![]() |
|
விண்தொட நிமிரும் வீரன்.....! புதுவை இரத்தினதுரை (26/11/2004) - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: விண்தொட நிமிரும் வீரன்.....! புதுவை இரத்தினதுரை (26/11/2004) (/showthread.php?tid=6332) |
விண்தொட நிமிரும் வீரன்.....! புதுவை இரத்தினதுரை (26/11/2004) - thiru - 11-26-2004 <span style='font-size:25pt;line-height:100%'>விண்தொட நிமிரும் வீரன் இன்னும் பல்லாண்டு வாழ்க</span> <b>-புதுவை இரத்தினதுரை-</b> அம்பதாய் அகவை காணும் அய்யனே நின்தன் வாழ்வில் மங்கலம் பொலியும் வாகை மாலைகள் குவியும் வெற்றிச் சங்கதின் பாடல் கேட்டுச் சரித்திரம் எமக்கென் றாகும் கங்குலிங் கிலையென்றாகக் கதிரொளி நிலமீ தாகும். கோபுர மணிகள் ஆர்க்க குலமகள் குரவை சேர்க்க தாமிர விளக்கு தீபம் தாங்கிட மண்ணில் வந்து நாகர அழகுத் தேராய் நாயகன் பிறந்த நாளில் மாபுரம் வல்வை முத்து மாரியே மழையென் றானான். துயன சுடரும் தீபம் துணிவுடை நடையின் வேகம் காயன பழுக்கும் பார்வை கழுத்தினில் வெற்றிமாலை தேய்வன அழியாச் செம்மைச் செல்வனின் பிறந்த நாளில் தாயென வாழ்த்துப் பாடத் தமிழவள் வந்தாள் வாசல் புவென மலர்ந்த பிள்ளை புயலென நடந்த தென்றல் பாவென இனிக்கும் செம்மை பகலெனப்பரவும் வெம்மை கூவெனத்மிழர் வாயைக் கூவிடச்செய்த காலம் தீவெனச் சிதறிப் போனோர் சேர்ந்திட இணைத்த பாலம். அஞ்சிடல் அழியாத் தேனீ அரசியல் படியா ஞானி வெஞ்சமர் களங்கள் யாவும் வென்றிடப்பெருகும் ஊற்று வஞ்சகம் எழுந்து வந்து வாசலில் நின்ற நாளில் பஞ்சென அதனை ஊதிப் பறந்திடச் செய்த காற்று பன்னெடுங் காலம் வாழும் பாக்கியம் நினக்குண் டாகும் விண்தொட நிமிரும் வீர வெற்றிகள் பலவுண் டாகும் கண்படா துன்னைச் சுற்றிக் காப்பவர் துணையுண் டாகும் மண்ணிடை நெடுநாள் வாழும் மனிதனாய் இருப்பாய் வாழி <b>நன்றி:</b> (ஈழநாதத்தின்) வெள்ளிநாதம் 26-02/12/2004. <b>கணனித் தட்டச்சு:</b> திரு (ரஷ்யா) - tamilini - 11-26-2004 தலைவருக்கு வாழ்த்துச்சொல்லும் புதுவையின் கவி இணைப்பிற்கு நன்றிகள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 11-26-2004 புதுவை அவர்களின் கவியை பிரசுரித்து வாழ்த்து சொன்ன திருவுக்கு நன்றிகள். - hari - 11-27-2004 தலைவருக்கு வாழ்த்துச்சொல்லும் புதுவையின் கவி இணைப்பிற்கு நன்றிகள் |