3 months 2 weeks ago
வெளிநாட்டு மதபோதகர்கள் வெளியேற்றம் இலங்கைக்குள் பிரார்த்தனைகளுக்காக வெளிநாட்டு மத போதகர்கள் உரிய மத விசாக்கள் இல்லாமல் நுழைவது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் (DIE) கடுமையான உத்தரவுக்கு மத்தியில், அதிகாரிகள் வார இறுதியில் நுவரெலியாவில் உள்ள மற்றொரு சபையை சோதனை செய்து, இரண்டு வெளிநாட்டு போதகர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டதாக டெய்லிமிரர் செய்தித்தாளுக்குத் தெரிய வருகிறது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் (DIE) எந்த அனுமதியும் இல்லாமல் இரண்டு வெளிநாட்டு போதகர்கள் மத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் ஈடுபட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், கொழும்பிலிருந்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவின் பறக்கும் படை வெள்ளிக்கிழமை மாலை நுவரெலியாவில் ஒரு ஆசீர்வாத விழாவை ஆய்வு செய்ய வந்தது. கடந்த 10ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை மற்றும் கடந்த 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இரண்டு தனித்தனி அமர்வுகளாக நுவரெலியா டவுன் ஹால் ஆடிட்டோரியத்தில் நடைபெறவிருந்த "இயேசு வாழ்கிறார் சுவிசேஷ சர்வதேசத்தின் 47ஆவது வருடாந்திர பைபிள் கருத்தரங்கு" என்ற நிகழ்வை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் அதிகாரிகள் சோதனை செய்தனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் மூத்த புலனாய்வாளர் ஒருவர் ஞாயிற்றக்கிழமை (16) டெய்லிமிரரிடம், சபையில் இருந்த இந்திய மற்றும் மலேசிய ஆண் போதகர்களைக் கண்டறிந்ததாகவும், அவர்கள் நாட்டில் மத நடவடிக்கைகளில் பங்கேற்க எந்த ஒப்புதல் ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாகவும் தெரிவித்தார். சென்னையைச் சேர்ந்த போதகர் மற்றும் இசைக்கலைஞர் ஜோயல் தாமஸ்ராஜ் மற்றும் மலேசியாவில் உள்ள பெட்ரா எவாஞ்சலிகல் அண்ட் டெலிவரன்ஸ் சர்ச்சின் நிறுவனர் மற்றும் தலைவர் போதகர் மோசஸ் மெல்கிசெடெக் ஆகியோர் ஆசீர்வாத விழாக்களில் பங்கேற்க எளிய வருகையின் போது சுற்றுலா விசாவில் கடந்த வாரம் கொழும்புக்கு வந்ததாகக் கண்டறியப்பட்டது. யாழ்ப்பாணத்தில் நடந்த ஆசீர்வாத விழாவை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் அதிகாரிகள் சோதனை செய்ததை டெய்லிமிரர் கடந்த திங்கட்கிழமை செய்தி வெளியிட்டது. அங்கு வருகை விசாக்கள் மட்டுமே வைத்திருந்த இரண்டு இந்திய போதகர்கள் பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்று உடனடியாக இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் நடந்த முதற்கட்ட விசாரணையின் போது, ஒரு வாரம் கழித்து நுவரெலியாவில் ஒரு ஆசீர்வாத விழா திட்டமிடப்பட்டிருப்பதை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் அதிகாரிகள் அறிந்து, வெள்ளிக்கிழமை அதைக் கண்டறிந்தனர். சம்பந்தப்பட்ட வெளிநாட்டு மத போதகர்களிடம், அவர்கள் நாட்டில் இருப்பது குறித்து விசாரிக்கப்பட்டது, மேலும் இலங்கையில் ஏதேனும் மத விளம்பரப் பணிகளில் பங்கேற்க வேண்டுமென்றால், சிறப்பு மத விசாக்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று இருவரும் கூறியிருந்தனர். இரண்டு போதகர்களும் முறையே சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பை விட்டு வெளியேறியதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அவர்களின் உள்ளூர் அழைப்பாளர்களுக்கு கண்டிப்பாக எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. https://www.tamilmirror.lk/செய்திகள்/வெளிநாட்டு-மதபோதகர்கள்-வெளியேற்றம்/175-353864
3 months 2 weeks ago
வெளிநாட்டு மதபோதகர்கள் வெளியேற்றம்
இலங்கைக்குள் பிரார்த்தனைகளுக்காக வெளிநாட்டு மத போதகர்கள் உரிய மத விசாக்கள் இல்லாமல் நுழைவது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் (DIE) கடுமையான உத்தரவுக்கு மத்தியில், அதிகாரிகள் வார இறுதியில் நுவரெலியாவில் உள்ள மற்றொரு சபையை சோதனை செய்து, இரண்டு வெளிநாட்டு போதகர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டதாக டெய்லிமிரர் செய்தித்தாளுக்குத் தெரிய வருகிறது.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் (DIE) எந்த அனுமதியும் இல்லாமல் இரண்டு வெளிநாட்டு போதகர்கள் மத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் ஈடுபட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், கொழும்பிலிருந்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவின் பறக்கும் படை வெள்ளிக்கிழமை மாலை நுவரெலியாவில் ஒரு ஆசீர்வாத விழாவை ஆய்வு செய்ய வந்தது.
கடந்த 10ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை மற்றும் கடந்த 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இரண்டு தனித்தனி அமர்வுகளாக நுவரெலியா டவுன் ஹால் ஆடிட்டோரியத்தில் நடைபெறவிருந்த "இயேசு வாழ்கிறார் சுவிசேஷ சர்வதேசத்தின் 47ஆவது வருடாந்திர பைபிள் கருத்தரங்கு" என்ற நிகழ்வை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் மூத்த புலனாய்வாளர் ஒருவர் ஞாயிற்றக்கிழமை (16) டெய்லிமிரரிடம், சபையில் இருந்த இந்திய மற்றும் மலேசிய ஆண் போதகர்களைக் கண்டறிந்ததாகவும், அவர்கள் நாட்டில் மத நடவடிக்கைகளில் பங்கேற்க எந்த ஒப்புதல் ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாகவும் தெரிவித்தார்.
சென்னையைச் சேர்ந்த போதகர் மற்றும் இசைக்கலைஞர் ஜோயல் தாமஸ்ராஜ் மற்றும் மலேசியாவில் உள்ள பெட்ரா எவாஞ்சலிகல் அண்ட் டெலிவரன்ஸ் சர்ச்சின் நிறுவனர் மற்றும் தலைவர் போதகர் மோசஸ் மெல்கிசெடெக் ஆகியோர் ஆசீர்வாத விழாக்களில் பங்கேற்க எளிய வருகையின் போது சுற்றுலா விசாவில் கடந்த வாரம் கொழும்புக்கு வந்ததாகக் கண்டறியப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் நடந்த ஆசீர்வாத விழாவை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் அதிகாரிகள் சோதனை செய்ததை டெய்லிமிரர் கடந்த திங்கட்கிழமை செய்தி வெளியிட்டது. அங்கு வருகை விசாக்கள் மட்டுமே வைத்திருந்த இரண்டு இந்திய போதகர்கள் பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்று உடனடியாக இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தில் நடந்த முதற்கட்ட விசாரணையின் போது, ஒரு வாரம் கழித்து நுவரெலியாவில் ஒரு ஆசீர்வாத விழா திட்டமிடப்பட்டிருப்பதை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் அதிகாரிகள் அறிந்து, வெள்ளிக்கிழமை அதைக் கண்டறிந்தனர்.
சம்பந்தப்பட்ட வெளிநாட்டு மத போதகர்களிடம், அவர்கள் நாட்டில் இருப்பது குறித்து விசாரிக்கப்பட்டது, மேலும் இலங்கையில் ஏதேனும் மத விளம்பரப் பணிகளில் பங்கேற்க வேண்டுமென்றால், சிறப்பு மத விசாக்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று இருவரும் கூறியிருந்தனர்.
இரண்டு போதகர்களும் முறையே சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பை விட்டு வெளியேறியதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அவர்களின் உள்ளூர் அழைப்பாளர்களுக்கு கண்டிப்பாக எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
https://www.tamilmirror.lk/செய்திகள்/வெளிநாட்டு-மதபோதகர்கள்-வெளியேற்றம்/175-353864
3 months 2 weeks ago
வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் முறுகல் பு.கஜிந்தன் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள கரைவலை வாடியால் மீனவர்கள் இடையே மூன்றாவது நாளாக திங்கட்கிழமை (17) முறுகல் நிலை தொடர்ந்து வருகிறது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, உழவு இயந்திரத்தை பாவித்து 22 கயிறுகளுக்கு மேல் கரைவலை தொழில் புரிவது சட்ட மீறலாக உள்ள போதும் வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள கரைவலை தொழிலாளி ஒருவர் நாளாந்தம் இரண்டு படகுகளில் 150 மேற்பட்ட கயிறுகளை பாவித்து கரைவலை தொழில் புரிந்து வருகின்றனர் ஆனால் ஏனைய மீனவர்களின் வலைகள், படகு, இயந்திரங்கள் பாதிக்கப்படுவதுடன் அவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை தொடர்ந்து உருவாகி வருகிறது வெற்றிலைக்கேணியில் இருந்து 150 மேற்பட்ட கயிறுகளை பாவித்து குறித்த கரைவலை முதலாளி கோவில் கடற்பரப்பு வரை சென்று வருவதால் ஏனைய மீனவர்கள் தொழில் புரிவதற்கு மாலை நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது குறித்த கரைவலை முதலாளியின் செயற்பாட்டால் அவரது கரைவலையில் சிக்குண்ட சிறு தொழிலாளி ஒருவரின் படகு, இயந்திரம் சேதமடைந்துள்ளது ஏனைய பகுதிகளில் சட்டவிரோதமாக குறித்த கரைவலை முதலாளி தொழில் புரிந்து வந்தமையால் அப்பகுதி மக்களால் அகற்றப்பட்டதன் பின்னர் வெற்றிலைக்கேணி விநாயகர்புரம் பகுதியில் தற்பொழுது தொழில் புரிந்து வருகின்றனர். அதிகாலை 06.00 பிறகு கரைவலை தொழில் புரிவதற்கு சட்டம் உள்ள போதும் அவர்கள் சட்டத்திற்கு முரணாக நேர காலத்தை மீறி ஏனைய மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர் இதனால் பாதிப்படைந்த மீனவர்கள் குறித்த கரைவலை முதலாளியுடன் மூன்றாவது நாளாகவும் முறுகலில் ஈடுபட்டுவருகின்றனர் சம்பவம் தொடர்பாக கடற்றொழில் சமாசத்திற்கும், நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்படும் போதிலும் நடவடிக்கை எடுக்க தவறியதால் முறுகல் நிலை வன்முறையாக மாறும் வாய்ப்புள்ளதாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் மூன்றாவது நாளாகவும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/வெற்றிலைக்கேணியில்-மீனவர்கள்-முறுகல்/175-353868
3 months 2 weeks ago
வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் முறுகல்

பு.கஜிந்தன்
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள கரைவலை வாடியால் மீனவர்கள் இடையே மூன்றாவது நாளாக திங்கட்கிழமை (17) முறுகல் நிலை தொடர்ந்து வருகிறது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
உழவு இயந்திரத்தை பாவித்து 22 கயிறுகளுக்கு மேல் கரைவலை தொழில் புரிவது சட்ட மீறலாக உள்ள போதும் வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள கரைவலை தொழிலாளி ஒருவர் நாளாந்தம் இரண்டு படகுகளில் 150 மேற்பட்ட கயிறுகளை பாவித்து கரைவலை தொழில் புரிந்து வருகின்றனர்
ஆனால் ஏனைய மீனவர்களின் வலைகள், படகு, இயந்திரங்கள் பாதிக்கப்படுவதுடன் அவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை தொடர்ந்து உருவாகி வருகிறது
வெற்றிலைக்கேணியில் இருந்து 150 மேற்பட்ட கயிறுகளை பாவித்து குறித்த கரைவலை முதலாளி கோவில் கடற்பரப்பு வரை சென்று வருவதால் ஏனைய மீனவர்கள் தொழில் புரிவதற்கு மாலை நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது
குறித்த கரைவலை முதலாளியின் செயற்பாட்டால் அவரது கரைவலையில் சிக்குண்ட சிறு தொழிலாளி ஒருவரின் படகு, இயந்திரம் சேதமடைந்துள்ளது
ஏனைய பகுதிகளில் சட்டவிரோதமாக குறித்த கரைவலை முதலாளி தொழில் புரிந்து வந்தமையால் அப்பகுதி மக்களால் அகற்றப்பட்டதன் பின்னர் வெற்றிலைக்கேணி விநாயகர்புரம் பகுதியில் தற்பொழுது தொழில் புரிந்து வருகின்றனர்.
அதிகாலை 06.00 பிறகு கரைவலை தொழில் புரிவதற்கு சட்டம் உள்ள போதும் அவர்கள் சட்டத்திற்கு முரணாக நேர காலத்தை மீறி ஏனைய மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர்
இதனால் பாதிப்படைந்த மீனவர்கள் குறித்த கரைவலை முதலாளியுடன் மூன்றாவது நாளாகவும் முறுகலில் ஈடுபட்டுவருகின்றனர்
சம்பவம் தொடர்பாக கடற்றொழில் சமாசத்திற்கும், நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்படும் போதிலும் நடவடிக்கை எடுக்க தவறியதால் முறுகல் நிலை வன்முறையாக மாறும் வாய்ப்புள்ளதாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் மூன்றாவது நாளாகவும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
https://www.tamilmirror.lk/செய்திகள்/வெற்றிலைக்கேணியில்-மீனவர்கள்-முறுகல்/175-353868
3 months 2 weeks ago
யூடியூப்பர்களும் தமிழ்ச் சமூகமும் – நிலாந்தன். கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த யூத எழுத்தாளர் ஆகிய ஆர்தர் கோஸ்லரிடம் எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தைக் கூறுங்கள் என்று கேட்ட பொழுது, அவர் சொன்னார், மந்தர்களே-mediocres- எல்லா இடங்களிலும் முதன்மை வகிப்பார்கள் என்று. அவர் எதைக்கருதி அவ்வாறு சொன்னார் என்பது தெளிவில்லை. ஆனால் இப்போதுள்ள சமூக வலைத்தள ஊடகச் சூழலை வைத்துப் பார்க்கும் பொழுது அது ஒரு தீர்க்கதரிசனமோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது. சமூக வலைத்தளங்களின் பயன்பாடு என்பது இரண்டு புறமும் கூரான கத்தி போன்றது. ஒருபுறம் சமூக வலைத்தளங்கள் சாதாரண மக்களைப் பொறுத்தவரையில்அதிகம் ஜனநாயகமானவை. பாரம்பரிய ஊடகங்களுக்கு இருக்கக்கூடிய கட்டுப்பாடுகள் எவயுமின்றி யாரும் விரும்பியதைக் கூறலாம். அதை விரைவாகப் பரப்பலாம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது நலிவுற்ற பிரிவினர் தங்கள் கருத்துக்களை உடனடியாகவும் விரைவாகவும் பரவலாகவும் பரப்பக்கூடிய வாய்ப்புகள் முன்னெப்பொழுதையும் விட அதிகரித்துள்ளன. இது முக்கியமான நன்மை. அவ்வாறு சமூக வலைத்தளங்களை உச்சமாகப் பயன்படுத்திய ஒரு மருத்துவர் தமிழ் மக்களால் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அதேசமயம் பாரம்பரிய ஊடகங்கள் போலல்லாது சமூக வலைத்தள ஊடகச் சூழல் என்பது துறை சார்ந்த நிபுணத்துவம், துறை சார் அறம் என்பவற்றை அதிகம் மதியாத ஒன்றாகவும் மாறி வருகிறது. எப்படியென்றால் அது பொதுப் புத்தியை அதிகம் பிரதிபலிப்பது.