![]() |
|
தேர்தல் புறக்கணிப்பும் புலிகளின் ராஜதந்திர நகர்வும்:நர்த்தன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தேர்தல் புறக்கணிப்பும் புலிகளின் ராஜதந்திர நகர்வும்:நர்த்தன் (/showthread.php?tid=2370) |
தேர்தல் புறக்கணிப்பும் புலிகளின் ராஜதந்திர நகர்வும்:நர்த்தன் - வினித் - 11-20-2005 தேர்தல் புறக்கணிப்பும் புலிகளின் ராஜதந்திர நகர்வும் * சர்வதேச மற்றும் உள்நாட்டு வலைப்பின்னலை அறுத்தெறிந்து தமிழர் தரப்பு நர்த்தன் ஐந்தாவது ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்துவிட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை விட 1,86,327 வாக்குகளை மாத்திரம் அதிகப்படியாகப் பெற்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுவிட்டார். இத் தேர்தல் வரலாற்றுத் திருப்பு முனையான ஒரு கால கட்டத்தில் இலங்கையின் இரு தேசிய இனங்களின் துருவமயப்பட்ட நிலையை மீண்டும் கோடிட்டுக் காட்டியுள்ளது. இத்தேர்தலை புறக்கணித்த தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் சிங்கள சமூகத்திடம் அவர்களின் ஜனாதிபதியை அவர்களே தெரிவு செய்யும் பொறுப்பைத் தள்ளிவிட்டதுடன் தாம் தனியான ஒரு தேசம் என்ற நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை அழுத்தி உரைத்துள்ளனர். நவம்பர் 17 அன்று படலைகளை தாண்டாமல் இருந்து அவர்கள் கூறிய செய்தி கடல்களைத் தாண்டி உலகெங்கும் ஒலித்துள்ளது. இதேவேளை, இத்தேர்தலை தமிழர்கள் புறக்கணித்தது பிழை என்று சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். புலிகளுடன் பேசி இனப்பிரச்சினையைத் தீர்ப்பேன் என்று கூறிய ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து, இனவாதக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ள மகிந்த ராஜபக்ஷவை தோற்கடித்திருக்க வேண்டும் என்பதே அவர்களது நிலைப்பாடாகும். மேலெழுந்த வாரியாகப் பார்ப்பின் சரியானது போன்று தென்படும் அந்த நிலைப்பாடு உண்மையில் தற்பொழுது இலங்கைத் தீவில் காணப்படும் சூழலின் அரசியல், இராணுவ மற்றும் இராஜதந்திர சிக்கல்களின் பரிணாமங்களை முழுமையாக ஆராயாமல் பிரச்சினையை மிக மிக எளிமைப்படுத்தி அது கறுப்பு; இது வெள்ளை; எனவே இது சரி என்று நோக்கும் ஒன்றாகவே காணப்படுகின்றது. மகிந்த ராஜபக்ஷவின் அணி இனவாத அணி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் மகிந்த ராஜபக்ஷவை விட ரணில் பரவாயில்லை, எனவே அவரை ஆதரிப்போம் என்னும் போக்கு அபாயகரமானதும் ஆழமறியாமற் காலைவிடுவதுமாகும். ரணிலின் நோக்கம் தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகளான தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றின் அடிப்படையிலான தீர்வைக் காண்பதல்ல. அரைகுறைத் தீர்வொன்றிற்கு தமிழர்களை இணங்க வைப்பது அல்லது அவர்களை தான் விரித்த சர்வதேச வலைப்பின்னலில் சிக்க வைப்பது என்பதே ரணிலின் திட்டமாகும். அத்துடன் தமிழர் தரப்பிற்கு எதிரான உள்நாட்டு வலைப்பின்னலொன்றையும் ஏற்படுத்துவதற்கு அவர் சந்திரிகாவுடன் இணைந்து திட்டம் தீட்டத் தொடங்கியிருந்தார். அத்திட்டத்தின் படி ரணில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் சந்திரிகா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தேசிய அரசாங்கம் என்ற போர்வையிலோ அல்லது வேறு ஏதாவது வடிவத்திலோ இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான கூட்டொன்று ஏற்படுத்தப்படும். அது நல்ல விடயம் தானே என்று சில அரசியல் நோக்கர்கள் கூறக்கூடும். ஆனால் அதில் தமிழர் உரிமைப் போராட்டத்தை அழிப்பதற்கான பெரும் சதி மறைந்துள்ளது. இரு பிரதான கட்சிகளின் ஒற்றுமையின்மையால் தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை என்பது காலம் காலமாகச் சொல்லப்பட்டு வரும் ஒரு வாய்ப்பாடாகும். ஆனால் உண்மையில் இரண்டு பிரதான கட்சிகளிற்கிடையிலான முரண்பாட்டினாலேயே தமிழர் போராட்டம் மிக வெற்றிகரமான தொன்றாக வளர்ச்சியடைந்துள்ளது. அத்துடன் அம்முரண்பாடே தமிழர் தரப்பு நியாயப்பாட்டை வெளி உலகிற்கு அம்பலப்படுத்துவதற்கு பெரிதும் உறுதுணையாக அமைந்துள்ளது. அவ்வாறான முரண்பாடிருந்திருக்காவிடின் அவ்விரு இனவாதக் கட்சிகளும் தமிழரை கிராம சபைகளுக்குரிய அதிகாரங்களுடன் முடக்கிச் சுருட்டியிருக்கும். தமிழ் மக்களின் பிரச்சினையை நியாய பூர்வமாகத் தீர்க்கவிரும்பாத இரு இனவாத கட்சிகளும் ஒன்றிணைவது விடுதலைப் போராட்டத்திற்கு பேரிடரை ஏற்படுத்துவதற்கு மட்டுமே வழிவகுக்கும். தமிழரின் நியாயமான உரிமையை மறுக்கும் கபடத்தனத்துடன் சர்வதேச வலைப்பின்னலை பின்ன முயன்ற ரணில் விக்கிரமசிங்கவும் உலக ஒப்புக்காக நீலனின் துணையுடன் தீர்வுப் பொதியென்ற சதிப் பொதியை சுற்றிக்கட்டி சமாதானத்திற்கான யுத்தம் புரிந்த சந்திரிகாவும் இணையும் உள்நாட்டு வலைப் பின்னல் தமிழர்களுக்கு தரக்கூடியது என்ன? சர்வதேச வலைப்பின்னலை வலிமைப்படுத்துவதற்காக தமிழர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு தீர்வை காட்சிப் படுத்திவிட்டு தமிழ் மக்கள் மீது பெரும் அவல வாழ்வைக் கட்டவிழ்த்துவிடுவதே அதன் விளைவாக இருக்கும். <b>இதை நன்குணர்ந்த விடுதலைப் புலிகள் தென்னிலங்கை கூட்டணி அரசியற் சமன்பாடுகளை துல்லியமாகக் கணக்கிட்டு உலக மற்றும் சிங்கள அரசியல் சமூகம் சிறிதும் எதிர்பார்த்திராத அபாரமான ராஜதந்திர நகர்வொன்றை மேற்கொண்டனர். அந்நகர்வு தேர்தல் புறக்கணிப்பை உருவாக்கி தமிழர் தனியான ஒரு தேசம் என்பதை மீண்டும் வலியுறுத்தியதுடன் உள்நாட்டு மற்றும் சர்வதேச வலைப் பின்னல்களை அறுத்தெறிந்துள்ளது</b>. மகிந்தவினால் இவ்வாறான வலைப்பின்னல்களை மேற்கொள்ள முடியாதா என்ற கேள்வி எழலாம். சர்வதேச வலைப்பின்னலைப் பொறுத்தவரை அதனை உருவாக்க நியாயமா தீர்வை தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை வழங்குவதற்கு தயாராக இருப்பது போன்று காட்ட வேண்டும். அதற்கு சமஷ்டி, உள்ளக சுய நிர்ணய உரிமைபோன்ற எதையாவது தேர்ச்சிமிக்க நடிப்புத் திறமையுடன் அடிக்கடி உச்சரிக்க