Aggregator
யாழ். மாநகர சபையின் பாதீடு வெற்றி
யாழ். மாநகர சபையின் பாதீடு வெற்றி
adminDecember 5, 2025

யாழ்ப்பாண மாநகர சபையின் பாதீடு 2 வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசாவினால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சபையில் சமர்பிக்கப்பட்டது.
குறித்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 23 வாக்குகளும், எதிராக 21 வாக்குகளும் அளிக்கப்பட்டது.
குறிப்பாக தேசிய மக்கள் சக்தி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர்.
பாதீட்டுக்கு ஆதரவாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட சில கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர்.https://globaltamilnews.net/2025/223649/
இலங்கையில் இயற்கை பேரழிவை மீறிய போதை பொருள் கடத்தலும் வியாபாரமும்!
இலங்கையில் இயற்கை பேரழிவை மீறிய போதை பொருள் கடத்தலும் வியாபாரமும்!
இலங்கையில் இயற்கை பேரழிவை மீறிய போதை பொருள் கடத்தலும் வியாபாரமும்!
adminDecember 6, 2025

கற்பிட்டி கடற்பரப்பில் நேற்று (05.12.25) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பெருமளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட்ட போதே, 03 உர மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, 63 கிலோ 718 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மற்றும் 14 கிலோ 802 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட போதைப்பொருள் தொகை மேலதிக விசாரணைகளுக்காக காவவற்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த படகின் உரிமையாளர் கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை காவற்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் முன்னெடுத்து வருகிறது.
"உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
கருத்து படங்கள்
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.
இதன்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு, எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய மூன்று மாதங்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
அதன்படி, இரண்டுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 50,000 ரூபாவும் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் மாத்திரம் உள்ள குடும்பத்திற்கு 25,000 ரூபாவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல், வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள், சேதமடைந்த தமது வீட்டு உபகரணங்களை மீண்டும் கொள்வனவு செய்வதற்காக ரூபா 50,000 வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
தற்போது நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தொடர்ந்தும் அங்கேயே தங்கியிருக்க விரும்பினால், அவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்படும் எனவும், மாறாக, முகாம்களிலிருந்து வெளியேறி வாடகை வீடுகளில் வசிக்க விரும்புவோருக்கு, 6 மாத காலத்திற்கு மாதாந்தம் 25,000 ரூபாய் வாடகைக் கொடுப்பனவாக வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், அனர்த்தத்தினால் நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பிற்கு 150,000 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
பிரித்தானியாவை விட்டு செல்லும் வெளிநாட்டினர்: முதலிடத்தில் இந்தியர்கள்; 2ம் இடத்தில் சீனர்கள்!
பிரித்தானியாவை விட்டு செல்லும் வெளிநாட்டினர்: முதலிடத்தில் இந்தியர்கள்; 2ம் இடத்தில் சீனர்கள்!

பிரித்தானியாவை விட்டு செல்லும் வெளிநாட்டினர்: முதலிடத்தில் இந்தியர்கள்; 2ம் இடத்தில் சீனர்கள்!
பிரித்தானியாவில் தங்கியிருந்த வெளிநாட்டினர், வரலாறு காணாத வகையில் வெளியேறி வருகின்றனர். அதில், இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர்.
வேலைக்காகவும், கல்விக்காகவும் வெளிநாட்டினர் அதிகம் செல்லும் நாடுகளில் பிரித்தானியா முன்னணியில் உள்ளது. அதுவே அந்நாட்டிற்கு பிரச்னையாகவும் மாறியுள்ளது.
39 சதவீதம் வெளிநாட்டினர் எண்ணிக்கை அதிகரித்ததால், உள்ளூர் மக்கள் சிரமப்படுவதாக பிரித்தானிய அரசு கூறியது.
இதனால், முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் அரசு கடுமையான விசா விதிகளை அறிமுகப்படுத்தியது. இதனால், பிரித்தானியாவின் நிகரக் குடியேற்றம் வெகுவாகக் குறைந்தது.
பிரித்தானியாவுக்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை மற்றும் அங்கிருந்து கிளம்பும் வெளிநாட்டினரின் எண்ணிக்கைக்கு இடையே இருக்கும் வித்தியாசமே நிகர குடியேற்றம் எனப்படுகிறது.
இது தான் இப்போது சரிந்து வருகிறது.
இங்கிலாந்து தேசிய புள்ளிவிபர அலுவலகத்தின் தகவலின்படி, 2023ல், 9.44 லட்சமாக இருந்த நிகர குடியேற்றம், 2025ல், 2.04 லட்சம் -ஆக குறைந்துள்ளது. இரு ஆண்டுகளில் ஏழு லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
மேலும், 2025 ஜூன் வரையிலான காலத்தில், பிரித்தானியாவை விட்டு வெளியேறியவர்களில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர்.
மாணவர் விசாக்களில் இருந்த 45,000 பேர், பணி விசாக்களில் இருந்த 22,000 பேர் உட்பட, 75,000 பேர் வெளியேறியுள்ளனர்.
அடுத்தபடியாக, 42,000 சீனர்கள் வெளியேறியுள்ளனர். இதே போல், விசா வழங்குவதும் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் வரை 32 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் 31 லட்சமாக குறைந்துள்ளது. குறிப்பாக, பணி விசாக்கள் 39 சதவீதம் வரை சரிந்துள்ளது.
இதற்கு மத்தியிலும், 2025 ஜூன் வரையிலான காலத்தில், வேலை, படிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக 1.5 லட்சம் பேர் பிரித்தானியா சென்றுள்ளனர்.
வெளிநாட்டினரின் இருப்பு குறைந்தது பிரதமர் கெய்ர் ஸ்டாமர் அரசுக்கு பெரும் நிம்மதியாக அமைந்துள்ளது.
ஆனால், திறன்வாய்ந்த உழைப்பாளர்கள் வெளியேறுவது, பிரித்தானியாவின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.