| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 443 online users. » 0 Member(s) | 440 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,284
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,226
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,619
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,045
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,455
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,467
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| சிம்பு புறநானூற்று வீரன் எப்பிடி இருக்கு? |
|
Posted by: Mathan - 02-04-2004, 03:31 AM - Forum: சினிமா
- Replies (1)
|
 |
<b>சிம்பு புறநானூற்று வீரன் - டி.ஆர்</b>
சிம்புவிற்கு இன்று 21வயது பிறக்கிறது. இந்நாளில் தனது மகனை வாழ்த்தி வரவேற்று பாராட்டி மகிழ்கிறார் டி.ஆர்.
பிப்.3ம் தேதியான இன்று சிம்புவின் 21வது பிறந்த நாள். இது குறித்து டி.ஆரிடம் கேட்டபொழுது,
சின்ன குழந்தையிலேயே வருமான வரி செலுத்தியவன் சிம்பு. காதல் அழிவதில்லை படத்தை தொடர்ந்து தம், அலை, கோவில், குத்து, மன்மதன் என்று 6 படங்களில் தற்போது நடித்திருக்கிறான். 7 வது படத்திற்காக பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கால்ஷீட் கேட்டு அணுகியிருக்கிறார்கள்.
காதல் அழிவதில்லை படம் வெளியானபோதுதான் விஜயகாந்தின் ரமணா, விஜய்யின் பகவதி, அஜீத்தின் வில்லன் ஆகிய படங்கள் வந்தன. பெரிய நடிகர்களோடு போட்டி போட்டு புறநானூறு வீரனாக ஜெயித்திருக்கிறான். பொங்கல் தினத்தில் திரைக்கு வந்த கோவில் படமும் தனியாக வந்துவிடவில்லை. விருமாண்டி, எங்கள் அண்ணா, ஜெய் போன்று பிரபலங்கள் நடித்த படங்கள் திரைக்கு வருவதை எதிர்நோக்கி வெளியான படம் தான் அது டி.ஆர்.மட்டும் எதிர் நீச்சல் போடுபவன் அல்ல. சிம்புவும் எதிர்நீச்சல் போட்டுத்தான் இன்றைக்க தம்முடன் நிற்கிறான்.
சிம்புவுக்கு படம் குவிகிறது என்பதற்காக நானும், உஷாவும்(சிம்புவின் தாயார்) வந்த படங்களை எல்லாம் ஒப்புக்கொண்டு அட்வான்ஸ் வாங்கி பெட்டியில் போட்டுக் கொள்ளவில்லை.(யாரை குறிப்பிடுகிறார்?) அவனுக்கு ஒரு வழிகாட்டியாகத்தான் இருக்கிறோம். அவன் நடிக்கும் எந்த படத்தின் படப்பிடிப்புக்கும் போய் நான் தலையிட்டதில்லை. எந்த இயக்குனரின் எண்ணத்திலும் நான் தலையிடுவதில்லை.
அவன் தனது படங்களில் இரவல் குரலுக்காக காத்திருப்பதில்லை. தனது சொந்தக்குரலிலேயே டப்பிங் பேசுகிறான். சண்டை காட்சியிலும் சரி, நடன காட்சியிலும் சரி டூப் போடச்சொல்லி கேட்பவன் அல்ல சுறுசுறுப்பாக அவனே நடிப்பவன். இன்றைக்கு மன்மதன் படத்திற்கு கதை, திரைக்கதை அமைத்திருக்கிறான். என்னுடைய ரத்தம் என்பதை நிரூபித்துவிட்டான்.
எதிர்காலத்தில் தமிழகத்தில் வரலாற்று நடிகனாக தனி அத்தியாயம் படைப்பான் இறைவன் ஆசியுடன் வென்று காட்டுவான்.
என்று இவ்வாறு சிம்புவை வாழ்த்தினார் டி.ஆர்.
சுட்ட இடம்: CineSouth
|
|
|
| ஜனட் ஜாக்ஸ்னின்(Janet Jackson) அதிரடி டிவி நிகழ்ச்சி |
|
Posted by: Mathan - 02-04-2004, 02:42 AM - Forum: பொழுதுபோக்கு
- Replies (7)
|
 |
நம்ம MTV ல போட்ட Live Dance Programல ஆபாசமா டான் ஸ் பண்ணி பாத்துகிட்டிருந்த அமரிக்கன் மக்களுக்கு அதிர்ச்சி குடுத்திருக்கார் ஜனட் ஜாக்ஸ்ன்(Janet Jackson). நம்ம வெள்ளை மாளிகை கூட அதிர்ச்சில தான். சீக்கிரம் தூங்க போனதால அத பாக்கல என்ன நடந்துச்சுன்னு ரிப்போட்ட்ர் கிட்டயே கேக்கிறார் புஸ் (Bush).
இது தான் அமரிக்காவுல ரொம்ப சூடான மேட்டர்.
அது தவறுதலா தான் நடந்துச்சுன்னு ஜனட் ஜாக்ஸ்ன் அப்புறம் MTV மன்னிப்பு கேக்கிறாங்க. ஆனா இது பிளான் பண்ணின மர்தி இருக்குன்னு அமரிக்கன் டிவி கொன்ரோல் பண்ணுற அமைப்பு சொல்லுது.
நியூச இங்கிலிஸ்ல குடுக்கிறன். படிச்சு பாருங்க.
|
|
|
| லன்டன் தமிழ் கவுன்ஸ்சிலர்களின் தொல்லைகள் |
|
Posted by: Rajan - 02-03-2004, 08:11 PM - Forum: புலம்
- No Replies
|
 |
லன்டன் தமிழ் கவுன்ஸ்சிலர்களின் தொல்லைகள் அதிகரித்து வருவது பற்றி
உதாரனம்: மாடு கன்று போட்டதுக்கும் ரீபன் வெட்டுகிறர்கள.; <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|
|
|
| **ம் தொலைக்காட்சி பற்றி |
|
Posted by: Rajan - 02-03-2004, 08:05 PM - Forum: புலம்
- Replies (20)
|
 |
**ம் தொலைக்காட்சி பற்றி உங்கள் கருத்து.........என்ன? :roll: :roll: :roll: :roll:
:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :evil: :evil:
:evil:
நேரடியாக பெயர் குறிப்பிடுவது சில காரணங்களினால் தவிர்க்கப்படவேண்டியுள்ளது. - மோகன்
|
|
|
| தாயகத்தை காதல் செய்......! |
|
Posted by: கெளஷிகன் - 02-03-2004, 12:07 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (33)
|
 |
<b>தாயகக்கவிஞர் புதுவை இரத்தினதுரையின் உலைக்களத்திலிருந்து.......</b>
அட பைத்தியக்கார கவிஞனே
தாயகத்தை எப்படியடா காதலிக்க முடியும்?
பெண்ணை ஆணும்
ஆணைப்பெண்ணுமே ஆராதிக்க முடியும்.
மண்ணுக்கு மாலையிட முடியுமா?
கட்டித்தழுவி முத்தமிட முடியுமா?
தாயகத்தைகாதலிக்கச்சொல்லும் கவிஞனே
உனக்கு புத்தி என்ன பேதலித்து விட்டதா?
உண்மைதான்.
அன்னை பூமி மீது எனக்கு அளவற்ற காதல்.
எப்படியென்று எடுத்துச்சொல்ல முடியாது
அது கற்பனை கடந்தது.
என் தாய்மடி எத்தனை அழகு?
காலை சேலை கட்டிவந்து
பூச்சூடி புன்னகைக்கும் போது
காணக்கோடி விழிகள் வேண்டும்.
மாலை வந்து மயக்கும் எழிலில்
என்மனம் வசமிழந்து போகும்
இங்கு வேர்பிடித்த ஒவ்வொரு புல்லையும்
நான் விரும்புகின்றேன்.
விரிந்து கிடக்கும் பரந்த வயல்வெளிகளையும்
வந்துகரைதழுவி
தாயவள் சேலை நனைத்து விளையாடும்
கடலையும் நான் காதலிக்கின்றேன்.
வாசமற்றதாயினும்
பூவரசம்பூக்களை நான்
பெரிதும் விரும்புகின்றேன்.
பனைகளே எனது கற்பனைச் சுனைகள்
தென்திழீழத்தின் திசையை வணங்குவேன்
மட்டக்களப்பின் மடியில் தவழ்வேன்.
அங்கு முழுநிலாக்காலத்தில்
களத்து மேட்டில் கேட்கும் பாட்டும்
கும்மியும்,குரவையும்
அம்மானையும் வசந்தன் பாட்டும்
எனக்கு இறக்கை கட்டிப் பறக்க வைக்கும்.
முறுக்கேறி இராவணன் பூமி
திருக்கோணமலை
அது அழகின் சிகரம்.
நிலத்தின் முலையென நிமிர்ந்த
கோணேசர் மலைக்கு
பின்னரே வெய்யில்"வாணிஸ்".
தம்பலகாமத்து நெல் வயல்களில்
வெட்டியடுக்கிய சூட்டின் வாசம்
மூக்கு நுனியை முத்தமிடும் போதே
நாக்கில் நீரூறும்.
பச்சையரிசி சாதம் படுருசி.
பன்குளத்து தயிருக்கு நிகர்?
வன்னி மண்ணுக்கு என்ன குறை?
கொம்புத்தேனும்
பாலைப்பழக்காலத்துப்பன்றிக்கெழுப்பும்
நந்திக்கடலின் நண்டும்
உண்டு மகிழ்ந்தவனுக்கே உண்மை தெரியும்
"வங்கம் மலிகின்ற கடல் மாதோட்டம்"
எங்களது என்ற
தேவாரப்பாட்டைக் காதோரம் ஏற்று.
பாலாவியின் கரையில் பாடு:
காற்றில் கலந்து உலகமெங்கும் உலாவரட்டும்.
தாயகத்தைக் காதல் செய் என்றேன்.
நிலத்தைக் காதலிப்பது எப்படியென்று
நீ என்னைக்கேட்கின்றாய்.
தமிழனே!
தாய்மடியில் நீ புரண்டெழவில்லை.
அன்னை மண்ணை அன்பு செய்யவில்லை.
தாயகத்தை காதலிக்கவில்லை.
அதனாற்தானே...
ஆறுகோடி தமிழர்கள் இருந்தும்
உனக்கொரு 'தனி வீடு' கிட்டவில்லை.
அகதியாகி
எத்தனை தெருக்களில்
அலைகின்றாய்.
இரவற்திண்ணையிற்தானே
இன்றும் படுக்கின்றாய்.
மூக்குச்சீறக்கூடப்பயந்து
பேச்சிழந்து கிடக்கின்றாய்.
பகைவனின் பாதனிகளுக்குக்கூட
பூசை செய்கின்றாய்.
குடங்கிக்குடங்கி கூனாகிப்போனாய்.
அடதமிழனே!
தாய்நிலத்தைக் காதல்செய்து பார்.
உன் மேனியில் இருந்து பன்னீர் விசுறும்.
நரைத்த மயிர்கூடக்கறுக்கும்.
ஆயிரம்கோடிச் சூரியப்பிரகாசம்
உன்கண்ணிலிருந்து வீசும்.
நீ எடுத்து வைக்கும்
ஒவ்வொருகாலடிக்குள்ளேயும்
நிலம் கசிந்து நீரூறும்.
கீரிமலைக்கேணியை
யாரிடமோ கொடுத்து விட்டு
தாயகத்தை காதலிப்பது எப்படியென்று
என்னிடம் கேட்கின்றாய்.
தாயகம் பேசாது.
ஓரக்கண்ணால் வெட்டி உருவேற்றாது.
கடிதம் எழுதாது.
கட்டியணைத்து முத்தமிடாது.
இந்தநான்கும் இல்லையென்றால்
காதலிக்க முடியாதா?
எந்தப்பேயன் சொன்னவன்?
தாயகம் என்தாய்.
தாயகம் என் சக்தி.
தாயகம் என் மூச்சு.
வேறொருவன் வீட்டில் விருந்தாளியாக
பட்டுவெட்டியுடன் இருப்பதிலும்பார்க்க
சொந்தவீட்டில்
கோவணத்துடன் இருப்பதே சுகம்;.
இறந்தபின்னர் என்னை எரிக்கக்கூடாது.
ஏன்தெரியுமா?
என் தாயகம் எரிகாயங்களுக்கு உள்ளாகக்கூடாது.
என்னைப்புதைப்பதையே விரும்புகின்றேன்.
புதைக்கும் போது புற்களின் வேரறுந்து போகாமல்
குழிவெட்டுங்கள்.
உப்புப்போட்டு புதையாதீர்.
நிலம் உவராகிவிடும்.
மண்போட்டு மூடினால் போதும்.
மழைபெய்ததம்
வேர்கள் துளிர்த்துக்கொள்ளும்.
என்மண்ணில் நிற்கும் போதுதான்
எனக்கு இறக்கை முளைக்கிறது.
உனக்கும் அப்படித்தான்
உணர்ந்து கொள்.
ஒரு பெண் உன்னையும்
நீ ஒரு பெண்ணையும்
ஒரு ஆண் உன்னையும்
நீ ஒரு ஆணையும்
காதலிப்பது உன் உரிமை.
ஆனால்
மண்ணைக்காதலிப்பதே உன்னதம்.
தமிழனே!
தாயகத்தை காதல் செய்......!
-வியாசன்[/b]
|
|
|
| ஆகாயப்பந்தலிலே பொன்னுாஞ்சல் ஆடுதம்மா! |
|
Posted by: sOliyAn - 02-03-2004, 12:30 AM - Forum: புலம்
- Replies (10)
|
 |
சம்பவம் ஒன்று:
ஜேர்மனியில்.. பெற்றோர்கள் வேலை.. சம்பாத்தியம்.. பொருளாதாரத்தில் வட்டிக்கு கொடுக்குமளவிற்கு முன்னேற்றம். ஆனால் சட்டபூர்வமான வேலை இல்லை. சமூக உதவியிலும் பொருளீட்டல்.
மகனை படி படி என்று படிக்க வைத்தார்கள். அவனும் மிகவும் திறமையாக கல்வி கற்றான். பல்கலைக்கழக அனுமதிக்கு தகுந்த பெறுபேறு.. ஆனாலும் என்ன?! பெற்றோர்களுக்கு (சட்டபூர்வ) வேலையற்ற காரணத்தால் தகுந்த விசா இல்லை. அதன் காரணமாக பல்கலைக் கழக அனுமதி இரத்து.
இப்போது அந்த இளைஞனின் போக்கே மாறிவிட்டது. வைன் போத்தலும் ஐரோப்பா யுவதிகளுமாக வீதிகளிலும் களியாட்ட விடுதிகளிலும்...!!
சம்பவம் இரண்டு:
மேற்கூறிய சம்பவத்துக்கும் இதற்கும் சிறு வித்தியாசம்தான்.. இது மகள்.. கெட்டித்தனமாகப் படித்தாள்.. பெற்றோர்கள் சமூக உதவியை நிறுத்தி நல்ல விசா எடுக்கத் தவறிய காரணத்தால் இவளுக்கும் பல்கலைக்கழக அனுமதி நிராகரிப்பு.
பெற்றோருக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு.. பிள்ளை தானாகவே 'இளைஞர் பராமரிப்பு நிலைய'த்துக்கு சென்றுவிட்டது. இது மிக அண்மையில் ஜேர்மனியில் நிகழ்ந்தது.
ஆக, படி படி என்று பிள்ளைகளை துாண்டிவிட்டு, அதற்கேற்றவாறு தங்களைத் தயார் செய்யத் தவறும் பெற்றோர்களை என்னென்பது?!
|
|
|
| சுரேஷ் ஜோக்கிம்மிற்கு எமது வாழ்த்துக்கள் |
|
Posted by: shanthy - 02-02-2004, 08:33 AM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
- Replies (11)
|
 |
26வது உலகசாதனையை நிலைநாட்டும் சாதனையில் சுரேஷ் ஜோக்கிம்மிற்கு எமது வாழ்த்துக்கள். சுவிசில் இவரது சாதனை ஆரம்பமாகியுள்ளது.
இவரது 26வது சாதனை இனிதே நிறைவு பெற இறைவனைப்பிரார்த்திக்கிறோம்.
வென்று வா தமிழனே !
வெற்றி மாலைகள் சு10டிவா
என்றுமே வெற்றி உன்வசம்
வென்றிடுவாய்.
வாழ்த்துக்கள்.
|
|
|
|