| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 712 online users. » 0 Member(s) | 709 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 2,992
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,019
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,487
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,246
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,517
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,689
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,245
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,845
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,927
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,174
|
|
|
| யாழ்.கோண்டாவில் + ஆரியகுளத்தில் கைக்குண்டுவீச்சு |
|
Posted by: yarlmohan - 04-25-2006, 01:55 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
யாழ்.கோண்டாவில்ப் பகுதியில் இன்று நடத்தப்பட்ட கைக்குண்டு வீச்சுச் சம்பவத்தில் சிறீலங்காப்படையினர் இருவர் காயம் அடைந்துள்ளனர்.
சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினரே காயம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஆரியகுளம் சந்திக்கு அண்மித்த ஆனைப்பந்திச் சந்திப்பகுதியிலும் படையினர் மீது கைக்குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் ஸ்ரீலங்காப் படையாளி ஒருவர் உட்பட நான்கு பேர் காயம் அடைந்துள்ளனர்.
படையாளியும், 20 அகவையுடைய ஜெகதீஸ்வரி, 21 அகவையுடைய கந்தையா விமலன், 15அகவையுடைய அருட்செல்வம் சாஜிராஜ் ஆகியோரும் காயம் அடைந்துள்ளனர்
நன்றி: புதினம்
|
|
|
| போரை ஆரம்பித்தது சிறீலங்கா அரசு |
|
Posted by: Vasan - 04-25-2006, 01:32 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (38)
|
 |
வலிந்து போரை ஆரம்பித்தது சிறீலங்கா அரசு - திருமலையில் கிபிர் விமானங்கள் பாரிய குண்டு வீச்சு
- பாண்டியன் - வுரநளனயலஇ 25 யுpசடை 2006 18:44
இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு திருகோணமலை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களான சம்புூர் அதனை அண்டிய பிரதேசங்களின் மீது சிறீ லங்கா வான் படையின் கிபிர் விமானங்கள் குண்டு வீச்சுத் தாக் குதலை ஆரம்பித்துள்ளன.
இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் இருந்து இந்தச்செய்தி பதிவு செய்யும் 6-45 மணிவரை தாக்குதல்கள் நீடித்தவண்ணம் உள்ளது.
இது வரை மிகவும் சத்தத்துடன் மேற்படி சிறீ லங்கா வான்படைக்கு சொந்தமான 'கிபிர்' விமானங்களால் இது வரை 6 குண்டுகள் வீசப்பட்டுள்ளது
இதுவரை சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் தெரியவில்லை
http://www.sankathi.com/index.php?option=c...=2721&Itemid=26
|
|
|
| பயண ஒழுங்கில் நிலைப்பாடு என்ன?: விடுதலைப் புலிகள் விளக்கம் |
|
Posted by: yarlmohan - 04-25-2006, 09:24 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
தென் தமிழீழ தளபதிகளின் கிளிநொச்சி பயணம் தொடர்பான நிலைப்பாடு என்ன என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் விளக்கியுள்ளனர்.
இது தொடர்பாக இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஹான்சன் பௌயருக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் இன்று செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடிதம்:
25 ஏப்ரல் 2006
திரு ஜோன் ஹான்சன் பௌயர்
சிறப்புத் தூதுவர்
அன்புள்ள திரு பௌயர்
சமாதான முயற்சிகளைப் புத்துயிரூட்டுவதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு எமது நன்றியைத் தெரிவிக்கும் நோக்கிலும் இது தொடர்பாக எமது நிலைப்பாட்டை உங்களுக்கு அறியத்தரும் நோக்கிலும் இக்கடிதத்தை நான் எழுதுகின்றேன்.
அரசாங்கமானது ஒரு புறம் தாம் பேச்சுவார்த்தைகளுக்கு தயார் என்று பிரச்சாரம் செய்வதுடன் மறுபுறத்தில் சமாதானத்தை அழிப்பதற்கான அனைத்து வகையிலுமான செயற்பாடுகளைக் கட்டவிழ்த்துவருகின்றது என்பதை நான் உங்களுக்கச் சுட்டிக்காட்டவேண்டும்.
இக்கடிதத்தில் சிறிலங்கா அரசு இரட்டைமுகத்துடன் சமாதான முயற்சிகளைக் கையாளுகின்றது என்பதை நிரூபிக்கும் ஒன்றோடொன்று தொடர்புடைய மூன்று முக்கிய விடயங்களை விளக்குகின்றேன்.
அண்மைய நிகழ்வுகளும் சம்பவங்களும் அரசாங்கமானது எமது தமிழர் தாயகப் பிரதேசங்களில் முற்றிலும் யுத்த நிறுத்தத்திற்கு முரணான வன்முறைகளைத் தூண்டிவிட்டுக்கொண்டிருப்பதை தெளிவாகக் காட்டுகின்றது.
சிறிலங்கா அரசாங்கமானது தமிழர் தரப்பிலிருந்து காட்டப்பட்ட அனைத்து நல்லெண்ண முயற்சிகளையும் சீர்குலைத்ததடன் துணை இராணுவக் குழுவினர் மூலம் யுத்த நிறுத்தத்திற்கு விரோதமாக செயற்பட்டும் அவர்களுடன் இணைந்து தமிழர் தாயகப் பிரதேசங்களில் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடும் செயற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது.
துணை இராணுவக் குழுவினரது ஆயுதங்களைக் களைவதன் மூலம் ஆபத்தான வகையில் வளர்ந்து வரும் அவர்களது செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு பல சந்தர்ப்பங்களில் கேட்டுக்கொண்டதுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இணங்கிக்கொண்டதற்கமைவாக தமிழர் தாயகப்பகுதிகளில் இருந்து துணை இராணுவக் குழுக்களை அகற்றுமாறும் கேட்டுக்கொண்டோம். சர்வதேச சமூகமும் நிலைமையை உணர்ந்து துணை இராணுவக் குழுவினரை அகற்றுவது தொடர்பானதும் அவர்களது ஆயுதங்களைக் களைவது தொடர்பானதுமான வேண்டுகோளை விடுத்தது.
இருப்பினும் சிறிலங்கா அரசாங்கமும் அதன் ஆயுதப்படைகளும் இதைத் தட்டிக்கழித்ததால் அனைத்து மட்டங்களிலும் இன்று வன்முறைகளை துணை இராணுவக் குழுவினர் பரவச் செய்துள்ளனர்.
சிறிலங்கா ஆயுதப்படைகளும் துணை இராணுவக் குழுவினரும் பொது மக்களை இலக்கு வைத்துத் கொலைகளைச் செய்துவருகின்றனர். இச்செயற்பாடானது பொதுமக்களைக் ஆத்திர நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது.
யுத்த நிறுத்த சூழலை பேணும் எந்தவொரு சந்ததர்ப்பத்தையும் இல்லாதொழிக்கின்ற அரசாங்கத்தின் சதிச்செயற்பாடாகவே நாம் உணருகின்றோம்.
ஒரு புறத்தில் சமாதான நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் செயற்படுவது போல நடித்துக்கொண்டு மறுபுறத்தில் துணை இராணுவக் குழுக்களை கட்டுபடுத்த முடியாத அளவிற்கு வன்முறைகளை செய்வதற்கும் ஏவிவிட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச சமூகம் ஆராய வேண்டும். சிறிலங்கா அரசாங்கத்தின் நயவஞ்சகத்தை சர்வதேச சமூகம் கண்டிக்கவேண்டும். உண்மைத்தன்மையுடன் சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் மீது சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
விடுதலைப்புலிகளைத் தடைசெய்யுமாறு சர்வதேச சமூகத்தை வற்புறுத்துவதன் ஊடாக
அரசாங்கமானது புலிகளதும் தமிழர் தரப்பினதும் சர்வதேச சமூகத்துடனான உறவுகளைத் துண்டிக்கக் கடுமையாக உழைத்துவருகின்றது.
இதனூடாக சிறிலங்கா அரசாங்கத்தின் நம்பகத்தன்மையற்ற நோக்கங்களை உலகத்தின் பார்வையில் இருந்து மறைக்கமுடியும் என அவர்கள் நம்புகின்றார்கள். இந்நடவடிக்கையானது முற்றிலும் தமிழர்களை பழைய நிலைக்குத் தள்ளும் முயற்சிக்கும் சமாதான முயற்சிகள் மீதான தமிழ் மக்கள் மீதான நம்பிக்கைகளைச் சிதறடித்து சமாதான முயற்சிகளை முற்றிலும் நிரந்தரமாகவே உடைத்துவிடும் சதித் திட்டமாகும்.
அண்மையில் நான் உங்களைச் சந்தித்து உரையாடும் போது எமது தலைமைப் பீடம் மத்திய குழுவைக் கூட்ட வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் எமது கிழக்குப் பிராந்திய தளபதிகளும் பொறுப்பாளர்களும் கலந்து கொள்ளவேண்டியதன் தேவை பற்றியும் விளக்கியிருந்தேன்.
மகிந்த ராஜபகச தமது தரப்பில் சர்வ கட்சி மாநாடு மற்றும் ஆலோசனைக் கூட்டங்களையும் நடாத்தி அடுத்த கட்ட ஜெனீவாப் பேச்சுக்களுக்கு ஆயத்தமாவது போல் காட்டிக்கொண்டு, புலிகள் தரப்பில் நான்கு வருடத்திற்கு மேலாக நடைமுறையில் இருந்து வந்த வான்வழிப் போக்குவரத்து நடைமுறைகளையும் அனுமதிக்க மறுத்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கமானது நான்கு வருடமாக நடைமுறையில் இருந்த வான் வழிப் போக்குவரத்தை தடைசெய்தது மட்டுமல்லாது நாம் தெரிவித்த மாற்றுவழி யோசனையான கடற் போக்குவரத்தையும் நிராகரித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் பேச்சுவார்த்தை முயற்சிகளையும் யுத்த நிறுத்த நல்லெண்ண சூழலைக்கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளையும் தடுக்கும் நோக்கில் செயற்படுவதாகவே நாம் உணருகின்றொம்.
மகிந்த அரசிற்கு உண்மையாகவே சமாதான முயற்சிகள் மீது அக்கறை இருந்தால், நான்கு வருடங்களாக நடைமுறையில் இருந்த வான் வழிப் பயணங்களை எந்த மாற்றமும் இன்றி ஏற்றுக்கொள்வதும் அல்லாவிடில் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பிரசன்னத்தோடு எமது கடற் படைக் கலத்தில் எமது போராளிகள் பயணிப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தற்போதைய பதற்றமான சூழ்நிலையை அமைதிக்குக் கொண்டுவரவும் ஆயுதப் படைகளாலும் துணை இராணுவக் குழுக்களாலும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பீர்கள் என நம்புகின்றோம்.
இவை தொடர்பாக அரசிடம் இருந்து ஒரு தீர்க்கமான முடிவை எமக்குப் பெற்றுத் தருவீர்கள் என நாம் நம்புகின்றோம்.
தங்கள் உண்மையுள்ள,
சு.ப தமிழ்ச்செல்வன்,
அரசியல்துறைப் பொறுப்பாளர்.
என்று அக்கடிதத்தில் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
நன்றி: புதினம்
|
|
|
| சிறீலங்கா இராணுவ தலைமையகத்தில் குண்டுவெடிப்பு |
|
Posted by: Thusi - 04-25-2006, 09:05 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (28)
|
 |
இன்று மதியம் சிறீலங்கா இராணுவத்தின் கொழும்பு தலைமையகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இராணுவத் தளபதி உட்பட பத்திற்கு மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் ஒரு படைவீரர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இராணுவத்தளபதிக்கு அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.
|
|
|
| இராணுவத் தலமையகத்தில் பாரிய குண்டு வெடிப்பு |
|
Posted by: narathar - 04-25-2006, 08:53 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (6)
|
 |
இராணுவத் தலமையகத்தில் பாரிய குண்டு வெடிப்பு, அப்பத் தொடங்கியாச்சு போல?
'Big blast' at Sri Lanka army HQ
There are reports of a huge explosion inside the headquarters of the Sri Lankan army in the capital Colombo.
The head of the army, Sarath Fonseka, was inside the headquarters at the time of the blast, reports say.
"There are casualties, but the fate of the commander is not known," an official told the AFP news agency. The official said it was a bomb attack.
There has been an increase in violence in Sri Lanka recently and Tamil Tiger rebels have pulled out of peace talks.
http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/4941744.stm
|
|
|
| தமிழருக்கு எதிரான வன்முறைக்கு உடன் பதிலளிக்க வேண்டும்- HRW |
|
Posted by: puthiravan - 04-25-2006, 05:06 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
Sri Lanka: Government Must Respond to Anti-Tamil Violence
Security Forces Stand by During Mob Attacks in Trincomalee
(New York, April 25, 2006) ? The Sri Lankan government has failed to respond adequately to recent attacks by armed groups on ethnic Tamils and their homes and businesses in Sri Lanka?s eastern Trincomalee district, Human Rights Watch said today.
Police and other security forces reportedly stood by as Tamils were attacked on April 12 after an alleged Tamil Tiger bomb at a Trincomalee market killed five persons. Witnesses said that within 15 minutes approximately 100-150 ethnic Sinhalese men armed with clubs and long knives attacked Tamil businesses and homes in Trincomalee town and district. Sri Lankan human rights organizations reported that attacks from April 12 to 16 left at least 20 civilians dead (including seven women), among them Tamils, Muslims and Sinhalese. Some 75 persons needed hospital attention for injuries.
?The failure of the security forces in Trincomalee to protect the Tamil population should raise alarm bells at the highest levels of government,? said Brad Adams, Asia director at Human Rights Watch. ?The government has a responsibility to protect all Sri Lankans, no matter whether they are Tamil, Muslim or Sinhalese.?
Human Rights Watch called on the government to ensure a prompt, independent and impartial commission of inquiry into the violence and the security forces? response, with powers to recommend prosecution and compensation.
The attacks destroyed some 100 homes and left more than 3,000 people homeless. According to the Trincomalee chamber of commerce, 32 businesses and shops were damaged, destroyed or looted.
Police and armed forces stood by while the burning and killing occurred, waiting from 45 to 90 minutes before taking action. The alarm bell at the Hatton National Bank reportedly rang for two hours without response, while a policeman reportedly told a security guard at the Bank of Ceylon not to resist intruders.
President Mahinda Rajapakse?s response to the violence has been grossly inadequate. According to media reports, President Rajapakse sent high-ranking security officials and other senior officials to Trincomalee in the days following the reprisal attacks. However, Human Rights Watch is unaware of any strong public statements by the president or direct steps to increase security in the district. Some persons displaced by the violence reportedly did not receive emergency government assistance for four days.
?Given continuing ceasefire violations and rising ethnic tensions, communal violence could spiral out of control unless there is a swift and strong government response,? said Adams. ?Yet in the days since mobs began targeting Tamils in Trincomalee for arson and murder, President Rajapakse has taken no decisive action.?
Human Rights Watch said that to bring the perpetrators to justice and to demonstrate to Tamils and others that it is committed to equality under the law, the government should ensure a prompt, independent and impartial commission of inquiry into the violence and the response and behavior of the police and armed forces before, during, and after the incident. The commission, which should have at least one international member to reassure the public of its impartiality, should have powers to recommend prosecution and compensation.
Human Rights Watch also called for the prompt re-establishment of a fully functional Human Rights Commission to provide the necessary monitoring and leadership expected from this body since the outbreak of violence in Trincomalee.
The organization also called on Sri Lankan authorities to improve security in Trincomalee district, particularly for vulnerable populations, and to facilitate greater communication and cooperation among the government and civil society groups, including Tamil, Sinhalese and Muslim organizations. Human Rights Watch repeated its call to the Liberation Tigers of Tamil Eelam (the Tamil Tigers) to end all attacks on civilians.
http://www.hrw.org/english/docs/2006/04/25...slanka13262.htm
|
|
|
| வெண்டைக்காய், மீன் கறி |
|
Posted by: தூயா - 04-25-2006, 02:12 AM - Forum: சமையல்
- Replies (32)
|
 |
வெண்டைக்காய், மீன் கறி - "பன்டக்க தெல் தல"
தேவையானவை:
250 கிராம் வெண்டிக்காய்
1 மேசைக்கரண்டி மிளகாய்தூள்
1 மேசைக்கரண்டி மாலைதீவுமீன்
2 வெங்காயம்
2 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய்
1 தேக்கரண்டி சீனி
தேவையான அளவு உப்பு
செய்முறை:
1. வெண்டிக்காயை வட்டம் வட்டமாக சின்னதாக வெட்டுங்கள்.
2. வெட்டின வெண்டிக்காய்க்கு மிளாகாய்தூளும், உப்பும் சேர்த்து 5 நிமிடம் வைக்கவும்.
3. ஒரு சட்டியில் எண்ணெயை சூடாக்கி வெங்காயத்தையும், மீனையும் போட்டு 5 நிமிடங்களுக்கு வதக்கவும்.
4. வெண்டிக்காயை சேர்த்து அவை வேகும் வரை நன்றாக வேக வைக்கவும்.
5. இறுதியாக சீனி சேர்த்து சட்டியை அடுப்பில் இருந்து இறக்கவும்.
குறிப்பு: இது இலங்கையில் சிங்களவர்கள் செய்யும் கறி. இதற்கு பெயர் "பன்டக்க தெல் தல".
|
|
|
| முடியுமானால் முயற்ச்சியுங்கள் |
|
Posted by: K.VETTICHELVAN - 04-25-2006, 01:03 AM - Forum: போட்டிகள்
- Replies (15)
|
 |
செல் தயாரிக்கும் தொழிச்சாலை ஒன்றில். ஒரு கிலோ செல் தயாரிக்கும் இயந்திரம் 10 உள்ளது அதில் ஒன்று பழுதடைந்து விட்டது. பழுதடைந்ததால் ஒரு கிரம் (1001) கூடுதலாக தயாரிக்கின்றது அதைக்கண்டு பிடிக்க ஒருவர் வந்து பத்து இயந்திரம் செய்த செல்லையும் எடுத்து ஒருக்கா நிறுத்து இத்தனையாவது இயந்திரம் பழுது என்று சொல்லிவிட்டுப்போறார் அவர் எப்படிக்கண்டுபிடித்து இருப்பார்?
விதிமுறை
எத்தனை செல்லும் நிறுக்கலாம் ஒருமுறைதான் நிறுக்கவேண்டும்.[/b]
|
|
|
| ஈழபதீஸ்வரத்தை மீட்க மாபெரும் ஆர்ப்பாட்டம்! |
|
Posted by: ஜெயதேவன் - 04-24-2006, 10:08 PM - Forum: நிகழ்வுகள்
- Replies (10)
|
 |
[size=18]<b>சமூகவிரோதிகளிடமிருந்து ஈழபதீஸ்வரத்தை மீட்க மாபெரும் ஆர்ப்பாட்டம்!</b>
லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயம் சமூகவீரோதிகளின் கைகளில் சிக்குண்டு சீரளிவதை தடுக்கும் நோக்கில் எதிவரும் சித்திரை 28ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் மலை 2.00 மணிவரை பாரிய ஆர்ப்பாட்டம் ஆலய முன்பாக, லண்டன் பொலிசாரின் அனுமதி/பாதுகாப்புடன் நடைபெறவுள்ளது.
<b>லண்டன் வாழ் சைவத்தமிழ் அடியார்களே!</b>
லண்டன் வாழ் ஈழத்தமிழ் மக்களால், ஈழத்தமிழர்களிற்காக ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலயம், இன்று ...
<b>* ஆலயம், "உண்டியலான்" என்றழைக்கப்படும் ஜெயதேவனின் குடும்பச் சொத்தாக்கப்பட்டுள்ளது!
* ஆலய வருவாய்களில் பெரும்பகுதி உண்டியலானின் குடும்ப உறவுகளின் பெயர்களில் கொழும்பில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றது!
* ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் ஆலய வரவு/செலவு கணக்குகள் அடியார்களுக்கு காண்பிக்கப்படவில்லை!
* ஆலய வருவாய்கள், பிரித்தானிய கட்சி அரசியலுக்கும், தமிழ்த் தேசிய விரோத சக்திகளின் செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது!
* ஈழ்பதீஸ்வரர் ஆலயம், லண்டனில் ஒட்டுப்படைகளின் சரணாலயமாக்கப்பட்டிருக்கிறது!</b>
... இவற்றிலிருந்து ஆலயத்தை மீட்டு, மீண்டும் மக்களிடம் ஒப்படைக்கும் நோக்கில் தொடர் போராட்டங்கள், பிரித்தானிய சட்ட வரையரைக்குட்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே இவ்வார்ப்பாட்டமும் நிகழ்த்தப்படவுள்ளது. தயவு செய்து அனைத்து சைவப் பெருமக்கள்களும் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, சமூகவிரோதிகளின் கைகளில் சிக்குண்டிருக்கும் ஈழபதீஸ்வரத்தை மீட்டெடுத்து, எம் மதத்தின் மீது படிந்துள்ள கறையைப் போக்குவோம்!
<b>"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"</b>
|
|
|
|