தியாக தீபம் திலீபன்

தியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத முதலாம் நாள் 15-09-1987

Aggregator

மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர்... சாம்பியன்ஸ் லீக் கோப்பை யாருக்கு?! #UCL

20 hours 26 minutes ago
மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர்... சாம்பியன்ஸ் லீக் கோப்பை யாருக்கு?! #UCL 2017 ல் ரியல் மாட்ரிட்டிடம் நூலிழையில் சாம்பியன் பட்டத்தைத் தவறவிட்ட யுவென்டஸ் இந்த முறை ரொனால்டோவையே தனது பிரத்யேக ஆயுதமாக மாற்றி கோப்பைக்குக் குறிவைத்திருக்கிறது. இந்தியாவில் இனி நள்ளிரவு, அதிகாலை நேரங்களிலும் கூட தொலைக்காட்சிகள் அலறப் போகின்றன; இந்திய இளசுகள் எல்லாம், `ஃபுட்பால் ஹேங் ஓவரில்’ இரவு முழுவதும் விழித்துக்கிடக்கப் போகின்றனர். 2018-19 சீஸனுக்கான `சாம்பியன்ஸ்லீக் ஃபுட்பால் இஸ் பேக்’. ஆம், ஐரோப்பாவின் டாப் கிளப்கள் கலந்துகொள்ளும் மாபெரும் கால்பந்துத் திருவிழாவான, சாம்பியன்ஸ்லீக் கால்பந்து தொடர் நாளை தொடங்கவுள்ளது. இந்தமுறை கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பிலுள்ள `ஃபேவரைட்’ அணிகளைப் பற்றிய அலசல். #UCL ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) கடந்த 3 வருடங்களாக கோப்பையைக் கைப்பற்றி, சாம்பியன்ஸ்லீக் தொடரை `குத்தகைக்கு எடுத்திருக்கும்’ ரியல் மாட்ரிட், இந்தமுறையும் கோப்பையைத் தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த சீஸனில் இருந்த பலமிக்க அணி இப்போது இல்லை. ஏனென்றால், பயிற்சியாளர் ஜிடேன் கடந்த சீஸனின் இறுதியிலேயே விடைபெற்றுவிட, இந்த சீஸனின் தொடக்கத்தில், மாட்ரிட்டின் `சூப்பர்ஸ்டார்’ கிறிஸ்டியானோ ரொனால்டோ யுவென்டஸ் அணிக்குச் சென்றுவிட்டார். ரொனால்டோ இல்லாவிட்டாலும் கேரத் பேல், பென்சிமா, மற்றும் இஸ்கோ கூட்டணி இருப்பதால் அட்டாக்கிற்கு பஞ்சம் இருக்காது. நடுகளத்தில் லூகா மோட்ரிச் மற்றும் குரூஸ் நம்பிக்கையளிக்கின்றனர். அவர்களின் இப்போதைய பிரச்னை டிஃபன்ஸ். செர்ஜியோ ரமோஸ், மார்செலோ ஆகியோர் அட்டாக்கில் அதிக கவனம் செலுத்துவதால், அது அவ்வப்போது எதிரணியினருக்கு கோல் அடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறது. உலகக் கோப்பையின் சிறந்த கோல்கீப்பர் கோர்ட்வாவை வாங்கியிருப்பதால், கொஞ்சம் நம்பிக்கை கூடியுள்ளது. `குரூப்-ஜி’ ல் இடம்பெற்றிருக்கும் அணிகளில் ரோமாவை சமாளித்தாலே போதும். ரோமாவைத் தவிர மற்ற இரு அணிகளையும் எளிதாக வென்று, அடுத்த சுற்றுக்கு மாட்ரிட் முன்னேறுவது உறுதி. பார்சிலோனா (ஸ்பெயின்) கடந்த சீஸனில் இத்தாலியின் ரோமாவிடம் அடிவாங்கி, காலிறுதியில் வெளியேறி அதிர்ச்சியளித்த பார்சிலோனா, இம்முறை சாம்பியன்ஸ்லீக் கோப்பையை முத்தமிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கேப்டனாகப் பதவியேற்றபோது, ``சாம்பியன்ஸ்லீக் கோப்பையினை வெல்ல எல்லா வழிகளிலும் முயற்சி செய்வோம்” என சூளுரைத்திருக்கிறார் `லிட்டில் மாஸ்டர்’ லியோனல் மெஸ்ஸி. ஆர்தர், மால்கம், அர்டுரோ விடால் மற்றும் லெங்லெட் என புதுவரவுகள் பார்சிலோனாவுக்குப் போதுமான பலம் சேர்க்கின்றனர். முன்களத்தில் மெஸ்சி, சுவாரஸ், டெம்பெலே என மூவரும் `சூப்பர் ஃபார்மில்’ இருக்கிறார்கள். இனியஸ்டா எனும் மாபெரும் ஜாம்பவான் இல்லாமல் களமிறங்குகிறது அந்த அணி. ஒரு வீரராக கொடினியோ அவரது இடத்தை நிரப்பினாலும், ஒரு லீடராக இனியஸ்டாவை பார்சிலோனா மிஸ் செய்யும். லீடர் எனும் மிகப்பெரிய ரோலை மெஸ்ஸியால் நிரப்ப முடியுமா. ரசிகர்களின் கேள்விக்கு மெஸ்ஸி பதில் சொல்லவேண்டிய தருணம் இது. பார்சிலோனாவின் ஒரே பலவீனம் பீக்கே, உம்டிடி, ஆல்பா அடங்கிய டிஃபென்ஸ் லைன் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு தவறாவது செய்துவிடுகின்றனர். கோப்பையை வெல்ல அவர்கள் தடுமாறாமல் இருக்க வேண்டியது அவசியம். `குரூப் ஆஃப் டெத்’ என்றழைக்கப்படும் குரூப்-பி ல், பலமிக்க டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ் மற்றும் இண்டர் மிலன் அணிகளுடன் இடம்பெற்றிருக்கும் பார்சிலோனா, குரூப் சுற்றைக் கடக்க கடினமாகப் போராட வேண்டியிருக்கும். பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்) புதிய பயிற்சியாளர் தாமஸ் டுகெல்லின் வருகையால் புதுரத்தம் பாய்ச்சப்பட்டு, இம்முறை கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக விளங்குகிறது பிஎஸ்ஜி. இந்த சீஸனில், இத்தாலியின் யுவென்டஸிலிருந்து வந்திருக்கும் `லெஜெண்ட்’ கோல்கீப்பர் ஜிஜி புஃபோன் மிகவும் அனுபவசாலி. தியாகோ சில்வா, மர்க்யுன்ஹொஸ், டேனி ஆல்வஸ் ஆகிய டிஃபண்டர்களும் போதுமான அனுபவம் கொண்டவர்களே. இதுவரை பின்களத்தில் கொஞ்சம் கோட்டைவிட்டுக்கொண்டிருந்த அணிக்கு, இந்த சீசன் மிகப்பெரிய மாற்றமாய் அமையக்கூடும். இன்றைய தேதிக்குக் கால்பந்து உலகின் மிகச்சிறந்த அட்டாக்கிங் பார்ட்னர்ஷிப் கொண்ட அணி பி.எஸ்.ஜி தான். எடின்சன் கவானி, நெய்மர் மற்றும் `யங்ஸ்டார்’ எம்பாப்பே அடங்கிய அட்டாக் எதிரணிகளைப் பந்தாடப்போவது உறுதி. பி.எஸ்.ஜி இருக்கும் `குரூப்-சி’ ல் லிவர்பூல், நெபோலி ஆகிய அணிகள் இருப்பதால் அடுத்த சுற்றுக்கு முன்னேற கொஞ்சம் சிரமப்படத்தான் வேண்டும். கடந்த முறை நெய்மர் காயமடைந்தது போல, இந்தமுறை யாரும் காயமடையாமல் இருந்தாலேபோதும், பிஎஸ்ஜி நிச்சயம் அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும். யுவென்டஸ் (இத்தாலி) முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இப்போது அசுர பலத்தில் இருக்கிறது யுவென்டஸ். காரணம் ரொனால்டோ என்னும் `ஒன் மேன் ஆர்மியின்’ வருகை. 2017-ல் ரியல் மாட்ரிட்டிடம் நூலிழையில் சாம்பியன் பட்டத்தைத் தவறவிட்ட யுவென்டஸ் இந்தமுறை ரொனால்டோவையே தனது பிரத்யேக ஆயுதமாக மாற்றி கோப்பைக்குக் குறிவைத்திருக்கிறது. இந்தமுறை சாம்பியன்ஸ் லீக் வென்றால், 3 வேறு அணிகளுக்காக சாம்பியன்ஸ் லீக் வென்றவர் என்ற மகத்தான சாதனையையும் அவர் படைப்பார். பாலோ டிபாலா, மண்ட்சுகிச், டக்லஸ் கோஸ்டா ஆகியோர் அட்டாக்கில் ரொனால்டோவுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நடுகளத்தில் மடூடி, ஜானிச், கெதிரா மற்றும் எம்ரே சேன் என நிறைய வீரர்கள் இருந்தாலும், மோட்ரிச், கொடினியோ பொன்ற அட்டாக்கிங் ஜீனியஸ்கள் இல்லை. அதனால் அட்டாக் பெரும்பாலும் விங்கர்களை நம்பியே இருக்கிறது. டிஃபென்ஸில் செலினியோடு, மிலனிலிருந்து மீண்டும் அணிக்கு வந்திருக்கும் பொனுச்சி கைகோப்பது அணிக்கு பெரிய பூஸ்ட். ஆனால் புஃபோன் விட்டுச் சென்ற வெற்றிடத்தை சீக்கிரம் நிரப்பினால் மட்டுமே யுவென்டஸ் இந்தத் தொடரில் நீடிக்கமுடியும். `குரூப்-ஜி’ ல் மான்செஸ்டர் யுனைடெட் தான் யுவென்டஸிற்கு தலைவலியை ஏற்படுத்தும். 2013-ல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய ரொனால்டோ அடித்த கோல்கள், மான்செஸ்டர் யுனைடெட்டை தொடரிலிருந்து வெளியேற்றியது வரலாறு. இந்நிலையில் மீண்டும் ரொனால்டோ தனது முன்னாள் அணியுடன் மோதப் போகிறார் என்பதால் எதிர்பார்ப்புக்குப் பஞ்சமில்லை. அவர் மட்டுமல்லாமல் உலகக் கோப்பை நாயகன் போக்பாவும் இந்தப் போட்டியில் தன் முன்னாள் அணியை எதிர்கொள்ளப்போகிறார். பேயர்ன் முனிச் (ஜெர்மனி) தொடர்ந்து 6 முறை புண்டஸ்லிகா டைட்டிலைக் கைப்பற்றியிருக்கும் பேயர்ன் முனிச், சாம்பியன்ஸ் லீக் அரங்கில் சமீக காலமாக முத்திரை பதிக்க முடியாமல் தடுமாறுகிறது. நிகோ கோவக் புதிய பயிற்சியாளராகப் பொறுப்பேற்றிருக்கும் நிலையில், சாம்பியன்ஸ்லீக் கோப்பையை வென்று ஐரோப்பிய அரங்கிலும் ஆதிக்கத்தைச் செலுத்தும் முனைப்பிலுள்ளது. ஆனால், இந்த மாற்றத்தை ஏற்படுத்த பயிற்சியாளர் ரொம்பவே மெனக்கெடவேண்டும். அடிக்கடி அணிக்குள் ஈகோ மோதல் வெடித்துள்ளது. அதைச் சமாளிக்கவேண்டும். முல்லர் போன்ற முன்னணி வீரர்கள் தொடர்ந்து சொதப்பும்போது அவர்களை பெஞ்சில் அமர்த்தும் துணிவான முடிவு எடுக்கவேண்டும். முந்தைய பயிற்சியாளர்களைப் போல் தொடர்ச்சியாக ரொடேஷன் செய்யாமல் ஓரளவு நிலையான பிலேயிங் லெவனை அமைக்க வேண்டும். போதாக்குறைக்கு நடுகளவீரர் டொலிஸோ காயத்தால் 6 மாதங்களுக்கு ஆடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் விரைவில் தீர்வு ஏற்படுத்தினால் பேயர்ன் மறுபடி வெல்லும். இந்த அணிகள் தவிர்த்து, கடந்த சீஸனின் `ரன்னர்-அப்’ லிவர்பூல், இந்தமுறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற கடினமாகப் போராடும். வழக்கத்துக்கு மாறாக அந்த அணியின் நடுகளமும், டிஃபன்ஸும் பலமாக இருக்கிறது. சாலா, மனே மற்றும் ஃபிர்மினோ அடங்கிய படையைக் கொண்டிருப்பதால் நிச்சயம் எதிரணிகளுக்கு அதிர்ச்சியளிக்கும். பெப் கார்டியோலாவின் தலைமையில் கடந்த சீஸனின் பிரீமியர் லீக் சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டியும் இந்தமுறை தங்களை நிரூபிக்கக் காத்திருக்கிறது. டேவிட் சில்வா, டி புருய்னே மற்றும் செர்ஜியோ அக்வேரோ போன்ற நட்சத்திர வீரர்கள் நிறைந்த சிட்டி, ஒலிம்பிக் லியான், ஹோஃபென்ஹெய்ம் போன்ற அணிகளை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு எப்படியும் முன்னேறிவிடும். 2014 மற்றும் 2016 வருடங்களின் `ரன்னர்-அப்’ அத்லெடிகோ மாட்ரிட், கடந்த சீஸனின் `யூரோப்பா லீக் சாம்பியன்’ என்ற பெருமையுடன், இம்முறை சாம்பியன்ஸ்லீக் தொடரில் கலந்துகொள்கிறது. கடந்த 2 சீஸன்களாக அவர்கள் பெரிய தாக்கம் ஏற்படுத்தாதபோதும், சிமியோனின் ஜாலத்தை நாம் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. https://www.vikatan.com/news/sports/137244-favourites-of-ucl-201819-season.html

மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர்... சாம்பியன்ஸ் லீக் கோப்பை யாருக்கு?! #UCL

20 hours 26 minutes ago
மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர்... சாம்பியன்ஸ் லீக் கோப்பை யாருக்கு?! #UCL
 
2017 ல் ரியல் மாட்ரிட்டிடம் நூலிழையில் சாம்பியன் பட்டத்தைத் தவறவிட்ட யுவென்டஸ் இந்த முறை ரொனால்டோவையே தனது பிரத்யேக ஆயுதமாக மாற்றி கோப்பைக்குக் குறிவைத்திருக்கிறது.
மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர்... சாம்பியன்ஸ் லீக் கோப்பை யாருக்கு?! #UCL
 

இந்தியாவில் இனி நள்ளிரவு, அதிகாலை நேரங்களிலும் கூட தொலைக்காட்சிகள் அலறப் போகின்றன; இந்திய இளசுகள் எல்லாம், `ஃபுட்பால் ஹேங் ஓவரில்’ இரவு முழுவதும் விழித்துக்கிடக்கப் போகின்றனர். 2018-19 சீஸனுக்கான `சாம்பியன்ஸ்லீக் ஃபுட்பால் இஸ் பேக்’. ஆம், ஐரோப்பாவின் டாப் கிளப்கள் கலந்துகொள்ளும் மாபெரும் கால்பந்துத் திருவிழாவான, சாம்பியன்ஸ்லீக் கால்பந்து தொடர் நாளை தொடங்கவுள்ளது. இந்தமுறை கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பிலுள்ள `ஃபேவரைட்’ அணிகளைப் பற்றிய அலசல். #UCL

ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)

கடந்த 3 வருடங்களாக கோப்பையைக் கைப்பற்றி, சாம்பியன்ஸ்லீக் தொடரை `குத்தகைக்கு எடுத்திருக்கும்’ ரியல் மாட்ரிட், இந்தமுறையும் கோப்பையைத் தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த சீஸனில் இருந்த பலமிக்க அணி இப்போது இல்லை. ஏனென்றால், பயிற்சியாளர் ஜிடேன் கடந்த சீஸனின் இறுதியிலேயே விடைபெற்றுவிட, இந்த சீஸனின் தொடக்கத்தில், மாட்ரிட்டின் `சூப்பர்ஸ்டார்’ கிறிஸ்டியானோ ரொனால்டோ  யுவென்டஸ் அணிக்குச் சென்றுவிட்டார். ரொனால்டோ இல்லாவிட்டாலும் கேரத் பேல், பென்சிமா, மற்றும் இஸ்கோ கூட்டணி இருப்பதால் அட்டாக்கிற்கு பஞ்சம் இருக்காது. நடுகளத்தில் லூகா மோட்ரிச் மற்றும் குரூஸ் நம்பிக்கையளிக்கின்றனர். 

 

 

ரியல் மாட்ரிட் #UCL

அவர்களின் இப்போதைய பிரச்னை டிஃபன்ஸ். செர்ஜியோ ரமோஸ், மார்செலோ ஆகியோர் அட்டாக்கில் அதிக கவனம் செலுத்துவதால், அது அவ்வப்போது எதிரணியினருக்கு கோல் அடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறது. உலகக் கோப்பையின் சிறந்த கோல்கீப்பர் கோர்ட்வாவை வாங்கியிருப்பதால், கொஞ்சம் நம்பிக்கை கூடியுள்ளது. `குரூப்-ஜி’ ல் இடம்பெற்றிருக்கும் அணிகளில் ரோமாவை சமாளித்தாலே போதும். ரோமாவைத் தவிர மற்ற இரு அணிகளையும் எளிதாக வென்று, அடுத்த சுற்றுக்கு மாட்ரிட் முன்னேறுவது உறுதி.

பார்சிலோனா (ஸ்பெயின்)

கடந்த சீஸனில் இத்தாலியின் ரோமாவிடம் அடிவாங்கி, காலிறுதியில் வெளியேறி அதிர்ச்சியளித்த பார்சிலோனா, இம்முறை சாம்பியன்ஸ்லீக் கோப்பையை முத்தமிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கேப்டனாகப் பதவியேற்றபோது, ``சாம்பியன்ஸ்லீக் கோப்பையினை வெல்ல எல்லா வழிகளிலும் முயற்சி செய்வோம்” என சூளுரைத்திருக்கிறார் `லிட்டில் மாஸ்டர்’ லியோனல் மெஸ்ஸி. ஆர்தர், மால்கம், அர்டுரோ விடால் மற்றும் லெங்லெட் என புதுவரவுகள் பார்சிலோனாவுக்குப் போதுமான பலம் சேர்க்கின்றனர். முன்களத்தில் மெஸ்சி, சுவாரஸ், டெம்பெலே என மூவரும் `சூப்பர் ஃபார்மில்’ இருக்கிறார்கள். இனியஸ்டா எனும் மாபெரும் ஜாம்பவான் இல்லாமல் களமிறங்குகிறது அந்த அணி. ஒரு வீரராக கொடினியோ அவரது இடத்தை நிரப்பினாலும், ஒரு லீடராக இனியஸ்டாவை பார்சிலோனா மிஸ் செய்யும். லீடர் எனும் மிகப்பெரிய ரோலை மெஸ்ஸியால் நிரப்ப முடியுமா. ரசிகர்களின் கேள்விக்கு மெஸ்ஸி பதில் சொல்லவேண்டிய தருணம் இது. 

பார்சிலோனா #UCL

பார்சிலோனாவின் ஒரே பலவீனம் பீக்கே, உம்டிடி, ஆல்பா அடங்கிய டிஃபென்ஸ் லைன் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு தவறாவது செய்துவிடுகின்றனர். கோப்பையை வெல்ல அவர்கள் தடுமாறாமல் இருக்க வேண்டியது அவசியம். `குரூப் ஆஃப் டெத்’ என்றழைக்கப்படும் குரூப்-பி ல், பலமிக்க டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ் மற்றும் இண்டர் மிலன் அணிகளுடன் இடம்பெற்றிருக்கும் பார்சிலோனா, குரூப் சுற்றைக் கடக்க கடினமாகப் போராட வேண்டியிருக்கும்.

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்)

புதிய பயிற்சியாளர் தாமஸ் டுகெல்லின் வருகையால் புதுரத்தம் பாய்ச்சப்பட்டு, இம்முறை கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக விளங்குகிறது பிஎஸ்ஜி. இந்த சீஸனில், இத்தாலியின் யுவென்டஸிலிருந்து வந்திருக்கும் `லெஜெண்ட்’ கோல்கீப்பர் ஜிஜி புஃபோன் மிகவும் அனுபவசாலி. தியாகோ சில்வா, மர்க்யுன்ஹொஸ், டேனி ஆல்வஸ் ஆகிய டிஃபண்டர்களும் போதுமான அனுபவம் கொண்டவர்களே. இதுவரை பின்களத்தில் கொஞ்சம் கோட்டைவிட்டுக்கொண்டிருந்த அணிக்கு, இந்த சீசன் மிகப்பெரிய மாற்றமாய் அமையக்கூடும். 

பி.எஸ்.ஜி #UCL

இன்றைய தேதிக்குக் கால்பந்து உலகின் மிகச்சிறந்த அட்டாக்கிங் பார்ட்னர்ஷிப் கொண்ட அணி பி.எஸ்.ஜி தான். எடின்சன் கவானி, நெய்மர் மற்றும் `யங்ஸ்டார்’ எம்பாப்பே அடங்கிய அட்டாக் எதிரணிகளைப் பந்தாடப்போவது உறுதி. பி.எஸ்.ஜி இருக்கும் `குரூப்-சி’ ல் லிவர்பூல், நெபோலி ஆகிய அணிகள் இருப்பதால் அடுத்த சுற்றுக்கு முன்னேற கொஞ்சம் சிரமப்படத்தான் வேண்டும். கடந்த முறை நெய்மர் காயமடைந்தது போல, இந்தமுறை யாரும் காயமடையாமல் இருந்தாலேபோதும், பிஎஸ்ஜி நிச்சயம் அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும்.

யுவென்டஸ் (இத்தாலி)

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இப்போது அசுர பலத்தில் இருக்கிறது யுவென்டஸ். காரணம் ரொனால்டோ என்னும் `ஒன் மேன் ஆர்மியின்’ வருகை. 2017-ல் ரியல் மாட்ரிட்டிடம் நூலிழையில் சாம்பியன் பட்டத்தைத் தவறவிட்ட யுவென்டஸ் இந்தமுறை ரொனால்டோவையே தனது பிரத்யேக ஆயுதமாக மாற்றி கோப்பைக்குக் குறிவைத்திருக்கிறது. இந்தமுறை சாம்பியன்ஸ் லீக் வென்றால், 3 வேறு அணிகளுக்காக சாம்பியன்ஸ் லீக் வென்றவர் என்ற மகத்தான சாதனையையும் அவர் படைப்பார். பாலோ டிபாலா, மண்ட்சுகிச், டக்லஸ் கோஸ்டா ஆகியோர் அட்டாக்கில் ரொனால்டோவுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நடுகளத்தில் மடூடி, ஜானிச், கெதிரா மற்றும் எம்ரே சேன் என நிறைய வீரர்கள் இருந்தாலும், மோட்ரிச், கொடினியோ பொன்ற அட்டாக்கிங் ஜீனியஸ்கள் இல்லை. அதனால் அட்டாக் பெரும்பாலும் விங்கர்களை நம்பியே இருக்கிறது. டிஃபென்ஸில் செலினியோடு, மிலனிலிருந்து மீண்டும் அணிக்கு வந்திருக்கும் பொனுச்சி கைகோப்பது அணிக்கு பெரிய பூஸ்ட். ஆனால் புஃபோன் விட்டுச் சென்ற வெற்றிடத்தை சீக்கிரம் நிரப்பினால் மட்டுமே யுவென்டஸ் இந்தத் தொடரில் நீடிக்கமுடியும்.

யுவன்டஸ் #UCL

`குரூப்-ஜி’ ல் மான்செஸ்டர் யுனைடெட் தான் யுவென்டஸிற்கு தலைவலியை ஏற்படுத்தும். 2013-ல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய ரொனால்டோ அடித்த கோல்கள், மான்செஸ்டர் யுனைடெட்டை தொடரிலிருந்து வெளியேற்றியது வரலாறு. இந்நிலையில் மீண்டும் ரொனால்டோ தனது முன்னாள் அணியுடன் மோதப் போகிறார் என்பதால் எதிர்பார்ப்புக்குப் பஞ்சமில்லை. அவர் மட்டுமல்லாமல் உலகக் கோப்பை நாயகன் போக்பாவும் இந்தப் போட்டியில் தன் முன்னாள் அணியை எதிர்கொள்ளப்போகிறார். 

பேயர்ன் முனிச் (ஜெர்மனி)

தொடர்ந்து 6 முறை புண்டஸ்லிகா டைட்டிலைக் கைப்பற்றியிருக்கும் பேயர்ன் முனிச், சாம்பியன்ஸ் லீக் அரங்கில் சமீக காலமாக முத்திரை பதிக்க முடியாமல் தடுமாறுகிறது. நிகோ கோவக் புதிய பயிற்சியாளராகப் பொறுப்பேற்றிருக்கும் நிலையில், சாம்பியன்ஸ்லீக் கோப்பையை வென்று ஐரோப்பிய அரங்கிலும் ஆதிக்கத்தைச் செலுத்தும் முனைப்பிலுள்ளது. ஆனால், இந்த மாற்றத்தை ஏற்படுத்த பயிற்சியாளர் ரொம்பவே மெனக்கெடவேண்டும். அடிக்கடி அணிக்குள் ஈகோ மோதல் வெடித்துள்ளது. அதைச் சமாளிக்கவேண்டும். முல்லர் போன்ற முன்னணி வீரர்கள் தொடர்ந்து சொதப்பும்போது அவர்களை பெஞ்சில் அமர்த்தும் துணிவான முடிவு எடுக்கவேண்டும். முந்தைய பயிற்சியாளர்களைப் போல் தொடர்ச்சியாக ரொடேஷன் செய்யாமல் ஓரளவு நிலையான பிலேயிங் லெவனை அமைக்க வேண்டும். போதாக்குறைக்கு நடுகளவீரர் டொலிஸோ காயத்தால் 6 மாதங்களுக்கு ஆடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் விரைவில் தீர்வு ஏற்படுத்தினால் பேயர்ன் மறுபடி வெல்லும். 

பேயர்ன் மூனிச் #UCL

இந்த அணிகள் தவிர்த்து, கடந்த சீஸனின் `ரன்னர்-அப்’ லிவர்பூல், இந்தமுறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற கடினமாகப் போராடும். வழக்கத்துக்கு மாறாக அந்த அணியின் நடுகளமும், டிஃபன்ஸும் பலமாக இருக்கிறது. சாலா, மனே மற்றும் ஃபிர்மினோ அடங்கிய படையைக் கொண்டிருப்பதால் நிச்சயம் எதிரணிகளுக்கு அதிர்ச்சியளிக்கும். பெப் கார்டியோலாவின் தலைமையில் கடந்த சீஸனின் பிரீமியர் லீக் சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டியும் இந்தமுறை தங்களை நிரூபிக்கக் காத்திருக்கிறது. டேவிட் சில்வா, டி புருய்னே மற்றும் செர்ஜியோ அக்வேரோ போன்ற நட்சத்திர வீரர்கள் நிறைந்த சிட்டி, ஒலிம்பிக் லியான், ஹோஃபென்ஹெய்ம் போன்ற அணிகளை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு எப்படியும் முன்னேறிவிடும்.

2014 மற்றும் 2016 வருடங்களின் `ரன்னர்-அப்’ அத்லெடிகோ மாட்ரிட், கடந்த சீஸனின் `யூரோப்பா லீக் சாம்பியன்’ என்ற பெருமையுடன், இம்முறை சாம்பியன்ஸ்லீக் தொடரில் கலந்துகொள்கிறது. கடந்த 2 சீஸன்களாக அவர்கள் பெரிய தாக்கம் ஏற்படுத்தாதபோதும், சிமியோனின் ஜாலத்தை நாம் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. 

https://www.vikatan.com/news/sports/137244-favourites-of-ucl-201819-season.html

நாடு திரும்பினார் ரவீந்திர

20 hours 31 minutes ago
நாடு திரும்பினார் ரவீந்திர - டி.கே.ஜி.கபில முன்னாள் கடற்படைத் தளபதியும் தற்போதைய பாதுகாப்புப் பணியாளர்களின் பிரதானியுமான ரவீந்திர விஜேகுணரத்ன, இன்று (19) அதிகாலை, நாடு திரும்பினார். டோஹாவிலிருந்து கட்டுநாயக்கா நோக்கி வந்த கட்டார் விமானச் சேவைக்குச் சொந்தமாக கிவ்.ஆர் 668 ரக விமானத்தினூடாக, இன்று அதிகாலை 1.45 மணிக்கு, அவர் நாடு திரும்பினார். http://www.tamilmirror.lk/செய்திகள்/நாடு-திரும்பினார்-ரவீந்திர/175-222146

நாடு திரும்பினார் ரவீந்திர

20 hours 31 minutes ago
நாடு திரும்பினார் ரவீந்திர
 
 

image_896a5c4b40.jpg- டி.கே.ஜி.கபில

முன்னாள் கடற்படைத் தளபதியும் தற்போதைய பாதுகாப்புப் பணியாளர்களின் பிரதானியுமான ரவீந்திர விஜேகுணரத்ன, இன்று (19) அதிகாலை, நாடு திரும்பினார்.

டோஹாவிலிருந்து கட்டுநாயக்கா நோக்கி வந்த கட்டார் விமானச் சேவைக்குச் சொந்தமாக கிவ்.ஆர் 668 ரக விமானத்தினூடாக, இன்று அதிகாலை 1.45 மணிக்கு, அவர் நாடு திரும்பினார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/நாடு-திரும்பினார்-ரவீந்திர/175-222146

இளமை புதுமை பல்சுவை

20 hours 32 minutes ago
வரலாற்றில் இன்று : செப்டெம்பர் 19 1916 : முதலாம் உலகப் போர் - கிழக்கு ஆப்பிரிக்க நடவடிக்கையில், பெல்ஜிய கொங்கோவின் குடியேற்றப் படைகள் டபோரா நகரைப் பெரும் சண்டையின் பின் கைப்பற்றின. 1944 : இரண்டாம் உலகப் போர் - ஊர்ட்கென் காடு சண்டை ஆரம்பமானது. 1944 : பின்லாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. 1952 : ஐக்கிய அமெரிக்கா இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்ட சார்லி சாப்ளின் நாடு திரும்புவதற்கு அமெரிக்க அரசு தடை விதித்தது. 1957 : ஐக்கிய அமெரிக்கா நிலத்துக்கடியே தனது முதலாவது அணுகுண்டு சோதனையை நடத்தியது. 1970 : கிரேக்க சர்வாதிகாரி ஜியார்ஜியசு பப்படபவுலசின் ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிரேக்க மாணவர் ஒருவர் தீக்குளித்து மாண்டார். 1976 : தெற்கு துருக்கியில் போயிங் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில், 155 பேர் அனைவரும் கொல்லப்பட்டனர். 1978 : சொலமன் தீவுகள் ஐநாவில் இணைந்தது. 1983 : செயிண்ட் கிட்சும் நெவிசும், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. 1985 : மெக்சிகோ நகரில் இடம்பெற்ற 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தினால் குறைந்தது 9,000 பேர் உயிரிழந்தனர். 1989 : நைஜரில் பிரெஞ்சு யூடிஏ விமானத்தில் குண்டு வெடித்ததில், 171 பேர் கொல்லப்பட்டனர். 1991 : ஏட்சி பனிமனிதன் இத்தாலிக்கும் ஆத்திரியாவுக்கும் இடையில் ஆல்ப்சு மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டான். 1997 : அல்ஜீரியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் 53 கிராம மக்களைப் படுகொலை செய்தனர். 2006 : தாய்லாந்தில் இராணுவப் புரட்சியில் இராணுவத் தளபதி சோந்தி பூன்யா ரத்கிலின் ஆட்சியைக் கைப்பற்றினார். 2017 : மெக்சிக்கோவில் நடுப் பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில், 370 பேர் உயிரிழந்தனர். http://www.tamilmirror.lk

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி செய்திகள்

20 hours 33 minutes ago
ஓராண்டுக்குப் பின் மோதும் இந்தியா - பாகிஸ்தான்: பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்துமா? கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி என்றாலே மிகப்பெரும் எதிர்பார்ப்பு இரு நாடுகளின் ரசிகர்கள் மத்தியிலும் இருப்பது வாடிக்கை. அதிலும், ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஓராண்டுக்குப் பின்னர் மோதுகின்றன. கடந்த ஆண்டு (2017) நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில்தான் இந்தியாவும் பாகிஸ்தானும் எதிர்கொண்டன. அதன் பின்னர், இப்போதுதான் துபாயில் நடைபெறும் போட்டியில் இரு அணிகளும் மோதவுள்ளன. சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தானிடம் வெற்றிவாய்ப்பை இழந்தது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை, மிகச்சிறந்த பேட்டிங் பலம் உள்ளது. இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பாகிஸ்தான் வீரர்கள் மிகப்பெரிய சவாலாக இருப்பார்கள் என்று இப்போது கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதிலும் இந்தத் தொடரில் கேப்டன் விராட் கோலி இல்லாத நிலையில், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடி வருகிறது. மிகச்சாதாரண அணி என்று நினைத்த ஹாங்காங் அணியுடன் நேற்றைய போட்டியில், இந்தியா கடுமையாகப் போராடித்தான் வெற்றிபெற முடிந்தது. அந்த அளவுக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் சோபிக்காமல் போனார்கள். அதேபோல் இன்றைய போட்டியிலும் பந்துவீச்சாளர்கள் சொதப்பாமல் திட்டமிட்டு விளையாடினால் மட்டுமே, பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றியை எளிதாக்க முடியும். இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்டிங் தரவரிசை சிறப்பான முறையில் இருந்தாலும், பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குல்தீப் யாதவ், சஹால் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தான் அணியினருக்கு மிகுந்த நெருக்கடியைக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம். இந்திய நேரப்படி இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது. https://www.vikatan.com/news/sports/137354-india-to-take-on-pakistan-in-asia-cup-cricket-after-one-year.html

உண்மைகளைக் கண்டறியாமல் படையினருக்குப் பொதுமன்னிப்பா? – ஏற்கவே முடியாது எனச் சீறுகின்றது கூட்டமைப்பு

20 hours 34 minutes ago
உண்மைகளைக் கண்டறியாமல் படையினருக்குப் பொதுமன்னிப்பா? – ஏற்கவே முடியாது எனச் சீறுகின்றது கூட்டமைப்பு “போர்க்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவை தொடர்பில் முறையான நீதி விசாரணைகள் நடைபெற்று முதலில் உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும். படையினரில் யார், யார், எத்தகைய குற்றங்களை இழைத்தார்கள் என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னரே பொதுமன்னிப்பு பற்றி ஆராயவோ, பரிசீலிக்கவோ முடியும். முகம் தெரியாத குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு அளிப்பதாகப் பிரகடனப்படுத்துவதன் மூலம் போர்க்குற்றங்களை மூடி மறைத்து, நீதியான விசாரணைகளைப் புறந்தள்களும் செயற்பாட்டுக்கு நாம் இணங்கவே மாட்டோம். அந்த முயற்சியை வன்மையாக எதிர்ப்போம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் அதன் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். அவர் மேலும் தெரிவிக்கையில், “தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் போரின் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படும் நடவடிக்கையாக பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டது உண்மையே. ஆனால், அங்கு உண்மைகள் முழுமையாகக் கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட்டு, குற்றமிழைத்தோர் அடையாளப்படுத்தப்பட்ட பின்னரே அந்தப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. இங்கும் விடுதலைப்புலிகள் தரப்பில் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்ட போராளிகள் உட்பட அனைவரும் அதற்காகக் கைதுசெய்யப்பட்டனர். விசாரிக்கப்பட்டனர். உண்மைகள் கண்டறியப்பட்டன. அதன் பின்னரே சுமார் பன்னீராயிரம் போராளிகள் மன்னிப்பு அளித்து விடுவிக்கப்பட்டார்கள். புனர்வாழ்வு என்ற வகையில் கூட அவர்கள் தடுப்பை எதிர்கொண்ட பின்னரே விடுவிக்கப்பட்டனர். பெரிய குற்றங்களை இழைத்தோர் அதற்காக விசாரிக்கப்பட்டார்கள். தண்டிக்கப்பட்டனர். சிறை வைக்கப்பட்டனர். இன்னும் சிறையில் இருக்கின்றனர். தடுப்புக் காவலில் வாடுகின்றனர். அப்படி எல்லாம் இருக்கையில் ஒட்டுமொத்தமாகப் படையினருக்கும் பொதுமன்னிப்பு என்ற துளாவல் அறிவிப்பு மூலம் அவர்கள் இழைத்த குற்றங்களையும், குற்றவாளிகளையும் மூடிமறைக்கும் எத்தனத்துக்கு நாம் இடமளிக்க மாட்டோம். இலங்கை அரச தரப்பின் அத்தகைய மூடி மறைப்பு ஏற்பாட்டுக்கு சர்வதேச சமூகம் ஒருபோதும் உடன்படாது என்று நம்புகின்றோம்” – என்றார். http://www.newsuthanthiran.com/2018/09/19/உண்மைகளைக்-கண்டறியாமல்-ப/

உண்மைகளைக் கண்டறியாமல் படையினருக்குப் பொதுமன்னிப்பா? – ஏற்கவே முடியாது எனச் சீறுகின்றது கூட்டமைப்பு

20 hours 34 minutes ago
உண்மைகளைக் கண்டறியாமல் படையினருக்குப் பொதுமன்னிப்பா? – ஏற்கவே முடியாது எனச் சீறுகின்றது கூட்டமைப்பு
0d2d9cd01683688bc91c063ca422a320?s=48&d=

Sumanthiran.jpg

“போர்க்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவை தொடர்பில் முறையான நீதி விசாரணைகள் நடைபெற்று முதலில் உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும். படையினரில் யார், யார், எத்தகைய குற்றங்களை இழைத்தார்கள் என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னரே பொதுமன்னிப்பு பற்றி ஆராயவோ, பரிசீலிக்கவோ முடியும். முகம் தெரியாத குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு அளிப்பதாகப் பிரகடனப்படுத்துவதன் மூலம் போர்க்குற்றங்களை மூடி மறைத்து, நீதியான விசாரணைகளைப் புறந்தள்களும் செயற்பாட்டுக்கு நாம் இணங்கவே மாட்டோம். அந்த முயற்சியை வன்மையாக எதிர்ப்போம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் அதன் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் போரின் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படும் நடவடிக்கையாக பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டது உண்மையே. ஆனால், அங்கு உண்மைகள் முழுமையாகக் கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட்டு, குற்றமிழைத்தோர் அடையாளப்படுத்தப்பட்ட பின்னரே அந்தப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.

இங்கும் விடுதலைப்புலிகள் தரப்பில் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்ட போராளிகள் உட்பட அனைவரும் அதற்காகக் கைதுசெய்யப்பட்டனர். விசாரிக்கப்பட்டனர். உண்மைகள் கண்டறியப்பட்டன. அதன் பின்னரே சுமார் பன்னீராயிரம் போராளிகள் மன்னிப்பு அளித்து விடுவிக்கப்பட்டார்கள். புனர்வாழ்வு என்ற வகையில் கூட அவர்கள் தடுப்பை எதிர்கொண்ட பின்னரே விடுவிக்கப்பட்டனர்.

பெரிய குற்றங்களை இழைத்தோர் அதற்காக விசாரிக்கப்பட்டார்கள். தண்டிக்கப்பட்டனர். சிறை வைக்கப்பட்டனர். இன்னும் சிறையில் இருக்கின்றனர். தடுப்புக் காவலில் வாடுகின்றனர்.

அப்படி எல்லாம் இருக்கையில் ஒட்டுமொத்தமாகப் படையினருக்கும் பொதுமன்னிப்பு என்ற துளாவல் அறிவிப்பு மூலம் அவர்கள் இழைத்த குற்றங்களையும், குற்றவாளிகளையும் மூடிமறைக்கும் எத்தனத்துக்கு நாம் இடமளிக்க மாட்டோம்.

இலங்கை அரச தரப்பின் அத்தகைய மூடி மறைப்பு ஏற்பாட்டுக்கு சர்வதேச சமூகம் ஒருபோதும் உடன்படாது என்று நம்புகின்றோம்” – என்றார்.

http://www.newsuthanthiran.com/2018/09/19/உண்மைகளைக்-கண்டறியாமல்-ப/

மாணவிகளுக்கு முன்பாக தகாத செயற்பாடு – முல்லையில் இராணுவ சிப்பாய்கள் கைது…

20 hours 35 minutes ago
மாணவிகளுக்கு முன்பாக தகாத செயற்பாடு – முல்லையில் இராணுவ சிப்பாய்கள் கைது… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… பாடசாலை மாணவிகளுக்கு அந்தரங்க உறுப்பை காட்டிய இரண்டு இராணுவ சிப்பாய்களை முல்லைத்தீவு காவற்துறையினர் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு கரைச்சி குடியிருப்பு பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பாடசாலை மாணவிகளுக்கு , அப்பகுதியால் துவிச்சக்கர வண்டியில் பயணித்த இரு இராணுவ சிப்பாய்க்களும் தமது அந்தரங்க உறுப்பை காட்டியுள்ளனர். அதனை அப்பகுதியில் நின்றவர்கள் அவதானித்து குறித்த இரு சிப்பாயக்களையும் மடக்கி பிடித்து காவற்துறையினருக்கு அறிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவற்துறையினர் இருவரையும் கைது செய்து காவற்துறை நிலையத்திற்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட இரு சிப்பாய்க்களும் 59ஆவது படைப்பிரிவை சேர்ந்தவர்கள் எனவும் , அவர்களிடம் தாம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர். http://globaltamilnews.net/2018/96213/

மாணவிகளுக்கு முன்பாக தகாத செயற்பாடு – முல்லையில் இராணுவ சிப்பாய்கள் கைது…

20 hours 35 minutes ago
மாணவிகளுக்கு முன்பாக தகாத செயற்பாடு – முல்லையில் இராணுவ சிப்பாய்கள் கைது…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

arrest.jpg?resize=445%2C334

 

பாடசாலை மாணவிகளுக்கு அந்தரங்க உறுப்பை காட்டிய இரண்டு இராணுவ சிப்பாய்களை முல்லைத்தீவு காவற்துறையினர் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு கரைச்சி குடியிருப்பு பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பாடசாலை மாணவிகளுக்கு , அப்பகுதியால் துவிச்சக்கர வண்டியில் பயணித்த இரு இராணுவ சிப்பாய்க்களும் தமது அந்தரங்க உறுப்பை காட்டியுள்ளனர்.

அதனை அப்பகுதியில் நின்றவர்கள் அவதானித்து குறித்த இரு சிப்பாயக்களையும் மடக்கி பிடித்து காவற்துறையினருக்கு அறிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவற்துறையினர் இருவரையும் கைது செய்து காவற்துறை நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

கைது செய்யப்பட்ட இரு சிப்பாய்க்களும் 59ஆவது படைப்பிரிவை சேர்ந்தவர்கள் எனவும் , அவர்களிடம் தாம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் காவற்துறையினர்  தெரிவித்தனர்.

http://globaltamilnews.net/2018/96213/

வாள்முனையில் கொள்ளை – அதிர்ச்சியில் நிதி நிறுவனம்!!

20 hours 52 minutes ago
வாள்முனையில் கொள்ளை – அதிர்ச்சியில் நிதி நிறுவனம்!! யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர்ப் பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் சற்றுமுன்னர் பெருமளவு பணம் வாள் முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. சுமார் 18 லட்சம் ரூபாவுக்கு அதிகமான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்துக்குப் பொலிஸார் விரைந்துள்ளனர். https://newuthayan.com/story/10/வாள்முனையில்-கொள்ளை-அதிர்ச்சியில்-நிதி-நிறுவனம்.html

வாள்முனையில் கொள்ளை – அதிர்ச்சியில் நிதி நிறுவனம்!!

20 hours 52 minutes ago
வாள்முனையில் கொள்ளை – அதிர்ச்சியில் நிதி நிறுவனம்!!
 
 

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர்ப் பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் சற்றுமுன்னர் பெருமளவு பணம் வாள் முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.

சுமார் 18 லட்சம் ரூபாவுக்கு அதிகமான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்துக்குப் பொலிஸார் விரைந்துள்ளனர்.

https://newuthayan.com/story/10/வாள்முனையில்-கொள்ளை-அதிர்ச்சியில்-நிதி-நிறுவனம்.html

புகையில்லை, 140கி.மீ வேகம்; சூழலை பாதிக்காத உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் வெள்ளோட்டம்

20 hours 55 minutes ago
புகையில்லை, 140கி.மீ வேகம்; சூழலை பாதிக்காத உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் வெள்ளோட்டம் YouTube ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் - படம்: ஏஎப்பி சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாதவகையில், ஹைட்ரஜனில் ஓடும் உலகின் முதல் ரயில் ஜெர்மனியில் நேற்று சோதனை ஓட்டம் செய்து பார்க்கப்பட்டது. மின்சாரத்திலும், டீசலிலும் தற்போது ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், சூழலுக்கு விளையும் கேடுகளை குறைக்கும் வகையில் இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வழக்கமான ரயில்களைக் காட்டிலும் செலவு அதிகம் என்கிற போதிலும் எந்தவிதத்திலும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியாடாத ரயிலாக இருக்கும். நீலநிறத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்த ரெயிலை பிரான்ஸின் டிஜிவி அல்ஸ்டாம் நிறுவனம் வடிவமைத்து இருந்தது. மணிக்குச் சராசரியாக 100 கி.மீ வேகத்திலும், அதிகபட்சமாக 140கி.மீவேகத்திலும் ரயிலை இயக்க முடியும். முதல்கட்டமாக வடக்கு ஜெர்மனியில் உள்ள கக்ஸாஹெவன், பிரிமெர்ஹெவன், பிரிமெர்வோர்டே, பக்ஸிடிஹூட் ஆகிய நகரங்களுக்கு இடையே சோதனை ஓட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது. எப்படி ரயில் இயங்குகிறது? உலகிலேயே முதல்முறையாகச் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ஓட உள்ள இந்த ரயில் முழுவதும் ஹைடர்ஜன் சக்தியால் இயங்கக்கூடியது. இந்த ரயிலில் லித்தியம் மின்கலன்கல் அமைக்கப்பட்டு இருக்கும். அதாவது வீடுகளில் பயன்படுத்தும் பேட்டரி, செல்போன்களில் பயன்படுத்தப்படும் பேட்டரி போன்ற லித்தியம் பேட்டரி இருக்கும். இந்த பேட்டரியில் எரிபொருள் செல்கள் நிரப்பப்பட்டுஇருக்கும். ரயில்கள் ஓடத் தொடங்கியவுடன் இந்த பேட்டரியில் இருக்கும் எரிபொருள் செல்கள் ஹைட்ரஜன் மூலக்கூறுகளுடன் வேதியியல் மாற்றத்தில் ஈடுபட்டு மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த வேதியியல் மாற்றத்தின் விளைவாக ரயிலில் இருந்து நீராவியும், சிறிய அளவிலான நீரும் வெளியேற்றப்படும். ஆனால் எந்தவிதத்திலும் கரியமில வாயு உருவாகாது. இந்த ரயிலுக்கு "கொராடியா ஐலின்ட்" என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு டேங்கர் ஹைட்ரஜன் மூலம் ஆயிரம் கி.மீ வரை ரயிலை இயக்க முடியும். ஹைட்ரஜன் மூலம் அதிகமான எரிசக்தி, மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால், அவை அனைத்தும் பேட்டரியில் சேமிக்கப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற 14 ரயில்களைத் தயாரிக்க ஜெர்மனி முடிவு செய்துள்ளது. டீசல் ரயில்எஞ்சின்களை ஒப்பிடும் போது இந்த ரயில் மிகவும் விலை அதிகம் என்கிற போதிலும், பேட்டரிகளை ரீசார்ஜ் செய்வதன் மூலம் நீண்ட ஆண்டுகளுக்குப் பயன்படுத்த முடியும், செலவும் டீசல் எஞ்சின்களோடு ஒப்பிடும்போது குறைவாகும். இந்த ரயில் விரைவில் இங்கிலாந்து, நெதர்லாந்து, டென்மார்க், நார்வே, இத்தாலி, கனடா ஆகிய நாடுகளிலும் சோதனை ஓட்டத்துக்குச் செல்ல இருக்கிறது. இந்த ரயிலை சாதாரண தண்டவாளங்களில் இயக்க முடியும். இதுகுறித்து அல்ஸ்டாம் நிறுவனத்தின் சிஇஓ ஹென்ரி பாப்பார் லாபார்ஜ் கூறுகையில், உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். 2021-ம் ஆண்டில் உலகளவில் இந்த ரயில் பெரும் புரட்சியை செய்ய இருக்கிறது எனத் தெரிவித்தார். https://tamil.thehindu.com/world/article24979375.ece

புகையில்லை, 140கி.மீ வேகம்; சூழலை பாதிக்காத உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் வெள்ளோட்டம்

20 hours 55 minutes ago
புகையில்லை, 140கி.மீ வேகம்; சூழலை பாதிக்காத உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் வெள்ளோட்டம்
 
hy%20tua

ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்   -  படம்: ஏஎப்பி

சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாதவகையில்,  ஹைட்ரஜனில் ஓடும் உலகின் முதல் ரயில் ஜெர்மனியில் நேற்று சோதனை ஓட்டம் செய்து பார்க்கப்பட்டது.

மின்சாரத்திலும், டீசலிலும் தற்போது ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், சூழலுக்கு விளையும் கேடுகளை குறைக்கும் வகையில் இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

 

வழக்கமான ரயில்களைக் காட்டிலும் செலவு அதிகம் என்கிற போதிலும் எந்தவிதத்திலும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியாடாத ரயிலாக இருக்கும்.

நீலநிறத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்த ரெயிலை பிரான்ஸின் டிஜிவி அல்ஸ்டாம் நிறுவனம் வடிவமைத்து இருந்தது.

மணிக்குச் சராசரியாக 100 கி.மீ வேகத்திலும், அதிகபட்சமாக 140கி.மீவேகத்திலும் ரயிலை இயக்க முடியும். முதல்கட்டமாக வடக்கு ஜெர்மனியில் உள்ள கக்ஸாஹெவன், பிரிமெர்ஹெவன், பிரிமெர்வோர்டே, பக்ஸிடிஹூட் ஆகிய நகரங்களுக்கு இடையே சோதனை ஓட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

எப்படி ரயில் இயங்குகிறது?

 

 

trainjpg
 

உலகிலேயே முதல்முறையாகச் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ஓட உள்ள இந்த ரயில் முழுவதும் ஹைடர்ஜன் சக்தியால் இயங்கக்கூடியது. இந்த ரயிலில் லித்தியம் மின்கலன்கல் அமைக்கப்பட்டு இருக்கும். அதாவது வீடுகளில் பயன்படுத்தும் பேட்டரி, செல்போன்களில் பயன்படுத்தப்படும் பேட்டரி போன்ற லித்தியம் பேட்டரி இருக்கும்.

இந்த பேட்டரியில் எரிபொருள் செல்கள் நிரப்பப்பட்டுஇருக்கும். ரயில்கள் ஓடத் தொடங்கியவுடன் இந்த பேட்டரியில் இருக்கும் எரிபொருள் செல்கள் ஹைட்ரஜன் மூலக்கூறுகளுடன் வேதியியல் மாற்றத்தில் ஈடுபட்டு மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த வேதியியல் மாற்றத்தின் விளைவாக ரயிலில் இருந்து நீராவியும், சிறிய அளவிலான நீரும் வெளியேற்றப்படும். ஆனால் எந்தவிதத்திலும் கரியமில வாயு உருவாகாது.

இந்த ரயிலுக்கு "கொராடியா ஐலின்ட்" என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு டேங்கர் ஹைட்ரஜன் மூலம் ஆயிரம் கி.மீ வரை ரயிலை இயக்க முடியும். ஹைட்ரஜன் மூலம் அதிகமான எரிசக்தி, மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால், அவை அனைத்தும் பேட்டரியில் சேமிக்கப்படும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற 14 ரயில்களைத் தயாரிக்க ஜெர்மனி முடிவு செய்துள்ளது. டீசல் ரயில்எஞ்சின்களை ஒப்பிடும் போது இந்த ரயில் மிகவும் விலை அதிகம் என்கிற போதிலும், பேட்டரிகளை ரீசார்ஜ் செய்வதன் மூலம் நீண்ட ஆண்டுகளுக்குப் பயன்படுத்த முடியும், செலவும் டீசல் எஞ்சின்களோடு ஒப்பிடும்போது குறைவாகும்.

tttjpg
 

இந்த ரயில் விரைவில் இங்கிலாந்து, நெதர்லாந்து, டென்மார்க், நார்வே, இத்தாலி, கனடா ஆகிய நாடுகளிலும் சோதனை ஓட்டத்துக்குச் செல்ல இருக்கிறது. இந்த ரயிலை சாதாரண தண்டவாளங்களில் இயக்க முடியும்.

இதுகுறித்து அல்ஸ்டாம் நிறுவனத்தின் சிஇஓ ஹென்ரி பாப்பார் லாபார்ஜ் கூறுகையில், உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். 2021-ம் ஆண்டில் உலகளவில் இந்த ரயில் பெரும் புரட்சியை செய்ய இருக்கிறது எனத் தெரிவித்தார்.

https://tamil.thehindu.com/world/article24979375.ece

இந்திய நாளிதழ்களில் ......'இஸ்லாமியர்கள் வேண்டாமென கூறும் நாளில் இந்துத்துவா இல்லாமல் போகும்'

20 hours 57 minutes ago
'இஸ்லாமியர்கள் வேண்டாமென கூறும் நாளில் இந்துத்துவா இல்லாமல் போகும்' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சில முக்கிய இந்திய நாளிதழ்களில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - மோகன் பகவத் பேச்சு படத்தின் காப்புரிமைGETTY IMAGES "நமது நாடு ஓர் இந்து தேசம் என்று கூறுவதால் அதில் இஸ்லாமியர்களுக்கு இடம் இல்லை என்று பொருள் ஆகிவிடாது," என்று புது டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். "இஸ்லாமியர்கள் வேண்டாம் என்று கூறும் நாளில் இந்துத்துவா இல்லாமல் போய்விடும்," என்றும் அவர் அந்நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இந்திய அரசியலமைப்பு என்பது இந்நாட்டின் மனசாட்சி என்றும், ஆர்.எஸ்.எஸ் அரசியலைப்புக்கு உண்மையானதாக இருக்கிறது என்றும் பகவத் பேசினார். தி இந்து - ரஃபேல் விவகாரம் இந்திய விமானப் படைக்கு ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைப்பதில் மத்திய அரசுக்கு ஏன் தயக்கம் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய தலைமைத் தணிக்கை அலுவலகம் மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஆகியவற்றை அணுகப் போவதாகவும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.ஆண்டனி கூறியுள்ளார். தி டைம்ஸ் ஆஃப் இந்தியா: கிரிக்கெட்- ஹாங்காங் அணியை போராடி வென்ற இந்தியா படத்தின் காப்புரிமைAFP / GETTY IMAGES ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் செவ்வாய்க்கிழமை நடந்த லீக் போட்டியில் ஹாங்காங் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ள செய்தியை 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் வெளியிட்டுள்ளது. முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பு 285 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் 127 ரன்கள் எடுத்தார். 286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது ஆட்டத்தை தொடங்கிய ஹாங்காங் அணி, மிக சிறப்பான தொடக்கத்தை பெற்றது. முதல் விக்கெட்டை எடுக்க இந்திய பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை என்பதையும் 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. முதல் விக்கெட்டுக்கு 174 ரன்களை எடுத்து இந்திய அணிக்கு ஹாங்காங் அதிர்ச்சியளித்தது. பின்னர் ஹாங்காங் அணியின் விக்கெட்டுகள் வரிசையாக சரிய, இந்தியா 26 ரன்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று (புதன்கிழமை) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது என அந்த நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளது. தினத்தந்தி - ஸ்டெர்லைட் ஆய்வுக்கு எதிர்ப்பு நிர்வாகப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்ததை மறுபரிசீலனை செய்யக்கோரும் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தக்கூடாது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் குழு வரும் 22ஆம் தேதி முதல் ஆலையைப் பார்வையிட முடிவு செய்துள்ளது. தினமணி - தமிழகத்துக்கு நிலக்கரி படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழகத்துக்கு தினமும் 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக, மாநில மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கடும் மின்பற்றாக்குறையை நோக்கிச் செல்கிறதா தமிழ்நாடு? மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பியூஷ் கோயலை டெல்லியில் சந்தித்தபின் அவர் இவ்வாறு கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/india-45570021

புலிகள் அமைப்பின் தலைவர் பிர­பா­க­ரன் விஷ­ ஜந்து- டக்ளஸ் தேவா­னந்தா!!

20 hours 57 minutes ago
இவ்வளவு நல்லவராக மனிதகுலத்திற்கே தெய்வம்போல் இருக்கும் உங்கள அதே கொடிய பிரபாகரனால் ஆளப்பட்ட யாழ்மக்கள்,அவர் இல்லாத இந்த நேரத்தில்கூட உங்கள ஏன்அவர்கள் முதல்வராக்கல்ல எண்டு இந்தியாக்காரன் கேட்கலையா செயலாளர் நாயகம் அவர்களே...

நலம் நல்லது!

21 hours 1 minute ago
சர்க்கரை நோய்க்கு மரபணுவே காரணம் இன்று 2 ஆம் வகை சர்க்கரை நோய் வருவதற்கு பாரம்பரிய மரபணு, மன அழுத்தம், வாழ்க்கை நடைமுறை மாற்றம், உணவு முறை மாற்றம் என பல காரணங்களைச் குறிப்பிடலாம். தற்போது வைத்தியத்துறையில் உள்ளவர்களே தங்களுக்கு தொழுநோய், காசநோய் போன்ற நோய்கள் கூட வரலாம். ஆனால் சர்க்கரை வியாதி மட்டும் வரவேக்கூடாது என்கிறார்கள். ஏனெனில் சர்க்கரை நோய் வந்துவிட்டால் தலைமுதல் உள்ளங்கால் வரை எந்த பகுதி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு வரலாம். இதற்காக அவர்கள் வருமுன் காக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். நோயாளிகளுக்கு முன்னூதரணமாக இருக்கிறார்கள். உணவு மற்றும் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மூன்று மாதத்திற்கு ஒரு முறை முறையான பரிசோதனை இந்த திட்டத்தை உறுதியாக கடைபிடித்தால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கலாம். சிலருக்கு இதனுடன் மருந்து மாத்திரைகளும் தேவைப்படலாம். அதையும் எடுத்துக் கொள்ளலாம். இரவு பதினோரு மணி முதல் காலை ஐந்து மணி வரை கட்டாயம் உறங்கவேண்டும். சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதை பூரணமாக குணப்படுத்த இயலாது. இதய பாதிப்பு, இரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற நோய்களுடன் எப்படி வாழ்க்கையை மருந்து, மாத்திரை, கட்டுப்பாடு என கழிக்கிறோமோ அதே போல் சர்க்கரையின் அளவையும் ஆயுள் முழுவதும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டே வாழ்க்கை கடக்கவேண்டும். ஆனால் இதையெல்லாம் எமக்கு வராது என்று மனக்கட்டுப்பாடுடன் இருந்தால், அவர்களுக்கு கண் பாதிப்பு, கால் பாதிப்பு, இதயப் பாதிப்பு, இரத்த குழாய் பாதிப்பு, இரத்த நாள பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு என எல்லா பாதிப்புகளும் உறுதியாக வரக்கூடும் என எச்சரிக்கிறார்கள் வைத்தியர்கள். டொக்டர் எஸ் கண்ணன் தொகுப்பு அனுஷா. http://www.virakesari.lk/article/39905 இரைப்பை பாதிப்புக்கான அறிகுறிகள் சிலருக்கு அதிகமாகப் பசிக்கும். நிறைய உட்கொள்ள மீண்டும் பசிக்கும். மீண்டும் உட்கொள்ள விரும்புவர். இது குறித்து வைத்தியரிடம் சென்று விசாரித்தால் இரைப்பை பாதிக்கப்பட்டிருக்கிறது என்பார்கள் அல்லது இரைப்பையில் புண் ஏற்பட்டிருக்கிறது என்பார்கள். அசுத்தமான குடிநீர், சுகாதாரமற்ற குடிநீர் ஆகியவற்றில் helocobacter pylori என்ற பாக்டீரியா தொற்று இருக்கும். இது குடிநீரின் வழியாக உடலுக்குள் சென்று இரைப்பையில் புண்ணை ஏற்படுத்தும். மது அருந்துவது, புகைப் பிடிப்பது, காரம் நிறைந்த உணவையும், புளிப்பு சுவையுள்ள உணவையும் அதிகமாக உட்கொள்வது, குளிர்பானங்கள், கோப்பி, தேத்தண்ணீர் போன்றவற்றை அதிகளவில் அருந்துவது, அதிகளவில் தொடர்ச்சியாக வலிநிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொள்வது போன்ற பல காரணங்களால் இரைப்பையில் புண் ஏற்படக்கூடும். அமிலச்சுரப்பு அதிகமாக இருப்பதாலேயே இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாக அண்மையில் கண்டறியப்பட்டிருக்கிறது. இத்தகைய பாதிப்பு வந்தவுடன் கேஸ்ட்ரோ எண்டாஸ்கோப்பி என்ற பரிசோதனையை மேற்கொள்வார்கள். இதன் மூலம் இரைப்பையில் புண்ணை ஏற்படுத்திய helocobacter pylori என்ற கிருமிகளை எதிர்த்து போராடும் கிருமி நாசினிகளின் எண்ணிக்கையும் கண்டறிவார்கள். பிறகு அதற்கேற்ற வகையில் சிகிச்சையளித்து இதனை குணப்படுத்துவார்கள். பிறகு மருத்துவர் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை உறுதியாக பின்பற்றவேண்டும். அப்போது தான் இதனை மீண்டும் வராமல் தற்காத்துக் கொள்ள இயலும். http://www.virakesari.lk/article/40479