![]() |
|
இப்படியும் நடக்கிறது. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: இப்படியும் நடக்கிறது. (/showthread.php?tid=1006) |
இப்படியும் நடக்கிறது. - ஊமை - 02-05-2006 <span style='font-size:30pt;line-height:100%'>ஜேர்மனியிலே தமிழனுக்கு தமிழனால் நடந்த ஒரு அவலம் உண்மைச்சம்பவம்.</span> ஜேர்மனியிலே குறிப்பிட்ட ஒரு நகரத்திலே ****** என்ற ஈழத்தமிழன் பல வருடங்களாக வசித்து வருகிறார். அவர் ஜேர்மனியிலே வசித்துவரும் தமிழ் ஈழத்து மக்களுக்கு இதுவரை காலமும் பல வழிகளிலே உதவிகள் செய்து வந்துள்ளார். இவரிடம் ஜேர்மனியில் ஒரு உணவகம் வைத்திருக்கும் ஈழத்தமிழர் ஒருவர் பண உதவியும் பெற்றுள்ளார். பின்னர் இவர் அவரிடம் தனது பணத்தை திருப்பி கேட்ட போது. தான் பட்ட கடனை கழித்துக்கொண்டு மிகுதிப் பணத்தை தந்துவிட்டு தனது உணவகத்தை இவர் பொறுப்பேர்க்கச் சொல்லியிருக்கிறார். இவரும் தான் கொடுத்த கடனை கழித்துக்கொண்டு மிகுதிப்பணத்தை உணவக உரிமையாளரான கடனாளியிடம் கொடுத்துவிட்டு உணவகத்தை பொறுப்பேற்றுக்கொண்டார். இங்கு புலம் பெயர்ந்த நாடுகளில் தொழில்களோ எதுவோ பெரும்பாலும் உடன் பாடுகளின் (எக்றிமென்ட்) அடிப்படையிலே தான் ஆரம்பிக்க முடியும் அது உங்களுக்கு தெரிந்ததே. இவரும் கடனாளியும் உடன்பாட்டு அடிப்படையிலே கடையினை பெயர் மாற்றம் செய்யவேண்டும் அதற்கு கடனாளி மிகப்பெரிய நாடகம் ஆடினார். கடன் கொடுத்தவர் சிறிது மதுப்பழக்கம் உடையவர் அவர் மது போதையில் இருக்கும் நேரம் பார்த்து உடன் பாட்டை செய்யும் நோக்கோடு மது பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்து அந்த பார்ட்டியிலே இவருக்கு அவருக்கும் உடன் பாடு பரிமாறப்பட்டதாம். அந்த உடன் பாட்டிலே கடனாளி முன்னர் கடை சம்பந்தமாக பெற்ற கடன்களுக்கு இவரே பொறுப்பு என குறிப்பிடப்பட்டிருந்தது. இவரும் மது போதையில் நண்பன் தானே என நினைத்து உடன் பாட்டை முழுமையாக வாசிக்காது கையொப்பம் இட்டு விட்டார். இன்று நிலமை விபரீதம் ஆகிவிட்டது முன்னர் இருந்த கடை உரிமையாளருக்கு ஒரு இலட்சத்து முப்பது ஆயிரம் யூரோக்கள் (130,000) கடன் இப்பொழுதோ இந்த பாரிய தொகை இவரின் தலையிலே விழுந்துள்ளது. இந்த கடனை கட்ட முடியாமல் இவர் கடையைப் பூட்டி விட்டார். இதுவரை சேர்த்துவைத்த பணமும் போய் இப்பொழுதோ 130,000 ஆயிரம் யூரோக்களுக்கு கடனாளியாகிவிட்டார். கவனம் உடன் பிறப்பு என நினைத்து ஏமாராதீர்கள். - வினித் - 02-05-2006 இதைகூட செய்யவில்லை என்றால் தமிழனாய் இருந்து என்ன பயன்? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ukraj - 02-05-2006 உதுக்கு தான் சொல்லுறது எதையும் சட்டப்படி செய்யவேண்டும் என்டு. சட்டத்தரணி ஊடாக இந்த கடை மாற்றத்தினை செய்திருந்தால் உப்புடியெல்லாம் நடந்திருக்காது. - கறுப்பி - 02-12-2006 இப்படி கூடி இருந்து குழி பறிப்பவர்களை ஆள் வைத்து மறைமுகமாகத்தான் தாக்க வேண்டும். Re: இப்படியும் நடக்கிறது. - அருவி - 02-12-2006 ஊமை Wrote:[ தகவலிற்கு நன்றி ஊமை. எந்தவொரு ஒப்பந்தத்தினையும் போடும் போதும் அதனை வாசிக்கவேண்டியது அவசியம். அது ஒப்பந்நத்தில் கையெழுத்திடுபவரின் உரிமையும் கூடவே. அது ஒரு வங்கி ஒப்பந்தமாக இருப்பினும் அல்லது அரச அலுவலகங்களில் பெறப்படும் கையெழுத்துக்களாக இருப்பினும் அனைத்தையும் வாசிக்க வேண்டும். எம் மக்களிடம் அப்பழக்கம் குறைவாக இருப்பதனைக் காணக்கூடியதாக உள்ளது. இதனை அவர்கள் உணர்ந்து திருந்த வேண்டும். - I.V.Sasi - 02-12-2006 கறுப்பி Wrote:இப்படி கூடி இருந்து குழி பறிப்பவர்களை ஆள் வைத்து மறைமுகமாகத்தான் தாக்க வேண்டும். துரோகம் என்பது எங்களுடன் ஒன்றி போன ஒன்றாகி விட்டது போல
- Vasampu - 02-12-2006 இங்கு சுவிசில் பலர் ஆயுள் காப்புறுதி வைத்தியக் காப்புறுதி ஏஜண்டாக இருந்து எம்மவரை ஏமாற்றியே பிழைப்பு நடாத்துகின்றார்கள். இதற்கு முக்கிய காரணம் நம்மவர் பலரின் அறியாமை அத்துடன் குறிகிய வழியில் நிறையப் பணம் சம்பாதிக்கலாம் என்ற பணத்தாசை. ஆனால் எவரும் எப்படி இப்படி குறுகிய காலத்தில் கூடுதலான பணம் வருவது சாத்தியமா என்று சிந்தித்துப் பார்ப்பதுமில்லை. பலர் ஒப்பந்தப் பத்திரத்தை சரியாக வாசித்துப் புரிந்து கொள்ளாமலே கையெழுத்துப் போடுகின்றார்கள். பின்பு பிரைச்சினைகள் வந்த பின்தான் கவலைப் படுகின்றார்கள். அத்துடன் கூடுதலான ஒப்பத்தங்கள் 5 அல்லது 8 அல்லது 10 வருடங்கள் கொண்ட ஒப்பந்தங்களாகவே இருக்கின்றன. அதனால் உடனடியாக இவ்வொப்பந்தங்களிலிருந்து மீளவும் முடியாது. |