வேண்டும். அவ்வாறானால் தான் சர்வதேச சமூகம் சர்வதேச வலைப்பின்னலொன்றின் ஊடாக புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க முன்வரும். ஆனால், ஒற்றையாட்சி என்ற கழற்ற முடியாத கால் விலங்கை பூட்டியுள்ள மகிந்த ராஜபக்ஷ சர்வதேச வலைப்பின்னலொன்றை உருவாக்க முற்பட்டால் முதலில் அவர் பூட்டியுள்ள ஒற்றையாட்சி விலங்கை கழற்றுமாறு அவரே அழுத்தத்திற்கு உள்ளாக வேண்டிய சூழ்நிலை உருவாகும். அது உள்நாட்டில் அவரிற்கு அரசியற் தற்கொலைக்கு ஒப்பானதாகும். தந்திரோபாய ரீதியில் ஜே.வி.பி. ஒற்றையாட்சியைக் கைவிட முன்வந்தாலும், கூட அக்கட்சியின் வாக்கு வாங்கியை குறிவைத்துள்ள ஜாதிக ஹெல உறுமய அதனை அரசியல் மயப்படுத்த முற்படும் என்பதனால் ஜே.வி.பி.யால் அவ்வாறு செய்ய இயலாது போகும். எனவே, தமக்குத்தாமே பொறிக்குள் மாட்டிக் கொண்டுள்ள இக் கூட்டணியால். சர்வதேச வலைப்பின்னலொன்றை இலகுவில் ஏற்படுத்த முடியாது. அத்துடன் இவர்களது பொருளாதாரக் கொள்கை அத்தகைய வலைப்பின்னலை உருவாக்குவதற்கான விலையாக சர்வதேச சக்திகளால் கோரப்படலாம். அதுவும் இவர்களால் விட்டுக் கொடுக்கப்பட முடியாததாகும். அவ்வாறு விட்டுக்கொடுத்தால் இவர்களது வாக்கு வங்கி தகர்ந்து போகும். இவற்றினூடாகப் பார்க்கையில் விடுதலைப் புலிகள் நியாயமான தீர்வைத் தரமுடியாத இருவேட்பாளர்களில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்குரிய சாதகமான சூழலைக் கொண்ட வேட்பாளரை தமது நுணுக்கமான ராஜ தந்திரச் செயற்பாட்டின் மூலம் வெற்றி பெற வைத்துள்ளனர் என்பது தெளிவாகின்றது. மேலும், இத்தேர்தல் புறக்கணிப்புப்பற்றி விமர்சித்துக் கூறப்படும் இன்னொரு கருத்தைப் பார்ப்போம். தழிழர் தமது வாக்கு பலத்தினைக் காட்டாமல் விட்டது எதிர்கால தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் அவர்கள் கணக்கில் எடுக்கப்படாமல் விடப்படக் கூடிய அபாயத்தை ஏற்படுத்தும் என்பதே அதுவாகும். இக்கருத்து இலங்கைத் தீவில் இரு தேசங்கள் என்ற அடிப்படையில் எழாது ஒரே தேசம் என்ற அடிப்படையில் எழுந்துள்ள ஒன்றாகும். அந்தத் தவறான அடிப்படையில் பார்த்தால் கூட அது மிக முட்டாள் தனமான வாதமாகும். உண்மையில் இத்தேர்தல் புறக்கணிப்பின் மூலம் தமிழர் வாக்களித்திருந்தால் கூட ஏற்பட்டிருக்க முடியாத மிகப்பெரிய அளவில் அவர்களது வாக்குப் பலம் உணர்த்தப்பட்டுள்ளது. இப்புறக்கணிப்பு எதிர்கால தேர்தல்களில் தமிழர் குறித்து அரசியல் வாதிகள் அதிக அக்கறை கொள்ள வேண்டிய நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. இத்தேர்தல் புறக்கணிப்பின் மூலம் வெளிவந்துள்ள மற்றுமொரு உண்மை என்ன வென்றால் வடகிழக்குத் தமிழர்களின் அரசியற் பலம் மூலமே மற்றைய சிறுபான்மை இனங்களான மலையகத் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் அரசியல் பலம் பாதுகாக்கப்படும் என்பதாகும். இத்தேர்தலில் மலையகத் தமிழர்களும் முஸ்லிம்களும் மிகப் பெருமளவிற்கு ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களித்தும் மகிந்த ராஜபக்ஷவின் சிங்கள இனவாதக் கூட்டணி அதை முறியடித்துள்ளமை அதைத் தெளிவு படுத்துகின்றது. புலிகள் பல வீனமடைந்து விட்டார்கள் என்றும் தமக்குச் சலுகைகள் தரக் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெற வைக்க முயல்கின்றார்கள் என்றும் கூச்சல் எழுப்பிய இனவாத சக்திகளுக்கு தேர்தல் புறக்கணிப்பு மூலம் வலுவான செய்தியொன்றை அவர்கள் தெரிவித்துள்ளனர். நாம் பலமாக இருக்கின்றோம். எதற்கும் தயாராகவே உள்ளோம். எம்முடன் விளையாட வேண்டாம் என்பதே அதுவாகும். <span style='font-size:25pt;line-height:100%'>மகிந்தவை வெற்றி பெறவைத்த நகர்வொன்றை மேற்கொண்டதன் மூலம் அவரிற்கும் அவரின் இனவாதக் கூட்டணிக்கும் புலிகள் கூறாமற் கூறியுள்ளது என்ன? நீங்கள் எமக்கு ஒரு பொருட்டல்ல. நாங்கள் மிக மிகப் பலமான நிலையிலேயே இருக்கின்றோம். பிரபாகரன் பெருநெருப்பு.புலிகள் சேனை தயாராக இருக்கு. நியாயமான தீர்வைத் தரமுயலுங்கள் என்பதுவே அதுவாகும்</span>. நவம்பர் 17 அன்று சிங்கள மக்களிடமிருந்து வாக்குகளைப் பெறுவதற்கு மகிந்தவின் சிந்தனை உதவியிருக்கலாம். ஆனால் இத்தீவின் தலை எழுத்தை தீர்மானிக்கும் சிந்தனைக்கு அவரும் கூட நவம்பர் 27 வரை பொறுத்திருக்க வேண்டும் http://www.thinakural.com/New%20web%20site...er/20/index.htm - Danklas - 11-20-2005 ஆக மொத்தத்தில எங்கட கூட்டுகளுக்கு (மகிந்த & சோ.வி.பி & மொட்டை மண்டைகள் & டூப்பிடிபி & கொறூனா) புலிகள் வைச்சிட்டாங்க ஆப்பு,, இருந்தாலும் இதில எண்ட டங்குவாரும் கிழிஞ்சுட்டுதப்பா.. பின்ன யாழ்ப்பாணத்தில எனக்கு பயங்கர ஆதரவு இருக்கு எண்டு சிங்களத்துக்கு பறைசாற்றிய எனக்கு, கள்ள ஓட்டு குடும்ப ஓட்டு எல்லாத்தையும் கையால கூட்டிப்பார்த்து விடை சொல்லுறமாதிரி வைச்சிட்டங்கப்பா ஆப்பு....இருந்தாலும் அடுத்த யுத்தம் தொடங்கினால் சோ.வி.பி. தோரர் கொறூனா,டூப்புடிபி உறூப்பினர்களைத்தான் களத்தில இறக்க போறம்ம்ம்ம்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 11-20-2005 Quote:அடுத்த யுத்தம் தொடங்கினால் சோ.வி.பி. தோரர் கொறூனாஇடூப்புடிபி உறூப்பினர்களைத்தான் களத்தில இறக்க போறம்ம்ம்ம்எங்கையப்பு ஓடுறத்துக்கோ........... - Birundan - 11-20-2005 என்ன இருந்தாலும் டக்கிளசுக்கு யாழ்ப்பாணத்தில பெரிய மூக்குடைதான் நடந்திருக்கு, "மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சிகு" என்ன நடக்கப்போகுதோ? மாநிலத்தில் மூக்குடை பட்டால் மத்தியில் அவரை கண்டுக்கவா போறாங்கள். - தூயவன் - 11-20-2005 Birundan Wrote:என்ன இருந்தாலும் டக்கிளசுக்கு யாழ்ப்பாணத்தில பெரிய மூக்குடைதான் நடந்திருக்கு, "மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சிகு" என்ன நடக்கப்போகுதோ? மாநிலத்தில் மூக்குடை பட்டால் மத்தியில் அவரை கண்டுக்கவா போறாங்கள். இதெல்லாம் டக்ளசுக்கு சகஜமப்பா! ஆனால் பாருங்கோ மீசையில்( இவ்வளவு நீளத்துக்கு வளர்த்துக் கொண்டு) மண் ஒட்டாத மாதரித் தான் அறிக்கை விடுவார் பாருங்கோ? :wink: |