2 weeks 5 days ago
இதுகூட என்னைக் கண்டிக்கவேண்டும் என்று சிலர் இங்கே வெளிப்படையாக கருத்துப் பகிர்ந்ததனால் ஏற்பட்டது. ஏனென்றால், என்னை யாராவது கண்டித்துவிடுவார்கள் என்கிற காரணத்திற்காகப் பயந்துபோய் எழுதாமல் நான் இருக்கப்போவதில்லை. எனது கருத்து தெனாவட்டாக வந்திருப்பின் அதற்காக வருந்துகிறேன், எனது நோக்கம் அதுவல்ல. நல்லது. ஆனால் என்னை நீங்கள் உங்களின் இதற்கு முந்தைய பதிவில் மேற்கோள் காட்டி எழுதியிருக்க வேண்டாமோ என்று தோன்றுகின்றது. நான் அன்று எழுதியது எவரினதும் அனுதாபத்தினை எதிர்பார்த்து அல்ல. மாறாக புலம்பெயர்ந்த நாட்டிலும் சிங்களவர்கள் தமது இனக்குரோதத்தினை தமது பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்க்கிறார்கள் என்று குறிப்பிடவே. ஆனாலும் என்ன, அன்றைய நாட்களில் ரஸ்ஸிய உக்ரேன் திரியில் ஏற்பட்ட பிணக்கினால் நான் இதனைக் கற்பனையில் புனைந்து எழுதியதாக உங்களின் "நண்பர்" கப்டன் கூறியதும் நினைவிலிருக்கிறது.
2 weeks 5 days ago
எனக்கு அவர் ஒரு முஸ்லீம் என்று தெரியாது. அண்மையில் இக்களத்தில் அவரை ஒருவர் நானா என்று விளித்தபோது அதனை உண்மையென்று நம்பியே எழுதினேன். தமிழ்த் தேசியத்திற்கெதிராக (இப்படிக் கூறுவதால் புலிகளை எதிர்க்கிறார் என்றல்ல அர்த்தம், ஏனெறால் ஒருகாலத்தில் நீங்களும் புலிகளை முற்றாக எதிர்த்தவர், ஆனால் தேசியத்தை நேசிப்பவர்) தந்தை செல்வா காலத்து தமிழரசுக் கட்சிமுதற்கொண்டு புலிகள் வரை கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வந்தவர். சிறிமா பண்டாரநாயக்காவைப் புகழ்ந்து எழுதியவர். ஆகவேதான், இவரை ஒருவர் "நானா" என்று அழைத்தபோது, இவரது தமிழ்த்தேசியத்திற்கெதிரான விஷக் கருத்துக்களைப் அடிப்படையாக வைத்து, இவர் ஒரு முஸ்லீமாக இருக்கலாம் என்று முடிவிற்கு வந்தேன். உண்மையில் இவர் எவ்வினத்தவர் என்பது எனக்குத் தெரியாது. இவரிடமிருந்து நான் விலகியே இருந்தபோதிலும் பலமுறை எனது திரிகளில் மிகவும் தீவிரமாக என்னை விமர்சித்து, பொய்களையும் புரட்டுக்களையும் எழுதுவதாக கருத்தெழுதி வருபவர் (இன்றுகூட அவரது கருத்தொன்றில் என்னைப்பற்றி, பெயர் குறிப்பிடாது எழுதப்பட்டிருக்கிறது), தமிழர்கள், தமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படவேண்டும் என்றும், இலங்கையராக அடையாளப்படுத்தப்படவேண்டும் என்றும் எனக்கான பதிவுகளில் எழுதிவருபவர். பலமுறை இவருக்கான பதில்களை நான் தவிர்த்து வந்தபோதிலும், தவிர்க்கமுடியாமல் சிலவேளைகளில், இவரை மேற்கோள் காட்டாது எனது பதிலைக் கருத்தாக பதிந்திருக்கிறேன். என்னைத் தனிப்பட்ட ரீதியில் இந்த மனிதர் தாக்கி எழுதுவது உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. சிலவேளை புலிகளுக்கு ஆதரவானவன் என்று முத்திரை குத்தப்பட்ட என்மேல் வைக்கப்படும் எந்த விமர்சனமும் உங்களைப்பொறுத்தவரை கடந்துசெல்லப்படவேண்டியவையாக இருந்திருக்கலாம். ஆனால், இந்த மனிதருக்கும் எனக்கும் இடையில் நீண்டநாள் பகையொன்று இருக்கிறது. அதனை நீங்கள் பார்க்கத்தவறிவிட்டு, நான் ஒரு இனவாதியாக , மதவாதியாக கருத்துக்களில் விசம் கட்டி எழுதுவதாக விமர்சிக்கிறீர்கள். உங்களுக்கும் இன்னொருவருக்கும் இடையே முன்னர் இக்களத்தில் நடைபெற்ற மிகவும் காரசாரமான கருத்து மோதல்களை நாம் அவதானித்திருக்கிறேன். அவர் இப்போது இங்கு இல்லையென்றாலும்கூட உங்களின் கருத்துக்களில் இருந்த கசப்புணர்வு வெளிப்படையானது. தனிப்பட்ட ரீதியில் நீங்கள் தாக்கப்படும்போது பதிலில் கோபம் இருப்பது இயல்பானது. நான் இப்போது செய்வதும் அதுவே. நான் விலகிச் செல்ல எத்தனிக்கும் ஒவ்வொரு தறுவாயிலும் விசமத்தனமாகப் பிந்தொடர்ந்து, எனது கருத்துக்களை விமர்சித்து, தனிப்பட்ட ரீதியில் தாக்கும்போது தவிர்க்கமுடியாமல் நானும் கடுமையாக எழுதவேண்டியிருக்கிறது. ஒன்றில் அவர் என்னைத் தொடர்ந்து, தனிப்பட்ட ரீதியில் தாக்குவதை நிறுத்தவேண்டும், அல்லது நான் அவருக்குத் தனிப்பட்ட ரீதியில் பதிலளிக்க வேண்டி ஏற்படும். அவர் கேட்பது கேள்வியல்ல, மாறாக மற்றையவர்களின் கருத்துக்களுக்கெதிரான விசமத்தனமான விமர்சனங்களே என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், அவர் தேசியத்திற்கும், புலிகளுக்கும் எதிராக எழுதுவதால், அவரது விமர்சனங்கள் உங்களுக்கு கேள்விகளாகத் தெரிகிறது. குதர்க்கத்தனமான, புலிகளையும், தேசியத்தையும் சீண்டும் விதமான கேலிகளை கைவிட்டு விட்டு, இயல்பாக தனது கேள்விகளை முன்வைக்கட்டும், நான் பதிலளிக்கிறேன். நான் புலிகளைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பவன் அல்ல. முன்னர் ஒருகாலத்தில் அப்படி இருந்தவந்தான், ஆனால் தெளிவு இருக்கிறது இப்போது. தவறைத் தவறென்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கிறது. ஆகவே சீண்டாமல் முன்வைக்கப்படும் எக்கருத்திற்கும் பதிலளிக்க காத்திருக்கிறேன். எனது உளவியலை, எனக்கும் இந்த மனிதருக்கும் இடையே இத்தளத்தில் பகிரப்பட்ட கருத்துக்களின் பின்னணியிலிருந்து பார்த்தால் புரிந்துகொள்வது உங்களுக்குக் கடிணமாக இருக்காது.
2 weeks 5 days ago
Edinburgh இங்கை தான் அதிகம் நடக்கும் சும்மா அடிச்சாலே பந்து சிக்ஸ்சுக்கு போகும் 20ஓவர் விளையாட்டில் பெரிய அணிகள் 200ரன்ஸ்க்கு மேல அடிப்பினம் இந்த மைதானத்தில்.................
2 weeks 5 days ago
என் சிறுவயதில் நான் படித்தது. இது உண்மைச் சம்பவம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சிக்கான எடுத்துக்காட்டுகள் நம்மிடமே பல உள்ளன, நம்மைச் சுற்றியும் பல உள்ளன. அவற்றை நாம் கூர்ந்து கவனித்தால் உண்மை மனதிற்கு விளங்கும். "ஒரு சிலந்திப்பூச்சியின் விடாமுயற்சி மாபெரும் படையெடுப்பை தடுத்து, விரட்டியது" என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?... ஆம் இது உண்மையில் நடந்தது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் ஸ்காட்லாந்தில், ராபர்ட் தி புரூஸ் என்ற மன்னர் வாழ்ந்து வந்தார். அச்சமயம் இங்கிலாந்து மன்னர் ஸ்காட்லாந்தை கைப்பற்ற முயற்சி செய்தார். ஸ்காட்லாந்து மீது படையெடுத்தார். மிகப் பெரிய படை பலத்துடன் இருந்தது இங்கிலாந்து, ஓரளவுக்கு படைபலத்துடன் இருந்தது ஸ்காட்லாந்து. ஆனால் மன உறுதி மிகவும் அதிகமாகவே இருந்தது. இங்கிலாந்து ஸ்காட்லாந்தை தன்னுடன் இணைத்துக்கொள்ள போரிட்டது. இங்கிலாந்திடம் ஆறுமுறை போரிட்டு ஸ்காட்லாந்து இங்கிலாந்திடம் தோற்றது. ராபர்ட் தி புரூஸ் மன்னரின் படைகள் சிதறடிக்கப்பட்டன, அவர் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார். மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் மறைந்திருக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால் தன் நாட்டிற்குள்ளேயே ஒரு மலைக் குகையில் ஒளிந்து கொண்டார். அவர் மனதளவில் மிகவும் சோர்ந்து காணப்பட்டார். மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டார். தன் எதிரியிடம் நாட்டை விட்டு விட்டோமே என்ற நிலையில் மிகவும் குற்றவுணர்ச்சி இருப்பவராய் காணப்பட்டார், மிகவும் வருந்தினார். ஒரு சமயம் அந்த குகையில் இருக்கும் பொழுது மழை பெய்து கொண்டிருந்தது. மழையை பார்த்தவாரே ஓரிடத்தில் அமர்ந்து இருந்தார். அப்போது ஒரு சிலந்திப்பூச்சி தன் வலையை பின்னுவதற்காக காத்திருந்தது. வலையை கொஞ்சம் கொஞ்சமாக பின்னிக் கொண்டிருந்தது. இந்த குகையில் இருந்து எதிரில் இருக்கும் ஒரு குகைக்கு வலை பின்ன எண்ணியது. அது தன் வலையை வீசி, வீசி பார்த்தது, ஆனால் அந்த குகையில் வலை ஒட்டவே இல்லை. வலையை திரும்பத் திரும்ப வீசியது, அதை பார்த்து ராபர்ட் தி புரூஸ், "பாவம் அந்த சிலந்திக்கு தான் என்ன தெரியும், அந்தக் குகை அவ்வளவு தூரத்தில் உள்ளது. அதனால் எப்படி அடைய முடியும் என்று நினைக்கலாம். பாவம் அறிவில்லாத ஜீவன்" என்று எண்ணிக் கொண்டார். ஆறு முறை சிலந்தி முயற்சி செய்தது. அவ்வாறு செய்தது 6 முறையும் சிலந்திவலை அங்கே சென்று ஒட்டாமல் கீழே விழுந்து கொண்டே இருந்தது. ஆனால் ஏழாவது முறையாக மீண்டும் முயற்சி செய்தது. மிகவும் கச்சிதமாக அந்த சிலந்திவலை அடுத்த குகையில் சென்று ஒட்டிக் கொண்டது. சிலந்தி கூடு கட்ட ஆரம்பித்தது ஆரம்பித்தது. இதைப் பார்த்தவுடன் ராபர்ட் ப்ரூஸ் க்கு ஒரு எண்ணம் தோன்றியது. தன்னால் முடியாது என்று நினைத்தால் தான் எதுவும் முடியாது, தன்னால் முடியும் என்று நினைத்தால் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு சிலந்தி ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. என்னால் முடியாது என்று ஏன் எனக்கு தோன்றியது. என்னால் நிச்சயமாக முடியும். அவருக்கு புதிய உற்சாகம் பிறந்தது. ஸ்காட்லாந்தை மீண்டும் கைப்பற்ற முடியும், அது என்னுடைய நாடு என்று எண்ணிக்கொண்டார். தன்னுடைய படை வீரர்களுக்கு இந்த செய்தியை உற்சாகமாக அனுப்பினார். சில நேரத்தில் உற்சாகம் அதிகமான படைவீரர்கள் இவருடன் திரண்ட, கூட்டம் அதிகமாகிக் கொண்டே போனது. படைகள் பெருகிக்கொண்டே போனது. மீண்டும் போரிட்டார். ஏழாவது முறையில் ஸ்காட்லாந்து வென்றது. இங்கிலாந்து ஸ்காட்லாந்தை விட்டு வெளியேறுவதற்கான நிர்பந்தம் வந்து விட்டது. இங்கிலாந்து ஸ்காட்லாந்தின் வலிமை மிக்க, மிகப்பெரிய மன்னரிடம் தோற்றது. ஆம் ஸ்காட்லாந்தை ஆள்வதற்கு இவர் தான் சரியான ஆள் என்று இங்கிலாந்தும் விட்டு சென்றது. இந்த வரலாறு ஸ்காட்லாந்து மக்கள் அனைவருக்குமே தெரியும். ராபர்ட் புரூஸ் என்பவர் மன்னரான பின் ராபர்ட் I ,என்று அழைக்கப்பட்டார். இவர் ஸ்காட்லாந்தை ஆண்ட மன்னர்களில் மிகவும் பிரபலமான, மிகவும் தைரியமான மன்னராவார். விடாமுயற்சி என்பது மிகவும் முக்கியம். எதையும் நாம் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். தோல்வியுற்றாலும் செய்து கொண்டே இருக்க வேண்டும், நிச்சயம் ஒரு நாள் வெற்றி தரும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
2 weeks 5 days ago
2 weeks 5 days ago
இனிமேல் முழுமையாக வாசித்து பதில் எழுதுங்கள், அது போதும். விருப்புக்குறி எதுவும் வேண்டாம். யார் தமிழர்கள்? இஸ்லாமியர்கள் தமிழர்களா? அவர்கள் தம்மை தமிழர்கள் என்று அடையாளப்படுத்துகிறோம் என்று உங்களிடம் சொன்னார்களா? வடக்குக் கிழக்கு இணைந்த பிராந்தியமே தமிழர் தாயகம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? தமிழருக்கு இருக்கும் பிரச்சினைகளும் தமக்கு இருக்கும் பிரச்சினைகளும் ஒன்றாதலால், நாம் சேர்ந்தே போராடி எமக்கான உரிமைகளைப் பெறுவோம் என்று சொன்னார்களா? அவர்களே தம்மை தனியான இனக் குழுமம், தமக்கான தனியான மாகாணம், தனியான அலகு, தனியான பிரதேச சபை என்று கோரி வரும்போது, நீங்கள் மட்டும் எவ்வாறு அவர்களையும் சேர்த்தே விடுதலை சாத்தியம் என்று கூறுகிறீர்கள்? உங்களது இருப்பிற்கான பாதுகாப்பு என்பது அவர்களின் பங்களிப்பினாலேயே இன்று சாத்தியமற்றதாக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களுடன் சேர்ந்தே உங்களின் விடுதலை சாத்தியம் என்று நீங்கள் கருதுவது எங்கணம்? அண்மைய காலங்களில் இஸ்லாமிய அரசியல்வாதிகளோ அல்லது அவர்களின் சமூகத் தலைவர்களோ தமிழ் மக்கள் சார்பாக, அவர்களின் உரிமைகள் தொடர்பாக, அவர்களின் தாயகம் தொடர்பாகச் சாதகமாகப் பேசிய ஒரு சந்தர்ப்பத்தை கூறுங்கள் பார்க்கலாம். அல்லது தமிழருடன் சேர்ந்தே தமக்கான விடுதலை சாத்தியம் என்று அவர்களின் எவராவது கூறிய ஒரு சந்தர்ப்பத்தைக் கூறுங்கள்? அவர்கள் தம்மை தனியினமாகக் கோரி, தமக்கான தாயகத்தை அடையாளப்படுத்தும்போது அதனை ஏற்கமறுக்கும் ஒரு உத்தியாகவே "அவர்களுடன் சேர்ந்தே எமக்கான விடுதலையும்" என்று நீங்கள் கூறுவதாக எனக்குத் தெரிகிறது. அதாவது தமிழர்கள் வாழும் தாயகத்தில் முஸ்லீம்களும் வாழலாம், ஆனால் அவர்கள் தமக்கான தனியான தாயகத்தைக் கொண்டிருக்க முடியாது என்பதே உங்களின் கருத்தில் இருந்து நான் எடுத்துக்கொள்வது. முஸ்லீம்கள் தனியான இனமா? ஆம், தனியான இனம். அவர்கள் தமிழர்களா? இல்லை, தமிழ் பேசுபவர்கள், சிங்களமும் தாராளமாகப் பேசக் கூடியவர்கள். அவர்களுக்கென்று தனியான தாயகம் வேண்டுமா? ஆம் வேண்டும். உங்களுக்கான விடுதலையினை நீங்கள் வென்றெடுங்கள். அவர்களுக்கானதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். ஏனென்றால் உங்களின் பிரச்சினைகளும், அவர்களின் பிரச்சினைகளும் ஒன்றல்ல, ஒரே பேரினவாதத்தினால் பாதிக்கப்பட்ட இரு சிறுபான்மையினங்கள் என்பதைத் தவிர.
2 weeks 5 days ago
ஒரு பிரச்சனையும் இல்லை. நானே இங்கு, இருவரை தமிழர் அல்லாதோர் என கூறுபவந்தான். ஆனால் அதற்கு சந்தர்ப்ப சாட்சியாவது கொடுத்துள்ளேன். முக்கியமாக, நீங்கள் முஸ்லிம் ஆனால் உங்கள் கருத்துக்கு இதுதான் என் பதில் எனவும் கூறுவேன். ஆனால் ஐலண்ட் முஸ்லிம் என்பது அப்பட்டமானதும், ஆதாரமற்றதுமான புரட்டு. அவர் எழுப்பும் கேள்விகளை இதை மட்டுமே கூறி புறம்தள்ளும் போக்கு ஆபத்தானது. அதன் பின்னால் உள்ள உளவியலை மட்டுமே மேலே குறிப்பிட்டேன். தவிர யாழில் உங்கள் மனம் போனபடி நீங்கள் எழுதலாம், நானும். பரஸ்பர அனுமதியோ, ஆமதிப்போ தேவையில்லை. பிகு உங்கள் மகனுக்கு ஏற்பட்டது போன்ற அதே நிலமை எனது மகனுக்கும் அண்மையில் ஏற்பட்டது. அந்த திரியில் அலசபட்டவை பயனுள்ளதாக இருந்தது🙏.
2 weeks 5 days ago
🏏 International Cricket Grounds in Scotland The Grange Club, Edinburgh – Scotland’s primary cricket venue; has hosted numerous ODIs and T20Is, including matches in the 1999 Cricket World Cup. Titwood, Glasgow – Home of Clydesdale Cricket Club; approved for ICC internationals and has hosted ODIs and T20Is. Mannofield Park, Aberdeen – Regular host of Scotland’s home internationals; has staged many ODI and T20I fixtures. Cambusdoon New Ground, Ayr – Approved for international cricket and has hosted ODI matches. Forthill, Dundee – Another ground used for international matches in recent years. அநேகம் எடின்பரோவில் தான் நடக்கும் என நினைக்கிறேன்.
2 weeks 5 days ago
உங்களது பிரச்சினைதான் என்ன? எதற்காக என்னை விமர்சித்து வருகிறீர்கள்? நான் எனக்காக ஒரு எதிரியை உருவாக்கவில்லை. நான் எழுதும் எக்கருத்திற்கும் குதர்க்கமாக பதில் எழுதும் ஒருவருக்கான பதிலே நான் எழுதியது.
2 weeks 5 days ago
நான் பார்த்த மட்டில் ஒன்றில் தான் தொடர்ந்து போட்டிய நடத்துவினம் ஸ்கொட்லாந்தில் சர்வதேச போட்டிகள் நடப்பது மிக குறைவு........................
2 weeks 5 days ago
சர்வதேச போட்டிகள் நடக்கும் மைதானங்கள் ஒன்றுக்கு மேலே இருக்கு ஆனால் டெஸ்ட் மைதானம் எதுவும் இல்லை.
2 weeks 5 days ago
இதன் பின்னால் ஒரு உலக மகா உளவியல் இருக்கிறது. வங்குரோத்து அரசியல் செய்வோருக்கு எப்போதும் ஒரு எதிரி தேவை. எதிரியே இல்லாவிடிலும் அவர்கள் பொய்யாக ஒரு எதிரியை சிருஸ்டித்த்தாவது கொள்வார்கள். பிரெக்சிற் காரருக்கு ஐரொப்பியர், ஹிட்லருக்கு யூதர், சீமானுக்கு தெலுங்கர்… யாழ்கள அண்ணையளுக்கு நீங்கள். உங்களை முஸ்லிம் அல்லது புளொட் அல்லது இரெண்டும் என கடந்து போனால் - நீங்கள் கேட்கும் அசெளகரியமான கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி வராது. எனது பிள்ளையை அவுஸ்ரேலியாவில் பள்ளியில் கூட சிங்கள இனவாதம் துரத்துகிறது என நாமே (நியாயமாக) அங்கலைத்தாலும், அதே நாம் இன்னொரு கருத்தாளர் கேட்கும் கேள்விக்கு “நீ முஸ்லிம் எனவே நான் பதில் சொல்ல மாட்டேன்” என தெனாவட்டாக எழுத முடிகிறது என்றால் அது உங்களை கற்பனையாகவேனும் ஒரு எதிரி என உருவகித்தால் மட்டுமே சாத்தியப்படும். இப்போ நீங்கள் அனுரவை தவிர வேறு வழி இல்லை என சொல்லி ஐலண்டின் வழிக்குதானே வந்துள்ளீர்கள். டக்லசும், ஐலன்டும், சம்பந்தனும் பல வருடம் வந்த வழிக்கு இப்போ வந்த நீங்கள், அவர்களை எப்படி குறை சொல்லலாம்?
2 weeks 5 days ago
சிம்பாவே அமோக வெற்றி.......................
2 weeks 5 days ago
உங்க்ளுக்கு மீண்டும் முட்டை தலைவரே மரக்கறி முக்கியம் தலைவரே லொள்😛😁......................
2 weeks 5 days ago
ஓமாம் அணியில் ஒரு ஒற்றுமை என்ன வென்றால் பாக்கிஸ்தான் நாட்டை சேந்த்த வீரர்களும் இந்தியா நாட்டை சேர்ந்தவர்களின் ஆதிக்கம் கூட ஓமானில் இப்ப தான் காசை கொட்டி பல கிரிக்கேட் தொடர் வைக்கினம்..................இன்னும் 10வருடத்தால ஓமாம் நாட்டை சேர்ந்த வீரர்கள் தங்களின் நாட்டுக்காக விளையாடுவினம்😍🏏........................... ஸ்கொட்லாந் நாட்டில் நண்பா ஒரு சர்வதேச கிரிக்கேட் மைதானம் தான் இருக்கு கால்பந்துக்கு ருக்வி இந்த இரண்டு விளையாட்டுக்கு கொடுக்கும் முக்கியம் கிரிக்கேட்டுக்கு கொடுப்பதில்லை அப்படி இருந்தும் நல்ல ஒரு அணியாக ஸ்கொட்லாந் அணி இருக்கு முந்தி ஸ்கொட்லாந் வீரர்கள் பலர் இங்லாந் கிலப்பில் விளையாடுவினம்................இப்ப ஸ்கொட்லாந் அணி வீரர்கள் பெரிதாக இங்லாந் உள்ளூர் கிலப்பில் விளையாடுவதில்லை.................................
2 weeks 5 days ago
அறிவியல் உலகை ஆளும் ஈழ தமிழர்களுக்கும் உலகை ஆள்வதற்கு பேராசைபட்டு கொண்டிருக்கின்ற முஸ்லிம் மதத்தவர்களுக்கும் பெரும் பிரச்சனை மோதல்கள் ஏற்பட போகின்றது.இந்த நிலையில் இலங்கையில் முஸ்லிம்களாக உள்ள தமிழர்கள் இலங்கை தமிழர் பக்கம் நின்று ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
2 weeks 5 days ago
சிம்பவே ஈசியா வெல்ல போகுது............ஓமான் படு தோல்வி அடியக் கூடும்.....................
2 weeks 5 days ago
அவர் பிறந்தது தென் ஆபிரிக்காவில் ஆனால் பல வருடமாய் இங்லாந் உள்ளூர் கிலப்பில் விளையாடினவர்...................திறமை இருந்தும் இரண்டு நாட்டு சர்வதேச அணியில் இடம் பிடிக்க வில்லை இத்தாலி அணியின் கப்டனாய் அவரை தெரிவு செய்தது பாராட்ட தக்கது...........கப்டன் பொருப்புக்கு தகுதியான வீரர்😍..................
2 weeks 5 days ago
நம்ம பெரியப்புக்கு முட்டை.............. ஓமான் இந்த உலக கோப்பையில் குறைந்த ரன்ஸ் அடிக்கும் என தெரிவு செய்தேன் 5விக்கேட் அவுட் ஆகின பிறக்கு நிதானமாக ஆடி ரன்ஸ்ச கூட்டினம்.........................
2 weeks 5 days ago
ஓமான் - -- 67_ = 13.4
Checked
Sat, 02/28/2026 - 23:08
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed