Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறீலங்கா இராணுவ தலைமையகத்தில் குண்டுவெடிப்பு
#1
இன்று மதியம் சிறீலங்கா இராணுவத்தின் கொழும்பு தலைமையகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இராணுவத் தளபதி உட்பட பத்திற்கு மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் ஒரு படைவீரர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இராணுவத்தளபதிக்கு அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.
--
--
Reply
#2
கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் குண்டுவெடிப்பு: இராணுவ தளபதி உள்ளிட்டோர் படுகாயம்!

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில் பாரிய குண்டுவெடிப்பு இன்று செவ்வாய்க்கிழமை நடாத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட பலரும் படுகாயமடைந்துள்ளனர்.

"சிறிலங்கா இராணுவ தளபதியினது வாகனத்தை இலக்கு வைத்து இராணுவ மருத்துவமனை அருகே தற்கொலைப் படை பெண் ஒருவர் தாக்குதலை நடத்தியதாக" ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவ தளபதி மற்றும் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கொழும்பு பொது மருத்துவமனையில் தலைமை செவிலியர் புஸ்பா சொய்சா கூறினார்.

நன்றி: புதினம்
Reply
#3
5 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Reply
#4
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில் பாரிய குண்டுவெடிப்பு இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்துள்ளார். சரத் பொன்சேகாவின் பாதுகாவலர்கள் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் 1.45 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது.

"சிறிலங்கா இராணுவ தளபதியினது வாகனத்தை இலக்கு வைத்து இராணுவ மருத்துவமனை அருகே தற்கொலைப் படை பெண் ஒருவர் தாக்குதலை நடத்தியதாக" ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவ தளபதி மற்றும் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கொழும்பு பொது மருத்துவமனையில் தலைமை செவிலியர் புஸ்பா சொய்சா கூறினார்.

"இராணுவத் தலைமையகத்தில் குண்டுவெடித்ததையடுத்து சிறிலங்காவின் பங்குச் சந்தை வர்த்தகம் பாரிய சரிவைச் சந்தித்துள்ளது" என்று பங்கு வர்த்தக பிரமுகர் சின்தக ரணசிங்க தெரிவித்துள்ளார்.

"பாரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மேலதிக தகவலைத் தெரிவிக்க இயலாத நிலை இருப்பதாகவும்" சிறிலங்கா காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நன்றி: புதினம்
Reply
#5
கொழும்பில் சிறீலங்கா இராணுவத் தலைமையகத்தினுள் இன்று தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்கொலைத் தாக்குதலில் இராணுவத் தளபதி சரத்பொன்கேசா உட்பட 10 இராணுவ உயர் அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளதோடு மேலும் பல இராணுவத்தினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சரத்பொன்சேகா உயிரிழந்துள்ளார்.இதேவேளை சரத்பொன்சேகாவின் 5 மெய்ப்பாதுகாப்பாளர்கள் கொல்லபட்டுள்ளனர்.

படுகாயமடைந்த இராணுவ அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். சேதங்கள் மிக அதிகம் என அறியமுடிகிறது. பெண் தற்கொலைதாரியே குண்டை வெடிக்கவைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக தகவல் விரைவில்.....

பதிவு
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#6
(கொழும்பு நிருபர்)
இன்று கொழும்பில் சிறிலங்கா இராணுவத் தலைமையக மருத்துவமனைக்கு அருகில் வைத்து தளபதி லெப்டின் ஜெனரல் சரத்பொன்சேகா பயணம் செய்த வாகனத்தை இலக்குவைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் சிறிலங்காப்படைகளின் தளபதி உட்பட பல உயர் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாகவும் எனினும் இதனை சிறிலங்கா அரசு மூடிமறைத்து வருவதாகவும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்
Reply
#7
புளியங்குளம் மற்றும் முகமாலை சோதனைச்சாவடிகளை சிறிலங்கா இராணுவம் மூடிவிட்டதாக பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன
Reply
#8
Mathuran Wrote:கொழும்பில் சிறீலங்கா இராணுவத் தலைமையகத்தினுள் இன்று தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்கொலைத் தாக்குதலில் இராணுவத் தளபதி சரத்பொன்கேசா உட்பட 10 இராணுவ உயர் அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளதோடு மேலும் பல இராணுவத்தினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

<b>மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சரத்பொன்சேகா உயிரிழந்துள்ளார்.</b>இதேவேளை சரத்பொன்சேகாவின் 5 மெய்ப்பாதுகாப்பாளர்கள் கொல்லபட்டுள்ளனர்.

படுகாயமடைந்த இராணுவ அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். சேதங்கள் மிக அதிகம் என அறியமுடிகிறது. பெண் தற்கொலைதாரியே குண்டை வெடிக்கவைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக தகவல் விரைவில்.....

பதிவு

?????????????????
:?: :?: :?: :?: :?: :?:
<b>
?
- . - .</b>
Reply
#9
சரத் பொன்சேகாவை பற்றிய செய்தி நிஜம் தானா?
[b][size=15]
..

Reply
#10
கொழும்பில் சிறீலங்கா இராணுவத் தலைமையகத்தினுள் இன்று தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்கொலைத் தாக்குதலில் இராணுவத் தளபதி சரத்பொன்கேசா உட்பட 10 இராணுவ உயர் அதிகாரிகள் படுகாயமடைந் துள்ளதோடு மேலும் பல இராணுவத்தினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சரத்பொன்சேகா உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக அறிய முடிகிறது. .இதேவேளை சரத்பொன்சேகாவின் 6 மெய்ப்பாதுகாப்பாளர்கள் கொல்லபட்டுள்ளனர்

பதிவு
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#11
கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் குண்டுவெடிப்பு: இராணுவத் தளபதி படுகாயம்- 8 பேர் பலி

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில் பாரிய குண்டுவெடிப்பு இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்துள்ளார். சரத் பொன்சேகாவின் பாதுகாவலர்கள் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 27 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று பிற்பகல் 1.45 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது.

"சிறிலங்கா இராணுவ தளபதியினது வாகனத்தை இலக்கு வைத்து இராணுவ மருத்துவமனை அருகே தற்கொலைப் படை பெண் ஒருவர் தாக்குதலை நடத்தியதாக" ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தளபதி மற்றும் 27 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கொழும்பு பொது மருத்துவமனையில் தலைமை தாதி புஸ்பா சொய்சா கூறினார்.

"இராணுவத் தலைமையகத்தில் குண்டுவெடித்ததையடுத்து சிறிலங்காவின் பங்குச் சந்தை வர்த்தகம் பாரிய சரிவைச் சந்தித்துள்ளது' என்று பங்கு வர்த்தக பிரமுகர் சின்தக ரணசிங்க தெரிவித்துள்ளார்.

"பாரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மேலதிக தகவலைத் தெரிவிக்க இயலாத நிலை இருப்பதாகவும்" சிறிலங்கா காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்
புதினம்
" "
Reply
#12
இராணுவத்தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் உயிரிர்ந்தவர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இராணுவத்தளபதி தொடர்ந்தும் அவசர சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக கொழும்பு இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Reply
#13
சரத் பொன்சேகா தேறி வருவதாக ஒரு துன்பியல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது
[size=14] ' '
Reply
#14
A9 பாதை மூடப்பட்டிருக்காம். சூனியப் பிரதேசத்தில் இருந்த செஞ்சிலுவைச் சங்கத்தினரும் வெளியேறியுள்ளனராம்.
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

புதிய இராணுவத் தளபதியாக சாந்த கெட்டேகொட மீண்டும் நியமனம்?
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

திருமலையில் ஊரடங்கு உத்தரவு.
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
Reply
#15
(5 ஆம் இணைப்பு) கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் குண்டுவெடிப்பு: இராணுவத் தளபதி உட்பட 27 பேர் படுகாயம்- 8 பேர் பலி

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில் பாரிய குண்டுவெடிப்பு இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்துள்ளார். சரத் பொன்சேகாவின் பாதுகாவலர்கள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 27 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று பிற்பகல் 1.45 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது.

"சிறிலங்கா இராணுவ தளபதியினது வாகனத்தை இலக்கு வைத்து இராணுவ மருத்துவமனை அருகே தற்கொலைப் படை பெண் ஒருவர் தாக்குதலை நடத்தியதாக" ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இராணுவ மருத்துவமனையில் நோயாளர்களைப் பார்வையிடுவதற்காக கர்ப்பிணிப் பெண் போல் வந்த தற்கொலைதாரிதான் இத்தாக்குதலை நடத்தியதாக இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் இராணுவத் தரப்பில் கூறப்படுவதாவது:

இராணுவத் தளபதியினது வாகனம் தன்னை கடந்து செல்லும் வரையில் பெண் தற்கொலைதாரி வெளிப்புற வாயிலில் காத்திருந்தார்.

பிற்பகல் உணவுக்காக சரத் பொன்சேகா புறப்பட்டுச் சென்ற போது அவரது வாகனத்தை நெருங்கிய அப்பெண் குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் கொல்லப்பட்டனர்.
படுகாயமடைந்த 28 பேரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கொழும்பு தேசிய மருத்துவமனையில் படுகாயங்களுடன் சத்திர சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 2 இராணுவ அதிகாரிகள் உட்பட 13 பேர் இராணுவ மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டனர். மிகவும் ஆபத்தான நிலையில் மூவர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இராணுவ தளபதி சரத் பொன்சேகா உட்பட 14 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இராணுவ தளபதிக்கு அவசர சத்திர சிகிச்சை செய்த பின்னர் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தை நீதிபதி பார்வையிட்டு காவல்துறையினர் மற்றும் பகுப்பாய்வினருடன் விசாரணை நடத்தினார்.

இத்தாக்குதலில் கொல்லப்பட்டோர் மற்றும் படுகாயமடைந்தோரை அடையாளம் காணும் பணி தொடர்கிறது என்று இராணுவத்தரப்பினர் தெரிவித்தனர்.

சரத் பொன்சேகாவுக்கு சத்திர சிகிச்சை முடிவடைந்து அவர் உடல்நிலை தேறிவருவதாகவும் அவருக்கு வயிற்றிலும் மார்பிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனைப் பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

"இராணுவத் தலைமையகத்தில் குண்டுவெடித்ததையடுத்து சிறிலங்காவின் பங்குச் சந்தை வர்த்தகம் பாரிய சரிவைச் சந்தித்துள்ளது' என்று பங்கு வர்த்தக பிரமுகர் சின்தக ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு குண்டுவெடிப்பையடுத்து நகரின் பாதுகாப்பை அதிகப்படுத்த அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். கொழும்பு இரகசியப் பிரிவு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நன்றி: புதினம்
Reply
#16
இராணுவத்தளபதி சரத் பென்சகோவின் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளதாக கொழும்பு வைத்தியசாலை வைத்திய அதிகாரி தெரிவித்துள்்ளார். சத்திரசிகிச்சை பிரிவிலிருந்து அவசரசிகிச்சைப் பிரிவிற்க்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Reply
#17
<b>வத் தலைமையக குண்டு வெடிப்பு - உள்வீட்டுச் சதியா?</b>

சிறீலங்கா இராணுவத் தளபதி மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலையடுத்து அரசு தலைவர் செயலகத்தில் அரசாங்கத்தரப்பினர் தற்சமயம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே நேரம் உச்ச பாதுகாப்பு பிரதேசமான இராணுவ தலைமையகத்தில் இராணுவத் தரப்பினர் கூறுவது போல ஒரு தற்கொலை தாக்குதல் நடைபெற எந்தவித சந்தர்ப்பமும் இல்லை. இது உள்விவகார hPதியான பிரச்சினையாகவே இருக்கவேண்டும் என்பதோடு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் எனக்கூறப்படுவது வெறும் கண்துடைப்பே என்று பல்வேறு அவதானிகளும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

சங்கதி
[size=14] ' '
Reply
#18
(6 ஆம் இணைப்பு) கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் குண்டுவெடிப்பு: இராணுவத் தளபதி உட்பட 29 பேர் படுகாயம்- 8 பேர் பலி

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில் பாரிய குண்டுவெடிப்பு இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்துள்ளார். சரத் பொன்சேகாவின் பாதுகாவலர்கள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 27 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று பிற்பகல் 1.45 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது.

"சிறிலங்கா இராணுவ தளபதியினது வாகனத்தை இலக்கு வைத்து இராணுவ மருத்துவமனை அருகே தற்கொலைப் படை பெண் ஒருவர் தாக்குதலை நடத்தியதாக" ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இராணுவ மருத்துவமனையில் நோயாளர்களைப் பார்வையிடுவதற்காக கர்ப்பிணிப் பெண் போல் வந்த தற்கொலைதாரிதான் இத்தாக்குதலை நடத்தியதாக இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் இராணுவத் தரப்பில் கூறப்படுவதாவது:

இராணுவத் தளபதியினது வாகனம் தன்னை கடந்து செல்லும் வரையில் பெண் தற்கொலைதாரி வெளிப்புற வாயிலில் காத்திருந்தார்.

பிற்பகல் உணவுக்காக சரத் பொன்சேகா புறப்பட்டுச் சென்ற போது அவரது வாகனத்தை நெருங்கிய அப்பெண் குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த 28 பேரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கொழும்பு தேசிய மருத்துவமனையில் படுகாயங்களுடன் சத்திர சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

சரத் பொன்சேகாவின் பாதுகாப்புக் குழுவில் இடம்பெற்றிருந்த மேஜர் பியல் விக்கிரமதுங்கவும் கொல்லப்பட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பாக மோட்டார் சைக்கிளில் வந்த இரு படைத்தரப்பினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதலையடுத்து யாழ் செல்லும் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதிகளில் ஒருவரான நந்த மல்லவராச்சியும் இத்தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 2 இராணுவ அதிகாரிகள் உட்பட 13 பேர் இராணுவ மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டனர். மிகவும் ஆபத்தான நிலையில் மூவர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்ஃ

இராணுவ தளபதி சரத் பொன்சேகா உட்பட 14 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இராணுவ தளபதிக்கு அவசர சத்திர சிகிச்சை செய்த பின்னர் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தை நீதிபதி பார்வையிட்டு காவல்துறையினர் மற்றும் பகுப்பாய்வினருடன் விசாரணை நடத்தினார் என்று இராணுவத்தரப்பினர் தெரிவித்தனர்.

சரத் பொன்சேகாவுக்கு சத்திர சிகிச்சை முடிவடைந்து அவர் உடல்நிலை தேறிவருவதாகவும் அவருக்கு வயிற்றிலும் மார்பிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனைப் பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை அதிகாரிகள் மாலை 6 மணியளவில் தெரிவித்த தகவலின்படி சரத் பொன்சேகா அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

தற்போதைய தகவல்களின் படி,

கோர்ப்பரல் வருசவிதன, லான்ஸ் கோர்பரல் ஓ.கே.டி.பி.விராஜ் மற்றும் தேவ சுரேந்திர, நிலுக பிரியங்கானி ஆகியோர் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

"இராணுவத் தலைமையகத்தில் குண்டுவெடித்ததையடுத்து சிறிலங்காவின் பங்குச் சந்தை வர்த்தகம் பாரிய சரிவைச் சந்தித்துள்ளது" என்று பங்கு வர்த்தக பிரமுகர் சின்தக ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான உறவை இத்தாக்குதல் பாதிக்கும்; எதிர்காலப் பேச்சுக்களை சீர்குலைக்கும் என்றார்.

"இருதரப்பினரும் பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல அமைதி முயற்சிகளில் ஈடுபாட்டை வெளிப்படுத்த வேண்டும்" என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கொழும்புத் தாக்குதல் தொடர்பாக சிறிலங்கா அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியதாவது:

கொழும்பில் பிற்பகலில் எதிர்பாராத பாரிய சம்பவம் நடைபெற்றுள்ள நிலையிலும் நாங்கள் அமைதி முயற்சிகளில் ஈடுபாட்டுடன் உள்ளோம்.

ஜெனீவாப் பேச்சுக்களில் பங்கேற்பதைத் தவிர்க்க தேவையற்ற காரணங்களை விடுதலைப் புலிகள் கூறிவந்தனர். அவர்கள் கூறிவந்ததன் நோக்கத்தை ஒவ்வொருவரும் இப்போது புரிந்து கொள்ள முடியும்.

பிரச்சனைக்கு யுத்தம் தீர்வு அல்ல. அமைதி முயற்சிகளின் மீது மகிந்த ராஜபக்ச நம்பிக்கை கொண்டுள்ளார். ஆகையால் சர்வதேச சமூகம்தான் இப்போது எமக்கு உதவ வேண்டும் என்றார்.

கொழும்பு குண்டுவெடிப்பையடுத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் அரசாங்கத் தலைவர்களுடன் மகிந்த ராஜபக்ச ஆலோசனை நடத்தினார்.

தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகளை உடனே செய்யுமாறு அரச தலைவர் செயலாளர், பாதுகாப்பு அமைச்சு செயலாளர் மற்றும் மூத்த அமைச்சர்களுக்கு மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

நகரின் பாதுகாப்பை அதிகப்படுத்தவும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு இரகசியப் பிரிவு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நன்றி: புதினம்
Reply
#19
<b>இலங்கை இராணுவத் தலைமையக்த்தின் மீது குண்டுத் தாக்குதல், 8 பேர் பலி;
திருகோணமலையில் வான் மற்றும் கடல்வழித் தாக்குதல்கள்</b>

-BBC கொழும்புச் செய்தியாளர்
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2006/03/20060317164342sarath203d.jpg' border='0' alt='user posted image'>
இலங்கையின் தலைநகர் கொழும்பில் இலங்கை இராணுவத் தலைமையக மருத்துவமனை வாசலில் இன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் 8 பேர் கொல்லப்பட்டனர்; இலங்கை இராணுவத்தின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவும் மேலும் 27 பேரும் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கும் , இலங்கை படையினருக்கும் மோதல்கள் நடந்துள்ளதாக அரசு தரப்பு செய்திகள் கூறுகின்றன. மிக் ரக விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.

காயமடைந்த லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா

இராணுவ மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை பார்க்க வருவது போன்று அங்கு வந்த ஒரு பெண் தற்கொலையாளி பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் இராணுவ தளபதியின் வாகனத்தின் மீது பாய்ந்து குண்டை வெடிக்கச் செய்ததாக கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகள் அமைப்பினர் மீது குற்றஞ்சாட்டுகிறது.

இராணுவத்தளபதி தனது அலுவலகத்தில் இருந்து காரில் வெளியே வந்த போது, விடுதலைப்புலிகள் அமைப்பின் தற்கொலையாளி தன்வசம் இருந்த குண்டை வெடிக்கச் செய்ததாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இராணுவப் பேச்சாளர்

இந்த தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாகவும், இராணுவத் தளபதியும் மேலும் 27 பேரும் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.

இராணுவத் தளபதியின் உடல்நிலை அபாயக் கட்டத்தை தாண்டி விட்டதாகவும் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

காயமடைந்த இராணுவ தளபதி தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் இராணுவத்தின் தலைமைத் தளபதி ஒருவர் இலக்கு வைத்து தாக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.

இதற்கிடையே ஏற்கனவே வன்செயல்களால் மிகவும் பாதிக்கப்பட்ட கிழக்கிலங்கை நகரான திருகோணமலையில் இன்று பிற்பகல் 4 மணி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Reply
#20
[size=18]அர்ரோகரா... ரோகரா..அரோகரா...

<b>"கொக்கென்று நினைத்தீர்களா? கொங்கனவர்களே!" ... ஆஆஆஆ.....

ம்ம்ம்ம்... சந்தோசத்தில் அரை முடிச்சிட்டேன்!!! ம்ம்ம்ம்ம்...

உனக்கு மனிசி, பிள்ளைகள் குடும்பத்தோடு கொலிடே போக, எங்களை அடிச்சுத்திறத்தின மண்தான் கிடைச்சுதோ????

என்ன... போர் வெறியராம்!!!! இனிக்காட்டு!!!!

.... "சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம், ஆரோவாம்"!! அப்படி பேசாமல் கம்னு இருந்திருக்கலாம்!!! ... உதென்ன இனி கை, கால், கவிட்டுக்குள்ளை, ... அதுகளுக்குள்ளையெல்லாம் தொடர்ந்து வெடிக்கேக்கைதான் தெரியும்!!!!!!! ......</b>

அரோகரா...அரகரகோகரா.....
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)