்கீல், அடுத்தவருக்கென்றால் நீதிபதியா? எந்த ஒரு தார்மீகமும் இல்லாதவர், வலுக்கட்டாயமாக கட்சியை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார். வடக்கு கிழக்கில் தனது உயிருக்கு ஆபத்து என்று சொல்லி சிங்களத்திடம் பாதுகாப்பு பெற்றுக்கொண்டு அந்த மக்களின் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்ள இவருக்கு வெட்கமில்லை? மக்கள் வெட்கப்படுகிறார்கள். அதனாற்தான் பதவிக்காக காலில விழுகிறார்.

உறுப்பினரிடையே ஒருமித்த கருத்தின்மை – யாழ் மாநகர சபையின் விசேட அமர்வில் குழப்பம்!

2 months 4 weeks ago
உறுப்பினர்களின் கருத்தை தட்டிக்தழித்த யாழ். முதல்வர்; தர்ஷானந்த் கண்டனம் 27 JUN, 2025 | 12:48 PM சபையில் மக்களின் பிரச்சினைகளை கதைப்பதற்கு முற்பட்ட உறுப்பினர்களுக்கு பிரச்சினைகளை கதைப்பதற்கு நேரத்தை வழங்காமல் யாழ். முதல்வர் தட்டிக் கழித்து சென்றதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் தர்ஷானந்த் குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மாநகர சபையில் குழுத் தெரிவிற்காக கடந்த திங்கட்கிழமை தொடங்கப்பட்ட கூட்டத்தின் தொடர்ச்சியான கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (27) யாழ்ப்பாணம் மாநகர சபையில் நடைபெற்றது. இதன் போது குழுக்களை தெரிவு செய்வதற்கு எங்களது சகல ஒத்துழைப்புகளையும் வழங்கி இருந்தோம். ஆனாலும் குழுக் கூட்டம் முடிவடைந்த பின்னர் உறுப்பினர்கள் பலரும் எழுந்து தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கு சந்தர்ப்பத்தை கேட்ட போது, "எதை வேண்டுமானாலும் எழுத்தில் வழங்குங்கள். இந்த கூட்டத்தில் எதுவும் செய்ய முடியாது. அடுத்த கூட்டத்தில் பார்க்கலாம்" எனக் கூறிவிட்டு முதல்வர் சென்றபோது நாங்கள் முதல்வரை வழிமறித்து எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை தருமாறு கோரினோம். ஆனால் இதுவரை எந்த ஒரு முதல்வரும் செய்யாத விடயத்தை இந்த முதல்வர் செய்து இருக்கின்றார். இது வன்மையாக கண்டிக்கத்தக்க விடயம். நாங்கள் நமது வட்டாரத்தில் வெற்றி பெற்று வந்தவர்கள். நமது மக்களின் பிரச்சினையை நாங்கள் தெருவில் இருந்து கதைக்க முடியாது, சபையில் தான் கதைக்க வேண்டும். அவர் வழமைக்கு மாறாக செயற்பட்டிருக்கின்றார். இவ்வாறான செயற்பாடானது தமக்கு மன வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கின்றது. இது ஒரு தொங்கு சபை. பெரும்பான்மை சபையை நடத்துவது போல இந்த சபையை நடத்த நினைக்கின்றார்கள். 23 பேர்கள் இருக்க வேண்டிய இடத்தில் அவரது கட்சியில் 13 பேரே உள்ளனர். எப்போதும் தாங்கள் பெரும்பான்மையுடன் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் சபையை நடாத்த நினைப்பது நல்லதாக தோன்றவில்லை என்றார். https://www.virakesari.lk/article/218618
Checked
Fri, 09/26/2025 - 03:12
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed