Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243

Full Statistics

Online Users
There are currently 1682 online users.
» 0 Member(s) | 1678 Guest(s)
Applebot, Baidu, Bing, Google

Latest Threads
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,136
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,122
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,566
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,266
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,559
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,973
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,364
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,033
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,961
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,228

 
  Rope in LTTE to stop ISI threat: Thackeray
Posted by: Mathivathanan - 08-27-2003, 11:27 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (5)

[b]<span style='font-size:21pt;line-height:100%'>Rope in LTTE to stop ISI threat: Thackeray</span>
http://timesofindia.indiatimes.com/cms.dll...how?msid=150076
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Print this item

  Rope in LTTE to stop ISI threat: Thackeray
Posted by: Mathivathanan - 08-27-2003, 11:26 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

[b]<span style='font-size:21pt;line-height:100%'>Rope in LTTE to stop ISI threat: Thackeray</span>http://timesofindia.indiatimes.com/cms.dll/html/uncomp/articleshow?msid=150076
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Print this item

  குமுதம்-கச்சதீவு
Posted by: Guest - 08-27-2003, 12:05 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

குமுதம்-கச்சதீவு

சேதுக்கடல். மன்னார் வளைகுடா.

இந்திய_இலங்கைக்கிடையேயான தண்ணீர் தேசம். இப்பகுதி _ மீனவர்களின் கண்ணீர் தேசம். நமக்கு கைக்கெட்டும் தூரத்தில் இலங்கை. அவர்களுக்கு கூப்பிடும் தூரத்தில் தமிழ்நாடு. எனவே, கொஞ்சம் சென்ஸிடிவ் கடல் பிரதேசம் சேதுவும், மன்னாரும்.

இந்த இடைப்பட்ட குளிர்ந்த கடல் பிராந்தியத்தில் சதா நேரமும் சூடு பறக்கும் டென்ஷன்..... டென்ஷன்... டென்ஷன்தான். எனவே, இங்கு பாடு பார்க்கப் போகும் இந்நாட்டு மீனவர்களின் பாடும் திண்டாட்டம்தான்.

பிரச்னையே எல்லைதாண்டி மீன்பிடிப்பதில்தான் ஆரம்பிக்கிறது. தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி அங்கு போனால், இலங்கைக் கடலோரக் காவல்படையினரும், இலங்கை மீனவர்கள் இங்கு வந்தால் இந்தியக் கடலோரக் காவல் படையினரும் கைது செய்து அவர்களைத் தங்கள் நாட்டுக்குக் கொண்டு செல்கிறார்கள்.

அங்குமிங்குமாக மீனவர்கள் சிறையில் வாட, இருதேசத்துக் கரைகளிலும் பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்கள் பாடாய்ப்படும். இந்த எல்லைதாண்டிய மீன் பிடிப்புப் பிரச்னையில் அதிகம் பாதிக்கப்படுவது தமிழக மீனவர்கள்தான். அதிலும் குறிப்பாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள்தான் அதிகம் அவதிக்குள்ளாகிறார்கள்.

தமிழக மீனவர்கள் பிடித்து வைத்திருக்கும் மீன்களைக் கொள்ளையடிப்பது, அவர்களின் வலைகளை அறுப்பது, போட்களைக் கடத்திச் செல்வது, அவர்களோடு மோதலில் ஈடுபட்டு ரத்தக் களறியாக்குவது என்று தமிழக மீனவர்களை இலங்கை மீனவர்களும், இலங்கைக் கடற்படையும் படுத்துகிற பாடு கொஞ்சநஞ்சமல்ல!

நடுக்கடலில் எல்லாவற்றையும் இழந்து, எப்படியோ உயிர் பிழைத்து ஊருக்குத் திரும்புகிற மீனவர்களைக் குறிவைத்துக் கரையிலேயே காத்திருப்பான் கந்துவட்டிக்காரன். கழுத்தை நெறித்துக் காசைக் கேட்கும் அந்தப் பண விழுங்கி மிருகத்திடமிருந்து ஒருவழியாய் தப்பிப் பிழைத்து குடிசைக்கு வந்தால், பெண்டாட்டி _ பிள்ளைகள் பசி வேதனையில் அரைமயக்கத்தில் சுருண்டு கிடப்பார்கள்.

ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் அன்றாட சோதனை இது.

இந்தச் சோகம், சோதனை, வேதனை, துயரம், கண்ணீர் இவற்றையெல்லாம் தாண்டி, நெஞ்சை நெகிழச் செய்யும் சம்பவமொன்றும் அவ்வப்போது இந்த அலையடிக்கிற சேதுக்கடலில் நடக்கும். அது, மீனவர்கள் ஒப்படைப்பு நிகழ்ச்சி!

நடுக்கடலில் இருதேசத்துக் கடல் எல்லைகளில் நடக்கும் இந்நிகழ்ச்சியில் மொழிகளைக் கடந்த, இருதேசங்களைக் களைந்த மனித உணர்வுகள் மட்டுமே மேலோங்கி நிற்கும்.

மொழிபுரியாத மிரட்சி, விடுதலையான மகிழ்ச்சி, பெண்டாட்டி _ பிள்ளைகளைப் பார்க்கும் தவிப்பு என்று கலவையான உணர்வுகளில் அந்த மீனவர்கள் படும் அவஸ்தை... மனிதாபிமானமுள்ள எந்த நாட்டைச் சேர்ந்தவனின் நெஞ்சையும் அசைத்துப் பார்க்கும்.

சமீபத்தில் இப்பகுதிக் கடலில் மீனவர்கள் ஒப்படைப்பு நிகழ்ச்சியன்று நடந்தது. நமது தரப்பில் இரண்டு இலங்கை மீனவர்களும், அவர்களின் இரண்டு படகுகளையும் ஒப்படைக்க வேண்டும். இலங்கை தரப்பிலோ, இருபத்தாறு மீனவர்கள், அவர்களது ஆறு மீன்பிடிப் படகுகள். அத்தனை பேரும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள்.

இரண்டு தரப்புமே தங்கள் பிடியிலிருக்கும் இருநாட்டு மீனவர்களையும் அவரவர் நாட்டுக் கடற்படையினரிடம் ஒப்படைக்க முடிவு செய்து, இந்திய_இலங்கை கடல் எல்லையில் சந்தித்துக் கொண்டார்கள்.

இருபத்தாறு தமிழக மீனவர்களையும், அவர்களின் ஆறு படகுகளையும் பத்திரமாக இந்தியக் கடற்படையினரிடம் ஒப்படைக்க வேண்டுமென்பது தலைமன்னார் கோர்ட்டின் உத்தரவு என்பதால், இலங்கைக் கடற்படை மிகுந்த கவனமுடன் செயல்பட்டது.

இரண்டு வாரங்களாக இலங்கைச் சிறையில் வாடிய இருபத்தாறு மீனவர்களும் இலங்கைக் கப்பலிலிருந்து இந்தியக் கப்பலுக்கு வந்தபோது, அவர்கள் கண்களில் பொல பொலவென்று ஆனந்தக் கண்ணீர்.

முன்னதாக, இலங்கைக் கடற்படை கேப்டன் நிஸாந்தனும், இந்தியக் கடலோரக் காவல்படை கேப்டன் வெங்கடேசனும் பாரம்பரிய முறையில் மரியாதை செய்துகொண்டு, கைகுலுக்கிக் கொண்டனர். நமது கோஸ்ட் கார்ட் கப்பலில் வந்த கமாண்டர்கள் தமிழக மீனவர்களின் பெயர், வயது, அட்ரஸ் குறித்து சரி பார்த்துக் கொண்டார்கள். வழக்கமான ஃபார்மாலிட்டிஸ்!

‘நமது கப்பலில் தெரிந்த முகங்கள் யாராவது இருக்கிறார்களா..? அவர்களிடம் நமது பெண்டாட்டி _ பிள்ளைகளைப் பற்றி விசாரிப்போம் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் ஆலாய்ப் பறந்தார்கள். யாரும் இல்லையென்று தெரிந்ததும், அவர்களின் முகத்தில் ஏமாற்ற ரேகைகள் படர்ந்தன.

ஒருபக்கம், இரண்டுதேச கடற்படையினரின் ஃபார்மாலிட்டிஸ் நடந்துகொண்டிருக்க, உடலும், மனமும் சோர்ந்து கிடந்த நமது மீனவர்களிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தோம்.

இப்படி எல்லைதாண்டி மீன் பிடிப்பானேன்? இலங்கைக் கடற்படையிடம் சிக்கிச் சீரழிவானேன்?’என்ற நமது கேள்விக்கு நீண்ட விளக்கமே கொடுத்தார்கள்.

வேற வழியில்லை சார்...எல்லை தாண்டிப் போய்த்தான் மீன் பிடிச்சாகணும். கரையிலேருந்து மூணு கடல் மைல் தூரம் நாட்டுப் படகுக்காரங்க மட்டும்தான் மீன் பிடிக்கணும். அங்கே விசைப்படகுக்காரங்க மீன் பிடிக்கக்கூடாது. மூணு கடல் மைல் தூரத்திலிருந்து சரியா ஒன்பது நாட்டிக்கல் தூரம் வரை பவளப் பாறைதான் இருக்கு. அங்கே மீன் குஞ்சுகள்தான் இருக்கு. அதைத் தாண்டி வந்துட்டாலே கச்சத்தீவு வந்துடும். கச்சத்தீவு வந்துட்டாலே, இலங்கை எல்லைக்குள் வந்தாச்சுன்னுதான் அர்த்தம். மீனும் அங்கேதான் இருக்கு. இந்தப் பகுதிக்குள்ள வராம எங்களால மீன் பிடிக்க முடியாது. அதுக்கு வழியும் இல்லை.’’ என்றார்கள்.

‘‘கச்சத்தீவை மீட்பது ஒன்றுதான் இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு’’ என்று நம்மிடம் சொன்னார் தாஸ் என்கிற மீனவர்.

தங்கள் நாட்டு மீனவர்கள் இருவரோடு இலங்கைக் கப்பல் புறப்பட்டுப் போக, இருபத்தாறு மீனவர்களையும், அவர்களது ஆறு படகுகளையும் மீட்டுக் கொண்டு கரையை நோக்கிச் சீறிப் பாய்ந்தது இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படைக் கப்பல்.

அச்சமூட்டும் கடலின் நடுவே, தலைக்குமேல் எச்சமிடாத பறவைகள் பறந்து போகின்றன. இந்திய கோஸ்ட் கார்ட் கப்பலில், வாழ்வின் மீது மிச்சமிருக்கிற நம்பிக்கையோடு கரை திரும்புகிறார்கள் நமது மீனவர்கள்.

_ வல்லம் மகேசு
படங்கள்: ஜோ

Print this item

  நல்லு}ர் தேர்த்திருவிழா 2003
Posted by: Mathivathanan - 08-26-2003, 11:44 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (69)

<img src='http://www.virakesari.lk/20030827/PICS/vd27p1.jpg' border='0' alt='user posted image'>
நல்லு}ர்க் கந்தன் வடம்பிடிக்க கூடியிருக்கும் இறை நம்பிக்கையுள்ள மக்கள் வெள்ளம்..

Print this item

  நம்பத்தகுந்த தகவல்கள்
Posted by: Paranee - 08-26-2003, 01:42 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

வணக்கம்

அடிக்கடி அம்மபாறை சம்பாந்துறை மட்டக்களப்பு போன்ற முஸ்லிம்மக்கள் செறிந்து காணப்படும் பகுதிகளில் இருந்து முஸ்லிம் இளைஞர்கள் காணமல் போய்விடுகின்றார்கள். அதற்கான காரணம் இதுவாக இருக்கலாம் என சில நம்பத்தகுந்த தகவல்கள் கூறுகின்றன.

அவர்களிற்கு இரகசிய முறையில் பயிற்சி வழங்கப்படுவதாகவும் அதற்காகத்தான் அவர்கள் கடத்தப்படுவதாக கூறப்பட்ட மறைவதாகவும் அறியமுடிகின்றது
எதுவோ இனி எல்லாம் ஒருநாள் வெளிச்சமாகாமலா போகின்றது

Print this item

  திராவிட மொழிகள்
Posted by: Chandravathanaa - 08-26-2003, 06:50 AM - Forum: தமிழ் /தமிழர் - Replies (4)

[size=18][b]திராவிட மொழிகள்

தென் இந்தியா முழவதும் 19 கோடி அளவிலான மக்களாற்; திராவிட மொழிகள் பேசப்படுகின்றன. தற்போதைய கணிப்பின்படி இக்குடும்பத்தினுள் அடங்கும் மொழிகள் 23. அதற்கு மேலும் படடியலில் அடங்காத சில மொழிகள் இருக்கத்தான் செய்கின்றன, உதாரணமாக, நீலகிரி மாவட்டத்திற் பேசப்படும் குறும்பம், பணியம் போன்ற நன்கு அறியப்படா மொழிகள் பட்டியலிற் சேர்க்கப்படவில்லை. ஒரேயொரு மொழியான பிராகுவியைத் தவிர மற்றைய 22 மொழிகளும் இந்தியாவின் தென்பகுதியிலும் கிழக்கு மத்திய பகுதிகளிலுமே பேசப்படுகின்றன. பிராகுவி மொழி ப10கோள ரீதியாக தனிமைப்பட்டு பாகிஸ்தானில் உள்ள கைபப10ர் ஹைதரபாத் மாவட்ட ங்களில் எட்டு இலட்சம் அளவிலான மக்களாற் பேசப்படுகிறது.

பிரதான மொழிகளான தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளும்தான் மாநில மொழிகள் என்ற தகைமையும், கிறிஸ்துவிற்கு முற்பட்ட இலக்கிய சரித்திரத்தையும்; கொண்டவை. எஞ்சிய இலக்கிய வளம் குறைந்த 19 மொழிகள் சம்பந்தமாக முறையான தகவல் எம்மிடம் இல்லை. இப் 19 மொழிகளுள் 10 இலட்சம் மக்களுக்கு மேற்பட்டோராற் பேசப்படும் மொழிகள் கோண்டி, துளு, ஓராவுண் ஆகிய 3 மொழிகள் மட்டுமே. நான்காவது இடத்தில் 8 இலட்சம் மக்களாற் பேசப்படும் பிராகுவி வரும். தமிழ்நாட்டில் நீலகிரிப் பிரதேசம் போவோமானால் அங்கு தமிழ் மொழிக்கு மிகவும் நெருங்கிய மொழியான இருளம் உட்பட வடுகம் துடவம், குடகம், கோத்தம் என ஐந்து மொழி பேசும் மக்களைச் சந்திக்கலாம். சற்று விலகிச் சென்றால் 6வது மொழி ஒன்றைப் பேசும் மக்களைச் சந்திக்கலாம். அதாவது துளு மொழி பேசம் மக்களையும் சந்திக்கலாம். பட்டியலில் இல்லாத குறும்பமும் பணிகமும் நீலகிரிப் பிரதேசத்தில்தான் பேசப்படுபவை என்று ஏற்கனவே கூறியுள்ளோம்.

இப்போது 95 வீதத்திற்கு மேற்பட்ட மக்களாற் பேசப்படும் பிரதான நான்கு மொழிகளையும் பார்ப்போம். நான்கு மொழிகளுமே அவை பேசப்படும் மாநிலங்களில், மாநில மொழித் தகைமையுடன் திகழ்பவை. நான்கு மொழிகளிலும், கூடுதலான மக்களாற் பேசப்படும் மொழி, பாட்டிசைக்குகந்த மொழி என்ற புகழ் தெலுங்குக்கு இருந்தாலும், தமிழ் மொழியின் பல்வேறு தகைமைகள், தமிழே திராவிட மொழிகளில் தலைசிறந்தது என்பதை உறுதிப்படுத்துகின்றன. கன்னித் தமிழ், திராவிட மொழிகள் உருவாவத்தற்கு தளமாயிருந்த ஆதிமொழியிலிருந்து இலக்கண ரீதியாகவும் உச்சரிப்பு ரீதியாகவும் பெருமளவு மாற்றமில்லாதிருக்கின்றது.

இது மொழி வல்லுனர்கள் ஆய்வின் முடிவு. அதற்காக தமிழில் இருந்துதான் எல்லாத் திராவிட மொழிகளும் திரிவடைந்து உருவாகின என்று முடிவெடுப்பது மொழி அறிவு வளர்ச்சிக்கு எந்தவகையிலும் உதவமாட்டாது என்பதை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். இலக்கிய வளத்தைக் கவனத்திற் கொண்டு பார்த்தாலும் சமஸ்கிருதத்தைத் தவிர மற்றைய எந்த இந்திய மொழியும் தமிழுக்கு சமனாக வரமாட்டா. ப10கோள ரீதியாக அதிக நாடுகளிற் பேசப்படும் திராவிட மொழியும் தமிழ்தான். திராவிட என்ற சொற்கூட கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்திலிருந்து பிரகிருதி பாளி ஆகிய மொழிகளில் தமிழைக் குறிக்கும் தாமில, தாவிட ஆகிய சொற்களின் சமஸ்கிருத வடிவமே.

இந் நான்கு மொழிகளுமே துரதிஷ்டவசமாக, தமக்கென்று தனித்தனி எழுத்துக்களை உருவாக்கிக் கொண்டன. ஐரோப்பிய மொழிகளைப்போல் ஒரே எழுத்தையே இவையும் பயன்படுத்தியிருந்தால் ஒரு மொழியை மற்றவர் பயில்வதற்கு கூடுதல் வாய்ப்பு உண்டாகியிருக்கும். தமிழ் ,கிறிஸ்துவிற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்து வடிவம் பெற்றுவிட்டது. அதற்கு குறைந்தது ஐந்து நூற்றாண்டுகளின் பின்தான் தெலுங்கும் எட்டு நூற்றாண்டுகளின் பின் கன்னடமும் எழுத்துவடிவம் பெற்றன. கடைசியாக கிறிஸ்துவிற்கு பின் ஒன்பதாவது நூற்றாண்டில் மலையாளம் எழுத்துவடிவம் பெற்றது. தமிழைத் தவிர மற்றைய மூன்று மொழிகளுமே க, ச, ட, த, ப , ஆகிய ஐந்து வல்லின மெய் எழுத்துக்களை, சமஸ்கிருதத்தைப் போல் ஒவ்வொன்றையும் நான்காகப் பிரித்து 20 எழுத்துக்களாகக் கூட்டியுள்ளார்கள். உதாரணமாக, க ,வை எடுத்தால் அதை மயஇ, மாயஇ, பயஇ, பாய , என நான்காகப் பிரித்துள்ளார்கள்.

இந்த எழுத்து அமைப்பு ஒற்றுமையை அவதானித்த என் மலையாள நண்பரொருவர் தமிழும் மலையாளமும் சமஸ்கிருதத்திலிருந்துதான் உருவாகியவை என்று வாதிட்டார். என்ன செய்வது மேலதிக சொற்களை இரவல் வாங்கினால் எழுத்துக்களையும் இரவல் வாங்கித்தானே ஆகவேண்டும். கணிசமானளவு சொற்கள் இம்மூன்று மொழிகளாலும் வடமொழியிலிருந்து இரவல் வாங்கப்பட்டுள்ளன. எங்கள் நாட்டின் ஆரிய மொழியான சிங்களமும் இந்த முறையிற்றான் வல்லினத்தை 20 எழுத்துக்களாக ஆக்கியுள்ளது. எழுத்து உருவத்திலும் தெலுங்கு கன்னட எழுத்துக்களைப்போலவே சிங்கள எழுத்துக்களும் உள்ளன. இது சிலவேளை சிங்கள எழுத்துக்கள் உருவாகும்போது தெலுங்கு நாயக்கர்மாருடன் சிங்;கள மன்னர்களுக்கிருந்த உறவை எடுத்துக்ககாட்டுவதாக அமையலாம்.

திராவிட மொழிகளின் ஆரம்பம் சம்பந்தமாய் தெளிவான முடிவு ஏதும் தற்போது இல்லை. இந்தியா முழவதும் திராவிடர் வாழ்ந்தார் என்பதற்கு, இந்து நதிப் பள்ளத்தாக்கிலிருந்து அழிந்த நாகரிகத்தின் தடயங்கள், ஆதி நூலான 'இருக்கு" வேதத்திற் காணப்படும் திராவிடச் சொற்கள் ஆகியவை சான்றாக உள்ளன. வேறு எந்தக் குடும்பத்துடனும் தொடர்பில்லாத தனி மொழிக் குடும்பமாகவே இது உள்ளது. கங்கேரிய, துருக்கிய , மங்கோலிய ,மொழிக் குடும்பங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஒரு கருத்து நிலவினாலும் அதுகூட முறையாக ஆராய்ந்த முடிவாக இன்னும் வரவில்லை.

6000 வருடங்களுக்கு முன்பே பிராகுவி, ஓராவுண் இராஜமகால் ஆகிய மொழிகள் ஆதிமொழியிலிருந்து பிரிந்து தனிப் பிரிவாகிவிட்டன வெனக் கணிக்கிறார்கள். படிப்படியாக ஏற்பட்ட பிரிவுகள் வட திராவிட, மத்திய திராவிட, தென் திராவிட என்ற முப்பெரும் பிரிவுகளை ஏற்படுத்திவிட்டது. மூன்று பிரிவுகளையும் இனி தனித்தனியே பார்ப்போம்.

[b]வட திராவிட மொழிகள்
மொழி பேசப்படும் இடம் பேசப்படுவோர் தொகை
பிராகுவி பாகிஸ்தான் 8 இலட்சம்
ஒராவுண் மத். பிரதேசம் 14இலட்சம்
இராஜமகால் பிகார், மே. வங்கம் 1.5இலட்சம்

[b]மத்திய திராவிட மொழிகள்
மொழி பேசப்படும் இடம் பேசப்படுவோர் தொகை
தெலுங்கு - 6.2 கோடி
சாவரம் - -
கோண்டி மத். பிரதேசம் 25 இலட்சம்
கொண்டா ஒரிசா 20,000
பெங்கு ஒரிசா 1,900
குயம், குவி ஒரிசா 9 இலட்சம்
கொலமி வட ஆந்திரா 1 இலட்சம்
நாகி வட ஆந்திரா 1,800
கப்பார் ஒரிசா 3,000
பரிஜி மத். பிரதேசம் 1.8 இலட்சம்

[b]தென் திராவிட மொழிகள்
மொழி பேசப்படும் இடம் பேசப்படுவோர் தொகை
தமிழ் - 5.6 கோடி
மலையாளம் - 2.9 கோடி
கன்னடம் - 3.2 கோடி
துளு தென் கர்நாடகம் 15 இலட்சம்
இருளம் நீலகிரிப் பிரதேசம் 6,400
குடகம் நீலகிரிப் பிரதேசம் 1.2 இலட்சம்
துடவம் நீலகிரிப் பிரதேசம் 1,200
வடுகம் நீலகிரிப் பிரதேசம் 1.4 இலட்சம்
கோத்தம் நீலகிரிப் பிரதேசம் 1,500

சி. மாசிலாமணி
[b]நன்றி:-வடலி சஞ்சிகை-UK
நன்றி - sooriyan.com

Print this item

  துடக்கு
Posted by: இனியவன் - 08-25-2003, 01:23 PM - Forum: தமிழும் நயமும் - Replies (4)

"துடக்கு " இதன் அர்த்தம், நோக்கம் என்ன, யாராவது தெரிந்தவர்கள் பதில் தாருங்களேன்.

Print this item

  புவியை நெருங்கும் செவ்வாய்
Posted by: Paranee - 08-25-2003, 09:41 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - Replies (1)

புவியை நெருங்கும் செவ்வாய்

நன்றி தகவல்.தினகரன்.கொம்

28 மாதங்களிற்கு ஓரு முறை புூமி செவ்வாயை கடந்து முன்னே செல்லும்.
ஒவ்வொரு 15 அல்லது 17 ஆண்டுகளிற்கு ஒவ்வொரு முறையும் புூமியும் செவ்வாயும் நெருங்கி வருகின்றன.கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வருகிற 27ம் திகதி புூமியும் செவ்வாயும் மிகவும் நெருங்கி வருகின்றது.அப்போது புூமியில் இருந்து செவ்வாய் 5 கோடியே 57 லட்சத்து 60 ஆயிரம் கிலோமீட்டர் துூரத்தில் இருக்கும்.அப்போது செவ்வாய்க்கிரம் 582 மீட்டர் து}ரத்தில் இருந்து ஒரு டென்னீஸ் பந்தைப்பார்த்தால் எப்படி இருக்குமோ அந்தளவில் தெரியும்.யுூலை செப்படம்பர் ஆகஸ்ட் மாதங்களில் வெறுங்கண்ணால் பார்க்ககூடியதாக இருக்கும்.இந்த மாதகடையசியில் சூரியன் மறைந்ததும் கீழ்வானத்தில் செவ்வாய் கிரகத்தை பார்க்கமுடியும்.அப்போது வானத்தில் தோன்றும் நட்சத்திரங்களிற்குள் அதுதான் பெரிதாக இருக்கும்.ஆரஞ்சு சிவப்பு நிறத்தில் காணப்படும்;.

நன்றி. தினகரன்.கொம்

http://www.dinakaran.com/daily/2003/Aug/...ews7.html

Print this item

  who is the great politician now?
Posted by: J.Premkumar - 08-23-2003, 02:31 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (9)

<b>who is the great politician now?</b>
jeyalalitha
ranil vikramasinghe
chanthirika
or
bush

Print this item

  இதை என்னவென்று சொல்வது ?
Posted by: Paranee - 08-23-2003, 01:21 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (4)

மேடைகளில் தமிழ் என்று பேசிவிட்டு, தமிழ்ப்போர்வையில் தங்கள் குடும்பத்துக்காக பணம் சேர்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இலக்கியம் படைப்பதாக சொல்லி புத்தக வியாபாரம் செய்து பணம் பார்க்கிறார்கள். எது இலக்கியம் ? வெள்ளைத்தாளை பேனாமையால் கறுப்பாக்கிவிட்டால் அது இலக்கியமாகுமா ?

டாக்டர்.கருணாநிதி குறித்து முதல்வர் ஜெயலலிதா கூறியதாக தற்ஸ்ரமில் .கொம்மி;ல் வெளிவந்த தகவல்

Print this item