செம்பாட்டானுக்கு வாழ்த்துக்கள் பூரானின் கேட்சை விட்டு போட்டியை சுறுசுறுப்பாகிய ரிஸ்விக்கும் ஒரு கேட்ச், ஒரு ஸ்டாம்பிங்க்கையும் கோட்டைவிட்டு தனது பழைய அணிக்கு வெற்றியை தேடிக்குடுத்த றிஷாப் பான்டிற்கும் நன்றிகள்!!
நான் இப்ப வாய் திறக்க மாட்டேன் நாளைக்கு விளையாட்டு முடிந்த பின் தான் வாய் திறப்பேன்.................என்ர நாறவாயால் எது சொன்னாலும் அது வினையா எனக்கே அமையுது லொள்😁.......................................
ஆயின்மென்ட் குடுக்கலாம் என்றால் வேண்டாம் என்று சொல்கிறார். எதுக்கும் நீங்களும் அவர்மேல் ஒரு கண் வைத்திருங்க. ஏடாகூடாம ஏதேன் நடந்தா நாமதான் கவனிக்க வேணும்.
மண்ணின் நிறம் என்ன என்று கூட தெரிந்து வைத்திருக்கின்றீர்களா................ எங்களில் சிலருக்கு ஒரு 10 புள்ளிகள் ஆரம்பத்தில் இலவசமாக கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்....... ஒரு நியாய தர்மம் வேண்டாமா..................🤣.
தெய்வமே , என்னை விட அமெரிக்கன் கட்டத்துரை அண்ணை தான் ஓவர் வில்டாப் விட்டவர் போட்டி நடக்கும் போது கூட , அவருக்கும் ஏதும் ஆறுதல் வார்த்தை சொல்லவும் லொள்😁......................
இன்றைய போட்டியில் குயராத்தின் சொந்த மைதானமான நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது, இந்த மைதான ஆடுகளம் சிகப்பு மண் கொண்ட ஆடுகளம். புதிய பந்து வேகப்பந்திற்கு மிக சாதகமாக காணப்படும், நாணைய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட அணிகள் விரும்பும், இரண்டாவது துடுப்பெடுத்தாடும் அணிக்கு மைதானம் மெதுவானால் ஓட்டங்கள் எடுப்பது ஒப்பீட்டளவில் சிரமமாக இருக்கும், ஆனால் மைதான ஈரலிப்பு காணப்பட்டால் இரண்டாவதாக துடுப்பாடும் அணிக்கு சாதகமாக இருக்கும். மட்டையாளருக்கு சாதகமான ஆடுகளம் ஆனால் ஆரம்ப ஓவர்களில் விக்கெட் அதிகம் இழப்பு ஏற்பட்டால் 200 ஓட்டங்களை எட்டுவது கடினமாக இருக்கும், இந்த மைதானத்தில் SRH 159, 162 ஓட்ட்ங்களை வைத்து எதிரணியினை மட்டுப்படுத்தியதாக கிரிகின்போ கூறுகிறது, பஞ்சாப் அணி அவுஸ்ரேலிய அணி, வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அவுஸ்ரேலிய அணியாக உள்ளது. இந்த பஞ்சாப் அணியே இது வரையான மிக சிறந்த அணியென ரிக்கி பொண்டிங் கூறியதாக கூறப்படுகிறது. இரண்டு அணிகளும் எதிர்கொண்ட 5 போட்டிகளில் குயராத் அணியே அதிக வெற்றியினை ஈட்டி உள்ளது (3). CPR🤣 செம்பாட்டான் இன்றைய போட்டி முடிவில் உங்களுக்கு முதலுதவி வழங்க தயாராகவுள்ளோம்.🤣
🤣.............. கெட்டது குடி...............🤣 KKR என்றால் கொல்கத்தா, DC என்றால் டெல்லி என்று பாடமாக்கிக் கொண்டு பாலர் வகுப்பில் நிற்கின்றேன்................. அதற்குள்ளே துணை முதல்வர் பதவியா.............. அமெரிக்காவில் கூட இந்த அநியாயம் நடக்காது.............🤣 வாழ்க்கையில் இன்று முதன்முதலாக ஐபிஎல் போட்டி ஒன்றை, முழுவதும் இல்லை என்றாலும், பார்த்தேன்................👍.