Aggregator

தேயிலை ஏற்றுமதியில் வீழ்ச்சி

3 months 2 weeks ago

tea.jpg?resize=680%2C375&ssl=1

தேயிலை ஏற்றுமதியில் வீழ்ச்சி.

இலங்கையின் தேயிலை ஏற்றுமதி கடந்த பெப்ரவரி மாதத்தில் வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. இதன்படி கடந்த பெப்ரவரி மாதத்தில் மொத்தமாக 20.40 மில்லியன் கிலோகிராம் தேயிலை மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 39.77 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 1.30 மில்லியன் கிலோகிராம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய காலப்பகுதியில் இலங்கையிலிருந்து அதிகளவில் தேயிலை இறக்குமதி செய்த நாடாக ஈராக் பதிவாகியுள்ளது. அத்துடன் ரஷ்யா இரண்டாவது இடத்திலும், லிபியா 3ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1426240

தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களைத் திருடிய குற்றச்சாட்டில் 5 பேர் கைது!

3 months 2 weeks ago
தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களைத் திருடிய குற்றச்சாட்டில் 5 பேர் கைது! யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களை தொடர்ச்சியாக திருடி வந்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலையடுத்து இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடற்படையின் முன்னாள் சிப்பாய் எனவும் , மற்றுமொருவர் களவாடப்பட்ட மின் கலங்களை கொள்வனவு செய்தவர் எனவும் ஏனைய மூவரும் களவுக்கு உடந்தையாக செயற்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. அத்துடன் இவர்கள் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 192 மின் கலங்களை களவாடியுள்ளனர் எனவும், மின்கலம் ஒன்றின் பெறுமதி சுமார் ஒரு இலட்ச ரூபாய்க்கும் அதிகமாகும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். Athavan Newsதொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களைத் திருடிய குற்றச்...யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களை தொடர்ச்சியாக திருடி வந்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலையடுத்து இக்கைது...

தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களைத் திருடிய குற்றச்சாட்டில் 5 பேர் கைது!

3 months 2 weeks ago

arrested-693x420-1.png?resize=650%2C375&

தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களைத் திருடிய குற்றச்சாட்டில் 5 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களை தொடர்ச்சியாக திருடி வந்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலையடுத்து இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடற்படையின்   முன்னாள் சிப்பாய் எனவும் , மற்றுமொருவர் களவாடப்பட்ட மின் கலங்களை கொள்வனவு செய்தவர் எனவும் ஏனைய மூவரும் களவுக்கு உடந்தையாக செயற்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

அத்துடன் இவர்கள் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 192 மின் கலங்களை  களவாடியுள்ளனர் எனவும், மின்கலம் ஒன்றின் பெறுமதி சுமார் ஒரு இலட்ச ரூபாய்க்கும் அதிகமாகும் எனவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Athavan News
No image previewதொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களைத் திருடிய குற்றச்...
யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களை தொடர்ச்சியாக திருடி வந்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலையடுத்து இக்கைது...

பேஸ்புக் விருந்துபசாரம் :15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது

3 months 2 weeks ago
விருந்துபசார நிகழ்வில் போதைப்பொருள் பாவனை; 57 பேர் கைது! பமுனுகம, உஸ்வதகேயாவ பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒனறில் நேற்றிரவு (23) இடம்பெற்ற விருந்து உபசார நிகழ்வில் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனை வைத்திருந்த குற்றச்சாட்டில் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விருந்துபசார நிகழ்வானது சமூக வலைத்தளம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த ஹோட்டலில் இன்ஸ்டாகிராம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்வில் போபை்பொருள் பாவனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர்களும், யுவதிகளும் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சாவை பயன்படுத்திக் கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்டனர். அதேநேம், போதைப்பொருள் வைத்திருந்த 16 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர். அத்துடன், விருந்து இடம்பெற்ற ஹோட்டலின் உரிமையாளர் 03 கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18 மற்றும் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள், கொழும்பு புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1426203

இலங்கை விமானப்படை விமானம் ஒன்று விபத்து.

3 months 2 weeks ago
விமானப் படை விமான விபத்துக்கான காரணத்தை வெளியிட்ட அமைச்சர்! பயிற்சி விமானிகளின் தவறு காரணமாகவே இலங்கை விமானப்படை விமானம் அண்மையில் விபத்துக்குள்ளானதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரத்நாயக்க, விபத்து குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் விசாரணை அறிக்கையின் நகலைக் கேட்டுப் பெற்றதாகக் கூறினார். அந்த அறிக்கையின் படி, விமானம் மற்றும் இயந்திரங்கள் நன்கு பராமரிக்கப்பட்டு பழையவை அல்ல என்று அவர் மேலும் தெளிவுபடுத்தினார். சாலைகளில் பழைய வாகனங்கள் ஓட அனுமதிக்கப்படுவதால், விமானங்களில் அப்படிச் செய்ய முடியாது. இந்த குறிப்பிட்ட விமானத்தை இயக்கிய விமானிகள் பயிற்சியில் இருந்தனர். அவர்களால் ஒரு தவறு நடந்துள்ளது. பயிற்சியாளர்கள் விபத்தில் இருந்து தப்பியதில் நாங்கள் நிம்மதியடைகிறோம். இது பயிற்சியின் போது ஒரு சாதாரண சம்பவம், உலகம் முழுவதும் இவ்வாறான விபத்துக்கள் நடக்கும் என்றும் அவர் கூறினார். கடந்த வாரம் விமானப்படை விமான விபத்துக்குள்ளானதற்கு இதுவே ஒரே காரணம் என்றும், விபத்து குறித்த தொழில்நுட்ப அறிக்கையின் கண்டுபிடிப்பும் இதுதான் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார். மார்ச் 21, வெள்ளிக்கிழமை வாரியபொலவில் இலங்கை விமானப்படை பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. இரண்டு விமானிகளுடன் சென்ற K-8 பயிற்சி ஜெட் விமானம் திடீரென ரேடார் தொடர்பை இழந்து, பின்னர் வாரியபொலவில் விபத்துக்குள்ளானது. எனினும், இரு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறி, குருநாகலின் பதேனியாவில் தரையிறங்கினர். https://athavannews.com/2025/1426246

திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்த கனேடிய பிரதமர்!

3 months 2 weeks ago
திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்த கனேடிய பிரதமர்! கனடாவின் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), எதிர்வரும் ஏப்ரல் 28 அன்று ஒரு திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கனடா அமெரிக்காவுடன் வர்த்தகப் போரை எதிர்கொண்டு, 51 ஆவது அமெரிக்க மாநிலமாக மாற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் அழைப்பு விடுத்துள்ள நிலையில் இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது. இது வாக்காளர்களின் மனதில் முதன்மையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜஸ்டின் ட்ரூடோவின் இராஜினாமாவைத் தொடர்ந்து, லிபரல் கட்சியைச் சேர்ந்த கார்னி, கனடாவின் பிரதமராகப் பதவியேற்ற ஒன்பது நாட்களுக்குப் பின்னர் இந்த தேர்தல் அழைப்பு வந்துள்ளது. கார்னி இப்போது கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொய்லிவ்ரேவை எதிர்கொள்ள வேண்டும், அவருடைய கட்சி 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து தேசிய கருத்துக் கணிப்புகளில் முன்னிலை வகித்து வந்தது. இருப்பினும் அண்மைய கருத்துக் கணிப்புகள் இப்போது போட்டி மிகவும் இறுக்கமாக இருப்பதாகக் கூறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை ஒட்டாவாவில் பேசிய கார்னி, ட்ரம்பை சமாளிக்க தனக்கு தெளிவான, நேர்மறையான ஆணை தேவை என்றார். “ஜனாதிபதி ட்ரம்பின் நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் நமது இறையாண்மைக்கு அவர் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்கள் காரணமாக, நமது வாழ்நாளில் மிக முக்கியமான நெருக்கடியை நாம் எதிர்கொள்கிறோம்,” என்றும் அவர் கூறினார். இந்தத் தேர்தலுக்காக ஒரு காலத்தில் விலக்கு அளிக்கப்பட்ட தாராளவாதிகள், இப்போது கார்னியின் கீழ் தொடர்ந்து நான்காவது முறையாக அரசாங்கத்தை அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இங்கிலாந்து வங்கி மற்றும் கனடா வங்கியின் முன்னாள் ஆளுநரான 60 வயதான கார்னி, ஒருபோதும் எம்.பி.யாக பணியாற்றியதில்லை, அரசியல் ரீதியாக சவால்களை எதிர்கொள்ளவும் இல்லை. இந்த நிலையில் புதிதாக பதவியேற்றுள்ளகார்னி தனது குறுகிய பதவிக் காலத்தை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனைச் சந்தித்து, கனடாவின் நிலப்பகுதியில் தங்கி ஆஸ்திரேலியாவுடன் ஒரு புதிய வடக்கு ரேடார் அமைப்பை உருவாக்க ஒரு கூட்டாண்மையை அறிவித்தார். அத்துடன், பழமைவாதிகளால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட ட்ரூடோவின் கையெழுத்து கார்பன் வரி காலநிலைக் கொள்கையையும் அவர் முடிவுக்குக் கொண்டு வந்தார். இப்போது அவர் பொது வாக்காளர்களை எதிர்கொள்ள நேரிடும், ஏனெனில் கனடா அதன் வரலாற்று ரீதியாக நெருங்கிய கூட்டாளியான அமெரிக்காவுடனான உறவில் வேகமாக மாறிவரும் தன்மை மற்றும் நாட்டின் உயர்ந்த வாழ்க்கைச் செலவு குறித்து கவலை கொண்டுள்ளது. https://athavannews.com/2025/1426211

திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்த கனேடிய பிரதமர்!

3 months 2 weeks ago

New-Project-304.jpg?resize=750%2C375&ssl

திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்த கனேடிய பிரதமர்!

கனடாவின் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), எதிர்வரும் ஏப்ரல் 28 அன்று ஒரு திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கனடா அமெரிக்காவுடன் வர்த்தகப் போரை எதிர்கொண்டு, 51 ஆவது அமெரிக்க மாநிலமாக மாற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் அழைப்பு விடுத்துள்ள நிலையில் இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இது வாக்காளர்களின் மனதில் முதன்மையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜஸ்டின் ட்ரூடோவின் இராஜினாமாவைத் தொடர்ந்து, லிபரல் கட்சியைச் சேர்ந்த கார்னி, கனடாவின் பிரதமராகப் பதவியேற்ற ஒன்பது நாட்களுக்குப் பின்னர் இந்த தேர்தல் அழைப்பு வந்துள்ளது.

கார்னி இப்போது கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொய்லிவ்ரேவை எதிர்கொள்ள வேண்டும், அவருடைய கட்சி 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து தேசிய கருத்துக் கணிப்புகளில் முன்னிலை வகித்து வந்தது.

இருப்பினும் அண்மைய கருத்துக் கணிப்புகள் இப்போது போட்டி மிகவும் இறுக்கமாக இருப்பதாகக் கூறுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை ஒட்டாவாவில் பேசிய கார்னி, ட்ரம்பை சமாளிக்க தனக்கு தெளிவான, நேர்மறையான ஆணை தேவை என்றார்.

“ஜனாதிபதி ட்ரம்பின் நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் நமது இறையாண்மைக்கு அவர் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்கள் காரணமாக, நமது வாழ்நாளில் மிக முக்கியமான நெருக்கடியை நாம் எதிர்கொள்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.

இந்தத் தேர்தலுக்காக ஒரு காலத்தில் விலக்கு அளிக்கப்பட்ட தாராளவாதிகள், இப்போது கார்னியின் கீழ் தொடர்ந்து நான்காவது முறையாக அரசாங்கத்தை அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து வங்கி மற்றும் கனடா வங்கியின் முன்னாள் ஆளுநரான 60 வயதான கார்னி, ஒருபோதும் எம்.பி.யாக பணியாற்றியதில்லை, அரசியல் ரீதியாக சவால்களை எதிர்கொள்ளவும் இல்லை.

இந்த நிலையில் புதிதாக பதவியேற்றுள்ளகார்னி தனது குறுகிய பதவிக் காலத்தை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்.

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனைச் சந்தித்து, கனடாவின் நிலப்பகுதியில் தங்கி ஆஸ்திரேலியாவுடன் ஒரு புதிய வடக்கு ரேடார் அமைப்பை உருவாக்க ஒரு கூட்டாண்மையை அறிவித்தார்.

அத்துடன், பழமைவாதிகளால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட ட்ரூடோவின் கையெழுத்து கார்பன் வரி காலநிலைக் கொள்கையையும் அவர் முடிவுக்குக் கொண்டு வந்தார்.

இப்போது அவர் பொது வாக்காளர்களை எதிர்கொள்ள நேரிடும், ஏனெனில் கனடா அதன் வரலாற்று ரீதியாக நெருங்கிய கூட்டாளியான அமெரிக்காவுடனான உறவில் வேகமாக மாறிவரும் தன்மை மற்றும் நாட்டின் உயர்ந்த வாழ்க்கைச் செலவு குறித்து கவலை கொண்டுள்ளது.

https://athavannews.com/2025/1426211

தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!

3 months 2 weeks ago
// மற்றது, தையிட்டி விவகாரம், அங்கே பெளத்த வழிபாடு போன்றவை எப்போது தொடங்கியது என்று தெரியுமா உங்களுக்கு?// தையிட்டியில் பவுத்த வழிபாடு சரியாக 1345 ம் ஆண்டு , பங்குனி மாதம் இரண்டாம் திகதி தொடங்கியது . ஆனபடியால் , தையிட்டியில் , அங்கினேக்கு அக்கம் பக்கத்தில இருக்கிற உறுதிக்காணிகளையெல்லாம் பிடிச்சு , பன்சல , மண்டபம் , இத்தியாத்தி ஐடம்ஸை கட்டிக்கொள்வது சாலச்சிறந்ததவும் பொருத்தமானதும் ஆகி நிற்கின்றது

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
வாய்ப்பில்ல ராஜா. இவர் இப்படியே எழுதி எங்கள் கண்களில் மண்ணைத் தூவி விட்டு🤣 வாழ்நாள் முழுவதும் முதல்வர் பதவியிö இருக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன😀

இறை குறைபடுமோ ? - சுப.சோமசுந்தரம்

3 months 2 weeks ago
இது தோழி கட்டுவிச்சியிடம் (குறி சொல்பவளிடம்) கூறுவதாக வருகிறது. தலைவியின் காதலை தலைவியின் தாய்க்கும், செவிலித்தாய்க்கும் குறி சொல்லும் அகவன் மகள் மூலமாக மறைமுகமாக எடுத்துரைக்க முனைகிறாள் (தானும் தலைவியின் வயதொத்தவள் ஆதலின் மூத்தோரிடம் நேரடியாகக் கூறக் கொண்ட நாணத்தின் காரணமாக). முன்னர் நான் வேறு ஊடகத்தில் இப்பாடலுக்கு எழுதிய உரையை இத்துடன் படியெடுத்துப் பதிகிறேன் : பாடற் களம் : குறிஞ்சி நிலத்தலைவி தலைவனிடம் கொண்ட காதல் ஏக்கத்தில், மெலிதல் போன்ற உடல் மாற்றங்கள் அவளிடம் ஏற்பட்டிருக்க வேண்டும். எனவே தாயும் செவிலித் தாயும் கவலையுற்று, குறி சொல்லும் கட்டுவிச்சியை அழைத்துக் காரணம் அறிய முற்படுகிறார்கள். உடனிருக்கும் தலைவியின் தோழி அக்கட்டுவிச்சியிடம் பாடும் அகவலோசைப் பாடல். குறி சொல்பவளை 'அகவன் மகளே!' என விளிக்கிறாள் தோழி. பாடற் பொருள் : அகவன் மகளே ! அகவன் மகளே ! சங்குமணி(மனவு)யால் தொடுக்கப்பட்டதைப் போன்ற (கோப்பு அன்ன) நல்ல நெடிய கூந்தலையுடைய அகவன் மகளே ! பாடலைப் பாடுக ! இன்னும் பாடலைப் பாடுக ! அவரது நல்ல நெடுங்குன்றம் பற்றிப் பாடிய பாடலைப் பாடுக ! பின் குறிப்பு : (1) சங்குமணி போல் வெண்மையான கூந்தல் என்றதன் மூலம், குறி சொல்பவள் வயதில் மூத்தவள் என்று அறிகிறோம். (2) தோழியைப் பொறுத்தமட்டில் தான் சொல்லத் தயங்குகிற தலைவியின் காதற் செய்தி, குறி சொல்பவள் மூலம் தலைவியின் தாயிடமும் செவிலித்தாயிடமும் சென்றடைய வேண்டும் என நினைக்கிறாள். கட்டுவிச்சி வழக்கம் போல் குறிஞ்சித் தலைவன் சேயோனின் நெடுங்குன்றச் சிறப்பினைப் பாடியிருப்பாள். அவள் குறி அறிந்து நம் தலைவனின் நெடுங்குன்றத்தைப் பாடியதைப் போல, தோழி நாடகமாடுகிறாள், "முன்னர் பாடிய 'அவரது' குன்றம் பற்றிப் பாடு". இதன் மூலம் 'அவர்' பற்றிய குறிப்பைத் தாய்க்கும் செவிலிக்கும் தர முயற்சிக்கிறாள் தோழி.

தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!

3 months 2 weeks ago
அமைச்சர் சந்திரசேகர் ஒரு ப**ச்சைத் துரோகி: இவரை யாழ்ப்பாணத்தை விட்டு தமிழ் மக்கள் விரட்டுங்கள்: பிரபாகரன் புலி என்று இப்போது நன்றாக நடித்து வருகிறார். மினிஸ்டர் சந்திரசேகர் விமலோடு இருக்கும் போது தமிழ் துரோகியாக இருந்தார்: இப்போது திருந்தி விட்டார்: யார் சொன்னது- அவரே சொன்னார் இந்த ஆர்ப்பாட்ட வரலாற்றை நாம் சொல்கிறோம் கேளுங்கள், அதாவது யுத்த நிறுத்தம் வேண்டாம் என்று தமிழில் கோசங்களை எழுப்பியவர்தான் இந்த சந்திரசேகர், போராட்டத்தில் 50,000 பேர் கலந்து கொண்டனர், இதில் பெருந்தொகையான புத்த பிக்குகள் இருந்தனர். அத்துடன் பல தமிழ் மக்களை சந்திரசேகர் திரட்டினார் பாலியகொடை பகுதியில் போராட்டக்காரர்கள் திரண்டு, பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லம்" நோக்கி செல்ல தொடங்கினர். ஆனால் பிரதமரின் இல்லத்தை பாதுகாத்திருந்த சிறப்பு பணிப்படை படையினர் மற்றும் காவல்துறையினர், ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் போராட்டக்காரர்களை நீர்ப்பீரங்கிகளும் கண்ணீர்ப்புகை குண்டுகளும் பயன்படுத்தி தடுத்து நிறுத்தினர். இந்த நிகழ்வை செய்திக்காக ஒளிப்பதிவு செய்ய சென்ற சில ஊடகவியலாளர்களும் தாக்குதலுக்கு உள்ளாகினர். "தி ஐலண்ட்" பத்திரிகையின் புகைப்பட செய்தியாளர் திரு. எரங்க ஜயவர்தன தாக்கப்பட்டு, கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அவருடைய மதிப்புயர்ந்த நிகொன் டிஜிட்டல் கேமரா (மொத்த மதிப்பு ரூ. 400,000) முற்றிலும் சேதமடைந்தது. ஜேவிபி, ஐக்கிய தேசிய முன்னணி அரசு மற்றும் விடுதலைப் புலிகள் கையெழுத்திட்ட சமாதான ஒப்பந்தம் ஒரு வருடத்தை நிறைவுசெய்வதை எதிர்த்து இந்தப் பேரணியை ஏற்பாடு செய்தது. முன்னதாக, ஜேவிபியின் பிரச்சார செயலாளர் திரு. விமல் வீரவங்ச செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றும்போது, அவரது கட்சி விரைவில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிராக ஒரு மிகப்பெரிய பேரணியை நடத்தும் என்று தெரிவித்தார். #awareness Thevarasa Kailanathan

தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!

3 months 2 weeks ago
மேலே கூறிய கருத்துக்கள் ( சில) புலிகளின் காலத்தில் ஏன் இங்கு எழுதப்படவில்லை என்பது யாருகாவது ஆச்சரியம் அளிக்கிறதா??

இறை குறைபடுமோ ? - சுப.சோமசுந்தரம்

3 months 2 weeks ago
இந்தப் பாடல் காதல் உணர்வுகளை மையமாகக் கொண்டது. தலைவி தன் காதலனை நினைத்துப் பாடுகிறாள். அவளது கூந்தல் அழகும், அவள் பாடும் பாட்டும் அவளது உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. இது சங்க இலக்கியத்தின் எளிமையும், ஆழமும் நிறைந்த பாடலாகும்.

இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் - ஹமாஸ் அரசியல் தலைவர் உயிரிழப்பு!

3 months 2 weeks ago
இது இயலாக்கடைசியில் சொல்வது. இஸ்ரேலின் உகண்டா பணய கைதிகள் மீட்பு உலக புகழ் பெற்றது. கமாசிடம் ஆப்பிட்டால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு தெரியும். ஒரு இனத்தை அழித்த வரலாறை பலஸ்தீனியர்கள் வைக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் தொடர்ந்து போராடுகிரார்கள். அவர்களுக்கு உதவிகளும் உண்டு. உண்மையில் அழியும் இனம் நாம் தான்.

