| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 186 online users. » 0 Member(s) | 183 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,316
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,641
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,069
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,497
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| திருமலை-அநுராதபுரம் வீதி உறங்கிக்கிடக்கும் உண்மைகள் |
|
Posted by: thiru - 11-27-2004, 07:51 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
[size=18]திருமலை-அநுராதபுரம் வீதி உறங்கிக்கிடக்கும் உண்மைகள்
<b>பா.சிவரஞ்சன்</b>
திருகோணமலை - அநுராதபுரம் வீதி ராஜீவ்காந்தி நல்லெண்ண நெடுஞ்சாலை என நாமம் இடப்படும் என இலங்கை - இந்திய இரு நாட்டுக் கூட்டறிக்கையில் தீhமானிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வீதியைப் புனரமைக்கவும் இவ்வீதியில் அமைந்துள்ள கிராமப்புறங்களின் அடிப்படைக்கட்டமைப்புக்களை சீர்செய்யவும் சிறிலங்கா அரசிற்கு இந்திய அரசு நிதிஉதவி வழங்கத் தீர்மானித்துள்ளது. இச்செய்தி கடந்தவாரம் ஊடகங்களில் வெளிவந்த செய்தி. இந்தியாவிற்கும் ஈழத்தமிழ் மக்களுக்கும் இடையே பிளவுகளை ஏற்படுத்த சந்திரிகா நகர்த்தும் திட்டமிட்ட காய்நகர்த்தல்களே இவை. ஒரு கல்லில் இரு மாங்காய் என பொதுவாகக் கூறுவார்கள். ஆனால், சந்திரிகாவோ ஒரு கல்லில் பல மாங்காய்களை பறிக்க முனைகிறார். பாரதம் ஈழத் தமிழர் விடயத்தில் கொஞ்சம் கூடுதலாகவே தனது கையைச் சுட்டுள்ளது. மீண்டும் ஒரு முறை தனது பிராந்திய நலன் கருதி சிறிலங்காவுடன் ஒப்பந்தங்களை கைச்சாத்திடத் தயாராகவுள்ளது. ஈழத் தமிழ் மக்களது முப்பது வருடகால அகிம்சைப்போரும் இரண்டு தசாப்தங்களுக்கு மேற்பட்ட ஆயுதப்போரும் பாரததேசத்தின் சொந்த நலன்களுக்காக வீண் போகக்கூடாது என்பதே ஈழத்தமிழ் இனத்தின் விருப்பமாகும்.
தமிழர்களை தனித்தேசிய இனமாக ஒப்பக்கொள்ளல்.
தமிழர்களின் தாயகத்தை அங்கீகரித்தல் (வடக்கு கிழக்கு இணைந்த
பிரதேசம்)
தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளல்.
இவையே அன்று தொட்டு இன்றுவரை ஈழத்தமிழ் மக்களின் அபிலாசைகளாகும். 1984 இல் திம்புவில் தமிழர் தரப்புக்கும் ஜே.ஆர் தலைமையிலான சிறிலங்கா அரசிற்கும் இடையே நடைபெற்ற பேச்சவார்த்தையில் கூட இவையே முக்கிய அம்சங்களாக விளங்கின. இவற்றில் இரண்டாவதாகக் கூறப்பட்ட வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர்களின் தாயகத்தை அங்கீகரித்தல் என்ற விடயம் எப்போதுமே சிங்களப் பேரிவாதிகளுக்கு கசப்பான விடயமே. தமிழர்கள் தனித் தேசிய இனமாகவோ, பாரம்பரிய தாயக நிலப்பரப்பைக் கொண்டவர்களாகவோ இருக்கக்கூடாது என்பதற்காக வடக்கு கிழக்கைத் துண்டாட சிங்களம் பல வழிகளிலும் தனது நடவடிக்கைகளை முன்னெடுத்து (வந்துள்ளது) வருகின்றது. சிங்கள எல்லைகள் தமிழர் நிலங்களை நோக்கி நீட்ட வேண்டும் எனவும் ஆனமடுவிலிருந்து ஆனையிறவுவரை சிங்கள மக்களைக் குடியேற்ற வேண்டும் எனவும் வீரத்துடனும் விவேகத்துடனும் நடவடிக்கைகளை தீட்டி நடைமுறைப்படுத்தியவர் காலஞ்சென்ற சிறிலங்கா சனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா. இதற்கு அப்பால் எல்லா மாவட்டங்களுக்கும் கடல் தொடர்பு இருக்கவேண்டுமெனவும் ஆதாலால் சிறிலங்கா மத்திய மாகாணத்திலிருந்து இருபத்தி ஐந்து (25) சம கூறுகளாக (25-மாவட்டங்கள்) பிரிக்கப்படவேண்டும் என்ற ஒரு கருத்தையும் கொண்டுள்ளது. இதிலிருந்து விளங்குவது என்னவெனின் சகல மாவட்டங்களிலும் தமிழ் மக்களை சிறுபான்மையினராக்கி சிங்கள மக்கள் ஆளும் இனமாகவும் தமிழ் மக்கள் ஆளப்படும் இனமாகவும் இருக்கவேண்டும்; என்ற உள்நோக்கமே. அவ்வகையில் வடக்கு கிழக்கைப் பிரிக்க காலத்திற்கு காலம் மாறிமாறி ஆண்ட இரண்டு அரசாங்கங்களுமே போட்டி போட்டு பல சிங்களக்குடியேற்றங்களை திறம்பட நடாத்தியுள்ளது.
1987 இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் வடகிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து ஒரு மாகாணசபை ஒரு முதலமைச்சின் கீழ் அமைக்கப்படும் எனக் கூறியதுடன் 31.12.1988 இற்கிடையில் கிழக்கு மாகாண மக்களிடமிருந்து எடுக்கப்படும் பொதுமக்கள் வாக்கெடுப்பு மூலம் வடமாகாணமும் கிழக்கு மாகாணமும் இணைந்திருப்பதா அல்லது பிரிந்து போய் இரண்டு மாகாணசபைகள் ஆவதா எனத் தீர்மானம் எடுக்கப்படும் என்ற வரையறையும் உடன்படிக்கையில் காணப்படுகின்றது. தமிழர் தாயகத்தின் நிலையான, நிரந்தரமான இணைப்பிற்கு ஜே.ஆர்.ஜெயவர்த்தனா வைத்த தந்திரமான நரித்தனமான ஆப்பே இந்த வரையறை என்பது வெளிச்சம். அந்த வரையறையை இந்திய அரசு கூட அந்த நேரத்தில் தனது சுயநல, பிராந்திய நலன்கருதி ஆமோதித்தது. இது விடயத்தில் தமிழர்தரப்பு நியாயம், நிலைப்பாடு என்ன என்பதை இந்தியா கவனத்தில் எடுக்கத்தவறியது கவலைக்குரிய செய்தியாகும். அத்துடன் மன்னிக்க முடியாததாகும்.
அவ்வகையிலேயே தற்போது திருகோணமலை - அநுராதபுரம் வீதிக்கு ராஜீவ்காந்தி நெடுஞ்சாலை எனப்பெயரிட்டு சிங்களம் தனது வடக்கு கிழக்கு பிரிப்புசதிகார வேலைகளை ஒரு புறமும் ஈழத்தமிழர்களையும் இந்தியாவையும் பிரிப்பதற்கான நடவடிக்கைகளை மறுபுறமும் என கனகச்சிதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கருத்துத்தெரிவிக்கையில்: 'இது தமிழர் தாயகத்தை கூறுபோடும் விடயமாகவே பார்க்கிறோம், திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவை ஊடறுத்து பல சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டு அப்பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில் இருந்து விரட்டப்பட்டு இன்றும் அகதிகாளாக நலன்புரி நிலையங்களில் காலம் கழிக்கின்றனர். ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் மீன்பிடியிலும் ஈடுபட்டுள்ளனர். பலாத்காரமாக தமிழ்மக்கள் வெளியேற்றப்பட்டு அரச ஆதரவுடன் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்ற பகுதிகளை ஊடறுத்து நெடுஞ்சாலை அமைப்பது சமாதான முயற்சிகளுக்கு பாதிப்பாகவே அமையும்' என்பது புலிகளின் நிலைப்பாடு எனத்திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அவ்வாறாக தமிழர் தரப்பு நியாயம் இருக்கும் போது இந்தியா சிறிலங்கா அரசுடன் இது தொடர்பான ஒப்பந்தங்களை செய்வது எரியும் வீட்டிற்கு எண்ணை ஊற்றுவதற்கு ஒப்பானதாகும். மாறாக இந்தியா தமிழர் தாயகம் தொடர்பாக தமிழர் தரப்புடனேயே பேசவேண்டும். தமிழர் தாயகக் கடலில் அத்தமீறி பிரவேசித்து தமிழர் சதந்திரமாக தொழில் செய்யமுடியாது உள்ள சூழ்நிலையில் இந்திய மீனவர்கள் தமிழர் வளங்களை அள்ளிச் செல்கின்றனர். யுத்த காலத்தில் பட்ட துன்பங்களை தமிழ் மீனவர்கள் இன்றும் அனுபவித்துக்கொண்டே உள்ளனர். இது தொடர்பில் இந்திய அரசு ஆக்கபுூர்வமான நடவடிக்கை எதனையுமே இதுவரை எடுக்கவில்லை. ஆகவே ஈழத் தமிழர்களை நேசசக்தியாகவோ அல்லது அந்நிய சக்தியாகவோ அணுகும் முழுப்பொறுப்பும் பாரதநாட்டின் கையிலே உள்ளது என்பது மட்டும் உண்மை.
<b>நன்றி:</b> (ஈழநாதத்தின்) வெள்ளிநாதம் (19-25-11-2004)
<b>கணனித் தட்டச்சு:</b> திரு (ரஷ்யா)
|
|
|
| என்ன செய்யும் ?... - தொ. சூசைமிக்கேல் |
|
Posted by: hari - 11-27-2004, 06:02 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
<span style='color:red'>என்ன செய்யும் ?...</span>
- தொ. சூசைமிக்கேல்
போர்முகங்கள் கண்டவனே! பொன்ஈழம் கொண்டவனே!
பொற்காலம் வாராமல் என்ன செய்யும்?
ஆர்மகளோ, ஆர்மகனோ நமதுடைமை அபகரித்த
அவலங்கள் மாறாமல் என்ன செய்யும்?
வையமெங்கும் புகழோங்க வளர்தமிழை வளர்த்தவனின்
வரலாறு திரும்பாமல் என்ன செய்யும்?
வெய்யமதிப் பொய்யர்அணி வீழ்ந்துபட, ஈழமகன்
விரும்பியது அரும்பாமல் என்ன செய்யும்?
அன்னையிடம் உண்டதமிழ்ப் பால், தனது வீரத்தை
அடையாளம் காட்டாமல் என்ன செய்யும்?
கண்ணெதிரே என்னுதிரம் விண்ணதிரக் கதறியழும்
காட்சியெனை வாட்டாமல் என்ன செய்யும்?
சொந்தமண்ணில் அந்நியனாய்த் துவள்பவனின் துயர்கண்டு
சொந்தமனம் பொங்காமல் என்ன செய்யும்?
வெந்தபுண்ணில் வேல்செருகும் வீணருக்கு விதிசெய்து
விரட்டாமல் காலம்இனி என்ன செய்யும்?
ஈழநிலத் தோழர்குலம் சூழவலம் வந்துபடில்
எதிரிகளின் சதிகள்நமை என்ன செய்யும்?
தோளுயர்த்தி வாளுயர்த்தித் தூயபடை ஒன்றுபடில்
துன்னலர்தம் இன்னல்நமை என்ன செய்யும்?
என்னருமைத் தளபதியே! உன்னையென்றன் கவியுள்ளம்
எண்ணியெண்ணி வாழ்த்தாமல் என்ன செய்யும்?
முன்னர்எமை வாழவைத்த முதியதமிழ் வீரத்தை
முத்தமிட்டுப் போற்றாமல் என்ன செய்யும்?
தம்பிதனை நம்பிஈழத் தமிழ்க்குலமே திரண்டிருக்க,
தடைபோடும் படைகள்இனி என்ன செய்யும்?
ஐம்பதென்ன, நூறாண்டு அவன்வாழ்வான்: அன்னவனின்
ஆணைஇனி வெல்லாமல் என்ன செய்யும்?
(நன்றி: ரமேஸ்)
<img src='http://img85.exs.cx/img85/9227/untitled704.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| தேசியத் தலைவரின் உரை |
|
Posted by: hari - 11-27-2004, 04:12 PM - Forum: தமிழீழம்
- Replies (8)
|
 |
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
27.11.2004
எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே!
இன்று ஒரு புனிதமான நாள். தமது உன்னதமான உயிருக்கும் மேலாக, தமது தேசத்தின் விடுதலையை அதியுன்னதமானதாக நேசித்து, அந்த உயரிய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிக்கொண்ட எமது மாவீரர்களை நாம் போற்றி வணங்கும் நன்னாள்.
எமது மாவீரர்களின் வீரஞ்செறிந்த போராட்ட வாழ்வையும் அவர்களது ஒப்பற்ற தியாகங்களையும் அற்புதமான அர்ப்பணிப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி நினைவுகூரும் இத் திருநாளில் ஒரு முக்கிய விடயத்தைக் கவனத்திற்; கொள்ளுமாறு நான் உங்களை வேண்டிக்கொள்கிறேன்.
மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த எமது வீர விடுதலைப் போராட்டத்தில் எமது மாவீரர்கள் புரிந்த மகத்தான தியாகங்கள் காரணமாக ஒப்பற்ற போரியற் சாதனைகளை நாம் நிலைநாட்டினோம். உலகமே வியக்கும் வகையிற் போர் அரங்குகளில் எதிரிப் படைகளை விரட்டியடித்து வெற்றிகளை ஈட்டினோம். சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்கு ஆளாகியிருந்த எமது தாயக மண்ணின் பெரும்பகுதியை மீட்டெடுத்து அங்கெல்லாம் எமது நிர்வாக ஆட்சியதிகாரத்தை நிறுவினோம். உலக நாடுகளின் உதவியுடன் கட்டியெழுப்பப்பட்ட சிறீலங்கா அரசினது ஆயுதப் படைகளுக்கு ஈடாகப் படை வலுச் சமநிலையை நிலைநாட்டினோம். தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சர்வதேசமயப்படுத்தி, உலகத்தின் கவனத்தை எம்மீது திருப்பினோம். எனினும் எமது மாவீரர் கண்ட இலட்சியக் கனவு இன்னும் நிறைவுபெறவில்லை. எமது தாயக மண் இன்னும் முழுமையாக விடுதலைபெறவில்லை. எமது மக்கள் இன்னும் பூரண சுதந்திரம் அடைந்துவிடவில்லை.
தமிழீழத்தின் தொன்மைவாய்ந்த, வரலாற்றுப் புகழ்மிக்க நகரங்களும் பட்டினங்களும் அங்கு வாழ்ந்துவரும் எமது மக்களும் இன்னும் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புப் பிடியிலிருந்து விடுபடவில்லை. அவர்கள் திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைபட்டு, நசிபட்டு, மிதிபட்டு வாழ்கிறார்கள். தமது சொந்த மண்ணிலிருந்து வேர் அறுபட்டு இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோர், தாம் பிறந்து வாழ்ந்த நிலங்களுக்குத் திரும்பமுடியாது அகதி முகாம்களில் அல்லற்படுகிறார்கள். எமது மக்களின் துயரும் துன்பமும் தொடர்கிறது. தேச விடுதலை என்ற எமது இலட்சியம், எமது மாவீரர்கள் கனவுகண்ட அந்தச் சத்திய இலட்சியம் இன்னும் நிறைவுபெறவில்லை.
எனது அன்பான மக்களே,
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலேயே என்றுமில்லாதவாறு, ஒர் இக்கட்டான, சிக்கலான சூழ்நிலையை நாம் இன்று எதிர்கொண்டு நிற்கின்றோம். போருமின்றி, நிலையான சமாதானமுமின்றி, இயல்புநிலையுமின்றி, இடைக்காலத் தீர்வுமின்றி, இனப் பிரச்சினைக்கு முடிவுமின்றி, நாம் ஒரு அரசியல் வெறுமைக்குள் வாழ்ந்து வருகின்றோம். இந்த அரசியற் சூனிய நிலை நீடித்தால், அது எமது இலட்சியப் போராட்டத்திற்குப் பெரும் பங்கத்தை ஏற்படுத்திவிடும் என்பது திண்ணம்.
மூன்று தசாப்தங்களாக முடிவின்றித் தொடர்ந்த ஆயுதப் போருக்கு நாம் ஓய்வுகொடுத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் அமைதிகாத்த இக் கால விரிப்பில், சமாதான வழிமூலமாகத் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண எம்மாலான சகல முயற்சிகளையும், நேர்மையுடனும் உறுதிப்பாட்டுடனும் நாம் மேற்கொண்டோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
நோர்வே நாட்டை நடுநிலையாளராக ஏற்று, அந் நாட்டின் அனுசரணையுடன் உலக நாடுகள் சிலவற்றின் தலைநகர்களில் நிகழ்ந்த சமாதானப் பேச்சுக்களில் எமது விடுதலை இயக்கம் பங்குபற்றியது. ஆறு மாதங்கள்வரை நீடித்த ஆறு சுற்றுப் பேச்சுக்களும் அர்த்தமற்றதாகப் பயனற்றுப் போயின. நெருக்கடி நிலையைத் தணித்து, இயல்பு நிலையைத் தோற்றுவித்து, இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தவும் அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கவும் போரினாற் பேரழிவுக்கு ஆளான கட்டுமாணங்களைப் புனர்நிர்மாணம் செய்யவும் நிறுவப்பட்ட உப-குழுக்கள் செயலிழந்து செத்துப்போயின. இவை ஒருபுறமிருக்க, சிறீலங்கா அரசானது எமது விடுதலை இயக்கத்தை ஓரங்கட்டிவிட்டு வா~pங்டனில் நிகழ்ந்த உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டிற் பங்குபற்றியது. இதனால், சமநிலைப் பங்காளி என்ற தகைமையிலிருந்து நாம் ஒதுக்கப்பட்டோம். இப்படியான புறநிலையிற்றான் பேச்சுக்களைத் தற்காலிகமாக இடைநிறுத்த எமது இயக்கம் முடிவெடுத்தது. எமது அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தவே நாம் இந்த முடிவை எடுத்தோம். பேச்சுக்களை ஒரேயடியாக முறித்து, சமாதான முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட நாம் விரும்பவில்லை. பேச்சுக்களை இடைநிறுத்தம் செய்த இடைவெளியில், ஒர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்புக்கான திட்ட வரைவை முன்வைக்குமாறு ரணில் விக்கிரமசிங்காவின் அரசிடம் வேண்டுகோள் விடுத்தோம். நீண்ட காலப் போரினாலே பாதிக்கப்பட்ட எமது மக்களுக்குப் புனர்வாழ்வு பெற்றுக் கொடுக்கவும் சிதைந்துபோன தமிழர் தேசத்தை மீள்நிர்மாணம் செய்யவும் கணிசமான அதிகாரத்துடன் ஒர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு அவசியமென்பதை வலியுறுத்தினோம்.
