Aggregator
தலைவரை கண்டா வரச்சொல்லுங்க
மனிதச்சிலந்தி / சிலந்தி மனிதன்?
கோட்டாவின் உத்தரவு சட்ட விரோதமானது;உயர் நீதிமன்றம் அதிரடி
கோட்டாவின் உத்தரவு சட்ட விரோதமானது;உயர் நீதிமன்றம் அதிரடி
Simrith / 2025 மார்ச் 18 , பி.ப. 07:00 - 0
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2020 ஆம் ஆண்டு பிறப்பித்த தடுப்புக்காவல் உத்தரவு சட்டவிரோதமானது என்றும் மனுதாரரின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு தீர்ப்பை வழங்கியது, மனுதாரருக்கு ரூ. 100,000 இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டது.
ஹெனாகம, பொக்குனுவிட்ட பகுதியைச் சேர்ந்த காஞ்சனா பிரியதர்ஷனி மதுரப்பெரும தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவுக்கு பதிலளிக்கும் போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறி 2020 ஆம் ஆண்டு பேலியகொட சிறப்பு புலனாய்வுப் பிரிவால் மனுதாரர் கைது செய்யப்பட்டார். அவரது அடுத்தடுத்த தடுப்புக்காவல் இரண்டு தனித்தனி தடுப்பு உத்தரவுகள் மூலம் அங்கீகரிக்கப்பட்டது, ஒன்று 1929 ஆம் ஆண்டு 17 ஆம் எண் நச்சு, அபின் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனவரி 30, 2020 அன்று வெளியிடப்பட்டது, மற்றொன்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிப்ரவரி 6, 2020 அன்று வெளியிடப்பட்டது.
அரசியலமைப்பின் பிரிவுகள் 12, 13(1), மற்றும் 13(2) ஆகியவற்றின் அடிப்படையில் தொடர நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அரசியலமைப்பின் 20வது திருத்தம் இன்னும் நடைமுறைக்கு வராததால், இந்த வழக்கைத் தாக்கல் செய்யும் போது அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சராகச் செயல்பட எந்த அதிகாரமும் இல்லை என்பது தெரியவந்தது.
அந்த வகையில், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பிப்ரவரி 06, 2020 அன்று பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவு அரசியலமைப்பை மீறுவதாகும், எனவே அதற்கு எந்த சட்ட செல்லுபடியும் இல்லை.
Tamilmirror Online || கோட்டாவின் உத்தரவு சட்ட விரோதமானது;உயர் நீதிமன்றம் அதிரடி
யாழில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை!
கொஞ்சநாள் பொறு மச்சான்
https://www.facebook.com/share/v/14xjrM9JQC/?mibextid=wwXIfr
வெளிநாட்டிலிருந்து போகிறவர்களுக்காக பாடப்பட்ட பாட்டு.
நன்றாக உள்ளது.
கொஞ்சநாள் பொறு மச்சான்
தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்
தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்
Published By: Vishnu
18 Mar, 2025 | 03:53 AM
(எம்.மனோசித்ரா)
உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் இலங்கை தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. கண்டியில் தராசு சின்னத்திலும் கொழும்பு மற்றும் புத்தளத்தில் மர சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (16) புத்தளம் - கற்பிட்டி நடைபெற்றது. இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ரவுப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இம்முறை தேர்தல் விதிமுறைகளில் காணப்படும் குளறுபடிகள் காரணமாக, குறிப்பாக பல அங்கத்தவர் தொகுதிகளில் ஒரு வாக்கு அதிகமாகக் காணப்பட்டாலும் அனைத்து ஆசனங்களும் அந்த கட்சிக்கே உரித்தாகக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. எனவே அந்தந்த தொகுதிகளிலுள்ள இன விகிதாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழரசு கட்சியும் நாமும் கலந்தாலோசித்து சில இடங்களில் அவர்கள் சார்பில் தமிழ் வேட்பாளர்களையும், எம் சார்பில் முஸ்லிம் வேட்பாளர்களையும் அவர்களது சின்னத்திலேயே களமிறக்கத் திட்டமிட்டுள்ளோம்.
அந்தந்த தொகுதிகளில் எமக்கு கிடைக்கக் கூடிய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்வதே இந்த உடன்பாட்டின் உண்மையான நோக்கமாகும். தமிழரசு கட்சிக்கு அந்தந்த தொகுதிகளில் ஆட்சியமைப்பதற்கான ஆதரவையும் வழங்குவோம். புத்தளம் நகரசபையிலும் மாநகசபையிலும், கொழும்பு, கண்டி மாநகரசபைகளிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் போட்டியிடவுள்ளது. கண்டி மாநகரசபையில் தராசு சின்னத்தில் களமிறங்கவுள்ளோம்.
கொழும்பு மாநகரசபையில் கட்சியின் சொந்த சின்னமான மர சின்னத்தில் போட்டியிடவுள்ளோம். அதேபோன்று புத்தளத்திலும் மர சின்னத்திலேயே போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ் | Virakesari.lk
மீன்பிடி படகுடன் 3 இந்திய மீனவர்கள் கைது
மீன்பிடி படகுடன் 3 இந்திய மீனவர்கள் கைது
18 Mar, 2025 | 02:05 PM
(எம்.மனோசித்ரா)
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை (17) இரவு யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அப்பால்,கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் 3 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடல் எல்லையைத் தாண்டி உள்நாட்டு கடற்பரப்பிற்குள் வெளிநாட்டு மீனவர்களினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடித்தலை தடுத்து, உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு யாழ்.மயிலடி கடல்வள பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வேடுவர் சமூகத்தை தவறாக சித்தரித்த யூடியூப் நிகழ்ச்சிக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் - வேடுவத் தலைவர்
வேடுவர் சமூகத்தை தவறாக சித்தரித்த யூடியூப் நிகழ்ச்சிக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் - வேடுவத் தலைவர்
18 Mar, 2025 | 03:57 PM
பழங்குடியின சமூகமான வேடுவர் சமூகத்தை தவறாக சித்தரித்து யூடியூப் நிகழ்ச்சியை தயாரித்ததாகக் கூறப்படும் பிளாக் அண்ட் டினோ என்ற நகைச்சுவை நடிகர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக வேடுவத் தலைவர் உருவரிகே வன்னிலத்தோ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வேடுவத் தலைவர் உருவரிகே வன்னிலத்தோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
பிளாக் அண்ட் டினோ என்ற நகைச்சுவை நடிகர்களால் தயாரிக்கப்பட்ட யூடியூப் நிகழ்ச்சியில் தங்களது வர்த்தக நோக்கத்திற்காக இலங்கையின் பாரம்பரியத்தை அவமதித்து, வேடுவர் சமூகத்தின் மொழி மற்றும் மரபுகளை நகைச்சுவையாக சித்தரித்து காட்டப்பட்டுள்ளது.
இந்த யூடியூப் நிகழ்ச்சியின் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு குறித்த காணொளியை நீக்குமாறு கோரிக்கை விடுக்கவிருந்தேன். ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன.
நவீன காலகட்டத்தில் சிலர் சமூக ஊடகங்களைத் தவறாக பயன்படுத்துகின்றனர். இது பாரம்பரிய விடயங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
சமூக ஊடக பரப்பில் விதிமுறைகள் இல்லாமையாலும் பல இணையத்தள நிகழ்ச்சிகளாலும் ஊடக சுந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் தெரிவித்தார்.
வேடுவர் சமூகத்தை தவறாக சித்தரிக்கும் காணொளிகளை நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கேட்கிறேன்.
வேடுவர்களின் தனிப்பட்ட விடயங்கள் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என தெரிவித்தார்.
வேடுவர் சமூகத்தை தவறாக சித்தரித்த யூடியூப் நிகழ்ச்சிக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் - வேடுவத் தலைவர் | Virakesari.lk
அரச திணைக்களம் இரண்டால் வடக்கு மாகாணத்திற்கு அதிக பாதிப்பு ; ஐனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் - வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்
அரச திணைக்களம் இரண்டால் வடக்கு மாகாணத்திற்கு அதிக பாதிப்பு ; ஐனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் - வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்
18 Mar, 2025 | 05:09 PM
(எம்.நியூட்டன்)
வனவளத்திணைக்களம், வன உயிரிகள் திணைக்களத்தால் வடக்குமாகாணத்திற்கு அதிகமான பாதிப்புகளை சந்தித்துள்ளது இவை தொடர்பில் ஐனாதிபதியின் கவனத திற்கு கொண்டுசெல்லப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்துக்கு அதிகளவான நிதி பல்வேறு வகையிலும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் நிறைவேற்றுவது தொடர்பாக கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் இ.சந்திரசேகரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் இணைத் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வனவளத்திணைக்களம், வன உயிரிகள் திணைக்களத்தால் நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் பாதிப்பு இருந்தாலும் வடக்கு மாகாணத்தில் அதிகூடிய பாதிப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார்.
மக்களின் மீள்குடியமர்வு, விவசாயம், அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு இடையூறாக இந்த இரு திணைக்களங்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.
வடக்கு மாகாணம் கால்நடை உற்பத்தித் துறையில் மிகச் சிறந்த நிலையில் உள்ளபோதும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் இல்லாமல் இருப்பது பெரும் பின்னடைவு சட்டவிரோதமான மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினையாகவுள்ளது .
வடக்கு மாகாணத்தில் ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்படவேண்டும் என்றும், ஆளணிகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும். இது தொடர்பில் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லவேண்டும் என்றார்.
அரச திணைக்களம் இரண்டால் வடக்கு மாகாணத்திற்கு அதிக பாதிப்பு ; ஐனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் - வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் | Virakesari.lk