2 weeks 6 days ago
அமெரிக்காவுடன் மோதல் வெடித்தால் இரான் முன்னுள்ள 4 வாய்ப்புகள் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பர்னியன் சடேகி பிபிசி மானிட்டரிங் 7 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவுடனான பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, இரானின் தலைமை தீவிர ராஜிய ரீதியான தனது முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு எதிராக டிரம்புக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பிராந்திய சக்திகளை செயல்படுத்த இரான் தலைமை முயற்சிக்கிறது. இரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் பிராந்திய போரை தூண்டக்கூடும் என இரான் கூறியுள்ளது. சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டான் ஆகியவை தங்களின் வான்வெளி மற்றும் நிலப்பரப்பை பயன்படுத்தி இரான் மீதான எந்தவொரு சாத்தியமான தாக்குதலுக்கும் அனுமதிக்க மாட்டோம் என ஏற்கெனவே தெளிவாக கூறியுள்ளன. இது, அமெரிக்காவுக்கான வாய்ப்புகளை கட்டுப்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ தளங்கள் மற்றும் வளங்களையும் இலக்கு வைப்போம் என இரான் எச்சரித்துள்ளது. இராக், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா, குவைத், ஜோர்டான் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள சிரியா ஆகிய நாடுகளில் சாத்தியமான தாக்குதல்கள் நடக்கக்கூடும். அமெரிக்காவுடனான முந்தைய மோதல்களுக்கு இரானின் எதிர்வினை அடையாள ரீதியானதாக மட்டுமே இருந்தது. 2025ஆம் ஆண்டு இரான்-இஸ்ரேல் போரின்போது அமெரிக்காவின் தாக்குதல்களை தொடர்ந்து இரான் முன்கூட்டியே எச்சரித்துவிட்டு கத்தாரின் அல் உதெய்ட் விமானப் படை தளம் மீது தாக்குதல் நடத்தியது. காசிம் சுலைமானி கொல்லப்பட்ட பின்னர், 2020 ஜனவரியில் இராக்கின் ஐன் அல்-அசாத் விமானப்படைத் தளத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பும் இரான் அமெரிக்காவை எச்சரித்திருந்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜனவரி 14, 2026 அன்று டெஹ்ரானில் நடந்த போராட்டங்களின் போது கொல்லப்பட்ட பாதுகாப்புப் படையினரின் இறுதிச் சடங்கின் போது இரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமனெயி படங்களை ஏந்தியிருக்கும் இரானிய பெண்கள். எனினும், தற்போதைய சூழலில் அமெரிக்காவின் எந்தவொரு தாக்குதலையும் தன்னுடைய இருப்புக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலாக இரான் கருதலாம். இரானின் சமீபத்திய பதற்றமான சூழலின்போது டிரம்ப், "இரானில் புதிய தலைமையை" கண்டறிய வேண்டிய நேரம் என டிரம்ப் தெரிவித்திருந்தார். அங்கு புதிய போராட்டங்களைத் தூண்டி இஸ்லாமிய குடியரசு ஆட்சியை கவிழ்க்க ராணுவ வாய்ப்புகள் குறித்து அவர் யோசித்ததாகவும் தகவல் வெளியானது. பதற்றம் அதிகரித்த நிலையில், தங்கள் நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலும் போர் நடவடிக்கையாக கருதப்படும் என இரான் எச்சரித்திருந்தது. இரானின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு கட்டமைப்பின் மீது அமெரிக்கா 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' நடத்துவதைத் தடுக்க இரானின் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. நாடு கடத்தப்பட்ட இரானின் எதிர்தரப்பு தலைவர் ரெஸா பஹ்லவி அத்தகைய தாக்குதலுக்கு அழைப்பு விடுத்திருப்பது, தற்போதைய சூழலில் அமைப்பை மேலும் பலவீனப்படுத்தி, இரானில் புதிய போராட்டங்களை தூண்டக்கூடும். 1. பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவுதல் பட மூலாதாரம்,Fatemeh Bahrami/Anadolu via Getty Images படக்குறிப்பு,இரானின் 'புனித பாதுகாப்பு வாரத்தின்' (Sacred Defense Week) ஒரு பகுதியாகவும், இரான்-இராக் போரின் 45வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாகவும், செப்டம்பர் 27, 2025 அன்று டெஹ்ரானின் பஹரிஸ்தான் சதுக்கத்தில் பாலிஸ்டிக் ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (ட்ரோன்கள்) காட்சிப்படுத்தப்பட்டன. அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ கடந்த ஜனவரி 28ஆம் தேதி, 30,000 முதல் 40,000 வரையிலான அமெரிக்க துருப்புகள் மத்திய கிழக்கின் எட்டு அல்லது 9 தளங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் 'ஆயிரக்கணக்கான இரானிய யுஏவி (டிரோன்கள்) மற்றும் இரானிய குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளின் தாக்குதல் வரம்புக்குள்ளேயே நிறுத்தப்பட்டுள்ளதாக' கூறினார். இரானிடம் குறுகிய மற்றும் நடுத்தர தூரம் வரை சென்று இலக்குகளை தாக்கவல்ல சுமார் 2,000 பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளதாக கருதப்படுகிறது. இஸ்ரேலுடனான போரின்போது, இரான் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. அவற்றில் சில ஏவுகணைகள் இஸ்ரேலின் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புக்குள் ஊடுருவதில் வெற்றி கண்டன. அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வைத்துள்ளது, ஆனால் இஸ்ரேலை விட அமெரிக்கா இன்னும் பெரிய பகுதியை பாதுகாக்க வேண்டியிருக்கும். கடந்தாண்டு ஜூன் மாதத்திலிருந்து ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் இரான் தன்னுடைய ராணுவ திறன்களை மேம்படுத்த உதவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2. எதிர் தாக்குதல் கொள்கை பட மூலாதாரம்,Fadel Itani/NurPhoto via Getty Images படக்குறிப்பு,ஜனவரி 26, 2026 அன்று லெபனானின் பெய்ரூட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஹெஸ்பொலா பொதுச் செயலாளர் ஷேக் நைம் காசெமின் உரையை மக்கள் கேட்கிறார்கள். டஹியே பகுதியில் ஹெஸ்பொலா மற்றும் இரானிய கொடிகள் மற்றும் இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயி சுவரொட்டிகளை ஏந்திய மக்கள் கூடியிருந்தனர். இரானின் பழைய ராணுவ தொழில்நுட்பம் அமெரிக்காவின் நவீன தொழில்நுட்பத்துடன் போட்டியிட முடியாது, எனவே இரான் தன்னுடைய பாரம்பரிய வியூகத்தை மாற்றலாம். வேகமான தாக்குதல் படகுகள் அல்லது டிரோன்களை ஒரே நேரத்தில் அனுப்பி எதிரி சென்சார்கள் மற்றும் வான் பாதுகாப்புகளை செயலிழக்க செய்ய முயற்சிக்கலாம். பெர்சிய வளைகுடாவில் தங்களின் வேக படகுகள் மற்றும் ஷாஹெத்-136 டிரோன்களை பயன்படுத்தி, யுக்ரேனிய போரில் ரஷ்யா பெரியளவில் பயன்படுத்தியது போன்ற ஒரு வியூகத்தை இரான் தழுவக்கூடும். பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், சில இரானிய ஊடகங்கள், குறிப்பாக புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடையதாக கூறப்படும் சில ஊடகங்கள், இந்த வியூகத்தை வலியுறுத்தி கூறுகின்றன. ஜனவரி 29ஆம் தேதி இரானிய ராணுவம் தங்களுக்கு 1,000 'ஸ்டிரேட்டஜிக் டிரோன்கள்' கிடைக்கப் பெற்றுள்ளதாக அறிவித்தது. 3. பிராந்திய கூட்டாளிகளை முடுக்கி விடுதல் பட மூலாதாரம்,Fadel Itani/NurPhoto via Getty Images படக்குறிப்பு,இரான் பல தசாப்தங்களாக ஹெஸ்பொலா உட்பட அதன் நட்பு ஆயுதக்குழுக்களுக்கு நிதியளித்து உதவி செய்துவருகிறது இரான் பல தசாப்தங்களாக தன்னுடைய கூட்டணி ஆயுதக்குழுக்களுக்கு (Axis of Resistance) நிதியளித்து ஆயுதங்களை வழங்கியுள்ளது. இதில், இராக்கில் உள்ள ஆயுதக்குழுக்கள், லெபனானில் ஹெஸ்பொலா மற்றும் ஏமனில் ஹூதிகள் போன்றவை அடங்கும். இரானிய நட்பு நாடுகளில் உள்ள இத்தகைய குழுக்களை குறிப்பிடத்தக்க அளவில் இஸ்ரேல் கடந்த இரண்டு ஆண்டுகளில் சேதப்படுத்தியுள்ளது. இதன்மூலம் இரான் தனது எல்லைக்கு அப்பால் செல்வாக்கை பயன்படுத்தும் திறனை இஸ்ரேல் குறைத்துள்ளது. இருப்பினும், இந்தக் குழுக்கள் கூட்டாக அமெரிக்க இலக்குகளைத் தாக்கினால் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும். இந்த குழுக்கள் 2025ஆம் ஆண்டு இரான் - இஸ்ரேல் போரில் நேரடியாக ஈடுபடவில்லை, ஆனால் அமெரிக்காவுடனான போர் இரானுக்கு அதன் இருப்புக்கான அச்சுறுத்தலாக மாறினால் இரான் மற்றும் அதன் நட்பு ஆயுதக்குழுக்களின் எதிர்வினைகள் மாறக்கூடும். இதுவரை, இரான் ஆதரவு பெற்ற பி.எம்.எஃப்(Popular Mobilization Forces - PMF) உடன் இணைந்த சில இராக்கிய குழுக்கள் இரானைப் பாதுகாப்பது பற்றிப் பேசியுள்ளன. அதேபோன்று, அல்-நுஜாபா இயக்கம் மற்றும் பத்ர் அமைப்பு (Badr) ஆகியவை இரானுக்கு தங்களின் ஆதரவை அறிவித்துள்ளன. ஹெஸ்பொலாவின் பொதுச் செயலாளர் ஷேக் நைம் காசெம் இரானுக்கான ஆதரவை தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்காவின் தாக்குதலுக்கு எதிராகவும் எச்சரித்துள்ளார். அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், தங்களின் குழு எப்போது, எப்படி தலையிடுவது என்பது குறித்து முடிவு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கா இரானை தாக்கினால், ஹூதிகள் செங்கடலில் அமெரிக்க கப்பல்கள் மீதான தாக்குதலை மீண்டும் தொடங்கலாம். ஜனவரி 26ஆம் தேதி, கப்பல் ஒன்று தீப்பிடித்து எரியும் வீடியோவை ஹூதிகள் வெளியிட்டிருந்தனர், அதில் "விரைவில்" (Soon) என எழுதப்பட்டிருந்தது. எனினும், 2025ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்காவுடன் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிக்க ஹூதிகள் விரும்பினால், இரானுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என அந்த அமைப்பு முடிவெடுக்கலாம். 4. ஹோர்முஸ் நீரிணையை மூடுதல் மேற்கு நாடுகளுடனான எந்தவொரு பெரும் பதற்றத்தின் போதும் இரான் தொடர்ந்து விடுக்கும் பழைய அச்சுறுத்தலே இது. வளைகுடாவின் இந்தக் குறுகிய பாதை வழியே உலகின் எண்ணெய் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு நடக்கிறது. கடல் கண்ணிவெடிகள், குரூயிஸ் ஏவுகணைகள், கடலோர பாதுகாப்பு அமைப்புகள், அதிவேக படகுகள் ஆகியவை நீரிணையை மூடுவதற்கு பயன்படுத்தக்கூடும். இரானின் கடைசி புகலிடமாக இது இருக்கக்கூடும். ஏனெனில், இரானிடமிருந்து அதிகளவில் எண்ணெய் வாங்கிவரும் அதன் நட்பு நாடான சீனா மற்றும் இரானுக்கு தற்போது வரை ஆதரவு அளித்து வரும் வளைகுடா நாடுகளின் வர்த்தகத்தையும் இது பெருமளவில் பாதிக்கக்கூடும். அதனால்தான் சமீபத்திய அமெரிக்க-இரான் பதற்றங்களின் போது இரானின் சொல்லாடல்களில் இது முக்கியமாக இடம்பெறவில்லை. என்ன நடக்கலாம்? இரான் மற்றும் அமெரிக்கா இரு நாடுகளுமே ராஜ்ஜீய ரீதியிலான தீர்வுக்கு முன்னுரிமை அளித்தாலும், அவர்களின் நிலைப்பாடுகளில் உள்ள மிகப்பெரிய இடைவெளி காரணமாக இரு தரப்புக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படுவது எளிதானது அல்ல. டிரம்ப் நிர்வாகம் படைபலத்தைப் பயன்படுத்தினால், இரான் தனது நிலைப்பாட்டை தளர்த்திக் கொண்டு இஸ்லாமியக் குடியரசைக் காப்பாற்ற அமெரிக்காவுக்கு சில சலுகைகளை அறிவிக்கக் கூடும். மறுபுறம், மோதலின் போது இரான் அமெரிக்காவுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தக்கூடும். அதனால் அது மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்பும் நிலை வரலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg7e98jy9jjo
2 weeks 6 days ago
கொஞ்சம் மார்க்கமாத்தான் இறங்கி இருக்கிறியல். எல்லாம் அவன் விட்ட வழி. சுமைதாங்கி. 😁
2 weeks 6 days ago
லசித் மலிங்கா யோக்கர் கிங்💪 மதிச பத்திரனா ஹா ஹா😁😛.........................
2 weeks 6 days ago
இந்தியாவில் பறவைக்காய்ச்சல் ; தமிழ்நாடு, பீகார் மாநிலங்களில் 1,500க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழப்பு Published By: Digital Desk 3 08 Feb, 2026 | 02:08 PM இந்தியா முழுவதும் H5N1 பறவைக் காய்ச்சல் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், இ.சி.ஆர் சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலை உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து 1,500க்கும் மேற்பட்ட காகங்கள் தொடர்ந்து உயிரிழந்துள்ளன. இதனையடுத்து உயிரிழந்த காகங்களின் மாதிரிகளை சோதனை செய்ததில் பறவைகளுக்கு H5N1 வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளாக அரசு விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் 150க்கும் மேற்பட்ட காகங்கள் தொடர்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/238151
2 weeks 6 days ago
அயர்லாந்து மெதுவாக முன்னேறினம். இலங்கை கவனமா இருக்கவேண்டிய நேரம்.
2 weeks 6 days ago
இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, குல்படின் நைப்பின் அதிரடியான 63 (35) ஓட்டங்களோடு 6 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி டிம் செய்ஃபேர்ட்டின் வேகமான 65 (42) ஓட்டங்களோடு 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு புள்ளிகள் இல்லை. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஜேக்கப் பெத்தெல் 55 (35), ஹரி புரூக் 53 (32) ஆகியோரின் அதிரடி ஆட்டங்களுடனும், வில் ஜக்ஸ் ஆட்டமிழக்காமல் எடுத்த புயல்வேக 39 (18) ஓட்டங்களோடும் 7விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பாடிய நேபளம் அணி திபேந்திர சிங் ஐரீ 44 (29), ரோஹித் பெளடேல் 39 (34) ஆகியோரின் வேகமான ஓட்டங்களுடனும், லோகேஷ் பாம் ஆட்டமிழக்காமல் எடுத்த 39 (20) ஓட்டங்களுடனும் வெற்றி இலக்கை அண்மித்தாலும், இறுதி ஓவரில் சாம் கரனின் இறுக்கமான பந்து வீச்சால் வெற்றி இலக்கிற்கு 10 ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் 5 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து, இறுதியில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: இங்கிலாந்து அணி 4 ஓட்டங்களால் வெற்றியீட்டியது இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நேபாளம் அணி வெல்லும் எனக் கணித்த @ரசோதரன் க்கு புள்ளிகள் இல்லை.
2 weeks 6 days ago
நேபால் நல்ல அணி என்றத தொடர்ந்து நிறுபிக்கினம் அமெரிக்காவில் நடந்த உலக கோப்பையில் தென் ஆபிரிக்காவை வெல்ல அதிக வாய்ப்பு இருந்தது கடசி ஓவரில் தென் ஆபிரிக்கா வீரர் சிறப்பாக பந்து போட்டதால் 2ரன்ஸ் அல்லது மூன்று ரன்ஸ் வித்தியாசத்தில் தென் ஆபிரிக்கா அணி வெற்றி வளந்து வரும் அணிகளில் நேபால் அணியும் ஒன்று..........................
2 weeks 6 days ago
எவருடைய தூண்டுதலோ, பலவந்தமோ இன்றி தங்களது உள்ளத்து உந்துதலால் ஈழ விடுதலை நோக்கிப் போராடச் சென்றவர்கள்தான் பிரபாகரன் படைவீரர்கள். உண்மையான ஈழவிடுதலப் போராளிகள். இடையில், பிறருடைய வேண்டுதலில், சுயநல எதிர்பார்புடன் புகுந்தவர்களாலேதான் போராட்டம் மௌனிக்பட்டு மக்களும் பலியாக வேண்டிய நிலை அடைந்ததாக எண்ணவேண்டி உள்ளது. இடையில் புகுந்தவர்களால் எங்கள் குடும்பத்தவரும் ஒருவகையில் பாதிக்கப்பட்டார்கள். இது உண்மை. அனுபவம்.
2 weeks 6 days ago
மதிசா பத்திரானாவை சென்னை கலட்டி விட்ட மாதிரி இலங்கை அணி இவனை எப்ப கலட்டி விடுவினம்😁😛...............
2 weeks 6 days ago
யோகம் அடிக்கவில்லை............ ஞானம் தான் கிட்டியிருக்குது, கிருபன்................🤣. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு வழிகளில் நான் நேரே அவசரமாக ஞானத்துக்கே போய்விட்டேன்........................😜. கனவில் வந்த காட்சி, வெறும் கனவாகவே போய்விட்டது: 'இமயம் கண்டேன் இமயம் கண்டேன் பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின்................'
2 weeks 6 days ago
மைடியர் மீனா உன் ஐடியா என்ன ........! 😍
2 weeks 6 days ago
வணக்கம் வாத்தியார் . .........! இயேசப்பா இயேசப்பா பாசமுள்ள – Yesappa Yesappa Paasamulla இயேசப்பா இயேசப்பா பாசமுள்ள இயேசப்பா என்கிட்ட கொஞ்ச நேரம் பேசுங்கப்பா என்னோட மனசுல என்னென்னமோ இருக்குது எல்லாத்தையும் நீங்க கேளுங்கப்பா – (2) இயேசப்பா நீங்க வாங்கப்பா உங்க பாசத்த அள்ளி தாங்கப்பா – (2) 1. School-ல்ல friends-கூட Jolly-யாத் தான் இருக்கணும் ஆனாலும் Teacher தரும் பாடங்களை படிக்கணும் Friends ஓட சண்டை போட்டா சீக்கிரமே மறக்கணும் நல்லத மட்டும் தானே என் மனசு நினைக்கணும் மொத்தத்தில் என் மனசு முழுசும் உங்க Blessing -ஆல Jolly-யாத் தான் இருக்கணும் (2) எங்க கூட நீங்க இருக்க இன்னும் என்ன வேணும் இயேசப்பா உங்க கூட இருப்பது எங்களுக்கு சந்தோஷம் இயேசப்பா – இயேசப்பா இயேசப்பா 2. வீட்டில Daddy Mummy சந்தோஷமா இருக்கணும் அன்போட பேசி ரொம்ப பாசத்தோட சிரிக்கணும் உம்மோட உயிருள்ள வார்த்தைகள படிக்கணும் பண்போட நீங்க காட்டும் பாதையில நடக்கணும் மொத்தத்தில் எங்க வீடு முழுசும் உங்க Blessing-ஆல சந்தோஷமா இருக்கணும் (2) எங்க கூட நீங்க இருக்க இன்னும் என்ன வேணும் இயேசப்பா உங்க கூட இருப்பது எங்களுக்கு சந்தோஷம் இயேசப்பா ...........! --- இயேசப்பா இயேசப்பா---
2 weeks 6 days ago
2 weeks 6 days ago
அப்ப என்ன, இங்கிலாந்து பாகிஸ்தான் இலங்கை..... மூவரில் யார் முதலில் தோற்பது என்பதுதான் போட்டியோ. ஏதோ ஒரு சிறிய அணி அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
2 weeks 6 days ago
4 ரன்னில் என் கணிப்பு தவறியுள்ளது😂
2 weeks 6 days ago
மாய்மாலத்துக்கு பதில் சொல்லமுடியாதுதான்…. ஆனால்… உங்களுக்கு பதில் எழுதும் எல்லாமும் தனிப்பட்டு உங்களை பற்றியதாக இருக்க தேவை இல்லை. அப்படி தனிப்பட்டு உங்களை பற்றி எழுத விரும்பின் நான் பூடகமாக எழுதவும் மாட்டேன்😂.
2 weeks 6 days ago
பொறுங்கோ....பொறுங்கோ பார்ப்பம் ...ஒரு ஓவ்ரிலை 11 பந்துவீசி 19 ரன் கொடுத்து ..2 விக்கட் எடுத்து விட்டினம் ..கைப்பிடிகள் விடாவிட்டால் ...எப்பவோ திண்ணை காலி ...பிக்குமார் கட்டினநூல் வேலை செய்யத்தானே வேண்டும் ..புள்ளிக்கு பயப்படுமாப்போல் இருக்கு ..எனக்கும் அதேதான் ...கடவுள் இருக்கிறான் ..குமாரு
2 weeks 6 days ago
பஞ்சமா தந்திரங்கள்? - நிலாந்தன் கட்சிக்குள் சிறீதரனை மதிப்பிறக்கம் செய்வதில் சுமந்திரன் தொடர்ந்து முன்னேறி வருகிறார். முக்கால் நூற்றாண்டு கால வயதைக் கொண்ட கட்சிக்குள் முதன்முதலாக தலைவருக்காக நடந்த ஒரு தேர்தலில் தெரிவு செய்யப்பட்டவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தலைமைப் பொறுப்பை ஏற்க விடாமல் தடுக்கப்பட்டு வருகிறார். இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியான தந்திரமான புத்திசாலித்தனமான நகர்வுகளின் ஊடாக ஓரங்கட்டப்பட்டு வருகிறார். சிறீதரனை கட்சிக்குள் சுற்றிவளைக்கும் வேலையை கடந்த இரண்டு ஆண்டுகளாக சுமந்திரன் அணி செய்து வருகிறது. சிறீதரன் எவ்வாறு கட்சிக்குள் ஓரங்கட்டப்படுகிறார்? 75 ஆண்டு கால வயதை கொண்ட கட்சிக்குள் முதன்முதலாக நடந்த தலைவர் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டவர் செயற்பட முடியாதபடி வழக்குப் போடப்பட்டது. அடுத்ததாக கட்சிக்குள் தீர்மானம் எடுக்கும் பொறுப்புகளில் அவருக்கு எதிரானவர்கள் அல்லது அவருடைய எதிர் அணியின் பக்கம் சாயக்கூடியவர்கள் படிப்படியாக நகர்த்தப்பட்டார்கள். இதன்மூலம் கட்சித் தீர்மானங்கள் சிறீதரனை ஓரங்கட்டும் விதத்தில் அமைவது உறுதி செய்யப்பட்டது. அவ்வாறு பொறுப்பான பதவிகளை சிறீதரனின் எதிரணி கையில் எடுத்ததன்மூலம் கட்சியின் அடிமட்டக் கட்டமைப்பை படிப்படியாக சிறீதரனுக்கு எதிரானதாக வடிவமைக்கும் வேலைகள் தொடங்கின. அடுத்ததாக சிறீதரனின் சொத்துக்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள். அவர் மதுச் சாலை அனுமதி பெற்றுக் கொடுத்ததாகக் குற்றச்சாட்டுக்கள். இது தொடர்பான முறைப்பாடுகளைச் செய்வதற்கு தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவர் பயன்படுத்தப்படடார். அதேசமயம் கட்சித் தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் தோற்ற காரணத்தால் மீடியா வெளிச்சத்தில் இருந்து ஒதுக்கப்பட்டிருந்த சுமந்திரன், கட்சிக்குள் பொறுப்பான பதவியைப் பெற்றதன்மூலம் மீண்டும் ஊடகங்களுக்கு முன் அடிக்கடி தோன்றும் வாய்ப்புகள் அதிகரித்தன. யார் தூதரகங்களை நெருங்கிச் செல்வது, குறிப்பாக யார் இந்தியாவின் இதயத்தில் இடம் பிடிப்பது என்பதிலும் போட்டி. அரசியலமைப்புப் பேரவையில் சிறீதரன் அரசாங்கத்திற்கு ஆதரவாக 8 தடவைகள் வாக்களித்துள்ளார் என்ற குற்றச்சாட்டை கட்சிக்கு உள்ளேயும் கட்சிக்கு வெளியே பகிரங்கமாகவும் திரும்பத்திரும்ப கூறுவதன் மூலம் கட்சிக்குள் மட்டுமல்ல சமூகத்துக்குள்ளும் அவரை மதிப்பிறக்கம் செய்ய முயற்சிக்கப்பட்டது. அதைவிட முக்கியமாக அவருடைய தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கேள்விக்கு உள்ளாக்க முயற்சிக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டின் இறுதி விளைவாகத்தான் இப்பொழுது கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியில் கை வைக்கப்பட்டிருக்கிறது. சிறீதரன் கட்சிக்குள் மட்டும் சுற்றிவழிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்திலும் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினராகிய தயாசிறீ கட்சியின் உள் மோதல்களைப் பிரதிபலித்தார். தமிழ் மக்கள் மத்தியில் உள்ள நீண்ட பாரம்பரியத்தை கொண்ட மூத்த கட்சி ஒன்றுக்குள் ஏற்பட்ட உள் முரண்பாட்டை ஒரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாகப் பேச வைத்தமை என்பது தமிழ்த் தேசிய வரலாற்றில் இதுதான் முதல் தடவை. இவை தவிர சிறீதரனின் அணிக்குள் இருப்பவர்கள் கழட்டி எடுக்கப்படுகிறார்கள். அவர்கள் ஊடகச் சந்திப்புகளை நடத்தி சிறீதரனை அவமானப்படுத்துகிறார்கள். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்யும் உள்நாட்டு அலுவலர் என்னிடம் கேட்டார், “ஹை புரொபைலில்” இருப்பவர்கள்கூட சிறீதரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைப் பிரதிபலிப்பதாகத் தெரிகிறது. ஏன் இப்படி” என்று. சிறீதரனுக்கு எதிரான பிரசார அணிக்குள் பிரபலமானவர்கள் லோயர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், சமூகத்தில் நல்ல பொறுப்புகளை வகிப்பவர்கள், சமூகத்தில் மதிப்புக் கெட்டவர்கள், தாயகத்தில் இருப்பவர்கள், புலம்பெயர்ந்து வாழ்பவர்கள்…. என்று ஒரு பெரிய அணி இறக்கப்பட்டுள்ளது. மெய்யான முகநூல் கணக்குகள், பொய்யான முகநூல் கணக்குகள் என்று சமூக வலைத்தளங்களில் இரண்டு அணிகளும் பணம் செலுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றன என்ற பொதுவான அவதானிப்பு உண்டு. கடந்த இரண்டு ஆண்டுகளாக இவ்வாறு சிறீதரனுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. சிறீதரனுக்கு எதிராக மிக நுட்பமான, மிகப் புத்திசாலித்தனமான, மிகத் தந்திரமான, சதி சூழ்ச்சிகள் நிறைந்த ஒரு வியூகம் வகுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் ஓர் உட்கட்சி முரண்பாட்டைக் கையாள்வதற்கு இவ்வளவு தந்திரமும் இவ்வளவு புத்திசாலித்தனமும் இதற்கு முன் பிரயோகிக்கப்பட்டதில்லை. இதேயளவு தந்திரத்தை, புத்திசாலித்தனத்தை சிங்கள பௌத்த அரசு கட்டமைப்புக்கு எதிராகவும் ஏன் பயன்படுத்த முடியவில்லை? இதேயளவு தந்திரத்தை, ராஜதந்திரத்தை, புத்திசாலித்தனமான கணிதபூர்வமான நகர்வுகளை ஏன் வெளிநாடுகள், ,பேரரசுகளுடனான அணுகுமுறைகளில் கைக்கொள்ள முடியவில்லை? தமிழ்ச் சமூகத்தில் சாதாரணமாக குடும்பத்துக்குள்ளேயே கணவன், மனைவிக்கும்-தாய்க்கும் இடையே சுழித்தோட முயற்சிப்பான். சிலசமயம் சகோதரர்களே ஒருவர் மற்றவரைச் சுழித்துக் கொண்டு ஓடுவதுண்டு. சமூகத்தின் மிகச்சிறிய அலகாகிய குடும்பத்துக்குள் இவ்வாறு மைக்ரோ தந்திரத்தை முன்னெடுக்கும் ஒரு சமூகமானது, தனது வெளியுறவுகளில் குறிப்பாக வெளிநாடுகளை அணுகும் விடயத்தில் ஏன் அவ்வாறு ராஜதந்திரமாக நடந்து கொள்வதில்லை? தமிழ் மக்கள் அதிகமாகப் பார்க்கும் திரைத் தொடர்களில் பெரும்பாலானவை பெண் மைய திரை நாடகங்களே. இதில் வரும் நாயகிகள் செய்யும் தந்திரம் சில சமயம் அரசியல்வாதிகள் செய்யும் தந்திரத்தை விடவும் கணிதபூர்வமானதாக இருக்கும். நமது வீடுகளில் அதிகம் பார்க்கப்படுவது இந்த தந்திர நாடகங்கள்தான். ஏற்கனவே நமது சிறுவர் கதைப் புத்தகங்களில் பஞ்ச தந்திரம் என்ற கதைத் தொகுதி உண்டு. பஞ்சதந்திரத்தில் தொடங்கி தொலைத் தொடர் தந்திரங்கள் வரையிலும் தந்திரங்களை வாசிக்கின்ற, பார்க்கின்ற ஒரு சமூகம், வீட்டுக்குள் குடும்பத் தந்திரத்தை வெற்றிகரமாகப் பயிலும் ஒரு சமூகம்,சமூகத்தின் சிறிய நிறுவனங்களாகிய சனசமூக நிலையங்கள், ஆலய அறங்காவல் சபைகள், திருச்சபைகள், பழைய மாணவர் சங்கங்கள், பாடசாலைகள் அலுவலகங்களில் “ஸ்டாஃப் ரூம்கள்” போன்ற பெரும்பாலான நிறுவனங்களுக்குள் வெற்றிகரமாக அணிகளை உருவாக்கி தந்திரம் செய்யும் ஒரு சமூகம், ஏன் அரசியல் அரங்கில் மட்டும் வெளிநாடுகளோடும் வல்லரசுகளோடும் தந்திரமாக புத்திசாலித்தனமாக நடக்க முடியவில்லை? தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய சிந்தனையாளரும் ஆன்மீகவாதியும் படைப்பாளியும் ஆகிய மு.தளையசிங்கம் கூறுவார் “சத்திய தந்திரம்” என்று. மகாபாரதத்தில் கிருஷ்ணரின் தந்திரங்கள் இல்லையென்றால் பாண்டவர்கள் வென்றிருக்கவே முடியாது. மகா பாரதத்தை அத்தகைய அர்த்தத்த்தில் சொன்னால் அது கிருஷ்ண தந்திரந்தான். எனவே சத்தியத்துக்காகப் போராடுகிறவர்கள் தந்திரம் பயில வேண்டும் என்ற பொருளில் தளையசிங்கம் அதை சத்திய தந்திரம் என்று அழைத்தார். ஆனால், தமிழ்ச் சமூகத்தின் பஞ்ச மகாதந்திரங்கள் சொந்தச் சமூகத்துக்குள்ளேயே, சொந்தக் குடும்பத்துக்குள்ளையே, ஒரே பாடசாலைக்குள்ளேயே, ஒரே ஸ்டாஃப் ரூமுளுக்குள்ளேயே, ஒரே அறக்கட்டளைகளுக்குள்ளேயே, ஒரே திருச்சபைகளுக்குள்ளேயே, ஒரே கட்சிக்குள்ளேயே மட்டும் தானா? வெளி உலகத்தோடு இல்லையா? https://www.nillanthan.com/8113/
2 weeks 6 days ago
கமிந்து குசால் சேர்ந்து 150க்கு மேல அடிச்சாச்சு. இது காணும் என்று நினைக்கிறன்.
2 weeks 6 days ago
இலங்கை அணியும் மூன்று சுழல் பந்து வீரர்களுடன் வந்து இருக்கினம்...............இலங்கை அயர்லாந்த சிம்பிலா வென்று விடுவினம்...................
Checked
Sat, 02/28/2026 - 20:08
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed