Yarl Forum
ஈழத்தமிழரின் தமிழக சிம்மக் குரல் விடுதலையாகிறது... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: ஈழத்தமிழரின் தமிழக சிம்மக் குரல் விடுதலையாகிறது... (/showthread.php?tid=7520)



ஈழத்தமிழரின் தமிழக சி - kuruvikal - 02-04-2004

ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தியது உயர் நீதிமன்றம்: வெளியே வருகிறார் வைகோ

<img src='http://thatstamil.com/images18/vaiko-100.jpg' border='0' alt='user posted image'>


பூந்தமல்லி பொடா நீதிமன்றம் விதித்த மிகக் கடுமையான நிபந்தனைகளை சென்னை உயர் நீதிமன்றம் தளர்த்தி உத்தரவிட்டுள்ளது.

நேற்று அவருக்கு ஜாமீன் வழங்க முன் வந்த பொடா நீதிமன்றம் சென்னையை விட்டு எங்கும் போகக் கூடாது, தினசரி பொடா நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், பத்திரிக்கைகள், டிவிக்கு பேட்டி தரக் கூடாது என்பது உள்ளிட்ட 13 கடுமையான நிபந்தனைகளை விதித்தது.

இந்த நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காலை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதி சிர்புர்கர் மற்றும் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் பிற்பகலில் விசாரித்தது.

விசாரணை முடிவில், வைகோவுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட்டனர். அவர்கள் வெளியிட்ட தீர்ப்பில்,

வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படாத வகையில் வைகோ வெளியூர் செல்லலாம். அவ்வாறு செல்லும்போது, வழக்கு விசாரணை அதிகாரியிடம் எங்கே போகிறார் என்பதை மட்டும் முறைப்படி தெரிவித்தால் போதும். விடுமுறை நாட்களில் சிட்டி கோர்ட்டில் ஆஜராகத் தேவையில்லை. பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கவும் அவருக்கு எந்தத் தடையும் இல்லை என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

மேலும் ஜாமீன் நிபந்தனைகளை ஏற்று நடப்பதாக அபிடவிட் (பிரமாணப் பத்திரம்) எதையும் வைகோ தாக்கல் செய்ய வேண்டியதில்லை. நிபந்தனைகளை ஏற்பதாக நீதிமன்றத்தில் உறுதிமொழி தந்தாலே போதும் என்றனர்.

நேற்று பொடா நீதிமன்றம் மிகக் கடுமையான நிபந்தனைகள் விதித்தால் அவற்றை ஏற்க வைகோ மறுத்துவிட்டார். இதையடுத்து ஜாமீன் வழக்கில் இன்று பிற்பகலில் தீர்ப்பை அறிவிப்பதாக பொடா நீதிபதி ராஜேந்திரன் தெரிவித்திருந்தார்.

இப்போது அவரது நிபந்தனைகளை உயர் நீதிமன்றம் தளர்த்திவிட்டதால் ஜாமீனில் வைகோ வெளியே வருவார் என்று தெரிகிறது.

முன்னதாக இன்று காலை வைகோ சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்த அவரது வழக்கறிஞர் நன்மாறன் நிருபர்களிடம் கூறுகையில், ஜாமீன் தரப்படும்போது நிபந்தனைகள் விதிக்கப்படுவது வழக்கம் தான். ஆனால், வைகோ விஷயத்தில் நிபந்தனைகள் மிகக் கடுமையாக உள்ளன. இந்த நிபந்தனைகளால் அவரது அரசியல் பணிகளே முழுவதுமாக முடங்கிவிடும் அபாயம் உள்ளது. எனவே, இவற்றைத் தளர்த்தக் கோரி மனு தாக்கல் செய்தோம் என்றார்.

பொடா குழுவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

இதற்கிடையே, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நக்கீரன் ஆசிரியர் கோபால் ஆகியோர் மீதான வழக்குகளை பொடா மறு ஆய்வுக் குழு விசாரிக்க அதிகாரம் உண்டு என்றும் பொடா மறு ஆய்வுக் குழு இந்த வழக்குகளை தொடர்ந்து ஆய்வு செய்யலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இவர்கள் மீதான வழக்குகளை மறு ஆய்வு செய்ய பொடா ஆய்வுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி ஜக்காரியா உசேன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்,

வைகோ, கோபால் உள்ளிட்டவர்களின் வழக்குகளை மறு பரிசீலனை செய்ய பொடா மறு ஆய்வுக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது. எனவே இந்த வழக்கை பொடா மறு ஆய்வுக் குழு தொடர்ந். ஆனால், வழக்கை வாபஸ் பெற வேண்டும் என பொடா மறு ஆய்வுக் குழு கருதினால் அதை மாநில அரசுக்கு பரிந்துரை செய்யலாம்.

ஆனால், இதில் இறுதி முடிவெடுக்க வேண்டியது பொடா நீதிமன்றம் தான் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.


--------------
Thatstamil.com


- vasisutha - 02-06-2004

<img src='http://smileys.smileycentral.com/cat/4/4_1_200.gif' border='0' alt='user posted image'> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <img src='http://smileys.smileycentral.com/cat/4/4_1_200.gif' border='0' alt='user posted image'>


- kuruvikal - 02-06-2004

வைகோ உடல் நலம் பாதிப்பு: நீதிமன்றம் வர முடியவில்லை இன்றே விடுதலை ஆவார்?

பூந்தமல்லி:

வேலூர் சிறையிலிருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று நீதிமன்றத்துக்கு வர முடியாத அளவுக்கு அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு சிறையிலேயே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர் இன்றே விடுதலையாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

நேற்று நீதிமன்றம் வந்தபோதே வைகோ, வாந்தி எடுத்தவாறே மயங்கி சரிந்தார். கடந்த சில நாட்களாகவே சிறையில் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டுள்ளார் வைகோ. இந் நிலையிலும் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார்.

நேற்று நீதிமன்றத்துக்கு வந்த அவர் ஜாமீன் தொடர்பான உறுதிமொழிகளை அளித்தார். அப்போது மிகவும் களைத்துப் போய் காணப்பட்டார். இந் நிலையில் பகல் உணவுக்காக நீதிமன்றத்தில் ஒரு அறைக்குச் சென்றார் வைகோ. அங்கு கட்சியினர் கொடுத்த உணவை வேண்டாம் வாங்க மறுத்துவிட்டார் வைகோ.

வேலூர் சிறையில் இருந்து கொண்டு வரப்பட்ட எலுமிச்சை சாதத்தையே உண்டார். அதைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் வைகோவுக்கு வாந்தி ஏற்பட்டது.

வாந்தி எடுத்த களைப்பில் மயங்கிய வைகோ அங்கிருந்த ஒரு பெஞ்சில் சரிந்தார். படுத்திருந்த அவருக்கு வியர்த்துக் கொட்டியதால் மின் விசிறி கொண்டு வந்து வைக்கப்பட்டது. வெந்நீரைக் குடித்துவிட்டு படுத்துவிட்டார்.

பின்னர் மீண்டும் நீதிமன்ற விசாரணை நடக்க ஆரம்பித்தவுடன் வைகோ அழைத்து வரப்பட்டார். மிகவும் சோர்வுடன் காணப்பட்ட அவரை நீதிபதி தொடர்ந்து ஓய்வெடுக்கச் சொன்னார்.

வேலூர் செல்லும் நிலையில் வைகோவின் உடல் நிலை சரி இல்லாவிட்டால் சென்னையிலேயே அவருக்கு சிகிச்சை தரலாம் எனவும் நீதிபதி கூறினார். ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்ட வைகோ வேலூர் சிறைக்குச் செல்லத் தயார் என்று கூறிவிட்டு சோர்வாகவே வேனில் ஏறிவிட்டார்.

இந் நிலையில் இன்று அவர் ஜாமீன் தொகையைக் கட்ட நீதிமன்றம் வர வேண்டி இருந்தது. ஆனால், அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் நீதிமன்றத்துக்கு போலீசார் அழைத்து வரவில்லை. அவருக்கு சிறையிலேயே சிகிச்சை தரப்படுகிறது.

முன்னதாக நேற்று வைகோவின் ஜாமீன் மனு மீது குறுக்கு விசாரணை நடந்தது. அப்போது நாளை (இன்று) வைகோவுக்காக ஜாமீன் கையெழுத்துப் போடுபவர்களையும் வைகோவின் பாஸ்போர்ட்டையும் கொண்டு வாருங்கள் என நீதிபதி வைகோவின் வழக்கறிஞர்களிடம் கூறினார்.

ஆனால், பாஸ்போர்ட் எங்கே இருக்கிறது என்பதை வைகோவே மறந்துவிட்டதால் பெரும் சிக்கல் எழுந்தது. கைதானபோது பாஸ்போர்ட்டையும் வாங்கினார்களா என்று நினைவில்லை. இதனால் நேற்றே ஜாமீன் கிடைப்பது தள்ளிப் போய்விட்டது.

இன்றே ஜாமீன் கிடைத்தாலும் நாளை தான் சிறையில் இருந்து வெளியே வருவார் என அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் இன்றே அவரை சிறையிலிருந்து விடுவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

வைகோவை வரவேற்க மிகப் பிரமாண்டமான ஏற்பாடுகளை மதிமுகவினர் செய்து வருகின்றனர். வேலூரில் அவருக்கு பெரும் வரவேற்பு தரவும் சென்னையில் திமுகவுடன் சேர்ந்து வரவேற்பு தரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் அவரது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் மாபெரும் பொதுக் கூட்டத்துக்கும், வரவேற்புக்கும் அந்த ஊர் மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

--------------
thatstamil.com
--------------

<img src='http://thatstamil.com/images18/vaiko-100.jpg' border='0' alt='user posted image'>

வை.கோ - நீ
எம் நெஞ்சில் வாழும் கோ
சிங்காரியின் கொடுங்கோல்
கோவே உன்னை வாட்டலாம்
வதைக்கலாம்
எம் ஆத்மா தந்தும்
உன் ஆயுள் காப்போம்
எழுந்திரு நிமிர்ந்து நில்
இறையும் உன் துணை நிற்கும்...!

-----அன்பின் ஈழத்தமிழன்...!


கருணாநிதியின் அன்பில் நனைந்த வைகோ!!



- kuruvikal - 02-07-2004

<b>விடுதலை ஆனார் வைகோ! சிறை வாசலில் பிரம்மாண்டமான வரவேற்பு!</b>

<img src='http://thatstamil.com/images19/cinema/vaiko-450.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://thatstamil.com/images19/cinema/vaiko3-300.jpg' border='0' alt='user posted image'>

வேலூர் மத்திய சிறையிலிருந்து இன்று காலை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுதலையாகி வெளியே வந்தார்.

578 நாட்கள் சிறை வாசத்துக்குப் பின் வெளியே வந்த அவருக்கு சிறை வாசலில் மதிமுக தலைவர்கள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள், வழக்கறிஞர்கள் வைகோவுக்கு மிகச் சிறப்பான வரவேற்பளித்தனர். சிறை வாயிலில் வெடிகளைப் போட்டு அந்தப் பகுதியையே அதிரச் செய்தனர் மதிமுகவினர்.

மதுரை அருகே திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக கூறி வைகோவும், மற்ற 8 மதிமுகவினரும் கடந்த 2002ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

ஜாமீனில் வெளியே வர மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்து வந்தார் வைகோ திமுக தலைவர் கருணாநிதியின் வேண்டுகோளின்பேரில் ஜாமீன் கோர முடிவு செய்தார் வைகோ.

அதன்படி பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் வைகோ ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் பொடா நீதிபதி ராஜேந்திரன் மிகக் கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்குவதாக அறிவித்தார்.

இதை ஏற்க மறுத்த வைகோ, நிபந்தனைகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை அணுகினார். அங்கு நிபந்தனைகள் தளர்த்தப்பட்டன.

இதைடுத்து நேற்று மாலை பொடா நீதிமன்றம் முறைப்படி ஜாமீன் உத்தரவைப் பிறப்பித்தது. இந்த உத்தரவு நேற்று இரவே வேலூர் சிறை கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்டது.

இரு தினங்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறையிலேயே சிகிச்சை பெற்ற நிலையில் இன்று காலை 9.45 மணிக்கு வைகோ சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வெளியே வந்தார்.

சிறை வாசலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மதிமுக தொண்டர்கள் உற்சாகக் கூக்குரலிட்டு தங்களது தலைவரை வரவேற்றனர். அந்தப் பகுதியே அதிரும் அளவுக்கு வைகோவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவருக்கு சால்வைகளையும், மாலைகளையும் அணிவித்து தொண்டர்கள் இனிப்புகளை ஊட்டினர்.

பின்னர் வேன் மூலம் அங்கிருந்து வைகோ சென்னை கிளம்பினார். அவரது காரைத் தொடர்ந்து சுமார் 300 கார்களில் தொண்டர்களும் உடன் சென்றனர். வழியெங்கும் அவர் மதிமுக தொண்டர்களைச் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டார்.

சென்னையின் நுழைவாயிலான தாம்பரத்தில் அவருக்கு மிகப் பிரமாண்டமான வரவேற்பு கொடுக்கப்படவுள்ளது. பின்னர் எழும்பூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு செல்கிறார் வைகோ.

அங்கு மதிமுக தொண்டர்களைச் சந்தித்த பின்னர் தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையையும் நடத்துகிறார்.

பின்னர் பெரியார், அண்ணாவின் சிலைகளுக்கு மாலையணிவித்துவிட்டு அண்ணா அறிவாலயம் செல்லும் வைகோ திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திக்கிறார்.

வைகோவை வரவேற்பதற்காக அவரது தாயார் மாரியம்மாள், கலிங்கப்பட்டி பஞ்சாயத்துத் தலைவரும், வைகோவின் தம்பியுமான ரவிச்சந்திரன் சென்னை வந்துள்ளனர்.

கலிங்கப்பட்டிக்கு வரும் மண்ணின் மைந்தரான வைகோவை சிறப்பாக வரவேற்க அந்த ஊர்க்காரர்கள் மிகப் பிரமாண்டமான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். கிராமம் முழுவதும் ஒரே பரபரப்பு மயமாக உள்ளது. யாரைப் பார்த்தாலும் வைகோ வருகிறார், வைகோ வருகிறார் என்று உணர்ச்சிமயமாக உள்ளனர்.

தங்களது தலைவர் இல்லாமல் 2 பொங்கல் பண்டிகை கடந்து போய் விட்டது. வைகோ இன்று வருவதுதான் தங்களுக்கு உண்மையான பொங்கல் பண்டிகை என்று கிராமத்தினர் உற்சாகத்துடன் கூறுகிறார்கள்.

வைகோவை வரவேற்க ரஜினியின் முத்து படத்தில் வரும் சாரட் வண்டியை வாடகைக்கு எடுத்துள்ளனராம். அதில் வைகோவை அமர வைத்து அழைத்து வரும் திட்டம் உள்ளதாம். அதேபோல, ஒட்டகம், யானைகள் ஆகியவையும் வைகோவை வரவேற்க காத்துள்ளன.

கிராமத்தில் உள்ள பெரிய மைதானத்தை சமன்படுத்தும் வேலையில் அந்த ஊர் இளைஞர்கள் தாங்களாகவே ஈடுபட்டுள்ளனர். கிராமத்துக்கு வரும் வைகோ இங்கு பொதுக் கூட்டத்தில் பேசுவார் என்று அவர்கள் கூறுகிறார்கள். 40,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் மைதானம் சமன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் 20 டிராக்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மொத்தத்தில் வைகோவை ஒரு அரசியல் தலைவராக மட்டும் பார்க்காமல், தங்களது குடும்பத் தலைவன் சிறையிலிருந்து மீண்டு வருவதைப் போலவே காத்திருக்கிறார்கள் கலிங்கப்பட்டிக்காரர்கள்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதில் தவறில்லை, ஆனால் ஈழத் தமிழர் போராட்டத்தை ஊக்கப்படுத்துவதுதான் தவறு என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன் என்றார் வைகோ.

<img src='http://thatstamil.com/images19/cinema/vaiko4-330.jpg' border='0' alt='user posted image'>
------------------------------------------------

ஜெவை பாராட்ட அப்பட்டமாய் பொய் சொல்லி இருக்கிறார் வாஜ்பாய்: வைகோ ஆவேசம்



==============
Thatstamil.com


- Mathivathanan - 02-07-2004

குருவி இருந்து பனம் பழம் விழுந்திட்டுதப்பா..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->