Aggregator

வெனிசுலாவைச் சேர்ந்த 200 பேரை எல் சால்வடார் நாட்டு சிறைக்கு அனுப்பியது அமெரிக்கா!

3 months 2 weeks ago
Over the weekend, the Trump administration invoked wartime powers to deport hundreds of alleged members of a Venezuelan gang from the US to El Salvador. After a lawsuit was filed, a federal judge ordered the administration to stop the deportations, for now. Here’s a timeline of where the deportation flights were as the legal case unfolded: March 15 before noon (all times Eastern) US District Judge James Boasberg issues a written order temporarily blocking the government from removing five specific individuals who sued the Trump administration over President Donald Trump’s use of the Alien Enemies Act. March 15 at 5:00 p.m. Judge James Boasberg’s hearing begins, according to a CNN reporter covering the proceedings. March 15 at 5:22 p.m. The court hearing adjourns for a break, according to a CNN reporter covering the proceedings. March 15 at 5:26 p.m. The first flight carrying non-citizens for deportation, GlobalX Flight 6143, departs from Harlingen, Texas, according to FlightRadar24 data. FlightRadar24 is a live air traffic tracker showing flight times. March 15 at 5:45 p.m. A second flight carrying non-citizens for deportation, GlobalX Flight 6145, departs from Harlingen, Texas, according to FlightRadar24. March 15 at 6:00 p.m. The court hearing resumes, according to a CNN reporter covering the proceedings. March 15 between 6:45 p.m. and 6:48 p.m. During the court hearing, the judge verbally tells Justice Department lawyers that they need to turn around any planes carrying anyone being deported under the Alien Enemies Act. The exact timing for this utterance is based on what the defendants who sued the Trump administration put in a court filing. According to a transcript of the hearing, the judge said: “any plane containing these folks that is going to take off or is in the air needs to be returned to the United States… this is something that you need to make sure is complied with immediately.” March 15 at 7:26 p.m. The judge’s written order is posted to the online federal docket system known as PACER, according to the lawyers who sued the Trump administration. The written order is a formalized version of what the judge said during the hearing. He wrote: “As discussed in today’s hearing, the Court ORDERS that… The Government is ENJOINED from removing” from the country any non-citizens in US custody who are covered by Trump’s proclamation about the Alien Enemies Act. The brief written order did not specifically include language about turning flights around. March 15 at 7:36 p.m. The first flight carrying non-citizens for deportation, GlobalX Flight 6143, arrives in Comayagua, Honduras, according to FlightRadar24. The lawyers who sued the Trump administration pointed out that this and the other flights landed after the judge – both verbally and in writing – ordered the government to turn around any planes. March 15 at 7:37 p.m. The third flight carrying non-citizens for deportation, GlobalX Flight 6122, departs from Harlingen, Texas, according to FlightRadar24. March 15 at 8:08 p.m. The second flight carrying non-citizens for deportation, GlobalX Flight 6145, lands in Tegucigalpa, Honduras, at 8:08 p.m., according to FlightRadar24. (The lawyers who sued the Trump administration inaccurately said in a court filing that this flight landed in San Salvador at 8:02 p.m., but flight tracking data specified otherwise.) March 15 at 9:52 p.m. The third flight carrying non-citizens for deportation, GlobalX Flight 6122, arrives in San Salvador, El Salvador according to FlightRadar24. March 15 at 11:37 p.m. The second flight carrying non-citizens for deportations continues its journey, departing from Tegucigalpa, Honduras, according to FlightRadar24. March 16 at 12:21 a.m. The second flight carrying non-citizens for deportations finishes its journey, landing in San Salvador, El Salvador, according to FlightRadar 24. March 16 around 3:46 p.m. The Justice Department submits a notice to the judge, acknowledging his rulings, but also saying some people were already deported. The notice said, “some gang members subject to removal under the Proclamation had already been removed from United States territory under the Proclamation before the issuance of this Court’s second order,” specifically referring to Boasberg’s written ruling posted to the docket at 7:26pm. https://www.cnn.com/2025/03/17/politics/deportation-flights-judge-timeline/index.html

பட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்பங்களும் இனஅழிப்பு விசாரணை மூடி மறைப்புகளும்

3 months 2 weeks ago
பட்டலந்த விசாரணையும் தேவை! தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகளையும் விசாரணை செய்ய வேண்டும்! : பட்டலந்த விசாரணையும் தேவை!

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
கிரிக்கேட் ஆலோச‌க‌ர் இந்த‌ முறை மூளைய‌ க‌ச‌க்கி க‌ள‌த்தில் குதிக்க‌ போர‌ மாதிரி தெரியுது ஜ‌ந்து ப‌வுன்ஸ் ப‌ரிசை வெல்ல‌ முன் கூட்டிய‌ வாழ்த்துக்க‌ள்......................................

பட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்பங்களும் இனஅழிப்பு விசாரணை மூடி மறைப்புகளும்

3 months 2 weeks ago
15 வருடங்களின் பின்னர் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு எதிரான புதிய உத்தி பட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்பங்களும் இனஅழிப்பு விசாரணை மூடி மறைப்புகளும்கொலைகளுக்கான நீதி் விசாரணையைவிடவும் புலிகளுக்கு எதிரான போருக்கு முக்கியத்துவம் வழங்கிய அநுர பதிப்பு: 2025 மார்ச் 17 18:29 புலம்: வவுனியா, ஈழம் புதுப்பிப்பு: மார்ச் 17 22:53 போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை என்றும், இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை அவசியம் எனவும் ஈழத்தமிழ் அமைப்புகள் பேசி வரும் நிலையில், 'பட்டலந்த' வதை முகாம் தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் பல காரண - காரியங்கள் உண்டு. இதனை மூன்று வகையாக நோக்கலாம். ஒன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பட்டலந்த வதை முகாமுடன் இருந்த தொடர்பு. இரண்டாவது, ரணில் விக்கிரமசிங்கவை ஜனநாயகவாதி எனவும் இனப் பிரச்சினைக்கு அவரால்தான் தீர்வை முன்வைக்க முடியும் என்றும் நம்புகின்ற மற்றும் அவருக்காக பிரச்சாரம் செய்கின்ற தமிழர்களின் மன நிலை பற்றியது. 2009 இற்குப் பின்னரான சூழலில் ரணில் - ராஜபக்ச தற்போது அநுரகுமார என்று மாறி மாறி ஆதரவு வழங்கி வரும், வழங்க முற்படும் தமிழரசுக் கட்சிக்கும் கட்சிகளாக இயங்கும் சில முன்னாள் ஈழ விடுதலை இயக்கங்களுக்கும், சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும் இக் கட்டுரை சமர்ப்பணம் மூன்றாவது, 1994 இல் இருந்து 2004 ஆம் ஆண்டு வரை சந்திரிகாவுக்கும் 2005 இல் இருந்து 2009 வரை மகிந்தவுக்கும் ஆதரவு வழங்கி தேன்நிலவை அனுபவித்த காலத்தில் இந்த 'பட்டலந்த ' வதை முகாம் பற்றிய அறிக்கையை ஜேவிபி ஏன் கோரவில்லை என்ற சந்தேகங்கள். இதில் முதலாவது காரணத்தை நோக்கினால், 1988- 89 ஆண்டுகளில் பிரேமதாச ஜனாதிபதியாக இருந்தபோது ரணில் அமைச்சராக இருந்தவர். பாதுகாப்பு அமைச்சராக ரஞ்சன் விஜேரட்ன இருந்தார். 'பட்டலந்த' வதை முகாமில் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரியாக இருந்த ஓய்வு பெற்ற பொலிஸ் பரிசோதகர் ஏ. பீ. கருணாரத்ன அப்போது முகாமில் நடந்த ஈவிரக்கமற்ற கொலைகள் பற்றி ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். குறிப்பாக சட்டத்தரணி விஜயதாஸ லியனாரச்சி கொடூரமாக கொலை செய்யப்பட்டமை பற்றி அவர் அந்த நேர்காணலில் விபரித்துள்ளார். சட்டத்தரணி விஜயதாச குற்றுயிராக இருந்த நிலையில் முகாமுக்கு ஒரு வாகனத்தில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவும், ரணில் விக்கிரமசிங்கவும் வந்து சென்றதாக அவர் கூறுகிறார். ஆகவே, இப் படுகொலைகளுக்கு அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி காரணம் என்பதும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்பு இருந்தது என்பதும் வெளிப்படையான ஒன்று. அதுவும் ரணிலின் இச் செயற்பாடுகள் பற்றி கடந்த 30 வருடங்களில் நாடாளுமன்றத்தில் சிங்கள உறுப்பினர்கள் பலரும் ஆதாரங்களுடன் சுட்டியிருக்கின்றனர். 1990 களில் நாடாளுமன்றத்தில் 'பட்டலந்த' என்ற பட்டப் பெயரும் ரணிலுக்கு இருந்தது. இப் பின்னணியில் இரண்டாவது காரணத்தை நோக்கினால், இந்த ரணில் விக்கிரமசிங்கவை 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறவிடாமல் விடுதலைப் புலிகள் தடுத்துவிட்டதாகவும், இனப்பிரச்சினைக்குரிய தீர்வை ரணில்தான் வழங்கக்கூடியவர் எனவும், முற்போக்குத் தமிழர்கள் பலரும், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் மாற்றுக் கருத்தாளர்கள் எனப்படுவோரும் திட்டித் தீர்த்து ரணிலை புனிதராக்கினர். ரணில் 2002 ஆம் ஆண்டு பிரதமராக இருந்தபோது நோர்வேயின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமாதானப் பேச்சில் புலிகளுக்கு எதிராக சர்வதேச அரங்கில் ரணில் மேற்கொண்ட இரகசிய காய்நகர்த்தல்களை அறிந்துகொண்ட பின்புலத்தில்தான் ரணிலை 2005 இல் புலிகள் ஜனாதிபதியாக்க விரும்பியிருக்கவில்லை என்பது நிதர்சனம். இதன் காரண காரியத்தோடு தான் ரணில் ஒரு 'நரி' என 2006 ஆம் ஆண்டு அன்ரன் பாலசிங்கம் லண்டனில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டியிருந்தார். 1990 களில் நாடாளுமன்றத்தில் ரணிலுக்கு 'பட்டலந்த' என்று பட்டப் பெயர் வைத்திருந்த சிங்கள உறுப்பினர்கள் பலரும் 2009 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் ரணிலை நரி என்றும் அவ்வப்போது உச்சரித்திருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறிய உறுப்பினர்கள்தான் ரணில் ஒரு நரி என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தினர். அதேநேரம், 2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்கத்தை நல்லாட்சி என்றும் ரணில்தான் தமிழர்களின் அரசியல் உரிமைகளை வழங்கும் நாயகன் என்றும் சட்டத்தரணி சுமந்திரன் தம்பட்டம் அடித்த காலமும் உண்டு. இந்த வரலாற்றோடு மேற்படி மூன்றாவது காரணத்தைச் சற்றுப் பின்னோக்கி ஆராய்வோம். 17 வருடங்களின் பின்னர் 1994 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த சந்திரிகா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம், 'பட்டலந்த ' வதை முகாம் மாத்திரமல்ல, 'சூரியவெ' படுகொலை உள்ளிட்ட ஜேவிபிக்கு எதிரான பல கொலைகளை விசாரணை நடத்துவதாக உறுதியளித்திருந்தது. சந்திரிகாவின் அரசாங்கத்தில் நடைபெற்ற கொலைகள் பற்றியெல்லாம் ஜேவிபி அன்று வாய் திறக்கவில்லை. பட்டலந்த முகாம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க விரும்பாத சந்திரிகா பற்றி அன்று எதுவுமே பேசவில்லை. மாறாக புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்த வேண்டும் என்று அழுத்தங்களுடன் மாத்திரமே சந்திரிகாவின் அரசாங்கத்துக்கு ஜேவிபி ஆதரவு வழங்கியது போரை நிறுத்தி புலிகளுடன் சமாதானப் பேச்சு நடத்தப்படும் என்றும் அப்போது சந்திரிகா மார் தட்டியிருந்தார். 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மேல் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டிருந்த சந்திரிகா, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் நடந்த கொலைகள், அட்டூழியங்கள் அனைத்தையும் அக்குவேறு ஆணிவேறாகக் காண்பித்தார். தோ்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பதவியேற்ற சந்திரிகா பின்னர் பிரதமராகவும் சில மாதங்களில் ஜனாதிபதியாகவும் பதவியேற்றார். அதாவது, முதன் முறையாக அரசியலில் ஈடுபட்டு 18 மாதங்களில் மேல் மாகாண சபை முதலமைச்சர், பின்னர் பிரதமர் அதன் பின்னர் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகவும் பதவியேற்றார். அதன்போது ஜேவிபி சந்திரிகாவுக்கு ஆதரவு கொடுத்தது. ஜேவிபியும் 1994 இல் முதன் முறையாக ஜனநாயக வழியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற நிஹால் கலப்பத்தி சந்திரிகா அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்திருந்தார். நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் என்றும் சந்திரிகாவுக்கு அவர் நிபந்தனை விதித்திருந்தார். அதேநேரம், தேர்தல் பிரச்சாரங்களின் போது உறுதியளித்தபடி புலிகளுடன் சமாதானப் பேச்சையும் சந்திரிகா ஆரம்பித்தார். ஆனாலும், பேச்சுகள் முறிவடைந்து 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானது. இந்தப் போருக்கு ஜேவிபி முழு ஆதரவு வழங்கியது. ஆனால், நிஹால் கலப்பத்தி சந்திரிகாவிடம் முன்வைத்த நிபந்தனைகளுக்கு நடந்தது என்ன? பட்டலந்த வதை முகாம் பற்றி மாத்திரமே சந்திரிகா விசாரணை நடத்தினார். ஆனால் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவுமில்லை. அத்துடன், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிக்கப்படவுமில்லை. நிஹால் கலப்பத்தி ஆதரவை விலக்கிக் கொண்டார். 1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாணம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு அங்கு பல கொலைகள் நடந்தன. 1996 இல் கிரிசாந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். 600 இற்கும் அதிகமான தமிழ் இளைஞர்கள் - பெண்கள் கொல்லப்பட்டு செம்மனியில் புதைக்கப்பட்டுள்ளதாக கிரிசாந்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவ சிப்பாய் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கியிருந்தார். கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிராகப் பல திட்டமிடப்பட்ட படுகொலைகள் சித்திரவதைகள் நடந்தன. குறிப்பாக மட்டக்களப்பில் குடும்பப் பெண் ஒருவரின் அந்தரங்க உறுப்பில் கிரனேட் வீசப்பட்டு நடந்த கோரக் கொலைகள் அன்று சர்வதேச ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டிருந்தன. ஆனால், சந்திரிகாவின் அரசாங்கத்தில் நடைபெற்ற இக் கொலைகள் பற்றியெல்லாம் ஜேவிபி அன்று வாய் திறக்கவில்லை. பட்டலந்த வதை முகாம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க விரும்பாத சந்திரிகா பற்றி அன்று ஜேவிபி எதுவுமே பேசவில்லை. மாறாக புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்த வேண்டும் என்று அழுத்தங்களுடன் மாத்திரமே சந்திரிகாவின் அரசாங்கத்துக்கு ஜேவிபி ஆதரவு வழங்கியது. 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரஃப், 'நுவா' எனப்படும் தேசிய ஐக்கிய முன்னணி என்ற கட்சியை உருவாக்கி அதில் சிங்கள - தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரையும் போட்டியிட வைத்தார். ஒரு தேசியக் கட்சியாக அஷ்ரஃப் தனது கட்சியைக் காண்பித்திருந்தார். இது சந்திரிகாவுக்குப் பெரும் சவாலாக மாறியது. இதனால், 2000 ஆம் ஆண்டு தேர்தலில் ஜேவியின் முழு ஒத்துழைப்பை சந்திரிகா பெற்றார். அத்துடன் பிரித்தானியாவில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருந்த ஜேவிபி தலைவர் சோமவன்ச அமரசிங்கவுக்கு இலங்கை வருவதற்கு சந்திரிகா அனுமதியும் வழங்கினார். 1988 ஆம் ஆண்டு இலங்கையை விட்டுத் தப்பிச் சென்ற சோமவன்ச அமரசிங்க 2000 ஆம் ஆண்டு கொழும்புக்கு வந்து நடத்திய முதலாவது செய்தியாளர் மாநாடு கல்கிசை ஹோட்டேலில் நடைபெற்றது. அங்கு செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த சோமவன்ச ஐம்பதாயிரம் சிங்கள இளைஞர்களைத் திரட்டி புலிகளுக்கு எதிரான போருக்கு அனுப்புவேன் என்று உறுதியளித்திருந்தார். தேர்தல் பிரச்சார மேடைகளில் அவர் புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்த வேண்டும் என்று முழங்கியிருந்தார்.. இதனால் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜேவிபி பெற்றது. ஜேவிபியின் ஆதரவுடன் சந்திரிகா நற்சான்றிதழ் என்ற பெயரில் அரசாங்கத்தை அமைத்திருந்தார். ஆனால், இந்த ஆட்சியில் கூட பட்டலந்த வதை முகாம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜே.வி.பி சந்திரிகாவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. இருந்தாலும் இந்த அரசாங்கமும் கவிழ்ந்து 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அக் காலத்தில்தான் நோர்வேயின் சமாதான முயற்சியும் ஆரம்பிக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரங்களில் நோர்வேயின் சமாதான முயற்சிக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்ட ஜேவிபி, பட்டலந்த வதை முகாம் உட்பட தங்களுக்கு எதிராக 1970 களிலும் 1988 -89 ஆம் ஆண்டுகளிலும் இலங்கை இராணுவம் புரிந்த படுகொலைகள் தொடர்பாக பேசாமல், விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரங்களை மாத்திரமே முன்னெடுத்திருந்தது. 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரஃப், 'நுவா' எனப்படும் தேசிய ஐக்கிய முன்னணி என்ற கட்சியை உருவாக்கி அதில் சிங்கள - தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரையும் போட்டியிட வைத்தார். ஒரு தேசியக் கட்சியாக அஷ்ரஃப் தனது கட்சியைக் காண்பித்திருந்தார். இது சந்திரிகாவுக்குப் பெரும் சவாலாக மாறியது. இதனால், 2000 ஆம் ஆண்டு தேர்தலில் ஜேவியின் முழு ஒத்துழைப்பை சந்திரிகா பெற்றார் இதனால் ஜேவிபிக்கு 16 ஆசனங்கள் கிடைத்தன. ஆனாலும், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை அமைத்தது. சந்திரிகா ஜனாதிபதியாக இருக்க ரணில் பிரதமராக இருந்தார். அரசாங்கம் வேறு கட்சியாகவும் ஜனாதிபதி மற்றொரு கட்சியாகவும் முதன் முதலில் மாறுபட்ட ஆட்சி முறை ஒன்று இலங்கைத்தீவில் உருவானது. இச் சூழலில்தான் நோர்வேயின் ஏற்பாட்டுடன் சந்திரிகா ஆரம்பித்த சமாதான முயற்சியை ரணில் முழுமைப்படுத்தினார். 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை அரசாங்கமும் புலிகளும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட ஜேவிபி பௌத்த பிக்குமாரின் ஒத்துழைப்புடன் கொழும்பில் தொடர் போராட்டங்களை நடத்தியிருந்தது. சந்திரிகா ஜனாதிபதியாக இருந்து கொண்டு ஜேவிபிக்கு மறைமுக ஆதரவு வழங்கினார். ஜேவிபியின் எதிர்ப்பை காண்பித்து நோர்வேயின் சமாதான முயற்சிகளில் பல இடர்பாடுகளை சந்திரிகா உருவாக்கினார். ரணில் விக்கிரமசிங்கவும் சந்திரிகாவின் எதிர்ப்புகளை மேற்கோள் காண்பித்து பேச்சுவார்த்தை மேசையில் புலிகளின் நியாயமான கோரிக்கைகள் பலவற்றை தட்டிக்கழித்தார். அதாவது, தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படுவதை தடுக்க சந்திரிகாவின் எதிர்ப்பை ஒரு உத்தியாகப் பயன்படுத்தினார் ரணில். இந்த இழுபறியில் தான் 2003 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சு உட்பட மூன்று முக்கிய அமைச்சுக்களை சந்திரிகா ரணிலின் அரசாங்கத்திடம் இருந்து கையகப்படுத்தினார். இதனால் கொழும்பில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. சமாதான பேச்சுக்கள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டன. சுந்திரிகாவின் இச் செயற்பாட்டுக்கு ஜேவிபி பின்னணியாக இருந்தது. இந்த இழுபறி நிலையினால் ரணிலின் அரசாங்கத்தை சந்திரிகா கலைத்தார். இதனால் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. நோர்வேயின் சமாதான முயற்சிக்கு எதிராகவே ஜேவிபியும் சந்திரிகா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தன. சந்திரிகாவின் வெற்றிலைச் சின்னத்தில் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டதால் ஜேவிபிக்கு 39 ஆசனங்கள் கிடைத்தன. சந்திரிகா அமைத்த அரசாங்கத்தில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விவசாய அமைச்சராக பதவி வகித்திருந்தார். ஆனால், அந்த அரசாங்கத்தில் கூட 'பட்டலந்த' வதை முகாம் தொடர்பான அறிக்கை யை ஜேவிபி கோரவில்லை. மாறாக நோர்வேயை சமாதான முயற்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே ஜேவிபியின் ஒரேயொரு இலக்காக இருந்தது. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் வெற்றிக் கடுமையாக உழைத்த ஜேவிபி புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்த கடும் அழுத்தங்களைக் கொடுத்தது. ஆக புலிகளை இல்லாதொழிக்க வேண்டும் என்ற இலக்கு மாத்திரமே ஜேவிபிக்கு 1994 இல் இருந்து 2009 மே மாதம் வரை இருந்தது என்பது இங்கே கண்கூடு. எனவே, இந்த வரலாற்றுப் பின்னணியில் இனவாதத்தை மூலதனமாக்கி 2024 ஆண்டு செப்டம்பர் மாதம் 159 என்ற அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களுடன் ஆட்சியமைத்துள்ள ஜேவிபியின் முகத் தோற்றமான தேசிய மக்கள் சக்தி, பட்டலந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமா்ப்பித்திருக்கிறது. உண்மையில் பாதிக்கப்பட்ட ஜேவிபி உறுப்பினர்கள் - ஆதரவாளர்கள் மற்றும் சாதாரண சிங்களப் பொதுமக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காவே என்று சிங்கள மக்கள் நம்பலாம். ஆனால் நோக்கம் அதுவல்ல. இதை மூன்று வகைப்படுத்தலாம் ஒன்று, இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கைகளை மடைமாற்றி எண்பது வருட அரசியல் போராட்டத்தை இலங்கைத்தீவின் உள்ளக விவகாரமாக மாற்றுவது. 2003 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சு உட்பட மூன்று முக்கிய அமைச்சுக்களை சந்திரிகா ரணிலின் அரசாங்கத்திடம் இருந்து கையகப்படுத்தினார். இதனால் கொழும்பில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. சமாதான பேச்சுக்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. சுந்திரிகாவின் இச் செயற்பாட்டுக்கு ஜேவிபி பின்னணியாக இருந்தது இரண்டாவது, இலங்கையின் மூத்த சிங்கள அரசியல்வாதிகள் சிலரையும் இலங்கை இராணுவ உயர் அதிகாரிகள் சிலரையும் தண்டித்தால் போதும் என்ற மனப்பாங்குடன் செயற்பட்டு இலங்கை ஒற்றை அரசு என்ற கட்டமைப்பு நியாயமானது நீதியானது என்ற எண்ணப்பாட்டை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்துவது. மூன்றாவது, ரணில் - சஜித் பிரேமதாச ஆகியோர் எதிர்காலத்தில் கூட்டுச் சேர்ந்து மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியாக அல்லது புதிய அரசியல் அணியாகச் செயற்படுவதை தடுப்பது. ஆகவே "மாற்றம்" "சோசலிசம்" என்று மார் தட்டிக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஜேவிபி, இரண்டு விடயங்களை புரிந்து கொள்ள வேண்டும் ஒன்று - ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தையும் அதற்காக நடந்த 30 வருட போரில் தமிழர்கள் கொல்லப்பட்டமை, சித்தரவதை செய்யப்பட்டமை என்பது இன அழிப்பின் வெளிப்பாடு. தமிழர்களின் மரபு அடையாளங்கள், கலாசாரங்கள் கூட 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னரான சூழலிலும் அழிக்கப்பட்டு வருகின்றன. இரண்டாவது - பட்டலந்த வதை முகாம் உட்பட பல வதை முகாம்களில் ஜேவிபி உறுப்பினா்கள்- ஆதரவாளர்கள் கொல்லப்பட்டமை சித்திரவதை செய்யப்பட்டமை என்பது ஒரு இனத்துக்குள் நடந்த கொலைகள். அது இன அழிப்பு அல்ல. இக் கொலைகள் சர்வதேசக் குற்றங்கள் என்று இதுவரையும் எந்தவொரு சர்வதேச நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் கூறவேயில்லை. ஆனால் ஈழத்தமிழர்கள் மீது இலங்கை இராணுவம் நடத்திய படு கொலைகள் சர்வதேசக் குற்றங்கள் என்றே ஜெனிவா மனித உரிமைச் சபையின் அறிக்கைகள் கூறியிருக்கின்றன. போர்க்குற்ற விசாரணை அவசியம் என்று ஐ.நா அறிக்கைகளிலும், சர்வதேச நீதி விசாரணை அவசியம் என்றும் பல சர்வதேச நாடுகளும் கூட சுட்டிக்காட்டியுமிருக்கின்றன. இன அழிப்பு என தமிழர்கள் கோரினாலும் இன்னமும் அதனை சர்வதேச நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தாலும் கனடா போன்ற சில சா்வதேச நாடுகள் இன அழிப்பு என்பது பற்றி பரிசீலிக்கிக்கின்றன. எனவே பட்டலந்த படுகொலைகள் சர்வதேசக் குற்றமா என்பதை ஜேபிவிதான் கூற வேண்டும். ஆகவே, மேலும் இரண்டு விடயங்களை ஜேவிபி புரிந்துகொள்ள வேண்டும். ஒன்று - பட்டலந்த வதை முகாம் அறிக்கையை மாத்திரம் நாடாளுமன்றத்தில் சமா்ப்பித்து அதனை வெறும் பேசுபொருளாக சித்தரிக்க முயற்சிக்கும் நகர்வு என்பது ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரும் அரசியல் அநீதி. இரண்டாவது - பட்டலந்த முகாம் அறிக்கையை உள்ளூராட்சி சபை தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தினால், பெரும்பான்மையாக வாக்களித்த சிங்கள மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும். ஆகவே, கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக பட்டலந்த முகாம் அறிக்கை மாறலாம். இந்த இடத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பலவீனங்களும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் தேர்தல் வியூகங்களுக்குள் மாத்திரம் மூழ்கியிருப்பது மிக மிக ஆபத்தானது. புதிய இளம் தலைமுறை இந்த வரலாறுகளை நன்கு கற்றுக்கொள்ள வேண்டும். 2009 இற்குப் பின்னரான சூழலில் ரணில் - ராஜபக்ச தற்போது அநுரகுமார என்று மாறி மாறி ஆதரவு வழங்கி வரும், வழங்க முற்படும் தமிழரசுக் கட்சிக்கும் கட்சிகளாக இயங்கும் சில முன்னாள் ஈழ விடுதலை இயக்கங்களுக்கும், சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும் இக் கட்டுரை சமர்ப்பணம். கூர்மை - koormai.comபட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்ப...போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை என்றும், இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை அவசியம் எனவும் ஈழத்தமிழ் அமைப்புகள் பேசி வரும் நிலையில், 'பட்டலந்த' வதை முகாம் தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி நாடாள...

பட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்பங்களும் இனஅழிப்பு விசாரணை மூடி மறைப்புகளும்

3 months 2 weeks ago

15 வருடங்களின் பின்னர் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு எதிரான புதிய உத்தி

பட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்பங்களும் இனஅழிப்பு விசாரணை மூடி மறைப்புகளும்

கொலைகளுக்கான நீதி் விசாரணையைவிடவும் புலிகளுக்கு எதிரான போருக்கு முக்கியத்துவம் வழங்கிய அநுர

பதிப்பு: 2025 மார்ச் 17 18:29

புலம்: வவுனியா, ஈழம்

புதுப்பிப்பு: மார்ச் 17 22:53

main photomain photomain photo

போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை என்றும், இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை அவசியம் எனவும் ஈழத்தமிழ் அமைப்புகள் பேசி வரும் நிலையில், 'பட்டலந்த' வதை முகாம் தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் பல காரண - காரியங்கள் உண்டு. இதனை மூன்று வகையாக நோக்கலாம். ஒன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பட்டலந்த வதை முகாமுடன் இருந்த தொடர்பு. இரண்டாவது, ரணில் விக்கிரமசிங்கவை ஜனநாயகவாதி எனவும் இனப் பிரச்சினைக்கு அவரால்தான் தீர்வை முன்வைக்க முடியும் என்றும் நம்புகின்ற மற்றும் அவருக்காக பிரச்சாரம் செய்கின்ற தமிழர்களின் மன நிலை பற்றியது.
 

2009 இற்குப் பின்னரான சூழலில் ரணில் - ராஜபக்ச தற்போது அநுரகுமார என்று மாறி மாறி ஆதரவு வழங்கி வரும், வழங்க முற்படும் தமிழரசுக் கட்சிக்கும் கட்சிகளாக இயங்கும் சில முன்னாள் ஈழ விடுதலை இயக்கங்களுக்கும், சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும் இக் கட்டுரை சமர்ப்பணம்

மூன்றாவது, 1994 இல் இருந்து 2004 ஆம் ஆண்டு வரை சந்திரிகாவுக்கும் 2005 இல் இருந்து 2009 வரை மகிந்தவுக்கும் ஆதரவு வழங்கி தேன்நிலவை அனுபவித்த காலத்தில் இந்த 'பட்டலந்த ' வதை முகாம் பற்றிய அறிக்கையை ஜேவிபி ஏன் கோரவில்லை என்ற சந்தேகங்கள்.

இதில் முதலாவது காரணத்தை நோக்கினால்,

1988- 89 ஆண்டுகளில் பிரேமதாச ஜனாதிபதியாக இருந்தபோது ரணில் அமைச்சராக இருந்தவர். பாதுகாப்பு அமைச்சராக ரஞ்சன் விஜேரட்ன இருந்தார். 'பட்டலந்த' வதை முகாமில் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரியாக இருந்த ஓய்வு பெற்ற பொலிஸ் பரிசோதகர் ஏ. பீ. கருணாரத்ன அப்போது முகாமில் நடந்த ஈவிரக்கமற்ற கொலைகள் பற்றி ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்.

குறிப்பாக சட்டத்தரணி விஜயதாஸ லியனாரச்சி கொடூரமாக கொலை செய்யப்பட்டமை பற்றி அவர் அந்த நேர்காணலில் விபரித்துள்ளார்.

சட்டத்தரணி விஜயதாச குற்றுயிராக இருந்த நிலையில் முகாமுக்கு ஒரு வாகனத்தில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவும், ரணில் விக்கிரமசிங்கவும் வந்து சென்றதாக அவர் கூறுகிறார்.

ஆகவே, இப் படுகொலைகளுக்கு அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி காரணம் என்பதும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்பு இருந்தது என்பதும் வெளிப்படையான ஒன்று. அதுவும் ரணிலின் இச் செயற்பாடுகள் பற்றி கடந்த 30 வருடங்களில் நாடாளுமன்றத்தில் சிங்கள உறுப்பினர்கள் பலரும் ஆதாரங்களுடன் சுட்டியிருக்கின்றனர். 1990 களில் நாடாளுமன்றத்தில் 'பட்டலந்த' என்ற பட்டப் பெயரும் ரணிலுக்கு இருந்தது.

இப் பின்னணியில் இரண்டாவது காரணத்தை நோக்கினால்,

இந்த ரணில் விக்கிரமசிங்கவை 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறவிடாமல் விடுதலைப் புலிகள் தடுத்துவிட்டதாகவும், இனப்பிரச்சினைக்குரிய தீர்வை ரணில்தான் வழங்கக்கூடியவர் எனவும், முற்போக்குத் தமிழர்கள் பலரும், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் மாற்றுக் கருத்தாளர்கள் எனப்படுவோரும் திட்டித் தீர்த்து ரணிலை புனிதராக்கினர்.

ரணில் 2002 ஆம் ஆண்டு பிரதமராக இருந்தபோது நோர்வேயின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமாதானப் பேச்சில் புலிகளுக்கு எதிராக சர்வதேச அரங்கில் ரணில் மேற்கொண்ட இரகசிய காய்நகர்த்தல்களை அறிந்துகொண்ட பின்புலத்தில்தான் ரணிலை 2005 இல் புலிகள் ஜனாதிபதியாக்க விரும்பியிருக்கவில்லை என்பது நிதர்சனம்.

இதன் காரண காரியத்தோடு தான் ரணில் ஒரு 'நரி' என 2006 ஆம் ஆண்டு அன்ரன் பாலசிங்கம் லண்டனில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டியிருந்தார்.

1990 களில் நாடாளுமன்றத்தில் ரணிலுக்கு 'பட்டலந்த' என்று பட்டப் பெயர் வைத்திருந்த சிங்கள உறுப்பினர்கள் பலரும் 2009 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் ரணிலை நரி என்றும் அவ்வப்போது உச்சரித்திருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறிய உறுப்பினர்கள்தான் ரணில் ஒரு நரி என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தினர்.

அதேநேரம், 2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்கத்தை நல்லாட்சி என்றும் ரணில்தான் தமிழர்களின் அரசியல் உரிமைகளை வழங்கும் நாயகன் என்றும் சட்டத்தரணி சுமந்திரன் தம்பட்டம் அடித்த காலமும் உண்டு.

இந்த வரலாற்றோடு மேற்படி மூன்றாவது காரணத்தைச் சற்றுப் பின்னோக்கி ஆராய்வோம்.

17 வருடங்களின் பின்னர் 1994 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த சந்திரிகா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம், 'பட்டலந்த ' வதை முகாம் மாத்திரமல்ல, 'சூரியவெ' படுகொலை உள்ளிட்ட ஜேவிபிக்கு எதிரான பல கொலைகளை விசாரணை நடத்துவதாக உறுதியளித்திருந்தது.

சந்திரிகாவின் அரசாங்கத்தில் நடைபெற்ற கொலைகள் பற்றியெல்லாம் ஜேவிபி அன்று வாய் திறக்கவில்லை. பட்டலந்த முகாம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க விரும்பாத சந்திரிகா பற்றி அன்று எதுவுமே பேசவில்லை. மாறாக புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்த வேண்டும் என்று அழுத்தங்களுடன் மாத்திரமே சந்திரிகாவின் அரசாங்கத்துக்கு ஜேவிபி ஆதரவு வழங்கியது

போரை நிறுத்தி புலிகளுடன் சமாதானப் பேச்சு நடத்தப்படும் என்றும் அப்போது சந்திரிகா மார் தட்டியிருந்தார். 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மேல் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டிருந்த சந்திரிகா, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் நடந்த கொலைகள், அட்டூழியங்கள் அனைத்தையும் அக்குவேறு ஆணிவேறாகக் காண்பித்தார்.

தோ்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பதவியேற்ற சந்திரிகா பின்னர் பிரதமராகவும் சில மாதங்களில் ஜனாதிபதியாகவும் பதவியேற்றார். அதாவது, முதன் முறையாக அரசியலில் ஈடுபட்டு 18 மாதங்களில் மேல் மாகாண சபை முதலமைச்சர், பின்னர் பிரதமர் அதன் பின்னர் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகவும் பதவியேற்றார்.

அதன்போது ஜேவிபி சந்திரிகாவுக்கு ஆதரவு கொடுத்தது. ஜேவிபியும் 1994 இல் முதன் முறையாக ஜனநாயக வழியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற நிஹால் கலப்பத்தி சந்திரிகா அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்திருந்தார்.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் என்றும் சந்திரிகாவுக்கு அவர் நிபந்தனை விதித்திருந்தார்.

அதேநேரம், தேர்தல் பிரச்சாரங்களின் போது உறுதியளித்தபடி புலிகளுடன் சமாதானப் பேச்சையும் சந்திரிகா ஆரம்பித்தார். ஆனாலும், பேச்சுகள் முறிவடைந்து 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானது. இந்தப் போருக்கு ஜேவிபி முழு ஆதரவு வழங்கியது.

ஆனால், நிஹால் கலப்பத்தி சந்திரிகாவிடம் முன்வைத்த நிபந்தனைகளுக்கு நடந்தது என்ன? பட்டலந்த வதை முகாம் பற்றி மாத்திரமே சந்திரிகா விசாரணை நடத்தினார். ஆனால் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவுமில்லை. அத்துடன், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிக்கப்படவுமில்லை.

நிஹால் கலப்பத்தி ஆதரவை விலக்கிக் கொண்டார். 1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாணம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு அங்கு பல கொலைகள் நடந்தன. 1996 இல் கிரிசாந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். 600 இற்கும் அதிகமான தமிழ் இளைஞர்கள் - பெண்கள் கொல்லப்பட்டு செம்மனியில் புதைக்கப்பட்டுள்ளதாக கிரிசாந்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவ சிப்பாய் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிராகப் பல திட்டமிடப்பட்ட படுகொலைகள் சித்திரவதைகள் நடந்தன. குறிப்பாக மட்டக்களப்பில் குடும்பப் பெண் ஒருவரின் அந்தரங்க உறுப்பில் கிரனேட் வீசப்பட்டு நடந்த கோரக் கொலைகள் அன்று சர்வதேச ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டிருந்தன.

ஆனால், சந்திரிகாவின் அரசாங்கத்தில் நடைபெற்ற இக் கொலைகள் பற்றியெல்லாம் ஜேவிபி அன்று வாய் திறக்கவில்லை. பட்டலந்த வதை முகாம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க விரும்பாத சந்திரிகா பற்றி அன்று ஜேவிபி எதுவுமே பேசவில்லை. மாறாக புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்த வேண்டும் என்று அழுத்தங்களுடன் மாத்திரமே சந்திரிகாவின் அரசாங்கத்துக்கு ஜேவிபி ஆதரவு வழங்கியது.

2000 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரஃப், 'நுவா' எனப்படும் தேசிய ஐக்கிய முன்னணி என்ற கட்சியை உருவாக்கி அதில் சிங்கள - தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரையும் போட்டியிட வைத்தார். ஒரு தேசியக் கட்சியாக அஷ்ரஃப் தனது கட்சியைக் காண்பித்திருந்தார். இது சந்திரிகாவுக்குப் பெரும் சவாலாக மாறியது.

இதனால், 2000 ஆம் ஆண்டு தேர்தலில் ஜேவியின் முழு ஒத்துழைப்பை சந்திரிகா பெற்றார். அத்துடன் பிரித்தானியாவில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருந்த ஜேவிபி தலைவர் சோமவன்ச அமரசிங்கவுக்கு இலங்கை வருவதற்கு சந்திரிகா அனுமதியும் வழங்கினார்.

1988 ஆம் ஆண்டு இலங்கையை விட்டுத் தப்பிச் சென்ற சோமவன்ச அமரசிங்க 2000 ஆம் ஆண்டு கொழும்புக்கு வந்து நடத்திய முதலாவது செய்தியாளர் மாநாடு கல்கிசை ஹோட்டேலில் நடைபெற்றது. அங்கு செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த சோமவன்ச ஐம்பதாயிரம் சிங்கள இளைஞர்களைத் திரட்டி புலிகளுக்கு எதிரான போருக்கு அனுப்புவேன் என்று உறுதியளித்திருந்தார்.

தேர்தல் பிரச்சார மேடைகளில் அவர் புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்த வேண்டும் என்று முழங்கியிருந்தார்.. இதனால் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜேவிபி பெற்றது. ஜேவிபியின் ஆதரவுடன் சந்திரிகா நற்சான்றிதழ் என்ற பெயரில் அரசாங்கத்தை அமைத்திருந்தார். ஆனால், இந்த ஆட்சியில் கூட பட்டலந்த வதை முகாம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜே.வி.பி சந்திரிகாவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. இருந்தாலும் இந்த அரசாங்கமும் கவிழ்ந்து 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.

அக் காலத்தில்தான் நோர்வேயின் சமாதான முயற்சியும் ஆரம்பிக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரங்களில் நோர்வேயின் சமாதான முயற்சிக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்ட ஜேவிபி, பட்டலந்த வதை முகாம் உட்பட தங்களுக்கு எதிராக 1970 களிலும் 1988 -89 ஆம் ஆண்டுகளிலும் இலங்கை இராணுவம் புரிந்த படுகொலைகள் தொடர்பாக பேசாமல், விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரங்களை மாத்திரமே முன்னெடுத்திருந்தது.

2000 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரஃப், 'நுவா' எனப்படும் தேசிய ஐக்கிய முன்னணி என்ற கட்சியை உருவாக்கி அதில் சிங்கள - தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரையும் போட்டியிட வைத்தார். ஒரு தேசியக் கட்சியாக அஷ்ரஃப் தனது கட்சியைக் காண்பித்திருந்தார். இது சந்திரிகாவுக்குப் பெரும் சவாலாக மாறியது. இதனால், 2000 ஆம் ஆண்டு தேர்தலில் ஜேவியின் முழு ஒத்துழைப்பை சந்திரிகா பெற்றார்

இதனால் ஜேவிபிக்கு 16 ஆசனங்கள் கிடைத்தன. ஆனாலும், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை அமைத்தது.

சந்திரிகா ஜனாதிபதியாக இருக்க ரணில் பிரதமராக இருந்தார். அரசாங்கம் வேறு கட்சியாகவும் ஜனாதிபதி மற்றொரு கட்சியாகவும் முதன் முதலில் மாறுபட்ட ஆட்சி முறை ஒன்று இலங்கைத்தீவில் உருவானது.

இச் சூழலில்தான் நோர்வேயின் ஏற்பாட்டுடன் சந்திரிகா ஆரம்பித்த சமாதான முயற்சியை ரணில் முழுமைப்படுத்தினார். 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை அரசாங்கமும் புலிகளும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட ஜேவிபி பௌத்த பிக்குமாரின் ஒத்துழைப்புடன் கொழும்பில் தொடர் போராட்டங்களை நடத்தியிருந்தது. சந்திரிகா ஜனாதிபதியாக இருந்து கொண்டு ஜேவிபிக்கு மறைமுக ஆதரவு வழங்கினார்.

ஜேவிபியின் எதிர்ப்பை காண்பித்து நோர்வேயின் சமாதான முயற்சிகளில் பல இடர்பாடுகளை சந்திரிகா உருவாக்கினார். ரணில் விக்கிரமசிங்கவும் சந்திரிகாவின் எதிர்ப்புகளை மேற்கோள் காண்பித்து பேச்சுவார்த்தை மேசையில் புலிகளின் நியாயமான கோரிக்கைகள் பலவற்றை தட்டிக்கழித்தார். அதாவது, தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படுவதை தடுக்க சந்திரிகாவின் எதிர்ப்பை ஒரு உத்தியாகப் பயன்படுத்தினார் ரணில்.

இந்த இழுபறியில் தான் 2003 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சு உட்பட மூன்று முக்கிய அமைச்சுக்களை சந்திரிகா ரணிலின் அரசாங்கத்திடம் இருந்து கையகப்படுத்தினார். இதனால் கொழும்பில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. சமாதான பேச்சுக்கள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டன. சுந்திரிகாவின் இச் செயற்பாட்டுக்கு ஜேவிபி பின்னணியாக இருந்தது.

இந்த இழுபறி நிலையினால் ரணிலின் அரசாங்கத்தை சந்திரிகா கலைத்தார். இதனால் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. நோர்வேயின் சமாதான முயற்சிக்கு எதிராகவே ஜேவிபியும் சந்திரிகா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தன.

சந்திரிகாவின் வெற்றிலைச் சின்னத்தில் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டதால் ஜேவிபிக்கு 39 ஆசனங்கள் கிடைத்தன. சந்திரிகா அமைத்த அரசாங்கத்தில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விவசாய அமைச்சராக பதவி வகித்திருந்தார்.

ஆனால், அந்த அரசாங்கத்தில் கூட 'பட்டலந்த' வதை முகாம் தொடர்பான அறிக்கை யை ஜேவிபி கோரவில்லை. மாறாக நோர்வேயை சமாதான முயற்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே ஜேவிபியின் ஒரேயொரு இலக்காக இருந்தது.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் வெற்றிக் கடுமையாக உழைத்த ஜேவிபி புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்த கடும் அழுத்தங்களைக் கொடுத்தது.

ஆக புலிகளை இல்லாதொழிக்க வேண்டும் என்ற இலக்கு மாத்திரமே ஜேவிபிக்கு 1994 இல் இருந்து 2009 மே மாதம் வரை இருந்தது என்பது இங்கே கண்கூடு.

எனவே, இந்த வரலாற்றுப் பின்னணியில் இனவாதத்தை மூலதனமாக்கி 2024 ஆண்டு செப்டம்பர் மாதம் 159 என்ற அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களுடன் ஆட்சியமைத்துள்ள ஜேவிபியின் முகத் தோற்றமான தேசிய மக்கள் சக்தி, பட்டலந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமா்ப்பித்திருக்கிறது.

உண்மையில் பாதிக்கப்பட்ட ஜேவிபி உறுப்பினர்கள் - ஆதரவாளர்கள் மற்றும் சாதாரண சிங்களப் பொதுமக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காவே என்று சிங்கள மக்கள் நம்பலாம். ஆனால் நோக்கம் அதுவல்ல.

இதை மூன்று வகைப்படுத்தலாம்

ஒன்று, இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கைகளை மடைமாற்றி எண்பது வருட அரசியல் போராட்டத்தை இலங்கைத்தீவின் உள்ளக விவகாரமாக மாற்றுவது.

2003 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சு உட்பட மூன்று முக்கிய அமைச்சுக்களை சந்திரிகா ரணிலின் அரசாங்கத்திடம் இருந்து கையகப்படுத்தினார். இதனால் கொழும்பில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. சமாதான பேச்சுக்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. சுந்திரிகாவின் இச் செயற்பாட்டுக்கு ஜேவிபி பின்னணியாக இருந்தது

இரண்டாவது, இலங்கையின் மூத்த சிங்கள அரசியல்வாதிகள் சிலரையும் இலங்கை இராணுவ உயர் அதிகாரிகள் சிலரையும் தண்டித்தால் போதும் என்ற மனப்பாங்குடன் செயற்பட்டு இலங்கை ஒற்றை அரசு என்ற கட்டமைப்பு நியாயமானது நீதியானது என்ற எண்ணப்பாட்டை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்துவது.

மூன்றாவது, ரணில் - சஜித் பிரேமதாச ஆகியோர் எதிர்காலத்தில் கூட்டுச் சேர்ந்து மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியாக அல்லது புதிய அரசியல் அணியாகச் செயற்படுவதை தடுப்பது.

ஆகவே "மாற்றம்" "சோசலிசம்" என்று மார் தட்டிக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஜேவிபி, இரண்டு விடயங்களை புரிந்து கொள்ள வேண்டும்

ஒன்று - ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தையும் அதற்காக நடந்த 30 வருட போரில் தமிழர்கள் கொல்லப்பட்டமை, சித்தரவதை செய்யப்பட்டமை என்பது இன அழிப்பின் வெளிப்பாடு. தமிழர்களின் மரபு அடையாளங்கள், கலாசாரங்கள் கூட 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னரான சூழலிலும் அழிக்கப்பட்டு வருகின்றன.

இரண்டாவது - பட்டலந்த வதை முகாம் உட்பட பல வதை முகாம்களில் ஜேவிபி உறுப்பினா்கள்- ஆதரவாளர்கள் கொல்லப்பட்டமை சித்திரவதை செய்யப்பட்டமை என்பது ஒரு இனத்துக்குள் நடந்த கொலைகள்.

அது இன அழிப்பு அல்ல. இக் கொலைகள் சர்வதேசக் குற்றங்கள் என்று இதுவரையும் எந்தவொரு சர்வதேச நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் கூறவேயில்லை.

ஆனால் ஈழத்தமிழர்கள் மீது இலங்கை இராணுவம் நடத்திய படு கொலைகள் சர்வதேசக் குற்றங்கள் என்றே ஜெனிவா மனித உரிமைச் சபையின் அறிக்கைகள் கூறியிருக்கின்றன. போர்க்குற்ற விசாரணை அவசியம் என்று ஐ.நா அறிக்கைகளிலும், சர்வதேச நீதி விசாரணை அவசியம் என்றும் பல சர்வதேச நாடுகளும் கூட சுட்டிக்காட்டியுமிருக்கின்றன.

இன அழிப்பு என தமிழர்கள் கோரினாலும் இன்னமும் அதனை சர்வதேச நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தாலும் கனடா போன்ற சில சா்வதேச நாடுகள் இன அழிப்பு என்பது பற்றி பரிசீலிக்கிக்கின்றன.

எனவே பட்டலந்த படுகொலைகள் சர்வதேசக் குற்றமா என்பதை ஜேபிவிதான் கூற வேண்டும்.

ஆகவே, மேலும் இரண்டு விடயங்களை ஜேவிபி புரிந்துகொள்ள வேண்டும்.

ஒன்று - பட்டலந்த வதை முகாம் அறிக்கையை மாத்திரம் நாடாளுமன்றத்தில் சமா்ப்பித்து அதனை வெறும் பேசுபொருளாக சித்தரிக்க முயற்சிக்கும் நகர்வு என்பது ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரும் அரசியல் அநீதி.

இரண்டாவது - பட்டலந்த முகாம் அறிக்கையை உள்ளூராட்சி சபை தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தினால், பெரும்பான்மையாக வாக்களித்த சிங்கள மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும்.

ஆகவே, கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக பட்டலந்த முகாம் அறிக்கை மாறலாம். இந்த இடத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பலவீனங்களும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் தேர்தல் வியூகங்களுக்குள் மாத்திரம் மூழ்கியிருப்பது மிக மிக ஆபத்தானது. புதிய இளம் தலைமுறை இந்த வரலாறுகளை நன்கு கற்றுக்கொள்ள வேண்டும்.

2009 இற்குப் பின்னரான சூழலில் ரணில் - ராஜபக்ச தற்போது அநுரகுமார என்று மாறி மாறி ஆதரவு வழங்கி வரும், வழங்க முற்படும் தமிழரசுக் கட்சிக்கும் கட்சிகளாக இயங்கும் சில முன்னாள் ஈழ விடுதலை இயக்கங்களுக்கும், சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும் இக் கட்டுரை சமர்ப்பணம்.


கூர்மை - koormai.com
No image previewபட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்ப...
போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை என்றும், இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை அவசியம் எனவும் ஈழத்தமிழ் அமைப்புகள் பேசி வரும் நிலையில், 'பட்டலந்த' வதை முகாம் தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி நாடாள...

எழுதும் கதை - ஷோபாசக்தி

3 months 2 weeks ago
எழுதும் கதை - ஷோபாசக்தி [‘காலம்’ 61|62- பேராசிரியர் நுஃமான் சிறப்பிதழில் வெளியாகிய எனது கட்டுரை] 1997- 2024 காலப்பகுதியில் நான் எழுதிய மொத்தச் சிறுகதைகளும் தொகுப்பாக்கப்பட்டு ‘கருப்புப் பிரதிகள்’ பதிப்பகத்தால் வெளியிடப்படவுள்ளது. அதற்கான இறுதிக்கட்டத் தொகுப்புப் பணிகளை இன்று இரவு சென்னையில் முடித்தேன். காலையில் இலங்கை செல்லவிருக்கிறேன். இந்த உற்சாகமான தருணத்தில், நான் எழுத வந்த கதையை வாசகத் தோழர்களிடம் பகிர்ந்துகொள்வது பொருத்தமாகயிருக்கும் என நம்புகிறேன். இலக்கியத்தின் மீதான ஈர்ப்பும் மதிப்பும் எனக்கு எந்த வயதில் ஏற்பட்டன என நிதானித்துச் சொல்ல முடியவில்லை. நினைவு தெரிந்த நாளிலிருந்தே கையில் கிடைப்பதை எல்லாம் படித்தவாறே இருக்கிறேன். ஜெயகாந்தனின் கதைகள் மற்றும் வீரகேசரிப் பிரசுர நாவல்கள் எனக்கு இலக்கிய வாசிப்பின் எண்ணற்ற வாசல்களைத் திறந்துவிட்டன எனச் சொல்லலாம். அன்றிலிருந்து இன்றுவரை இலக்கியத்தின் மீதான என்னுடைய வெறிகொண்ட நேசமும் இலக்கிய ஆசிரியர்கள் மீதான அளப்பெரிய மதிப்பும் சற்றேனும் குறைந்ததில்லை. மாறாக, அவை மென்மேலும் வளர்ந்துகொண்டே வருகின்றன. என்னுடைய வாழ்க்கையை வடிவமைத்ததில் இலக்கியத்திற்கே முதன்மைப் பங்குண்டு. எனக்கான வாழ்க்கை அறங்களை முதன்மையாக இலக்கியங்களே எனக்கு வகுத்தளித்தன. இவ்வகையில், லியோ டால்ஸ்டாயும் மக்ஸிம் கோர்க்கியும் ஜோன் ஜெனேயும் கே.டானியலும்தான் என்னுடைய முதன்மையான ஆசிரியர்கள். இன்னொருபுறத்தில் எஸ்.பொன்னுத்துரை, கு.அழகிரிசாமி, பிரேம்- ரமேஷ், சாருநிவேதிதா ஆகியோர், எழுதும் கலையில் எனக்கு வழிகாட்டிகள். அவர்களது எழுத்துகளால் ஈர்க்கப்பட்டே நான் என் எழுதும் கலையைச் செப்பனிட்டேன். இலக்கியப் பிரதிகள் குறித்த மதிப்பீடுகள், இலக்கியப் பிரதிகள் மீதான பின்நவீனத்துவ வாசிப்புப் போன்றவற்றை எனக்குக் கற்பித்தவர்களில் பேராசிரியர் அ.மார்க்ஸ் முதன்மையானவர். மேலே குறிப்பிட்டவர்கள் இல்லாமல் இலக்கியத்தில் இந்தத் தொலைவுவரை நான் வந்திருக்க முடியாது. என்னுடைய பதினைந்து வயதுவரை என்னுடைய உலகம் ‘அல்லைப்பிட்டி’ என்ற சிறு தீவகக் கிராமத்திற்குள் மட்டுமேயிருந்தது. அங்கிருந்துகொண்டுதான் இலக்கியம், திரைப்படம், நாடகம் என ஏகப்பட்ட மாபெரும் கனவுகளுடன் நான் வளர்ந்தேன். இந்தத் தளங்களெல்லாம் எனக்குச் சிறிதேனும் வசப்படும் என நான் ஒருபோதுமே நினைத்திருந்ததில்லை. என்னுடைய குடும்ப – வாழ்க்கைப் பின்னணி அத்தகைய அதலபாதாளத்திலிருந்தது. படிப்பும் பத்தாவது வரைதான். ஆனாலும், நான் விடாமல் என்னுள் கனவுகளை உருவாக்கிக்கொண்டேயிருந்தேன். அவை நனவாவதற்கான சாத்தியத்தின் நுனிகூட எனக்குத் தென்படவில்லை. படிக்கும் கதைகளை, கவிதைகளைக் குறித்து உரையாடுவதற்குக் கூட எனக்கு ஒரேயொரு ஆள் இல்லாமலிருந்தது. இலக்கியம் குறித்த உரையாடல்கள் ஒருவருடைய இலக்கிய அறிதலுக்கு மிகவும் முக்கியமானவை என்பது உங்களுக்குத் தெரியும். என்னுடைய பதினாறாவது வயதில் முதன்முதலாக உரையாடலுக்குச் சிறுவாசல் திறந்தது. அந்தக் கதவைத் திறந்தவர் கவிஞரும் ஓவியரும் எழுத்தாளருமான நிலாந்தன். நிலாந்தனும் நானும் மட்டுமே ஒரு முகாமில் தங்கியிருந்த நாட்கள் அமைந்தன. அங்கே வைத்துத்தான் அவரின் புகழ்பெற்ற கவிதையான ‘கடலம்மா’வை நிலாந்தன் எழுதினார். அந்தக் கவிதையின் முதல் வாசகன் நானாகத்தான் இருப்பேன் என நினைக்கிறேன். அப்போது நிலாந்தனுக்கு இருபது வயதுதான். ஆனாலும், அவருக்கு யாழ்ப்பாணத்திலிருந்த இலக்கியர்களுடன் நல்ல அறிமுகமிருந்தது. கவிஞர்கள் சு.வில்வரத்தினம், அ.யேசுராசா, ஓவியர் மாற்கு போன்றவர்களை நிலாந்தன் சந்திக்கச் சென்ற சில தருணங்களில் நானும் கூடவே சென்று, ஓர் ஓரமாக நின்று அவர்களது உரையாடல்களைக் ‘கெலி’யோடு பருகிய நாட்களவை. நிலாந்தன் என்னுடைய இயக்க வாழ்க்கையைத் தொடக்கி வைத்தவர் மட்டுமல்லாமல், இலக்கியம் குறித்த எனது அடிப்படைப் புரிதலுக்கு முதல் காரணியாகவுமிருந்தார். என்னுடைய பதினேழாவது வயதில், எனது முதல் கவிதை ‘ஈழமுரசு’ பத்திரிகையில் வெளியானது. தொடர்ந்து ‘செய்திக்கதிர்’ என்ற சஞ்சிகையில் கவிதைகள் வெளியாகின. இதே காலப்பகுதியில் சிறுகதைகளை எழுதப் படாத பாடுபட்டேன். ஆனால், நம்பிக்கையின்மையுடன் போராடிப் போராடி எழுதியவற்றைக் குப்பையில் போட்டேன். ‘அரும்பு’ என்றொரு கையெழுத்து – போட்டோகொப்பி பத்திரிகையில் என்னுடைய முதலாவது சிறுகதை வெளியானதற்கு, அப்பத்திரிகையின் ஆசிரியர் நானே என்பது மட்டுமே காரணமாகயிருந்தது. இந்திய அமைதிப்படையின் காலத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து என்னுடைய இருபதாவது வயதில் வெளியேறிக் கொழும்புக்குச் சென்றேன். அப்போதும் கனவுகளுடனேயே சென்றேன். கொழும்பில் அரச படையினரால் கைது செய்யப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்பட்டபோதும் கனவுகளுடனேயே சென்றேன். சிறைக் கொடுமையிலிருந்தும் என் கனவுகளே என்னை ஆற்றுப்படுத்தின. இக்காலப் பகுதியில் படிப்பதற்கு பைபிளைத் தவிர வேறு நூல் எனக்குக் கிடைக்கவில்லை. சிறையிலிருந்து வெளியே வந்ததும், பைபிளோடு சேர்த்துப் பாரதியார் கவிதைத் தொகுப்பையும் எடுத்துக்கொண்டு 1990-இல் அகதியாகத் தாய்லாந்துக்குச் சென்றேன். தமிழ் மொழியோடோ எழுத்தோடோ எந்தத் தொடர்புமில்லாத தேசம். அங்கே ‘நெற்றிக்கண்’ என்றொரு கையெழுத்து – போட்டோகொப்பி பத்திரிகையை என்போன்ற அகதிகளிடையே வெளியிட்டேன். என்னுடைய இரண்டாவது சிறுகதை அந்தப் பத்திரிகையில் வெளியானது. என்னுடைய இருபத்தைந்தாவது வயதில் பிரான்ஸுக்கு அகதியாகச் சென்றேன். எத்தனையோ நீண்ட வருடங்களுக்குப் பிறகு பாதுகாப்பும் நிம்மதியும் மூன்று வேளை உணவும் தூங்குவதற்கு ஓர் இடமும் மட்டுமல்லாமல், என்னுடைய வாழ்க்கையிலேயே முதன்முறையாக எனக்கொரு எழுதும் மேசையும் கிடைத்தது. இலக்கியம் சார்ந்த என்னுடைய கனவுகள் என்னைத் துரத்திக்கொண்டிருந்தன. பாரிஸ் தமிழ்க் கடைகளில் கிடைக்கும் எல்லாப் பத்திரிகைகளையும் வார இதழ்களையும் வாங்கி வெறிகொண்டு வாசித்தேன். 1986-இல் விட்டுப்போன புலிகள் இயக்கத் தொடர்பு, வெளிநாட்டுப் புலிகள் அமைப்பின் மூலம் சாதுவாகப் புதுப்பிக்கப்பட்டது. நான் 1986-ல் புலிகள் இயக்கத்திலிருந்து விலகிய பின்பு என்னால் எந்தவித அரசியல் செயற்பாட்டையும் தொடர முடியவில்லை. எனது உயிரைப் பாதுகாப்பதற்கான ஓட்டமும், என்னுடைய கனவுகளுமே என்னை இயக்கிக்கொண்டிருந்தன. எனினும், தமிழ்ப் பகுதிகளில் இலங்கை இராணுவம் ஏதாவது கூட்டுப் படுகொலைகளையும் அழிவுகளையும் செய்வதை அறியும் போதெல்லாம், என் மனம் கொந்தளித்து ஊசலாடிக்கொண்டேயிருந்தது. மீண்டும் புலிகள் இயக்கத்தில் இணைந்து செயற்படலாமா என்ற குழப்பம் என்னுடன் இருந்துகொண்டேயிருந்தது. இயக்கத்தின் தலைமைகள் மீது எனக்கு அதிருப்தி இருந்ததே தவிர, தமிழீழ இலட்சியத்திற்கு நான் எனக்குள் விசுவாசமாகவே இருந்தேன். புலிகள் இயக்கத்திற்கு எதிராக ஒரேயொரு சொல்லைக் கூட நான் சொன்னதில்லை என்பதற்கு அப்பால், யாராவது புலிகள் இயக்கத்தை அல்லது தமிழீழப் போராட்டத்தை விமர்சித்தால் அவர்களுடன் வம்புச் சண்டைக்கும் போய்விடுவேன். பாரிஸின் புறநகரிலிருந்த ஒரு தொழிலாளர் விடுதியில் கவிஞர். க.வாசுதேவனுடன் நான் இழுத்த வம்புச் சண்டை நண்பர்கள் வட்டாரத்தில் அப்போது பிரபலம். பாரிஸில் இருந்த எனது நண்பர்கள் எல்லோருமே விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களாகவே இருந்தார்கள். பிரான்ஸ் புலிகள் அமைப்பிலிருந்த எனது முன்னாள் சகாக்கள் சிலர் என்னுடன் தொடர்பை ஏற்படுத்தி, தங்களுடன் இணைந்து வேலை செய்யுமாறு கேட்டார்கள். 1993-இல் பாரிஸில் புலிகள் நடத்திய மாபெரும் மேதின ஊர்வலத்தில் கலந்துகொண்டேன். நாங்கள் ஊர்வலத்தில் இருந்தபோதுதான், கொழும்பில் ஜனாதிபதி பிரேமதாஸ புலிகளின் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி கிடைத்து. ஊர்வலத்தில் உற்சாகம் கரைபுரண்டோட முழக்கங்களை எழுப்பிச் சென்றோம். இவை எல்லாமே நான் பிரான்ஸ் வந்த ஒன்றரை மாதங்களுக்குள் நடந்து முடிந்த சம்பவங்கள். இந்த ஒன்றரை மாத காலப்பகுதிக்குள், பிரான்ஸில் நடந்த தமிழ் இலக்கியப் போட்டிகள் இரண்டில் ‘அல்லையூர் அன்ரனி’ என்ற பெயரில் கலந்துகொண்டேன். போட்டிக்கு எழுதிய கவிதை- கதை எல்லாமே தமிழீழ விடுதலைப் போரட்டத்திற்கான – குறிப்பாகப் புலிகளுக்கான- பரப்புரை எழுத்துகளே. இவற்றில் ‘நெஞ்சில் உரமுமின்றி’ என்ற கதை மறுபிரசுரமாக ஈ.பி.டி.பி-யின் ‘தினமுரசு’ இதழிலும் வெளியானது அரசியல் ஆச்சரியமே. இரண்டு போட்டிகளிலுமே கவிதைகளுக்குத் தங்கப்பதக்கங்களும் சிறுகதைகளுக்கு வெள்ளிப்பதக்கங்களும் எனக்கு அறிவிக்கப்பட்டன. அந்தப் பதக்கங்களைப் பெறுவதற்கு முன்பே, தெருவில் ‘தொழிலாளர் பாதை’ பத்திரிகையை விற்றுக்கொண்டிருந்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத் தோழர்களை நான் சந்தித்தேன். அவர்களுடனான முதல் உரையாடலில் இருந்தே என்னுடைய அரசியல் பார்வை மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. தங்கப்பதக்கங்களையும் வெள்ளிப்பதக்கங்களையும் நான் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டேன். அந்தச் சந்திப்புக்குப் பின்பாக, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துடன் நான் நான்கு வருடங்கள் பயணித்தேன். அந்த அமைப்பு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவாக இருந்தது. ட்ராட்ஸ்கியவாதிகளான அவர்கள் சர்வதேசவாதிகள். தேசியவாதத்தைக் கடுமையாக எதிர்ப்பவர்கள். அவர்கள் மூலமாகத்தான் நான் தேசியவாதத்திலிருந்து என்னை முற்றாகத் துண்டித்துக்கொண்டேன். இது ஒரு நாளில் நடந்த மாற்றமல்ல. மார்க்ஸிய -லெனினிய – ட்ராட்ஸ்கிய மூல நூல்களையும் ரோஸா லக்ஸம்பேர்க்கையும் லீப்னெக்டையும் டேவிட் நோர்த்தையும் பீற்றர் ஸ்வாட்டையும் நிக் பீம்ஸையும் கீர்த்தி பாலசூரியாவையும் தீவிரமாகப் படித்து எண்ணற்ற கலந்துரையாடல்கள் – வகுப்புகள் – விவாதங்கள் ஊடகத்தான் நான் மாறினேன். இந்தக் காலகட்டத்தில்தான் நான் தேசியவாதத்திற்கு எதிரான பரப்புரைகளில் ஈடுபடத் தொடங்கினேன். தமிழ்த் தேசியவாதத்திற்குப் பதிலாக இலங்கைத் தொழிலாளர்களின் வர்க்க அணிதிரட்டலை முன்வைத்தேன். தமிழ்த் தேசியவாதத்தையும் விடுதலைப் புலிகளையும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினேன். பாரிஸ் வீதிகளில் நின்று தோழர்களுடன் சேர்ந்து ‘தொழிலாளர் பாதை’ பத்திரிகையையும் ‘மார்க்ஸிய முன்னோக்கு’ இதழையும் விற்பனை செய்தவாறே மக்களிடம் பேசத் தொடங்கினேன். பாரிஸின் புறநகர்களுக்கு வீடு வீடாகச் சென்று ட்ராட்ஸ்கியத்தையும் சர்வதேசியவாதத்தையும் பரப்புரை செய்தோம். சிறியளவில் பொதுக்கூட்டங்களை நடத்தினோம். அப்போது இலங்கையைப் பொறுத்தவரை எங்களது கட்சியின் நிலைப்பாடு ‘ஸ்ரீலங்கா -தமிழீழம் சோசலிஸக் குடியரசு’ என்பதாக இருந்தது. இலங்கையில் இனபேதங்களைக் கடந்து பாட்டாளி வர்க்கம் ஒன்றுபட்டு புரட்சி செய்யுமென்றும் நிரந்தரப் புரட்சியெனும் உலகப் புரட்சி நெருங்கிக்கொண்டிருக்கிறது எனவும் நாங்கள் மனதார நம்பினோம். நூற்றாண்டுக்கு முந்தைய கம்யூனிஸ நூல்கள் அந்தளவுக்கு எங்களில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. முதலாளித்துவம் தனக்கான சவக்குழியை வெட்டியதோடு மட்டுமல்லாமல், அதற்குள் வேகவேகமாக இறங்கிக்கொண்டிருக்கிறது எனவும் நம்பினோம். ஒரே வருடத்தில் காட்சிகள் மாறின. 1993 மேதினத்தில் புலிகளின் ஊர்வலத்தில் கலந்துகொண்டு தமிழ்த் தேசிய முழக்கங்களை எழுப்பிய நான் 1994 மேதினத்தில் அதே புலிகளது ஊர்வலத்தின் மத்தியில் நின்று ‘தொழிலாளர் பாதை’ பத்திரிகையை விநியோகித்துக்கொண்டு, புலிகளின் தேசியவாதத்திற்கு எதிரான பரப்புரையில் ஈடுபட்டிருந்தேன். அந்த ஊர்வலத்தில் அய்யாயிரத்திற்கும் குறையாத புலி ஆதரவாளர்கள். இவர்களிடயே புகுந்து நாங்கள் ஆறு தோழர்கள் எதிர்ப் பரப்புரை செய்துகொண்டிருக்கிறோம். கண்ணன் என்ற எங்களது தோழர் ஒருவர் புலிகளால் தாக்கப்பட்டார். ஒருகட்டத்தில் நாங்கள் அங்கிருந்து புலிகளால் விரட்டப்பட்டோம். நாங்கள் அந்த ஊர்வலத்திலிருந்து கிளம்பும்போதுதான், சில மணி நேரங்களுக்கு முன்பாகத் தோழர். சபாலிங்கம் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி எங்களுக்குக் கிடைத்தது. தொடர்ந்து வந்த காலம் மிகக் கொடுமையானது. புலிகள் எங்கள் மீது பரவலாகத் தாக்குதலை நடத்தினார்கள். ‘லா சப்பல்’ பகுதியில் ‘தொழிலாளர் பாதை’ பத்திரிகை விற்றுக்கொண்டிருந்தபோது, தோழர்கள் ஞானாவும் செழியனும் இரத்தம் வரும்வரை புலிகளால் தாக்கப்பட்டார்கள். சந்திரிகா பண்டாரநாயக்காவின் அரசியல் வருகையை வரவேற்றுப் புலிகள் நடத்திய ‘போரும் சமாதானமும்’ என்ற கூட்டத்திலும் நாங்கள் புலிகளின் உடல்ரீதியான தாக்குதல்களை எதிர்கொண்டோம். இன்னொருபுறத்தில் ஜே.வி.பி-யினரும் எங்கள்மீது தாக்குதல்களை நடத்தினார்கள். இலங்கையில் எங்களது தோழர்கள் ஏற்கனவே ஜே.வி.பி-யால் கொல்லப்பட்டிருந்தார்கள். இந்தக் காலப்பகுதியில் பாரிஸில் ‘சுபமங்களா’, ‘புதிய பார்வை’, ‘கணையாழி’ ஆகிய இதழ்கள் ஒரு கடையில் கிடைக்கும். அந்த இதழ்களைப் படித்துவிட்டுக் கட்சித் தோழர்களிடம் விவாதிப்பேன். அந்த இதழ்கள் மட்டுமல்லாமல், இதழ்களில் எழுதுபவர்களும் குட்டி பூர்சுவாக்கள் என்பதே கட்சியின் நிலைப்பாடு. உங்களுக்கு இதையெல்லாம் நம்ப முடிகிறதா என்று தெரியவில்லை… இந்த இதழ்கள் நடத்தப்படுவதே உலக முதலாளித்துவத்தைக் காப்பாற்றும் ஒரே நோக்கில்தான் என்றளவுக்குத் தோழர்கள் அதிதீவிரமாகப் பேசுவார்கள். அதேபோன்று டால்ஸ்டாய், தஸ்தயெவ்ஸ்கி போன்றவர்களையும் அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இறையியல்வாதிகள் என்பார்கள். மக்ஸிம் கோர்க்கியை ‘ஸ்டாலினிஸ்ட்’ என்பார்கள். எனக்கு தெரிந்து இந்த உலகத்தில் எங்களது கட்சியினர் எவரொருவரையும் இலக்கியவாதியாக ஏற்றுக்கொண்டதில்லை. சிறுவன் என்னையா ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள்! அப்போதெல்லாம் நான் கதைகளையும் கவிதைகளையும் எழுதிக் கட்சித் தோழர்களிடம் காட்டுவதுண்டு. நான் எழுதிய பிரதிகளில் தேசியவாதம், கலைப்புவாதம், காட்சிவாதம், அனுபவவாதம், தேசியப்புறநீங்கல்வாதம் எல்லாமே இருக்கின்றன எனச் சொல்லி என்னை இலக்கியரீதியாக நோகடிப்பதைக் கட்சி ஒரு கொள்கையாகவே வைத்திருந்தது. எவ்வாறு இலக்கியம் எழுத வேண்டும் என எனக்கு அறிவுரை சொல்வார்கள். என்னையொரு ட்ராட்ஸ்கிய செ. கணேசலிங்கனாக உருவாக்குவதே அவர்களது வேலைத்திட்டம் என நினைக்கிறேன். இந்த உரையாடல்கள் வழியாக நான் அறிந்துகொண்டதும் கற்றுக்கொண்டதும் ஏராளம் என்பதும் உண்மை. அவர்களோடு இருந்த நான்கு வருடங்களிலும் என்னுடைய ஒரேயொரு கதையோ கவிதையோ எங்கும் வெளிவந்ததில்லை. நான் எழுதியதையெல்லாம் அவர்கள் சிவப்பு மை பேனாவால் கிறுக்கித் தருவார்கள். நானும் அதிதீவிரக் கட்சி விசுவாசி என்பதால் அவர்கள் சொல்வதைக் கேட்டு நடந்துவந்தேன். ஆனாலும், ஒரு மீறல் நடந்து போனது. 1996-இல் யமுனா ராஜேந்திரன் புலிகளின் பத்திரிகையான ‘ஈழமுரசு’வில் சினிமாக் கட்டுரைகளைச் சரமாரியாக எழுதிவந்தார். ஒரு பக்கக் கட்டுரையில் நூறு படங்களின் பெயர்களையும் அய்ம்பது இயங்குனர்களின் பெயர்களையும் நாற்பது தத்துவவாதிகளின் பெயர்களையும் முப்பது தவறான தகவல்களையும் உதிர்ப்பார். அடிப்படையிலேயே ஒரு சினிமா ரசிகனான எனக்கு இது எரிச்சலை ஊட்டியது. யமுனா ராஜேந்திரன் எழுதும் வழாவழா எழுத்துகளுக்கு எவரும் எதிர்வினையும் எழுதுவதில்லை. அவரை உண்மையிலேயே ஓர் அறிவாளியாகத்தான் தமிழ் உலகம் கருதுகிறதோ என்று எனக்கு அய்யமே ஏற்பட்டுவிட்டது. பாரிஸில் அப்போது கலைச்செல்வன், சுகன் போன்ற இலக்கியவாதிகள் இருப்பது எனக்குத் தெரியும். அவர்களிடம் இதுபற்றிக் கேட்கலாம் என்றால், இலக்கியவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பதை எனது கட்சி விரும்பாது. மணிரத்னத்தை ஆகச் சிறந்த இயக்குநர் எனவும் ‘பம்பாய்’ திரைப்படத்தைப் புரட்சிக் காவியம் எனவும் யமுனா ராஜேந்திரன் எழுதியதையெல்லாம் என்னால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. எனவே, நான் யமுனா ராஜேந்திரனைக் கிண்டலடித்து ‘சோவியத் யூனியனின் சினிமாவும் சில்க் ஸ்மிதாவின் முகங்களும்’ என்றொரு கட்டுரையை அவரைப் போலவே பம்மாத்துப் பண்ணி எழுதி ‘சிவசக்தி’ என்ற பெயரில் ‘ஈழமுரசு’வுக்கு அனுப்பிவைத்தேன். அடுத்த வாரமே அந்தக் கட்டுரை வெளியாகியது. அதற்கு அடுத்த வாரம் இன்னொரு கூத்தும் நடந்தது. ‘அன்புள்ள சகோதரி சிவசக்திக்கு, உங்களது கோபத்தை நான் புரிந்துகொள்கிறேன்…’ என ஆரம்பித்து யமுனா ராஜேந்திரன் ஒரு பதிலை ‘ஈழமுரசு’வில் எழுதியிருந்தார். எனது கட்டுரை அச்சேறிய குறுகுறுப்பை என்னால் தாங்கவே முடியவில்லை. எனவே கட்சியிடம் விஷயத்தைப் போட்டுடைத்துவிட்டேன். என் நல்லகாலத்திற்கோ அல்லது கெட்டகாலத்திற்கோ எங்களது கட்சியின் தலைவர் விஜே டயஸ் அப்போது இலங்கையிலிருந்து பாரிஸ் வந்திருந்தார். ஓர் இரவு நடந்த சந்திப்பில் அவர் என்னைக் கடுமையாக விமர்சித்தார். புலிகளின் பத்திரிகையான ‘ஈழமுரசு’வில் நான் எழுதியதைக் கட்சி கடுமையாகக் கண்டித்தது. அந்த இரவிலேயே கட்சியிடம் உடனடியாக மன்னிப்புக் கேட்டுவிட்டு, ‘சிவசக்தி செத்துவிட்டான்’ என அறிவித்தேன். பின்பு கொஞ்ச நாட்கள் நல்லபிள்ளையாக எழுதாமல் இருந்தேன். அதைக் கெடுப்பதுபோல ஒரு நாடகப் போட்டிக்கான அறிவிப்பு வந்தது. பாரிஸில் நம்மவர்கள் நடத்திய பல நாடகங்களைக் கண்டு நொந்திருந்த என்னை அந்த அறிவிப்பு உசுப்பிவிட்டது. ‘அட்டென்ஷன் ப்ளீஸ்’ என்றொரு நாடகத்தை எழுதிப் போட்டிக்கு அனுப்பிவிட்டேன். அப்போதுதான் ‘ஷோபாசக்தி’ என்ற பெயரை எனக்குச் சூடிக்கொண்டேன். அந்த நாடகப் போட்டியில் எனக்கு மூன்றாவது பரிசு கிடைத்தது. நாடகமும் ‘கலைமுகம்’ இதழில் வெளியானது. ஆனால், அந்த நாடகத்தை எழுதியது நான்தான் என்பது யாருக்கும் தெரியாது. பாரிஸ் இலக்கிய உலகில் அப்போது ஷோபாசக்தி மர்ம நபர். இதைப் போல வேறு சில மர்ம இலக்கிய நபர்களும் அப்போது இருந்தார்கள். இந்த மர்ம நபர்களைக் கண்டுபிடிப்பதை ஒரு வேலையாகவே வைத்துக்கொண்டு சில இலக்கியவாதிகள் திரிந்துகொண்டிருந்தார்கள். இவர்களில் ஓசை மனோ முக்கியமானவர் என்றே சொல்லலாம். அப்போது, கணேசலிங்கம் என்றொரு நண்பர் என்னோடு ‘ஈரோ டிஸ்னி’யில் வேலை பார்த்துவந்தார். அவர் நடித்த நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன். அவரிடம் கதையோடு கதையாக என்னுடைய நாடகப் பிரதியின் மீதான அவரது அபிப்பிராயத்தைக் கேட்டுப் பார்த்தேன். அருமையான நாடகம் என்றார். இதற்குப் பிறகு என்னால் என்னையே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல், நான்தான் அந்த ஷோபாசக்தி என்று அவரிடம் சொல்லிவிட்டேன். கணேசலிங்கம் அதை ‘ஓசை’ சஞ்சிகையை நடத்திய மனோவிடம் சொல்லியதோடு மட்டுமல்லாமல், ஒரு நாடக விழாலில் என்னை மனோவிடம் காட்டியும் கொடுத்துவிட்டார். நான் மனோவிடம் பேசிய முதல்வார்த்தை எனக்கு இப்போதும் நன்றாக ஞாபகமிருக்கிறது. “நீங்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா?” எனக் கறாராகக் கேட்டேன். அவர் கொஞ்சம் யோசித்துவிட்டு “ஆம்” என்றார். அதற்குப் பின்புதான் நான் அவரிடம் பேசவே தொடங்கினேன். காலம் செல்வம் போன்றவர்தான் ஓசை மனோவும். இவர்கள் இருவருமே தங்களது இதழுக்காகக் கதை, கட்டுரையை ஒருவரிடம் பெற்றுக்கொள்வதற்காகப் பலதரப்பட்ட தந்திர உத்திகளைக் கையாள்வார்கள். அப்போது மனோ ‘அம்மா’ இதழைத் தொடங்குவதற்கான யோசனையுடன் இருந்தார். நானும் தோழர் அசோக்கும் சில மாதங்கள் ஒரே தங்குவிடுதியில் அருகருகாக வசித்தோம். அசோக் தீவிரமான இலக்கிய வாசகராகயிருந்தார். அவரிடமும் நான்தான் ஷோபாசக்தி என்பதை அவிழ்த்துவிட்டிருந்தேன். அவர் மூலமாகத் தோழர் எம். ஆர். ஸ்டாலின் எனக்குப் பழக்கமானார். ஒருநாள் ஸ்டாலினிடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. நான் எழுதிய நாடகம் தொடர்பாக என்னைத் தோழியர் லஷ்மி சந்திக்க விரும்புவதாகச் சொன்னார். அப்போது நான் அடைந்த பரவசம் கொஞ்சநஞ்சமல்ல. பாரிஸில் நடந்த சில நாடக விழாக்களுக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கும் சென்று அவதானித்து வந்து நான் கட்சிக்கு ‘ரிப்போர்ட்’ வழங்குவதுண்டு. இந்த இடங்களில் லஷ்மி, கலைச்செல்வன், சுகன் போற்றோரைத் தூர நின்று கண்டிருக்கிறேன். குறிப்பாக, லஷ்மி கூட்டங்களில் உரக்க விவாதிக்கும் முறையும் அவரது நடவடிக்கைகளும் அவர்மீது எனக்கு மிகுந்த பிரமிப்பை உண்டாக்கியிருந்தன. நான் என் வாழ்க்கையில் முதன்முதலாக நேரில்கண்ட பெண்நிலைவாதச் செயற்பாட்டாளர் அவர்தான். அவரது செயற்பாடுகளால் கவரப்பட்டே பெண் விடுதலையைப் பேசும் அந்த நாடகத்தை நான் எழுதியிருந்தேன். அவரே என்னோடு பேச விரும்புகிறார் என்றபோது, எனது இலக்கியத் தன்நம்பிக்கை தன்பாட்டுக்கு எகிறத் தொடங்கியது. ஓர் உணவுவிடுதியில் நடந்த அந்தச் சந்திப்புக்கு லஷ்மியோடு விஜியும் ஸ்டாலினும் இன்னொருவரும் வந்திருந்தனர். அந்த இன்னொருவர் மு. நித்தியானந்தன் என்பதை அறிந்தபோது, நான் மயங்கிவிழாத குறைதான். வெலிகடைப் படுகொலையிலிருந்து தப்பித்தவர், மட்டக்களப்புச் சிறையுடைப்பின் நாயகர்களில் ஒருவர், விடுதலைப் புலிகள் பத்திரிகையின் ஆசிரியர், ஆழமான அறிவுஜீவி என எத்தனையெத்தனை விஷயங்கள் அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்! என்னுடைய நாடகப் பிரதியை மு. நித்தியானந்தன் வெகுவாகப் பாராட்டிப் பேசினார். ஒரு பிரதியை அல்லது ஒருவரை அவருக்குப் பிடித்துவிட்டால் வானளாவப் பாராட்டுவதிலும் பிடிக்காவிட்டதால் அதலபாதாளத்தில் குப்புறத் தள்ளிவிடுவதிலும் மு. நித்தியானந்தன் அவர்கள் சாரு நிவேதிதாவுக்கே சவால் விடக்கூடியவர். அவரிடம் பாராட்டுப் பெறுவதென்றால் சும்மாவா! நான் எழுதிய நாடகத்தை மேடையேற்றுவதற்கான ஒப்புதலைப் பெறுவதற்காகவே அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். இதுதானே நான் சிறுவயது முதலே கண்ட கனவு! மகிழ்ச்சியில் நான் தத்தளித்தாலும் கட்சிக் கட்டுப்பாடு என் கழுத்தில் கத்தியாக இருந்ததால், அடுத்தநாள் பதில் சொல்வதாகச் சொன்னேன். அடுத்த நாளே கட்சித் தோழர்களைச் சந்தித்து இந்தச் சந்திப்புக் குறித்துச் சொன்னேன். ‘குட்டிப் பூர்சுவாக்களுடன் எந்தத் தொடர்பும் கூடாது’ எனத் தோழர்கள் மறுபடியும் கண்டிப்பாகச் சொன்னார்கள். எனவே நான் லஷ்மியைத் தொலைபேசியில் அழைத்து ‘நீங்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தையும் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தையும் ஏற்றுக்கொள்ளும்வரை உங்களுடன் இணைந்து என்னால் செயற்பட முடியாது’ எனச் சொல்லிவிட்டேன். ‘பரவாயில்லை’ என லஷ்மியும் சொல்லிவிட்டார். இந்தக் காலகட்டத்தில்தான் எனக்குத் தலித் அரசியல் குறித்த அறிமுகம் ‘நிறப்பிரிகை’ இதழ்கள் மூலமாக ஏற்படத் தொடங்கியது. அ.மார்க்ஸ், ரவிக்குமார், ராஜ் கவுதமன், பாமா எனத் தேடித் தேடிப் படிக்கத் தொடங்கினேன். வறட்டுவாத மார்க்ஸியத்தையும் அதிகாரம் மையப்படுத்தப்பட்ட கட்சி வடிவத்தையும் கண்டித்து அ.மார்க்ஸ் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருந்தார். பின்நவீனத்துவ அலை தமிழக அறிவுலகை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பாதித்துக்கொண்டிருந்தது. நான் இது குறித்தெல்லாம் கட்சிக்குள் உரையாடத் தொடங்கினேன். மார்க்ஸிய மூல நூல்களைக் கரைத்துக் குடித்துச் செரித்த தோழர்களால் இந்தப் புதிய போக்கைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. “இதெல்லாம் முதலாளித்துவம், என்.ஜி.ஓ” என்பதைத் தவிர அவர்களிடமிருந்து எனக்கு மேலதிக பதில்கள் கிடைப்பதாக இல்லை. இலங்கை – இந்தியச் சமூகங்களை வர்க்கச் சமூகங்கள் என வரையறுப்பதைக் காட்டிலும் சாதியச் சமூகங்கள் என வரையறுப்பதே சரியானது என எனக்கும் தோன்றியது. மேலிருந்து அதிகாரம் செலுத்தப்படும் கட்சி வடிவத்திற்கு எங்களது கட்சியே சாலப் பொருத்தமான உதாரணமாக இருந்தது. கட்சி அதிகாரம் மையத்திடம் குவிக்கப்பட்டு விளிம்புகள் வெறும் போராட்டப் பண்டங்களாகப் பார்க்கப்படுவதாக எனக்குத் தோன்றியது. இப்படிப் பல பல தோன்றிக்கொண்டேயிருந்தன. நான் கட்சியிலிருந்து மெல்ல மெல்ல விலகிச் செல்லத் தொடங்கினேன். அதுகுறித்துக் கட்சித் தோழர்களுக்கும் எந்தக் கவலையும் இருந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் தினந்தோறும் உச்சாடனம் செய்யும் திரிபுவாதம், கலைப்புவாதம் போன்ற சொற்களுக்குத் தக்க உதாரணத்தைக் காட்ட ரஷ்யாவிலோ, சீனாவிலோ அல்லாமல் கண்முன்னேயே ஒருவன் கிடைத்துவிட்டான் என்பதால் அவர்களும் உற்சாகமடைந்திருப்பார்கள் என்பதே உண்மை. இன்றுவரை அவர்கள் என்னை எங்கேயாவது சந்திக்கும்போது, அவர்களது கண்களில் தெரிவது ஏளனமா அல்லது என்மீதான பரிதாபமா எனக் கண்டுபிடிக்கத் தெரியாமல் நான் திணறிக்கொண்டிருக்கிறேன். கட்சியுடனான என்னுடைய இந்த ஊசலாட்ட நிலை நீடிக்கும்போது, மனோ என்னைத் தொடர்புகொண்டு புதிதாகத் தொடங்கப்படவிருக்கும் ‘அம்மா’ இதழுக்குச் சிறுகதையொன்று தருமாறு கேட்டார். தோழர். சபாலிங்கம் கொல்லப்பட்டதற்குப் பின்பாக பிரான்ஸிலிருந்து வெளியான முதல் இலக்கிய இதழ் அம்மாவே. 1997-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதலாவது ‘அம்மா’ இதழில் முதலாவது கதையாக என்னுடைய ‘எலிவேட்டை’ கதை வெளியாகியது. அந்தக் கதையைத்தான் என்னுடைய முதலாவது கதையாக நான் கருதுகிறேன். வெளிவரயிருக்கும் தொகுப்பிலும் அதுவே முதற்கதை. அந்த வருடம் நான்கு கதைகள் எழுதினேன். மூன்று கதைகள் ‘அம்மா’வில் வெளியாகின. மூன்றாவது கதையான ‘மைசூர் ராசா’வில் வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாகக் கட்சியின் மீதே கைவைத்துவிட்டேன். அத்தோடு கட்சியுடனான எனது கடைசி இழையும் அறுந்துபோயிற்று. நான்காவது கதையான ‘தேவதை சொன்ன கதை’ 1997 செப்டெம்பரில் இலக்கியச் சந்திப்பு மலரான ‘இனியும் சூல் கொள்’ளில் வெளியானது. இந்தக் கதையைக் கேட்டு வந்தபோதுதான் சுகன் எனக்கு நண்பரானார். நவீன இலக்கியப் பரப்பில் எழுதுவதற்கு என்னைக் கூட்டி வந்தவர் மனோ என்றால், என்னுடன் கூடவே வந்தவர் சுகன். எங்களது நட்பு அடுத்த இருபது வருடங்களுக்கு நீடித்தது. இருவரும் இணைந்து ஏகப்பட்ட வேலைகளைச் செய்திருக்கிறோம். ‘சனதருமபோதினி’, ‘கறுப்பு’ ஆகிய இரு தொகுப்புகளும் நற்சாட்சி. ‘தேவதை சொன்ன கதை’யை எழுதி நான் இலக்கியச் சந்திப்புக் குழுவினரிடம் கையளித்தேன். ஒருநாள், இலக்கியச் சந்திப்புக் குழுவை வந்து சந்திக்குமாறு எனக்கு அழைப்பு வந்தது. அந்தக் கதை குறித்து என்னிடம் இலக்கியச் சந்திப்புக் குழுவிலிருந்த சிலர் அரசியல் கேள்விகள் கேட்டார்கள். அந்தக் கதையில் என்னுடைய மையப்புள்ளி பெண் போராளிகளைப் பற்றியதாக இருந்தது. வியட்நாம் விடுதலைப் போரில் பங்கெடுத்த தீரமான பெண் போராளிகள் பிற்பாலத்தில் பெண் அடிமைத்தனத்தில் சிக்குண்டு உழன்றதைச் சித்திரித்திருந்தேன். ஈழப் போராட்டத்தில் அரசியல்ரீதியான புரிதலின்றி வெறுமனே ஆயுதப் போராளிகளாகப் பெண்கள் இயங்கினால், போரின் முடிவில் அவர்களிடமிருந்து ஆயுதங்கள் களையப்படும்போது, பெண்ணடிமைச் சமூகத்திற்குள் அவர்களும் சிக்கிக்கொள்வார்கள் என இலக்கியச் சந்திப்புக் குழுவுக்கு விளக்கமளித்தேன். ஒரு கதையை எழுதினால் அதற்கு இவ்வாறான அழைப்புகளும் விசாரணைகளும் விளக்கங்களும் இருந்த காலமொன்று இருந்தது. புலம்பெயர் இலக்கியச் சூழலில் குட்டி இலக்கிய பீடங்களும் அரைகுறை அரசியல் ஞானிகளும் கோலோச்சிய காலங்களவை. அதை உடைக்க வேண்டும் என்பதும் ஓர் எழுத்துக் கலைஞனாக எனது கனவுகளில் ஒன்றாகயிருந்தது. பின்வந்த காலங்களில், இலக்கியச் சந்திப்பு மலர்களுக்கு நான் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்ட தருணங்களில் இவ்வாறான ‘விசர்’ வேலைகளைச் செய்ய நான் யாரையும் அனுமதிப்பதில்லை. கலைஞர்களுக்கு அரசியல்வாதிகள் தீர்ப்பிடக்கூடாது. நீண்டகாலமாக இந்தப் பரிதாபச் சூழலுக்குள் ஈழ- புலம்பெயர் இலக்கியம் சிக்கிக்கிடந்தது. 2009-க்குப் பின்பு இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டாலும், பல எழுத்தாளர்களுக்கு இன்னும் விடியவேயில்லை. ‘எதிர்ப்படும் ஒவ்வொருபவரின் கையையும் நக்குபவன்’ என்ற பாலஸ்தீனக் கவிதை வரிகள் இவர்களுக்கும் பொருந்தும். 1998-இல் தமிழகம் சென்றேன். அப்போது தமிழகத்திலிருந்த எந்த எழுத்தாளரும் எனக்கு அறிமுகமில்லை. என்னையும் யாருக்குமே தெரியாது. கையில் அ.மார்க்ஸின் முகவரியிருந்தது. நேராகத் தஞ்சாவூருக்குச் சென்று அதிகாலையில் அவரது வீட்டுக் கதவைத் தட்டினேன். யாரென்றே தெரியாத ஓர் ஈழத்து இளைஞனை முகமலர்ச்சியோடு வரவேற்று அன்று முழுவதும் உரையாடினார். அதுவரையான எனது தடுமாற்றங்களுக்கும் அரசியல் ஊசலாட்டங்களுக்கும் அ.மார்க்ஸ் நல்லதொரு வழிகாட்டினார். அதாவது தடுமாற்றங்களோடும் ஊசலாட்டத்தோடும் இருப்பதே நல்லதென்றார். உறுதியான கோட்பாடுகள், கெட்டியான கட்சி வடிவங்கள், தத்துவங்கள் எல்லாமே பெருங்கதையாடல்கள் என்றார். இப்போது நிதானித்துப் பார்க்கையில் ஒன்று தெரிகிறது. அதாவது, அ.மார்க்ஸ் எனக்குப் புதிய திசை எதையும் காட்டவில்லை. மாறாக, சிறுவயதிலிருந்தே என்னிலிருந்த மீறல்தன்மை, குழப்படித்தனம், கோணங்கித்தனம், பகடிப் பேச்சு எல்லாவற்றையும் நல்லது என எனக்கு அவர் அறியத் தந்தார். அதிகாரத்தைக் கேள்வி கேட்கப் பகடி ஒரு கூரிய ஆயுதமென்றார். அ.மார்ஸின் வழியாகத்தான் நான் தந்தை பெரியாரை சரியான முறையில் அறிந்துகொண்டேன். நாம் அறமென நம்பியிருந்ததைப் பெரியார் அறமில்லை என்றார். கற்றுக்கொள்ளல் என்பது வெளியிலிருப்பதை நம்முள்ளே திணிப்பதில்லை. மாறாக நம்முள்ளே இருப்பதை வெளியேற்றுவதே கற்றல் என்றார். நிறுவப்பட்ட இலக்கியத்தை, பண்பாட்டை, கலாசாரத்தை, அறத்தைக் கவிழ்த்துப்போடு என்றார். இன்றைய உலகச் சூழலில், ஒவ்வொரு தனிமனிதரின் மீதான அரசு இயந்திரத்தின் நெருக்கமான கண்காணிப்புக்குள், பெரு நிறுவனங்களின் அதிகார வலைக்குள் என்னைப் போன்ற தனிமனிதனால் இவ்வாறு கண்டபடியெல்லாம் கவிழ்த்துப்போட முடியாது. நானும் எண்ணற்ற சமரசங்களுடன்தான் வாழ்க்கையை ஓட்டியபடியிருக்கிறேன். ஆனால், நிஜ வாழ்க்கையில் என்னால் கவிழ்த்துப் போட முடியாதவற்றை எனது கற்பனைகளில் உருவாகும் சிறுகதைகள், நாவல்களின் மூலமாக என்னால் கவிழ்த்துப்போட முடியும். மனித உயிரிக்கு வாய்த்த ஆற்றல்களிலெல்லாம் ஆகச் சிறந்த ஆற்றல் கற்பனையே என்றுதான் நான் கருதுகிறேன். நிஜ வாழ்வில் சாதிக்க முடியாத சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் இலக்கியக் கதைகளின் வழியே என்னால் மனித மனங்களில் தொற்ற வைக்க முடியும். எனவேதான், வெளிவரயிருக்கும் என்னுடைய ஒட்டுமொத்தச் சிறுகதைத் தொகுப்பின் முதற்பக்கத்தில் நயோமி கிலெய்னின் இந்தச் சொற்களை நான் குறித்துக் காட்டியிருக்கிறேன். “இந்த உலகை மாற்றுவதற்கு நீங்கள் கதைகளை மாற்றியாக வேண்டும்.” [6 டிசம்பர் 2024 – சென்னை] https://www.shobasakthi.com/shobasakthi/2025/03/14/எழுதும்-கதை/?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR3uiHXhy30yFn0sxnpd8tcRVq2nQz8iy3Z0XynNJcm4tXwQpMwV2BepwDk_aem_PBQadh9hgC4Y7OvCREOVBQ