கனடிய தேர்தல்: கன்சர்வேட்டிவ் கட்சியின் திரிசங்கு நிலை

3 months 2 weeks ago
கனடிய தேர்தல்: கன்சர்வேட்டிவ் கட்சியின் திரிசங்கு நிலை சிவதாசன்இன்னும் 36 நாட்களில், ஏப்றில் 28 அன்று கனடிய பொதுத் தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கனடாவின் அதி குறைந்த ஆயுட்காலத்தைக்கொண்ட பிரதமர் என மார்க் கார்ணி வரலாற்றில் இடம்பெறுகிறார். அவரின் இன்றைய தேர்தல் அறிவிப்பை வானொலி மூலம் கேட்க முடிந்தது. அக்டோபர் 2025 மட்டும் அவகாசமிருக்க கார்ணி ஏந் இவ்வளவு அவசரமாகத் தேர்தலை அறிவித்தார் என ரொறோண்டோ ஸ்டார் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டார். பதில் மழுப்புதலாக இருந்தாலும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லியேவின் ‘கீறல் விழுந்த ரெக்கோர்ட்’ பதிலாக இருக்காதது வித்தியாசமாக இருந்தது. கனடிய அரசியலில் மிகவும் அதிர்ஷ்டம் குறைந்தவர் என்றால் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லியேவ் தான். இரண்டு, மூன்று தடவைகளில் சந்தித்துப் பேசும் சதர்ப்பமும் கிடைத்தது. ‘அவ்வளவு பிழையான ஆளில்லை’ என்று ஊர் சொல்லக்கூடிய ஒருவர் தான். இருப்பினும் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இல்லை. அடுத்த 36 நாட்களுக்குள் கிரகங்கள் ஏதாவது சடுதியாக மாற்றப்பட்டாலே தவிர ராஜாவுக்குச் சாண்சே இல்லைப் போலிருக்கிறது. ட்றம்ப் உளறத் தொடங்கியவுடனே டக் ஃபோர்ட் கொடுக்கைக் கட்டியதை பொய்லியேவ் ந்திருப்பாரோ அல்லது அவரது வாய்க்குப் பூட்டுப் போடப்பட்டதோ தெரியாது. அன்றே அவரிடமிருந்த ஒரேயொரு நட்பான கிரகமும் வீடு மாறிவிட்டது. எல்லாம் இந்த கருத்துக் கணிப்பாளர்கள் செய்யும் வேலை. தெருவில் திரிந்த சாதாரண மனிதரைப் பாப்பாவில் ஏற்றிவிட்டு சனத்தை உசுப்பேத்திவிட அவரைச் சுற்றியிருந்த ஆலோசக சேனை அவரது கண்ணாடியைக் கழற்றிவிட்டு அப்பிளைக் கொடுத்து கடித்துக் கடித்து ஊடகருக்குப் பதில் சொல்ல வைக்க உசுப்பேத்தப்பட்ட மகாஜனங்கள் கைதட்டி ரசிக்க ஏறியவர் இறங்க மறுத்துவிட்டார் – அது ட்றம்ப் குளறும்வரை. பப்பா மரத்திலிருந்து இறங்கியபோது கைதட்டிய மகாஜனங்களில் பலபேர் துண்டைக் காணோம் துணியைக் காணோஈம் என்று ஓடிப்போய் எதிரியின் கூடாரத்துக்குள் ஒளிந்துகொண்டனர். கருத்துக்கணிப்பாளர் பாவம். அவர்கள் தமக்குக் கிடைத்த கட்டளைகளை நிறைவேற்றத்தானே வேண்டும். கார்ணியின் வரவு தற்செயலானதல்ல. தேவை கருதி அவசரமாகக் களமிறக்கப்பட்ட ஒருவர் அவர். அவரது வரவால் சிறகொடிக்கப்பட்ட கிறிஸ்டினா ஃபிறீலாண்ட் ஒரு திருப்பலி. இதுவரை மேற்கு சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக இருந்து கோலோச்சிய அமெரிக்காவும் ஒரு நாள் தடம் புரளும் என்பதை ட்றம்ப் நிரூபித்த பிறகு, மேற்கு தனக்கான ஒரு புதிய தலைமையை உருவாக்கத் தீர்மானித்துவிட்டது. ஐரோப்பாவை மையமாகக் கொண்டிருக்கும் இப்புதிய தலைமையின் உருவாக்கத்தில் கனடாவுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. அந்த அவசிய பயணத்தை முன்னெடுக்கக்கூடிய தலைமை பொய்லியேவுக்கு இல்லை. அதற்குத் தேவையான ‘ஆங்கிலோ சக்ஸன்’ மரபணு அவரிடம் இருப்பத் போலத் தெரியவில்லை. அந்த establishment இனால் முன்தள்ளப்பட்ட மாமணியே கார்ணி. கார்ணியின் முன்தள்ளலுக்குப் பின்னால் இருக்கும் establishment எனப்படும் இம்மர்ம விசையில் கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சி பங்காளியாய் இல்லைப் போலத் தெரிகிறது. இதற்குக் காரணம் பொய்லியேவா அல்லது கட்சி இயந்திரமோ தெரியவில்லை. ஐரோப்பா தலைமையில் ஆரம்பமாகும் இப்புதிய ஒழுங்கிற்கான பின்னரங்கச் சந்திப்புகளில் பொய்லியேவ் ஒதுக்கப்பட்டு டக் ஃபோர்ட்டுக்கு உயரிய இடம் கொடுக்கப்பட்டுள்ளமை தெரிகிறது. இதற்கு ட்றூடோவின் பங்களிப்பும் இருந்திருக்கலாம். மாகாண பொதுத் தேர்தலில் டக் ஃபோர்ட் அமோக வெற்றி பெற்றதும் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அப்போதைய பிரதமர் ட்றூடோ தொலைபேசியில் அழைத்து டக் ஃபோர்ட்டிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சியாகவிருந்தும் தன் சக கட்சித் தலைவருக்கு தொலைபேசி அழைப்பு எடுக்க பொய்லியேவுக்கு 18 நாட்கள் எடுத்திருக்கின்றது. ஃபோர்ட்டுக்கும் பொய்லியேவுக்குமிடையில் பனிப்போர் இருக்கிறதென்பது தெரிகிறது. ஆனால் அது எப்போ, எதற்காக அல்லது யாருக்காக ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கு விளக்கமில்லை. டுத்தார். இருவருக்கும் அதிக நேரம் பேசத் தேவை இருக்காதவாறு உறவு புளித்துப் போயிருந்தது. ஆனாலும் டக் ஃபோர்ட் தனது பழிவாங்கலை வேறு வடிவங்களில் கச்சிதமாக முடித்துவிட்டார். தனது முடிசூடலுக்கு கிறிஸ்டியா ஃபிறீலாண்டுக்கு அழைப்பு விடுத்ததுடன் கார்ணியுடன் காலையுணவுக்கும் ஒழுங்குசெய்து விட்டார். ஃபோர்ட்டுக்கு சில வேளை தூரப்பார்வை அதிகமாக இருக்கலாம். வரப்போகும் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி படு தோல்வி கண்டால் அதன் தலைமை ஆசனத்தில் அடுத்த தலைவராகத் தான் அமர்ந்துகொள்ளலாம் என்ற எண்ணமும் பொய்லியேவை உதாசீனம் செய்யக் காரணமாக இருந்திருக்க வாய்ப்புண்டு. ஃபோர்ட்டின் தேர்தல் வெற்றியை உடனடியாக வாழ்த்த விரும்பாத பொய்லியேவின் முடிவு சுயமானதா அல்லது தூண்டப்பட்டதா தெரியாது. ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலருக்கு இது அதிர்ச்சியானது என ரொறோண்டோ ஸ்டார் எழுதியிருக்கிறது. தூரத்தில் வைத்திருப்பது கன்சர்வேட்டிவ் கட்சிக்குப் புதிய விடயமல்ல. 2019 இல் ஃபோர்ட்டின் செல்வாக்கு சரிந்தபோது அப்போதைய மத்திய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் அண்ட்றூ ஷியர் ஃபோர்ட்டை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்திருந்தார். 6 வருடங்களில் இந்த வன்மம் வளர்ந்திருக்க வாய்ப்புண்டு. கனடாவின் 41 மில்லியன் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஒன்ராறியோவில் இருக்கிறது. மொத்தம் 343 ஆசனங்களில் 122 ஆசனங்கள் ஒன்ராறியோவில் மாத்திரம் இருக்கின்றன. அப்படியிருந்தும் ஃபோர்ட்டைப் புறந்தள்ளும் யோசனை கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வருகிறதென்றால் சாணக்கியம் என்பது இவர்களுக்கு அன்னியமானதொன்று என்றுதான் பார்க்க வேண்டும். இப்படியான ஒரு கட்சியால் ட்றம்ப் போன்றவர்களை எப்படிச் சமாளிக்க முடியும்? என வாக்காள மகாஜனங்கள் யோசித்து, தீர ஆலோசித்து வாக்குகளை அளிக்க கார்ணி அதிக அவகாசம் கொடுக்காமல் அவசர தேர்தலுக்கு – ஒரு வகையில் preemptive- அறிவிப்பை விடுத்திருக்கிறார். ட்றம்பின் பலத்தை முன்வைத்து இத் தீர்மானம் எடுக்கப்பட்டதை விட பொய்லியேவின் பலவீனத்தை முன்வைத்து எடுக்கப்பட்டதாகவே பார்க்கப்படவேண்டியிருக்கிறது. அடுத்த 36 நாட்களில் ட்றம்பின் சிறிய இரைச்சல்களையும் பெரிதாக amplify பண்ணுவதுதான் லிபரல் கட்சியின் strategy ஆகவிருக்குமென எதிர்பார்க்கலாம். நேரடடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஃபோர்ட் இதற்கு உதவி செய்வார். பொய்லியேவ் கட்சியில் ஊதுவதற்குப் புதிய விடயமுமில்லை. அதை முன்னெடுப்பதற்கான இரண்டாம் நிலை charismatic தலைவருமில்லை. லிபரல் கட்சியை அதிகமாக இடதுபக்கம் தள்ளிச்சென்ற ட்றூடோ கட்சியில் விட்டுச் சென்ற சிவப்புச் சாயத்தைக் கழுவி கொஞ்சமேனும் வலது பக்கம் நோக்கித் தள்ளும் முயற்சியை கார்ணி ஏற்கெனவே வெளிக்காட்டிவிட்டார். அதற்கு மாறாக வலது பக்கமிருந்த கன்சர்வேட்டிவ் கட்சியைக் கொஞ்சம் இடதுபக்கம் நகர்த்த பொய்லியேவ் முயற்சிப்பதும் தெரிகிறது. திடீரென அவர் தொழிலாளர்களைப் பின்வரிசையில் நிறுத்தி அவர்களின் தோழராகப் படம் காட்டுவது அப்பட்டமாகத் தெரிகிறது. அந்தளவிற்கு கட்சியில் மூளை வறுமை இருக்கிறது. பாவம் பொய்லியேவ். நல்ல மனிசன். சுற்றம் சரியில்லை. veedu.comகனடிய தேர்தல்: கன்சர்வேட்டிவ் கட்சியின் திரிசங்கு நிலை -...சிவதாசன் இன்னும் 36 நாட்களில், ஏப்றில் 28 அன்று கனடிய பொதுத் தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கனடாவின் அதி குறைந்த ஆயுட்காலத்தைக்கொண்ட பிரதமர் என

கனடிய தேர்தல்: கன்சர்வேட்டிவ் கட்சியின் திரிசங்கு நிலை

3 months 2 weeks ago

Screenshot-2025-03-23-at-1.41.21%E2%80%A

கனடிய தேர்தல்: கன்சர்வேட்டிவ் கட்சியின் திரிசங்கு நிலை

சிவதாசன்

இன்னும் 36 நாட்களில், ஏப்றில் 28 அன்று கனடிய பொதுத் தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கனடாவின் அதி குறைந்த ஆயுட்காலத்தைக்கொண்ட பிரதமர் என மார்க் கார்ணி வரலாற்றில் இடம்பெறுகிறார். அவரின் இன்றைய தேர்தல் அறிவிப்பை வானொலி மூலம் கேட்க முடிந்தது. அக்டோபர் 2025 மட்டும் அவகாசமிருக்க கார்ணி ஏந் இவ்வளவு அவசரமாகத் தேர்தலை அறிவித்தார் என ரொறோண்டோ ஸ்டார் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டார். பதில் மழுப்புதலாக இருந்தாலும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லியேவின் ‘கீறல் விழுந்த ரெக்கோர்ட்’ பதிலாக இருக்காதது வித்தியாசமாக இருந்தது.

கனடிய அரசியலில் மிகவும் அதிர்ஷ்டம் குறைந்தவர் என்றால் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லியேவ் தான். இரண்டு, மூன்று தடவைகளில் சந்தித்துப் பேசும் சதர்ப்பமும் கிடைத்தது. ‘அவ்வளவு பிழையான ஆளில்லை’ என்று ஊர் சொல்லக்கூடிய ஒருவர் தான். இருப்பினும் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இல்லை. அடுத்த 36 நாட்களுக்குள் கிரகங்கள் ஏதாவது சடுதியாக மாற்றப்பட்டாலே தவிர ராஜாவுக்குச் சாண்சே இல்லைப் போலிருக்கிறது.

ட்றம்ப் உளறத் தொடங்கியவுடனே டக் ஃபோர்ட் கொடுக்கைக் கட்டியதை பொய்லியேவ் ந்திருப்பாரோ அல்லது அவரது வாய்க்குப் பூட்டுப் போடப்பட்டதோ தெரியாது. அன்றே அவரிடமிருந்த ஒரேயொரு நட்பான கிரகமும் வீடு மாறிவிட்டது.

எல்லாம் இந்த கருத்துக் கணிப்பாளர்கள் செய்யும் வேலை. தெருவில் திரிந்த சாதாரண மனிதரைப் பாப்பாவில் ஏற்றிவிட்டு சனத்தை உசுப்பேத்திவிட அவரைச் சுற்றியிருந்த ஆலோசக சேனை அவரது கண்ணாடியைக் கழற்றிவிட்டு அப்பிளைக் கொடுத்து கடித்துக் கடித்து ஊடகருக்குப் பதில் சொல்ல வைக்க உசுப்பேத்தப்பட்ட மகாஜனங்கள் கைதட்டி ரசிக்க ஏறியவர் இறங்க மறுத்துவிட்டார் – அது ட்றம்ப் குளறும்வரை.

பப்பா மரத்திலிருந்து இறங்கியபோது கைதட்டிய மகாஜனங்களில் பலபேர் துண்டைக் காணோம் துணியைக் காணோஈம் என்று ஓடிப்போய் எதிரியின் கூடாரத்துக்குள் ஒளிந்துகொண்டனர். கருத்துக்கணிப்பாளர் பாவம். அவர்கள் தமக்குக் கிடைத்த கட்டளைகளை நிறைவேற்றத்தானே வேண்டும்.

Screenshot-2025-03-23-at-1.41.21%E2%80%A

கார்ணியின் வரவு தற்செயலானதல்ல. தேவை கருதி அவசரமாகக் களமிறக்கப்பட்ட ஒருவர் அவர். அவரது வரவால் சிறகொடிக்கப்பட்ட கிறிஸ்டினா ஃபிறீலாண்ட் ஒரு திருப்பலி. இதுவரை மேற்கு சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக இருந்து கோலோச்சிய அமெரிக்காவும் ஒரு நாள் தடம் புரளும் என்பதை ட்றம்ப் நிரூபித்த பிறகு, மேற்கு தனக்கான ஒரு புதிய தலைமையை உருவாக்கத் தீர்மானித்துவிட்டது. ஐரோப்பாவை மையமாகக் கொண்டிருக்கும் இப்புதிய தலைமையின் உருவாக்கத்தில் கனடாவுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. அந்த அவசிய பயணத்தை முன்னெடுக்கக்கூடிய தலைமை பொய்லியேவுக்கு இல்லை. அதற்குத் தேவையான ‘ஆங்கிலோ சக்ஸன்’ மரபணு அவரிடம் இருப்பத் போலத் தெரியவில்லை. அந்த establishment இனால் முன்தள்ளப்பட்ட மாமணியே கார்ணி.

கார்ணியின் முன்தள்ளலுக்குப் பின்னால் இருக்கும் establishment எனப்படும் இம்மர்ம விசையில் கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சி பங்காளியாய் இல்லைப் போலத் தெரிகிறது. இதற்குக் காரணம் பொய்லியேவா அல்லது கட்சி இயந்திரமோ தெரியவில்லை. ஐரோப்பா தலைமையில் ஆரம்பமாகும் இப்புதிய ஒழுங்கிற்கான பின்னரங்கச் சந்திப்புகளில் பொய்லியேவ் ஒதுக்கப்பட்டு டக் ஃபோர்ட்டுக்கு உயரிய இடம் கொடுக்கப்பட்டுள்ளமை தெரிகிறது. இதற்கு ட்றூடோவின் பங்களிப்பும் இருந்திருக்கலாம்.

மாகாண பொதுத் தேர்தலில் டக் ஃபோர்ட் அமோக வெற்றி பெற்றதும் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அப்போதைய பிரதமர் ட்றூடோ தொலைபேசியில் அழைத்து டக் ஃபோர்ட்டிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சியாகவிருந்தும் தன் சக கட்சித் தலைவருக்கு தொலைபேசி அழைப்பு எடுக்க பொய்லியேவுக்கு 18 நாட்கள் எடுத்திருக்கின்றது. ஃபோர்ட்டுக்கும் பொய்லியேவுக்குமிடையில் பனிப்போர் இருக்கிறதென்பது தெரிகிறது. ஆனால் அது எப்போ, எதற்காக அல்லது யாருக்காக ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கு விளக்கமில்லை.

டுத்தார். இருவருக்கும் அதிக நேரம் பேசத் தேவை இருக்காதவாறு உறவு புளித்துப் போயிருந்தது. ஆனாலும் டக் ஃபோர்ட் தனது பழிவாங்கலை வேறு வடிவங்களில் கச்சிதமாக முடித்துவிட்டார். தனது முடிசூடலுக்கு கிறிஸ்டியா ஃபிறீலாண்டுக்கு அழைப்பு விடுத்ததுடன் கார்ணியுடன் காலையுணவுக்கும் ஒழுங்குசெய்து விட்டார்.

ஃபோர்ட்டுக்கு சில வேளை தூரப்பார்வை அதிகமாக இருக்கலாம். வரப்போகும் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி படு தோல்வி கண்டால் அதன் தலைமை ஆசனத்தில் அடுத்த தலைவராகத் தான் அமர்ந்துகொள்ளலாம் என்ற எண்ணமும் பொய்லியேவை உதாசீனம் செய்யக் காரணமாக இருந்திருக்க வாய்ப்புண்டு.

ஃபோர்ட்டின் தேர்தல் வெற்றியை உடனடியாக வாழ்த்த விரும்பாத பொய்லியேவின் முடிவு சுயமானதா அல்லது தூண்டப்பட்டதா தெரியாது. ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலருக்கு இது அதிர்ச்சியானது என ரொறோண்டோ ஸ்டார் எழுதியிருக்கிறது.

தூரத்தில் வைத்திருப்பது கன்சர்வேட்டிவ் கட்சிக்குப் புதிய விடயமல்ல. 2019 இல் ஃபோர்ட்டின் செல்வாக்கு சரிந்தபோது அப்போதைய மத்திய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் அண்ட்றூ ஷியர் ஃபோர்ட்டை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்திருந்தார். 6 வருடங்களில் இந்த வன்மம் வளர்ந்திருக்க வாய்ப்புண்டு.

கனடாவின் 41 மில்லியன் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஒன்ராறியோவில் இருக்கிறது. மொத்தம் 343 ஆசனங்களில் 122 ஆசனங்கள் ஒன்ராறியோவில் மாத்திரம் இருக்கின்றன. அப்படியிருந்தும் ஃபோர்ட்டைப் புறந்தள்ளும் யோசனை கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வருகிறதென்றால் சாணக்கியம் என்பது இவர்களுக்கு அன்னியமானதொன்று என்றுதான் பார்க்க வேண்டும். இப்படியான ஒரு கட்சியால் ட்றம்ப் போன்றவர்களை எப்படிச் சமாளிக்க முடியும்? என வாக்காள மகாஜனங்கள் யோசித்து, தீர ஆலோசித்து வாக்குகளை அளிக்க கார்ணி அதிக அவகாசம் கொடுக்காமல் அவசர தேர்தலுக்கு – ஒரு வகையில் preemptive- அறிவிப்பை விடுத்திருக்கிறார். ட்றம்பின் பலத்தை முன்வைத்து இத் தீர்மானம் எடுக்கப்பட்டதை விட பொய்லியேவின் பலவீனத்தை முன்வைத்து எடுக்கப்பட்டதாகவே பார்க்கப்படவேண்டியிருக்கிறது.

அடுத்த 36 நாட்களில் ட்றம்பின் சிறிய இரைச்சல்களையும் பெரிதாக amplify பண்ணுவதுதான் லிபரல் கட்சியின் strategy ஆகவிருக்குமென எதிர்பார்க்கலாம். நேரடடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஃபோர்ட் இதற்கு உதவி செய்வார். பொய்லியேவ் கட்சியில் ஊதுவதற்குப் புதிய விடயமுமில்லை. அதை முன்னெடுப்பதற்கான இரண்டாம் நிலை charismatic தலைவருமில்லை.

லிபரல் கட்சியை அதிகமாக இடதுபக்கம் தள்ளிச்சென்ற ட்றூடோ கட்சியில் விட்டுச் சென்ற சிவப்புச் சாயத்தைக் கழுவி கொஞ்சமேனும் வலது பக்கம் நோக்கித் தள்ளும் முயற்சியை கார்ணி ஏற்கெனவே வெளிக்காட்டிவிட்டார். அதற்கு மாறாக வலது பக்கமிருந்த கன்சர்வேட்டிவ் கட்சியைக் கொஞ்சம் இடதுபக்கம் நகர்த்த பொய்லியேவ் முயற்சிப்பதும் தெரிகிறது. திடீரென அவர் தொழிலாளர்களைப் பின்வரிசையில் நிறுத்தி அவர்களின் தோழராகப் படம் காட்டுவது அப்பட்டமாகத் தெரிகிறது. அந்தளவிற்கு கட்சியில் மூளை வறுமை இருக்கிறது. பாவம் பொய்லியேவ். நல்ல மனிசன். சுற்றம் சரியில்லை.

veedu.com
No image previewகனடிய தேர்தல்: கன்சர்வேட்டிவ் கட்சியின் திரிசங்கு நிலை -...
சிவதாசன் இன்னும் 36 நாட்களில், ஏப்றில் 28 அன்று கனடிய பொதுத் தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கனடாவின் அதி குறைந்த ஆயுட்காலத்தைக்கொண்ட பிரதமர் என

இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் - ஹமாஸ் அரசியல் தலைவர் உயிரிழப்பு!

3 months 2 weeks ago
உறக்க நிலையிலா? ... கதாசிரியர் யாரென்று போய்ப் பார்த்தால் நம்மள் டி.பி.எஸ் ஜெயராஜ் 🤣🤣... சிங்களவன் 5 ரூபாய்க்கு எழுதச் சொன்னால் 500 ரூபாய்க்கு எழுதுவான்... இப்படி எழுதுவதற்கும் ஒரு கற்பனைத் திறம் வேண்டும்!! ஆனால், அதையும் எமது வெளிநாடுவாழ் புலம்பெயர் தமிழர்கள் தூக்கி தூக்கி வாசிப்பார்கள்... அதைத்தான் உண்மை என்றும் தடவிக்கொடுப்பார்கள்... (உ+ம்: நமது யாழ் களமே அதற்கு சாட்சி... கேட்டால் எல்லாப் பக்கத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் என்பர். இவர்களே, இவர் தரவழிக்கு பாலூத்தி வளர்போர் ஆவர்.) நான் நினைக்கிறன் ஐயனே, பணையக் கைதிகளை மீட்காமல் சாட்டாக்க வைத்து பாலஸ்தீனத்தை மண்ணோடு மண்ணாக்கப் போகிறார்கள்... வேறொன்றும் இல்லை...