![]() |
|
மகனை திருத்த தாய் கொடுத்த சாராயம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: மகனை திருத்த தாய் கொடுத்த சாராயம் (/showthread.php?tid=1013) |
மகனை திருத்த தாய் கொடுத்த சாராயம் - SUNDHAL - 02-05-2006 மகனை திருத்த தாய் கொடுத்த சாராயம் நான் தினசரி குடிப்பது உண்டு. அன்று நல்ல மழை பெய்து கொண்டு இருந்தது. பாதி குடி போதையில் வீட்டுக்கு வந்தேன். எனது வீட்டில் மனைவி, பிள்ளைகள் அனைவரும் பக்கத்து தெருவில் ஒரு விஷேசத்துக்கு சென்று விட்டார்கள். வீடு பூட்டி இருந்தது. அறைகுறை போதையில் இருந்த நானும் மேலும் ஒரு ரவுண்டு தண்ணி அடிக்க வேண்டும் என்று விரும்பினேன். எனது சட்டை பாக்கெட் காலியாக இருந்தது. வீட்டில் பணம் இருந்தும், வீடு பூட்டி இருப்பதால் அரை போதையில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. எனது தாய் வேறு வீட்டில் தனியாக வசித்து வந்தார். இட்லி கடை நடத்தி அதில் வரும் வருமானத்தில் 100, 50 நோட்டுக்களை சுருட்டி தன் சுருக்குப் பையில் போட்டு வைத்து இருந்தாள். நான் கொஞ்ச காலம் என் தாயாரிடம் பேசமாட்டேன். எனது மனைவியும், பிள்ளைகளும் எனது தாயாரிடம் பேசுவார்கள். அரைகுறை போதையில் என் அம்மாவிடம் சென்று, ``50 ருபாய் கொடு'' என்றேன். எனது அம்மா குடிக்க தான் பணம் கேட்கிறேன் என்று என்னை திட்டியபடி, ``ஒரு காசும் கிடையாது'' என்று சுருக்குப்பையை காட்டினார். நான் `லபக்'கென்று பையை பிடுங்கிக் கொண்டேன். அதில் நிறைய பணம் இருந்தது. உடனே என் அம்மா பதறிப் போய், ``தம்பி பையில் ஒன்றும் இல்லை. பையை கொடுடா உனக்கு சாராயம் குடிக்கத்தானே பணம் வேண்டும். தருகிறேன் பையை கொடு'' என்று கெஞ்சியதும் நானும் பையை கொடுத்து விட்டேன். வீட்டில் இருந்த புதிய செல்வர் செம்பை கையில் எடுத்துக் கொண்டு என் தாயார் வெளியில் சென்றார். எங்கே போகறார் என்று எனக்குத் தெரியவில்லை. நேராக சாராயம் விற்பவனிடம் என் தாயார் சென்றுள்ளார். ``என் மகள் எவ்வளவு சாராயம் குடிப்பான். அந்த அளவு சாராயம் கொடு'' என்று கேட்டு இருக்கிறார். அவன் நான் எப்போதும் குடிப்பதை விட ஒரு கிளாஸ் கூடவே ஊத்தி கொடுத்து விட்டு, ``நீங்க காசு குடுக்க வேண்டாம். நான் உங்கள் மகனைப் பார்த்து வாங்கிக் கொள்கிறேன். பெத்த தாயையே சாராயம் வாங்க அனுப்பியவனை நான் சந்திக்க வேண்டும். அவனிடம் நாë பேசிக்கிறேன்'' என்று அனுப்ப விட்டான். எனது தாயார் கொண்டு வந்த சாராயத்தை குடிக்க செய்து, சாப்பாடு போட்டு, ``தம்பி போயி உன் பொண்டாட்டி பிள்ளையிடம் சண்டை சச்சரவு செய்யாதே'' என்று என்னை அனுப்பி வைத்தார். அதை நினைத்து வேதனைப்படுகிறேன். வெட்கப்படுகிறேன். எனது 45 வயதில் இது நடந்தது. அன்று முதல் இன்று வரை சாராயம் மற்ற மதுவகைகளை தொடுவது இல்லை. எது தீய செய்கையை மாற்றியது எனது தாயும் அந்த சாராய வியாபாரியும்தான். இப்போது எனக்கு 65 வயது. Thanks:Thanthi... - vasanthan - 02-05-2006 இப்படியும் ஒரு வழியிருக்க :?: :wink: - arun - 02-05-2006 எல்லாரும் கொஞ்சம் இங்க வாங்க ஆளுக்கு ஒரு பெக்கு அடிக்கலாம் <img src='http://www.muktours.dk/taxfree/images/Wisky.jpg' border='0' alt='user posted image'> - தூயா - 02-06-2006 களத்தில் மதுவை கொண்டு வந்த குற்றத்திற்காக..உங்களுக்கு என்ன தண்டணை காத்திருக்கின்றதோ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
- SUNDHAL - 02-06-2006 2 பெக் அவரே அடிக்கனும்....... - அருவி - 02-06-2006 தூயா Wrote:களத்தில் மதுவை கொண்டு வந்த குற்றத்திற்காக..உங்களுக்கு என்ன தண்டணை காத்திருக்கின்றதோ? <!--emo& arun இற்காக காத்திருக்கும் தண்டனை மது குடிப்பதனால் ஏற்படும் விளைவுகளை களத்தில் எழுதவேண்டும் என்பதாகும். :wink: மதுவை இங்கு கொண்டுவந்ததற்காக சின்னப்பு அருணிற்கு வாழ்த்து தெரிவிக்க வரப்போறார்; கையோட நமக்கு ஆப்பும் வைக்கப்போறார்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- arun - 02-06-2006 உம்ம்ம் செல்லீடா பொச்சு தண்ணிடிச்சா ஒம்புக்கு ணல்லது ஓசில ஆகாசதுல பர்க்லாம் ம் ம் ஆ ஆ.. என்னிது 2 பேக்குக்கே இப்டி துக்குது ok குட்டு நயிட்டு |