Yarl Forum
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு (/showthread.php?tid=7499)



இலங்கை நாடாளுமன்றம் க - arun - 02-07-2004

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு


இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அந்நாட்டு அதிபர் சந்திரிகா குமாரதுங்கா சனிக்கிழமை இரவு உத்தரவிட்டார். ஏப்ரல் 2-ம் தேதி தேர்தல் நடைபெறும்.

நாடாளுமன்றத்துக்கு இன்னும் 4 ஆண்டுகள் ஆயுள் உள்ள நிலையில் கலைக்கப்பட்டுள்ளதால் விரைவில் தேர்தல் நடைபெறும். அதிபர் என்ற முறையில் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைக்க சந்திரிகா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. தேர்தல் நடைபெறும் வரை அவரது அரசு காபந்து அரசாக செயல்படும். முக்கியமான முடிவுகளை எடுக்க முடியாது. நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் இருந்தனர்.

2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து அவர் பிரதமரானார். அதிபராக சந்திரிகா பொறுப்பேற்றார். இருவருக்கும் இடையே அதிகாரப் போட்டி நீடித்து வந்தது.

விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சு நடத்துவது தொடர்பாக இரு தலைவர்களுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வந்தது. இந்நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைக்க சந்திரிகா உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் எப்போது நடைபெறும் என்று தெரியவில்லை. தேர்தலை நடத்துவதுஇ சுதந்திரமான அதிகாரம் கொண்ட அதிகாரிகள் அடங்கிய அமைப்பின் பொறுப்பாகும்.

நன்றி : தினமணி


- yarl - 02-07-2004

தத்துவத்தார் உவவின்ரை விளையாட்டு எப்படியிருகு;கும் என்று ஏற்கனவே சொல்லிவிட்டார்.


- kuruvikal - 02-08-2004

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: சந்திரிகா அதிரடி

இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கலைத்துள்ளார்.

பாதுகாப்புத் துறையை சந்திரிகா தன்வசம் வைத்துக் கொண்டபோது, அவருக்கும், ரணிலுக்கும் இடையேயான அதிகார மோதல் உச்சகட்டத்தை அடைந்தது. அதனையடுத்து புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து நார்வே தூதுக்குழு விலகியது.

அதிகாரப் பங்கீடு தொடர்பாக சந்திரிகாவுக்கும், ரணிலுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.

இந் நிலையில், சந்திரிகா அதிபருக்கு உண்டான கூடுதல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, 225 உறுப்பினர்கள் கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் அரசைக் கலைத்துள்ளார். ஏப்ரல் 2ம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும், ஏப்ரல் 23ம் தேதி புதிய அரசு பதவியேற்கும் என்றும் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முன்னர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருவருக்கு அமைச்சர் பதவி அளித்துள்ளார் சந்திரிகா. அவரது வெளியுறவுத் துறை ஆலோசகர் லட்சுமண் கதிர்காமர் தகவல் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராகவும், ஜெயரத்னே தபால் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் இடம்பெறுவது இலங்கை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். தேர்தலுக்கு முன் தனது அதிகார பலத்தை அதிகரிக்கச் செய்யவே, சந்திரிகா இவர்களை அமைச்சர்களாக்கியுள்ளதாகத் தெரிகிறது.

----------------
Thatstamil.com


மீண்டும் கதிர்காமர் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஆகியுள்ளார்....இவர் மூக்குடைவது மிக விரைவில நடக்குமா....???!!!! :roll:

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:


- Paranee - 02-08-2004

மூக்குடைவது மட்டுமல்ல முகமே இல்லாமல் போகப்போகின்றார்.

இதைத்தான் சொல்வதோ சனி மாற்றம் என்று