புதிய பதிவுகள்2

காணாமல்போனர் விவகாரம்; விசேட குழுக்களை நியமிக்க அனுமதி!

3 weeks 5 days ago
காணாமல்போனர் விவகாரம்; விசேட குழுக்களை நியமிக்க அனுமதி! காணாமல்போன ஆட்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை நடத்துவதற்காக தகைமையுடன் கூடிய நபர்களை உள்ளடக்கிய குழுக்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தாபிக்கப்ப்பட்டுள்ளது. காணாமல் போன மற்றும் காணக்கிடைக்காமை ஆட்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுடைய உறவுகளுக்கு அறிக்கைகளை வழங்குதல் இவ் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுவரை குறித்த அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 16,966 முறைப்பாடுகளில் விசாரணைகளுக்காக மேலும் 10,517 முறைப்பாடுகள் காணப்படுகின்றன. அதற்கமைய இன்னலுற்றவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் விசாரணை மற்றும் குறித்த கடமைகளை நிறைவேற்றுவதற்கான விசேட கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கும், குறித்த பணிகளுக்காகவும் ஓய்வுநிலை நீதிபதிகள், சிரேஷ்ட நிர்வாக அலுவலர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட தகைமையுடன் கூடிய நபர்கள் 75 பேருடன் கூடிய உப பணிக்குழு 25 குழுக்களை நியமிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://athavannews.com/2025/1446035

வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை!

3 weeks 5 days ago
வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை! வடக்கில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டம் நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு, வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஆகியன இணைந்து இச் செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் ஏற்கனவே ஆராயப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அந்தவகையில் பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யுத் இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு தொடரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப செயற்றிட்டம் நெடுந்தீவில் இடம்பெறவுள்ளதுடன் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நகரங்களில் இதன் ஆரம்ப செயற்றிட்டத்தை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446002

'தெருநாய் மட்டுமல்ல, வளர்ப்பு நாய்களாலும் பிரச்னைதான்' - தவறு எங்கே நடக்கிறது?

3 weeks 5 days ago
வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை! வடக்கில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டம் நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு, வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஆகியன இணைந்து இச் செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் ஏற்கனவே ஆராயப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அந்தவகையில் பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யுத் இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு தொடரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப செயற்றிட்டம் நெடுந்தீவில் இடம்பெறவுள்ளதுடன் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நகரங்களில் இதன் ஆரம்ப செயற்றிட்டத்தை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446002

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை - மஹாபாரத கதைகளின் தொகுப்பு

