Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போரை ஆரம்பித்தது சிறீலங்கா அரசு
#1
வலிந்து போரை ஆரம்பித்தது சிறீலங்கா அரசு - திருமலையில் கிபிர் விமானங்கள் பாரிய குண்டு வீச்சு
- பாண்டியன் - வுரநளனயலஇ 25 யுpசடை 2006 18:44

இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு திருகோணமலை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களான சம்புூர் அதனை அண்டிய பிரதேசங்களின் மீது சிறீ லங்கா வான் படையின் கிபிர் விமானங்கள் குண்டு வீச்சுத் தாக் குதலை ஆரம்பித்துள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் இருந்து இந்தச்செய்தி பதிவு செய்யும் 6-45 மணிவரை தாக்குதல்கள் நீடித்தவண்ணம் உள்ளது.

இது வரை மிகவும் சத்தத்துடன் மேற்படி சிறீ லங்கா வான்படைக்கு சொந்தமான 'கிபிர்' விமானங்களால் இது வரை 6 குண்டுகள் வீசப்பட்டுள்ளது

இதுவரை சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் தெரியவில்லை

http://www.sankathi.com/index.php?option=c...=2721&Itemid=26
vasan
Reply
#2
வலிந்து போரை ஆரம்பித்தது சிறீலங்கா அரசு - திருமலையில் கிபிர் விமானங்கள் பாரிய குண்டு வீச்சு
- பாண்டியன் - வுரநளனயலஇ 25 யுpசடை 2006 18:44

இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு திருகோணமலை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களான சம்புூர் அதனை அண்டிய பிரதேசங்களின் மீது சிறீ லங்கா வான் படையின் கிபிர் விமானங்கள் குண்டு வீச்சுத் தாக் குதலை ஆரம்பித்துள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் இருந்து இந்தச்செய்தி பதிவு செய்யும் 6-45 மணிவரை தாக்குதல்கள் நீடித்தவண்ணம் உள்ளது.

இது வரை மிகவும் சத்தத்துடன் மேற்படி சிறீ லங்கா வான்படைக்கு சொந்தமான 'கிபிர்' விமானங்களால் இது வரை 6 குண்டுகள் வீசப்பட்டுள்ளது

இதுவரை சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் தெரியவில்லை.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#3
இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிமுதல் திருகோணமலை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களான சம்புூர் அதனை அண்டிய பிரதேசங்களின் மீது சிறீலங்காவின் முப்படைகளும் இணைந்து பாரிய குண்டு வீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றன.
<b>(மேலதிக விபரம் இணைப்பு)</b>

இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் கிபிர் விமானங்களினால் பாரிய குண்டு வீச்சுத் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இராணுவ முகாம்களிலிருந்து ஆட்டிலறி எறிகணைத் தாக்குதல்களும் நடத்தப்பட்டன. பின்னர் சிறீலங்கா கடற்படையினரும் தமது கடற்கலங்களிலிருந்து பாரிய எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.


இரவு 7.00 மணியையும் தாண்டி சிறீலங்கா படைகளின் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது வரை மிகவும் சத்தத்துடன் மேற்படி சிறீ லங்கா வான்படைக்கு சொந்தமான 'கிபிர்' விமானங்களால் இது வரை 10ற்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

சிங்கள முப்படைகளின் இந்தத் தாக்குதலினால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

எனினும் சிறுமி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பததில் வந்த தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

இதுவரை சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் தெரியவில்லை.

<b>சங்கதி</b>
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#4
திருமலையில் பாரிய குண்டுச் சத்தம் செவிமடுப்பு.
திருமலையில் சிறீலங்கா வான்படையினரின் தாக்குதலுக்குப் பின்னர் திருமலை துறைமுகம் நோக்கிய திசையில் பாரிய குண்டுத் சத்தம் ஒன்று கேட்டுள்ளது.

விமானத் தாக்குதல் நடந்து முடிந்து 3 மணி நேரம் கடந்த நிலையில் இச்சத்தம் செவிமடுக்கப்பட்டுள்ளது. இது ஒன்று கடற்படையினரின் தளம் நோக்கியதாக இருக்கலாம் அல்லது இராணுவத்தினரின் முகாம் ஒன்றில் இச்சத்தம் கேட்டிருக்கலாம் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

<b>பதிவு</b>
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#5
திருமலை சம்பூரில் விமானத்தாக்குதல் செல்வீச்சு: குழந்தை பலி

இன்று திருமலை சம்பூர்ப்பகுதியில் சிறிலங்கா வான்படையினரும் கடற்படையினரும் தொடற்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல்களின் போது ஒரு குழந்தை கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்
Reply
#6
திருகோணமலையில் விடுதலைபுலிகளின் மீது முப்படைகளும் தாக்குதல். இதனை போர்நிறுத்த கண்காணிப்புகுழுவின் தலைவர் உல்ப் கென்றிக்செனும் விடுதலைபுலிகளும் உறுதிப்படுத்தியதாக நோர்வே ஊடகமொன்று தெரிவிக்கின்றது.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#7
வலிந்து போரை ஆரம்பித்தது சிறீலங்கா அரசு - திருமலையில் சிங்கள முப்படைகளும் பாரிய தாக்குதல் (விரிவான விபரங்கள்)
- இராவணன் - எல்லான் - வுரநளனயலஇ 25 யுpசடை 2006 18:44

திருகோணமலையில் இன்று செவ்வாய்க்கிழமை மாலையில் இருந்து இந்தச் செய்தி பதி வாகும் வரை சிறீ லங்காவின் முப்படையினரும் தமிழ் பிரதேசங்களை நோக்கி பாரிய அளவில் கண்மூடித்தனமாக குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.
(விரிவான விபரங்கள் இணைப்பு)

சர்வதேசம், அயல்நாடான இந்தியா, இணைத்தலைமை நாடுகள், மற்றும் அனுசரணைப் பணிகளில் ஈடுபட்டுள்ள நோர்வே போன்றவற்றின் அவதானிப்பு, சர்வதேச சமுகத்தின் பார்வை என்ற எதையும் பொருட்படத்தாது தமது இனவாத விஸ்பரூபத்தினை இன்று சிறீ லங்கா சிங்கள அரச படைகள் தமிழர்கள்மீது கட்டவிழ்த்து விட்டுள்ளன.

இன்று மாலை ஆரம்பமான இந்த தாக்குதல் தற்போதும் இடம்பெற்றுக ;கொண்டிருக்கின்றது.

திருகோணமலை கடற்படைத்தளம், வான்படைத்தளம், மற்றும் மங்கிபிரிச் இராணுவ முகாம் போன்ற தளங்களில் இருந்து இன்று மாலை 6.35 மணியில் இருந்து இந்தச் செய்தி பதியப்படும் 8.10 மணிவரை 96 அதிகமான தனி ரகச் ஆட்டிலறி எறிகணைகள் திருமலையில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் குடிமனைகளை நோக்கி ஏவப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில் மாலை 6.35 மணியில் இருந்து இரவு 8.10 மணிவரைக்குள் 5 தடவைகள் சிறீ லங்கா கடற்படையனரால் 'மல்ரி பரல் ' தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்போதும் இத்தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இதே நேரம் இன்று மாலை 5.45 மணியளவில் இருந்து மாலை 6.15 வரை சிறீலங்கா வான்படையின் 'கிபிர்' ரக விமானங்கள் ஐந்து தடவைகள் குண்டுகளை வீசியுள்ளதுடன் 6.15 மணிக்கு பின்னர் ஆறாவது குண்டையும் வீசியுள்ளது.

அத்துடன் சிறீ லங்கா இராணுவத்தினரின் முன்னரங்க காவல் நிலையங்களில் இருந்து தொடர்ச்சியாக துப்பாக்கி வேட்டுகளும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்கள் மீது தீர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இத்தாக்குதல்கள்; காரணமாக சேனையுூர் மத்திய கல்லூரி விஞ்ஞான ஆய்வுகூடப்பகுதி பெரும் சேதடைந்துள்ளதாக இறுதியாகக்கிடைத்த தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

திருகோணமலை மாவட்டத்தின் இறால்குளி, கடற்கரைச்சேனை, சேனையுூர், சம்புூர், இலக்கந்தை, சூடைக்குடா, பாட்டாளிபுரம், உப்பாறு உள்ளிட்ட பிரதேசங்கள் மீதே சிறீ லங்கா சிங்கள இராணுவத்தின் முப்படையினரின் தாக்குதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த திடீர் தாக்குதல்கள் காரணமாக செய்வதறியாத மக்கள் அல்லோல கல்லோலப்பட்டு நிலத்தில் பதுங்கி தற்பாதுகாப்புத் தேடிவருகின்றனர். எனினும் அவர்கள் பாதுகாப்பான இடங் களுக்கு கூட ஓட முடியாத நிலையில் உள்ளதாகவும், தாக்குதல்கள் இடைவிடாது நடைபெறுவதுடன் பல்வேறு பிரதேசங்களிலும் ஒரே நேரத்தில் தாக்குதல் இடம்பெறுவதாலும் பெரும் இன்னல்களை அனுபவித்தவருகின்றனர்.

இத்தாக்குதல்காரணமாக தமிழ் மக்களின் வீடுகள் பெரும்பாலும் சேதமடைந்துள்ளதாக அறியயமுடிகின்றது,

உயிரிழப்புகள் காயங்கள் தொடர்பாக இது வரை தெரியவரவில்லை. எனினும் சிறுமி ஒருவர் இதன்போது படுகாயமடைந்ததாக ஆரம்பத் தகவலகள் தெரிக்கின்றன.
<b>
?
- . - .</b>
Reply
#8
இருதடவைகள் பதிவாகியமயால் ஒன்றை நீக்கியுள்ளேன்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#9
திருகோணமலையில் ஸ்ரீ லங்காவின் முப்படையினரும் தமிழ் பிரதேசங்களை நோக்கி பாரிய அளவில் கண்மூடித்தனமாக குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலையில் இன்று செவ்வாய்க்கிழமை மாலையில் இருந்து இந்தச் செய்தி பதி வாகும் வரை ஸ்ரீ லங்காவின் முப்படையினரும் தமிழ் பிரதேசங்களை நோக்கி பாரிய அளவில் கண்மூடித்தனமாக குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

சர்வதேசம் அயல்நாடான இந்தியா இணைத்தலைமை நாடுகள் மற்றும் அனுசரணைப் பணிகளில் ஈடுபட்டுள்ள நோர்வே போன்றவற்றின் அவதானிப்பு சர்வதேச சமுகத்தின் பார்வை என்ற எதையும் பொருட்படத்தாது தமது இனவாத விஸ்பரூபத்தினை இன்று ஸ்ரீ லங்கா சிங்கள அரச படைகள் தமிழர்கள்மீது கட்டவிழ்த்து விட்டுள்ளன.

இன்று மாலை ஆரம்பமான இந்த தாக்குதல் தற்போதும் இடம்பெற்றுக ;கொண்டிருக்கின்றது.

திருகோணமலை கடற்படைத்தளம் வான்படைத்தளம் மற்றும் மங்கிபிரிச் இராணுவ முகாம் போன்ற தளங்களில் இருந்து இன்று மாலை 6.35 மணியில் இருந்து இந்தச் செய்தி பதியப்படும் 8.10 மணிவரை 96 அதிகமான தனி ரகச் ஆட்டிலறி எறிகணைகள் திருமலையில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் குடிமனைகளை நோக்கி ஏவப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில் மாலை 6.35 மணியில் இருந்து இரவு 8.10 மணிவரைக்குள் 5 தடவைகள் ஸ்ரீ லங்கா கடற்படையனரால் 'மல்ரி பரல் ' தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்போதும் இத்தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இதே நேரம் இன்று மாலை 5.45 மணியளவில் இருந்து மாலை 6.15 வரை ஸ்ரீலங்கா வான்படையின் 'கிபிர்' ரக விமானங்கள் ஐந்து தடவைகள் குண்டுகளை வீசியுள்ளதுடன் 6.15 மணிக்கு பின்னர் ஆறாவது குண்டையும் வீசியுள்ளது.

அத்துடன் ஸ்ரீ லங்கா இராணுவத்தினரின் முன்னரங்க காவல் நிலையங்களில் இருந்து தொடர்ச்சியாக துப்பாக்கி வேட்டுகளும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்கள் மீது தீர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இத்தாக்குதல்கள்; காரணமாக சேனையூர் மத்திய கல்லூரி விஞ்ஞான ஆய்வுகூடப்பகுதி பெரும் சேதடைந்துள்ளதாக இறுதியாகக்கிடைத்த தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

திருகோணமலை மாவட்டத்தின் இறால்குளி கடற்கரைச்சேனை சேனையூர் சம்பூர் இலக்கந்தை சூடைக்குடா பாட்டாளிபுரம் உப்பாறு உள்ளிட்ட பிரதேசங்கள் மீதே ஸ்ரீ லங்கா சிங்கள இராணுவத்தின் முப்படையினரின் தாக்குதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த திடீர் தாக்குதல்கள் காரணமாக செய்வதறியாத மக்கள் அல்லோல கல்லோலப்பட்டு நிலத்தில் பதுங்கி தற்பாதுகாப்புத் தேடிவருகின்றனர். எனினும் அவர்கள் பாதுகாப்பான இடங் களுக்கு கூட ஓட முடியாத நிலையில் உள்ளதாகவும் தாக்குதல்கள் இடைவிடாது நடைபெறுவதுடன் பல்வேறு பிரதேசங்களிலும் ஒரே நேரத்தில் தாக்குதல் இடம்பெறுவதாலும் பெரும் இன்னல்களை அனுபவித்தவருகின்றனர்.

இத்தாக்குதல்காரணமாக தமிழ் மக்களின் வீடுகள் பெரும்பாலும் சேதமடைந்துள்ளதாக அறியயமுடிகின்றது

உயிரிழப்புகள் காயங்கள் தொடர்பாக இது வரை தெரியவரவில்லை. எனினும் சிறுமி ஒருவர் இதன்போது படுகாயமடைந்ததாக ஆரம்பத் தகவலகள் தெரிக்கின்றன.


<b>பரபரப்பு</b>
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#10
<b>விடுதலைப் புலிகள் மீது முப்படையினர் தாக்குதல்: உல்ப் ஹென்றிக்சன் தகவல்</b>
<i>[செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2006, 20:10 ஈழம்] [ம.சேரமான்]</i>

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது சிறிலங்கா முப்படையினர் இன்று செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியதாக போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் உல்ப் ஹென்றிக்சன் கூறியதாவது:

விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது விமானத் தாக்குதல் முதலில் நடத்தப்பட்டது. அதன் பின்னர் கடற்படையினரும் தாக்குதல் நடத்தினர்.

கொழும்புத் தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுகிற பதில் நடவடிக்கை இது என்று நம்புகிறோம் என்றார் உல்ப் ஹென்றிக்சன்.

திருகோணமலை கடற்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து படைத்தரப்பினர் தாக்குதல் நடத்தி வருவதாக சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகன்ன தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று பிற்பகல் நடத்திய தாக்குதல் மூலம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளனர். அரசாங்கமும் செயற்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுக்களுக்கு வருவார்கள் என்று நம்புகிறோம் என்றார் பாலித கோகென்ன.
http://www.eelampage.com/?cn=25760
Reply
#11
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நாட்டு மக்களுக்கு விசேட உரை
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை தொலைக்காட்சி வழியாக இரவு 9.30 மணியிலிருந்து வழங்கிக் கோண்டிருக்கிறார்.

அவர் தம் உரையில் நாட்டு மக்களை அமைதியை பேனும் படி கேட்டுக் கோண்டிருக்கிறார். மேலதிக உரையை விரைவில் இணைக்கப்படும்.
Reply
#12
முன்னம் உவர் மகிந்தர் அமைதியை பேணட்டும். அதுக்கப்புறம் மக்களுக்கு வேதம் ஓதட்டும். போரை தொடங்கியது உவர். உவர் அமைதி காத்திருந்தால் பிரச்சினை இவ்வளவு விபரீதமான விளைவினை எட்டியிருக்குமோ? சாத்தான் வேதம் ஓத அதை மக்கள் கேட்க வேண்டுமாம்.
:evil: :evil: :evil: :evil: :evil:
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#13
iruvizhi Wrote:முன்னம் உவர் மகிந்தர் அமைதியை பேணட்டும். அதுக்கப்புறம் மக்களுக்கு வேதம் ஓதட்டும். போரை தொடங்கியது உவர். உவர் அமைதி காத்திருந்தால் பிரச்சினை இவ்வளவு விபரீதமான விளைவினை எட்டியிருக்குமோ? சாத்தான் வேதம் ஓத அதை மக்கள் கேட்க வேண்டுமாம்.
:evil: :evil: :evil: :evil: :evil:

அதே தான். உவர் உப்படி அறிவித்தல் விட்டுக் கொண்டு திருகோணமலையில் குண்டு வீசிப் பொதுமக்களைக் கொன்று கொண்டு இருக்கின்றார்.

வாய்சொல்லில் நியாயம் கதைக்கின்ற காட்டுமிராண்டி
[size=14] ' '
Reply
#14
திருமலையில் முப்படையினரும் நடத்திய தாக்குதலில் 12 பொதுமக்கள் பலி.
திருமலையில் நேற்று செவ்வாய்க்கிழமை சிறீலங்கா முப்படைகளாலும் வான், கடல், தரை நடத்தபட்ட தாக்குதலில் 12 பொதுமக்கள் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர். அத்தோடு மேலும் பலர் படுகாயமடைந்து சம்பூர் மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

சர்பூர் மருத்துவமனையில் போதிய வசதிகள் இன்மையால் படுகாயமடைந்தோர் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

நேற்றை தாக்குதலில் இதுவரை 12 சடலங்களே மீட்கப்பட்டுள்ளன. உயிரிந்தோர் தொலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றை தாக்குதலில் படையிரனால் 150 மேற்பட்ட ஆட்டிலறி செல்லகள் ஏவப்பட்டுள்ளன. 5 தடவைகள் பல்குழல் உந்துகணைத் தாக்குதல் நடத்தபட்டுள்ளது. 6 கிபிர் குண்டுத் தாக்குதல் நடத்தபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

<b>பதிவு</b>
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#15
தமிழ் மக்களைப் பாதுக்காக்கும் நோக்கில் விடுதலைப் புலிகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறிக்காமால் மட்டுப்படுத்தப்பட்ட தற்காப்பு இராணுவ நடவடிக்கைகளை சிறிலங்கா வான் படைத் தளங்கள்,கப்பற்படைத் தளங்கள் மீது இனி மேற்கொள்ளலாம்.இது போர் நிறுத்த ஒப்பந்ததை மீறாமல் மேற்கொள்ளப்படும் ஒரு மட்டுப் படுத்தப்பட்ட தற்காப்பு இராணுவ நடவடிக்கையாக இருக்கும்.
Reply
#16
மூதூர்படகுத்துறைமீது விமானத்தாக்குதல். ஐந்து முஸ்லீம் பொதுமக்கள் பலி. 8பேர் காயம்.
நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களின் தொடற்சியாக இன்றும் சிறிலங்கா படைத்தரப்பு மக்கள் வாழ்விடங்கள்மீது தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது. விமானத்தாக்குதல்கள் பல்குழல் எறிகணைத்தாக்குதல்கள் கடற்படை பீரங்கித்தாக்குதல்கள் என இவை தொடர்கின்றன.

இன்று காலை திருமலை விடுதலைப்புலிகளின் நிர்வாகப்பகுதிமீது ஆட்லெறி மற்றும் விமானத்தாக்குதல்கள் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இத்தாக்குதல்களில் இதுவரை பதின்நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டும் பெருந்தொகையானோர் காயமடைந்தும் உள்ளனர்.

இது இவ்விதமிருக்க இன்று காலை 8.10அளவில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள மூதூர் இறங்கு துறைமீது சிறிலங்கா வான்படையின் கிபீர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஐந்து முஸ்லீம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும்பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் இவருவர் சிறிலங்காக் கடற்படையினர் எனத் தெரியவருகிறது.

<b>பதிவு</b>
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#17
திருமலையில் முப்படைகளின் தாக்குதல் தொடர்ந்தால் தற்காப்பு இராணுவத் தாக்குதல்கள் நடத்த நேரிடும் புலிகள் எச்சரிக்கை
திருமலையில் முப்படைகளின் தாக்குதல் தொடர்ந்தால் தற்காப்பு இராணுவத் தாக்குதல்கள் நடத்த நேரிடும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர்.

ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் கூறியுள்ளதாவது:

திருகோணமலையில் போர்ச் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆர்ட்டிலரிகளாலும் பீரங்கிகளாலும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.சிறிலங்கா அரசாங்கப் படைகளின் தாக்குதல் நீடித்தால் தற்பாதுகாப்பு இராணுவத் தாக்குதல்களை தமிழீழ விடுதலைப் புலிகளும் மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவர் என்றார் புலித்தேவன்.

திருமலை நிலைமைகள் குறித்து கருத்து தெரிவித்த இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன்,

தற்போதும் நடைமுறைப்படுத்தக் கூடிய யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. எந்த ஒருதரப்பும் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளவில்லை. ஆனால் யுத்த நிறுத்தம் இப்போது இல்லை என்றார் அவர்.

சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகென்ன கூறுகையில்,

இது ஒரு கட்டுப்படுத்தக் கூடிய நடவடிக்கைதான். இதைத் தடுக்கலாம். மீண்டு மீண்டும் எண்ணிக்கையின்றி படைத்தரப்பினர் கொல்லப்பட்டு வருகின்றனர் என்றார்.

<b>பரபரப்பு</b>
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#18
விடுதலைப் புலிகளின் நிலைகள் மீதே முதலில் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது: உல்வ் ஹென்றிக்சன்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது சிறிலங்கா முப்படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியதாக போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது விமானத் தாக்குதல் முதலில் நடத்தப்பட்டது.

அதன் பின்னர் கடற்படையினரும் தாக்குதல் நடத்தினர். கொழும்புத் தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுகிற பதில் நடவடிக்கை இது என்று நம்புகிறோம் என்றார் உல்ப் ஹென்றிக்சன்.

<b>பதிவு</b>
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#19
Mathuran Wrote:விடுதலைப் புலிகளின் நிலைகள் மீதே முதலில் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது: உல்வ் ஹென்றிக்சன்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது சிறிலங்கா முப்படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியதாக போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது விமானத் தாக்குதல் முதலில் நடத்தப்பட்டது.

அதன் பின்னர் கடற்படையினரும் தாக்குதல் நடத்தினர். கொழும்புத் தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுகிற பதில் நடவடிக்கை இது என்று நம்புகிறோம் என்றார் உல்ப் ஹென்றிக்சன்.

<b>பதிவு</b>

இது பரபரப்பின் செய்தியல்ல. ரொய்ட்டரின் செய்தியை புதினம் மொழிபெயர்த்துப் போட்டது. பிற தளங்களில் எடுத்துப் போடுபவர்கள் உண்மையானவர்களின் தளத்திலிருந்து எடுத்துப் போடுங்கள்.
S.Nirmalan
Reply
#20
மன்னிக்கவும் நிர்மலன் பதிவில் இருந்துதான் நான் தகவலினை பெற்றுக்கொண்டேன். அச் செய்தியினை அவர்கள் எங்கிருந்து பெற்றார்கள் என்பதை அவர்கள்தான் எழுதவேண்டும். புதினம் இணையத்துக்குள் எம்மால் உள் நுளையமுடியாமையால் உள்ளது அதன் செய்தியினை இணைக்க முடியாமைக்கு வருந்துகின்றேன்.

நன்றி
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)