Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 342 online users.
» 0 Member(s) | 339 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,317
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,641
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,069
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,497
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  சனாதிபதியும் பொம்மலாட்டமும்
Posted by: narathar - 11-20-2005, 12:06 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (8)

திரு.வேலுப்பிள்ளை பிரபகாரனால் வழங்கப் பட்ட இலங்கை சனாதிபதியென்னும் பதவியில் அமர இருக்கும் மகிந்தர் படப் போகும் பாடு பற்றி ஒரு அலசு அலசுவோம்.

இன்றய பதவியேற்பு நிகழ்வில் என்ன சொல்லி இருகிறார் மகிந்தர்,

இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக தனது அரசாங்கம், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும்.

பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு தாங்கள் தயாரென விடுதலைப் புலிகள் அறிவித்ததும் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.

சமாதான நடவடிக்கைகளில் பங்கேற்க வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும். அத்துடன் யுத்த நிறுத்தத்தை மீளாய்வு செய்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. அதற்கு தொடர்புடையவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்.

கொலை, கடத்தல், ஆட்சேர்ப்பு இவற்றைத் தடுக்கும் வகையில் யுத்தநிறுத்த உடன்படிக்கை மீளாய்வு செய்யப்பட வேண்டும். ஒருவருடத்திற்கு முன்னர் ஏற்பட்ட பேரழிவான ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை மீண்டும் கட்டியெழுப்பப்படும். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் அமைப்பு ஒன்று உருவாக்கப்படும்.

அதாகப் பட்டது இதுவரை காலமும் நடந்த,செய்து கொள்ளப் பட்ட ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்படும் என்றும் , நோர்வே வெளியேற்றப் பட்டு இந்தியா உள் நுளைக்கப் படும் என்பதுவே இந்த அறிவிப்பின் சாரம்.இதே நேரத்தில் புலிகள் ரணிலைத் தோற்கடிக்க வைத்ததன் மூலம் நோர்வையையும் அதன் பின் உள்ள அமெரிக்கவையும் சமாதான நடவடிக்கைகளில் இருந்து வெளியேற்றியமை ஆனது அமெரிக்க அரசை சினங்கொள்ள வைத்துள்ளது.இதனயே ராசித சேனாரட்வை ,'பிரபாகரனைப் புரிந்து கொள்ள முடியவில்லை' என்று கூற வைத்துள்ளது.

மேற் குறிப்பிட்ட கூற்றானது பிரபாகரனின் காய் நகர்த்தல்களை புரிந்தவர்களுக்கு இலகுவாக விளங்கக் கூடிய ஒன்று.மேன்மைதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு சாதகமான புற நிலைகளை அரசியல் ரீதியாக சிறீலங்காவில் உருவாக்கி விட்டுள்ளதை இவர்கள் இன்னும் விளங்கிக் கொள்ள முடியாதது, இவர்கள் சிக்கி இருக்கும் பொவுத்த இனவாத சாக்கடை ஆனது இவர்களின் கண்களைக் கட்டிப் போட்டிருப்பதனால் ஆகும்.

ஒரு மதி நுட்பமான தளபதி தனது எதிராளிகளைக் கொண்டே தனது இலக்குகளை அடைவதற்கான புற,அக நிலைகளை உருவாக்கி விடுகிறான் என்பது கீழ் உள்ள பிம்ப உருவாக்கம் கட்டுரையை வாசித்தால் இலகுவில் புரியும்.

வரலாற்றை உருவாக்குபவர்கள் வரலாற்று நாயகர்கள்,மற்றெல்லோரும் அதில் சிக்குண்டு அள்ளுப் படும் பொம்மைகள், அனைத்து அதிகாரமும் உடய இலங்கை சனாதிபதி மகிந்தரும் இதில் அடக்கம்.

Print this item

  தேர்தல் புறக்கணிப்பும் புலிகளின் ராஜதந்திர நகர்வும்:நர்த்தன்
Posted by: வினித் - 11-20-2005, 11:40 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

தேர்தல் புறக்கணிப்பும் புலிகளின் ராஜதந்திர நகர்வும்

* சர்வதேச மற்றும் உள்நாட்டு வலைப்பின்னலை அறுத்தெறிந்து தமிழர் தரப்பு

நர்த்தன்

ஐந்தாவது ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்துவிட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மகிந்த ராஜபக்‌ஷ ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை விட 1,86,327 வாக்குகளை மாத்திரம் அதிகப்படியாகப் பெற்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுவிட்டார்.

இத் தேர்தல் வரலாற்றுத் திருப்பு முனையான ஒரு கால கட்டத்தில் இலங்கையின் இரு தேசிய இனங்களின் துருவமயப்பட்ட நிலையை மீண்டும் கோடிட்டுக் காட்டியுள்ளது.

இத்தேர்தலை புறக்கணித்த தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் சிங்கள சமூகத்திடம் அவர்களின் ஜனாதிபதியை அவர்களே தெரிவு செய்யும் பொறுப்பைத் தள்ளிவிட்டதுடன் தாம் தனியான ஒரு தேசம் என்ற நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை அழுத்தி உரைத்துள்ளனர். நவம்பர் 17 அன்று படலைகளை தாண்டாமல் இருந்து அவர்கள் கூறிய செய்தி கடல்களைத் தாண்டி உலகெங்கும் ஒலித்துள்ளது.

இதேவேளை, இத்தேர்தலை தமிழர்கள் புறக்கணித்தது பிழை என்று சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

புலிகளுடன் பேசி இனப்பிரச்சினையைத் தீர்ப்பேன் என்று கூறிய ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து, இனவாதக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ள மகிந்த ராஜபக்‌ஷவை தோற்கடித்திருக்க வேண்டும் என்பதே அவர்களது நிலைப்பாடாகும்.

மேலெழுந்த வாரியாகப் பார்ப்பின் சரியானது போன்று தென்படும் அந்த நிலைப்பாடு உண்மையில் தற்பொழுது இலங்கைத் தீவில் காணப்படும் சூழலின் அரசியல், இராணுவ மற்றும் இராஜதந்திர சிக்கல்களின் பரிணாமங்களை முழுமையாக ஆராயாமல் பிரச்சினையை மிக மிக எளிமைப்படுத்தி அது கறுப்பு; இது வெள்ளை; எனவே இது சரி என்று நோக்கும் ஒன்றாகவே காணப்படுகின்றது.

மகிந்த ராஜபக்‌ஷவின் அணி இனவாத அணி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் மகிந்த ராஜபக்‌ஷவை விட ரணில் பரவாயில்லை, எனவே அவரை ஆதரிப்போம் என்னும் போக்கு அபாயகரமானதும் ஆழமறியாமற் காலைவிடுவதுமாகும்.

ரணிலின் நோக்கம் தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகளான தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றின் அடிப்படையிலான தீர்வைக் காண்பதல்ல. அரைகுறைத் தீர்வொன்றிற்கு தமிழர்களை இணங்க வைப்பது அல்லது அவர்களை தான் விரித்த சர்வதேச வலைப்பின்னலில் சிக்க வைப்பது என்பதே ரணிலின் திட்டமாகும். அத்துடன் தமிழர் தரப்பிற்கு எதிரான உள்நாட்டு வலைப்பின்னலொன்றையும் ஏற்படுத்துவதற்கு அவர் சந்திரிகாவுடன் இணைந்து திட்டம் தீட்டத் தொடங்கியிருந்தார்.

அத்திட்டத்தின் படி ரணில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் சந்திரிகா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தேசிய அரசாங்கம் என்ற போர்வையிலோ அல்லது வேறு ஏதாவது வடிவத்திலோ இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான கூட்டொன்று ஏற்படுத்தப்படும். அது நல்ல விடயம் தானே என்று சில அரசியல் நோக்கர்கள் கூறக்கூடும். ஆனால் அதில் தமிழர் உரிமைப் போராட்டத்தை அழிப்பதற்கான பெரும் சதி மறைந்துள்ளது.

இரு பிரதான கட்சிகளின் ஒற்றுமையின்மையால் தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை என்பது காலம் காலமாகச் சொல்லப்பட்டு வரும் ஒரு வாய்ப்பாடாகும். ஆனால் உண்மையில் இரண்டு பிரதான கட்சிகளிற்கிடையிலான முரண்பாட்டினாலேயே தமிழர் போராட்டம் மிக வெற்றிகரமான தொன்றாக வளர்ச்சியடைந்துள்ளது. அத்துடன் அம்முரண்பாடே தமிழர் தரப்பு நியாயப்பாட்டை வெளி உலகிற்கு அம்பலப்படுத்துவதற்கு பெரிதும் உறுதுணையாக அமைந்துள்ளது. அவ்வாறான முரண்பாடிருந்திருக்காவிடின் அவ்விரு இனவாதக் கட்சிகளும் தமிழரை கிராம சபைகளுக்குரிய அதிகாரங்களுடன் முடக்கிச் சுருட்டியிருக்கும்.

தமிழ் மக்களின் பிரச்சினையை நியாய பூர்வமாகத் தீர்க்கவிரும்பாத இரு இனவாத கட்சிகளும் ஒன்றிணைவது விடுதலைப் போராட்டத்திற்கு பேரிடரை ஏற்படுத்துவதற்கு மட்டுமே வழிவகுக்கும்.

தமிழரின் நியாயமான உரிமையை மறுக்கும் கபடத்தனத்துடன் சர்வதேச வலைப்பின்னலை பின்ன முயன்ற ரணில் விக்கிரமசிங்கவும் உலக ஒப்புக்காக நீலனின் துணையுடன் தீர்வுப் பொதியென்ற சதிப் பொதியை சுற்றிக்கட்டி சமாதானத்திற்கான யுத்தம் புரிந்த சந்திரிகாவும் இணையும் உள்நாட்டு வலைப் பின்னல் தமிழர்களுக்கு தரக்கூடியது என்ன? சர்வதேச வலைப்பின்னலை வலிமைப்படுத்துவதற்காக தமிழர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு தீர்வை காட்சிப் படுத்திவிட்டு தமிழ் மக்கள் மீது பெரும் அவல வாழ்வைக் கட்டவிழ்த்துவிடுவதே அதன் விளைவாக இருக்கும்.

<b>இதை நன்குணர்ந்த விடுதலைப் புலிகள் தென்னிலங்கை கூட்டணி அரசியற் சமன்பாடுகளை துல்லியமாகக் கணக்கிட்டு உலக மற்றும் சிங்கள அரசியல் சமூகம் சிறிதும் எதிர்பார்த்திராத அபாரமான ராஜதந்திர நகர்வொன்றை மேற்கொண்டனர். அந்நகர்வு தேர்தல் புறக்கணிப்பை உருவாக்கி தமிழர் தனியான ஒரு தேசம் என்பதை மீண்டும் வலியுறுத்தியதுடன் உள்நாட்டு மற்றும் சர்வதேச வலைப் பின்னல்களை அறுத்தெறிந்துள்ளது</b>.

மகிந்தவினால் இவ்வாறான வலைப்பின்னல்களை மேற்கொள்ள முடியாதா என்ற கேள்வி எழலாம். சர்வதேச வலைப்பின்னலைப் பொறுத்தவரை அதனை உருவாக்க நியாயமா தீர்வை தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை வழங்குவதற்கு தயாராக இருப்பது போன்று காட்ட வேண்டும். அதற்கு சமஷ்டி, உள்ளக சுய நிர்ணய உரிமைபோன்ற எதையாவது தேர்ச்சிமிக்க நடிப்புத் திறமையுடன் அடிக்கடி உச்சரிக்க வேண்டும். அவ்வாறானால் தான் சர்வதேச சமூகம் சர்வதேச வலைப்பின்னலொன்றின் ஊடாக புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க முன்வரும். ஆனால், ஒற்றையாட்சி என்ற கழற்ற முடியாத கால் விலங்கை பூட்டியுள்ள மகிந்த ராஜபக்ஷ சர்வதேச வலைப்பின்னலொன்றை உருவாக்க முற்பட்டால் முதலில் அவர் பூட்டியுள்ள ஒற்றையாட்சி விலங்கை கழற்றுமாறு அவரே அழுத்தத்திற்கு உள்ளாக வேண்டிய சூழ்நிலை உருவாகும். அது உள்நாட்டில் அவரிற்கு அரசியற் தற்கொலைக்கு ஒப்பானதாகும். தந்திரோபாய ரீதியில் ஜே.வி.பி. ஒற்றையாட்சியைக் கைவிட முன்வந்தாலும், கூட அக்கட்சியின் வாக்கு வாங்கியை குறிவைத்துள்ள ஜாதிக ஹெல உறுமய அதனை அரசியல் மயப்படுத்த முற்படும் என்பதனால் ஜே.வி.பி.யால் அவ்வாறு செய்ய இயலாது போகும். எனவே, தமக்குத்தாமே பொறிக்குள் மாட்டிக் கொண்டுள்ள இக் கூட்டணியால். சர்வதேச வலைப்பின்னலொன்றை இலகுவில் ஏற்படுத்த முடியாது. அத்துடன் இவர்களது பொருளாதாரக் கொள்கை அத்தகைய வலைப்பின்னலை உருவாக்குவதற்கான விலையாக சர்வதேச சக்திகளால் கோரப்படலாம். அதுவும் இவர்களால் விட்டுக் கொடுக்கப்பட முடியாததாகும். அவ்வாறு விட்டுக்கொடுத்தால் இவர்களது வாக்கு வங்கி தகர்ந்து போகும்.

இவற்றினூடாகப் பார்க்கையில் விடுதலைப் புலிகள் நியாயமான தீர்வைத் தரமுடியாத இருவேட்பாளர்களில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்குரிய சாதகமான சூழலைக் கொண்ட வேட்பாளரை தமது நுணுக்கமான ராஜ தந்திரச் செயற்பாட்டின் மூலம் வெற்றி பெற வைத்துள்ளனர் என்பது தெளிவாகின்றது.

மேலும், இத்தேர்தல் புறக்கணிப்புப்பற்றி விமர்சித்துக் கூறப்படும் இன்னொரு கருத்தைப் பார்ப்போம்.

தழிழர் தமது வாக்கு பலத்தினைக் காட்டாமல் விட்டது எதிர்கால தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் அவர்கள் கணக்கில் எடுக்கப்படாமல் விடப்படக் கூடிய அபாயத்தை ஏற்படுத்தும் என்பதே அதுவாகும். இக்கருத்து இலங்கைத் தீவில் இரு தேசங்கள் என்ற அடிப்படையில் எழாது ஒரே தேசம் என்ற அடிப்படையில் எழுந்துள்ள ஒன்றாகும். அந்தத் தவறான அடிப்படையில் பார்த்தால் கூட அது மிக முட்டாள் தனமான வாதமாகும். உண்மையில் இத்தேர்தல் புறக்கணிப்பின் மூலம் தமிழர் வாக்களித்திருந்தால் கூட ஏற்பட்டிருக்க முடியாத மிகப்பெரிய அளவில் அவர்களது வாக்குப் பலம் உணர்த்தப்பட்டுள்ளது.

இப்புறக்கணிப்பு எதிர்கால தேர்தல்களில் தமிழர் குறித்து அரசியல் வாதிகள் அதிக அக்கறை கொள்ள வேண்டிய நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

இத்தேர்தல் புறக்கணிப்பின் மூலம் வெளிவந்துள்ள மற்றுமொரு உண்மை என்ன வென்றால் வடகிழக்குத் தமிழர்களின் அரசியற் பலம் மூலமே மற்றைய சிறுபான்மை இனங்களான மலையகத் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் அரசியல் பலம் பாதுகாக்கப்படும் என்பதாகும். இத்தேர்தலில் மலையகத் தமிழர்களும் முஸ்லிம்களும் மிகப் பெருமளவிற்கு ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களித்தும் மகிந்த ராஜபக்‌ஷவின் சிங்கள இனவாதக் கூட்டணி அதை முறியடித்துள்ளமை அதைத் தெளிவு படுத்துகின்றது.

புலிகள் பல வீனமடைந்து விட்டார்கள் என்றும் தமக்குச் சலுகைகள் தரக் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெற வைக்க முயல்கின்றார்கள் என்றும் கூச்சல் எழுப்பிய இனவாத சக்திகளுக்கு தேர்தல் புறக்கணிப்பு மூலம் வலுவான செய்தியொன்றை அவர்கள் தெரிவித்துள்ளனர். நாம் பலமாக இருக்கின்றோம். எதற்கும் தயாராகவே உள்ளோம். எம்முடன் விளையாட வேண்டாம் என்பதே அதுவாகும்.

<span style='font-size:25pt;line-height:100%'>மகிந்தவை வெற்றி பெறவைத்த நகர்வொன்றை மேற்கொண்டதன் மூலம் அவரிற்கும் அவரின் இனவாதக் கூட்டணிக்கும் புலிகள் கூறாமற் கூறியுள்ளது என்ன? நீங்கள் எமக்கு ஒரு பொருட்டல்ல. நாங்கள் மிக மிகப் பலமான நிலையிலேயே இருக்கின்றோம். பிரபாகரன் பெருநெருப்பு.புலிகள் சேனை தயாராக இருக்கு. நியாயமான தீர்வைத் தரமுயலுங்கள் என்பதுவே அதுவாகும்</span>.

நவம்பர் 17 அன்று சிங்கள மக்களிடமிருந்து வாக்குகளைப் பெறுவதற்கு மகிந்தவின் சிந்தனை உதவியிருக்கலாம். ஆனால் இத்தீவின் தலை எழுத்தை தீர்மானிக்கும் சிந்தனைக்கு அவரும் கூட நவம்பர் 27 வரை பொறுத்திருக்க வேண்டும்

http://www.thinakural.com/New%20web%20site...er/20/index.htm

Print this item

  தேர்தலும் தமிழீழ அங்கீகாரமும்
Posted by: இவோன் - 11-20-2005, 10:28 AM - Forum: தமிழீழம் - Replies (8)

<b>இந்தக் கட்டுரையை அமெரிக்கா நியூஜெர்சியில் வசிக்கும் தமிழ் சசி எழுதியிருக்கிறார். இவர் தமிழகத்தை சேர்ந்த அமெரிக்காவில் பணிபுரிவர். ஈழப்பிரச்சனை தொடர்பில் தமிழக அரசியல் தலைவர்களின் பார்வைகளையே பார்த்து வந்த நடக்கு தமிழக சாதாரண மக்களின் பிரதிநிதியாக இவர் எழுதியுள்ள கட்டுரை ஆச்சரியம் தருகிறது. நீங்களும் படித்து பாருங்கள்.</b>

<b>தேர்தலும், தமிழ் ஈழ அங்கீகாரமும்</b>

விடுதலைப் புலிகளின் புண்ணியத்தால் சிங்கள தேசியவாதத்தை தேர்தலில் முன்னிறுத்திய மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றிருக்கிறார். இந்தச் சொற்றொடரை எழுதும் பொழுதே எனக்கு ஆச்சரியம் தான். விடுதலைப் புலிகள் ஏன் ஒரு சிங்கள இனவாத தலைவரை வெற்றி பெற வைக்க நினைக்கிறார்கள் ?

மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றியை அறிவித்த பல செய்தி நிறுவனங்களின் தலைப்பு செய்திகளைப் பார்த்தால் விடுதலைப் புலிகள் ஏன் இதனைச் செய்தார்கள் என்பது தெளிவாகும். Hardliner wins Sri Lanka election என்று BBC கூறுகிறது. CNN, சமாதானத்தை முன்னிறுத்தக் கூடிய ரனில் தோல்வி அடைந்து விட்டதாக தெரிவிக்கிறது. Economist மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வெற்றி சமாதானத்திற்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கிறது.



தற்பொழுது உலக நாடுகளின் மத்தியில் சமாதானத்திற்கு வேட்டு வைக்க கூடிய வில்லனாக மஹிந்த ராஜபக்ஷ தெரிகிறார். இதைத் தான் புலிகள் எதிர்பார்த்தனர். ஹிந்து தன் தலையங்கத்தில் கூறியிருப்பது போல சிங்கள இனவாதத்தை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்துவது தான் விடுதலைப் புலிகளின் நோக்கம். இந்த நோக்கத்தில் புலிகள் வெற்றி பெற்றிருக்கின்றனர்

இந்த தேர்தலில் இருவருக்கு வெற்றி கிடைத்து இருக்கிறது. ஒன்று சிங்கள இனவாத முழக்கத்திற்கு. மற்றொரு வெற்றி புலிகளுக்கு. தமிழர்களின் ஒட்டுமொத்த தேர்தல் புறக்கணிப்பு மூலம் தங்கள் ஆதரவு எவ்வளவு முக்கியமானது என்பதை இலங்கையின் தெற்க்கில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு உணர்த்தி இருக்கின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் நிலை பரிதாபமாகத் தான் தெரிகிறது. அவர் வெற்றி பெற்ற நேரத்தில் இலங்கையின் பங்குச்சந்தை சுமார் 7% வீழ்ச்சி அடைந்தது. இலங்கையில் வலது சாரி பொருளாதார சீர்திருத்தத்தை முன்னிறுத்தி தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர் ரனில். அவரது தோல்வி இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஒரு மிகப் பெரிய சரிவை ஏற்படுத்தும் என்று அங்கு முதலீடு செய்ய முயலும் நிறுவனங்கள் நினைக்கின்றன. அது தவிர ராஜபக்ஷவின் தீவிர இடது சாரி நிலைப்பாடு, அவர் அணி சேர்ந்துள்ள ஜே.வி.பி யின் மார்க்ஸ்ட நிலைப்பாடு போன்றவை இலங்கையின் பொருளாதாரத்தையும் அங்கு இனி வர இருக்கும் முதலீடுகளையும் குறைக்கும். ஏற்கனவே இலங்கையின் பொருளாதார நிலை தடுமாறிக் கொண்டு தான் இருக்கிறது. கோட்டா முறை நீக்கப்பட்ட பிறகு இலங்கையின் ஜவுளித் துறை சீனா, இந்தியா போன்ற நாடுகளுடன் ஜவுளி ஏற்றுமதியில் ஈடுகொடுக்க முடியாமால் திணறிக் கொண்டிருக்கிறது.

புலிகளைப் பொறுத்தவரை தமிழ் ஈழத்திற்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கான பலக் கட்ட திட்டத்தில் முதல் கட்டத்தில் வெற்றி பெற்றிருக்கின்றனர். கடந்த தேர்தல்களில் சந்திரிகா, ரனில் போன்றோர் சமாதானத்தை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெற்று விட்டு உலக நாடுகளின் மத்தியில் தாங்கள் சமானத்தை அதிகம் விரும்புவதாகவும், விடுதலைப் புலிகள் மட்டுமே சமாதானத்தை எதிர்ப்பதாகவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தனர். தென்னிலங்கையில் இருக்கும் தீவிர சிங்கள, புத்த இனவாதம் அதிகம் வெளிக்கொணரப்படவில்லை. ஜே.வி.பி, புத்த பிக்குகள் போன்ற சில குழுக்கள் மட்டுமே சிங்கள இனவாத அமைப்புகளாக வெளிஉலகுக்கு தெரிந்தது. ஆனால் தற்பொழுது இலங்கையின் ஜனாதிபதியை சிங்கள தேசியவாத தலைவராக விடுதலைப் புலிகள் வெளிப்படுத்தியுள்ளனர். அது மட்டுமில்லாமல் இலங்கையின் தேர்தல் முடிவுகளில் தெரியும் ஒரு Polarized சமுதாயமும், இத்தகைய சமுதாயத்தில் சமாதானமோ, தங்களுக்கான உரிமையோ சரியாக கிடைக்காது என்று கூறி ஏற்கனவே அவர்கள் அமைத்து விட்ட தமிழ் ஈழத்திற்கு உலக நாடுகள் மத்தியில் அங்கீகாரம் கோருவது தான் விடுதலைப் புலிகளின் பல கட்ட திட்டங்களின் இறுதி நோக்கமாக தெரிகிறது. இதனை நோக்கியே அடுத்து வரும் நாட்கள் இருக்கும். சமாதானப் பேச்சு வார்த்தை என்பது தற்போதைய இலங்கை சூழலில் நடக்கும் என்று தோன்றவில்லை.

TamilNet இணையத்தளத்தில் இருக்கும் இரு செய்திகள் என்னை மிகவும் கவர்ந்தன.

ஒன்று, தமிழ் ஈழப் பகுதியில் நுழைந்த இலங்கையின் காவல்துறையைச் சேர்ந்த மூன்று போலீசாருக்கு "தமிழ் ஈழ நீதி மன்றம்" ஜாமீன் வழங்க மறுத்துள்ள செய்தி. இந்த வழக்கு "தமிழ் ஈழ சட்டதிட்டங்களின்" கீழ் நடைபெறுவதாக TamilNet தெரிவிக்கிறது. இது ஏதோ பாக்கிஸ்தான் ஏஜெண்டுகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கைதாகும் செய்தி போல உள்ளது. தங்களின் எல்லையை புலிகள் அதிகம் கண்காணிப்பதாக TIME இதழும் கூறுகிறது. இலங்கை ஏற்கனவே இரண்டு துண்டுகளாக உள்ளதை இது உறுதிப்படுத்துகிறது.

மற்றொரு செய்தி "தமிழ் ஈழ தேசிய கீதத்தை" இயற்றுமாறு தமிழர்களுக்கு விடுதலைப் புலிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இம்மாதம் வர இருக்கும் மாவீரர் நாளில் இந்த கீதம், தமிழ் ஈழ தேசிய கீதமாக அங்கீகரிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே தமிழ் ஈழ தேசியக் கொடி, தேசிய மலர் போன்றவற்றை புலிகள் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த செய்திகள் கடந்த காலங்களில் அதிகமாக வெளிஉலகுக்கு தெரியவில்லை. ஆனால் கடந்த சில வருடங்களாக புலிகளின் தமிழ் ஈழ தேசிய உள்கட்டமைப்பு ஊடகங்கள் மூலமாக அதிகம் பேசப்படுகிறது. இலங்கையின் தேர்தல் பற்றி எழுதியுள்ள TIME இதழ் ராஜபக்ஷ கூறும் "ஒரே நாடு" என்ற பேச்சு புலிகள் ஏற்கனவே அமைத்து விட்ட ஒரு தனி தேசத்தை மறைக்கும் நோக்கில் பேசப்படும் பேச்சாக தெரிவிக்கிறது.

அதிக அளவில் கண்காணிக்கப்படும் எல்லைகள், நீதிமன்றங்கள், சிவில் நிர்வாக மையங்கள், காவல்துறை, தேசியக் கொடி, தேசிய கீதம் போன்றவற்றின் மூலம் புலிகள் ஏற்கனவே ஒரு தனி தேசத்தை உருவாக்கி விட்டதாக TIME இதழ் தெரிவிக்கிறது

புலிகள் தற்பொழுது கோருவதெல்லாம் தமிழ் ஈழத்திற்கான உலக நாடுகளின் அங்கீகாரம் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. அந்த நோக்கத்தை நிறைவேற்றும் திட்டத்தின் முதல் படி தான் இந்த தேர்தல் புறக்கணிப்பு மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு உதவியதன் முக்கிய நோக்கம்.

தமிழ்ச்செல்வன் TIME இதழுக்கு அளித்த பேட்டியிலும் அதனை உறுதிப்படுத்துகிறார்

TIME: It's plain if you look around L.T.T.E. territory that you have, in fact, built most of the facets of a separate state. You have borders, an army, police, courts, a civil administration, a flag. I even hear you're writing a national anthem. Do you think the debate in Colombo regarding Tamil separatism is historical—that they're arguing about something that's actually already happened?

T: It is historic. Colombo is behind on their history. What the Tamil people have established has all the hallmarks of a separate state. But this is nothing new. There was a distinct Tamil nation prior to the 16Th century. There was a Tamil nation here, with its own sovereignty and a rich heritage and culture. The people lost it, and now they are taking it back. About 60-70% of our homeland is liberated and nobody can prevent this process going further. This is reality. What Colombo says about a unitary nation is imagination. If Colombo refuses to accept this reality, Colombo has to pay for it one day. And the cost will be terribly high and the damage irreparable for them.

புலிகளின் தனி தேசத்தை உலக நாடுகள் தற்பொழுது நன்கு அறிந்து வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் அதற்கு அங்கீகாரம் தருவார்களா ?
அது புலிகள் தங்களை எப்படி வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே உள்ளது.

லஷ்மன் கதிர்மாரின் படுகொலைக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் புலிகளின் இந்த நோக்கத்திற்கு தடை போடுவதாகவே அமைந்துள்ளது.

சிங்கள தேசியவாதத்தை வெளிப்படுத்தியும், சமாதானத்தை அதிகம் விரும்பும் குழுவாக தங்களை வெளிப்படுத்துவதும் தான் புலிகளுக்கு தற்பொழுது இருக்கும் சவால். அதனை நோக்கி தான் இரு குழுக்களும் நகரப் போகின்றன.

இதில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது தான் இப்பொழுது உள்ள கேள்வி

http://thamizhsasi.blogspot.com/2005/11/blog-post.html

Print this item

  Feel the Pain - அஜீவன்
Posted by: sOliyAn - 11-20-2005, 04:24 AM - Forum: கலைகள்/கலைஞர்கள் - Replies (24)

புகலிட நாடுகளில் குறிப்பிட்டு பேசப்படும் திரைப்படக் கலைஞர் அஜீவன். அவரது 'நிழல் யுத்தம்', 'கவிக்குயில்', 'யாத்திரை', 'எச்சில்போர்வை', 'அழியாதகவிதை' போன்ற பல குறும்படங்களின் மூலமாக புகலிடத் தமிழ் திரைப்பட உலகில் பேசப்படும் கலைஞர். சுவிற்சலாந்து நாட்டில் வாழும் இவர், அந்நாட்டு கலைஞர்களுடன் இணைந்து திரைப்படத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துவருகிறார். 'zwölf' (12) என்னும் முழுநீள சுவிஸ்-ஜேர்மன் மொழிப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியதுடன், அப்படத்தில் ஒரு பாத்திரத்திலும்....
மேலும் அறிய>>>>>>>>
http://www.tamilamutham.net/index.php?opti...d=240&Itemid=39

Print this item

  இதுதாங்க பேரு...
Posted by: SUNDHAL - 11-20-2005, 03:50 AM - Forum: தத்துவம் (மெய்யியல்) - Replies (5)

இதுதாங்க பேரு...
தீயதைப் பார்க்காதே, தீயதைக் கேட்காதே, தீயதை பேசாதே என்ற பொன்மொழியை உணர்த்த மூன்று குரங்குகள் செய்கை காட்டுகின்றன அல்லவா?...

இந்தப் பொன் மொழி சீனாவில் இருந்து ஜப்பானுக்குப் பரவியது. ஆனால் இதனை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியவர்கள் ஜப்பானியர்கள் தான். அவர்கள் இந்தக் குரங்குகளுக்கு பெயரும் சூட்டியுள்ளனர். பார்க்காதே குரங்கின் பெயர் மிசாரு. கேட்காதே குரங்கு மிகாசாரு, பேசாதே குரங்கின் பெயர் மசாரு

***

Print this item

  ஜயோ ஜயகோ
Posted by: Anandasangaree - 11-19-2005, 11:14 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

இலங்கை அரசியலில் இந்தியாவின் சதிக்கு ஜரோப்பிய நாடு வைத்தது ஆப்பு? - றணில் பிரதம மந்திரி.? ? ?http://www.nitharsanam.com/public/rubis/eagle.gif

இலங்கையின் ஜந்தாவது நிறைவேற்று ஜனாதிபதியாக மகிந்த றாஜபக்ச தெரிவாகியுள்ளதுடன் நோர்வே நாட்டின் இலங்கையின் சமாதானப் பேச்சுக்கள் தொடர்பான பக்களிப்பை மீளாய்வு செய்யப் போவதாகவும் சர்வதேச யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரை வெளியேற்றி இந்திய கண்காணிப்பாளர்களைத் தரையிறக்கப் போவதாகவும் அறிவித்துள்ளதுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கையினை மீளாய்வு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ள நிலையில் ஜரோப்பிய வல்லரசு நாடு ஒன்று களம் இறங்கியுள்ளது. மகிந்த றாஜபக்சவினதும் ஜே.வி.பியினரினதும் ஆட்சியைக் குழப்பி அதனை ஓரங்கட்டி சந்திரிகாவின் உதவியுடன் பொதுஜன ஜக்கிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 30 பேரை றணில் விக்ரமசிங்கவின் பக்கம் உள்வாங்கி இலங்கையின் அரசை அமைக்கும் அதிகாரத்தை றணில் விக்றமசிங்கவிடம் பாராளுமன்ற பலத்தினு}டாக வளங்கப்பட இருக்கிறது. இதற்கான பேரம் பேசுதலில் ஜரோப்பிய நாடொன்று களமிறங்கியள்ளதுடன் இதன்கான சாதகமான பதிலையும் சந்திரிகா வளங்கியுள்ளதாக அறியமுடிகிறது. மகிந்த றாஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு ஜரோப்பிய நாடொன்று களமிறங்கியுள்ளதை அறிந்த இந்தியா தனது இலங்கைக்கான து}துவரின் உதவியுடன் றணில் விக்ரமசிங்கவுடனான அவசர பேச்சுக்களில் நேற்றைய தினம் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகிறது. எதிர்வரும் மாவீரர் தினத்தில் தமிழீழத் தேசியத்தலைவர் சொல்ல இருக்கம் கருத்துக்களை உள்வாங்கி அதனைத் தொடர்ந்து ஒரு குறித்த காலத்திற்குள் இதனை உடனடியாகச் செயற்படுத்த இருப்பதாகவும் அறிய முடிகிறது.



தனக்கே உரிய பிரதமந்திரி பதவியும் வெளிநாட்டு அமைச்சர் பதவியும் தராவிட்டால் இந்தத் திட்டத்தில் இணைவதற்கு அனுரா பண்டாரநாயக்காவும் சம்மதித்துள்ளதாக விடயங்களுடன் நெருங்கிய வட்டாரங்கள் நிதர்சனத்திற்குத் தெரிவித்தன. எனினும் தற்போது இலங்கையில் 2 ஜனாதிபதிகள் ஆட்சியில் இருக்கிறார்கள். சந்திரிகா தனது பதவியிலிருந்து விலக மறுத்துள்ளார். எதிர்வரும் 23ம் திகதிக்குப் பின்பே விலகத் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது. ஆகவே தற்போது இலங்கையில் 2 ஜனாதிபதிகள் ஆட்சி செய்து கொண்டு வருகிறார்கள்.
[img][/img][img][/img]

Print this item

  கொடியோர்
Posted by: AJeevan - 11-19-2005, 08:13 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - No Replies

[size=14]<b>கொடியோர்</b>

அந்த மனுசன் தன் மனைவியைப் போட்டு இந்த மிதி மிதிச்சாரே... நீங்க தடுக்கவில்லையா? என்றேன் நண்பரிடம்.

அது அவருடைய நம்பிக்கை. நான் மற்றவர்களது நம்பிக்கைகளில் குறுக்கிடுவதில்லை என்றார் வெகு அமைதியாக.

அடப்பாவிகளா.. எது நம்பிக்கை? எது மூட நம்பிக்கை? எது தன்னம்பிக்கை? என்று யோசிக்க ஆரபித்தால் தலை சுற்றுகிறது.

முதலில் தன்னம்பிக்கைப் பிரியர்களைப் பார்ப்போம். இந்த ஜீவராசிகள் இங்கு மட்டும் என்றில்லை, உலகம் முழுவதும் உண்டு.

மேலதிகாரியைத் திருப்திப்படுத்துவது எப்படி?,
நண்பர்களைக் கண்டுபிடிப்பது எவ்விதம்?, கொளுந்தியாளைக் கோணாமல் பார்த்துக்கொள்வது எவ்வாறு? என்கிற ரீதியில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் அள்ளி வீசுவார்கள்.
பல் விளக்குவது எப்படி? என்பதைக்கூட புத்தகத்திலோ, விளம்பரத்திலோ பார்த்ததுதான் ஒப்புக்கொள்ளும் மத்திய தர வர்க்கம்தான் இவர்களது இலக்கு.

மனித இனம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் வாழும் கலையைச் சொல்லித் தருவதற்குக் கூட புத்தகம் தான் வேண்டி இருக்கிறது இந்த வர்க்கத்திற்கு.

இந்தத் தன்னம்பிக்கைப் பிரியர்களது மகா கண்டுபிடிப்புதான் செய்யும் தொழிலே தெய்வம்.

புதை சாக்கடைக்குள் இறங்கி மலத்துக்கு நடுவே முத்துக்குளித்து அடைப்பு நீக்கி வெளியில் வருபவருக்கும்,
மின் விசிறிக்குக் கீழே கோப்புகளோடு குறட்டை விட்டுக்கொண்டிருப்பவருக்கும் ஒரே தெய்வம். முன்னவர்களுக்கு மட்டும் துர்நாற்றம் வீசும் தெய்வம். பின்னவர்களுக்கு சுகந்தம் வீசும் தெய்வம். ஏனிப்படி..? என்றெல்லாம் கேட்டுத் தொலைக்காதீர்கள்.
அப்புறம் நீங்களெல்லாம் தன்னம்பிக்கைக்கு எதிரிகள் ஆகி விடுவீர்கள்.

இந்த தன்னம்பிக்கைப் பிரியர்களது தாரக மந்திரம்: <b>உ </b>போடு. அதென்ன <b>ஓ</b>வுக்குப் பதிலாக<b> உ</b> அதுதான்: உண்மை - உழைப்பு - உயர்வு. இந்த மூன்று <b>உ</b>வையும் தூக்கிக்கொண்டு உள்ளூரின் பெரிய முதலாளிகளைத் தேடி ஓடுவார்கள் இவர்கள்.

மக்கள் எவரும் போராட்டம், புரட்சி, போர் என்று போய்விடாமல் பார்த்துக் கொள்ளும் வேலையை இவர்கள் செய்கிறார்களே என்கிற மகிழ்ச்சித் திளைப்பில் அவர்களும் அவிழ்த்து விடுவார்கள்,
தமது வெற்றிக்கான படிக்கட்டுகளை.
நான் பேப்பர் பொறுக்கிக் கஷ்டப் பட்டு இந்த நிலைக்கு உயர்ந்தேன் என்கிற ரகத்தில் நீளும் அவர்களது வியாக்கினங்கள்.

இது போதும் நமது தன்னம்பிக்கைப் பிரியர்களுக்கு அவர்கள் வாந்தி எடுத்ததை வாரிக்கொண்டு வந்து மறுபடியும் மூன்று <b>உ</b>க்களோடு
ஒரு தலைப்பைப் போட்டு அச்சடிக்க வேண்டியதுதான்: <b>உழைப்பால் உயர்ந்த உத்தமர்.</b>

சரி இதுகள் இருக்கட்டும் ஒருபுறம்,

இன்று நாம் எதை மூடநம்பிக்கை என்று சொன்னாலும் முண்டியடித்துக்கொண்டு சண்டைக்கு வருவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. இது வேறு வகை.

ஆண்கள் பொட்டு வைப்பது மூடநம்பிக்கை என்று கலைஞர் ஒருமுறை எடுத்துவிட...

மதத்தின் மனசு நோகாமல் பார்த்துக் கொள்ளும் காவலர்கள் குமுறி எழ... நான் நாத்திகர்களிலேயே நல்ல நாத்திகன் என இவர் சொல்ல...

நம்பிக்கையை மூட நம்பிக்கை என்று எப்படிச் சொல்லலாம்? என்று மீண்டும் எகிறிக் குதிக்க... அந்த நேரம் பார்த்துத் தானா தேர்தல் வந்து தொலைக்க வேண்டும்?

தான் சீறிய ஆசாமிக்கே மூட நம்பிக்கைக் கோட்டாவில் எம்.பி.சீட்டை ஒதுக்கித் தர... கோட்டாவுக்கு எதிரானவர்கள் அந்த நல்ல நாத்திகரோடு கூட்டணி வைத்துக்கொண்டு வலம் வர... மொத்தத்தில் அந்த விளையாட்டு அப்போதைக்கு முடிவுக்கு வந்தது.

இரண்டு தரப்பையும் ரசித்தவர்களுக்கு ஒன்று மட்டும் புரிந்தது:

இவர்களது நாத்திகமும் பொய்,
அவர்களது ஆத்திகமும் பொய் என்பதே மெய் என்று. மதவாதியோ, பகுத்தறிவுவாதியோ இரு தரப்பும் வசதியாக மறந்துபோன விஷயம் ஒன்று உண்டு. அதுதான்: கருத்துச் சுதந்திரம்.

கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் துணிவற்ற அசடுகளின் கருத்துப் படி..
உலகம் உருண்டை என்கிற விஞ்ஞானத்தைச் சொன்ன கலிலியோ பழம் கிருஸ்தவர்களது நம்பிக்கையில் குறுக்கிட்ட வராகிறார்.

பிராம்மணனும் அப்பிராம்மணனும் சமமே என்ற புத்தர் வர்ணாசிரம் நம்பிக்கையில் குறுக்கிட்டவராகிறார்.

நட்ட கல்லும் பேசுமோ என்று கேட்ட சிவவாக்கியர் உருவ வழிபாட்டாளர்களின் நம்பிக்கையில் குறுக்கிட்டவராகிறார்.

எந்த மார்க்கமோ, எந்தத் தத்துவமோ, எந்த இயக்கமோ அதற்குத் தேவை கருத்தை கருத்தால் சந்திக்கும் துணிவு. இல்லாவிடில்...

கொலை வாளினை எடடா மிகும் கொடியோர் செயல் அறவே என்றாராம் பாரதிதாசன். அப்படியாயின்...

கொடியோரைக் கொடியோர் என்று அழைப்பதுகூட ஒருவேளை கொடியோரது நம்பிக்கையில் குறுக்கிடுவதாக ஆகிவிடுமோ என்னவோ?

-Thanks: பாமரன்

Print this item

  Grenade attack on SLA sentry near Point Pedro schools
Posted by: Vaanampaadi - 11-19-2005, 07:53 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

Grenade attack on SLA sentry near Point Pedro schools

[TamilNet, November 19, 2005 17:41 GMT]
Sri Lanka Army (SLA) sentry point, serving as the gateway to Hartley College and Methodist Girls High School located within the Point Pedro High Security Zone (HSZ), came under grenade attack at 7 p.m. Saturday sources said. Gunmen riding a motorbike lobbed the grenade and escaped via the Hostel Road. Point Pedro SLA declined to disclose the damages to the sentry.
Residents said gunmen came along College road towards the sentry and escaped along Hostel road adjoining the Hartley College playgrounds and the destroyed buildings of the school's old Hostel building.

Point Pedro town came to a standstill after 7 p.m. and all pedestrian and vehicular traffic remain suspended along college road near the sentry.

The area where the sentry is located , in addition to the schools, also encloses Point Pedro district and magistrate courts, Kottadi Amman temple and a Hartley's church.

The SLA occupied a larger area in Pt. Pedro than it did in 85-87 when it took control of the peninsula in 1996. All public and private properties in College Road, Vinayaga Mudaliyar (VM) Road, Police Station Road, Beach Road, Harbour Road and the 1st and 2nd Cross Streets are still occupied by the military.

Source : Tamilnet

Print this item

  தடுமாறும் தமிழோசை?!
Posted by: thiru - 11-19-2005, 07:07 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (22)

தமிழோசையில் சொல்வது நடுநிலையானது என்பதும் நம்பகத் தன்மையானது என்பதும் இறந்தகாலமாகிப்போனதை நாம் நன்கு அவதானித்து வருகிறோம்.

அண்மையில் கூட யாழ்ப்பாணத்தில் நடந்த 'பொங்குதமிழ்' நிகழ்வு குறித்துச் செய்தி சொன்ன தமிழோசையின் வவுனியா செய்தியாளர் 'புலிகள் ஆதரவு அமைப்புகளால் ஒழுங்கு செய்து நடத்தப்பட்ட பொங்கு தமிழ்" என்று குறிப்பிட்டார்.

அந்த நிகழ்விலே பொதுச்சுடர் ஏற்றி அதனை ஆரம்பித்துவைத்தவர் யாழ் மாவட்ட அரச அதிபர்.

அப்படியாயின் தமிழோசைச் செய்தியின் பிரகாரம் யாழ்மாவட்ட அரச செயலகமும் புலிகள் ஆதரவு அமைப்புகளில் ஒன்று. அப்படித்தானே?

இன்னொரு உதாரணமும் சொல்லலாம். ரிஸ்வி மீடினின் கொலை தொடர்பாகத் தமிழோசையில் சொல்லபட்ட செய்தியைப் பாருங்கள்.

மீடின் சுடப்பட்டது நள்ளிரவில்

மறுநாள் மதியம் 11 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தின் இணையத்தளத்தில் மீடின் கொலைதொடர்பான ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது.

அதிலே தெளிவாக 'மீடினின் கிரிபத்கொட வீட்டுக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்ட மீடினின் நண்பர் ஒருவர் மீடின் சுடப்பட்ட செய்தியை மீடினின் மனைவியிடம் தெரிவித்தார்.." என்று குறிப்பிடப்பட்டடிருந்தது. (''Later one of his friends had telephoned his wife at home and informed that Lt. Col MEEDIN was lying dead near his home at KIRIBATHGODA.." <b>நன்றி:</b> சிறிலங்கா இராணுவ களநிலை அறிக்கை: Situation Report as at UTC 0200 (0800) 30 October 2005)

அன்று இரவு 9.45 (இலங்கை நேரம்) ஒலிபரப்பான தமிழோசையில் ரிஸ்வி மீடின் கொல்லப்பட்டது குறித்துத் தகவல் சொன்ன தமிழோசையின் செய்தியாளர் 'இனந்தெரியாத நபர்கள் மீடின் சுடப்பட்ட செய்தியை மீடினின் வீட்டுக்குத் தொலைபேசியில் சொன்னார்கள்.." என்று குறிப்பிட்டார்.

இது எதைக் காட்டுகிறது. செய்தியாளரின் உள்ளக் கிடக்கையையா? ''இனந்தெரியாதவர்கள்" என்ற பதத்தை உச்சரித்ததன் மூலம் செய்தியாளர் யாரையாவது இனங்காட்ட முயல்கிறாரா?அல்லது தமிழோசை நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் அக்கறையின்மையையா?

தகவல் தொடர்பு யுகமான தற்காலத்தில் செய்தியாளர் வழங்கிய தகவல் தொடர்பில் சிரத்தையெடுத்துச் சரிபார்க்க முடியாதவர்கள் எதற்கு நிகழ்ச்சி தயாரித்து வழங்குகிறார்கள்?

முன்னொரு காலத்தில் சங்கரமூர்த்தி, ஆனந்தி போன்றவர்களின் நடுநிலையான செயற்திறன் மிக்க கூட்டணியால் தமிழோசை பெற்றிருந்த நற்பெயருக்கு தற்போது பொறுப்பிலிருப்பவர்கள் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் காரணமாக வேட்டுவைக்கிறார்கள் போற்படுகிறது.

பி.பி.சி தமிழோசையின் விசேட நிருபராக இலங்கைத் தீவில் நிலைகொண்டிருப்பவருக்கும், அந்தச் சேவையின் லண்டன் ஒலிபரப்பாளர்களுக்கும் உண்மையில் ' ஏன் தமிழ்மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும்?' என்ற கேள்வி மனதைக் குடைகிறது. இதற்கான விடை நேற்றிரவு வரை அவர்களுக்குப் புரிந்திருப்பதாகத் தெரியவில்லை.

உதாரணமாகத் தேர்தல் புறக்கணிப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த தமிழ்மகன் ஒருவரிடம் 'இது சனநாயக மீறல் இல்லையா?' என்று கேட்டார் அந்த விசேட நிருபர். அதே கேள்வியைத்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரையும் அந்த நிருபர் கேட்டார்.

உண்மையில் இவருக்குச் சனநாயகத்தில் அக்கறை இருந்தால் அல்லது சனநாயகம் என்றால் என்ன என்று தெளிவான விளக்கம் இருந்தால் யாழ்ப்பாணத்தில் நிற்கும் இந்தக் காலப்பகுதியில் ''உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் அடிப்படை மனித உரிமைகள் கூட வழங்கப்படாது ஏதிலிகள் தங்ககத்தில் உள்ள மக்களை எப்போது மீளக் குடியமர்த்தப் போகிறீர்கள். அவர்களை மீளக்குடியமர்த்தாது விடுவது சனநாயக மீறல் இல்லீங்களா?" என்று யாழ் மாவட்ட இராணுவத் தளபதியையோ அல்லது ஆகக் குறைந்தது யாழ்மாவட்ட அரச அதிபரையோ கேட்டு அவர்களது பதிலை ஏன் ஒலிபரப்பவில்லை?

''ஓட்டுப்போடுவது" மட்டும்தானா அங்கு நிற்கும் நிருபர் அறிந்திருக்கும் சனநாயகம்???

'வாக்களிக்காமல் வீட்டிலிருப்பது சனநாயக மீறல்' என்று கருதும் இந்த விசேட நிருபரின் தேசம்கூட உப்புச் சத்தியாக்கிரகம் போன்ற சட்ட மறுப்பு நடவடிக்கைகளால் தான் சுதந்திரம் அடைந்தது. அதனை அவர் முதலில் நினைவுபடுத்திக்கொள்வது அவசியம்.

அடுத்து நேற்றைய தினம் ()19-11-2005) தமிழோசை செய்தியரங்கில் பின்வரும் செய்தி ஒரு பேராசிரியரால் கூறப்பட்டது.

'தமிழ் மக்கள் இந்த முறை அதிக அளவில் வாக்களிக்காமல் இருந்ததினால் மஹிந்த வெற்றி பெற்றுள்ளார் என்று வைத்துப் பார்க்கும்போது, சமாதானத்தை முன்னிலைப் படுத்தி தேர்தலில் நின்ற ரணில் விக்கிரமசிங்கவின் தோல்வி தமிழ் மக்களுக்கு சமாதானம் தொடர்பில் தவறவிட்ட ஒரு வாய்ப்புதான்" என்றார் அவர்

இவர் வெளிப்படையாகவே 'ஐக்கிய தேசியக் கட்சி சமாதானத்தைக் கொண்டுவரும்" என்ற கருத்துகளுடன் கட்டுரைகளை எழுதியவர்.

ஆனால் தமிழ் மக்களாகிய எமக்கு சிங்களப் பேரினவாதிகளின் இந்தச் சமாதான வேடம் ஒன்றும் புதியதல்ல.

தேர்தல் தருணங்களில் ஒரு அறிவிப்பும் தேர்தல் முடிந்ததும் ஒரு அறிவிப்பும் செய்யும் பேரினவாதிகள் தொடர்ந்தும் தமிழர்களை ஏய்க்கவேண்டும் என்று தமது தனிப்பட்ட சுயலாபங்களுக்காக எவராவது விரும்பினால் அதனை நம்பி ஏமாந்துபோகிற தமிழ் அரசியல் தலைமையல்ல தற்போது இருப்பது என்பதை இந்தப் பேராசிரியர்களும் செய்தி நிறுவனங்களும் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

இப்படித்தான் சமாதான தேவதையாகத் தன்னைக்காட்டி வாக்குகளை அள்ளிய சந்திரிகா அம்மையார் பின்னர் தமிழருக்குத் திரும்பச் செய்த நன்றிக்கடனை எமது மக்கள் இன்னும் மறந்துபோகவில்லை.

அவ்வாறு ரணிலும் மாறாமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதத்தை இந்தப் பேராசியர் எமது மக்களுக்குக் காட்ட முடியும்?

இறுதிநேரத்தில் சர்வதேச வலைப்பின்னல், சர்வதேச இராணுவ ஆலோசனை குறித்துத் தான் ரணில் தரப்பிலிருந்து செய்திகள் வந்ததே தவிர சமஷ்டியின் என்ன பரிமாணத்தில் இவர் பிரச்சினையைத் தீர்க்க விரும்புகிறார், இடைக்காலத் நிருவாக சபைகுறித்து என்ன கருதுகிறார்? என்பவை போன்ற நியாயமான -தமிழ்மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய -விடயங்களை எங்காவது ரணிலோ அல்லது அவரது அணியினரோ தெளிவுபடுத்தியதாக ஒரு ஆதாரத்தையாவது இந்தப் பேராசிரியரால் காட்டமுடியுமா?

இந்த ஒரு உதாரணமே சகல சந்தர்ப்பவாதிகளையும் இனங்காட்டப் போதுமென்று கருதுகிறேன்.


<b>திருமகள் (ரஷ்யா)</b>

Print this item

  கிளாலி நோக்கி ஆட்டிலறிகள் கனரக ஆயுதங்கள் நகர்த்தப்படுகின்றன
Posted by: வினித் - 11-19-2005, 05:58 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

சனி 19-11-2005 21:13 மணி தமிழீழம் ஜயாழ் நிருபர்ஸ
<span style='font-size:25pt;line-height:100%'>கிளாலி நோக்கி ஆட்டிலறிகள் மற்றும் கனரக ஆயுதங்கள் நகர்த்தப்படுகின்றன.
யாழ் குடாநாட்டில் கிளாலி நீரேரி நோக்கி இராணுவத்தினர் நெடுந்தூரம் ஏவக்கூட்டிய ஆட்டிலறிகள் நகர்த்தப்பட்டுள்ளன. அத்துடன் பலாலி இராணுவ படைத்தளத்திலிருந்து கனரக ஆயத தளபாடங்கள் தென்பகுதியான கிளாலிக் கரை நோக்கி அவசர அவசரமாக முன்னரங்கப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மக்கள் மத்தியில் அச்ச நிலை தோன்றியுள்ளது.
</span>
<b>நன்றி: பதிவு</b>
http://www.pathivu.com/news/main.php?subac...t_from=&ucat=1&

Print this item