Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 536 online users.
» 0 Member(s) | 533 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,316
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,640
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,069
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,496
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  காட்டுக்குள் 6 மாதமாக சோறு தண்ணீர் இன்றி வாழும் அதிசய சிறுவன
Posted by: SUNDHAL - 11-24-2005, 02:57 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

நேபாள தலைநகர் காட்மாண்டுவை சேர்ந்த சிறுவன் ராம்பகதூர் பங்ஜான். இந்த சிறுவனுக்கு 15 வயது ஆகிறது. இந்த சிறுவன் காட்மாண்டு அருகே உள்ள பாரா பகுதிக்கு சென்றான்.

அங்குள்ள காட்டுப்பகுதியில் ஒரு மரத்துக்கு கீழே உட்கார்ந்தபடி அவன் தவம் இருக்கத் தொடங்கினான்.

கால்களை மடக்கி அமர்ந்து கண்களை மூடி அவன் 6 மாதமாக தவம் இருக்கிறான். இந்த 6 மாதமும் அவன் சோறு தண்ணீர் எதுவும் சாப்பிடவில்லை. எப்போதாவது ஒருசில நிமிடங்கள் மட்டும் கண் விழித்து பார்க்கிறான்.

இது பற்றி கேள்விப்பட்டதும் ஏராளமானவர்கள் அந்த பகுதிக்கு சென்று பார்க்கிறார்கள்.

அந்த சிறுவன் புத்தரின் மறு அவதாரம் என்றும் நேபாள மக்கள் கூறுகிறார்கள். தவம் இருக்கும் அந்த சிறுவனை புத்தரின் மறு அவதாரமாக நினைத்து வழிபாடும் நடத்துகிறார்கள். பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை எதையும் அவன் ஏற்றுக் கொள்வதில்லை.

தினமும் 10 ஆயிரம் பேர் வரை அந்த சிறுவனை பார்க்க செல்வதால் இந்த காட்டுப் பகுதிக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
Thanks:Malaimalar....

Print this item

  எமது பாடல்கள்
Posted by: தூயா - 11-24-2005, 02:11 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (8)

எமது பாடல்கள்

எல்லாரும் கேட்டு மகிழுங்கள்... உங்களிடம் இருந்தால் தாருங்கள்..


1. http://as01.cooltoad.com/music/song.php?id=140121

Print this item

  சந்திரிக்காவின் நாடாளுமன்ற மீள்பிரவேசம்.....
Posted by: selvanNL - 11-24-2005, 12:02 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (7)

<span style='color:indigo'>அரசியலில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்திருந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, தற்பொழுது பல்டி அடித்து நாடாளுமன்றத்துக்கு செல்வதுக்கு திட்டமிட்டிருப்பது பற்றி அண்மையில் ஐ.பி.சி வானொலியில் ஒரு கருத்து பகிர்வு இடம்பெற்றது (இன்று அதாவது 24/11/2005), இதில் முக்கிய கருத்துக்கள் 2 முன்வைக்கப்பட்டது,

சந்திரிக்காவின் நாடாளுமன்ற மீள் பிரவேசம்...
1.தன்னலம் கருதியா?
2.பொது நலம் கருதியா?

இதைபற்றி யாழ்கள உறவுகளே உங்கள் கருத்துக்களை யாழில் முன்வையுங்களேன்???

இதைபற்றி பல நேயர்கள் ஐ.பி.சியில் முன்வைத்தார்கள்,, அவற்றில்..

*இவ்வளவு நாளும் தன்னலம் கருதி செயற்பட்டவர் எனி பொது நலத்துக்காக செயற்பட போகிறார் எனவும்...

*நாடாளுமன்றம் சென்றால் தானக்கு ஏற்பட்டிருக்கும் உயிராபத்துகளை சமாளிக்கலாம்,,,

*தான் அரசியலில் இருந்து விலகிவிட்டால், தனது குடும்ப அரசியல் தன்னோடு அஸ்தமனம் ஆகிவிடும் என்று நினைத்து தனது மகளை, அல்லது மகனை அரசியலுக்கு கொண்டுவரும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது...

*தான் அரசியலில் இருந்து விலகினால், கொலை செய்யப்பட்ட வெளிவிவகார அமைச்சர் லக்ஷமன் கதிர்காமர் வழக்கில் தன்னை விசாரிக்க சாத்தியக்கூறுகள் இருப்பதால், அரசியலில் தொடர்ந்து இருந்தால்த்தான் தப்ப முடியும்....

இப்படி பல கருத்துகளை முன்வைத்தார்கள்... உங்களின் கருத்துகளை முன்வையுங்களேன்,,, :?:</span>

Print this item

  தமிழீழ காலநிலை அவதானிப்பு..
Posted by: selvanNL - 11-24-2005, 11:38 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (10)

<b>தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம் 26-ல் திறப்பு</b>

[size=14]தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம் எதிர்வரும் 26 ஆம் நாள் முதல் இயங்க உள்ளது.
கிளிநொச்சி பாரதிபுரத்தில் 7 ஆம் அறிவியல் நகர் வீதியில் இந்த அவதானிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
அவதானிப்பு நிலையத்தின் திறப்பு விழா 26 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. அகவணக்கம், பெயர்பலகை திரைநீக்கம், கட்டம் திறந்து வைத்தல், அலுவலக அறை திறந்து வைத்தல், கட்டுப்பாட்டறை திறந்து வைத்தல், கணினி தொடங்கி வைத்தல், வரவேற்புரை, வாழ்த்துரை, சிறப்புரை ஆகியன நிகழ்வில் இடம்பெறுகின்றன.

நன்றி புதினம்,,,

தமிழீழத்தேசத்துக்குரிய கட்டமைப்புகள் உருவாகி ஒவ்வொரு பிரிவுகள் ஒவ்வொன்று ஒவ்வொன்றாக உருவாகி வருவது மிகுந்த மகிழ்ச்சிகளை ஏற்படுத்துகின்றது,.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

தேசியத்தலைவரின் பிறந்த நாளில் கால நிலை அவதானிப்பு மையத்தை திறந்து வைக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.. Idea

Print this item

  மாவீரர்களை நினைவு கூரும் நினைவுச் சின்னம்
Posted by: mayooran - 11-24-2005, 11:28 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

<span style='font-size:25pt;line-height:100%'>மாவீரர்களை நினைவு கூரும் நினைவுச் சின்னம் இன்று காலை 10.00 மணியளவில் யாழ்ப்பாணம் பல் கலைக் கழகத்தில யாழ் பல் கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினால் பல் கலைக்கழக கைலாசபதி கலையரங்கிற்கு அருகாமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது </span>

Print this item

  பிரபாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகூற அமைச்சரவை வேண்டுகோள்
Posted by: வியாசன் - 11-24-2005, 10:57 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

பிரபாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கூறி அவரை சந்திப்பதற்கான விருப்பத்தை அறிவிக்க வேண்டும் அமைச்சரவையில் வலியுறுத்தல்
நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை காண்பதற்கான சமாதான முயற்சிகளை கூடிய விரைவில் ஆரம்பிப்பது என நண்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற புதிய அமைச்சரவையின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவை காலை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட பின் முதலாவது அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுஇ மாவீரரின் தினத்தையொட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரன் ஆற்றவுள்ள உரை குறித்தும் அமைச்சர்கள் கருத்து தெரிவித்ததாக தெரிகிறது.

புலிகள் இயக்கத்தின் தலைவர் எதிர்வரும் சனிக்கிழமை 26 ஆம் திகதி தனது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார். அன்றைய தினம் ஜனாதிபதி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அவரை நேரடியாக சந்திக்க விரும்பும் விடயத்தை உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என அமைச்சர்கள் சிலர் கருத்து தெரிவித்ததாக தெரிய வருகிறது.

தேர்தல் காலத்தில் ஜனாதிபதி வேட்பாளர் என்ற முறையில் வெளியிட்ட மஹிந்த சிந்தனையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை கூடிய விரைவில் அமுல்படுத்த வேண்டும். சில விடயங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரமோ பாராளுமன்ற அங்கீகாரமோ தேவையில்லை. அமைச்சு மட்டத்தில் நிறைவேற்றக் கூடிய திட்டங்களை உடனடியாக ஆரம்பிப்பது எனவும் அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டத்தை அடுத்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு கெத்தாராம விளையாட்டரங்கில் தஞ்சமடைந்த அகதிகளை ஜனாதிபதி பார்வையிட்டார். அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்

சுட்டது லங்காசிறியிலிருந்த

Print this item

  கிளிநொச்சி மருத்துவமனைக்கு இந்தியா மருந்துகள்அன்பளிப்பு
Posted by: வியாசன் - 11-24-2005, 10:55 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

கிளிநொச்சி மருத்துவமனைக்கு இந்திய தூதரகம் மருந்துப்பொருட்களை வழங்கியது
இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள்இ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்திலுள்ள கிளிநொச்சி மருத்துவமனைக்குஇ அவசர சிகிச்சைக்கான மருந்துகளைஇ தலைநகர் கொழும்பிலிருக்கும் இந்திய தூதரகத்தில் வைத்து நேரடியாக கையளித்திருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகளின் நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள ஒரு மருத்துவ மனைக்குஇ இந்திய தூதரகம் நேரடியாக மருந்துகளை கையளித்திருப்பது இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது.

இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டஇ கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி.சத்தியமூர்த்தி அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில்இ சுனாமி அனர்த்தம் நிகழ்ந்தபோது வேறுபல நாடுகள் மருந்துகள் உள்ளிட்ட எராளமான உதவிகளை நேரடியாக செய்திருந்தபோதும்இ இந்தியா அப்போது நேரடியாக மருந்துகள் எதையும் தமது மருத்துவமனைக்கு தரவில்லை என்று தெரிவித்தார்.

இந்திய தூதரகம் வழங்கிய மருந்துகளின் விவரங்களையும்இ கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் நிலவும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடுகள் பற்றியும் டி.சத்தியமூர்த்தி அவர்கள் தமிழோசைக்கு அளித்துள்ள செவ்வியில் விரிவாக விவரித்துள்ளார்.

சுட்டது லங்காசிறியிலிருந்து

Print this item

  மூட நம்பிக்கைகளை புகுத்தும் ரஜினி
Posted by: Vaanampaadi - 11-24-2005, 10:37 AM - Forum: சினிமா - No Replies

<b>மூட நம்பிக்கைகளை புகுத்தும் ரஜினி: கி.வீரமணி கடும் தாக்கு</b>

நவம்பர் 24, 2005

சென்னை:

ரஜினி தனது திரைப்படங்களில் ஆன்மீகத்தை புகுத்துகிறார் என்று வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.


திராவிட கழகத் தலைவர் வீரமணி இது பற்றி கூறியதாவது:

பக்தி வந்தால் புத்தி போகும் என்பது பெரியார் கூற்று. அமெரிக்க அதிபர் புஷ் கூட, கடவுள் தான் ஈராக் போரை தொடங்கச் சொன்னார் என்று கூறினார். அதுவும் எனக்கு வியப்பை அளித்தது.

ரஜினிகாந்த் தனது படங்களில் ஆன்மீகம், ஜோதிடம், பேய், பிசாசு, போன்ற மூட நம்பிக்கைகளை புகுத்துகிறார். (சமீபத்தில் வெளியான சந்திரமுகி மற்றும் பாபா திரைப்படம்) அவர் போன்ற குழப்பவாதிகள் தான் பாபாக்கள் பல்லாயிரம் ஆண்டு உயிரோடு இருக்கிறார்கள் என்று நம்புகிறார்கள்.

இதை பக்திக்காக சொல்கிறார்கள் என்பதைவிட வசூல் யுக்திக்காக சொல்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது. இந்த மூட நம்பிக்கையின் முடை நாற்றம் ஒழிந்தாக வேண்டும்.

தற்போது நாட்டில் கற்பு பற்றிய சர்ச்சை எழுந்துள்ளது. கற்பு என்பது பெண்ணடிமைக்கு ஒரு அருமையான கருவி. கற்பு இரு பாலருக்கும் பொதுவானது என்று வரவேற்றவர் பெரியார். ஆனால் தற்போது கிளம்பியுள்ள சர்ச்சை ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு.

தேர்தலில் நாங்கள் மாறி மாறி ஆதரவு அளிப்பதாக கூறுகிறார்கள். மதவெறி, மதவாதத்தை அடிப்படையாக கொண்ட ஆர்எஸ்எசின் ஏவுகணையான பாஜகவுடன் திராவிடக் கட்சிகள் மாறி மாறி கூட்டு சேரும் நிலை தமிழ்நாட்டில் உள்ளது.

எனவே கொள்கை அடிப்படையில் பாஜகவை எதிர்க்கும் நாங்கள் மாறி மாறித்தான் ஆதரவு காட்ட முடியும். ஏனென்றால் பாஜகவை ஆதரிப்பவர்கள் எங்கள் எதிரிகள் என்றார் வீரமணி.

Thatstamil

Print this item

  புத்தரின் மறு அவதாரம்
Posted by: Vaanampaadi - 11-24-2005, 10:30 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

புத்தரின் மறு அவதாரம்

நேபாளத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ராம்பகதூர் பங்ஜான். இந்த சிறுவன்
அங்குள்ள காட்டுப்பகுதியில் ஒரு மரத்துக்கு கீழே உட்கார்ந்தபடி அவன் தவம் செய்து வருகிறான்

கால்களை மடக்கி அமர்ந்து கண்களை மூடி அவன் 6 மாதமாக தவம் இருக்கிறான். இந்த 6 மாதமும் அவன் சோறு தண்ணீர் எதுவும் சாப்பிடவில்லை. கடந்த மேமாதம் 17ந்திகதியில் இருந்து இப்படி இருந்து வருவதாக சொல்லப்படுகிறது

இது பற்றி கேள்விப்பட்டதும் ஏராளமானவர்கள் அந்த பகுதிக்கு சென்று பார்க்கிறார்கள்.

அந்த சிறுவன் புத்தரின் மறு அவதாரம் என்றும் நேபாள மக்கள் கூறுகிறார்கள். தவம் இருக்கும் அந்த சிறுவனை புத்தரின் மறு அவதாரமாக நினைக்கிறார்கள்.

தினமும் 10 ஆயிரம் பேர் வரை அந்த சிறுவனை பார்க்க செல்வதால் கூட்டத்தை கட்டுப்படுத்த ராணுவத்தினர் அங்கு நிலை கொண்டுள்ளனர்.........................


<img src='http://us.news3.yimg.com/us.i2.yimg.com/p/ap/20051123/capt.kat10111231536.nepal_new_buddha_kat101.jpg' border='0' alt='user posted image'>


<b>Nepal Boy Called Reincarnation of Buddha</b>

By BINAJ GURUBACHARYA, Associated Press Writer
Wed Nov 23,10:52 AM ET



KATMANDU, Nepal - A teenage boy has been meditating in a Nepalese jungle for six months, and thousands have flocked to see him, with some believing he is the reincarnation of Buddha, police and media said Wednesday.


Ram Bahadur Banjan, 15, sits cross-legged and motionless with eyes closed among the roots of a tree in the jungle of Bara, about 100 miles south of the capital, Katmandu.

He's supposedly been that way since May 17 — but his followers have been keeping him from public view at night.

A reporter for the Kantipur newspaper, Sujit Mahat, said he spent two days at the site, and that about 10,000 people are believed to visit daily.

Soldiers have been posted in the area for crowd control, officials said.

A makeshift parking lot and cluster of food stalls have sprung up near Banjan's retreat, an area not previously frequented by visitors.

Many visitors believe Banjan is a reincarnation of Gautama Siddhartha, who was born not far away in southwestern Nepal around 500 B.C. and later became revered as the Buddha, which means Enlightened One.

Others aren't so sure.

Police inspector Chitra Bahadur Gurung said officers have interviewed the boy's associates about their claim that Banjan has gone six months without food or drink.

Officers have not directly questioned the boy, who appears deep in meditation and doesn't speak.

"We have a team ... investigating the claim on how anyone can survive for so long without food and water," Gurung said.

Local officials have also asked the Royal Nepal Academy of Science and Technology in Katmandu to send scientists to examine Banjan.

Mahat said visitors can catch a glimpse of Banjan from a roped-off area about 80 feet away from him between dawn and dusk.

Followers then place a screen in front of him, blocking the view and making it impossible to know what he is doing at night, Mahat said.

"We could not say what happens after dark," Mahat said. "People only saw what went on in the day, and many believed he was some kind of god."

Buddhism teaches that right thinking and self-control can enable people to achieve nirvana — a divine state of peace and release from desire. Buddhism has about 325 million followers, mostly in Asia.


http://news.yahoo.com/s/ap/20051123/ap_on_...HNlYwMlJVRPUCUl

Print this item

  நினைவில் நின்றவை
Posted by: தூயா - 11-24-2005, 10:06 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (104)

நினைவில் நின்றவை

உங்களுக்கு பிடித்த பழைய பாடல்களில் ஒன்றின் வரிகளை இங்கே எழுதுங்கள்.

பழைய பாடல்களில் வரிகளில் எனக்கு மிக ஆர்வம் உண்டு.

உங்களுக்கு?

Print this item