Yarl Forum
ஜயோ ஜயகோ - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஜயோ ஜயகோ (/showthread.php?tid=2374)



ஜயோ ஜயகோ - Anandasangaree - 11-19-2005

இலங்கை அரசியலில் இந்தியாவின் சதிக்கு ஜரோப்பிய நாடு வைத்தது ஆப்பு? - றணில் பிரதம மந்திரி.? ? ?http://www.nitharsanam.com/public/rubis/eagle.gif

இலங்கையின் ஜந்தாவது நிறைவேற்று ஜனாதிபதியாக மகிந்த றாஜபக்ச தெரிவாகியுள்ளதுடன் நோர்வே நாட்டின் இலங்கையின் சமாதானப் பேச்சுக்கள் தொடர்பான பக்களிப்பை மீளாய்வு செய்யப் போவதாகவும் சர்வதேச யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரை வெளியேற்றி இந்திய கண்காணிப்பாளர்களைத் தரையிறக்கப் போவதாகவும் அறிவித்துள்ளதுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கையினை மீளாய்வு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ள நிலையில் ஜரோப்பிய வல்லரசு நாடு ஒன்று களம் இறங்கியுள்ளது. மகிந்த றாஜபக்சவினதும் ஜே.வி.பியினரினதும் ஆட்சியைக் குழப்பி அதனை ஓரங்கட்டி சந்திரிகாவின் உதவியுடன் பொதுஜன ஜக்கிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 30 பேரை றணில் விக்ரமசிங்கவின் பக்கம் உள்வாங்கி இலங்கையின் அரசை அமைக்கும் அதிகாரத்தை றணில் விக்றமசிங்கவிடம் பாராளுமன்ற பலத்தினு}டாக வளங்கப்பட இருக்கிறது. இதற்கான பேரம் பேசுதலில் ஜரோப்பிய நாடொன்று களமிறங்கியள்ளதுடன் இதன்கான சாதகமான பதிலையும் சந்திரிகா வளங்கியுள்ளதாக அறியமுடிகிறது. மகிந்த றாஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு ஜரோப்பிய நாடொன்று களமிறங்கியுள்ளதை அறிந்த இந்தியா தனது இலங்கைக்கான து}துவரின் உதவியுடன் றணில் விக்ரமசிங்கவுடனான அவசர பேச்சுக்களில் நேற்றைய தினம் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகிறது. எதிர்வரும் மாவீரர் தினத்தில் தமிழீழத் தேசியத்தலைவர் சொல்ல இருக்கம் கருத்துக்களை உள்வாங்கி அதனைத் தொடர்ந்து ஒரு குறித்த காலத்திற்குள் இதனை உடனடியாகச் செயற்படுத்த இருப்பதாகவும் அறிய முடிகிறது.



தனக்கே உரிய பிரதமந்திரி பதவியும் வெளிநாட்டு அமைச்சர் பதவியும் தராவிட்டால் இந்தத் திட்டத்தில் இணைவதற்கு அனுரா பண்டாரநாயக்காவும் சம்மதித்துள்ளதாக விடயங்களுடன் நெருங்கிய வட்டாரங்கள் நிதர்சனத்திற்குத் தெரிவித்தன. எனினும் தற்போது இலங்கையில் 2 ஜனாதிபதிகள் ஆட்சியில் இருக்கிறார்கள். சந்திரிகா தனது பதவியிலிருந்து விலக மறுத்துள்ளார். எதிர்வரும் 23ம் திகதிக்குப் பின்பே விலகத் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது. ஆகவே தற்போது இலங்கையில் 2 ஜனாதிபதிகள் ஆட்சி செய்து கொண்டு வருகிறார்கள்.
[img][/img][img][/img]