Aggregator

‘செஸ்’ ஸில் அர்ச்சுனா வெற்றி

3 months 2 weeks ago

ஐந்தாவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வருடாந்த உள்ளக விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் வைபவம்  பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும்   சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன ஆகியோரின் தலைமையில் பாராளுமன்ற பிலியட் மண்டபத்தில் கடந்த 21ஆம் திகதி நடைபெற்றது.

 விளையாட்டுத் துறைப் பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன மற்றும்   பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோரின் தலைமையின் கீழ் பாராளுமன்ற படைக்கல சேவிதர் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இந்தப் போட்டிங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஏழு உள்ளக விளையாட்டுப் பிரிவுகளின் கீழ் இடம்பெற்ற போட்டிகளில் ஸ்நூகர் இறுதிப் போட்டி பிரதமர் மற்றும் சபாநாயகர் முன்னிலையில் இடம்பெற்றது.  பாராளுமன்ற உறுப்பினர்களான டி.வி.சானக்க மற்றும் ரோஹன பண்டார பங்குபற்றிய இப்போட்டியில்  பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க வெற்றிபெற்றார்.

இங்கு நடைபெற்ற கலப்பு இரட்டையர் மேசைப்பந்துப் போட்டியில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மற்றும் (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி ஆகியோர் வெற்றி பெற்றனர். இதில் எதிர்த்திசையில்  பாராளுமன்ற உறுப்பினர்களான வருண லியனகே மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஎல்லே ஆகியோர் போட்டியிட்டனர்.

தாம் போட்டியில்  பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.எச்.எம்.தர்மசேன  வெற்றிபெற்றார். இரண்டாவது இடத்தை  பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆரியவன்ச   பெற்றுக்கொண்டார்.

மேசைப்பந்து (ஆண்கள்) போட்டியில்  பராளுமன்ற உறுப்பினர் வருண லியனகே   வெற்றிபெற்றதுடன், இரண்டாவது இடத்தை  பாராளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயக்கொடி பெற்றுக்கொண்டார்.

உள்ளக விளையாட்டுப் போட்டியின் தனிநபர்களுக்கான மேசைப்பந்து (பெண்கள்) போட்டியில்   பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி   வெற்றிபெற்றதுடன், இரண்டாவது இடத்தை  பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஎல்லே பெற்றுக்கொண்டார்.

சதுரங்கப் போட்டியில் (செஸ்)  பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) அர்ச்சுனா இராமநாதன் பெற்றிபெற்றதுடன், இரண்டாவது இடத்தை  பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார வெற்றிகொண்டார்.

அத்துடன், கரம் விளையாட்டில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க வெற்றிபெற்றதுடன், இப்போட்டியில் இரண்டாவது இடத்தை  விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே பெற்றுக்கொண்டார்.

பூல் (pool) விளையாட்டில்   பாராளுமன்ற ரோஹன பண்டார வெற்றிகொண்டதுடன், இரண்டாவது இடத்தை  பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க பெற்றுக்கொண்டார்.

இதில் வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களை வாழ்த்தி உரைநிகழ்த்திய   பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய, மிகவும் வேலைப்பழு மிக்க காலத்தில் மனதை இலகுவாக வைத்திருக்கவும்,  உறுப்பினர்களிடையே நட்புறவை மேம்படுத்துவதற்கு விளையாட்டுக்கள் உறுதுணையாக இருப்பதாகக் கூறினார். அத்துடன், இந்தப் போட்டியை ஏற்பாடு செய்தமைக்காக  விளையாட்டுப் பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற நளின் பண்டார ஆகியோருக்கும் பிரதமர் நன்றியைத் தெரிவித்தார்.

இந்த விளையாட்டுப் போட்டிகளின் நடுவர்களாகப் பாராளுமன்ற பணியாளர்களான தரங்க அபேசிங்கே மற்றும் சமீர சஞ்சீவ ஆகியோர் பங்களித்தனர்.

கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின்  பிரதித் தலைவர் ஹேமாலி வீரசேகர,   சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்னாயக்க,  விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அத்துடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Tamilmirror Online || ‘செஸ்’ஸில் அர்ச்சுனா வெற்றி


இந்தியாவில் உள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும்- வடக்கு ஆளுநர் எதிர்பார்ப்பு!

3 months 2 weeks ago
இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அவர்கள் நாடு திரும்புவது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவதற்கும் உரிய தரப்புக்களிடம் கோரிக்கை முன்வைக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று சனிக்கிழமை விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தச் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் ஒபர் சிலோன் நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக இது ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவரவேண்டும் என போர் முடிந்ததிலிருந்து சொல்லப்பட்டு வருகின்றது என்பதையும், அவர்கள் மீண்டும் இங்குவரவேண்டும் என்பதே இங்குள்ள எல்லோரது விருப்பம் என்பதையும் ஆளுநர் குறிப்பிட்டார். அத்துடன் கடந்த காலங்களில் இவ்வாறு இந்தியாவிலிருந்து வந்த ஒவ்வொருவர் தொடர்பான விவரங்களையும் பெற்று அவர்களுக்கு எத்தகைய தேவைப்பாடுகள் இன்னமும் இருக்கின்றன என்பதை அறிந்து அதனை உடனடியாக பூர்த்திசெய்யவேண்டும் என்றும் ஆளுநர் தெரிவித்தார். ஒபர் சிலோன் நிறுவனத்தின் திட்டத் தலைவர் செல்வி சின்னதம்பி சூரியகுமாரி, தமது நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும், எதிர்பார்ப்புத் தொடர்பிலும் விவரித்தார். இலங்கையிலிருந்து 4 கட்டங்களாக இந்தியாவுக்கு 334,797 பேர் அகதிகளாகச் சென்றுள்ளனர் என்றும் தற்போது தமிழகத்தில் 103 முகாம்களில் 58,104 பேர் இருக்கின்றனர் என்ற தரவுகளையும் ஒபர் சிலோன் நிறுவனத்தினர் தெரியப்படுத்தினர். தற்போது தமிழகத்தில் முகாம்களிலுள்ள 58,104 பேரில், 50,620 பேர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டனர். 2009ஆம் ஆண்டிலிருந்து இதுவரை வடக்கு மாகாணத்துக்கு 14,531பேர் வருகை தந்துள்ளனர் என்றும் ஆளுநருக்கு சுட்டிக்காட்டினர். தமிழகத்தில் தங்கியுள்ளவர்கள் நாடு திரும்புவதற்கு நிலையான கட்டமைப்பு பொறிமுறை உருவாக்கப்படவேண்டும் என்றும், இலங்கை, இந்திய அரசாங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை தேவை என்றும், இலங்கையில் அரசியல் உறுதிபாடு அவசியம் எனவும் ஒபர் சிலோன் நிறுவனத்தினர் குறிப்பிட்டனர். மேலும் தமிழகத்திலுள்ள ஈழ அகதிகளுக்கு இலங்கை மற்றும் வடக்கு மாகாணம் தொடர்பான மிகைப்படுத்தப்பட்ட அல்லது போலியான தகவல்கள் வழங்கப்படுகின்றமையும் அவர்கள் நாடு திரும்புவதற்கு சவாலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. கடந்த காலங்களில் நாடு திரும்பிய ஈழ அகதிகள் இலங்கைக் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதில் சவால்களை எதிர்கொள்கின்றனர் என்றும், இலங்கைக்கு நாடு திரும்புவர்கள் இங்கிருந்து சென்றவர்களின் இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறையினர் என்பதால், இலங்கையில் அவர்களது பூர்வீக பிரதேசத்தை அடையாளம் காண்பதிலும், அவர்களின் காணிகளைக் கண்டறிவதிலும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் என்ற விடயமும் ஆளுநரின் கவனத்துக்கு ஒபர் சிலோன் நிறுவனத்தால் கொண்டு வரப்பட்டது. கொள்கை ரீதியான ஆவணம் ஒன்றை ஒபர் சிலோன் நிறுவனம் தயாரித்து வழங்கிய பின்னர் அதனை அடிப்படையாக வைத்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதாக ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார். நாடு திரும்ப விருப்பமானவர்களின் பட்டியலை ஒபர் சிலோன் நிறுவனம், வடக்கின் 5 மாவட்டச் செயலர்களுக்கு வழங்கிய பின்னர் அவர்களுக்கான தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மாவட்டச் செயலர்கள் மேற்கொள்வார்கள் என ஆளுநர் குறிப்பிட்டார். அதேவேளை, தமிழகத்திலுள்ள ஈழ அகதிகளில் பலர் தாதியர் கற்கைநெறியை முடித்தவர்கள் எனவும், விளையாட்டுத்துறையில் சாதித்தவர்கள் எனவும் சுட்டிக்காட்டிய ஒபர் சிலோன் நிறுவனத்தினர், வடக்கு மாகாணத்தின் சொத்தான அவர்களை இழக்கக் கூடாது எனவும் கோரிக்கை முன்வைத்தனர். தமிழகத்திலிருப்பவர்களை வலுக்கட்டாயமாக நாட்டுக்கு அழைத்துவரமுடியாது எனக் குறிப்பிட்ட ஆளுநர், வரவுள்ளவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கத் திட்டமிடுமாறும் அதிகாரிகளை அறிவுறுத்தினார். இந்தக் கலந்துரையாடலில் ஒபர் சிலோன் நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், மேலதிக மாவட்டச் செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், சமுர்த்திப் பணிப்பாளர்கள், மாவட்டப் பதிவாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். இந்தியாவில் உள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும்- வடக்கு ஆளுநர் எதிர்பார்ப்பு!

இந்தியாவில் உள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும்- வடக்கு ஆளுநர் எதிர்பார்ப்பு!

3 months 2 weeks ago

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.  அவர்கள் நாடு திரும்புவது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவதற்கும் உரிய தரப்புக்களிடம் கோரிக்கை முன்வைக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று சனிக்கிழமை விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. 

இந்தச் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் ஒபர் சிலோன் நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக இது ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவரவேண்டும் என போர் முடிந்ததிலிருந்து சொல்லப்பட்டு வருகின்றது என்பதையும், அவர்கள் மீண்டும் இங்குவரவேண்டும் என்பதே இங்குள்ள எல்லோரது விருப்பம் என்பதையும் ஆளுநர் குறிப்பிட்டார். 

அத்துடன் கடந்த காலங்களில் இவ்வாறு இந்தியாவிலிருந்து வந்த ஒவ்வொருவர் தொடர்பான விவரங்களையும் பெற்று அவர்களுக்கு எத்தகைய தேவைப்பாடுகள் இன்னமும் இருக்கின்றன என்பதை அறிந்து அதனை உடனடியாக பூர்த்திசெய்யவேண்டும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

ஒபர் சிலோன் நிறுவனத்தின் திட்டத் தலைவர் செல்வி சின்னதம்பி சூரியகுமாரி, தமது நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும், எதிர்பார்ப்புத் தொடர்பிலும் விவரித்தார்.

இலங்கையிலிருந்து 4 கட்டங்களாக இந்தியாவுக்கு 334,797 பேர் அகதிகளாகச் சென்றுள்ளனர் என்றும் தற்போது தமிழகத்தில் 103 முகாம்களில் 58,104 பேர் இருக்கின்றனர் என்ற தரவுகளையும் ஒபர் சிலோன் நிறுவனத்தினர் தெரியப்படுத்தினர். தற்போது தமிழகத்தில் முகாம்களிலுள்ள 58,104 பேரில், 50,620 பேர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டனர். 2009ஆம் ஆண்டிலிருந்து இதுவரை வடக்கு மாகாணத்துக்கு 14,531பேர் வருகை தந்துள்ளனர் என்றும் ஆளுநருக்கு சுட்டிக்காட்டினர்.

தமிழகத்தில் தங்கியுள்ளவர்கள் நாடு திரும்புவதற்கு நிலையான கட்டமைப்பு பொறிமுறை உருவாக்கப்படவேண்டும் என்றும், இலங்கை, இந்திய அரசாங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை தேவை என்றும், இலங்கையில் அரசியல் உறுதிபாடு அவசியம் எனவும் ஒபர் சிலோன் நிறுவனத்தினர் குறிப்பிட்டனர்.

மேலும் தமிழகத்திலுள்ள ஈழ அகதிகளுக்கு இலங்கை மற்றும் வடக்கு மாகாணம் தொடர்பான மிகைப்படுத்தப்பட்ட அல்லது போலியான தகவல்கள் வழங்கப்படுகின்றமையும் அவர்கள் நாடு திரும்புவதற்கு சவாலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் நாடு திரும்பிய ஈழ அகதிகள் இலங்கைக் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதில் சவால்களை எதிர்கொள்கின்றனர் என்றும், இலங்கைக்கு நாடு திரும்புவர்கள் இங்கிருந்து சென்றவர்களின் இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறையினர் என்பதால், இலங்கையில் அவர்களது பூர்வீக பிரதேசத்தை அடையாளம் காண்பதிலும், அவர்களின் காணிகளைக் கண்டறிவதிலும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் என்ற விடயமும் ஆளுநரின் கவனத்துக்கு ஒபர் சிலோன் நிறுவனத்தால் கொண்டு வரப்பட்டது.

கொள்கை ரீதியான ஆவணம் ஒன்றை ஒபர் சிலோன் நிறுவனம் தயாரித்து வழங்கிய பின்னர் அதனை அடிப்படையாக வைத்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதாக ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார். நாடு திரும்ப விருப்பமானவர்களின் பட்டியலை ஒபர் சிலோன் நிறுவனம், வடக்கின் 5 மாவட்டச் செயலர்களுக்கு வழங்கிய பின்னர் அவர்களுக்கான தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மாவட்டச் செயலர்கள் மேற்கொள்வார்கள் என ஆளுநர் குறிப்பிட்டார்.

அதேவேளை, தமிழகத்திலுள்ள ஈழ அகதிகளில் பலர் தாதியர் கற்கைநெறியை முடித்தவர்கள் எனவும், விளையாட்டுத்துறையில் சாதித்தவர்கள் எனவும் சுட்டிக்காட்டிய ஒபர் சிலோன் நிறுவனத்தினர், வடக்கு மாகாணத்தின் சொத்தான அவர்களை இழக்கக் கூடாது எனவும் கோரிக்கை முன்வைத்தனர்.

தமிழகத்திலிருப்பவர்களை வலுக்கட்டாயமாக நாட்டுக்கு அழைத்துவரமுடியாது எனக் குறிப்பிட்ட ஆளுநர், வரவுள்ளவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கத் திட்டமிடுமாறும் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் ஒபர் சிலோன் நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், மேலதிக மாவட்டச் செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், சமுர்த்திப் பணிப்பாளர்கள், மாவட்டப் பதிவாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தியாவில் உள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும்- வடக்கு ஆளுநர் எதிர்பார்ப்பு!

யாழில் அதிகரிக்கும் இணைய நிதி மோசடி !

3 months 2 weeks ago
24 Mar, 2025 | 09:50 AM யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக பல்வேறு பகுதிகளிலும் இணையம் மூலமாக நிதி மோசடி இடம்பெற்று வருகின்றது. இதன்மூலம் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இவ்வாறான நிதி மோசடிகள் ஊர்காவற்துறை பகுதியில் மாத்திரம் நன்கு இடம்பெற்றுள்ள நிலையில் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. இந்த இணைய மோசடிகள் பல்வேறு வகையில் இடம்பெற்று வருகின்றன. நிகழ்நிலை செயலி (online App) ஒன்றினை மக்களிடையே பகிர்ந்து அதில் முதலீடு செய்யுமாறு ஊக்குவிக்கப்படுகிறது. அந்த செயலியில் ஆரம்பத்தில் சிறிய தொகையை முதலிடுவதன் மூலம் சிறிய அளவிலான கொடுப்பனவு வழங்கப்படுகிறது. மக்கள் முதல் வருமானத்தை நம்பி அடுத்த தடவை பெரிய ஒரு தொகையை முதலீடு செய்யும் பட்சத்தில் அந்த நிதியானது மோசடியாளர்களால் அபகரிக்கப்படுகிறது. மேலும், வங்கி கணக்கில் பணத்தினை வைப்புச் செய்துள்ளவர்களது கணக்கு இலக்கங்கள் மற்றும் அடையாள அட்டை இலக்கங்கள் என்பன ஆசை வார்த்தை கூறி மக்களிடமிருந்து மோசடியாளர்களால் பெறப்படுகிறது. பின்னர் அவர்களது கைபேசிக்கு இரகசிய இலக்கம் அனுப்பப்பட்டு அவர்களிடமிருந்து அந்த இரகசிய இலக்கமானது பெறப்பட்டு அவர்களது வங்கிக் கணக்கில் உள்ள பணம் மோசடி செய்யப்படுகிறது. இவ்வாறான சம்பவங்கள் சமகாலத்தில் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து காணப்படுகின்றன. ஊர்காவற்துறை நீதிமன்றத்திலும் இவ்வாறான வழக்குகள் காணப்படுகின்றபடியால் மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்துமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். யாழில் அதிகரிக்கும் இணைய நிதி மோசடி ! | Virakesari.lk

யாழில் அதிகரிக்கும் இணைய நிதி மோசடி !

3 months 2 weeks ago

24 Mar, 2025 | 09:50 AM

image

யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக பல்வேறு பகுதிகளிலும் இணையம் மூலமாக நிதி மோசடி இடம்பெற்று வருகின்றது. இதன்மூலம் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இவ்வாறான நிதி மோசடிகள் ஊர்காவற்துறை பகுதியில் மாத்திரம் நன்கு இடம்பெற்றுள்ள நிலையில் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. இந்த இணைய மோசடிகள் பல்வேறு வகையில் இடம்பெற்று வருகின்றன.

நிகழ்நிலை செயலி (online App) ஒன்றினை மக்களிடையே பகிர்ந்து அதில் முதலீடு செய்யுமாறு ஊக்குவிக்கப்படுகிறது. அந்த செயலியில் ஆரம்பத்தில் சிறிய தொகையை முதலிடுவதன் மூலம் சிறிய அளவிலான கொடுப்பனவு வழங்கப்படுகிறது.  

மக்கள் முதல் வருமானத்தை நம்பி அடுத்த தடவை பெரிய ஒரு தொகையை முதலீடு செய்யும் பட்சத்தில் அந்த நிதியானது மோசடியாளர்களால் அபகரிக்கப்படுகிறது.  

மேலும், வங்கி கணக்கில் பணத்தினை வைப்புச் செய்துள்ளவர்களது கணக்கு இலக்கங்கள் மற்றும் அடையாள அட்டை இலக்கங்கள் என்பன ஆசை வார்த்தை கூறி மக்களிடமிருந்து மோசடியாளர்களால் பெறப்படுகிறது. 

பின்னர் அவர்களது கைபேசிக்கு இரகசிய இலக்கம் அனுப்பப்பட்டு அவர்களிடமிருந்து அந்த இரகசிய இலக்கமானது பெறப்பட்டு அவர்களது வங்கிக் கணக்கில் உள்ள பணம் மோசடி செய்யப்படுகிறது. 

இவ்வாறான சம்பவங்கள் சமகாலத்தில் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து காணப்படுகின்றன. ஊர்காவற்துறை நீதிமன்றத்திலும் இவ்வாறான வழக்குகள் காணப்படுகின்றபடியால் மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்துமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.   

யாழில் அதிகரிக்கும் இணைய நிதி மோசடி ! | Virakesari.lk

இலங்கையில் முதல் முறையாக விந்தணு வங்கி

3 months 2 weeks ago
24 Mar, 2025 | 12:32 PM கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் விந்தணு வங்கி நிறுவப்பட்டுள்ளது. கருத்தரிப்பின்மை பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக இந்த விந்தணு வங்கி நிறுவப்பட்டுள்ளது. செயற்கை முறை கருத்தரிப்புக்கு பயன்படுத்துவதற்காக வழங்கப்படும் விந்தணுக்களைச் சேகரித்து இந்த விந்தணு வங்கி நிறுவப்பட்டுள்ளது. இந்த விந்தணு வங்கியானது குழந்தையின்மையால் அவதிப்படும் தனிநபர்கள் மற்றும் தம்பதிகளுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கிறது. செயற்கை முறை கருத்தரிப்பு, கருத்தரிப்பின்மை பிரச்சினைக்குத் தீர்வுகாணல் , கருத்தரிக்க விரும்பும் பெண்கள் மற்றும் தம்பதிகளுக்காக உலகம் முழுவதும் விந்தணு வங்கிகள் பல காணப்படுகின்றன. இந்த வசதி தற்போது இலங்கையிலும் கொண்டுவரப்பட்டுள்ளது. கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையின் வைத்தியர் அஜித் குமார தண்டநாராயண இது தொடர்பில் தெரிவிக்கையில், இந்த சேவைக்காக விந்தணுக்களை வழங்கும் நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும். விந்தணுக்களை வழங்க விரும்பும் நபர்கள் தொடர்ச்சியாக வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இலங்கையின் சுகாதார துறையில் புதிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டும் வரும் நோக்கத்தில் இந்த விந்தணு வங்கி நிறுவப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரும் தங்களது விந்தணுக்களை வழங்கி இந்த முயற்சியை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார். இலங்கையில் முதல் முறையாக விந்தணு வங்கி | Virakesari.lk

இலங்கையில் முதல் முறையாக விந்தணு வங்கி

3 months 2 weeks ago

24 Mar, 2025 | 12:32 PM

image

கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் விந்தணு வங்கி நிறுவப்பட்டுள்ளது.

கருத்தரிப்பின்மை பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக இந்த விந்தணு வங்கி நிறுவப்பட்டுள்ளது.

செயற்கை முறை கருத்தரிப்புக்கு பயன்படுத்துவதற்காக வழங்கப்படும் விந்தணுக்களைச் சேகரித்து இந்த விந்தணு வங்கி நிறுவப்பட்டுள்ளது.

இந்த விந்தணு வங்கியானது குழந்தையின்மையால் அவதிப்படும் தனிநபர்கள் மற்றும் தம்பதிகளுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கிறது.

செயற்கை முறை கருத்தரிப்பு, கருத்தரிப்பின்மை பிரச்சினைக்குத் தீர்வுகாணல் , கருத்தரிக்க விரும்பும் பெண்கள் மற்றும் தம்பதிகளுக்காக உலகம் முழுவதும் விந்தணு வங்கிகள் பல காணப்படுகின்றன.

இந்த வசதி தற்போது இலங்கையிலும் கொண்டுவரப்பட்டுள்ளது. 

கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையின் வைத்தியர் அஜித் குமார தண்டநாராயண இது தொடர்பில் தெரிவிக்கையில், 

இந்த சேவைக்காக விந்தணுக்களை வழங்கும் நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும். 

விந்தணுக்களை வழங்க விரும்பும் நபர்கள் தொடர்ச்சியாக வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இலங்கையின் சுகாதார துறையில் புதிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டும் வரும் நோக்கத்தில் இந்த விந்தணு வங்கி நிறுவப்பட்டுள்ளது. 

எனவே, ஒவ்வொரும் தங்களது விந்தணுக்களை வழங்கி இந்த முயற்சியை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதல் முறையாக விந்தணு வங்கி | Virakesari.lk

சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல்: எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமி

3 months 2 weeks ago
ஊரில் பீமுட்டி அடிப்பது என்று கேள்விப்பட்டுள்ளேன். இப்போது எதுவும் நடப்பதாக தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் இன்னமும் இந்த கலாசாரம் அழியாமல் இருக்கிறது.

பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடி : உதய கம்மன்பில விடுதலை !

3 months 2 weeks ago
24 Mar, 2025 | 02:52 PM போலி ஆவணம் தயாரித்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் வர்த்தகர் ஜயசிங்க ஆகியோரை குறித்த குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (24) உத்தரவிட்டுள்ளது. நீண்ட காலமாக தொடரப்பட்ட இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதவான் நாமல் பண்டார பலல்லே முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 முதல் 1997 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25 ஆகிய திகதிகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் போலி ஆவணம் தயாரித்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் வர்த்தகர் ஜயசிங்க ஆகியோருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் வர்த்தகர் ஜயசிங்க ஆகியோருக்கு எதிராக போதுமான சாட்சிகள் இல்லாத காரணத்தினால் அவர்களை வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடி : உதய கம்மன்பில விடுதலை ! | Virakesari.lk

பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடி : உதய கம்மன்பில விடுதலை !

3 months 2 weeks ago

24 Mar, 2025 | 02:52 PM

போலி ஆவணம் தயாரித்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள  முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் வர்த்தகர் ஜயசிங்க ஆகியோரை குறித்த குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (24) உத்தரவிட்டுள்ளது. 

நீண்ட காலமாக தொடரப்பட்ட இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதவான் நாமல் பண்டார பலல்லே முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 முதல் 1997 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25 ஆகிய திகதிகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் போலி ஆவணம் தயாரித்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் வர்த்தகர் ஜயசிங்க ஆகியோருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் வர்த்தகர் ஜயசிங்க ஆகியோருக்கு எதிராக போதுமான சாட்சிகள் இல்லாத காரணத்தினால் அவர்களை வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை செய்ய நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடி : உதய கம்மன்பில விடுதலை ! | Virakesari.lk

யாழ். மாநகர வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றம் செல்லும் சுயேட்சைக் குழு

3 months 2 weeks ago

மத்திய அரசின் சூழ்ச்சியே யாழ். மாநகரில் எமது வேட்பு மனு  நிராகரிப்புக்கு காரணம் என சுட்டிக்கட்டியுள்ள தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்‌ஷன் தலைமையிலான சுயேட்சைக் குழு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) இந்த தீர்மானத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் (24)வேட்புமனு நிரகரிப்பு தொடர்பாக ஊடக சந்திப்பை நடத்தி இதனை தெரிவித்த இந்த சுயேச்சைக் குழுவின் தலைவர் சுலக்சன் மற்றும் வேட்பாளர் விஜயகாந்த் மேலும் கூறுகையில்,

எமது சுயேச்சைக் குழு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்‌ஷன் தலைமையில் யாழ்ப்பாணம், கோப்பாய், வேலணை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் சுயேச்சைக் குழுவாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தது.

இதில் யாழ். மாநகரின் வேட்புமனு பெண் வேட்பாளரது உறுதியுரை குறித்த விடயம் தொடர்பான சர்ச்சையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாம் சட்டத்தின் பிரகாரமே வேட்புமனுவை சமர்ப்பித்திருந்தோம்.

அதன்படி, யாழ். மாநகரில் எமது வேட்புமனு  நிராகரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விடயம் குறித்து நாம் சட்ட ஆலோசகர்களுடன் கலந்துரையாடியுள்ளோம். 

அதன்படி தேர்தல் திணைக்களத்தின் இந்த அறிவிப்புக்கு எதிராக நாம் நீதி கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளோம் என்றனர். 

யாழ். மாநகர வேட்புமனு  நிராகரிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றம் செல்லும் சுயேட்சைக் குழு | Virakesari.lk

யாழ். மாநகர வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றம் செல்லும் சுயேட்சைக் குழு

3 months 2 weeks ago
மத்திய அரசின் சூழ்ச்சியே யாழ். மாநகரில் எமது வேட்பு மனு நிராகரிப்புக்கு காரணம் என சுட்டிக்கட்டியுள்ள தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்‌ஷன் தலைமையிலான சுயேட்சைக் குழு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) இந்த தீர்மானத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் (24)வேட்புமனு நிரகரிப்பு தொடர்பாக ஊடக சந்திப்பை நடத்தி இதனை தெரிவித்த இந்த சுயேச்சைக் குழுவின் தலைவர் சுலக்சன் மற்றும் வேட்பாளர் விஜயகாந்த் மேலும் கூறுகையில், எமது சுயேச்சைக் குழு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்‌ஷன் தலைமையில் யாழ்ப்பாணம், கோப்பாய், வேலணை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் சுயேச்சைக் குழுவாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தது. இதில் யாழ். மாநகரின் வேட்புமனு பெண் வேட்பாளரது உறுதியுரை குறித்த விடயம் தொடர்பான சர்ச்சையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாம் சட்டத்தின் பிரகாரமே வேட்புமனுவை சமர்ப்பித்திருந்தோம். அதன்படி, யாழ். மாநகரில் எமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விடயம் குறித்து நாம் சட்ட ஆலோசகர்களுடன் கலந்துரையாடியுள்ளோம். அதன்படி தேர்தல் திணைக்களத்தின் இந்த அறிவிப்புக்கு எதிராக நாம் நீதி கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளோம் என்றனர். யாழ். மாநகர வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றம் செல்லும் சுயேட்சைக் குழு | Virakesari.lk

இலங்கையில் எலான் மஸ்கின் “ஸ்டார்லிங்க்” இணைய சேவையை இடைநிறுத்த நடவடிக்கை

3 months 2 weeks ago
இலங்கையில் எலான் மஸ்கின் “ஸ்டார்லிங்க்” (Starlink) என்ற செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை இடைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் அரச நிறுவனங்களின் தனிப்பட்ட தரவுகள் ஆகியவற்றின் பாதுகாப்புக்கான உத்தரவாதம் உறுதிசெய்ய இந்த இணைய சேவையை இடைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. “ஸ்டார்லிங்க்” இணையதள சேவையை சிலர் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு கடந்த 2024 ஆம் ஆண்டு எலான் மஸ்கின் “ஸ்டார்லிங்க்” (Starlink) என்ற செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை இலங்கைக்கு வழங்குவதற்கான உரிமத்தை வழங்கியது. “ஸ்டார்லிங்க்” இணைய சேவையின் பாதுகாப்புக்கான உத்தரவாதம் உறுதிசெய்யப்படும் வரை, இணைய சேவையை நாட்டில் நடைமுறைப்படுத்த புதிய அரசாங்கம் அனுமதி வழக்காது என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். இலங்கையில் எலான் மஸ்கின் “ஸ்டார்லிங்க்” இணைய சேவையை இடைநிறுத்த நடவடிக்கை | Virakesari.lk

இலங்கையில் எலான் மஸ்கின் “ஸ்டார்லிங்க்” இணைய சேவையை இடைநிறுத்த நடவடிக்கை

3 months 2 weeks ago

இலங்கையில் எலான் மஸ்கின்  “ஸ்டார்லிங்க்” (Starlink) என்ற செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை இடைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் பாதுகாப்பு மற்றும் அரச நிறுவனங்களின் தனிப்பட்ட தரவுகள் ஆகியவற்றின்  பாதுகாப்புக்கான உத்தரவாதம் உறுதிசெய்ய இந்த இணைய சேவையை இடைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

“ஸ்டார்லிங்க்” இணையதள சேவையை சிலர் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு கடந்த 2024 ஆம் ஆண்டு எலான் மஸ்கின்  “ஸ்டார்லிங்க்” (Starlink) என்ற செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை இலங்கைக்கு வழங்குவதற்கான உரிமத்தை வழங்கியது.

“ஸ்டார்லிங்க்” இணைய சேவையின் பாதுகாப்புக்கான உத்தரவாதம் உறுதிசெய்யப்படும் வரை, இணைய சேவையை நாட்டில் நடைமுறைப்படுத்த புதிய அரசாங்கம் அனுமதி வழக்காது என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எலான் மஸ்கின் “ஸ்டார்லிங்க்” இணைய சேவையை இடைநிறுத்த நடவடிக்கை | Virakesari.lk

சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல்: எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமி

3 months 2 weeks ago
முகநூலில் நேரலை வீடியோ போட்டு ஊர்வலமா போய்.... சவுக்கு சங்கர் வீட்ல மனித மலத்தை கொட்டிருக்கானுங்க. கிட்டத்தட்ட மூணு மணி நேரமாக... ஆனா பாருங்க இது காவல்துறைக்கு தெரியலையாம்?? கட்டெறும்பு

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
4) திங்கள் 24 மார்ச் 2:00 pm GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் DC எதிர் LSG 08 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் 15 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸ் சுவி பிரபா செம்பாட்டான் கந்தப்பு வாதவூரான் ரசோதரன் நுணாவிலான் எப்போதும் தமிழன் இந்தப் போட்டியில் புள்ளிகளை எவர் எடுப்பார்கள்?

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
இன்று ராகுல் சிலவேளை விளையாடமாட்டார் என்று செய்திகள் வருகின்றன. (அவரது மனைவிக்கு முதலாவது குழந்தை பிறக்கவுள்ளதினால் சிலவேளை விளையாடமாட்டார் ) https://www.moneycontrol.com/sports/cricket/ipl/ipl-2025-why-kl-rahul-may-miss-delhi-capitals-opening-match-against-lucknow-super-giants-article-12973441.html

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதிர் RCB 14 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெல்லும் எனக் கணித்திருந்தார்கள்! 09 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வெல்லும் எனக் கணித்திருந்தார்கள். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் சுவி சுவைப்பிரியன் செம்பாட்டான் ரசோதரன் நந்தன் புலவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வெற்றியீட்டியதால் 09 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 2) ஞாயிறு 23 மார்ச் 10:00 am GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் SRH எதிர் RR 19 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெல்லும் எனக் கணித்திருந்தார்கள்! 04 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் வெல்லும் எனக் கணித்திருந்தார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் சுவி சுவைப்பிரியன் வாதவூரான் ஏராளன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றியீட்டியதால் 19 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 3) ஞாயிறு 23 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் CSK எதிர் MI 19 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்திருந்தார்கள்! 04 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்திருந்தார்கள். மும்பை இந்தியன்ஸ் வாத்தியார் சுவி ரசோதரன் கோஷான் சே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியீட்டியதால் 19 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. முதல் மூன்று போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: