Poll:
[Show Results]
 
Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆகாயப்பந்தலிலே பொன்னுாஞ்சல் ஆடுதம்மா!
#1
சம்பவம் ஒன்று:
ஜேர்மனியில்.. பெற்றோர்கள் வேலை.. சம்பாத்தியம்.. பொருளாதாரத்தில் வட்டிக்கு கொடுக்குமளவிற்கு முன்னேற்றம். ஆனால் சட்டபூர்வமான வேலை இல்லை. சமூக உதவியிலும் பொருளீட்டல்.
மகனை படி படி என்று படிக்க வைத்தார்கள். அவனும் மிகவும் திறமையாக கல்வி கற்றான். பல்கலைக்கழக அனுமதிக்கு தகுந்த பெறுபேறு.. ஆனாலும் என்ன?! பெற்றோர்களுக்கு (சட்டபூர்வ) வேலையற்ற காரணத்தால் தகுந்த விசா இல்லை. அதன் காரணமாக பல்கலைக் கழக அனுமதி இரத்து.
இப்போது அந்த இளைஞனின் போக்கே மாறிவிட்டது. வைன் போத்தலும் ஐரோப்பா யுவதிகளுமாக வீதிகளிலும் களியாட்ட விடுதிகளிலும்...!!

சம்பவம் இரண்டு:
மேற்கூறிய சம்பவத்துக்கும் இதற்கும் சிறு வித்தியாசம்தான்.. இது மகள்.. கெட்டித்தனமாகப் படித்தாள்.. பெற்றோர்கள் சமூக உதவியை நிறுத்தி நல்ல விசா எடுக்கத் தவறிய காரணத்தால் இவளுக்கும் பல்கலைக்கழக அனுமதி நிராகரிப்பு.
பெற்றோருக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு.. பிள்ளை தானாகவே 'இளைஞர் பராமரிப்பு நிலைய'த்துக்கு சென்றுவிட்டது. இது மிக அண்மையில் ஜேர்மனியில் நிகழ்ந்தது.

ஆக, படி படி என்று பிள்ளைகளை துாண்டிவிட்டு, அதற்கேற்றவாறு தங்களைத் தயார் செய்யத் தவறும் பெற்றோர்களை என்னென்பது?!
.
Reply
#2
உண்மைதான் சோழியன். தங்கள் இலாபத்திற்காக பிள்ளைகளின் எதிர்காலத்தை தொலைக்கும் பெற்றோர்கள் நிறையவே இருக்கிறார்கள்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
என்னடா இது படிக்க விரும்பிற றிபியூஜி பிள்ளையளுக்கு ஓடி ஓடி அரசாங்கம் எல்லா உதவியளும் செய்யுது.. நீங்கள் இப்பிடிச் சொல்லுறியள்.. யாரையப்பா நம்பிறது..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#4
இரண்டு சம்பவங்களும் வெறும் செய்தியாகவன்றி உதாரணங்களாக அமைந்திருப்பது வேதனை அளிக்கிறது...இங்கு பெற்றோரை மட்டும் குறை கூற முடியாது. அவர்கள வாழும் நாட்டினதும் அதன் சட்ட அமைப்புக்களையும் நடமுறைகளையும் விளங்கிக் கொள்ளும் நிலையில் இல்லாதவர்களுக்கு அதை விளங்கப்படுத்த வேண்டியது அவ்வவ் நாடுகளின் கடமை...அதை குறிப்பிட்ட நாட்டின் அரசுகள் பேதமற்ற முறையில் செய்திருக்க வேண்டும்...! அல்லது ஆலோசனை பெறும்படி ஒவ்வொருவரும் அகதியாக பதியப்பட்ட பின்னரோ அல்லது அகதி அந்தஸ்து பெற்ற பின்னரோ ஆலோசனை அளிக்க வேண்டும்....!

இப்போ இலங்கையில் இருந்து வந்த பலருக்கு ஜேர்மனியை உலகப்படத்தில் காட்டச் சொன்னால் அது புரிவதில்லை....ஏன் இலங்கையில் வாழும் சிங்கள மக்களிடம் நோர்வே பற்றிக் கேட்டால் அப்படி ஒரு நாடு இருக்கா என்று கேட்கும் அளவிற்கு ஆட்கள் இருக்கிறார்கள்...!

எனவே பலவகைப் பின்னணிகளில் இருந்து வரும் பெற்றோரை புதிய சூழலுக்கேற்ப சட்ட வழிநடத்த வேண்டிய சிறிய, முக்கிய பொறுப்பு அவ்வவ் நாடுகளின் கடமை...அது ஒவ்வொருவரினதும் அடிப்படை உரிமையும் கூட....!

ஒரு மாணவனோ அல்லது மாணவியோ பல்கலைக்கழக கல்வி பெறும் நோக்கில் கல்விகற்கும் போது தாம் கல்விபயிலும் நாடுகளில் உள்ள அடிப்படை, நடமுறைக் கல்விக் கொள்கைகள் பற்றிய விடயங்களை உள்வாங்கி பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும்...அதன் பிரகாரம் பெற்றோர் விழிப்புணர்த்தப்பட்டு அவர்கள் சரியான நடவடிக்கைகளை எடுக்க உதவ முடியும்...காரணம் பெற்றோரைவிட குறிப்பிட்ட நாட்டின் கல்விக் கொள்கைகள் பற்றி அங்கு கல்வி பயிலும் ஒருவருக்கு ஓரளவேனும் விளங்கிக் கொள்ளக் கூடிய வாய்ப்பு மிக அதிகம்....!

உதாரணத்துக்கு இலங்கையில் எமது பெற்றோர் படித்த காலத்தில் இருந்த கல்விக் கொள்கைக்கும் நாம் படித்த காலத்தில் இருந்த கல்விக் கொள்கைக்கும் இடையே பாரிய வேறுபாடு இருந்தது...அரசாங்கங்கள் காலத்துக்கு காலம் இவை பற்றி அறிவித்தாலும் பாடசாலைகளில் நாம் பெற்ற செய்திகள் மூலமே எமது பெற்றோரை நாம் அதிகம் விழிப்புணர்வு படுத்தினோம்.....இதையே இங்குள்ள மாணவர்களும் செய்ய முனைய வேண்டும்....அதே போல் மாணவர்களின் கோரிக்கைகளைப் பெற்றோரும் சரியான முறையில் விரைந்து பரிசீலிக்க வேண்டும்...! சட்ட உதவிகள் அல்லது ஆலோசனைகள் தேவைப்பட்டால அவற்றைப் பெற்று குறைகள் அல்லது தேவைகள் காணப்படின், தமது நியாய பூர்வ கோரிக்கைகளை குறிப்பிட்ட அமைச்சுகளுக்கு அனுப்ப வேண்டும்....!

அடுத்து...எந்த மாணவனோ அல்லது மாணவியோ பல்கலைக்கழகக் கல்விதான் வாழ்வின் ஒரே இலட்சியம் என்று இருக்கக் கூடாது....இன்று பல மாணவர்கள், குறிப்பாக மேற்கில், உயர்கல்வி பெறாது இளநிலைக் கல்வியுடன் (A/L, O/L, Diploma) வேலை வாய்ப்புப் பெற்று குறிப்பிட காலத்தின் பின் அந்த வேலை வாய்ப்பு அனுபவத்தைக் காட்டி பல்கலைகழகக் கல்வியை பகுதி நேரக் கல்வியாகத் தொடர்கின்றனர்...!

பல்கலைகழகக் கல்வி என்பது சில சந்தர்ப்பங்களில் எம்மை சோம்பேறிகள் ஆக்குகிறது என்றால் அது உண்மையாகக் கூட இருக்கலாம்.....பட்டம் முடித்த பின் தொழில் தேடிப் போனால் 'நீ கனக்கப்படித்திருக்கிறாய் இந்த வேலை சரிவராது' என்று திருப்பியும் அனுப்பிவிடுவார்கள்....உண்மையைச் சொன்னால் எமது சமூகம் கல்வி தொடர்பில் காட்டும் அபரிமித பரிமானம் சில வேளைகளில் நாம் யதார்த்ததை தரிசிக்கும் போது சலிப்பைத்தான் ஏற்படுத்துகிறது...இது எமது சமூக மாணவர்கள் பலர் கடந்த காலத்தில் கண்ட அனுபவமும் கூட.....!

எனவே பெறும் கல்வியை சரியான தொலை நோக்கோடு ஒவ்வொருவரினதும் இயலுமைக்கு ஏற்ப பெற்று அவற்றை சரியான நேரத்தில் பயன்படுத்தி முன்னேறுவதே அவசியம்.... அதை விட்டு பல்கலைக் கழகக் கல்விதான் வாழ்க்கை என்று இருப்பது முழு மடமை என்றுதான் நாம் கூறுவோம்.....! ஆனால் ஒரு பிரஜைக்கு அவசியமான அடிப்படைக் கல்வியை பெறுவது அவசியம்....அதன் பின் தொழில்சார் கல்வி பெறுவதே பட்டங்கள் பெறத் துடிப்பதிலும் பார்க்கச் சாலச் சிறந்தது...அதுவும் இன்று தொலைக்கல்வி முறைகள் நன்கு விருத்தியடைந்துள்ள நிலையில்....!

பல்கலைக்கழகக் கல்வி கிடைக்கவில்லை என்பதற்காக குடிப்பதும் கவலையோடு அலைவதும் முழு மூடத்தனம்...அவன் டொக்டர் இவர் இஞ்சினியர்...அவற்ற மகள் பட்டதாரி இவற்ற மகன் எக்கவுண்டன்...இவை ஒரு தனிமனித ஆளுமையை வளர்க்க உதவாது...இதற்காகத்தான் பல்கலைகழகக் கல்வி என்றால் இக்குறிப்பு அப்படிப்பட்ட வார்த்தை உச்சரிப்புகளுக்காக படிக்கும் நவகால முழு மூடர்களுக்காக எழுதவில்லை என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea :!: Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
Quote:என்னடா இது படிக்க விரும்பிற றிபியூஜி பிள்ளையளுக்கு ஓடி ஓடி அரசாங்கம் எல்லா உதவியளும் செய்யுது.. நீங்கள் இப்பிடிச் சொல்லுறியள்.. யாரையப்பா நம்பிறது..?
படிப்பதற்கு அரசாங்கம் உதவி செய்கிறது. ஆனால் படிக்கும் காலம்வரை அவர்கள் இந்த நாட்டில் இருப்பதற்கேற்ற பத்திரங்களை எதிர்பார்க்கிறது... அதாவது காலவரையற்ற விசாக்களை. ஜேர்மனியில் ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொருவிதமான நடைமுறைகள் உள்ளன. இன்று ஸ்கன்டிநேவியன் நாடுகளிலே பலரும் அந்நாட்டு மொழியறிவு உள்ளவர்களாக இருப்பதற்கு முக்கிய காரணம், சலுகைகள் பெற வேண்டுமாயின் மொழியைக் கற்க வேண்டுமென வற்புறுத்தப்பட்டமை. ஆனால் ஜேர்மனியில் விரும்பினால் மொழியைக் கற்றுக் கொள்ளலாம் அல்லது தவிர்க்கலாம். இதனாலேயே பெருமளவு மக்கள் மொழிவளம் குன்றியவர்களாக உள்ளார்கள்.
Quote:பல்கலைக்கழகக் கல்வி கிடைக்கவில்லை என்பதற்காக குடிப்பதும் கவலையோடு அலைவதும் முழு மூடத்தனம்...அவன் டொக்டர் இவர் இஞ்சினியர்...அவற்ற மகள் பட்டதாரி இவற்ற மகன் எக்கவுண்டன்...இவை ஒரு தனிமனித ஆளுமையை வளர்க்க உதவாது...இதற்காகத்தான் பல்கலைகழகக் கல்வி என்றால் இக்குறிப்பு அப்படிப்பட்ட வார்த்தை உச்சரிப்புகளுக்காக படிக்கும் நவகால முழு மூடர்களுக்காக எழுதவில்லை என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம்....!
குருவிகள்! நீங்கள் தாயகத்தில் பலவித அனுபவங்களைப் பெற்று வந்தவராக இருக்கலாம். ஆனால் இங்கு வளரும் குழந்தைகளின் போக்கு அனேகமாக நேர்கோடு போன்றது. அதுவும் எமது பிள்ளைகளுக்கு வெளிநடமாட்டம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. பள்ளி தவிர படிப்பும் ரீவியும் கணனியும் கேம்போயும்தான் அவர்களின் நேர விழுங்கிகள்.
அத்துடன் வெளியில் பல்வேறு இன இளைஞர்களுடன் பழகினாலும், பெற்றோரின் விருப்புக்கேற்ப பலதைத் துறந்துதான் படிக்கிறார்கள். ஆகவே இப்படி ஒருவழிப்பாதையில் செல்பவர்களுக்கு, அவ்வழியில் எதிர்பாராத விபத்து நேரும்போது பலவித அதிர்ச்சிகள் குழப்பங்கள் பாதிப்புகள் வருவது இயல்பு. விரைவாகச் செல்லும் வாகனத்தின் குறுக்கே எதிர்பாராமல் ஒரு வாகனம் வந்தால் விபத்து நிகழும்தானே?!
.
Reply
#6
sOliyAn Wrote:
Mathivathanan Wrote:என்னடா இது படிக்க விரும்பிற றிபியூஜி பிள்ளையளுக்கு ஓடி ஓடி அரசாங்கம் எல்லா உதவியளும் செய்யுது.. நீங்கள் இப்பிடிச் சொல்லுறியள்.. யாரையப்பா நம்பிறது..?
படிப்பதற்கு அரசாங்கம் உதவி செய்கிறது. ஆனால் படிக்கும் காலம்வரை அவர்கள் இந்த நாட்டில் இருப்பதற்கேற்ற பத்திரங்களை எதிர்பார்க்கிறது... அதாவது காலவரையற்ற விசாக்களை. ஜேர்மனியில் ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொருவிதமான நடைமுறைகள் உள்ளன. இன்று ஸ்கன்டிநேவியன் நாடுகளிலே பலரும் அந்நாட்டு மொழியறிவு உள்ளவர்களாக இருப்பதற்கு முக்கிய காரணம், சலுகைகள் பெற வேண்டுமாயின் மொழியைக் கற்க வேண்டுமென வற்புறுத்தப்பட்டமை. ஆனால் ஜேர்மனியில் விரும்பினால் மொழியைக் கற்றுக் கொள்ளலாம் அல்லது தவிர்க்கலாம். இதனாலேயே பெருமளவு மக்கள் மொழிவளம் குன்றியவர்களாக உள்ளார்கள்.
யூனியில் படிப்பதற்கு ஸ்ருடன்ற் வீசா இருந்தால்ப் போதும்.. நிரந்தர வதிவிடம் தெவையில்லை..
வீசா இல்லாவிட்டாலும் யூனியில் அற்மிசன் எடுத்து படித்துக்கொண்டு.. நான் படித்துக்கொண்டிருக்கிறேன் எனக்கு விசா தாருங்கள் எனக் கோருவதே நடைமுறை..
இப்படியிருக்க நிரந்தர வதிவிட உரிமை இருந்தால்த்தான் படிக்க விடுவோம் என்று கூறியதாக நீங்கள் எழுதியது வேடிக்கையாக இருக்கிறது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#7
நான் எழுதினது அகதிகளாக வந்தவர்களையும் அவர்களது பிள்ளைகளையும்பற்றி. விரிவாக எழுதாமைக்கு மன்னிக்கவும்.. ஏனெனில் ஜேர்மனியில் 99வீத தமிழர் அகதிகள் என்ற எண்ணத்தில் அதை கவனிக்கத் தவறிவிட்டேன். அகதியாக விசாவில் உள்ள ஒருவருக்கு குழந்தை பிறந்தாலே.. உடனே அந்த குழந்தைக்கு அகதித் தஞ்சம் கோரவேண்டும். அது ஏற்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதுமாக முடிவுகள் வரும்.. இது எந்த ரீதியில் என்பது எனக்கு இதுவரை விளங்கவிலலை. ஆக, அகதி விசாவிலுள்ளவர்களின் வாரிசுகளும் அகதிகளாகவே கணிக்கப்படுகிறார்கள். அதேபோல, அகதியானவர்களும் நேரடியாக மாணவ விசாவில் வருபவர்களும் வேறுவிதமாகவே நடாத்தப்படுகிறார்கள். அகதி விசாவில் இருப்பவர்கள் எந்நேரமும் திருப்பி அனுப்பப்படுபவர்களாகவே நோக்கப்படுகிறார்கள். அந்த ரீதியிலேயே ஒவ்வொரு விடயமும் அவர்களைக் குறித்து முடிவெடுக்கப்படுகிறது.
Quote:நிரந்தர வதிவிட உரிமை இருந்தால்த்தான் படிக்க விடுவோம் என்று கூறியதாக நீங்கள் எழுதியது வேடிக்கையாக இருக்கிறது..
ஏற்கெனவே ஒவ்வொரு காரணத்துக்காக விசாக்களை நீடித்த சம்பவங்கள் நிறையவே உண்டு. உதாரணமாக, நாட்டுக்கு அனுப்பப்படும் 'சிங்' இனத்தவன், தனது தாடி வளரும்மட்டும் நாட்டுக்கு போக முடியாது எனக் காரணம் கூறி விசா நீடித்து நாடு மாறுவதுபோல பல சம்பவங்கள் உண்டு. அதனால், திருப்பி அனுப்பப்படுபவன் அதைத் தாமதப்படுத்துவதற்காக முன்வைக்கும் காரணங்களைத் தடுப்பதிலேயே இவர்கள் குறியாக உள்ளார்கள். பல்கலைக்கழகத்துக்கு அனுமதித்தால் இதைக் காட்டியே விசா நீடிப்பு பெறலாம் என்பதால், ஆரம்பத்திலேயே விசா இருந்தால்தான் பல்கலைக்கழக அனுமதி என்று கூறியிருக்கலாம்.
.
Reply
#8
sOliyAn Wrote:நான் எழுதினது அகதிகளாக வந்தவர்களையும் அவர்களது பிள்ளைகளையும்பற்றி. விரிவாக எழுதாமைக்கு மன்னிக்கவும்.. ஏனெனில் ஜேர்மனியில் 99வீத தமிழர் அகதிகள் என்ற எண்ணத்தில் அதை கவனிக்கத் தவறிவிட்டேன். அகதியாக விசாவில் உள்ள ஒருவருக்கு குழந்தை பிறந்தாலே.. உடனே அந்த குழந்தைக்கு அகதித் தஞ்சம் கோரவேண்டும். அது ஏற்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதுமாக முடிவுகள் வரும்.. இது எந்த ரீதியில் என்பது எனக்கு இதுவரை விளங்கவிலலை. ஆக, அகதி விசாவிலுள்ளவர்களின் வாரிசுகளும் அகதிகளாகவே கணிக்கப்படுகிறார்கள். அதேபோல, அகதியானவர்களும் நேரடியாக மாணவ விசாவில் வருபவர்களும் வேறுவிதமாகவே நடாத்தப்படுகிறார்கள். அகதி விசாவில் இருப்பவர்கள் எந்நேரமும் திருப்பி அனுப்பப்படுபவர்களாகவே நோக்கப்படுகிறார்கள். அந்த ரீதியிலேயே ஒவ்வொரு விடயமும் அவர்களைக் குறித்து முடிவெடுக்கப்படுகிறது.
Quote:நிரந்தர வதிவிட உரிமை இருந்தால்த்தான் படிக்க விடுவோம் என்று கூறியதாக நீங்கள் எழுதியது வேடிக்கையாக இருக்கிறது..
ஏற்கெனவே ஒவ்வொரு காரணத்துக்காக விசாக்களை நீடித்த சம்பவங்கள் நிறையவே உண்டு. உதாரணமாக, நாட்டுக்கு அனுப்பப்படும் 'சிங்' இனத்தவன், தனது தாடி வளரும்மட்டும் நாட்டுக்கு போக முடியாது எனக் காரணம் கூறி விசா நீடித்து நாடு மாறுவதுபோல பல சம்பவங்கள் உண்டு. அதனால், திருப்பி அனுப்பப்படுபவன் அதைத் தாமதப்படுத்துவதற்காக முன்வைக்கும் காரணங்களைத் தடுப்பதிலேயே இவர்கள் குறியாக உள்ளார்கள். பல்கலைக்கழகத்துக்கு அனுமதித்தால் இதைக் காட்டியே விசா நீடிப்பு பெறலாம் என்பதால், ஆரம்பத்திலேயே விசா இருந்தால்தான் பல்கலைக்கழக அனுமதி என்று கூறியிருக்கலாம்.
ஏதுவாகினும் படிப்பவனுக்கும் பாசாங்கு செய்பவனுக்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு.. படிப்பிப்பவர்கள் மடையர்களல்ல.. பகுத்து ஆராய்நது அறியும் ஆற்றல் அவர்களுக்கு நிறையவே உண்டு.. படிப்பவன் ஆசிரியனிடம் பதிவாளரிடம் தமது பிரச்சனையை கூறுமிடத்து அவர்கள் தங்களாலான உதவி செய்வார்கள்.. படிப்பவனை திருப்பிஅனுப்ப அவர்கள் ஒருபொழுதும் உதவிசெய்வதில்லை..
நீங்கள் எழுதிய சம்பந்தப்பட்டவர்கள் ஏதொ ஒரு காரணத்துக்காக சாட்டு சொல்கிறார்களேயன்றி அவர்களால் படித்திருக்க முடியுமென்று அடித்துக்கூறுகிறேன்.. படித்த பள்ளி தலைமை ஆசிரியர் தனது மாணாக்கர் மேற்படிப்பு படிக்க அனுப்புவாரே தவிர திருப்பி அனுப்ப முயற்சிக்கமாட்டார் என்பதை ஆணித்தாமாகக் கூறுகிறேன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#9
உங்க முயலுக்கு மூணு காலா அல்லது நாலு காலா என்றதை வேறு யாராவது ஜேர்மனில வாழுற அங்கத்தவர் வந்துதான் சொல்லணும்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
.
Reply
#10
:roll: :roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
படிக்கிறன்னு சொல்ற பையங்க்களை திருப்பி அனுப்பாம இருந்தா சரி தான். சில பேர் விஸா எடுக்கிறத்துக்கு மட்டும் University Admission எடுகிறதால இந்த பிரச்சனை. விஸா எடுக்க வேணான்னு சொல்லல அதோட படிக்கவும் செய்யுங்க. இல்லன்னா உண்மையா படிக்கிறவங்களுக்கும் சான்ஸ் கிடைக்காது.
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)