| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 523 online users. » 0 Member(s) | 520 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,316
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,640
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,069
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,496
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| தொப்புள் கொடி உறவொன்று... |
|
Posted by: shanmuhi - 11-25-2005, 08:03 AM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (10)
|
 |
<b>தொப்புள் கொடி உறவொன்று... </b>
அன்று அதிகாலை வேளை கண்கள் மூடியபடியே இருக்க நினைவுகளை அசைபோட்டுக் கொண்டே, படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருக்கிறேன். நித்திரைக்கும் நினைவுகளுக்கும் இடையே நடைபெறும் போராட்டம். அதில் நினைவுகள் வெற்றி பெற்றுக்கொள்ள, நித்திரை மெல்லலென விடைபெற்றுக் கொண்டிருந்தது. இன்று எனக்கு பதினெட்டாவது வயது. என் மனம் ஏனோ என் அம்மாவை நினைத்துக் கொண்டு ஏங்கியது.
என் சின்ன சின்ன தேவைகள், என் அன்பை முழுவதுமாக கொட்டிக்கொள்ள... அம்மா என்னுடன் இருந்திருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்ன செய்வது. ம்... அன்று செய்ய வேண்டிய கடமைகள் ஒவ்வொன்றையும் மனதினுள் எடைபோட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அறைக்குள் வந்த அப்பா
"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களம்மா..." என்றபடியே முத்தம் தந்து விட்டு, "எப்போதும் போல நீ நல்லா சுகமா இருக்கோனும்..." என்று வாழ்த்தி விட்டுப் போகின்றார்.
நானும் எழும்பி, காலைக் கடமைகள செய்ய முற்படுகிறேன். அனைத்தையும் முடித்துவிட்டு, அம்மாவின் படத்துக்கு விளக்கேற்றி, மலர்கள் தூவி வணங்கியபடியே... இன்றுதான் முதன்முதலாக அம்மாவின் படத்தைப் பார்ப்பது போல் வைத்த கண்வாங்காமல் மெய்மறந்து பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்.
ம்... என் நினைவு முழுவதும் அம்மாதான். எல்லோரும் சொல்வது போல் நான் அம்மா மாதிரிதான் இருக்கிறன். என்னைப்பார்த்தால் அம்மாவை பார்க்கத் தேவையில்லை என்பது போல் உருவ ஒற்றுமை அப்படி கச்சிதமாக இருந்தது. உறவினர் நண்பர்கள் பலர் கூறியிருக்கிறார்கள் "நீ அசல் அம்மா மாதிரியே உரிச்சி வைச்சி பிறந்திருக்கிற..." என்று சொல்லும் போது, ஆனால் நான்தான் அம்மா தான் என்னைப்போல் இருக்கிறா” என்று சிறுவயதில் விளையாட்டாக சொன்னவற்றையே இப்போதும் சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறேன்.
இன்றுதான் முதன் முதலாக "ம்.... அம்மா வைப்போலத்தான் நான் இருக்கிறேன்" என்று முழுமனதாக ஏற்றுக் கொள்கிறேன். அம்மாவை நினைக்கும் போது என் உடம்பில் என்னையறியாமல் ஒர் புது உணர்வு ஊடுருவுவது போல் உணர்ந்து கொள்ள, என் கண்கள் பனிக்கத் தொடங்குகின்றன. அம்மாவின் நினைப்பு இதயம் முழுவதும் உந்தி எழ... கண்ணீர் பொழ பொழ வென வழியத் தொடங்குகிறது.
"அம்மா அம்மா... எனக்கு அம்மா வேண்டும்..."
"என்னம்மா பிறந்த நாள் அதுவுமாக ஏன் இப்படி" என்று அப்பா அன்பாக கூறியபோது, என்னால் அழுகையை நிறுத்தவே முடியவில்லை. "அப்பா..." என்றபடியே மீண்டும் அழுத்தொடங்குகிறேன். மனதிலுள்ள பாரம் இறங்குமட்டும் அழட்டும் என்று அப்பாவும் சில கணங்கள் மௌனமாகவே இருக்கின்றார்.
"அப்பா நான் அம்மாவின் கல்லறையைப் பார்க்கோணும். அந்தக் கல்லறையை நான் தொட்டுக் கும்பிட வேண்டும் என்னுடைய அம்மா வாழ்ந்த பூமியை நான் ஒருக்கா பார்க்கோணும் எனக்கு அம்மா வேண்டும்" என்றேன் வழக்கமாக அழுதபடியே...
இப்படி நான் கூறுவது ஒன்றும் புதிது இல்லை... ஆனால் அப்பா நெடுக இதைத்தான் சொல்வார்
"அகிலா, எனக்கும் உன்னைக்கூட்டிக்கொண்டு ஊருக்கு ஒருக்கா போய் வரவேண்டும் என்ற ஆசை நிறையவே இருக்கம்மா ஆனால்... போற இடத்துல ஆமிக்காரங்கள் எனக்கோ உனக்கோ ஏதும் செய்து போட்டால் என்டால் அதை என்னால் நினைச்சு பார்க்க முடியாதும்மா. எப்பபார்த்தாலும் ஆமியிண்ட கெடுபிடிதான் அதிகமா இருக்கும்.." அப்பா வழமையாக ஒப்புவிப்பவை இவை.