இசுலாமிய அரசியல்வாதிகளின் கோரமுகம் குறித்து அமச்சரின் ஆக்ரோசாமான பேச்சு ...சந்துருவின் செய்தியில்

3 months 2 weeks ago
இலங்கையில் திருமண வயது 18 வரம்பு வயதாக அனைவருக்கும் இருக்கின்ற போது முஸ்லிம் மதம் சொல்கின்றபடியால் அவர்களுக்கு குழந்தை திருமணம் அனுமதிக்கப்பட கூடாது. இலங்கையின் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் ஐநாடுகள் சபையிடம் உறுதி அளித்தபடி பெண்கள் சிறுமிகளின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கும் பாலின சமத்துவத்தை முன்னேற்றுவதற்கும் அநுரகுமார திசாநாயக்க அரசு செயல்பட வேண்டும்.

இலங்கையில் தனிநபரொருவருக்கு தேவைப்படும் குறைந்தபட்ச பணம் குறித்து வெளியான புதிய தகவல்

3 months 2 weeks ago
ஜெ.வி.பி அரசாங்கம் காணும் கனவு வாழ்க்கைக்கு இது சரியாக இருக்கலாம்... ஒரு இறாத்தல் பாணை 4 துண்டுகளாக வெட்டி ஒரு துண்டு பானும் பொல் சம்பலும் காலையிலும். மதியம் கிறிபத்தும் அதே பொல் சம்பலும் ,கருவாடும். இரவுக்கு மரவள்ளி கிழங்கும் பொல் சம்பலும் ... மக்டொனால்ட்,பிசா,கெ.எஃப்.சி போன்ற முதலாளிகலின் கடைகளை அடுத்த தேர்தலுக்கு முதல் பூட்ட வேண்டும் 😅

மகா சிவராத்திரியும், மகா பெரிய வி.வி.ஐ.பிக்களும்!

3 months 2 weeks ago
நீங்கள் தப்பாக நினைக்கிறீர்கள்😅...கடாபி ,கஸ்ரோ போன்றவர்களும் தங்களது மெய்பாதுகாவலர்களாக பெண்களை வைத்திருந்தார்கள் ..காரணம் பெண்கள் நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் ..😂.

இலங்கையில் தனிநபரொருவருக்கு தேவைப்படும் குறைந்தபட்ச பணம் குறித்து வெளியான புதிய தகவல்

3 months 2 weeks ago
2025 ஜனவரியில் ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு மாதத்திற்கு தேவைப்படும் குறைந்தபட்ச தொகை 16,334 ரூபாய் என தெரிவிக்கப்பட்டிருப்பது, அந்த நபரின் அடிப்படை வாழ்க்கைச் செலவுகளை (Basic Living Expenses) குறிக்கிறது. இந்த தொகை ஒரு நபர் ஒரு மாதத்தில் உணவு, உடை, வீட்டு வாடகை, மருத்துவம், போக்குவரத்து மற்றும் பிற அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தேவைப்படும் குறைந்தபட்ச பணத்தைக் குறிக்கும். இதன் அர்த்தம்:அடிப்படைத் தேவைகள்: இந்த தொகை ஒரு நபர் வாழ்வதற்கு அடிப்படையாகத் தேவைப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை பிரதிபலிக்கிறது. இதில் உணவு, குடிநீர், மின்சாரம், வீட்டு வாடகை, போக்குவரத்து, மருத்துவம், கல்வி மற்றும் பிற தேவைகள் அடங்கும். குறைந்தபட்ச வாழ்க்கைத் தரம்: இந்த தொகை ஒரு நபர் ஒரு குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை பராமரிக்க தேவைப்படும் பணத்தை குறிக்கிறது. இது வறுமைக் கோட்டை விட அதிகமாக இருக்கலாம், ஆனால் இது ஒரு ஆரோக்கியமான மற்றும் மரியாதைக்குரிய வாழ்க்கைக்கு தேவையான தொகையாக கருதப்படுகிறது. பொருளாதார மதிப்பீடு: இந்த தொகை பொருளாதார நிபுணர்கள் அல்லது அரசாங்கங்களால் மதிப்பிடப்பட்டிருக்கலாம். இது பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம் மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டங்களை வடிவமைக்க உதவும். வறுமைக் கோடு மற்றும் வாழ்க்கைச் செலவு: இந்த தொகை வறுமைக் கோட்டை விட அதிகமாக இருக்கலாம், ஏனெனில் வறுமைக் கோடு ஒரு நபர் உயிர்வாழ்வதற்கு தேவையான குறைந்தபட்ச உணவுச் செலவை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளும். ஆனால், இந்த தொகை அனைத்து அடிப்படைத் தேவைகளையும் உள்ளடக்கியது. முக்கியம்:இந்த தொகை பிராந்தியம், நகரம் அல்லது கிராமம், மற்றும் பொருளாதார நிலைமைகளைப் பொறுத்து மாறுபடும். 2025 ஜனவரிக்கான இந்த மதிப்பீடு, தற்போதைய பொருளாதார நிலைமைகள், பணவீக்கம் மற்றும் செலவு முறைகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்பட்டிருக்கலாம். இது ஒரு நபரின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய தேவைப்படும் குறைந்தபட்ச தொகையை குறிக்கிறது, மேலும் இது பொருளாதார மற்றும் சமூக கொள்கைகளை வடிவமைக்க உதவும் ஒரு முக்கியமான குறிகாட்டியாகும்.

இலங்கையில் தனிநபரொருவருக்கு தேவைப்படும் குறைந்தபட்ச பணம் குறித்து வெளியான புதிய தகவல்

3 months 2 weeks ago
கிராமப்புறங்களில் சொந்த வீடு இருப்பவர்களுக்கு ஓரளவு சரி...கொழும்பில் கேள்வி குறி...

நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!

3 months 2 weeks ago
செவ்வந்தி… மாலதீவுக்கு சென்று விட்டதாக இணையத்தில் பேசிக் கொள்கிறார்கள். இதே மாதிரி ஈஸ்டர் குண்டு வெடிப்பில் தொடர்பு உள்ளதாக கருதப்படுபவரும், முஸ்லீம் மதத்துக்கு மாறியவருமான புலேந்தினி என்ற பெண்ணையும் பல வருடங்களாக தேடுகின்றார்கள் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. ஒளிப்பதில்…. பெண்கள் கெட்டிக்காரர் போலுள்ளது. ஆண்கள்தான்… சூடு ஆற முதல் அம்பிட்டு விடுகின்றார்கள்.