Aggregator
பட்டலந்த போல வடகிழக்கில் இயங்கிய பல சித்திரவதை முகாம்கள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி வெளிக்கொண்டு வரவேண்டும் - ஞா.சிறிநேசன் கோரிக்கை
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
வெனிசுலாவைச் சேர்ந்த 200 பேரை எல் சால்வடார் நாட்டு சிறைக்கு அனுப்பியது அமெரிக்கா!
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியை வெளிப்படுத்தும் ஆவணப்படம் அமைச்சர் சந்திரசேகரிடம் கையளிப்பு
யாழில் மே மாதம் கனேடிய கல்வி கண்காட்சி, முதலீட்டு வர்த்தக மாநாடு ; கனேடிய - இலங்கை வர்த்தக சம்மேளனம்
யாழில் மே மாதம் கனேடிய கல்வி கண்காட்சி, முதலீட்டு வர்த்தக மாநாடு ; கனேடிய - இலங்கை வர்த்தக சம்மேளனம்
17 Mar, 2025 | 05:23 PM
வடக்கு பிராந்தியத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒரு பயனுள்ள பாதையை உருவாக்கும் நோக்கில் கனேடிய - இலங்கை வர்த்தக சம்மேளனம் யாழ்ப்பாணத்தில் கனேடிய கல்வி கண்காட்சி மற்றும் யாழ்ப்பாண முதலீட்டு வர்த்தக மாநாடு ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அதன் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (17) ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த கனேடிய - இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் சிரேஷ்ட முகாமையாளர் முகமட் ஹமீட் இவ்வாறு கூறியதுடன் அது குறித்து மேலும் கூறுகையில்,
யாழ். குடா நாட்டு இளைஞர் யுவதிகளின் கல்வி மற்றும் தொழில்துறை குறித்த எதிர்கால கனவுகளை நனவாக்கிக் கொடுக்கும் வகையில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.
அதனடிப்படையில் குறித்த மாநாடு மே 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
குறித்த மாநாட்டில் முதலாம் நாளன்று கனடா மற்றும் பிற சந்தைகளுக்கு இலங்கை மாணவர்களை பணிக்கமர்த்தல், இலங்கையில் கனேடிய கல்வியை வழங்கல், தொழில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டை நிறுவுதல், கனடா கல்வி மற்றும் திதன் பயிற்சி உரிமையாளர்களை ஊக்குவித்தல், திறன் இடப்பெயர்வு மற்றும் வேலை வாய்ப்புக்கான பயிற்சி மற்றும் திறன்களை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி நடைபெறவுள்ளது.
அதேநேரம் யாழ். வேலைவாய்ப்பு வாய்ப்பு மற்றும் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் என்ற தலைப்பில் இரண்டாம் நாள் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதில் யாழ் வேலை வாய்ப்பும் தொழிலாளர்களுக்கான சாதக நிலைகளை உருவாக்கல்.
இளைஞர்களுக்கு வேலவாய்ப்பு வழங்கல், பல நூறு படித்த பட்டதாரிகளுக்கு பயிற்சி வழங்கல் மற்றும் வர்த்தகம் தொடர்பான மாநாடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், விவசாயம் மற்றும் மீன் வளர்ப்பு, சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான எதிர்கால திட்டங்கள் முதலீடுகளை உருவாக்குவது தொடர்பான பயிற்சிகளும் இதன்போது இடம்பெறவுள்ளது.
குறிப்பாக காங்கேசன்துறை, பரந்தன், மாங்குளம் ஆகிய பகுதிக்கு உருவாக்கப்பட இருக்கும் முதலீட்டு வலயங்களில் இத்தகைய வாய்ப்புக்களை அரச மற்றும் தனியார் இணைந்த கட்டமைப்பில் உருவாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
எமது இந்த நிகழ்வுக்கு இலங்கையின் பிரதமர் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ள இருக்கின்றார்.
வலம்புரி விருந்தினர் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வினூடாக கனடாவிலிருந்து முதலீடுகளைக் குறிப்பாக வடபகுதிக்குக் கொண்டுவர முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளோம்.
அதுமட்டுமல்லாது இலங்கையிலிருந்து சென்று வெளிநாடுகளில் கற்று மீளவும் வரும் மாணவர்களுக்குத் தகுதிக்கேற்ப வேலைகளும் ஊக்குவிப்பு வழங்கவும் ஏற்பாடுகள் இருக்கின்றது.
அந்தவகையில் இந்த வாய்ப்பை வடக்கின் இளைஞர் யுவதிகள் சரியாகப் பயன்படுத்தி வாழ்வை வெற்றிகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் மே மாதம் கனேடிய கல்வி கண்காட்சி, முதலீட்டு வர்த்தக மாநாடு ; கனேடிய - இலங்கை வர்த்தக சம்மேளனம் | Virakesari.lk
யாழில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை!
யாழில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை!
17 Mar, 2025 | 05:24 PM
யாழில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தோமஸ் டக்ளஸின் படகில் இரண்டு மீனவர்கள் சனிக்கிழமை (15) ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் இறங்கு தளத்தில் இருந்து IDAY-A-0035 JFN நீலம் மற்றும் வெள்ளை நிற படகில் மீன்பிடிக்கச் சென்றனர்.
ஆனால் அவர்களில் எவரும் இன்னும் கடலுக்குத் திரும்பவில்லை என யாழ்ப்பாண மாவட்ட நீரியல் வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஜே.சுதாகரன் தெரிவித்துள்ளார்.
காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
யாழில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை! | Virakesari.lk
வெளிநாட்டு மதபோதகர்கள் வெளியேற்றம்
இலங்கையில் 5 நிமிடங்களில் மிருகங்களை கணக்கெடுக்கும் திட்டம் - இது சாத்தியமாகுமா?
புகழ்பூத்த சர்வதேச வீரர்களைக் கொண்ட 6 அணிகள் பங்குபற்றும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்
மது ஊழல் போராட்டம்; அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கைது!
மது ஊழல் போராட்டம்; அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கைது!
தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் அண்ணாமலை, முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு மாநில மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (டாஸ்மாக்) மதுபான ஊழலுக்கு எதிராக இன்று (17) திட்டமிட்ட போராட்டத்திற்கு முன்னதாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 11 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம், போராட்ட இடத்தை அடைவதற்கு முன்பே தலைவர்கள் வீட்டுக் காவலில் கைது செய்யப்பட்டனர் அல்லது தடுத்து வைக்கப்பட்டனர்.
தனது தடுப்புக்காவல் குறித்து பேசிய சௌந்தரராஜன்,
அவர்கள் எங்களை வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. எனது 300 காரியகர்த்தாக்கள் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாங்கள் வெளியே செல்வதை அவர்கள் விரும்பவில்லை.
டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் 1,000 கோடி (இந்திய ரூபா) ஊழலை நாங்கள் கண்டிக்கிறோம்.
நான் வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும், ஆனால் அவர்கள் என்னை அதைச் செய்ய அனுமதிக்கவில்லை” என்றார்.
இந்தக் கைதுகளைக் கண்டித்து, திமுக அரசு பயத்தில் செயல்படுவதாக அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள பதிவில் அவர்,
“பயத்தால் நடுங்கும் திமுக அரசு, அதன் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், மாநிலச் செயலாளர் வினோஜ் பி செல்வன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளை போராட்டத்தில் பங்கேற்க விடாமல் வீட்டுக் காவலில் வைத்துள்ளது.
ஜனநாயக ரீதியாக நாங்கள் போராட்டத்தை அறிவித்ததாலா நீங்கள் இதுபோன்ற கோழைத்தனமான செயல்களில் ஈடுபடுகிறீர்கள்? திகதி அறிவிக்காமல், திடீரென்று ஒரு நாள் போராட்டம் நடத்தினால் உங்களால் என்ன செய்ய முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு மாநில மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (டாஸ்மாக்) சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் மதுபான ஊழல் தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் (ED) தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதிக விலை நிர்ணயம், கையூட்டு மற்றும் ஊழல் தொடர்பாக மூன்று குற்றப் பத்திரிகைகளை ED பதிவு செய்துள்ளது.
இதில் டாஸ்மாக் நடவடிக்கைகளில் ரூ.1,000 கோடி முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக அண்மையில் தமிழ்நாடு முழுவதும் பல சோதனைகளை இந்த நிறுவனம் நடத்தியது.
இந்தக் குற்றச்சாட்டுகளை திமுக அரசு கடுமையாக மறுத்து, அவற்றை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று நிராகரித்துள்ளது.
பாஜகவின் இந்தப் போராட்டம் சர்ச்சையைத் தூண்டும் முயற்சி என்றும், எதிர்க்கட்சிகள் தலைமையிலான மாநிலங்களை மத்திய அமைப்புகள் குறிவைப்பதாகவும் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மது ஊழல் போராட்டம்; அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கைது!
கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட திட்டம் - பாப்பரசர் அனுமதி வழங்கினார்
கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட திட்டம் - பாப்பரசர் அனுமதி வழங்கினார்
17 MAR, 2025 | 03:27 PM
கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ள பரிசுத்த பாப்பரசர் இதன் மூலம் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள போதிலும் தனது பதவியில் தொடர்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பிரான்சின் ஜெமெலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அங்கிருந்தவாறே சீர்திருத்த தி;ட்டங்களிற்கு அனுமதி வழங்கும் ஆவணத்தில் கைச்சாத்திட்டார் என வத்திக்கான் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 14 முதல் பாப்பரசர் மருத்துவமனையில் உள்ளார். கடந்த 12 வருடகாலப்பகுதியில் அவர் நீண்டநாட்கள் மருத்துவமனையில் உள்ளமை இதுவே முதல் தடவை.
கத்தோலிக்க திருச்சபையில் பெண்களிற்கு அதிகளவு பங்களிப்பினை வழங்குவது,ஆட்சி மற்றும் தீர்மானம் எடுப்பதில் பாமர மக்களை அதிகளவில் சேர்ப்பது உட்பட பல சீர்திருத்தங்கள் குறித்து கத்தோலிக்க திருச்சபை ஆராயவுள்ளது.
இந்த சீர்திருத்தங்களை ஆயர்கள் பேரவை என்ற அமைப்பு ஆராயும்.பரிசுத்த பாப்பரசர் தனது பதவிக்காலத்தில் பணி நிகழ்ச்சி நிரலை இந்த குழு மூலமே முன்னெடுத்துவருவார்.
சமீபகாலமாக பாப்பரசர் தனது புதுப்பித்தல் செயற்பாட்டில் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்களை ஈடுபடுத்த முயன்றுவந்துள்ளார்.
இதேவேளை பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரது படத்தை முதல்தடவையாக வத்திக்கான் வெளியிட்டுள்ளது.
மருத்துவமனையில் உள்ள தேவாலயத்தில் பாப்பரசர் திருப்பலியை நிறைவேற்றினார் என வத்திக்கான் தெரிவித்துள்ளது.