3 weeks 5 days ago
மணலில் கட்டப்பட்ட பாலம் ஆங்கில மூலம் : யமுனா ஹர்ஷவர்தன் தமிழாக்கம் : கார்த்திக் பாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் லோமேஸர் என்ற முனிவர் அவர்களுடன் வழிகாட்டி சென்றார் . ஒருமுறை , கங்கைக் கரையில் அமைந்திருந்த ஒரு ஆசிரமத்திற்கு அவர்களை அழைத்து சென்று அந்த இடத்தின் முக்கியத்துவத்தை விவரிக்கத் துவங்கினார் . அந்த இடமானது , பரத்வாஜ முனிவரின் மகனான யவக்ரீதா தன் அழிவை தேடிக்கொண்ட இடமாகும் . அந்த இடமானது பரத்வாஜ முனிவரின் நண்பரான ரைபயா என்ற முனிவரின் ஆசிரமம் . அங்கே ரைபயாவும் அவரது மகன்களான பரவஸு மற்றும் அர்வவஸு வேதங்களைக் கற்றுணர்ந்து மிகவும் புகழுடன் வாழ்ந்த வந்தனர் . பரத்வாஜ முனிவரோ இந்த உலக சுகதுக்கங்களை விடுத்து இறைவனுடன் கலப்பது பற்றியே சிந்தனையாக இருந்தார் . ரைபயா மற்றும் அவரது மகன்களுக்கு கிடைத்த புகழை கண்டு பொறாமைக் கொண்டான் யவக்ரீதா. தானும் அது போன்ற புகழைப் பெற வேண்டி இந்திரனை நோக்கி கடுமையான தவத்தை மேற்கொண்டான் . அவனது கடுமையான தவத்தைக் கண்டு மனமிரங்கிய இந்திரனும் அவன் முன் தோன்றி எதற்கு இத்தகைய தவம் இயற்றுகிறாய் என கேட்டான். அதற்கு யவக்ரீதா “இந்திரனே ! இந்த உலகில் உள்ள வேதங்களை எல்லாம் கற்றுணர்ந்தவன் ஆக விரும்புகிறேன் . ஆனால், ஒரு குருவிடம் சென்று இவற்றை கற்க நான் விரும்பவில்லை . எனவே, எனக்கு அந்த வேதங்களின் அறிவை கொடுப்பாயாக” எனக் கேட்டான் . அதைக் கேட்ட இந்திரனோ “வேதங்களை அறிய அவற்றை கற்பதே ஒரே வழி . எனவே , இந்த தவத்தை விடுத்து ஒரு குருவிடம் சென்று அவற்றைக் கற்றுக்கொள்” எனக் கூறி மறைந்தான் . ஆனால் , தன் முயற்சியை கைவிட விரும்பாத யவக்ரீதா, மீண்டும் முன்னை விட கடுமையான தவத்தை மேற்கொள்ள துவங்கினான். இம்முறையும் இந்திரனிடம் மீண்டும் அதே வரத்தை கேட்க , இந்திரனும் முன்பு சொன்ன அதே பதிலைக் கூறினான் . பின் ஒரு நாள் காலையில் யவக்ரீதா குளிக்க ஆற்றங்கரைக்கு சென்றான். அங்கே ஒரு முதியவர் கரையில் இருந்த மணலை எடுத்து ஆற்றில் போட்டுக் கொண்டிருந்தார் . அவர் என்ன செய்கிறார் என புரியாத யவக்ரீதா அவரிடம் வினவினான் . அதற்கு அந்த முதியவர் “ஆற்றில் இந்த மணலைப் போடுவதன் மூலம் , இக்கரையில் இருந்து அக்கரை செல்ல பாலம் எழுப்புகிறேன்” என பதில் உரைத்தார் . அதைக் கேட்ட யவக்ரீதா சிரித்துக் கொண்டே “கையில் மணல் எடுத்து பாலம் கட்டப் போகிறாயா? உனக்கு இது முட்டாள்தனமாக தெரியவில்லையா? ” என கேலியாக கேட்டான். “வேதங்களை கற்காமலேயே அந்த அறிவு வேண்டும் என நினைப்பதை விடவா இது முட்டாள்தனம்?” என திருப்பிக் கேட்டார் முதியவர். அந்த முதியவர் வேறு யாருமில்லை . இந்திரன்தான் முதியவரின் வடிவில் யவக்ரீதாவிற்கு பாடம் புகுத்த வந்திருந்தான். தன் தவறை உணர்ந்த யவக்ரீதா, இந்திரனின் காலில் விழுந்து “நான் நன்கு கற்றறிந்தவன் ஆக ஆசிர்வதிப்பீர்களாக” என கேட்டான். இந்திரனும் அவனது மனமாற்றத்தால் மகிழ்ந்து “நீ வேதங்களை நன்கு கற்றறிந்து புகழுடன் வாழ்வாயாக” என ஆசிர்வதித்தார். அழிவை உண்டாக்கிய தற்பெருமை யவக்ரீதாவின் கதையை லோமேஸர் தொடர்ந்து சொல்லலானார் . இந்திரனிடம் ஆசி பெற்ற யவக்ரீதா மெல்ல மெல்ல வேதங்களைக் கற்று தேர்ந்தான். இந்திரனின் ஆசியால்தான் தான் தனக்கு வேதங்களின் அறிவு கிட்டியதாக எண்ணி கர்வமடைந்தான். தனது மகன் செல்லும் பாதையை தன் ஞான திருஷ்டியால் உணர்ந்த பரத்வாஜர் அவனை அழைத்து அவனை எச்சரித்தார். ரிஷி ரைபயாவையும் அவரது மகன்களையும் குறைத்து எடை போடுவது அவனது அழிவுக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறியது அவனது மனதில் பதியவே இல்லை . ஒரு நாள் காலையில் , பரவஸுவின் அழகிய இளம் மனைவி , ரைபயாவின் ஆசிரமத்திற்கு அருகே நடந்துக் கொண்டிருந்தாள். அவளைக் கண்டவுடன், தனது உணர்வுகளையும் மனதையும் அடக்க முடியாத யவக்ரீதா, மிருகமாய் மாறினான். தனிமையான இடத்திற்கு அவளை இழுத்து சென்று அவளை மானபங்கப்படுத்தினான். ஆசிரமத்திற்கு திரும்பி வந்த ரிஷி ரைபயா, அங்கே தனது மருமகள் அலங்கோலமாய் அழுது கொண்டிருப்பதைக் கண்டு அவளிடம் விசாரிக்கத் துவங்கினார். அவள் நடந்ததை சொல்ல, அதைக் கேட்ட ரிஷி ரைபயா மிகவும் ஆத்திரம் கொண்டார். தனது ஜடாமுடியில் இருந்து இரு முடிகளை பிடுங்கி மந்திரம் ஜெபித்து அங்கே இருந்த அக்னியில் வீசினார். அந்த அக்னியில் இருந்து அழகிய பெண் ஒருத்தியும் , கோர உருவம் கொண்ட அரக்கியும் உருவானார்கள். யவக்ரீதாவை கொல்ல அவர்களுக்கு உத்தரவிட்டார் ரைபயா. யவக்ரீதா காலை நேர கடன்களை கழித்துக் கொண்டிருக்கையில் , அவனை நோக்கி வந்த அந்த அழகிய பெண் அவனை மயக்கி அவன் தண்ணீர் வைத்திருந்த கமண்டலத்தை அவனிடமிருந்து பறித்து சென்றது. இப்பொழுது அந்த அரக்கி தன் ஈட்டியால் யவக்ரீதாவை கொல்ல வந்தது. யவக்ரீதா மந்திரங்கள் மூலம் அந்த அரக்கியை விரட்ட இயலும் என்றாலும், அதற்கு முன் அவன் தன்னை நீரால் சுத்திகரித்துக் கொள்ளவேண்டும். அவனின் கமண்டலம் பறிபோனதால், அருகில் இருந்த குளத்தை நோக்கி ஓடினான். ஆனால்,அவன் அதனருகே சென்றவுடன் அந்த குளம் வறண்டுவிட்டது. பின், அருகில் இருந்த ஓடையை நோக்கி ஓட அதுவும் அவன் அங்கே சென்றவுடன் காய்ந்து போனது. தன் உயிரை காத்துக் கொள்ள, அவனது தந்தை பரத்வாஜர் தவம் புரிந்துக் கொண்ட குடிலை நோக்கி ஓடினான். ஒவ்வொரு இடமாய் ஓடியவனின் சிகை அவிழ்ந்து முகம் வியர்த்து அடையாளம் தெரியாமல் மாறி இருந்தான். பாரத்வாஜரின் குடிலை காத்து நின்ற வயதான காவலாளிக்கு யவக்ரீதாவின் இந்த கோலம் அடையாளம் தெரியவில்லை. யாரோ பாரத்வாஜரின் தவத்தை கெடுக்க வருவதாக எண்ணி அவனை தடுத்து நிறுத்த அவன் பின்னாலேயே வந்த அந்த அரக்கி , தன் ஈட்டியால் யவக்ரீதாவை கொன்றது. https://solvanam.com/2025/02/23/மணலில்-கட்டப்பட்ட-பாலம்/

அரசுக்கு சொந்தமான 33 நிறுவனங்களை மூடுவதற்கு அனுமதி!

3 weeks 5 days ago
அரசுக்கு சொந்தமான 33 நிறுவனங்களை மூடுவதற்கு அனுமதி! தற்போது தொழிற்பாட்டு நிலையில் இல்லாத 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை முறையாக மூடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் அரசாங்கத்தின் மறுசீரமைப்பு முயற்சியின் இரண்டு கட்டங்களின் கீழ் மூடப்பட உள்ளன. பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கல் மற்றும் மூலோபாய ரீதியான பொருளாதார செயற்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்காக, குறித்த காலத்திற்கு முன்னர் தாபிக்கப்பட்டுள்ள ஒருசில அரச தொழில் முயற்சிகள் தாபிக்கப்பட்டதன் நோக்கங்கள் சமகாலத்துடன் ஏற்புடையதாக இன்மை மற்றும் சந்தைத் தேவைகளுடன் பொருந்தாமை போன்ற காரணங்களால் தொடர்ந்தும் பேணிச் செல்வதற்குவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது, குறைவான நிதிச் செயலாற்றுகை போன்ற காரணங்களால் செயலிழந்து காணப்படுகின்றன. தேசிய பொருளாதாரத்திற்கு அல்லது அரச சேவைகளை வழங்குவதற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குகின்ற நியதிச்சட்ட நிறுவனங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான கம்பனிகள் போன்ற பல்வேறு வகைகளுக்குரிய அரச தொழில் முயற்சிகள் அரசுக்கு செலவுச் சுமையாக தொடர்ந்தும் மேற்கொண்டு செல்வதற்குப் பதிலாக, குறித்த நிறுவனத்தைக் குலைத்து முடிவுறுத்துவது பொருத்தமென அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, குறித்த அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள விசேட குலைத்தல் பிரிவின் மேற்பார்வையின் கீழ் தற்போது தொழிற்பாட்டு நிலையில் இல்லாத 33 அரச தொழில் முயற்சிகளை 02 கட்டங்களாக முறையாக குறைத்து முடிவுறுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://athavannews.com/2025/1446031

கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்காவிடின் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரியும் – சீமான் கடும் எச்சரிக்கை

3 weeks 5 days ago
அப்பாடா கச்சதீவு பிரச்சனையால தமிழருக்கு ஒரு நாடு கிடைத்தால் மகிழ்ச்சி!!! தமிழ்நாட்டின் கடல் வளத்தை சூறையாடி முடித்த பெருமுதலாளிகள் வடக்கு மீன்வளத்தை சூறையாட முயன்றுகொண்டு, ஏதோ கச்சதீவுக்குள் தான் தமிழ்நாட்டு மீன்கள் ஒழித்திருப்பது போலவும் அதனையே பிடிக்க முயல்வது போலவும் ஏமாற்றலாமா?! எந்த ஒரு அரசியல்வாதியாவது தடைசெய்யப்பட்ட கடல் வளத்தை அழிக்கும் மீன்பிடி முறைகளை கைவிடச் சொல்லி பெருமுதலாளிகளுக்கும் மீனவர்களுக்கும் அழுத்திக் கூறுவார்களா?!

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 150 ஆண்டுகள் வாழலாம் ; புதின் – ஷி ஜின்பிங் பேசிக்கொண்ட உரையாடல் கசிவு

3 weeks 5 days ago
எனக்கே விசர் பிடிக்குது ராசா. எத்தனை ஏழை எளிய மக்களின் உறுப்புகளை இந்த அரக்க அரசியல்வாதிகள் புடுங்க போகிறார்களோ????

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பெல்ஜியம் முடிவு!

3 weeks 5 days ago
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பெல்ஜியம் முடிவு! பெல்ஜியம் அரசு பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா மீதான இஸ்ரேல் போரில், தற்போது வரை 60,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதல்களை,இனப்படுகொலை எனக் குறிப்பிட்டு ஏராளமான நாடுகளின் அரசுகள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே,140-க்கும் அதிகமான சர்வதேச நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ள நிலையில், அப் பட்டியலில் தற்போது பெல்ஜியமும் இணைவதாக, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மாக்ஸிமே ப்ரேவோட் அறிவித்துள்ளார். பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது குறித்த பெல்ஜியமின் திட்டங்கள், வரும் செப்.9 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இருப்பினும், காஸாவில் உள்ள அனைத்து இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டு, பாலஸ்தீன கடலோரப் பகுதிகளில் அரசியல் அதிகாரத்தில் இருந்து ஹமாஸ் கிளர்ச்சிப்படை நீக்கப்பட வேண்டுமெனவும் இரண்டு நிபந்தனைகளை பெல்ஜியம் அரசு முன்வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் அரசால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் உள்ள இஸ்ரேலிய குடியிருப்புகளில் இருந்து வரும் பொருள்களைத் தடை செய்யவும், ஹமாஸ் தலைவர்கள், வன்முறைக் குடியேறிகள் மற்றும் 2 தீவிர வலதுசாரி இஸ்ரேலிய அமைச்சர்கள் ஆகியோர் மீதும் தடைகளை விதிக்கவும் பெல்ஜியம் அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதில், தீவிர வலதுசாரி ஆதரவாளர்களான இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இட்டாமர் பென் குவிர் மற்றும் நிதியமைச்சர் பெசாலெல் ஸ்மோட்ரிச் ஆகியோர் மீது தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காஸாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களும், ஆக்கிரமிப்பும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டு,நிரந்தர போர்நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை என்றால்,பாலஸ்தீனம் தனிநாடாக அங்கீகரிக்கப்படும் என பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட ஏராளமான நாடுகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445915

பி.எச்.டேனியல் (தமிழில்: இரா. முருகவேள்) எழுதிய *எரியும் பனிக்காடு (Red Tea)* – நூல் அறிமுகம்

3 weeks 5 days ago
அண்ணை, சோழியன் அண்ணாவின் பெயர் இராஜன் முருகவேல். இந்ந எழுத்தாளர் விபரம் கீழே இரா. முருகவேள் ஒரு தேர்ந்த தமிழ் எழுத்தாளர், இடதுசாரி அரசியல் மற்றும் சமூக செயல்பாட்டாளர் ஆவார். அவர் கோவையில் வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார், மேலும் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் குறித்து எழுதுகிறார். 'மிளிர்கல்', 'முகிலினி', 'செம்புலம்', 'எரியும் பனிக்காடு', 'நீலத்தங்கம்' போன்ற அவரது படைப்புகள் பல கவனத்தைப் பெற்றுள்ளன. பணிகள் வழக்கறிஞர்: கோவையில் வழக்கறிஞராக பணியாற்றுகிறார். எழுத்தாளர்: நாவல்கள் மற்றும் கட்டுரைகள் எழுதுகிறார். சமூக செயல்பாட்டாளர்: இடதுசாரி அரசியல் மற்றும் சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். சுற்றுச்சூழல் குறித்த எழுத்தாளர்: சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார். இணையத்தில் அவரது படைப்புகளைப் பெறுதல் Panuval.com மற்றும் CommonFolks.in போன்ற இணையதளங்களில் அவரது நூல்களை வாங்கலாம். Amazon.in போன்ற தளங்களிலும் அவரது நூல்கள் கிடைக்கின்றன. Goodreads தளத்தில் அவரது நூல்களின் வாசகர் விமர்சனங்களையும் காணலாம்.

'தெருநாய் மட்டுமல்ல, வளர்ப்பு நாய்களாலும் பிரச்னைதான்' - தவறு எங்கே நடக்கிறது?

3 weeks 5 days ago
தெரு நாய் சர்ச்சை : தீர்வு ரொம்ப சிம்பிள்.. கழுதையை பற்றி கவலைப்பட்டார்களா? – கமல்ஹாசன் விளாசல்! 3 Sep 2025, 2:34 PM தெரு நாய்கள் கடிப்பதால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தெரு நாய்களுக்கு ஆதரவாக ஒரு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். தெரு நாய்கள் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை அம்மு, நடிகர் படவா கோபி உள்ளிட்டோர் மீது சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (செப்டம்பர்-3) காலை சென்னை விமான நிலையத்தில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தெரு நாய்கள் சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த கமல், ” தீர்வு ரொம்ப சிம்பிள். விஷயம் தெரிந்தவர்கள், உலக சரித்திரம் தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் என்ன என்று தெரிந்தவர்கள் கழுதையை எங்க காணோம் என்று யாராவது கவலைப்படுகிறார்களா.. கழுதை எல்லாம் காணாமல் போய்விட்டதே.. நமக்காக எவ்வளவு பொதி சுமந்துள்ளது. அதை நாம் இப்போது பார்ப்பதே இல்லையே..கழுதையை காப்பாற்ற வேண்டும் என்று யாராவது பேசுகிறார்களா.. எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டும். எவ்வளவு முடியுமோ, அவ்வளவு காப்பாற்ற வேண்டும்.. அவ்வளவுதான் எனது கருத்து” என தெரிவித்துள்ளார். https://minnambalam.com/kamal-response-on-the-stray-dog-controversy/

புலமைப்பரிசில் பரீட்சை - அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த லக்சயன்!

3 weeks 5 days ago
புலமைப்பரிசில் பரீட்சை - அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த லக்சயன்! 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன், தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் 194 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளான். 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (04) அதிகாலை வௌியிடப்பட்டன. இந்தப் பரீட்சை கடந்த ஓகஸ்ட் 10 ஆம் திகதி நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. மொத்தம் 307,951 பரீட்சார்த்திகள் இதற்குத் தோற்றியிருந்தனர். மாணவன் ஆனந்தசோதி லக்சயனின் இந்தச் சாதனையின் மூலம், தனது பாடசாலைக்கும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் லதாநந்தினி சிவபாதம் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmf4xo9k0007xo29nktu6dqqe புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்று ஷனுதி அமாயா சாதனை 2025 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, காலி அம்பலாங்கொடை ஸ்ரீ தேவாநந்த பாடசாலை மாணவி ஷனுதி அமாயா அஸ்வினி, சிங்கள மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் 198 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதேவேளை, யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன், தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் 194 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (04) அதிகாலை வௌியிடப்பட்டன. இந்தப் பரீட்சை கடந்த ஓகஸ்ட் 10 ஆம் திகதி நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. மொத்தம் 307,951 பரீட்சார்த்திகள் இதில் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmf4xy9xm007dqplp73s06m6e

சிறிதரன் எம்.பியின் கருத்து:முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் இல்லையா?

3 weeks 5 days ago
சிறிதரன் எம்.பியின் கருத்து:முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் இல்லையா? மொஹமட் பாதுஷா இலங்கையில் உண்மையிலேயே எத்தனை தேசிய இனங்கள் வாழ்கின்றன? முஸ்லிம்களும்; மலையக மக்களும் தனித்தனியான தேசிய இனங்கள் இல்லையா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையைத் தொடர்ந்தே இந்த கேள்விக்கான விடையைத் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சபையில் உரையாற்றிய சிறிதரன் எம்.பி. ‘சபாநாயகர் அவர்களே, இந்த நாட்டில் இரு தேசிய இனங்கள் உள்ளன. ஒன்று தமிழ் பேசும் மக்கள் தமிழ்த் தேசிய இனம் மற்றையது சிங்கள தேசிய தினம் ஆகியவையாகும்’ என்று கூறி, தொடர்ச்சியாக உரையாற்றினார். பெருந்தேசிய அரசியலில் தற்போதைய ஜனாதிபதியான அனுரகுமார திசாநாயக்க ஒரு எம்.பியாக எவ்வாறு கனகச்சிதமாக உரையாற்றினாரோ, அவ்வாறு உரையாற்றுகின்ற ஒரு தமிழ் அரசியல்வாதியாகவே சிறிதரன் எம்.பியைச் சொல்ல முடியும். இவர் உரையாற்றுகின்ற பாணிக்கு முஸ்லிம் சமூகத்திடையேயும் ஒரு வரவேற்பிருந்தது எனலாம். இலங்கையில் சிங்கள மக்கள், தமிழ் மக்கள் மட்டுமன்றி, முஸ்லிம் மக்களும் மலையக மக்களும் கூட தனியான தேசிய இனங்களாக வாழ்கின்றனர். ஏன்? கத்தோலிக்க மக்களும், பூர்வீகக் குடியைச் சேர்ந்த (வேடுவ) மக்களும் தங்களைத் தேசிய இனங்களாக முன்னிறுத்த முடியும் என்பதுதான் யதார்த்தமாகும். இதுவெல்லாம் தெரியாத ஒரு அரசியல்வாதி என சிறிதரனை குறிப்பிட முடியாது. அத்துடன், அவர் தவறுதலாக உரையாற்றியதாகக் குறிப்பிடவும் முடியாது. அப்படிச் செய்திருந்தால் அந்த 20 நிமிட உரையில் எங்காவது ஒரு இடத்தில் அவர் அதனைத் திருத்தியிருப்பார் அல்லது வெளியில் வந்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பார். எனவே, அவர் இதனைத் தெளிவாக, திட்டமிட்டே உரையாற்றியிருக்கின்றார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சிறிதரனுக்குப் பிறகு பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் எம்.பிக்களும் இவ்விடயத்தைச் சரிப்படுத்தவோ சமாளிக்கவோ முற்படவில்லை என்பது இங்கு கவனிப்பிற்குரியது. இந்த நாட்டில் இரண்டு தேசிய இனங்கள் மட்டும்தான் வாழ்கின்றன என்ற தொனியில் உரையாற்றியதன் மூலம், அபத்தமானதும் பிற்போக்குத்தனமானதுமான கருத்தொன்றை மேற்படி தமிழ் எம்.பி. முன்வைத்திருக்கின்றார். இப்படியொரு கருத்தை சிறிதரன் போன்றவர்களிடமிருந்து முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கவில்லை. வரைவிலக்கண அடிப்படையில் நோக்கினால், இனம் என்பது வேறு, தேசிய இனம் என்பது வேறு. ஒரு மக்கள் கூட்டம் வாழுகின்ற நிலப்பகுதி, கலாசாரம், பண்பாட்டு நடைமுறைகள், இன மரபு வரலாறு, மதம், மொழி என்பவற்றின் அடிப்படையிலேயே தேசிய இனங்கள் வரையறை செய்யப்படுகின்றன. இதன் அடிப்படையில் முஸ்லிம்கள் நூற்றாண்டு காலமாக இலங்கையில் ஒரு தேசிய இனமாக ஆகிவிட்டனர். இது, தமிழ்த் தேசியமோ சிங்கள தேசியமோ நிராகரிக்க முடியாத நிதர்சனமாகும்.அதனையும் மீறி யாராவது, இரண்டு தேசிய இனங்கள்தான் இந்த நாட்டில் உள்ளன என்று கூறுவார்களாயின் அதன் பின்னால் ஒரு கருத்தியல் ரீதியான நிகழ்ச்சிநிரல் இருக்கின்றது என்றுதான் கருத வேண்டியுள்ளது. ஆரம்பக் காலங்களில் மொழியைப் பிரதான காரணியாக வைத்து தேசிய இனங்கள் தீர்மானிக்கப்பட்டாலும் அப்படி மொழியை மட்டும் கொண்டு தேசிய இனங்களைத் தீர்மானிக்கும் காலம் இப்போது மலையேறிப் போய்விட்டது. இப்போது மொழி என்பது, ஒரு தேசிய இனத்தை அடையாளப்படுத்துவதற்கான ஏகப்பட்ட காரணிகளுள் ஒரேயொரு காரணி மட்டுமே என்பதைக் கவனிக்க வேண்டும். முஸ்லிம்கள் மொழியால் ஒன்றுபட்டாலும் ஏனைய காரணிகளால் வேறுபடுகின்றார்கள். கலாசாரம், மதம், பண்பாடு, மரபினம், ஆட்புல எல்லை, பொருளாதார அம்சங்கள் என ஏனைய எல்லா விதத்திலும் பிரத்தியேகமான அடையாளங்களை முஸ்லிம் சமூகம் கொண்டிருக்கின்றது. அத்துடன், தெற்கில் பல பகுதிகளில் முஸ்லிம்கள் தங்களது தாய் மொழியாக சிங்களத்தையே பேசுகின்றனர் என்பதையும் சிறிதரன் போன்றோர் மறந்து விடக் கூடாது. அவர் சொல்வது போல, வடக்கு, கிழக்கில் மொழியை அடிப்படையாக வைத்து முஸ்லிம்களைத் தமிழ் பேசும் தேசிய இனமாகக் கருதுவதாயின், தெற்கில் முஸ்லிம்கள் சிங்களத்தைப் பிரதானமாகப் பேசுகின்றார்கள் என்பதற்காக சிங்கள தேசிய இனத்திற்குள் உள்ளடக்க முடியுமா? அது மட்டுமன்றி, தமிழை விட அதிகமாக சிங்களத்தைப் பேசுகின்ற தமிழர்களையும் சிங்கள தேசிய இனமாகக் கொள்ள முடியுமா? முஸ்லிம்களும் தமிழர்களும் தமிழ் பேசும் சமூகங்களே அன்றி தமிழ் பேசும் ஒரு தனி தேசிய இனம் அல்ல. வடக்கு, கிழக்கில் அவர்கள் தமிழர்களோடும் அதற்கு வெளியே பெரும்பான்மைச் சமூகத்தோடும் பின்னிப் பிணைந்து வாழ்கின்றார்கள் என்பதற்காக தங்களது தேசிய இனத்திற்குள் முஸ்லிம்களை உள்ளடக்கி விட முடியாது. குறிப்பாக, முஸ்லிம்களும் தமிழ் பேசும் இனம் என்று கருதியிருந்தால் வடக்கில் இருந்து தனியே முஸ்லிம்களைப் புலிகள் வெளியேற்றியிருக்க மாட்டார்கள். வடக்கு, கிழக்கில் பல இடங்களில் முஸ்லிம்கள் ‘தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு’ தமிழ் ஆயுதக் குழுக்களால் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். இதனையெல்லாம் மறந்து விட்டு, கருத்துக் கூற முற்படும் பழமைவாத சிந்தனையைத் தமிழ் அரசியல்வாதிகள் களைய வேண்டும். முஸ்லிம்களைத் தனியொரு தேசிய இனமாகக் கூட கருத முடியாத மனநிலையில் இருக்கின்ற தமிழ் அரசியல்வாதிகள்தான், சிங்கள தேசியத்திடம் தமிழ் மக்களுக்கான உரிமையை வேண்டி நிற்கின்றனர் . என்பது முரண்நகை இல்லையா?20 இலட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஒரு சமூகத்தை, மதம், கலாசாரம், பண்பாடு என பல அடிப்படைகளில் தனித்துவமான அடையாளங்களின் அடிப்படையில் ஒரு தேசிய இனமாகக் கூறுவதற்குக் கூட விரும்பாத சூழலில் நாம், நல்லிணக்கம் பற்றிப் பேசுவது நகைப்புக்கிடமானது இல்லையா?உலக அரங்கில் தேசிய இனங்களைப் பிரகடனப்படுத்தும் ஒழுங்குகள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னரே மாறிவிட்டன. முன்னைய காலங்களில் மொழி ஒரு பிரதான தீர்மானிக்கும் சக்தியாக இருந்த போதும், இப்போது மொழியை விட வேறு பல காரணிகள்தான் தேசிய இனங்களைத் தீர்மானிக்கின்றன என்பதைத் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும். மதப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டே நெதர்லாந்தில் வாழ்ந்த மக்களில் ஒரு பகுதியினர் தம்மைத் தேசிய இனமாக பிரகடனப்படுத்தி, பெல்ஜியம் என்ற நாடாகப் பிரிந்து சென்றனர். தவிர, மொழியை அடிப்படையாகக் கொண்டல்ல. இஸ்‌ரேல் உருவானதும் மொழியை அன்றி யூதர்கள் என்ற அடையாளத்தை மையமாகக் கொண்டே ஆகும். மதத்தை அடிப்படையாக வைத்து ஒரு தேசிய இனம் பாகிஸ்தான் என்ற நாட்டை உருவாக்கியது. உலகில் வாழும் ஆங்கிலம் பேசுகின்ற எல்லோருமே ஒரு தேசிய இனத்திற்குள் உள்ளடங்குவது கனவிலும் சாத்தியமில்லை. ஐரோப்பாவில், ஆங்கிலம் என்ற ஒரே மொழியைப் பேசுகின்ற சமூகங்கள் வேறு காரணங்களை முன்வைத்து தம்மை, தனியான தேசிய இனங்களாக முன்னிறுத்தி, பிரிந்து செல்ல முற்படுவதை நாம் கண்டிருக்கின்றோம். அரபு மொழியைப் பேசும் நாடுகளிலும் இவ்வாறு தனித்தனியான பல தேசிய இனங்கள்; உருவாகியுள்ளன.இதனையெல்லாம் இருட்டடிப்புச் செய்து விட்டு, இலங்கையில் இரு தேசிய இனங்கள் உள்ளன என்று நாட்டின் உயரிய சபையில் உரையாற்றிச் செல்வது. குறுகிய அரசியல் சிந்தனையையே வெளிப்படுத்துகின்றது. பாராளுமன்றத்தில் இக்கருத்தை சிறிதரன் எம்.பி. கூறியபோது, இரு முஸ்லிம் எம்.பிக்கள் மாத்திரம் எழுந்து பதிலளித்தனர். ஹக்கீம். றிசாட் போன்ற கட்சித் தலைவர்களும் அரச தரப்பு முஸ்லிம்களும் மௌனமாக இருந்தாலும் கூட, இக்கருத்தை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் கண்டிக்கின்றது. இப்படியான வேலையைச் சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்தில் இருந்தே பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய சில தமிழ் தலைவர்கள் செய்து வந்தார்கள். ‘முஸ்லிம்களும் தமிழர்கள்’ அல்லது ‘தமிழ் பேசும் இனத்தவர்’ என்று சொன்னார்கள். ஆனால், அதனை முஸ்லிம் சமூகம் மறுதலித்து. தாங்கள் ஒரு தனி தேசிய இனம் என்பதைப் பல வழிகளில் நிரூபித்தது. பின்வந்த தமிழ்த் தேசிய தலைவர்கள் இந்த யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு செயற்பட்டதாகச் சொல்லலாம். ஆனால், சிறிதரன் எம்.பியின் அண்மைய உரையானது, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் குறுகிய அரசியல் சிந்தனை என்ற முருங்கை மரத்தில் மீண்டும் ஏறுகின்றார்களா? என்ற சந்தேகத்தைக் குறிப்பாக முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தியுள்ளது, இக்கருத்து உண்மையில், சிறிதரன் எம்.பியின் தனிப்பட்ட கருத்தா அல்லது ஒட்டுமொத்த தமிழ்த் தேசியத்தின் கருத்தும் இதுதானா என்பதைத் தெளிவுபடுத்துவது ஏனைய தமிழ் எம்.பிக்களின் பொறுப்பாகும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சிறிதரன்-எம்-பியின்-கருத்து-முஸ்லிம்கள்-ஒரு-தேசிய-இனம்-இல்லையா/91-363965

எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி சர்வதேச சபையில் அநுர வழங்கவுள்ள செய்தி -விஜித ஹேரத் தெரிவிப்பு!

3 weeks 5 days ago
எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி சர்வதேச சபையில் அநுர வழங்கவுள்ள செய்தி -விஜித ஹேரத் தெரிவிப்பு! எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றுவார் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மேலும், நல்லிணக்க பொறிமுறை மற்றும் யுத்தகால உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ள தவறுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கத்திற்கு 'அதிக காலமும் விட்டுக்கொடுப்பும்' தேவை எனவும் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 60ஆவது அமர்வு செப்டெம்பர் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பிரித்தானியா உட்பட பல நாடுகளின் குழுமம் இம்முறை இலங்கை பிரச்சினை தொடர்பில் மேலும் ஒரு தீர்மானத்தை முன்வைக்கவுள்ளன. அது குறித்து ஆரம்ப கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன, ஆனால் தீர்மானம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ள தவறுகளை நிவர்த்தி செய்ய இலங்கைக்கு 'அதிக காலம் மற்றும் விட்டுக்கொடுப்பும்' தேவை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனால் இலங்கைக்கு தனது கருத்துக்களை முன்வைக்க இராஜதந்திர சமூகத்தின் ஆதரவு தேவையெனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், நடைபெறவுள்ள அமர்வில் தனது அறிக்கையை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானங்களை கடந்த அரசாங்கம் இராஜதந்திர ரீதியாக தாக்கல் செய்தது. கடந்த ஆண்டு இந்தத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டபோது தற்போதைய அரசாங்கமும் அந்தத் தீர்மானத்தை நிராகரித்தது. கடந்த 11 மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட முன்னேற்றங்கள் குறித்தும் அமைச்சர் இராஜதந்திர சமூகத்திற்கு விளக்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட வெளியுறவுச் செயலாளர் அருணி ரணராஜா, செப்டெம்பர் 24 ஆம் திகதி ஜனாதிபதி ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றுவார் என்றும் கூறினார். https://newuthayan.com/article/எதிர்வரும்_செப்டெம்பர்_24ஆம்_திகதி_சர்வதேச_சபையில்_அநுர_வழங்கவுள்ள_செய்தி_-விஜித_ஹேரத்_தெரிவிப்பு!

யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

3 weeks 5 days ago
அப்படியே அவைக்காக தான் அவர் வரவில்லை என்றாலுமே பரவாயில்லை. எனது முன்னுரிமை விருப்பம் தமிழ் பகுதிகளில் மேற்கொள்ள ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களும் தொழிற்குறை முன்னேற்றங்களும் பேச்சளவில் நின்றுவிடாது ஒரளவுக்காகவது நிறைவேற்றப்பட வேண்டும் முன்னேற்றங்கள் காணப்படல் வேண்டும் என்பதே. மற்றவையெல்லாம் இரண்டாம் பட்சமே. இதில் எவரது ஆட்சி என்பதில் கூட எனக்கு அக்கறை இல்லை. துறைசார் கல்வி கற்று பல்வேறு துறைகளில் வேலை வாய்பபுக்காக ஏங்கும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் யாழ்பாணத்தில் உள்ளனர். இவ்வாறான விடயங்கள் இனியும் ஏதும் பின்னடைவுகளை காணக்கூடாது.

மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்காக சூப்பர் சிங்கரில் நடந்த ஸ்பெஷல் எபிசோட்.

3 weeks 5 days ago
சூப்பர் சிங்கர் சூப்பர் சிங்கர், பாடல் திறமையுள்ள கலைஞர்களுக்கு தங்களது திறமையை வெளிக்காட்டும் மேடையாக உள்ளது. பெரியவர்கள், சிறியவர்கள் என மாறி மாறி எபிசோடுகள் ஒளிபரப்பாகும், இந்த நிகழ்ச்சிக்கும் மக்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அவ்வப்போது புதிய கான்செப்டுடன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ஒளிபரப்புவார்கள், ஆனால் சமீபத்தில் தொடங்கப்பட்ட சூப்பர் சிங்கர் 11வது சீசனின் கான்செப்ட் மொத்தமாக மாற்றப்பட்டது. 4 குரூப், அதற்கு 4 நடுவர்கள் என வித்தியாசமான கான்செப்ட், நிகழ்ச்சி தொடங்கியது முதல் ஹிட்டாக தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஸ்பெஷல் எபிசோட் இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு சூப்பர் எபிசோட் இடம்பெற உள்ளது. அதாவது மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் அவர்களின் நினைவாக இந்த வார எபிசோட் அமைந்துள்ளது. இந்த ஸ்பெஷல் நிகழ்ச்சியில் வெற்றிமாறன், சீமான் போன்ற கலைஞர்கள் சிறப்பு விருந்தினர்களாக வந்துள்ளனர். Cineulagamபாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்காக சூப்பர் சிங்கரில் நட...Super Singer Season 11 | 6th & 7th September 2025 - Promo 1

யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

3 weeks 5 days ago
அட இப்பதான் விளங்குது ...அவைக்காகத்தான் இவர் அங்கு வரவில்லையென்று

யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

3 weeks 5 days ago
செம்மணிக்கு வந்த என் பி பி அமைச்சரையும் எம்பிகளையும் அவமதித்து அடிக்காத குறையாக விரட்டிவிட்டு அவர்களின் சப்பாத்துகளை கைப்பறிவிட்டதாக முகநூல்களலும் ஏன் பராளுமன்றத்திலும் கூட வெட்டி வீரம் பேசியவர்கள் ஜனதிபதி பார்கக வரவில்லை என்று புலம்புகிறார்கள்.
Checked
Tue, 09/30/2025 - 21:57
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed