Aggregator

விமான நிலையத்தில் குழந்தையை பிரசவித்த வெளிநாட்டு பெண்

3 months 3 weeks ago

05 Dec, 2025 | 01:42 PM

image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.

குறித்த பெண் 29 வயதான தான்சானிய நாட்டை சேர்ந்தவர் ஆவார்.

குறித்த பெண் இன்று வெள்ளிக்கிழமை (05) காலை டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்து, மலேசியா, கோலாலம்பூருக்கு புறப்படுவதற்காக விமான நிலைய போக்குவரத்து முனையத்தில் காத்திருந்தார்.

இதன்போது, பிரசவ வழி ஏற்பட்டதால் உடனடியாக விமான நிலைய மருத்துவ சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் உதவியுடன் அவர் ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.

பின்னர் குறித்த பெண்ணும் குழந்தையும் மேலதிக சிகிச்சைக்காக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் வண்டி மூலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

விமான நிலையத்தில் குழந்தையை பிரசவித்த வெளிநாட்டு பெண் | Virakesari.lk

பேரிடரால் பாதிக்கப்பட்ட குதிரைகளுக்கு மருத்துவ முகாம்

3 months 3 weeks ago
5 Dec, 2025 | 02:01 PM டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட குதிரைகளுக்கு நுவரெலியாவில் மருத்துவ முகாம் இன்று வெள்ளிக்கிழமை (05) நடத்தப்பட்டது. பேரிடரால் பாதிக்கப்பட்ட குதிரைகளை நோய் நிலைமைகள் இருந்து பாதுகாக்க அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் கால்நடை தீவனம் வழங்குவதற்காக இந்த விசேட மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த திட்டத்தின் முதல் கட்டம் இன்றைய தினம் நுவரெலியா மாநகர சபையின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு மற்றும் பங்களிப்பு இலங்கை குதிரை சங்கத்தால் வழங்கப்பட்டது. இந்த சேவைக்கு இலங்கை குதிரை சங்க உறுப்பினர்கள் மற்றும் விலங்கு பிரியர்கள் ஏராளமானோர் நிதி பங்களிப்புகளை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், பேரிடர் நிலைமை தணிந்து சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவுக்கு மீண்டும் வருகை தரும் வரை இந்த மருத்துவ சேவைகள் பல கட்டங்களாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நுவரெலியா நகர எல்லை முழுவதும் குதிரை சுற்றுப்பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் 150க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சத்தான விலங்கு உணவு மற்றும் மருந்துகள் 50 குதிரைவண்டி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. இவ்வாறு கையளிக்கப்பட்ட விலங்கு உணவு பத்து நாட்கள் முதல் இரண்டு வாரங்களுக்கு போதுமானது. எதிர்காலத்திலும் விலங்கு உணவு விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயற்கை பேரழிவுகள் காரணமாக விலங்குகள் பாதிக்கப்பட்டால் பயன்படுத்த ஒரு அளவு மருந்து மற்றும் தடுப்பூசிகளும் குதிரைவண்டி சவாரி செய்பவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன. இந்த மருத்துவ முகாம் மற்றும் விலங்கு உணவு விநியோக நிவாரண சேவையில் பயனடைந்த குதிரை உரிமையாளர்கள், நாடு முழுவதும் பேரிடர் காலத்தில் பல்வேறு நிவாரண சேவைகள் வழங்கப்பட்ட போதிலும், இலங்கை சுற்றுலாத் துறையின் மிகப்பெரிய பலமாக இருக்கும் குதிரை உரிமையாளர்களை நாடு மறந்துவிட்டது. இலங்கை குதிரை சங்கம் செய்த உதவிகளுக்குபெரிதும் பாராட்டுகிறோம். நாட்டில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற பேரிடர்களின் போது விலங்குகளைப் பராமரிப்பது எங்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது, எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உணவளிக்க நாங்கள் செலவிடும் அதே அளவு பணத்தை இந்த விலங்குகளுக்காக செலவிட வேண்டியிருந்தது, மேலும் எங்கள் துக்கத்தை வெளிப்படுத்த யாரும் இல்லாமல் தவித்தோம், அப்போதுதான் எங்களுக்கு சில ஆதரவை வழங்குமாறு இலங்கை குதிரை சங்கத்திடம் உதவி கோரினோம். சுற்றுலாப் பயணிகள் மீண்டும் வந்து எங்கள் பொருளாதாரம் வலுவடையும் வரை அவர்கள் எங்களுக்கு அளித்த உதவிகளுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அரசாங்கத்தால் உதவிகள் கிடைக்காமைக்கு மிகவும் வருத்தம் அடைகிறோம். அரசாங்கத்திடமிருந்து ஏதேனும் உதவி கிடைத்தால், எங்களால் முடிந்த அதிகபட்ச ஆற்றலைப் பயன்படுத்தி சுற்றுலாவை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதாரத்தை வலுப்படுத்த பாடுபடுவோம். பேரிடரால் பாதிக்கப்பட்ட குதிரைகளுக்கு மருத்துவ முகாம் | Virakesari.lk

பேரிடரால் பாதிக்கப்பட்ட குதிரைகளுக்கு மருத்துவ முகாம்

3 months 3 weeks ago

5 Dec, 2025 | 02:01 PM

image

டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட குதிரைகளுக்கு நுவரெலியாவில் மருத்துவ முகாம் இன்று வெள்ளிக்கிழமை (05) நடத்தப்பட்டது.

பேரிடரால் பாதிக்கப்பட்ட குதிரைகளை நோய் நிலைமைகள் இருந்து பாதுகாக்க அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் கால்நடை தீவனம் வழங்குவதற்காக இந்த விசேட மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த திட்டத்தின் முதல் கட்டம் இன்றைய தினம் நுவரெலியா மாநகர சபையின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு மற்றும் பங்களிப்பு இலங்கை குதிரை சங்கத்தால் வழங்கப்பட்டது.

இந்த சேவைக்கு இலங்கை குதிரை சங்க உறுப்பினர்கள் மற்றும் விலங்கு பிரியர்கள் ஏராளமானோர் நிதி பங்களிப்புகளை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அத்துடன், பேரிடர் நிலைமை தணிந்து சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவுக்கு மீண்டும் வருகை தரும் வரை இந்த மருத்துவ சேவைகள் பல கட்டங்களாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நுவரெலியா நகர எல்லை முழுவதும் குதிரை சுற்றுப்பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் 150க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சத்தான விலங்கு உணவு மற்றும் மருந்துகள் 50 குதிரைவண்டி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.

இவ்வாறு கையளிக்கப்பட்ட விலங்கு உணவு பத்து நாட்கள் முதல் இரண்டு வாரங்களுக்கு போதுமானது. எதிர்காலத்திலும் விலங்கு உணவு விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இயற்கை பேரழிவுகள் காரணமாக விலங்குகள் பாதிக்கப்பட்டால் பயன்படுத்த ஒரு அளவு மருந்து மற்றும் தடுப்பூசிகளும் குதிரைவண்டி சவாரி செய்பவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன. 

இந்த மருத்துவ முகாம் மற்றும் விலங்கு உணவு விநியோக நிவாரண சேவையில் பயனடைந்த குதிரை உரிமையாளர்கள்,

நாடு முழுவதும் பேரிடர் காலத்தில் பல்வேறு நிவாரண சேவைகள் வழங்கப்பட்ட போதிலும், இலங்கை சுற்றுலாத் துறையின் மிகப்பெரிய பலமாக இருக்கும் குதிரை உரிமையாளர்களை நாடு மறந்துவிட்டது. இலங்கை குதிரை சங்கம் செய்த உதவிகளுக்குபெரிதும் பாராட்டுகிறோம்.

நாட்டில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற பேரிடர்களின் போது விலங்குகளைப் பராமரிப்பது எங்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது,

எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உணவளிக்க நாங்கள் செலவிடும் அதே அளவு பணத்தை இந்த விலங்குகளுக்காக செலவிட வேண்டியிருந்தது, மேலும் எங்கள் துக்கத்தை வெளிப்படுத்த யாரும் இல்லாமல் தவித்தோம்,

அப்போதுதான் எங்களுக்கு சில ஆதரவை வழங்குமாறு இலங்கை குதிரை சங்கத்திடம் உதவி கோரினோம்.

சுற்றுலாப் பயணிகள் மீண்டும் வந்து எங்கள் பொருளாதாரம் வலுவடையும் வரை அவர்கள் எங்களுக்கு அளித்த உதவிகளுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

அரசாங்கத்தால் உதவிகள் கிடைக்காமைக்கு மிகவும் வருத்தம் அடைகிறோம்.

அரசாங்கத்திடமிருந்து ஏதேனும் உதவி கிடைத்தால், எங்களால் முடிந்த அதிகபட்ச ஆற்றலைப் பயன்படுத்தி சுற்றுலாவை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதாரத்தை வலுப்படுத்த பாடுபடுவோம்.

WhatsApp_Image_2025-12-05_at_12.29.22_PMWhatsApp_Image_2025-12-05_at_12.29.26_PM

WhatsApp_Image_2025-12-05_at_12.29.25_PM

WhatsApp_Image_2025-12-05_at_12.29.23_PM


பேரிடரால் பாதிக்கப்பட்ட குதிரைகளுக்கு மருத்துவ முகாம் | Virakesari.lk

புலிபாய்ந்த கல் சுற்றுலா ஒதுக்கிடத்தில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலரால் சட்டவிரோத செயற்பாடு

3 months 3 weeks ago
05 Dec, 2025 | 03:58 PM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் புலிபாய்ந்த கல் சுற்றுலா ஒதுக்கிடத்தில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலர் சட்டவிரோதமான முறையில் மீனவ வாடி அமைத்துள்ளதுடன், கடற்கரையில் சட்டவிரோதமாக படகுகளையும் நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலமைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளுக்கெதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரியதரப்பினரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய், புலிபாய்ஞ்ச கல்லில் சுற்றுலாத் தலத்திற்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் பெரும்பான்மையின மீனவர்கள் சிலர் அத்துமீறி சட்டவிரோதமான முறையில் வாடி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதுடன், சட்டவிரோதமான முறையில் கடற்கரையில் படகுகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ்வாறு சட்டவிரோதமாக வாடி அமைக்கப்பட்டுள்ளமை மற்றும் படகுகள் கடற்கரையில் சட்டவிரோதமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த இடத்திற்கு நேரடியாகச் சென்று நிலமைகளை ஆராய்ந்தார். இதன்போது புலிபாய்ஞ்சகல்லில் சுற்றுலாத் தலத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள கடற்கரையை அண்டிய காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக பெரும்பான்மையின மீனவர்கள் சிலரால் மறைவான வகையில் வாடி அமைக்கப்பட்டிருப்பது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் கண்டறியமுடிந்துள்ளது. அத்தோடு OFFRP-A-0742MLT, OFFRP-A-1000MLT, OFFRP-A-0974MLT ஆகிய முல்லைத்தீவு மாவட்டத்தின் பதிவிலக்கங்களைக்கொண்ட மூன்று படகுகளும், OFFRP-A-5017NBO, OFFRP-A-4478NBO ஆகிய நீர்கொழும்பு மாவட்டத்தின் பதிவிலக்கங்களையுடைய இரு படகுகளும், OFFRP-A-5491CHW, OFFRP-A-7209CHW ஆகிய சிலாபம் மாவட்டத்தின் பதிவிலக்கங்களைக் கொண்ட இருபடகுகளுமாக மொத்தம் ஏழு படகுகள் சட்டவிரோதமானவகையில் புலிபாஞ்சகல் கடற்கரையில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலரால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதையும் நாடாளுமன்ற உறுப்பினரால் இனங்காண முடிந்துள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் உடனடியாக குறித்த பகுதிக்குரிய கிராம அலுவலர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணிஉத்தியோகத்தர் உள்ளிட்டவர்களுக்கு இந்த விடயங்களைத் தெரியப்படுத்தியதையடுத்து, குறித்த பகுதிக்கு அவர்களும் உடனடியாக வருகைதந்திருந்தனர். இந்நிலையில் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியிருந்தார். அதற்கமைய இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கெதிராக தம்மால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென குறித்த பகுதிக்குரிய கிராம அலுவலர், கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர் ஆகியோரால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்திருந்தனர். அதன் பிற்பாடு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரிடமும் தெரியப்படுத்தப்பட்ட நிலையில் அவரும் இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். அதேவேளை முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் அவர்களையும் நேரடியாகச் சந்தித்து இந்த சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் தெரியப்படுத்தியதுடன், இந்த சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியிருந்தார். அந்தவகையில் குறித்த புலிபாஞ்சகல் பகுதியென்பது சுற்றுலாத் தலத்திற்கென ஒதுக்கப்பட்ட பகுதியெனவும், அங்கு இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்கமுடியாதெனவும் தெரிவித்த மாவட்ட செயலாளர், குறித்த சட்டவிரோத செயற்பாடுகளுக்கெதிராக உரியவகையில் சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்திருந்தார். மேலும் குறித்த புலிபாஞ்சகல் சுற்றுலா ஒதுக்கிடத்தில் இதற்கு முன்னரும் பலதடவைகள் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலர் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த நிலையில் அச்செயற்பாடுகள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது தலையீட்டை அடுத்து, உரிய சட்டநடவடிக்கைகளூடாகத் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன. இத்தகைய சூழலில் மீண்டும் குறித்த சுற்றுலாத்தலத்தில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலர் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. புலிபாய்ந்த கல் சுற்றுலா ஒதுக்கிடத்தில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலரால் சட்டவிரோத செயற்பாடு | Virakesari.lk

புலிபாய்ந்த கல் சுற்றுலா ஒதுக்கிடத்தில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலரால் சட்டவிரோத செயற்பாடு

3 months 3 weeks ago

05 Dec, 2025 | 03:58 PM

image

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் புலிபாய்ந்த கல் சுற்றுலா ஒதுக்கிடத்தில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலர் சட்டவிரோதமான முறையில் மீனவ வாடி அமைத்துள்ளதுடன், கடற்கரையில் சட்டவிரோதமாக படகுகளையும் நிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலமைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளுக்கெதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரியதரப்பினரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய், புலிபாய்ஞ்ச கல்லில் சுற்றுலாத் தலத்திற்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் பெரும்பான்மையின மீனவர்கள் சிலர் அத்துமீறி சட்டவிரோதமான முறையில் வாடி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதுடன், சட்டவிரோதமான முறையில் கடற்கரையில் படகுகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இவ்வாறு சட்டவிரோதமாக வாடி அமைக்கப்பட்டுள்ளமை மற்றும் படகுகள் கடற்கரையில் சட்டவிரோதமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த இடத்திற்கு நேரடியாகச் சென்று நிலமைகளை ஆராய்ந்தார்.

இதன்போது புலிபாய்ஞ்சகல்லில் சுற்றுலாத் தலத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள கடற்கரையை அண்டிய காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக பெரும்பான்மையின மீனவர்கள் சிலரால் மறைவான வகையில் வாடி அமைக்கப்பட்டிருப்பது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் கண்டறியமுடிந்துள்ளது.

அத்தோடு OFFRP-A-0742MLT, OFFRP-A-1000MLT, OFFRP-A-0974MLT ஆகிய முல்லைத்தீவு மாவட்டத்தின் பதிவிலக்கங்களைக்கொண்ட மூன்று படகுகளும், OFFRP-A-5017NBO, OFFRP-A-4478NBO ஆகிய நீர்கொழும்பு மாவட்டத்தின் பதிவிலக்கங்களையுடைய இரு படகுகளும், OFFRP-A-5491CHW, OFFRP-A-7209CHW ஆகிய சிலாபம் மாவட்டத்தின் பதிவிலக்கங்களைக் கொண்ட இருபடகுகளுமாக மொத்தம் ஏழு படகுகள் சட்டவிரோதமானவகையில் புலிபாஞ்சகல் கடற்கரையில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலரால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதையும் நாடாளுமன்ற உறுப்பினரால் இனங்காண முடிந்துள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் உடனடியாக குறித்த பகுதிக்குரிய கிராம அலுவலர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணிஉத்தியோகத்தர் உள்ளிட்டவர்களுக்கு இந்த விடயங்களைத் தெரியப்படுத்தியதையடுத்து, குறித்த பகுதிக்கு அவர்களும் உடனடியாக வருகைதந்திருந்தனர். இந்நிலையில் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியிருந்தார்.

அதற்கமைய இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கெதிராக தம்மால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென குறித்த பகுதிக்குரிய கிராம அலுவலர், கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர் ஆகியோரால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்திருந்தனர்.

அதன் பிற்பாடு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரிடமும் தெரியப்படுத்தப்பட்ட நிலையில் அவரும் இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் அவர்களையும் நேரடியாகச் சந்தித்து இந்த சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் தெரியப்படுத்தியதுடன், இந்த சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியிருந்தார்.

அந்தவகையில் குறித்த புலிபாஞ்சகல் பகுதியென்பது சுற்றுலாத் தலத்திற்கென ஒதுக்கப்பட்ட பகுதியெனவும், அங்கு இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்கமுடியாதெனவும் தெரிவித்த மாவட்ட செயலாளர், குறித்த சட்டவிரோத செயற்பாடுகளுக்கெதிராக உரியவகையில் சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்திருந்தார்.

மேலும் குறித்த புலிபாஞ்சகல் சுற்றுலா ஒதுக்கிடத்தில் இதற்கு முன்னரும் பலதடவைகள் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலர் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த நிலையில் அச்செயற்பாடுகள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது தலையீட்டை அடுத்து, உரிய சட்டநடவடிக்கைகளூடாகத் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன. இத்தகைய சூழலில் மீண்டும் குறித்த சுற்றுலாத்தலத்தில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலர் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1000762867__1_.jpg

1000762871.jpg

1000762867__1_.jpgபுலிபாய்ந்த கல் சுற்றுலா ஒதுக்கிடத்தில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலரால் சட்டவிரோத செயற்பாடு | Virakesari.lk

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட நிவாரணங்கள் அறிவிப்பு - ஜனாதிபதி

3 months 3 weeks ago
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட நிவாரணங்கள் அறிவிப்பு Dec 5, 2025 - 06:32 PM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார். இதன்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு, எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய மூன்று மாதங்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். அதன்படி, இரண்டுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 50,000 ரூபாவும் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் மாத்திரம் உள்ள குடும்பத்திற்கு 25,000 ரூபாவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோல், வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள், சேதமடைந்த தமது வீட்டு உபகரணங்களை மீண்டும் கொள்வனவு செய்வதற்காக ரூபா 50,000 வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். தற்போது நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தொடர்ந்தும் அங்கேயே தங்கியிருக்க விரும்பினால், அவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்படும் எனவும், மாறாக, முகாம்களிலிருந்து வெளியேறி வாடகை வீடுகளில் வசிக்க விரும்புவோருக்கு, 6 மாத காலத்திற்கு மாதாந்தம் 25,000 ரூபாய் வாடகைக் கொடுப்பனவாக வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், அனர்த்தத்தினால் நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பிற்கு 150,000 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmisvkj4v02f9o29nwa4khtn2

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட நிவாரணங்கள் அறிவிப்பு - ஜனாதிபதி

3 months 3 weeks ago

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட நிவாரணங்கள் அறிவிப்பு

Dec 5, 2025 - 06:32 PM

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட நிவாரணங்கள் அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார். 

இதன்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு, எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய மூன்று மாதங்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். 

அதன்படி, இரண்டுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 50,000 ரூபாவும் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் மாத்திரம் உள்ள குடும்பத்திற்கு 25,000 ரூபாவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

அதேபோல், வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள், சேதமடைந்த தமது வீட்டு உபகரணங்களை மீண்டும் கொள்வனவு செய்வதற்காக ரூபா 50,000 வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். 

தற்போது நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தொடர்ந்தும் அங்கேயே தங்கியிருக்க விரும்பினால், அவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்படும் எனவும், மாறாக, முகாம்களிலிருந்து வெளியேறி வாடகை வீடுகளில் வசிக்க விரும்புவோருக்கு, 6 மாத காலத்திற்கு மாதாந்தம் 25,000 ரூபாய் வாடகைக் கொடுப்பனவாக வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

மேலும், அனர்த்தத்தினால் நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பிற்கு 150,000 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmisvkj4v02f9o29nwa4khtn2

தையிட்டியில் பதற்றம்

3 months 3 weeks ago
புத்தரை வெள்ளமோ, சுனாமியோ அள்ளிக்கொண்டு போகும்வரை இந்தப்புத்தரால் தமிழருக்கு பதற்றந்தான். புத்தரை வைத்து கொழுத்தாடு பிடிக்கிறவர்களுக்கு, புத்தர் யார், அவரது போதனை, வாழ்வு முறை ஏதும் தெரியாது, அவரைவைத்து நாட்டை கொழுத்துவதும், காணி பிடிப்பதும், வயிறு வளப்பதுமே அவர்களது வேலை. பாராளுமன்றத்தை நாட்டை சுத்தம் செய்வதுபோல் மகாசங்கத்தையும் சுத்தம் செய்ய வேண்டும். அவர்களது வேலை என்ன, எங்கே அவர்கள் தங்கவேண்டும், ஒழுக்கம், கட்டுப்பாடு, அன்பு, காருண்யம் போன்றவற்றை படிப்பியுங்கள். வளர்க்க முடியாமல் விகாரைகளில் தள்ளிவிடப்படும் சிறுவர்களுக்கு விடுதிகளை ஏற்பாடு செய்து கல்வியை கொடுங்கள், ஒழுக்கத்தை கற்பியுங்கள், புத்தரின் போதனைகளை எடுத்துக்கூறுங்கள். தேர்ச்சி பெற்றவர்களை மட்டும் பரீட்சித்து பிக்குகளாக அங்கீகரியுங்கள். சிறுவயதிலேயே என்னவென்று தெரியாத பிள்ளைகளுக்கு காவி தரித்து உலகை ஏமாற்றுவதை, நாட்டை கொழுத்துவதை நிறுத்துங்கள், அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதையும் சட்ட விலக்களிப்பதையும் நிராகரியுங்கள். இவற்றுக்கு பணிந்து சேவை செய்பவர்களை மட்டும் பிக்குகளாக அங்கீகரியுங்கள். பணிய மறுப்போரை வீட்டுக்கு அனுப்புங்கள். ஓசியில் சாப்பிட்டு திமிர் வளர்ப்பதை தடுத்து, உழைத்து சாப்பிட சொல்லுங்கள். இல்லையேல் புத்தமதம் ஒரு கேலிக்கூத்தாக மாற்றி விட்டார்கள் இந்த சோம்பேறிகள். இப்படியே சென்றால், புத்தமதம் இலங்கையை விட்டு துடைத்தெறியப்படும். அதற்கு இந்த ஒழுக்கமற்ற பிக்குகளும் அவர்களை வளர்ப்பவர்களும் அவர்களுக்குப்பின்னால் ஒளிந்திருப்பவர்களுமே காரணம். இவர்கள்புத்தன்மேல், மதத்தின் மேல்பயமோ, பற்றோ, பக்தியோ இல்லாதவர்கள். மதத்தை தமது சுய லாபத்திற்காக பயன்படுத்துகிறார்கள். புத்த தர்மம், புனிதம் தெரியாதவர்களே இலங்கையில் பௌத்தர் என்று தம்மை அடையாளப்படுத்துகின்றனர். பௌத்த போதனை அன்பையும் கருணையையும் போதிக்கிறது. ஓடும் குருதியிலும் வடிந்தொழுகும் கண்ணீரிலும் தேடிப்பார்த்தாலும் சாதி தெரிவதில்லை என்றான் புத்தன். இவர்கள் செய்வதை பார்த்தால், சொல்வதை கேட்க முடிந்தால் அந்த புத்தனே தற்கொலை செய்வான் அல்லது இவர்களை விட்டு ஓடி ஒளிந்து விடுவான். பக்கதர்கள் இல்லாத இடத்தில் ஏக்கர் காணி வேண்டுமாம் புத்தருக்கு. இது ஒரு வேடிக்கை. எந்த மதமும் செய்யாத, விரும்பாத அருவெறுக்கும் செயல். மக்களை துரத்தியடித்துவிட்டு புத்தருக்கு காணி பிடிக்கும் பிக்குகள். இதுக்கு சாதாரண மனிதரை விட, மரியாதை அதிகம் வேண்டுமாம். இல்லையென்றால் சண்டித்தனம் காட்டி, எதிலும் மரியாதை, முன்னுரிமை கேட்குதுகள், இப்படி ஒரு மத குருமாரை கேள்விப்படவே முடியாது.

இருமலின் போது வரும் சளியை விழுங்கினால் ஆபத்தா?

3 months 3 weeks ago
இருமலின் போது வரும் சளியை விழுங்கினால் ஆபத்தா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் அலெக்ஸ் டெய்லர் பிபிசி செய்தியாளர் 5 டிசம்பர் 2025, 01:18 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் குளிர்கால வைரஸ்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த நேரத்தில், இருமலின் சத்தம் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து என எங்கும் நிறைந்திருக்கும். பெரும்பாலும் மக்கள் நிவாரணம் பெற இருமல் மருந்துகளை நாடுகிறார்கள். ஆனால் இவை உண்மையில் வேலை செய்யுமா, அல்லது தேன் மற்றும் எலுமிச்சை போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட கைவைத்தியங்கள் அதே அளவு பயனுள்ளவையா? மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் சுவாச மருத்துவப் பேராசிரியர் ஜாக்கி ஸ்மித், ரேடியோ 4-இன் 'ஸ்லைஸ்டு பிரெட்' நிகழ்ச்சியில் இதைப்பற்றி விரிவாகப் பேசினார். பட மூலாதாரம்,Getty Images எந்த மருந்து? பெரும்பாலான இருமல் சளியிலிருந்து (ஜலதோஷத்திலிருந்து) வருகிறது. மேலும் சளி வைரஸ்கள் பொதுவாகத் தானாகவே உங்கள் உடலை விட்டு வெளியேற வேண்டும். இருமல் மருந்துகள் அடிப்படை வைரஸுக்குச் சிகிச்சை அளிக்க முடியாது, ஆனால் அவை உங்கள் தொண்டைக்கு இதமளித்து, இருமலை வரவழைக்கும் அரிப்பு உணர்வுகளைக் குறைக்கலாம். இது வறட்டு இருமலாக இருந்தால், பால்சம்கள் அல்லது கிளிசரால் போன்ற மிகவும் இனிப்பான பாகு (சிரப்) அடிப்படையிலான மருந்துகளைத் தேர்ந்தெடுப்பது, உங்கள் தொண்டையை இதமளித்து வறண்டு போகாமல் பாதுகாக்க உதவும் என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார். ஆனால், மலிவான தயாரிப்புகளும் பெரிய பிராண்டுகளைப் போலவே பயனுள்ளதாக இருக்கும் என்பதால், இவற்றிற்காக அதிக பணம் செலவழிப்பது பயனற்றது என்றும் அவர் கூறுகிறார். இருப்பினும், லேபிளில் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரே விஷயம் சர்க்கரையின் அளவு தான்; இனிப்பான சிரப்புகளில் இது அதிகமாக இருப்பது வழக்கம். இது கவலையளித்தால், சர்க்கரை இல்லாத இருமல் மருந்துகள் ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். இருமலின் அனிச்சை தன்மையை கட்டுப்படுத்துவதாகக் கூறப்படும் டெக்ஸ்ட்ரோமெதோர்பான் (dextromethorphan) போன்ற சில "உள்ளீடுகள்" (active ingredients) இருமல் மருந்துகளில் அடிக்கடி விளம்பரப்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இதன் தாக்கம் மிகக் குறைவு என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார். மருந்தின் அளவைப் பின்பற்றுவது எப்போதும் முக்கியம் என்று அவர் மேலும் கூறுகிறார், குறிப்பாக டெக்ஸ்ட்ரோமெதோர்பான் அடிமையாக்கும் வாய்ப்புள்ளதால் இது மிகவும் முக்கியம். "லேபிளில் பரிந்துரைக்கப்பட்ட அளவை நீங்கள் நிச்சயமாக மீறக்கூடாது," என்று அவர் அறிவுறுத்துகிறார். மறுபுறம், மார்புச் சளிக்கான சில இருமல் மருந்துகளில் காணப்படும் ஒரு மூலப்பொருளான லெவோமெந்தோல் (Levomenthol), தொண்டையின் பின்னால் ஒரு "குளிரூட்டும் உணர்வை" வழங்குகிறது, இது எரிச்சல் உணர்வை மறைத்து அரிப்பைக் கட்டுப்படுத்துகிறது. தண்ணீரின் முக்கியத்துவம் பட மூலாதாரம்,Getty Images மார்புச் சளியாக இருந்தால், பலர் அதிகப்படியான சளியுடனும், இறுக்கமான நெஞ்சுடனும் போராடுவதாக உணரலாம். இது சுவாசப் பாதைகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற இரண்டாம் நிலை தொற்றுகள் அல்லது மூக்கு மற்றும் சைனஸ்களில் அதிகப்படியான சளி சேர்வதால் வரலாம். இதற்கு கடைகளில் கிடைக்கும் சிரப் மருந்துகளை நாடுவது இயல்பானது, ஆனால் அவற்றின் தாக்கம் குறித்து ஐயத்துடன் இருக்குமாறு பேராசிரியர் ஸ்மித் அறிவுறுத்துகிறார். உதாரணமாக, குவைஃபெனெசின் என்ற மூலப்பொருள் சளியை தளர்த்தும் என்று கூறப்பட்டாலும், இதற்குத் திட்டவட்டமான ஆதாரம் இல்லை. மேலும், டிஃபென்ஹைட்ரமைன் போன்ற மயக்கமூட்டும் ஆன்டிஹிஸ்டமின்கள் (ஒவ்வாமைகளை போக்கும் மருந்துகள்) இரவில் நீங்கள் தூங்க உதவலாம் என்றாலும், அவை இருமலுக்குச் சிகிச்சை அளிக்காது. அதேபோல், தைம் மற்றும் ஸ்குவில் போன்ற தாவரச் சாறுகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கு ஆதாரம் சொற்பமாகவே உள்ளது. அதற்குப் பதிலாக, மக்கள் "அது சரியாகும் வரை காத்திருக்க" வேண்டும், உடலில் நீர் இருக்கும் வகையில் தண்ணீர் குடிக்க வேண்டும் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு "இருமலைத் தடுக்கும்" மாத்திரைகளை (lozenges) எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே சிறந்த அணுகுமுறை என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார். தேன் மற்றும் எலுமிச்சை பயன்படுத்தலாமா? பட மூலாதாரம்,Getty Images தேவையான அளவு தேன் மற்றும் எலுமிச்சையுடன் கூடிய ஒரு சூடான, வீட்டில் தயாரிக்கப்பட்ட கலவையானது, வறட்டு இருமலுக்கு கடைகளில் கிடைக்கும் பல மருந்துகளுக்குச் சமமான இதமளிக்கும் விளைவைத் தரும். சுதந்திரமான ஆய்வான கோக்ரேன் ரிவியூ, ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குச் சளி மற்றும் இருமல் இருக்கும்போது, தேன் மற்றும் எலுமிச்சையைப் பயன்படுத்துவது "ஓரளவு பயன் அளிக்கலாம்" என்று பரிந்துரைத்ததாக பேராசிரியர் ஸ்மித் மேலும் கூறுகிறார். இருமல் வெளியேறட்டும் பட மூலாதாரம்,Getty Images இருமுவது அவசியம் என்பதையும் நினைவில் கொள்வது முக்கியம். நமது உடலில் இருந்து சளியை வெளியேற்றுவது அப்படித்தான் நடக்கிறது. இது சளி கலந்த இருமல் என்றால், அதிகப்படியான சளியை வெளியே துப்புவது சுவாசப் பாதைகளை எளிதாக்கும். "வெளியேற்றவேண்டியவற்றை நான் இருமி வெளியேற்றுவேன்," என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார். "நான் அதை அடக்க முயற்சிக்க மாட்டேன், வெளியே வரட்டும்." நீங்கள் இருமும்போது, கண்டிப்பாக ஒரு டிஸ்யுவை பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் அதை விழுங்கினாலும், எந்தத் தீங்கும் இல்லை. உங்கள் வயிறு அதை எளிதாகச் செரித்துவிடும். நீங்கள் இருமி வெளியேற்றும் சளி அடர் பழுப்பு நிறமாக இருந்தால் நீங்கள் கவலைப்பட வேண்டும், ஏனெனில் அதில் "சிறிதளவு ரத்தம் இருக்கலாம்". பெரும்பாலான மார்புச் சளிகள் பொதுவாகச் சில வாரங்களுக்குப் பிறகு ஆன்டிபயாடிக் மருந்துகள் இல்லாமலே சரியாகிவிடும், ஆனால் அது மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்தால், மருத்துவரை அணுகுமாறு பேராசிரியர் ஸ்மித் வலியுறுத்துகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyx3zv71zlo

இருமலின் போது வரும் சளியை விழுங்கினால் ஆபத்தா?

3 months 3 weeks ago

இருமலின் போது வரும் சளியை விழுங்கினால் ஆபத்தா?

இருமலின் போது வரும் சளியை விழுங்கினால் ஆபத்தா?

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • அலெக்ஸ் டெய்லர்

  • பிபிசி செய்தியாளர்

  • 5 டிசம்பர் 2025, 01:18 GMT

    புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

குளிர்கால வைரஸ்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த நேரத்தில், இருமலின் சத்தம் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து என எங்கும் நிறைந்திருக்கும்.

பெரும்பாலும் மக்கள் நிவாரணம் பெற இருமல் மருந்துகளை நாடுகிறார்கள். ஆனால் இவை உண்மையில் வேலை செய்யுமா, அல்லது தேன் மற்றும் எலுமிச்சை போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட கைவைத்தியங்கள் அதே அளவு பயனுள்ளவையா?

மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் சுவாச மருத்துவப் பேராசிரியர் ஜாக்கி ஸ்மித், ரேடியோ 4-இன் 'ஸ்லைஸ்டு பிரெட்' நிகழ்ச்சியில் இதைப்பற்றி விரிவாகப் பேசினார்.

இருமல் மருந்து

பட மூலாதாரம்,Getty Images

எந்த மருந்து?

பெரும்பாலான இருமல் சளியிலிருந்து (ஜலதோஷத்திலிருந்து) வருகிறது. மேலும் சளி வைரஸ்கள் பொதுவாகத் தானாகவே உங்கள் உடலை விட்டு வெளியேற வேண்டும். இருமல் மருந்துகள் அடிப்படை வைரஸுக்குச் சிகிச்சை அளிக்க முடியாது, ஆனால் அவை உங்கள் தொண்டைக்கு இதமளித்து, இருமலை வரவழைக்கும் அரிப்பு உணர்வுகளைக் குறைக்கலாம்.

இது வறட்டு இருமலாக இருந்தால், பால்சம்கள் அல்லது கிளிசரால் போன்ற மிகவும் இனிப்பான பாகு (சிரப்) அடிப்படையிலான மருந்துகளைத் தேர்ந்தெடுப்பது, உங்கள் தொண்டையை இதமளித்து வறண்டு போகாமல் பாதுகாக்க உதவும் என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார்.

ஆனால், மலிவான தயாரிப்புகளும் பெரிய பிராண்டுகளைப் போலவே பயனுள்ளதாக இருக்கும் என்பதால், இவற்றிற்காக அதிக பணம் செலவழிப்பது பயனற்றது என்றும் அவர் கூறுகிறார்.

இருப்பினும், லேபிளில் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரே விஷயம் சர்க்கரையின் அளவு தான்; இனிப்பான சிரப்புகளில் இது அதிகமாக இருப்பது வழக்கம். இது கவலையளித்தால், சர்க்கரை இல்லாத இருமல் மருந்துகள் ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம்.

இருமலின் அனிச்சை தன்மையை கட்டுப்படுத்துவதாகக் கூறப்படும் டெக்ஸ்ட்ரோமெதோர்பான் (dextromethorphan) போன்ற சில "உள்ளீடுகள்" (active ingredients) இருமல் மருந்துகளில் அடிக்கடி விளம்பரப்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இதன் தாக்கம் மிகக் குறைவு என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார்.

மருந்தின் அளவைப் பின்பற்றுவது எப்போதும் முக்கியம் என்று அவர் மேலும் கூறுகிறார், குறிப்பாக டெக்ஸ்ட்ரோமெதோர்பான் அடிமையாக்கும் வாய்ப்புள்ளதால் இது மிகவும் முக்கியம். "லேபிளில் பரிந்துரைக்கப்பட்ட அளவை நீங்கள் நிச்சயமாக மீறக்கூடாது," என்று அவர் அறிவுறுத்துகிறார்.

மறுபுறம், மார்புச் சளிக்கான சில இருமல் மருந்துகளில் காணப்படும் ஒரு மூலப்பொருளான லெவோமெந்தோல் (Levomenthol), தொண்டையின் பின்னால் ஒரு "குளிரூட்டும் உணர்வை" வழங்குகிறது, இது எரிச்சல் உணர்வை மறைத்து அரிப்பைக் கட்டுப்படுத்துகிறது.

தண்ணீரின் முக்கியத்துவம்

இருமல் மருந்து

பட மூலாதாரம்,Getty Images

மார்புச் சளியாக இருந்தால், பலர் அதிகப்படியான சளியுடனும், இறுக்கமான நெஞ்சுடனும் போராடுவதாக உணரலாம்.

இது சுவாசப் பாதைகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற இரண்டாம் நிலை தொற்றுகள் அல்லது மூக்கு மற்றும் சைனஸ்களில் அதிகப்படியான சளி சேர்வதால் வரலாம்.

இதற்கு கடைகளில் கிடைக்கும் சிரப் மருந்துகளை நாடுவது இயல்பானது, ஆனால் அவற்றின் தாக்கம் குறித்து ஐயத்துடன் இருக்குமாறு பேராசிரியர் ஸ்மித் அறிவுறுத்துகிறார்.

உதாரணமாக, குவைஃபெனெசின் என்ற மூலப்பொருள் சளியை தளர்த்தும் என்று கூறப்பட்டாலும், இதற்குத் திட்டவட்டமான ஆதாரம் இல்லை.

மேலும், டிஃபென்ஹைட்ரமைன் போன்ற மயக்கமூட்டும் ஆன்டிஹிஸ்டமின்கள் (ஒவ்வாமைகளை போக்கும் மருந்துகள்) இரவில் நீங்கள் தூங்க உதவலாம் என்றாலும், அவை இருமலுக்குச் சிகிச்சை அளிக்காது.

அதேபோல், தைம் மற்றும் ஸ்குவில் போன்ற தாவரச் சாறுகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கு ஆதாரம் சொற்பமாகவே உள்ளது.

அதற்குப் பதிலாக, மக்கள் "அது சரியாகும் வரை காத்திருக்க" வேண்டும், உடலில் நீர் இருக்கும் வகையில் தண்ணீர் குடிக்க வேண்டும் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு "இருமலைத் தடுக்கும்" மாத்திரைகளை (lozenges) எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே சிறந்த அணுகுமுறை என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார்.

தேன் மற்றும் எலுமிச்சை பயன்படுத்தலாமா?

இருமல் மருந்து

பட மூலாதாரம்,Getty Images

தேவையான அளவு தேன் மற்றும் எலுமிச்சையுடன் கூடிய ஒரு சூடான, வீட்டில் தயாரிக்கப்பட்ட கலவையானது, வறட்டு இருமலுக்கு கடைகளில் கிடைக்கும் பல மருந்துகளுக்குச் சமமான இதமளிக்கும் விளைவைத் தரும்.

சுதந்திரமான ஆய்வான கோக்ரேன் ரிவியூ, ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குச் சளி மற்றும் இருமல் இருக்கும்போது, தேன் மற்றும் எலுமிச்சையைப் பயன்படுத்துவது "ஓரளவு பயன் அளிக்கலாம்" என்று பரிந்துரைத்ததாக பேராசிரியர் ஸ்மித் மேலும் கூறுகிறார்.

இருமல் வெளியேறட்டும்

இருமல் மருந்து

பட மூலாதாரம்,Getty Images

இருமுவது அவசியம் என்பதையும் நினைவில் கொள்வது முக்கியம். நமது உடலில் இருந்து சளியை வெளியேற்றுவது அப்படித்தான் நடக்கிறது.

இது சளி கலந்த இருமல் என்றால், அதிகப்படியான சளியை வெளியே துப்புவது சுவாசப் பாதைகளை எளிதாக்கும்.

"வெளியேற்றவேண்டியவற்றை நான் இருமி வெளியேற்றுவேன்," என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார். "நான் அதை அடக்க முயற்சிக்க மாட்டேன், வெளியே வரட்டும்." நீங்கள் இருமும்போது, கண்டிப்பாக ஒரு டிஸ்யுவை பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆனால் நீங்கள் அதை விழுங்கினாலும், எந்தத் தீங்கும் இல்லை. உங்கள் வயிறு அதை எளிதாகச் செரித்துவிடும்.

நீங்கள் இருமி வெளியேற்றும் சளி அடர் பழுப்பு நிறமாக இருந்தால் நீங்கள் கவலைப்பட வேண்டும், ஏனெனில் அதில் "சிறிதளவு ரத்தம் இருக்கலாம்".

பெரும்பாலான மார்புச் சளிகள் பொதுவாகச் சில வாரங்களுக்குப் பிறகு ஆன்டிபயாடிக் மருந்துகள் இல்லாமலே சரியாகிவிடும், ஆனால் அது மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்தால், மருத்துவரை அணுகுமாறு பேராசிரியர் ஸ்மித் வலியுறுத்துகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/clyx3zv71zlo

4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண் சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு - தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்

3 months 3 weeks ago
Published By: Digital Desk 3 05 Dec, 2025 | 04:10 PM (எம்.மனோசித்ரா) நாடளாவிய ரீதியில் கடந்த ஒரு வார காலமாக பெய்த கடும் மழை காரணமாக மலைப்பாங்கான பிரதேசங்கள் ஈரப்பதனுடையதாகவுள்ளன. இன்று முதல் வடகீழ் பருவ பெயர்ச்சி மழை எதிர்பார்க்கப்படுவதால் அப்பிரதேசங்களில் மண் சரிவு அபாய எச்சரிக்கை நீங்கவில்லை. எனவே அவ்வாறான பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து பாதுகாப்பு முகாம்களில் இருப்பவர்கள் தற்போது தமது இருப்பிடங்களுக்கு திரும்ப வேண்டாம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் வசந்த சேனாதீர தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 44 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கண்டியில் கங்காவத்த கோரளை, தெல்தோட்டை, தொலுவ, தொம்பே, தும்பனை, மெததும்பர, மினிப்பே, பஹதஹேவாஹெட்ட, ஹட்டிநுவர, கங்கா இஹல கோரள, அக்குரணை, உடுநுவர, பன்வில, பஹதும்பர, குண்டசாலை, பஸ்பாகே கோரள, ஹதரலியத்த, உடுதும்பர, பூஜாபிட்டிய, ஹரிஸ்பத்துவ மற்றும் உடபலாத்த ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ, அரநாயக்க, கேகாலை, மாவனல்ல, ரம்புக்கனை, வரக்காபொல, யட்டியாந்தோட்டை மற்றும் புளத்கொஹூபிட்டிய ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. குருணாகல் மாவட்டத்தில் நாரம்மல, பொல்கஹாவெல, மாவத்தகம, ரிதீகம, மல்லவபிட்டிய மற்றும் அலவ்வ பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், மாத்தளையில் அம்பன்கங்க கோரளை, நாவுல, மாத்தளை, பல்லேபொல, உக்குவெல, லக்கல பல்லேகம, யட்டவத்த, ரத்தோட்டை மற்றும் வலிகமுவ பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இவை தவிர பதுளை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலுள்ள 29 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 26 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மூன்றாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது. அபாயகரமான நிலைமை இன்னும் நீங்கவில்லை. எனவே, வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, தற்போது தங்கியிருக்கும் பாதுகாப்பான இடங்களிலேயே தொடர்ந்து இருக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கின்றோம். பாறை விழுதல், நிலச்சரிவு மற்றும் அச்சுறுத்தும் நிலைமைகள் குறித்து தொடர்ந்து தகவல்கள் கிடைக்கின்றன. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ளதால், 50 மி.மீ அல்லது 100 மி.மீ மழையைத் தாண்டினால், ஏற்கனவே நிலச்சரிவுக்கான அறிகுறிகள் உள்ள இடங்களில் ஆபத்து மீண்டும் தீவிரமடைய அதிக வாய்ப்புள்ளது. எனவே, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், அந்தப் பகுதிகளில் ஆய்வு நிறைவடையும் வரை தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த ஆய்வுகள் மாவட்ட செயலாளர்களின் முன்னுரிமைப்படி நடைபெறுவதால், இதற்குச் சில நாட்கள் ஆகலாம். சுவர்களில் விரிசல் போன்ற சேதங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டால், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நிறுவனங்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்துவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/232530

4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண் சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு - தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்

3 months 3 weeks ago

Published By: Digital Desk 3

05 Dec, 2025 | 04:10 PM

image

(எம்.மனோசித்ரா)

நாடளாவிய ரீதியில் கடந்த ஒரு வார காலமாக பெய்த கடும் மழை காரணமாக மலைப்பாங்கான பிரதேசங்கள் ஈரப்பதனுடையதாகவுள்ளன. இன்று முதல் வடகீழ் பருவ பெயர்ச்சி மழை எதிர்பார்க்கப்படுவதால் அப்பிரதேசங்களில் மண் சரிவு அபாய எச்சரிக்கை நீங்கவில்லை. எனவே அவ்வாறான பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து பாதுகாப்பு முகாம்களில் இருப்பவர்கள் தற்போது தமது இருப்பிடங்களுக்கு திரும்ப வேண்டாம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் வசந்த சேனாதீர தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 44 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கண்டியில் கங்காவத்த கோரளை, தெல்தோட்டை, தொலுவ, தொம்பே, தும்பனை, மெததும்பர, மினிப்பே, பஹதஹேவாஹெட்ட, ஹட்டிநுவர, கங்கா இஹல கோரள, அக்குரணை, உடுநுவர, பன்வில, பஹதும்பர, குண்டசாலை, பஸ்பாகே கோரள, ஹதரலியத்த, உடுதும்பர, பூஜாபிட்டிய, ஹரிஸ்பத்துவ மற்றும் உடபலாத்த ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ, அரநாயக்க, கேகாலை, மாவனல்ல, ரம்புக்கனை, வரக்காபொல, யட்டியாந்தோட்டை மற்றும் புளத்கொஹூபிட்டிய ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

குருணாகல் மாவட்டத்தில் நாரம்மல, பொல்கஹாவெல, மாவத்தகம, ரிதீகம, மல்லவபிட்டிய மற்றும் அலவ்வ பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், மாத்தளையில் அம்பன்கங்க கோரளை, நாவுல, மாத்தளை, பல்லேபொல, உக்குவெல, லக்கல பல்லேகம, யட்டவத்த, ரத்தோட்டை மற்றும் வலிகமுவ பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர பதுளை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலுள்ள 29 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 26 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மூன்றாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது.

அபாயகரமான நிலைமை இன்னும் நீங்கவில்லை. எனவே, வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, தற்போது தங்கியிருக்கும் பாதுகாப்பான இடங்களிலேயே தொடர்ந்து இருக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கின்றோம். பாறை விழுதல், நிலச்சரிவு மற்றும் அச்சுறுத்தும் நிலைமைகள் குறித்து தொடர்ந்து தகவல்கள் கிடைக்கின்றன.

வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ளதால், 50 மி.மீ அல்லது 100 மி.மீ மழையைத் தாண்டினால், ஏற்கனவே நிலச்சரிவுக்கான அறிகுறிகள் உள்ள இடங்களில் ஆபத்து மீண்டும் தீவிரமடைய அதிக வாய்ப்புள்ளது. எனவே, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், அந்தப் பகுதிகளில் ஆய்வு நிறைவடையும் வரை தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த ஆய்வுகள் மாவட்ட செயலாளர்களின் முன்னுரிமைப்படி நடைபெறுவதால், இதற்குச் சில நாட்கள் ஆகலாம்.

சுவர்களில் விரிசல் போன்ற சேதங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டால், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நிறுவனங்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்துவார்கள் என்றார்.

https://www.virakesari.lk/article/232530

'சிங்கத்தை தழுவ கனவு' - தடுப்புகளை தாண்டி குதித்த இளைஞருக்கு என்ன நேர்ந்தது?

3 months 3 weeks ago
'சிங்கத்தை தழுவ கனவு' - தடுப்புகளை தாண்டி குதித்த இளைஞருக்கு என்ன நேர்ந்தது? பட மூலாதாரம்,Cortesía/Parque Zoobotânico Arruda Câmara/AFP கட்டுரை தகவல் ஜாஷுவா செய்சஸ் பிபிசி நியூஸ் பிரேசில் 6 மணி நேரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை: உள்ளடக்கம் சங்கடத்தை ஏற்படுத்தலாம் பிரேசிலில் சிங்கங்கள் அடைத்து வைக்கப்படும் இடத்திற்குள் நுழைந்த 19 வயதான கெர்சன் டி மெலோ மச்சாடோ என்கிற இளைஞர் பெண் சிங்கம் ஒன்று தாக்கியதில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பிரேசிலின் ஜொவா பெசோவா நகரில் உள்ள அரூடா கமாரா தேசிய பூங்காவில் நடைபெற்றுள்ளது. பார்வையாளர்கள் பதிவு செய்த காணொளிகளில் அந்த இளைஞர் மரத்தின் உதவியுடன் ஏறி வேலிகளை மற்றும் தடுப்புகளைக் கடந்து குதித்து சிங்கம் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் செல்வதைப் பார்க்க முடிகிறது. சிறிது தூரத்தில் இருந்த சிங்கம் மெதுவாக அருகே வந்து அந்த இளைஞர் மரத்தில் இருந்து இறங்கி வருவதைப் பார்த்தது. இருவருமே ஒரு இடத்தில் நின்றனர். ஆனால் அந்த இளைஞர் சிங்கத்தின் அருகில் சென்றார் அப்போது தான் சிங்கம் அவரைத் தாக்கியது. மன நல சவால்கள் கொண்ட கெர்சனின் உடல் திங்கட்கிழமை அன்று அடக்கம் செய்யப்பட்டது. அதில் அவரின் குடும்பத்தினர் அவரை கவனித்துக் கொண்ட சமூக நல பணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் 9 ஆண்டுகளாக கெர்சனை பார்த்துக் கொண்ட வெரோனிகா ஆலிவெராவும் ஒருவர். அவரைப் பொருத்தவரை கெர்சனின் மரணம் என்பது அரசு, சமூகம் மற்றும் மன நலன் சவால்கள் கொண்ட இளைஞரை பாதுகாக்க தவறிய அமைப்பு ஆகிய அனைவரின் கூட்டுத் தோல்விதான். "அந்த வீடியோவில் காட்டப்படுவது மட்டுமல்ல அவன். அவன் உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தை. இந்த ஒட்டுமொத்த அமைப்பும் அவனை கைவிட்டுவிட்டது," எனத் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறும் அவர், அதிகாரிகளின் பதில் என்பது அந்த இளைஞருக்கு நடத்தை சிக்கல்கள் உள்ளது என்பதாகவே இருந்தது என்றார். "ஜொவா பெசோவாவில் உள்ள அனைத்து பாதுகாப்பு மையங்களிக்கும் அவர் சென்று வந்தார். இந்த ஒட்டுமொத்த சமயமும் ஒரு அறிக்கை பெற முயற்சித்தோம். ஆனால் ஜூலியானோ மொரெய்ராவில் உள்ள மன நல மருத்துவர் இவரிடம் எந்தச் சிக்கலும் இல்லை, இவரின் பிரச்னை எல்லாம் நடத்தை சார்ந்ததுதான் என்றார். அவருக்கான அறிக்கையை பெறவே முடியவில்லை," என அவரின் சட்டப்பூர்வ பிரதிநிதி தெரிவித்தார். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,மன நல சவால்கள் கொண்ட கெர்சனின் உடல் திங்கட்கிழமை அன்று அடக்கம் செய்யப்பட்டது. இளைஞர் பெற்றுவந்த சிகிச்சை கிளேசியஸ் கப்ரால் டோஸ் ரெய்ஸ் என்கிற மன நல மருத்துவர் 2023-ஆம் ஆண்டு வழங்கிய அறிக்கை ஒன்றை பிபிசி பிரேசில் ஆய்வு செய்தது. அதில் "பொருந்தாத நடத்தை", "மன நிலை மாற்றங்கள்", "நிலையற்றத்தன்மை", மற்றும் "உணரச்சி வேகத்தில் செயல்படும் தன்மை" இருப்பதாகவும் அதற்கு பல்முனை சிகிச்சைகளை பரிந்துரைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "அந்த அறிக்கையின்படி, குழந்தைப் பருவத்திலும் இளமைக் காலத்திலும் கெர்சன் மூன்று மன நல மருத்துவர்களைச் சந்தித்துள்ளார். அவை போக சமூக சேவைகள் துறை ஏற்பாடு செய்த தனியார் கலந்தாய்வுகளிலும் கலந்து கொண்டுள்ளார்," என அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த இளைஞர் தொடர்ந்து வெவ்வேறு சேவைக்கு பரிந்துரைக்கப்பட்டு வந்துள்ளார். கமின்ஹார் உளவியல் நல மையத்தின் இயக்குநரும் கெர்சனின் பொறுப்பாளாறுமான ஜனைனா டி'எமெரி அவர் சிறுவயது முதலே கண்காணிக்கப்பட்டு வந்ததாக தெரிவித்தார். டிசம்பர் 2024-இல் அந்த மையத்திற்கு வந்த கெர்சன் சிகிச்சை பெறுவதில் சிரமங்களை சந்தித்து வந்துள்ளார். கெர்சன் பல முறை அங்கு வந்து மீண்டும் காணாமல் போனதாகவும் ஜனைனா தெரிவித்தார். பட மூலாதாரம்,Vídeo/Reprodução படக்குறிப்பு,கெர்சனின் பொறுப்பாளாரான ஜனைனா டி'எமெரி அவர் சிறுவயது முதலே கண்காணிக்கப்பட்டு வந்ததாக தெரிவித்தார். கெர்சனின் மரணத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மேற்பார்வையிட பரைபா சட்ட அலுவலகம் விசாரணை ஒன்றை துவக்கியுள்ளது. அரூடா கமாரா பூங்காவில் "மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள், நிர்வாக நடைமுறைகள், தொழில்நுட்ப மதிப்பீடுகள் மற்றும் ஆய்வுகளைக்" குறிப்பிட்டு சுற்றுச்சூழல் செயலகம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதே வேளையில் பூங்கா நிர்வாகம் சிங்கத்தின் நிலை உட்பட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும். பட மூலாதாரம்,Arquivo Pessoal படக்குறிப்பு,9 ஆண்டுகளாக அவரைப் பார்த்துக் கொண்ட வெரோனிகா ஆலிவெரா சிங்கத்தை தழுவ கனவு கண்ட கெர்சன் கெர்சன் சிங்கத்தை தழுவுவதற்கு கனவு கண்டதாகக் கூறுகிறார் ஆலிவெரா. "சிறு வயது முதலே அவன் அதைப்பற்றி பேசி வந்துள்ளான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட ஆப்ரிக்கா சென்று சஃபாரி செல்ல ஜொவா பெசோவா விமான நிலையத்தில் உள்ள விமானம் ஒன்றின் லெனடிங் கியரில் ஏற முயற்சித்துள்ளான்." என்றார். சிங்கத்தை நெருங்குவதால் ஏற்படும் ஆபத்தை அவன் உணர்ந்து இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். "நீங்கள் அந்த வீடியோவை கவனமாகப் பார்த்தால் அவன் சிங்கத்தை நெருக்கி செல்வதைப் பார்க்க முடியும். எந்த பிரச்னையும் ஏற்படாது என அவன் நினைத்துள்ளான். சிங்கத்துடன் விளையாடுவதற்காக கீழே இறங்கி சென்றுள்ளான்," என்றார். கெர்சனுக்கு 10 வயது இருக்கிறபோது சிறுவர் தடுப்பு மையத்திற்கு முதல் முறையாக வந்துள்ளார். நெடுஞ்சாலையில் சுற்றித் திரிந்தவரை காவல்துறையினர் அவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பட மூலாதாரம்,Parque Zoobotânico Arruda Câmara/AFP படக்குறிப்பு,சிங்கம் தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. "நாங்கள் சென்று பார்த்தபோது அது அவனின் பாட்டி வீடாக இருந்தது. அவரின் தாய் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். அவரின் தாய், பாட்டி இருவருக்கும் மனச் சிதைவு நோய் இருந்தது. இருவரும் அவனைப் பார்த்து, 'கண்ணா, நீ இங்கே இருக்க முடியாது' என்றனர். அதற்கு அவன், 'இல்லை, நான் உங்களுடன் இருக்க வேண்டும்' எனக் கூறினான் " என்கிறார் ஆலிவெரா. மனச் சிதைவு நோய் கொண்ட அத்தாய் 5 குழந்தைகளின் பாராமரிப்பையும் இழந்தார். அவர்களின் 4 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டனர். கெர்சன் பராமரிப்பு மையங்களில் வளர்ந்து வந்துள்ளார். "நாங்கள் அவனுடன் பேசினோம். அவன் காப்பக்கத்தில் இருக்க விருப்பமில்லை எனத் தெரிவித்தான். அவனுடைய எண்ணத்தில் தாயுடன் இருப்பது தான் சரியாக இருக்கும் என இருந்தது. அவன் தாயுடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளான். ஆனால் அவர் சரியான நிலையில் இருந்ததில்லை, இப்போதும் இல்லை," என்றார் ஆலிவெரா. 'கொள்ளையில் ஈடுபட ஆர்வம்' கெர்சனுக்கு விலங்குகளுடன் வலுவான பிணைப்பு இருந்ததாகக் கூறுகிறார் ஆலிவெரா. ''குதிரைகளைத் திருடி அதன் மீது சிறுது தூரம் சவாரி சென்று திரும்பியுள்ளான்.காலப்போக்கில் சிறு கொள்ளைகளில் ஈடுபடும் ஆர்வம் அவனிடம் உருவானது. ஆனால் இது திட்டமிடப்பட்டோ அல்லது தீங்கு விளைவிக்கும் நோக்கிலோ இருக்காது. வாகங்களை திருடக் கற்றுக் கொண்ட கெர்சன், அவற்றை காவல் நிலையங்களில் ஒப்படைத்தும் விடுவான்.'' சமூக ஊடகங்களில் அவருக்கு "வாகுவெரின்ஹோ" (சிறிய கவ்பாய்) என்கிற பெயர் இருந்ததாகக் கூறும் ஆலிவெரா, "மக்கள் அவனைப் பற்றி பதிவிட்டு லைக்ஸ் பெற ஆரம்பித்தனர். அவனைக் கெட்ட விஷயங்கள் செய்யத் தூண்டினார். இது மிகவும் சோகமானது. பலரும் அவனின் புகைப்படத்தைப் பயன்படுத்துவதால் அவனுடைய தகவல்களை சமூக ஊடகங்களிலிருந்து நீக்க பலமுறை புகார் அளித்துள்ளோம்," என்றார். ''சமூக மற்றும் கல்வி அமைப்பில் அவன் பாதுகாப்பாக உணர்ந்தான், அவனுக்கு உணவு கிடைத்தது, யாரும் அவனை தொல்லை செய்யவில்லை. அங்கிருந்து சென்ற பிறகு அவன் திரும்பவில்லை''. என்றார் ஆலிவெரா முதிர்வயதை அடைந்த பிறகு பாராமரிப்பு பெறும் உரிமையை இழந்தார். "சிறைக்குச் செல்வதற்கான வழியை கண்டுபிடிக்கப் போவதாக அவன் கூறினான்" என நினைவு கூறும் ஆலிவேரா. "அங்கு அவனுக்கு உணவு மற்றும் பாதுகாப்பு கிடைக்கும்." எனத் தெரிவித்தார். காவல் நிலையம் அருகே உள்ள ஏடிஎம்-ஐ திறக்க முயற்சிப்பது ரோந்து வாகனத்தின் மீது கல்லைத் தூக்கி எறிவது என ஏற்கெனவே ஆறு முறை சிறைக்குச் சென்றுள்ளார் கெர்சன். விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 25-ஆம் தேதி கார்டியன்ஷிப் கவுன்சிலுக்கு சென்று ஆவணங்கள் மற்றும் வேலை உரிமம் பெற கெர்சன் முயற்சித்துள்ளதாகாகக் கூறும் ஆலிவெரா, அவர்கள் அவனுக்கு உதவவில்லை என்றும் தெரிவித்தார். அவரின் இறுதிச் சடங்கில் பேசிய பாதிரியார் ஒருவர், "அவன் சிங்கத்தின் கூண்டிற்குள் சென்றான். சமூகம் அவனை அதற்குள் தூக்கி எறிந்தது." எனத் தெரிவித்தார். விசாரணை மற்றும் அதிகாரப்பூர்வ நடைமுறைகள் முடிகின்ற வரையில் அரூடா கமாரா பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மூடப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm28mz4g53po

'சிங்கத்தை தழுவ கனவு' - தடுப்புகளை தாண்டி குதித்த இளைஞருக்கு என்ன நேர்ந்தது?

3 months 3 weeks ago

'சிங்கத்தை தழுவ கனவு' - தடுப்புகளை தாண்டி குதித்த இளைஞருக்கு என்ன நேர்ந்தது?

சிங்கம், இளைஞர், மன நல சிகிச்சை, பிரேசில்

பட மூலாதாரம்,Cortesía/Parque Zoobotânico Arruda Câmara/AFP

கட்டுரை தகவல்

  • ஜாஷுவா செய்சஸ்

  • பிபிசி நியூஸ் பிரேசில்

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

எச்சரிக்கை: உள்ளடக்கம் சங்கடத்தை ஏற்படுத்தலாம்

பிரேசிலில் சிங்கங்கள் அடைத்து வைக்கப்படும் இடத்திற்குள் நுழைந்த 19 வயதான கெர்சன் டி மெலோ மச்சாடோ என்கிற இளைஞர் பெண் சிங்கம் ஒன்று தாக்கியதில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பிரேசிலின் ஜொவா பெசோவா நகரில் உள்ள அரூடா கமாரா தேசிய பூங்காவில் நடைபெற்றுள்ளது.

பார்வையாளர்கள் பதிவு செய்த காணொளிகளில் அந்த இளைஞர் மரத்தின் உதவியுடன் ஏறி வேலிகளை மற்றும் தடுப்புகளைக் கடந்து குதித்து சிங்கம் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் செல்வதைப் பார்க்க முடிகிறது.

சிறிது தூரத்தில் இருந்த சிங்கம் மெதுவாக அருகே வந்து அந்த இளைஞர் மரத்தில் இருந்து இறங்கி வருவதைப் பார்த்தது. இருவருமே ஒரு இடத்தில் நின்றனர். ஆனால் அந்த இளைஞர் சிங்கத்தின் அருகில் சென்றார் அப்போது தான் சிங்கம் அவரைத் தாக்கியது.

மன நல சவால்கள் கொண்ட கெர்சனின் உடல் திங்கட்கிழமை அன்று அடக்கம் செய்யப்பட்டது. அதில் அவரின் குடும்பத்தினர் அவரை கவனித்துக் கொண்ட சமூக நல பணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் 9 ஆண்டுகளாக கெர்சனை பார்த்துக் கொண்ட வெரோனிகா ஆலிவெராவும் ஒருவர்.

அவரைப் பொருத்தவரை கெர்சனின் மரணம் என்பது அரசு, சமூகம் மற்றும் மன நலன் சவால்கள் கொண்ட இளைஞரை பாதுகாக்க தவறிய அமைப்பு ஆகிய அனைவரின் கூட்டுத் தோல்விதான்.

"அந்த வீடியோவில் காட்டப்படுவது மட்டுமல்ல அவன். அவன் உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தை. இந்த ஒட்டுமொத்த அமைப்பும் அவனை கைவிட்டுவிட்டது," எனத் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறும் அவர், அதிகாரிகளின் பதில் என்பது அந்த இளைஞருக்கு நடத்தை சிக்கல்கள் உள்ளது என்பதாகவே இருந்தது என்றார்.

"ஜொவா பெசோவாவில் உள்ள அனைத்து பாதுகாப்பு மையங்களிக்கும் அவர் சென்று வந்தார். இந்த ஒட்டுமொத்த சமயமும் ஒரு அறிக்கை பெற முயற்சித்தோம். ஆனால் ஜூலியானோ மொரெய்ராவில் உள்ள மன நல மருத்துவர் இவரிடம் எந்தச் சிக்கலும் இல்லை, இவரின் பிரச்னை எல்லாம் நடத்தை சார்ந்ததுதான் என்றார். அவருக்கான அறிக்கையை பெறவே முடியவில்லை," என அவரின் சட்டப்பூர்வ பிரதிநிதி தெரிவித்தார்.

சிங்கம், இளைஞர், மன நல சிகிச்சை, பிரேசில்

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,மன நல சவால்கள் கொண்ட கெர்சனின் உடல் திங்கட்கிழமை அன்று அடக்கம் செய்யப்பட்டது.

இளைஞர் பெற்றுவந்த சிகிச்சை

கிளேசியஸ் கப்ரால் டோஸ் ரெய்ஸ் என்கிற மன நல மருத்துவர் 2023-ஆம் ஆண்டு வழங்கிய அறிக்கை ஒன்றை பிபிசி பிரேசில் ஆய்வு செய்தது. அதில் "பொருந்தாத நடத்தை", "மன நிலை மாற்றங்கள்", "நிலையற்றத்தன்மை", மற்றும் "உணரச்சி வேகத்தில் செயல்படும் தன்மை" இருப்பதாகவும் அதற்கு பல்முனை சிகிச்சைகளை பரிந்துரைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அந்த அறிக்கையின்படி, குழந்தைப் பருவத்திலும் இளமைக் காலத்திலும் கெர்சன் மூன்று மன நல மருத்துவர்களைச் சந்தித்துள்ளார். அவை போக சமூக சேவைகள் துறை ஏற்பாடு செய்த தனியார் கலந்தாய்வுகளிலும் கலந்து கொண்டுள்ளார்," என அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த இளைஞர் தொடர்ந்து வெவ்வேறு சேவைக்கு பரிந்துரைக்கப்பட்டு வந்துள்ளார்.

கமின்ஹார் உளவியல் நல மையத்தின் இயக்குநரும் கெர்சனின் பொறுப்பாளாறுமான ஜனைனா டி'எமெரி அவர் சிறுவயது முதலே கண்காணிக்கப்பட்டு வந்ததாக தெரிவித்தார். டிசம்பர் 2024-இல் அந்த மையத்திற்கு வந்த கெர்சன் சிகிச்சை பெறுவதில் சிரமங்களை சந்தித்து வந்துள்ளார். கெர்சன் பல முறை அங்கு வந்து மீண்டும் காணாமல் போனதாகவும் ஜனைனா தெரிவித்தார்.

சிங்கம், இளைஞர், மன நல சிகிச்சை, பிரேசில்

பட மூலாதாரம்,Vídeo/Reprodução

படக்குறிப்பு,கெர்சனின் பொறுப்பாளாரான ஜனைனா டி'எமெரி அவர் சிறுவயது முதலே கண்காணிக்கப்பட்டு வந்ததாக தெரிவித்தார்.

கெர்சனின் மரணத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மேற்பார்வையிட பரைபா சட்ட அலுவலகம் விசாரணை ஒன்றை துவக்கியுள்ளது. அரூடா கமாரா பூங்காவில் "மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள், நிர்வாக நடைமுறைகள், தொழில்நுட்ப மதிப்பீடுகள் மற்றும் ஆய்வுகளைக்" குறிப்பிட்டு சுற்றுச்சூழல் செயலகம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

அதே வேளையில் பூங்கா நிர்வாகம் சிங்கத்தின் நிலை உட்பட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும்.

சிங்கம், இளைஞர், மன நல சிகிச்சை, பிரேசில்

பட மூலாதாரம்,Arquivo Pessoal

படக்குறிப்பு,9 ஆண்டுகளாக அவரைப் பார்த்துக் கொண்ட வெரோனிகா ஆலிவெரா

சிங்கத்தை தழுவ கனவு கண்ட கெர்சன்

கெர்சன் சிங்கத்தை தழுவுவதற்கு கனவு கண்டதாகக் கூறுகிறார் ஆலிவெரா. "சிறு வயது முதலே அவன் அதைப்பற்றி பேசி வந்துள்ளான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட ஆப்ரிக்கா சென்று சஃபாரி செல்ல ஜொவா பெசோவா விமான நிலையத்தில் உள்ள விமானம் ஒன்றின் லெனடிங் கியரில் ஏற முயற்சித்துள்ளான்." என்றார்.

சிங்கத்தை நெருங்குவதால் ஏற்படும் ஆபத்தை அவன் உணர்ந்து இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

"நீங்கள் அந்த வீடியோவை கவனமாகப் பார்த்தால் அவன் சிங்கத்தை நெருக்கி செல்வதைப் பார்க்க முடியும். எந்த பிரச்னையும் ஏற்படாது என அவன் நினைத்துள்ளான். சிங்கத்துடன் விளையாடுவதற்காக கீழே இறங்கி சென்றுள்ளான்," என்றார்.

கெர்சனுக்கு 10 வயது இருக்கிறபோது சிறுவர் தடுப்பு மையத்திற்கு முதல் முறையாக வந்துள்ளார். நெடுஞ்சாலையில் சுற்றித் திரிந்தவரை காவல்துறையினர் அவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சிங்கம், இளைஞர், மன நல சிகிச்சை, பிரேசில்

பட மூலாதாரம்,Parque Zoobotânico Arruda Câmara/AFP

படக்குறிப்பு,சிங்கம் தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

"நாங்கள் சென்று பார்த்தபோது அது அவனின் பாட்டி வீடாக இருந்தது. அவரின் தாய் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். அவரின் தாய், பாட்டி இருவருக்கும் மனச் சிதைவு நோய் இருந்தது. இருவரும் அவனைப் பார்த்து, 'கண்ணா, நீ இங்கே இருக்க முடியாது' என்றனர். அதற்கு அவன், 'இல்லை, நான் உங்களுடன் இருக்க வேண்டும்' எனக் கூறினான் " என்கிறார் ஆலிவெரா.

மனச் சிதைவு நோய் கொண்ட அத்தாய் 5 குழந்தைகளின் பாராமரிப்பையும் இழந்தார். அவர்களின் 4 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டனர். கெர்சன் பராமரிப்பு மையங்களில் வளர்ந்து வந்துள்ளார்.

"நாங்கள் அவனுடன் பேசினோம். அவன் காப்பக்கத்தில் இருக்க விருப்பமில்லை எனத் தெரிவித்தான். அவனுடைய எண்ணத்தில் தாயுடன் இருப்பது தான் சரியாக இருக்கும் என இருந்தது. அவன் தாயுடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளான். ஆனால் அவர் சரியான நிலையில் இருந்ததில்லை, இப்போதும் இல்லை," என்றார் ஆலிவெரா.

'கொள்ளையில் ஈடுபட ஆர்வம்'

கெர்சனுக்கு விலங்குகளுடன் வலுவான பிணைப்பு இருந்ததாகக் கூறுகிறார் ஆலிவெரா.

''குதிரைகளைத் திருடி அதன் மீது சிறுது தூரம் சவாரி சென்று திரும்பியுள்ளான்.காலப்போக்கில் சிறு கொள்ளைகளில் ஈடுபடும் ஆர்வம் அவனிடம் உருவானது. ஆனால் இது திட்டமிடப்பட்டோ அல்லது தீங்கு விளைவிக்கும் நோக்கிலோ இருக்காது. வாகங்களை திருடக் கற்றுக் கொண்ட கெர்சன், அவற்றை காவல் நிலையங்களில் ஒப்படைத்தும் விடுவான்.''

சமூக ஊடகங்களில் அவருக்கு "வாகுவெரின்ஹோ" (சிறிய கவ்பாய்) என்கிற பெயர் இருந்ததாகக் கூறும் ஆலிவெரா, "மக்கள் அவனைப் பற்றி பதிவிட்டு லைக்ஸ் பெற ஆரம்பித்தனர். அவனைக் கெட்ட விஷயங்கள் செய்யத் தூண்டினார். இது மிகவும் சோகமானது. பலரும் அவனின் புகைப்படத்தைப் பயன்படுத்துவதால் அவனுடைய தகவல்களை சமூக ஊடகங்களிலிருந்து நீக்க பலமுறை புகார் அளித்துள்ளோம்," என்றார்.

''சமூக மற்றும் கல்வி அமைப்பில் அவன் பாதுகாப்பாக உணர்ந்தான், அவனுக்கு உணவு கிடைத்தது, யாரும் அவனை தொல்லை செய்யவில்லை. அங்கிருந்து சென்ற பிறகு அவன் திரும்பவில்லை''. என்றார் ஆலிவெரா

முதிர்வயதை அடைந்த பிறகு பாராமரிப்பு பெறும் உரிமையை இழந்தார்.

"சிறைக்குச் செல்வதற்கான வழியை கண்டுபிடிக்கப் போவதாக அவன் கூறினான்" என நினைவு கூறும் ஆலிவேரா. "அங்கு அவனுக்கு உணவு மற்றும் பாதுகாப்பு கிடைக்கும்." எனத் தெரிவித்தார்.

காவல் நிலையம் அருகே உள்ள ஏடிஎம்-ஐ திறக்க முயற்சிப்பது ரோந்து வாகனத்தின் மீது கல்லைத் தூக்கி எறிவது என ஏற்கெனவே ஆறு முறை சிறைக்குச் சென்றுள்ளார் கெர்சன். விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 25-ஆம் தேதி கார்டியன்ஷிப் கவுன்சிலுக்கு சென்று ஆவணங்கள் மற்றும் வேலை உரிமம் பெற கெர்சன் முயற்சித்துள்ளதாகாகக் கூறும் ஆலிவெரா, அவர்கள் அவனுக்கு உதவவில்லை என்றும் தெரிவித்தார்.

அவரின் இறுதிச் சடங்கில் பேசிய பாதிரியார் ஒருவர், "அவன் சிங்கத்தின் கூண்டிற்குள் சென்றான். சமூகம் அவனை அதற்குள் தூக்கி எறிந்தது." எனத் தெரிவித்தார்.

விசாரணை மற்றும் அதிகாரப்பூர்வ நடைமுறைகள் முடிகின்ற வரையில் அரூடா கமாரா பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மூடப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cm28mz4g53po

இலங்கை அருகே உருவானது "டித்வா" சூறாவளி!

3 months 3 weeks ago
வெள்ளத்துக்கு முன் – பின்: இலங்கை பாதிப்பை காட்டும் 5 செயற்கைக்கோள் படங்கள் பட மூலாதாரம்,Planet Labs PBC 5 டிசம்பர் 2025, 07:22 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் திட்வா புயல் காரணமாக கன மழையால் பாதிக்கப்பட்ட பல இடங்களில் தற்போதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளன. களனி ஆறு, மகாவலி ஆறு, தெதுறு ஓயா ஆறு, மல்வத்து ஓயா போன்ற ஆறுகளின் கரையோரப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கடுவளை, தந்திரி மலை போன்ற இடங்களும் தற்போது கடுமையான வெள்ளம் சூழ்ந்துள்ளது. திட்வா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. களனி ஆறு தெதுறு ஓயா ஆறு வெருகல் ஆறு மகாவலி ஆறு மல்வத்து ஓயா - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8e94de2wpro

வருடத்தின் அதிசிறந்த மெய்வல்லுநர்களுக்கான விருதுகளை மொண்டோ டுப்லான்டிஸ், சிட்னி மெக்லோலின் வென்றனர்

3 months 3 weeks ago
வருடத்தின் அதிசிறந்த மெய்வல்லுநர்களுக்கான விருதுகளை மொண்டோ டுப்லான்டிஸ், சிட்னி மெக்லோலின் வென்றனர் 02 Dec, 2025 | 03:11 PM (நெவில் அன்தனி) சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் உலக சம்பியன்களான மொண்டோ டுப்லான்டிஸ் மற்றும் சிட்னி மெக்லோலின் - லெவ்ரோன் ஆகிய இருவரும் இந்த வருடம் நிலைநாட்டிய சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் அவர்கள் இருவரையும் வருடத்தின் அதிசிறந்த மெய்வல்லுநர்களாக வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ் (உலக மெய்வல்லுநர் நிறுவனம்) தெரிவுசெய்து உயர் விருதுகளை வழங்கியது. மொனோக்கோவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற உலக மெய்வல்லுநர் விருது விhழவின்போது இந்த உயர் விருதுகளுடன் இன்னும் சில விருதுகள் வழங்கப்பட்டன. சுவடு, மைதானம், மற்றும் வெளிக்களம் ஆகிய மூன்று பிரிவுகளில் ஆண், பெண் இருபாலாரிலும் ஆறு பேர் வருடத்தின் சிறந்த மெய்வல்லுநர் விருதுளை வென்றெடுத்துள்ளனர். அவர்களில் கோலூன்றிப் பாய்தலில் தனது சொந்த உலக சாதனையை இந்த வருடம் நான்கு தடவைகள் புதுப்பித்த சுவீடனின் கோலூனறிப் பாய்தல் ஜாம்பவான் ஆர்மண்ட் (மொண்டோ) கஸ்டவ் டுப்லான்டிஸ் வருடத்தின் அதிசிறந்த ஆண் மெய்வல்லுநர் விருதை வென்றெடுத்தார். இந்த விருதை டுப்லான்டிஸ் மூன்றாவது தடவையாக வென்றெடுத்துள்ளமை விசேட அம்சமாகும். கடந்த ஐந்து வருடங்களாக சரவ்தேச அரங்கில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அசாத்திய திறமையை வெளிப்படுத்தி வரும் டுப்லான்டிஸ், 2014ஆம் ஆண்டு பிரான்ஸ் வீரர் ரெனோல்ட் லெவிலெனி நிலைநாட்டிய 6.16 மீற்றர் உலக சாதனையை போலந்தில் 2020 இல் நடைபெற்ற மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 6.17 மீற்றர் உயரம் தாவியதன் மூலம் முறியடித்து புதிய உலக சாதனை நிலைநாட்டி இருந்தார். அன்றிலிருந்து ஒவ்வொரு சென்றி மீற்றரால் தனது சொந்த உலக சாதனையை புதுப்பித்துவரும் டுப்லான்டிஸ், கடந்த செப்டெம்பர் மாதம் வரை 13 தடவைகள் தனது சொந்த சாதனையைப் புதுப்பித்துள்ளார். கடைசியாக ஜப்பான், டோக்கியோ தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 6.30 மீற்றர் உயரத்தைத் தாவி ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் உலக சாதனை நிலைநாட்டினார். வருடத்தின் அதிசிறந்த சிறந்த ஆண் மெய்வல்லுநர் விருதுடன் இந்த வருடம் ஆண்களுக்கான மைதான போட்டிகளில் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதையும் டுப்லான்டிஸ் வென்றெடுத்தார். பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் மீண்டும் உலக சம்பியனான ஐக்கிய அமெரிக்க வீராங்கனை சிட்னி மெக்லோலின் - லெவ்ரோன், வருடத்தின் அதிசிறந்த பெண் மெய்வல்லுநர் விருதை தனதாக்கிக்கொண்டார். ஜப்பானில் செப்டெம்பர் மாதம் நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியை 47.78 செக்கன்களில் நிறைவுசெய்து 42 வருடங்களாக நீடித்த போட்டி சாதனையை மெக்லோலின் - லெவ்ரோன் முறிடித்து தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார். அத்துடன் அப் போட்டியில் வட அமெரிக்க, மத்திய அமெரிக்க மற்றும் கரிபியன் மெய்வல்லுநர் சங்க சாதனையையும் மெக்லோலின் - லெவ்ரோன் முறியடித்தார். அதன் மூலம் உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் வரலாற்றில் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரண்டாவது அதிசிறந்த நேரப் பெறுதியை அவர் பதிவுசெய்தார். டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவி லும் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை சுவீகரித்த 26 வயதுடைய மெக்லோலின் - லெவ்ரோன் தற்போது 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அசத்தி வருகிறார். இயூஜினில் 2022இல் நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 400 மீற்றர் சட்டவேலி இறுதி ஓட்டப் போட்டியை 50.68 செக்கன்களில் நிறைவுசெய்து உலக சாதனை நிலைநாட்டியிருந்தார். இந்த சாதனை அந்த வருடத்துக்கான உலகின் அதிசிறந்த பெண் மெய்வல்லுநர் விருதை அவருக்கு வென்றுகொடுத்திருந்தது. அதன் பின்னர் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியிலிருந்து ஒதுங்கி வெறும் 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றிவரும் மெக்லோலின் - லெவ்ரோன் இந்த வருடம் டோக்கிய உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் வெற்றிபெற்றதன் மூலம் இரண்டாவது தடவையாய உலகின் அதிசிறந்த பெண் மெய்வல்லுநர் விருதை வென்றெடுத்தார். இந்த வருடம் பெண்களுக்கான சுவட்டு போட்டிகளில் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதையும் சிட்னி மெக்லோலின் - லெவ்ரோன் வென்றெடுத்தார். பெண்களுக்கான மைதான போட்டிகளில் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதை அவுஸ்திரேலியாவின் நிக்கோலா ஒலிஸ்லேஜர்ஸ் வென்றெடுத்தார். ஆண்களுக்கான சுவட்டு போட்டிகளில் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதை கென்ய வீரர் இம்மானுவேல் வனியொயன்யி வென்றெடுத்தார். வருடத்தின் அதிசிறந்த வெளிக்கள பெண் மெய்வல்லுநராக ஸ்பெய்ன் வீராங்கனை மரியா பெரெஸ் தெரிவானதுடன் ஆண் மெய்வல்லுநராக கென்ய வீரர் செபஸ்டியன் சோவ் தெரிவானார். பெண்களில் வளர்ந்துவரும் நட்சத்திர வீராங்கனை விருதை சீன வீராங்கனை ஸாங் ஜியேல் வென்றெடுத்தார். ஆண்களில் வளர்ந்துவரும் நட்சத்திர வீரர் விருதை கென்ய வீரர் எட்மண்ட் சேரம் வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/232249

வருடத்தின் அதிசிறந்த மெய்வல்லுநர்களுக்கான விருதுகளை மொண்டோ டுப்லான்டிஸ், சிட்னி மெக்லோலின் வென்றனர்

3 months 3 weeks ago

வருடத்தின் அதிசிறந்த மெய்வல்லுநர்களுக்கான விருதுகளை மொண்டோ டுப்லான்டிஸ், சிட்னி மெக்லோலின் வென்றனர்

02 Dec, 2025 | 03:11 PM

image

(நெவில் அன்தனி)

சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் உலக சம்பியன்களான மொண்டோ டுப்லான்டிஸ் மற்றும் சிட்னி மெக்லோலின் - லெவ்ரோன் ஆகிய இருவரும் இந்த வருடம் நிலைநாட்டிய சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் அவர்கள் இருவரையும் வருடத்தின் அதிசிறந்த மெய்வல்லுநர்களாக வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ் (உலக மெய்வல்லுநர் நிறுவனம்) தெரிவுசெய்து உயர் விருதுகளை வழங்கியது.

1222.PNG

மொனோக்கோவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற உலக மெய்வல்லுநர் விருது விhழவின்போது இந்த உயர் விருதுகளுடன் இன்னும் சில விருதுகள் வழங்கப்பட்டன.

சுவடு, மைதானம், மற்றும் வெளிக்களம் ஆகிய மூன்று பிரிவுகளில் ஆண், பெண் இருபாலாரிலும் ஆறு பேர் வருடத்தின் சிறந்த மெய்வல்லுநர் விருதுளை வென்றெடுத்துள்ளனர்.

அவர்களில் கோலூன்றிப் பாய்தலில் தனது சொந்த உலக சாதனையை இந்த வருடம் நான்கு தடவைகள் புதுப்பித்த சுவீடனின்  கோலூனறிப் பாய்தல் ஜாம்பவான் ஆர்மண்ட் (மொண்டோ) கஸ்டவ் டுப்லான்டிஸ் வருடத்தின் அதிசிறந்த ஆண் மெய்வல்லுநர் விருதை வென்றெடுத்தார்.

இந்த விருதை டுப்லான்டிஸ் மூன்றாவது தடவையாக வென்றெடுத்துள்ளமை விசேட அம்சமாகும்.

கடந்த ஐந்து வருடங்களாக சரவ்தேச அரங்கில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அசாத்திய திறமையை வெளிப்படுத்தி வரும் டுப்லான்டிஸ், 2014ஆம் ஆண்டு பிரான்ஸ் வீரர் ரெனோல்ட் லெவிலெனி நிலைநாட்டிய 6.16 மீற்றர் உலக சாதனையை போலந்தில் 2020 இல் நடைபெற்ற மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 6.17 மீற்றர் உயரம் தாவியதன் மூலம் முறியடித்து புதிய உலக சாதனை நிலைநாட்டி இருந்தார்.

அன்றிலிருந்து ஒவ்வொரு சென்றி மீற்றரால் தனது சொந்த உலக சாதனையை புதுப்பித்துவரும் டுப்லான்டிஸ், கடந்த செப்டெம்பர் மாதம் வரை 13 தடவைகள் தனது சொந்த சாதனையைப் புதுப்பித்துள்ளார்.

கடைசியாக ஜப்பான், டோக்கியோ தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 6.30 மீற்றர் உயரத்தைத் தாவி ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் உலக சாதனை நிலைநாட்டினார்.

வருடத்தின் அதிசிறந்த சிறந்த ஆண் மெய்வல்லுநர் விருதுடன் இந்த வருடம் ஆண்களுக்கான மைதான போட்டிகளில் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதையும் டுப்லான்டிஸ் வென்றெடுத்தார்.

duplantis_and_maclauglin_lavrone.jpg

பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் மீண்டும் உலக சம்பியனான ஐக்கிய அமெரிக்க வீராங்கனை சிட்னி மெக்லோலின் - லெவ்ரோன், வருடத்தின் அதிசிறந்த பெண் மெய்வல்லுநர் விருதை தனதாக்கிக்கொண்டார்.

ஜப்பானில் செப்டெம்பர் மாதம் நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியை 47.78 செக்கன்களில் நிறைவுசெய்து 42 வருடங்களாக நீடித்த போட்டி சாதனையை மெக்லோலின் - லெவ்ரோன் முறிடித்து தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.

அத்துடன் அப் போட்டியில் வட அமெரிக்க, மத்திய அமெரிக்க மற்றும் கரிபியன் மெய்வல்லுநர் சங்க சாதனையையும் மெக்லோலின் - லெவ்ரோன் முறியடித்தார்.

அதன் மூலம் உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் வரலாற்றில் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரண்டாவது அதிசிறந்த நேரப் பெறுதியை அவர் பதிவுசெய்தார்.

டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவி லும்   400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை சுவீகரித்த 26 வயதுடைய மெக்லோலின் - லெவ்ரோன் தற்போது 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அசத்தி வருகிறார்.

இயூஜினில் 2022இல் நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 400 மீற்றர் சட்டவேலி இறுதி ஓட்டப் போட்டியை 50.68 செக்கன்களில் நிறைவுசெய்து உலக சாதனை நிலைநாட்டியிருந்தார்.

இந்த சாதனை அந்த வருடத்துக்கான உலகின் அதிசிறந்த பெண் மெய்வல்லுநர் விருதை அவருக்கு வென்றுகொடுத்திருந்தது.

அதன் பின்னர் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியிலிருந்து ஒதுங்கி வெறும் 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றிவரும் மெக்லோலின் - லெவ்ரோன் இந்த வருடம் டோக்கிய உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் வெற்றிபெற்றதன் மூலம் இரண்டாவது தடவையாய உலகின் அதிசிறந்த பெண் மெய்வல்லுநர் விருதை வென்றெடுத்தார்.

இந்த வருடம் பெண்களுக்கான சுவட்டு போட்டிகளில் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதையும் சிட்னி மெக்லோலின் - லெவ்ரோன் வென்றெடுத்தார்.

nicola_olylagers.jpg

emmanuel.jpg

பெண்களுக்கான மைதான போட்டிகளில் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதை அவுஸ்திரேலியாவின் நிக்கோலா ஒலிஸ்லேஜர்ஸ் வென்றெடுத்தார்.

ஆண்களுக்கான சுவட்டு போட்டிகளில் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதை கென்ய வீரர் இம்மானுவேல் வனியொயன்யி வென்றெடுத்தார்.

maria_peres.jpg

sabastian_sawe.jpg

வருடத்தின் அதிசிறந்த வெளிக்கள பெண் மெய்வல்லுநராக ஸ்பெய்ன் வீராங்கனை மரியா பெரெஸ் தெரிவானதுடன் ஆண் மெய்வல்லுநராக கென்ய வீரர் செபஸ்டியன் சோவ் தெரிவானார்.

rising_stars_ed_serem_and_zang_giale.jpg

பெண்களில் வளர்ந்துவரும் நட்சத்திர வீராங்கனை விருதை சீன வீராங்கனை ஸாங் ஜியேல் வென்றெடுத்தார்.

ஆண்களில் வளர்ந்துவரும் நட்சத்திர வீரர் விருதை கென்ய வீரர் எட்மண்ட் சேரம் வென்றெடுத்தார்.

https://www.virakesari.lk/article/232249

இலங்கைக்கு உதவத் தயார்.. இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு

3 months 3 weeks ago
இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நாடு திரும்பினர்! Published By: Digital Desk 3 05 Dec, 2025 | 03:43 PM வெள்ளப் பேரிடரின் போது அவசர மீட்பு நடவடிக்கைக்காக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய தேசிய பேரிடர் மீட்புக் (NDRF) குழுவினர் தங்களது ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நிறைவுசெய்த நிலையில், இன்று இலங்கையை விட்டு புறப்பட்டனர். டித்வா புயலால் இலங்கையின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மனிதாபிமான நடவடிக்கையாக இந்தியா அரசு ‘சாகர் பந்து’ நடவடிக்கையின் கீழ் தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF)யை தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக உடனடியாக அனுப்பியது. டித்வா சூறாவளிக்குப் பின்னர் முதல் 24 மணிநேரத்திற்குள் பயிற்சி பெற்ற பேரிடர் மீட்புப் பணியாளர்கள் குழுவை அனுப்பிய முதல் நாடு இந்தியா. தங்களது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர்கள், இன்று வெள்ளிக்கிழமை (05) கொழும்பில் இருந்து புறப்பட்டனர். இலங்கை அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில், இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் பல மாவட்டங்களில் விரிவான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. 80 சிறப்பு பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் K9 நாய்கள் அடங்கிய குழு, நவம்பர் 29ஆம் திகதி இலங்கையை வந்தடைந்து உடனடியாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பதுளை, நீர்கொழும்பு கொச்சிக்கடை, புத்தளம், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய வெள்ளம் மற்றும் மண்சரிவு தாக்கம் ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். குறிப்பாக, நீரில் மூழ்கிய குடியிருப்புகளுக்குள் சென்று மக்களை மீட்டமை, வீடுகளில் சிக்கியிருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றியமை, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டமை, நிவாரண பொருட்களை விநியோகித்தமை, அவசர மருத்துவ உதவி வழங்கியமை போன்ற பல முக்கிய பணிகளை இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் முன்னெடுத்தன. இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழு சுமார் 150 பேரை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியது. உயிரிழந்தவர்களை மீட்டதோடு, சிக்கியிருந்த மிருகங்களையும் மீட்டது. நீர்மட்ட உயர்வு, அணுகுமுறை சேதம் மற்றும் ஆபத்தான நிலப்பரப்பு இருந்தபோதிலும், உதவி வேண்டிய ஒவ்வொரு அழைப்பிற்கும் பதிலளித்து செயற்பட்டது. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மிகவும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிறப்பு உதவிகளை வழங்கினர். இது அவர்களின் மனிதாபிமான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது. மண்சரிவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பதுளை மாவட்டத்தில், இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் 8–10 அடி ஆழம் வரை மண், பாறை, சேறு ஆகியவற்றை தாண்டி, மோசமான வானிலை மற்றும் இடிந்து விழும் அபாயம் உள்ள சரிவுகளின் நடுவே நீண்ட தூரம் நடந்து சென்றும் மீட்பு பணிகளை முன்னெடுத்தன. இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழு, நீர்கொழும்பு கொச்சிக்கடை மற்றும் வென்னப்புவ உள்ளிட்ட பகுதிகளில் 1,600க்கும் மேற்பட்ட உணவுப் பொதிகளை விநியோகித்தன. தொடர்பாடல் முறை பெருமளவில் செயலிழந்திருந்ததால், இது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர உதவியாக அமைந்தது. கம்பஹா மாவட்டத்தில் கழிவு நீரில் கலந்த 14 கிணறுகளை சுத்தம் செய்து, பாதிக்கப்பட்ட கிராமங்களில் தூய்மையான குடிநீரையும் இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழு வழங்க உதவினர். இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழு, வெள்ள மீட்பு, இடிந்து விழுந்த கட்டடங்கள், மண்சரிவு, சூறாவளி, இரசாயன அவசரநிலைகள் உள்ளிட்ட பலதரப்பட்ட பேரிடர் நடவடிக்கைகளில் சிறந்த நிபுணத்துவம் பெற்றது. நவீன உபகரணங்களும் பயிற்சி பெற்ற K9 நாய்களையும் கொண்ட இந்த அமைப்பு, இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பல நாடுகளில் பேரிடர் உதவியில் ஈடுபட்டுள்ளது. பூட்டான், மியான்மார், நேபாளம், துருக்கி, ஜப்பான் போன்ற நாடுகளில் இதற்கு முன்னர் உதவி செய்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இலங்கையில் இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழு மேற்கொண்ட பணிகள், இந்தியா – இலங்கை உறவின் ஆழமான மனிதாபிமான பிணைப்பையும் நீடித்த கூட்டுறவையும் வெளிப்படுத்துகின்றன. https://www.virakesari.lk/article/232526

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

3 months 3 weeks ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 57 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 57 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'ஐந்து தமிழ் மன்னர்களும் எதிர்க் கடற்கரையைச் சேர்ந்தவர்களா?' காக்கவண்ணனின் மகன் அபயாவைப் பற்றிய தீபவம்ச தகவல்களில், மகாநாம மகிழ்ச்சியடையாமல் இருந்திருக்கலாம்? இதனால், அவர் மகாவம்சத்தில் பல கூடுதல் விவரங்களை விரிவுபடுத்தி சேர்த்தார் மற்றும் புதியவைகளை கற்பனையில் கண்டுபிடித்து சேர்த்தார் என்று நம்புகிறேன். தீபவம்சத்தில் 18 - 53 முதல் 54 வரையிலான இரண்டு வசனங்களில் மட்டுமே அபயா அரியணை ஏறுவது பற்றி கூறப்பட்டு இருந்தது; இருப்பினும், மகாவம்சம் அதை நான்கு அத்தியாயங்களாக விரிவுபடுத்துகிறது, 22 முதல் 25 வரை, அபயாவின் பிறப்பு முதல் எல்லாளனை வென்றது வரை முந்நூற்று அறுபத்தைந்து வசனங்களைக் கொண்டுள்ளது. தீபவம்சம், 18-53, இளவரசர் அபயா [Abhaya] (துட்டகாமினி) காக்கவண்ணாவின் மகன் என்று கூறுகிறது, அதேசமயம் மகாவம்சம் அவரை கக்கனவண்ணனின் உயிரியல் மகன் அல்ல என்று விவரிக்கிறது. இன்னொரு முக்கியமான விடயம் என்னவெனில், தமிழ் சிப்பாய் ஒருவரின் தலையை வெட்டப் பயன்படுத்தப்பட்ட வாளில் இருந்த, இரத்தக் கறை படிந்த நீரைக் குடித்த விகாரமகாதேவியின் மகாவம்ச கதை, தீபவம்சத்தில் குறிப்பிடப்படவில்லை. அது மட்டும் அல்ல, தீபவம்சத்தில் இளவரசன் அபயாவின் தாயாகக் கூட விகாரமகாதேவி குறிப்பிடப்படவில்லை. துட்டகாமினி இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார். 18 -54 பார்க்கவும். அத்தியாயங்கள் 19 மற்றும் 20 ஆகிய இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவையாகவும் மற்றும் கலந்தும் இருக்கின்றன. எனவே, இரண்டையும் ஒன்றாகச் சுருக்கமாக இங்கு தருகிறேன். மன்னன் (துட்டகாமினி) விலையுயர்ந்த அரண்மனையை கட்டினான். மேலும் இந்தியாவிலிருந்து பதினான்கு தேரர்களை சம்பிரதாயமாக அடித்தளம் அமைப்பதற்காக அழைத்தான். அவர்களின் பெயர்கள் இந்தகுட்டா(1), தம்மசேனா(2), பியதாசி(3), புத்தர்(4), தம்மம்(5) சம்கா(6), மித்தனா(7), அனத்தனா(8), மகாதேவா(9), தம்மரக்கிதா(10), உத்தரா(11), சிட்டகுட்டா(12), இந்தகுட்டா(13), சூரியாகுட்டா(14) ஆகும். [Indagutta(1), Dhammasena(2), Piyadasi(3), Buddha(4), Dhamma(5) Samgha(6), Mittana(7), Anattana(8), Mahadeva(9), Dhammarakkhita(10), Uttara(11), Cittagutta(12), Indagutta(13), and Suriyagutta(14)] தீபவம்சம், 18-47, சேனா மற்றும் குட்டா [Sena and Gutta] ஆகியோர் தமிழ் இளவரசர்கள் என்று கூறப்பட்டுள்ளது. எனவே குட்டா என்பது தமிழ்ப் பெயர். பதினான்கு பிக்குகளில் நால்வரின் பெயர் ‘குட்டா’ என்று முடிகிறது. எனவே அவர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும்? அதுமட்டும் அல்ல, மகாதேவா என்பது தமிழர்களிடையே மிகவும் பொதுவான பெயர். சேனா என்பது தமிழ்ப் பெயர்களின் பொதுவான முன்னொட்டு; சேனாதிராஜா, ராஜசேனன், சேனாவரையர் [Senathirajah, Rajasenan, Senavaraiyar] போன்றவர்கள். எனவே தம்மசேனாவும் தமிழராக இருக்கலாம். பதினான்கில் ஆறு பேர் தமிழர்கள், இதைவிட அதிகமாகவோ அல்லது முழுமையாகக் கூட இருக்கலாம்? எல்லாளன் மற்றும் துட்டகாமினி ஆகிய இருவரும் பண்டைய இலங்கையின் நாட்டுப்புறக் கதைகளில் சிறந்த ஆட்சியாளர்களாக இருக்க வேண்டும்; எல்லாளன் ஒரு நியாயமான ஆட்சியாளராகவும், துட்டகாமினி ஒரு சிறந்த கட்டிடக்கலைஞராகவும் காணப்படுகிறார்கள். அவர்களுக்கிடையேயான சண்டையை மகாநாம தேரர் தனது தமிழர் விரோத உணர்வை முன்னெடுப்பதற்காக கண்டுபிடித்தார். தீபவம்சத்தின்படி துட்டகாமினியால் இந்திய எதிர்ப்பு அல்லது தமிழர் எதிர்ப்பு எதுவும் காட்டப்படவில்லை, ஆனால் மகாவம்சத்தின்படி சிறு வயதிலிருந்தே அவருக்கு அந்த உணர்வு இருந்தது. துட்டகாமினி மகாவிகாரையையும் கட்டினார். காக்கவண்ணாவின் மற்றொரு மகன் சத்தாதிஸ்ஸ [சத்தா திச்சன் / Saddhatissa], அபயாக்குப் (துட்டகாமினி) பிறகு பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரும் சில கட்டிடங்களை கட்டினார். சத்தாதிச்சனின் மகன் துலத்தன் [துலத்தன / Thulathana] ஒரு மாதம் பத்து நாட்கள் மட்டுமே ஆட்சி செய்தான். பின்னர் சத்தாதிச்சனின் மகன் லஜ்ஜிதிஸ்ஸ [லஞ்ச திச்சன் / Lajjitissa] மன்னன் ஒன்பது ஆண்டுகள் ஆறு மாதங்கள் ஆட்சி செய்தான். பின்னர் அவரது இளைய சகோதரர் கல்லாடநாகா [கல்லாட நாகன் / Khallatanaga] ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவர் தனது தளபதியால் கொல்லப்பட்டார். மேலும் தளபதி ஒரு நாள் மட்டுமே ஆட்சி செய்தார். கல்லாட நாகனின் தம்பியான வட்டகமணி [வலகம்பாகு அல்லது வட்டகாமினி அபயன் / Valagamba, also known as the Great Black Lion, Vattha gamani Abhaya and Valagam Abha], தளபதியைக் கொன்று ஐந்து மாதங்கள் ஆட்சி செய்தார். பின்னர் ஐந்து தமிழ் மன்னர்கள், அலவத்த [புலகத்த] சபியா (பாகிய), பனய, பழைய மற்றும் தட்டிக [புலகத்தன், பாகியன், பண்டியமாறன், பழையமாறன் மற்றும் தட்டிகன் / Alavatta (Pulahattha!), Sabhiya (Bahiya!), Panaya, Palaya, and Dathika] ஆகியோர் அதிகாரத்தைக் கைப்பற்றி பதினான்கு ஆண்டுகள் ஏழு மாதங்கள் வரை ஆட்சி செய்தனர் [19-15 :15. The five kings Ālavatta (Pulahattha!), and Sābhiya (Bāhiya!), Panaya, Palaya, and Dāṭhika reigned fourteen years and seven months.]; இதில், 20-15 முதல் 17 வரை பார்க்கவும். இந்த தமிழ் மன்னர்கள் ஒருவரையொருவர் கொன்றனர். பின்னர் முந்தைய அரசன் வட்டகமணி திரும்பி வந்து தமிழன் தட்டிகனைக் கொன்று பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். மேற்குறிப்பிட்ட ஐந்து தமிழர் அரசர்களின் தனித்தனி ஆட்சியின் நீளத்திற்கு 20-15ஐக் காண்க [15. (After that time) the Damila Pulahattha reigned three years, and the general Bāhiya two years.]. இந்த ஐந்து தமிழ் மன்னர்களும் சோழ நாட்டிலிருந்தோ அல்லது எதிர்க் கடற்கரையில் இருந்தோ வந்தவர்கள் என்று தீபவம்சம் கூறவில்லை. இந்த ஐந்து தமிழ் மன்னர்களைப் பற்றி மகாவம்சத்தில் மகாநாமாவின் கொடூரமான கட்டுக்கதை சுவாரஸ்யமானது. தீபவம்சத்தில் உள்ள ஐந்து தமிழர்கள் மகாவம்சத்தில் ஏழு தமிழர்களாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அத்துடன் இன்னொரு பிராமணனும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளான்; இதை, மகாவம்சத்தின் 33 - 37 முதல் 61 வரை பார்க்கவும். மகாவம்சம் மறைமுகமாக ஏழு தமிழர்களும் எதிர்க் கடற்கரையைச் சேர்ந்தவர்கள் என்று குறிக்கிறது 33 - 39. Part: 57 / Appendix – Dipavamsa / 'Were all five Tamil kings from the opposite coast?' Mahanama might not have been happy with this and he elaborated, added and invented many extra details in the Mahavamsa. Ascending to the throne by Abhaya is covered in only two verses, 18 – 53 to 54 in the Dipavamsa; however, the Mahavamsa elaborates it into four chapters, 22 to 25, consisting of three hundred and sixty five verses, from the birth of Abhaya to the victory over Elara. The Dipavamsa, 18-53, says that the prince Abhaya (Dutthagamani) was the son of Kakkavanna, whereas the Mahavamsa describe him as not the biological son of Kakkanavanna. Another important point is that the story of Viharamahadevi drinking the blood stained water dripping down the sword, as stated in the Mahavamsa, which was used to behead a Tamil soldier is not at all mentioned in the Dipavamsa. Viharamahadevi is not mentioned as the mother of the prince Abhaya in the Dipavamsa. Dutthagamani ruled for twenty four years, 18 -54. The Chapters 19 and 20: There are overlaps and mix ups between chapters 19 and 20. It is, therefore, decided to summarize both together. The king (Dutthagamani) built a costly palace, and invited fourteen Theras from India for the ceremonial laying of the foundation. Their names are Indagutta(1), Dhammasena(2), Piyadasi(3), Buddha(4), Dhamma(5) Samgha(6), Mittana(7), Anattana(8), Mahadeva(9), Dhammarakkhita(10), Uttara(11), Cittagutta(12), Indagutta(13), and Suriyagutta(14). It was stated in the Dipavamsa, 18-47, that Sena and Gutta were Damila princes. Therefore Gutta is a Tamil name. The four among the fourteen Bikkhus are ending with ‘gutta’. They must, therefore, be Tamils. Mahadeva is a very common name among Tamils. Sena is also a common prefix of Tamil names; Senathirajah, Rajasenan, Senavaraiyar etc. Therefore Dhammasena could also be a Tamil. Six out of fourteen are Tamils, could be more or all. Both, Elara and Dutthagamani, must be great rulers in the folklores of ancient Ceylon; Elara as a just ruler and Dutthagamani as a great builder. Mahanama invented the fight between them to advance his anti-Tamil sentiment. No anti Indian or anti Tamil sentiment is shown by Dutthagamani as per the Dipavamsa, but he did have that sentiment from the very young age as per the Mahavamsa. He constructed the Mahavihara too. Saddhatissa, another son of Kakkavanna, ruled after Abhaya (Dutthagamani) for eighteen years. He too constructed some buildings. Thulathana, son of Saddhatissa, ruled only for one month and ten days. Then king Lajjitissa, son of Saddhatissa, ruled for nine years and six months. Then his younger brother, Khallatanaga ruled for six years. He was murdered by his commander in chief, and the commander in chief ruled for one day. Vattagamani, the younger brother of Khallatanaga, killed the commander in chief and ruled for five months. Then five Damila kings, Alavatta (Pulahattha!), Sabhiya (Bahiya!), Panaya, Palaya, and Dathika captured the power and ruled for fourteen years and seven months, 19-15; see also 20-15 to 17. These Damila kings killed each other, one after the other. Then the previous king Vattagamani came back and put the Damila Dathika to death and ruled for twelve years. See 20-15 for the length of the individual reigns of the above five Damila kings. The Dipavamsa does not say that these five Damila kings came from Soli country or from the opposite coast. It is interesting to note the cruel play of Mahanama in the Mahavamsa about these five Damila kings. The five Damilas in the Dipavamsa is expanded to seven Damilas in the Mahavamsa. Another Brahmin is also invented; see 33 – 37 to 61 of the Mahavamsa. The Mahavamsa indirectly indicate that the seven Damilas are from opposite coast, 33 - 39. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 58 தொடரும் / Will follow துளி/DROP: 1928 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 57] https://www.facebook.com/groups/978753388866632/posts/32682586788056546/?