![]() |
|
தாயகத்தை காதல் செய்......! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தாயகத்தை காதல் செய்......! (/showthread.php?tid=7529) Pages:
1
2
|
தாயகத்தை காதல் செய்......! - கெளஷிகன் - 02-03-2004 <b>தாயகக்கவிஞர் புதுவை இரத்தினதுரையின் உலைக்களத்திலிருந்து.......</b> அட பைத்தியக்கார கவிஞனே தாயகத்தை எப்படியடா காதலிக்க முடியும்? பெண்ணை ஆணும் ஆணைப்பெண்ணுமே ஆராதிக்க முடியும். மண்ணுக்கு மாலையிட முடியுமா? கட்டித்தழுவி முத்தமிட முடியுமா? தாயகத்தைகாதலிக்கச்சொல்லும் கவிஞனே உனக்கு புத்தி என்ன பேதலித்து விட்டதா? உண்மைதான். அன்னை பூமி மீது எனக்கு அளவற்ற காதல். எப்படியென்று எடுத்துச்சொல்ல முடியாது அது கற்பனை கடந்தது. என் தாய்மடி எத்தனை அழகு? காலை சேலை கட்டிவந்து பூச்சூடி புன்னகைக்கும் போது காணக்கோடி விழிகள் வேண்டும். மாலை வந்து மயக்கும் எழிலில் என்மனம் வசமிழந்து போகும் இங்கு வேர்பிடித்த ஒவ்வொரு புல்லையும் நான் விரும்புகின்றேன். விரிந்து கிடக்கும் பரந்த வயல்வெளிகளையும் வந்துகரைதழுவி தாயவள் சேலை நனைத்து விளையாடும் கடலையும் நான் காதலிக்கின்றேன். வாசமற்றதாயினும் பூவரசம்பூக்களை நான் பெரிதும் விரும்புகின்றேன். பனைகளே எனது கற்பனைச் சுனைகள் தென்திழீழத்தின் திசையை வணங்குவேன் மட்டக்களப்பின் மடியில் தவழ்வேன். அங்கு முழுநிலாக்காலத்தில் களத்து மேட்டில் கேட்கும் பாட்டும் கும்மியும்,குரவையும் அம்மானையும் வசந்தன் பாட்டும் எனக்கு இறக்கை கட்டிப் பறக்க வைக்கும். முறுக்கேறி இராவணன் பூமி திருக்கோணமலை அது அழகின் சிகரம். நிலத்தின் முலையென நிமிர்ந்த கோணேசர் மலைக்கு பின்னரே வெய்யில்"வாணிஸ்". தம்பலகாமத்து நெல் வயல்களில் வெட்டியடுக்கிய சூட்டின் வாசம் மூக்கு நுனியை முத்தமிடும் போதே நாக்கில் நீரூறும். பச்சையரிசி சாதம் படுருசி. பன்குளத்து தயிருக்கு நிகர்? வன்னி மண்ணுக்கு என்ன குறை? கொம்புத்தேனும் பாலைப்பழக்காலத்துப்பன்றிக்கெழுப்பும் நந்திக்கடலின் நண்டும் உண்டு மகிழ்ந்தவனுக்கே உண்மை தெரியும் "வங்கம் மலிகின்ற கடல் மாதோட்டம்" எங்களது என்ற தேவாரப்பாட்டைக் காதோரம் ஏற்று. பாலாவியின் கரையில் பாடு: காற்றில் கலந்து உலகமெங்கும் உலாவரட்டும். தாயகத்தைக் காதல் செய் என்றேன். நிலத்தைக் காதலிப்பது எப்படியென்று நீ என்னைக்கேட்கின்றாய். தமிழனே! தாய்மடியில் நீ புரண்டெழவில்லை. அன்னை மண்ணை அன்பு செய்யவில்லை. தாயகத்தை காதலிக்கவில்லை. அதனாற்தானே... ஆறுகோடி தமிழர்கள் இருந்தும் உனக்கொரு 'தனி வீடு' கிட்டவில்லை. அகதியாகி எத்தனை தெருக்களில் அலைகின்றாய். இரவற்திண்ணையிற்தானே இன்றும் படுக்கின்றாய். மூக்குச்சீறக்கூடப்பயந்து பேச்சிழந்து கிடக்கின்றாய். பகைவனின் பாதனிகளுக்குக்கூட பூசை செய்கின்றாய். குடங்கிக்குடங்கி கூனாகிப்போனாய். அடதமிழனே! தாய்நிலத்தைக் காதல்செய்து பார். உன் மேனியில் இருந்து பன்னீர் விசுறும். நரைத்த மயிர்கூடக்கறுக்கும். ஆயிரம்கோடிச் சூரியப்பிரகாசம் உன்கண்ணிலிருந்து வீசும். நீ எடுத்து வைக்கும் ஒவ்வொருகாலடிக்குள்ளேயும் நிலம் கசிந்து நீரூறும். கீரிமலைக்கேணியை யாரிடமோ கொடுத்து விட்டு தாயகத்தை காதலிப்பது எப்படியென்று என்னிடம் கேட்கின்றாய். தாயகம் பேசாது. ஓரக்கண்ணால் வெட்டி உருவேற்றாது. கடிதம் எழுதாது. கட்டியணைத்து முத்தமிடாது. இந்தநான்கும் இல்லையென்றால் காதலிக்க முடியாதா? எந்தப்பேயன் சொன்னவன்? தாயகம் என்தாய். தாயகம் என் சக்தி. தாயகம் என் மூச்சு. வேறொருவன் வீட்டில் விருந்தாளியாக பட்டுவெட்டியுடன் இருப்பதிலும்பார்க்க சொந்தவீட்டில் கோவணத்துடன் இருப்பதே சுகம்;. இறந்தபின்னர் என்னை எரிக்கக்கூடாது. ஏன்தெரியுமா? என் தாயகம் எரிகாயங்களுக்கு உள்ளாகக்கூடாது. என்னைப்புதைப்பதையே விரும்புகின்றேன். புதைக்கும் போது புற்களின் வேரறுந்து போகாமல் குழிவெட்டுங்கள். உப்புப்போட்டு புதையாதீர். நிலம் உவராகிவிடும். மண்போட்டு மூடினால் போதும். மழைபெய்ததம் வேர்கள் துளிர்த்துக்கொள்ளும். என்மண்ணில் நிற்கும் போதுதான் எனக்கு இறக்கை முளைக்கிறது. உனக்கும் அப்படித்தான் உணர்ந்து கொள். ஒரு பெண் உன்னையும் நீ ஒரு பெண்ணையும் ஒரு ஆண் உன்னையும் நீ ஒரு ஆணையும் காதலிப்பது உன் உரிமை. ஆனால் மண்ணைக்காதலிப்பதே உன்னதம். தமிழனே! தாயகத்தை காதல் செய்......! -வியாசன்[/b] - kuruvikal - 02-03-2004 காதல் புரிந்த கொள்ளா மொழி என்றும், ஆணும் பெண்ணும் கொண்டதே காதல் என்றும், கண்கெட்ட கதைபறையும் சொந்த அன்னையவள் தேசம் விட்டு தூர தேசதமதில் சீரழியும் சின்னதுகளுக்கு, கொஞ்சம் பெரியவை எடுப்பாய் சொல்லுங்கோ புதுவையின் கவி கொண்டு ஓர் நல்லுரை.....! நேற்று விமானம் ஏறி, இன்று அகதிச் சீட்டுப் பெற்றோரும், கடந்தது மறந்து கண்டதும் கொண்டு அலையாமல், அங்கால் தாய் மண்மீதும், காசனுப்பும் கடமைக்கு மேலால் கொஞ்சம் உளம் கொண்டு காதல் செய்யுங்கோ....! கன்னியரே...! வெளிநாட்டு மாப்பிள்ளை கண்டு வெளிக்கிட்டு வந்த பின்னர், பீற்றுதல் விட்டு, உள்ள குச்சொழுங்கையெல்லாம் முன்னம் சைக்கிள் ஓடி, புழுதியும் தலைவழி வழியும் நல்லெண்ணையும் காட்டிய சித்திரக் கோலத்தில், மயங்கிய மச்சானும், ஆமிவர போராடப் போய் போராளியாய் வாழும் தேசமதை, கண நேரமேனும் காதல் செய்ய மறவாதீர்....! செல்லடியில் செவிப்பறை கிழிய, வந்த 'புக்காராவும்' அடுக்கடுக்காய் 'ரொக்கட்' அடிக்க, வானம் கிழித்து வரும் சுப்பர் சொனிக்கும், இரத்மலான இருந்து வந்த சகடையும், செய்த தொந்தரவு கடந்து, முந்நூறு ரூபாய்க்கு அரை லீற்றர் மண்ணெய் வாங்கி, உப்பு விளக்கும் கூட வச்சு, பங்கருக்குள்ள புத்தகம் ஒழிச்சு வச்சு, படித்து டாக்குத்தரான எங்கட அண்ணாமாரும் இஞ்சினியரான தம்பிமாரும் பட்டதாரிகளான அக்காமாரும் தங்கைமாரும், தூர தேசத்தில் நல்ல சம்பளமாம் காராம் வீடாம் வசதியாம் என்று அலைய விளைந்தாலும், பகட்டோடு அடிபட்டுச் செல்லாமல் பக்குவமாய் தாய் மண்ணையும் காதல் செய்ய மறவாதீங்கோ.....! இன்னும் கொஞ்சப் பேர்.... தாயகம் அடிபட்டு அடிமைப்பட்டுக் கிடக்க, உள்ளத அமுக்குவம் என்று உள்ள எதிர்கள் கால் தடவி அரசியல் என்று ஏதோ அரைகுறை நடத்தினவையும், நீங்களும் பிறந்தது முதல் துரோகித்தது வரை சொந்த அன்னையவள் மடிதான் என்று, இன்றாவது சிந்தித்துத் தெளிந்து, அன்னையவள் மீதும் உம் அன்புச் சகோதரன் மீதும் காதல் கொள்ள மறவாதீர்.....! கடைசியில எனக்கும் தான் ஒரு வரி.... நீரும் மற்றவைக்கு உபதேசிக்கிறது விட்டு, எழுதுக்களால் மட்டும் பேசிவிட்ட திருப்தியில், கண் மூடிக்கிடக்காமல் அகிலத்தின் அகழியில் இருக்க நேரினும் அன்னையவள் மண்ணதை மனதெங்கும் நிறைத்து வைத்து பூஜித்து நில்லும்....! ஈழத்துக் கவியவன் புதுவையின் வரி தந்த தெம்பில் ஏதோ உளறி இருக்கிறன்...வாசிக்கிறவை பிழை கண்டால் பொறுத்துக் கொண்டு அன்னை மண்ணைக் காதலிக்க மறந்திடாதேங்கோ.....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- nalayiny - 02-03-2004 அடிச்சானாம் பிறப்படலையிலை எண்டாணாம். ஊருக்கடி உபதேசம் உனக்கில்லையடி. :roll: :roll: :roll: - manimaran - 02-03-2004 நீங்கள் சொல்வது புரியவில்லையே! நீங்கள் உங்கள் அன்னை மண்ணை 'அகிலத்தின் அகழியில்' இருந்து கொண்டு "புூஜித்துக்" கொண்டு இருப்பதால் யாருக்கு என்ன பயன்? கொஞ்சம் புரியக் கூடியமாதிரி சொல்லுங்கோவன். - kuruvikal - 02-04-2004 அகிலத்தின் அகழியில் இருக்க நேரினும் தாய் போல் நேசிப்போம் எம் தாய் மண்ணையும்....அதனால் உங்களுக்கு நன்மை இருக்கே இல்லையோ தெரியாது எமக்குள் எம்மண்ணின் மகிமை என்றும் மங்காமல் இருக்கும்....தேசத்தின் மீது நம் பற்றுறுதி என்றும் இருக்கும்...அது நாளைய எமது இலட்சியத்துக்கு உறுதுணையாகும்.....இதற்கு மேல் எம் இலட்சியம் சொல்வதாயின் உங்கள் தாய் மண் தொடர்பில் உங்கள் இலட்சியம் என்ன என்பதைச் சொல்லுங்கள்...பிறகு பார்ப்போம் மேலும் விளக்கம்...கேள்வி கேட்பது விசமத்திற்கன்றி விளக்கத்திற்காக அமையட்டும்...விசமம் எனின் எமக்கும் அதை விருத்திக்க நன்கு தெரியும்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
- Mathivathanan - 02-04-2004 kuruvikal Wrote:அகிலத்தின் அகழியில் இருக்க நேரினும் தாய் போல் நேசிப்போம் எம் தாய் மண்ணையும்....அதனால் உங்களுக்கு நன்மை இருக்கே இல்லையோ தெரியாது எமக்குள் எம்மண்ணின் மகிமை என்றும் மங்காமல் இருக்கும்....தேசத்தின் மீது நம் பற்றுறுதி என்றும் இருக்கும்...அது நாளைய எமது இலட்சியத்துக்கு உறுதுணையாகும்.....இதற்கு மேல் எம் இலட்சியம் சொல்வதாயின் உங்கள் தாய் மண் தொடர்பில் உங்கள் இலட்சியம் என்ன என்பதைச் சொல்லுங்கள்...பிறகு பார்ப்போம் மேலும் விளக்கம்...கேள்வி கேட்பது விசமத்திற்கன்றி விளக்கத்திற்காக அமையட்டும்...விசமம் எனின் எமக்கும் அதை விருத்திக்க நன்கு தெரியும்....!பச்சோந்தியள்.. விசாவுக்கு பொய்சொல்லேக்கை நிறம் மாறீடுங்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->kuruvikal Wrote:தாத்தா பச்சோந்திக்கு வாழ்த்தெரியும் வீழத்தெரியாது...சூழலுக்கேற்பதாய் நிறம் மாறும் குணம் மாறாது...ஆனால் உங்கள் போல் விட்டில் பூச்சிகள் தன் வாயாலேயே தான் அழியுங்கள்..!ஒப்புக்கொண்டதுக்கு நன்றி.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 02-04-2004 தாத்தா பச்சோந்திக்கு வாழத்தெரியும் வீழத்தெரியாது...சூழலுக்கேற்பதாய் நிறம் மாறும் குணம் மாறாது...ஆனால் உங்கள் போல் விட்டில் பூச்சிகள் தன் வாயாலேயே தான் அழியுங்கள்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathivathanan - 02-04-2004 kuruvikal Wrote:அகிலத்தின் அகழியில் இருக்க நேரினும் தாய் போல் நேசிப்போம் எம் தாய் மண்ணையும்....அதனால் உங்களுக்கு நன்மை இருக்கே இல்லையோ தெரியாது எமக்குள் எம்மண்ணின் மகிமை என்றும் மங்காமல் இருக்கும்....தேசத்தின் மீது நம் பற்றுறுதி என்றும் இருக்கும்...அது நாளைய எமது இலட்சியத்துக்கு உறுதுணையாகும்.....இதற்கு மேல் எம் இலட்சியம் சொல்வதாயின் உங்கள் தாய் மண் தொடர்பில் உங்கள் இலட்சியம் என்ன என்பதைச் சொல்லுங்கள்...பிறகு பார்ப்போம் மேலும் விளக்கம்...கேள்வி கேட்பது விசமத்திற்கன்றி விளக்கத்திற்காக அமையட்டும்...விசமம் எனின் எமக்கும் அதை விருத்திக்க நன்கு தெரியும்....!பச்சோந்தியள்.. விசாவுக்கு பொய்சொல்லேக்கை நிறம் மாறீடுங்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->kuruvikal Wrote:தாத்தா பச்சோந்திக்கு வாழ்த்தெரியும் வீழத்தெரியாது...சூழலுக்கேற்பதாய் நிறம் மாறும் குணம் மாறாது...ஆனால் உங்கள் போல் விட்டில் பூச்சிகள் தன் வாயாலேயே தான் அழியுங்கள்..!ஒப்புக்கொண்டதுக்கு நன்றி.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 02-04-2004 தானே தன்பாட்டில் அழிவது விதிவிலக்கு...தன் தோற்றம் மாற்றி வெற்றி கண்டு தான் வாழ்வது இயற்கையின் நியதி....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathivathanan - 02-04-2004 kuruvikal Wrote:தானே தன்பாட்டில் அழிவது விதிவிலக்கு...தன் தோற்றம் மாற்றி வெற்றி கண்டு தான் வாழ்வது இயற்கையின் நியதி....!அதுதான் பச்சோந்தித்தனம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 02-04-2004 இரைதேடும் பருந்திடையே பச்சோந்தி தன் நிறம் மாற்றி தன் குணம் மாறா நிலை.... அது இயற்கையின் நியதி...இயற்கை தந்த பாடம் படிப்பதில் எமக்கு ஒன்று பிரச்சனையில்லை...தங்களுக்கு விட்டில் பூச்சிதானே வாழ்வே...வீழ்வது என்னவோ தன் வாயாலேயே....பாவம்...பச்சோந்திக்கும் இரையாகும்...தன் வாயாலேயே தானும் அழியும்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 02-04-2004 என்ன பொஸ் உங்களுக்கு வேலையே மத்தவவங்க கூட சண்டை பொடுறது தானா? சொந்தமா ஒரு கருத்து கூட இல்ல. எல்லா மத்தவன் கருத்துக்கு எதிர்பாட்டு தான். என்ன பிரச்சனை பொஸ்? எதிர்கருத்து சொல்லுங்க வேணாம் சொல்லல. உங்க மேட்டர் இரண்டு சரி போடுங்க. - kuruvikal - 02-04-2004 BBC எப்பவும் குழப்புது குழம்புது.... உதுல ஆர பொஸ் எண்டுறியளோ...ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 02-04-2004 யார் கிட்ட பேசுறனோ அவங்க் தான் பொஸ் - Mathan - 02-04-2004 நா குழம்பல் பொஸ். நியூச குடுப்பம். படிச்சிட்டு மத்தவன் குழம்பினா அதுக்கு விளக்கமா ஒரு கவர் ஸ்டோரி பண்ணுவம். நாம் தப்பா எதுசரி சொன்னா மன்னிப்பு கேக்க மாட்டேன்னு சொல்றதுல்ல. அது மாதி தெரியல்லன்னா தெரியாதுன்னு சொல்லிடுவோம் பொஸ் - Eelavan - 02-04-2004 நன்றி கெளஷிகன் புதுவை அண்ணனின் உணர்வைத்தூண்டும் குரலாக விடுதலைப்புலிகள் இதழில் வியாசனின் உலைக்களம் என்ற பெயரில் வெளிவந்த கவிதைகள் அனைத்தும் தொகுப்பாக உலைக்களம் என்ற புத்தக வடிவில் கிடைக்கிறது நண்பர் B.B.C அப்புக்கு உலைக்களத்தின் பெருமை எப்படி விளங்கப்போகிறது வேண்டுமானால் உழைக்கலாம் என்று ஏதாவது புத்தகம் இருந்தால் வாங்கி கொடுங்கள் - Mathan - 02-04-2004 Eelavan Wrote:நன்றி கெளஷிகன் தாத்தா என்ன சொல்வாரோ தெரியவில்லை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathivathanan - 02-04-2004 BBC Wrote:என்னை ஏனப்பா உதுக்கிள்ளை இழுக்கிறியள்..Eelavan Wrote:நன்றி கெளஷிகன் உஙகளுடைய புத்தகப் பிரச்சனை எனக்கேன்..? இருந்தாலும் உழைச்சுச் சாப்பிடுற எங்களுக்கு உந்தப் புத்தகம் தேவையில்லை.. உழைக்காமல் அடுத்தவன் உழைப்பை சுரண்டித்தின்னுறவங்களுக்குத்தான் உந்தப்புத்தகம் வேணும்.. என்ன பிபிஸி பதிலிலை திருப்திதானே..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 02-04-2004 BBC - தாத்தா கூட்டணியோ...?! அடிக்கடி கொடிபிடிக்கிறார் தாத்தா....! BBC யும் பட்டும் படாமல் நழுவுது...ஏதோ டமிழில முழக்கம் பலமா இருந்தாலும் நல்ல விசயங்கள் வந்தா எடுத்துக்கலாம்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 02-04-2004 கூட்டணி கொள்கைய வைச்சு இருந்தா யார் கூட சரி சேரலாம், பிரச்சனைகளின் அடிப்படையில் ஆதரவு முடிவு செய்யப்படும். நா டமில்ல பேசினாலும் தமிழ்ல் பேசினாலும் மேட்டர் இருந்தா சரிதானே? |