| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 445 online users. » 0 Member(s) | 442 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,284
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,226
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,619
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,045
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,455
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,467
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| தமிழ் மக்களின் அறிவையும் மனதையும் கொல்லும் கலாச்சார சீரழிவு |
|
Posted by: கெளஷிகன் - 02-05-2004, 09:25 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
<b>கலாச்சாரமற்ற இனம் ஒரு மந்த புத்தியுள்ள இனம். அதேபோன்று கலாச்சாரமற்ற படை ஒருமந்தபுத்தியுள்ள படையேயாகும். ஒரு இனத்தின் தனித்துவம் அதன் கலாச்சாரத்தனித்தன்மையின் அடிப்படையிலேயே தங்கியுள்ளது. இதன் காரணமாகவே, ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின் அதன் கலாச்சாரத்தை அழித்துவிட்டால் போதுமானது என்பதை ஆக்கிரமிப்பாளர்கள் தமது கோட்பாடகவே கொண்டுள்ளனர்.
அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்புக்குள்ளாகும் எந்த ஒரு இனமும் ஆக்கிரமிப்பாளர்களால் அறிவையும் மனதையம் வெல்லும் (Winning Hearts And Minds) நடவடிக்கை என்ற பெயரில் ஒருவிதமான உளவியல் நடவடிக்கைக்கு திட்டமிட்டவகையில் உள்ளாக்கப்படுவது வழக்கம்.
இது அந்த இனத்தின் இயல்பை, கலாச்சாரத்தனித்துவத்தை பண்பாட்டுச்சிறப்பை, பாரம்பரியச் செழுமையை மெல்லமெல்ல ஊடுருவி, அவற்றை நிர்மூலமாக்கும் ஒரு தொலைநோக்குச் செயற்பாட்டை கொண்டதாகும். ஆக்கிரமிப்புக்குள்ளாகும் மக்கள் அவலங்களுக்குள்ளாகி அந்தரப்பட்டு பீதியுடன் இருக்கும் நிலையில் அவர்களின் அந்த நேர பலவீனங்களைப்பயன்படுத்தி அவர்களுள், அவர்களின் அன்றாட வாழ்வுள் ஊடுருவும் இந்த |கலாச்சார| அழிப்பு நடவடிக்கையாளர்கள் அவர்களின் இனத்தனித்துவத்தை இலக்கு வைத்தே செயற்படுவார்கள்.
போர்த்துக்கேய காலம் முதல்கொண்டு ஒல்லாந்தர், ஆங்கிலேயர் எனத்தொடர்ந்து வந்த ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரும் இதே யுத்தியையே கையாண்டு எமது இனத்தனித்துவத்தை சிதைத்து எமக்குள் தமது இன - மத - கலாச்சார விதைகளை தூவிட்டே சென்றுள்ளனர். அவை எமக்குள் ஆழவேரூன்றி விருட்சமாக இல்லாவிட்டாலும், மரமாகவேணும் வளர்ந்தே உள்ளது.
மேற்கத்திய ஆதிக்கசக்திகளின் வெளியேற்றத்தின் பின், உள்ளுர் மேலாதிக்க பேரினவாதிகளும் இந்திய வல்லாதிக்க சக்தியும் இதே யுத்தியையே அவரவர் அபிலாசைகளின் நோக்க இலக்குக்களுக்கேற்ப கையாண்டனர். இந்தியப்படையின் வெளியேற்றத்தின் பின்னர் அதனால் ஏற்பட்ட கலாச்சார பண்பாட்டு சீரழிவில் இருந்து நாம் மீண்டு நமது அடையாளங்களை உறுதிசெய்ய படுகாலம் எடுக்கவே செய்தது.
எனினும் அவர்கள் விட்டுச்சென்ற எச்சங்களாகவே இன்னமும், அவர்களின் எடுபிடிகளாகச் செயற்பட்ட சமூக - தேசவிரோத சக்திகள் தமிழ்க்குழுக்கள் என்ற பெயரில் இந்திய,சிங்கள அரசுகளுக்கு முகவர்களாகவும், துணைப்படையாகவும் இயங்கி எமது இன கலாச்சார தனித்துவத்தை தொடர்ந்தும் சீரழித்து வருகின்றனர் என்பது தெரிந்த விடயமேயாகும்.
இந்த சமூக விரோத சக்திகளின் அனுசரனையுடன் தான் ஆக்கிரமிப்பாளர்கள் எமது கலாச்சார அடையாளங்களைச் சிதைப்பதற்கான ஊடுருவல்களை மேற்கொண்டு வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கதாகும். மதுபாவனை, போதைப்பொருள் பரம்பல், ஆபாசச்சினிமாப் படங்களின் வருகை போன்றவை யாழ்குடா ஆக்கிரமிப்பின் பின் இங்கு அதிகரிக்கத் தொடங்கின. இது ஒரு திட்டமிட்ட உளவியல் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டது.
ஒரு ஏழழாண்டு காலப்பகுதிகுள் அது ஒரு கொடிய விஷக்காய்ச்சல் போன்றே நீக்க முடியாத அளவுக்கு பரவிவிட்டுள்ளமையின் பிரதிபலிப்பை நாம் தெளிவாகவே உணரக்கூடியதாக உள்ளது. அன்றாடம் ஊடகங்களினூடாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் அதிர்ச்சி தருவனவாக மட்டுமல்ல அவமானம் தருவனவாகவும் உள்ளன.
இந்த கலாச்சார சீரழிவு ஊடுருவல்களின் பாதிப்புகள் மிக ஆழவேரூன்றி அகலக் கிளை பரப்பியுள்ளமையே அன்றாட நிழக்வுகள் உணர்த்துவதாகவும் உள்ளன. போதைவஸ்த்துப்பாவனை இளம் சமூகத்தவரிடையே பெருமளவில் பரவி விட்டுள்ளது.
பெண்கள் மத்தியிலும் மது பாவனை அதிகரித்துள்ளது. குடும்ப உறவுகள் சீர்கெட்டு விவகாரத்து போன்றவை தீவிரமாகியுள்ளது. பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் வல்லுறவுகள் பரவலாக நடந்து வருகின்றன. குற்றச் செயல்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நடைபெற்று வருகின்றன.. இளையோர் மூத்தோரை மதிக்கும் பண்பாடு அற்றுவிட்டது. சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்பு சக்திகளின் அனுசரனையுடனும் அங்கீகாரத்துடனும் குழுக்களாக ஆயுதங்களுடன் இயங்கி வருகின்றமையானது சாதாரண மக்களின் பொது வாழ்விற்கு அச்சுறுத்தலாகியுள்ளது.
மது வியாபார நிலையங்களும், மூன்றாம் தர திரைப்படங்களை திரையிடும், மினிசினிமாக்களும், சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையாளர்களும் பெருகிப்பரந்துள்ளார்கள். இது ஆபத்தான, ஆரோக்கியமற்ற ஒருநிலையாகும். எமது இனத்தனித்துவம், கலாச்சாரச் சீரழிவின் அடிப்படையில் இழக்கப்பட்டு வருகிறது என்பது மறுக்கப்படமுடியாத ஒன்றாகவே உள்ளது.
யாழ் குடா நிலைமைதான் ஆக்கிரமிப்பாளர்களால் இவ்வாறு சீரழிந்துள்ளது என்றால் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் தமிழ் மக்களின் பண்பாட்டை சீரழிக்கும் வகையில் சிங்களபட முதலாளிகளும் தமிழ் மக்களை வக்கிரமனமுள்ளவர்களாக மாற்றியேனும் பணம் தேடநினைக்கும் தமிழ்த் திரையரங்கு முதலாளிகளும் இறக்குமதி செய்து திரையிடும் படங்கள் இந்திய-தமிழக நச்சுக் கலாச்சார ஆபாசக்கலை வளர்ச்சியின் கீழ்த்தரமான சிந்தனையை இங்கு பரப்புபவையாகவேயுள்ளன. இங்கும் பாதிக்கப்படுபவர்கள் தமிழ் மக்களே.
இதனை சிங்கள அரசும் மௌனமாக அங்கீகரித்தேயுள்ளது. பத்திரிகைகளில் வெளியாகும் திரைப்பட வெளியீடுகள் பற்றி விளப்பரங்களைப்பார்த்தால் நமது இனம் எதிர்கொண்டு வரும் சீரழிவைப்புரிந்து கொள்ள முடியும். இத்தகைய திரைப்படங்கள் குறித்து கண்டித்து கட்டுரைகள் வெளியிடும் கொழும்ப தமிழ் பத்திரிகைகள் கூட, இப்படங்கள் குறித்த விளம்பரங்களை பெருமையுடன் பச்சை அசிங்கத்தனமான ஆபாச வார்த்தைகளுடன் வெளியிடுவதைப் பார்க்கும் போதுதான் அந்தப் பத்திரிகையிகளின் சமூகப் பொறுப்புக் குறித்த சந்தேகமே எழுகிறது.
இதனைவிடவும் இவர்கள் ஒரு விபச்சார விடுதியையே நடத்தலாம். அண்மையில் தமிழீழ திரைப்படப்பிரிவு விடுத்துள்ள வேண்டுகோளுடன் கூடிய அறிக்கையில் 'தமிழ்ப் பாண்பாட்டைத்திட்டமிட்டு சீரழிக்க முயலும் தீயசக்திகளுக்கு துணை போகாதீர்கள்" என்று கோரியுள்ளது.
தமிழினத்தின் தனித்துவ கலாச்சாரத்தை பேணிப்பாதுகாக்கும் வகையில் தமிழ்ப் பண்பாட்டை வளர்த்தெடுக்கும் பணியில் அனைவரும் ஒன்றிணைந்து அக்கறையுடன் பொறுப்பார்வத்துடன் செயற்படவேண்டிய காலகட்ட மிதுவாகும். தமிழினம் கலாச்சரமுள்ள ஒரு படையையும் தலைமைத்துவத்தையும் கொண்டுள்ள மையமானது சர்வதேசம் அறிந்த உண்மையாகும்.
இந்தநிலையில் கலாச்சார சீரழிவுகளுக்கு நாம் ஆளாகி ஒரு மந்த புத்தியுள்ள இனமாக எம்மை இனக் காட்டிக்கொள்ளலாமா?
ஆக்கிரமிப்புச்சக்திகளினதும் அதன் அடிவருடிகளான சமூக - தேசவிரோத சக்திகளினதும் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு அதாவது தமிழ்மக்களின் அறிவையும் மனதையும் கொல்லும் உளவியல் நடவடிக்கைகளுக்கு (Killing Hearts And Minds) நாம் துணை போகலாமா?
எமது கலாச்சார தனித்துவ அடையாளங்களை நாமிழப் போமேயானால் நம்மை நாமே இழந்தவர்களாகிவிடுவோம்.
நன்றி: தூரனின் பார்வை ஈழநாதம்</b>
|
|
|
| மல்லாவியில் தொல்கால சுடுமண் சிற்பங்கள் |
|
Posted by: Chandravathanaa - 02-05-2004, 07:42 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
<b>வன்னியின் துணுக்காய் மல்லாவியில் தொல்கால சுடுமண் சிற்பங்கள் உட்பட்ட சுடுமண் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</b>
<img src='http://www.selvakumaran.de/padam/chitpam2.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.selvakumaran.de/padam/chitpam3.jpg' border='0' alt='user posted image'>
மல்லாவியின் வயற்பகுதி ஒன்றில் வரம்புப் பாதை துப்பரவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கையில் சுடுமண் சிற்பங்கள்,மக்களால் கண்டெடுக்கப்பட்டன. பாதை துப்பரவுப் பணியின்போது மண்வெட்டிகளால் பொருட்கள் உடைபட்டுமுள்ளன. இருந்தும் அப்பொருட்கள் அப்பகுதி மக்களின் விழிப்புணர்வு மிக்க செயற்பாடுகாளால் தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டன.
<img src='http://www.selvakumaran.de/padam/chitpam5.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.selvakumaran.de/padam/chitpam6.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.selvakumaran.de/padam/chitpam8.jpg' border='0' alt='user posted image'>
சுடுமண் சிற்பங்கள் பெண் உருவங்களாக உள்ளன. அங்கு 5 மனித உருவங்கள் இதுவரை எடுக்கப்பட்டுள்ளன. ஒன்று தலைப்பகுதியாக மட்டும் கிடைத்தது. மற்றொன்று தலைமுதல் இடுப்புவரையான பகுதியுடன் கிடைத்திருக்கிறது, இன்னொன்று தலை முதல் அடி வரையும்,மற்றொன்று தலை முதல் மார்பு வரையும், வேறொன்று முண்டமாகவும் கிடைத்துள்ளன.
<img src='http://www.selvakumaran.de/padam/chitpam7.jpg' border='0' alt='user posted image'>
இதைவிட இரு குடவடிவ மட்கலங்களும் கிடைத்துள்ளன. இவற்றில் ஒவ்வொன்றிலும் 3 திசைகளில் துளைகள் காணப்படுகின்றன. அத்துடன் இதற்குரிய மூடிகளாக கருதப்படுவையும் எடுக்கப்பட்டுள்ளன.
<img src='http://www.selvakumaran.de/padam/chitpam4.jpg' border='0' alt='user posted image'>
இவற்றைவிட சிதைந்த ஏராளமான ஓடுகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. இவ்விடம் மேலும் அகழ்வு செய்யப்படின் ஏராளமான சான்றுகள் கிடைக்கலாம்.
இதற்குமுன் மிகத் தொன்மையான சுடுமண் சிற்பங்கள் மிக நேர்த்தியான கலைநயத்துடன் கிளிநொச்சி ஆனைவிழுந்தான் காட்டுப்பகுதியில் எடுக்கப்பட்டிருந்தன.
ஆனைவிழுந்தான் சுடுமண் சிற்பங்களைவிட இவை நேர்த்தி குறைந்தவையாக உள்ளன.
அத்துடன் மேலும் ஆனைவிழுந்தான் சுடுமண் சிற்ப முகங்களுக்கும் மல்லாவி சுடுமண் சிற்ப முகங்களுக்கும் இடையே அதிகளவிலான வேறுபாடுகள் உள்ளன. 1960 களில் கிளிநொச்சி உருத்திரபுரத்தில் ஸ்ரீலங்கா தொல்லியல் ஆணையாளர் கலாநிதி எஸ்.யு. தெரனியகலை சுடுமண் சிற்பங்களை கண்டெடுத்தார். இவையுடன் ஒத்தவையாக ஆனைவிழுந்தான் சிற்பங்கள் இருக்கின்றன. மல்லாவி சிற்பங்கள் இவற்றிலிருந்து வேறுபட்ட உள்ளன.
உருத்திரபுர சிற்பங்கள் 2000 ஆண்டுகளிற்கு முற்பட்டவை என எஸ்.யு தெரனியகலை தெரிவித்திருந்தார். இவற்றைவிட கிளிநொச்சி உருத்திரபுரத்தில் எடுக்கப்பட்ட சுடுமண் சிற்பங்கள் வவுனியா நகர ஸ்ரீலங்கா தொல்பொருட்கலைச்சாலையில் உள்ளன.
தமிழர்களின் மிகத்தொன்மையான கலை வடிவங்கள் சுடுமண் ஆக்கங்களிலேயே உள்ளன. சிந்துவெளி முதல் தமிழகம் ஆதிச்ச நல்லூர் வரை தமிழர் தாயகத்தில் வன்னியில் தமிழரின் தொன்மை சொந்தக்கலை சான்றுகளாக சுடுமண் சிற்பங்களே உள்ளன.
தமிழரிடம் கற்சிற்பம் உருவானபோது அதில் அந்நியக் கலப்புகள் வந்துவிட்டன. சுடுமண் சிற்பக்கலைகள் தமிழரின் கிராமியத் தெய்வங்களுக்குரியவையே தவிர ஆரிய கடவுளருடையவையல்ல. இதன் மூலம் சுடுமண் சிற்பங்களின் பெறுமதியை தமிழ் மக்கள் உணர்வர்.
[b]வவுனியாவிலிருந்து சுகுணன்
4.2.2004
[b]Photos-Eelamvision
Nantri - Puthinam.com
|
|
|
| கிறுக்கல் 2 - எது எதுவாக இருப்பினும்... |
|
Posted by: Eezhaven - 02-04-2004, 07:02 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (61)
|
 |
<b>எது எதுவாக இருப்பினும்...</b>
எது எதுவாக இருப்பினும்
நீ மட்டும் நீயாகவே இருந்து விடு
மனம் மானம் காக்காது போய்விட்ட பின்
பிணத்தின் மேல் பிரியமிட்டு பயன் என்ன?
வீரியம் இழந்த விதை துளிர் கொள்ளாது
வாழ நினைக்காத மனம் துயரம் இழக்காது
தணிக்க மறந்த தாகமும்
துடைக்க மறந்த சோகமும்
உனக்கு மட்டுமல்ல...
மனிதத்திற்கே வேண்டாம்
இன்று நடந்தவை
நாளை உனக்கான பாடம்
அவை கொண்டு
சமைத்திட வேண்டும் புது வேதம்
நித்தம் பூக்கும் பூவாய்
இருப்பதை விடினும்
நிஜம் தொலைக்கா மனிதனா இருப்பது நன்று
போதிமரம் தேடிச் சென்றுதான்
போதனை வேண்டுமென்றால் - இங்கே
பாதிக்குமேல் புத்தரையா!
பந்தம் தொலைக்கா சொந்தமும்
இன்பம் வருமுன் கொண்ட துன்பமும்
தோள் கொடுத்த நல்ல தோழமையும்
வெற்றி தொலைத்த தோல்விகளும்
நேற்றையது மறக்கா இன்றையதும் தானே மனித வாழ்வு
வீணே கொள்வது ஏனோ சோர்வு
பூஜ்ஜியமாக இருப்பினும் - அங்கே
ராஜ்ஜியம் அமைத்திடு
உன்னால் முடியும்
உன்னால் மட்டும்தான் முடியும்
உன்னால் முடியாது போனால்
வேறு யாரால் முடியும்?!
|
|
|
| தைப்பூசம் |
|
Posted by: Guest - 02-04-2004, 04:12 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
- No Replies
|
 |
அனைவருக்கும் தைப்பூச தின வாழ்த்துக்கள்.
இது சிங்கை மற்றும் மலேசியாவில் வெகுவிமரிசையாகவும் சிறப்பாகவும் (???) கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|
| என்ன விலையழகே... |
|
Posted by: Mathan - 02-04-2004, 03:56 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (3)
|
 |
என்ன விலையழகே...
என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் (2)
(என்ன விலை)
படைத்தான் இறைவன் உனையே மலைத்தான் உடனே அவனே
அழகைப் படைக்கும் திறமை முழுக்க
உன்னுடன் சார்ந்தது என்னுடன் சேர்ந்தது
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி
விரைவினில் வந்து கலந்திடு விரல்பட மெல்லக் கனிந்திடு
உடல் மட்டும் இங்கு கிடக்குது உடன் வந்து நீயும் உயிர் கொடு
பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
உந்தன் அழகுக்கில்லை ஈடு
(என்ன விலை)
உயிரே உனையே நினைத்து விழிநீர் மழையில் நனைந்து
இமையில் இருக்கும் இரவு உறக்கம்
கண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு
நிலவு எரிக்க நினைவு கொதிக்க
ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு
தினம் தினம் உனை நினைக்கிறேன் துரும்பென உடல் இளைக்கிறேன்
உயிர் கொண்டு வரும் பதுமையே உனைவிட இல்லை புதுமையே
உன் புகழ் வையமும் சொல்லை சிற்றன்ன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல உயிரே
உன் புகழ் வையமும் சொல்லை சிற்றன்ன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல உயிரே
நல்ல நாள் உனைச் சேரும் நாள்தான்
(என்ன விலை)
|
|
|
| ரஜினிகாந்த் சேற்றில் விழுந்து கிடக்கும் பன்றி! |
|
Posted by: Mathan - 02-04-2004, 02:26 PM - Forum: சினிமா
- Replies (20)
|
 |
ரஜினிகாந்த் சேற்றில் விழுந்து கிடக்கும் பன்றி!
நிஜமாகவே ஹாட் நியூஸ் இதுதான் ஜனங்களே....பாபா பட ரிலீஸ் நேரத்தில் பா.ம.க தலைவர் ராமதாஸ் வம்படியாக ரஜினியை விமர்சனம் பண்ணியதையும், அதற்கு வேளை வரட்டும், காலை நறுக்குவோம் என்று காத்திருந்த ரஜினி ரசிகர்கள் பற்றியும் நாம் சில தினங்களுக்கு முன்தான் எழுதியிருந்தோம். எழுதிய மை காய்வதற்குள் மீண்டும் முருங்கை மரம் ஏறியிருக்கிறார் ராமதாஸ். திருவண்ணாமலைக்கு கட்சி விஷயமாக வந்திருந்தவரிடம் ரஜினி ரசிகர்கள் பா.ம.க வை தோற்டிப்போம் என்று கூறியிருக்கிறார்களே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் இருக்கிறதே...ரொம்ப ரொம்ப சூடு!
''ரஜினிகாந்த் சேற்றில் விழுந்து கிடக்கும் பன்றி. அவரை பற்றி பேச நான் தயாரில்லை!'' -இதுதான் ராமதாஸ் வீசிய நெருப்பு. ஏற்கனவே விட்டேனா பார் என்று வரிந்து கட்டிய ரசிகர்கள் இந்த செய்தியை படித்து ரத்தம் கொதித்து போயிருக்கிறார்கள். இப்படியே போனால் என்ன நடக்குமோ?
சுட்டது: Tamil Cinema
|
|
|
| உறைய வைத்த பின் பிறப்பெடுத்த இரட்டையர்....! |
|
Posted by: kuruvikal - 02-04-2004, 01:36 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- No Replies
|
 |
12 வருடங்களாக அதி குளிர் நிலைமைகளின் கீழ் பாதுகாக்கபட்ட ஒரு முளையம் ( பெண்ணின் முட்டையும் ஆணின் விந்தும் கருக்கட்டிய பின் தோன்றும் நுகத்தின் அடுத்த கல நிலை) 39 வயதுள்ள இஸ்ரேலியப் பெண்ணின் கருப்பையில் வளர்க்கப்பட்டு ஆரோக்கியமான ஆண், பெண் இரட்டைக் குழந்தைகள் பெற்றெடுக்கப்பட்டுள்ளன...! இவ் ஒவ்வா இரட்டையர் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் பிறந்ததை தற்போது இஸ்ரேலிய மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்....!
இதற்கு முன்னர் 7 வருடங்கள் அதி குளிர் நிலையில் பாதுகாக்கப்பட்ட முளையம் ஒன்றே குழந்தையாக விருத்தியடைந்திருந்து படைத்த மனித முளையவியல் சரித்திரத்தை இது தற்போது மாற்றி எழுதி உள்ளது....!
--------------------
Israeli Twins Born from 12-Yr-Old Frozen Embryos
JERUSALEM (Reuters) - An Israeli woman has given birth to healthy twins from embryos fertilized 12 years earlier, in what doctors said Wednesday was the first successful implantation of embryos frozen for so long.
The twin boy and girl were born nine months ago, said Doctor Ariel Revel of the Hadassah Hospital's in-vitro-fertilization unit. Their 39-year-old mother gave birth to twins 12 years ago from the same batch of frozen embryos.
"This is the longest recorded time," said Revel. He said according to medical literature, the previous record was a successful birth from an embryo frozen for seven years.
-----------------------
Our Thanks to Science-Reuters-Yahoo!
|
|
|
| ஈழத்தமிழரின் தமிழக சிம்மக் குரல் விடுதலையாகிறது... |
|
Posted by: kuruvikal - 02-04-2004, 01:11 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (4)
|
 |
ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தியது உயர் நீதிமன்றம்: வெளியே வருகிறார் வைகோ
<img src='http://thatstamil.com/images18/vaiko-100.jpg' border='0' alt='user posted image'>
பூந்தமல்லி பொடா நீதிமன்றம் விதித்த மிகக் கடுமையான நிபந்தனைகளை சென்னை உயர் நீதிமன்றம் தளர்த்தி உத்தரவிட்டுள்ளது.
நேற்று அவருக்கு ஜாமீன் வழங்க முன் வந்த பொடா நீதிமன்றம் சென்னையை விட்டு எங்கும் போகக் கூடாது, தினசரி பொடா நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், பத்திரிக்கைகள், டிவிக்கு பேட்டி தரக் கூடாது என்பது உள்ளிட்ட 13 கடுமையான நிபந்தனைகளை விதித்தது.
இந்த நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காலை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதி சிர்புர்கர் மற்றும் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் பிற்பகலில் விசாரித்தது.
விசாரணை முடிவில், வைகோவுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட்டனர். அவர்கள் வெளியிட்ட தீர்ப்பில்,
வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படாத வகையில் வைகோ வெளியூர் செல்லலாம். அவ்வாறு செல்லும்போது, வழக்கு விசாரணை அதிகாரியிடம் எங்கே போகிறார் என்பதை மட்டும் முறைப்படி தெரிவித்தால் போதும். விடுமுறை நாட்களில் சிட்டி கோர்ட்டில் ஆஜராகத் தேவையில்லை. பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கவும் அவருக்கு எந்தத் தடையும் இல்லை என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
மேலும் ஜாமீன் நிபந்தனைகளை ஏற்று நடப்பதாக அபிடவிட் (பிரமாணப் பத்திரம்) எதையும் வைகோ தாக்கல் செய்ய வேண்டியதில்லை. நிபந்தனைகளை ஏற்பதாக நீதிமன்றத்தில் உறுதிமொழி தந்தாலே போதும் என்றனர்.
நேற்று பொடா நீதிமன்றம் மிகக் கடுமையான நிபந்தனைகள் விதித்தால் அவற்றை ஏற்க வைகோ மறுத்துவிட்டார். இதையடுத்து ஜாமீன் வழக்கில் இன்று பிற்பகலில் தீர்ப்பை அறிவிப்பதாக பொடா நீதிபதி ராஜேந்திரன் தெரிவித்திருந்தார்.
இப்போது அவரது நிபந்தனைகளை உயர் நீதிமன்றம் தளர்த்திவிட்டதால் ஜாமீனில் வைகோ வெளியே வருவார் என்று தெரிகிறது.
முன்னதாக இன்று காலை வைகோ சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்த அவரது வழக்கறிஞர் நன்மாறன் நிருபர்களிடம் கூறுகையில், ஜாமீன் தரப்படும்போது நிபந்தனைகள் விதிக்கப்படுவது வழக்கம் தான். ஆனால், வைகோ விஷயத்தில் நிபந்தனைகள் மிகக் கடுமையாக உள்ளன. இந்த நிபந்தனைகளால் அவரது அரசியல் பணிகளே முழுவதுமாக முடங்கிவிடும் அபாயம் உள்ளது. எனவே, இவற்றைத் தளர்த்தக் கோரி மனு தாக்கல் செய்தோம் என்றார்.
பொடா குழுவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி
இதற்கிடையே, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நக்கீரன் ஆசிரியர் கோபால் ஆகியோர் மீதான வழக்குகளை பொடா மறு ஆய்வுக் குழு விசாரிக்க அதிகாரம் உண்டு என்றும் பொடா மறு ஆய்வுக் குழு இந்த வழக்குகளை தொடர்ந்து ஆய்வு செய்யலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
இவர்கள் மீதான வழக்குகளை மறு ஆய்வு செய்ய பொடா ஆய்வுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி ஜக்காரியா உசேன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்,
வைகோ, கோபால் உள்ளிட்டவர்களின் வழக்குகளை மறு பரிசீலனை செய்ய பொடா மறு ஆய்வுக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது. எனவே இந்த வழக்கை பொடா மறு ஆய்வுக் குழு தொடர்ந். ஆனால், வழக்கை வாபஸ் பெற வேண்டும் என பொடா மறு ஆய்வுக் குழு கருதினால் அதை மாநில அரசுக்கு பரிந்துரை செய்யலாம்.
ஆனால், இதில் இறுதி முடிவெடுக்க வேண்டியது பொடா நீதிமன்றம் தான் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
--------------
Thatstamil.com
|
|
|
|