| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 378 online users. » 0 Member(s) | 375 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,284
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,227
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,619
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,045
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,455
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,468
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| அமெரிக்க நரித்தனம் அம்பலம்....! |
|
Posted by: kuruvikal - 02-09-2004, 03:05 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (3)
|
 |
அணு ஆயுத ரகசியம் : பாக். குற்றத்தை அமெரிக்கா மூடி மறைக்கிறது!
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39819000/jpg/_39819497_qadafp203.jpg' border='0' alt='user posted image'>
Abdul Qadeer Khan
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39820000/jpg/_39820825_khan203bodyap.jpg' border='0' alt='user posted image'>
Dr Khan said President Musharraf
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39622000/jpg/_39622713_pakhatf_ap203ix.jpg' border='0' alt='user posted image'><img src='http://newsimg.bbc.co.uk/media/images/39116000/jpg/_39116118_liberty_bbc.jpg' border='0' alt='user posted image'>
லிபியா, ஈரான், வடகொரிய நாடுகளுக்கு அணு ஆயுதத் தொழில் நுட்பத்தையும், ஆயுத தயாரிப்பு உபகரணங்களையும் ரகசியமாக வழங்கிய பாகிஸ்தானின் குற்றச்செயலை அமெரிக்க அரசு கமுக்கமாக மூடி மறைக்கப் பார்க்கிறது என்று ராணுவ ஆய்வு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது!
ஸ்டேட்டஜிக் ஃபோர்கேஸ்டிங் (ஸ்ட்ரேக் ஃபார்) எனும் ராணுவ ஆய்வு அமைப்பு பாகிஸ்தானின் அணு ஆயுத தொழில்நுட்பம் ரகசியமாக அளிக்கப்பட்டதற்கு அந்நாட்டின் தலைமை விஞ்ஞானி அப்துல் காதிர் கானை மட்டுமே பொறுப்பாக்கியதன் மூலம் பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுச் செய்த குற்றச்செயலை அமெரிக்க நிர்வாகம் மறைக்கப்பார்க்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளது.
ஈரானிற்கும், லிபியாவிற்கும், வடகொரியாவிற்கும் அணு ஆயுத தயாரிப்பு தொழில்நுட்பத்தையும், யுரேனியம் அணுப் பொருளை ஆயுதமாக்கும் அணுப்பொருளாகா மாற்றவல்ல செயல்முறையையும் அளித்ததன் வாயிலாக பேரழிவு ஆயுதங்களின் பரவலுக்கு பாகிஸ்தான் உதவியுள்ளது என்றும், இந்தக் குற்றச்செயலுக்கு காரணம் என்று கூறப்படும் டாக்டர் அப்துல் காதிர் கான் மாபெரும் பனிப்பாறையின் முனை மட்டுமே என்று சர்வதேச அணு சக்தி அமைப்பின் தலைவர் மொஹம்மது எல். பராடி கூறியிருப்பதை ஸ்டேட்டஜிக் ஃபோர்கேஸ்டிங் சுட்டிக் காட்டியுள்ளது.
ஆனால் இந்த அணு ஆயுத ரகசியப் பரிமாற்றம் ஏதோ டாக்டர் அப்துல் காதிர் கான் தனித்து செய்தது போல சுட்டிக்காட்டி அந்தப் பிரச்சனையை அப்படியே மூடிவிட முஷாரஃப் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்துள்ளது என்று கூறியுள்ள இந்த அமெரிக்க அமைப்பு, பாகிஸ்தானிலும், ஆஃப்கானிஸ்தானிலும் ஒளிந்துள்ள தாலிபான், அல்கய்டா பயங்கரவாதிகளை பிடிக்க பாகிஸ்தானின் உதவி தேவை என்ற ஒரே காரணத்திற்காக முஷாரஃப் அரசின் இந்த குற்றச்செயலை மூடி மறைக்க அமெரிக்க நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
பாகிஸ்தான் அரசின் முழுமையான ஒப்புதல் இன்றி இப்படிப்பட்ட மிக முக்கியத்துவம் வாய்ந்த தொழில் நுட்ப பரிமாற்றத்தை அப்துல் காதிர் கான் மட்டுமே செய்திருக்க முடியாது என்று முகமது அல் பராடி கூறியுள்ளதற்கும், பாகிஸ்தான் அரசுக்கு இதில் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று தாங்கள் நம்புவதாக அமெரிக்க அரசு கூறியிருப்பதற்கும் மிகப்பெரிய முரண்பாடு உள்ளதென ஸ்டெட் ஃபார் கூறியுள்ளது.
அதுமட்டுமின்றி, ஈராக்கில் பேரழிவு ஆயுதங்களை சதாம் ஹூசேன் ரகசியமாகக் குவித்து வைத்துள்ளார் என்றும், அப்படிப்பட்ட ஆயுதங்கள் மற்ற பொறுப்பற்ற நாடுகளின் கைகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புள்ளது என்றும் கூறி ஈராக் மீது படையெடுத்த அமெரிக்கா, அணு ஆயுதங்களை குவித்து வைத்துள்ளது மட்டுமின்றி, அதனை மற்ற நாடுகள் தயாரிப்பதற்கு உதவி புரிந்துள்ள பாகிஸ்தானின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வராதது அதன் இரட்டை அணுகுமுறையையே வெளிப்படுத்துகிறது என்று ஸ்டெட் ஃபார் சுட்டிக்காட்டியுள்ளது.
அணு ஆயுத தொழில் நுட்பம் லிபியா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளுக்கு அளிக்கப்பட்டது முஷாரஃப் உட்பட பாகிஸ்தானின் நிர்வாக தலைமைக்கு தெரிந்தே நடந்தது என்று முதலில் கூறிய அப்துல் காதிர் கான், பிறகு அதற்கு தான் மட்டுமே பொறுப்பு என்று கூறியதையும் சில மணி நேரங்களில் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதையும் ஸ்டேட் ஃபார் சுட்டிக்காட்டியுள்ளது.
அணு ஆயுத தொழில் நுட்ப பரிமாற்றம் பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதனை புரிந்து கொண்ட அமெரிக்க நிர்வாகம், கமுக்கமாக அந்த விஷயத்தை அமுக்கி முஷாரஃப் அரசைக் காப்பாற்றி விட்டது என்று ஸ்டேட் ஃபார் கூறியுள்ளது.
---------------
webulagam.com and images from BBC.com
|
|
|
| தேர்தல்???? |
|
Posted by: Eelavan - 02-09-2004, 10:00 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (28)
|
 |
இலங்கையில் இன்னுமொரு தேர்தல் வருவது உறுதியாகிவிட்ட நிலையில் தமிழ்க்கட்சிகளின் நிலைப்பாடு எப்படி இருத்தல் வேண்டும்?
தமிழ்க்கட்சிகளின் கூட்டு மீண்டும் சாத்தியமா?
|
|
|
| கருத்துக்களை திசை திருப்புதல் |
|
Posted by: vasisutha - 02-08-2004, 06:34 PM - Forum: புலம்
- Replies (6)
|
 |
கருத்துக்களை திசை திருப்புதல் பற்றி
என்ன நினைக்கிறீர்கள்?
:?: ஏதோ ஒரு தலைப்பில் ஆரம்பித்து
எங்கேயோ போய் சம்பந்தமில்லாது முடியும். :!:
இதற்குள் எங்களை அறியாமலே நாமும்
மாட்டிக்கொள்ளுவோம்.
இப்படி திசை திருப்பும் கருத்துக்களில் மாட்டாது நாம் விழிப்புடன் இருப்போம்.
(நானும் இனிமேல் முயற்சி செய்கிறேன்) :wink:
|
|
|
| நற்சிந்தனை....காமத்தை வெல்வது எங்ஙனம்...?! |
|
Posted by: kuruvikal - 02-08-2004, 06:23 PM - Forum: தத்துவம் (மெய்யியல்)
- Replies (19)
|
 |
<b>காமத்தை வெல்வது எங்ஙனம்?</b>
விஷப் பாம்புகள் நடமாடும் வீட்டில் வசிப்பவர்கள் எப்போதும் வெகு ஜாக்கிரதையாக இருப்பதைப் போல, உலகத்தில் வாழும் மக்கள் காமத்துக்கும், பண ஆசைக்கும் உட்படாமல் எப்போதும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.
நீர்ப்பானையின் அடியில் வெகு சிறிய துவாரமொன்று இருந்தாலும் அதன் வழியாக நீரணைத்தும் ஒழுகிவிடும். அதுபோல் சாதகன் ஒருவனது மனத்தில் உலகப் பற்று வெகு அற்பமாகவிருந்தாலும் கூட அவனது முயற்சிகளெல்லாம் வீணாகிவிடும்.
பெண்ணாசை, பொன்னாசைகளில் அழுந்திய மனம் பச்சைப் பாக்குக்குச் சமமானது. அது பச்சையாக இருக்கும் வரையில் மேல் தோலோடு ஒட்டிக் கொண்டிருக்கும். உள் ஈரம் வற்றியதும் தோல் வேறு, பாக்கு வேறாகப் பிரிந்து விடுகிறது. ஆட்டிப் பார்த்தால் உள்ளே பாக்கு குலுங்கும். அதுபோல, பெண்ணாசையும் பொன்னாசையும் உள்ளே வற்றிப்போனால் ஆத்மா வேறு, உடல் வேறு என்பது தெளிவாகும்.
வேடன் காலடியில் குரங்கு தன் பிராணனை விடுவது போல, அழகிய ஸ்திரீயின் (பெண்) காலடியில் மனிதனும் தன் பிராணனை விடுகிறான்.
குடும்பத்தார்களே, ஜாக்கிரதையாக இருங்கள். பெண்களிடம் அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம். அவர்கள் வெகு தந்திரமாய் உங்களை வசப்படுத்தி விடுவார்கள்.
புகை சூழ்ந்த அறையில் எவ்வளவு ஜாக்கிரதையுடன் நீ இருந்தாலும் உனது சரீரத்தில் கொஞ்சமாவது கரியேறத்தான் செய்யும். அதுபோல், ஒருவன் எவ்வளவு சாமர்த்தியமாயும், ஜாக்கிரதையாயும் இருந்தாலும் பெண் நெருக்கத்தினால் அவனுக்குக் காம இச்சை கொஞ்சமாவது உண்டாவது நிச்சயம்.
நித்தியானந்தர் ஸ்ரீ சைதன்ய சுவாமியை நோக்கி, "சுவாமி, பகவத்ப்ரேமை விஷயமாக நான் உபதேசித்தவையெல்லாம் ஏன் மனிதரது மனத்தில் யாதொரு பலனையும் கொடுக்கவில்லை?" எனறு கேட்டார். அதற்கு ஸ்ரீ சைதன்யர், "அவர்கள் பெண்களோடு சேர்ந்திருப்பதால், உயர்ந்த உபதேசங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளச் சக்தியற்றிருக்கின்றனர். நித்தியானந்தரே! உலகப் பற்றுள்ளவர்களுக்கு மோட்சமே கிடையாது" என்று பதில் சொன்னார்.
பெண்ணாசையும், பொன்னாசையும் உலக முழுவதையும் பாவத்தில் அமிழ்த்தி விட்டன. பெண்களை லோகமாதாவின் தோற்றங்களென்று கருதுவாயானால் உனக்கு அவர்களால் துன்பமுண்டாகாது.
ஒரு சிஷ்யன் பரமஹம்ஸரிடம் வந்து காமத்தை எப்படி ஜெயிப்பது என்று கேட்டான். தான ஜபதபங்கள் செய்து வந்த போதிலும் தன் மனத்தில் அடிக்கடி கெட்ட நினைவுகள் உண்டாவதாகத் தெரிவித்தான். அதற்குப் பகவான், பதில் சொன்னதாவது : - "ஒரு மனிதன் ஒரு நாயை வெகு பிரியமாக வளர்த்து வந்தான். அவன் அதனோடு கொஞ்சுவான், விளையாடுவான், அதைக் கைகளில் தூக்கிக் கொண்டு போவான், அதை முத்தமிடுவான். இந்த முட்டாள்தனத்தை கவனித்த ஓர் அறிஞர், நாய்க்கு அப்படி இடங்கொடுக்கக் கூடாதென்றும், அது பகுத்தறிவற்ற பிராணியாதலால் என்றைக்காவது ஒரு நாள் அவனைக் கடித்துவிடுமென்றும் கூறிவிட்டுச் சென்றனர். நாயின் எஜமானன் இதைக் கேட்டு அதன்படி நடக்க எண்ணித் தன் மடிமீதிருந்த அந்நாயைத் தூர எறிந்துவிட்டு, அதனோடு இனிமேல் ஒருபோதும் கொஞ்சிக் குலாவுவதில்லை என்று தீர்மானம் பண்ணினான். தன் எஜமானனுடைய மனமாற்றத்தை நாய் அறியவில்லையாதலால் அது அடிக்கடி அவனிடம் ஓடி வந்து குலாவத் தலைப்பட்டது. நன்றாய்ப் பல தடவை அடிபட்ட பிறகுதான் அது தன் எஜமானனைத் தொந்தரவு செய்வதை விட்டது. உனது நிலைமையும் அப்படிப்பட்டதே. உன் மனத்தில் இதுவரையில் வைத்துப் போற்றி வந்த நாயை நீ விலக்க நினைத்தாலும் அது உன்னை எளிதில் விடாது. இருந்தாலும் பாதகமில்லை. அந்த நாயோடு இனிமேல் கொஞ்சிக் குலாவாது, உன்னிடம் அது குலாவ வரும்போதெல்லாம் அதை நன்றாய் அடி. காலக்கிராமத்தில் அதனுடைய தொந்தரவுகள் உனக்கு முற்றிலும் இல்லாமலே அகன்றொழியும்.
சொன்னவர்...
<img src='http://www.webulagam.com/religion/images/2003/ramakrishna1.jpg' border='0' alt='user posted image'>
பிற்குறிப்பு...
பெண்ணாசையை மனிதர்கள் விட்டொழிக்க வேண்டுமென்று பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் உபதேசிப்பதிலிருந்து, பெண்களெல்லாம் கொடியவர்களென்றாவது, அவர்களின்மேல் வெறுப்புக் கொள்ள வேண்டுமென்றாவது சொல்வதாகக் கொள்ளுதல் கூடாது. அவர் தமது வாழ்க்கையிலும், உபதேச மொழிகளிலும் பெண் மக்களை சக்தி-ஜகன்மாதாவின் அவதார ரூபங்களாகவே கருதியுள்ளார். ஆண், பெண் இருபாலரும் சிற்றின்ப விஷயங்களில் அகப்பட்டு பகவானை மறக்கக் கூடாதென்பதை வற்புறுத்தவே, ஆத்மலாபமடைய விரும்புபவன் பெண்ணாசையையொழித்தல் வேண்டுமெனக் கூறினார். ஆண் மக்களைப் போன்று பெண் மக்களுக்கும், இவ்வுபதேசம் இன்றியமையாததெனக் கொள்ளல் வேண்டும்.
---------------------
மூலம்...வெப்புலகம்.கொம்
|
|
|
| சித்தி ஜுனைதா பேகம் |
|
Posted by: Chandravathanaa - 02-07-2004, 10:48 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- No Replies
|
 |
[url=http://www.tamil-heritage.org/ebook/sidi/pnotes.html][b]முஸ்லிம் சமூகம் தந்த முதல் பெண் தமிழ் எழுத்தாளர்
[url=http://www.tamil-heritage.org/ebook/sidi/pnotes.html][b]சித்தி ஜுனைதா பேகம்
|
|
|
| இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு |
|
Posted by: arun - 02-07-2004, 08:47 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு
இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அந்நாட்டு அதிபர் சந்திரிகா குமாரதுங்கா சனிக்கிழமை இரவு உத்தரவிட்டார். ஏப்ரல் 2-ம் தேதி தேர்தல் நடைபெறும்.
நாடாளுமன்றத்துக்கு இன்னும் 4 ஆண்டுகள் ஆயுள் உள்ள நிலையில் கலைக்கப்பட்டுள்ளதால் விரைவில் தேர்தல் நடைபெறும். அதிபர் என்ற முறையில் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைக்க சந்திரிகா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. தேர்தல் நடைபெறும் வரை அவரது அரசு காபந்து அரசாக செயல்படும். முக்கியமான முடிவுகளை எடுக்க முடியாது. நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் இருந்தனர்.
2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து அவர் பிரதமரானார். அதிபராக சந்திரிகா பொறுப்பேற்றார். இருவருக்கும் இடையே அதிகாரப் போட்டி நீடித்து வந்தது.
விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சு நடத்துவது தொடர்பாக இரு தலைவர்களுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வந்தது. இந்நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைக்க சந்திரிகா உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் எப்போது நடைபெறும் என்று தெரியவில்லை. தேர்தலை நடத்துவதுஇ சுதந்திரமான அதிகாரம் கொண்ட அதிகாரிகள் அடங்கிய அமைப்பின் பொறுப்பாகும்.
நன்றி : தினமணி
|
|
|
| விருமாண்டி |
|
Posted by: aathipan - 02-07-2004, 09:25 AM - Forum: சினிமா
- Replies (2)
|
 |
சின்னக்கோலார்பட்டி, நல்லமநாயக்கனுர் பெரும்தலைகளான கொத்தாளத்தேவருக்கும் நல்லமநாயக்கருக்கும் இடையே உள்ள பகையில் விருமாண்டி எப்படி பகடையாடப்படுகிறான் என்ற ஒரு வித்தியாசமான கதை.
<img src='http://www.lightsonmag.com/otherimages/story15.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
|