பொதுப் புத்தி எப்பொழுதும் விஞ்ஞானபூர்வமானதாக அறிவுபூர்வமானதாக இருக்க வேண்டும் என்று இல்லை. அது பெரும்பாலும் இனம் சார்ந்து, மதம் சார்ந்து மொழி சார்ந்து, சாதி சார்ந்து, ஊர் சார்ந்து, பால் சார்ந்து… என்று பல்வேறு சார்பு நிலைகளுக்கு ஊடாகவும் வெளிப்படுவது. அது பெரும்பாலும் ஒரு குழு மனோநிலை. அதனால், சமூக வலைத்தள சூழல் எனப்படுவது, மற்றொரு சமூகத்துக்கு அல்லது சமூகத்தின் மற்றொரு பிரிவினருக்கு அல்லது மற்றொரு நாட்டுக்கு எதிரான கருத்துக்கள் அதிகம் பரவலாக்கப்படுவதற்கா னவாய்ப்புகளை ஒப்பீட்டுளவில் அதிகமாகக் கொண்டிருக்கின்றது. அதனால்தான் ஐநாவின் வெறுப்புப் பேச்சுகளுக்கான சிறப்புத் தூதுவர்கள் சமூகவலைத்தளச் சூழலானது இன ரீதியான, மத ரீதியான, நிற ரீதியான, வெறுப்புப் பேச்சுக்களை பரப்புகின்றன என்று விமர்சிக்கின்றார்கள். குறிப்பாக பர்மாவில் ரோகியங்கா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பில் முகநூல் ஒரு கருவியாகத் தொழில்பட்டது என்று ஐநாவின் அறிக்கை ஒன்று கூறுகிறது. அதுபோலவே சில ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் கண்டி, திகன ஆகிய இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு,ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறைகளின்போது, முகநூல் தடை செய்யப்பட்டது. இப்போதுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் தடவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பொழுது, ருவிட்டர் தளத்தை அதிகம் பயன்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்தன. அதாவது சமூக வலைத்தளச் சூழல் என்பது ஒருபுறம் சமானிய மக்களின் பொதுப் புத்தியை பிரதிபலிக்கின்றது. இன்னொரு புறம் அவ்வாறு பொதுக் புத்தியை பிரதிபலிப்பது என்பதினாலே பொது புத்திக்குள் காணப்படும் இனம், மொழி,மதம், நிறம் சாதி சார்ந்த வெறுப்புகளை பரவலாக்கும் களமாகவும் மாறி வருகிறது. அதனால்தான் சமூக வலைத்தள சூழல் என்பது நிபுணர்களை வெளித்தள்ளுகின்றது என்று பொதுவாக அவதானிக்கப்பட்டுள்ளது. துறை சார் ஞானம் இல்லாதவர்கள் கருத்துக்கூறும் ஒரு பொதுத் தளத்தில் துறை சார் நிபுணர்கள் கருத்துக் கூறி அவமதிக்கப்பட விரும்ப மாட்டார்கள். எனவே அவர்கள் விலகி நிற்பார்கள்.இதனால் ஒரு குறிப்பிட்ட கருத்து விஞ்ஞானபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் அணுகப்படும் சூழலை அங்கே முழுமையாக உத்தரவாதப்படுத்த முடிவதில்லை. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை குறிப்பாக, 2009க்குப் பின்னரான ஈழத் தமிழ் அரசியல் சூழலிலும் அதைக் காண முடியும். வெறுப்பர்களே அதிகம் விளைந்து விட்டார்கள். எதையும் ஆழமாக வாசிப்பதில்லை. ஒரு கைபேசியும் இணைய இணைப்பும் இருந்தால் காணும். யாரும் எதையும் சொல்லலாம் என்ற ஒரு நிலை. இதில் ஜனநாயகம் உண்டு. அதேசமயம் எனது நண்பர் ஒருவர் கூறுவதுபோல, தனக்குத் தெரியாத ஒன்றைப்பற்றிக் கருத்துக் கூறும் துணிச்சலை அது வழங்கி விட்டது. இந்தத் துணிச்சல் மனித குலம் இதுவரை கண்டடைந்த அறிவியல் மகத்துவங்களுக்கு எதிரானது. எனக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி கருத்துக் கூறும் துணிச்சல் என்பது அறிவியலின் வீழ்ச்சி. பெரும்பாலான சமூக வலைத்தளங்கள் குறிப்பாக யுடியூப்கள் பொதுப் புத்தியை கவரும் பொருட்டு காணொளிகளை வெளியிடுகின்றன. அதனால் பொது புத்தியின் பலவீனம் எதுவென்று கண்டு அதனைச் சுரண்டி காசு உழைக்கின்றன. ஒரு சமூகத்துக்கு நல்லதையும் உன்னதமானதையும் எடுத்துக்காட்டி அந்த சமூகத்தின் உளவியல் கூர்ப்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக வேண்டியதுதான் ஊடகப் பணியாகும். மாறாக அந்த சமூகத்தின் பலவீனம் எதுவோ அல்லது அந்த சமூகத்தை எங்கே இலகுவாகச் சுரண்டலாமோ அதை விற்பது என்பது சமூகக் கூர்புக்கு எதிரானது. மனித குலத்துக்கு எதிரானது. குறிப்பாக ஈழத் தமிழர்களைப் பொருத்தவரை 2009க்கு பின்னரான கூட்டு உளவியல் என்பது அதிகம் கொந்தளிப்பானது. இனப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காத; பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காத; தலைமைத்துவ வெற்றிடம்; புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதிக்கம்.. போன்ற பல காரணிகளும் கடந்த 15 ஆண்டு கால ஈழத் தமிழர்களின் கூட்டு உளவியலைத் தீர்மானிக்கின்றன. இக்கூட்டு உளவியலைத் தீர்க்கதரிசனமாகக் கையாளவல்ல தலைமைகள் கடந்த 15 ஆண்டுகளாக மேலுயரவில்லை. கூட்டுக் காயங்களிலும் கூட்டு மனவடுக்களிலும் அழுந்திக் கிடக்கும் ஒரு சமூகத்துக்கு, கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல அரசியலை, விழுமியங்களை முன்வைத்துத் தலைமை தாங்கவில்லை பொருத்தமான தலைவர்கள் இல்லாத வெற்றிடத்தில், சமூக வலைத்தளங்களால் திறந்து விட்டிருக்கும் கட்டுப்பாடற்ற,கட்டற்ற சூழலானது வெறுப்பவர்களுக்கும் மந்தர்களுக்கும் கயவர்களுக்கும் பொய்யர்களுக்கும் அதிகம் வாய்ப்பானதாக மாறி வருகிறது. பொதுவாக ஒரு சமூகத்தின் பொதுப் புத்தியானது சீரியஸானதாக அறிவுபூர்வமானதாக விஞ்ஞானபூர்வமானதாக இருப்பது குறைவு. சீரியஸானதுக்கும் ஜனரஞ்சகத்துக்கும் இடையிலான இடைவெளி என்பது எல்லாச் சமூகங்களிலும் காணப்படுவது. ஆனால் ஈழத் தமிழ் சமூகத்தில் அந்த இடைவெளி ஆழமானது.யூரியுப்பர்களின் காலத்தில் அந்த இடைவெளி மேலும் ஆழமாகிக் கொண்டே போகிறது. சீரியஸான, அறிவுபூர்வமான சமூக விலைத்தலங்களையும் காணொளித்தளங்களையும் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்கள்தான்.சீரியஸ் இல்லாத,மந்தமான, உணர்ச்சிகரமான, விஞ்ஞான பூர்வமற்ற, பொழுதுபோக்கான,எல்லாவற்றையும் காசாக்க முற்படும் யூரியுப்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை பல ஆயிரம்.சில சமயங்களில் அந்தத் தொகை மில்லியன் கணக்கானது. இவ்வாறு அறிவுபூர்வமானதுக்கும் மந்தமானதுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துச் செல்லுமோர் சமூகப் பொருளாதார அரசியல் சூழலில், அண்மை வாரங்களாக யூடியூபர்களின் மோசடிகள் தொடர்பாகவும் குற்றச்செயல்கள் தொடர்பாகவும் அதிகம் செய்திகள் வெளி வருகின்றன. ஒருபுறம் நிதிப்பலம் மிக்க புலம்பெயர்ந்த சமூகம். அது தாயகத்தை நோக்கி பிரிவேக்கத்தோடு உதவுவதற்குக் காத்திருக்கின்றது. இன்னொரு புறம் தாயகத்தில் உதவிக்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள். இந்த இரண்டு தரப்பையும் அதாவது தேவையையும் வளங்களையும் இணைப்பவர்கள் யார் என்று பார்த்தால், ஒன்றில் தனி நபர்கள் அல்லது அரசு சார்பற்ற நிறுவனங்கள் அல்லது சில தொண்டு நிறுவனங்கள் போன்றவைதான். இதில் தனி நபர்களாக இருப்பவர்களில் ஒரு பகுதியினர் அரசியல்வாதிகள்,அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதில் ஒரு பிரிவினர் தான் கண்ணீரையும் வறுமையையும் காணொளியாக்கிக் காசாக்குகிறார்கள். இதில் ஒரு சிறு தொகையினர்,ஒருகை கொடுப்பது மறு கைக்குத் தெரியாமல் தொண்டு செய்கிறார்கள்.அதை அவர்கள் விளம்பரப்படுத்துவதில்லை. ஆனால் அவர்கள் மிகச் சிறிய தொகையினர். யாருக்கெல்லாம் பிரபல்யம் வேண்டுமோ, யாரெல்லாம் பிரபல்யத்தைக் காசாக்க விரும்புகின்றார்களோ, அவர்கள்தான் இப்பொழுது குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருக்கிறார்கள். இது ஒரு உலகப் பொதுவான ஒரு போக்குத்தான்.ஆனால் ஈழத் தமிழ் அரசியற் சூழலில் இதன் விளைவுகள் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பாரதூரமானவை. 2009க்குப் பின்னரான ஈழத் தமிழர்களின் சமூகப் பொருளாதார அரசியல் உளவியல் எனப்படுவது கொந்தளிப்பானது. தலைமைத்துவம் இல்லாதது. இந்த வெற்றிடத்துக்குள் யூடியூபர்கள் புகுந்து விளையாடுகிறார்கள்.நேரலையில் தோன்றி ஒரு மருத்துவர் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிவிட்டார். எனவே இந்த விடயத்தில் 2009க்குப் பின்னரான தமிழ்க் கூட்டு உளவியலை வெற்றிகரமாகக் கையாளவில்லை, ஒரு கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல, அரசியலை முன்னெடுக்க விரும்பும் தரப்புகள் ஒரு பண்பாட்டு மறுமலர்ச்சிக்குத் தலைமைதாங்கத் தயாராக இருக்கவேண்டும்.புத்திசாலிகளும் அறிவுபூர்வமாகச் சிந்திப்பவர்களும் துறை சார்ந்த ஞானம் உடையவர்களும் அரசியலில் மேலோங்கும் பொழுது, மந்தர்கள் பின்வாங்கி விடுவார்கள்.இல்லையென்றால் மந்தர்களே எல்லா இடங்களிலும் மேலெழுவார்கள். https://athavannews.com/2025/1425347

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
3 months 2 weeks ago
போட்டியிடுகின்ற சகல சபைகளிலும் தமிழரசுக் கட்சி வெல்லும் editorenglishMarch 17, 2025 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்றும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நியமனங்கள் தொடர்பான கலந்துரையாடல், முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (16/03/2025) இடம்பெற்றது. இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள எம்.ஏ.சுமந்திரனுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருமான துரைராசா ரவிகரன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இக்கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நிலையில் சுமந்திரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி போட்டியிடுகின்ற உள்ளூராட்சித் தேர்தல் நியமனம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. சில இடங்களில் வேட்பாளர் நியமனங்களில் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, பெரும்பாலும் வேட்பாளர் நியமனங்கள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே அடுத்த வாரம் வேட்புமனுக்களை தாக்கல் செய்வோம். அந்த வகையில் போட்டியிடுகின்ற அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார். https://globaltamilnews.net/2025/213534/
3 months 2 weeks ago
மெதிரிகிரிய வன்முறை; ஆறு சந்தேக நபர்கள் கைது! மெதிரிகிரிய பகுதியில் அண்மையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் மெதிரிகிரியவைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த வன்முறை சம்பவம் தொடர்பில் மீதமுள்ள சந்தேக நபர்களை கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2025/1425382
3 months 2 weeks ago

மெதிரிகிரிய வன்முறை; ஆறு சந்தேக நபர்கள் கைது!
மெதிரிகிரிய பகுதியில் அண்மையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் மெதிரிகிரியவைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த வன்முறை சம்பவம் தொடர்பில் மீதமுள்ள சந்தேக நபர்களை கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
https://athavannews.com/2025/1425382
3 months 2 weeks ago
உள்ளூராட்சி தேர்தல்; வேட்புமனுக்களை ஏற்கும் பணிகள் இன்று ஆரம்பம்! எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் இன்று (17) தொடங்குகிறது. இன்று முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் இன்று தொடங்கும், வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் முடிந்ததும் தேர்தல் திகதி அறிவிக்கப்படும். இதற்கிடையில், உள்ளுராட்சித் தேர்தலுக்கான தபால்மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகிறது. இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், தபால் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்குப் பதிலாக, தங்கள் நிறுவனம் அமைந்துள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்டத் தேர்தல் அலுவலகத்திற்குச் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. மேலும், இன்று தொடங்கும் க.பொ.த சாதாரண தர (சாதாரண தர) பரீட்சைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வேட்புமனுக்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் வேட்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறார். https://athavannews.com/2025/1425405
3 months 2 weeks ago

உள்ளூராட்சி தேர்தல்; வேட்புமனுக்களை ஏற்கும் பணிகள் இன்று ஆரம்பம்!
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் இன்று (17) தொடங்குகிறது.
இன்று முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் இன்று தொடங்கும், வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் முடிந்ததும் தேர்தல் திகதி அறிவிக்கப்படும்.
இதற்கிடையில், உள்ளுராட்சித் தேர்தலுக்கான தபால்மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகிறது.
இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், தபால் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்குப் பதிலாக, தங்கள் நிறுவனம் அமைந்துள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்டத் தேர்தல் அலுவலகத்திற்குச் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது.
மேலும், இன்று தொடங்கும் க.பொ.த சாதாரண தர (சாதாரண தர) பரீட்சைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வேட்புமனுக்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் வேட்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறார்.
https://athavannews.com/2025/1425405
3 months 2 weeks ago
கல்லெறி தாக்குதலுக்கு உள்ளான நபர் சடலமாக மீட்பு! கொஹுவல பகுதியில் பாடசாலை மாணவனின் பணப்பையை திருட முயன்றதற்காக கற்களால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் நுகேகொடை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நுகேகொடை, நலந்தராம வீதியில் குறித்த ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (16) கொஹுவலாவில் கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு மாணவனை மிரட்டி, அந்த நபர் மாணவனின் பணப்பையைத் திருட முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த நேரத்தில், அருகிலுள்ள மக்கள் குறித்த நபரை கற்களால் தாக்கினர், அதையடுத்து அவர் தப்பிச் சென்றார். இருப்பினும், நேற்று (16) மாலை நுகேகொடையில் உள்ள நடைபாதையில் அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது தலையின் பின்புறம் மற்றும் காதுகளுக்கு அருகில் காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை, அதே நேரத்தில் கொஹுவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1425475
3 months 2 weeks ago
கேதார்நாத்தில் இந்துக்கள் அல்லாதவர்களை தடை செய்ய வேண்டும் – சர்ச்சையை ஏற்படுத்திய புதிய பரிந்துரை! கேதார்நாத் ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று உத்தரகண்டின் பாரதிய ஜனதாக் கட்சியின் சட்டமான்ற உறுப்பினர் ஆஷா நௌடியல் (Asha Nautiyal) கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்கள் அல்லாத சிலர் மத தலத்தின் புனிதத்திற்கு தீங்கு விளைவிக்க முயற்சிப்பதாக கேதார்நாத் சட்டமான உறுப்பினர் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் குடியிருப்பாளர்களுடன் பொறுப்பு அமைச்சர் சவுரப் பகுகுணா அண்மையில் ஒரு கூட்டம் நடத்தியதாகவும் நௌடியல் குறிப்பிட்டார். இதன் போது சில பங்கேற்பாளர்கள், இந்து அல்லாத நபர்கள் கேதார்நாத் தாமின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாகக் கூறினர். அத்தகைய நபர்களை அடையாளம் கண்டு, அந்த இடத்திற்குள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என்று முன்மொழியப்பட்டதாகவும் அவர் கூறினார். இதற்கு பதிலளித்த உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத், பாஜக தலைவர்கள் பரபரப்பான கருத்துக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்று கூறினார். சார் தாம் யாத்திரை ஏப்ரல் 30 ஆம் திகதி அக்ஷய திருதியை அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, அப்போது கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆலயங்களின் கதவுகள் திறக்கப்படும். கேதார்நாத் ஆலயத்தின் வாயில்கள் மே 2 ஆம் திகதியும், பத்ரிநாத் ஆலயத்தின் வாயில்கள் மே 4 ஆம் திகதியும் திறக்கப்படும் நிலையில் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. https://athavannews.com/2025/1425385
3 months 2 weeks ago
மாசிடோனிய இரவு விடுதியில் தீ விபத்து; 51 பேர் மரணம்! வடக்கு மாசிடோனியாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தலைநகர் ஸ்கோப்ஜியிலிருந்து கிழக்கே 100 கிமீ (60 மைல்) தொலைவில் உள்ள கோக்கானி (Kocani) நகரில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றிலேயே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. நாட்டில் பிரபலமான ஹிப்-ஹாப் இரட்டையர்களான ADN இசைக்குழுவின் நிகழ்ச்சியின் போது அதிகாலை 03:00 மணியளவில் (02:00 GMT) தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்தினை அடுத்து, சில மணிநேரங்களுக்குப் பின்னரும் அந்த இடம் எரிந்து கொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டது. இசை நிகழ்ச்சியில் 1,500 பேர் வரை கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இசை நிகழ்வின் போது வாணவேடிக்கை சாதனங்களைப் பயன்படுத்தியதால் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1425369
3 months 2 weeks ago

மாசிடோனிய இரவு விடுதியில் தீ விபத்து; 51 பேர் மரணம்!
வடக்கு மாசிடோனியாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தலைநகர் ஸ்கோப்ஜியிலிருந்து கிழக்கே 100 கிமீ (60 மைல்) தொலைவில் உள்ள கோக்கானி (Kocani) நகரில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றிலேயே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
நாட்டில் பிரபலமான ஹிப்-ஹாப் இரட்டையர்களான ADN இசைக்குழுவின் நிகழ்ச்சியின் போது அதிகாலை 03:00 மணியளவில் (02:00 GMT) தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
விபத்தினை அடுத்து, சில மணிநேரங்களுக்குப் பின்னரும் அந்த இடம் எரிந்து கொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டது.
இசை நிகழ்ச்சியில் 1,500 பேர் வரை கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இசை நிகழ்வின் போது வாணவேடிக்கை சாதனங்களைப் பயன்படுத்தியதால் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
https://athavannews.com/2025/1425369
3 months 2 weeks ago
அமெரிக்க கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள்; அனிமேஷன் வீடியோவை வெளியிட்ட ஹவுத்தி! அழிக்கப்பட்ட கடற்படைக் கப்பல்களுக்கு அருகில் அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள் மிதப்பதை சித்தரிக்கும் ஒரு அனிமேஷன் வீடியோவை ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ இசையுடன் தொடங்கி, அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்ட ஒரு சவப்பெட்டி தண்ணீரில் மிதப்பதை சித்தரிக்கிறது. பின்னர் அது அழிக்கப்பட்ட போர்க்கப்பல்களில் இருந்து விலகிச் செல்லும் பல எண்ணிக்கை அதே கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகளைக் காண்பிக்கும் வகையில் சித்தரிக்கப்படுகிறது. செங்கடல் கப்பல் போக்குவரத்துக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஏமனின் ஈரானுடன் இணைந்த ஹவுத்திகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை (15) முழு அளவிலான இராணுவத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த வீடியோக் காட்சி வெளியிடப்பட்டுள்ளதுடன், கிளர்ச்சியாளர்கள் பழிவாங்குவதாகவும் சபதம் செய்தனர். சவுதி அரேபியாவின் எல்லையில் கிளர்ச்சியாளர்களின் கோட்டையான வடக்கு மாகாணமான சாதாவிலும், தலைநகர் சனாவில் சனிக்கிழமை இரவு முழுவதும் அமெரிக்கத் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஹவுத்திகளால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2023 ஒக்டோபரில் காசாவில் போர் தொடங்கியதிலிருந்து ஹவுத்திகளுக்கு எதிரான மிக விரிவான தாக்குதல்களில் இந்த வான்வழித் தாக்குதல்களும் ஒன்றாகும். ஞாயிற்றுக்கிழமை ஈரானும் ட்ரம்பின் எச்சரிக்கைக்கு பதிலளித்து ஹவுத்திகளுக்கு உதவ மறுத்தது. ஈரானின் துணை இராணுவ புரட்சிகர காவல்படையின் தலைவர் ஜெனரல் ஹொசைன் சலாமி, ஹவுத்திகளின் தாக்குதல்களில் தனது நாடு ஈடுபடவில்லை என்று மறுத்தார். மேலும் பிராந்தியம் முழுவதும் அது கூட்டணி வைத்திருக்கும் போராளிக் குழுக்களின் “தேசிய அல்லது செயல்பாட்டுக் கொள்கைகளை அமைப்பதில் அது எந்தப் பங்கையும் வகிக்கவில்லை” என்று கூறினார். இதற்கிடையில், அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோருடன் ட்ரம்ப் தாக்குதல்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் படங்களையும் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. கடந்த தசாப்தத்தில் ஏமனின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் எடுத்த ஆயுதமேந்திய இயக்கமான ஹவுத்திகள், 2023 நவம்பர் முதல் கப்பல் போக்குவரத்தை குறிவைத்து 100க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இது உலகளாவிய வர்த்தகத்தை சீர்குலைத்துடன், அதிகளவிலான பதில் நடவடிக்கையில் அமெரிக்க இராணுவத்தையும் ஈடுபடுத்தியுள்ளது. https://athavannews.com/2025/1425426
3 months 2 weeks ago

அமெரிக்க கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள்; அனிமேஷன் வீடியோவை வெளியிட்ட ஹவுத்தி!
அழிக்கப்பட்ட கடற்படைக் கப்பல்களுக்கு அருகில் அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள் மிதப்பதை சித்தரிக்கும் ஒரு அனிமேஷன் வீடியோவை ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.
இந்த வீடியோ இசையுடன் தொடங்கி, அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்ட ஒரு சவப்பெட்டி தண்ணீரில் மிதப்பதை சித்தரிக்கிறது.
பின்னர் அது அழிக்கப்பட்ட போர்க்கப்பல்களில் இருந்து விலகிச் செல்லும் பல எண்ணிக்கை அதே கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகளைக் காண்பிக்கும் வகையில் சித்தரிக்கப்படுகிறது.
செங்கடல் கப்பல் போக்குவரத்துக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஏமனின் ஈரானுடன் இணைந்த ஹவுத்திகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை (15) முழு அளவிலான இராணுவத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த வீடியோக் காட்சி வெளியிடப்பட்டுள்ளதுடன், கிளர்ச்சியாளர்கள் பழிவாங்குவதாகவும் சபதம் செய்தனர்.

சவுதி அரேபியாவின் எல்லையில் கிளர்ச்சியாளர்களின் கோட்டையான வடக்கு மாகாணமான சாதாவிலும், தலைநகர் சனாவில் சனிக்கிழமை இரவு முழுவதும் அமெரிக்கத் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஹவுத்திகளால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2023 ஒக்டோபரில் காசாவில் போர் தொடங்கியதிலிருந்து ஹவுத்திகளுக்கு எதிரான மிக விரிவான தாக்குதல்களில் இந்த வான்வழித் தாக்குதல்களும் ஒன்றாகும்.
ஞாயிற்றுக்கிழமை ஈரானும் ட்ரம்பின் எச்சரிக்கைக்கு பதிலளித்து ஹவுத்திகளுக்கு உதவ மறுத்தது.
ஈரானின் துணை இராணுவ புரட்சிகர காவல்படையின் தலைவர் ஜெனரல் ஹொசைன் சலாமி, ஹவுத்திகளின் தாக்குதல்களில் தனது நாடு ஈடுபடவில்லை என்று மறுத்தார்.
மேலும் பிராந்தியம் முழுவதும் அது கூட்டணி வைத்திருக்கும் போராளிக் குழுக்களின் “தேசிய அல்லது செயல்பாட்டுக் கொள்கைகளை அமைப்பதில் அது எந்தப் பங்கையும் வகிக்கவில்லை” என்று கூறினார்.
இதற்கிடையில், அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோருடன் ட்ரம்ப் தாக்குதல்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் படங்களையும் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
கடந்த தசாப்தத்தில் ஏமனின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் எடுத்த ஆயுதமேந்திய இயக்கமான ஹவுத்திகள், 2023 நவம்பர் முதல் கப்பல் போக்குவரத்தை குறிவைத்து 100க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இது உலகளாவிய வர்த்தகத்தை சீர்குலைத்துடன், அதிகளவிலான பதில் நடவடிக்கையில் அமெரிக்க இராணுவத்தையும் ஈடுபடுத்தியுள்ளது.
https://athavannews.com/2025/1425426
3 months 2 weeks ago
போப் பிரான்சிஸ்ஸின் புதிய புகைப்படம் வெளியானது! உடல் நலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ், உடல் நலம் தேறி வருவதாகத் தகவல் வெளிவந்த நிலையில், அதனை உறுதிப் படுத்தும் வகையில் அவரது புதிய புகைப்படத்தை வத்திக்கான் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. குறித்த புகைப்படத்தில் போப் பிரான்சிஸ் ஜெமில்லி மருத்துவமனையில் சக பாதியார்களுடன் பலிபீடத்தின் முன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்து திருப்பலியில் பங்கேற்றிருப்பதைக் காணலாம். போப் பிரான்சிஸ் கடந்த பெப்ரவரி மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வெளியான முதல் புகைப்படம் இதுவாகும். ….. 88 வயதான போப் பிரான்சிஸ் மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து,இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பெப்பிரவரி மாதம் 14-ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு அண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1425408
3 months 2 weeks ago
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகியது Published By: DIGITAL DESK 3 17 MAR, 2025 | 09:37 AM கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் (2024 கல்வியாண்டுக்கான) இன்று திங்கட்கிழமை (17) ஆரம்பமாகியது. இந்த பரீட்சை எதிர்வரும் 26ஆம் திகதி வரை 3,663 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மட்டக்களப்பு சீரான காலநிலை நிலவுவதால் மாணவர்கள் முன் கூட்டியே பரீட்சை மண்டபங்களுக்கு வருகை தந்ததை அவதானிக்க முடிந்தது. மட்டக்களப்பு மாவட்டத்திலும் சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ள நிலையில் மாவட்டத்திலுள்ள 5 கல்வி வலயங்களில் இருந்து பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோன்றுகின்றனர். ஆலயங்களில் வழிபட்ட பின்னர் மாணவர்கள் பரீட்சை மண்டபங்களுக்குச் சென்றதை அவதானிக்க முடிந்தது. பரீட்சை நிலையங்களில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் பெற்றோரிடம் ஆசிர்வாதங்களைப்பெற்று மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்குள் நுழைந்ததை காணமுடிந்தது. https://www.virakesari.lk/article/209410