ஒன்றுக்குப் பின் ஒன்றாக ரணிலின் அரசு முன்வைத்த, இடைக்கால நிர்வாகம் பற்றிய மூன்று வரைவுகளும் எமக்குத் திருப்தியை அளிக்கவில்லை. மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் நிர்வாக வலுவற்றதாக இத்திட்ட வரைவுகள் அமையப் பெற்றதால் எம்மால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறுதியில், ஒர் இடைக்கால நிர்வாகத் திட்ட வரைவை நாமாகத் தயாரித்துக்கொடுக்க முடிவெடுத்தோம். பல மட்டங்களிலே தமிழீழ மக்களின் கருத்தைப் பெற்று, வெளிநாடுகளிற் புலம்பெயர்ந்து வாழும் அரசியல் அறிஞர்கள், சட்ட வல்லுனர்கள், அரசியலமைப்பு நிபுணர்கள் ஆகியோரின் கலந்தாலோசனையுடன் ஒர் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தைத் தயாரித்தோம். இத் திட்டம் புதுமையானது; நடைமுறைச் சாத்தியமானது. எமது மக்களின் அவசரமான வாழ்நிலைத் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய வகையில் இதன் கட்டமைப்பு நெறிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர் தாயகத்தில் மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, புனரமைப்பு, அபிவிருத்தி ஆகிய பணிகளைத் தாமதமின்றிச் செயற்றிறனுடன் நிறைவுசெய்ய வழிவகுக்கும் உருப்படியான அதிகாரங்களைக் கொண்டதாக இத்திட்டம் அமையப்பெற்றது.
இந்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தைச் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி நாம் ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கத்திடம் சமர்ப்பித்ததுடன், ஊடகங்கள் வாயிலாகப் பொதுசன அரங்கிலும் பகிரங்கப்படுத்தினோம்.
சர்வதேச நாடுகள் பல, எமது இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை வரவேற்கத் தவறவில்லை. நீண்ட காலத்தின் பின்பு முதற்றடவையாக விடுதலைப் புலிகள் தமது அரசியற் சிந்தனைகளைத் தெளிவாகவும் விரிவாகவும் எழுத்தில் வடித்திருக்கின்றார்களென இந் நாடுகள் திருப்தி தெரிவித்தன.
நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கம் நிராகரிக்கவில்லை. தாம் சமர்ப்பித்த வரைவுகளைப் பார்க்கிலும் எமது திட்டம் வித்தியாசமானது என்று குறிப்பிட்ட அரசாங்கம், எமது யோசனைகளின் அடிப்படையிற் பேச்சுக்களை ஆரம்பிக்க இணங்கியது. ஆனால், அதே சமயம், எமது இடைக்கால நிர்வாகத் திட்டத்தைக் கடுமையாக விமர்சித்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி, அது தமிழீழத் தனியரசுக்கு இடப்பட்ட அத்திவாரமெனக் கண்டித்தது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியும் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்கா ஒருபடி மேலே சென்று அதிரடி நடவடிக்கையை எடுத்தார். எமது இடைக்கால நிர்வாகத் திட்டம் அறிவிக்கப்பட்ட நான்காவது நாளே சந்திரிகா அம்மையார் மேற்கொண்ட திடீர் நடவடிக்கை தென்னிலங்கை அரசியலைப் பெரும் நெருக்கடிக்குள்ளே தள்ளியது. பாதுகாப்பு அமைச்சு உட்பட மூன்று முக்கிய அமைச்சுகளை ஜனாதிபதி சந்திரிகா பறித்தெடுத்துக் கொண்டதால் ரணில் விக்கிரமசிங்காவின் ஆட்சிபீடம் அதிகார வலுவிழந்து ஆட்டம் கண்டது. இதனைத் தொடர்ந்து மூன்று மாதத்திற்குள் ஜனாதிபதி சந்திரிகாவினாற் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் விளைவாக ரணில் அரசாங்கம் கவிழ்ந்தது.
இவ்வாண்டு முற்பகுதியில் நிகழ்ந்த பொதுத் தேர்தல் சிங்கள, தமிழ்த் தேசங்கள் மத்தியிலான இன முரண்பாட்டினை மேலும் கூர்மையடையச் செய்தது. சமாதானத்திற்கும் இன இணக்கப்பாட்டிற்கும் விரோதமான சிங்களப்பௌத்த பேரினவாத சக்திகள், என்றுமில்லாதவாறு தென்னிலங்கை அரசியல் அரங்கில் மேலாண்மை வகிக்க இப் பொதுத் தேர்தல் வழிவகுத்தது. இனவாதமும் மதவாதமும் பழமைவாதக் கம்யூனிசமும் ஒன்றுகலந்த குளறுபடியான கருத்தியலில் ஊறித் திளைத்த, தமிழர் விரோதக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி) இத் தேர்தலில் கணிசமான ஆசனங்களைப்பெற்று மூன்றாவது பிரதான அரசியற் கட்சியாக வெற்றிபெற்றது. இந்த இனவாதக் கட்சியை முக்கிய தோழமைப் பங்காளியாக அரவணைத்து, ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்தார் சந்திரிகா அம்மையார். தமிழரின் தேசியப் பிரச்சினை குறித்து மாறுபட்ட போக்கும் முரண்பட்ட கொள்கையுமுடைய அரசியல் இயக்கங்களின் ஒவ்வாத கூட்டாக இந்த அரசாங்கம் அமையப்பெற்றது.
பொதுசனத் தீர்ப்பின் வாயிலாக, தென்னிலங்கை அரசியலரங்கிற் சிங்களப்பௌத்த மேலாண்மைவாதம் வலுப்பெற்ற அதே சமயம், தமிழரின் தாயகமான வடகிழக்கில், ஒரே இலட்சியத்தில் ஒன்றுபட்ட சக்தியாகத் தமிழ்த் தேசியம் எழுச்சிபெற்றது. எமது விடுதலை இயக்கத்தின் அரசியல் இலட்சியத்திற்கு மக்கள் சக்தியின் ஏகோபித்த ஆதரவு கிட்டியது. தமிழீழ மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற வெகுசன அங்கீகாரமும் எமது விடுதலை இயக்கத்திற்கு வழங்கப்பட்டது. எமது இயக்கம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்திற்கு எமது மக்களின் மனுவும் கிடைத்தது. விடுதலைப் புலிகளின் இலட்சியக் குரலாக, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சனநாயக சக்தியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருபத்திரெண்டு ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது. இப் பொதுத் தேர்தலானது என்றுமில்லாதவாறு தமிழ், சிங்கள இனங்களை வேறுபட்ட இரு தேசங்களாகப் பிளவுபடுத்தியது. கருத்தாலும் உணர்வாலும் இலட்சியத்தாலும் வேறுபட்டு, மாறுபட்டு, முரண்பட்டு நிற்கும் இரு மக்கள்சமூகங்களாகப் பிரிவுறச் செய்தது.
தென்னிலங்கையில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்து, அரசியலதிகாரம் இனவாத சக்திகளிடம் சென்றடைந்தபோதும் நாம் தொடர்ந்தும் அமைதி பேணி, சமாதான முயற்சியை முன்னெடுக்க விரும்பினோம். இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தின் அடிப்படையிற் பேச்சுக்களை ஆரம்பிக்க நாம் தயாரென்பதை நோர்வே அனுசரணையாளர்கள் மூலமாகச் சந்திரிகாவின் கூட்டணி அரசாங்கத்திற்கு அறிவித்தோம். அவ்வேளைதான் அரச கூட்டணிக்குள் குழப்பமும் கொள்கை முரண்பாடும் தலைது}க்கின.
அரச கூட்டணிக்குள் ஆதிக்க வலுவுடைய கட்சியான ஜே.வி.பி, சமாதானப் பேச்சுக்கள் வாயிலாகத் தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமையும் ஆட்சியதிகாரமும் வழங்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தது. மூன்றாந் தரப்பு நடுநிலையாளராகச் செயற்பட்ட நோர்வே அரசையும் வன்மையாகக் கண்டித்தது. நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை முற்றுமுழுதாக நிராகரித்தது. எமது திட்டத்தின் அடிப்படையிற் பேச்சுக்கள் ஆரம்பமானால் அரச கூட்டணியிலிருந்து வெளியேறிவிடப் போவதாகவும் மிரட்டியது. சமாதானப் பேச்சுக்கும் சமரச முயற்சிக்கும் எதிரான ஜே.வி.பியினரின் தீவிரவாதக் கடும்போக்கு, சந்திரிகா அம்மையாருக்குப் பெரும் சவாலாக அமைந்தது. இந்நிலையே தொடர்ந்தும் நீடிக்கிறது.
சமாதான வழிமுறையைப் பேணி இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டுமென்ற சர்வதேச அழுத்தம் ஒருபுறமும், பேச்சுக்கள் ஆரம்பமாகி முன்னேற்றம் ஏற்படும்போதுதான் உதவி வழங்கும் நாடுகள் உறுதியளித்த பெருந்தொகைக் கடனுதவி கிடைக்குமென்ற நிர்ப்பந்தம் மறுபுறமும், பாதாளம் நோக்கிச் சரிந்து செல்லும் இலங்கையின் பொருளாதாரம் இன்னொரு புறமுமாக, சந்திரிகாவின் அரசு பலமுனைகளில் நெருக்கடியைச் சந்தித்து நிற்கிறது. இந்த நெருக்கடிக்கு முகம்கொடுப்பதாயின் விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்தியே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அரச கூட்டணிக்குள் நிலவும் உள்முரண்பாடும், அடிப்படையான கொள்கை வேறுபாடும் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்குப் பெரும் இடையூறுகளாக எழுந்துள்ளன. தமிழரின் தேசிய இனப் பிரச்சினை குறித்து அரச கூட்டணிக்குள் அங்கம்வகிக்குங் கட்சிகள் மத்தியில் ஒரு தெளிவான கொள்கைத் திட்டமோ பொதுவான அணுகுமுறையோ இருக்கவில்லை. தமிழர் விரோத இனவாதத்திலும் போர்வெறி பிடித்த இராணுவவாதத்திலும் சிங்களப்பௌத்த மேலாதிக்கத்திலும் ஊறித் திளைத்த தீவிரவாதச் சக்திகளுடன் அதிகாரக் கூட்டுறவு வைத்திருக்கும் சந்திரிகா அம்மையாரால் ஒரு தெளிவான கொள்கைத் திட்டத்தின் அடிப்படையிற் சமாதான முயற்சியை முன்னெடுக்க முடியவில்லை. இதுதான் தென்னிலங்கையில் நிலவும் உண்மையான அரசியல் யதார்த்த நிலை. அரச கூட்டணிக்குள் கருத்தொற்றுமையில்லையென்ற அரசியல் உண்மையானது மிகவும் சாதுரியமான முறையில், சர்வதேச சமூகத்திற்கு இருட்டடிப்புச் செய்யப்பட்டுவருகிறது.
ரணில் விக்கிரமசிங்கா அரசாங்கத்துடன் நாம் நிகழ்த்திய பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, அதன் இறுதிக் கட்டத்திலேயே எமது இடைக்கால நிர்வாக யோசனைகளை முன்வைத்தோம். அந்த யோசனைகளை அடிப்படையாக வைத்து உடன் பேச்சுக்களைத் தொடங்கலாம் என்ற எமது நிலைப்பாட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை ஆதரிக்கிறது. ஆனால் எமது நிலைப்பாட்டிற்கு மாறாக, சந்திரிகாவின் அரசு ஒரு நிபந்தனையை விதிக்கிறது. அதாவது, எந்த வகையான இடைக்கால நிர்வாக அமைப்பும் ஒரு நிரந்தரமான தீர்வுத் திட்டத்தின் இணைபிரியாத அங்கமாக அமையவேண்டும் என வலியுறுத்துகிறது. நாம் ஒர் இடைக்கால நிர்வாக ஒழுங்கை வேண்டிநிற்க, சந்திரிகாவின் அரசு இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுபற்றி பேச விரும்புகிறது.
கால தாமதமின்றி, இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு தமிழர் தாயகத்தில் அமையப்பெறவேண்டுமென நாம் வலியுறுத்துவதற்கு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. நீண்ட காலமாகத் தொடர்ந்த கொடிய போரினாற் பாதிக்கப்பட்ட எமது மக்கள் மிகவும் அவசரமான வாழ்நிலைத் தேவைகளையும் பாரிய மனிதாபிமானப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு நிற்கின்றார்கள். பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் அகதி முகாம்களில் அவல வாழ்க்கை வாழ்ந்துவருகிறார்கள். போரினாற் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் புனர்வாழ்வும் வழங்குவதற்கு உதவி வழங்கும் நாடுகள் பெருந்தொகையில் நிதி ஒதுக்கீடு செய்ய முன்வந்துள்ளன. துன்பப்படும் எமது மக்களுக்கு நிவாரணமும் புனர்வாழ்வும் வழங்கவும் அழிவுற்ற தமிழர் தேசத்தை மீளக் கட்டியமைக்கவும் தகுந்த அதிகாரங்களுடன் வடகிழக்கில் ஒர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு நிறுவப்படுதல் அவசியம்.
போர்நிறுத்தம்செய்து, மூன்று ஆண்டு காலமாக அமைதி பேணி, ஆறு மாதங்கள்வரை பேச்சுக்களை நடத்தியபோதும் சமாதானத்தின் பலாபலன்கள் இன்னும் எமது மக்களைச் சென்றடையவில்லை. தாங்கமுடியாத அளவிற்கு அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளின் சுமை எமது மக்களை நசுக்கிவருகிறது. முதலில், உடனடியாகத் தமது அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டவேண்டுமென்பதையே எமது மக்கள் ஆவலாக எதிர்பார்த்து நிற்கின்றார்கள். எனவேதான், நாம் முன்வைத்த யோசனைகளின் அடிப்படையிற் பேச்சுக்களை ஆரம்பித்து வெகு சீக்கிரமாக இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பை நிறுவவேண்டுமென நாம் விரும்புகின்றோம். நாம் தெரிவித்த யோசனைகளிற் சில சர்ச்சைக்குரியனவாகத் தென்பட்டால் அவைபற்றிப் பேச்சுவார்த்தை மேசையில் விவாதித்துத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். முதலில், இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பை நிறுவி, அது செம்மையாகச் செயற்படத் தொடங்குவதை அடுத்தே இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுபற்றிப் பேச்சுக்களை நடத்தலாம் என்பதே எனது நிலைப்பாடு. எமது கோரிக்கை நியாயமானது. தமிழர் தாயகத்தில் நிலவும் வாழ்நிலை நிதர்சனத்தைக் கருத்திற்கொண்டே நாம் இக் கோரிக்கையை முன்வைக்கின்றோம்.
ஆனால், சந்திரிகா அம்மையாரோ இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதுபற்றிப் பேச வருமாறு எமக்கு அழைப்பை விடுத்து வருகிறார். எந்த வடிவத்திலான இடைக்கால நிர்வாகத் திட்டமும், முழுமையான நிரந்தரத் தீர்வுத் திட்டத்தின் அங்கமாக அமையவேண்டும் என்பது அவரது நிலைப்பாடு. தமிழரின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என அவர் வலியுறுத்துவதற்குப் பல காரணங்களை நாம் சுட்டிக்காட்டலாம். முதலாவதாக, அரசுக் கூட்டணிக்குள் அங்கம்வகிக்கும் தீவிரவாத இனத் துவேசச் சக்திகளைத் திருப்திப்படுத்துவதற்காக இருக்கலாம். அதுவும் குறிப்பாக, நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை வன்மையாக எதிர்த்து நிற்கும் ஜே.வி.பியினரைச் சமாதானப்படுத்தும் நோக்கமாக இருக்கலாம். இரண்டாவதாக, தமிழரின் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதில் உண்மையான அக்கறை கொண்டவர்போன்று சர்வதேசச் சமூகத்திற்கு ஏமாற்றுவித்தை காட்டுவதற்காக இருக்கலாம். மூன்றாவதாக, தமிழரின் சிக்கலான இனப் பிரச்சினை பற்றி விவாதிப்பது என்ற சாக்கிற் பேச்சுக்களை முடிவின்றி இழுத்தடிப்பதற்காகவும் இருக்கலாம். இப்படிப் பல காரணங்களை நாம் சுட்டிக்காட்டலாம். எப்படியான காரணங்களாக இருந்தாலும் ஒன்றைமட்டும் நாம் திட்டவட்டமாகச் சொல்ல விரும்புகின்றோம். அதாவது, சந்திரிகா அம்மையாரின் முரண்பட்ட, ஒன்றுக்கொன்று மாறுபட்ட நிலைப்பாடுகளைப் பார்க்கும்பொழுது, அவரது அரசானது தமிழ் மக்களுக்கு ஒர் இடைக்காலத் தீர்வையோ நிரந்தரமான தீர்வையோ வழங்கப்போவதில்லை என்பது புலனாகும். ---
தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுவேண்டிக் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நாம் சிங்கள அரசியல் தலைமைகளுடன் பேச்சுக்களை நடத்திய கசப்பான வரலாறு பற்றி நான் இங்கு விபரிக்க விரும்பவில்லை. காலத்தாற் சாகாது, ஈழத் தமிழ் இனத்தின் கூட்டு அனுபவத்திற் புதைந்து கிடக்கும் அரசியல் உண்மை இது. மொழியுரிமை என்றும் சம உரிமை என்றும் பிரதேச சுயாட்சி என்றும் சம~;டிக் கூட்டாட்சி என்றும் காலங் காலமாக நாம் பேச்சுக்களை நடத்தி, உடன்பாடுகள் ஒப்பந்தங்கள் செய்து, ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்ட வரலாற்றுப் பாதையில் மீளநடைபோட எமது விடுதலை இயக்கந் தயாராக இல்லை.
சிங்களப்பௌத்தப் பேரினவாதச் சகதிக்குட் புதைந்து கிடக்கும் அரசியல் அமைப்புகளும் அவற்றின் தலைமைகளும் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒருபொழுதும் புரிந்துகொள்ளப் போவதில்லை. சிங்களத் தேசத்தின் பிரதான அரசியற் கட்சிகள் எவையுமே தமிழரின் தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளைக்கூட அங்கீகரிக்கத் தயாராக இல்லை. வடகிழக்கு மாநிலமானது தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகம் என்பதையோ, தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசிய இனக் கட்டமைப்பைக்கொண்ட மக்கள் சமூகம் என்பதையோ தமிழீழ மக்களுக்குப் பிரிந்துசெல்லும் உரிமையுடனான சுயநிர்ணய உரிமையுண்டு என்பதையோ எந்தவொரு சிங்கள அரசியல் இயக்கமும் ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை. தமிழரின் தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளைப் புரிந்துகொண்டு அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவமும் பெருந்தன்மையும் மதிநுட்பமும் இல்லாதது ஒருபுறமிருக்க, தென்னிலங்கை அரசியல் இயக்கங்கள் மத்தியில் ஒத்திசைவற்ற, ஒன்றுக்கொன்று மாறுபட்ட, முரண்பாடுகள் நிறைந்த கருத்துக்களையும் கொள்கைகளையுமே காணக்கூடியதாக இருக்கிறது. இப்படிக் குளறுபடியான கொள்கைகளை வரித்துக்கொண்டு, அப்பட்டமான இனவாதம் பேசும் கட்சிகளின் கூட்டணிக்குத் தலைமைவகிக்கும் சந்திரிகா அம்மையார், இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதுபற்றி அக்கறை காட்டுவது எமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. ஜனாதிபதி சந்திரிகாவிடமும் அவர், கூட்டாட்சி அமைத்திருக்கும் கட்சிகளிடமும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிடமும் எமது விடுதலை இயக்கம் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறது. அதாவது, தமிழ் மக்களது இனப் பிரச்சினையின் அடிப்படைகள் குறித்து, அவர்களது மூலாதாரக் கோரிக்கைகளான தாயகம், தேசீயம், சுயநிர்ணய உரிமை குறித்து, உங்களது கட்சிகளின் கொள்கை நிலைப்பாட்டினை அதிகாரபூர்வமாகப் பகிரங்கப்படுத்துங்கள்.
தென்னிலங்கை அரசியலரங்கில் தமிழரின் அடிப்படை அரசியல் அபிலாசைகள் குறித்துத் தெளிந்த பார்வையும் நேரிய தரிசனமும் ஒத்திசைவான நிலைப்பாடும் நிலவுமானால் எமது மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுபற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமுண்டு. அல்லாதபட்சத்தில், நிரந்தரத் தீர்வு குறித்துப் பேசுவதில் அர்த்தமில்லை. தமிழர் பிரச்சினை குறித்துப் பிளவுபட்டு, முரண்பட்டுக் குழம்பி நிற்கும் சிங்கள அரசியல் தலைமைகளிடமிருந்து எமது மக்களுக்கு நியாயமான நிரந்தரத் தீர்வு கிடைக்கப்போவதில்லையென்ற உண்மையை உணர்ந்துதான் நாம் இடைக்காலத் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைத்தோம். எமது மக்களின் வாழ்க்கைத் தேவைகளுக்காவது நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடனேயே நாம் இத் திட்டத்தை முன்வைத்து, பேச்சுகளை ஆரம்பிப்பதற்கு விருப்பம் தெரிவித்தோம். ஆனால் சந்திரிகாவின் அரசு எமது நியாயமான நிலைப்பாட்டை நிராகரித்து, நிரந்தரத் தீர்வு என்ற சாக்குச் சொல்லி, சமாதான முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறது. சமாதானத்தின் விரோதிகளையும் இனவாத சக்திகளையும் அவர்களது குளறுபடியான கொள்கைகளையுந் தனது கூட்டாட்சித் திரைக்குள் மூடிமறைத்து, விடுதலைப் புலிகள் மீது வீண்பழி சுமத்த முனைகிறார் சந்திரிகா அம்மையார். சமாதான முகமூடி அணிந்து நடிக்கும் சந்திரிகா அரசின் உண்மையான முகத்தைச் சர்வதேச சமூகம் அடையாளம் கண்டுகொள்ளும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
இடைக்காலத் தீர்வுமின்றி, நிரந்தரத் தீர்வுமின்றி, நிலையான அமைதியுமின்றி, நிம்மதியான வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்கமுடியாது. சிங்களத் தேசமானது தமிழினத்தை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம், பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டுங் கெட்டான் நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி, எதிர்காலச் சுபீட்சமின்றி சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழமுடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லைக்கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்துவிட்டோம். இந்த நெருக்கடியான சூழ்நிலையிற் சிறீலங்கா அரசுக்கு நாம் அவசரமான அழைப்பு ஒன்றை விடுக்க விரும்புகின்றோம். அதாவது, நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தின் அடிப்படையில், நிபந்தனையற்ற முறையில், காலந் தாமதிக்காது பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, காலத்தை இழுத்தடித்து, எமது மக்களின் துயர வாழ்வை நீடித்துச் செல்ல சிங்கள அரசு முற்படுமானால், நாம் எமது தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. எமது இந்த இக்கட்டான நிலையை, தமிழரின் இனப்பிரச்சினையில் அக்கறையுடைய உலக நாடுகள் கருத்தில் எடுத்து, எமது நியாயமான நிலைப்பாட்டின் அடிப்படையிற் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்கும்படி சிறீலங்கா அரசிற்கு அழுத்தம்கொடுக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.
எமது மண்ணின் விடிவிற்காகவும் எமது மக்களின் விடுதலைக்காகவும் களமாடி வீழ்ந்த எமது மாவீரர்களை நினைவுகூரும் இப் புனித நாளில், தேச விடுதலை என்ற அவர்களது இலட்சியக்கனவை, எத்தகைய இடர்கள், சாவல்களை எதிர்கொண்டபோதும் நிறைவுசெய்வோமென நாம் உறுதிபூணுவோமாக.
'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
(வே. பிரபாகரன்)
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
|
|
|
| நிதர்சனம் தருகின்ற நிஜமான உடனடிச்செய்திகள். |
|
Posted by: Nanthaa - 11-27-2004, 12:24 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (21)
|
 |
நிதர்சனம் தருகின்ற நிஜமான உடனடிச்செய்திகள்.
கருணாவின் கூட்டுக்கட்சி இணைப்பாளர் திடீரென்று காணாமல் போயுள்ளார்.?
ஜ சனிக்கிழமைஇ 27 நவம்பர் 2004 ஸ ஜ கொழும்பிலிருந்து சாந்திதேவி ஸ
கோணல் கருணா என்பவர் அண்மையில் புதிய கட்சியொன்றை உருவாக்கியிருந்தார். அதன் ஒரு படிநிலையாக இந்தியாவின் உத்தரவிற்கு அமைய இந்திய உளவுத்துறை அமைப்பான றோ அமைப்பின் பிரதிநிதிகளான ஈ.என்.டி.எல்.எவ். உறுப்பினர்களை இணைத்துத் தமிழீழ மக்கள் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற ஒன்றையும் உருவாக்கியிருந்தார். இந்தக் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளராக மனோ மாஸ்ரர் எனப்படும் இராசரத்தினம் செயற்பட்டு வந்தார். இன்று இராசரத்தினம் திடீரெனக் காணாமல் போயுள்ளதாக கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் வானொலி ஒன்றில் பெயர் குறிப்பிடாத ஆங்கில இணையத்தளத்தின் செய்தியாக வாசிக்கப்பட்டுள்ளது. முன்பு ஈ.என்,டி,எல்,எவ், அமைப்பின் வானொலியில் கடமையாற்றிய அறிவிப்பாளரே இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளார்கள்
ஆனந்தசங்கரியுடனான கூட்டுத்தொடர்பினை வைத்திருக்கும் அக்கட்சியின் உறுப்பினர் ஒருவருடன் இச் செய்தி தொடர்பாக மேலதிக தகவல்களை அறியும் பொருட்டு தொலைபேசியுூடாகத் தொடர்பினை ஏற்படுத்த முற்பட்ட போது இவர்களை அணுக முடியவில்லை. இந்த விடயம் தொடர்பாகத் தகவல்கள் உறுதிபடுத்தப்பட்டதும் மேலதிக தகவல்களை அறியத்தருவோம். அதுவரை வாசகர்கள் பொறுமை காக்கும்படி பணிவுடன் வேண்டுகிறோம்.
|
|
|
| கல்லறைக் கதவுகள் திறக்கும் காணிக்கைத் திருநாள்- புதுவை |
|
Posted by: hari - 11-27-2004, 07:42 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (7)
|
 |
<img src='http://img36.exs.cx/img36/3190/Untitled15.gif' border='0' alt='user posted image'><img src='http://img34.exs.cx/img34/7710/candle_burning_for_911_md_blk.gif' border='0' alt='user posted image'>
<span style='color:red'>கல்லறைக் கதவுகள் திறக்கும்
காணிக்கைத் திருநாள்.</span>
சாமம் பேயுலவும் சவக்காலை
என்ற பழிச்சொல்
போய் மறையலானது.
வீரர் துயிலுகின்ற இல்லம்
என்ற புனிதச் சொல்
வாய் நிறையலானது.
கார்த்திகை மாதத்திலேன் கனத்தமழை?
ஏனிந்தப் பச்சைவிரிப்பு?
நிலமேன் நெருக்குருகிக் கிடக்கின்றது?
காற்றேன் ஓவென்றிரைகிறது?
சூரியனேன் சுட்டெரிப்பதில்லை?
அயர்ந்துறங்கும் ஆலகண்டருக்கு
இயற்கையின் இந்தமாத அஞ்சலியிது.
ஓவென்றிரையும் ஊதற்காற்றே!
வேகம் குறைத்து விசு.
தேவகுமாரர்கள் இங்கே தூங்குகின்றனர்.
துயில் கலைத்துத் தொலைக்காதே.
கல்லெறியும் பொல்லாக் கனத்தமழையே!
மெல்லப் பூவெறிதல் போலப் பொழிக.
இங்கே ராஜகுமாரிகள் உறங்குகின்றனர்.
தொட்டெழுப்பித் தொலைக்காதே.
நிலமே! மழை நீரைக் குடிக்காதே
உள்ளே சில்லிட்டுப் போகும் அவர்தேகம்.
அதிர நடப்பவரே கவனம்
பிள்ளைகளின் அனந்தசயனம் கலையக்கூடும்.
பூக்களெனினும் மெதுவாகப் போடுங்கள்
தூக்கம் கலைந்து போகலாம்.
காலப்பணியில் கண்துஞ்சாதிருந்தவர்கள்
கால் நீட்டிக் கொஞ்சம் களைப்பாறுகின்றனர்.
வாழ்வின் வசந்தம் யாவையும்
தாயக வேள்வியில் தர்ப்பணம் செய்தவர்கள்
நீள்துயிலிற் கிடக்கின்றனர்
ஏன் எழுப்ப வேண்டும் அவர்களை?
கார்த்திகை இருபத்தேழு
எம் காவற்தெய்வங்களுக்கான காணிக்கைப் பெருநாள்.
துயிலுமில்லத்தின் தூமணிக் கபாடங்கள்
அன்று அகலத்திறந்திருக்கும்.
ஊர்கூடி விதைத்த வயல்தேடி வந்திருக்கும்
சிறகெடுத்த பறவைகளின் உறவங்கு திரண்டிருக்கும்.
தனித்த குரலில் ஒரு தாய்ப்பறவை கதறியழும்.
"மகனே!
பால்தந்த பாவி பூக்கொண்டு வந்துள்ளேன்
கால்கொண்டுதைத்து நிலம் கிழித்து
வாமகனே வெளியே.
என் கையணைப்பில் உன்னை நொடிப்பொழுதாயினும்
ஆரத்தழுவ அனுமதிப்பாய் என் மகனே"
உயிர் பிழிந்து கசியும் உதிரம்.
திக்குற்றுப் போகும் திரண்டிருக்கும் உறவுகள்
பக்கத்து குழியருகும் பாடும் துயர்ப்பாட்டொன்று
விக்கலுடன் எழும்.
அங்குமொரு தாய்ப்பறவை அழும்
"அம்மாவென அழைத்த அமுதவாய் திறந்தின்று
இன்னோர் முறையென்னை எழுந்தணக்க மாட்டாயோ?
கனவிற் தினம் வந்து கட்டியெனை அழைக்கின்ற
மகளே! ஒரு தடவை மார்பணைக்க வாராயோ?"
சொல்லியழும் குரலில் கல்லும் கசிந்துருகும்.
கேட்கும் செவியெல்லாம் கிறுகிறுத்துப் போகும்.
உள்ளே நரம்பெல்லாம் தீ மூண்டு நடுங்கும்.
ஆறாத துயர் வெள்ளம் அணையுடைத்துப்பாயும்.
அப்போதுதான் கல்லறையின் கதவுகள் திறப்பதாய்
ஒரு காட்சி விரியும்.
உள்ளே முகம் தெரியும்
விழிகள் திறந்து பேசத்துடிப்பதாய் வாயசையும்.
மெல்லச் சிரிப்பொலியும் கேட்கும்.
" அம்மா!
என்னை இழந்ததாய் ஏன் புலம்புகின்றாய்
எனக்கா சாவு வரும்?
உள்ளே உயிர்கொண்டே உறங்குகின்றேன்.
தமிழீழம் வரும் வரை எனக்குச் சாவில்லை.
அதன் பின்பும் எனக்கு அழிவில்லை
இது பீஷமரின் படுக்கை
காத்திருக்கும் கண்ணுறக்கம்.
என்றோர் அசரீரி எல்லாச் செவிகளிலும் கேட்கும்.
கோயில் மணிகள் அசையக் குழிவிழிகள் மூடிவிடும்
கல்லறைக் கதவுகளில் பூட்டு விழும்
காணிக்கைத் திருநாளுக்கான பூசைமணியசைய
சுற்றுப்பிரகாரம் சூடு பெறும்.
நெய்விளக்குகள் நிமிர்ந்து சுடர்பிடித்தெரியும்.
திருப்பலிப்பாடல் தொடங்கும்.
<i><b>" மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை
முடிசூடும் தமிழ்மீது உறுதி
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை
வீரர்கள் மீதிலும் உறுதி."</i></b>
பாடல் தொடங்கவே நெஞ்சு பாரம் சுமக்கும்.
விழிநீர் சொரியச் சொரியப் பாடும் போது
நெஞ்சுக்குள்ளே கிளரும் உணர்வில் நெருப்பு மூளும்
கல்லறையில் விழும் கண்ணீர்த்துளிகளால்
வெள்ளையடித்த சுண்ணாம்பு கரைந்தொழுகும்.
இது வீரவழிபாடு
பழைய மரபொன்றின் புதிய வடிவம்
வீரர்களைத் தெய்வங்களாக்கும் விதிமுறை
ஈமத்தாழி
நடுகல்
வெறியாட்டு
இதுவே முதுதமிழர் காலத்து வழித்தடம்
தீயிடும் ஆரிய மரபழித்து
மீண்டும் வேரிலிருந்து பூக்கிறது வீரப்பூ
மாவீரர் நாள்
செத்தபிணங்களுக்கு சாப்பிணங்கள் கதறுவதாய்
சித்தர்கள் பழித்துரைத்த திருநாளல்ல.
வல்லமையை எமக்கு வழங்குங்கள் என்று
கல்லறைக்கு முன்னே கைகூப்பும் நாளாகும்.
உங்கள் பணிமுடிக்க உள்ளோம் நாம்
எனச் சொல்லி
பொங்கும் மனத்திடத்தைப் பெறுகின்ற நாளாகும்
மாறாமனத்தை அருள்வீர்
நீர் பெற்ற
மானத்துக்கான மரணத்தை எமக்களிப்பீர்
என்றோர் வரம் கேட்க எழுகின்ற நாளாகும்.
இது அருச்சுனன் தபசு
காண்டPப நாதத்துக்கான கடும் தவம்
கார்த்திகை மாதம் கூத்திடும் காலம்
ஊழிக்கூத்துக்கான ஒத்திகை.
உமக்கருகில் எமக்குமொரு குழி என
போருக்குப் போகின்ற புனித நாள்
அடியே! கொற்றவைக் கிழவி!
ஆயிரம் யானைகளின் பலமளிப்பாய்.
எதிர் வரும் பகைரதங்கள் யாவும்
எம் மூச்சுப்பட்டழியும் வரமளிப்பாய்.
துயிலுமில்லக் கதவுகளே! திறந்தேயிருப்பீர்
வெற்றிபெற்றுவந்து கல்லறைக்கு மாலையிடுவோம்.
இல்லையேல்
வித்துடலாய் வந்து உனக்குள்ளே காலைவிடுவோம்.
<b>புதுவை இரத்தினதுரை</b>
<img src='http://img107.exs.cx/img107/3215/hari1.gif' border='0' alt='user posted image'>
முந்தைய கவிதைகள்
தாயகத்தை காதல் செய்
குந்த ஒரு குடிநிலம்
பூமிப்பந்தின் நெற்றியில் பூநகரி சுவரொட்டியானது!
கரும்புலி அடிமுடி அறிய முடியாத அற்புதம்.
வெள்ளைக் கொடி கட்டிய வீட்டிலிருப்பது விடுதலை அல்ல
பெண்மை இங்கு புலியானதால்
கட்டபொம்மன் காலத்தில் மட்டுமல்ல
சாவரினும் தளரோம் யார்வரினும் பணியோம்
கேட்கிறதா மணி?
|
|
|
| விண்தொட நிமிரும் வீரன்.....! புதுவை இரத்தினதுரை (26/11/2004) |
|
Posted by: thiru - 11-26-2004, 09:51 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (3)
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'>விண்தொட நிமிரும் வீரன் இன்னும் பல்லாண்டு வாழ்க</span>
<b>-புதுவை இரத்தினதுரை-</b>
அம்பதாய் அகவை காணும்
அய்யனே நின்தன் வாழ்வில்
மங்கலம் பொலியும் வாகை
மாலைகள் குவியும் வெற்றிச்
சங்கதின் பாடல் கேட்டுச்
சரித்திரம் எமக்கென் றாகும்
கங்குலிங் கிலையென்றாகக்
கதிரொளி நிலமீ தாகும்.
கோபுர மணிகள் ஆர்க்க
குலமகள் குரவை சேர்க்க
தாமிர விளக்கு தீபம்
தாங்கிட மண்ணில் வந்து
நாகர அழகுத் தேராய்
நாயகன் பிறந்த நாளில்
மாபுரம் வல்வை முத்து
மாரியே மழையென் றானான்.
துயன சுடரும் தீபம்
துணிவுடை நடையின் வேகம்
காயன பழுக்கும் பார்வை
கழுத்தினில் வெற்றிமாலை
தேய்வன அழியாச் செம்மைச்
செல்வனின் பிறந்த நாளில்
தாயென வாழ்த்துப் பாடத்
தமிழவள் வந்தாள் வாசல்
புவென மலர்ந்த பிள்ளை
புயலென நடந்த தென்றல்
பாவென இனிக்கும் செம்மை
பகலெனப்பரவும் வெம்மை
கூவெனத்மிழர் வாயைக்
கூவிடச்செய்த காலம்
தீவெனச் சிதறிப் போனோர்
சேர்ந்திட இணைத்த பாலம்.
அஞ்சிடல் அழியாத் தேனீ
அரசியல் படியா ஞானி
வெஞ்சமர் களங்கள் யாவும்
வென்றிடப்பெருகும் ஊற்று
வஞ்சகம் எழுந்து வந்து
வாசலில் நின்ற நாளில்
பஞ்சென அதனை ஊதிப்
பறந்திடச் செய்த காற்று
பன்னெடுங் காலம் வாழும்
பாக்கியம் நினக்குண் டாகும்
விண்தொட நிமிரும் வீர
வெற்றிகள் பலவுண் டாகும்
கண்படா துன்னைச் சுற்றிக்
காப்பவர் துணையுண் டாகும்
மண்ணிடை நெடுநாள் வாழும்
மனிதனாய் இருப்பாய் வாழி
<b>நன்றி:</b> (ஈழநாதத்தின்) வெள்ளிநாதம் 26-02/12/2004.
<b>கணனித் தட்டச்சு:</b> திரு (ரஷ்யா)
|
|
|
| "என் தலைவன்" |
|
Posted by: Nellaiyan - 11-26-2004, 09:35 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (15)
|
 |
பழம்பெருமை பேசியும், குட்டக் குட்ட குனிந்து, குறுகி, ஈனமாய் அழிந்து வாழ்ந்த எம்மினத்தின் விடிவெள்ளியாம் என் தலைவனுக்கு இன்று 50வது அகவை. எமக்கெல்லாம் முகமாகி முகவரியாகி முதுகெலும்பானவனே, உன் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்ற பெருமையைத் தந்தாய். உனை வாழ்த்துவதால் தமிழே பெருமையடைந்தது.
ஆயிரம்பேர் தலைவர்களென கூறி எம்முன்னே வந்தார்கள். பலர் எம்மை விற்றார்கள், சிலர் விற்க முற்பட்டார்கள், சிலர் நாற்காலிகளுடன் போய்விட்டார்கள். ஓரிருவர் குரல்கல் ஓங்கி ஒலிக்க முற்பட, சிங்கள இரும்புக்கரங்கள் கொடூரமாக அவற்றை அடக்கியது. இக்காலத்திலேயே ஒரு "இயேசுவோ", "புத்தனோ", "நபிகள்" போல எம்மக்களை மீட்க எம்மண்ணில் அவதாரம் எடுத்தாய். சிறுவயதிலேயே ஆக்கிரமிப்புக்கெதிராக தனிமனிதனாய் ஒற்றைத் துப்பாக்கியுடன் தொடங்கிய எம் தர்ம யுத்தம் அழிவுகள், அழிப்புக்கள், துன்பங்கள், சோகங்கள், துரோகங்கள், அன்னிய படையெடுப்புக்கள் எல்லாமே கண்டு விருட்சமாய் உருவெடுக்கச் செய்தாய். பாரதக் கண்ணனாய் எம் சத்திய யுத்தத்தில் எல்லாவற்றையும் நீயே ஏற்றாய்.
என் தலைவனின் போராட்ட வாழ்வில் நிகழ்ந்த, நானறிந்த சம்பவங்களை இக்களத்தினூடு பகிர விரும்புகின்றேன்.
|
|
|
| வியாசனின் உலைக்களம் (விடுதலைப்புலிகள் புரட்டாதி-ஐப்பசி 2004) |
|
Posted by: thiru - 11-26-2004, 08:49 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (4)
|
 |
[size=18]கடற்கரை மணலிற் கட்டிய வீட்டுக்கு வர்ணம் பூசாதே.
<b>-வியாசனின் உலைக்களம்-</b>
கனவிற் கரைந்து ஆடைகலைவதும்
அறியாமல்
வாய்நீர் வடித்ததும் போதும்.
குடை,கொடி,ஆலவட்டப் பவனியில்
தோளில் உத்தரியச் சால்வை துலங்க
உலாப்போனதும் போதும்.
வெண்புறா நினைவில் மனமும்
வெள்ளைக்காரர் வருகையில் சனமும்
முட்டி மூச்சுத் திணறுகிறது.
ஏ 9 தெருவில் சமாதானப் பதாகை தாங்கிய
உறவுப்பால ஊர்வலம் போதும்.
'சிங்களச் சகோதரருக்கு' விடுதலை பற்றி
விளக்க
நடத்திய பட்டிமன்றங்களும் போதும
புஷ்பக விமானப் பறப்பும்
கண்டவனுக்கெல்லாம் கம்பளம் விரிக்கும்
சேவகமும்
போதுமய்யா போதும்.
இந்தா வருகிறது கல்லறைத் திருநாள்
கார்த்திகைப் பெருநாள்.
கடந்த வருடங்களும்
விளக்கேற்றப்போனோம்.
குழியிலிருந்து வெளியேறிவந்து
செல்வங்கள் எம்மைஆரத்தழுவியபோது
கூனிக்குறுகியல்லவா நின்றோம்?
ஏதேதோ சொல்லிச் சமாளித்துத்
திரும்பினோம்.
இம்முறை எந்த முகத்துடன் போவது?
சமாதானத்துக்காகக் காத்திருக்கிறோமெனெச்
சொல்வது
சாத்தியமாகுமா?
காறியல்லவா துப்புவர் எம் முகத்தில்?
'எங்களை விளம்பரப்பொருளாக்கி
விடுதலையை விற்பனையா செய்கிறீர்'
என
எழுந்து கேட்பார்களே
என்ன பதிலுண்டு எங்களிடம்?
அற்புதங்களை ஆழக்குழியிட்டு மூடிவிட்டு
கற்பனைக்கு மாலையிட்டுக் களிக்கிறோம்.
இம்முறை துயிலுமில்ல வாசல்
திறக்கும்போதே
என்ன கொண்டுவந்தீர் எனக் கேட்டால்
பதிலேதும் உண்டா எம்மிடம்?
சம்பூ கொணர்ந்தோம்,
சவர்க்காரம் கொணர்ந்தோம்,
சீமெந்தும்,முறுக்குக் கம்பியும்,
செல்போனும் கொணர்ந்தோம் என்று
சொல்லமுடியுமா அவர்களுக்கு?
எந்த முகத்தோடு இம்முறை துயிலுமில்லம்
செல்வது?
இராசதந்திரங்கள் இருப்பவர்களுக்கேயன்றி
இறந்துபோனவர்களுக்கல்ல.
தாகம் சுமந்து
கனவுகளுக்கு வடிவம் வரைந்துவிட்டு
கல்லறைக்குள்ளே கிடப்பவர் முன்னே
பொய்சொல்லுவதே பெரிய துரோகம்.
வேண்டாமய்யா இந்த வதை.
முகிலுக்குள்ளே
முகங்கொண்டுலவியது போதும்
இனியாயினும் நிலத்தில் இறங்குவோம்.
காலநீட்சி வேண்டுமெனில்
காத்திருக்கலாம்.
அது குற்றமும் அல்ல.
மாயக்கண்ணாடி முன்னே
மயங்குவதுதான்
மன்னிக்க முடியாதது.
கடற்கரை மணலில் கட்டிய வீட்டுக்கு
வர்ணம் பூசும் கிறுக்கரானோமா நாம்?
காற்றிலேற்றும் பட்டத்தின் வாலில்
கருங்கல் கட்டும் அறிவிலியரானோமா
நாம்?
உலகம் வலியனின் கையிற்தான்
சுழல்கிறது.
கேட்க நாதியற்றுக் கிடக்கிறது நீதி.
இடையில் வந்த அதலபாதாளம் நிரவி
விடுதலைத்தேர் நகர்த்த வேண்டும்.
காய்நகர்த்தியபடி எம் தலைமகன்.
களங்களை உற்றுப்பார்த்தபடி எங்கள்
தளபதிகள்.
இடைவெளிக்குள் நுழைந்து
வெளியேறும் வித்தையை
தெரிந்து வைத்திருப்பவனே
சேனாதிபதி.
புயலெதுவும் புடுங்கமுடியாத
புளியமரமல்லவா?
சிரித்தபடி தேதி கணக்கிட்டிருக்கும்.
முதுகில் விடுதலைச் சிறகு.
முளைத்தவர்களுக்கு
பலவழிகள் கிடையாது.
ஒற்றைவழியே அவர்களுக்கு உண்டு
அது ஆகாயம்.
சுகன வெளியெங்கும் கைகளை
விரித்தபடி பறப்பர்.
ஈழத்தமிழன் விடுதலைக் குருவியடா.
வாயிற் சுதந்திரப் பாடலைப்
பாடியபடிதான்
புலம்பெயர்ந்த தேசத்திலும் இருப்பான்.
மாயக் கனவுகளிலிருந்து கொஞ்சம்
விடுபடுவானாயின்
இவனே மலையென்றாவான்
எவரும் எடுத்தசைக்க முடியாதபடி.
எம்மண்ணில் கார்த்திகை மாதம்
வருவது
கண்ணீர்விட அல்ல.
பூவொன்று பிடுங்கி வைப்பது
நாங்கள் உயிர் பிடுங்கியும்
வைப்போமென
உறுதி சொல்ல.
நெய்விளக்கேற்றுவது
உள்ளே நெருப்பேற்றி வைத்துள்ளோம்
என
உறவுகளுக்குக் காட்ட.
கார்த்திகை 26
புதிய உயிரொன்று தலைமையேற்கப்
பிறந்தநாள்.
கார்த்திகை 27
அதிக விலைகொடுக்க
வேண்டுமெனச் சொல்லி
அச்சாரம் கொடுத்த நாள்.
இரு நாட்களும் அருகென்றானது
தற்செயலான சம்பவங்களல்ல.
காலமளித்த தீர்ப்பு.
கடவுள் எழுதிய காப்பு.
நடந்துவந்த பாதையில் ஒரு
நாற்சந்தியில் நிற்கிறோம்.
நேர்வழி நடந்தால் விடுதலை.
மறுவழி போனால் சலுகைகள்.
இன்னொருவழியிலும் போகலாம்
அதில் உலகநாடுகள் வலைவிரித்து
வைத்துள்ளன.
உயிருறுஞ்சிவிட்டு
இறுதியில் தகனம் செய்யும்.
நாலாவது வழியிலும் போகமுடியும்.
நீந்திக் கடக்கக்கூடிய துரத்திற்தான்
மறுமுனை.
சாம்பார்,ரசம்,மசாலாப்பொடியுடன்
சாப்பாடும் கிட்டும்.
தர்மப் பொறிபோலக்காட்டி
வளைத்துப்பிடித்து
பின்னர் சாக்காட்டும்.
என்ன செய்யும் உத்தேசம் உனக்கு?
கார்த்திகை 27க்கு முன்னர் ஒரு
முடிவெடுத்தபடி
கல்லறைக்குப் போ.
சும்மா விளக்கேற்றி வரலாம் என்று
போனால்
'குழிப்பிள்ளை'களின் கேள்விக்குப்
பதிலின்றித் தவிப்பாய்.
'எங்கள் சாவுக்கு அர்த்தமுண்டா?'
எங்கள் கனவுக்கு வடிவம் வருமா?
எங்கள் காத்திருப்புக்குப் பதில்
கிட்டுமா?
துயிலுமில்லம் அதிரக்கேட்கும்
பிள்ளைகளின் பேரொலி.
நெஞ்சு பிளக்க,
மூச்சுத்திணற,
விழிசோர,மொழிசோர நிற்பாய்.
கார்த்திகை 27க்கு முன்னர் முடிவெடு
போர்த்தொழில் வீரரான வடிவெடு.
<b>நன்றி:</b> விடுதலைப்புலிகள் புரட்டாதி-ஐப்பசி 2004
<b>கணனித் தட்டச்சு:</b> திரு (ரஷ்யா)
|
|
|
| கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்களது உரை! |
|
Posted by: thiru - 11-26-2004, 08:43 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
[size=18]<b>தமிழீழத் தேசியத் தலைவரின் கீழ் போராளியாக செயற்படுவதையிட்டுப் பெருமை அடைகிறேன்!
[b]-கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை </b>
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் கீழ் ஒரு போராளியாக, பொறுப்பாளராக, தளபதியாக இருந்து செயற்படுவதை இட்டு நான் பெருமை அடைகிறேன். தவறான கருத்துக்களைப் பரப்பி மக்களைக் குழப்பும் உளவியல் போரை நடத்த சிங்கள அரசாங்கம் முனைகிறது. எனவே நாம் அவர்களின் உளவியல் போரை முறியடிக்க வேண்டும். எனவே மக்கள் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும் என தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற் படைத் தளபதி கேணல் சூசை அவர்கள் தெரிவித்துள்ளார்.
தங்களுக்கும் தேசியத்தலைவர் அவர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடும் மனக்கசப்பும் இருப்பதாக சில பத்திரிகைகளும் ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. இது சம்பந்தமாக தங்களின் கருத்தை இவ்விடத்தில் கூறிக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். என வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக நடைபெற்ற மாவீரர் நாள் சிறப்பு நிகழ்வில் கலந்து சிறப்புரையாற்றுகையில் மாவீரர்களின் பெற்றோர்களால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துப் பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை அவர்கள் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், எனக்கும் தலைவர் அவர்களுக்கும் இடையில் பிரச்சினை என்று வெளியாகிய இந்தச் செய்தியானது சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்ற ஒரு உளவியல் போர். சமாதான காலத்தில் இப்படியான உளவியல் போர்களை அடிக்கடி இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் இப்படியான உளவியல் போரை 1998 ஆம் ஆண்டு இந்திய அரசு கூட நடத்தி வந்திருந்தது. இது உங்கள் அனைவருக்கும் தெரியும். 'தலைவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு' இப்படியான கட்டுக்கதையை சிறிலங்கா அரச படைகள் மட்டும் செய்யவில்லை. இந்த நாட்டினுடைய சனாதிபதி சந்திரிகா கூட இந்தியா சென்றிருந்த போது இந்துப் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் 'சூசை சிகிச்சைக்காச் செல்லவில்லை அவர் விடுதலைப்புலிகளின் தலைவருடன் முரண்பட்டுத்தான் வெளிநாட்டுக்குப் போனவர். அங்கே புலிகளின் போராட்டத்தின் மூத்த நலன் விரும்பிகளின் வற்புறுத்தலின் காரணமாகத் தான் மீண்டும் வன்னிக்குத் திரும்பி வந்தார்' எனக் கூறியிருந்தார். ஆனால் நான் வெளிநாடு சென்றது சிகிச்சைக்காகத் தான். இது தான் உண்மை. நான் சிகிச்சைக்காகத் தான் போனேன். சிகிச்சை பெற்றேன்.இப்போதும் சிகிச்சை பெற்று வருகிறேன்.
'தலைவருக்கும் எனக்கும் இடையில் முரண்பாடு' என அரசாங்கம் உளவியல் போரை தொடங்கியதன் காரணம் எங்கள் தலைவர் தமிழீழ கடற்படையை கட்டி எழுப்புவதற்காக கிட்டத்தட்ட 300 கோடி ரூபாவை ஒதுக்கியிருக்கிறார். இந்தப் பணத்தை புலம் பெயர்ந்து வாழ்கின்ற எங்கள் மக்களிடம் கேட்டிருக்கிறார் என்ற தகவல் ஒருவழியாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு சென்றடைய அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் இந்தக் கதையை சிறிலங்கா அரசாங்கம் பரப்பியது. உண்மையில் தலைவருடன் சமகாலத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதனால் தலைவரைப் பற்றி முழுமையாகத் தெரிவதற்கு வாய்ப்பில்லை. உண்மையில் தலைவருக்குக் கீழ் இருந்து ஒரு போராளியாக, பொறுப்பாளராக, தளபதியாக செயற்படுவதை இட்டு நான் பெருமை அடைகிறேன். எங்களுடைய தலைவர் தமிழ் மக்களுக்கான விடுதலைப் பாதையை சீரான பாதையில் நடத்திச் செல்கின்ற ஒரு அச்சாணியாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பவர். நான் அவரிடத்தில் மதிப்பையையும், மரியாதையையும் வைத்துக்கொண்டுதான் இருக்கிறேன். இந்த நிலையில் சிறிலங்கா அரசாங்கம் எம்மீது ஒரு பெரும் உளவியல் போரை நடத்துகிறது. இதன் மூலம் மக்களிடத்தில் ஒரு பெரும் குழப்பத்தை உண்டு பண்ணிவிடலாம் என நினைக்கிறது. இன்று இவர்கள் தமது கோர முகத்தை வல்வெட்டித்துறையிலும் நிகழ்த்தி இருக்கிறது. எமது விடுதலைப் போராட்டத்தில் பல கட்டங்களையும் போராடித் தாண்டி வந்து இன்று இந்த நிலையை நான் அடைவதற்கு எங்கள் தலைவர் அவர்களின் வளர்ப்புத் தான் காரணம். 1985 ஆம் ஆண்டு வெற்றிலைக் கேணிக் கடலில் நாம் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது கடற்படை எம்மைத் தாக்கியது. நாங்கள் பின் வாங்கினோம். பத்து ஆண்டுகளின் பின்னர் தலைவரது நேர்த்தியான வழிகாட்டலில் அதே கடற்படையை நாம் விரட்டி அடிக்கிறோம்.
இன்று கருணா என்ற நச்சு விதை எங்கள் போராட்டத்தில் போட்டுவிட்டது. இதனை அரசு துக்கி வைத்து ஆடிக் கொண்டிருக்கிறது. இதனை எல்லாம் துக்கி எறியுங்கள். இவர்களின் பேச்சை ஏற்றுக் கொண்டால் தான் அவர்கள் உளவியல் போரில் வெற்றி அடைவார்கள். நீங்கள் அதனைக் கருத்தில் எடுக்காது வீட்டீர்கள் என்றால் உளவியல் போரிலும் அவர்கள் தோற்கடிக்கப்பட்டு விடுவார்கள். அன்பான மக்களே, நாங்கள் அவர்களை நிழல் யுத்தத்தில் எப்படித் தோற்கடித்தோம். அதே போல உளவியல் யுத்தத்திலும் நாங்கள் தோற்கடிப்போம். அதற்காக நீங்கள் அவர்களின் கருத்துக்களை நம்பாதீர்கள். இது தான் இதற்கான ஒரேவழி. நாங்கள் ஒரு மரபுவழி இராணுவம். ஒரு இராணுவத்தின் தளபதிகள் எங்கேயும் எப்போதும் மாற்றப்படலாம். மரபுவழி இராணுவமாக நாங்கள் பரிணாமம் பெற்றது தான் இதன் காரணம். உங்கள் பிள்ளைகள் எம்மை மரபு வழிப்படையாக உயர்த்தி இருக்கிறார்கள். இந்தக் கட்டமைப்பில் இத்தகைய மாற்றங்கள் நிச்சயம் நடைபெறும். இவை குழப்பத்திற்குரிய காரணங்கள் அல்ல. எனவே நீங்கள் குழம்ப வேண்டாம். ஒன்றிணைந்து அவர்களின் உளவியல் போரையும் முறியடிப்போம் எனவும், அவர் மேலும் தெரிவித்தார்.
<b>நன்றி:</b> ஈழநாதம் 26-11-2004
<b>கணனித் தட்டச்சு:</b> திரு (ரஷ்யா)
|
|
|
|