ஆனால்... இன்று வழமைக்கு மாறாக "பிள்ள அகிலா இந்தமுறை மாவீரர் வாரத்தில்ல நாம் ஊரில்ல நிற்கிறோம். இது பிராமிஸ்(promise). இப்போ சந்தோசம் தானே..?"
என்று கூறிய போது எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்குத் தெரியுமே. வானத்தில பறக்கிற மாதிரி அப்படி ஒரு உணர்வு. என்ட நண்பிகள் எல்லாம் தமிழீழத்தைப்பற்றிச் சொல்லேக்க எனக்கு சரியான கவலையாய் இருக்கும். ஆனா இப்ப எனக்கிருக்கிற சந்தோசத்தில்ல என்ன செய்யுறதென்டு தெரியல..
அம்மாவை சின்னவயசுல பார்த்தது எனக்கு பெரிசா நினைப்பில்லை. எனக்கு எல்லாமே என் அப்பாதான். அம்மா சயனைட் குப்பிகளுக்குள் தன்னை ஆட்படுத்திக் கொண்டு, மாவீரர் ராக மரணித்து கல்லறைகளுக்குள் துயின்ற போது, எனக்கு வயது மூன்றாக இருந்தது. என் அப்பா என்னை அழைத்துக் கொண்டு, தன்னந் தனியனாய் என் வாழ்வு சிறப்பாக அமையும் நோக்குடன் லண்டன் நாட்டுக்கு அகதி அந்தஸ்து தேடி வந்தார்.
அன்றிலிருந்து அவர் எனக்காகவே வாழ்ந்து வருகின்றார். அடிக்கடி சொல்லிக் கொள்வார். "எப்பாடு பட்டாவது உவள நல்லா படிப்பிச்சு போடனும். நல்ல ஒருத்தனிட்ட இவளை ஒப்படைக்க வேண்டும்"என்பார்.
இதைவிட அப்பா லண்டலில் நடைபெறும் ஒவ்வொரு மாவீரர்தின நிகழ்வுகளுக்கும் என்னை அழைத்துச் செல்வது, தன்னால் ஆன உதவிகளையும், பங்களிப்புக்களையும் செய்யத் தவறுவதே இல்லை. அப்படித்தான் ஒருநாள் என்னை மாவீரர் நிகழ்வுக்கு அழைத்துக் கொண்டு சென்ற சமயம், அங்கு ஒலிக்கும் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த சமயம்...
அந்த பாடலில் வந்த வரிகள்
<b>படலையில் தினம் காத்திருப்பேன்
பள்ளி சென்று நீ திரும்பும் வரை
சுடலைக்கு உன்னை அனுப்புவேனோ
சோதனை ஏனனை ராசாவே
பகைவர் குண்டுகள் நெஞ்சினிலே நெஞ்சினிலே
சுமக்கும் உன்வீரம் வரலாறு ஆனதே
என் மனதை சற்றே கலங்க வைக்கின்றது.</b>
"அப்பா, இந்தப் பாடலையெல்லாம் கேட்கும் போது... மனசுக்குள்ள ஏதோ ஒரு உணர்வு... சோகம்... வலி... என்ன என்று சொல்லத் தெரியல எனக்கு அழவேண்டும் போல இருக்கு. ஏன் எங்கட நாட்டில இப்படி... சாவதை நினைத்தால்... எனக்கு கவலையா இருக்கு அப்பா..." என்றேன்.
அப்போது அப்பா மிகத் தெளிவாக
"அகிலா மாவீரர்கள் ஒருபோதும் மரணிப்பதில்லையம்மா. அவர்கள் வாழ்ந்த மண்ணிலே விழுதாகி வேர் விடுகிறார்கள். அவர்கள் காற்றில் கலந்து எம் சுவாசத்தில் வாழ்கிறார்கள்..." என்று கூறியதை அடிக்கடி என் நினைவில் நிலை நிறுத்திப் பார்த்து இருக்கிறேன்.
இம்முறை தமிழீழத்தில் இதன் நிகழ்வுகளை நேரில் காணப்போவதோடு, என் அம்மாவின் கல்லறையை காணப் போகிறோம் என்ற மகிழ்வே என்னிடம் அதிகமாக இருந்தது.
தமிழீழ மண்ணில் காலடி வைத்தபோது, எமக்கு கிடைத்த வரவேற்பு கண்டு உடம்பெங்கும் ஒர் இனம்புரியாத உணர்வு ஊடுருவதை அறிந்து கொள்கிறேன். அது இன்பத்தின் பிரதிபலிப்பா...? அல்லது அது என்ன...? என்று என்னால் தெரிந்து கொள்ளமுடியவில்லை. பாதைகளில் பாதம் படப்பட எனது சின்னவயதின் காலத்துக்குள் புகுந்துவிட்ட நினைப்புடன், வீடுகள் ஒவ்வொன்றையும் என் கண்கள் தடவிய படியே வந்தன.
நான் சிறுவயதில் ஒடியாடி, விளையாடிய இடம், வீடு எல்லாவற்றையும் அப்பா காட்டினார். என் அம்மா வாழ்ந்த இடமும் அதுதான். அம்மாவின் கைகளை பற்றியபடி இந்த வீதியெல்லாம் சுற்றி, சுற்றி வந்திருக்கிறேனே. மீண்டும் ஒருமுறை என் ஆசை அம்மாவின் கைகளை இருக பிடித்துக் கொண்டு இந்த பாதையை... ஏன் இந்த உலகத்தை சுற்றிக்கொண்டு வர மாட்டேனே... என்ற ஏக்கம் பெருமூச்சாக வெளிப்படுகிறது.
வீட்டிலிருந்த என் பெரியம்மா, பெரியப்பா எல்லோரும் எங்களை அணைத்து தங்கள் அன்பைத் தெரிவித்துக்கொண்டார்கள். பெரியம்மா என்னை உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னா
"அசல் அம்மா வை வார்த்து எடுத்த மாதிரி அப்படியே இருக்கிறாள்.." என்றாள்.
நாம் வருதை தெரிந்து கொண்ட பல உறவினர்கள் பலர் வீட்டிற்கு வந்து சுகம் விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதில் இருந்த ஒரு பெரியவர்
"உவள் சந்தியாவின்ட பெட்டையே. நான் அவள்தான் வந்து நிக்கிறோளோ.. என்டு நினைச்சுப்போட்டன். ம்... அவள் தான் மாவீரரா போயிட்டாள்." என்று சொல்ல அதற்கு மற்றவர் "சந்தியாவின்ட பெட்டைதான் உவள். அசல் கொம்மாவைப்போலவே தானே இருக்கிறாள்..." என்று சொல்ல,
"இன்னும் ஒருவர் "இண்டைக்கு காலத்தால உந்த காகம் விடாம கத்திக் கொண்டு இருந்த போதே நினைச்சனான். யாரோ வரப்போயினம் என்டு..."
சாய்மனைக் கதிரையில் அமர்ந்திருந்த வயதான ஆச்சி "கடவுளான உந்த பிள்ள சந்தியா இருக்குமட்டும் எனக்கு கரைச்சல் இல்லை உந்த கிணத்துல்ல தண்ணி அள்ளி தாரது எல்லாம் உவள் தான்..." என்றும்
இப்படி எத்தனையோ உரையாடல்கள்.
அம்மாவைப்போல் நானிருக்கிறேன் என்று எல்லோரும் கூறியதில் எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அப்பாவின் முகத்திலும் என்றுமில்லாத மகிழ்ச்சிக்களை... அன்று இரவு முழுவதும் வீட்டு முற்றத்தில் அமர்ந்த படியே உரையாடி, சாப்பிட்டது எல்லாம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அந்நிய நாட்டில், அந்நியமாகிப்போய், அன்னியனுக்கு அகப்பட்ட வாழ்க்கையில் அகதியாய் வாழ்ந்த வாழ்க்கைக்கும், உறவினரோடு உறவினராய் அளாவலாவி வாழ்கின்ற வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசமும், எல்லாம் மறக்கமுடியாத நினைவுகளாயும் இருந்தது.
அம்மாவின் இளமைக்காலம், படிப்பு, அம்மாவின் குறும்புத்தனங்கள், இலட்சியங்கள் எல்லாம் மணிக்கணக்காக அதை உறவினர்கள் சொல்ல... சொல்ல... எனக்குள் அம்மா உயர்ந்து கொண்டே நின்றாள். அம்மா உனக்கு நான் மகளாக பிறந்தது அது நான் செய்த புண்ணியம்.
அன்று இரவு முழுவதும் என் நினைவில் அம்மாவைப்பற்றிய நினைவுகளே... வலம் வந்து கொண்டே இருந்தன. அடுத்த நாள் நானும் அப்பாவும், உறவினர்களும் அம்மாவின் கல்லறைக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டு, அங்கு சென்று அடைந்தோம்.
நெருப்பாய் கனலும் நெஞ்சத்துடன், பொங்கி நுரைத்துக் கரையுடைத்துப் பாய்ந்து கொண்டிருக்கும் போராட்ட நதிவேகம் எனக்குள் மெல்லென தொற்றிக்கொள்ள ஆரம்பித்தக் கொண்டிருந்தது.
அடுத்தகணமே அத்தனையையும் சாந்தமாக்கி, விழிநீர் பூக்கவைக்கும் இயல்பிற்குறியவர்களாக அங்குறங்கும் மாவீரர்கள் கல்லறைகள் அமைந்திருந்தது.
அங்கே... என் அம்மாவின் கல்லறையில் விளக்கேற்றி, தொட்டு வணங்கியபோது... என் கண்கள் பனிக்கத் தொடங்கன. அம்மாவைக் கட்டிக்கொண்டு அழுவது போல், அம்மாவின் கல்லறையை கட்டிக் கொண்டு ஓ... வென அம்மா, அம்மா... என்று அழ வேண்டும் போல் ஒர் துடிப்பு... வேகம்... எனக்குள் அடக்கிக் கொண்டேன். அப்பா கூறியது இப்போதும் என் நினைவில் எதிரொலித்தபடியே... எனக்குள் புது தைரியத்தைத் தந்து கொண்டிருந்தது.
"அகிலா மாவீரர்கள் ஒருபோதும் மரணிப்பதில்லையம்மா. அவர்கள் வாழ்ந்த மண்ணிலே விழுதாகி வேர் விடுகிறார்கள். அவர்கள் காற்றில் கலந்து எம் சுவாசத்தில் வாழ்கிறார்கள்"
அப்பாவின் பார்வை என்மீது விழுகின்றது. எங்கே... நான் அழுதுவிடுவேனோ... என்று ஆனால் என்னைப்பார்த்து அப்பா ஆச்சரியப்படுகின்றார்.
எல்லோரும் என்னை அம்மா மாதிரி என்று சொல்றார்களே... அப்படிப்பட்ட எனக்கு மட்டும் ஏன் அம்மாவின் நெஞ்சினில் நிலை நிருத்திப்போன லட்சியம், நாட்டுப்பற்று போன்ற உணர்வுகள் இல்லாமல் போய்விட்டது. அம்மாவின் தொப்புக்கொடி உறவாய் பிறந்த எனக்குள் அவை எங்கே ஒளிந்து போனது...? என்று என்னையே கேட்டுக் கொள்கிறேன்.
கண்ணீரால் வெறும் வார்த்தைகளால் அழிந்து விட முடியாத துயரம் ஒன்று நெஞ்சுக்குள் தீயாகியது. கல்லறையில், வைக்கப்பட்ட தீப ஒளியில், என் இதயத்துள்ளும் ஒரு தீச் சுவாலை ஒன்று பிரவாகமெடுத்து, சங்கமித்துக் கொண்டிருந்தது.
உள்ளத்தின் வெள்ளமது நதிபோல அசைந்து, என்னிதயத்தின் ஓரத்தில் உறங்கிக் கிடந்த என் மனப்பறவையது விழித்துக் கொண்டு இசைக்கின்றது என் மண் ! என் மக்கள் ! என் மொழி !
என்றோ ஒர் நாள் எம் இனத்தின் எல்லா துன்பமும் தொலைந்து போய், அங்கே அத்தனை அடிமைத்தனமும் முடிந்து போன வாழ்விருக்கும். அதுவரை என் வாழ்வின் போராட்டமும் தொடர்ந்தபடியே... தொப்புள் கொடி உறவாய்.... பரிணமிக்கப்போகின்றது.
(யாவும் கற்பனை)
|
|
|
| பனிப்பாறைகள் உருகுவதால் உலகின் சிலபகுதிகள் மூழ்கும் ஆபத்து! |
|
Posted by: Rasikai - 11-25-2005, 12:06 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (16)
|
 |
<b>பனிப்பாறைகள் உருகுவதால் கடல் நீர்மட்டம் 1 மீட்டர் உயரும்:</b> உலகின் சிலபகுதிகள் மூழ்கும் ஆபத்து
இன்னும் 100 ஆண்டுகளில் கடல்நீர் மட்டம் 1மீட்டர் உயர்ந்து விடும். உலகின் பல பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மாறி வரும் தட்பவெப்ப நிலைகள், இயற்கைமாற்றங்கள், விஞ்ஞான வளர்ச்சிக்கு இடையே உலகின் வெப்பம் அதிகரிப்பு காரணமாக வட துருவத்தில் உள்ள பனிப்பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக உருகி வருகின்றன.
வடதுருவத்தில் வெப்பம் அதிகமாவதால் அங்கு பனிப்பாறைகள் இப்போது வேகமாக உருகி வருகிறது. இதனால் கடல் மட்டம் அதிகரித்து வருகிறது.
இது பற்றி ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள் அபாய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இதன்படி இன்னும் 100 ஆண்டுகளில் கடல் நீர்மட்டம் 1 மீட்டர் உயர்ந்து விடும். இந்த மாற்றம் உலகின் பல பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும். புயல், பலத்த மழை போன்றவை அடிக்கடி ஏற்பட்டு பேரழிவுகள் ஏற்படும். கடல் நீர் மட்டம் உயர்ந்து பல பகுதிகளை மூழ்கடித்து விடும்.
இந்த அபாயத்தை விஞ்ஞான ரீதியில் தடுக்க நடவடிக்கை எடுத்தாலும் கூட அதற்கு 1000 ஆண்டுகள் பிடிக்கும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
நன்றி http://www.vaddakkachchi.com/tech/index.ph...t_from=&ucat=2&
|
|
|
| அமரர் திரு.C.J.T.தாமோதரம் |
|
Posted by: Selvamuthu - 11-24-2005, 11:08 PM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல்
- Replies (3)
|
 |
<b>திரு.C.J.T.தாமோதரம்</b>
திரு.C.J.T.தாமோதரம் அவர்கள் தனது 87 ஆவது வயதில் சென்ற 27.10.2005 அன்று இலண்டனில் காலமானார். இவர் ஒரு கணித ஆசிரியர். புலம் பெயர்ந்த தமிழ் மக்களுக்காக பல பணிகளைச் செய்தவர். இலண்டனில் இருக்கும் மூத்த தமிழ்ப்பாடசாலையான மேற்கு இலண்டன் தமிழ்ப் பாடசாலையை 1978 இல் ஆரம்பித்தார். Tamil Times என்ற ஆங்கிலப் பத்திரிகை, "Putney Church" (the London Tamil Christian Community), Standing Committee of Tamils (SCOT) போன்றவற்றை ஆரம்பிப்பதற்கு உறுதுணையாக இருந்தவர். அதன் பின்னர் Association of Commonwealth Teachers, League of Friends of the Jaffna University, International Tamil Foundation (ITF) என்பனவற்றை ஆரம்பித்துவைத்தார். கடந்த வருடம் Tamil Writers' Guild என்பதனையும் ஆரம்பித்து வைத்தார்.
கீழ்க்காணும் இணையத்தளத்திற்குச் சென்று மேலதிகமானவற்றைப் பார்வையிடலாம். இவருடைய தமிழ்ச் சேவைக்கு நான் தலை வணங்குகிறேன். அமரர் ஆகி ஒரு மாதம் ஆகப்போகும் தருணத்தில் அவரை நினைவு கூருதல் சரியானதாகவே எனக்குப் படுகிறது.
www.thamotheram.co.uk
|
|
|
| வீடியோ உரிமை மீறல் தண்டணை ஒரு கோடி ரூபா |
|
Posted by: AJeevan - 11-24-2005, 09:01 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (1)
|
 |
<b>Video pirate fined ten million rupees in compensation.</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/11/20051124132255joe-abeywickrama.jpg' border='0' alt='user posted image'>
<i>Joe Abeywickrama</i>
The courts slammed a heavy fine on video pirating.
The Colombo commercial high court ruled on Thursday that prominent actor Joe Abeywickrama be paid ten million rupees in compensation.
Kapila Kumara Kothalawala, proprietor of Torana Video was found guilty of making pirate copies of a teledrama produced by Joe Abeywickrama.
Abeywickrama told courts that Torana had made pirate copies for sale of the teledrama
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/11/20051124132420sakisanda-49.jpg' border='0' alt='user posted image'>
<b>'Sakisanda Eliyas' </b>produced by him.
In defence the proprietor of Torana Video said that he made copies of the video only for archival purposes.
He said that he did not sell copies of the video.
High court judge KT Chithrasiri ruled in favour of Abeywickrama saying that Kothalwala was guilty of committing an offence under the intellectual property act.
-BBC
<img src='http://www.siff.jp/siff98/jpg/fullmoon.jpg' border='0' alt='user posted image'>
<i>ஜோ அபேவிக்கரம (பெளர்ணமி இரவில்)</i>
[size=14] <b>சக்சந்த எலிய</b> எனும் தொலைக் காட்சித் தொடரை அனுமதியின்றி பிரதி செய்து விற்ற குற்றத்துக்காக இலங்கையின் புகழ் பெற்ற வீடியோ விற்பனை நிறுவனமான <b>தொரண வீடியோ</b> நிறுவன உரிமையாளர் கபில குமார கொத்தலாவல ஒரு கோடி ரூபாய் நஸ்டஈட்டுத் தொகையாக இலங்கையின் பழம் பெரும் நடிகரும் <b>சக்சந்த எலிய</b> தயாரிப்பாளருமான ஜோ அபேவிக்கரம அவர்களுக்கு செலுத்துமாறு Colombo commercial high court உத்தரவிட்டுள்ளது.
<b>தொரண வீடியோ</b>
www.toranavideo.com
நிறுவன உரிமையாளர் கபில குமார கொத்தலாவல <b>சக்சந்த எலிய</b> தொலைக்காட்சித் தொடரை தாம் விற்பனை செய்யவில்லை என வாதிட்டார்.
இவ் வெற்றி பற்றி ஜோ அபேவிக்கிரம பேசும் போது அப்பாவிக் கலைஞர்களுடைய கலைகளை விற்று பணம் சம்பாதிப்பவர்களுக்கு எதிராக வழக்கு போட ஏழ்மையில் வாழும் கலைஞர்களால் முடிவதில்லை. அதற்கான பண பலம் மற்றும் பின்னணிகள் அவர்களிடம் இல்லை.
இறந்து போன பல கலைஞர்களது படைப்புகள் தொட்டு இளம் கலைஞர்களது படைப்புகள் வரை இப்படியானவர்களால் சூறையாடப்படுகிறது. அரசு கூட இவற்றைக் கண்டு கொள்வதில்லை. இதுவே இலங்கையில் திருட்டு வீடியோ சட்டத்துக்கு எதிராக நடத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டதும் வெற்றி பெற்றதுமான முதல் வழக்காகும் என்றார்.
மேலும் இவ் வழக்கை தாக்கல் செய்து வாதாடிய வழக்கறிஞர்கள் எதுவித பணமும் வாங்காமல் இலவசமாக வாதாடியதை வாஞ்சையோடு குறிப்பிட்டார்.
|
|
|
| புலிகளும், இந்தியப் பாதுகாப்பும் |
|
Posted by: Birundan - 11-24-2005, 08:16 PM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (5)
|
 |
விடுதலைப் புலிகள் இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இறையான்மைக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்பதான ஒரு கருத்து இந்திய ஊடகங்களால் பல காலமாக தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது.
விடுதலைப் புலிகளுக்கு ஏதிரான இவ்வாறான கருத்துக்கள் பல நிலைகளில் முன்வைக்கப்படுகிறது
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டால் இலங்கையில் அமெரிக்க படைகள் நுழையும். அது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்
தமிழ் ஈழம் அமைந்தால் தமிழ்நாட்டை விடுதலைப் புலிகள் பிரித்து ஒரு அகன்ற தமிழ் தேசத்தை உருவாக்க நினைப்பார்கள் அல்லது சுதந்திர தமிழ் ஈழம் அமைந்தால் அதன் பாதிப்பால் இங்குள்ள தனித் தமிழ் இயக்கங்கள் தனி நாடு கோருவார்கள்
ராஜீவ் காந்தியின் படுகொலை
1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்குப் பிறகு, கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவிலும் உலக நாடுகளிலும் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்ட போதிலும் இந்த வாதங்கள் மட்டும் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்த உளுத்துப் போன வாதங்கள் தவிர புதிதாக சில வாதங்களும் தற்பொழுது சேர்ந்து கொண்டுள்ளன.
விடுதலைப் புலிகளின் புதிய விமானங்கள், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளன
புலிகள் சமர்ப்பித்துள்ள - ISGA (Interim Self Governing Authority) எனப்படும் இடைக்கால நிர்வாக அமைப்பின் சரத்துப் படி இந்துமகா சமுத்திரத்தில் மூன்றாவது கடற்படையாக புலிகளின் கடற்படை உருவாவது நீண்ட கடற்கரையுடைய இந்தியாவின் பாதுகாப்பிற்க்கு அச்சுறுத்தலாக அமையும்
இந்த வாதங்களில் எந்தளவிற்கு உண்மையிருக்கிறது ? இந்த வாதங்களின் படி இந்தியாவின் பாதுகாப்பிற்கு புலிகள் உண்மையில் அச்சுறுத்தலாக இருக்கிறார்களா ? அல்லது தமிழ் ஈழம் அமைவதை விரும்பாத சில பத்திரிக்கைகள்/குழுக்கள் இந்த வாதங்களை பல ஆண்டுகளாக தொடர்ந்து அப்படியே பராமரித்து வருகிறார்களா ?
இது பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்திருந்தாலும், இந்த Thanks Giving விடுமுறையில் தான் அதற்கான நேரம் கிடைத்திருக்கிறது.
1987க்குப் பிறகு உலக அரசியலில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டன. குறிப்பாக பனிப்போர் முடிவிற்கு வந்து உலக வரைப்படத்தில் இருந்து சோவியத் யுனியன் காணாமல் போனது. இரு வல்லரசுகளுக்கும் அதனைச் சார்ந்த சார்பு நாடுகளுக்கும் இடையே இருந்த பகையுணர்வு குறைந்து பரஸ்பரம் நட்புறவை வளர்த்துக் கொள்ள அனைத்து நாடுகளும் முனைந்தன. போரும், ஆயுதக்குவிப்பிற்குமான முக்கியத்துவம் குறைந்து நாடுகளிடையே நட்புறவும், பொருளாதார வர்த்தக உறவும் முக்கியத்துவம் பெற்றன.
குரூட்டுதனமாக சோவியத் பாணி பொருளாதாரத்தை நேரு தொடங்கினார் என்ற ஒரே காரணத்திற்கு விடாப்பிடியாக பற்றி வந்த காங்கிரஸ், நரசிம்மராவ் தலைமையில் அதனை 1991ல் மாற்றியது. பொருளாதாரம் தளர்த்தப்பட்டது.
இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளிலும் 1991ல் சோவியத் யுனியன் சிதறுண்ட பிறகு பெரிய மாற்றம் ஏற்பட்டது.
பனிப்போர் காலத்தில் அணிசேரா நாடு என்ற முகமூடியை இந்தியா அணிந்திருந்தாலும் உண்மையில் சோவியத் யுனியனின் மிக நெருங்கிய நட்பு நாடாக தான் இந்தியா செயல்பட்டது. எனவே இயல்பாக பல நேரங்களில் அமெரிக்காவிற்கு எதிராகவும் சோவியத் யுனியனிற்கு ஆதரவாகவுமே இந்தியாவின் கொள்கைகள் அமைந்தன. இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட சமயத்தில் இலங்கை உலக இராணுவ மையத்தில் கேந்திர முக்கியத்துவம் உள்ள பகுதியாக விளங்கியது. தெற்காசியாவில் தன் இரணுவத்தை நிலை நிறுத்திக் கொள்ள அமெரிக்காவிற்கு ஒரு இடம் தேவைப்பட்டது. எங்கே இலங்கையில் அமெரிக்கப் படைகள் நுழைந்தால் தன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நேருமோ என்று எண்ணி இந்தியப் படை அமைதி காக்கும் படையாக இலங்கையில் நுழைந்தது. அதன் பிற்கு நடந்தது ஒரு சோசகமான வரலாறு.
1991க்குப் பின் இந்தியா மிகவும் நம்பியிருந்த சோவியத் யுனியன் சிதறுண்டது, இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு ஒரு புதிய திசையை கொடுத்தது. சோவியத் யுனியன் போதையில் மறந்து போய் இருந்த நாடுகளிடம் உறவை இந்தியா புதுபிக்கத் தொடங்கியது. அதே சமயத்தில் இந்தியாவின் அணு ஆயுத பலம் மற்றும் இரணுவ பலத்துடன் பொருளாதார பலமும் கைசேர பில் க்ளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்த பொழுது, இந்தியாவுடன் அமெரிக்காவின் உறவை வளர்க்கத் தொடங்கினார்.
