Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 143 online users.
» 0 Member(s) | 140 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,272
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,225
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,602
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,617
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,043
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,455
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,464
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237

 
  நண்பர்களே
Posted by: Shankarlaal - 02-05-2006, 10:18 PM - Forum: அறிமுகம் - Replies (40)

எனது பெயர் சங்கர்லால். நான் இதுவரையில் உங்கள் களத்தின் பார்வையாளராகவே இருந்தேன். இன்று என்னை ஏதோ ஒரு சக்தி உந்தியதால் உங்களிடமே நேரடியாக சரணடைகிறேன்... சரணடையும் என்னை உங்கள் மனமாற வரவேற்பீர்களா...
சரணம்!!!!!!!சரணம்!!!!!!!!!!!!சரணம்!!!!!!!!!

Print this item

  இப்படியும் நடக்கிறது.
Posted by: ஊமை - 02-05-2006, 09:29 PM - Forum: புலம் - Replies (6)

<span style='font-size:30pt;line-height:100%'>ஜேர்மனியிலே தமிழனுக்கு தமிழனால் நடந்த ஒரு அவலம் உண்மைச்சம்பவம்.</span>


ஜேர்மனியிலே குறிப்பிட்ட ஒரு நகரத்திலே ****** என்ற ஈழத்தமிழன் பல வருடங்களாக வசித்து வருகிறார். அவர் ஜேர்மனியிலே வசித்துவரும் தமிழ் ஈழத்து மக்களுக்கு இதுவரை காலமும் பல வழிகளிலே உதவிகள் செய்து வந்துள்ளார். இவரிடம் ஜேர்மனியில் ஒரு உணவகம் வைத்திருக்கும் ஈழத்தமிழர் ஒருவர் பண உதவியும் பெற்றுள்ளார். பின்னர் இவர் அவரிடம் தனது பணத்தை திருப்பி கேட்ட போது. தான் பட்ட கடனை கழித்துக்கொண்டு மிகுதிப் பணத்தை தந்துவிட்டு தனது உணவகத்தை இவர் பொறுப்பேர்க்கச் சொல்லியிருக்கிறார். இவரும் தான் கொடுத்த கடனை கழித்துக்கொண்டு மிகுதிப்பணத்தை உணவக உரிமையாளரான கடனாளியிடம் கொடுத்துவிட்டு உணவகத்தை பொறுப்பேற்றுக்கொண்டார்.


இங்கு புலம் பெயர்ந்த நாடுகளில் தொழில்களோ எதுவோ பெரும்பாலும் உடன் பாடுகளின் (எக்றிமென்ட்) அடிப்படையிலே தான் ஆரம்பிக்க முடியும் அது உங்களுக்கு தெரிந்ததே. இவரும் கடனாளியும் உடன்பாட்டு அடிப்படையிலே கடையினை பெயர் மாற்றம் செய்யவேண்டும் அதற்கு கடனாளி மிகப்பெரிய நாடகம் ஆடினார்.

கடன் கொடுத்தவர் சிறிது மதுப்பழக்கம் உடையவர் அவர் மது போதையில் இருக்கும் நேரம் பார்த்து உடன் பாட்டை செய்யும் நோக்கோடு மது பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்து அந்த பார்ட்டியிலே இவருக்கு அவருக்கும் உடன் பாடு பரிமாறப்பட்டதாம். அந்த உடன் பாட்டிலே கடனாளி முன்னர் கடை சம்பந்தமாக பெற்ற கடன்களுக்கு இவரே பொறுப்பு என குறிப்பிடப்பட்டிருந்தது. இவரும் மது போதையில் நண்பன் தானே என நினைத்து உடன் பாட்டை முழுமையாக வாசிக்காது கையொப்பம் இட்டு விட்டார்.

இன்று நிலமை விபரீதம் ஆகிவிட்டது முன்னர் இருந்த கடை உரிமையாளருக்கு ஒரு இலட்சத்து முப்பது ஆயிரம் யூரோக்கள் (130,000) கடன் இப்பொழுதோ இந்த பாரிய தொகை இவரின் தலையிலே விழுந்துள்ளது. இந்த கடனை கட்ட முடியாமல் இவர் கடையைப் பூட்டி விட்டார். இதுவரை சேர்த்துவைத்த பணமும் போய் இப்பொழுதோ 130,000 ஆயிரம் யூரோக்களுக்கு கடனாளியாகிவிட்டார்.

கவனம் உடன் பிறப்பு என நினைத்து ஏமாராதீர்கள்.

Print this item

  தமிழீழ வைப்பகம்
Posted by: Mathuran - 02-05-2006, 08:35 PM - Forum: தமிழீழம் - Replies (23)

<img src='http://img438.imageshack.us/img438/1650/photo50wa.jpg' border='0' alt='user posted image'>
நம்பிக்கையின் ஒளி தமிழீழ வைப்பகம்.


நன்றி http://www.pathivu.com/

Print this item

  பாலா சோல்கைம் நாளை முக்கிய சந்திப்பு
Posted by: ஊமை - 02-05-2006, 08:24 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - Replies (1)

Solheim to meet Balasingham Monday

[TamilNet, February 05, 2006 16:36 GMT]
Norway's Minister of International Development, peace envoy, Erik Solheim, is scheduled to meet LTTE's Chief Negotiator and Political Strategist Mr. Anton Balasingham at Balasingham's London residence Monday, sources in London said. Norwegian Minister is expected to announce the date of the talks in Geneva between the Government of Sri Lanka and the Liberation Tigers after the meeting, diplomatic sources in Colombo said.

The main focus of the London meeting is to finalize the dates.

Mr Solheim is said to be carrying the GoSL's suggestions related to the Geneva dates.

Meanwhile, informed sources in Colombo said LTTE was not happy with Sri Lanka Government not following diplomatic protocol of allowing the Norwegians to announce the dates of the Geneva meet.

Sri Lanka Government ministers went public with 15th and 16th as the dates for Geneva talks.

ஆதாரம்

Print this item

  இந்தியத் தொலைக்காட்சிகளில் கடைசி முறையாக...
Posted by: SUNDHAL - 02-05-2006, 06:12 PM - Forum: நகைச்சுவை - No Replies

இந்தியத் தொலைக்காட்சிகளில் கடைசி முறையாக...

கற்பனை: முகில்

பத்து வருசத்துக்கு மேல ஆச்சுப்பா. நம்ம கேபிள் டீவி சேனலெல்லாம் ஆரம்பிச்சு. இருந்தாலும் பல வருசங்களா ஒரே பாணி நிகழ்ச்சிகள் வந்து நம்ம வீட்டு டீவி ஸ்கீரின்ல விடிஞ்சிக்கிட்டுத்தான் இருக்கு. அப்படி தலைவிதியேன்னு நாம பார்த்துத் தொலைக்கிற நிகழ்ச்சிகளோட டாப் 10 லிஸ்ட்தான் இது. இந்தக் கட்டுரையில் வரும் நிகழ்ச்சிகளின் பெயர்கள் யாவும் கற்பனையே.

பத்தாவது:

இந்தக் கருமம் புடிச்ச நிகழ்ச்சிகள் லிஸ்ட்ல பத்தாவது இடத்துல இருக்குறது, திரைப்படமுங்கோ! "இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக'ன்னோ, "உலகத் தொலைக்காட்சிப் புவியியலில் முதன் முறையாக'ன்னோ ஆரம்பிப்பாய்ங்க. "திரைக்கு வந்து பல மணி நேரங்கள் ஓடிய'ன்னு வேற சேர்த்துக்குவாங்க. ஏகப்பட்ட வெட்டு, கட்டுகளோட அந்தப் படம் நாலு மணி நேரம் ஓடும். படத்தை விட நெறைய நேரம் துட்டுக்காக வெளம்பரம்தான் ஓடும். அப்புறம் அந்தப் படம் "காமெடி திங்கள்', "லவ்வு செவ்வாய்', பாடாவதி புதன்', "அய்யோ அம்மா வியாழன்', "வெங்காய ஹிட் வெள்ளி'ன்னு எல்லா நாளும் ரீலு அந்து போற அளவுக்கு ஓடும். எப்படா இந்தப் படத்தை "இந்தியத் தொலைகாட்சிகளில கடைசி முறையாக'ன்னு ஒளிபரப்புவாய்ங்கன்னு நம்மளை நெனைக்க வைச்சுருவாங்க.

ஒம்பதாவது:

"ஏ வாங்க வாங்க..வாயு பித்தம் கபம் அஜீரணம் எல்லாத்துக்கும் ஒரே மருந்து இந்த வேர்தான் சார். கபடதுபட வேர். கரக் முரக்னு கசக்கிப் பிழிஞ்சு இதோட சாறைக் குடிச்சாப் போதும். கேஸ் எல்லாம் ஈஸியா பாஸ் ஆகும். லைஃப் பீஸ்புல்லா இருக்கும்'னு பிதாமகன் சூர்யா மாதிரி ஆட்கள் ரோட்டோரமா விக்கிற சரக்கை, கோட், சூட், கூலிங்கிளாஸ் சகிதமா குதிரை மேல ஏறி வந்து டீவியில விப்பாங்க சில ஆட்கள். இவங்க கொடுக்குற காசை வைச்சுத்தான் சில டீவி சேனல்களே ஓடுதுன்னா பார்த்துக்கோங்களேன். இவங்களோட கஸின் பிரதர்ஸ் சிலரு இருக்காய்ங்க. அவங்க பண்ணுற புரோகிராம் என்னன்னு தெரியுமா? ஆங், அதேதான். பச்சக்கல், சிவப்புக்கல், கருங்கல், செங்கல், விக்கல், நக்கல் இப்படி எல்லாத்தையும் கலக்கலா காட்டி "கல்லா'வை நிரப்புற வியாபாரிங்க அவங்க. டார்ச்சர்டா சாமி! டெலிமார்கெட்டிங்கும் இதே வகையறாதான்னு தனியா சொல்லணுமா என்ன!

எட்டாவது:

தவில் அடிக்கிற ஆளு, கதை கட்டுற ஆளு, கண்ணீர் சிந்துற மெகா நடிகை, துணிக்கடை அதிபரு -இப்படி பிரபலங்கள் எந்தத் துறையில இருந்தாலும் கூட்டியாந்து கையில கரண்டியைக் கொடுத்துருவாங்க. கேட்டா "சமையல் டைம்'ன்னு தாளிப்பாய்ங்க. குழிக்கரண்டி, கொத்துக்கரண்டி, ஆப்பச்சட்டி, அகண்ட சட்டின்னு விதவிதமாக் காண்பிப்பாங்க. ஆனா அடுப்பப் பத்த வைச்சிருக்காங்களான்னுதான் தெரியாது. "உப்பு ரொம்ப உப்பா இருக்குங்கறதால நீங்க உப்பை லேசா யூஸ் பண்ணுனாப் போதும்'ன்னு கூட உதவிக்கு காம்பியரிங் பண்ண ஒரு தொகுப்பாளினி வேற படுத்தும். கடைசியா பிளேட்ல இருக்குற பதார்த்தத்தைத் தலைவிதியேன்னு தின்னுட்டு, "சூப்பரா இருக்கு'ன்னு ஒரு நடிப்பு நடிக்கும் பாருங்க. சான்úஸ இல்ல!

ஏழாவது:

எல்லாச் சேனலும் விடாம தொரத்தித் தொரத்திப் பண்ணுற சினிமா விமர்சனத்துக்குத்தான் ஏழாவது இடம். குறைப்பார்வை, நிறைப்பார்வை, வேண்டிய பார்வை, வேண்டாத பார்வைன்னு பல தினுசு இதுல உண்டு. சேனல், அது சார்ந்த கட்சி, அது சார்ந்த ஹீரோ, இதைப் பொருத்துதான் விமர்சனமும், கெüன்ட்டெüன் லிஸ்டும் அமையுங்கிறது டீவி ரிமோட்டுக்குத் கூடத் தெரிஞ்ச உண்மை. அதுலயும் பல படங்களுக்கு முதல்நாளே படம் பார்த்துட்டு வெளியே வர்ற விசிலடிச்சான் ரசிகர்கள்கிட்ட மட்டும் கருத்துக் கேப்பாய்ங்க. "தலீவரு

கலக்கிப்புட்டாருல்ல'ன்னு அவிங்களும் அளப்பானுக. அதை நம்பி தியேட்டருக்குப் போனா

நம்ம தலைவிதி "டார் டார்' ஆயிடும். படத்தைவிட, சில நேரம் டைரக்டரைக் கூட்டியாந்து உட்காரவைச்சு கலாய்ப்பாங்க பாருங்க, அதுதான் சூப்பரா இருக்கும்பா!

ஆறாவது:

ஆறாவது இடத்துல இருக்குற நிகழ்ச்சி என்னன்னு தெரியுமா..வந்த்த்த்தோமாதரம்... தாய் மண்ணே வணக்கம். அந்த டைப் நிகழ்ச்சிங்கதான். ஊர் ஊராப் போய் கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து, அரங்கத்தைக் கூட்டிருவாய்ங்க. இதுல கலந்துகிட்டுப் பேசணும்னா ஒரே ஒரு தகுதிதான். கரண்ட் கட் ஆகி மைக் ஆஃப் ஆனாலும் மைக் இருக்குற சவுண்டலயே பேசத் தெரியணும். அதுபோக நாலு திருக்குறள், ரெண்டு பாரதியார் கவிதை, முணு குட்டிக்கதை தெரிஞ்சு வைச்சுக்குறது ப்ளஸ் பாயிண்ட். உங்க வாழ்க்கையில சோகமே இல்லாட்டியும், பெரும் சூறாவளியே கடந்து போன மாதிரி ஒரு கதையை நெசம் போலவே சொல்லத் தெரியணும். ஏன்னா அப்பத்தான் புரோகிராம் நடத்துற பெரியப்பா டர்க்கி டவலால வாயைப் பொத்தி அழறதுக்கான சிச்சுவேஷன் கிடைக்குமுங்கோ!

அஞ்சாவது:

"குப்பாப்பட்டி கிராமம். அன்று காலை. வழக்கம்போல அவசரத்துக்கு வயலுக்கு ஒதுங்கப் போன சிவனாண்டியின் சொம்பைக் காணவில்லை. குத்தம். ஓடியது என்ன?' -இப்படித்தான் ஆரம்பிப்பாய்ங்க. "நம்மகிட்ட நாலு சொம்பு இருக்குங்க. அதுல பொத்தல் விழுந்த அந்தச் சொம்பைத்தான் என் பாட்டன் காலத்துல இருந்து குடும்பத்துல மூத்த புள்ளைக உபயோகிக்கிறோம். "அப்படிம்பாரு சிவனாண்டி. அப்படி பத்து நிமிஷம் சொம்பைச் சுத்தி கதை ஓடும். "சொம்பை அடகு வைச்சு சரக்கு அடிக்கலாமுன்னுதான் திருடுனேன்'னு குத்தம் செஞ்ச புலிப்பாண்டி கொஞ்ச நேரங் கழிச்சு பெருந்தன்மையா ஒத்துக்குவாரு. ஆனா இந்த நிகழ்ச்சியில பின்னால வாய்ஸ் கொடுக்கணும்னா நிரந்தரமா தொண்டை கட்டியிருக்கணும்போல. அப்பத்தான் மிரட்டலா இருக்கும்னு நெனைக்கிறாக. இதுல அப்பப்ப நடிகைங்க வீட்டுல நாய் காணாமப் போன சம்பவம் ஸ்பெஷல் எபிசோடா கூத்தடிக்குமுங்கோ!

நாலாவது:

காமெடி புரோகிராமுன்னு சொல்லி வெளம்பரப்படுத்தி அடிக்கடி ஞாபகப்படுத்துவாங்கோ. சரி சிரிக்கலாம்மேன்னு நாமளும் அந்தப் புரோகிராமை நம்பிப் பார்த்தா, எங்கங்க நாம சிரிக்கணும்னு ஞாபகப்படுத்த, நாலு பேர் சிரிக்கிற சவுண்டையும் அவிங்களே அங்கங்க போட்டுக்குவாய்ங்க. பெத்தவங்களைத் திட்டுறது, மத்தவங்களைத் திட்டுறது, செத்தவங்களைத் திட்டுறது, ஊத்திக்கிறது, உளர்றது இதுதான் காமெடின்னு நெனைச்சிக்கிட்டு இவங்க பண்ணுற லொள்ளு இருக்கே, தாங்க முடியலடா சாமி!

மூணாவது:

மெகா சீரியலுக்கு மூணாவது இடமுங்கோ! எல்லா உறவு முறையையும் தலைப்பா வைச்சு சீரியல் வந்துடுச்சு. இனிமே "பக்கத்து வீட்டுப் பெரியம்மா', "எதிர்த்த வீட்டுச் சித்தி'ன்னுதான் தலைப்பு வைக்கணும். "அப்பா'ன்னு ஒரு சீரியலை நீங்க பத்து வயசுல பார்க்க ஆரம்பிச்சீங்கன்னா, நீங்களே "அப்பா' ஆகுற வரைக்கும் அந்த சீரியல் ஓடும். அதோட நிறுத்துவாங்களா, மாட்டாங்க. மிட்நைட் ஒரு மணிக்கு அதே சீரியலை மறு ஒளிபரப்பு வேறே பண்ணுவாய்ங்க! மார்க்கெட் போன கோலிவுட் அக்கா நடிகைங்க எல்லாம் ஆளுக்கொரு சீரியல்ல "நடமாடும் பெண் தெய்வங்களா' திரிஞ்சுக்கினு இருக்காங்க. நம்மளோட அன்றாடப் பிரச்சினைகளோட அபி, செல்வி, காஞ்சனா, கல்கி, சரசுன்னு பல பேரோட பிரச்சினைகளையும் சுமந்துக்கிட்டு வாழுறோமே நாமெல்லாம் டபுள் கிரேட்!

ரெண்டாவது:

லாங் லாங் அகோ ஆரம்பிச்சுது, "சாங்கை டெடிகேட் பண்ணுற' இந்த டைப் நிகழ்ச்சிசங்க. "உதறிட்டுப் போன காதலிக்கு', "உசிரை விட்டுப் போன பாட்டிக்கு'ன்னு போன் பண்ணி பாட்டுக் கேக்குறதையே பல பேர் முழு நேரத் தொழிலா வைச்சிருக்காங்க. "இந்த ஜென்மத்துல உங்க கிட்ட நான் பேசுவேன்னு நெனைச்சுசேப் பார்க்கல', "உங்க லைனுக்காக பொறந்ததுல இருந்தே ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன். "நீங்க ஐஸ்வர்யா ராய் மாதிரியே இளிக்கீங்க'ன்னு ஸ்டாண்டர்டா சில வசனங்கள் ரீப்பீட் ஆகிட்டே இருக்கும். அதுவும் தொகுப்பாளினிங்க பேசுற டமிலைக் கேக்கறப்போ, அவங்க நாக்கை இழுத்து வைச்சு வசம்பை எடுத்து "நறநற'ன்னு தேய்க்கணும்னு வெறி வரும் நமக்கு. கல்லறைல புதைஞ்சு போனவங்கிட்ட கூட இவங்க பேசுறது ஒரே வசனம்தான். "கீப் டிரையிங்கு. கீப் ஆன் டிரைங்யிங்கு!'

மொதலாவது:

எந்த நிகழ்ச்சியாலயும் அடிச்சுக்கவே முடியாத நெம்பர் ஒன் இடத்துல இருக்குற நிகழ்ச்சி ஒண்ணு, ஒண்ணரை, ஏழரை, எட்டு செய்திகள்தான். ஏழரையைக் கேக்குறவன், எட்டைக் கேட்காம வுட்டா அஜீரணக் கோளாறு வந்துடும். ஆனா ரெண்டையும் கேக்குறவன் அரை லூஸô மாறிடுவாங்குறதும் உண்மை. மீதி சேனல் நியூசைக் கேக்கலாமுன்னு பாத்தா அதுல அப்படியொரு நியூசே வராது. எல்லாத்தையும் தாண்டி நடுநிலைமை செய்திகள் தெரிஞ்சுக்கணும்னா ஒரே வழிதாங்க இருக்கு. டீவியை வீட்டுல நடுவுல வைச்சிருங்க. "மியூட்'ல வைச்சிருங்க. டீவிக்கு பின்னாடி நீங்க உட்கார்ந்துக்கோங்க. செய்தி கேளுங்க. இப்ப எப்படி இருக்கு!

Print this item

  நீங்கள் இறக்கும் திகதியை அறிந்து கொள்ள வேண்டுமா?
Posted by: arun - 02-05-2006, 05:48 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (38)

இங்கே அழுத்தவும் http://www.deathclock.com/

Print this item

  A guerrilla group in Sri Lanka has threatened to attack
Posted by: வினித் - 02-05-2006, 04:54 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

A guerrilla group in Sri Lanka has threatened to attack troops because of the government's "crackdown" on Tamil civilians in the north and the east.

The People's Army, which has claimed responsibility for a series of attacks in the island in December, made the announcement on a Tamil website.

It comes at a time when the government and the Tiger rebels are deciding on dates for a meeting in Switzerland.

A Tamil Tiger spokesman said the group was not associated with the rebels.

If the group carries out its threat it would end a lull in killings and threaten peace talks between the government and the Tamil Tiger rebels.

The Norway-brokered talks are being held against a background of an increase in violence.

In its statement, the People's Army accused the Sri Lankan government of carrying out attacks on Tamil civilians and increasing searches and arrests in the north and east.

It said it would respond with operations against the military soon.

The government has denied the allegations.

'Popular uprising'

Speaking to the BBC, a spokesman for the Tiger rebels, Daya Master, said the People's Army was not a part of the organisation.

He said it was a popular uprising, but few in the government will believe such denials.

The threat reflects increasing tension that could yet scupper the peace talks due later this month.

The agreement from the government and Tiger rebels to attend a meeting in Geneva was brokered by a Norwegian peace envoy, Erik Solheim, in January.

It brought a lull in a series of killings that began in December and left at least 120 people dead and stretched the 2002 ceasefire to near breaking-point.

But last week the Tiger rebels said the talks were threatened by the abduction of 10 staff from a Tamil charity, three of whom were later released.

The rebels blamed a breakaway faction led by a former Tiger commander that they claim is now fighting with the government.

Both sides are jockeying for position ahead of what could be a return to either the negotiating table or full-scale war.

More than 64,000 people have died in two decades of fighting between the government and the rebels.



http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/4682982.stm

Print this item

  வாழ்க்கையை கற்றுத்தருகிற பூமி 'தமிழீழம்' இயக்குநர் மகேந்திரன
Posted by: vasanthan - 02-05-2006, 04:45 PM - Forum: சினிமா - No Replies

[b][size=18]வாழ்க்கையை கற்றுத்தருகிற பூமி 'தமிழீழம்' இயக்குநர் மகேந்திரன் பேட்டி


--------------------------------------------------------------------------------



சமீபத்தில் சினிமாவை சொல்லித்தர தமிழீழம் சென்று வந்திருக்கிறார் டைரக்டர் மகேந்திரன்.. தமிழ் சினிமாவின் பல விதங்களை விமர்சித்து நம்மிடம் பேசியனார் அனலும் சாந்தமும் சூடும் பறந்த பேட்டியிலிருந்து

விரைவில் 'சாசனம்' வெளிவரப்போகிறதா சந்தோஷமாக இருக்கு...

அப்படியரு சூழ்நிலை வந்திருக்கு. எதுவும் சுமூகமான நிலைக்கு சம்பந்தமில்லாத நிலையில் இல்லை. தமிழ்நாட்டிலேயே முழுக்க முழுக்க ராஜ அம்சம் கொண்ட பகுதி செட்டிநாடு நகரத்தார்களின் வாழ்க்கை தான் கதை. அவர்களின் பழக்கவழக்கங்கள் பளீரென்று எதையும் பெரிதாகச் செய்கிற பதவிசு எல்லாமே என்னை ஆச்சர்யப்படுத்தியிருக்கு. வானவில் மாதிரி வெளிச்சமும் நீரும் ஒளிந்து விளையாடுகிற விளையாட்டு இருக்கே கொஞ்சநேரம் ஆச்சர்யப்படுத்துகிற நேரத்திற்கு நின்னு பாத்திட்டு போலோமே அதுமாதிரி இந்தப்படத்தில் நடத்திருக்கு. அரவிந்தசாமியும் கௌதமியும் ரஞ்சிதாவும் வேறொரு வாழ்க்கையை வாழ்ந்து இருக்காங்க. கடைசி கடைசியாக நாமும் நகரத்தார்களின் மென்மையான வாழ்க்கையை பதிவு செய்திட்டோம். நியாயம் செய்திட்டோம் என்ற சந்தோஷம் வருது. அந்த சந்தோஷம் உங்களுக்கு வந்துவிட்டால் இது ஒரு வெற்றிப்படம். இதில் நடிக்கிற ஒவ்வொருவருக்கும் தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.

இவ்வளவு விற்பன்னர்கள் அற்புதமான டெக்னிஷியன்கள் இருந்தும் தமிழ்சினிமா பெரிய ஏன் அளவுக்கு போனதில்லை?

நல்ல சினிமான்னு நினைச்சாலே போதும். இங்கே பெரிய வேடிக்கை என்னவென்றால் நம்ம டெக்னிஷியன்கள் யாருக்கும் எந்த விதத்திலும் குறைந்தவங்க கிடையாது. அப்படியிருந்தும் இன்னிக்கும் டி.வி.டி.யை பார்த்துத்தான் படம் பண்றோம். படம் பார்த்து படம் பண்றோம். சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன். அப்படியே அடிக்கு அடி காப்பி பண்ணி படம் செய்திருக்காங்க. அதை செய்திட்டு கதை வசனம் என்று வேறே பேரைப் போடுறாங்க. என்ன அசிங்கம். மேற்கொண்டு இங்கே ஆஸ்கார் அவார்டுக்கு வேறே போட்டி. ஆஸ்காரே பெரிய அவார்டு கிடையாது. கேன்ஸ் பட விழா தான் பெரிய அவார்டு. இதையே நம்ம ஆட்கள் இன்னும் புரிஞ்சுக்கலை. அதுதான் வேதனை. ஒரு எம்.ஜி.ஆர். சிவாஜி எங்கவாது பார்க்க முடிஞ்சதா? இளையராஜா மாதிரி மேதை இங்கே தானே கிடைச்சார். எவ்வளவு விஷயங்கள் கிடைத்தும்இ மேற்கொண்டு பயணம் போகாமல் அப்படியே உட்கார்ந்திருக்கோம்.

தமிழீழம் போய் இருந்திங்க போலேயிருக்கு?

அங்கே போனாலும் தமிழ்நாட்டில் இருக்கிற தமிழனுக்கு காதலைத் தவிர வேறு பிரச்சினையே இல்லையான்னு கேட்கிறாங்க. உங்களுக்கு பிரச்சினை எப்படியாவது ஐ லவ் யு சொல்லியாகணும். இதைத்தானே காட்டுறீங்கன்னு வேதனைப்படுறாங்க. 'உதிரிப்பூக்கள்' மாதிரி படம் காணோமே என்கிறார்கள். இன்னும் என்னைத் தாண்டி தமிழ்சினிமா வரவில்லையா என்று எனக்கே வேதனையாக இருக்கு. அவங்க வேதனை நியாயமாக இருக்கு. கேரள ஆடியன்ஸ் பாருங்கஇ அவங்களுக்கு time and money very precious இங்கே நம்முடைய ரசிகனுக்கு நேரத்தின் அருமையும் தெரியாது. பணத்தின் அருமையும் தெரியாது. அது அவங்க குற்றமில்லை. நாம் அதற்கு பழக்கப்படுத்தி வைச்சிருக்கோம். அதே சமயம் நம்ம ஆடியன்ஸிடம் ஒரு நல்ல குணம் உண்டு. ரொம்ப பரிட்சார்ந்த படங்களையும் பார்த்திருங்காங்க. மொழி புரியாமல்கூட பார்த்திருக்காங்க. இவங்க மட்டும் ஒரு தீர்மானத்திற்கு வந்துட்டாங்கன்னா நிச்சயம் நல்ல படங்கள் உருவாகும்.

தமிழீழத்தில் என்ன செய்தீர்கள்?

அங்கே கிளிநொச்சியில் ஆதவன் திரைப்படக்கல்லூரி இருக்கு. சினிமாவை சொல்லித்தர கூப்பிட்டாங்க. மூணு மாசம் போய் இருந்தேன். போரும் துப்பாக்கி வாசனையின் எச்சமும் இருந்தாலும் அங்கே சகஜவாழ்க்கை வந்துவிட்டது. தமிழ்வடிவத்தின் பலவித பிரிவுகளை ரசிக்க ஆரம்பிச்சிட்டாங்க. '1996' என்று அரைமணி நேரம் ஓடக்கூடிய படம் எடுத்தோம். நடிப்பென்றால் என்னவென்றே தெரியாத தமிழீழ மக்களை நடிக்கவச்சேன். அவங்க வாழ்க்கையை எடுத்து அவர்களுக்கே பாடம் சொல்லித்தந்தேன். 'நடிப்பு என்பது' பற்றி ஒரு புத்தகம் எழுதினேன். நின்னு நிதானிச்சு ஆழமாக வாழ்க்கையின் தரிசனத்தை தந்த இடம் தமிழீழம். பெரிய மரியாதையோடு என்னை வைச்சு நடத்தினாங்க. இங்கேயிருந்து பயணப்படுகிற தூரத்தில் இருந்துகிட்டு ரத்தமும் சதையுமாக வேறே மாதிரி வாழ்க்கை இருக்கு. வாழ்க்கையை கற்றுத்தருகிற பூமி தமிழீழம்.

நீங்க ஊருக்கு போயிருந்த சமயத்தில் விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்சிருக்கார்...

சினிமா எடுத்த ஒரு பாமரன் மாதிரித்தான் நான் பேசுறேன். பெரிய பெரிய கொள்கைகள் யோசனைகள் சொன்னவங்களை எல்லாம் பார்த்தாச்சு. கொள்கையின்னு சொல்லாமல் இருக்கிறதே பெரிய கொள்கையாக இருக்கு. கொள்கைன்னு சொல்லிட்டு உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று சொல்லிட்டு குடும்பத்திற்காகவே பாடுபடுறாங்க இல்லையா அப்படி எதுவும் சொல்லாமல் இருக்கார் இல்லையா அதுதான் சிறந்த கொள்கை. யார் வேண்டுமானாலும் சொல்லாமல் செய்தால் நல்லது. யார் வேண்டுமானாலும் சத்தம் போடாமல் நல்லது செய்திட்டுப் போங்கள். உரக்க சத்தம் போட்டு கூவிப் பார்த்து நமக்கே அலுத்துப்போச்சு இல்லையா.

உங்கள் மகன் 'சச்சின்' ஜான் பற்றி உங்க அபிப்பிராயம் என்ன?

அவன் சினிமா பக்கமே போகாமல் படிப்பு உண்டுஇ தான் உண்டுன்னு தான் இருந்தான். ராஜாதான் அவனை இசையில் அக்கறைப்பட வைச்சார். இன்னிக்கும் ஜான் இசையில் ரொம்ப நேர்த்தியானவன். எந்தப்பாடலை கேட்டாலும் எந்த இசையை கேட்க நேர்ந்தாலும் அதனோட ஆதி அந்தம் சொல்வான். அவனோட பலம் பலவீனம் எல்லாம் நான் டைரக்டராக இருப்பதுதான். என்னை மாதிரியே படம் எடுக்கணும்னு நினைப்பாங்க. இன்னொரு மகேந்திரன் எதுக்குன்னு நினைக்கமாட்டாங்க. விஜய் படக்கதையை நான் ஜான்கிட்டே கேட்கவும் இல்லை. அவன் சொல்லவும் இல்லை. அவன் படத்தில் சில குறைகள் இருந்தது. எல்லாவற்றையும் களைந்து அவன் சிறந்த டைரக்டராக வெளிப்படுவான்னு எனக்கு எண்ணம் இருக்கு.

இனிமேல் படங்களில் சிகரெட் பிடிக்கிற காட்சி இடம்பெறக் கூடாது என்று சட்டம் கொண்டு வரப்போறாங்க?

பெண்களை படங்களில் எவ்வளவு கீழ்த்தனமாக காண்பிக்க முடியுமோ அவ்வளவும் கூச்சப்படாமல் செய்கிறோம். டபுள்மீனிங் எல்லா குளோசப்பும் தொப்புளை நோக்கிப் போகுது. படங்களில் ஏராளமாக வன்முறையை அனுமதிக்கிறோம். ஆனால் நமக்கு என்னடா என்றால் புகைபிடிக்கக்கூடாது. ஒரு சர்வாதிகார நாட்டில் கூட இதுமாதிரி ஒரு சட்டம் கொண்டு வரமாட்டாங்க. மதுக்கடைகளை திறந்து வைச்சிருக்கோம். ஆனால் குடி குடியைக்கெடுக்கும் என்ற வாசகம். எங்கே பார்த்தாலும் சிகரெட் வகைவகையாய் கிடைக்கும். ஆனால் சினிமாவில் சிகரெட் பிடிக்கக்கூடாது. நிஜமாகவே சட்டம் போடுகிற ஆட்சியாளர்களை நினைச்சால் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.

இப்ப இருக்கிற இயக்குநர்களைப் பற்றிச் சொல்லுங்க?

பாலாகிட்டே இன்னும் நிறைய எதிர்பார்த்தேன். ஆனால் அவரைப்பருங்க புரடியூசராக மாறிக்கிட்டு இருக்கார். அதையும் தப்புச்சொல்ல முடியாது. நல்ல பெயரை கெடுத்துக்க வேண்டாம்னு நினைக்கலாம். சேரன் இன்னிக்கும் தனித்தன்மையோடு செயல்படுகிறார். இன்னிக்கு இருக்கிற சூழ்நிலையில் இதுவே பெரிய விஷயம். எஸ்.ஜே.சூர்யா பண்றது செக்ஸ் என்று சொல்கிறார்கள். அப்படியில்லை. மூடி மறைச்சு மூடி மறைச்சு என்னத்தைக் கண்டோம். அதை அவர் அழகுணர்ச்சியோடு செய்தால் போதும். ஆனால் அவர் எல்லாத்தையும் ஈஸியாக எடை போடுகிறார். நடிக்கிறதை விட டைரக்ஷனில் கவனம் செலுத்தினால் எஸ்.ஜே.சூர்யா அற்புதமாக வெளிப்படுவார். நல்ல கமர்ஷியல் படங்கள் செய்வது கஷ்டம். கே.எஸ்.ரவிக்குமார் அந்த விதத்தில் நேர்த்தி. அவரும் ரஜினியும் பிரிஞ்சதது மனசுக்கு கஷ்டமாக இருக்கு. இரண்டு பேரும் நல்ல காம்பினேஷன். கமர்ஷியல் சினிமாவில் ரவிக்குமார் ரஜினி காம்பினேஷன் அவ்வளவு கச்சிதம். ரஜினியை 100 சதவீதம் புரிந்தவர் ரவிக்குமார். ரஜினிக்கேற்ற மாதிரி நான் கூட கச்சிதமாக படம் பண்ணலை. இதை சாதாரணமாக படம் பார்க்கிற பாமரனாகப் பேசுறேன். டிக்கெட் வாங்கி படம் பார்க்கிற ஆளாகத்தான் பேசுறேன்.

இன்றைய நடிகர்களை யாரைப்பிடிச்சிருக்கு?

கார்த்திக் மாதிரி சிறந்த underplay பண்ற நடிகர் கிடையாது. அவர் இப்ப வில்லனாகப் பண்றாராம். சரி அதில் கூட வித்தியாசம் காட்டுவார். அமிதாப்பச்சன் மாதிரி இன்னும் இருபது வருஷம் கழிச்சு விக்ரம் வருவார்னு தோணும். எல்லா வேடங்களையும் அவரால் செய்ய முடியும். விஜய் வேறு வகை. அவரையும் குழந்தகளுக்கு பிடிக்குது. அவர் ரொம்ப மெனக்கெடாமல் மனசை கொள்ளை அடிச்சிட்டுப் போய்விடுவார். நம்பிக்கை அளிக்கிற இன்னொரு வரவு சூர்யா. எனக்கென்னவோ ஹீரோக்களை விட காமெடியன்களை மெச்சத்தோணும். தமிழ்நாட்டு காமெடியன்களை நாம் கொண்டாடணும். ரொம்ப நாளாக சிரிச்சு கைதட்டி அவங்களை மறந்திட்டு வர்றோம்.

குஷ்புவும் சுகாசினியும் ஏற்படுத்திய பிரச்சினைகள்...

எப்பவும் செய்தியில் அடிபடணும்னு சில பேர் நினைக்கிறாங்க அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி யாராவது குதர்க்கமாகப் பேசினால் நாம் சகித்துக்கொண்டே இருப்போம். இந்த மாதிரி பப்ளிசிட்டி தேடுகிறவர்களை பற்றி என்ன அபிப்பிராயம் சொல்ல.

_நா.கதிர்வேலன்


சுட்டது
ஏற்கனவே வந்திருந்தால் நீக்கி விடவும் http://www.kumudam.com

Print this item

  மகனை திருத்த தாய் கொடுத்த சாராயம்
Posted by: SUNDHAL - 02-05-2006, 04:08 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (6)

மகனை திருத்த தாய் கொடுத்த சாராயம்
நான் தினசரி குடிப்பது உண்டு. அன்று நல்ல மழை பெய்து கொண்டு இருந்தது. பாதி குடி போதையில் வீட்டுக்கு வந்தேன். எனது வீட்டில் மனைவி, பிள்ளைகள் அனைவரும் பக்கத்து தெருவில் ஒரு விஷேசத்துக்கு சென்று விட்டார்கள். வீடு பூட்டி இருந்தது.

அறைகுறை போதையில் இருந்த நானும் மேலும் ஒரு ரவுண்டு தண்ணி அடிக்க வேண்டும் என்று விரும்பினேன். எனது சட்டை பாக்கெட் காலியாக இருந்தது. வீட்டில் பணம் இருந்தும், வீடு பூட்டி இருப்பதால் அரை போதையில் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

எனது தாய் வேறு வீட்டில் தனியாக வசித்து வந்தார். இட்லி கடை நடத்தி அதில் வரும் வருமானத்தில் 100, 50 நோட்டுக்களை சுருட்டி தன் சுருக்குப் பையில் போட்டு வைத்து இருந்தாள். நான் கொஞ்ச காலம் என் தாயாரிடம் பேசமாட்டேன். எனது மனைவியும், பிள்ளைகளும் எனது தாயாரிடம் பேசுவார்கள். அரைகுறை போதையில் என் அம்மாவிடம் சென்று, ``50 ருபாய் கொடு'' என்றேன். எனது அம்மா குடிக்க தான் பணம் கேட்கிறேன் என்று என்னை திட்டியபடி, ``ஒரு காசும் கிடையாது'' என்று சுருக்குப்பையை காட்டினார். நான் `லபக்'கென்று பையை பிடுங்கிக் கொண்டேன். அதில் நிறைய பணம் இருந்தது. உடனே என் அம்மா பதறிப் போய், ``தம்பி பையில் ஒன்றும் இல்லை. பையை கொடுடா உனக்கு சாராயம் குடிக்கத்தானே பணம் வேண்டும். தருகிறேன் பையை கொடு'' என்று கெஞ்சியதும் நானும் பையை கொடுத்து விட்டேன்.

வீட்டில் இருந்த புதிய செல்வர் செம்பை கையில் எடுத்துக் கொண்டு என் தாயார் வெளியில் சென்றார். எங்கே போகறார் என்று எனக்குத் தெரியவில்லை. நேராக சாராயம் விற்பவனிடம் என் தாயார் சென்றுள்ளார். ``என் மகள் எவ்வளவு சாராயம் குடிப்பான். அந்த அளவு சாராயம் கொடு'' என்று கேட்டு இருக்கிறார். அவன் நான் எப்போதும் குடிப்பதை விட ஒரு கிளாஸ் கூடவே ஊத்தி கொடுத்து விட்டு, ``நீங்க காசு குடுக்க வேண்டாம். நான் உங்கள் மகனைப் பார்த்து வாங்கிக் கொள்கிறேன். பெத்த தாயையே சாராயம் வாங்க அனுப்பியவனை நான் சந்திக்க வேண்டும். அவனிடம் நாë பேசிக்கிறேன்'' என்று அனுப்ப விட்டான்.

எனது தாயார் கொண்டு வந்த சாராயத்தை குடிக்க செய்து, சாப்பாடு போட்டு, ``தம்பி போயி உன் பொண்டாட்டி பிள்ளையிடம் சண்டை சச்சரவு செய்யாதே'' என்று என்னை அனுப்பி வைத்தார்.

அதை நினைத்து வேதனைப்படுகிறேன். வெட்கப்படுகிறேன். எனது 45 வயதில் இது நடந்தது. அன்று முதல் இன்று வரை சாராயம் மற்ற மதுவகைகளை தொடுவது இல்லை. எது தீய செய்கையை மாற்றியது எனது தாயும் அந்த சாராய வியாபாரியும்தான். இப்போது எனக்கு 65 வயது.

Thanks:Thanthi...

Print this item

  புலிகளும், இந்தியப் பாதுகாப்பும் - 2
Posted by: வினித் - 02-05-2006, 03:45 PM - Forum: தமிழீழம் - No Replies

[b]புலிகளும், இந்தியப் பாதுகாப்பும் - 2

<img src='http://img476.imageshack.us/img476/623/national4mv.gif' border='0' alt='user posted image'>



தமிழ் ஈழம் அமைவதற்கு கடந்த காலங்களில் தடையாக இருந்த, தொடர்ந்து தடையாக இருக்கின்ற சில பிரச்சனைகள் பற்றி இந்தப் பதிவிலும், அடுத்து வரும் பதிவுகளிலும் எழுத முனைந்துள்ளேன்
<img src='http://img457.imageshack.us/img457/9326/sl5mq.gif' border='0' alt='user posted image'>

இலங்கை எப்பொழுதுமே இந்தியாவிற்கு தலைவலியாகவே இருந்து வந்திருக்கிறது. இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் 1971ல் நடந்த போரின் பொழுது பங்களாதேஷ் (கிழக்கு பாக்கிஸ்தான்) செல்லும் பாக்கிஸ்தான் விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்கு இலங்கையில் தான் தரையிறங்கின. அன்றைக்கு தொடங்கிய இலங்கை மீதான இந்தியாவின் அவநம்பிக்கை குறையவேயில்லை. பின் நாளில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கை அச்சத்தை ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் வலுப் பெற்றுக் கொண்டே இருந்தது. சிங்கள அரசும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியது. குறிப்பாக அமெரிக்காவின் ஜெனரல் வால்டர்ஸின் இலங்கைப் பயணம். வால்டர்ஸ் இந்திய எதிர்ப்பு உணர்வு கொண்டவர். அமெரிக்க இராணுவ மற்றும் உளவு அமைப்புகளின் பிரதிநிதியாக இந்தியா அவரை கருதியது. அவர் இலங்கைக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இராணுவ உதவிகளை பெற்று தர முயலுவதாக அப்பொழுது நம்பப்பட்டது. இந்தியா இலங்கை போராளிக் குழுக்களுக்கு வழங்கிய ஆதரவை அமெரிக்கா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முனைந்தது.

அமெரிக்காவை நோக்கி நகர்ந்த இலங்கையின் பார்வை தவிர 1980களில் வேகமாக வளர்ந்த இலங்கையின் பொருளாதாரமும் இந்திய உளவு நிறுவனமான ராவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. தெற்காசியாவில் உள்ள நாடுகளில் மத்தியில் இந்தியாவின் ஆளுமையை நிலைநாட்டும் நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த இருந்த ரா, இலங்கை மீது தன் கவனத்தை திருப்பியது.

இலங்கையில் அப்பொழுது நிலவிய சூழலும் ராவிற்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

இலங்கையில் இந்தியாவின் தலையீட்டை இரண்டு கோணங்களில் பார்க்கலாம்

- ஒன்று இலங்கையில் எழுந்த இனப்பிரச்சனை தமிழகத்தை அப்பொழுது தொந்தளிக்கச் செய்தது. இலங்கைப் பிரச்சனையில் தமிழர்களுக்கு சாதகமான நிலையை அன்று இந்தியா எடுத்திராவிட்டால் தமிழகத்தில் இந்தியாவிற்கு எதிரான உணர்வுகள் வெடித்திருக்கும்.

- மற்றொன்று இலங்கை பாக்கிஸ்தான் - அமெரிக்கா பக்கம் சாய்ந்து விடுமோ என்ற அச்சம். அவ்வாறு சாயும் பட்சத்தில் இலங்கையில் நிலை கொள்ளக் கூடிய அமெரிக்கப் படைகள் இந்தியாவிற்கு தெற்கில் ஒரு நிரந்தர தலைவலியாக மாறிவிடக்கூடிய சூழ்நிலை இருந்தது. இந்த பிரச்சனைகளில் இருந்து மீள வேண்டுமானால் அந் நாட்டை சீர்குலைப்பதும், வளர்ந்து வரும் இலங்கையின் பொருளாதாரத்தை குறைப்பதும் முக்கியமானது என ரா கருதியது.

எனவே தமிழ் போராளிக்குழுக்களுக்கு இந்தியா ஆயுதப் பயிற்சி அளிக்கத் தொடங்கியது. இதில் இந்தியாவிற்கு பல நன்மைகள் இருந்தன. இலங்கை அரசை போராளிக் குழுக்கள் மூலமாக மிரட்டலாம். இலங்கையில் தீவிரவாத பிரச்சனையை வளர்ப்பதன் மூலம் அந் நாட்டின் பொருளாதாரத்தையும் சீர்குலைக்கலாம். அதே சமயத்தில் தமிழகத்தில் உள்ள தமிழ் மக்களிடம் இந்தியா ஈழத் தமிழர்களிடம் அனுதாபம் கொண்டுள்ளதாக காண்பிக்கலாம்.

இந்தியா தனது இந்த நோக்கத்தில் வெற்றியை பெற்றது. தமிழ் போராளிக் குழுக்களுக்கு ஆதரவு தரும் அதே வேளையில் தமிழ் ஈழம் அமைந்து விடக்கூடாது என்பதிலும் இந்தியா கவனமாகவே இருந்தது. அதற்கு காரணம் இலங்கை இரண்டு துண்டாகும் பட்சத்தில் அதில் ஏதேனும் ஒரு நாடு இந்தியாவிற்கு எதிராகவே இருக்கும் என்ற அச்சம். உலகச் சூழ்நிலையும் அவ்வாறு தான் இருந்தது. சோவியத் யுனியன், அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளிடையே ஒரு நாட்டுடன் சார்பு நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் அன்றைக்கு பல நாடுகளுக்கு இருந்தது.

இவை தவிர தமிழ் ஈழம் அமைந்தால் தமிழகத்தில் அது போல தீவிரவாதம் எழக் கூடும் என்ற அச்சமும் இந்தியாவிற்கு இருந்தது. தமிழகத்தில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இருந்து வந்த தமிழ் மொழி உணர்வும் அதற்கு ஒரு காரணம்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் தன்னுடைய பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் எந்த சேதமும் விளைந்து விடக்கூடாது என்ற நோக்கிலேயே இலங்கை குறித்தான இந்திய நிலைப்பாடு இருந்தது.

"Inter-state relations are not governed by the logic of morality. They were and they remain an amoral phenomenon.."

இலங்கைப் பிரச்சனையில் குட்டையை குழப்பியவர்களில் முக்கியமானவரான ஜெ.என்.தீக்ஷத் இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எழுதும் பொழுது இப்படித் தான் கூறினார். இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளில் நியாயம், நேர்மை போன்றவற்றை எதிர்பார்க்க முடியாது என்பது தான் தீக்ஷ்த்தின் வாதம். இந்தியா, இலங்கை பிரச்சனையில் மேற்கொண்ட நிலைப்பாடு எவ்வாறு நியாயத்திற்கு புறம்பாக இருந்தது என்பதற்கு இதை விட வேறு யாரும் ஓப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட முடியாது.
<img src='http://img457.imageshack.us/img457/1297/flagbookletfigure12004ih.jpg' border='0' alt='user posted image'>

இலங்கை அரசுக்கு எதிர் நடவடிக்கையாக, இலங்கை அரசுக்கு பிரச்சனை கொடுக்கும் பொருட்டும், தன்னுடைய தனிப்பட்ட சுயநலத்திற்காக மட்டுமே இலங்கை போராளி குழுக்களுக்கு இந்தியா ரா மூலமாக பயிற்சி அளிக்க தொடங்கியது. இதில் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா முயற்சி எடுத்தது என்பதெல்லாம் வெளிவேஷம். தமிழகத்து மக்களை நம்ப வைக்க போடப்பட்ட வேடம். இப் பிரந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் ஈழத்தமிழர்கள் பகடைக்காய்களாக்கப்பட்டனர் என்பது தான் உண்மை. அது தான் ஜெ.என்.தீக்ஷத் கூறும் amoral phenomenon.

இலங்கை போராளிக் குழுக்களை தங்களுடைய கூலிப்படைகளாக மாற்றுவது, இலங்கை அரசை போராளிக் குழுக்கள் மூலம் மிரட்டி தன் வழிக்கு கொண்டு வருவது, இந்து மகா சமுத்திரத்திலும் தெற்காசியாவிலும் தான் மட்டுமே வல்லரசு, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இங்கு இடமில்லை என்பதை வெளிக்காட்டுவது இவையே இந்தியா 1980களில் இலங்கை விஷயத்தில் கொண்ட கொள்கை.

இந்தியா அனைத்து போராளிக் குழுக்களையும் தன்னுடைய கூலிப்படைகளாவே மாற்றியது. மாலத்தீவில் ரா மேற்க்கொண்ட நடவடிக்கைகளுக்கு இலங்கை போராளிக் குழுக்களை பயன்படுத்திக் கொண்டது. ராவின் செல்லப் பிள்ளைகளாக ஈழப் போராளிக் குழுக்கள் மாறின.

ஆனால் இந்தியாவின் எண்ணம் விடுதலைப் புலிகள் விஷயத்திலும், அதன் தலைவர் பிரபாகரன் விஷயத்திலும் தவறாகிப் போனது. இந்திய-இலங்கை ஓப்பந்தத்தின் பொழுது கூட விடுதலைப் புலிகள் தங்கள் சொல்படி கேட்கும் கிளிப் பிள்ளைகளாக இருப்பார்கள் என்று ரா எண்ணியது. அப்போதைய ரா அமைப்பின் தலைவர் வர்மா, ராஜீவ் காந்தியிடம் "these are boys whom we know and with whom we have been in touch and so they will listen to us" என்று கூறினாராம் (Assignment Colombo - By JN Dixit)

அவ்வாறு இல்லாமல் எதிர்த்தாலும் எளிதில் நசுக்கி விடலாம் என்று ரா கருதியது.

ஆனால் இந்தியாவின் எண்ணம் நிறைவேற வில்லை. அதற்கு முக்கிய காரணம் பிரபாகரன் தமிழ் ஈழம் என்பதை வெளிப்பூச்சாக பேசுவதில்லை. தமிழ் ஈழம் அமைத்தே தீருவது என்ற உறுதியான நிலையை எக் காலத்திலும் பிரபாகரன் சமரசம் செய்து கொண்டதில்லை. தன்னுடைய அதே உறுதிப்பாட்டுடனே தமிழ் ஈழத்தை அடையும் லட்சிய வேட்கையுடனே விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உள்ளவர்களையும் அவர் உருவாக்கினார்.

விடுதலைப் புலிகளை கடுமையாக எதிர்த்த ஜெ.என்.தீக்ஷ்த்தே அவரது Assignment Colombo என்ற புத்தகத்தில் இவ்வாறு கூறுகிறார்

The LTTE's emergence as the most dominant and effective politico-military force representing Tamil interests was due to the following factors:

First, the character and personality of its leader V Prabhakaran who is disciplined, austere and passionately committed to the cause of Sri Lankan Tamils's liberation. Whatever he may be criticised for, it cannot be denied that the man has an inner fire and dedication and he is endowed with natural military abilities, both strategic and tactical. He has also proved that he is a keen observer of the nature of competitive and critical politics. He has proved his abilities in judging political events and his adroitness in responding to them.

Secondly, he has created a highly disciplined, and dedicated cadres, a manifestation of which is inherent in what is called the 'cyanide cult.' Each regular member of the LTTE carries a cyanide pill and is pledged to committing suicide rather than being captured by the enemy.

The third factor is the cult and creed of honesty in the disbursement and utilisation of resources. Despite long years spent in struggle, the LTTE cadres were known for their simple living, lack of any tendency to exploit the people and their operational preparedness.

The fourth factor has been the LTTE's ability to upgrade its political and military capacities including technological inputs despite the constraints imposed on it by Sri Lankan forces and later by India.

The fifth factor is a totally amoral and deadly violent approach in dealing with those the LTTE considers as enemies.

The sixth factor is Prabhakaran's success in gathering around him senior advisers with diverse political, administrative and technological capacities, which contributed to effective training of his cadres, optimum utilisation of the military equipment which he had, and the structuring of an efficient command and control system.

தன்னுடைய "Island of Blood" என்ற புத்தகத்தில் பிரபாகரனை மிக அதிகபட்சமாக சந்தித்த பத்திரிக்கையாளர் என்று சொல்லப்படும் இந்திய பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் இதேக் கருத்தை கூறுகிறார். இலங்கைப் பிரச்சனையின் ஆரம்ப காலங்களில் இந்தியாவில் இருந்த பிரபாகரனை சந்தித்த அனிதா, பிற போராளிக் குழுக்களின் தலைவர்களை விட பிரபாகரனிடம் மட்டுமே தமிழர் உரிமை குறித்த தீவிரத்தையும், தமிழ் ஈழத்தை அடைந்தே தீருவது என்ற லட்சியத்தையும் கண்டதாக தெரிவிக்கிறார்.

.. The other thing about Pirabakaran that made a deep impression on me was his unwavering commitment to the cause of Eelam. It was deep -rooted, non-negotiable convication.

...My encounters with the LTTE guerrillas and their prodigious literature convinced me that Pirabhakaran was the man to watch out for. Compared to the other Tamil groups, the LTTE cadres were clearly superior. They exuded an aura of single-minded devotion to their cause

விடுதலைப் புலிகள் இயக்கம் எக் காரணம் கொண்டும் தமிழ் ஈழத்திற்காக சமரசம் செய்து கொண்டதில்லை. தமிழ் ஈழத்திற்கான பாதையில் எதிர்ப்பு வந்த பொழுதெல்லாம் அதனை எதிர்த்தே போரிட்டிருக்கிறார்கள். அனிதா பிரதாப்பிற்கு ஆரம்ப காலங்களில் அளித்த பேட்டிகளில் பிரபாகரன் ஒன்றை தெளிவு படுத்தியிருந்தார்.

நான் எதிர்காலத்தில் இந்தியாவை எதிர்த்து போரிட நேரலாம் என்று அனிதா பிரதாப்பிற்கு 1984ல் அளித்த பேட்டியிலேயே பிரபாகரன் கூறியிருந்தார். இது 1984ல் நிலவிய சூழலில் அனிதாவிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள் என்று கேட்ட பொழுது "ஏனெனில் இந்தியாவில் 6 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். இந்தியா தமிழ் ஈழம் அடைய அனுமதிக்காது" என்று பிரபாகரன் கூறினார்.

இந்தியா தமிழ் ஈழத்திற்கு எதிராக மாறிய பொழுது இந்தியாவை எதிர்த்து போரிடவும் பிரபாகரன் தயங்கவில்லை. நாளை அமெரிக்கா தன்னுடைய படைகளை களமிறக்கினாலும், அமெரிக்காவை எதிர்ப்பார். ஏனெனில் தமிழ் ஈழம் என்பது அவருக்கு deep -rooted, non-negotiable convication.

இந்தியாவிற்கு தன்னுடைய இறையான்மை, பாதுகாப்பு போன்றவை முக்கிய நோக்கமாக இருப்பதால் தமிழ் ஈழத்தை எதிர்த்து.

அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன ?

அமெரிக்காவிற்கு தமிழ் ஈழம் குறித்தோ, சிங்கள் இனவாதம் குறித்தோ எந்தக் கவலையும் இல்லை.

அமெரிக்காவிற்கு கடந்த காலங்களில் இந்தியாவிற்கு எதிராகவும் தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்கா நிலை கொள்ளக் கூடிய ஒரு இடமாகவும் இலங்கையை கருதி வந்துள்ளது. குறிப்பாக 1984/85ல் அமெரிக்கா "Voice of America" என்னும் ஒளிப்பரப்பு நிறுவனத்தை இலங்கையில் நிறுவ முயற்சி எடுத்தது. இதனை இராணுவ உளவு வேலைகளுக்கு அமெரிக்கா பயன்படுத்தும் என்று இந்தியா எண்ணியது. குறிப்பாக தன்னுடைய இராணுவ நிலைகளை கண்காணிப்பதற்கு அமெரிக்கா முயலுவதாக இந்தியா கருதியது. இது தவிர திருகோணமலை துறைமுகத்தில் அமெரிக்கா தன்னுடைய கடற்படை தளத்தை அமைக்க முயற்சித்தது. இதுவும் இந்தியாவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

இவ்வாறான நிலையில் இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்தவே முனைந்தன. 1985லேயே போராளிக் குழுக்களுக்கு உதவிகளை இந்தியா நிறுத்தியது. இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது.

இலங்கையுடன் தமிழர்களுக்கான ஒப்பந்தம் என்ற போர்வையில் இந்தியா தன்னுடைய பாதுகாப்பை வலுப்படுத்த ஜெயவர்த்தனேவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இரு நாடுகளுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்கள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கத்தை வெளிப்படுத்தின

இவையனைத்துமே தமிழ் ஈழத்திற்கு எதிராகவே கடந்த காலங்களில் அமைந்தன. பிராந்திய வல்லரசும், உலக வல்லரசும் தமிழர்களுக்கு எதிராகவே இருந்தன.

ஆனால்.....

தற்பொழுது உலக நிலை மாறி வருகிறது. கொள்கைகளும் மாறி வருகின்றன. நாடுகளின் வெளியுறவு கொள்கை மாறி வருகிறது. இந்தியா அமெரிக்கா இடையே பொருளாதார இணக்கம் ஏற்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தமிழ் ஈழத்திற்கு எதிரான இந்தியாவின் நிலையிலும், அமெரிக்காவின் நிலையிலும் மாற்றம் ஏற்படுமா ?

கடந்த காலங்களில் பிராந்திய முக்கியத்துவமுள்ள பகுதியாக இருந்தது போன்று இலங்கை இப்பொழுதும் இருக்கிறதா ?

விடுதலைப் புலிகளின் நோக்கம் சமரசத்திற்கு இடமில்லாத தமிழ் ஈழம் மட்டுமே. தமிழ் ஈழத்தை பிரபாகரனால் அமைக்க முடியுமா ?

நன்றி:தமிழ்சசி

http://thamizhsasi.blogspot.com/2006/01/2.html

Print this item