3 weeks 6 days ago
03 Sep, 2025 | 05:07 PM (நெவில் அன்தனி) சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற உலக சாதனையை ஆப்கானிஸ்தானின் நட்சத்திர சுழல்பந்துவீச்சாளர் ராஷித் கான் படைத்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் சர்வதேச ரி20 மும்முனை கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் தனது மொத்த விக்கெட் எண்ணிக்கையை 165ஆக உயர்த்திக்கொண்டார். இதன் மூலம் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற உலக சாதனையை ராஷித் கான் நிலைநாட்டினார். ஒட்டுமொத்த ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற உலக சாதனையை கடந்த சில மாதங்களாக தன்னகத்தே கொண்டிருந்த ராஷித் கான், இப்போது சர்வதேச ரி20 போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற மற்றொரு உலக சாதனையை தனதாக்கிக்கொண்டுள்ளார். சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் 164 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் இருந்த நியூஸிலாந்தின் ஓய்வுநிலை வீரர் டிம் சௌதியை சில மாதங்களுக்கு முன்னர் சமப்படுத்திய ராஷித் கான் தனது 98ஆவது போட்டியில் 165ஆவது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் புதிய உலக சாதனை நாயகனானார். நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுடனான போட்டி வரை 99 சர்வதேச ரி20 போட்டிகளில் விளையாடியுள்ள ராஷித் கான் இதுவரை மொத்தமாக 167 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். இதேவேளை, சகலவிதமான ரி20 கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற உலக சாதனையை கடந்த பெப்ரவரி மாதம் ராஷித் கான் நிலைநாட்டியிருந்தார். 490 ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள ராஷித் கான் 666 விக்கெட்களை மொத்தமாக கைப்பற்றி முதலிடத்தில் இருக்கிறார். மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் சகலதுறை வீரர் ட்வேன் ப்ராவோ 631 விக்கெட்களைக் கைப்பற்றி இரண்டாம் இடத்திலுள்ளார். https://www.virakesari.lk/article/224130
3 weeks 6 days ago
பலாப்பழம்போல் பல பதிவுகளை கள உறவுகள் பதிந்து வருகிறார்கள். பழத்தை அப்படியே எடுத்துக் கடிக்காமல், அதனைப் பிளந்து தடலைப்பிரித்து உள்ளே தும்பு, பால், நரம்பு நீக்கி, விதை நீக்கிவரும் சுளைகளை எடுத்து சுவைக்கும்போது வரும் இன்பம் சொல்ல வார்த்தை இல்லை. அதுபோன்று உறவுகளின் பதிவுகளில் உள்ள வரிகளைக் களைந்தெடுத்துப் பதிந்து மகிழ்வித்த நிலாமதி அவர்களுக்கு மனம்கனிந்த வாழ்த்துக்கள்!!🙌😁
3 weeks 6 days ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தமிழ்நாட்டில் வளர்ப்பு நாய்கள் கடிப்பதாலும் ரேபிஸ் மரணங்கள் பதிவாகியுள்ளன (கோப்புப் படம்) கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 3 செப்டெம்பர் 2025, 02:54 GMT உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவைத் தொடர்ந்து தெருநாய் பிரச்னை பற்றி விவாதம் இந்தியா முழுவதும் சூடுபிடித்துள்ளது. ஆனால், பிரச்னைக்குக் காரணம் தெருநாய்கள் மட்டுமல்ல, வளர்ப்பு நாய்களும்தான் என்கிறார் பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமி. ஒருமுறை அதிகாலை வேளையில் மருந்தகம் ஒன்றுக்குச் சென்றிருந்த போது, தனது வளர்ப்பு நாயுடன் வந்திருந்த நபர் ஒருவர், அதனுடனேயே மருந்து வாங்கச் சென்றார். குழந்தையை அழைத்து வந்திருந்த வாடிக்கையாளர் ஒருவர், சற்று எரிச்சலடைந்து, அதைத் தனியாக வேறு இடத்தில் கட்டி வைத்துவிட்டு வருமாறு சற்று கடினமான குரலில் வலியுறுத்தினார். இதேபோல, கிழக்கு கடற்கரை சாலையில் மற்றுமொரு சம்பவத்தைக் கண்டேன். பிரபல உணவகம் ஒன்றுக்கு பார்சல் உணவு வாங்க வந்திருந்த ஒருவர், வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மக்கள் கூட்டமும் வாகன நெரிசலும் நிறைந்திருந்த இடத்தில், தான் உடன் அழைத்து வந்திருந்த வளர்ப்பு நாயைக் கட்டி வைத்துவிட்டு, உணவகத்தின் உள்ளே சென்றார். வாசலில் இருந்த மக்கள் கூட்டத்தில் ஒரு தரப்பினர் அதைக் கொண்டு கொள்ளவில்லை. ஆனால், சிலர் அந்த நாய் அங்கிருப்பதை ஓர் அபாயமாகக் கருதி, முன்னெச்சரிக்கையாக விலகி நிற்பதையும், இன்னும் சிலர் அருகில் இருந்த தனது வாகனத்தைக் கூட எடுக்க முடியாமல் சிரமப்பட்டதையும் கண்டேன். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அதிகம் பாயும் பண்புகளைக் கொண்ட நாய்களுக்கு முகக்கவசம் அணிந்து அழைத்து வர வேண்டுமென்று சென்னை மாநகராட்சி விதிமுறை கூறுகிறது இந்த இரு சம்பவங்களில் மட்டுமின்றி, சென்னை நகரில் வெளியே அழைத்து வரப்படும் பெரும்பாலான வளர்ப்பு நாய்களுக்கு வாயில் மஸ்ஸில் என்று அழைக்கப்படும் முகக்கவசம் போடப்படுவது இல்லை என்பதைக் காண முடிந்தது. அதேவேளையில், இப்படியாக நாய்களை வீட்டிலிருந்து வெளியில் அழைத்து வருவோரில் பலரும் சுற்றத்தில் இருக்கும் பிறரின் அசௌகரியம் குறித்துச் சிந்திப்பதில்லை என்கிறார் நாய் நடத்தையியல் நிபுணர் ஸ்ரீதேவி. 'தடுப்பூசி பற்றிய அக்கறையற்ற நிலைமை' "தெருநாய்கள் மட்டுமின்றி நல்ல பராமரிப்பில் வளர்க்கப்படும் நாய்கள் கடிப்பதாலும் ரேபிஸ் நோய் பரவி வருவதைக் காணும் போதே, இந்தப் பிரச்னையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளலாம்" என்கிறார் மருத்துவர் குழந்தைசாமி. கடந்த 2024 ஜனவரி முதல் 2025 ஆகஸ்ட் மாதம் வரையிலான பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகத்தின் தரவுகள்படி, தமிழ்நாட்டில் 64 ரேபிஸ் மரணங்கள் பதிவாகி இருப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் செய்தி கூறுகிறது. அதில், வளர்ப்பு நாய்கள் கடித்ததால் சுமார் 15 மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அந்தத் தரவுகளின்படி, இருவர் தடுப்பூசி போடப்பட்ட நாய்கள் கடித்து மரணித்து இருந்தாலும், பிற மரணங்களுக்குக் காரணமாக இருந்த நாய்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இத்தகைய நிலைமை, "தடுப்பூசிகளைச் சரியாகப் போட வேண்டும் என்பது குறித்து பொறுப்புகூட இல்லாமல் பல நாய் உரிமையாளர்கள் இருப்பதைக் காட்டுவதாக" கூறுகிறார் குழந்தைசாமி. அவரது கூற்றுப்படி, வளர்ப்பு நாய்களுக்கு முதல் தவணை ரேபிஸ் தடுப்பூசியை மூன்று மாதத்திலும், இரண்டாவது தவணையை 4 மாதம் முடிந்தவுடனும் போட வேண்டும். "இவற்றோடு, ஒவ்வோர் ஆண்டும் தொடர்ச்சியாக அதற்கான பூஸ்டர் தடுப்பூசியைப் போட வேண்டும். இதுதான் வளர்ப்புப் பிராணிகளை வைத்திருப்பதற்கான சட்டம் கூறும் விதிமுறை. ஆனால், அதை அனைவரும் முறையாகப் பின்பற்றுவதில்லை. இதனால், அபாயம் மேலும் அதிகரிக்கிறது," என்கிறார் அவர். படக்குறிப்பு, பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமி வளர்ப்பு நாய்கள் குறித்த சட்ட விதிகள் யாவை? வளர்ப்புப் பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன. குறிப்பாக, கடந்த ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, சென்னை மாநகராட்சியில் வளர்க்கப்படும் நாய்களுக்கு உரிமம் வாங்கியிருக்க வேண்டியது அவசியம். ஆனால், அது நடைமுறையில் சரிவர கடைபிடிக்கப்படுவது இல்லை என்கிறார் குழந்தைசாமி. "முன்பெல்லாம் வளர்ப்பு நாய்களின் கழுத்தில் வட்ட வடிவிலான இரும்பு டாலர் ஒன்று தொங்குவதைப் பார்த்திருப்போம். அந்த டாலரில் ஒரு குறியீட்டு எண் இருக்கும். அந்த எண்ணை வைத்து, எந்தப் பஞ்சாயத்தின் கீழ், எந்த உரிமையாளரின் பேரில் அந்த நாய் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், அத்தகைய முறையான பதிவுகளை நாய் வளர்ப்பவர்கள் இப்போது கடைபிடிப்பதில்லை." கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிமுறைகளின்படி, வெளிநபர்களிடம் அச்சமூட்டும் வகையில், திடீரென பாயும் பண்புகளைக் கொண்ட நாயாக இருந்தால், அவற்றைக் கட்டுப்படுத்த உதவும் கயிறு அல்லது செயின் இல்லாமலோ, மஸ்ஸில் எனப்படும் முகக்கவசம் இல்லாமலோ அழைத்து வரக்கூடாது. ஆனால், பெரும்பாலும் முகக்கவசம் இல்லாமல்தான் வளர்ப்பு நாய்கள் வெளியில் அழைத்து வரப்படுகின்றன என்று கூறும் நாய் நடத்தையியல் நிபுணர் ஸ்ரீதேவி, அதற்கு முற்றிலுமாக உரிமையாளர்களையே குற்றஞ்சாட்டிவிட முடியாது என்றும் கூறுகிறார். பட மூலாதாரம், A.R.Praveen Kumar படக்குறிப்பு, நாய் நடத்தையியல் நிபுணர் ஸ்ரீதேவி "நாய் மூலமாகப் பிரச்னை ஏற்பட்ட பிறகுதான் இத்தகைய விதிமுறைகளே கொண்டு வரப்பட்டன. அவற்றை முன்னமே கொண்டு வந்திருந்தால் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டு இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த விதிமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்படுகின்றனவா என்பது கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை," என்று அவர் விமர்சிக்கிறார். அரசாங்கம் விதிமுறைகளை வகுப்பதோடு நிற்காமல், அவற்றை அனைவருக்கும் கொண்டு சேர்க்கத் தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், அதைப் பின்பற்றத் தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டுமென வலியுறுத்துகிறார் நாய் நடத்தையியல் நிபுணர் ஸ்ரீதேவி. 'பிரச்னை நாய்களிடம் அல்ல; உரிமையாளர்களிடமே' நாய்களை குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசும் ஸ்ரீதேவி, "குழந்தைகள் குதூகலிக்கும் போது எப்படி தன்னிலை மறந்து ஓடி விளையாடுகிறார்களோ, அப்படித்தான் நாய்களும் செய்கின்றன. ஆனால், அவை அப்படி முன்பின் தெரியாத நபர் மீது தாவுவதால் எதுவும் ஆகாது என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்க முடியாது" என்றார். எனவே, அப்படியான நடத்தைகளைக் கொண்ட நாய்களைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டியது உரிமையாளரின் பொறுப்பு என்று அவர் வலியுறுத்துகிறார். "இந்தப் பொறுப்புணர்வு இல்லாமல் செயல்படுவோர்தான் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் பொறுப்பாக வேண்டும், நாய்கள் அல்ல. ஏனெனில், பிற உயிரினங்களைப் போலவே அவையும் கோபம், மகிழ்ச்சி என அனைத்தையும் சிந்திக்காமல் காட்டக்கூடிய விலங்குதான். அவற்றைக் கட்டுப்படுத்தும் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டிருக்க வேண்டியது உரிமையாளரின் கடமை" என்று விளக்கினார். பட மூலாதாரம், Getty Images சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக நாய் வளர்த்து வரும் கவிதா, ஸ்ரீதேவியின் கருத்துடன் உடன்படுகிறார். "எனது செல்லப்பிராணி ஆபத்தற்றது என்று நான் நம்பலாம். அதனுடன் பழகிய அனுபவமற்ற, முன்பின் தெரியாத நபர் ஒருவரும் அப்படியே நம்ப வேண்டுமென்று நான் எதிர்பார்க்க முடியாது," என்பதை வலியுறுத்துகிறார். அதே நேரம், "அரசாங்கமும் விதிமுறைகளை அறிவிப்பதோடு நிற்காமல் அவற்றை அனைவருக்கும் தெரியப்படுத்தவும், பின்பற்றத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கவும் வழி செய்ய வேண்டும்" என்று கோருகிறார் கவிதா. வளர்ப்பு நாயை வெளியே அழைத்து வரும்போது, அவை பிறருக்கு ஆபத்து விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்ற கருத்துடன் உடன்படும் நாய் உரிமையாளரான கவிதா, நாய்களை செயின் போட்டு, வாயை முகமூடியால் மறைத்து அழைத்து வர வேண்டும் என்பதோடு மற்றுமொரு கூற்றை வலியுறுத்துகிறார். நாய்களைப் பொறுத்தவரை, பெரும்பாலும் சிறுநீர் மற்றும் மலம் கழிக்கவே வெளியே அழைத்து வரப்படுகின்றன. அப்படியிருக்கும் சூழலில், அவற்றை அப்புறப்படுத்தத் தேவையான உபகரணங்களையும் கொண்டு வர வேண்டுமென்று விதிமுறை உள்ளதாகக் குறிப்பிட்டார் மருத்துவர் குழந்தைசாமி. அதை வலியுறுத்திப் பேசிய கவிதா, "தனது நாயாகவே இருந்தாலும், அதன் கழிவை மிதிப்பதற்கு ஒருவர் தயாராக இருப்பாரா? அதேபோலத்தான் அனைவருக்கும் இருக்கும் என்பதைப் புரிந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும்" என்கிறார் அவர். இதுமட்டுமின்றி, நாய்களின் மலத்தில் உள்ள டேப்வோர்ம் கிருமிகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்துள்ளதை விவரிக்கும் மருத்துவர் குழந்தைசாமி, "ரேபிஸ் மட்டுமின்றி இதுவும் ஆபத்தானது. ஆகவே, நாய்களை வெளியே அழைத்து வரும் உரிமையாளர்கள் அவற்றின் மலத்தை அப்புறப்படுத்தவும் தயாராக வர வேண்டும்," என்று அறிவுறுத்தினார். உரிமையாளர்கள் விதிகளைப் பின்பற்றுவது முறையாகக் கண்காணிக்கப்படுகிறதா என்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த தமிழ்நாடு விலங்குநல வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி மருத்துவர் சொக்கலிங்கம், "வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு, அவை கடைபிடிக்கப்படுவதை நகராட்சி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்" என்றார். அதோடு, "இந்த விஷயத்தில், வளர்ப்பு நாய்கள் விற்பனை, அவற்றை நடத்தும் முறை உள்பட பலவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிகள் பின்பற்றப்படவில்லை என்றால் என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பவை உள்பட பல வழிகாட்டுதல்கள் அடங்கிய விரிவான அறிக்கை உருவாக்கப்பட்டு வருகிறது" என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c86067q0q81o
3 weeks 6 days ago
80 ஆயிரம் புறாக்களை பறக்கவிட்டு சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 80 ஆவது ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் Published By: Priyatharshan 03 Sep, 2025 | 04:20 PM 80 ஆயிரம் புறாக்களை பறக்கவிட்டு, சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 80 ஆவது ஆண்டு வெற்றி விழா, சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், இதன் நேரடி ஒளிபரப்பு கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் ஏற்பாட்டில் சீனத் தூதுவரின் தலைமையில் இன்று புதன்கிழமை (3) காலை சினமன் லைப் ஹோட்டலில் இடம்பெற்றது. சீனாவில் இடம்பெற்ற வெற்றிக் கொண்டாட்டம் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் மற்றும் ஈரான், கியூபா உள்ளிட்ட 26 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக சீனா பெற்ற வெற்றியின் 80 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. சீனாவின் முக்கிய இராணுவ அணிவகுப்பில் பங்கேற்பதற்காக வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 2) குண்டு துளைக்காத ரயில் மூலம் பெய்ஜிங் சென்றடைந்தார். "வரலாற்றை நினைவில் கொள்வோம், தியாகிகளை நினைவு கூர்வோம், பிரகாசமான எதிர்காலத்திற்காக அமைதியைப் போற்றுவோம்" என்ற முக்கிய கருப்பொருளில் சுமார் 70 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த வெற்றிக்கொண்டாட்டத்தின் போது, சீன இராணுவம் தனது அணு ஆயுத பலத்தை தரை, கடல் மற்றும் வான்வழி என மூன்று தளங்களிலும் ஒரே நேரத்தில் காட்சிப்படுத்தியது. தியான்மென் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு மரியாதையை சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் பார்வையிட்டார். "நீதி வெல்லும்" , "அமைதி வெல்லும்" மற்றும் "மக்கள் வெல்லும்" என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளைச் சுமந்துகொண்டு ஹெலிக்கொப்டர்கள் தியான்மென் சதுக்கத்திற்கு மேல் பறந்தன. 5 ஆவது தலைமுறையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், சீனாவின் அதிநவீன இராணுவ தளவாடங்கள், புதிய ரக டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் விமானங்கள் அணு ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. வான்வழி நீண்ட தூர அணு ஏவுகணை, நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணை, தரைவழி சார்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணை மற்றும் புதிய DF-31BJ தரைவழி சார்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன. அத்துடன் DF-5C திரவ கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணை காட்சிப்படுத்தப்பட்டது. இந்த ஏவுகணை, உலகின் எந்த இலக்கையும் தாக்கும் திறன் கொண்டது என சீனா இராணுவம் தெரிவித்துள்ளது. இதன்போது ஒய்ஜே-21 (YJ-21), டிஎஃப்-17 (DF-17) மற்றும் டிஎஃப்-26டி (DF-26D) போன்ற புதிய தலைமுறை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்த ஏவுகணைகள் மிக அதிக வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டவை. மேலும், இவை எதிரிகளின் பாதுகாப்பு அரண்களை ஊடுருவி, இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்கும் சக்தி வாய்ந்தவை ஆகும். ஆளில்லா தரைப்படை, ஆளில்லா கடல்சார் போர்ப் படை மற்றும் ஆளில்லா விமானப் படை ஆகியவற்றின் அணிவகுப்புக்கள் இடம்பெற்றன. சமாதானத்தை வெளிப்படுத்தும் முகமாக 80 ஆயிரம் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. இந்நிகழ்வில் உரையாற்றிய சீன ஜனாதிபதி சீ ஜின் பிங், 80 ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற வெற்றி, நவீன காலத்தில் சீனா வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராகப் பெற்ற முதல் முழுமையான வெற்றி. போர் மீண்டும் நிகழாமல் இருக்க, போருக்கான அடிப்படைக் காரணத்தை ஒழிக்க வேண்டும் என்று அவர் உலக நாடுகளை வலியுறுத்தினார். மிகப் பிரம்மாண்டமான முறையில் இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பு, அமைதியான வளர்ச்சியின் பாதையைத் தொடர அதன் உறுதியையும், தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கான அதன் வலுவான ஆர்வத்தையும், உலக அமைதியைப் பாதுகாப்பதற்கான அதன் சிறந்த திறனையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது. இந்த ராணுவ அணிவகுப்பில் 10,000க்கும் மேற்பட்ட சீன இராணுவ வீரர்கள், 100 க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான போர் வாகனங்கள் பங்கேற்றன. ஆளில்லா உளவு மற்றும் எதிர்ப்பு- ஆளில்லா கருவிகள், அதிவேக ஏவுகணைகள், இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஆற்றல் கொண்ட ஆயுதங்கள், மின்னணு அமைப்புகள் மற்றும் உலகளாவிய தாக்குதல் திறன் கொண்ட மூலோபாய ஆயுதங்கள் போன்ற அதிநவீன ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளில் பங்கேற்ற சீன வீரர்கள் முதன்முறையாக இந்த வெற்றி தின அணிவகுப்பில் அணிவகுத்துச் சென்றனர். ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரில் பங்களித்த சர்வதேச நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் சிறப்பு அழைப்புகள் விடுக்கப்பட்டிருந்தன. சீனாவில் வெற்றி தினத்தைக் கொண்டாடும் வகையில் பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் இன்று இரவு (செப்டம்பர் 3) சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224109
3 weeks 6 days ago
இது என்ன… “வடக்கன்ஸ்” பெரிய அட்டகாசமாக இருக்கிறாங்கள். 😂 மது வெறியில் தனது வீட்டு மடியில் இருந்து விழுந்து செத்தாலும், நட்ட ஈடு கேட்கிறாங்கள். 🤣 டாஸ்மாக்கின் “வீரனை” குடித்துவிட்டு… வீர விளையாட்டு எல்லாம் நடக்குது. 😂🤣
3 weeks 6 days ago
Published By: Digital Desk 1 03 Sep, 2025 | 09:18 AM பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை (நேற்று) வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட மூன்று தாக்குதல்களில் குறைந்தது சுமார் 22 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில், தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் ஒரு அரசியல் பேரணியை குறிவைத்து தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த தாக்குதலில் மேலும் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர். ஈரான் எல்லைக்கு அருகிலுள்ள பலுசிஸ்தானில் செவ்வாய்க்கிழமை நடந்த மற்றொரு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். அதேநேரம், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள அவர்களின் தளத்தின் மீது நடந்த தற்கொலைத் தாக்குதலுக்குப் பின்னர் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/224064
3 weeks 6 days ago
கச்சத்தீவு சுற்றுலாத்தலமாக மாற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை - யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜோ.ஜெபரட்ணம் அடிகளார் 03 Sep, 2025 | 03:57 PM (எம்.நியூட்டன்) கச்சத்தீவு சுற்றுலாத்தலமாக மாற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை என யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜோ.ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார். யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை (3) யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கச்சத்தீவு சுற்றுலாத்தலம் ஆக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த வேளை கச்சத்தீவிற்கும் சென்றுள்ளார் என்பதை நாங்களும் அறிந்திருந்தோம். மேலும் கச்சத்தீவை சுற்றுலாத்தலமாக மாற்றமுடியும் என்றொரு கருத்தை கூறியதாக அறிகின்றோம். ஆனால், உண்மையாகவே கச்சத்தீவு புனிதமான தீவு. அங்கு புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. அங்கு ஒவ்வொரு வருடமும் இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் பக்தர்கள் ஒன்றுகூடி புனித அந்தோனியாரின் திருவிழாவை தவக்கால யாத்திரையாக வழிபட்டு வருகிறார்கள். ஆகவே அது சுற்றுலாத்தலமாக மாற்றப்படுவதை நாங்கள் எந்தவிதத்திலும் விரும்பவில்லை. காரணம், புனித தலத்தின் புனிதத்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, ஜனாதிபதி இந்த விடயமாக யாழ். மறைமாவட்டத்தோடு கலந்துரையாடுவார் என்பது எமது நம்பிக்கை. ஏனென்றால், கச்சத்தீவு யாழ். மறைமாவட்டத்தின் கீழ் வருகின்ற பணித்தலமாக இருக்கின்றது. அங்கு நடைபெறும் திருநாட்கள் எல்லாவற்றையும் நாங்கள் தான் ஏற்பாடு செய்கின்றோம். ஆகவே இவை பற்றிய இறுதி முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக ஜனாதிபதி யாழ். மறைமாவட்டத்தின் கருத்துகளை பெற்றுக்கொள்வார் என்பது எமது நம்பிக்கை. ஜனாதிபதி கச்சத்தீவுக்கு சென்றதன் முக்கிய காரணம் என்னவாக இருக்கலாம் என்று சிந்தித்தபோது அண்மைக்காலமாக, இந்தியா தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் “கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது, அதனை மீளப் பெறவேண்டும்” என பிரச்சாரம் செய்துவருகின்றார்கள். எனவேதான் ஜனாதிபதியின் முக்கியமான நோக்கம் “இது இலங்கைக்கு சொந்தமான தீவு, இதை யாருமே உரிமை கோர முடியாது” என்பதை வலியுறுத்துவதற்காகவே அங்கு சென்றுள்ளார். அதனை சுற்றுலாத்தலமாக மாற்றுவது என்பது இரண்டாம் தரமான எண்ணமாக இருந்தாலும், கச்சத்தீவு இலங்கைக்குரியது, அதனை எந்த நாடும் உரிமை கோர முடியாது என்பதை தன்னுடைய கால்தளத்தை பதித்து அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார் என்பதுதான் எங்களுடைய கருத்து என்றார். https://www.virakesari.lk/article/224117
3 weeks 6 days ago
எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு Published By: Digital Desk 3 03 Sep, 2025 | 02:45 PM நாட்டில் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பீடும் போது எச்.ஐ.வி தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாக அண்மைய புள்ளிவிபர தரவுகள் தெரிவிக்கின்றன. பாலியல் ரீதியாக பரவும் தொற்றுநோய்கள்/எச்.ஐ.வி.யை தடுப்பதற்கான விழிப்புணர்வு திட்டம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் (ஜனவரி முதல் மார்ச் வரை) மொத்தம் 230 நோயாளர்கள் பதிவாகியுள்ளன. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் காலாண்டு ஒன்றில் அதிகளவான நோயாளர்கள் பதிவான முதல் காலாண்டு இதுவாகும். 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பதிவான நோயாளர்களில், 30 ஆண்களும் இரண்டு பெண்களும் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள், மீதமுள்ள நோயாளர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள். 2025 ஆம் ஆண்டில் பதிவான எச்.ஐ.வி நோயாளர்களின் ஆண் மற்றும் பெண் விகிதம் 6.6:1 ஆக உள்ளது. மேலும், 2025 ஆம் ஆண்டில் இதுவரை எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயினால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 2024 ஆம் ஆண்டில், மொத்தம் 47 நபர்கள் எச்.ஐ.வி/எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் 10 இலட்சத்துக்கும் அதிகமான எச்.ஐ.வி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிகரித்து வரும் எச்.ஐ.வி நோயாளிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் ரீதியாக பரவும் தொற்றுநோய்கள்/எச்.ஐ.வி.யை தடுப்பதற்கான விழிப்புணர்வு திட்டம் அண்மையில் இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு, முன்-வெளிப்பாடு தடுப்பு (PrEP), மற்றும் பிந்தைய-வெளிப்பாடு தடுப்பு (PEP) உள்ளிட்ட HIV/STI தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க பரிந்துரைத்துள்ளது. இருப்பினும், இந்த திட்டம் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. https://www.virakesari.lk/article/224097
3 weeks 6 days ago
03 Sep, 2025 | 12:03 PM பொது ஜன பெரமுன தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச மற்றும் குழுவினர் மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கா்களையும் அணுநாயக்கர்களையும் சந்தித்தனர். அவர்கள் தமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக நல்லாசிகள் பெற்றுக் கொண்டனர். கண்டி ஶ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், சியம் மகா நிக்காயாவின் அஸ்கிரிய பிரிவின் மகாநாயக்கர் வண.வரகாகொட ஞானரதன தேரர், மற்றும் அனுநாயக்கத் தேரர் வண.வேண்டறுவே உபாலி, வண. நாரம்பனாவே ஆணந்த தேரர் ஆகியோரைச் சந்தித்து நல்லாசிகள் பெற்றுக் கொண்டனர். பின்னர் சியம் மகா நிக்காயாவின் மல்வத்தை பிரிவின் மகா நாயக்கத் தேரர் வண. திப்பட்டுவாவே சித்தார்த்தி ஶ்ரீ சுமங்கல அவர்களை சந்தித்தனர். அப்பொழுது நாமல் ராஜபக்ச அவர்களுக்கு வண. தேரரினால் புத்தரின் புனித உருவச் சிலை ஒன்றையும்அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நாமல் ராஜபக்சவிற்கு முடிந்த வரை பொறுமையுடன் பணியாற்றும்படி வண. தேரர் நல்லாசி வழங்கினார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சாகர காரியவசம், சஞ்ஜீவ எதிரிமான, சீ.பீ.ரத்நாயக்கா, முன்னால் மத்திய மாகாண சபையின் அவைத் தலைவர் மகிந்த அபேகோன் உட்பட பலர் இதன் போது கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/224081
3 weeks 6 days ago
03 Sep, 2025 | 11:45 AM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (02) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்த அமைச்சர் விஜித்த ஹேரத், நாட்டின் சமகால நிலைவரங்கள் மற்றும் குறிப்பாக மனித உரிமைகள்சார் நகர்வுகள் தொடர்பில் விரிவாக விளக்கமளித்தார். இதன்போது இலங்கையினால் இதுவரை அடையப்பட்டிருக்கும் முன்னேற்றங்களை அங்கீகரிக்குமாறும், ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபடுமாறும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் அமைச்சர் விஜித்த ஹேரத் கேட்டுக்கொண்டார். அதேபோன்று மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதை முன்னிறுத்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும், பயங்கரவாதத்தடைச்சட்ட நீக்கம் மற்றும் புதிய சட்ட உருவாக்கம் உள்ளடங்கலாக எதிர்வருங்காலங்களில் மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் இராஜதந்திரிகளுக்குத் தெளிவுபடுத்தினார். https://www.virakesari.lk/article/224078
3 weeks 6 days ago
பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, எம்ஆர்ஐ பரிசோதனையை ஆய்வு செய்யும் ஒரு மருத்துவர் (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் சந்தன் குமார் ஜஜ்வாரே பிபிசி செய்தியாளர் 3 செப்டெம்பர் 2025, 05:39 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் முழு உடலையும் கட்டுப்படுத்துவதால் மூளை, மனித உடலின் மிக முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது. உடலின் ஒவ்வோர் உறுப்பில் இருந்தும் மூளைக்கு சமிக்ஞைகள் செல்கின்றன. பின்னர் மூளை தேவைக்கேற்ப செயல்பட அந்த உறுப்புக்குக் கட்டளையிடுகிறது. ஆனால், உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் இருந்து மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும் போது, அதை மருத்துவர்கள் மூளை பக்கவாதம் என்று அழைக்கின்றனர். மூளை பக்கவாதம் உடலின் ஒரு பகுதியுடன் அல்லது பல பகுதிகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். உடலின் ஏதேனும் ஓர் உறுப்பு அல்லது பகுதியில் இருந்து மூளைக்கு சமிக்ஞைகள் செல்லவில்லை என்றால், அந்தப் பகுதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு முடங்கிவிடும். ஒரு நபருக்கு மூளை பக்கவாதம் ஏற்படும் ஆபத்து இருந்தால், அதன் அறிகுறிகளை எவ்வாறு அடையாளம் காணலாம்? அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மூளை பக்கவாத அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும் மூளை பக்கவாதத்தின் 6 அறிகுறிகள் மூளை பக்கவாதம் திடீரென ஏற்படும் நிகழ்வாகக் கருதப்படுகிறது. இருப்பினும், ஓர் ஆரோக்கியமான நபர் எதிர்காலத்தில் மூளை பக்கவாதம் ஏற்படும் ஆபத்தில் இருக்கிறாரா இல்லையா என்பதைச் சில ஆரம்ப அறிகுறிகளில் இருந்து அறிய முடியும். பொதுவாக மருத்துவர்கள் இதை **பிஇஎஃப்ஏஎஸ்டி (BEFAST) என்று அழைக்கின்றனர்: (B)பி – (பேலன்ஸ்) சமநிலை: ஆரோக்கியமாகத் தோன்றும் ஒரு நபரின் சமநிலை திடீரென பாதிக்கப்பட்டு, பின்னர் சிறிது நேரத்தில் சரியாகி விடுதல். (E)இ – கண்கள் (Eyes): திடீரென கண்களுக்கு முன்பாகத் திரை விழுந்ததைப் போல் இருட்டாகி, பின்னர் சாதாரணமாகத் தோன்றுதல். (F)எஃப் – முகம் (Face): பேசும்போது திடீரென ஒருவரின் முகம் கோணி, உடனடியாகச் சரியாகிவிடுதல். (A)ஏ – கைகள் (Arms): கை திடீரென கட்டுப்பாடற்று இருந்து, பின்னர் சரியாகிவிடுதல். (S)எஸ் – பேச்சு (Speech): திடீரென பேச்சு நின்று, சிறிது நேரம் பேச முடியாமல் இருத்தல். (T)டி – நேரம் (Time): இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டு, சிறிது நேரத்தில் சரியாகிவிட்டாலும், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில், இந்த அறிகுறிகள் மூளைக்கு ரத்தம் செல்வதில் தடை இருப்பதைக் குறிக்கின்றன. இது எதிர்காலத்தில் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. "இத்தகைய அறிகுறிகளுக்குப் பின்னால் வேறு ஏதேனும் நோய்களும் இருக்கலாம். ஆனால், ஒரு நபர் முழுமையாக ஆரோக்கியமாக இருந்தால், இந்த அறிகுறிகள் எதிர்காலத்தில் மூளை பக்கவாதம் ஏற்படும் ஆபத்துள்ளதைக் குறிக்கின்றன. மேலும், இது உடனடியாகச் சரியாகவில்லை என்றால், அந்த நபருக்கு மூளை பக்கவாதம் ஏற்பட்டுவிட்டது என்று பொருள்," என டெல்லியின் பிஎல் கபூர் மேக்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் பிரதீக் கிஷோர் கூறுகிறார். பட மூலாதாரம், Getty Images மூளை பக்கவாத அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்ய வேண்டும்? ஒரு நபருக்கு சமநிலை பாதிப்பு, திடீரென பார்வை இழப்பு, பேசுவதில் சிரமம், கைகால்கள் செயல்படாமை அல்லது முகம் கோணுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டு, அவை உடனடியாகச் சரியாகவில்லை என்றால் அது மூளை பக்கவாதத்தின் அறிகுறியாக இருக்கலாம். இத்தகைய சூழலில், நேரத்தை வீணாக்காமல் உடனடியாக மருத்துவரிடம் செல்வது அவசியம். அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) நரம்பியல் துறையின் டாக்டர் மஞ்சரி திரிபாதி, "மூளை பக்கவாதம் ஏற்பட்டால், முதல் நான்கரை மணி நேரத்திற்குள் சிகிச்சையைத் தொடங்கிவிட வேண்டியது மிகவும் முக்கியம். இது தமனியில் அடைப்பு ஏற்படுவதாலோ அல்லது தமனி வெடிப்பதாலோ நிகழ்கிறது, இதனால் மூளைக்கு ரத்தம் செல்ல முடியாது" என்று கூறுகிறார். மருத்துவர்களின் கூற்றுப்படி, மூளை பக்கவாதம் ஏற்பட்டால் இந்த முதல் நான்கரை மணி நேரம் 'கோல்டன் பீரியட்' என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், ஆறு முதல் எட்டு மணிநேரத்திற்குள் சிகிச்சை தொடங்கினாலும், நோயாளி மீண்டு வருவது சாத்தியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. "தமனியில் ரத்த உறைவு இருந்தால், ரத்த உறைவு கரைப்பான் ஊசி மூலம் அதைக் கரைக்க முயற்சி எடுக்கப்படுகிறது. சில நேரங்களில், தேவைப்பட்டால் மற்றும் சாத்தியமாக இருந்தால், த்ரோம்பெக்டமி (ஒரு வகை அறுவை சிகிச்சை) மூலம் உறைந்த ரத்தம் அகற்றப்படுகிறது," என மருத்துவர் மஞ்சரி திரிபாதி கூறுகிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கட்டுப்படுத்தப்படாத மற்றும் அதிக ரத்த அழுத்தம் மூளை பக்கவாத ஆபத்தை அதிகரிக்கிறது "அறுவை சிகிச்சை மூலம் உறைந்த ரத்தத்தை அகற்ற முடியும். ஆனால் இதற்கு வரம்புகள் உள்ளன. பெரிய தமனியில் ரத்தம் உறைந்திருந்தால் இது சாத்தியம். மூளை பக்கவாதம் ஏற்பட்ட நிலையில், நோயாளியை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது முக்கியம்," என மெட்ரோ குழும மருத்துவமனைகளின் மூத்த ஆலோசகர் நரம்பியல் நிபுணர் டாக்டர் சோனியா லால் குப்தா கூறுகிறார். மூளை பக்கவாதம் ஏற்பட்ட நோயாளி மீட்கப்படுவது, அதாவது மீண்டும் ஆரோக்கியமடைவது சாத்தியம்தான். ஆனால் இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். சிறந்த சிகிச்சையை அளிக்க சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ போன்ற பரிசோதனைகள் மூலம் மூளை பக்கவாதத்தின் தன்மை மற்றும் தீவிரத்தன்மை கண்டுபிடிக்கப்படுகிறது. பல நேரங்களில் மக்கள் மூளை பக்கவாத விவகாரத்தில் அலட்சியம் காட்டுகின்றனர். இதனால் நோயாளி முழுமையாகக் குணமடைவது கடினமாகிறது. "மூளை பக்கவாதம் அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை காப்பாற்றுவதில் முதல் மூன்று மாதங்கள் மிகவும் முக்கியம். இந்தக் காலகட்டத்தில் பிசியோதெரபி மூலமும் பயனடையலாம்," என மருத்துவர் சோனியா லால் குப்தா கூறுகிறார். இத்தகைய நோயாளிகளுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகும் முன்னேற்றம் காணப்படுகிறது, ஆனால் அதன் வேகம் மிகவும் மெதுவாக இருக்கும். மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணங்கள் மூளை பக்கவாதம் எந்த வயதினருக்கும் ஏற்படலாம் என்றாலும் சிலருக்கு இதற்கான ஆபத்து அதிகம். கட்டுப்படுத்தப்படாத மற்றும் தொடர்ந்து நீடிக்கும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கொலஸ்ட்ரால், புகைப் பிடித்தல், மது அருந்துதல், உடல் பருமன் ஆகியவை இதன் முக்கியக் காரணங்கள். சில நேரங்களில் இளைஞர்களுக்கு மரபணு காரணங்களால் ரத்தம் கெட்டியாகி, மூளை பக்கவாத ஆபத்து அதிகரிக்கிறது. "இது பொதுவாக முதியவர்களுக்கு அதிகம் ஏற்படுகிறது, ஆனால் மோசமான வாழ்க்கை முறை, ஜிம்மில் உடற்பயிற்சியின் போது ஏற்படும் காயங்கள் மற்றும் கழுத்தில் மசாஜ் செய்வதாலும் மக்கள் மூளை ரத்தக்கசிவுக்கு ஆளாகலாம்" என எய்ம்ஸ் மருத்துவர் மஞ்சரி திரிபாதி கூறுகிறார். குளிர்காலத்தில் மூளை பக்கவாத பாதிப்புகள் அதிகமாகக் காணப்படுகிறது. குளிர்காலத்தில் மக்கள் பொதுவாக அதிக கொழுப்பு உணவுகளை உண்கின்றனர் என்பதால் இந்தியா போன்ற நாடுகளில் உணவு பழக்க வழக்கங்கள் இதற்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது இந்தப் பருவத்தில் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் முக்கியமாகிறது. "பொதுவாக 60-65 வயதுடைய முதியவர்களுக்கு மூளை பக்கவாத ஆபத்து அதிகம். ஆனால் சமீப காலங்களில் எங்களிடம் வரும் 40-45% மூளை பக்கவாத நோயாளிகளின் வயது 50ஐ விட குறைவாக உள்ளது," என டெல்லி பிஎல் கபூர் மேக்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் பிரதீக் கிஷோர் கூறுகிறார். இதற்கு மோசமான வாழ்க்கை முறை மற்றும் மது அல்லது சிகரெட் புகைப்பது போன்ற பழக்கங்களைக் காரணமாகக் கருதுகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgdgllmprjo
3 weeks 6 days ago
இலங்கையில் HIV தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், 2025 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்ளை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது வியத்தகு அதிகரிப்பைக் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி,2025 ( National STD/AIDS Control Programme - NSACP 2025) ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் (ஜனவரி முதல் மார்ச் வரை) மொத்தம் 230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு காலாண்டில் பதிவான அதிகபட்ச சம்பவங்கள் 2025 ஆம் முதல் காலாண்டில் பதிவாகியுள்ளன. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பதிவான சம்பவங்களில், 30 ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர் இவர்கள் 15–24 வயதுக்குட்பட்டவர்கள், ஏனைய சம்பவங்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள். 2025 ஆம் ஆண்டில் பதிவான HIV தொற்றுகளின் ஆண்-பெண் விகிதம் 6.6:1 ஆக காணப்படுகின்றது. மேலும், 2025 ஆம் ஆண்டில் இதுவரை எச்.ஐ.வி/எய்ட்ஸ் (HIV/AIDS) தொடர்பான 10 இறப்புகள் பதிவாகியுள்ளன 2024 ஆம் ஆண்டில், மொத்தம் 47 நபர்கள் எச்.ஐ.வி/எய்ட்ஸ் (HIV/AIDS) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அந்த வகையில் இலங்கை கடந்த ஆண்டில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான HIV பரிசோதனைகளை நடத்தப்பட்டது. அதிகரித்து வரும் எச்.ஐ.வி நோயாளிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் சமீபத்தில் இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு, முன்-வெளிப்பாடு தடுப்பு (PrEP), மற்றும் பிந்தைய-வெளிப்பாடு தடுப்பு (PEP) உள்ளிட்ட HIV/STI தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க பரிந்துரைக்கப்பட்டது. Tamilmirror Online || இலங்கையில் HIV தாண்டவம்
3 weeks 6 days ago
யாழில் தனியார் தொலை தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் தனியார் தொலை தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் இணையதள வசதி அண்மைக்காலமாக மந்தமான நிலையில் காணப்படுகிறது. இதனை சரி செய்யும் வகையில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தால் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று ஆழியவளையில் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் இதனை அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் குடும்பஸ்தர் ஒருவர் இதற்கு தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். புற்றுநோய் மற்றும் கண் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் இந்த தொலைத்தொடர்பு கோபுரத்தை இதில் நிறுவுவதால் கதிர்வீச்சால் தாம் மேலும் பாதிக்கப்பட்டு, உயிருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதால் தமது பகுதியில் குறித்த தொலைத்தொடர்பு கோபுரத்தை அமைக்க வேண்டாம் என பிரதேச செயலகம், பிரதேச சபையிடம் கடிதம் மூலம் முறைப்பாடளித்துள்ளார் சம்பவ இடத்திற்கு நேற்று வருகை தந்த பருத்தித்துறை பிரதேச சபை அதிகாரிகள் குறித்த தொலை தொடர்பு கோபுரம் எந்தவித அனுமதியும் இன்றி அமைக்கப்படுவதை சுட்டிக்காட்டி உரிய முறையில் அனுமதி பெற்ற பின் பணிகளை தொடருமாறும் அதுவரை பணிகளை இடைநிறுத்துமாறும் அறிவுறுத்தல் வழங்கிச் சென்றுள்ளனர்.[ஒ] யாழில் தனியார் தொலை தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு!
3 weeks 6 days ago
03 Sep, 2025 | 05:05 PM யாழ். புதிய செம்மணி வீதிச் சந்தியிலிருந்து கொக்குவில் சந்தி வரையான ஆடியபாதம் வீதியூடாக டிப்பர் வாகனங்கள் காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை பயணிப்பதற்கு முற்றாக தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏனைய பாரவூர்திகள் காலை 7 மணி தொடக்கம் 9 மணி வரை மற்றும் நண்பகல் 12 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணி வரை குறித்த வீதியூடாக பயணிப்பதற்கு தடை விதித்து பொதுப் போக்குவரத்தினை இலகுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்பள்ளி சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், உத்தியோகத்தர்கள் பணிக்குச் செல்லும் நேரங்கள் மற்றும் அண்மையில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு பொதுப்போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்குடன் இவ்விடயங்கள் குறித்து நல்லூர் பிரதேச சபையினால் தீர்மானிக்கப்பட்டு, இந்த போக்குவரத்துத் தடை நடைமுறைக்கு வந்துள்ளது. இது தொடர்பான அறிவித்தல் பலகைகள் வீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, வாகன சாரதிகள் இந்த விதிமுறைகளைப் பின்பற்றுமாறு நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் அறிவுறுத்தியுள்ளார். யாழ். ஆடியபாதம் வீதியில் டிப்பர், பாரவூர்தி வாகனங்களுக்கு போக்குவரத்துத் தடை | Virakesari.lk
3 weeks 6 days ago
இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலக கும்பல் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை! 03 Sep, 2025 | 11:32 AM இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலக கும்பல் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கெஹெல்பத்தார பத்மே', 'கொமாண்டோ சலிந்த' மற்றும் 'பாணந்துறை நிலங்க' உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது. இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பாதாள உலக கும்பலில் இருந்த பக்கோ சமனின் மனைவி ஆகஸ்ட் 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து “கெஹெல்பத்தார பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்தையடுத்து அவர்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். இந்நிலையில், “கெஹெல்பத்தார பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலக கும்பலை தொடர்ந்தும் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/224077
3 weeks 6 days ago
Published By: Digital Desk 1 03 Sep, 2025 | 11:02 AM தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று புதன்கிழமை )03) காலை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். ஊழல் தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ராஜித சேனாரத்ன இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆகஸ்ட் 29 ஆம் திகதி காலை ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க்து. https://www.virakesari.lk/article/224074
3 weeks 6 days ago
அதிநவீன ஆயுதங்கள் அணிவகுப்பு: புதின், கிம் முன்னிலையில் ராணுவ வலிமையை காட்டிய சீனா பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீனாவின் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் அணுஆயுத ஏவுகணை 9 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவில் இரண்டாம் உலகப்போர் வெற்றி மற்றும் ஜப்பான் சரணடைந்ததன் 80-ஆண்டு நிறைவையொட்டி பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. பெய்ஜிங் நகரில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பை சீன அதிபர் ஜின்பிங்குடன், ரஷ்ய அதிபர் புதின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உள்பட பலநாட்டு தலைவர்கள் பார்வையிட்டனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு, புதின், ஜின்பிங் மற்றும் கிம் முதல் முறையாக பொதுவெளியில் ஒன்றாக தோன்றியுள்ளனர். இந்த அணிவகுப்பில் அதிநவீன போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுத ஏவுகணைகள், புதிய நீர்மூழ்கி டிரோன்கள் உள்பட சீனாவின் ராணுவ வலிமையை உலகிற்கு பறைசாற்றும் ஆயுதங்களும் ராணுவ தளவாடங்களும் இடம்பெற்றிருந்தன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ராணுவ அணிவகுப்பில் ஈடுபட்டுள்ள வீராங்கனைகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ராணுவ அணிவகுப்பின் முடிவில் பறக்கவிடப்பட்ட பலூன்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீன ராணுவ அணிவகுப்பில் நவீன ஆயுதங்கள் இடம் பெற்றிருந்தன பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீனாவின் நவீன ராணுவ ஆயுதங்கள் இந்த அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீனாவின் ராணுவ உலங்கு வானூர்திகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீனாவின் நவீன போர் விமானங்களும் அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தன. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீன கடற்படையின் கப்பல் மாதிரி பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீன அதிபர் ஷி ஜின்பிங் வாகனத்தில் சென்று ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீன கடற்படையின் நீருக்கடியில் சென்று தாக்கும் ஆயுதம் (டொர்பீடோ) பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹச்எஸ்யு என்கிற சீன கடற்படையின் நீர்மூழ்கி ஏவுகணை பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வானில் சாகசம் செய்த போர் விமானங்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீன ராணுவ அணிவகுப்பு பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அணிவகுப்பில் பங்கேற்ற சீன பீரங்கிகள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீன ராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்ட தலைவர்களின் குழு புகைப்படம் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj9w9x28z72o
3 weeks 6 days ago
புதின், கிம் உடன் தோன்றிய சீன அதிபர்: அமெரிக்கா கவலை அடைந்துள்ளதா? - டிரம்ப் பதில் பட மூலாதாரம், Bloomberg via Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ரஷ்யா மற்றும் வட கொரிய தலைவர்களுடன் இணைந்து சீன அதிபர் ஷி ஜின்பிங் அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்வதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். சீனாவின் ராணுவ வலிமையை வெளிப்படுத்தும் வகையில், இன்று (புதன்கிழமை) பீஜிங்கில் புதின் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில், சீனா நடத்திய மிகப்பெரிய வெற்றி தின அணிவகுப்பு விழா குறித்து டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "அமெரிக்காவுக்கு எதிராக நீங்கள் சதி செய்யும்போது விளாடிமிர் புதின் மற்றும் கிம் ஜாங் உன்னுக்கு எனது வணக்கங்களைத் தெரிவிக்கவும்." என்று அவர் பதிவிட்டுள்ளார். சீனா, ரஷ்யா மற்றும் பிற நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் ஏற்படும் மாற்றம் உலக அரங்கில் அமெரிக்காவுக்கு ஒரு சவாலாக உள்ளது என்பது போன்ற கருத்துகளை டிரம்ப் முன்னதாக நிராகரித்தார். இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா சீனாவுக்கு அளித்த "பெரும் ஆதரவு மற்றும் 'உயிர்த் தியாகம்'" பற்றியும் டிரம்ப் குறிப்பிட்டார். இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்ததையும், ஆக்கிரமிப்புக்கு எதிரான சீனாவின் வெற்றியையும் சீனாவின் இந்த ராணுவ அணிவகுப்பு குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. "சீனாவின் வெற்றிக்காக பல அமெரிக்கர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அவர்களது துணிச்சல் மற்றும் தியாகம் சரியான முறையில் கௌரவிக்கப்படும் மற்றும் நினைவுகூரப்படும் என்று நம்புகிறேன்!" என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். கிம் மற்றும் புதின் உட்பட 26 நாட்டுத் தலைவர்கள் ஜின்பிங்குடன் இந்த ராணுவ அணிவகுப்பில் இணைந்தனர். டிரம்பின் வரிகள் உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்கை உலுக்கிய பிறகு, அமெரிக்காவுக்கு சாத்தியமான மாற்றாக சீனா தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயன்றுள்ளது. பட மூலாதாரம், Sputnik/Pool via Reuters படக்குறிப்பு, விளாடிமிர் புதின் மற்றும் ஷி ஜின்பிங் அமெரிக்க நலன்களையும் தொழில்துறையையும் பாதுகாப்பதற்கு இந்த வரிகள் அவசியம் என்று டிரம்ப் கூறியுள்ளார். இதற்காக, எந்தவொரு இராஜதந்திர ரீதியான இழப்பையும் சந்திக்க அவர் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. சீனாவும் அதன் நட்பு நாடுகளும் அமெரிக்காவை எதிர்க்க ஒரு சர்வதேச கூட்டணியை உருவாக்க முயற்சிப்பதாக நம்புகிறீர்களா என்று பிபிசி கேட்டதற்கு, "இல்லை. இல்லவே இல்லை. சீனாவுக்கு நாங்கள் தேவை." என்று டிரம்ப் கூறினார். "ஜின்பிங்குடன் எனக்கு மிகவும் நல்ல உறவு இருப்பது உங்களுக்குத் தெரியும். எங்களுக்கு சீனா எவ்வளவு தேவையோ அதைவிட அதிகமாக அவர்களுக்கு நாங்கள் தேவை. ஆகவே, எனக்கு அப்படி நடப்பதாக தெரியவில்லை." செவ்வாயன்று ஒரு வானொலி நேர்காணலில், ரஷ்யா - சீனா கூட்டணி உருவாவது குறித்து தனக்கு கவலை இல்லை என்று டிரம்ப் கூறினார். ஸ்காட் ஜென்னிங்ஸ் வானொலி நிகழ்ச்சியில் பேசிய அவர், அமெரிக்கா உலகின் மிக சக்திவாய்ந்த ராணுவப் படைகளைக் கொண்டுள்ளது என்றும் அவர்கள் தங்கள் ராணுவத்தை எங்களுக்கு எதிராக ஒருபோதும் பயன்படுத்த மாட்டார்கள் என்றும் கூறினார். "அது அவர்கள் செய்யக்கூடிய மிக மோசமான காரியமாக இருக்கும்" என்று அவர் கூறினார். கடந்த மாதம் அலாஸ்காவில் நடந்த சந்திப்பின் போது யுக்ரேனுக்கான சமாதான ஒப்பந்தத்தை எட்டத் தவறிய பின்னர், புதினிடம் "மிகவும் ஏமாற்றமடைந்ததாக" டிரம்ப் அந்த நேர்காணலில் கூறினார். "புதினிடம் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன், அதை உறுதியாக சொல்ல முடியும்," என்று டிரம்ப் கூறினார். யுக்ரேன் மக்களுக்கு உதவ அமெரிக்கா ஏதாவது செய்யும் என்று தெரிவித்த அவர், குறிப்பிட்டு எதையும் கூறவில்லை. புதினின் முழு அளவிலான படையெடுப்பை சீனா விமர்சிக்கவில்லை. சீனா இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்களை வழங்குவதன் மூலமும் ரஷ்ய எண்ணெய் வாங்குவதன் மூலமும் ரஷ்யாவின் போர் முயற்சிக்கு உதவியதாக மேற்கு நாடுகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை சீனா மறுக்கிறது. இதற்கிடையில், யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி, ரஷ்யா போர்முனையின் சில பகுதிகளில் புதிய துருப்புகளை குவிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். "[புதின்] சமாதானத்துக்கு உடன்பட மறுக்கிறார்," என்று ஜெலென்ஸ்கி தனது இரவு காணொளி உரையில் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgv44r882mo
3 weeks 6 days ago
“கெஹெல்பத்தார பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்! 03 Sep, 2025 | 05:29 PM இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலின் தலைவரான “கெஹெல்பத்தார பத்மே” என்பவரின் தலைமையில் நுவரெலியா பிரதேசத்தில் இயங்கி வரும் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலின் தலைவரான “கெஹெல்பத்தார பத்மே” என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கெஹெல்பத்தார பத்மே', 'கொமாண்டோ சலிந்த' மற்றும் 'பாணந்துறை நிலங்க' உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது. இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்தையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224132
3 weeks 6 days ago
இலங்கை ஜனாதிபதி முதன் முறையாக 'கச்சத்தீவு' செல்ல விஜய் பேச்சு காரணமா? முழு பின்னணி பட மூலாதாரம், PMD SRI LANKA 3 செப்டெம்பர் 2025, 07:41 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் ''எமது கடற்றொழிலாளர்களுக்கு மிக முக்கியமான இடமாக கச்சத்தீவு காணப்படுகின்றது. இந்த கச்சத்தீவை கேந்திரப்படுத்தி இன்று பாரிய கலந்துரையாடலொன்று எழுந்துள்ளது. இந்த கடல் எமது மக்களுக்கானது. எமது தீவுகள் எமது மக்களுக்கானது. எமது நிலப்பரப்பு எமது மக்களுக்கானது. எமது வானம் எமது மக்களுக்கானது. எந்தவொரு அழுத்தங்களுக்கும் அடிப்பணிய மாட்டோம் என சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.'' என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, மயிலிட்டி மீனவத்துறை முகத்தின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கடந்த முதலாம் தேதி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி கச்சத்தீவு தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார். கச்சத்தீவு பற்றி தவெக மாநாட்டில் அதன் தலைவர் விஜயின் பேச்சு இலங்கையில் சலசலப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் சிங்களம் மற்றும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் மட்டுமின்றி இலங்கை அரசியல் மட்டத்திலும் அது விவாதிக்கப்பட, வரலாற்றில் முதன் முறையாக இலங்கை ஜனாதிபதி ஒருவர் கச்சத்தீவுக்கு விஜயம் செய்த நிகழ்வும் அரங்கேறியது. கச்சத்தீவு குறித்து விஜய் என்ன பேசினார்? அதன் எதிரொலியாக இலங்கையில் என்ன நடந்தது? பட மூலாதாரம், TVK கச்சத்தீவு பற்றி விஜய் பேசியது என்ன? தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் இரண்டாவது மாநாட்டில் கச்சத்தீவு தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார். ''எம்ம தமிழ்நாட்டு மீனவர்கள் கிட்டத்தட்ட 800 பேருக்கு மேல இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டிருக்கின்றார்கள். அதை கண்டிக்க எதையும் செய்ய சொல்லவில்லை. சின்னதா ஒன்னே ஒன்று மட்டும் செய்து கொடுங்க. இனிமேலாவது எங்களுடைய மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக இந்த கச்சத்தீவை இலங்கைகிட்ட இருந்து மீட்டு கொடுத்துருங்க. அது போதும்.'' என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்திருந்தார். விஜய் பேச்சுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் பதில் கச்சத்தீவு தொடர்பில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்ட கருத்து இலங்கை மக்கள் மத்தியில் பல்வேறு கருத்தாடல்களை ஏற்படுத்தியிருந்தது. தமிழர்கள் மாத்திரமன்றி, சிங்களவர்கள் மத்தியிலும் பிரபலமான விஜய், இவ்வாறு கருத்து வெளியிட்டமை இலங்கையில் பலத்த விவாதத்தை தோற்றுவித்திருந்தது. இந்த நிலையில், விஜயின் கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள், வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்திடம், கேள்வி எழுப்பியிருந்தனர். இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் வழங்க முடியாது என வெளிவிகார அமைச்சர் விஜித்த ஹேரத் கடந்த மாதம் 27-ஆம் தேதி தெரிவித்திருந்தார். 'கச்சத்தீவு என்பது இலங்கைக்கு சொந்தமான ஒரு தீவு. அது எந்த விதத்திலும் மாறாது. தென் இந்தியாவில் தேர்தல் காலம் என்பதனால் வாக்குகளை பெறுவதற்காக ஒவ்வொரு கருத்துகளை கூறுவார்கள். இது முதலாவது சந்தர்ப்பம் இல்லை. இதுக்கு முன்னரும் தேர்தல் மேடைகளில் இவ்வாறு கூறி இருந்தார்கள். இந்த தேர்தல் மேடைகளில் கூறுவது நிறைவேறாது. தேர்தல் மேடையில் விஜய் கூறியதை நானும் பார்த்தேன். அதை பெரிதுபடுத்த தேவை இல்லை. மத்திய அரசாங்கம் அல்லது இராஜதந்திர ரீதியில் இவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை. அன்றும் இன்றும் என்றும் கச்சத்தீவு இலங்கை வசமே காணப்படும்.' என இலங்கை வெளிவிகார அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார். பட மூலாதாரம், PMD SRI LANKA கச்சத்தீவு சென்ற இலங்கை ஜனாதிபதி இதன் பின்னணியில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் அது தொடர்பில் இந்த கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்தை வெளியிட்டிருந்தார். கச்சத்தீவு குறித்து கருத்து வெளியிட்டது மாத்திரமன்றி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கச்சத்தீவுக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தார். கச்சத்தீவுக்கு அரசத் தலைவர் ஒருவர் விஜயம் மேற்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, அங்கிருந்து கடற்படைக்கு சொந்தமான படகில் கச்சத்தீவுக்கு சென்று கச்சத்தீவு தொடர்பில் ஆராய்ந்திருந்தார். கச்சத்தீவு விஜயத்தில் ஜனாதிபதி சொல்ல வருவது என்ன? கச்சத்தீவு விஜயத்தின் ஊடாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க என்ன சொல்ல வருகின்றார் என்பது தொடர்பில் மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜாவிடம், பிபிசி தமிழ் வினவியது. ''கச்சத்தீவு தொடர்பில் இந்திய அரசியல்வாதிகள் அல்லது தமிழக அரசியல்வாதிகள் என்ன தான் சொன்னாலும், அவர்களின் கோரிக்கை எந்த வகையிலும் நிறைவேற்றப்பட மாட்டாது என்பதை தான் அவர் நேரடியாகவே சொல்ல வருகின்றார். தானே அந்த இடத்திற்கு சென்று தானே விஜயம் செய்து, அது இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்பதை அவர் நிரூபிக்க முயல்கின்றார். அங்கு சென்றமையின் ஊடாக பாதுகாப்பு உறுதிப்படுத்தலையும், கச்சத்தீவு எங்களுக்கு தான் சொந்தம் என்பதையும், அது எங்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது என்பதையும் நாங்கள் நினைத்த நேரம் செல்லலாம் என்ற கருத்தையும் கூறும் வகையிலேயே அவர் அங்கு சென்றார். '' என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார். "மீனவப் பிரச்னைக்கு கச்சத்தீவை மீள பெற்று விட்டால் தீர்வு வரும் என்று தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல்வாதிகளும் நினைக்கின்றார்கள். ஆனால், அதை இவர் விட்டுக் கொடுக்கமாட்டார். தானே அதை கையாளுகின்றேன் என்ற செய்தியை சொல்கின்றார். அரசாங்கம் அமைதியாக இருக்கின்றது என்று நினைக்கின்றார்கள். அரசாங்கம் அமைதியாக இல்லை. அரசாங்கம் நேரடியாகவே இதை கண்காணித்து கொண்டிருக்கின்றது என்ற செய்தியை தான் இவர் சொல்கின்றார்.'' எனவும் அவர் கூறுகின்றார். பட மூலாதாரம், SIVARAJA படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா விஜயின் பேச்சு எவ்வாறு தாக்கம் செலுத்தியுள்ளது? தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், கச்சத்தீவு தொடர்பில் வெளியிட்ட கருத்து இலங்கை அரசியலில் எவ்வாறான தாக்கத்தை செலுத்தியுள்ளது என்பது குறித்தும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா, பிபிசி தமிழுக்கு தெளிவூட்டினார். ''ஸ்டாலினை பொறுத்தவரையில் அவர் அடிக்கடி கச்சத்தீவு தொடர்பில் கருத்து வெளியிட்டு வருகின்றார். அதேபோன்று தான எடப்பாடி பழனிசாமியும் கருத்து வெளியிடுகின்றார். ஆனால் விஜயை பொறுத்தவரையில் அவர் கூறிய கருத்து இளைஞர்கள் மத்தியில் சிந்தனையை தூண்டியுள்ளதாக இலங்கை அரசாங்கம் கருதுகின்றது. விஜய்க்கு இந்தியாவில் எவ்வளவு ஆதரவு இருக்கின்றதோ? அதேபோன்று இலங்கையின் தமிழ், சிங்கள இளைஞர்கள் மத்தியிலும் பெருமளவான ஆதரவு இருக்கின்றது. ஆகவே, விஜயின் அந்த கருத்து வலுவாக எடுபடும் என அரசாங்கம் நம்புகின்றது. இந்த பிரச்னைக்கு விரைவாக முற்றுப் புள்ளி வைக்கலாம் என இலங்கை அரசாங்கம் எண்ணியுள்ளது.'' எனவும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம், PMD SRI LANKA ஜனாதிபதியின் கச்சத்தீவு விஜயம் - அரசாங்கம் என்ன சொல்கின்றது? கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இலங்கை மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலேயே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் இந்த விஜயம் அமைந்திருந்ததாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளதாக அவரது ஊடக செயலாளர் க.கிருஷாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் பாதுகாப்பு, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் மற்றும் அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்ந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார். கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து சுற்றுலா திட்டமொன்றை மேற்கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பிலும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன்போது ஆராய்ந்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g0gnvxlgxo
Checked
Tue, 09/30/2025 - 21:57
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed