![]() |
|
முடியுமானால் முயற்ச்சியுங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: முடியுமானால் முயற்ச்சியுங்கள் (/showthread.php?tid=83) |
முடியுமானால் முயற்ச்சியுங்கள் - K.VETTICHELVAN - 04-25-2006 செல் தயாரிக்கும் தொழிச்சாலை ஒன்றில். ஒரு கிலோ செல் தயாரிக்கும் இயந்திரம் 10 உள்ளது அதில் ஒன்று பழுதடைந்து விட்டது. பழுதடைந்ததால் ஒரு கிரம் (1001) கூடுதலாக தயாரிக்கின்றது அதைக்கண்டு பிடிக்க ஒருவர் வந்து பத்து இயந்திரம் செய்த செல்லையும் எடுத்து ஒருக்கா நிறுத்து இத்தனையாவது இயந்திரம் பழுது என்று சொல்லிவிட்டுப்போறார் அவர் எப்படிக்கண்டுபிடித்து இருப்பார்? விதிமுறை எத்தனை செல்லும் நிறுக்கலாம் ஒருமுறைதான் நிறுக்கவேண்டும்.[/b] - வெண்ணிலா - 04-26-2006 ஒருமுறை தான் நிறுக்க முடியுமா?
- K.VETTICHELVAN - 04-26-2006 ஆம்மாம் அப்படி இல்லாட்டி உடன் கண்டு பிடித்து விடலாமே நிலா - suren_16 - 04-27-2006 <span style='font-size:22pt;line-height:100%'>முதலாவது இயந்திரம் தயாரித்த செல்களில் ஒரு செல்லும், இரண்டாவது இயந்திரம் தயாரித்த செல்களில் இரு செல்லும், மூன்றாவது இயந்திரம் தயாரித்த செல்களில் மூன்று செல்லும் என்ற அடிப்படையில் பத்தாவது இயந்திரம் தயாரித்த செல்களில் பத்து செல்லும் எடுத்து தராசில் வைக்கவும். பத்து இயந்திரத்திலும் எடுத்த செல்களின் மொத்த நிறை 55 கிலோ. உதாரனத்திற்கு மொத்த எடை 55.001 ஆனால் முதலாவது இயந்திரம் பழுதெனக் கொள்ளலாம். 55.002 கிலோ ஆனால் இரண்டாவது இயந்திரம் பழுது 55.003 கிலோ ஆனால் மூன்றாவது இயந்திரம் பழுது 55.004 கிலோ ஆனால் நாங்காவது இயந்திரம் பழுது 55.005 கிலோ ஆனால் ஐந்தாவது இயந்திரம் பழுது 55.006 கிலோ ஆனால் ஆறாவது இயந்திரம் பழுது 55.007 கிலோ ஆனால் ஏழாவது இயந்திரம் பழுது 55.008 கிலோ ஆனால் எட்டாவது இயந்திரம் பழுது 55.009 கிலோ ஆனால் ஒன்பதாவது இயந்திரம் பழுது 55.010 கிலோ ஆனால் பத்தாவது இயந்திரம் பழுது பதில் சரியா??</span> - K.VETTICHELVAN - 04-28-2006 நன்றி சுரேஸ் உங்கள் முயற்சிக்கு விடை சரி வாழ்த்துக்ள் - K.VETTICHELVAN - 04-29-2006 நான் 3 லீற்ரர் கொள்கலன் ஒன்றும். 5 லீற்ரர் கொள்கலன் ஒன்றும். 8 லீற்ரர் கொள்கலன் ஒன்றும் வைத்துள்ளேன் அதில் 8 லீற்ரர் கொள்கலனில் 8 லீற்ரர் பால் இருக்கின்றது இன்னொருவர் வந்து தனக்கு 4 லீற்ரர் தரும்டி கேக்கின்றார் நான் இவ் மூன்று கொள்கலன்களையும் வைத்துக்கொண்டு அரைகுறையாக அளக்காமலும் கைக்கணக்கில் ஊற்ராமலும் சரியாக 4 லீற்ரர் பால் கொடுத்து விட்டு மிகுதி 4 லீற்ரர் பாலை நான் கொண்டு போகின்றேன் எப்படி நான் பாலை அளந்து கொடுத்திருப்பேன் முடியுமானால் முயற்சியுங்கள். நன்றி - Puyal - 04-29-2006 <!--QuoteBegin-K.VETTICHELVAN+-->QUOTE(K.VETTICHELVAN)<!--QuoteEBegin-->நான் 3 லீற்ரர் கொள்கலன் ஒன்றும். 5 லீற்ரர் கொள்கலன் ஒன்றும். 8 லீற்ரர் கொள்கலன் ஒன்றும் வைத்துள்ளேன் அதில் 8 லீற்ரர் கொள்கலனில் 8 லீற்ரர் பால் இருக்கின்றது இன்னொருவர் வந்து தனக்கு 4 லீற்ரர் தரும்டி கேக்கின்றார் நான் இவ் மூன்று கொள்கலன்களையும் வைத்துக்கொண்டு அரைகுறையாக அளக்காமலும் கைக்கணக்கில் ஊற்ராமலும் சரியாக 4 லீற்ரர் பால் கொடுத்து விட்டு மிகுதி 4 லீற்ரர் பாலை நான் கொண்டு போகின்றேன் எப்படி நான் பாலை அளந்து கொடுத்திருப்பேன் முடியுமானால் முயற்சியுங்கள். நன்றி<!--QuoteEnd--><!--QuoteEEnd--> 1. 8 லீற்றர் பாலை 3 லீற்றர் கொள்கலனுக்குள் ஊற்றவும். 2. தற்போது மிகுதி 5 லீற்றர் பால். 3. 5 லீற்றர் கொள்கலன் வெறுமையாகவுள்ளது. 4. பின்னர் 3 லீற்றர் கொள்கலனுக்குள்ள 3 லீற்றர் பாலை 5 லீற்றர் கொள்கலனுக்குள் ஊற்றவும். 5. தற்போது 3 லீற்றர் கொள்கலன் வெறுமையாகவுள்ளது. 6. பின்னர் 8 லீற்றர் கொள்கலனுக்குள் உள்ள பாலை 5 லீற்றர் கொள்கலனுக்குள் ஊற்றவும். 7. தற்போது 8 லீற்றர் கொள்கலனுக்குள் 2 லீற்றர் பால் மிகுதியாகவுள்ளது. 8. பின்னர் 3 லீற்றர் கொள்கலனுக்குள் உள்ள பாலை 3 லீற்றர் கொள்கலனுக்குள் ஊற்றவும். 9. தற்போது 8 லீற்றர் கொள்கலனுக்குள் 2 லீற்றரும் 10. 5 லீற்றர் கொள்கலனுக்குள் 5 லீற்றர் பாலும் 11. 3 லீற்றர் கொள்கலனுக்குள் 1 லீற்றர் பாலும் உள்ளன. 12. தற்போது 5 லீற்றர் கொள்கலனுக்குள் உள்ள பாலை 8 லீற்றர் கொள்கலனுக்குள் ஊற்றவும். 13. தற்போது 8 லீற்றர் கொள்கலனுக்குள் மொத்தமாக 7 லீற்றர் பால் உண்டு. 14. பின்னர் 3 லீற்றர் கொள்கலனுக்குள் உள்ள 1 லீற்றர் பாலை 5 லீற்றர் கொள்கலனுக்குள் ஊற்றவும். 15. தற்போது 5 லீற்றர் கொள்கலனுக்குள் 1 லீற்றர் பாலுள்ளது. 16. தற்போது 3 லீற்றர் கொள்கலன் வெறுமையாகவுள்ளது. 17. தற்போது 8 லீற்றர் கொள்கலனுக்குள் உள்ள பாலை 3 லீற்றர் கொள்கலனுக்குள் ஊற்றவும். 18. ஊற்றிய பின் 8 லீற்றர் கொள்கலனுக்குள் 4 லீற்றர் பால் மிகுதியாக வரும். 19. இதை நீங்கள் 4 லீற்றராக விற்றாலும் சரி அடுத்த இரு கொள்கலங்களுக்குள் உள்ள பாலை விற்றாலும் சரி எங்களுக்குப் பரவாயில்லை 20. விற்ற பின் வாழைக்குலை வியாபாரத்திற்குக் கிளிநொச்சிச் சந்தைக்குப் போக வேண்டியது தான்................. 21. பதில் சரியா? - K.VETTICHELVAN - 04-29-2006 புயல் என்னால் சந்தைக்கு போகமுடியாது ஏன் தெரியுமா உங்களுடைய பால் கணக்கு செய்முறை பிளை இன்னும் ஒருக்கா முயற்சியுங்யள். - Puyal - 04-29-2006 K.VETTICHELVAN Wrote:புயல் என்னால் சந்தைக்குஎங்கே பிழை என்பதைச் சுட்டிக் காட்ட முடியுமா...? - Puyal - 04-29-2006 K.VETTICHELVAN Wrote:நான் 3 லீற்ரர் கொள்கலன் ஒன்றும். 5 லீற்ரர் கொள்கலன் ஒன்றும். 8 லீற்ரர் கொள்கலன் ஒன்றும் வைத்துள்ளேன் அதில் 8 லீற்ரர் கொள்கலனில் 8 லீற்ரர் பால் இருக்கின்றது இன்னொருவர் வந்து தனக்கு 4 லீற்ரர் தரும்டி கேக்கின்றார் நான் இவ் மூன்று கொள்கலன்களையும் வைத்துக்கொண்டு அரைகுறையாக அளக்காமலும் கைக்கணக்கில் ஊற்ராமலும் சரியாக 4 லீற்ரர் பால் கொடுத்து விட்டு மிகுதி 4 லீற்ரர் பாலை நான் கொண்டு போகின்றேன் எப்படி நான் பாலை அளந்து கொடுத்திருப்பேன் முடியுமானால் முயற்சியுங்கள்.1. 8 லீற்றரை 3 லீற்றருக்குள் ஊற்றவும். 2. 3 லீற்றருக்குள் ஊற்றியதை 5 லீற்றருக்குள் ஊற்றவும். 3. மீண்டும் மிஞ்சிய 7 லீற்றரில் 3 லீற்றரை 3 லீற்றருக்குள் ஊற்றவும். 4. மீண்டும் இரண்டாவது முறை ஊற்றிய பாலை திரும்பவும் 5 லீற்றருக்குள் ஊற்றவும். 5. தற்போது 3 லீற்றருக்குள் 1 லீற்றர் பால் மிகுதியாக உள்ளது. 6. பின்னர் 5 லீற்றரை 8 லீற்றருக்குள் ஊற்றவும். 7. தற்போது 8 லீற்றர் கொள்கலனுக்குள் 7 லீற்றர் பாலுள்ளது. 8. தற்போது 8 லீற்றர் கொள்கலனுக்குள் உள்ள 7 லீற்றர் பாலை 3 லீற்றர் கொள்கலனுக்குள் ஊற்றவும். 9. தற்போது மிகுதி 4 லீற்றரை விற்ற பின் 10. சந்தைக்குப் போகலாம் தானே, போகலாம் தானே இல்லை போறீங்கள். நன்றி வணக்கம் வாழ்க வளமுடன். - அருவி - 04-30-2006 8 லீற்றர் கொள்கலனிலிருந்து 5 லீற்றர் கொள்கலனிற்குள் ஊற்றவும். பின் 5 லீற்றர் கொள்கலனிலிருந்து 3 லீற்றர் கொள்கலனிற்குள் ஊற்றவும் இப்போது 5 லீற்றர் கொள்கலனில் 2 லீற்றர் பால் உள்ளது. 3 லீற்றர் கொள்கலனில் இருக்கும் பாலை 8 லீற்றர் கொள்கலனில் ஊற்றிவிட்டு 5 லீற்றர் கொள்கலனில் இருக்கும் 2 லீற்றர் பாலை 3 லீற்றர் கொள்கலனுள் ஊற்றவும். தற்போது, 8 லீற்றர் கொள்கலனில் 6 லீற்றர் பாலும் 5 லீற்றர் கொள்கலன் வெறுமையாகவும் 3 லீற்றர் கொள்கலனில் 2 லீற்றர் பாலும் உள்ளது. மீண்டும் 8 லீற்றர் கொள்கலனில் இருக்கும் 6 லீற்றர் பாலை 5 லீற்றர் கொள்கலனிற்குள் ஊற்றவும். இப்போது 8 லீற்றர் கொள்கலனில் 1 லீற்றர் பாலும் 5 லீற்றர் கொள்கலனில் 5 லீற்றர் பாலும் 3 லீற்றர் கொள்கலனில் 2 லீற்றர் பாலும் உள்ளன. இனி, 5 லீற்றர் கொள்கலனில் இருக்கும் பாலை 3 லீற்றர் கொள்கலனிற்குள் ஊற்றவும். ஏற்கனவே 3 லீற்றர் கொள்கலனிற்குள் 2 லீற்றர் பால் இருப்பதால் 1 லீற்றர் பாலையே ஊற்றமுடியும். ஆகவே இறுதியில், 8 லீற்றர் கொள்கலனில் 1 லீற்றர் பாலும், 5 லீற்றர் கொள்கலனில் 4 லீற்றர் பாலும், 3 லீற்றர் கொள்கலனில் 3 லீற்றர் பாலும் காணப்படும். - K.VETTICHELVAN - 04-30-2006 நன்றி அருபி உங்கள் முயச்சிக்கு வாழ்த்துக்கள் சரியான விடையை தந்ததுக்கு ஆனால் புயல்தான் என்ன குழப்பு குழப்பென்று குழப்பிவிட்டார் அருவி இதை இன்னும் ஒரு முறையில் செய்யலாம் எப்படி என்றால் 1) 8 லீற்றர் கலனில் உள்ளபாலலை 3 லீற்றர் கலனுக்கு ஊற்ர வேண்டும். பின் 3ற்குள் உள்ளதை 5ற்குள் உற்றர வேண்டும் உற்ரினால் 2) 8 ற்குள் 5 லீற்றர் பாலும் 5 ற்குள் 3 லீற்றர் பாலும் 3 ற்குள் வெறுமையாகவும் இருக்கு 3) பின் 8 ற்குள் இருந்து 3 ற்குள் ஊற்றர வேண்டும் 4) இப்பொழுது 5ற்க 3ம். 3ற்குள் 3ம். 8ற்க 2ம் உள்ளது. 5) இனி 3 ற்குள் உள்ளதை 5 ற்குள் ஊற்ரவேண்டும். 6) இப்பொழுது 5ற்க 5 லீற்றர பாலும் 3ற்க 1 லீற்றர் பாலும் 8 ற்க 2 லீற்றர் பாலும் உள்ளது 7) அடுத்தாக 5ற்க உள்ளதை 8 ற்க ஊற்றர வேண்டும் இப்;பொழுது 8ற்க 7லீற்றர் பாலும் 3ற்க 1 லீற்றர பாலும் 5து வெறுமையாகவும் உள்ளது இனி 3ற்க உள்ள 1லீற்றர் பாலை 5ற்க ஊற்றவேண்டும். 9) இப்பொழுது 8ற்க 7லீற்றர் பாலும் 5ற்க 1லீற்றர் பாலும் 3லீற்றர கலன் வெறுமையாகவும் உள்ளது 10) 8ற்க உள்ளபாலை 3ற்க ஊற்றி 3ற்க உள்ளதை 5ற்க ஊற்றினால் 5ற்க 4லும் 8ற்க 4ம் வரும் சரிதானே அருவி நன்றி புயல் உங்கள் முயற்சிக்கும் இந்த முறையில்தான் நீங்கள் செய்தநீங்கள் இடையில் பிளை விட்டு விட்டியல் - K.VETTICHELVAN - 04-30-2006 இதையும் முயற்சியுங்கள். 20அப்பம் இருக்கு 20 பேருக்கு பங்கிடனும் 01) ஆன்கள் முழு அப்பம் சாப்பிடுவார்கள். 02) பெண்கள் அரைப்பங்கு அப்பம் சாப்பிடுவார்கள். 03) பிள்ளைகள் கால்ப்பங்கு அப்பம் சாப்பிடுவார்கள் 20அப்பத்தை 20 பேருக்கு பங்கிட்டு எத்தனை ஆன்கள் எத்தனை பெண்கள். எத்தனை பிள்ளைகள் என்பதை காட்டுங்கள் நன்றி வணக்கம் மோகன் சொல்லுறேன் - paris kirukkan - 04-30-2006 நான் கணக்கில வீக் - Puyal - 04-30-2006 இரண்டாவது தடவை இதைத் தானே நான் செய்துள்ளேன். - Subiththiran - 04-30-2006 <!--QuoteBegin-K.VETTICHELVAN+-->QUOTE(K.VETTICHELVAN)<!--QuoteEBegin-->இதையும் முயற்சியுங்கள். 20அப்பம் இருக்கு 20 பேருக்கு பங்கிடனும் 01) ஆன்கள் முழு அப்பம் சாப்பிடுவார்கள். 02) பெண்கள் அரைப்பங்கு அப்பம் சாப்பிடுவார்கள். 03) பிள்ளைகள் கால்ப்பங்கு அப்பம் சாப்பிடுவார்கள் 20அப்பத்தை 20 பேருக்கு பங்கிட்டு எத்தனை ஆன்கள் எத்தனை பெண்கள். எத்தனை பிள்ளைகள் என்பதை காட்டுங்கள் நன்றி<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நான் நினைக்கின்றேன் 20 அப்பத்தை 20ஆண்களுக்கு பகிர்ர்ந்தால்தான் 20பேருக்கு கொடுக்கமுடியும். மற்றவர்களுக்கு பகிரும்போது தொகை கூடிவிடுமே? :roll: |