![]() |
|
தடுமாறும் தமிழோசை?! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தடுமாறும் தமிழோசை?! (/showthread.php?tid=2377) Pages:
1
2
|
தடுமாறும் தமிழோசை?! - thiru - 11-19-2005 தமிழோசையில் சொல்வது நடுநிலையானது என்பதும் நம்பகத் தன்மையானது என்பதும் இறந்தகாலமாகிப்போனதை நாம் நன்கு அவதானித்து வருகிறோம். அண்மையில் கூட யாழ்ப்பாணத்தில் நடந்த 'பொங்குதமிழ்' நிகழ்வு குறித்துச் செய்தி சொன்ன தமிழோசையின் வவுனியா செய்தியாளர் 'புலிகள் ஆதரவு அமைப்புகளால் ஒழுங்கு செய்து நடத்தப்பட்ட பொங்கு தமிழ்" என்று குறிப்பிட்டார். அந்த நிகழ்விலே பொதுச்சுடர் ஏற்றி அதனை ஆரம்பித்துவைத்தவர் யாழ் மாவட்ட அரச அதிபர். அப்படியாயின் தமிழோசைச் செய்தியின் பிரகாரம் யாழ்மாவட்ட அரச செயலகமும் புலிகள் ஆதரவு அமைப்புகளில் ஒன்று. அப்படித்தானே? இன்னொரு உதாரணமும் சொல்லலாம். ரிஸ்வி மீடினின் கொலை தொடர்பாகத் தமிழோசையில் சொல்லபட்ட செய்தியைப் பாருங்கள். மீடின் சுடப்பட்டது நள்ளிரவில் மறுநாள் மதியம் 11 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தின் இணையத்தளத்தில் மீடின் கொலைதொடர்பான ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது. அதிலே தெளிவாக 'மீடினின் கிரிபத்கொட வீட்டுக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்ட மீடினின் நண்பர் ஒருவர் மீடின் சுடப்பட்ட செய்தியை மீடினின் மனைவியிடம் தெரிவித்தார்.." என்று குறிப்பிடப்பட்டடிருந்தது. (''Later one of his friends had telephoned his wife at home and informed that Lt. Col MEEDIN was lying dead near his home at KIRIBATHGODA.." <b>நன்றி:</b> சிறிலங்கா இராணுவ களநிலை அறிக்கை: Situation Report as at UTC 0200 (0800) 30 October 2005) அன்று இரவு 9.45 (இலங்கை நேரம்) ஒலிபரப்பான தமிழோசையில் ரிஸ்வி மீடின் கொல்லப்பட்டது குறித்துத் தகவல் சொன்ன தமிழோசையின் செய்தியாளர் 'இனந்தெரியாத நபர்கள் மீடின் சுடப்பட்ட செய்தியை மீடினின் வீட்டுக்குத் தொலைபேசியில் சொன்னார்கள்.." என்று குறிப்பிட்டார். இது எதைக் காட்டுகிறது. செய்தியாளரின் உள்ளக் கிடக்கையையா? ''இனந்தெரியாதவர்கள்" என்ற பதத்தை உச்சரித்ததன் மூலம் செய்தியாளர் யாரையாவது இனங்காட்ட முயல்கிறாரா?அல்லது தமிழோசை நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் அக்கறையின்மையையா? தகவல் தொடர்பு யுகமான தற்காலத்தில் செய்தியாளர் வழங்கிய தகவல் தொடர்பில் சிரத்தையெடுத்துச் சரிபார்க்க முடியாதவர்கள் எதற்கு நிகழ்ச்சி தயாரித்து வழங்குகிறார்கள்? முன்னொரு காலத்தில் சங்கரமூர்த்தி, ஆனந்தி போன்றவர்களின் நடுநிலையான செயற்திறன் மிக்க கூட்டணியால் தமிழோசை பெற்றிருந்த நற்பெயருக்கு தற்போது பொறுப்பிலிருப்பவர்கள் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் காரணமாக வேட்டுவைக்கிறார்கள் போற்படுகிறது. பி.பி.சி தமிழோசையின் விசேட நிருபராக இலங்கைத் தீவில் நிலைகொண்டிருப்பவருக்கும், அந்தச் சேவையின் லண்டன் ஒலிபரப்பாளர்களுக்கும் உண்மையில் ' ஏன் தமிழ்மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும்?' என்ற கேள்வி மனதைக் குடைகிறது. இதற்கான விடை நேற்றிரவு வரை அவர்களுக்குப் புரிந்திருப்பதாகத் தெரியவில்லை. உதாரணமாகத் தேர்தல் புறக்கணிப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த தமிழ்மகன் ஒருவரிடம் 'இது சனநாயக மீறல் இல்லையா?' என்று கேட்டார் அந்த விசேட நிருபர். அதே கேள்வியைத்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரையும் அந்த நிருபர் கேட்டார். உண்மையில் இவருக்குச் சனநாயகத்தில் அக்கறை இருந்தால் அல்லது சனநாயகம் என்றால் என்ன என்று தெளிவான விளக்கம் இருந்தால் யாழ்ப்பாணத்தில் நிற்கும் இந்தக் காலப்பகுதியில் ''உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் அடிப்படை மனித உரிமைகள் கூட வழங்கப்படாது ஏதிலிகள் தங்ககத்தில் உள்ள மக்களை எப்போது மீளக் குடியமர்த்தப் போகிறீர்கள். அவர்களை மீளக்குடியமர்த்தாது விடுவது சனநாயக மீறல் இல்லீங்களா?" என்று யாழ் மாவட்ட இராணுவத் தளபதியையோ அல்லது ஆகக் குறைந்தது யாழ்மாவட்ட அரச அதிபரையோ கேட்டு அவர்களது பதிலை ஏன் ஒலிபரப்பவில்லை? ''ஓட்டுப்போடுவது" மட்டும்தானா அங்கு நிற்கும் நிருபர் அறிந்திருக்கும் சனநாயகம்??? 'வாக்களிக்காமல் வீட்டிலிருப்பது சனநாயக மீறல்' என்று கருதும் இந்த விசேட நிருபரின் தேசம்கூட உப்புச் சத்தியாக்கிரகம் போன்ற சட்ட மறுப்பு நடவடிக்கைகளால் தான் சுதந்திரம் அடைந்தது. அதனை அவர் முதலில் நினைவுபடுத்திக்கொள்வது அவசியம். அடுத்து நேற்றைய தினம் ()19-11-2005) தமிழோசை செய்தியரங்கில் பின்வரும் செய்தி ஒரு பேராசிரியரால் கூறப்பட்டது. 'தமிழ் மக்கள் இந்த முறை அதிக அளவில் வாக்களிக்காமல் இருந்ததினால் மஹிந்த வெற்றி பெற்றுள்ளார் என்று வைத்துப் பார்க்கும்போது, சமாதானத்தை முன்னிலைப் படுத்தி தேர்தலில் நின்ற ரணில் விக்கிரமசிங்கவின் தோல்வி தமிழ் மக்களுக்கு சமாதானம் தொடர்பில் தவறவிட்ட ஒரு வாய்ப்புதான்" என்றார் அவர் இவர் வெளிப்படையாகவே 'ஐக்கிய தேசியக் கட்சி சமாதானத்தைக் கொண்டுவரும்" என்ற கருத்துகளுடன் கட்டுரைகளை எழுதியவர். ஆனால் தமிழ் மக்களாகிய எமக்கு சிங்களப் பேரினவாதிகளின் இந்தச் சமாதான வேடம் ஒன்றும் புதியதல்ல. தேர்தல் தருணங்களில் ஒரு அறிவிப்பும் தேர்தல் முடிந்ததும் ஒரு அறிவிப்பும் செய்யும் பேரினவாதிகள் தொடர்ந்தும் தமிழர்களை ஏய்க்கவேண்டும் என்று தமது தனிப்பட்ட சுயலாபங்களுக்காக எவராவது விரும்பினால் அதனை நம்பி ஏமாந்துபோகிற தமிழ் அரசியல் தலைமையல்ல தற்போது இருப்பது என்பதை இந்தப் பேராசிரியர்களும் செய்தி நிறுவனங்களும் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். இப்படித்தான் சமாதான தேவதையாகத் தன்னைக்காட்டி வாக்குகளை அள்ளிய சந்திரிகா அம்மையார் பின்னர் தமிழருக்குத் திரும்பச் செய்த நன்றிக்கடனை எமது மக்கள் இன்னும் மறந்துபோகவில்லை. அவ்வாறு ரணிலும் மாறாமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதத்தை இந்தப் பேராசியர் எமது மக்களுக்குக் காட்ட முடியும்? இறுதிநேரத்தில் சர்வதேச வலைப்பின்னல், சர்வதேச இராணுவ ஆலோசனை குறித்துத் தான் ரணில் தரப்பிலிருந்து செய்திகள் வந்ததே தவிர சமஷ்டியின் என்ன பரிமாணத்தில் இவர் பிரச்சினையைத் தீர்க்க விரும்புகிறார், இடைக்காலத் நிருவாக சபைகுறித்து என்ன கருதுகிறார்? என்பவை போன்ற நியாயமான -தமிழ்மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய -விடயங்களை எங்காவது ரணிலோ அல்லது அவரது அணியினரோ தெளிவுபடுத்தியதாக ஒரு ஆதாரத்தையாவது இந்தப் பேராசிரியரால் காட்டமுடியுமா? இந்த ஒரு உதாரணமே சகல சந்தர்ப்பவாதிகளையும் இனங்காட்டப் போதுமென்று கருதுகிறேன். <b>திருமகள் (ரஷ்யா)</b> - Thala - 11-19-2005 பிபிசி தமிழ்ச்சேவையில் நிர்வாக நிர்ப்பந்தத்தால் இப்படிச் செய்திகள் வழங்குகிறார்களா அல்லது தமிழர் பிரச்சினைகள் குறித்து எதிரான பிரச்சாரம் செய்ய வெளியில் உள்ளவர்களால் தூண்டப்படுகிறார்களா..?? எப்படியானாலும் பிபிசி யின் இந்தப் பொறுப்பற்றதனம் கண்டிக்கப் படவேண்டியது... <b>நண்றி திரு...</b> - iruvizhi - 11-19-2005 தமிழோயினை நாம் கேட்பதை நிறுத்தி சில வருடங்கள் ஆகிவிட்டது. நீங்கள் சொல்லும்போதுதான் இவர்கள் இன்னும் கள்ளத்தனங்களை கைவிடவில்லை என்பது நமக்கும் தெரிகின்றது. தமிழோசையினை தமிழர்கள் கேட்பதை விட இந்தியர்களும் சிங்களர்களும் கேட்பதே பொருத்தமாக இருக்கும் அவ்விரு சமூகங்களின் துதிபாடலே தமிழோசை என்பது எனது கருத்து. சரியான சமயத்தில் சரியான தகவலை இணைத்தமைக்கு திருவிற்கு நன்றி. உங்கள் சேவை தொடரட்டும். - ஜெயதேவன் - 11-19-2005 ரோகரா! ரோகரா!! ..... உந்தத் தமிழோசையை இப்ப நடத்துவதே கடவுள் "றோ"வினது முகவர்களே!! முன்பு **** ராட்சியம்தானாம் உந்த தமிழோசையில்!!! கடவுள் "றோ"விற்கு எது விருப்பமோ அதைத்தான் இந்த கூலிகளும் செய்வார்கள்!! ரோகரா! ரோகரா!! நான் இதைக் கதைக்கப் போய், நாளை என்னை கடவுள் "றோ" வைவிட்டு விட்டால்??????? .... நோ நோ!!! கடவுள் ...... "றோ"விற்கு ஜிந்தாபாத்!! பி.பி.சி தமிழோசைக்கு ஜிந்தாபாத்!!! ரோகரா!! ..... - Mathuran - 11-20-2005 தமிழோசையா அல்லது சிங்கள ஓசையா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vasampu - 11-20-2005 நன்றி திரு உங்கள் கருத்திற்கு பி.பி.சி உலகமெங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்காக இயங்கி வரும் ஒரு வானொலி. செய்திகளில் கூடியவரை இலங்கைச் செய்திகளுக்கே முக்கியத்தவம் கொடுத்து வருகின்றது. பல வேளைகளில் பக்க சார்பில்லாமல் செவ்விகள் காண முற்படும்போது இப்படியான விமர்சனங்கள் வருவது வழமையே. அது போல செய்திகளை முந்தித்தர முனைவதில் சில தவறுகள் ஏற்படவும் வாய்ப்புக்களுண்டு. எனவே நீங்கள் சொன்னது சரியாயின் ஏன் அவ்வானொலியின் நேயர் கடிதத்தில் இத்தவறைச் சுட்டிக் காட்டியிருக்கலாமே. நிச்சயம் அவர்கள் பதில் வழங்கி இருப்பார்கள். - thiru - 11-20-2005 <b>எனவே நீங்கள் சொன்னது சரியாயின் ஏன் அவ்வானொலியின் நேயர் கடிதத்தில் இத்தவறைச் சுட்டிக் காட்டியிருக்கலாமே. நிச்சயம் அவர்கள் பதில் வழங்கி இருப்பார்கள்.</b> ஆம். நான் அவர்களுக்கு எழுதியிருக்கிறேன். ஆனால் துரதிட்டவசமாக இன்னும் பதில் எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை. எனது ஆதங்கம் என்னவெனில் அவர்கள் செவ்வி எவரைக் கண்டார்கள் என்பதல்ல. அந்தச் செவ்வியில் செவ்விகாண்பவர் தனது கருத்துக்கு ஏற்ற பதிலைப் பெற முனைவது அப்பட்டமாகத் தெரிகிறது. உதாரணமாக பேராசிரியரைப் பேட்டிகாணும்போது 'இந்தத் தேர்தலில் தமிழ்மக்கள் புறக்கணிப்புக் குறித்த உங்கள் கருத்தென்ன?" என்று கேட்பதற்குப் பதில் பாடவேண்டிய பாடலுக்குப் பல்லவி எடுத்துக்கொடுப்பது போல ''இந்தத் தேர்தலில் தமிழ்மக்கள் புறக்கணிப்பு ஒரு சனநாயக மீறல் இல்லையா? உங்கள் கருத்தென்ன?" என்று கேட்டதைக் குறிப்பிடலாம். விசேட நிருபர் செவ்வி கண்டபோது வாக்களித்த இருவரையும் வாக்களிக்காத இருவரையும் செவ்வி கண்டார். அது நடுநிலையைப் பேண எடுத்துக்கொண்ட முயற்சி என்பதை நான் ஏற்றுக்கொள்வேன். ஆனால் செவ்வியின்போது எந்தப் பக்கமும் சாராத நடுநிலைமையான வினாக்களை வினவிப் பதில்களைப் பெறுவது நல்லது என்பதே எனது கருத்து. <b>அன்புடன் திரு</b> - thiru - 11-20-2005 செய்திகளை முந்தித் தருவதால் தவறு ஏற்பட்டிருப்பின் அதனைப் பொறுத்துக்கொள்ளலாம். உதாரணமாக மீடின் கொல்லப்பட்டது மாலை ஆறு மணியாக இருந்திருந்தால் இரவு 9.45 ற்கு இப்படிச் செய்தி சொல்லப்பட்டிருந்தால் அதனை நான் ஏற்றுக்கொள்வேன். இங்கு அப்படி எதுவும் இல்லையே கிட்டத்தட்ட சம்பவம் நடந்து 12 மணிநேரம் கழித்து, கொலையாளி எவர் என்பது குறித்து சிறிலங்காவின் செய்தி நிறுவனங்கள் செய்திவெளியிடத்தொடங்கிய நேரத்தில் கொலைச் செய்தியை வீட்டுக்கு அறிவித்தவர் தொடர்பில் செய்தியாளர் தவறு செய்வதை தகவலை முந்தித் தரமுற்பட்டதால் ஏற்பட்ட வழு என்று சொல்லலாமா என்று எனக்குச் சந்தேகமாக உள்ளது. அதுதவிர 16ம் திகதி இரவு செய்தியரங்கத்தில் சிறிலங்கா சனாதிபதித் தேர்தலில் இம்முறை 13 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தமிழோசையின் கொழும்புச் செய்தியாளர் கூறிக்கொண்டிருக்கும் போது இலங்கையில்- ஏன் உலகத்தில்- உள்ள செய்திநிறுவனங்கள் கடைசிநேரத்தில் 04 வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகி மகிந்தருக்கு ஆதரவளித்து வெளியிட்ட அறிக்கையை வெளியிட்டுக்கொண்டிருந்தன. தமிழோசையைக் கேட்டவர்கள் மனதில் என்ன நினைத்திருப்பார்கள்? எனவே செய்திகளை முந்தித் தரும் ஆர்வம் எதுவுமிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. - cannon - 11-20-2005 இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை! தமிழோசை மட்டுமல்ல பி.பி.சியின் ஆசிய ஒலி/ஒளிபரப்புகள் அணைத்துமே இந்திய நலன்களுக்கு ஆதரவாகவே செயற்படுகின்றன. அது இந்திய அயல்நாடுகள் அணைத்திற்கும் பொருந்தும். பிரித்தாணிய அரசும், தமது இந்தியா நோக்கிய சந்தைக்கும், வேறு சில நடவடிக்கைகளுக்கும் நகர்வுகளுக்குமாக சில வரையறைகளுக்குள் இந்த இந்திய ஆதரவு செயற்பாடுகளை அனுமதி அளித்துள்ளார்கள்! இதன் ஒரு கட்டமே தமிழோசையின் செயற்பாடுகளும்! ஈழத்து செய்திகள் இந்தியாவை குரிப்பாக தமிழ்நாட்டை நோக்கி செல்வதை தடை செய்வதும், மாறுபட்ட, திரிபுபட்ட செய்திகளை வழங்குவதும் இவர்களின் முக்கிய நோக்கமுமாகும். அதற்காக இன்று பல தமிழ் தேசிய ஆதரவான ஒலிபரப்பாலர்கள் தமிழோசையிலிருந்து வெளியேற்றப்பட்டும், தமது இந்திய நலன்களுக்கு ஆதரவான ஒலிபரப்பாளர்களும், செய்தியாலர்களும் நியமிக்கப்ப்ட்டும் இருக்கிறார்கள். இவர்களும் இந்திய எஜமானர்களினூடே வாங்கும் பணம், சலுகைகளுக்காக எதையும் விற்க தயங்காமல் செயற்படுகிறார்கள். பி.கு: இந்த தமிழோசையின் செய்தியாளர்களுக்கோ, ஒலிபரப்பாளர்களுக்கோ பி.பி.சி நிர்வாக சம்பளங்கள் செல்வதைவிட, இவர்கள் இவர்களின் இந்திய எஜமானர்கள் மூலம் கிரமமாக பணம், சலுகைகளை பெற்று வருகிரார்கள் என்று கூறப்படுகிறது. - iruvizhi - 11-20-2005 cannon Wrote:இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை! தமிழோசை மட்டுமல்ல பி.பி.சியின் ஆசிய ஒலி/ஒளிபரப்புகள் அணைத்துமே இந்திய நலன்களுக்கு ஆதரவாகவே செயற்படுகின்றன. அது இந்திய அயல்நாடுகள் அணைத்திற்கும் பொருந்தும். பிரித்தாணிய அரசும், தமது இந்தியா நோக்கிய சந்தைக்கும், வேறு சில நடவடிக்கைகளுக்கும் நகர்வுகளுக்குமாக சில வரையறைகளுக்குள் இந்த இந்திய ஆதரவு செயற்பாடுகளை அனுமதி அளித்துள்ளார்கள்! இதன் ஒரு கட்டமே தமிழோசையின் செயற்பாடுகளும்! ஈழத்து செய்திகள் இந்தியாவை குரிப்பாக தமிழ்நாட்டை நோக்கி செல்வதை தடை செய்வதும், மாறுபட்ட, திரிபுபட்ட செய்திகளை வழங்குவதும் இவர்களின் முக்கிய நோக்கமுமாகும். அதற்காக இன்று பல தமிழ் தேசிய ஆதரவான ஒலிபரப்பாலர்கள் தமிழோசையிலிருந்து வெளியேற்றப்பட்டும், தமது இந்திய நலன்களுக்கு ஆதரவான ஒலிபரப்பாளர்களும், செய்தியாலர்களும் நியமிக்கப்ப்ட்டும் இருக்கிறார்கள். அதுதானே பார்த்தம். ஏதோ பணத்துக்காக தமிழரின் சீவனை எடுக்காமல் இருந்தால் சரி. - Birundan - 11-20-2005 ஆனந்தி அக்கா இருக்கும் வரை ஓரளவு ஈழத்தமிழர்க்கு ஆதரவான கருத்துக்கள் வந்தன். ஊடகத்தில் நடுநிலமை என்பது செத்து கனகாலம் ஆச்சுது. - kurukaalapoovan - 11-20-2005 Birundan Wrote:ஆனந்தி அக்கா இருக்கும் வரை ஓரளவு ஈழத்தமிழர்க்கு ஆதரவான கருத்துக்கள் வந்தன். ஊடகத்தில் நடுநிலமை என்பது செத்து கனகாலம் ஆச்சுது. என்ன பிருந்தன் நீங்கள் சொல்லுறதைப் பார்த்தா, ஈழத்தமிழருக்கு ஆதரவாக கருத்துச் சொல்லுற ஊடகம் தான் நடுநிலமை பேணுது போல? - Birundan - 11-20-2005 அப்படி இல்லை, திரு சொல்லுறமாதிரி உண்மையை சொல்லலாம்தானே, உண்மையை சொல்ல வெளிக்கிட்டால் ஈழத்தமிழர்க்கு ஆதரவாக சொல்லவேண்டிவருவது தவிர்க்கமுடியாதுதானே? - kurukaalapoovan - 11-20-2005 அந்த உண்மையை நீங்களே ஏன் ஈழத்தமிழருக்கு ஆதரவுக் கருத்துகள் என்று முத்திரை குத்தி எதிர் பிரச்சாரத்துக்கு அடி எடுத்துக் கொடுக்கிறியள். - Birundan - 11-20-2005 உண்மைகள் கூட ஆதரவில்லாமல் சபை ஏறமாட்டுதாமே. எவ்வளவுகாலமாக தமிழர் போராட்டம் நடக்குது எந்தளவுக்கு உண்மைத்தன்மை வெளிஉலகத்துக்கு தெரிய வருகுது? - kurukaalapoovan - 11-20-2005 அப்ப எல்லாரும் உண்மை கதைக்க வேணும் எண்டால் உங்களுக்கு ஆதரவாக கதைக்க வேணும் எண்டு கோசம் போடச் சொல்லுறியள். - தூயவன் - 11-20-2005 kurukaalapoovan Wrote:அப்ப எல்லாரும் உண்மை கதைக்க வேணும் எண்டால் உங்களுக்கு ஆதரவாக கதைக்க வேணும் எண்டு கோசம் போடச் சொல்லுறியள். இல்லை குறுக்ஸ் உண்மை கதைக்கவெளிக்கிட்டால் கடைசியில அது எங்களுக்கு ஆதரவாகத் தான் வரும் என்று சொல்லுகின்றார். :wink: - kurukaalapoovan - 11-20-2005 அப்போ உங்களுக்கு ஆதரவாக வரும் எண்டதுக்காகத்தான் உண்மை கதைக்கச் சொல்லுறாரோ? - Birundan - 11-20-2005 கோசம்போட சொல்லவில்லை உண்மையை கதைக்க சொல்லுறன், உண்மையை கதைக்க வெளிக்கிட்டால் எமக்கு சார்பா கதைக்கிறது தவிர்க்கமுடியாதுதானே. - kurukaalapoovan - 11-20-2005 Birundan Wrote:ஆனந்தி அக்கா இருக்கும் வரை ஓரளவு ஈழத்தமிழர்க்கு ஆதரவான கருத்துக்கள் வந்தன். ஊடகத்தில் நடுநிலமை என்பது செத்து கனகாலம் ஆச்சுது. ஆனா நீங்கள் போட்ட ஓப்பாரியில உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியிற உள்நோக்கம் வேறையா இருக்கெண்டெல்லோ யேசிக்க வருகுது. |