இது தவிர அமெரிக்கா சீனாவை தனக்கு எதிர்கால போட்டியாக கருதுகிறது. சீனாவின் பலத்துடன் மோத வேண்டுமானால் ஆசியாவில் அதற்கு ஒரு நட்பு நாடு தேவைப்பட்டது. சீனாவுடன் பொருளாதாரம் மற்றும் இராணுவ பலத்தில் ஆசியாவில் போட்டியிடக்கூடிய ஒரே நாடு இந்தியா தான். எனவே இந்தியாவுடன் பொருளாதார ரீதியில் மட்டுமில்லாமல் இராணுவ ரீதியிலும் தன் உறவை அமெரிக்கா வளர்த்துக் கொள்ள தொடங்கியிருக்கிறது. பல இராணுவ தளவாடங்கள், அணு ஆயுத ரீதியிலான ஒத்துழைப்பு, அணு ஆயுத எதிர்ப்பு ஏவுகணைகள் (Anti Nuclear Missile system) விற்பனை போன்ற எண்ணற்ற இராணுவ உதவிகளை இந்தியாவிற்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் அமெரிக்கப் படைகள் தெற்காசியாவில் நுழைவதை தன்னுடைய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக கருதி வந்த இந்தியா, இன்று அமெரிக்கப் படைகளுக்கு இந்தியாவிலேயே இடமளிக்க தொடங்கியிருக்கிறது.
அமெரிக்கப் படைகள் இந்தியப் படைகளுடன் ப்ல பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் இந்திய விமானப்படையும், அமெரிக்க விமானப்படையும் கூட்டதாக போர் பயிற்சிகளில் ஈடுபட்டனர். அமெரிக்கப் படைகள் இந்தியாவில் பயிற்சி அளித்தது தவிர இந்தியாவில் இருந்து ஒரு குழு அலாஸ்கா சென்று மேலும் பயிற்சிகளில் ஈடுபட்டது.
அமெரிக்க, இந்திய இராணுவ ஒத்துழைப்பு மிக முக்கியமான ஒரு நிலையை அடைந்திருக்கிறது. சீனாவின் வளர்ந்து வரும் இராணுவ மற்றும் பொருளாதார பலத்தை எதிர்கொள்ள இந்தியாவை உற்ற நேச நாடாக அமெரிக்கா தற்பொழுது அங்கீகரித்திருக்கிறது. இதனால் தான் இரானுக்கு எதிராக International Atomic Energy Agency கூட்டத்தில் இந்தியா வாக்களித்தது. இந்தக் கூட்டத்தில் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் வாக்களிப்பில் பங்கு பெறாமல் நடுநிலை வகித்தன. கடந்த காலங்களில் ரஷ்யாவை சார்ந்தோ அல்லது நடுநிலை வகித்தோ செயல்பட்டுவந்த இந்தியா இம் முறை அமெரிக்காவின் உற்ற தோழனாக மாறி அமெரிக்கா சார்பு நிலையை எடுத்தது.
கடந்த சில ஆண்டுகளாக செய்திகளில் அதிகம் அடிபடாமல் இந்தியாவும், அமெரிக்காவும் மேற்கொள்ளும் இரணுவ ஒத்துழைப்பு வியப்பை அளிக்கிறது. இந்தியா தவிர ஆசியாவின் பிற இடங்களில் இந்தியாவும், அமெரிக்காவும் தங்கள் இராணுவ ஒத்துழைப்பை அதிகப்படுத்தி வருகின்றன. மலாக்கா நீரிணையில் இந்திய மற்றும் அமெரிக்க கடற்படைகள் கூட்டாக ரோந்து மற்றும் இராணுவ பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன. இப் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் இந்தியாவை சீனாவின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டுள்ளது.
பனிப் போர் காலத்தில் இலங்கை விஷ்யத்தில் அதிக அக்கறை காட்டிய இந்தியா தற்பொழுது இப் பிரச்சனையில் தன்னை அதிகம் ஈடுபடுத்தி கொள்ளாமைக்கு முக்கிய காரணம், அமெரிக்காவால் தனக்கு இந்தப் பிராந்தியத்தில் அச்சம் இல்லை என்பது தான். தன்னுடைய நலனுக்கு பிரச்சனையில்லாத பொழுது இலங்கையின் உள்விவகாரத்தில் தேவையில்லாத தலையீட்டையும் இந்தியா விரும்பவில்லை.
1980களில் அமெரிக்காவுடனும், பிரிட்டனுடனும் இணைவதாக பூச்சாண்டிக் காட்டிய இலங்கை, தற்பொழுது அது பற்றியெல்லாம் பேசாமல், இந்தியாவுடன் இராணுவ ஒத்துழைப்பை வேண்டுவது கூட இந்தியாவை தன் சார்பாக தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் முயற்சி தான்.
இன்று அமெரிக்கா இலங்கையில் நுழைந்தால் கூட இந்தியா எதிர்ப்பு தெரிவிக்காது என்றே கருதப்படுகிறது (நான் மட்டும் சொல்ல வில்லை. ஆசியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் பற்றி ஒரு முறை கட்டுரை எழுதிய ஹிந்துவும் இதைத் தான் தெரிவிக்கிறது).
சுனாமிக்குப் பிறகு அமெரிக்கப் படைகள் முதன் முறையாக இலங்கை, மாலத்தீவு போன்ற தெற்காசிய நாடுகளில் நுழைந்த பொழுது இந்தியா அதனை வரவேற்கவே செய்தது. இந்தியாவிலேயே அமெரிக்க படைகள் இருக்கும் பொழுது, இலங்கையில் அமெரிக்கப் படைகள் நுழைவதால் என்னப் பிரச்சனை ஏற்படப் போகிறது ?
இவ்வாறான நிலையில் 1987ல் கூறப்பட்ட அதே உளுத்துப் போன வாதத்தை கூறி இந்தியா தமிழர்களுக்கு ஆதரவான நிலையை எடுக்க கூடாது என்று கூறுவது படு அயோக்கியத்தனமான நிலைப்பாடாக தான் நான் நினைக்கிறேன்.
அது போலவே ராஜீவ் காந்தியின் படுகொலை என்ற ஒரே கண்ணாடியை கொண்டு ஈழப் பிரச்சனையை அணுகுவதும் முறையானது அல்ல என்பது எனது கருத்து.
இந்தியாவில் நிகழ்ந்த சோகமான மூன்று படுகொலைகள் - மகாத்மா காந்தி, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியின் படுகொலைகள்
இந்திரா காந்தியை ஒரு சீக்கியர் கொன்றான் என்பதற்காக சீக்கிய இனத்தையே நாம் பலிவாங்கி விடவில்லை.
அது போல காந்தியை கொன்ற RSS இயக்கம் அதன் அரசியல் Proxy பா.ஜ.க மூலமாக இந்தியாவை ஆட்சி செய்து விட்டது. மகாத்மா காந்தியை படுகொலை செய்த சதியில் சம்மந்தப்பட்டவரான வீர்சர்வார்காரின் படம் இந்தியப் பாரளுமன்றத்தில் மகாத்மா காந்தியின் படத்திற்கு எதிராகவே ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படும் கொடுமையெல்லாம் இந்த நாட்டில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
ராஜீவ் காந்தியின் படுகொலையை கடந்து ஒரு இனத்தின் விடுதலை, அம் மக்களின் வாழ்க்கை என்ற நோக்கில் பிரச்சனையை அணுகவேண்டும்.
ஒரு நாட்டின் வரலாற்றிலோ, இயக்கத்தின் வரலாற்றிலோ மாற்றங்களும், பரிணாம வளர்ச்சிகளும் ஏற்படத்தான் செய்கின்றன. புலிகளின் வளர்ச்சியை நோக்கும் பொழுது கூட ஒரு சிறு கூட்டம், கொரில்லாப் படை, மரபு சார்ந்த படையாக வளர்ச்சிப் பெற்றது போன்ற நிலைகளை கடந்து இன்று ஒரு அரசியல், இராணுவ இயக்கமாக மாறியிருக்கிறார்கள். ஒரு தேசத்தின் உள்கட்டமைப்பை தனி அமைப்பாக இருந்து நிறுவி முன்னேறி இருக்கிறார்கள்.
காத்ரீனா போன்ற இயற்கை சீற்றங்களில் அமெரிக்கா போன்ற நாடுகளே சரியான நிவரணப் பணிகள் மேற்கொள்ளாமல் தாமதமாகத் தான் நிவாரணப் பணிகளை துவங்கியது. ஆனால் சுனாமிக்குப் பின் சில மணி நேரங்களில் புலிகள் மேற்க்கொண்ட நிவாரணப் பணிகளை உலக நாடுகள் கவனிக்க தவறவில்லை.
பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை கொண்டே கொள்கைகளை ஒரே நோக்கில் வைத்திருக்க முடியாது. மாறிவரும் உலக நிலைக்கேற்ப கொள்கைகள் மாற்றம் பெற வேண்டும். இந்தியாவில் எண்ணற்ற குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி மனித உயிர்களையும், பொருளாதார சேதங்களையும் விளைவித்த பாக்கிஸ்தானுடன் கைகுலுக்க முடியும் என்றால் புலிகளிடமும் நிச்சயமாக கைகுலுக்க முடியும்.
கைகுலுக்க முடியாவிட்டால் குறைந்தபட்சம் அவர்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்காமல் இருக்கலாம். ஏனெனில் தமிழீழ மக்களிடம் மட்டுமே தமிழ்நாட்டு மக்கள் மூலமாக இந்தியாவிற்கு தொப்புள் கொடி உறவு இருக்கிறது. சிங்களருக்கும் இந்தியாவிற்கும் ஒரு வெங்காயமும் இல்லை.
நன்றி>சசியிண்டயறி
|
|
|
| World's Ugliest Dog Dies at 14 |
|
Posted by: Vaanampaadi - 11-24-2005, 04:43 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
<b>World's Ugliest Dog Dies at 14</b>
<img src='http://us.news3.yimg.com/us.i2.yimg.com/p/ap/20051123/capt.cabar50111231935.obit_ugly_dog_cabar501.jpg' border='0' alt='user posted image'>
FILE ** Sam, crowned the 'World's Ugliest Dog' for three years in a row at the Sonoma-Marin Fair, is shown in Santa Barbara, Calif., on June 28, 2005. The pooch with the hairless body, crooked teeth and sparse tuft of hair atop his knobby head died Friday, Nov. 18, 2005, just short of his 15th birthday, according to his owner, Susie Lockheed. (AP Photo/Santa Barbara News-Press, Rafael Maldonado, File)
|
|
|
|